Saturday, May 10, 2025
முகப்புசமூகம்சாதி – மதம்இளவரசன் மரணம் : விருத்தாச்சலத்தில் நாளை அரங்கக் கூட்டம் !

இளவரசன் மரணம் : விருத்தாச்சலத்தில் நாளை அரங்கக் கூட்டம் !

-

நாடக காதல் என்ற சாதிவெறி அரசியலை திரை கிழித்த இளவரசன் மரணம் : அரங்கக் கூட்டம்

நாள் : 13-7-2013 சனி
நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
இடம் : மக்கள் மன்றம், ஜங்ஷன் ரோடு, விருத்தாசலம்.

notice

  • தருமபுரி தாக்குதல், இளவரசன் மரணத்திற்கு பா.ம.க. காரணம் இல்லையா?
  • தலித்துகளுக்கு எதிரான காடுவெட்டி குருவின் சாதி வெறியூட்டும் பேச்சை வன்னிய மக்கள் அனைவரும் ஆதரிக்கிறார்களா?
  • சாதிய சங்கங்களால், சாதிக் கட்சிகளால் சாதாரண மக்களுக்கு சல்லி காசு பிரயோசனம் உண்டா?
  • சாதிய அரசியலால் ஆதாயமடையும் தலைவர்களுக்காக, கல்வி முதலாளிகளுக்காக, ரியல் எஸ்டேட் அதிபர்களுக்காக சாதாரண மக்கள் ஏன் உயிர் விட வேண்டும், ஏன் சிறை செல்ல வேண்டும், ஏன் பழி சுமக்க வேண்டும்?
  • குஜராத்தில் இந்து மதவெறி, இலங்கையில் சிங்கள இனவெறி என்ற சொல்லும் போது தருமபுரி தாக்குதலை, வன்னியசாதி வெறி என்று ஏன் சொல்லக் கூடாது? இந்த தாக்குதலை ஆதரிக்காத பிற வன்னிய மக்களை அது எப்படி குறிக்கும்?
  • உழைக்கும் மக்களின் ஒற்றுமையில் அமிலத்தை ஊற்றும் எல்லா வகையான சாதி அரசியலையும் ஒழிக்க வேண்டாமா?

தலைமை : பொறியாளர் குணசேகரன், மாவட்டத் தலைவர், மனித உரிமை பாதுகாப்பு மையம்

கருத்துரை :
வழக்கறிஞர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்
எழுத்தாளர் கரிகாலன்
எழுத்தாளர் இமையம்
வழக்கறிஞர் புஷ்பதேவன், மாவட்ட செயலர், மனித உரிமை பாதுகாப்பு மையம்

தமிழக அரசே
இளவரசன் படுகொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடு!
அனைத்து சாதி சங்கங்களையும் நிரந்தரமாக தடை செய்!

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு : 9360061121, 9842396929