privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை எதிர்த்து பிரச்சாரம்

தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை எதிர்த்து பிரச்சாரம்

-

கடற்கரை  வளங்களைக் கொள்ளையடித்து, மீனவர்களின் வாழ்வை சூறையாடிய தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்!
சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய் !

மீனவர்கள், மக்களின் அச்சத்தை உடைத்தெறிந்த புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரையிலான 150 கி.மீ. கிழக்குக் கடற்கரை முழுவதும் விலை மதிப்பு மிக்க கனிமங்கள் கிடைக்கிறது. இக்கனிமங்கள் மணலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜெயாவின் தொழில் கூட்டாளியான வைகுண்டராஜன், ஏற்கனவே தாது மணலை எடுத்து வந்த பலரையும் தனது அரசியல் செல்வாக்கு, பண பலத்தால் விரட்டியடித்து விட்டு கடந்த 20 ஆண்டுகளாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

கடற்கரை
கொள்ளையடிக்கப்பட்ட கடற்கரை பகுதிகள்.

மூன்று மாவட்ட கடற்கரையில் பல இடங்களில் மணல் ஆலைகளை நிறுவி கனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. ஆலைக் கழிவுகள் நேரடியாகக் கடலுக்குள் விடப்படுவதாலும், சுற்றுச் சூழல் உட்பட அனைத்து விதிகளையும் மீறி இராட்சத இயந்திரங்களைக் கொண்டு 10 மீ முதல் 50 மீ. வரை மணல் அள்ளப்படுவதாலும் இக்கடற்கரை முழுவதுமே சூறையடப்பட்டுள்ளது. மணல் அள்ள அனுமதி பெற்ற இடங்கள் மட்டுமின்றி அரசு புறம் போக்கு நிலங்கள், கிராம மக்கள் பலரின் சொந்த இடங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளது.

1991 ல் அமுல்படுத்தப்பட்ட தனியார் மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைக்குப் பின் தாது மணல் கொள்ளைக்கு தடையாக இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மிகத் தீவிரமாக சூறையாடப்பட்டது. இதனால் கடற்கரை முழுவதும் நாசமானது. கடற்கரையிலிருந்து சவுக்கு, கண்ணாச் செடிகள் அழிக்கப்பட்டது. ஆலைக் கழிவுகளால் கடல்நீர் சிவப்பானது பெரியதாழையில் தூண்டின் வளைவு பாலமே நாசமானது. மீன் வளம் குறைந்தது, மண் அள்ளியதால் படகைக் கரையேற்ற முடியாத நிலை, கதிரியக்கத் தன்மையுள்ள கழிவு மண்ணைக் கொட்டியதால் பலவித கொடிய நோய்கள், மொத்தத்தில் கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் சுதந்திரம், வாழ்க்கை பறிக்கப்பட்டு விட்டது.

இக்கொள்ளையை எதிர்த்து மீனவர்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தால் அடுத்த நிமிடமே வைகுண்டராஜனுக்கு பணிவுடன் தகவல் தெரிவிக்கப்பட்டு, புகாரை விசாரிக்க வந்த அதிகாரிகள் முன்பே புகார் கொடுத்தவர்கள் அடித்து உதைக்கப்பட்டனர். 1996- ல் பெருமணல்  கிராமத்தில் போராடிய மக்கள்         மீது S.P.ஜாங்கிட் தலைமையிலான போலீசுப் படை ஏவப்பட்டு மக்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். அனைத்து துறை அதிகாரிகள் -போலீசு – அரசு ஆதரவோடு வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளை தொடர்ந்தது.

கடற்கரை கிராமங்களில் மணல் கொள்ளைக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்க தனக்கு ஆதரவான கும்பலை உருவாக்கி எதிர்ப்பவர்களை அடித்து உதைத்தும், போலீஸ் வைத்து பொய்வழக்கு போட்டும் ஒடுக்கினார் வைகுண்டராஜன. கூத்தங்குழியில் மணல் கொள்ளையை எதிர்ப்பவர்கள் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசி அவர்கள் ஊரிலிருந்து விரட்டியடிக்கபட்டனர். கடற்கரை கிராமங்களை பிளவு படுத்தி எந்த நேரத்தில், என்ன நடக்குமோ ? என்கிற கலவர சூழலை உருவாக்கி கடற்கரை கிராமங்களின் அமைதி, நிம்மதியான சூழல் குலைக்கப்பட்டது. இவற்றையும் மீறிய மக்களின் தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக கலெக்டர் ஆஸிஷ்குமார் தூத்துக்குடி மாவட்டம் வைப்பாரில் மணல் கொள்ளை பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டி வந்தது. இந்த செய்தி பத்திரிக்கையில் வெளி வந்ததுமே அவர் தூக்கி அடிக்கப்பட்டார்.

ஆய்வுக் குழு நாடகம்

மக்களின் தொடர்ச்சியான போராட்டம், கலெக்டர் ஆஸிஷ்குமார் அறிக்கை பத்திரிக்கைகளில் வெளிவந்து அம்பலமானதால் வேறு வழியின்றி தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமீறல்களை ஆய்வு செய்ய பேடி தலைமையில் ஆய்வுக்குழு என அறிவித்தது. நெல்லை மாவட்ட கடற்கரையில்தான் அதிகமாக சூறையாடிப்பட்டிருந்தும் இக்குழு தூத்துக்குடி மாவட்டம் மட்டும் ஆய்வு செய்யும். மணல் அள்ள அனுமதி பெற்ற இடங்களில் மட்டும் ஆய்வு செய்யும் என அறிவிக்க்கபட்டது. இந்த ஆய்வுக் குழு இதுவரை பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்கவோ அவர்களை சந்திக்கவோ மறுக்கிறது.

பெரியதாழையில் போலீஸின் தடுப்புகளை உடைத்தெறிந்து ஆய்வுக் குழுவை நெருங்கி முழக்கமிட்டு புகார் தெரிவித்தனர் மீனவ மக்கள். இப்போது தமிழகம் முழுவதும் ஆயுவு என அறிவித்தாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வுக் குழுவின் அறிக்கையை வெளியிடாமல் அமுக்கிவிட்டது அரசு. இவையெல்லாம் ஆய்வுக்குழுவின் மேலான மக்களின் அவநம்பிக்கையை அதிகரித்துள்ளது.

ஜோசப் பெர்னாண்டோ கொலை

அரசின் ஆய்வுக்குழு அறிவிப்பை தொடர்ந்து மீனவ அமைப்புகள் தாது மணல் கொள்ளையை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வைகுண்டராஜன் தனது எடுபிடிகளை தூண்டி விட்டு மணல் ஆலைகளை திறக்க வேண்டும்; மணல் அள்ள தடையை நீக்கவேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தார். இதில் மீனவ சமூதாயத்தைச் சேர்ந்த ஜோசப் பெர்னாண்டோ என்பவரை வைத்து ஒருசில இளைஞர்களை கூட்டிப் போய் மனு கொடுக்கச் செய்தனர். மணல் கொள்ளைக்கு ஆதரவாக இந்த துரோகத்துக்காக மீனவ மக்கள் ஜோசப் பெர்னாண்டோவை கண்டித்தனர்.

இதனால் மனம் உடைந்து விஷம் குடிப்பது போல ஜோசப் பெர்னாண்டோவை நடிக்கச் சொன்ன வைகுண்டராஜன் கும்பல் அவருக்கு தெரியாமலே அதிக அளவு விஷத்தை கொடுத்ததால் அவர் (ஜோசப் பெர்னாண்டோ) இறந்து விட்டார். இந்தக் கொலை பழியை போராடும் மீனவ தலைவர்கள் மீது போட்டு போராட்டத்தை முடக்க சதி செய்தது. இந்நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையமும் வி.வி.மு., புஜதொமு வும் இதை அம்பலப்படுத்தி கொலை குற்றத்திற்காக வைகுண்டராஜன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என பிரசுரம், சுவரொட்டி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

பிரச்சார அனுபவம், மக்களின் வரவேற்பு

புஜதொமு பிரச்சாரம்
பிரச்சாரம் (கோப்புப் படம்)

வைகுண்டராஜன் கும்பலின் தாது மணல் கொள்ளைக்கே அரசின் தனியார் மயம் தாராளமய கொள்கையை காரணம், இத்தனை காலமும் இக்கொள்ளைக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கமுடியாது என அரசின் ஆய்வுக் குழுவை அம்பலப்படுத்தியும் இப்போது உள்ள அதிகாரிகள், போலீஸ், நீதிமன்றம் அரசு மூலம் இக்கொள்ளையை தடுக்க முடியாது, இக்கொள்ளையர்களை தண்டிக்க முடியாது, கீழிருந்து புரட்சியின் மூலம் மக்கள் அதிகாரத்தை கட்டியமைக்கும் போதே இக்கொள்ளையை தடுக்க, தண்டிக்க முடியும் எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. மூன்று மாவட்டங்களிலும் பேருந்து, ரயில், வீடுகள், மீனவர் குடியிருப்புகள், கடற்கரை கிராமங்கள் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. 37,000 துண்டறிக்கைகள் வினியோகம் செய்யப்பட்டது. 200 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் போலீசு அதிகாரிகள், அடியாட்களால் தாக்கப்பட்டு பொய் வழக்குப் போட்டு மிரட்டி வைக்கப்ட்டிருந்தனர். இந்நிலையில் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் இந்த அச்சத்தை, பயத்தை உடைத்து நொறுக்கும் வகையில் அமைந்திருந்தது. செஞ்சட்டை அணிந்து பிரச்சாரம் செய்த தோழர்களிடம் மக்கள் விரும்பி வந்து பிரசுரத்தை பெற்று பாராட்டிச் சென்றனர். பலர் கைகுழுக்கி வாழ்த்து தெரிவித்து, நல்லா செய்யுங்கள் என்றனர். பேருந்து, ரயில்களில் பிரச்சாரம் செய்த தோழர்களிடம் இப்படி இரண்டு பேர் வந்து தைரியமாய் பேசி பிரச்சாரம் செய்கிறீர்களே என்று ஆச்சரியத்துடன் பாராட்டிவிட்டு தோழர்களின் பாதுகாப்பு பற்றி அக்கறையையும் வெளிப்படுத்தினர். பிரச்சாரம் செய்த தோழர்களிடம் ஒருசில அதிகாரிகள் (பெயர் ஊர் சொல்ல மறுத்துவிட்டனர்) மற்றும் பொது மக்கள் வைகுண்டராஜன் அடித்த கொள்ளையையும் கடற்கரையை சூறையாடியதையும் சொல்லி தங்கள் மன குமுறலை வெளிப்படுத்தினர்.

பலர் வைகுண்டராஜன் பற்றி பேசவே பயப்படும் சூழலில் இரண்டு பேர் மட்டும் தனியாக வந்து தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் என்று பேசி சாதாரணமாக பிரச்சாரம் செய்கிறீர்களே என ஆச்சரியபட்டுப் பாராட்டினர். பேருந்து ரயில்களில் பயணிகள் பலரும் இப்படி ஆச்சரியப்பட்டனர். ஒரு சில பேருந்துகளில் வைகுண்டராஜனின் கைத்தடிகள் மணல் அள்ளுவதால் பாதிப்பில்லை என நம்மை எதிர்த்து பேசியபோது அதே பேருந்தில் உள்ள வேறொரு பயணி மணல் கொள்ளை பற்றி உனக்கு தெரியுமா? என எதிர்வாதம் செய்து அடக்கியதும் நடந்தது.

பெருமணல் என்னும் கடற்கரை கிராமத்தில் பிரச்சாரத்தின் போது 70 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர் இந்த கொள்ளை, அநியாயம், அக்கிரமத்தை கேட்க யாராவது வரமாட்டார்களா என எதிர்பார்த்து ஏங்கியிருந்தவர் போல, நமது பிரச்சாரம், நோக்கத்தை சொன்னவுடன் தோழரின் காலைத் தொட்டு வணங்கி வரைவேற்றது மிகுந்த நெகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.

கடற்கரை கிராமங்களிலும், மீனவர் குடியிருப்புகளிலும் பிரச்சாரம் செய்த நமது தோழர்களை வரைவேற்று உணவு வழங்கி உபசரித்து தாங்களும் இணைந்து போராடுவதாக உணர்ச்சி பெருக்குடன் தெரிவித்தனர் மக்கள்.

வைகுண்டராஜனுக்கு ஆதாரவான இடங்கள் உட்பட அனைத்துப் பகுதியிலும் வீச்சான பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. உவரியில் வைகுண்டராஜன் அடிஆள் வெட்டுவேன், குத்துவேன் என்று மிரட்டிய போதும் தோழர்கள் அஞ்சாது பிரச்சாரம் செய்தனர். இதை மீனவ இளைஞர்கள் பாராட்டி பேசினர். கீழவைப்பாரில் பிரச்சாரம் செய்து விட்டு தூங்கிக் கொண்டிருந்த தோழர்களை நடு இரவில் மிரட்டிப் பார்த்து ஒன்றும் பலிக்காமல் பின் வாங்கியது போலீஸ். இதே போல தூத்துக்குடி மீனவ பகுதியிலும் அனுமதி இல்லை என பிரச்சாரத்தை தடுக்க முயற்சித்து தோற்றுப் போனது போலீஸ். வைகுண்டராஜனின் பண பலம், ஆதிக்கம் மற்றும் போலீசின் தடைகளையும் பொருள்படுத்தாமல் போர்க் குணத்துடன் செய்யப்பட்ட பிரச்சாரம் மக்களிடம் தாது மணல் கொள்ளைக்கு எதிரான போராடும் உணர்வையும், குறிப்பாக மீனவ மக்களிடம் வைகுண்டராஜனின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட முடியும், தாது மணல் கொள்ளையை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பிற விபரங்கள்

அக்டோபர் 1 முதல் 11 வரை மொத்தம் 11 நாட்கள் பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரச்சாரத்தை தடுக்கும் வகையில் அக்டோபர் 12 நடக்கவிருந்த  பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு தற்போது உயர்நீதிமன்றம் மூலம் இத்தடையை உடைத்தெறிந்து திட்டமிட்டப்படி பிரச்சாரத்தை கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்டு வருகிறது. அனுமதி பெற்று அடுத்த கட்ட பிரச்சாரம், நடவடிக்கைகள் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவண்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னனி
தமிழ்நாடு

  1. வைகுண்டரஜன் அடிபொடிகள் விஜயகந்தை தரக்குரைவாக ஏசி ஒட்டும் சுவரொட்டிகலுக்கு தடை இல்லை. இத்னால் சட்டம் ஒழுங்கு பிரச்சைனை இல்லை.தினமும் ஒரு சாதி அமைப்பு பெயரால் மெகாசைஸ் சுவரொட்டிகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஒட்டப்படுகிறது.உண்மையை சொன்னால் மட்டும் இவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சைனை வந்துவிடுகிறது.ஓடையில் மணல் அல்லுறவன், அனுமதி இல்லாமல் கிணத்து சரல் அல்லுரவனெல்லாம் புடிச்சு வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பொட்டு உள்ளே தள்ளுவது. வைகுண்டரஜன் லாரியை மக்கள் புடிச்சு கொடுத்தா காவல்துறை அதிகாரியும் கலெக்டரும் லாரியை விடசொல்லி மிரட்டுவது. என்ன அரசுடா இது. ஓட்டு பொடுற மக்களை சொல்லனும்.

    • அடுத்தவன் சொத்துல எடுத்ததா சொல்லுற இல்ல. அந்த அடுத்தவன் யார் ? யார் எடத்துல எடுத்தாங்க? அந்த நபரை உன்னால காட்ட முடியுமா? அல்லது அந்த நபர் வந்து சொல்லட்டும் என்னோட இடத்துல மணல் எடுதுட்டங்கன்னு. ஆதாரம் இல்லாம கண்டபடி பேசாத. உனக்கு திரு. வைகுண்டராஜன் அவர்களை அழிக்கணும் . அதுக்காக தான் நீ இப்படி கங்கணம் கட்டி மணி ஆட்டுறது நல்லா தெரியுது. பத்திரிகையின் தருமம் என்னன்னு தெரிஞ்சிகிட்டு தொழில் பண்ணுங்க.

  2. மத்திய அரசாங்கத்தின் இயற்கை வளம் குறித்த கொள்கையின் அடிபப்டையில் தான் சட்டப் படி உரிமம் வழங்கப் படுகிறது என்கிற நிலையில் V.V.MINERALS மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன என்று எவரேனும் விவரிக்க முடியுமா ? கட் பேஸ்ட் மட்டுமே இல்லாமல் , கொஞ்சம் புரிதலின் அடிப்படையிலும் வேண்டுகிறேன் …

Leave a Reply to suganthi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க