Thursday, May 8, 2025
முகப்புசெய்திமோடியை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் போராட்டம் !

மோடியை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் போராட்டம் !

-

26.09.2013 அன்று மதியம் 1.30 மணிக்கு சென்னை உயர்நீதி மன்றம் ஆவின் வாயிலில் குஜராத் முஸ்லீம் இனப்படுகொலைக் குற்றவாளி, இந்தியாவின் ராஜபட்சே நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து வழக்குரைஞர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

banner-modi

  • பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்படும் நரேந்திர மோடி,  மதச்சார்பின்மை கொள்கையிலோ, ஜனநாயகத்திலோ நம்பிக்கை இல்லாத ஹிட்லரைப் போன்ற ஒரு பாசிஸ்ட்.
  • 2002-ல் சங்க பரிவாரத்தினரால் மோடி அரசின் பின்பலத்துடன் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து இன்று வரை வாயளவில் கூட வருத்தம் தெரிவிக்க மறுத்து வரும் ஒரு மனித குல விரோதி.
  • cartoon-modi2000 பேரைக் கொன்றொழித்த குஜராத் இனப்படுகொலை மோடியின் ஆசியுடன்தான் நடந்தது என்ற உண்மையை வாக்கு மூலமாக அளித்ததற்காக தன்னுடைய அமைச்சர் ஹரேன் பாண்டியாவை கூலிப் படையை வைத்துக் கொலை செய்த இரக்கமற்ற கொலைகாரன்.
  • தனது உயிருக்கு ஆபத்து என்ற கட்டுக் கதையை உருவாக்கி இமேஜை உயர்த்திக் கொள்வதற்காக மோடியால் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகளின் எண்ணிக்கை 22.
  • மோடியின் அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சரான மாயா கோத்னானிக்கு நரோடா பாட்டியா குடியிருப்பில் 95 பேரைக் கொலை செய்த வழக்கில் 28 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
  • குஜராத் அரசு தரப்பு மீது நம்பிக்கையே இல்லை  என்று மோடியை சாடினார் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே.
  • “அப்பாவிக் குழந்தைகளும் ஆதரவில்லாப் பெண்களும் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது இந்த நவீன கால நீரோக்கள் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்கள்” என்று காரி உமிழ்ந்தார் உச்சநீதி மன்ற நீதிபதி அரிஜித் பசாயத்.
  • மோடியின் மீது குற்ற விசாரணை நடத்த வேண்டுமென சிபாரிசு செய்திருக்கிறார் உச்ச நீதிமன்றத்தால் அமைகஸ் கியூரியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரன்.
  • சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்த இராஜபக்சே திருச்சிக்கு வந்தால் நாம் அனுமதிப்போமா? மோடியும் சொந்த மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த இராஜபக்சேதான்.

மதச்சார்பின்மை, ஜனநாயகத்தின் எதிரி, இந்தியாவின் ராஜபக்சே மோடியை விரட்டியடிப்போம் ! தமிழகத்தின் மரபான மதச்சார்பின்மையை காப்போம் ! வாரீர் !!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

கொலைகார நரேந்திர மோடி தமிழகம் வருகையைக் கண்டித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

இன்று காலை 11.45 மணியளவில் தூத்துக்குடி மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மற்றும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் முன்பு கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் சிறுபான்மையினர்கள், மனித உரிமை ஆர்வலர்களை கொலை செய்த கொலைகார நரேந்திர மோடியை பெரியார் பிறந்த தமிழகத்தில் அனுமதியோம், போலி என்கவுண்டரில் பலரை கொலை செய்த இந்து மதவெறியன் நரேந்திர மோடியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

thoothukudi-demo-2
தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி.