privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்இளவரசன் மரணம் : தருமபுரியில் தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு - படங்கள் !

இளவரசன் மரணம் : தருமபுரியில் தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு – படங்கள் !

-

மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு இளவரசனின் உடல், அவருடைய வீடு, மற்றும் நத்தம் கிராமத்தை நேரில் பார்த்து ஆய்வு !

7.7.2013, தருமபுரி

டந்த வருடம் நவம்பர் 7-ம் தேதி திவ்யா இளவரசன் சாதி மறுப்பு திருமண பிரச்சினையால் தருமபுரி அருகே உள்ள நாய்க்கன் கொட்டாய், நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் பாமக சாதிவெறி வன்முறைகாரர்களால் 270-க்கும் மேற்பட்ட வீடுகள் அடுத்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து கொளுத்தி, சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் நடந்து 8 மாதங்களுக்குள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் 4.7.2013 அன்று மதியம் 3 மணி அளவில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். ரயில்வே காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தத் தகவலை அறிந்த மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு உறுப்பினர் சிவண்ணா, தமிழக ஆணையக் குழு இயக்குனர் வெங்கடேசன் ஆகியோர் இளவரசனின் வீடு, அவருடைய கிராமமான நத்தம் மற்றும் மருத்துவமனையில் உள்ள இளவரசனின் உடலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் இளவரசன் கொலை செய்யப்பட்டிருந்தால் குற்றவாளிகள் மீது கடுமையான சட்டம் பாயும் என்றும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி காலனிகளில் மறுவாழ்வு பணிகள் 80%  முடிவடைந்து விட்டன என்று மாவட்ட நிர்வாகம் சொன்னாலும் 20% பணிகளே முடிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக சிவண்ணா இளவரசனின் பெற்றோரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசினார்.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி