privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைரசியப் புரட்சி - வேண்டும் தொடர்ச்சி !

ரசியப் புரட்சி – வேண்டும் தொடர்ச்சி !

-

வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!

ரஷ்யப் புரட்சி

வால்கா
புதிய மனித சமுதாயத்தின் முகத்தில்
தன்னை கழுவிக் கொண்டது.

பூமிப்பந்து முதன் முதலாய்
மனிதப் பண்பின் உச்சத்தில்
தன்னை தழுவிக் கொண்டது.

அன்றலர்ந்த மலர்களுக்கு
தன்னிலும் மென்மையான
இதயங்களைப் பார்க்கும்
வாய்ப்பு கிடைத்தது.

பரந்து விரிந்த வானம்
சோசலிசத்தின் உள்ளடக்கத்தில்
தன்னை உணர்ந்து கொண்டது.

அலைஓயா கடல்கள்
கம்யூனிச பொதுஉழைப்பின்
மனதாழம் பார்த்து வியந்தது!

சுரண்டலின் நகங்களால்
அவமானக் கீறலோடு
அலைந்த காற்றுக்கு
வரலாற்றில் முதலாய்
மனித சுவாசத்தின் மதிப்பு கிடைத்தது!

இயற்கையின் மகிழ்ச்சியாய்
விளைந்தது நவம்பர் புரட்சி!
எல்லோர்க்கும் தேவையாய்
எழுந்தது ரசியப்புரட்சி!

ரசியப்புரட்சி அறிந்தால்,
கம்யூனிசம் புரிந்தால்,
முதலில் இன்னொரு உலகம்
கண்ணுக்குத் தெரியும்,
நாம் இருக்கும் உலகத்தின்
இறுக்கம் புரியும்!

”எல்லோருக்குமான இயற்கை
எல்லோருக்குமான உலகம்
எல்லோருக்குமான இனிமை
எல்லோருக்குமான உரிமை” என
புரட்சியின் தொடர்ச்சிகள்
புது அழகாய் விரியும்.

”கம்யூனிசம் அபாயம்”…
”கம்யூனிசம் ஒத்துவராது”…
”கம்யூனிசம் பிடிக்காது”…
பலவாறாக பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு
தலைநிமிர்ந்து சமூகத்தை பொதுவாக்கிய
உழைக்கும் வர்க்கத்தின் பதில்தான் ரசியப்புரட்சி!

முதலாளித்துவம்
எவ்வளவு மோசமானது என்பதற்கு,
முன்னேறிய கம்யூனிசத்தை
நாமறியாமலே மறுக்கும்
முட்டாள்தனமே சாட்சி!

ஒண்ணுக்கு போவதிலும்
உன்னிடம் காசு பிடுங்கும்
முதலாளித்துவச் சுரண்டலின் மேல்
அப்படியென்ன கவர்ச்சி!

”கடவுளால் முடியாததை
கம்யூனிஸ்ட் செய்தான்,
பிச்சைக்காரனே இல்லாத நாடு
சோவியத் ரசியா”
பெருமை பொங்கினார் பெரியார்.

”திருட்டுத் தேவையே இல்லை
பூட்டுத் தயாரிக்காத நாடு ரசியா
இரும்புத்திரை இல்லை
இரும்புத் தொழிற்சாலையைத்தான்
நிறையப் பார்த்தேன்” – என
பூரித்துப் போனார் கலைவாணர்

வல்லரசாகப் போவதாய்
வக்கணை பேசும் முதலாளித்துவத்தில்
செருப்பை நிம்மதியாய்
வெளியில் விட யோக்கியதை உண்டா?

முதலாளித்துவம்
பலவும் கண்டுபிடித்த பெருமை இருக்கட்டும்
முதலில் நாம் மனிதன் என்பதை கண்டுபிடிக்க
சமூகம் உள்ளதா அதனிடம்!

இளரத்தம்
சுண்டக் காய்ச்சும் வேலை!
எந்தப் பணி பாதுகாப்புமின்றி
பணி நிரந்தரமில்லையென பயமுறுத்தியே
எந்திரத்தை உயிரூட்ட
இளம் தொழிலாளர் கொலை,

விழிப்பசை தீர களைத்து
குடல்பசை தடவி
குறுகலான தகரக் கொட்டகையில்
பாதி தகனம்!
மிச்சம் உயிர் மறு ஷிப்ட்டில்!

மடி வலிக்க கறந்தால்
மாடும் உதைக்கும்,
மடிக்கணிணியில் கறந்தால்
‘மைக்ரோசாப்ட்’ பெருமையா?
பார்க்கும் எருமைகள் பதைக்கும்!

தெருவோடு போகும் பெண்
கருவோடு திரும்புகிறாள்,
முனகவும் சக்தியில்லாத
மூதாட்டியின் மேல் பாலியல் வக்கிரம்,
வீட்டிலிருக்கும் பெண்ணுக்கோ
வீட்டிலுள்ளவர்களாலேயே விபரீதம்
முதலாளித்துவ நுகர்வு முற்றி
ரத்தமாய் வடிகிறது கள்ள உறவில்!

மனிதனை நுகரும்
மறுகாலனிய கொடூரம்
முதலாளித்துவம் இருக்கும் வரை
புழுவாய் நெளியும்.
ரசியப் புரட்சியின் சவுக்கை எடுத்தால்தான்
முதலாளித்துவக் கழிவுகள் ஒழியும்!

ரத்த ஞாயிறு முடிந்திடவில்லை…
ஈழத்தில்… காஷ்மீரில்… சத்திஸ்கரில்… வெவ்வேறு விதமாய்…
ஜாரின் நடுக்கம் ‘மாருதி’ வரைக்கும்
மேலாதிக்கவெறியோடு மோடியின் நாஜிப்படை…
நத்தம் காலனி விளைச்சலின் மீது
நவீன ‘குலாக்குகளின்’ தீ வெறி!
நவம்பர் புரட்சியும் முடிந்திடவில்லை…
தொடர்ச்சி கொடுங்கள் உழைக்கும் மக்களே
தருணம் நழுவாமல்
இயங்குவதற்குப் பெயர்தான் புரட்சி!

புரட்சி வேண்டுமா?
பொருந்துக அமைப்பில்!

– துரை.சண்முகம்

  1. வினவு தோழர்களுக்கும் தமிழகம் முழுவதும் நவம்பர் விழா கொண்டாடிக்கொண்டிருக்கும் தோழர்களுக்கும் புரட்சிகர நவம்பர் விழா வாழ்த்துகள்!

  2. தோழர்கள் அனைவருக்கும் புரட்சி தின வாழ்த்துக்கள்.
    ரஷ்யாவில் புரட்சியில் ஈடுபடவில்லை ஆனாலும் அந்த நாட்டில் வாழ ஆசையாக இருக்கு மீண்டும் 1917 ஆண்டை விரும்புகிறேன் கிடைக்குமா கிடைக்கும் நான் நம்புகிறேன் அந்த நாள் மகிழ்ச்சியை கொண்டுவர போராட என்ன தயார் செய்து கொண்டேன் வாழ்க புரட்சி வளர்க மக்கள் வர்க்க ஒற்றுமை.

  3. வல்லரசாகப் போவதாய்
    வக்கணை பேசும் முதலாளித்துவத்தில்
    செருப்பை நிம்மதியாய்
    வெளியில் விட யோக்கியதை கிஞ்சித்தும் கிடையாது.

  4. வெற்றி கொடுக்கும் புரட்சி வேண்டும்.அதர்மம் அழியும் புரட்சி வேண்டும்.ஏழ்மையையும்,அவமானங்களயும்,கயமையையும்,மடமையையும் விரட்டுவதற்குப் பெயர் புரட்சிதான் என்றால் அந்த புரட்சி இங்கு வந்துதான் ஆக வேண்டும்.

Leave a Reply to babubagath பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க