privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மாணவர்கள் மீது சோ கட்டவிழ்க்கும் பயங்கரவாதம்

மாணவர்கள் மீது சோ கட்டவிழ்க்கும் பயங்கரவாதம்

-

ன்ஃப்ன்ட் ஜீசஸ் கல்லூரி முதல்வர் கொலையை ஒட்டி மாணவ சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அரசு மற்றும் ஊடக பயங்கரவாதம் அதன் எல்லா எல்லைகளையும் தாண்டியிருக்கிறது. துக்ளக்  23.10.2013 இதழின் ’கட்டுப்பாடு தேவை’ என்ற தலையங்கம் இந்த பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம். வாசகர்களின்  பார்வைக்கு அதன் முக்கியமான பகுதியை கீழே கொடுக்கிறோம்.

சோ
சோ

        ”…… இந்த சம்பவம் பற்றிய செய்தி வந்த அடுத்த இரண்டு நாட்களிலேயே, வேறு இரு கல்லூரிகளின் மாணவர்கள், கத்தி வீச்சுடன் சண்டையிட்டுக் கொண்ட செய்தி வெளியாகியது. இம்மாதிரி பல நிகழ்ச்சிகளில்ஈவ்டீசிங்கும் ஆரம்ப நிகழ்ச்சியாக இடம் பெறுகிறது. ஆசிரியர்களாலோ, பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகத்தாலோ மாணவர்கள் கண்டிக்கப்படுவது என்பதே ஒரு குற்றம்என்பது போன்ற சூழ்நிலை தோன்றி விட்டது தான், இந்த மாதிரி அராஜகங்களுக்கு அடிப்படைக் காரணம். ஒரு மாணவனை ஆசிரியர் கண்டித்தால், அது ஒரு பெரிய விவகாரமாகி விடுகிறது. சஸ்பென்ஷன் போன்ற நடவடிக்கைகள் வந்தால், அவை மனிதாபிமானமற்ற செயல்களாகி விடுகின்றன.

        ”இவ்வளவு தூரம் போவானேன்? உடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர முயற்சிகிற கல்லூரிகளும், அவற்றின் நிர்வாகிகளும் சர்வாதிகாரிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். தீவரவாதிக்கு அடுத்தபடியாக, மனித உரிமையாளர்களால் நேசிக்கப்படுகிறவர்கள் மாணவர்கள் தான். தவறு செய்வதும், ஆசிரியர்களை மதிக்காமல் நடப்பதும், கத்தி கபடா அரிவாள் போன்றவற்றுடன் கல்லூரிக்கு வருவதும்மனித உரிமையாளர்களின் அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளாக்கப்பட்டிருக்கின்றன.

        ”எந்த பருவத்தில் கட்டுப்பாடு போதிக்கப்பட வேண்டுமோ அந்த வயதில் தான்தோன்றித்தனம் வளர அனுமதிக்கப்படுவதில், இந்த மனித உரிமைக் கூட்டமும், மீடியாவும், சினிமாவும் பெரும் பங்கு வகிக்கின்றன.

        ”’ஜீரோ டாலரன்ஸ்என்கிறசிறு தவறையும் அனுமதிக்காத கண்டிப்புபள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கடைபிடிக்கப்பட வேண்டும். அதை எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்கும் போக்கை மனித உரிமையாளர்களும் மீடியாவினரும் கைவிட வேண்டும்.

ஜேப்பியார்
ஜேப்பியார்

        ”மற்ற பல நாடுகளிலும் இருக்கிறடிஸிப்ளின்நம் நாட்டில் இல்லை; அதிலும் குறிப்பாக இளைஞர்களிடம் டிஸிப்ளின் என்று பேசுவதே பெரும் குற்றமாக இருக்கிறது. தெருக்களில், மாணவர்கள் இரு சக்கர வாகனத்தைக் கண்மூடித்தனமாக ஓட்டிச் செல்கிற வெறித்தனம் ஒன்றே போதும்இன்றைய மாணவர்கள் சட்டத்தை மதிப்பதையே அவமானமாக நினைக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு.

        ”தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சிக்குப் பிறகாவது, சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும். மாணவர்களை மிலிட்டரி டிஸிப்ளின் என்ற அளவிலான கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடக்க வைப்பது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கடமை. அதை எதிர்க்காமல் இருப்பது, சமூகத்தின் பொறுப்பு.இது மாணவர்களைச் சிறையில் அடைப்பது போலாகி விடும்என்று சொல்லக் கூடிய மனித உரிமையாளர்கள் இருப்பார்கள். அப்படியே இருக்கட்டும்; இல்லாவிடில்இன்றைய மாணவர்கள் நாளைய சிறைக் கைதிகள்’ –என்ற நிலை தோன்றிவிடும். அதைத் தவிர்ப்போமாக.”

இந்த தலையங்கம் பொது சமூகத்திற்கு வைக்கும் வேண்டுகோளையும் அதற்கு அடிப்படையாக சோ சுட்டிக்காட்டும் மாணவர்களின் மிகப்பெரிய தவறுகள்  (சோவின் கூற்றுப்படி பார்த்தால் கூட இவை குற்றங்களல்ல; மாறாக தவறுகளே) என்ன என்பதையும் அவற்றிற்கு இன்றைய தனியார் சுய நிதிக்கல்லூரி நிர்வாகங்களும், அவற்றின் கைக்கூலிகளான பேராசிரியர்களும் வழங்கும் தண்டனைகளையும், இம்மாதிரியான தண்டனைகள் மாணவர்களுக்கு அளிக்கப்படுவது குறித்து மனித உரிமையாளர்களும் மீடியாவும், பொது சமூகமும், அரசும் இதுவரை ஆற்றியுள்ள எதிர்வினைகளும் என்ன என்பதை நாம் விரிவாகப் பார்த்தால் தான், சோ இனி நடைமுறைப்படுத்த அறைகூவல் விடுக்கும் ‘ஜீரோ டாலரன்ஸ்’ மற்றும் ’மிலிட்டரி டிஸிப்ளின்’ போன்றவற்றின் பயங்கரமும் இந்த அறைகூவலுக்கு பின்னாலிருக்கும் வர்க்க நலனையும் புரிந்துகொள்ள முடியும்.

எண் சுயநிதிக்கல்லூரி மாணவர்கள் செய்யும் குற்றங்கள் தற்போது வழங்கப்படும் தண்டனைகள்
1 செருப்பு அணிவது, டக் – இன் பண்ணாமலிருப்பது, ஐடி கார்ட் அணியாமல் இருப்பது, தாடி மழிக்காமல் (முஸ்லீம் மாணவர்களாக இருந்தாலும்), முடி வெட்டாமல் வருவது,மாணவிகள் செருப்பு அணிவது, கட் ஷூவில் மாடல்களை அணிவது, முட்டு வரையான/ முட்டுக்கு மேலெ சுடிதார் போடுவது, கையில்லாத, பின்னால் கட்டும் சுடிதார் அணிவது, துப்பட்டா இரண்டு பக்கமும் பின் போடாமல் வருவது, அம்ப்ரல்லா மாடல் சுடிதார் அணிவது,நண்பர்களின் பிறந்தநாளுக்கு மாணவர்கள் கேக் வாங்கி வருவது முதல் வார்னிங் – அடி, கிள்ளு, கெட்ட வார்த்தையால் அர்ச்சனை, மேற்கொண்டும் தண்டனை கொடுப்பவருக்கு கோபம் தீரவில்லையென்றால் கேட்டுக்கு வெளியே மாணவன் நாள் முழுவதும் நிற்க வேண்டும்,  வருகைப் பதிவு இல்லை, வகுப்புகளை கவனிக்க அனுமதிக்கப்பட மாட்டார்.இரண்டாவது வார்னிங் – 200-500 ரூபாய் தண்டம், ஐடி கார்டு பறிக்கப்படும்மூன்றாவது வார்னிங் – இடைநீக்கம், பெற்றோர்கள் நேரடியாக வந்து மேலும் இப்படி நடக்காது என்று உறுதியளிக்க வேண்டும்
2 5 நிமிடம் கல்லூரிக்கு லேட்டாக வருவது கல்லூரிக்கு உள்ளே அனுமதிக்கப்படமாட்டார். இப்படி தொடர்ச்சியாக நடந்தால் அம்மாணவன் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டு தேர்வு எழுதவிடாமல் செய்வது, செமஸ்டர் ரிப்பீட், பொது இடத்தில் அவமானப்படுத்துதல்.
3 வகுப்புக்கு வெளியே வகுப்பு நேரத்தில் சென்றால் (சொந்த வேலையாகவோ, கல்லூரி வேலையாகவோ) பொறுக்கி, புறம்போக்கு, எங்கே பொறுக்கிட்டு வற… போன்ற அர்ச்சனைகள், ஐடி கார்டு புடுங்குதல், உதை கிள்ளு…
4 தினம் காலை முதல் வகுப்பில் நடத்தப்படும் தேர்வு, யூனிட் டெஸ்ட், சைக்கிள் டெஸ்ட், மாடல் தேர்வில் தோல்வியடைந்தால் கெட்ட வார்த்தையால் அர்ச்சனை, மீண்டும் ஜெயிப்பது வரை தேர்வு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.பெற்றோர்கள் நேரில் வரவழைக்கப்படுவார்கள்அபராதம் கட்ட வேண்டும். பெரும்பான்மையான நேரத்தில் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை.
5 அடுத்த வருடத்திற்கான அனைத்து கட்டணங்களையும் (விடுதி, பஸ் மற்றும் டியூஷன் கட்டணம் உட்பட) இந்த ஆண்டிறுதிக்குள் கட்டாமல் இருந்தால் 1. ஐந்து நாட்கள் வரை நாளொன்றுக்கு ரூ. 200 அபராதம்2. ஐந்து நாட்களுக்கு மேல் ரூ. 5000 அபராதம்3. ஹால் டிக்கட்டை வழங்காமல் இருப்பதோடு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்4. கட்டணத்தைக் கட்டிய பின்னரும் அபராதம் அல்லது மீதி பணம் கட்ட வேண்டியிருந்தால் ஹால் டிக்கட் வழங்கப்படாது. தேர்வு எழுதுவதற்கு 5 நிமிடம் முன் வரை நாயைப் போன்று ஒவ்வொரு இடமாக அலைக்கழிக்கப்படுவார்.பெற்றோர்கள் போன் மூலம் கேட்டுக் கொண்டால் மாணவர்கள் இன்னும் கடுமையாக பிற மாணவர்கள் முன் அவமதிக்கப்படுவார்கள். இந்த பீதியில் பல மாணவர்கள் தேர்வை ஒழுங்காக எழுதமுடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
6 கல்லூரி வளாகத்துக்குள் ஆண் பெண் பேசிக்கொண்டால் (அண்ணன், தங்கையாக இருந்தால் கூட) 1. கேமரா மூலம் அனைத்து வகுப்புகளும் எல்லா நேரமும் கண்காணிக்கப்படுகிறது2. பலர் முன் கெட்ட வார்த்தையால் திட்டி அவமானப்படுத்துதல்3. அடித்தல், ஐடி கார்டை பறித்து வைத்துகொண்டு பெற்றோர்களிடம் புகார் கொடுத்தல்4. ரூ. 10,000 வரை அபராதம்
7 இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை எடுத்தால் ஒவ்வொரு நாளைக்கும் ரூ. 200 – 500 அபராதம்.நாள் முழுக்க கேட்டிற்கு வெளியே நிற்க வேண்டும்
8 மூன்று நான்கு நாள் பண்டிகைக்கால விடுமுறைக்குப் பின் அடுத்த வேலை நாளில் லேட்டாக வந்தாலோ, வராமலிருந்தாலோ ரூ. 1000 அபராதம், வகுப்பிற்குள் அன்றைய நாள் முழுக்க அனுமதிக்கப்பட மாட்டார்
9 மொபைல் ஃபோன் வைத்திருந்தால் (அணைத்து வைத்திருந்தால் கூட) 4 – 10 நாட்கள் இடைநீக்கம், பெற்றோர்களை அழைத்து வர வேண்டும், அபராதம் ரூ 1000 த்திலிருந்து, போண் திருப்பிக்கொடுக்க மாட்டார்கள்
10 கல்லூரி நிர்வாகம் வழங்கும் மேற்படி தண்டனைகளால் (வகுப்புக்குள் அனுமதிக்காமல் இருப்பது, இடைநீக்கம்) ஏற்படும் வருகை குறைவுக்கு (attendance shortage) 1. செமெஸ்டர் தேர்வு எழுத ரூ. 2000 – ரூ 5000 அபராதம்2. அந்த ஆண்டை மீண்டும் படிக்க வேண்டும் (repeat semester)
11 மாணவர்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன சண்டைகள்காதல் வயப்பட்ட மாணவன் மாணவியிடம் காதலை வெளிப்படுத்த முயற்சித்தல் 1. அடி, உதை, அவமானப்படுத்துதல், பெற்றோர்களை வரவழைத்து அவமானப்படுத்துதல் பின்னர் கல்லூரியிலிருந்து இரு தரப்பு மாணவர்களும் வெளியேற்றப் படுவார்கள்.2. மாணவன் ஈவ்-டீசிங் பண்ணினான் என்று பொய்க்குற்றஞ்சாட்டி கல்லூரியிலிருந்து வெளியேற்றுதல்
12 பஸ், மெஸ், ஆசிரியர்கள் அல்லது கல்லூரி நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகளுக்கு/ நிர்வாகத்துக்கு எதிராக கூட்டமாக வெளியே வந்து அமைதியாக நின்றால் (கோஷம் போடவோ அல்லது எதிர்த்து பேசவேண்டியதோ இல்லை) 1.நிர்வாகத்தின் குண்டா படைகளான பேராசிரியர்களாலும், பிற தொழில்முறை குண்டாக்களாலும் தாக்கி விரட்டியடிக்கப்படுவார்கள்2. போலீஸ் வரவழைக்கப்பட்டு அடித்து விரட்டப்படுவார்கள்3. இரண்டு பேருக்கு மேல் கூடிப்பேசினால விரட்டியடிக்கப்படுவார்கள்4. முன்னணியிலிருந்த மாணவர்களை அடையாளம் காட்டச் சொல்லி பிற மாணவர்கள் மிரட்டப்படுவார்கள். காட்டிக் கொடுக்கவில்லையென்றால் இம்மாணவர்களும் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்படுவார்5. முன்னணியிலிருந்த மாணவர்களை அடித்து, சட்டையைக் கிழித்து இடைநீக்கம் செய்வார்கள்

6. பல கல்லூரிகளில் இப்படி இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் பின்னர் விசாரணைக்குப்பின் வெளியேற்றப்படுவார்கள் அல்லது பெற்றோர்களை மிரட்டி பல பத்தாயிரங்களை அபராதமாக செலுத்த நிர்பந்திப்பார்கள்

13 வெளியேற்றப்பட்டாலோ அல்லது தானாக வெளியேறி வேறு கல்லூரி அல்லது படிப்பிற்கு சென்றால் நான்கு ஆண்டுக்கான மொத்த கல்லூரிக் கட்டணத்தை (விடுதி, பஸ் உட்பட) செலுத்த வேண்டும்.No dues வழங்க 6 மாதங்கள் இழுத்தடித்தல்சர்டிபிக்கட் வழங்காமல் இழுத்தடித்தல்இப்படி இழுத்தடிப்பது மூலம் மாணவனை உளவியல் ரீதியாக சிதைப்பதுடிசி யில் மாணவனின் நடத்தையை மோசமாக எழுதுவது.

அந்த மாணவன் பின் எந்த கல்லூரிக்கும் சென்றுபடிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படுத்துதல்

எஸ்.ஆர்.எம். பச்சமுத்து
எஸ்.ஆர்.எம். பச்சமுத்து

மேலே பட்டியலிடப்பட்ட மாணவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் எல்லா கல்லூரிகளாலும் ஒருமித்த கருத்துடன் ‘குற்றங்கள்’ எனத் தீர்மானிக்கப்பட்டவை. அவற்றிற்கான தண்டனைகளை அனைத்து கல்லூரிகளிலும் சிற்சில வேறுபாடுகளுடன் (அதாவது முன்னப்பின்ன) அமுல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே சோவும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும் கூறுவது போல ”உடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர முயற்சிக்கிற கல்லூரிகளுக்கும் நிர்வாகிகளுக்கும்” மாணவர்களுக்கு ஒழுக்க விழுமியங்களை கற்றுக் கொடுப்பது நோக்கமல்ல; மாறாக மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒழுக்கம் என்ற பெயரில் பகற் கொள்ளையடித்து தன் கல்லாவை நிரப்புவது தான் என்பது தெள்ளத் தெளிவு.

இத்தகைய தண்டனைகளால் மாணவன் ஒழுக்கமாக நடக்க வேண்டும் என்பதை விட தன் கல்லா நிரம்புவதையே குறிக்கோளாகக் கொண்ட கல்லூரி நிர்வாகம், இந்த தண்டனைகளை மாணவர்களும் பெற்றோர்களும் எவ்வித கேள்வியோ ஆட்சேபணையோ இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. மீறி மாணவன் தன் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்ல விழைந்தால், மிக மோசமான பின்விளைவுகளை அவன் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஏ சி சண்முகம்
ஏ சி சண்முகம்

இந்த விளைவுகள் உடல்ரீதியான தாக்குதலிலிருந்து கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு எதிர்காலம் சீரழிக்கப்படுவது வரை எந்த அலைவரிசையில் வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தகைய பின்விளைவுகளின் பயங்கரத்துக்கு பயந்து பெற்றோர்களும் கடனை வாங்கியாவது கல்லூரி முதலாளிகளுக்கு தண்டம் அழுகிறார்கள். எல்லா கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையின் போதே பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகள் எந்த மாணவர் இயக்கத்திலும் ஈடுபட மாட்டார்கள்; மீறினால் வெளியேற்றப்படுவார்கள் என எழுத்துபூர்வமாக உறுதி வாங்குகிறார்கள். எந்த பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் இயக்கங்கள் செயல்படுவதில்லை என்பதால் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனுபவிக்கும் கொடூரமான சித்ரவதைகள் வெளியுலகத்திற்கு தெரிவதேயில்லை.

அதனாலேயே பள்ளி மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் வெளிச்சம் கண்ட அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கல்லூரி மாணவர்களின் அவல வாழ்க்கை மனித உரிமை ஆர்வலர்களின் பார்வைக்கோ, ஊடகங்களின் பார்வைக்கோ வந்ததில்லை. இந்த சித்திரவதைகளின் கொடுமை தாங்காமல் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போதும் கூட, எஸ்.எம்.கே. போம்ரா கல்லூரி மாணவி அனித்ரா தற்கொலை  போன்ற ஒரு சில மட்டுமே வெளியுலகத்திற்கு தெரியவருகிறது.

வி.ஐ.டி விஸ்வநாதன்
வி.ஐ.டி விஸ்வநாதன்

ஒரு பேராசிரியரைக் கொலை செய்ததற்காக அம்மூன்று மாணவர்களும் இன்றைக்கு களி தின்கிறார்கள்; ஆனால் பல நூறு மாணவர்களை தற்கொலையை நோக்கி தள்ளிய எந்த கல்வி முதலாளியோ பேராசிரியரோ இதுவரை சட்டத்தின் சட்டகத்திற்குள் கொண்டுவரப்பட்டதில்லை என்ற உண்மை இன்றைய ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. “மாமியார் உடைச்சா மண்சட்டி மருமக உடைச்சா பொன்சட்டி.”

தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் கட்டணக்கொள்ளையை தடுத்து நிறுத்த வக்கற்ற அண்ணாப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் தான், இத்தகைய கல்லூரிகளின் மானுட விரோத சமூக விரோத நடவடிக்கைளுக்கு நேராக கண்களை இறுக மூடிக்கொண்டிருக்கின்றன. இதுபோன்று பாதிக்கப்பட்ட மௌண்ட் சியோன் பொறியியல் கல்லூரி மாணவி செல்ல காயத்திரிக்கு மதுரை உயர்நீதி மன்றம் வழங்கிய நீதியின் இலட்சணத்தைப் பார்த்தால்  ஒவ்வொரு மாணவனும் இப்படி நீதிமன்ற வாசலைத் தட்டுவதை விட இன்ஃபன்ட் ஜீஸஸ் மாணவர்களைப் போல கொலைகாரர்களாக மாறுவதில் உள்ள நியாயம் நமக்குப்புரியும்.

“However, Mr.N.Balakrishnan, the learned counsel appearing for the fourth respondent contended that if the student leaves a course in the midstream, he would be entitled to the return of the Certificates, only after paying the tuition fee for the remaining incomplete period of the course.  The learned counsel also contended that if a student leaves a College in the midstream, the seat goes waste and that the fixation of fee for every student is actually based upon the cost worked out before the Fee Fixation Committee. Once the particular fee is fixed for a particular academic year, the students admitted in that academic year are obliged to pay the same fee, till the end of the course every year.  Similarly, there is an obligation casts upon the College to charge only those fees.  In such circumstances, it is implicit that the students like the petitioner’s daughter will have to pay the fees for the rest of the course of study for collecting the Certificates. I would not venture to get into that controversy, namely, whether the College is entitled to collect the balance of fees or not.  The main grievance of the petitioner is about the Certificates of her daughter. Those Certificates are not like fixed deposit receipt on which, banks claim a general lean in terms of Section 171 of the Contract Act. Therefore, the Certificates cannot be retained at any rate. Hence, this writ petition is allowed directing the fourth respondent to return all the original Certificates deposited by the petitioner forthwith. No costs.”

இதுதான் மேற்குறிப்பிட்ட தீர்ப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்கப்பகுதி.

எஸ்.ஏ.ராஜா
எஸ்.ஏ.ராஜா

ஒரு பக்கம் கல்வி என்பது வியாபாரமாக்கப்பட்டு, மாணவர் சமூகமும் அவர்களின் பெற்றோர்களான பொதுமக்களும் இக்கல்வி முதலாளிகளால் பொருளாதார ரீதியாக வரைமுறையின்றி சுரண்டப்பட்டு, உளவியல் ரீதியாக காயடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அப்பட்டமான பயங்கவாதத்திற்கெதிராக எவ்விதத்திலும் (சட்ட ரீதியாகவோ, ஜனநாயகரீதியாகவோ) போராட முடியாமல் முட்டுச்சந்தியில் திணறிக் கொண்டிருக்கிறது இந்த பொது சமூகம். ஆனால் இதே கல்வி முதலாளிகள் தங்களை வள்ளல்களாகவும், புரவலர்களாகவும் முன்னிறுத்தும் போது இவர்களின் அல்லக்கைகளும் அடிமைகளுமான பேராசிரியர்களோ கல்விக்கண் திறக்கும் குருவாக தங்களை உருவகம் செய்து கொள்கிறார்கள். மாணவர்களும் தங்களை அத்தகையதொரு புனிதத்தோடு மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

குறிப்பாகக் கூறினால் ”நான் உன்னை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒட்டச் சுரண்டி காயடித்து அடிமையாக்குவேன். ஆனால் நீ எனக்கு எப்போதும் உரிய மரியாதை அளித்து, என்னை உனக்கு எஜமானனாகவும் குருவாகவும் அங்கீகரித்து எவ்விதக் கேள்விக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக் கொண்டு எனக்கு வர வேண்டியதைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ உயிர் வாழ முடியாது” என்பது தான். கார்ப்பரேட் பார்ப்பான் துக்ளக் ராமசாமியும் இந்த கல்விவள்ளல்களும் ஒன்றுசேரும் இடமும் இது தான்.

தனியார்மயம், தாராளமயம் போன்ற ஏகாதிபத்திய பயங்கரவாதத்திற்கு பெரும்பான்மையான உழைக்கும் மக்களும், மாணவர்களும், விவசாயிகளும், எல்லா தரப்பு மக்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். செத்த பிணத்தை உறிஞ்சி வாழும் சாறுண்ணிகளைப் போன்று ஏழைகளின் நிணத்தையும் வியர்வையும் உறிஞ்சி வாழ்கிற இக்கூட்டம் கூச்ச நாச்சமின்றி தனக்கான சமூக அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் சுரண்டப்படும் வர்க்கங்களே முன்வந்து மனமுவந்து கொடுக்க வேண்டும் என்கிறது; மீறினால் மிரட்டி, சட்டம் போட்டு நிலை நாட்ட முனைகிறது.

எ.வ. வேலு
எ.வ. வேலு

சமூக அந்தஸ்து, அங்கீகாரம் போன்றவைகளின் பொருளாதார, சமூக அடித்தளத்தை இந்த சாறுண்ணிக் கும்பலே அடித்து உடைத்து விட்டு ”எனக்கும் வேணும் மண்டகப்படி” என்று சொன்னால் தினம் தினம் தான் சுரண்டப்படுவதைக் கண்கூடாகப் பார்க்கும் மக்களும் மாணவர்களும் எப்படி அதை ஏற்றுக் கொள்வார்கள். அதனால் தான் மாணவன் கேட்கிறான் “நான் காசு கொடுக்கிறேன். நீ அந்த காச வாங்கி நக்கிக்கிட்டு பேசாம இருக்க வேண்டியது தானே. நான் என்ன செய்யணும், எப்பிடி நடக்கணும் என்கிறத தீர்மானிக்க நீ யாரு?’. இந்த நியாயமான கோபத்தை ஜனநாயக முறைகளில் வெளிப்படுத்த வழியற்ற மாணவர் சமூகம் தான் இன்றைக்கு கொலை, தற்கொலை போன்ற தனிநபர் தீர்வை நோக்கி தவிர்க்கமுடியாமல் போயிருக்கிறது; இன்னும் சரியாகச் சொன்னால் இந்த தீர்வை நோக்கி இவர்கள் தள்ளிவிடப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கு தார்மீகமான பொறுப்பை ஏற்கவேண்டிய இந்த பயங்கரவாதக் கும்பலோ ”’ஜீரோ டாலரன்ஸ்’ என்கிற ‘சிறு தவறையும் அனுமதிக்காத கண்டிப்பு’, மிலிட்டரி டிஸிப்ளின் போன்ற கொடூர வன்முறையையும் அடக்குமுறைகளையும் மேலும் மாணவர்களிடம் அமுல்படுத்த துணிகிறது. அம்மா தயவில் அதுவும் கூட நடக்கலாம்.

மாணவர்கள் சட்டத்தை மதிக்காமல் ‘ஈவ் டீசிங், அதிவிரைவாக இருசக்கர வாகனம் ஓட்டுதல்” போன்ற சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டி “மிலிட்டிரி டிஸிப்பிளினையும்”, “ஜீரோ டாலரன்ஸையும்” போன்ற கொடூர தண்டனைகளை அமுல்படுத்த அச்சாரமிடுகிறார் சோ. கூடங்குளம், கல்வி தனியார்மயத்திற்கெதிரான மாணவர் போராட்டம், ஈழப்பிரச்சனை, மூவர் தூக்கு போன்ற மக்கள் போராட்டங்களின் போதும் கூட சட்டத்தை மதிக்காமல் போராடுவதை வன்மையாக கண்டித்து தலையங்கம் தீட்டியது துக்ளக். ஆனால் டான்ஸி வழக்கு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் வன்முறை, வேளச்சேரி என்கவுண்டர், அப்ஸல் குரு தூக்கு, இஸ்ரத் ஜகான் போலி மோதல் கொலை போன்ற சட்ட விரோத அரச மற்றும் இந்துத்துவ பயங்கரவாதங்களை நியாயப்படுத்தி தலையங்கங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது. சோவைப் பொறுத்தவரை சட்டம் என்பது வெகு மக்களுக்கானது; அவர்களை ஒட்டச் சுரண்டும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டாமல் இருக்க உபயோகிக்கப்படுத்த வேண்டிய ஆயுதம்.

மாணவர்களை ஒட்டச் சுரண்டுவது கல்வி முதலாளிகளின் நோக்கமென்றால் அவர்களை அரசியல் ரீதியாக வளர விடாமல் காயடிப்பது ஆளும் வர்க்கத்தின் நோக்கம். அதைத்தான் பயங்கரவாதி சோ வெளிப்படையாக பேசி எழுதி வருகிறார். இன்றைக்கு ஒரு கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக எழுந்துள்ள மாணவர்கள் நாளையே இந்த அநீதியான சமூகத்திற்கும் எதிராகவும் அரசியல் ரீதியாக எழுவார்கள். அப்போது சோ உள்ளிட்ட ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அவர்களும் “ஜீரோ டாலரன்ஸ்” முறையைத்தான் கடைபிடிப்பார்கள்.

– ராஜன்.

  1. சமூகத்தை நல்வழிபடுத்த வேண்டிய பொறுப்பும் அதற்காக போரடவேண்டியதும் அனைவருக்கும் பொதுவே. கல்லூரிகளின் சட்டமீறல்களும் பொருளாதார சுரண்டல்களும் ஒழிக்கபடவேண்டியதே. அதற்காக மாணவர்களை நன்னெரிபடுத்தும் கட்டுபாடுகள் தேவையில்லை அல்லது தவறு என்பது சமுதாயத்தை பற்றிய அறிவின்மை அல்லது அக்கறையின்மை மட்டுமே. வினவின் விபரிதபோக்குக்கு இப்பதிவு மேலும் ஒரு சான்று .

      • From: https://www.vinavu.com/2010/05/05/exam-vinavu/

        “…மாணவர்களைப் பொறுத்தவரை இந்த மொக்கைப் பாடத்திட்டங்களை ஓரிரு மாதங்களுக்கு படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் என்பதை உணரவேண்டும். எங்களைக் கேட்டால் மாணவர்களின் வாழ்க்கையில் அரசியல் செயல்பாடுகள் கலந்தால் இந்த காப்பி அடிக்கும் பிரச்சினை மட்டுமல்ல, விடலைப் பருவ பிரச்சினைகள் கூட தீரும் என்று கருதுகிறோம்.

        “என்னது மாணவர்களுக்கு அரசியலா” என்பவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களை சந்தித்து தெளிவடையலாம்….”

    • //மாணவர்களை நன்னெரிபடுத்தும் கட்டுபாடுகள் //

      சிவாஜி ஐயா…வினவு பட்டியலிட்டுள்ள கட்டுப்பாடுகள் எவ்வாறு மாணவர்களை நன்னெறிப்படுத்தும் என்று தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்!! அந்த பட்டியிலுள்ளவற்றுள் கிட்டத்தட்ட அனைத்திலுமே 200-300 அபராதம், அனைவரின் முன் அசிங்கப்படுத்துவது/அவமானப்படுத்துவது, போன்ற இவை மாணவர்களை நன்னெறிப்படுத்துமா அல்லது அவர்கள் செய்த தவறின் மூல காரணம் என்ன என்று கண்டறிந்து அதற்கான நல்வழிப்படுத்தும் நேர்மறையான அறிவுரைகள்/கவுன்சிலிங் ஆகியவை மாணவர்களை நன்னெறிப்படுத்துமா?? நான் உலகின் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்…எந்தவொரு நாட்டிலும் இப்படிப்பட்ட கேவலமான ‘நன்னெறிப்படுத்தும்’ முறையை கண்டதுமில்லை கேட்டதுமில்லை!!

  2. வினவு எனக்கு ஒரு டவுட்டு… நீர் போட்ட கல்வி வள்ளல்கள் படத்தில ஒரு பார்ப்பனர் பட்ம் கூட இல்லையே.. அது ஏன் வினவு… நீரோ பார்ப்பான் பார்ப்பான்னு குத்தந்சொல்லக்கூடிய இயல்பு உள்ளவர்,. ஆனா என்ன ஒரு நகைமுரண் பார்த்தீரா..?

    • ஆக சந்துரு அண்ணாச்சிக்கு இந்தப்பதிவில் பிரச்சினை இல்லை…..குசும்புக்காக கேள்வி கேத வேண்டுமென்பதுதான் அவர் சொல்லும் சேதி…….

      • கருப்பண்ணே.. ஏன் கடுப்பண்ணே.. நான் சொல்றது 100 க்கு 100 உண்மையண்ணே.. என் கேள்விக்கு பதில் சொல்றது தர்ம சங்கடம்ணே…அதான் கேக்கறேண்ணே…

    • ,வேலூர் விஸ்வனாதன்,கல்விக்கடவுள் ஜேப்பியார்,பச்சமுத்து எல்லோரையும் தூக்கிசாப்பிடும் அளவில் த்ஞசையில் கல்வி கொள்ளைநடத்தி வரும் ஒரு பார்ப்பனர் உள்ளார்.சாஸ்த்ரநிகர் நிலை பல்கொலை கழகத்தை நடத்தி வருபவர் சேதுராமன் ,சாதாரண வங்கி காசாளராக இருந்த இவர் இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி,டெல்லி த்லைமை செயலகம் ,உச்சநீதி மன்றம் ,என்று எல்லா இடங்களிளும் இவருக்கு செல்வாக்கு உண்டு .சட்டக் கல்வியை தனியார் கல்விநிறுவனங்களுக்கு தரக்கூடாது எனும்நிலை வந்தபோது அதை பணத்தால் உடைத்து தற்போது பி.எல் வியாபாரமும் செய்து வருகிரார். நார்த் இண்டியன் ,என் ஆர்.ஐ கோட்டா என்று நல்ல வசூல்.ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் அமெரிக்க டாலராக பதுக்கிவருகிறார்.

      • SASTRA is a good college and so is SRM/VIT/Satyabhama.

        Nothing wrong with what CHO says,many kids need to be slapped by their father/brother tightly failing which they ruin their lives and also of their friends.

        • Hello Mr. Hari (Subramaniyam),
          உட்கார்ந்த இடத்திலிருந்து எதையும் அள்ளி விட்டுக் கொண்டிருக்காதீர்கள். சாஸ்த்ரா மற்றும் எஸ்.ஆர். எம் கல்லூரிகளில் எந்த அளவிற்கு போதைப் பொருள் புழக்கத்தில் இருக்கிறது என்பதும், மாணவர்களுக்குள் அடிக்கடி மோதல் நடப்பதும் (வட மாநிலம் – தென் மாநிலம்) அங்கு யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். 80 களின் கடைசி வருடங்களில் சிறு கீற்றுக் கொட்டகையில் ஆரம்பித்த கல்லூரி இன்று எப்படி இருக்கிறது என்பது நான் பார்த்தது தான்.

          • I have cousins from both colleges and they are not drug users,whereas my friends from crescent might be doing all that.

            and you can call me harikumar,dont imagine things you dont have to.

            I dont know how old you are but silly things like north vs south TN is not the responsibility of the college,i dont even see Biharis and UP guys fighting like this wherever i studied.

            • பெயரில் உள்ள உண்மையைச் சொன்னால் (உண்மையைச் சொன்னால்) எவ்வளவு கோபம் வருகிறது. அப்புறம் இப்போ போய் பாருங்க சார். அப்புறம் ஒரு நிகழ்வு உங்களுக்குத் தெரியுமா? சங்காராச்சாரி வந்து அருள் புரிந்த சாஸ்த்ராவின் அருகில் தமிழக அரசு திறந்த வெளி சிறை அமைத்ததும் அதற்காக இவர் புரண்டு (பெட்டி பெட்டியாய் கொட்டிக் கொடுத்தது) புலம்பியது தெரியுமா?
              உமது சொந்தங்கள் உம்மிடம் வந்து தாங்கள் போதை பொருள் உபயோகிக்கவில்லை என்று சொன்னால் அதை உண்மை என்று நீங்கள் நம்புவது பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் நாங்கள் கிரசண்ட் நல்ல கல்லூரி என்று இங்கு சப்பை கட்ட வரவில்லை.
              அங்கு வசூலிக்கும் தொகை பற்றியும் அறிந்து கொண்டு பேசுங்கள். எந்த அளவிற்கு கொள்ளை நடக்கிறது என்பதும் தெரியும்.
              அடுத்து சங்கரன் கால் வைத்த இடமெல்லாம் எப்படி இருக்கிறது என்று தெரிய வேண்டுமென்றால், சங்கரன் அருள் புரிந்த பிரிஸ்ட் என்ற கல்லூரியும் அருகிலேயே இருக்கிறது. அதைப் பற்றி வேண்டுமென்றாலும் சொல்கிறேன்.

      • குரு சார்.. அப்ப வினவு அதை மறைத்தது ஏன் குரு சார்..நான் கேக்கப் போகத்தான் வெளியே வருது சார்…. அத கேளுங்க சார்….

      • Idiot statement.I dont know about NRI quota. But, by brother studied and completed last year. He dont spend extea one rupee even after Govt . fees.
        Pl.dont tell lie. My brother went through entrance exam.

  3. ஒரு உயிரைக் கொலை செய்வதென்பது மறுபேச்சுக்கிடமில்லாமல் குற்றமே. ஒரு கல்விகூடத்தில் படிக்கவரும் மாணவர்கள் மட்டுமே இந்தமாதிரியான கொடும்செயல்களில் குற்றம் சாட்டப்படுபவர்கள். தண்டிக்கப்படுபவர்களும்கூட.

    குற்றம் செய்தவர்களைக்காட்டிலும் அக்குற்றத்தைச் செய்யத்தூண்டுவதுதான் பெருங்குற்றம், இந்த மாணவக்கொலையாளிகளுக்குப் பின்னால் குற்றத்தைத் தூண்டிவிட்டவர்கள் பொதுவாகவே தப்பித்துவிடுவதுதான் எல்லாக் கல்விநிறுவனங்களிலும் எந்நாளும் நடந்துகொண்டிருக்கும் ஒரு பொதுநிகழ்வு.

    இந்த நிழலுலக தாதாக்கள் வரிசையில் கல்விகற்பிக்கும் ஆசிரியர்களுக்குத்தான் முதலிடம் என்பது இதுவரை பதிவு செய்யபடாத செய்தி. இவர்களுக்கும் கல்விநிர்வாகத்துக்கும் இடையே உள்ள நேரடியாகப் பேசித்தீர்க்கமுடியாத பலபிரச்சினைகளுக்கு இப்படித்தான் காலகாலமாகத் தீர்வு காண்கிறார்கள் என்பது பலருக்குத் தெரியவாய்ப்பில்லை.

    எனக்குத்தெரிந்தவரையில் கல்லூரி வளாகத்தில் எந்தக்காலத்திலும் மாணவர்களால் ஒருதொல்லையும் வராது. அப்படி வந்தால் நேருக்குநேர் நிர்வாகத்தை எதிர்கொள்ளமுடியாத சில நேர்மையற்ற ஆசிரியர்களின் தூண்டுதலால்தான் வரும்.

    • நேர்மையற்றவர்கள் ஆசிரியர் மட்டும்தானா? பெற்றவர்கள் சரியான பாதையில் செல்கிறோமா?மற்றவர்கள்…தவறு எல்லாப் பக்கமும் இருக்கிறது பேச நேரமில்லை செயல்படவேண்டிய நேரம் இது. பாபுபகத்.

  4. எனது உறவினரின் மகனை மேலே படத்தில் உள்ள ஒருவரின் கல்லூரியில் சேர்த்தார்கள். முதல் நாளே சொன்னான். என்னை கல்லூரியில் சேர்க்கவில்லை, சிறையில் பணம் கட்டி சேர்த்துவிட்டீர்கள் என்று. நீங்கள் பட்டியிலிட்ட அனைத்தையும் அவனும் பட்டியலிட்டான்.

    ஆக கல்வி என்பதன் இன்றைய வரைமுறை அப்படிதான் இருக்கிறது. அதில் தேறி வருவது சவால்தான். அதை நம் குழந்தைகள் எதிர் கொள்கின்றனர்

    • அடுத்து என்ன செய்ய நாம்? புலம்புவது மட்டும் வாழ்க்கை அல்ல.முடிவு காணப்படாத எச்செயலும் வெற்றி பெறாது. பாபுபகத்.

  5. ஆசிரியர் என்பதற்காக இவர்களை கை எடுத்து கும்பிட வேண்டாம்.உன் மனது மதிக்கத்தகுந்த ஆசிரியரா, உன் கைகள் தாமாகவே மேல் எழும் என்ற புத்தனின் வாக்குக்கிணங்க உள்ள ஆசிரியரைக் கண்டால் மாணவசமுதாயம் கட்டாயமாக மாறும்.அர்ப்பணிப்பு உணர்வுள்ள அரசியல்வாதி தோன்றாமல் நல் ஆசிரியர்(நற்சிந்தனை உள்ள ஆசிரியர்கள் மன்னிக்கவும்) எவ்வாறு தோன்றுவர்? சிந்திக்க தெரியாத என் சகோதரா நாம் நல் வழியில் செல்லவில்லை என்றால், நாம் தவறு செய்தால் எதிர்காலம் நம்மை கேலி செய்யும்.தாமதம் செய்யாமல் ஒன்றுபடுவோம். பாபுபகத்.

  6. மாணவர்களை உங்கள் வலையில் விழ நீங்கள் நன்றாக சிந்திக்கிறீர்கள். மாணவர்கள் நல்வழியில் செல்லவேண்டும் என்று கூறுவது எதோ கொலை குற்றம் செய்ததுபோல் விமர்சனம் செய்துள்ளது வினவு. அதாவது மாணவர்கள் அனைவரும் “இஸ்லாமிய பயங்கரவாதி” போல் கொடுரமானவர்காளாக மாறவேண்டும் என்று செயல்படுகிறீர்கள். மாணவர்கள் படிப்பதற்குத்தான் கல்லூரிக்கு போகிறார்கள். வேண்டாதவர்களை கொல்வதற்காக அல்ல.
    செலவு குறைய வேண்டுமென்றால் அரசு பல கல்லூரிகளை நடத்துகிறது. அந்த கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாமே! ஏன் தனியார் கல்லூரியை தேர்ந்தெடுத்தார்கள். இது அவர்கள் செய்த தவறுதானே!! அதை விடுத்து மாணவர்கள் மேல் கருணை உள்ளது போல் நடித்து அவர்களின் வாழ்க்கையை கெடுக்கிறீர்கள்.

    • நாம் தவறாகவே சிந்திக்கப்பழகிவிட்டோம் சகோதரா நமக்கு எல்லோரையும் சந்தேகப்படமட்டுமே தெரியும்.

  7. கல்லூரி நடத்துபவன் எல்லாம் கொள்ளைக்காரன், கொலைகாரன். அதற்கு தங்கள் தந்துள்ள படங்களில் உள்ள கல்வி தந்தைகளே உதாரணம். அவர்கள் மாணவர்களிடம் கொள்ளை தான் அடிப்பார்கள். மாணவர்கள் தங்களை போல் வந்துவிடகூடாது என்று டிசிப்ளினே பற்றி பேசுகிறார்களோ என்னவோ?

    மாணவர்களை ஒருங்கிணைத்து இந்த அவலங்கள் தீர போராட சொல்லுங்கள். அதைவிடுத்து கத்தி எடுத்து அவர்களை கொலைகாரர்கள் ஆக்கிவிடாதீர்கள்.

    உதாரனத்திற்க்கு திட்டுகிறார்கள் என்றால் அவற்றை பதிவு செய்து இணையத்தில் போட சொல்லுங்கள்.

    இதை மாணவர்கள் செய்ய முடியாது என்றால் இவர்களுக்கு உதவ ஒவ்வொரு கல்லுரியுளும் ஒரு நல்ல பேராசிரியர் கூடவா இல்லை!!!

      • அய்யா, நீங்களும் நானும், சோ மாதிரி இப்படி தான் இருக்கும் என்று இரண்டும் கேட்டான் தனமாக ஒரு கட்டுரையை தராமல், அங்கு என்ன நடக்கிறது என்று அறிய முற்படுகின்றோம் அல்லவா? இது நல்ல தொடக்கம் இல்லையா?

        ஒரு தெளிவு இல்லாமல், ஒரு போராட்டத்தை எப்படி நடத்துவது? ஆகையால் தான் உண்மையை மக்கள் முன்னால் வையுங்கள், அவர்கள் போராட்டத்தை தங்கள் கையுள் எடுத்து கொள்வார்கள்.

  8. கல்லூரி மாணவர்களை விடுங்கள்!. பி.எச்.டி, எம்.பில் போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர்களின் எதிர்காலம் எப்படியெல்லாம் கெடுக்கப்படுகிறது தெரியுமா? எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் தெரியுமா? மனித உரிமை மீறல்கள் இங்கு சர்வசாதாரணம். இது குறித்து வாய் திறக்க மாட்டீர்களா?

  9. அப்பிடி மாணவர்களுக்கு இந்த மாதிரி காரியங்களில் உதவும் பேராசிரியர் ஒருவர் இருந்தால், அவர் மேலும் அந்த கல்லூரியில் தொடர முடியாது. எந்த பேராசிரியர் அதிகமாக மாணவரகளை துன்புறுத்துகிறாரோ, எந்த அளவுக்கு மாணவர்களை நிர்வாகத்திடம் காட்டிக்கொடுக்கிறாரே, அந்த அளவுக்கு அவர் கல்லூரியில் நீடிக்க முடியும். இல்லாவிட்டால், காமரா, ஒற்றர்கள் (மாணவர், பேராசிரிய, பேராசிரியரல்லாத ஒற்றர்கள்) மூலம் நிர்வாகத்திடம் ஆன் ஸ்பாட் போட்டு கொடுக்கப்பட்டு காலி செய்யப்படுவர். அப்படி நிலைமை இருக்கையில் எந்த பேராசிரியர் தன் வாழ்க்கையை பணயம் வைத்து மாணவருக்கு உதவ முன்வருவார்? ஏனேன்றால், மேலே பட்டியலிடப்பட்ட தண்டனைகள் நாணயத்தின் ஒரு பக்கம் தான். மறுபக்கத்தில் ஆசிரியர்களும் பிற அலுவலக ஊழியர்களும் தங்கள் ஒரே சொத்தான சான்றிதழ்களைக் கொடுத்துவிட்டு இந்த பயங்கரவாதிகளிடம் படும் பாட்டை விவரிக்க ஒரு கட்டுரை போதாது.

    • ஆதங்கப்படும் எல்லோரும் சேர்ந்து முடிவை எட்டாத வரை நீதி கிடைக்கப்போவதில்லை மாணவசமுதாயம் சீரழிந்தால் ஒட்டுமொத்தசமூகமமும் ஓர் நாள் அழியும் அவர்களைக் காக்க “வினவு” போன்ற்வர்களுடன் நாமும் இணைந்தால்தான் முடியும்.

  10. தோழர்களே,

    மாணவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்காக அவர்களை கடுமையாக தண்டிப்பது சரி அல்ல. குறிப்பாக மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்குவது, சான்றிதழ்களை தராமல் இருப்பது ஆகியவை அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும்.

    அதே நேரம் மாணவர்கள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்வது அவர்களுக்கே மிகவும் நல்லது. 5 நிமிடம் தாமதமாக ஏன் வர வேண்டும். ஏன் 10 நிமிடம் முன்பாக வரக் கூடாது? கல்லூரியில் தாமதமாக வந்து பழக்கப்பட்டு பின்பும் அதே தாமதம் தொடர்கிறது. பி.இ படித்து விட்டு புதிதாக வேலைக்கு வருகிறார்கள் , தினமும் தாமதமாக வேலைக்கு வருகிறார்கள். தொழிலாள தோழர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இந்த வேலை செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டிய பொறியாளர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால் வேலை எப்படி நடக்கும்? தொழிலாளிக்கு இன்சென்டிவ் எப்படி கிடைக்கும்?5 நிமிடம் அல்ல, 20 நிமிடம் தாமதமாக போகலாமே – வூருக்கு போக பல்லவன் வைகை எக்ஸ்பிரஸ் பிடிக்க போகும்போது! தாமதாமாக போனால என்ன ஆகும்?வண்டி காத்து நிற்குமா?

    அதே போல ஷூ அணியும் பழக்கத்தை உருவாக்குவது மிகவும் நல்லது, குறிப்பாக பொறியாளர்களுக்கு. நாங்கள் எல்லாம் கிராமத்து பகுதியை சேர்ந்தவர்கள், ஷூ அணியாமல் இருந்து விட்டு பணிக்கு சேர்ந்தவுடன், பழக்கம் இல்லாததால் ஷூ அணிந்து நடக்க சிரமப்பட்டோம். பணியில் இருக்கும் பொறியாளர்கள் சேப்டி ஷூ அணிவது அவர்களுக்கு மிகவும் நல்லது, அத்யாவசியமானது. ஒரு நாள் சேப்டி ஷூ இல்லாமல் போனாலே காலில் ஆணி ஏறும் அபாயம் உண்டு.
    இது போலவே மேல்சட்டையை டக் இன் செய்வதும் பாதுகாப்பிற்கு நல்லதே. கல்லூரி நாளில் கல்லூரிக்கு வராமல் வூர் சுற்றுவது, பிறகும் பணிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கும்.

    அதே நேரம் மேற்சொன்னவற்றில் தவறினால் பைன் போட்டு கல்லாவை ரொப்புவது எந்த வகையிலும் சரி அல்ல.மாணவர்கள் சிறு குறைபாடுகளை காட்டும் போது அவர்களுக்கு அன்புடன் எடுத்து சொல்ல கவுன்சிலிங் பிரிவு அமைக்கப் பட வேண்டும். ஆனால் ஹாச்டல் வார்டன்கள் சிறை வார்டன்கள் ரேஞ்சுக்கு நடந்து கொள்கிறார்கள், ஒரே அதட்டல் மிரட்டல், லத்தியை சுழற்டாத குறைதான். அப்படி ஸ்ட்ரிக்ட் ஆக நடந்து கொண்டால்தான் அவர்கள் பணியில் நீடிக்க முடியும் என்கிற நிலை.

    “மாபெரும் கல்வி வள்ளல்”களுக்கு மாணவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டியது பற்றி கவுன்சிலிங் கொடுப்பது அவசியமே. சென்னையில் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பேருந்துகளில் நடத்தும் செய்கையும் சண்டைகளும் சினிமாப் பட சண்டைக் காட்சிகளை புறந்தள்ளும் நிலையில் உள்ளது. நாம் எங்கே போகிறோம்?

    வினவு தளம் மாணவர்களை பொறுப்பும் பண்பும் உள்ளவர்களாக்க கட்டுரை தருமா, அல்லது அவர்களின் வன்முறைகளை வூக்குவிக்குமா?

    • வணக்கம் அழகியராஜன்,
      மாணவர்களை கடுமையாக தண்டிப்பதை நீங்கள் ஏற்கவில்லை.நன்றி.அதே சமயம் கால தாமதம் மாணவர்களின் சில்லறைத்தனமான சேட்டைகள் குறித்த தங்கள் கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.

      காலதாமதத்திற்கு மாணவர்கள் மட்டும் காரணமில்லை.போதிய பேருந்துகளை இயக்காத ,சாலைகளை முறையாக அமைத்து பராமரிக்காத அரசும் காலையில் எழுந்து பெற்றோருக்கு அவர்கள் தொழிலில் உதவ வேண்டிய சூழல்,கூடுதல் வாடகை கொடுக்க முடியாமல் போக்குவரத்து வசதியற்ற ரிமோட் ஏரியாவுல குடி இருப்பது என பல காரணங்கள். இவை சமூகம் சார்ந்தது.இதற்காக மாணவனை தண்டிப்பது இரக்கமற்ற செயல்.

      கல்லூரி பேருந்து தாமதமாக வந்தால் வருகை பதிவு உண்டு,பொது பேருந்தில் வரும் மாணவன் தாமதமாக வந்தால் வருகை பதிவு கிடையாது எனபது அநீதி இல்லையா.

      மாணவர்கள் சேட்டை பற்றி பேசும் முன் அவர்களை கெடுக்கும் சினிமா பற்றி யோசித்து பாருங்கள்.நடையா இது நடையா பாடல் முதல் பந்தாடும் பாப்பாக்களே என்று பெண்களை கேலி செய்து படமெடுக்கும் அந்த கழிசடைகளை அடித்து திருத்துவோம் வாருங்கள்.எரியுறத பிடிங்கினா கொதிக்கிறது தானா அடங்கும்.

  11. கல்வி வல்லல்கள் என்று பேசும் இந்த பொரிக்கிகளை அடையாளம் காட்டுது வினவு.
    புண்ணாக்கு தனமாக போடாதெ கமேண்ட்டு.

    பொறியியல் படிக்கிற மாணவர்களை இந்த பதிவுக்கு கமெண்ட் போட சொல்லி பாரு இதன் உண்மை புரியும் .
    ஏதோ பார்ப்பான் பார்ப்பானு எழுதுகிறது வினவு,என்று கேட்காதே.
    ஏன் என்று ஏடெடுத்து படித்து பார்.பிறகு புரியும் நீ ஒரு வடிகட்டிய முட்டாள் என்று.

  12. இன்றைய தேதியில் சுதந்திரம் என்னும் பெயரில் மாணவர்கள் செய்யும் அட்டகாசத்துக்கு அளவே கிடையாது.பஸ் டே அன்று அவர்கள் பொது மக்களுக்கு கொடுக்கும் தொல்லைகளும் அவர்களின் அனாகரிகக் கூத்துகளும் ….ஒரு சிறிய உதாரணம். இதை நீங்கள் எப்படி சப்பைக் கட்டு கட்டி சமாளிப்பீர்கள்?

  13. குறிப்பிட பட்ட அனைத்துமே கல்வி மற்றும் ஒழுக்கம் சார்ந்த கட்டுப்பாடுகளே.
    அபராதம் அபராதம் என்று கூப்பாடு போடுகிறோம். கல்லாவை நிறைத்தார்கள் என்று புலம்புகிறோம். ஆனால் கட்டுபாடுகளை மீறாதவரை அபராதம் கட்ட தேவையில்லை என்பதை மறந்துவிடுகிறோம்.
    நியாயமற்ற முறையில் ஒரு மாணவன் தண்டிக்கப்பட்டால் அணைத்து மாணவர்களும் பொங்குவார்கள். அப்போது அபராதம் பற்றி நினைக்க கூட மாட்டார்கள். (இது பொதுவாக தமிழர்களுக்கு அனைவருக்கும் பொருந்தும். காவிரி நீர் பிரச்சனையின் போது இரு பக்கமும் சில நியாயங்கள் இருபதால் பொறுத்தனர் ஆனால் நம்முடைய பங்கீட்டில் ஏற்கனவே ஒப்பந்தமான ஹொகெனக்கல் குடிநீர் திட்டத்தை நியாமிலாமல் எதிர்த்த போது இங்கே கொதித்து எழுந்தனர்).

    பொதுவாக பள்ளிகளில் strictஆக இருக்கும். கல்லூரிகளில் அது தளர்த்தப்படும். ஒரு பத்து வருடம் முன்பு இந்நிலைமை தான். பள்ளி போல கல்லூரிகள் நடப்பதற்கு மாணவர்களின் நடத்தையே காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. fun என்கிற கோட்டை தாண்டி குற்றம் என்கிற வட்டத்தை நெருங்கியதால் வந்த கட்டுப்பாடுகள்.

    ஏதோ அபராதம் போட்டு தான் சொத்து சேர்கின்றனர் என்றெல்லாம் சொல்லி comedy பண்ணாதீங்க. அதெல்லாம் admission போதே சம்பாதிச்சுருவாங்க.

    • Without any reason our friend has brought Cauvery issue here.Let him explain what was the justifiable reason for Karnataka to deny water to TN.A state govt is least bothered about the rulings given by Cauvery Monitoring Committee and courts and the central govt is not having guts to ask that state govt.

      • இந்தியர்களுக்கு காதில் எப்போதுமே தேசிய அழுக்கு
        அடைத்திருக்கும்!

  14. சுதந்திர இந்தியாவில்நாம் கண்டது, சந்த்ர்ப்பவாத சாக்கடை அரசியல் வளர்ச்சிதான்! இதையே சாக்காக வைத்து மத தீவிரவாதம் தலை எடுத்து விட்டது! தூண்டிவிட அன்னிய சக்திகளும், குளிர்காய சாதீய சக்திகளும் மக்களை மடையர்களாக்குகின்றன! இந்த அவலங்களை பொறுத்துக்கொண்டு இருப்பது சுயநலக்காரர்களால்தான் முடியும்!

  15. மாணவர்கள் அனைவரும் “புரட்சிகர மாணவர்கள் ” இயக்கத்தில் சேர்ந்து புரட்சி செய்யவேண்டும். அதை விடுத்து படிப்பதற்காக கல்லுரி செல்வது கண்டிக்கத்தக்கது!!!!!! பயங்கர புரட்சிகள் செய்து கண்டவர்களை எல்லாம் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்!!! காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் இதெல்லாம் சகஜம்!!! இதை விடுத்து படிக்க செல்வது கண்டனத்திற்கு உள்ளது!!!!! வாழ்க புரட்சி!!!! கல்லூரியில் சேர்ந்து “புரட்சி” செய்து அனைவரையும் கொல்வோம் வாருங்கள்!!!!!

    • எல்லோரும் வாழவேண்டும் யாராலும் ஏமாற்றப் படாமல்,நாம் வாழும் தேசம் சரியான பாதையில் செல்லவில்லை என்பது 10வயது அடைந்த அனைத்து மாணவர்கள் முதல் முதிர் பருவமடைந்த பெரியவ்ர்கள்[மனசாட்சியுடையவர்கள்]வரை யாரும் மறுக்கமுடியாத உண்மை.எவராவது துவங்கியாகவேண்டும்,அவ்வாரு துவங்கியவர்களுக்கும் புரிந்து கொள்ளாதவர்களால் தொல்லைகள் .நமக்காகத்தான் அவர்கள் தம்மை தரத் தயாராக இருக்கிரார்கள் என்ப்தைக்கூட உணராத உனக்காகத்தான் போராடுவது புரட்சி சகோதரா அழியக்கூடிய எந்த உயிரும் யாருக்கும் பிரயோஜனமில்லாமல் அழியக்கூடாது என்று நினைப்பவனே உண்மையான புரட்சியவாதி.தவறு செய்யாமல் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் தவறும் செய்யமாட்டார்கள் தவறைச் செய்யவும் தூண்டவும் மாட்டார்கள். பாபுபகத்.

  16. Other than studies, few of the students are concentrating on these craps. Due to selfish attitude of organization like vinavu students have been spoiled to greatest extent and on top of this there are people who would simply support vinavu. Non Sense!

Leave a Reply to Bala பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க