privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கர்நாடகா: அவுட் ஆன பாஜகவிற்கு அம்பையர் சரியில்லையாம் !

கர்நாடகா: அவுட் ஆன பாஜகவிற்கு அம்பையர் சரியில்லையாம் !

-

டத் தெரியாத அல்லது ஆட்டத்தில் தவறிழைத்த பத்மா சேஷாத்ரிக்கள் தெரு கோணல் என்று காலம் தோறும் கலைப் பிரச்சாரம் செய்து வருவதால்தான் இந்த புண்ணான பூமியில், பார்ப்பனியம் இன்னும் பாடைக்கு போகாமல் பல்லக்கில் உலா வருகிறது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் அன்றும் இன்றும் – ஏன் – என்றும் விவாதங்களில் கலந்து கொள்ளும் சங்க பரிவார – பாஜக வகையறாக்கள் பொய்யை உண்மையாக பேசும் கதாகலாட்சேபத்தை கேட்டிருக்கிறீர்களா? கருத்து ரீதியாக பேச முடியாமல் போகும் போது ஆதிசங்கரன் கற்றுக்கொடுத்த விதண்டாவாதத்தை அண்டம் நடுங்கும் வகையில் இவர்கள் பேசுவதைப் பார்க்க வேண்டுமே! பெங்களூர் ரமணி, உஷா உத்தூப் தோற்றார்கள் போங்கள், அவ்வளவு சவுண்டு வேறு! மற்ற பொதுக்கூட்டங்களில் ஐந்தாறு ஆம்பிளிஃபயர் வைக்கும் மைக் செட்டுக்காரர்கள் இவர்களது கூட்டங்களில் பேச்சாளரே ஆம்பிளிஃபயராக இருப்பதால் அதை வைப்பதில்லை.

கர்நாடகாவில் பாஜக மண்ணைக் கவ்வியதை காங்கிரசு விண்ணதிர கொண்டாடுவதையும், ஊடகங்கள் கேலி செய்வதையும் பொறுக்காத சங்க பரிவார அம்பிகளும், மாமிகளும் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் பயங்கரமான புள்ளி விவரங்களை ஏவிவிட்டு முகத்தில் மண் ஒட்டவில்லை என்று ‘அழகு’ காட்டுகிறார்கள். புள்ளிவிவரப் புழுதியை கிளப்பி விட்டு தப்பி ஓட நினைக்கும் இந்த வானரங்களின் வண்டவாளத்தைப் பார்ப்போம்.

பா.ஜ.கவின் தோல்வியை வைத்து காங்கிரசின் வெற்றி அமுல்பேபி ராகுல் காந்தியால் விளைந்த ஒன்று என்று கதர் வேட்டிகள் சொல்வது உண்மையில்லை எனும் அதே நேரத்தில் காவி வேட்டிகள் இது தோல்வியே இல்லை கொஞ்சூண்டு வாக்குகள் மட்டும் குறைந்திருக்கிறது என்று கிசுகிசுப்பதும் ஒரு மோசடியே!

2008-ம் ஆண்டில் பாஜக பெற்ற வாக்குகள் 88,57,340. மொத்த வாக்காளர்களில் இது 33.86 சதவீதம். 2013-தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் வாக்குகள் 62,73,768. சதவீதத்தில் 19.95. ஆக கடந்த தேர்தலில் இருந்து சுமார் 14 சதவீத வாக்குகளை குறைவாக பெற்றிருக்கிறது பா.ஜ.க. இதைத்தான் கடுந்தோல்வி என ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் பா.ஜ.க மட்டும் கடந்த தேர்தலில் இருந்து வெறும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டும் குறைந்திருப்பதாக கரடியாக கத்துகிறது. அதற்கு ஒரு கணக்கையும் சொல்கிறார்கள்.

தென்னிந்தியாவின் முதல் இந்துத்துவ அரசின் முதலமைச்சராக இருந்த ஸ்வயம்சேவகரும், ஒழுக்க சீலரும், லஞ்ச லாவண்யங்களை எட்டிப் பார்க்காதவருமான எடியூரப்பா பாஜகவில் இருந்து நீங்கி, தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் போட்டியிட்டார். அவரது கட்சி பெற்ற வாக்கு விகிதம் 9.85 சதவீதம். இத்தோடு கனிம வளங்களை மலை மலையாக ஆட்டையப் போட்ட சுஷ்மா ஸ்வராஜின் செல்லத் தம்பிகளும் கேடிகளுமான ரெட்டி பிரதர்சின் பி எஸ் ஆர் சி பி கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டு 2.71 சதவீத வாக்குகள் பெற்றிருக்கிறது.

அந்தக் காலத்து வைமானிகா சாஸ்திரத்திலேயே அல்ஜிப்ராவையும், அண்டார்டிகாவையும் கண்டு பிடித்த அறிவாளிகளின் வாரிசுகளல்லவா இவர்கள். அதன்படி ரெட்டி மற்றும் எடியூரப்பாவின் வாக்கு விகிதங்களைக் கூட்டி இந்த ஆண்டு தேர்தலில் பாஜகவின் மொத்த வாக்கு சதவீதம் 32.51 என்று கூறுகிறார்கள். அதன்படி 2008 தேர்தலை விட சுமார் இரண்டு சதவீதம்தம்தான் இந்த தேர்தலில் குறைவு, எனவே மக்கள் பாஜகவை புறக்கணிக்கவில்லை என்று முடிவற்ற டெசிபலில் ஊடகங்களில் கத்துகிறார்கள்.

கர்நாடகா வாக்கு வீதம்
நன்றி : niticentral.com

புள்ளிவிவரங்களே உண்மைகளை கூறிவிடாது. புள்ளிகள் சேர்ந்து எழுப்பும் கோலங்களிலிருந்தே நாம் முழுமையான சித்திரத்தைப் பெற முடியும். ஆனாலும் இங்கே இந்த புள்ளிவிபரங்கள் சேர்ந்து பாஜகவிற்கு அபஸ்வரத்தையே கிளப்புகின்றன.

சென்ற 2008 தேர்தலில் பாஜக பெற்ற 33.86 சதவீத வாக்குகளை விட அதிகமாக காங்கிரசுக் கட்சி 34.76 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. ஆனால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அப்போதெல்லாம் இந்த வாக்கு மேட்டரை யாராவது சொன்னால் அதை பாஜக ஏற்றதா என்றால் இல்லை.

தற்போதும் இவர்கள் இப்படி எடியூரப்பா மற்றும் ரெட்டி பிரதர்சின் வாக்குகளை அவர்களிடம் அனுமதி வாங்காமல் சேர்த்துச் சொல்வது இருக்கட்டும். இந்த தேர்தல் தோல்வி குறித்து அத்வானி முதல் பொன் இராதாகிருஷணன் வரைக்கும் என்ன சொல்கிறார்கள்? ஊழல் செய்த எடியூரப்பா மற்றும் ரெட்டி காருக்களை நீக்கியதால்தான் இந்த தோல்வி என்றும் கொள்கையில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்பதால் இந்த தோல்வி கவுரவமான தோல்வி என்று கௌரவம் சிவாஜி போல ‘கிளிக்கு இறக்கை முளைத்து ஆத்தை விட்டே போயிடுத்து’ என்று சோகப்பாட்டு பாடுகிறார்கள்.

yeddyurappa

இங்கேதான் இவர்களது ஃபிராடுத்தனம் வருகிறது. ஊழல் நடவடிக்கைக்காக வெளியேற்றப்பட்ட எடியூரப்பா தனிக்கட்சி ஆரம்பித்து வாங்கிய வாக்குகள் யாருக்கு விழுந்த வாக்குகள்? அதாவது ஊழல் குற்றச்சாட்டுகளை ஏற்றோ ஏற்காமலோ எடியூரப்பா முகத்திற்காக மட்டும் மக்கள் போட்ட வாக்குகள். அதற்கு எடியூரப்பா மட்டுமே சொந்தம் கொண்டாட வேண்டிய நிலைமையில் பாஜகவின் மொத்த விகிதத்தில் அதை சேர்ப்பது மோசடி இல்லையா?

அதாவது ஊழல் நபர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த நபர்கள் வாங்கிய வாக்கு சதவீதத்தை மட்டும் தனது மொத்தத்தில் கூட்டிக்கொண்டால் இது திருட்டு மட்டுமல்ல, பாஜகவும் ஊழலை ஆராதிக்கிறது என்றுதானே பொருள்? சூத்திரனைத் தொடமாட்டேன், ஆனால் அவனது கைகளிலிருந்து வரும் காந்தி நோட்டை மட்டும் தொடுவேன் என்ற பார்ப்பன அர்ச்சகர்களின் மோசடிக்கு இணையானது இது.

அடுத்து இது பாஜகவிற்கு விழுந்த வாக்கு என்று சொல்லும் பட்சத்தில் இது ஏன் உண்மையில் பாஜகவிற்கு விழாமல் எடியூரப்பாவிற்கு விழுந்தது என்று விளக்க வேண்டும்? இல்லை இது எடியூரப்பாவிற்கு விழுந்த ஓட்டு என்றால் அதை தனது சொந்தக் கணக்கில் சேர்க்காமல் இருக்க வேண்டும்.

மேலும் எடியூரப்பா ஊழல் செய்ததையும் அங்கீகரித்துக் கொண்டுதான் ஒன்பது சதவீத மக்கள் அவருக்கு வாக்குகள் அளித்திருக்கிறார்கள். அதை அபேஸ் செய்தால் பாஜகவும் ஊழல் தண்ணியில் விளைந்த தாமரைதான் என்று ஒத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பாஜகவில் கட்சி, கொள்கைக்காக யாரும் வாக்களிப்பதில்லை என்பதையும் இந்த தேர்தல் நிரூபித்திருக்கிறது. எடியூரப்பா என்ற தனிநபரே ஒன்பது சதவீத வாக்குகளை வாங்கியிருக்கிறார் என்றால் சென்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கும் இவரது தனிப்பட்ட செல்வாக்கே காரணம் என்று பொருள்.

அதன்படி தென்னிந்தியாவின் முதல் இந்துத்துவா அரசு என்பது எடியூரப்பா போட்ட பிச்சை என்று அவரது அடிப்பொடிகள் பேசினால் யாரால் மறுக்க முடியும்?

மேலும் வேறுபட்ட கட்சி, வித்தியாசமான கட்சி, என்று வெட்கம் கெட்ட முறையில் பாஜக இனி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லா ஓட்டுப்பொறுக்கி கட்சிகளைப் போல இங்கும் தனிநபர் வழிபாட்டில்தான் கட்சி ஓடுகிறது. சான்றாக நரவேட்டை மோடியை கட்சியில் இருந்து நீக்கிவிட்டால் குஜராத்தில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க டெபாசிட் வாங்காது என்பதை சரக்கே இல்லாமல் சவுண்டு விடுவதில் ஆய்வாளரான அரவிந்தன் நீலகண்டன் கூட மறுக்க முடியாது. அதனால்தான் எடியூரப்பா வைத்த முள்ளை முழுங்கவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அவஸ்தைப்படுகிறது பா.ஜ.க

ஆக “நாங்கள் ஊழலை ஆதரிக்கவில்லை” என்றால் எடியூரப்பா மற்றும் ரெட்டி பிரதர்சின் வாக்கு விகிதத்தை ஏற்கக் கூடாது. ஆனால் மக்கள் எங்களை புறக்கணிக்கவில்லை என்று நைசாக அந்த இருவரது வாக்கு விகிதத்தை சேர்த்தால் “நாங்கள் ஊழலை ஆதரிக்கிறோம்” என்று ஒத்துக் கொள்ள வேண்டும். பச்சரிச் சோற்றில் பருப்பு நெய்யுடன் உப்புப் போட்டு சாப்பிடும் ஸ்வயம் சேவக குஞ்சுகள் யாராவது பதில் தருவார்களா?

  1. // ஆடத் தெரியாத அல்லது ஆட்டத்தில் தவறிழைத்த பத்மா சேஷாத்ரிக்கள் தெரு கோணல் என்று காலம் தோறும் கலைப் பிரச்சாரம் செய்து வருவதால்தான் இந்த புண்ணான பூமியில், பார்ப்பனியம் இன்னும் பாடைக்கு போகாமல் பல்லக்கில் உலா வருகிறது. //

    பார்ப்பனியம் பல்லக்கில் உலா வர பத்மா சேஷாத்திரிகளின் கலைப் பிரச்சாரமே போதும் என்றால் உங்கள் பிரசாரங்களும், அதன் தாக்கங்களும் எந்த அழகில் இருக்கிறது என்று புரிந்திருக்குமே.. பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் நடத்தும் பார்ப்பன எதிர்ப்புக்காகவே இந்த கட்டுரையிலும் இத்தனை ஆவேசமாக கர்நாடகத் தேர்தல் கூத்தை வைத்து கூப்பாடு போட்டு சவாலெல்லாம் விடுகிறீர்களே.. உப்பை அளவுக்கு மிஞ்சி எல்லாவற்றிலும் போட்டு சாப்பிட்டு வந்தாலும் இப்படி அடிக்கடி தேர்தல் ஆவேசம் வரும்..

    • நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லை. பார்ப்பனியம் என்ற வார்த்தையைப் பார்த்தால் ஏதோ கோபம் கொள்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது.

      • // கர்நாடகாவில் பாஜக மண்ணைக் கவ்வியதை காங்கிரசு விண்ணதிர கொண்டாடுவதையும், ஊடகங்கள் கேலி செய்வதையும் பொறுக்காத சங்க பரிவார அம்பிகளும், மாமிகளும்..//

        // பச்சரிச் சோற்றில் பருப்பு நெய்யுடன் உப்புப் போட்டு சாப்பிடும் ஸ்வயம் சேவக குஞ்சுகள் யாராவது பதில் தருவார்களா? //

        பா.ஜ.க.வும், சங்க பரிவாரமும் அம்பிகள், மாமிகள் கட்சி என்றால், பாஜக-வின் வெற்றி தோல்வியை தங்கள் விருப்பங்களுக்கேற்றபடி நிர்ணயிக்கும் எடியூரப்பா, மோடி இவர்களும் இவர்களின் ஆதரவாளர்களும் யார்..?! யாரால், யாருக்காக பாஜக செல்வாக்குடன் இருக்கிறது அல்லது அதை இழக்கிறது..?! அம்பிகள், மாமிகளாலா..?!

      • நீங்கள் இந்தக் கட்டுரையில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தான் புரியவில்லை…

  2. எடியூரப்பா பெற்ற வாக்குகளும், ரெட்டி பிரதர்ஸ் பெற்ற வாக்குகளும் பாரதிய ஜனதா எதிர்ப்பு வாக்குகளே. பா.ஜ.க கடந்த தேர்தலில் அங்கு ஆட்சி அமைத்ததே அரசியல் சூதாட்டம் ஒன்றின் மூலமாக. முற்போக்கும், ஜனநாயக எண்ணமும் கொண்ட கர்நாடக மக்கள் மிகவும் மோசமான தோல்வியை பா.ஜ.கவுக்கு கையளித்திருக்கிறார்கள். எனினும், ஆர்.எஸ்.எஸ் கும்பல் மூலைக்கு துரத்தப்பட்டாலும் வைரஸ் போன்று பல்கி பெருக காலத்தை கணக்கிட்டு காத்து கொண்டிருக்கும் என்பதே உண்மை.

  3. பார்பனீயம் என்ற சொல்லிருக்கு நீங்க இன்று வரை சரியான பொருள் வரையறுக்கவில்லை என்று அம்பி கூறுகிறார்.

    கர்நாடக மாநிலத்தில் பா ஜ கா இன்று ஒரு நிலை சக்தி.முல்லிவாஇகல் சம்பவம் நடுக்கும் நாடு நிசியில் காங்கிரஸ் கூட்டணி தமிழகதில் வெற்றி.

    இப்படி எல்லாம் நடக்கும் பொழுது, கட்சி முதலமைச்சரா மாற்றிய பா ஜ கா எமதிரம்.

  4. //அதன்படி தென்னிந்தியாவின் முதல் இந்துத்துவா அரசு என்பது எடியூரப்பா போட்ட பிச்சை என்று அவரது அடிப்பொடிகள் பேசினால் யாரால் மறுக்க முடியும்?//

    அப்படிச்சொல்லும் ஒரே அறிவாளி அடிபொடி….வுன்வு அண்ணன் மட்டும் தான்…

    • இந்த ளவுக்கு மொக்கயன்ன ஒரு வியகயனத கருணாநிதி கூஒட குடுத்து இருக்க மாட்டார்

  5. /எடியூரப்பாவின் வாக்கு விகிதங்களைக் கூட்டி இந்த ஆண்டு தேர்தலில் பாஜகவின்மொத்த வாக்கு சதவீதம் 32.51 என்று கூறுகிறார்கள்./

    இதன் பொருள் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றிருக்காவிட்டால் இந்த மூன்று கும்பலும் கூட்டணி சேர்ந்து ஆட்சி செய்திருப்பார்கள், இதில் நல்லவிசியம் என்னவென்றால், ஒருவேளை இவர்கள் கூட்டணி அமைத்திருந்தால் பல வேட்டிகள் கிழிந்திருக்கும், அந்த செலவு மிச்சம்.

    /பாஜகவும் ஊழலை ஆராதிக்கிறது என்றுதானே பொருள்?/

    இவர்கள் ஓழலை ஆதரிக்க வேறு வேண்டுமா?

    / சூத்திரனைத் தொடமாட்டேன், ஆனால் அவனதுகைகளிலிருந்து வரும் காந்தி நோட்டை மட்டும் தொடுவேன் என்ற பார்ப்பன அர்ச்சகர்களின் மோசடிக்கு இணையானது இது./

    இதை இப்படியும் சொல்லலாம்:

    சூத்திரனை தொட்டா தீட்டு ஆனால் அவன் இரத்தம், வியர்வை, உழைப்பால் விளைந்த அரிசியை மட்டும் நல்லா மூன்று வேலையும் தின்னுவது போல.

    • ரத்தம் எங்க இறந்து வந்திச்சு ?

      30 வருஷம் முன்னாடி பள்ளிகூடத்துல பாடம் சொல்லி குடுத்த வாத்தியார் எல்லாம் எப்படி சொல்லி குடுத்தாங்க ?

      இப்பம் கூட திருச்சி எ ராமசாமி மேல்நிலை பள்ளிகூடத்துல பாடம் சொல்லி குடுக்குற ஆசிரியர் எல்லாம் சூதிரன்க்ரா அடிபடைலய செய்றாங்க ?

      இல்ல 1960ல இருந்து சைவ பிள்ளைமார் வாதியர வச்சு படிக்க வேண்டியது தான ?

  6. வினவுக்கு பார்ப்பனியம் என்ற வார்த்தையைப் சொல்லாவிட்டால் தூக்கம் வராது போலும்.
    வினவு நடுனிலை தளமா? அ பார்பனீய / பார்பன எதிர்ப்பு தளமா? தோற்றால் எல்லோரும் எதாவ்து சொல்வார்கள்- இதற்க்கு உ.பி (மாயாவதி) , மே.வ( புத்ததேவன்) இவர்களின் அறிக்கைகளை பாரூம் ?

    • அண்ணே,

      இனி, நாங்கள் அப்படியாக்கும் என பாஜக கூவ வேண்டாம்னுதான் வினவு சொல்ல வருகிறது. எல்லா கட்சிகள் போலத்தான் பாஜகவும் அப்படின்னு ஒத்துகிட்டா அரசியல்ல இதல்லாம் சகஜமப்பான்னு துண்ட தோள்ல போட்டுகிட்டு போய்ட்டே இருக்கலாம்ல.

    • வினவு வீட்டு கக்கூசுல தண்ணீ வராட்டி கூட அதுக்கு பார்ப்பானியத்த விமர்சிச்சு ஒரு பக்க கட்டுரை எழுதுவார்…

      • பாஜகவும் கக்கூசுப் பிரச்சினையும் ஒன்று என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி

        • இன்னும் வினவு சந்தானம் ரேஞ்சுக்கு கவுன்ட்டர் குடுக்குற அளவுல தான் பேசுறீங்க.

        • ஓ அப்ப ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எனக்கு பீர் அடிக்க யாரும் ஸ்பான்சர் பண்ணவில்லை என்ற காண்டிலே தான் இந்துத்வா எதிர்ப்புக்கட்டுரையா…

        • னான் சொன்னது அது இல்லண்ணே…வினவு வீட்டு கக்கூசுல தண்ணீ வரவில்லை என்பதனால் தான் தாங்கள் கோபம் கொண்டு வெகுந்தெழுந்து இந்துத்டுவத்தை எதிர்க்கப்புறப்ப்ட்டுவிட்டீர்,,,

  7. பத்மா சேஷாத்திரி யார் என்று தெரியவில்லை(ஒய்.ஜி.மகேந்திரனின் அம்மா நடத்தும் பள்ளிக்கூடம்தான் பத்மா சேஷாத்திரி) நடனத்துடன் ஒப்பிட்டு நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் பத்மா சுப்பிரமணியத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.
    கர்நாடகத்தில் பாரதிய ஜனதா சென்றமுறை வெற்றி பெற்றது எப்படி, இம்முறை தோல்வியடைந்தது எப்படி என்பது குறித்து என்னுடைய வலைப்பூவில் ‘கர்நாடகத் தேர்தல் முடிவுகள்-பிஜேபி தோற்றது ஏன்? என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அதில் பல விஷயங்களுக்கான விடைகள் இருக்கும்.

  8. இந்து மதம் என்பது அகில உலகத்திலேயே இந்தியா, நேப்பாளம் ஆகிய இரண்டு நாடுகளில் (மட்டும் தான்) பெரும்பாண்மை மதம். இந்த இரண்டு நாடுகளும் உலக நிலப்பரப்பில் வெறும் 2.5% மட்டுமே. உலகில் உள்ள பெரும்பாண்மை நாடுகள் கிறிஸ்த்தவ அல்லது முஸ்லீம் பெரும்பாண்மை நாடுகளே. சுருங்க சொன்னால் இவ்வுலகின் மிகப்பெரிய மத அடையாளம் ஆபிரகாமிய மத அடையாளம் தான். ஒருவர் இந்தியாவை விட்டு வெளியே போனால் கிறிஸ்த்தவ அல்லது இஸ்லாமிய பெரும்பாண்மை நாட்டில் தான் கால் வைக்க வேண்டி வரும். விதி விலக்காக சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் புத்த மத அடையாளத்தை கொண்டவையாக இருந்தாலும் இதனால் எந்த அரசியல் ரீதியான ஆதரவினையும் இந்து மதம் (ஏன் இந்தியாவே கூட) எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் புத்த மதம் இந்தியாவில் தோன்றியிருந்தாலும் மேற்கண்ட நாடுகளில் அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப மாறிய வடிவம் தான் பின்பற்றப்படுகிறது (உதாரணமாக ஜப்பானில் அம்மண்ணுக்கு உரித்தான ஜென் வடிவ புத்தமே பின்பற்றப்படுகிறது. அதற்கும் இந்து மதத்துக்கும் அல்லது இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). மேலும் இந்துக்கள் எனப்படுவோர் சிறுபாண்மையினராக வாழும் பாக்கிஸ்தான், அப்கானிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, மலேசியா ஆகியவற்றில் அவர்களுக்கு என்ன விதமான மரியாதை கிடைக்கிறது என்பது விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். பாரசீக மொழி அகராதியில் இந்து என்றால் திருடன் என்றே பொருள் கூறப்பட்டுள்ளது. மேற்கத்திய உலகில் தியானம், யோகாசனம், ஆயுர்வேதம் ஆகியவற்றை இந்து மதத்தில் இருந்து பெறுவதை விட புத்த மதத்தில் இருந்து பெறுவதையே வெள்ளை இனத்தவர் விரும்புகிறார்கள். ஆக இந்து மதம் மட்டுமல்லாது அதை பின்பற்றுபவர்களும் இந்த ஆபிரகாமிய உலகில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே!. இதையெல்லாம் மறைக்கும் விதமாகத்தான் இந்து மதம் உலக மதங்களுக்கு எல்லாம் தாய் என்று இந்த இந்து மதவெறி அரை டவுசர் கா(லி)வி கும்பல் வாய் கூசாமல் கப்சா விட்டு வருகிறது. மேற்காசியாவில் தோன்றிய ஆபிரகாமிய மதங்களுக்கும் அப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் எல்லையில் தோன்றிய இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? சுருக்கமாக சொன்னால், அரசியல் ரீதியாக பார்க்கும் போது இந்து மதமானது இந்த உலகில் இரண்டே இரண்டு நாடுகளில் மட்டுமே இருக்கிறது. கிறிஸ்த்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்தியாவில் வேண்டுமானால் சிறுபாண்மையினராக இருக்கலாம். உலகளவில் அவர்கள் தான் பெரும்பாண்மையினர். ஆகையால் இந்தியாவில் இந்து மனுதர்ம வெறி கும்பல் ஒரு கிறிஸ்த்தவனை தாக்கும் போது அது இவ்வுலகின் 126 கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகளில் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஒரு இஸ்லாமியனை தாக்கும் போது அது 50 இஸ்லாமிய பெரும்பாண்மை நாடுகளில் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகள் கல்வி, பொருளாதாரம், சமூக வளர்ச்சி, தொழில்நுட்பம், இராணுவ வலிமை ஆகியவற்றில் மிகவும் முன்னேற்றம் அடைந்து உலகையே கட்டுப்படுத்துபவை. இந்தியா பயன்படுத்தும் பெட்ரோலியத்தில் கணிசமான அளவு அரபு நாடுகளில் இருந்து வருபவை. இஸ்லாமிய மத அடையாளம் கொண்ட இந்த அரபு நாடுகளில் பல லட்சம் இந்தியர்கள் நாலாவித தொழில்களிலும் இருந்து கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த இந்தியர்கள் அனுப்பும் அன்னிய செலாவணியை நம்பி இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன (குறிப்பாக கேரளம்). பல கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகள் (குறிப்பாக மேற்கத்திய நாடுகள்) மத சார்பற்றதன்மை (Secular) தன்மை கொண்டவைகளாக உள்ளன. சில இஸ்லாமிய பெரும்பாண்மை நாடுகளும் பிற மத விவகாரங்களில் நீக்குப்போக்கு தன்மை கொண்டவைகளாக உள்ளன. ஆகையால் தான் இவ்வுலகில் இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகள் இந்து பெரும்பாண்மை நாடுகளாக சொல்லிக்கொண்டு காலம் தள்ள முடிகிறது. இந்தியாவை சேர்ந்த பல லட்சம் பேர் உலகின் ஏனைய பகுதிகளில் பணி புரியவோ (குறைந்த கூலிக்காவது) அல்லது குடியிருக்கவோ முடிகிறது. இந்தியாவில் இருக்கும் இந்து மத வெறிக்கும்பல் பின்பற்றும் அரசியலையும் அவர்களின் மத சிறுபாண்மையினரை தாக்கும் பாணியையும் அனைத்து ஆபிரகாமிய நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்தால் இவ்வுலகில் இந்துக்களும் இந்து மதமும் சுத்தமாக துடைத்தெறியப்படுவது மட்டுமன்றி இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகளும் பேரழிவுக்கு ஆட்படும். மேலும் இந்து மதவெறி கும்பலின் ஆபிரகாமிய மதங்களுக்கு எதிரான துவேஷத்தால் கிறிஸ்த்தவர்களையும் இஸ்லாமியர்களையும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் ஆபிரகாமிய மதங்கள் உலகளவிலானவை. இந்தியாவில் பெரும்பாண்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் தங்கள் பங்கு குறித்து தற்போது தான் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள். இந்த மக்களின் உரிமைக்கான உணர்வினை திசைதிருப்ப தான் இந்துத்துவ அரசியல் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது.

    • உம்முடைய வெறிபிடிச்ச கருத்துக்களை எதோ பெரிய சயின்டிஸ்ட் ரேஞ்சுக்கு எழுதியிருக்க….

      ரொப்பக் கேவலமா இருக்கு….முதல்ல பேர மாத்து…

    • பெரியசாமி அய்யா ,

      பார்பான் கலபையா புடிக்க கூடாது என்பதற்கு வேற காரணம் இருக்கு ,
      உழவு தொழில் இழிவு எல்லாம் அதற்க்கு காரணம் இல்ல.

      பார்பனுக்கு சொத்து இருக்க கூடாது,சொத்து என்றல் அசையா சொத்து.

      நீங்க ஒரு வெள்ளை பாவாடை சித்தர்ன்னு எங்களுக்கு முன்னடியே தெரியும் .

      இதே பதிவ நீங்க இங்க பலமுறை சொல்லிடீங்க , அடுததாக என்ன செய்யலாம் ?

      மதம் மாறிடலாம ?

      இணைக்கு அங்க எண்ணெய் இருக்கு,நாளைக்கு இருக்காது ?

      ஐரோப்பாவுல இப்பவே வட்டி கட்ட முடியாம திண்டாட்டம் , சீனாதான் எல்லாருக்கும் கடன் குடுக்குது

      அங்க புத்த மதமும் இல்ல , அவுங்களுடைய தாய் மதமான confuciousஇனிசம் மற்றும் taoism தான்.

      மலையாளீகள் அரபு நாட்டுக்கு பொய் பஞ்சம் போழைப்பதும் அவுங்க முட்டாள் \தனம் சோம்பேறித்தனம் .

      வானம் பார்த்த ப்ஹூமிய வச்சிக்கிட்டு தமிழன் விவசாயம் செய்யும் பொழுது அவுங்க மட்டும் உக்காந்து தான் சாபிடுவோம்ன்னு அடம் புடிக்குறாங்க .

      அவுங்கள உதரணமா வச்சி நீங்க மதம் மாற சொல்றீங்களா ,

      ராஜபுற்றர்களும் மற்றவர்களையும் பத்தி நீங்க சொனனது சரி தான் ,ஆனா இன்னைக்கும் அந்த மாதிரி சம்பந்தி உறவு வசிகிட்ட ஜெய்பூர் மகாராஜாவ மாமா என்றும் , விடாமுயற்சியுடன் போர் புரிந்த மேவார் நாடு சிசொடியா மகாராஜாவை \வீரன் என்றும் சொல்வது உங்களுக்கு தெரியல .

      வெறும் 20,000 ஆட்களை வச்சிக்கிட்டு ஔரங்க்ழஎப கவுத சிவாஜி உங்களுக்கு தெரியல

      பஞ்சாபில் உள்ள முகல் சாம்ராஜியத்தை அகற்றிய ரஞ்சித் சிங்க் மற்றும் சீக்ஹிய க்ஹால்ச உங்களுக்கு தெரியல.

      இப்படி எல்லாம் அரகொறைய இருந்த ஈழம் என்ன பாயிண்ட் பெட்ரோ கூட கெடைக்காது .

  9. உழவுத்தொழில் என்பது எவ்வளவு உன்னதமான தொழில்!. உலகில் உள்ள எந்த மதமும் (இந்து மதம் தவிர) உழவுத்தொழிலையும் உழவர்களையும் மரியாதையோடு தான் காண்கின்றன. ஆனால் இந்து மதம் மட்டும் உழவுத்தொழிலை சூத்திரத்தொழில் என்றும் உழவர்களை சூத்திரர்கள் என்றும் கூறுகிறது. உழவுத்தொழிலில் ஈடுபட்ட சில பார்ப்பனர்களை காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த சந்திரசேகர சரஸ்வதி சாதி பிரஷ்டம் செய்ததை உலகறியும். பிறகு அவர்கள் சுத்தி செய்துகொண்டு சாதிக்குள் சேர்ந்து கொண்டார்கள். ஒரு பார்ப்பான் மாமா வேலை கூட பார்க்கலாம். அது ஒசத்தி. ஆனால் விவசாயம் பார்க்கப்படாது. ஏனெனில் அது சூத்திர தொழில். என்னே இந்து மதத்தின் மேன்மை!. இந்தியாவில் விவசாயமும் விவசாயிகளும் உருப்படாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் இது தான்.
    இந்தியாவில் மொகலாயரின் இஸ்லாமிய ஆட்சி எண்ணூறு ஆண்டு காலம் உறுதியாக இருந்தது. பல இஸ்லாமிய மன்னர்களின் அந்தப்புரத்தில் ஆயிரக்கணக்கான உயர் சாதி ஹிந்துப்பெண்கள் மனைவிகளாகவும் வைப்பாட்டிகளாகவும். இருந்தார்கள். இவர்கள் அனைவரும் இன்று இந்தியாவை சுரண்டிக்கொழுக்கும் பார்ப்பன, ராஜ்புத் (சத்திரிய), கயஸ்த்த போன்ற சாதிகளை சேர்ந்தவர்கள். இவை எல்லாம் வரலாற்று உண்மைகள். அக்பர் போன்ற மன்னர்களுக்கு தங்கள் குடும்ப பெண்(களை) கொடுக்க (அதாவது மாமா வேலை செய்ய!) பல ராஜ்புத் மன்னர்கள் வரிசையில் நின்றதை நாம் பள்ளிக்கூட வரலாற்று புத்தகத்திலேயே படித்திருப்போம். இந்த மானங்கெட்டவர்கள் தான் இன்று மத்திய அரசு நிறுவனங்களிலும் உயர்கல்வி நிலையங்களிலும் மனுதர்மத்தை கடைப்பிடிக்கிறார்கள். மீண்டும் மொகலாயர்களின் ஆட்சி வர வேண்டும் என எதிர்காலத்தில் புரட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    • //ந்தியாவில் மொகலாயரின் இஸ்லாமிய ஆட்சி எண்ணூறு ஆண்டு காலம் உறுதியாக இருந்தது. பல இஸ்லாமிய மன்னர்களின் அந்தப்புரத்தில் ஆயிரக்கணக்கான உயர் சாதி ஹிந்துப்பெண்கள் மனைவிகளாகவும் வைப்பாட்டிகளாகவும். இருந்தார்கள். //

      னிங்க அங்க அப்ப என்ன செய்து கொண்டிர்ந்தீர்கள்…………லைட் மேனா வேல பார்த்தீரா???

      லே முதல்ல உன் மதத்தில் உள்ள ஒரு பெயரை உனக்கு வைத்துக்கொள்…

    • // அக்பர் போன்ற மன்னர்களுக்கு தங்கள் குடும்ப பெண்(களை) கொடுக்க (அதாவது மாமா வேலை செய்ய!) பல ராஜ்புத் மன்னர்கள் வரிசையில் நின்றதை நாம் பள்ளிக்கூட வரலாற்று புத்தகத்திலேயே படித்திருப்போம். //

      அக்பரை ஒரு முஸ்லீம் என்றே மத அடிப்படைவாதிகள் கருதுவதில்லை.. அவருடைய மத நல்லிணக்க முயற்சியான தீன் இலாஹி என்ற மார்க்கம் பின்பற்றுபவர்கள் இல்லாமல் அழிந்தது.. அக்பருக்கு பெண் கொடுத்த (கல்யாணம்/நிக்காஹ்) இந்து மன்னர்களை மாமாக்கள் என்று கூறுபவர்கள் கலப்புத் திருமணம் செய்து வைக்க தயாராக இருப்பவர்களை எப்படி அழைப்பார்கள் என்று புரியவில்லை..

      // இஸ்லாமிய மன்னர்களின் அந்தப்புரத்தில் ஆயிரக்கணக்கான உயர் சாதி ஹிந்துப்பெண்கள் மனைவிகளாகவும் வைப்பாட்டிகளாகவும். இருந்தார்கள். இவர்கள் அனைவரும் இன்று இந்தியாவை சுரண்டிக்கொழுக்கும் பார்ப்பன, ராஜ்புத் (சத்திரிய), கயஸ்த்த போன்ற சாதிகளை சேர்ந்தவர்கள். //

      அலாவுதீன் கில்ஜி தொடங்கி அநேகமாக எல்லா இஸ்லாமிய பாதுஷாக்களும்,மன்னர்களும், சுல்தான்களும் வெற்றி கொண்ட நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கில் பெண்களை லவட்டிக் கொண்டுபோய் தங்கள் அந்தப்புரத்தில் அடைத்துவைத்ததை இவ்வளவு பெருமையாக புரட்டிப் பேசுவதற்கு ஒரு இஸ்லாமிய மதவெறியாரால் கூட முடியாது.. கைப்பற்றப்படுவதை தவிர்க்க கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டு இறந்த பெண்களைப் பற்றி எல்லா சாமிகளிலும் பெரிய சாமிக்கு (?) தெரியாதா..?!

      // மீண்டும் மொகலாயர்களின் ஆட்சி வர வேண்டும் என எதிர்காலத்தில் புரட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. //

      புரட்சி பண்ணுவதற்கு முன்பு மொகலாயர்களை முதலில் தேடிக் கண்டுபிடிக்கவும்.. எல்லா மொகலாய வாரிசுகளும் பாகிஸ்தானுக்கு போய்விட்டதாகச் சொல்கிறார்கள்..

      // ஒரு பார்ப்பான் மாமா வேலை கூட பார்க்கலாம். அது ஒசத்தி. ஆனால் விவசாயம் பார்க்கப்படாது. ஏனெனில் அது சூத்திர தொழில். என்னே இந்து மதத்தின் மேன்மை!. இந்தியாவில் விவசாயமும் விவசாயிகளும் உருப்படாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் இது தான். //

      திருமண விளம்பரங்களைப் பார்த்தால் தெரியும், எத்தனை பார்ப்பனர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று.. சங்கராச்சாரியார், மனுதர்மம் என்று ஒரு நாலைந்து மேட்டர்களை கையில் வைத்துக் கொண்டு எதார்த்தத்துக்கு சம்பந்தமேயில்லாமல் பேசுவது ஏன்..

  10. முன்னுக்கு பின் முரனாக பேசலாமா அம்பி? அக்பரிடம் தோல்வியுற்றதும், வழக்கம்போல ஜெயித்த ராஜாவுக்கு பெண் கொடுத்து, அதிகார சமரசம் செய்து கொள்வது நமக்கு வழக்கம் தானே ! அவர்கள் பலம் பெற்று இருக்கும்போது, அண்டிபிழைத்த கூட்டம் , இன்று விட்டேனா பார் என்று சாதாரண மக்கள் மீது பாய்வது ஏன் ? அன்று ஆஙகிலத்தை படித்து,ஆஙகிலேயருக்கு வால் பிடித்து அதிகார பதவிகளை அனுபவித்துவிட்டு, இன்று ஆஙகிலத்தை அன்னிய மொழி என்று தூற்றுவது ஏன்? சாமானியர்கள் சுய சிந்தனை பெரறக்கூடாது என்றா? சோமனாதபுரத்தில் கஜினிக்கு, வரவேற்பு பட்டயம் வாசித்த கூட்டம், இன்று எதிரியாக பார்ப்பது ஏன்? தமிழக கோவில்களில் கொள்ளயடித்தது முசுலிம் மன்னர்கள் மட்டுமல்லவே! மைசூர், கேரள மற்றும் சிவாஜியின் படைகள் கூடத்தான்! இந்து மன்னன் ராஜராஜ சோழன் மதுரையிலும், திருவனந்த புரத்திலும் செய்யாத அட்டூழியஙகளா? ஆரியர் வருகையால், இந்திய மக்கள் சாதீயத்திற்கு அடிமையானார்கள்! மொகலாயர்களும், ஆஙகிலேயர்களும் நமக்கு மனிதநேயத்தையும், அரசியல் அறிவு, சுகாதாரம், தன்னம்பிக்கையும் கொடுத்தார்கள்! ஆஙகிலேயர்கள் இன்னும் சில காலம் இஙகிருந்திருந்தால், மக்கள் விழித்து கொண்டிருப்பார்கள்! பாகிச்தான் என்ற மதவாத அரசு தோன்றி இருக்காது! முக்கியமாக ஊழல் காஙகிரசு அரசு ஏற்பட்டிருக்காது! அது எப்படி அம்பி, யார் ஜெயித்தாலும் , அது திப்பு சுல்தானாய் இருந்தாலும் , கருனானிதியாயிருந்தாலும் முதலில் பரிவட்டம், மாலை மரியாதைகள் உஙலகள் மடஙகளிலிருந்துதானே வருகிறது? பின்னர் முதுகில் குத்துவதும் வழக்கம் தானே! நல்ல பதிவு அளித்த வின்வுக்கும் , கருத்துரைத்த பெரியசாமிக்கும்நன்றி!

    • // முன்னுக்கு பின் முரனாக பேசலாமா அம்பி? அக்பரிடம் தோல்வியுற்றதும், வழக்கம்போல ஜெயித்த ராஜாவுக்கு பெண் கொடுத்து, அதிகார சமரசம் செய்து கொள்வது நமக்கு வழக்கம் தானே ! அவர்கள் பலம் பெற்று இருக்கும்போது, அண்டிபிழைத்த கூட்டம் , இன்று விட்டேனா பார் என்று சாதாரண மக்கள் மீது பாய்வது ஏன் ? //

      அக்பரும் அவருடைய சம்பந்தி உறவுகள் எல்லாம் எப்போதோ செத்துப் போய்விட்டார்களே..

      // அன்று ஆஙகிலத்தை படித்து,ஆஙகிலேயருக்கு வால் பிடித்து அதிகார பதவிகளை அனுபவித்துவிட்டு, இன்று ஆஙகிலத்தை அன்னிய மொழி என்று தூற்றுவது ஏன்? சாமானியர்கள் சுய சிந்தனை பெரறக்கூடாது என்றா? //

      யாரைச் சொல்கிறீர்கள்..?! நீதிக் கட்சி, திராவிட பாரம்பரியத்தையா..?!

      // சோமனாதபுரத்தில் கஜினிக்கு, வரவேற்பு பட்டயம் வாசித்த கூட்டம், இன்று எதிரியாக பார்ப்பது ஏன்? //

      இன்றும் பயந்து கொண்டு அடிமைகளாகவே கஜினிக்கு வரவேற்புப் பட்டயம் வாசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது..

      // தமிழக கோவில்களில் கொள்ளயடித்தது முசுலிம் மன்னர்கள் மட்டுமல்லவே! மைசூர், கேரள மற்றும் சிவாஜியின் படைகள் கூடத்தான்! //

      அரசின், ஊராட்சி அமைப்புகளின் செல்வம் கோவிலில் இருந்த கருவூலத்தில்தான் சேமிக்கப்பட்டது.. இந்து மன்னர்கள் இந்த கருவூலத்தைத்தான் குறிவைத்தார்கள்.. கஜினியும், மாலிக் காபிரும் கோவில் விக்கிரகங்கள், நகைகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் சுரண்டியெடுத்துக் கொண்டு போனார்கள்..

      // இந்து மன்னன் ராஜராஜ சோழன் மதுரையிலும், திருவனந்த புரத்திலும் செய்யாத அட்டூழியஙகளா? //

      எந்த ராஜராஜ சோழன், என்ன அட்டூழியங்கள் செய்தான் என்பதையும் விளக்கியருள முடியுமா..?

      // மொகலாயர்களும், ஆஙகிலேயர்களும் நமக்கு மனிதநேயத்தையும், அரசியல் அறிவு, சுகாதாரம், தன்னம்பிக்கையும் கொடுத்தார்கள்! ஆஙகிலேயர்கள் இன்னும் சில காலம் இஙகிருந்திருந்தால், மக்கள் விழித்து கொண்டிருப்பார்கள்! பாகிச்தான் என்ற மதவாத அரசு தோன்றி இருக்காது! முக்கியமாக ஊழல் காஙகிரசு அரசு ஏற்பட்டிருக்காது! //

      ஹிஹிஹி..

      // அது எப்படி அம்பி, யார் ஜெயித்தாலும் , அது திப்பு சுல்தானாய் இருந்தாலும் , கருனானிதியாயிருந்தாலும் முதலில் பரிவட்டம், மாலை மரியாதைகள் உஙலகள் மடஙகளிலிருந்துதானே வருகிறது? //

      திப்பு சுல்தான் இளவரசராய் இருந்தபோதே மடங்களுக்கு நிவந்தங்களும் உதவிகளும் அளித்தார்.. கருணாநிதி கோவில் கூடாது என்று சொல்லவில்லையே..?!

      // பின்னர் முதுகில் குத்துவதும் வழக்கம் தானே! //

      இரு தரப்பினரும் முதுகில் குத்தி குத்தி விளையாடினால் அதற்கு நாம் என்ன செய்யமுடியும்..

      // நல்ல பதிவு அளித்த வின்வுக்கும் , கருத்துரைத்த பெரியசாமிக்கும்நன்றி! //

      ஹிஹிஹி..

  11. //திப்பு சுல்தான் இளவரசராய் இருந்தபோதே மடங்களுக்கு நிவந்தங்களும் உதவிகளும் அளித்தார்.. கருணாநிதி கோவில் கூடாது என்று சொல்லவில்லையே..?!//

    கடிக்க வரும் பாம்பைத்தானே அடிப்பார்கள்! தண்ணி பாம்பை யாராவது அடிப்பார்களா? பார்பனர்களின் சுயநலம்தானே இந்துத்வா அரசியல்? பொதுமக்களுக்கான கோவில்களை பார்பன ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டும்! அவை அனைத்து சமூதாய கூடஙகளாக மற்றப்படவேண்டும்! இன்னமும் அவை பார்ப்பன கூடாரமாகத்தானே இருக்கிரது? சம்சுகிரத வள்ர்ச்சிக்கு(?) மத்திய அரசு எவ்வளவு வரிப்பனம் செலவிடுகிறது? சம்சுகிரதம் வளரவில்லையே ! பார்பனர்கள் தானே கொழுக்கிறார்கள்!

Leave a Reply to அமுதவன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க