முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி !

பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி !

-

திருச்சி பகுதி புதிய ஜனநாயகம் விற்பனைக் குழு சார்பில் 26-5-2013 அன்று காலை 10 மணி அளவில் சத்திரம் பேருந்து நிலையம், SRC ரோடு, சிந்தாமணி காலை காய்கறி மார்க்கெட் எதிரில் அமைந்துள்ள சுருதி திருமணமஹாலில் தோழர் சேகர் தலைமையில் வாசகர் வட்டம் கூட்டம் நடை பெற்றது. 100-க்கும் மேலான வாசகர்கள் கலந்து கொண்டனர்.

வாசகர் வட்ட கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய தோழர் சேகர் பேசுகையில் இன்றைய பத்திரிக்கை உலகில் 2 வகையான பத்திரிக்கைகள் வெளிவருகின்றன, அதில் ஒரு வகை முதலாளிகள் நலனுக்காக வெளிவருகின்றன. அவர்களின் விளம்பரத்தை நம்பியே பெரும்பாலான பத்திரிக்கைகள் வெளிவருகின்றன. மற்றொன்று போலீசு தரும் பொய் செய்திகளை வெளியிட்டு பிழைப்பு நடத்துகின்றன. அதையும் மீறி மக்கள் பிரச்சினைகளை எழுதினாலும் அதற்கு காரணமானவர்கள் யார் என்பது பற்றியோ, அதற்கான தீர்வு பற்றியோ எழுதுவதில்லை. உதாரணத்திற்கு தக்காளி ரூ 45-க்கும், சின்ன வெங்காயம் ரூ 80-க்கும், இஞ்சி ரூ.250 க்கும் விற்பனை செய்வதை பற்றி எழுதுகிறார்கள். அதற்கு, இந்த அரசு விவசாயத்தை தனியார்மயமாக்கி, விவசாயத்தையே ஒழிக்கும் வேலை செய்வதை பற்றியும், உற்பத்தியான பொருள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் உலகம் முழுவதும் செய்யப்படுகிறது என்பதையும், உலக அளவில் தேவையில்லாத பொருள்தான் நமது நாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற நிலை உள்ளது என்பதையும், விவசாய உற்பத்தி பொருள், விலை குறைய வேண்டும் என்றால், அரசு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், விவசாயத்தை தனியார்மயமாக்கும் கொள்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை.

இதே போல தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களை கல்விக் கட்டணம் என்ற பெயரில் உறிஞ்சுகிறார்கள். இந்த நிலையில் கல்வித் துறை அதிகாரிகளும், இந்த சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி பணத்தை சுருட்டுகிறார்கள் என பத்திரிக்கைகள் எழுதுகின்றன. ஆனால் இதற்கு காரணம் கல்வி தனியார் மயமானது தான் என்பதையும், கல்வி அரசு மயமாகும் போதுதான், கல்வி கொள்ளையை தடுத்து நிறுத்த முடியும் என்பதையும் எழுதுவதில்லை. கல்வி முதலாளிகளை, அரசாங்கத்தை பகைத்துக் கொண்டால் தமது வருமானம் குறையும் என்று அஞ்சி அவர்கள் உண்மையை எழுதுவதில்லை.

புதிய ஜனநாயகம், அரசு பின்பற்றும் தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகள் தான் கல்விக் கொள்ளை, விலைவாசி உயர்வுகளுக்கு காரணமென்றும், இந்த அரசை எதிர்த்து போராடுவதன் மூலமே மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் உண்மையை எழுதுகிறது. புதிய ஜனநாயகம் மக்கள் பத்திரிக்கையாக உள்ளது, புதிய ஜனநாயகம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று தனது உரையை முடிவு செய்தார்.

வாசகர் வட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர், புதிய ஜனநாயகத்தில் ஆபாசமுமில்லை, விளம்பரமும் இல்லை, செய்தி ஆவணமாகவே இருக்கிறது என்றார். 1983-ல் ஈழப்போராளிகளைப் பற்றி புதிய ஜனநாயகத்தில் வந்த கட்டுரையின் நிலைப்பாடு இன்றைக்கும் மிகப் பொருத்தமாகவே இருக்கிறது. அந்த வகையில் நமது பத்திரிக்கை உலகில் முடிசூடா மன்னனாக விளங்குகிறது என்றும் கூறினார்.

மற்றொரு வாசகர் நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், ஒருமுறை புதிய ஜனநாயகம் ஒன்று வாங்கி படித்ததாகவும், அதில் ஜெயலலிதாவின் உருவத்தை பற்றி வித்தியாசமாக வரைந்து வெளியிட்டதை பார்த்து ஆச்சர்யப்பட்டதாகவும், இந்த அளவு தைரியமானவர்கள் யார் என்று சந்தேகப்பட்டதாகவும், பின்னர் தோழர்கள் அறிமுகமானதும் தொடர்ந்து பத்திரிக்கை படித்து வருவதாகவும், INTUC, AITUC உட்பட பல சங்கத்திலிருந்தாகவும் பின்னர் அவற்றை விட்டு விலகிவிட்டதாகவும் கூறினார்.

வேறு ஒரு வாசகர், திருச்சி சித்தார் வெசல்ஸ் நிறுவனத்தில் இளைஞர் ஒருவர் முதலாளியின் லாப வெறியால் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதை கண்டித்து தீக்குளித்து இறந்து போன செய்தியை CITU காரர்களும் தனது பத்திரிக்கையில் போட்டிருந்தனர். புதிய ஜனநாயகத்திலும் இச்செய்தி வெளிவந்தது. அதை படித்த CITU தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத்தை காட்டி, CITU -காரர்களை நோக்கி, ‘ நீயும் எழுதியுள்ளாய்’ ஆனால் புதிய ஜனநாயகத்தில் வந்த உண்மை செய்தியை பாருங்கள் என கோபம் கொப்பளிக்க வெகுண்டு எழுந்து தொழிலாளர்கள் பற்றி பேசியதாக கூறினார்.

தருமபுரி கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அம்பலப்படுத்தி கட்டுரை வந்திருந்தது. அதைப்படித்த அக்கட்சியின் தொண்டர் ஒருவர் இவ்வளவு விசயம் தெரிந்த பின்னர் இந்த கட்சியில் இருக்க விரும்பவில்லை என விலகிக் கொண்டார் என ஒரு வாசகர் கூறினார். இப்படி பலரும் புதிய ஜனநாயகத்தின் அனுபவத்தை விளக்கி பேசினார்கள்.

வாசகர் வட்டத்தின் முடிவில் இந்தியா VS பாகிஸ்தான், இந்தியா VS சீனா பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச் செயலர் தோழர்.காளியப்பன் சிறப்புரை நிகழ்த்தினார்.

தோழர் காளியப்பன்

கடந்த ஜனவரி மாதத்தில் வடமேற்கு எல்லையில் இரு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு அதில் ஒருவரது தலை துண்டிக்கப்பட்டதாக வந்த தகவல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ், பாஜக தலைவர்களும் பிறரும் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆத்திரமுற்றனர். இக்குற்றச்சாட்டு குறித்து சர்வதேச விசாரணை நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் கருத்தை பிரதமர் நிராகரித்தார். துண்டிக்கப்பட்ட இராணுவ வீரரின் தலையை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இந்திய இராணுவம் பத்து பாகிஸ்தான் இராணுவத்தினரின் தலைகளையாவது கொய்து வரவேண்டும் என்று ஆவேசத்துடன் முழங்கினார் பாஜகவின் சுஷ்மா சுவராஜ். அதுபோலவே மே 13-ம் தேதி சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்துவிட்டதாக எழுந்த புகார் மீதும் இதே பாணியில் கூச்சலிட்டனர் ஓட்டுக்கட்சிகள். இந்திய எல்லைக்குள் நுழையவில்லை என்ற சீன இராணுவத்தின் கருத்து சரியே என்று ஓர் இந்திய அதிகாரி சொன்னதை யாரும் காதில் வாங்கவில்லை.

china-india-warகடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலிய மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 94% இந்தியர்கள் பாகிஸ்தானையும், 84% இந்தியர்கள் சீனாவையும் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக கருதுவதாகக் கண்டறியப்பட்டது. பாகிஸ்தான் இந்தியாவின் பகை நாடு, முஸ்லீம்கள் எதிரிகள், சீனா இந்தியாவை ஆக்கிரமித்த நாடு, இப்போதும் ஆக்கிரமிப்பு நோக்கத்தில் செயல்படும் நாடு என்ற கருத்து மிக வலுவாக பிரச்சாரம் செய்யப்பட்டு சாதாரண இந்தியர்கள் வரை அவர்களது இரத்தத்தில் கலந்து பகையுணர்ச்சியாக வளர்ந்துள்ளது. 1947-ல் பிரிட்டிஷ் அரசு மத ரீதியில் இந்தியாவைப் பிரித்தது, பின்னர் காஷ்மீரின் ஒருபகுதியை ஆக்கிரமித்தது, 1962-ல் இந்திய சீனப்போர் ஆகிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே பாகிஸ்தானையும் சீனாவையும் பகை நாடுகளாக்கருதும் மனோநிலையை ஆர் எஸ் எஸ், பாஜகவும் பிறரும் தொடர்ச்சியாக வளர்த்து வருகின்றனர்.

ஈழப்பிரச்சனையில்கூட சீனாவும் பாகிஸ்தானும் ராஜபக்சேவை ஆதரிப்பதால் இந்தியாவின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க தனி ஈழத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும், இதுவே சிறந்த இராஜதந்திரம் என்று நெடுமாறன், வைகோ உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் பேசுவதன் மூலம் தனி ஈழத்திற்கான நியாயத்தை விட பாகிஸ்தான், சீனா எதிர்ப்பையே தமிழக மக்கள் மத்தியில் அழுத்தமாக பிரச்சாரம் செய்கிறார்கள். பாகிஸ்தான் எதிர்ப்புக்கு இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய விரிவாக்க நோக்கம் முக்கியக் காரணம். ஆனால் அன்றைய சீன எதிர்ப்பிற்கும், போருக்கும் முக்கியக் காரணம் கம்யூனிசக்கொள்கை பரவுவதைத் தடுக்க வேண்டும் என்பதே.

india-pakistan-warமுஸ்லீம்கள் இந்தியாவை மதரீதியில் துண்டாடி விட்டார்கள் என்பதாகவே ஆர் எஸ் எஸ் பாஜக கும்பல் இன்றும் பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மை யாதெனில் அன்று வளர்ந்து வந்த முஸ்லீம் தரகு முதலாளிகளான இஸ்பானி, சர் ரபியுதீன் ஆதம்ஜி, சர் அப்துல்லா ஆரூண் போன்றவர்கள் தங்கள் சுரண்டல் நலனுக்காக ஜின்னா தலைமையில் பிரிவினை கோரிக்கையை முன்வைத்தனர் என்பதேயாகும். பிர்லா போன்ற இந்துத் தரகு முதலாளிகள் சிலரும் கூட பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தனர். 1947 அதிகார மாற்றத்திற்கு முன்னிருந்தே இந்திய இந்துத்தரகு முதலாளிகள் அகண்ட பாரதக் கனவைத்தாண்டி இந்துமாக்கடல் பகுதியையும், பசிபிக்கடல் பகுதியையும் ஆக்கிரமிக்கும் வெறியிலேயே இருந்தனர். 1945–ல் இந்தியாவைக் கண்டறிதல் என்ற நூலில் நேரு வெளிப்படையாகவே எழுதினார். ‘ உலகின் குவிமையமாக இப்போது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி உள்ளது. எதிர்காலத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதி குவிமையமாக மாறக்கூடும். இந்தியா பசிபிக் பெருங்கடல் பகுதி அரசாக இல்லாத போதிலும் தவிர்க்க இயலாதவாறு அங்கு இந்தியா முக்கிய செல்வாக்கு செலுத்தும். இந்தியப்பெருங்கடல் பகுதியிலும், தென்கிழக்கு ஆசியா முதல் மத்தியக் கிழக்குப் பகுதி வரை பொருளாதார அரசியல் நடவடிக்கைகளின் மையமாக இந்தியா வளரும். இதன் விளைவாக சிறு சிறு தேசிய அரசுகள் இல்லாமல் போய்விடும். அவை கலாச்சார சுயாட்சிப் பகுதியாக நீடிக்கலாமே தவிர சுயேச்சையான அரசியல் அதிகாரம் கொண்ட அரசுகளாக நீடிக்க முடியாது’ என்றார் நேரு.

இந்திய தரகுமுதலாளிகளுக்கு இருந்த விரிவாக்க நோக்கம் பாகிஸ்தான் தரகு முதலாளிகளுக்கும் இருந்தது. இவ்விரு சுரண்டல் கூட்டத்தின் ஆக்கிரமிப்பு வெறிதான் காஷ்மீரை பங்கு போடும் போராக மாறி இன்று வரை இரு நாட்டு மக்கள் மத்தியிலும் பகையுணர்வை வளர்க்கும் அடிப்படையாக நீடிக்கிறது. இந்தியத் தரகு முதலாளிகளின் மேலாதிக்க வெறிதான் 1971-ல் பங்களாதேஷ் பிரிவினை, 1974-ல் இராணுவ நடவடிக்கை மூலம் சிக்கிம் இணைப்பு எனத்தொடர்ந்தது. இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்றதும், கொலைகாரன் ராஜபக்சேவுக்கு துணை போவதும் இதற்குத்தான். அண்டை நாடுகள் மீதான சுரண்டலையும், ஆதிக்கத்தையும் மூடி மறைக்கவும், நியாயப்படுத்தவும்தான் மூச்சுவிடாமல் வல்லரசுக் கூச்சலிட்டு போலி தேசிய வெறியை மக்கள் மத்தியில் கிளப்புகின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக இருந்த பிற்போக்கு சியாங்கேஷேக் ஆட்சி வீழ்த்தப்பட்டு 1949-ல் மாபெரும் மக்கள் சீனக்குடியரசு உருவானது. சிதைந்துபோன உள்நாட்டுப்பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதிலேயே முழு கவனம் செலுத்திய சீன அரசு மிகக்குறுகிய காலத்திலேயே மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது. எல்லா வகையான சுரண்டலும், சமூகக்கேடுகளும் அகற்றப்பட்டன. ‘சீன மக்களின் நேர்மை எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதது. சீன மக்களின் கண்ணியம், அமைதி, மனித இயல்பின் அடிப்படைப் பண்புகள் இவை சீன தேசியத்தன்மை மட்டுமல்ல; புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்களுமாகும். சோசலிசம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இதோ ஒரு சாட்சி சீனா’ என 1957-ல் சீனாவுக்குப்பயணம் செய்த அறிஞர் டி.டி கோசம்பி சீனப்புரட்சி பற்றிய கட்டுரையில் எழுதினார்.

china-india-nathulaசீனப்புரட்சியின் சாதனைகள் உலகம் முழுவதுமுள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு மாபெரும் ஊக்கத்தையளித்தது. அதே நேரத்தில் ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளான அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளை அச்சுறுத்தியது. கம்யூனிஸ்ட்டுகளை ஒழிப்பதற்கு சர்வாதிகாரிகளுக்கு உதவுவது என்பதை அமெரிக்கா தனது கொள்கையாகவே பிரகடனம் செய்தது. எனவே சீனாவை எப்போதும் போர்ச்சூழலில் இருத்துவதற்கு அமெரிக்கா ஏராளமான சதிவேலைகளை அரங்கேற்றத்தொடங்கியது. உதட்டில் சோசலிசத்தை உச்சரித்த நேரு செயலில் அமெரிக்காவின் கைப்பாவையாக சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தியாவில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவது, கம்யூனிஸ்டுக்கட்சியை தடை செய்வது என கம்யூனிஸ்டு எதிர்ப்பை தீவிரப்படுத்தினார். எல்லைப் பிரச்சனையை காரணம் காட்டி வடமேற்கு, வடகிழக்கு எல்லையில் சீனாவுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட்டார் நேரு. எல்லைப் பிரச்சனையை பேச்சு வார்த்தையில் தீர்த்துக் கொள்ள சீனப்பிரதமர் சூயென்லாய் எடுத்த முன்முயற்சிகளை நேரு நிராகரித்தார். ஆனால் இதே கால கட்டத்தில் பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மியான்மர் (அன்று பர்மா) ஆகிய எல்லா அண்டை நாடுகளுடனும் எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தையில் சுமுகமாக தீர்த்துக்கொண்டது சீனா. 1962 அக்டோபர், நவம்பரில் நடந்த போரில் இந்தியா அவமானகரமாகத் தோற்றது. உலகமே வியக்கும் வண்னம் சீனா ஒருதரப்பாகப் போர்நிறுத்தம் அறிவித்து எல்லையிலிருந்து பனிரெண்டு மைல் பின்வாங்கிச்சென்றது.

கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை இறுதிவரை மூர்க்கமாக நடத்திய பிரிட்டிஷ் எழுத்தாளர் பெர்னாட்ஷா ‘வெற்றிபெற்று முன்னேறிய இராணுவம், தானே போரை நிறுத்திய வேறொரு உதாரணத்தை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. சீனர்கள் நியாயமாகவும், தன்னடக்கமாகவும் நடந்து கொண்டனர். நான் வியப்புக்குள்ளாதைப் போலவே உலகமும் வியப்புக்குள்ளானது. ஏனெனில் போர் தவிர்க்கப்பட வேண்டும் என்ற தெளிவான வலுவான நோக்கத்திற்காக தாம் கஷ்டப்பட்டு தியாகம் செய்து பெற்ற வெற்றியை தியாகம் செய்யும் உன்னத நடவடிக்கையினை சீனர்கள் மேற்கொண்டனர்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். அன்று குடியரசுத்தலைவராக இருந்த இராதாகிருஷ்ணன் நேருவின் நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். ‘சீனாவுடனான உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டுவிட்டது. எல்லைப்பிரச்சனை தொடர்பாக சூயென்லாய் முன்வைத்த யோசனைதான் இரு நாடுகளுக்கும் நல்லது ’ என இந்தியாவின் முதல் வெளியுறவுச் செயலாளராக இருந்த கேபிஎஸ் மேனன் குறிப்பிட்டார். இப்படி வம்படியாக இந்தியாதான் சீனா மீது போர் தொடுத்தது என்பதை ஏராளமான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறார் நக்சல்பாரிப் புரட்சியாளர் பேராசிரியர் சுனிதிகுமார் கோஷ்.

சீனப்போர் முடிந்தபிறகு காங்கிரஸ் நாடாளுமன்றக்குழுக்கூட்டத்தில் பேசிய நேரு ‘சீனாவுடனான பிரச்சனை வெறும் பிரதேசம் தொடர்பான பிரச்சனை என்பதற்கு அப்பால் கூடுதலான விஷயங்கள் உள்ளன’ என்றார். அந்தக்கூடுதலான விஷயங்கள் என்ன என்பதை இந்திராகாந்தி வெளிப்படையாக உடைத்தார். ‘சீனப்பிரச்சனை பிரதேசத்திற்கானது அல்ல, ஆனால் சித்தாந்த ரீதியிலானது, அரசியல் ரீதியானது’ என்றார் இந்திரா. எனவே கம்யூனிசத்தை ஒழிக்கவும், சீனாவை முடக்கவும் ஏகாதிபத்திய முதலாளிகளின் கைக்கூலியாக நின்று நடத்தியதுதான் நேருவின் சீனப்போர். இந்த உண்மையை மூடிமறைத்துவிட்டுத்தான் சீனாவை எதிரியாகச் சித்தரித்தனர்.

china-india-armyமாவோ மறைவிற்கு பின் 1980-களில் டெங் கும்பல் முதலாளித்துவப் பாதையைப் புகுத்தியது. இன்று முற்று முழுதான முதலாளித்துவ நாடாக சீனா சீரழிந்த நிலையில் எந்தத் தரகு முதலாளிகளுக்காக சீனாவை எதிரி என்று பிரச்சாரம் செய்தார்களோ அதே சீனாவில் இன்று டாடா, டிவிஎஸ் என சுமார் அறுபது முதலாளிகள் மூலதனமிட்டு தொழில் நடத்துகின்றனர். அண்மையில் இந்தியா வந்த சீனப்பிரதமர் லீ கெகியாங் அடுத்த மூன்று ஆண்டுகளில் முன்னூறு சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கவிருப்பதாகவும், இந்திய சீன வர்த்தகம் 55 இலட்சம் கோடியாக உயரும் எனவும் கூறியிருக்கிறார். தூரத்தில் இருக்கும் உறவுக்காரரை விட அண்டை வீட்டுக்காரனே அதிகம் உதவுவான் என்று சீனப்பழமொழியை எடுத்துக் காட்டியிருக்கிறார். இன்று இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளி சீனாதான். அதே போல பாகிஸ்தான் பரமவிரோதி என்று கூப்பாடு போடப்படும் நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியும், அங்கிருந்து இறக்குமதியும் அதிகரித்திருக்கின்றன. உதாரணத்திற்கு கச்சா பருத்தி ஏற்றுமதி மட்டும் கடந்த ஆண்டில் 313% உயர்ந்திருக்கிறது. அதேபோல பாகிஸ்தான் பங்குச்சந்தையில் இந்திய முதலீடும் உயர்ந்திருக்கிறது.

முதலாளிகளைப் பொறுத்தவரை பாகிஸ்தானும், சீனாவும் நெருக்கமான கூட்டாளி நாடுகள்தான். மூலதனத்திற்கும், சுரண்டலுக்கும் கம்யூனிசம்தான் எதிரி. எனவே தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை மூடிமறைக்கவும், விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை, கடும் ஏற்றத்தாழ்வு, கார்ப்பரேட் முதலாளிகளின் ஈவிரக்கமற்ற சுரண்டல் இவற்றிலிருந்து மக்களை திசைதிருப்பவும், தொழிலாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கவும் சீனாவையும், பாகிஸ்தானையும் எதிரியாகச் சித்தரித்து தேசிய வெறியையும், போர் வெறியையும் ஆளும் வர்க்கமும் அதன் ஊது குழல்களான ஊடகங்களும் மூச்சுவிடாமல் பிரச்சாரம் செய்கின்றன. இந்த உண்மைகளையும், ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சி மோசடிகளையும் அம்பலப்படுத்தி பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையை உயிர்மூச்சாகக் கொண்டு வெளிவரும் நமது புதிய ஜனநாயகம் இதழைப் போர் ஆயுதமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டியது நமது இன்றைய கடமை.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி :
பு.ஜ முகவர்,  திருச்சி

  1. புதிய ஜனநாயகத்தை மக்கள் விரும்புகிறார்களாம். இது புதிய ஜனநாயகம் அல்ல இது புதிய இஸ்லாமியம் என்பதை உண்மை அறிந்தோர் ஒப்புக்கொள்ளுகிரார்கள்! இஸ்லாமிய பயங்கர வாதத்திக்கு வக்காலத்து வாங்கும் இந்த பத்திரிகை உண்மையை கூறுகிறதாம்!!!!!!!! என்ன விந்தை பாருங்கள். இஸ்லாமிய பயங்கரவாதத்தை உசுப்பேத்திக்கொண்டு வருமானம் சம்பாதிக்கும் இந்த பத்திரிக்கையை தொடர்ந்து படித்தால் “உண்மை” விளங்கும்தான்!!!!
    சீனாவை இந்திய சண்டைக்கு இழுத்ததாம்! இதையும் நாம் நம்ப வேண்டுமாம்!!! சீனாவால் தொடர்ந்து தனது கம்யுனிஸ்ட் கொள்கை கடைபிடிக்க முடியாது என்பதை உணர்ந்துதான் அது கம்யுனிஸ்ட் கொள்கையை கைவிட்டு விட்டது.
    ஏன் ? உலகநாடுகள் அனைத்திலும் கம்யுனிச கொள்கை படு தோல்வியடைந்து விட்டது. அதனால்தான் சீன இக்கொள்கையை தூக்கி எரிந்து விட்டது. இதையெல்லாம் மூடி மறைக்கப் பார்க்கிறது. இந்த இஸ்லாமிய ஆதரவு பத்திரிகை.
    முதலில் ஜனநாயகம்(இஸ்லாமியம்) என்ற பெயரை மாற்றுங்கள்!!!
    எங்களுக்கு “மக்கள்” ஜனநாயகம்தான் வேண்டும். பயங்கரவாதம் தேவையில்லை!
    அமெரிக்காவை வசைபாடும் வினவு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளான கிருத்துவ பாதிரிகளை அணுமின்சாரம் கூடங்குளம் பிரச்சனையில் ஆதரித்தீர்கள்!
    தேசிய வெறி என்று கூறும் நீங்கள் வெளி நாட்டில் நடக்கும் “ஈழவெரியை” கிளப்பிநீர்களே அது மட்டும் சரியா?
    நமது நாட்டை நேசிப்பது வெறி என்றால் அனைத்து இந்தியர்களும் தேசிய வெறியர்களாக இருப்பதை பெருமையாக கருதுகிறோம்!!

    • கெடு குடி சொற் கேளாது!

      இலக்கண சுத்தமாக பொருந்துகிறீர் போங்கள் Mr. Natrayan.

  2. வினவு கூட்டத்தை பக்கிஸ்தானுக்கோ அல்லது சீனாவுக்கோ குடி பெயர்ந்து போக ஆமோதிக்கிறேன். பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், மத குல நம்பிகை வழிபாட்டு சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் உள்ள மக்களாட்சி முறை உடைய பல இன குல கலச்சாரம் மற்றும் வாழ்முறைகளை உட்கொண்ட அற்புத இந்திய நாடு வினவிற்கு பிடிக்கவில்லை என்றால் தங்களுக்கு பிடித்த நாட்டிற்கு சென்று வாழ்வதுதான் அழகு.

    இந்தியா மீது சீனா போர் தொடுத்ததற்கு உண்மையான காரணம் :
    உள் நாட்டில் கம்யூனிச பூச்சாண்டி கொள்கைகளால் மாவோவின் ஒற்றை சிந்தனை கொள்கை வெறியால் பல மில்லியன் விவசாய பண்ணை தொழிளாலர்கள் பசியால் எலிகளையும் இறந்த சக மனித பிணங்களையும் தின்று இறந்தனர். மக்களுக்கு கம்யூனிசத்தின் மீது வெகுவாக நம்பிக்கை குறைய தொடங்கியது. இந்த ஏமாற்றங்களை திசை திருப்பவும் தேச ஒற்றுமை வேண்டி இந்தியா எனும் ஏமாளி கற்பனை எதிரியை உருவாக்கி கம்யூனிசத்தின் கையாலாகாத கொள்கைகளை மூடி மறைக்கவே வெறி பிடித்த சீன _______ இந்த பொழுது போக்கு போர் தொடர்ந்து தங்களது நகங்களை கூர் செய்து கொண்டனர். மத அடிப்படையில் கம்யூனிசம் போலவே ஒற்றை சிந்தனை போக்கு கொண்ட பாக்கிஸ்தானும் இதையேதான் செய்ய துடிக்கிறது.

    • And one more very important detail is India was non aligned,neither with USSR/USA,they wanted to bring India into the cold war because of its strategic location.

      And USSR took a neutral stance instead of preventing the conflict as they also wanted India to make a clear choice rather than sit on the line.

  3. இந்திய- சீன போரின் போது, சீனாதான் இந்தியாமீது படையெடுத்து ஆக்கிரமிக்கிறது என்று பிரச்சாரம் செய்யப்பட்டது! திட்டமிட்டே இந்திய தேசிய வெறியூட்டுனம் படஙள், அரசின் ஆதரவுடன் வெளியிடப்பட்டன! அப்போது பிரிவினை வாதம் பேசியவர்கள் கூட இந்திய ஒற்றுமைக்கு குரல் கொடுத்தனர்! ஆனால் ராஜாஜி என்ற மூதறிஞர் மட்டுமே, சீன எல்லை பிரச்சினையையும், கஷ்மீர் பிரச்சினையும் விட்டுக்கொடுத்தாவது தீர்க்கபடவேண்டும் என்றார்! அவரின் தீர்க்கதரிசனம் சரியானது தான்! மக்கள் சக்திகளுக்கு இடையே பிரிவினையை வளர்த்து, தஙகள ஆதிக்க பலத்தையும், ஆயுத சந்தையையும் தக்கவைத்துக்கொண்டனர்!

  4. Pஅகிச்டன் மட்டும் அல்ல இந்தியாவும் கஷின்வுக்குநண்பனே. இலஙகை இந்தீயாவின்நட்புநாடு. இலஙை சீனாவின்நட்புநாடு. அப்படியானால் இந்தியவுக்கு சீனாவோடு இந்தியா சேர்ந்து அழித்தது எந்த உறவில் ?

  5. எல்லாவற்றுக்கும் மூல காரணம் , குறைபிரசவமான சுதந்திரமே! சொஷலிசவாதி நேரு பிரதமராக இருந்தாலும், அவரின் பின்புலத்தில் சில துறைகளில், இந்துத்வ பெருச்சாளிகள் ராஜேந்திரபிரசாத், கோவிந்த் வல்லப் பந்த், படேல் முதலியவர்களால் இந்துத்வா கொள்கைகளே அரசாண்டது!

  6. அரிகுமார் ! உஙகள் ராமசன்ட்ர குகா ஆதாரம் சரியானது அல்ல! படிக்கும்பொதே அதன் தொனியில் இந்துத்வ வாடை தெரிகிறதே! நேருவை திறமையற்றவர், பல்வீனமானவர் என்று சித்தரிப்பதே உஙள் குறிக்கோள்? ராஜாஜியின், அக்சாசின்னை விட்டுக்கொடுத்தாவது அமைதியை தேடு என்ற அவரின் உபதேசத்தை நானே அன்றைய பத்திரிகைகளில் படித்தவன்! கஷ்மீரையும் விட்டுக்கொடு என்ற அவரின் கருத்தை அப்பொதைய முன்னனி பத்திரிகைகள் கின்டலடித்து கேலி சித்திரம் வரைந்து தள்ளின! இந்துத்வா கும்பல் சரித்திரத்தை எப்படி புரட்டும் என்பது எனக்கு தெரியாதா!நீவிர் வேண்டுமானால், சுதந்திர இந்திய சரித்திரத்தை ஆக்ச்போர்டில் படிக்கலாம், பாவம் சிறுவயதினர்! ஆனால் நான் அப்பொதே தினசரி படித்தவன்! காமராஜர், பெரியாரையும் அறிந்தவன்!

    • காமராஜர் பதவி ஆசையில் தமிழர்களை காங்கிரசுக்கு காவு கொடுத்தவர். பிராமணர் ஆல்லாதோர்க்கு பதவி என்று ஜாதி வெறியை தூண்டியவர். உண்மை தலைவர்களின் மீது கொலை பழி சுமத்தி தமிழகத்தில் காங்கிரசே இல்லாமல் செய்தவர். வயதில் என்ன இருக்கிறது பெரியவரே! அடுத்த தலைமுறைக்கு உண்மையை சொல்லுங்கள். சாமியில்லை என்று சொல்லிக்கோண்டு முஸ்லீம்களை பற்றியும், கிருத்துவர்களை பற்றியும் புகழ்ந்து தள்ளியவர் ஈ. வே. ரா. உன் நண்பனை சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். நீங்கள் தெரிந்து வைத்திருக்கும் நபர்களில் இருந்தே உங்கள் ஆழ்ந்த வரலாற்றறிவு தெரிகிறது.

      • Mr. vaanthiriyar, Kamarajar is not so great leader. But only his rule paved way for education and development of Tamil Nadu. Also what is wrong in asking for equal representation of non-Brahmins? What is wrong in arresting a murderer? Don’t support some stupid caste supremacists to oppose dalits and secular people. Periyar supported Muslims and Christians and also low caste Hindus. He opposed Hinduism as well as Islam and Christianity. He accused all religions. But loved people of all religious affiliation.

  7. அரிகுமார்! உஙகள் குகா சொல்லமறந்த இன்னொரு செய்தியும் சொல்கிறேன்! சீனாவிடம் இந்திய ராணுவம் தோல்வியுற்று ,நமது ஒரு பட்டாலியனே அவர்களிடம் சுர்ரென்டர் ஆகியிருந்தது! அவர்களை சீனர்கள்நஙு உபசரித்து கெளரவத்துடன் திருப்பி அனுப்பியது!நேருவின் உறவினரே, டி என் கவுல் என்று நினைவு, தளபதி பொருப்பிலிருந்ததால் இந்த செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன!நேருவின் மரணத்திற்க்கு பின்னர், பிரபல ஆஙகில தினசரியில் தோலியுற்ற படையின் துணை கமான்டெர் இதை விவரித்திருந்தார்! மேலும்,நேருவின் தென்னிந்தியநண்பர் கிருஷ்ண மேனனை, வட இந்தியர்களுக்கு பிடிக்காமல், அவரைப்பற்றியும், அவரின் தெசபக்தியையும் குறைகூறினர், ரானுவ தள்வாட தொழிற்சாலைகளில் அடுப்புகள் செய்ய சொன்னதாக!

  8. Dont over confuse things,DN Kaul is Kashmiri Pandit,Nehru is fake Kashmiri Pandit.

    DN Kaul is a great officer and it is not his fault if Nehru has no brains to decide whether to go to war with China or not,His grandson Col Anil Kaul lost his eyes in the IPKF and is around in televisions today being an analyst.

    And please dont discuss incompetent people like VK Krishnan Menon,forget patriotism,he should be tried for stupidity first.

  9. இன்றைக்கும் காரணம் இல்லாததற்கு எல்லாம் குறை கூறிக்கோண்டுதான் இருக்கிறார்கள் பெரியவரே!. ஈ.வே.ரா. வின் வளர்ப்பான அண்ணாத்துரை, கருணாநிதி போன்றோரின் இந்தி எதிர்ப்பு கொள்கைகள். வடக்கே எங்களை போக விடாமல் தடுக்கிறது. ஆனால் அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் இந்தி படிக்கிறார்கள். கேட்டால் தனி நபர் விருப்பம் என் சப்பை கட்டு கட்டுகிறார்கள். உண்மை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துவராத உங்களை போன்றோரின் தவறு அது. தயவு செய்து உங்களது பொய்களுக்கு இனியும் சப்பை கட்டு கட்ட வேண்டாம்.

  10. //ஈ.வே.ரா. வின் வளர்ப்பான அண்ணாத்துரை, கருணாநிதி போன்றோரின் இந்தி எதிர்ப்பு கொள்கைகள். வடக்கே எங்களை போக விடாமல் தடுக்கிறது//

    The most stupuid argument.. no one said “Do not learn Hindi” ,.. They said only “Do Not impose Hindi”.. If u want to go to NORTH better learn Hindi from any institution and go.. For some 2% of the population like u who want to go to Delhi to make ur so called progress why shud the rest 98% suffer by learning HINDI ???

    • There are lot of people who landed up as labourers in North India from Tirunelveli/Thootukudi in Mumbai without knowing Hindi and are doing well now.

      It is poor people who need Hindi,not educated.middle class people.

      Hindi need not be imposed but why cant u teach that in Governmetn schools atleast as an optional subject.

      • ur question has the answer also… The people who reached NORTH are doing well already.. If needed anyone can learn any language.. Why shud the govt teach HINDI even optionally in govt schools which is hardly needed by 2% of the population… Also it will be better to spend tat money in teaching another foreign language such as GERMAN becos it will help the poor people to get better opportunities.. Also we can decide people as poor only when they reach 18 so teaching HINDI to poor people in govt schools is practically not possible.. Instead of teaching HINDI to children in gs HINDI govt schools and waste everyone’s time we shud focus tat energy on ENGLISH or SOME other foreign language which will give better benefits. Also don’t worry in another 25 years most of the IDIANS will be able to understand ENGLISH to a minimum extend so knowing or NOT knowing HINDI won’t make a big difference. Wat we have to do is

        1) If any special right is given to HINDI we shud strive to get that for all regional languages of revoke that right from HINDIA also. Such as using the kanguage in court (iam not sure on this)
        2) Make sure that english is been used in all offical communications across different states.

        • Ok teach German,yeah getting German teaching staff on govt salaries ll be cheaper than getting hindi teachers to teach Hindi,are you serious Jenil?

          You decide people are poor only when they are 18? Hahahaha,all those kids sitting in slums and studying under streelights are yet to qualify,is it?

          Sure,teach English,teach anything.Now there is a proposal to teach english in government schools,which is good.

          such an attitude wont help anyone Jenil,try to help Tamils to read,learn and speak tamizh properly first.

          • I don’t think teaching English is a problem. But imposing English is again a problem. Those who want, let them choose English medium. But everyone must be given a chance to study all subjects in his/her mother tongue. It is no more impossible to do all the translation in this Internet era.

            • so,why not teach hindi also optionally?

              say i get a paetition signed by the people of an area/district/taluk,why not teach optional hindi in govt schools?

  11. //உண்மை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துவராத உங்களை போன்றோரின் தவறு அது. //

    This one is true … From the begining History is tampered in our Country for example 1)”British Invaded India” the statement itself is wrong.. There was NO INIDA when British came here its the British who coined the state INDIA just for their admintration Ease… 2) “Kashmir is Integral part of INDIA. Pakistam tries to take it” This statement is also wrong. INDIA stole Kashmir from Kashmiris by playing smart with the Kashmiri MONARCH (Note this point the decision is made by the King not by the people) and the people wanted their country back.
    3) The INIDIAN Map we see itself is wrong, The POK has never been part of INDIA but we teach children tat its INDIA..

    • // There was NO INIDA when British came here its the British who coined the state INDIA just for their admintration Ease… //

      இந்தியா/இண்டீஸ் என்பது தெற்காசிய நிலப்பரப்பின் பெயராக கொலம்பஸின் காலத்துக்கு (15-ம் நூற்றாண்டு) முன்பே பிரிட்டிஷ்-அய்ரொப்பிய வர்த்தகர்களால் கடல் வழி வாணிபத்தால் அறியப்பட்டிருந்தது.. கொலம்பஸ் ’இந்தியாவுக்கு’ புதுவழி கண்டுபிடிக்கக் கிளம்பி அமெரிக்காவைக் கண்டுபிடித்த கதை பிரிட்டிஷ்காரர்களின் இந்திய ஆட்சிக்கு சில நூற்றாண்டுகள் முந்தையது.. அவர் எதிர்பாராமல் கண்டுபிடித்து பெயரும் வைத்துவிட்ட மேற்கிந்திய தீவுகளால் பெயர்க் குழப்பம் நேரக்கூடாதென்று கிழக்கிந்தியக் கம்பேனி என்ற பெயரில் டச்சு, பிரிட்டிஷ் வர்த்தக் கழகங்கள் தோன்றின.. எனவே இந்தியா பிரிட்டிசாரின் புதிய கண்டுபிடிப்பல்ல.. பிரிட்டிசாருக்கு முன் முகலாயப் பேரரசு தன்னை அழைத்துக் கொண்ட பெயர் – முன்னர் பெர்சியர்களால் ’சிந்து நதிக்கப்பால் உள்ள பிரதேசம்’ என்று அழைக்கப்பட்ட – ஹிந்துஸ்தான்..

      • @Ambi I never said British coined the name i said they coined the state.. AT the time British reached the present day INDIA was not a single country(Never before it has been).. For adminitrative purpose they called the entire land space ruled by many rulers as INDIA..please read (http://en.wikipedia.org/wiki/List_of_princely_states_of_India). SO the idea of British conquered INDIA is irrelevant actually they conquered the more than 500 different cuntries(at that time) and created a country called INDIA…

        • // @Ambi I never said British coined the name i said they coined the state.. //

          ”Coined” என்ற சொல் ஒரு புது சொல்லாக்கத்தை பொதுவாகக் குறிப்பது என்பதால் அந்தப் பின்னூட்டம்.. சரி, பிரிட்டிசார் இந்தியாவை ஏன் ஒரே அரசியல் அமைப்பாக (சமஸ்தானங்களைத் தவிர்த்து) ஒரு பெரிய நாடாக ஒருங்கிணைக்க வேண்டும்..?! எந்த அடிப்படையில் இத்தனை பெரிய நிலப்பரப்பை ஒரே நாடாக்கினார்கள்..?

      • இந்துச்தானில் டெக்கான் இல்லை! பின்னர் அகண்ட இந்துச்தானத்தில் மட்டும் எப்படி டெக்கான் எனப்படும் திராவிடம் வந்தது?

          • Indra in battles help his Āryan worshipper, he who hath hundred helps at hand in every fray, in frays that win the light of heaven. Plaguing the lawless he gave up to Manu’s seed the dusky skin (dark skinned). -Rig Veda Book 1, Chapter 130, Verse 8.

            So, with whom the aryan worshippers are fighting? why indra won’t help non-aryan worshippers? Why dark skin is associated with lawlessness? Is this not in rig veda?

            http://www.sacred-texts.com/hin/rigveda/rv01130.htm

            • many things get lost in translation,colour of the skin and all is definitely no issue here.

              Missionary people easily misintrepret things to get their agenda forward.

                • // Don’t blame the missionaries for all evils of your retarded religion //

                  Sure.. but everyone can say this : “your retarded religion”.. Read Book of Leviticus 25: 44,45,46 in Holy Bible…

                  • I accept without any doubt that they are not divine revelations but just retarded balbberings of a nomadic tribe’s leaders. Can you people say the same about your crappy vedas and puranas?

                    • Again you are using blanket adjectives for vedas & puranas.. If you say that the whole of bible is retarded blabberings of nomadic tribal leaders then remember that the mightty divinity and mission attributed to Jesus Christ and christianity is derivied from these blabberings only.. When you look into ancient works like bible / vedas / puranas retrospectively from present stage of civilization, you may find in them both good and bad.. They are collection of works by different authors.. Using blanket adjectives like retarded / crappy for whole of such works / books is just subjective but not objective way of uderstanding..

                      In puranas Sons of the bright Sun god are Yama and Sani who are dark in color.. Other ‘aryan’ darkies are Ram, Krishnan, Vedavyasa, Thraupathi and more.. thus the racial theory based on vedas and puranas falls flat..

        • // இந்துச்தானில் டெக்கான் இல்லை! பின்னர் அகண்ட இந்துச்தானத்தில் மட்டும் எப்படி டெக்கான் எனப்படும் திராவிடம் வந்தது? //

          பாரசீகர்கள் வைத்த ஹிந்துஸ்தான் என்ற பெயரில் பின்னர் அழைக்கப்பட்டாலும் இன்றைய இந்திய துணைக் கண்டம் அன்றைய இந்தியர்களால் ஜம்புத்வீபம் என்றும் பாரத வர்ஷம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.. வடஇந்தியா-உத்தரபாதம் ஆரியவர்த்தம் என்றும், தென்னிந்தியா-தட்சிணபாதம்(டெக்கான்) திராவிடம் என்றும் நிலப்பகுதி பெயர்களாக இந்திய மக்கள் மத்தியில் வழங்கப்பட்டு வந்தன..

          • \\ இன்றைய இந்திய துணைக் கண்டம் அன்றைய இந்தியர்களால் ஜம்புத்வீபம் என்றும் பாரத வர்ஷம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது..//

            ”ஜம்புத்வீபம்” ” பாரத வர்ஷம்” இங்கெல்லாம் வாழ்ந்தவர்கள் எப்படி ”அன்றைய இந்தியர்கள” ஆனார்கள்.இந்தியாவே இல்லாத காலத்தில் இந்தியர்கள்.ஆச்சரியம்தான்.

            \\வடஇந்தியா-உத்தரபாதம் ஆரியவர்த்தம் என்றும், தென்னிந்தியா-தட்சிணபாதம்(டெக்கான்) திராவிடம் என்றும் நிலப்பகுதி பெயர்களாக இந்திய மக்கள் மத்தியில் வழங்கப்பட்டு வந்தன..//

            அப்புறம் எப்படி வட இந்திய பகுதி நேபாள் மட்டும் தனிநாடாக இருக்கு.அம்பி,இதெல்லாம் சப்பைக்கட்டு.வெள்ளைக்காரன் பிடித்து வைத்திருந்தான்.அந்த பகுதியெல்லாம் இந்தியா என்று கதை விடுகிறீர்கள்.அவ்வளவுதான்.காலனி ஆட்சி என்ற ஒன்றை தவிர இன்றைய இந்தியாவை ஒரே நாடு என்று அழைக்க வேறு முகாந்திரம் ஏதும் இல்லை.

            உங்கள் இந்திய வரைபட பாரத மாதா பெண் உருவத்துக்கு தொடர்பே இல்லாமல் அந்தமான்,இலட்ச தீவுகளும் இந்தியா என்கிறீர்களே.எப்படி.ஒருவேளை அவையெல்லாம் மாதாவின் ஆறாவது விரல்கள் என்பீர்களோ.

            • // ”ஜம்புத்வீபம்” ” பாரத வர்ஷம்” இங்கெல்லாம் வாழ்ந்தவர்கள் எப்படி ”அன்றைய இந்தியர்கள” ஆனார்கள்.இந்தியாவே இல்லாத காலத்தில் இந்தியர்கள்.ஆச்சரியம்தான். //

              சரி, ”அன்றைய பாரத வர்ஷ மக்கள்” என்று வைத்துக் கொள்ளுங்கள்..

              // அப்புறம் எப்படி வட இந்திய பகுதி நேபாள் மட்டும் தனிநாடாக இருக்கு. //

              ஏன் தனிநாடாக இருக்கு..?! அவர்களாக வந்து நம்முடன் சேர்ந்து கொள்ள வேண்டியதுதானே..?!

              // அம்பி,இதெல்லாம் சப்பைக்கட்டு.வெள்ளைக்காரன் பிடித்து வைத்திருந்தான்.அந்த பகுதியெல்லாம் இந்தியா என்று கதை விடுகிறீர்கள்.அவ்வளவுதான்.காலனி ஆட்சி என்ற ஒன்றை தவிர இன்றைய இந்தியாவை ஒரே நாடு என்று அழைக்க வேறு முகாந்திரம் ஏதும் இல்லை. //

              வெள்ளைக்காரனாவது ஒன்று சேர்த்தானே.. இன்றைய ஜனநாயகத்தில் அதை கட்டாயம் பிரித்தே ஆகவேண்டுமா..?!!!

              // உங்கள் இந்திய வரைபட பாரத மாதா பெண் உருவத்துக்கு தொடர்பே இல்லாமல் அந்தமான்,இலட்ச தீவுகளும் இந்தியா என்கிறீர்களே.எப்படி.ஒருவேளை அவையெல்லாம் மாதாவின் ஆறாவது விரல்கள் என்பீர்களோ. //

              ஏன் பாரத மாதாவுக்கு ஆறு விரல் இருக்கப்படாதா..?!!!

              • \\சரி, ”அன்றைய பாரத வர்ஷ மக்கள்” //

                முதலில் ஒரு பொய்யான கருத்தை திணிக்க வேண்டியது.எதிரிகள் எச்சரிக்கையாக இருந்தால் தோசையை அப்படியே திருப்பி போட வேண்டியது.நல்லா இருக்கே இந்த தந்திரம்.

                \\ஏன் தனிநாடாக இருக்கு..?! அவர்களாக வந்து நம்முடன் சேர்ந்து கொள்ள வேண்டியதுதானே..?!//

                முதலில் கையாண்டதை விட மோசமான தந்திரம்.கேள்விக்கு விடை ஏதும் சொல்லாமல் தப்பி செல்லும் மலிவான உத்தி.

                \\வெள்ளைக்காரனாவது ஒன்று சேர்த்தானே.. //

                பூனை குட்டி வெளியே வந்து விட்டது.வெள்ளைக்காரன் உருவாக்கியதுதான் இன்றைய இந்தியா என்னும் நாடு என்பதை அம்பியே ஒப்புக் கொள்கிறார்.இது பற்றிதானே விவாதம்.உங்களுக்கே உண்மை தெரிகிறது,அதை ஒப்புக் கொள்ளவும் செய்கிறீர்கள்.பிறகு எதற்காக பாரதம்,ஆரிய வருசம் என்றெல்லாம் முக்கி தக்கி இந்தியா ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என நிறுவ முயன்று பரிதாபகரமாக தோற்றுப் போகிறீர்கள்.

                \\இன்றைய ஜனநாயகத்தில் அதை கட்டாயம் பிரித்தே ஆகவேண்டுமா..?!!!//

                மக்கள் விருப்பப்படி சேர்ந்திருக்கவும்,பிரிந்து போகவும் அனுமதிப்பதே உண்மையான சனநாயகம்.

                \\ஏன் பாரத மாதாவுக்கு ஆறு விரல் இருக்கப்படாதா..?!!!//

                இருக்கும் விரல்களை வைத்து திருப்தி அடைய பாருங்கள்.அடுத்தவன் விரல்களை எல்லாம் வெட்டி ஒட்டி மாதாவுக்கு ஞெகிழி அறுவை மருத்துவம் பார்க்காதீர்கள்.ஒவ்வாமை வந்து மாதாவின் உயிருக்கே ஆபத்து வந்து வந்து விட போகிறது.

                • // முதலில் ஒரு பொய்யான கருத்தை திணிக்க வேண்டியது.எதிரிகள் எச்சரிக்கையாக இருந்தால் தோசையை அப்படியே திருப்பி போட வேண்டியது.நல்லா இருக்கே இந்த தந்திரம். //

                  இந்திய துணைக்கண்டத்தின் தொன்மைப் பெயரான பாரதவர்ஷத்து மக்களை ’அன்றைய இந்தியர்கள்’ என்று அழைக்கக் கூடாது, ஏனென்றால் இந்தியா என்ற நாட்டை உருவாக்கியவன் சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்த வெள்ளைக்காரன் என்றீர்கள்.. நாளை நேபாளத்தையும்,பூடானையும் இந்தியாவுடன் சேர்த்து சீனாக்காரன் இந்தியாவுக்கு சின்தியா என்று பெயர்வைத்து ஆளும் பொற்காலம் வந்து தொலைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.. அப்போது, அன்றைய இந்தியர்கள் வேறு, இன்றைய சின்தியர்கள் வேறு என்று கூறுவீர்களா..?!

                  // பூனை குட்டி வெளியே வந்து விட்டது.வெள்ளைக்காரன் உருவாக்கியதுதான் இன்றைய இந்தியா என்னும் நாடு என்பதை அம்பியே ஒப்புக் கொள்கிறார்.இது பற்றிதானே விவாதம்.உங்களுக்கே உண்மை தெரிகிறது,அதை ஒப்புக் கொள்ளவும் செய்கிறீர்கள்.பிறகு எதற்காக பாரதம்,ஆரிய வருசம் என்றெல்லாம் முக்கி தக்கி இந்தியா ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என நிறுவ முயன்று பரிதாபகரமாக தோற்றுப் போகிறீர்கள். //

                  ஒன்று சேர்ப்பதற்கும், உருவாக்குவதற்கும் வேறுபாடு இருக்கிறது..

    • Iam also saying the same thing , Harisingh is NOT the representative of Kashmir.. If tat is correct then the Nizam of Hydrebad a muslim leader and he wanted Hydrebad to be annexed with Pakistan.. Then tat is also correct Y did Indian army invaded and forcefully took Hyderabad ??? Please read http://sujaiblog.blogspot.com under section Kashmir

      • Yeah it is true that Kashmir Valley wanted to be with Pakistan,then why did Jinnah send Tribal Lashkars to Kashmir who raped/murdered the population on the way?

        Why did Kashmiri Muslim women also protest the invasion?If he sent the official army,thats alright but he sent the tribals.

  12. அரிகுமாருக்கு அம்பி வக்காலத்து! பேஷ்! பேஷ்! திருனெல்வேலி தமிழர்கள் பலர் கொத்தடிமைகளாய் சிரு வயதிலேயே விற்கபட்டு, குஜராத் பேக்கரிகளிலும், மும்பை கொடெல்களிலும், கேரளா உட்பட பிற மானிலங்களிலும் அடிமை வேலையே செய்கிரார்கள்! ஆபிசர் வேலைக்கு போனவர்கள் அல்ல! பிகார் முதலிய வட மானிலஙளிலிருந்து இஙகு கட்டுமான இன்ன பிற வேலைக்கு வருபவர்களும் தமிழ் படித்து வருவதில்லை! உழக்கும் மக்களின் புலம்பெயர்தல் முதலாளித்துவ குண்டர்களால், முதலாளிகளின் சுரண்டலுக்காகவே நடக்கிறது! அடுத்து கஷ்மீர் இணைப்பு பற்றி! கஷ்மீரிகள் தனிநாடாக இருக்கவே விரும்பினார்கள்! ஆனால் வடமேற்கு எல்லையில் பாகிச்தானிய பழங்குடிகள் போர்வையில் ரஜாக்கர்கள் கஷ்மீரில் பெரும் பகுதியை பிடித்து முன்னேறி வருகையில், இந்திய அரசு, காலந்தாழ்த்தி, வக்கிரமாக இணைப்பு பத்திரத்தை எழுதி வாஙகியது! மகாராஜா எற்கனவே உடல்னலமின்றி, மக்கள் தொடர்பற்று இருந்த போது, பிரதம மந்திரி ஷேக் அப்துல்லாவும், திவான் கொபாலய்யங்காரும் செய்த ஏற்பாடு! கஷ்மீர் இணைப்பில் கைனாட்டு வைத்தவர் பின்னர் கண் திறக்கவே இல்லை! ஆர்டிக்கிள் 373 இணைப்பு சாசனத்தின் முக்கிய நிபந்தனை! ஆxபோர்டில் இதெல்லாம் சொல்லியிருப்பார்களே! ஜெனில் வாதம் சரியானதே!எமெர்ஜென்சி பிரகடணம் செய்த மக்கள் பக்ருதின் அலி கூட பின்னர் தொடர்பற்று பொனது சரித்திரம்!

    • Not everyone who went to Mumbai were sold as labour,there are many people who went there as construction workers/other menial jobs etc and even if you are talking about officer/white collar jobs,many middle/lower middle class people went to Mumbai to earn their living,apart from this you have people joining the army as jawans/people working in private companies and so on….

      There is no justification for not teaching a language people need to know.

      Sheikh Abdullah became PM of J&K in 1948,Accesion was signed in 1947 and yeah India is keeping the valley/India ll keep the valley,what ll u do?

      If Pak/Kashmiris have balls let them fight and take it.

  13. த்ற்போது நமது தேசபக்த முதலாளிகலெல்லாம் சீனாவுக்கு போகிறார்களாம் ! அரிக்ரிஷ்னர்கள் சீனம் கற்றுக்கொள்ள பரிந்துரைக்கின்றேன்!

  14. அரிகுமார் அடாவடி குமாராக வேண்டியதில்லை! உஙகள் ஆதிக்க வெறி தலைகாட்டிவிடுகிறது! அம்பியின் பதிலில் வழக்கம்போல குழப்பம் தான்! இந்துச்தானம் என்று சிந்துநதி பாயும் சமவெளி பிரதெசங்களைத்தான் அரேபியர்கள் குறிப்பிட்டார்கள்! அதற்கு கிழக்கேயும், தெற்கேயும் உள்ள பகுதிகளைபற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை அல்லது குறிப்பிடவில்லை!

    • பிறகு ஏன் முழு இந்திய துணைக் கண்டத்துக்கும் ஹிந்துஸ்தான் என்று பெயர் வைத்தார்கள் என்று கில்ஜிகளிடமும், முகலாயர்களிடமும் தான் நீங்கள் கேட்கவேண்டும்..

      • Think u wud remmember.. In 6th std wen teach asks everyone what is ur father one or two students will say FOREIGN does tat means there is a country name FOREIGN… When foreigners came here there were so many small kingdoms and few big empires and they called it HINDUSTAN becos of their old understanding based on LAND of INDUS since they can’t pronounce I they replaced it with HINDU.. If u think tat a a argument point for ur so called ANCIENT INDIA i really pitty u… My point is in old time even TAMILNADU is not a single country for ages it has been ruled by CHERAS, SHOLAS, PANDIYAS and after tat ruled my so many small scale kings over time.. Then how can be the present day INDIA be claimed as existed befoe 1000 years ????

        • INDIA as a single large political & administrative entity was created by British.. OK, I asked you what necessitated it for the british to do that..?!

          • The answer for this is there in the first comment by me… For the ease of adminitration.. They cannot have different governors for all 500+ provices(countries at tat time) will be complicated.. Even then many of those provinces where independant countries under one control of BRITISH.. E.g, Travancore. That is the reason when British left INDIA They gave two options to all the provices to JOIN(Mark this word) INDIA or PAKISTAN.. If INDIA is already existing what is the need of JOINING ???

            • no,there were already kingdoms existing,in some places not so.
              But all these provinces are not islands far away from each other.
              They are related and are perfectly capable of co existing in a federal province/country.

          • The answer for this is there in the first comment by me… For the ease of adminitration.. They cannot have different governors for all 500+ provices(countries at tat time) will be complicated.. Even then many of those provinces where independant countries under one control of BRITISH.. E.g, Travancore. That is the reason when British left INDIA They gave two options to all the provices to JOIN(Mark this word) INDIA or PAKISTAN.. If INDIA is already existing what is the need of JOINING ???

          • I have already answered this.. For the purpose of Administrative ease.. Even after tat all the provinces remained as independant entities e.g, Hydrabad, Travancore, Arcod etc with their own kings accountable only to theBRITISH.. Also when the BRITISH left option was given to all provinces to JOIN either INDIA or PAKISTAN if INDIA was already existing why shud the states JOIN again to INDIA ? INDIA is just a Administrative entity. Also may states such as Sikkim, Himachal Pradesh, Manipur(Evenall these states where part of British INDIA) joined INDIA long after 1947 how will you explain tat ??…

            • // Also may states such as Sikkim, Himachal Pradesh, Manipur(Evenall these states where part of British INDIA) joined INDIA long after 1947 how will you explain tat ??…//

              You have to explain tat.. and Why bengal was partitioned for ‘administrative ease’ as claimed by british..?!

              • My explaination is INDIA never existed.. All the land we have now existed a different countries at different time period.. If it were not the British the INDIA u r very proud wud NOT have existed…So thsoso the idea of 1000 yrr old INDIA is historically wrong..

                • Where will you stop with this kind of explanation of terminology..?! Would you say there was no tamil nadu but chera, chozha, pandia nadu, palayakkarar blah.. blah..?! For the british, the people of this sub-continent, who were ruled by different kings and speaking different languages, were having similar cultural & traditional base and social structure.. and having continuous movement of men & material across the sub-continent in spritual pilgrimages & trade.. This similarity and free movements of masses were not hindered by the language barriers or political borders.. Thus the british saw them as a people with similarities and dynamic interaction among them but different from surrounding asian cultures like persian, arab, turkish, chinese.. You can call them by any name but their distinct identity remains and continues..

                  • இந்திய துணைக்கண்டம் முழுக்க வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களிடையே ஒரே மாதிரியான கலாச்சாரம் இருந்ததாம்.புனித பயணம் வணிகம் என்று மக்களும் பொருட்களும் இங்கும் அங்கும் போய் வந்ததால் இது ஒரே நாடாம்.இது எங்கேயோ கேட்ட குரல் அல்லவா.அட,ஆமாம். இது அப்படியே RSS புரட்டை உள்வாங்கி எடுத்து விட்ட வாந்தி.

                    ஒரே நாடு,ஒரே மக்கள்,ஒரே கலாச்சாரம் என்ற மத வெறி ஓநாய்களின் கூச்சலைத்தான் அம்பி வேறு சொற்களில் பதிவு செய்கிறார்.தகவல் தொடர்பு துறை வெகுவாக முன்னேறிவிட்ட இந்த காலத்தில் கூட இந்தியா முழுவதும் ஒரே கலாசாரம் நிலவவில்லை எனபது கண்கூடு.பார்ப்பனிய கண்ணாடி அணிந்த அம்பிகளுக்கு வேண்டுமானால் அப்படி தெரியலாம்.

                    வடக்கே கோவில் தெற்கே கோவில் அதனால் இது ஒரே நாடு.எப்படி என்றால் அங்குமிங்கும் நாங்கள் போய் வந்தோம். இதெல்லாம் RSS சாகாக்களில் சொல்லி புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம்.அரசியல் அரங்கில் எடுபடாது.அப்படி பார்த்தால் இன்றும் நீங்கள் புனித பயணம் போய் வரும் மானசரோவரும் கைலாய மலையும் உங்கள் நாட்டில் இல்லையே எப்படி.நான் சொல்லவா.வெள்ளைக்காரன் திபெத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தால் அது சிவனின் இருப்பிடம் எங்கள் வடக்கெல்லை என்று இந்தியா ஆக்கி இருப்பீர்கள்.திபெத் வெள்ளைக்காரனிடம் சிக்கவில்லை.அதனால் உங்களிடம் இல்லை.இதுதானே உண்மை.

                    சமூக கட்டுமானம் பற்றி சொல்வதென்றால் சா”தீய ” சமூகம் நிலவும் ஈழமும் நேபாளும் இந்தியாவில் இல்லை என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

                    வணிகமும் பொருள் போக்குவரத்தும் பட்டு பாதை வழியாக மைய ஆசிய நாடுகள் வரையும் நடந்துள்ளன.இன்றைய லடாக்கும் சீனாவின் சின்சியாங் மாநிலமும் மிகப்பெரிய அளவில் வணிக தொடர்பு கொண்டிருந்திருக்கின்றன, அதற்காக சின்சியாங் இந்தியாவுடன் சேர வேண்டும் என்று சொல்ல முடியாதில்லையா.அது போலத்தான் அம்பியின் தத்து பித்து உளறல்கள் இந்தியா ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று மெய்ப்பிக்க முயன்று தோற்றுப்போகின்றன.

                    • // இந்திய துணைக்கண்டம் முழுக்க வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களிடையே ஒரே மாதிரியான கலாச்சாரம் இருந்ததாம்.//

                      similar cultural & traditional base – என்றால் கலாச்சார, பாரம்பரியமான பழக்க வழக்கங்களின் அடித்தளம்.. ஒரே மாதிரியான கலாச்சாரம் என்று சுருக்கி உங்களுக்கு வசதியாக மொழியாக்கம் செய்து கொண்டு விவாதிக்கப்படாது..

                      // புனித பயணம் வணிகம் என்று மக்களும் பொருட்களும் இங்கும் அங்கும் போய் வந்ததால் இது ஒரே நாடாம். //

                      // வடக்கே கோவில் தெற்கே கோவில் அதனால் இது ஒரே நாடு.எப்படி என்றால் அங்குமிங்கும் நாங்கள் போய் வந்தோம். இதெல்லாம் RSS சாகாக்களில் சொல்லி புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம்.அரசியல் அரங்கில் எடுபடாது. //

                      மீண்டும் அதே திரித்தல்.. இங்கு 1008 நாடுகள் இருந்தாலும், மக்களின் பொதுவான தொன்மையான சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்தியத் துணைக்கண்டம் முழுதுமுள்ள புனித தலங்கள், கைலாயம் முதல், ராமேஸ்வரம் கன்னியாகுமரி வரை, எல்லா மக்களுக்கும் சாதி,மொழி, பிரதேசம் கடந்த புனித பயணத்தலங்களாக, பொதுவான அடித்தளத்தில் ஆனால் சற்றே மாறுபடும் கலாச்சாரங்களின் பரிமாற்றங்கள் நிகழும் இடங்களாக இருந்து வருகின்றன.. வர்த்தகமும் இது போன்ற பரிமாற்றங்களை நிகழ்த்தும் ஆற்றல் படைத்தது.. ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருக்கும் நாடுகளில் கூட பொதுவாக புனித பயணம் மேற்கொள்வோரையும், வர்த்தகர்களையும் எதிரி நாட்டவர்கள் என்பதற்காக தடை செய்வதில்லை.. கணிசமான அளவில் நிகழும் புனித பயணங்கள், வர்த்தகம் இவற்றின் இந்தப் பொதுமை, இந்திய துணைக்கண்டத்தில் பொதுவான கலாச்சார அடித்தளத்தால் அதன் மேல் நிகழ்ந்து, அதை மேலும் வலிமையாக்கிபடி இருக்கிறது.. இந்திய துணைக்கண்டத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்த இந்துவும் மொழி, உடை, பிரதேச வழி மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் நம்பிக்கைகள், சிந்தனைகள் இவற்றில் இந்து மதம் ஏற்படுத்திய ஆழ்ந்த தாக்கங்களால் உருவான தொன்மையான, பொதுவானதொரு கலாச்சார அடித்தளத்தை பிற பகுதிகளில் உள்ள இந்துக்களிடம் பொதுவாக கொண்டிருப்பதை எளிதாக உணரமுடியும்..
                      இந்த பொதுமையான கலாச்சார அடித்தளத்தை ஒற்றைக் கலாச்சாரமாக RSS -ன் பார்வையிலேயேதான் நீங்களும் பார்க்கிறீர்கள்.. பீகாரிக்கும், தமிழனுக்கும் எப்படி ஒரே கலச்சாரம் என்று குழம்புகிறீர்கள்.. மாறிக் கொண்டே இருக்கும் அரசியல் எல்லைகளைக் கடந்த இந்த கலாச்சார அடித்தளமே மானசரோவர், கைலாயம் இந்தியாவுக்கு வெளியில் இருந்தாலும் பீகாரியையும், தமிழனையும் பிற இந்திய மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பது புரிய வேண்டுமானால் RSS-ன் எதிர்மறைத் தாக்கத்திலிருந்து நீங்கள் விடுபட்டு இந்திய கலாசாரத்தை விருப்பு வெறுப்பின்றி ஆழமாக நோக்க வேண்டும்..

                      // வணிகமும் பொருள் போக்குவரத்தும் பட்டு பாதை வழியாக மைய ஆசிய நாடுகள் வரையும் நடந்துள்ளன.இன்றைய லடாக்கும் சீனாவின் சின்சியாங் மாநிலமும் மிகப்பெரிய அளவில் வணிக தொடர்பு கொண்டிருந்திருக்கின்றன, அதற்காக சின்சியாங் இந்தியாவுடன் சேர வேண்டும் என்று சொல்ல முடியாதில்லையா. //

                      அரபுகளுடனான வணிகம் சின்சியாங் மட்டுமல்ல கோழிக்கோடு, இலங்கை மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்காசி நாடுகள் வரை நிகழ்த்திய கலாச்சார பரிமாற்றங்கள்தான் இஸ்லாம் முதலில் இங்கெல்லாம் பரவக் காரணமாயிருந்தது.. இதுதான் வணிகத் தொடர்புகளின் ஆற்றல் என்று குறிப்பிட்டேன்..

                      // அம்பியின் தத்து பித்து உளறல்கள் இந்தியா ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று மெய்ப்பிக்க முயன்று தோற்றுப்போகின்றன. //

                      உங்கள் எண்ணத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லாவிட்டாலும் சொல்லவேண்டியதை சுருக்கமாகச் சொல்லிவிட்டேன் என்றே நினைக்கிறேன்..

                    • அம்பி,

                      திப்புவுடன் உங்கள் வாதம் தொடர்பாக…

                      பல்வேறு நுட்ப வேறுபாடுகள் மத்தியிலும் இங்கு ஒரு பொது பண்பாடு தழைக்க இந்து மதம் காரணம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இந்த பொது பண்பாடு கொஞ்சம் பூகோள ரீதியானது. மீதி, அரசியல் ஆட்சிக்குடை கொண்டு வந்தது. உதாரணமாக குப்தர்களும், மவுரியர்களும் இதனை சாதித்துக் காட்டினர். இன்று இந்து மதமாக அறியப்படுகின்ற பார்ப்பன வைதீக மரபிற்கு மிகவும் எதிர்மறையான பங்களிப்பே உள்ளது. அது மக்களை பிரித்து, ஒடுக்கி சேர்த்தது. மக்கள் இழுத்து பூட்டப்பட்டனர். மனு ஸ்மிருதியிலிருந்து கவுடில்யரின் அர்த்தசாஸ்திரம் வரை மக்களை ஒடுக்கவும், பிரிக்கவும் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு கற்றுக் கொடுத்தன. இதற்கு மாறாக பைபிளும், குரானும், திருக்குறளும் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் ஒரு பாலத்தை ஏற்படுத்தின. நமது பல்லிடுக்கை நாமே குத்தி நாறடிக்கும் வேலை என்று ஆர்.எஸ்.எஸ் –இல் இல்லாத உங்களை போன்ற அம்பிகள் பொருமி பயனில்லை. இந்த கடினமான உண்மைக்கு நீங்கள் முகம் கொடுத்தே ஆக வேண்டும்.

                    • // இன்று இந்து மதமாக அறியப்படுகின்ற பார்ப்பன வைதீக மரபிற்கு மிகவும் எதிர்மறையான பங்களிப்பே உள்ளது. அது மக்களை பிரித்து, ஒடுக்கி சேர்த்தது. மக்கள் இழுத்து பூட்டப்பட்டனர். மனு ஸ்மிருதியிலிருந்து கவுடில்யரின் அர்த்தசாஸ்திரம் வரை மக்களை ஒடுக்கவும், பிரிக்கவும் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு கற்றுக் கொடுத்தன. //

                      முதல் வரியில் நீங்கள் குறிப்பிட்ட இந்து மதம் தனிமனிதர்களின் வழிபாட்டு, கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கும் ஒரு மதம்.. மக்களை பிரித்து, ஒடுக்கி, இழுத்துப் பூட்டும் வகையிலான அதிகாரங்களுள்ள மையப்படுத்தப்பட்ட மதத் தலைமை/அமைப்பு இல்லாத ஒரு மதம்..

                      இரண்டாவது வரியில் நீங்கள் குறிப்பிடும் மனுஸ்மிருதி, அர்த்த சாத்திரம் போன்றவை, ஆட்சியாளர்களுக்கு மேற்கூறிய அதிகாரங்களை மதத்தின் பெயரால் வழங்கியவை.. இதை அனுமதிக்காமல் எதிர்க்க மையப்படுத்தப்பட்ட ஒரு மதத் தலைமை இல்லாமல் போனதுதான் இந்து மதம், மத சுதந்திரத்துக்கு கொடுத்த விலை..

                      // இதற்கு மாறாக பைபிளும், குரானும், திருக்குறளும் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் ஒரு பாலத்தை ஏற்படுத்தின. //

                      திருக்குறளைப் பொறுத்தவரை அது ஒரு மகத்தான அறநூல் ( மதநூல் அல்ல ) என்பதால் நீங்கள் கூறுவது எனக்கு உடன்பாடுதான்.. ஆனால் பைபிளும், குரானும் ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் ஒரு பாலத்தை ஏற்படுத்தியதாகக் கூறுவது விவாதத்துக்குரியது.. மக்களை கட்டுப்படுத்த படைகளை நம்பியதைவிட பைபிளையும், குரானையும் நம்பிய ஆட்சியாளர்கள் அதிகம்..

                    • \\கணிசமான அளவில் நிகழும் புனித பயணங்கள், வர்த்தகம் இவற்றின் இந்தப் பொதுமை, இந்திய துணைக்கண்டத்தில் பொதுவான கலாச்சார அடித்தளத்தால் அதன் மேல் நிகழ்ந்து, அதை மேலும் வலிமையாக்கிபடி இருக்கிறது.//

                      மிகவும் சிரமப்பட்டு கலாசாரம்,பண்பாடு என்று விளக்கும் அம்பி விவாதத்தின் மைய பொருளை விட்டு கவனத்தை மடை மாற்றுகிறார்.அய்யா,கேள்வியே இந்த கலாசார ஒற்றுமையை -இந்த ஒற்றுமையும் கூட பொய்மை-வைத்து இந்த துணைக்கண்டமே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரே நாடாக இருந்து வருகிறது என எப்படி சொல்ல முடியும் என்பதுதான்.

                      \\இந்திய துணைக்கண்டத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்த இந்துவும் மொழி, உடை, பிரதேச வழி மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் நம்பிக்கைகள், சிந்தனைகள் இவற்றில் இந்து மதம் ஏற்படுத்திய ஆழ்ந்த தாக்கங்களால் உருவான தொன்மையான, பொதுவானதொரு கலாச்சார அடித்தளத்தை பிற பகுதிகளில் உள்ள இந்துக்களிடம் பொதுவாக கொண்டிருப்பதை எளிதாக உணரமுடியும்.//

                      கலாச்சாரம் என்பதையே வெறும் சமய நம்பிக்கையாக மட்டுமே சுருக்கி அதை உங்களுக்கு சாதகமாக கலாசார ஒற்றுமை என திரிக்கிறீர்கள்.அது இன்னும் விரிவானது.மனசாட்சியை தொலைக்காமல் சற்று படித்து விட்டு வாருங்களேன்.

                      \\பீகாரிக்கும், தமிழனுக்கும் எப்படி ஒரே கலச்சாரம் என்று குழம்புகிறீர்கள்.. மாறிக் கொண்டே இருக்கும் அரசியல் எல்லைகளைக் கடந்த இந்த கலாச்சார அடித்தளமே மானசரோவர், கைலாயம் இந்தியாவுக்கு வெளியில் இருந்தாலும் பீகாரியையும், தமிழனையும் பிற இந்திய மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது //

                      சமய நம்பிக்கை அவர்களை ஈர்க்கிறது.உண்மை.இதை வைத்து நாட்டின் எல்லைகளை தீர்மானிக்க முடியும் என்று சொல்வீர்களேயானால் அதுதான் தத்து பித்து உளறல்.

                    • // மிகவும் சிரமப்பட்டு கலாசாரம்,பண்பாடு என்று விளக்கும் அம்பி விவாதத்தின் மைய பொருளை விட்டு கவனத்தை மடை மாற்றுகிறார்.அய்யா,கேள்வியே இந்த கலாசார ஒற்றுமையை -இந்த ஒற்றுமையும் கூட பொய்மை-வைத்து இந்த துணைக்கண்டமே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரே நாடாக இருந்து வருகிறது என எப்படி சொல்ல முடியும் என்பதுதான். //

                      ஏன் முடியாது..?! அரசுகளின் எல்லைகளும் ஆட்சியாளர்களும் மாறிக் கொண்டே இருப்பதால் அதற்கேற்ப ஆளப்படும் மக்களும் தங்கள் அடையாளங்களை இழந்து கொண்டே இருக்கிறார்களா..?! எது மாறாத அடையாளமாக தொடர்கிறதோ அதை வைத்துத்தானே அந்த அடையாளத்துக்குரியவர்களின் இருப்பை கடந்த காலத்தில் உறுதி செய்ய முடியும்.. என்னுடைய விவாதத்தின் ஆரம்பமே இதுதான்..

                      // சமய நம்பிக்கை அவர்களை ஈர்க்கிறது.உண்மை.இதை வைத்து நாட்டின் எல்லைகளை தீர்மானிக்க முடியும் என்று சொல்வீர்களேயானால் அதுதான் தத்து பித்து உளறல். //

                      சமய நம்பிக்கைகளை வைத்து எல்லைகள் தீர்மானிக்கப்பட்டதில்லையா..?! இல்லையென்று சொல்வீர்களேயானால் அது தெளிவான உளறல்..

                    • \\எது மாறாத அடையாளமாக தொடர்கிறதோ அதை வைத்துத்தானே அந்த அடையாளத்துக்குரியவர்களின் இருப்பை கடந்த காலத்தில் உறுதி செய்ய முடியும்.. என்னுடைய விவாதத்தின் ஆரம்பமே இதுதான்.//

                      இதைத்தானே ஆரம்பம் முதல் மறுக்கிறோம்.பீகாரியும் தமிழனும் காசிக்கும் ராமேசுவரத்திற்கும் போய் வருவதால் நாம் இருவரும் ஒரே நாட்டுக்காரர்கள் என்ற உணர்வை பெற்றிருந்தார்களா.அதுவும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக.அன்று இருந்த போக்குவரத்து வசதிகளை வைத்து பார்த்தால் காசிக்கு ஒரு தமிழனோ மராட்டியனோ போய் வர ஓரிரு ஆண்டுகள் ஆகியிருக்கலாம்.அதை தனது நாடு என எண்ணுவதற்கு ஒன்று அவர்கள் மனநிலை பிறழ்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் அல்லது அம்பியாக இருந்திருக்க வேண்டும்

                      இப்போதைய இரண்டு மாவட்டங்களை தாண்டினாலே மாற்றான் நாடு என வேற்றுமை பாராட்டிய மக்களும் மன்னர்களும் வாழ்ந்த நிலப்பரப்பை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரே நாடாக இருந்து வருகிறது எனபது பித்தலாட்டம்..சில ஆயிரம் மன்னர்கள் இருந்தார்கள் எனபது மறுக்க முடியாத உண்மை.சரி ஒரே நாடு என்ற உணர்வாவது மக்களிடம் நிலவியதா என்றால் அதுவும் இல்லை.எனது பகுதி,உனது பகுதி என சண்டையிடும் நாய்களை போல எனது நாடு உனது நாடு என அடித்துக் கொண்டவர்களை ஒரே நாடு என்று உணர்வு கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் அதை எப்படி அழைப்பது

                      \\சமய நம்பிக்கைகளை வைத்து எல்லைகள் தீர்மானிக்கப்பட்டதில்லையா..?! இல்லையென்று சொல்வீர்களேயானால் அது தெளிவான உளறல்..//

                      சமய நம்பிக்கைகள் சிலபோது நாடுகளின் எல்லைகளை தீர்மானிக்கின்றன.உண்மை.ஆனால் அது பிரிவினை மூலமாக. சமய நம்பிக்கைகள் நாடுகளை பிரித்ததுதான் வரலாறு.நீங்களோ இந்து மதம் சில ஆயிரம் நாடுகளாக பிரிந்து கிடந்த இந்த துணைக்கண்டத்தை ஒரே நாடாக இணைத்தது என கூசாமல் அடித்து விடுகிறீர்கள்.இணைத்தது வெள்ளைக்காரனின் துப்பாக்கி,இன்றும் ஒரே நாடாக நீடிப்பது காவல் துறை மற்றும் பாதுகாப்பு படைகளின் குண்டாந்தடிகளின் ஆயுதங்களின் வலுவில்தான்.

                      நாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என பிற தேசிய இனங்கள் உணர்ந்து விடாமல் தடுக்கத்தான் உங்களிடம் எத்தனை எத்தனை ஆயுதங்கள்.
                      பாரத மாதா,நாம் அவளின் புதல்வர்கள்,திரைப்படம்,கிரிக்கெட்,வடக்க கோவில் தெக்க கோவில் அதுனால இது ஒரே நாடு.சரி நடக்கட்டும்.எவ்வளவு நாளைக்கு என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

                      தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.தர்மம் மறுபடியும் வெல்லும்.

                    • // இப்போதைய இரண்டு மாவட்டங்களை தாண்டினாலே மாற்றான் நாடு என வேற்றுமை பாராட்டிய மக்களும் மன்னர்களும் வாழ்ந்த நிலப்பரப்பை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரே நாடாக இருந்து வருகிறது எனபது பித்தலாட்டம்.. //

                      இரண்டு ஊர்க்காரர்கள் உன் ஊர் என் ஊர் என்று அடித்துக் கொள்ள வாய்க்கால் பிரச்சினை போதும்.. உங்கள் கவனம் மக்களைப் பிரிக்கும் அடையாளங்களில் இருக்கிறது.. என்னுடைய கவனம் அவர்களை பிணைக்கும் பொதுவான அடையாளங்களில் இருக்கிறது..

                      // சமய நம்பிக்கைகள் சிலபோது நாடுகளின் எல்லைகளை தீர்மானிக்கின்றன.உண்மை.ஆனால் அது பிரிவினை மூலமாக. சமய நம்பிக்கைகள் நாடுகளை பிரித்ததுதான் வரலாறு.//

                      சைவ நாடு, வைணவ நாடு என்று எப்போதாவது நாடுகள் அளவில் மோதிக் கொண்டிருந்தார்களா..?!!

                      // நீங்களோ இந்து மதம் சில ஆயிரம் நாடுகளாக பிரிந்து கிடந்த இந்த துணைக்கண்டத்தை ஒரே நாடாக இணைத்தது என கூசாமல் அடித்து விடுகிறீர்கள்.இணைத்தது வெள்ளைக்காரனின் துப்பாக்கி,இன்றும் ஒரே நாடாக நீடிப்பது காவல் துறை மற்றும் பாதுகாப்பு படைகளின் குண்டாந்தடிகளின் ஆயுதங்களின் வலுவில்தான். //

                      நாட்டை அரசியல் அலகாக குப்தர்கள் பெருமளவில் ஒன்று சேர்த்திருக்கிறார்கள்.. அதற்கு முன்பே பொதுமையான கலாசார, பண்பாட்டு அடித்தளம் நிலவி வந்திருக்கிறது..

                      // நாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என பிற தேசிய இனங்கள் உணர்ந்து விடாமல் தடுக்கத்தான் உங்களிடம் எத்தனை எத்தனை ஆயுதங்கள். பாரத மாதா,நாம் அவளின் புதல்வர்கள்,திரைப்படம்,கிரிக்கெட்,வடக்க கோவில் தெக்க கோவில் அதுனால இது ஒரே நாடு.சரி நடக்கட்டும்.எவ்வளவு நாளைக்கு என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம். //

                      தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு, தேச ஒற்றுமையைப் பற்றி கவலைப்படாத இத்தாலிய மாதாவும், கல்லுளிமங்கன்களும், கார்ப்பரேட்-மதவெறிக் கட்சிகளும்தான் காரணமே தவிர பாரதமாதா அல்ல..

                      வடக்க கோவில், தெக்க கோவில் என்பது வடக்க பாலிவுட் தெக்க கோலிவுட் என்பதைப் போல் அல்ல.. வடக்க மசூதி இடிக்கப்பட்டால் தெக்க ரத்தம் வரும், வடக்க கோவில் இடிக்கப்பட்டால் தெக்க தக்காளிச் சட்னிதான் வரும் என்று எண்ணிக் கொண்டு இருந்தால், எவ்வளவு நாளைக்கு நடக்கும் என்று பொறுத்திருந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்..

                      // தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.தர்மம் மறுபடியும் வெல்லும். //

                      சேம் சைடு கோல் போல் இருக்கிறதே.. மூலம் – மகாபாரதம், உபயம் – பாரதியாரின் பாஞ்சாலி சபதம்.. கிட்டத்தட்ட எல்லா இந்திய-துணக் கண்ட (பாரததேச) மக்களுக்கும் சில ஆயிரமாண்டுகளுக்கு மேலாகவே தெரிந்த நீதி.. ராமாயணமும், மகாபாரதமும் இந்த துணைக்கண்டத்து மக்களின் நம்பிக்கைகள், சிந்தனைகளை எந்தளவுக்கு பாதித்து பொதுமையான கலாசார-பண்பாட்டு அடித்தளத்துடன் கலந்திருக்கிறது என்பதற்கு நீங்கள் பயன்படுத்திய மேற்கோளே ஒரு எடுத்துக் காட்டு.. இது உங்கள் விவாதங்களின் நகைமுரண்.. இதை மனப்பிறழ்வு என்று கூறமாட்டேன்.. சாதி மத இத்யாதி வேறுபாடில்லாமல் பொதுமையான கலாச்சார-பண்பாட்டு அடித்தளத்தால் பண்படுத்தப்பட்ட இந்தியனின் ஆழ்மனத்திலிருந்து தோன்றும் இயல்பான சிந்தனையே..

                    • \\உங்கள் கவனம் மக்களைப் பிரிக்கும் அடையாளங்களில் இருக்கிறது.. என்னுடைய கவனம் அவர்களை பிணைக்கும் பொதுவான அடையாளங்களில் இருக்கிறது..//

                      யார் கவனம் எங்கிருக்கிறது என்று திசை திருப்பி பயனில்லை.நாம் கவனிப்பது இந்திய துணைக்கண்டம் ஒரே நாடாக மக்களின் உணர்வில் நிலை பெற்றிருந்ததா இல்லையா என்பதுதான்.இல்லை என்று ஆணித்தரமான வாதங்களை வைக்கிறோம்.நீங்களோ பூசி மெழுகி கொண்டிருக்கிறீர்கள்.

                      \\சைவ நாடு, வைணவ நாடு என்று எப்போதாவது நாடுகள் அளவில் மோதிக் கொண்டிருந்தார்களா..//

                      சமய நம்பிக்கை ஒன்றுபடுத்தியது என்பதை இதன்மூலம் நிறுவுவதாக நினைத்தால் பாவம் நீங்கள்.

                      \\நாட்டை அரசியல் அலகாக குப்தர்கள் பெருமளவில் ஒன்று சேர்த்திருக்கிறார்கள்.. அதற்கு முன்பே பொதுமையான கலாசார, பண்பாட்டு அடித்தளம் நிலவி வந்திருக்கிறது..//

                      மண்ணாசை கொண்ட மன்னர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் போர் தொடுப்பதும் புதிய புதிய நிலப்பரப்புகளை வென்று தமது நாட்டுடன் இணைத்துக் கொள்வதும் வரலாற்றுக் காலம் முழுவதும் நடந்து வந்திருக்கிறது.அவர்கள் கலாசாரத்தால் உந்தப்பட்டு போரிட்டார்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம்.கலாசாரத்தால் உந்தப்பட்டு நடனம் ஆடி பாட்டு பாடினார்கள் என்று சொன்னாலாவது கொஞ்சம் நம்புகிறார் போல் இருக்கும்.அப்படி ஏதாவது முயற்சி பண்ணி பாருங்களேன்.

                      \\தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு, தேச ஒற்றுமையைப் பற்றி கவலைப்படாத இத்தாலிய மாதாவும், கல்லுளிமங்கன்களும், கார்ப்பரேட்-மதவெறிக் கட்சிகளும்தான் காரணமே தவிர பாரதமாதா அல்ல..//

                      ஓகோ,90 கள் வரை தமிழகத்தை தில்லி ஆட்சியாளர்கள் தங்கத்தட்டில் வைத்து தாங்கினார்களோ.

                      \\வடக்க மசூதி இடிக்கப்பட்டால் தெக்க ரத்தம் வரும், வடக்க கோவில் இடிக்கப்பட்டால் தெக்க தக்காளிச் சட்னிதான் வரும் என்று எண்ணிக் கொண்டு இர