Sunday, June 20, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் இளவரசன் மரணம் : விருத்தாச்சலத்தில் நாளை அரங்கக் கூட்டம் !

இளவரசன் மரணம் : விருத்தாச்சலத்தில் நாளை அரங்கக் கூட்டம் !

-

நாடக காதல் என்ற சாதிவெறி அரசியலை திரை கிழித்த இளவரசன் மரணம் : அரங்கக் கூட்டம்

நாள் : 13-7-2013 சனி
நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
இடம் : மக்கள் மன்றம், ஜங்ஷன் ரோடு, விருத்தாசலம்.

notice

 • தருமபுரி தாக்குதல், இளவரசன் மரணத்திற்கு பா.ம.க. காரணம் இல்லையா?
 • தலித்துகளுக்கு எதிரான காடுவெட்டி குருவின் சாதி வெறியூட்டும் பேச்சை வன்னிய மக்கள் அனைவரும் ஆதரிக்கிறார்களா?
 • சாதிய சங்கங்களால், சாதிக் கட்சிகளால் சாதாரண மக்களுக்கு சல்லி காசு பிரயோசனம் உண்டா?
 • சாதிய அரசியலால் ஆதாயமடையும் தலைவர்களுக்காக, கல்வி முதலாளிகளுக்காக, ரியல் எஸ்டேட் அதிபர்களுக்காக சாதாரண மக்கள் ஏன் உயிர் விட வேண்டும், ஏன் சிறை செல்ல வேண்டும், ஏன் பழி சுமக்க வேண்டும்?
 • குஜராத்தில் இந்து மதவெறி, இலங்கையில் சிங்கள இனவெறி என்ற சொல்லும் போது தருமபுரி தாக்குதலை, வன்னியசாதி வெறி என்று ஏன் சொல்லக் கூடாது? இந்த தாக்குதலை ஆதரிக்காத பிற வன்னிய மக்களை அது எப்படி குறிக்கும்?
 • உழைக்கும் மக்களின் ஒற்றுமையில் அமிலத்தை ஊற்றும் எல்லா வகையான சாதி அரசியலையும் ஒழிக்க வேண்டாமா?

தலைமை : பொறியாளர் குணசேகரன், மாவட்டத் தலைவர், மனித உரிமை பாதுகாப்பு மையம்

கருத்துரை :
வழக்கறிஞர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்
எழுத்தாளர் கரிகாலன்
எழுத்தாளர் இமையம்
வழக்கறிஞர் புஷ்பதேவன், மாவட்ட செயலர், மனித உரிமை பாதுகாப்பு மையம்

தமிழக அரசே
இளவரசன் படுகொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடு!
அனைத்து சாதி சங்கங்களையும் நிரந்தரமாக தடை செய்!

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு : 9360061121, 9842396929

 1. //குஜராத்தில் இந்து மதவெறி, இலங்கையில் சிங்கள இனவெறி என்ற சொல்லும் போது தருமபுரி தாக்குதலை, வன்னியசாதி வெறி என்று ஏன் சொல்லக் கூடாது?//

  இந்தியாவில் முஸ்லீம் மதவெறி என்பதையும் சேர்த்துக்கொள்ளவும்…இதச் சேர்க்காவிடில் சீமானைநீர் விமர்சித்தது எல்லாம் உம்மையே சாரும்..

 2. //தலித்துகளுக்கு எதிரான காடுவெட்டி குருவின் சாதி வெறியூட்டும் பேச்சை வன்னிய மக்கள் அனைவரும் ஆதரிக்கிறார்களா?// ஆம்….

  • //தலித்துகளுக்கு எதிரான காடுவெட்டி குருவின் சாதி வெறியூட்டும் பேச்சை வன்னிய மக்கள் அனைவரும் ஆதரிக்கிறார்களா?//

   இந்த கேள்விக்கு பதில் அந்த அரங்கக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் சாதி வெறியற்ற பெரும்பாமையான உழைக்கும் வன்னிய மக்களின் எண்ணிக்கையில் இருக்கிறது.

   Just wait !

 3. மத வெறியும், இன வெறியும் உள்ளதால் தான் குஜராத்தும், இலங்கையும் ஜெயிக்க முடிந்தது…. சாதி அவசியம் தேவை… அதை அழிக்கவும் முடியாது… நாட்ல நடக்குற நூறு கல்யாணத்துல 95 கல்யாணம் ஒரே சாதியோட தான்யா நடக்குது…. கோழையாய் இறந்தவனுக்கு ஒரு இரங்கல் கூட்டம் வேற…

 4. மனித உரிமை ன்ற பேர்ல யாரும் எந்த அமைப்பும் தொடங்குறது சட்டப்படி குற்றம்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொன்னது உங்களுக்கு தெரியாதா?

  அல்லது எப்பவும் போல உங்களுக்கு இதுலயும் கோட்டா இருக்கோ?

  தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் இந்த ரென்ட தவிர நீங்க எல்லாரும் டுபாக்கூர்னு திண்டுக்கல் பழைய கலெக்டர் வள்ளலார் சொல்லி ரொம்ப நாள் ஆச்சு.

  பேர மாத்துங்க… பேப்பர் படிங்க.

 5. வினவு போன்ற வலைதலங்களால் ஜாதியை உசிப்புவிடதான் தெரியும். ஜாதியை ஒழிக்க முடியாது. ஜாதியை ஒழிக்க முயற்சி எடுக்க மாட்டார்கள். ஜாதி மறுப்பு தெரிவிப்பவர்கள் முதலில் தங்கள் வீடுகளில் ஜாதியை ஒழிக்கவேண்டும். பள்ளி சான்றதல்களில் மதம் மற்றும் ஜாதி என்ற இடத்திற்கு
  ” மதம்” “ஜாதி” இல்லை என்று குறிப்பிடவேண்டும். அப்போதுதான் யார் என்ன ஜாதி மதம் என்று தெரியாது. ஜாதி மறுப்பு வீரர்கள் மற்றும் “புரட்சியாளர்கள்” இதனை செய்வார்களா?கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். இதனை வைத்துதான் இவர்கள் பிழைப்பு ஓடுகிறது.

  அரசாங்கதின் சலுகைகள் மட்டும் ஏன் உங்களுக்கு? அதை வேண்டாம் என்று போராட்டம் செய்யுங்கள். என் மகனுக்கு நான் விரும்பும் ஒரு தலித் குடும்பதில் பெண் எடுக்கனும். வினவு & V.C உங்களால் அதை செய்ய திராணி உள்ளதா?

 6. இருந்தாலும் நீங்கள் வினவு தளத்தை திருமண தரகு மட்டத்துக்கு இழுப்பது என்ன நியாயம்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க