privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஎன்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – நீங்களும் எழுதலாம்

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – நீங்களும் எழுதலாம்

-

ணரூழ்த்து நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

–    குறள் 650

ஆசிரியர்இந்தக் குறளுக்கு மு.வ உரையின் படி,

தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் உணருமாறு விரித்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

– என்பது பொருளாகும்.

பல வண்ணங்களில் தோட்டம் தோட்டமாக மலர்ந்திருந்தாலும் இன்றைய ஆசிரியர்களிடம் இத்தகைய மணம் கமழும் இயல்பு வெகு அரிது. தூரத்தே கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தாலும் அருகாமையில் கூட மணம் பரப்பாத இந்தப் பூக்களால் என்ன பயன்?

கல்வி என்பது வேலை வாய்ப்பாகவும், வாழ்க்கையின் பொருளாதார ஓட்டத்திற்கு தேவைப்படும் பந்தயக் குதிரை தயாரிப்பாகவும் அருகி விட்ட சூழ்நிலையில் அறிவு மட்டுமல்ல, அறிவை செதுக்கும் ஆசிரியக் கலை அறிந்த ஆசிரியர்களும் வெறுமனே ரிங் மாஸ்டர்களாக மட்டும் மிரட்டுகிறார்கள்.

அறிவுப் பெருவெளியில் தட்டுத் தடுமாறி, தவழ்ந்து, எழுந்து, அன்னமாகவும், சிறுத்தையாகவும் ஓட வேண்டிய நாம் கூண்டில் அடைபட்ட விலங்குககளாய் சலிப்பூட்டும் விதத்தில் ஆடுகிறோம்.

ஆசிரியர்

இயற்கை, மனித சமூகம், சிந்தனை மூன்றின் இயக்கத்தையும், வரலாற்றையும், போராட்டத்தையும் உள்வாங்கி அந்தப் பாதையில் பயின்று பங்களிக்கும் போது மட்டுமே அறிவும், நடைமுறையும், வரலாறும் ஒன்றுக்கொன்று தோழனாய் பிரபஞ்சப் பெருவெளியில் வெற்றிகரமாய் பயணத்தை தொடரும்.

ஆனால்?

மறுகாலனியாக்க சூழலில் கல்வியை தனியார்மயம் கவ்வியிருக்கும் நிலையில் அறிவும் ஆசிரியர்களும் சந்தையின் விதிகளைக் கற்றுத்தரும் தனிநபர்வாதத்தை மட்டும் கற்றுத் தருகின்றனர்.

சந்தையின் புதிய காரை தொலைவிலேயே அடையாளம் காணும் சிறுவனுக்கு தாமிரபரணி ஆறு தெரியாது. ராக்கியையும், அண்டர்டேக்கரையும் விடாது துரத்தும் மாணவர்களுக்கு வெள்ளையனை துரத்த முயன்ற திப்புசுல்தானின் வீரமரணம் தெரியாது. ராகு கேது கதைகளோடு விரதமிருக்கும் பெண்களுக்கு கிரகணம் குறித்த அறிவியல் உண்மை போய்ச் சேருவதில்லை. லாஸ் வேகாசின் தெருக்களை வீடியோ கேமினால் அறியும் இளைஞனுக்கு மாஞ்சோலையின் அமைவிடம் தெரியாது. அழகு நிலையங்களிலும், நிலைக்கண்ணாடியிலும் அழகைத் தேடும் மாணவிகளுக்கு சமூகக் களத்தில் உருவாகும் பேரழகு குறித்து கிஞ்சித்தும் தெரியாது.

பேராசிரியர்

ஜன்மாஷ்டமியில் உண்ணியப்பத்தை ருசிக்கும் பக்தர்களுக்கு வருணாசிரமத்தை போதித்த கீதைக்கும் முந்தைய குறளின் “பிறப்பொக்க எல்லா உயிர்க்கும்” வரிகளின் வரலாறு தெரியாது. பங்குச் சந்தையின் சூதாட்டத்தை பயலும் வணிகவியல் மாணவர்களுக்கு பல பத்தாண்டுகளில் விலைவாசி உயராத சோவியத் சமூகத்தின் வரலாறு தெரியாது.

இவையெல்லாம் கற்றுத்தருகின்ற கல்விக்கூடமும், ஆசிரியர்களும் எங்கே இருக்கின்றார்கள் என்றால் அதற்கு சோவியத் யூனியனையும், பொதுவுடமையை சீனாவையும் கூறலாம். இரண்டும் தற்போது இல்லை. ஒருவேளை இத்தகைய சமூக அமைப்பு இல்லையென்றாலும் கல்வி கற்க வரும் மாணவர்களிடம் ஏதோ ஒரு துறை சார்ந்த ஆர்வத்தையும், பரவசத்தையும் தமது தனிப்பட்ட ஆர்வத்தினால் கற்றுத்தந்த ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் தமது பணியை விரும்பி ஏற்றதோடு அதை ஒரு தொண்டாகவே செய்து வந்தார்கள், வருகிறார்கள். கல்வியை விருப்பமான அறிவாக, கலையாக மாணவர்களிடம் கற்பிக்க முனையும் இத்தகைய ஆசிரியர்களைப் பெற்ற மாணவர்கள் நிச்சயமாக அதிர்ஷடசாலிகள்தான். இதில் நாம் அறிவியலை விடுத்து அதிர்ஷ்டத்தை மட்டும் சார்ந்து நிற்பது ஒருவகையில் துரதிர்ஷடவசமானதுதான். ஆயினும் என்ன செய்வது?

ஆசிரியர்ஆரம்ப பாடசாலை முதல் உயர்மட்ட கல்வி வரை இவர்கள், உயிரெழுத்தையும், கணித வாய்ப்பாட்டையும், குவாண்டம் இயற்பியலையும், உழைக்கும் மக்களின் கதைகளையும், வரலாற்றின் வழியையும் சலிப்பில்லாமல் கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

வினவில் வந்த கவரப்பட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் போல, தங்க மீன்களின் எவிட்டா மிஸ் போல ஊருக்கொன்றாய், காலத்திற்கொன்றாய் இவர்கள் இருக்கலாம். அவர்களைப்பற்றி நாம் நினைவு கூர்வதும், அந்த நினைவின் வழி நல்ல ஆசிரியர்களை உலகறியச் செய்வதும், அறிந்த உலகம் இனிவரும் ஆசிரியர்களை அப்படி ஒரு சிலரையாவது உருவாக்குவதற்கும்தான் இந்த முயற்சி.

ஆம். உங்கள் மாணவப் பருவத்தில் அத்தகைய ஆசிரியர்கள் இருந்திருப்பார்கள். அவர்களைப் பற்றிய உங்கள் நினைவுகளை எழுதி அனுப்புங்கள். அந்ந ஆசிரியர்கள் அரசு ஆசிரியர்களாக மட்டும் இருக்க வேண்டியதில்லை, தனியார் பள்ளி ஆசிரியர்களாகவும், ஏன் வெளிநாட்டு முனைவர் பட்டத்தை வழிநடத்தும் ஆசிரியர்களாக கூட இருக்கலாம்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஹைபிரிட் குதிரைகளை வளர்க்கும் சுமையிலும், அரசு பள்ளி ஆசிரியர்கள் பெருத்த சம்பளங்களை வாங்கிக் கொண்டு வட்டிக்கு விடும் தொழிலதிபர்களாகவும் இருக்கும் காலத்தில் நல்ல ஆசிரியர்களை நினைவு கூர்வோம்.

வாசகர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவரும் இதில் பங்கேற்குமாறு அழைக்கிறோம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் ஆசிரியர் நினைவுகளை எழுதி அனுப்புங்கள். தட்டச்சு தெரியாத நண்பர்கள் கூட கையெழுத்தில் எழுதி ஸ்கேன் செய்து அனுப்பலாம். வரும் நாட்களில் இந்த பதிவுகள் தொடராக வெளிவரும். இந்த தொடருக்கு என்ன தலைப்பு வைக்கலாம்? என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள், வெளிச்சத்திற்கு வராத வேர்கள் போல இதைவிடச் சிறப்பான தலைப்புகளை நீங்களும் தெரிவிக்கலாம்.

– வினவு

  1. //வெள்ளையனை துரத்த முயன்ற திப்புசுல்தானின் வீரமரணம்//

    அவன் ஒன்றும் தனது நாட்டை ஆக்ரமித்திருந்த அந்நியர்களை எதிர்த்து போரிட்ட குடிமகனில்லை. தனது ஆக்ரமிப்பில் இருந்த நாட்டை மற்றவர்களின் ஆக்ரமிப்பிலிருந்து காத்துக் கொள்ள மற்றவர்களை வைத்து போர் நடத்திய சுல்தான்.

    Thus the title of an article on him linked below திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி ! is also misleading one.

  2. Luckily my dad is also a teacher who taught me Tamil at school. But at home, my mom is my teacher. They both played a key role in my life.

    I studied in a school that is like the one comes in Autograph movie. Some of the sections have no permanent classrooms. We used to sit under shades of trees. During winters, it will be raining inside the classroom.

    Now comes the part about my real teachers apart from my parents. I like to thank one Mr. Michael, who was a great inspiration for me. He talked less apart from the subject. But his punctuality, dressing, abiding school rules, traffic rules etc made an impact on me. A perfect man. And also I wish to thank one Mr. Balamurugan. He is a very talkative and jovial person. But he never wasted the teaching time. Through jokes he taught us Chemistry and Physics. He encouraged us to question all the established culture and beliefs through the eyes of science.

    Last but not least, I wish to thank Ms. Lourd Mary. She is the one who instilled the thoughts of Dr. B. R. Ambedkar in my mind. Though born in a ultra-secular family, I never had enough info about Ambedkar from my dad. This gap was filled by her. She also taught many things that were not in books and made a lot of changes in our life.

  3. தல நான் சில மத துவேஷம் பிடித்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் அதை எழுதலாமா??

    • எழுதலாம். ஆனால் இது “என்னை வதக்கிய ஆசிரியர்கள்” என்று வரும். நேர்மறை ஆசிரியர்களை சொல்லி விட்டு எதிர்மறை ஆசிரியர்களை எழுதலாம். நேர்மறைக்கு தட்டுப்பாடு என்றால் எதிர்மறையை மட்டும் எழுதுங்கள். நன்றி

  4. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீர்கள்? என்று மாணவர்கள் எழுப்பிய கேள்விகள் தான் அதிகம் இன்றைய சூழலில் அனுபவமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். நீங்களே குறிப்பிட்டு உள்ளதை போன்று பொருளாதார தேவைக்கான ஒரு வேலையாக ஆசிரியர் பணியினை இந்த அரசு வைத்து விட்ட நிலையில் கவரப்பட்டு பள்ளி, எமிட்டா மிஸ் போன்றோர் மிக அரிதாக தான் பார்க்க முடியும்.

    எனது 10 ஆம் வகுப்பு வாத்தியார் ஒருவர் மாணவர்களிடம் நெருக்கமாக பழகி பாடம் நடத்தியதையும், அவரே படிப்பதில் ஒரு சிறு குறைபாடு என்றால் கன்னத்தில் பளார் என அறைகின்றவராக தான் இருந்தார். இது மட்டும் பொதுவாக அவர் குறித்து நினைவுக்கு வருகிறது. மேலும் அவர் குருதிபுனல் என்ற படத்தை போலீஸ்காரர்கள் கஷ்டத்தை உணருவதற்கு என்று சொல்லி கண்டிப்பாக பார்க்க சொன்னதையும் அதனால் ஒரு 10 மாணவர்கள் போய் பார்த்ததையும் குறிபிட்டு சொல்லலாம். இன்று குருதிபுனல் குறித்த அவர் மதிப்பீடு, பளார் என்ற அறைதல் போன்றவைகளை சரி என என்னால் இன்று ஏற்க முடியாது.

    இவரை தவிர குறிப்பிட்டு யோசித்தால் அதிகம் பிரம்மடி, காதை பிடித்து கிள்ளுவது, தண்டனை, பயமுறுத்தல் என தான் நினைவுக்கு வருகிறது. இப்படி 15 ஆண்டுகளுக்கு முன்னாலே எனது அனுபவம் இது தான் என்றால் இன்றையா மிகப் பெரிய நுகர்வு கலாச்சாரவெறி, பொருளாதார ஏற்றதாழ்வு என இருக்கும் சூழலில் நல்ல ஆசிரியர்கள் அரிதிலும் அரிதாக தான் இருப்பார்கள்.

    பள்ளிக்கூட தேர்தல் என்ற புத்தகத்தில் அது போன்ற ஆசிரியர்களை சிலரை படித்தபோது மிகவும் பிடித்து இருந்தது. அது போல வினவில் அடுத்து வாசகர்கள் எழுதப்போகும் என்னை செதுக்கிய ஆசிரியர்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

  5. உண்மையில் தங்கமீன்கள் செல்லம்மாவின் கனவு பள்ளி – இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மேட்டுப்பாளையம்
    ஆசிரியர் :- பிராங்க்ளின்

    Links :-

    http://www.rmpschool.blogspot.in/2011/09/blog-post.html

    http://www.sramakrishnan.com/?p=2601

    http://maaruthal.blogspot.in/2011/09/blog-post_5125.html

  6. அருமையான விசயம் இதே போல குழந்தை வளர்ப்பு குறித்த மார்க்ஸிய கண்ணோட்டத்திலும் ஒரு தொகுப்பு வினவில் போடுங்க.. சமீபத்தில் குழந்தை பெற்ற முற்ப்போக்கு தம்பிதியரின் குழந்தையை பார்க்க போகும் போது ஏதாவது புத்தகம் வாங்கலாம் என நினைத்து குழந்தை வளர்ப்பு குறித்த புத்தகங்களை தேடினால் எல்லாமே முதலாளிய சிந்தனையில் குழந்தையை வளர்ப்பது குறித்து மட்டுமே இருக்கிறது

  7. தேசத்தின் மீது மிகுந்த பற்றுக்கொண்ட ஆசிரியன் நான்.என்னைப் பற்றிய மாணவர்களின் விமர்சனங்களைத் தங்களுக்கு அனுப்பலாமா? மன சாட்சிக்குப் பொதுவாகக்கூறுகிறேன்,இது சுயநலமில்லை.அனைத்து ஆசிரியர்களும் இது பொன்று இருக்கவேண்டும் என்ற ஆதங்கம்.இதைநானே சொல்வது கர்வம் என்றால் அது கர்வமாகவே இருக்கட்டும்.நமது தேசம் சரியான வழியில் செல்லவில்லை.நல்லவர்கள் எங்காவது உண்டென்றால் உங்களது இந்த முயற்சி இணைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  8. 108 திருப்பதிகளில் திருநகரியின் பெருமாள் கோவில் வாசலை ஒட்டி அமைந்த சிறிய பள்ளி அது…
    எங்களது ஆசிரியர்,பெருமாள் கோவிலில் முக்கியமானவர்/பள்ளியை ஒட்டிய தபால் அலுவலகம்..அதன் போஸ்ட் மாஸ்டர்..அப்புறம் என்ன?
    எப்போதெல்லாம் பெருமாள் கோவிலில் தளிகையோ,எங்களது மொத்த மானவர்களும் அவரோடு உள்ளே சென்று விடுவோம்…
    மாலை நேரங்களில் பள்ளிக்கு வெளியே மணல் பரப்பிய இடத்தில் எங்களை அமர்த்தி எங்களது விரல்களால்,மணலில் எழுதிப் பழகச் சொல்வார்…
    பின்னாளில் எங்களது கையெழுத்து அழகாக இருப்பதற்கு இது ஒரு காரணம்…
    பெருமாள் கோவிலில் திருவிழா(பங்குனி/கார்த்திகை) சமயத்தில் 10 நாட்களுக்கு குறையாமல் பள்ளி விடுமுறை:கொண்டாட்டத்துக்கு குறைவில்லாத பள்ளிப் பருவம்:
    சிறுவனாகவே இருந்திருக்கலாம்…பூணூல்களின் தாக்குதல் இல்லாமல் என் காலம் ஓடி இருக்கும்….

  9. Sir, Red salute.
    I am central govt employ now, i am think write some thing which was my life then after my children which you may know and write about all.
    My favourate teacher in my IIIrd standard while i studying starting reading and writing of English my teachers approach my teacher Nuurula and my 12th teacher Palani samy teach about Periya then social and Marx theory it change my life

Leave a Reply to Univerbuddy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க