privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மோடிக்காக தூதரின் வாயசைவுக்கு டப்பிங் கொடுக்கும் ஊடகங்கள் !

மோடிக்காக தூதரின் வாயசைவுக்கு டப்பிங் கொடுக்கும் ஊடகங்கள் !

-

க்டோபர் 3-ம் தேதி “குஜராத்தை புறக்கணிக்க முடியாது: இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர்” என்ற தலைப்பில் தினமணியிலும், ‘Can’t ignore Gujarat, says British High Commissioner’ என்று ‘The Hindu’ பத்திரிகையிலும், “குஜராத் மாநிலத்தையும், மோடியையும் புறக்கணிக்க முடியாது: பிரிட்டன் தூதர்” என்று தினமலர் பத்திரிகையிலும் செய்தி ஒரே மாதிரியாக வெளியாகி உள்ளது.

modi-bevan
ஜேம்ஸ் பெவனுடன் நரேந்திர மோடி. கோப்பு படம் (படம் : நன்றி The Hindu)

குஜராத்தில் 2002-ல் நடந்த முசுலீம்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு பிறகு மோடிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கான அனுமதியை தர தொடர்ந்து மறுத்து வருகின்றன. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம், காசுமீர் பற்றியெல்லாம் அவ்வப்போது சவடால் அடிக்கும் மோடி இது பற்றி கடந்த பத்தாண்டுகளாக வாயே திறக்கவில்லை. இந்நிலையில் 2012 அக்டோபரில் மோடியை பிரிட்டிஷ் ஹை கமிசனர் ஜேம்ஸ் பெவன் சந்தித்தார். அச்சந்திப்பு முடிந்தவுடன் ”மோடி மீதான பிரிட்டனின் பார்வை மாறிவிட்டதா” என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ”இல்லை” என்றுதான் அவர் பதிலளித்திருந்தார்.

தற்போது மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்ட நிலையில் ”மோடி குறித்த பிரிட்டன் நிலையில் ஏதேனும் மாற்றம் உண்டா ?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”கடந்த ஆண்டு மோடியை சந்தித்தபோது கூறியதையே இப்போதும் கூறுகிறேன். மோடியை சந்திப்பதே அவரது முந்தைய செயல்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகி விடாது” என்று தெளிவாகக் கூறி விட்டார்.

அப்படியானால் “மோடியை சந்திப்பதே அவரை அங்கீகரிப்பதாகி விடாது: பிரிட்டன் தூதர்” என்றுதான் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் நரியை பரியாக்கும் கதையாக மோடிக்கு பி.ஆர்.ஓ வேலை செய்ய பத்திரிகைகள் துடித்துக் கொண்டிருப்பதால், “குஜராத்தையும், மோடியையும் புறக்கணிக்க முடியாது” என பிரிட்டன் தூதர் சொல்லியதாக செய்தியை திரித்து வெளியிடுகின்றன. இப்படி கூஜா தூக்கும் வேலையில் தமிழ், ஆங்கிலம், நடுநிலை, தேசியம் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் பத்திரிகைகள் அனைத்தும் ‘மோடி மேனியா’வால் பாதிக்கப்பட்டுள்ளன.

”எங்களால் புறக்கணிக்க முடியாத அளவுக்கு குஜராத் ஒரு முக்கியமான மாநிலம். அதன் முதல்வராக உள்ள மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே இந்தியாவுடன் உறவைப் பேண விரும்பினால் குஜராத்தை எங்களால் புறக்கணிக்க முடியாது” என்றும் பிரிட்டிஷ் ஹை கமிசனர் ஜேம்ஸ் பெவன் கூறியுள்ளார். இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தையும் புறக்கணித்து விட்டு எப்படி ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒரு நாடு உறவு பாராட்ட முடியும். என்பதைத்தான் ஜேம்ஸ் பெவன் இங்கே குறிப்பிட்டுள்ளார். இது குஜராத்தை போலவே பிற மாநிலங்களுக்கும் பொருந்தும் தானே. எனினும் பத்திரிகைகள் மோடிக்காக இதனை ஒரு தனிச்சிறப்பான விசயமாக தலைப்பிட்டு புளங்காகிதம் அடைகின்றன. மக்களிடையே மோடி பற்றிய இமேஜை இப்படி ஜாக்கி வைத்து தூக்கி நிறுத்த முயல்கின்றன.

போர்க்குற்றவாளியாக இருப்பினும் ராஜபக்ஷேவுக்கும் கூட இது பொருந்தும் தானே. ராஜபக்ஷேவை தவிர்த்து விட்டு இலங்கையைப் பற்றி பேச முடியாது தானே. இதனால் தான் இலங்கையில் குற்றவாளியே குற்றத்தை விசாரிக்கும்படி ஐ.நா செயலர் பணித்துள்ளார். இப்படித்தான் பாசிஸ்டுகள் உலக அளவில் அங்கீகாரம் பெறுகிறார்கள்.

கடந்த ஆகஸ்டு மாதம், ”இந்தியாவில் பிரபல அரசியல் தலைவர்களை சந்திப்பது எங்கள் கடமை. நான் எந்த ஒரு தனி நபருடன் பேசவில்லை. குஜராத் மாநிலத்துடன் தான் பேசினேன். எனவே இதனை மோடிக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று பிரிட்டிஷ் ஹை கமிசனர் கூறியிருந்தார்.

பிரிட்டன் எம்.பி. பாரி கார்ட்னர், மோடிக்கு பிரிட்டிஷ் காமன்ஸ் சபையில் பேச அழைப்பு விடுத்ததைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது தனிப்பட்ட எம்.பி ஒருவரின் தனிப்பட்ட உரிமை மட்டுமே என்றும், அது அரசின் அழைப்பு அல்ல என்றும் அப்போது விளக்கமளித்திருந்தார் ஜேம்ஸ் பெவன். குஜராத் படுகொலையின் போது 3 பிரிட்டிஷ் பிரஜைகள் இறந்து போயுள்ளனர். அது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அப்போது கோரியிருந்தார்.

தொழில் துவங்க வாய்ப்பாக இருப்பதால் பன்னாட்டு முதலாளிகளுக்கு குஜராத் தேவைப்படுகிறது. அதற்காக மோடியுடன் பேசுவதற்கு முன்வருகிறார்கள். ஆனால் அவரது பழைய மனித உரிமை மீறல்களை தாங்கள் கைவிடவில்லை என்பதை சந்தையின் தேவைக்கேற்ப பேசுவதில் நாடுகளின் தூதுவர்கள் தனிப்பயிற்சி பெற்றுதான் இங்கு வருகின்றனர் என்பதற்கு உதாரணம்தான் ஜேம்ஸ் பெவனின் கூற்றுக்கள்.

தற்போது ”இந்திய ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனினும், நாங்கள் பார்வையாளர்களாகத்தான் இருக்க முடியுமே தவிர, விமர்சகர்களாக இருக்க முடியாது” என்று கூறியுள்ளார். தொழில் வாய்ப்புகளுக்காக சந்தித்து முடித்தவுடன், மோடியின் இனப்படுகொலையையும், குஜராத்தின் தொழில் வாய்ப்புகளையும் தராசின் இரு தட்டுகளில் வைத்து மதிப்பிடும் பிரிட்டிஷ் தூதர், ஒருவேளை மோடி பிரதமராகி விட்டால் என்ற வாய்ப்பை கணக்கிட்ட பின், அவரது மனித உரிமை மீறல் குறித்து பட்டும் படாமல் தனது கருத்தைச் சொல்கிறார்.

மோடிக்கு பிரிட்டனில் விசா மறுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விண்ணப்பித்தால் விசா வழங்கப்படுமா எனக் கேட்டதற்கு, ”யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை” எனக் கூறி இதனை இன்னும் உறுதிப்படுத்தியிருக்கிறார் ஜெம்ஸ் பெவன்.

மோடிக்கு இந்துமத வெறி அடையாளத்தை தாண்டிய ஒரு பொது அடையாளம் பிரதமர் வேட்பாளர் பாத்திரத்திற்கு தேவைப்படுகிறது. அதற்கு காந்தியவாதிகளிடம் போகிறார், தன்னை பிற்படுத்தப்பட்ட சாதிகளின் தலைவனாக பீகாரில் இடைநிலை சாதிகளிடம் ரகசியமாக முன்வைக்கிறார். இப்போது வெளிநாட்டு தூதுவர்களின் வாயில் பிரம்மரிஷி பட்டத்தை எதிர்பார்த்திருக்கிறார். சங் பரிவாரங்களும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக இப்போதாவது ஆட்சியை பிடிக்க தவறினால் கட்சி ஆட்டம் கண்டு விடும் என்பதால் மோடி நடத்தும் மோடி மஸ்தான் வேலைகளில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

மேலை நாடுகளோ சீனாவோடு பொருளாதார உறவுகளைத் தொடர்ந்து கொண்டே மனித உரிமை மீறல் என்று ஒரு லகானை வைத்திருப்பது போல மோடியின் மீதும் வைக்க விரும்புகின்றன. ஒருவேளை மோடியின் அன்பால் அதாவது பன்னாட்டு நிறுவனங்களுக்கான சலுகைகளால் அந்த லகான் மறையவும் வாய்ப்பிருக்கிறது.

இருப்பினும் ஒரு செய்தியை திரித்து மோடிக்கு ஆதரவாக கருத்துக்களை உற்பத்தி செய்வதற்கு இந்தச் செய்தி ஒரு சான்று.

  1. ஆமாமா… நீரு மட்டும் ஒட்டிங் வெட்டிங் எடிடிங்க் வேலை செய்யமாலா ப்ளாக் பத்திரிகை நடத்துகிறீர்…அப்ப ஒங்களுக்கு ஒரு நியாயம்.. முதலாளித்துவ பத்திரிகைக்கு ஒரு நியாயமா..?

    • //நீரு மட்டும் ஒட்டிங் வெட்டிங் எடிடிங்க் வேலை செய்யமாலா ப்ளாக் பத்திரிகை நடத்துகிறீர்…அப்ப ஒங்களுக்கு ஒரு நியாயம்.. முதலாளித்துவ பத்திரிகைக்கு ஒரு நியாயமா//
      அட அட So you accept that Modi is a Dupakur!

  2. . இப்படி கூஜா தூக்கும் வேலையில் தமிழ், ஆங்கிலம், நடுநிலை, தேசியம் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் பத்திரிகைகள் அனைத்தும் ‘மோடி மேனியா’வால் பாதிக்கப்பட்டுள்ளன.—-எல்லாம் அவாள் கின் சொந்தமானதும்.கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் இந்நிலமை

  3. Kevadia Area Development Authority,under the direct control of Gujarat urban development deptt has sent a four line letter to sarpanchs of 52 villages adjoining the Narmada dam on March 6,2013.In that letter,the village sarpanchs and talatis are threatened that they had better agree to hand over their villages for tourism purpose or they would face dire consequences.At least 6 villages which are likely to be affected the most because of the Kevadia Area Development Authority (KADA)move-Indravarna,Nana Piparia,Mota Piparia,Vasantpura,Mathavadi and Umarava-have reportedly protested.The 6 villages,which were the first to handover the land to build the Narmada dam,have even decades later not been considered “equal” to other project affected persons (PPAs),thus remaining deprived of all the facilities which other PAPs of Gujarat,Maharashtra and Madhya Pradesh have enjoyed.Modi proposes to install Sardar Patel”s statue near Narmada dam at a cost of Rs 2500 crores.-Source-Counterview.org

    This is what is called Gujarat model of “Development”and “Democracy”which Modi wants to bring to the entire country if only he succeeds in his ambition.

  4. இந்திய மீடியாக்களின் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள். அனைத்து இந்திய மீடியாக்களும் பார்பன அடிவருடியாகத்தான் செயல் படுகிறது. இதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. புத்தகயா குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக தலையங்கம் எல்லாம் எழுதினார்கள். கடைசியில் பிடிப்பட்டவன் ஒரு பார்பன காவி தீவிரவாதி. இந்த செய்தியை நெருப்பெட்டி சைஸில் வெளியிடுகிறார்கள் மானம் கெட்டவர்கள். என்ன ஒரு ஈன பிழைப்பு….

  5. குஜராத் கலவரம் குறித்து மோடி எத்தனையோ விளக்கங்களை தந்து விட்டார் . ஆனால் வினவு உள்ளிட்ட போலி மதவாத பத்திரிக்கைகள் தான் 2002 விட்டு வர மறுக்கின்றன. 2002 கடந்து வந்தால் மோடியை புகலவேண்டுமே என்ன செய்ய

    • hello….., in case if u r family is affected by 2002 genocide in Gujarat, will u still support Modi? Modi was supporting that genocide directly and the people who involved in that genocide.

      Muslim gondu vithal theveravathi!
      Hind vetti kontral punithan?

      What kind of justice is these!

    • In 2002 Modi and his BJP RSS killed Indian people belonging to Muslim Religion.

      Now Now Now…….

      Modi has done nothing for Gujarat except selling Gujarat to Tata , Reliance companies…

      If he will be a PM on 2014 then he will sell entire India to Tata and Reliance !

      So to avoid this situation and safe guard our nation , We people are against Modi.

    • ஏழைப்பெண்களின் கருப்பைகளை வெள்ளைக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டு…..
      அந்நியச் செலாவணி ஈட்டுவதில் உலகிலேயே முதல் மாநிலம் குஜராத் !

    • @ 69% ரேசன் பொருட்கள் கடத்தி விற்கப்படும் இந்தியாவில் முதல் மாநிலம் குஜராத் !
      @ சுகாதாரத்துக்காக பட்ஜெட்டில் வெறும் 0.77 % ஒதுக்கும் ஒரே மாநிலம் குஜராத் !
      @ 69.7% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள ஒரே மாநிலம் குஜராத் !
      @ சுற்றுச்சூழல் கேட்டில் முதலிடம் – குஜராத் வாபி நகரம் !
      @ 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்த்த ஒரே மாநிலம் குஜராத் !

    • @ இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் மே.வங்கம், உ.பிக்கு அடுத்து 3 வது இடம் குஜராத்!
      @ ஏழைப்பெண்களின் கருப்பைகளை வெள்ளைக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டு அந்நியச் செலாவணி ஈட்டுவதில் உலகிலேயே முதல் மாநிலம் குஜராத் !
      @ தலித் அதிகாரிகள் ஊழியர்களுக்கு தனியாக 300 சேரி அப்பார்ட்மன்ட்டுகளை உருவாக்கி இருக்கும் ஒரே நகரம் அகமதாபாத்!

    • எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா?

      வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகள் குஜராத்தில் 23% தமிழகத்தில் 17% கேரளாவில் 12%.
      கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் குஜராத்திற்கு 18வது இடம்.
      வீடுகளுக்கு மின் இணைப்பு இந்தியாவில் குஜராத்திற்கு 16வது இடம்.
      மாநிலத்தின் நிகர உற்பத்தி மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் மூன்றாமிடம், குஜராத் ஐந்தாமிடம்.

    • கடந்த 12 ஆண்டுகளில் தொழில் முதலீடுகளின் வரவில் மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் 4வது இடம், குஜராத் 5வது இடம்!
      இந்தியா முழுவதும் விலைவாசி ஒன்றுதான். எனினும் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் குஜராத் நகர்ப்புறத்தில் 106 ரூபாய். கிராமப்புறத்தில் 86ரூபா

      • no current for domestic and industry ,how can new industry will come and invest tamilnadu.no current for former ,how you improve agriproduct ,without power how can astate improve ,dont accept congress repor ,you all illiterate idiots fool, go and see nationa average ,see nation news ,sutha mundangal irrukkengala

        • //dont accept congress repor //you all illiterate idiots fool, //

          Hi Brilliant and Excellent FOOOOOOOOOOOl ,

          That is not a Congress report man!!! That is a statistical report prepared by RBI Governor.
          Hi soona thanaaaaaaa,

          After drinking Tasmak saraku ,u types this !!!!!

          Hi Makku, Tamil nadu will be a number one state in India with in 2 years in all good aspects!!!

        • //no current for domestic and industry ,how can new industry will come and invest tamilnadu.no current for former ,how you improve agriproduct ,without power how can astate improve ,dont accept congress repor ,you all illiterate idiots fool, go and see nationa average ,see nation news ,sutha mundangal irrukkengala//

          If I am telling the truth , Why are u getting burning in u r stomach?

          Are u the ALLA KAI for criminal Modi gang?

          Modi gang killlllled 3000 Indians at at Gujarat during 2002 genocide !!!!!
          u do not know this!!!!

Leave a Reply to valipokken பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க