privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைசிறுகதை : காதல் !

சிறுகதை : காதல் !

-

தோ அந்த மூலையில் மேசை அருகே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே, அந்தத் தம்பதிகளை ஒரு முறை பாருங்கள். நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே வசதிப்படாது, ஆனால் அப்புறம் என் வீட்டில் அவர்களைப் பற்றிச் சுவையான கதை உங்களுக்குச் சொல்கிறேன்.”

பரீஸ் பொலிவோய்
பரீஸ் பொலிவோய்

எங்கள் நிர்மாண வட்டாரத்தின் கட்சி ஸ்தாபனத் தலைவர் இவான் ஃபியோதரவிச் குஸ்மிச்சோவ் ஆட்களை மோப்பங் காண்பதில் ஆச்சரியகரமான திறமை வாய்ந்தவர். ஒவ்வொருவரிடத்திலும், அவர் எவ்வளவு தான் சாதாரணமானவராகத் தோன்றினாலும், ஏதாவது ருசிகரமான விஷயத்தைக் கண்டறிவது அவருக்கு முடியும். அவருடைய இந்தத் திறமையை நான் அறிந்திருந்தபடியால் அவர் காட்டிய ஆணையும் பெண்ணையும் மெதுவாக நோட்டமிட்டேன்.

அவன் ஒற்றை நாடி தேகத்தினன். அடர்ந்து, சுருண்டு நரையோடிய கரிய கேசம். கூரிய பக்கத் தோற்றம். எடுப்பான, ஓரளவு பருமனான மோவாய். துருத்திய கன்ன எலும்புகள். இதழ்க் கோடிகளில் ஆழ்ந்த ரேகைகள். ஏதோ காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது போலக் கத்தியையும் முள்ளையும் லாகவமாகச் செலுத்தி அவன் மௌனமாக உணவருந்திக் கொண்டிருந்தான். அவள் பொன் நிறத்தினள். வாட்டசாட்டமான, ஆனால் பொருத்தமுள்ள அங்க அமைப்பு வாய்ந்த மேனி. பரந்த முகம். இணைந்த கரும் புருவங்கள் அதற்குக் கடுமையும் ஊக்கமும் நிறைந்த தோற்றத்தை அளித்தன. அவள் அணிந்திருந்த நீண்ட அங்கியைத் தவிர அவளது தோற்றத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவுமில்லை.

ஆனால் அவள் நடந்துகொண்ட மாதிரியில், அதிலும் தன் கூட்டாளிக்கு அவள் கடுகு மசியலையும், முள்ளங்கியையும், மிளகுப்பொடியையும் பார்த்துப் பார்த்து எடுத்துக் கொடுத்த விதத்தில், பேணும் தன்மை, தாய்மை மிளிர்த்தது. நிர்மாணத் தொழிலாளிகள் நிறைந்திருந்த இந்த உணவு விடுதியில் இப்பெண் தானே சொந்தக்காரி போல நடந்துகொண்டாள்.

இங்குள்ளவர்கள் எல்லாரும் இந்தப் பெண்ணுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள் என்பதும், அவள் இதற்குப் பழக்கப்பட்டவள் என்பதும் தெளிவாகத் தெரிந்தன.

அன்று மாலை குஸ்மிச்சோவும் நானும் கட்சிச் செயலகம் அறையில் சந்தித்தோம். நிர்மாண என்ஜினியர் செயலகம் போலக் காணப்பட்ட அந்த அறை பெரியதன்று. மேசை மீதும், புத்தக அலமாரிகளிலும், சன்னல் குறடு மேலும், இரும்புப் பெட்டியின் உச்சியிலும், எங்கும் சிமெண்டு ஜாடிகளும், மண்ணின் மாதிரிகளும், பலவகைக் கருவிகளின் மாடல்களும் நிறைந்திருந்தன.

செயற்கைத் தோல் சோபாவில் என்னை அமர்த்திவிட்டு, குஸ்மிச்சோவ் தானும் சிறுவர்களைப் போல் கால்களை மடக்கிக்கொண்டு என் அருகே அமர்ந்து என் பக்கமாக முகம் முழுவதையும் திருப்பினார். அதில் புன்னகை தவழ்ந்தது. குறும்புத்தனமான அந்தப் புன்னகை, அவரது உதட்டோரங்கிளிலும் கண்களிலும் மட்டுமல்ல, அவரது இளமை குன்றிய முகத்தின் ஒவ்வொரு ரேகையிலும் பளிச்சிட்டது. ஏற்கெனவே வாக்களித்திருந்தபடி அவர் கதையைத் தொடங்கினார்:

“கவர்ச்சிகரமான தம்பதிகள், அல்லவா? ரொம்ப சரி. இப்போது கதையைக் கேட்கத் தயாராகுங்கள். இது அசாதாரணமான கதை என்பதை எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறேன். அந்த மனிதனைப் பற்றி நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நமது உழைப்பு வீரர்களைப் பற்றிப் பேசுகையில் இவன் பெயரையும் நான் குறிப்பிட்டேன். அவன் தான் யெகோர் உஸ்த்தீனோவ், கொத்தர் குழுத் தலைவன். அவளைப் பற்றியும் நீங்கள் அவசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவள் தான் ல்யூபோவ் சாபான். எங்களது முதிய கொத்து மேஸ்திரி ஒருவன் குறிப்பிட்டது போல, அவள் “பெருங்குரல் பெண்மணி”. அவளும் ஒரு கொத்தர் குழுவின் தலைவி. அந்தந்த மாதம் எல்லாரிலும் நன்றாக வேலை செய்யும் குழுவிடம் கொடுத்து வைக்கப்படும் வெற்றிக் கொடியை அவளது குழு சென்ற மாதந்தான் யெகோரின் குழுவிடமிருந்து பறித்துக் கொண்டது. இருவரும் கம்யூனிஸ்டுகள்.”

கதைஞர் திருப்தியுடன் உள்ளங்கைகளை ஒன்றோடொன்று தேய்த்துக்கொண்டார்.

love“ஆகா, உங்களுக்குக் கதையில் சுவை பிறந்துவிட்டது அல்லவா? நான்தான் சொன்னேனே, எங்களிடமுள்ள சிலரைப் பற்றிப் பேசப் பேச, கேட்கக் கேட்கத் தெவிட்டாது என்று…. நல்லது, இப்போது இவ்விருவர் கதைக்குத் திரும்புவோம். யெகோர் உஸ்த்தீனோவ் முதலாவது கொத்தர் கூட்டத்துடன் இங்கே வந்தான்; நேரே தினீப்பரிலிருந்து. தினீப்பர் நீர் மின்நிலையம் கட்டுவதில் உழைத்தான், புகழ் அடைந்தான், விருது பெற்றான், தினீப்பர் வேலை முற்றுப் பெற்றதும் நேரே எங்களிடம் வந்துவிட்டான். கொத்து வேலை தொடங்கி வைக்கும் கௌரவத்தை நாங்கள் அவனுக்கு அளித்தோம். அணையின் வானக்கிடங்கில் முதல் கனமீட்டர் காங்கிரீட் போட்டவன் அவன்தான். ஒரு சஞ்சிகையின் முகப்புப் பக்கத்தில் உஸ்த்தீனோவின் புகைப்படம் வெளியாயிற்று. இந்தப் படத்திலிருந்து தான் எல்லாம் ஆரம்பித்தது என்று சொல்லலாம். அதுதான் இந்தக் கதை முழுவதற்கும் வித்து.

“மேற்படி சஞ்சிகை வெளியான இரண்டொரு வாரத்திற்கெல்லாம் இங்கே, கட்சிச் செயலகத்தில் என்னைப் பார்க்க வந்தாள் ஒரு பெண். அவளை எனக்கு முன்பின் தெரியாது. பெயர் ல்யூபோவ் சாபான், கட்சி உறுப்பினர், இங்குள்ள மருத்துவ நிலையத்தில் தாதியாக வேலை செய்ய அனுப்பப்பட்டிருக்கிறாள் என்று பரிந்துரைக் கடிதத்தில் கண்டிருந்தது.

“அவளோடு பேச்சுக் கொடுத்தேன். அவள் நல்ல கம்யூனிஸ்டு என்று எல்லா வகையிலும் விளங்கியது. பள்ளிப் படிப்பையும் மருத்துவப் பயிற்சியையும் முடித்த பின்பு போரில் தொண்டு புரிந்தாளாம். காயமடைந்தாளாம், கௌரவ விருது பெற்றாளாம். போர்முனையில்தான் கட்சியில் சேர்ந்தாளாம். போருக்குப் பின்பு இராணுவச் சேவையிலிருந்து விடுபட்டுத் தன் சொந்த இடமான உக்ரையினுக்குத் திரும்பினாளாம். ஒரே வார்த்தையில், உண்மையிலேயே ரொம்ப நல்ல பெண், திறமைசாலி என்று எனக்குப் பட்டது. அவளோடு பேசிக் கொண்டிருக்கும் போதே, சிசு பராமரிப்பு நிலையம் பற்றி நிர்மாண வட்டாரத் தலைவருடன் உரையாடியது என் நினைவுக்கு வந்தது. அப்போது எங்கள் சிசு பராமரிப்பு நிலையத்தில் வேலைகள் ஒழுங்காக நடைபெறவில்லை. அதைச் சரிவர மேற்பார்க்கத் தகுந்த ஆள் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

“சிசு பராமரிப்பு நிலையத்தில் வேலை பார்க்கச் சம்மதந்தானா என்று ல்யூபோவ் சாபானைக் கேட்டேன். ‘இதென்ன கேள்வி? தேவையாயிருந்தால் குழந்தைகள் இல்லத்தில் வேலை பார்க்கிறேன். நான் இங்கே இளைப்பாறுவதற்காக வரவில்லையே. எங்கே வேண்டுமோ வேலை கொடுங்கள். என் உடம்பில் வலுவென்னவோ வேண்டியது இருக்கிறது. திறமையும் அவ்வளவு இருந்தால் நன்றாயிருக்கும்’ என்றால் அவள். அவளுடைய பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விடை பெற்றுக் கொண்டு கதவுப் பக்கம் போனவள் சடக்கென்று திரும்பி, ‘உஸ்த்தீனோவ் என்பவர் இங்கே வேலை செய்கிறாரா என்று சொல்ல முடியுமா? முழுப்பெயர் யெகோர் உஸ்த்தீனோவ். அவருடைய புகைப்படம் கூடச் சமீபத்தில் சஞ்சிகையில் வெளியாயிற்றே’ என்று கேட்டாள்.

“உஸ்த்தீனோவ் இங்கே தான் வேலை செய்கிறார். கட்சியின் எங்கள் கிளைச் செயலகத்தில் அவர் பெயர் பதிவாகியிருக்கிறது” என்று பதில் சொன்னேன்.

“இதைக் கேட்டதும் அவள் புருவங்களைச் சற்றே உயர்த்தி (அவளுடைய இந்த வழக்கத்தை இன்று நீங்கள் கவனித்திருக்கலாம்) மிகமிகத் தணிந்த குரலில் (இம்மாதிரி ஆட்கள் தணிந்த குரலில் பேசினால் விந்தையாயிருக்கிறது), ‘ஆமாம், இந்த உஸ்த்தீனோவ் மணமானவரா என்ன?’ என்று கேட்டாள். அவளுடைய கேள்வி என்னைத் திகைக்க வைத்து விட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ‘அவர் உங்களுக்கு என்ன வேண்டும்? சொந்தக்காரரா?’ என்று வினவினேன். ‘இல்லை. ரொம்பக் காலத்துக்கு முந்திப் பழக்கமுண்டு. இப்போது அவர் என்னை மறந்துகூடப் போயிருக்கலாம்.’ இப்படிச் சொன்னதும் அவள் முகமெல்லாம் ஜிவு ஜிவென்று சிவப்பேறி, மூக்கந்தண்டில் வியர்வை அரும்பியது.

“எனக்கு நினைவிருக்கிறபடி உஸ்த்தீனோவ் விதுரன் என்றும், வேண்டுமானால் ஒரே நொடியில் நிச்சயமான தகவலை விசாரித்துச் சொல்ல முடியும் என்றும் கூறினேன். ஆனால் அவள் அதைக் கேட்கக் காத்திராமல் எறிந்த பந்து போல விருட்டென்று அறைக்கு வெளியே போய்விட்டாள். இதென்னடா இப்படி? ஒருவேளை இவள் அவனுடைய முன்னாள் மனைவியாயிருப்பாளோ என்று நினைத்தவனாய் உஸ்த்தீனோவ் பூர்த்தி செய்திருந்த பத்திரத்தை எடுத்துப் பார்த்தேன். இல்லை, அவன் விதுரன், அவனுக்கு மூன்று குழந்தைகள் என்று அதில் தெளிவாகக் குறித்திருந்தது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது உஸ்த்தீனோவிடமே சாபானைப் பற்றிக் கேட்டுவிடுவது என்று தீர்மானித்தேன். அச்சமயம் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை.

“நல்லது. ல்யூபோவ் சாபான் தன்னுடைய வேலைத் திறமையை உடனே காட்டிவிட்டாள். சிசு பராமரிப்பு நிலையத்தில் காரியங்கள் எல்லாம் மளமளவென்று சீர்பட்டன. ஒரு மாதத்துக்குக் கொஞ்சம் அதிகமாகியிருக்கும், அவ்வளவுதான், அதற்குள் – நான் பெருமை அடித்துக்கொள்ளவில்லை – எங்கள் சிசு பராமரிப்பு நிலையம் இந்த மாவட்டம் முழுவதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கலாயிற்று.

“ஒன்று மட்டும் உங்களிடம் ஒப்புக்கொள்ள வேண்டும். சாபான் வேலை தொடங்கிய முதல் இரண்டொரு வாரங்கள் எங்களில் ஒவ்வொருவருக்கும் அவளிடமிருந்து பிழைப்பது பெரும்பாடாகி விட்டது. அவள் ஒழுங்குபடுத்த ஆரம்பித்த பின் அவளுடைய அவசரக் கோரிக்கைகளுக்கு இணங்கி, குழந்தைகளின் தேவைகளைக் கவனிப்பதற்காக ஒரு குழு நியமித்தனர்; விநியோக நிர்வாகிகளோ, ஒரேயடியாகக் கிலி பிடித்துப் போனார்கள்; அவள் குரல் காதில் விழ வேண்டியதுதான், எடுப்பார்கள் ஓட்டம். ஆனால் வெகு தூரமல்ல. அவளிடமிருந்து தப்புவதெங்கே? மறுகணமே அவள் கோழிக் குஞ்சின் மேல் கழுகு பாய்வது போலப் பாய்ந்து பற்றிக் கொள்வாள். தனக்கு வேண்டியதை எல்லாம் கக்க வைத்த பிறகுதான் அவர்களை விடுவாள்.

“ஒரு தடவை எங்களைப் பார்வையிட அமைச்சர் வந்தார். நிர்மாண வேலையாட்களின் தேவைகள் விஷயத்தில் அவர் ரொம்பக் கண்டிப்பானவர் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். முதலாவதாக வேலையைப் பார்வையிடுவார், பின்பு இருப்பிட வசதிகளைக் காட்டச் சொல்லுவார். அவரை மட்டும் ஏய்க்க முடியாது! இந்த முறையும் அப்படித்தான். ஒவ்வொரு குழாயிலிருந்தும் தண்ணீரைத் தாமே ருசி பார்த்தார். பின்பு உணவு விடுதியில் நேரே சமையலறைக்குப் போய் ஒவ்வொரு பாத்திரத்திலிருந்தும் ஒரு கரண்டி எடுத்து மாதிரி பார்த்தார். அப்புறம் இருப்பறைக்கு வருகை. அன்றோ இருப்பறையில் நல்ல ரேடியோ செட்களோ மோட்டார் சைக்கிள்களோ இல்லை. பின்பு கேட்பானேன்! எங்கள் விநியோக முகவர்களுக்குச் சரியான படிப்பினை கிடைத்தது. கடைசியில் அமைச்சசர் சிசு பராமரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார். அங்கே போனதும் நாங்கள் எல்லாரும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம். எதைப் பார்த்தாலும் பளிச்சென்று துப்புரவாக மின்னியது. குழந்தைகள் தளதளவென்றிருந்தார்கள். அவர்களது ரோஜாக் கன்னங்கள் ஆப்பிள் பழங்களைப் போல உருண்டையாயிருந்தன. அமைச்சர் புன்முறுவலுடன் ல்யூபோவ் சாபான் பக்கம் திரும்பி, ‘நன்றி. இங்கே உங்கள் விடுதியில் எல்லாம் நன்றாயிருக்கின்றன’ என்றார். அதற்கு அவள் என்ன சொன்னாள் என்று நினைக்கிறீர்கள்? ‘தோழர் அமைச்சர் அவர்களே, நீங்கள் எங்களிடம் எதிர்பார்ப்பது மிகமிகக் குறைவு’ என்று வெட்டொன்று துண்டிரண்டாகப் பேச ஆரம்பித்தாளே பார்க்க வேண்டும்! ‘இதைப் போய் நன்றாயிருக்கிறது என்று சொல்கிறீர்களே. திட்டப்படி எங்கள் குழந்தைகளுக்கு இரட்டை மாடி வீடு கிடைத்திருக்க வேண்டும். அது எங்கே? இந்தத் தோட்டத்தை நாங்கள் சொந்த உழைப்பைக் கொண்டு போட்டோம். ஆனால் இதற்கு வேலி எங்கே? எங்கள் பெண்கள் இந்தக் கன்றுகளை எல்லாம் தங்கள் கையினால் நட்டது ஆடுகளுக்குச் சுவையான உண்டி அளிப்பதற்கு என்று நினைக்கிறீர்களா?’ இப்படி ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் பொழிந்து தள்ளிவிட்டாள். ‘இது ஒரு பெரிய நிர்மாண தலம். இங்கே உள்ள ஒவ்வொன்றும் எல்லாவற்றிலும் நல்லதாக, அழகானதாக இருக்க வேண்டும்…’ என்றாள். எங்களில் சிலர் அமைச்சரை அச்சத்துடன் ஓரக் கண்ணால் பார்த்தோம். ஒன்றுமில்லை, கேட்டுக் கொண்டிருந்தார், ஆனால் கண்களில் மட்டும் சிரிப்பு மின்னிட்டது. ‘நீங்கள் சொல்வது சரி, ரொம்ப சரி’ என்றார் அவர். அத்தோடு அவள் விட்டுவிட்டாள் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. ‘சொல்வது சரி என்பது எனக்கே தெரியும். நான் சொன்னவை எல்லாம் குழந்தைகளுக்குக் கிடைக்குமா இல்லையா? அதைச் சொல்லுங்கள் முன்னே’ என்று கேட்டாள். ‘கிடைக்கும், திட்டத்தில் குறிப்பிட்டிருப்பவை எல்லாம் கட்டாயமாகக் கிடைக்கும்’ என்று அமைச்சர் பதிலளித்தார்.

“அப்படிப்பட்டவள் இந்த ல்யூபோவ் சாபான். எங்கள் பெண்கள் எல்லாரும் அவளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். எங்களுக்கும் ஒரே மகிழ்ச்சி. குழந்தைகள் இல்லத்தை மேல் பார்ப்பதற்கு அவளை விடத் தகுந்தவள் தேடினாலும் கிடைத்திருக்க மாட்டாள் அல்லவா?

“ஒரு நாள் மாலை நான் இந்தச் செயலகத்தில் தன்னந்தனியாக உட்கார்ந்து ஓர் அறிக்கை தயாரிப்பதற்காகப் படித்துக்கொண்டும் விவரங்கள் சேகரித்துக்கொண்டும் இருந்தேன். திடீரென்று கதவைத் தட்டிய சத்தம் கேட்டது. பார்த்தால், ல்யூபோவ் சாபான் வந்து நிற்கிறாள். ‘இவ்வளவு நேரங் கழித்து வந்ததற்கு மன்னிக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு, என்னைத் தனிமையில் பார்க்க விரும்பியதாகக் கூறினாள். இப்போது நீங்களும் நானும் உட்கார்ந்திருக்கிறோமே, அதே சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.

” ‘இதே பாருங்கள், ஒரு விஷயம் முன்னதாகவே பேசித் தீர்த்துக்கொள்வோம். நான் சொல்லப் போவது எல்லாம் வெறும் வெட்டிப் பேச்சல்ல. எல்லாவற்றையும் முன்னதாகவே நன்றாக யோசித்து முடிவு செய்திருக்கிறேன்’ என்று பீடிகை போட்டாள்.

” ‘புரிகிறது. விஷயமென்ன?’ என்றேன்.

” ‘விஷயம் இதுதான்: சிசு பராமரிப்பு நிலையத்து வேலையிலிருந்து எனக்கு விடுதலை அளியுங்கள். அதோடு கொத்து வேலைப் பயிற்சிப் பள்ளியில் நான் சேருவதற்கு உதவி செய்யுங்கள். அங்கே பெண்களை விருப்பத்துடன் சேர்த்துக் கொள்வதில்லையாம். அதனால்தான் கேட்கிறேன்.’

“நான் அவள் மனத்தை மாற்ற முயன்றேன், ஆனால் அவள் மசியவில்லை.

” ‘என்ன நேர்ந்தது? யாராவது தவறாக நடந்து கொண்டார்களா? குழந்தைகளோடு பாடுபடுவது சலித்துப் போயிற்றா? இல்லை, ஒரு வேளை களைத்துப் போய்விட்டீர்களா? விடுமுறை வேண்டுமா? ஏதாவது ஓய்வு விடுதிக்குப் போக விரும்புகிறீர்களா?’ என்று கேட்டேன்.

“அவள் வேண்டாம் என்று தலையை அசைத்தாள்.

” ‘என்னிடம் தவறாக நடந்து கொள்வதற்கு யார் இருக்கிறார்கள்? குழந்தைகளோ, எனக்கு உயிர். களைப்படைய என்னால் முடியவே முடியாது. அப்படியெல்லாம் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. நான் கொத்து வேலை கற்றுக்கொள்வதற்கு அநுமதி கொடுங்கள்’ என்றாள். அதோடு கூடவே, ‘குழந்தைகள் இல்லத்தில் வேலைகள் ஒழுங்காக நடந்து வருகின்றன. வேலையாட்கள் தேர்ச்சி பெற்று விட்டார்கள். மேல்பார்வைக்கும் ஓர் ஆளைக் குறிப்பிடுகிறேன். அவளை விடத் தகுந்தவர் கிடைப்பது அரிது’ என்று மிகவும் அறிவுப் பொருத்தமாக விளங்கினாள். தன் வேலைக்கு ஓர் என்ஜினியரின் மனைவி பெயரைச் சிபாரிசு செய்தாள். அந்தப் பெண் அற்புதமான அறிவுள்ளவள்.

“அப்புறம் நான் என்ன சொல்ல முடியும்? ‘அப்படியானால், சரி. பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு ஒருவர் இருக்கிறார், உங்களுக்கும் கொத்து வேலைப் பயிற்சி பெறுவதற்கு மனப்பூர்வமான ஆர்வம் இருக்கிறது. ஆகவே நிர்மாண வேலைத் தலைவரிடம் உங்களைப் பற்றிச் சிபாரிசு செய்கிறேன்’ என்று சொன்னேன்.

“அவள் எனக்கு நன்றி தெரிவித்தாளே தவிர வெளியே போகவில்லை.

” ‘இன்னும் ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டேன்.

“’ஆம் இருக்கிறது. உங்கள் யெகோர் உஸ்த்தீனோவ் இன்னும் பொது விடுதியிலே தனியாயிருக்கிறார். அவருடைய மூன்று குழந்தைகளும் காலூகாவில்அவருடைய கிழ அத்தையுடன் இருக்கறார்கள். இது சரியல்ல. நமது புதிய வீடுகள் ஒன்றில் அவருக்குத் தனி இருப்பிடம் அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளைப் பிரிந்திருப்பது தகப்பனுக்கு எளிதென்று நினைக்கிறீர்களா?’

” ‘அவள் ஏன் ஒருபோதும் இதைப்பற்றி என்னிடம் சொல்லவில்லை?’

” ‘அது அவரது சுபாவம். வேலைக்காக என்றால் தொண்டை கிழியக் கத்துவார். தனக்காக என்றால் குளிர்காலத்தில் பனிக்கட்டித் துண்டு கேட்பதற்குக் கூடக் குரல் எழும்பாது. இத்தகைய விஷயங்களை ஒருவர் கேட்கும் வரை காத்திராமல் நீங்களே முடிவு செய்திருக்க வேண்டும்.’

“மறு நாள் நான் யெகோருடன் பேசினேன். அவனுடைய சொந்த விஷயங்களைப் பற்றி ல்யூபோவ் கூறியதெல்லாம் சரி என்று அறிந்து எனக்கு வெட்கம் உண்டாயிற்று. ல்யூபோவைப் பற்றி உஸ்த்தீனோவிடம் விசாரிப்பதற்கு இப்போது தான் முதல் முறையாக எனக்குத் தருணம் வாய்த்தது. ஆகவே துருவித் துருவிக் கேட்டேன். சாதாரணமாகவே அவன் கமுக்கமான பேர்வழி. இப்போது ல்யூபோவ் பெயரைக் கேட்டதுமே வாயை இறுக்க மூடிக்கொண்டுவிட்டான். எங்கள் பேச்சின் பொழுது தரையையே குத்திட்டுப் பார்த்தவண்ணமாய் இருந்தான். அவனிடமிருந்து ஒவ்வொரு வார்த்தையையும் நான் நெம்பு கோல் போட்டு எடுக்க வேண்டியதாயிற்று.

” ‘இந்த ல்யூபோவ் சாபான் இருக்கிறாளே, நல்ல மாதிரி’ என்றேன்.

” ‘மோசமில்லை’ என்றான்.

” ‘ரொம்ப காலமாகப் பழக்கமுண்டோ?’

” ‘எட்டு ஆண்டுகளாக.’

” ‘ஒரே ஊர்க்காரர்களா?’

” ‘இல்லை. சண்டை நாள்களில் இரண்டு பேரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம்.”

” ‘உங்களுக்குள் காதல் – கீதல் ஏதாவது?’

“அவன் வறட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

” ‘அப்போது என் மனைவி உயிரோடு இருந்தாள். தவிர மருத்துவமனையிலே காதல் எப்படி? நிறைய பேசிக்கொண்டோம் என்பது உண்மைதான், ஆனால் போர் வீரர்களின் முறையிலே, வாழ்க்கையைப் பற்றியும் மற்ற விஷயங்களைப் பற்றியும்.’

” ‘நல்லது, இப்போது?’

” ‘இப்போது ஒருவரையொருவர் பார்க்கும்போது ‘வணக்கம்’, ‘போய் வருகிறேன்’ என்று பொதுவாகச் சொல்லிக்கொள்கிறோம். கட்சிக் கூட்டங்களில் சந்திக்கிறோம். அவள் தான் இப்போது எப்படி ஆகிவிட்டாள் பாருங்களேன்! இந்த வட்டாரம் முழுவதற்கும் அவள் தான் எல்லாரிலும் முதல். இல்லையா?’

” ‘அவளுக்குக் கொத்து வேலை கற்றுக்கொள்ள வேண்டுமாம். உன் கருத்து என்ன? அநுமதிக்கலாமா?’

soviet-workers“இந்தக் கேள்வி அவனைத் திடீரென்று தட்டி எழுப்பியது போலத் தென்பட்டது. ஆனால் கண நேரத்திற்குத் தான். மறு கணமே அவன் முன்போலவே பட்டும் படாததுமாக, ‘இது உங்கள் விவகாரம். அவள் கொத்து வேலையில் நல்ல தேர்ச்சி பெறுவாள் என்பது எனக்குத் தெரியும். எப்போதுமே அவள் எதில் முனைந்தாலும் அதை அடைந்தே நீருவாள். அவள் மாதிரியே அப்படி… ஆமாம், வேறு ஏதாவது என்னிடம் கேட்க வேண்டுமா உங்களுக்கு?’ என்றான்.

“யெகோர் உஸ்த்தீனோவ் சொன்னது சரியாயிற்று. அரை ஆண்டுக்குள்ளேயே ல்யூபோவ் சாபான் கொத்து வேலைக்காரி ஆகிவிட்டாள். அதுவும் எப்படிப்பட்ட வேலைக்காரி! கஞ்சி போட்டு இஸ்திரி செய்த கௌனும் வெள்ளை வெளேரென்ற தலைக்குட்டையுமாகவே அவளைப் பார்த்து எங்களுக்கெல்லாம் வழக்கமாகிவிட்டது. ஆகவே பயிற்சி முடிந்த பின் கித்தான் உடையும் முரட்டுக்கையுறைகளும் கனத்த ரப்பர் காலணிகளுமாக அவளை எதிரே கண்டபோது விசித்திரமாயிருந்தது. ஆனால் புதிய வேலையும் நொடிப்பொழுதில் அவளுடைய இயல்பான திறமைகள் ஆகியவற்றுடன் கூட, அவளுடைய அறிவு வேட்கை, தன் வேலையில் ஒவ்வொரு புது விஷயத்தையும் கற்றுக் கொண்டு தீர வேண்டும் என்ற உண்மையிலேயே அடக்க முடியாத ஆசை, அவளுடைய முன்னேற்றத்துக்கு உதவுகிறது என்று நான் நினைக்கிறேன். எங்கள் கட்சி உறுப்பினர்களின் அரசியல் பயிற்சி பற்றி ஒரு முறை அறிக்கை தயாரித்தபோது அவர்களுடைய நூலகப் பதிவுச் சீட்டுக்களைப் பார்வையிட்டேன். அடேயப்பா, அந்த ஓர் ஆண்டில் ல்யூபோவ் சாபான் படிக்காத புத்தகமே கிடையாது என்று தோன்றியது! அவ்வளவு புத்தகங்கள் அவள் சீட்டில்!

“புதிய வேலையின் நெளிவு சுளிவுகளைத தெரிந்து கொண்டபின்பு ல்யூபோவ் சாபான் தயக்கமின்றி மளமளவென்று முன்னேறினாள். சில மாதங்களில் அவள் குழுத்தலைவி பதவிக்கு உயர்த்தப்பட்டாள். அது முதல்தான் யெகோர் உஸ்த்தீனோவுடன் அவளுடைய தகராறுகள் ஆரம்பமாயின.

“நிர்மாணம் பற்றி விவாதிக்கும் பொருட்டு எப்போது கூட்டம் கூடினாலும் ல்யூபோவ் மேடை மீது ஏறி, ஒருவர் பாக்கியில்லாமல் சலித்து எடுத்து விடுவாள். அதிலும் யெகோர் உஸ்த்தீனோவை எல்லாரையும் விடக் கடுமையாக. அவளுடைய வார்த்தைகளை உதறித் தள்ளுவதோ, பதில் பேசாமல் அலட்சியமாக விட்டு விடுவதோ நடவாது. அவள் தான் வெற்றுச் சொல் பேசுவதே கிடையாதே. ஒவ்வொரு சொல்லும் காரியார்த்தமானது. யெகோரால் போனால் போகிறதென்று விடவே முடியாது. அதனால்தான் இரண்டு பேர்க்கும் மோதல்கள் ஏற்படும். அவன் நல்ல வேலையாளி, புது வழிகளைக் கண்டுபிடிப்பவன். தினீப்பர் நீர்மின் நிலையத்தில் பல ஆண்டுகள் வேலை செய்து அநுபவம் பெற்றவன். அவன்கீழ் வேலை செய்த குழுவினரும் எல்லா வகையிலும் அவனுக்கு ஏற்றவர்கள். அவனுடைய சொல்லுக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பார்கள், அது அவனுக்குப் பழக்கமாகி விட்டது. ல்யூபோவ் இப்படி எடுத்தெறிந்து பேசுவதைக் கேட்டு அவனுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வரும்.

” ‘அநுபவம் என்னவோ உன்னிடம் ஏராளமாக இருக்கிறது, யெகோர் உஸ்த்தீனோவ், ஆனால் அதை மற்றவர்களுக்கு முழுதும் வழங்க உனக்கு மனம் வருவதில்லை. ஒரு சில தந்திரங்களை உள்ளுக்குள்ளே பதுக்கி வைத்துக் கொள்வதும் இந்த உபரி யுக்திகளால் சுளுவாக முதலிடத்தைத் தட்டிக்கொண்டு போவதும் உனக்கு வழக்கமாகிவிட்டன’ என்பாள்.

“அவன் அநுபவ அறிவைக் கொண்டு அவளைத் தாக்கப் பார்ப்பான். அவளோ, வீச்சான அறிவால் அவனை மடக்கி விடுவாள். பெரிய ஆள் அவள். சொந்த யோசனையின் பேரில் அவளாகவே சிமெண்ட் ஆராய்ச்சி நிலையத்துடனும் லெனின்கிராட் என்ஜினீயரிங் நிலையத்துடனும் கடிதப் போக்கு வரத்து தொடங்கினாள். புதுப்புது தகவல்கள் எல்லாம் அங்கிருந்து அவளுக்குக் கிடைக்கின்றன.

“ஆரம்பத்தில் புது முறைகள் பற்றிய அறிவைமட்டும் கொண்டு அவள் யெகோரைத் தாக்கிவந்தாள். ஆனால் பின்போ, வேலையில் அதிக உற்பத்தித் திறனால் அவனைத் திக்கு முக்காடச் செய்துவிட்டாள். அதற்கு முன்பு யெகோருடன் ஒப்பிடுவதற்கு எவரும் இல்லை. அவனுக்கு ஈடு இணை ஒருவருமே கிடையாது. திட்டத்தில் குறித்த அளவுக்கு இரண்டு மடங்கு நிறைவேற்றிவிடுவார்கள். இதற்காக அவனை எல்லாரும் பாராட்டுவார்கள். இப்போது என்னவென்றால் ல்யூபோவும் அவள் குழுவினரும் அவனை நெருங்கிவந்து விட்டார்கள்; அவன் குதிகாலில் இடறத் தொடங்கிவிட்டார்கள். அவன் ஒரு துளி தளர்ந்தானோ, போச்சு, அவர்கள் கட்டாயமாக முந்திவிடுவார்கள். முந்தியும் விட்டார்கள். போங்களேன். இப்போது வெற்றிச் செங்கொடி ல்யூபோவ் சாபானின் குழு வசம் இருக்கிறது.

“உஸ்த்தீனோவுக்கு இதெல்லாம் வேம்பாய்க் கசப்பதாகவும் ல்யூபோவின் பெயரைக் கேட்கவே அவனுக்கு வெறுப்பாயிருப்பதாகவும் கட்சி உறுப்பினர்களான கொத்தர்கள் என்னிடம் சொன்னார்கள். உஸ்த்தீனோவ் இப்போது முன்னிலும் அதிகமாக மௌனம் சாதிக்கலானான். கடப்பாரை கொண்டு கெல்லினால் கூட அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவழைக்க முடியவில்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! கடைசியில் நிலைமை எந்த அளவுக்குப் போய்விட்டதென்றால் அவள் அறைக்குள் நுழைவதும் உஸ்த்தீனோவ் அறையிலிருந்து வெளியேறுவதும் ஒன்றாய் நடக்கும். இந்தத் தகராறு சொந்த விவகாரத்தின் வரம்பை மீறிப் போகிறது என்று கண்டு நாங்கள் கட்சிக் குழுவைக் கூட்டி அவர்கள் இருவரையும் அழைத்தோம். ‘நீங்கள் இருவரும் கட்சி உறுப்பினர்கள். கட்சியைச் சேராதவர்களுக்கு எத்தகைய உதாரணம் நீங்கள் காட்டுகிறீர்கள்…’ என்று குத்திக்காட்டி அவர்களை வழிக்குக் கொண்டுவர முயன்றோம். அவர்கள் வாயே திறக்கவில்லை. ‘நமது இரண்டு தலை சிறந்த கொத்தர் குழுக்களின் தலைவர்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டாமா?’ என்று சொன்னோம். இருவருக்கும் முகம் சிவந்துவிட்டது. குரல் எழும்பவில்லை. நாங்கள் சொன்ன இடித்துரைகளை எல்லாம் தரையில் வைத்த கண் நிமிர்த்தாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கலே தவிர இருவரில் ஒருவராவது வாய்திறக்கவில்லை.

” ‘உங்கள் சண்டைக்குக் காரணம் என்ன என்று கட்சிக் குழுவுக்கு விளக்கும்படி கோருகிறோம்’ என்றோம்.

“இதைக் கேட்டதும் உஸ்த்தீனோவ் கடகடவென்று சிரித்து, ‘அவளே சொல்லட்டும். நம்மில் எல்லாருக்கும் கற்றுக்கொடுக்கிறாள் அல்லவா?’ என்று சொன்னான்.

“ல்யூபோவ் அவனை ஏறெடுத்துப் பார்க்காமலே, ‘இல்லை, அவரே விளக்கட்டும். அவரிடம் அபாரமான அநுபவம் இருக்கிறது. இந்த அநுபவக் களஞ்சியம், புதுமையானது எதையும் பார்க்க விடாதபடி அவர் கண்களை மறைக்கிறது’ என்றாள்.

“ஆக இருவருக்கும் இன்னொரு சொற் போர் தொடங்கிவிட்டது. அவர்களுடைய இந்தப் போக்கு காரணமாகக் கட்சிக் குழு அவர்களைக் கண்டிப்பது அவசியமாகிவிட்டது.

“அவர்களை வழிக்குக் கொண்டு வருவதில் அன்றைக்கு எங்களால் ஒன்றும் முடியவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன். சம்பிரதாயப்படி பார்த்தால் எல்லாம் சரிவரத்தான் நடந்தேறியது. தங்கள் காரியத் தொடர்புகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதாக இருவரும் வாக்களித்தார்கள். இனிமேல் கம்யூனிஸ்டுக்கு உரிய முறையில் மற்றவர்களின் குறைகூறலைக் காது கொடுத்துக் கேட்டு அவற்றுக்கிணங்க நடப்பதாக உஸ்த்தீனோவ் உறுதி மொழிந்தான். அதெல்லாம் கச்சிதமாகத் தான் முடிந்தது. இருந்தாலும் எனக்கென்னவோ சாராம்சத்தில் ஒரு சிக்கலும் தீரவில்லை, அவர்களுடைய பிணக்குக்குக் காரணம் என்ன என்று தெளிவாகவில்லை, எனவே அது அகற்றப்படவில்லை என்று பட்டது. நான் ஏதோ சாக்குச் சொல்லி உஸ்த்தீனோவை நிறுத்திக்கொண்டேன். அவன் புதிய வீட்டுக்குக் குடியேறியது முதல் நாங்கள் இருவரும் அநேகமாக அண்டை வீட்டுக்காரர்கள் ஆகிவிட்டோம். ஆகையால், கட்சிச் செயலகத்திலிருந்து ஒன்றாகவே புறப்பட்டோம். இருவரும் தனியே வழி நடக்கையில் அவனை எப்படியாவது மனத்தைத் திறந்து பேச வைத்துவிடலாம் என்று எண்ணினேன். அது ஆகிற காரியமா? முள்ளம்பன்றி முட்களைத் துருத்திக்கொண்டு பந்து போல் சுருண்டு விடுமே, அப்படிக் கெட்டியாகச் சுருண்டுவிட்டான் அவன். பல்லைக் கடித்துக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையையும் துப்புவதுபோலப் பேசினான்.

” ‘தெரியாமல் ஒருவர் மனத்தை ஒருவர் புண்படுத்தி விட்டீர்களோ ஒருவேளை?’

” ‘இல்லை.’

” ‘ஏதாவது பழைய தகராறோ?’

” ‘எங்கிருந்து?’

” ‘அப்படியானால் ஒருவேளை உங்களுக்குள் பொறாமையா என்ன, உங்களைச் சைத்தான் வாரிக் கொண்டு போக?’

“இதற்கு அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. பற்களை மட்டும் முன்னிலும் இறுக்கக் கடித்துக்கொண்டான். கன்னத்துத் தசைநார்களெல்லாம் விறைத்து நின்றன. ஒருவேளை இந்த ஆள் அந்தப் பெண் ல்யூபோவ் சாபான் மேல் கண் தலை தெரியாமல் காதல் கொண்டுவிட்டானோ என்று அப்போதுதான் என் மூளையில் உதித்தது. அந்த நிலைமையில் இப்படித் தோன்றியது விசித்திரந்தான் என்று நினைக்கிறீர்களல்லவா? அது சரியே, இருந்தாலும் வாழ்க்கையிலே எதுதான் நடப்பதில்லை?…

“ஏதோ போகிற போக்கில் சொல்லது போல, ல்யூபோவ் சாபான் இங்கே முதல் தடவை வந்ததுமே அவனைப் பற்றி விசாரித்தது, அவனுக்குத் தனி வீடு கொடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தது, அவன் குழந்தைகளைப் பற்றிக் கவலை காட்டியது எல்லாவற்றையும் நான் அவனிடம் சொன்னேன். என் வார்த்தைகளையெல்லாம் அவன் மௌனமாக, ரொம்பக் கவனிக்காதது போலக் கேட்டுக்கொண்டிருந்தான். ஆனாலும் அவனுக்குள் விறைப்பும் வேதனை தரும் இறுக்கமும் உண்டாவது போல எனக்குப் பட்டது. திடுமென அவன் நின்றான்.

” ‘என்னிடம் எதற்காக நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்கள்? அவள் எப்பேர்ப்பட்டவள் என்பதைத் தான் மருத்துவமனையில் பார்த்த போது முதலே அறிவேனே. உலகமெல்லாம் தேடினாலும் அவளைப் போல இன்னொருத்தி கிடைப்பாளோ என்னவோ. அவள் மட்டும், ஓ…’ அவன் கோபத்தோடு கையை உதறிவிட்டு, ‘போய்வருகிறேன்’ என்று மரியாதைக்குக் கூடச் சொல்லாமல், எதிர்ப்பட்ட முதல் சந்துக்குள் திரும்பி விரைந்து நடந்துவிட்டான்.

“எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, உஸ்த்தீனோவுடன் இந்தப் பேச்சு நடந்தது வியாழக் கிழமையன்று. அடுத்த திங்கள் கிழமை நிர்மாண தலத்தை நான் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது ஓர் ஆள் மூச்சுத் திணற என்னிடம் ஓடிவந்து, ‘அணையில் விபத்து! சிமெண்டு பிளாக்கு கொக்கியிலிருந்து நழுவி விட்டது, உஸ்த்தீனோவுக்குப் பலத்த காயம்’ என்று கத்தினான்.

“அணை அருகாமையில் தான் இருந்தது. எனவே நான் விபத்து நடந்த இடத்திற்கு ஒரே ஓட்டமாகப் போய்ச் சேர்ந்தேன்.

“யெகோர் உஸ்த்தீனோவ் கித்தான் விரிப்பில் படுத்திருந்தான். இரத்தம் எங்கும் தென்படவில்லை. மூச்சு இழைந்து கொண்டிருந்தது. கண்கள் மூடியிருந்தன. மெழுகு பொம்மை போல அசையாமல் கிடந்தான். அவன் அருகே மருத்துவரும் தாதியும் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் எப்போதும் நடப்பது போலவே, காயமடைந்தவனைச் சுற்றி ஒரு கும்பல் கூடியிருந்தது. இருந்தாலும் அங்கே நிலவிய மௌனத்தில் யெகோர் மிகக் கஷ்டத்துடன் கர் கர் என்று விட்ட மூச்சுக் கூடக் கேட்டது.

“திடீரென்று ஒரு பெருங் கூச்சல், நெஞ்சைப் பிளக்கும் பெண் குரல் கேட்டு எங்கள் உடம்பெல்லாம் புல்லரித்தது. ஆடையும் தலையும் ஒரே அலங்கோலமாய், அழுது புலம்பிக் கொண்டு வந்த ஒரு பெண் எல்லாரையும் இடித்து விலக்கி, உஸ்த்தீனோவ் கிடந்த இடத்துக்குச் சென்று, வெட்டுண்ட மரம் போலத் தடாலென்று அவன் அருகே விழுந்தாள்.

” ‘யெகோர், என் கண்ணே, என்ன நேர்ந்தது? என் கட்டிக் கரும்பே, கண்ணைத் திறந்து பாரேன்!’ என்று அழுதாள், பாருங்கள், நெஞ்சு வெடித்து விடும் போல அழுதாள். இதைக் கேட்டதும் உஸ்த்தீனோவ் கண்களைத் திறந்தான். அந்தப் பெண் பிள்ளையை ஒரே ஆச்சரியத்துடன் பார்த்தான். தன் மீது அவனுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை போல் இருந்தது. தான் காண்பது உண்மைதானா, இல்லை சுர வேகத்தில் தோன்றும் மயக்கமா என்று நிச்சயப்படுத்திக் கொள்பவன் போல வெறித்து நோக்கினான். திடீரென்று அவன் கண்கள் பளிச்சிட்டன. அந்தக் காட்சி என் மனத்தில் மிகமிகத் தெளிவாகப் பதிந்தது. படுகாயமடைந்து இப்போதுதான் உணர்வு பெற ஆரம்பித்திருந்த இந்த மனிதனின் கண்களில் ஒளி விட்டது. தூய்மையான இன்பம். வெளியானாகிய நான் அதைக் காண்பது முறையாகாது என்று எனக்குப் பட்டது. பின்பு அந்தப் பெண் அவனை மார்போடு தழுவிக்கொண்டு அவன் தலைமயிரை வருடியவாறே, ‘நீ பிழைத்திருக்கிறாய், உயிரோடிருக்கிறாய், என் அன்பே, என் செல்வமே, எத்தனை ஆண்டுகளாக உன்னை நெஞ்சிலே வைத்துப் பேணிவந்தேன்!’ என்று மெல்லிய குரலில் மொழிந்தாள். அவள் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் அவன் முகத்தின் மேல் முத்து முத்தாகச் சிந்தியது.

“தலைவிரிகோலமாய், சீர்குலைந்து, கண்ணீரும் கம்பலையுமாக விளங்கிய இந்தப் பெண் வேறு எவருமில்லை, ல்யூபோவ் சாபான் தான் என்பது அப்போதுதான் என் அறிவுக்கு எட்டியது. எனக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. ஆம், அது அவளேதான். எனக்கோ நம்புவதே கஷ்டமாயிருந்தது. நம்மை அறியாமலே பிறருடைய இரகசியத்தில் குறுக்கிட்டுவிட்டோமே என்ற எண்ணத்தால் எனக்கு ஓரே கூச்சமாய்ப் போய் விட்டது. அங்கிருந்த மற்றவர்களும் இதே உணர்ச்சியினால் மறு புறம் திரும்பிக் கொண்டு மெதுவாக நழுவத் தொடங்கினார்கள். மருத்துவர் தமது கருவிகளைத் தோல் பைக்குள் வைப்பதில் முனைந்திருந்தார். நிலைமை என்ன என்று அவரைக் கேட்டேன்.

” ‘மோசமில்லை. எலும்புகள் எல்லாம் உருப்படியாக இருக்கின்றன. இவ்வளவு லேசாகத் தப்பியது அவன் அதிர்ஷ்டம் தான்’ என்று சொல்லிவிட்டு ல்யூபோவ் சாபான் பக்கம் திரும்பி, ‘இந்தா அம்மா, அவனை அலட்டாதே. அவனுக்கு இப்போது அமைதி வேண்டும். தழுவுவதெல்லாம் அப்புறம் வீட்டிலே செயது கொள்ளலாம்’ என்றார்.

” ‘வீட்டிலே’ என்ற சொல் கேட்டதுமே ல்யூபோவ் சாபான் சட்டென்று நிமிர்ந்து, எழுந்து நின்று, கலைந்த தலைமயிரை முற்றாகக் கட்டிக்கொண்டாள். அவள் முகத்தில் எப்போதும் போன்ற கடுகடுப்பு வந்துவிட்டது. சற்று முன்பு சாதாரணப் பெண் பிள்ளை போலக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதவள் இவளல்ல என்னும்படியாயிருந்தது அந்த உருமாற்றம். யெகோர் முனகினான். ல்யூபோவ் சட்டென்று அவனைப் பார்த்தாள். அவள் கண்களின் மீண்டும் மென்மை வந்துவிட்டது. பெண்மைப் புன்முறுவல் இந்த உதடுகளிலிருந்து இனி நீங்காது, கருநாவல் கனிகள் போன்ற இந்தக் கண்களில் ஒளிரும் காதல் சுடர் இனி என்றும் மங்காது என்று நான் அறிந்து கொண்டேன்.

“ல்யூபோவ் சாபானும் உஸ்த்தீனோவும் தங்கள் உள்ளங்களின் உறவைப் புரிந்துகொள்வதற்கு இந்த விபத்துத்தான் உதவியது.

“இந்த விபத்து நடக்காவிட்டால் என்ன நேர்ந்திருக்குமோ, யார் கண்டது? அவர்களுடைய ஆழ்ந்த செருக்கும், எங்களுடைய குறுகிய பார்வையும் சேர்ந்து அவர்களை ஒருவரையொருவர் நெருங்கவொட்டாமல் தனிமைப்படுத்தியிருக்கும். ஒரு வார்த்தைகூடச் சொல்லிக் கொள்ளாமல் இருவரும் பிரிந்து போயிருப்பார்கள்.

“இப்போது உள்ளத்தைச் சொல்லுங்கள், கதை எப்படி, சுவையானதா இல்லையா? சந்தேகமில்லாமல் சுவையானது. கட்சி வேலையில் ஈடுபட்டிருக்கும் என் போன்றவர்களுக்கு இதனால் ஒரு படிப்பினையும் கிடைக்கிறது. மக்களை ஆழ்ந்து அறிந்துகொள்ள வேண்டும், உரிய தருணத்தில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் அந்தப் படிப்பினை.

“மேலே சொல்வதற்கு என்ன இருக்கிறது? இரண்டு பேரும் மணம் செய்து கொண்டார்கள். அவன் குழந்தைகளுக்கு அவள் ஆதர்சத் தாயாக விளங்குகிறாள். நிர்மாண சம்பந்தமான கூட்டங்களில் தொண்டை கிழிய விவாதிப்பது மட்டும் இன்னும் நடந்துவருகிறது. ஆனால் ஒன்று. யெகோர் இப்போது தன் தவறுகளை ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான். திருமணம் பதிவான போது அவள் அவனுடைய குலப் பெயரைத் தனதாக்கிக் கொண்டாள். இந்த ஆறுமாதமாக அவளுடைய பாஸ்போர்ட்டில் ல்யூபோவ் உஸ்த்தீனோவா என்ற பெயரே காணப்படுகிறது. ஆனால் நாங்கள் எல்லாரும் – அவள் கணவன் உள்பட – ல்யூபோவ் சாபான் என்றே அவளை அழைக்கிறோம்.

“இவ்வளவு தான் கதை. ஆர்வமூட்டுவது என்று தோன்றினால் நீங்கள் பிரசுரித்துக்கொள்ளலாம்.”

– பரீஸ் பொலிவோய்
(ரஷ்ய அமர இலக்கிய வரிசை – சோவியத் இலக்கிய வரிசை என்ற நூலிலிருந்து)

  1. கதை சொன்ன காதலின் நாட்கள் பழமையானதானாலும் அதன் உணர்வுகள் புதுமையானது. இந்தக் காதலர்களை நானும் காதலிக்கின்றேன்.

  2. அந்தத் தம்பதிகளை ஒரு முறை பாருங்கள். நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்பவே பார்த்துக்கொள்ளுங்கள்.—அப்புறம் நீங்கள் மறந்து பொய்விடுவீர்கள்

  3. // திருமணம் பதிவான போது அவள் அவனுடைய குலப் பெயரைத் தனதாக்கிக் கொண்டாள். //

    தினீப்பர் நீர் மின்நிலையம் கட்டிமுடிக்கப்பட்டது 1932-ல்.. யெகோர் உஸ்த்தீனோவ் அதன் நிர்மாணத்தில் பங்கெற்றவர் என்றால் அப்போதைய ஸ்டாலின் ஆட்சியில் கூட குலப் பிரிவினைகள் ஒழிக்கப்படவில்லை.. அங்கே பூணூல் போடும் நம்மவா குலங்கள் உண்டா, இல்லையா அத முதல்ல சொல்லுங்கோ..?!

  4. பூணுலுவா இருந்திருந்தால் அங்கு புரட்சியே நடந்திருக்காது. எனவே உங்கவா அங்கில்ல.

    • புரட்சி நடக்கவேண்டிய அளவுக்கு அங்கே குலங்களிடையே முரண்பாடு முற்றிப் போயிருந்திருக்குமோ..?! அதுக்குத்தான் ஊருக்கு ஒரு கோவிலும், ஒரு பார்ப்பானும் மட்டுமாவது வேணுங்கறது..

  5. //புரட்சி நடக்கவேண்டிய அளவுக்கு அங்கே குலங்களிடையே முரண்பாடு முற்றிப் போயிருந்திருக்குமோ..//

    முரண்பாடு குலங்களுக்கிடையேவா!…….இதுத்தான் பார்ப்பன புரட்டு என்பதா 🙂

    • // முரண்பாடு குலங்களுக்கிடையேவா!……. //

      பிரபுக்களுக்கு 100 குலங்கள்.. படைவீரர்களுக்கு 100 குலங்கள், குடியானவர்களுக்கு 100 குலங்கள்….. இப்படி குலங்களாக பிரிந்து கும்மியடித்துக் கொண்டிருந்தால் முரண்பாடு வராமல் முளைப்பாரியா வரும்..?!

      • ///புரட்சி நடக்கவேண்டிய அளவுக்கு அங்கே குலங்களிடையே முரண்பாடு//

        மன்னிக்கவும் நீங்கள் எந்தப் புரட்சியை பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  6. //திருமணம் பதிவான போது அவள் அவனுடைய குலப் பெயரைத் தனதாக்கிக் கொண்டாள்//

    இந்த வாக்கியம் வேறொரு பொருளில் எனக்கும் நெருடுகிறது. அது, அப்பொழுதும் ஆணாதிக்க சிந்தனை முற்றிலுமாக அகற்றப்படவில்லை என்பதைத்தானே உணர்த்துகிறது என்பதாக. சரியா வினவு.

    • ரொம்ப முக்கியம்.. கணவன்-மனைவி இருவரில் யாருடைய குலத்தை யார் தனதாக்கிக் கொண்டாலும் குலம் தொடர்ந்து இருக்குமே.. அந்த நெருடல் இல்லையா..?!

      • ஏன் யாரும்யாரும் தனதாக்கிக் கொள்ளத்தான் வேண்டுமோ?

        • தாய்வழி சமூகமாயிருந்து மனைவியின் குலப் பெயரை கணவன் தனதாக்கிக் கொண்டிருந்தால் ஆணாத்திக்கம் குறித்த ( குலங்களின் தொடர்ச்சி குறித்த ) நெருடல் உங்களுக்கு வந்திருக்காதே..!

          • புரட்சியின் நோக்கம் இனம்,குல,மதம்,சாதி போன்ற அடையாளங்களிலிருந்து விடுபடுவதை நோக்கியதாகத்தானே இருக்கவேண்டும். பின் எப்படி அவள் ’ல்யூபோவ் உஸ்த்தீனோவா ’ ஆனாள் என்பதுதான் நெருடல். அவன் மீது கொண்ட காதலால் அப்படி ஒரு நிலை எடுத்திருக்கலாம். பெண்களுக்கே உரிய பலகீனம் அது. ஆனாலும் அவளது கணவனும் ஏனையோரும் அவளை ல்யூபோவ் சாபான் என்றே அழைத்திருக்கின்றனர் இது ஆணாதிக்கத்தை வெறுத்த பண்பில்லையா! ஸ்டாலின் இன்னும் நீண்ட காலம் இருந்திருக்கலாம்.

  7. குலம் என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கக் கூடாது. குடும்பப் பெயர் என்று இருந்திருக்கலாமோ ? குடும்பப்பெயராகவே இருந்தாலும் பார்ட்னரின் குடும்பப் பெயரை ஏன் அந்த பெண் தனது பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டார்? அதுகுறித்து மட்டும் ஏன் அவர் விவாதிக்கவில்லை?

    இதை மிக முற்போக்கான இலக்கியமாக கருத முடியவில்லை. உலகின் ஆகப்பெரும் முற்போக்காளருக்கும் முன்னோடியாக ‘சிறந்த’ கம்யூனிஸ்டுகள் இருப்பார்கள் என்றே எதிர்ப்பாக்கிறேன்.

    அம்பி,

    சொவியத் ருஷியாவில் எந்தக் குடும்பப் பெயர்கள் உயர்’சாதிக்கு’ உரியவை என்றும் எவை தாழ்த்தப்பட்ட பிரிவுக்கு உரியவை என்று சொல்லமுடியுமா? அரிவாளின் முதல் வேலையே ‘நூல்’ அறுப்பு தானே..

    மேலும் கம்யூனிச அமைப்பில் தான் குடும்ப அமைப்புகள் தகரும். சோவித் ரஷியா ஒரு சோஷலிச முயற்சிதான். சமூக கலாச்சார புரட்சி முழுஅளவில் ரஷியாவில் நடக்கவில்லை என்று நினைக்கிறேன்.

    • // சொவியத் ருஷியாவில் எந்தக் குடும்பப் பெயர்கள் உயர்’சாதிக்கு’ உரியவை என்றும் எவை தாழ்த்தப்பட்ட பிரிவுக்கு உரியவை என்று சொல்லமுடியுமா? அரிவாளின் முதல் வேலையே ‘நூல்’ அறுப்பு தானே.. //

      அங்கே ’நூலறப்பு’ நடத்த வேண்டிய தேவையில்லாமலேயே குலங்கள் நிலவியதே.. பணக்காரனாக இருந்தாலும் ஒரு குடியானவர் குலத்தைச் சேர்ந்தவன் பிரபுக் குலங்களோடு அத்தனை எளிதாக உறவு முறை கொண்டிருக்க முடியாதே (சோவியத் அரசுக்கு முன்வரை).. ஒரு குறிப்பிட்ட குடியானவ குலம் வலிமையடைந்து ஆதிக்கத்தில் உயரும்போது பிரபுக் குலமாக மேல்நிலையாக்கம் பெறுவதும், செல்வாக்கிழக்கும் ஒரு பிரபுக் குலம் கீழ்நிலையாக்கத்துக்கு தள்ளப்படுவதும் உலகம் முழுதும் நடைபெற்ற வண்ணமேதானே இருந்தது.. இந்தியாவில் கூட குலங்களின் தோற்றத்துக்கும் ஏற்ற தாழ்வுக்கும் பார்ப்பான் முழுப் பொறுப்பும் ஏற்கமுடியாது..

  8. // இவற்றையெல்லாம் உருவாக்கிய மனிதனுக்கு ஒரு ஆக்கியோன், படைத்தோன் இருப்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்களாம்.//

    பார்ப்பான் சாதீயத்திற்கு முழு பொறுப்பு ஏற்றுக்கொண்டாலே போதும்

  9. //இந்தியாவில் கூட குலங்களின் தோற்றத்துக்கும் ஏற்ற தாழ்வுக்கும் பார்ப்பான் முழுப் பொறுப்பும் ஏற்கமுடியாது..//

    பார்ப்பான் சாதீயத்திற்கு முழு பொறுப்பு ஏற்றுக்கொண்டாலே போதும்

    • இரண்டிற்கும் 6 வித்தியாசம் கண்டுபிடித்து வைத்திருக்கிறீர்களோ..?!

  10. //இரண்டிற்கும் 6 வித்தியாசம் கண்டுபிடித்து வைத்திருக்கிறீர்களோ..?!//

    9-8=1தானே வருது. அந்த 8ம் நம்பர் பின்னூட்டத்த வினவு தூக்கிட்டா எந்த வித்தியாசமும் இல்லாம சரியாயிடும். just careless

    • அதைச் சொல்லவில்லை..

      //குலங்களின் தோற்றத்திற்கும் ஏற்ற தாழ்வுக்கும்// Vs //சாதீயத்திற்கு// 6 வித்தியாசங்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறீர்களா என்று கேட்டேன்..

  11. ஒரே ஒரு வித்தியாசம்தான். குலங்களில் ஏற்றத்தாழ்வு=வலிமையின் அடிப்படையில்: சாதீயத்தில்=பிறப்பின் அடிப்படையில்

    • சாதியும், குலமும் பிறப்பின் அடிப்படையில் தோன்றியவைதான்.. இரண்டுக்கும் வேறு வித்தியாசங்கள் உண்டா..?!

      • குலத்துல எல்லோரும் ஒரே உறுப்பிலிருந்துதான் வருவா சாதீயத்துல நாலு உறுப்பு வழியா வருவா

  12. நாலு உறுப்பு வழியா வருவா என்பதை நம்பித்தான் எல்லாம் சாதி சாதியா செட்டில் ஆனாளா..?! ஒவ்வொரு குலமும்/சாதியும் இந்தக் கதையை ஏற்கிறதா இல்லை தங்களுக்கென்று உறுப்புக் குழப்பம் இல்லாத ஒரு குல வரலாறை வைத்திருக்கிறதா..?! வலிமையால் மேலே வந்த குலங்களிடம் இந்த உறுப்புக் கதை செல்லுபடியாகியிருக்கிறதா..?! உறுப்புக் கதையால்தான் சாதீயம் நிலவியது/நிலவுகிறது என்ற கதை வலிமையால் ஒடுக்கப்படுபவர்களிடம் செல்லுபடியாகாதே..

    • //வலிமையால் மேலே வந்த குலங்களிடம் இந்த உறுப்புக் கதை செல்லுபடியாகியிருக்கிறதா.//

      வலிமையால் மேலே வந்த குலங்களிடம் உறுப்பு கதை இருப்பதாக நான் சொல்லவே இல்லியே

      வலிமையைக் கொண்டு உயரமுடியாத, வலிமையற்ற, சூழ்ச்சிகள் நிறைந்த குலம்தான் 4 உறுப்பு கதை சொல்லி அடக்கி ஒடுக்கிக் கொண்டிருக்கிறது.

      //உறுப்புக் கதையால்தான் சாதீயம் நிலவியது/நிலவுகிறது என்ற கதை வலிமையால் ஒடுக்கப்படுபவர்களிடம் செல்லுபடியாகாதே..//

      செல்லுபடியாகிக்கொண்டிருக்கிறதே!

      • // வலிமையைக் கொண்டு உயரமுடியாத, வலிமையற்ற, சூழ்ச்சிகள் நிறைந்த குலம்தான் 4 உறுப்பு கதை சொல்லி அடக்கி ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. //

        ம்ம்.. மற்ற வலிமையுள்ள, சூழ்ச்சிகள் இல்லாத குலங்கள் இதைப் பார்த்தும் தடுக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தன..

        // செல்லுபடியாகிக்கொண்டிருக்கிறதே! //

        கதை சொல்லுகிறவனின் வலிமைதான் செல்லுபடியாகிறதே தவிர சொல்லப்படும் கதை செல்லுபடியாகாது.. பார்ப்பானின் மீது பழியைப் போட்டே முற்போக்குவாதியாக காலத்தை ஓட்டும் கலை (சூழ்ச்சி என்று சொல்லக்கூடாது, அது பார்ப்பானின் தனியுடமையல்லவா) காலாவதியாகிவிட்டது..

        • //காலாவதியாகிவிட்டது//

          காலாவதியாகவில்லை என்பதற்குதானே ச்மீபத்திய வடுகப்பட்டி உதாரணம்.

          • அப்டி போடுங்க.. பார்ப்பானின் மீது பழியைப் போட்டே முற்போக்குவாதியாக காலத்தை ஓட்டும் கலை காலாவதியாகவில்லை என்பதற்கு நீங்கள்தான் உதாரணம்..

            • இந்திய முஸ்லீம்கள் 4 மனைவிகளை கட்டலைன்றதுனால முகமது நபி அத்த சொல்லலைன்னு ஆயிடுமா

              //பார்ப்பானின் மீது பழியைப் போட்டே முற்போக்குவாதியாக//

              ஐயோ! பார்ப்பான எதிர்த்தா நான் புரட்சியாளன்ற நெனப்புல இல்ல இவ்வளவு நாளா பேசிக்கிட்டு இருக்கேன் வெறும் முற்போக்குதானா 🙂

              • மடைய மாத்துறது புரட்சியாளர்கள் வேலை இல்ல, புரட்டாளர்கள் வேலை.. 🙁

                • //இந்திய முஸ்லீம்கள் 4 மனைவிகளை கட்டலைன்றதுனால முகமது நபி அத்த சொல்லலைன்னு ஆயிடுமா//

                  //மடைய மாத்துறது புரட்டாளர்கள் வேலை.//

                  பார்ப்பானையே நொள்ளை சொல்றீங்களே பாய்ங்கள ஒன்னு சொல்லமாட்றீங்களேன்னு யாராவது கேட்டு என்ன பெரியாரிஸ்டு ஆக்கிடக்கூடாதில்லையா? பார்ப்பான எதிர்த்தா எத்தனை பட்டத்தைதான் சுமக்குறது 🙂

        • //ம்ம்.. மற்ற வலிமையுள்ள, சூழ்ச்சிகள் இல்லாத குலங்கள் இதைப் பார்த்தும் தடுக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தன..//

          ரத்தம் கக்கி சாவீங்கன்ற டயலாக்க நேர்ல கேட்டிருக்கீங்களா?

          • கொஞ்ச நாள்தான் பயங்காட்டலாம்.. ஆனா எப்பவுமே பயந்த மாதிரி நடிக்கலாம்..

            • எப்பவுமே நடிக்கறதுக்கு தூங்கறது பஞ்சு மெத்தை இல்ல கட்டாந்தரை.

              • கட்டாந்தரையில் தூங்குவது யார்..?! பார்ப்பானின் மிரட்டலுக்கு ’பயந்து’ இளைத்தவனின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டிருப்பவர்களா..?!

Leave a Reply to அம்பி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க