privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஇடிந்தகரை குண்டு வெடிப்பு - பத்திரிகை செய்தி

இடிந்தகரை குண்டு வெடிப்பு – பத்திரிகை செய்தி

-

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

_________________________________________________________________________

இடிந்தகரை குண்டு வெடிப்பு

பத்திரிகை செய்தி

டிந்தகரையிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள சுனாமி காலனியில் நேற்று (26.11.2013) நிகழ்ந்த வெடிவிபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். மூன்று வீடுகளுக்கு மேல் தரைமட்டமாகியுள்ளன. இரண்டு பேர் ஆபத்தான நிலையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைகுண்டராசனின் தாதுமணல் கொள்ளைக்கு ஆதரவாக இருந்த கும்பலால் கூத்தங்குழியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் சிலர் சுனாமி காலனியில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் குடியிருந்த பகுதியில்தான் இந்த வெடி விபத்து நிகழ்ந்திருக்கிறது.

கரையோர மீனவ கிராமங்கள் பலவற்றில் பணத்தை வாரியிரைத்து தனது கையாட்களை உருவாக்கியிருக்கிறது வைகுண்டராசனின் மணற்கொள்ளை நிறுவனம். தாதுமணல் கொள்ளையை எதிர்க்கும் ஊர் மக்களை மிரட்டுவது, தாக்குவது, மீனவ மக்கள் மத்தியிலான தனிப்பட்ட முரண்பாடுகளையும், குடும்ப பிரச்சினைகளையும் பயன்படுத்திக் கொண்டு ஒரு தரப்புக்கு காசு கொடுத்து தனது கையாளாக மாற்றிக் கொள்வது போன்ற வழி முறைகள் மூலம் பல கிராமங்களில் தனது கூலிப்படைகளை உருவாக்கி மக்களின் அமைதியைக் குலைத்து வருகிறது வைகுண்டராசனின் நிறுவனம். அதன் தொடர்விளைவுதான் இந்தக் குண்டுவெடிப்பு.

கரையோர கிராமங்களின் மக்கள் அனைவரும் தாது மணற்கொள்ளையை எதிர்க்கிறார்கள். அவர்களை அச்சுறுத்திப் பணிய வைப்பதற்காக கூலிப்படையினரால் வன்முறைகள் அரங்கேற்றப்படுகின்றன. கரையோர கிராமங்களில் நிகழும் கொலைகள், வன்முறைகள், குண்டு வீச்சு சம்பவங்கள் பலவற்றுக்கும் காரணம் தாது மணற் கொள்ளையர்கள்தான். எனவே, இந்த குண்டுவெடிப்புப் பிரச்சினையை இரு கோஷ்டிகளுக்கு இடையிலான மோதலாகச் சித்தரிப்பதோ, வெறும் “வெடிகுண்டு” பிரச்சினையாக காட்டுவதோ மோசடித்தனமானது.

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் வருவாய்த்துறை, போலீசு உள்ளிட்ட அரசு நிர்வாகம் முழுவதையும் இயக்கும் அதிகார மையமாக வைகுண்டராசனின் நிறுவனம் இருப்பதால், மணற்கொள்ளை முதல் குண்டு வீச்சு வரையிலான எந்தக் கிரிமினல் குற்றத்துக்காகவும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. கோடிக்கணக்கில் பொதுச்சொத்தைக் கொள்ளையடித்து, இயற்கை வளங்களை நாசமாக்கிய இந்த தேசத்துரோகிகளைச் சட்டத்தின் சுண்டுவிரல் கூட இதுவரை தீண்டவில்லை.   சாதாரண மீனவ மக்கள்தான் குற்றவாளிகளாக்கப் படுகின்றனர். சிறை வைக்கப்படுகின்றனர். குண்டு வெடிப்புகளிலும் மோதல்களிலும் உயிரிழக்கின்றனர்.

சுனாமி காலனியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் மீது வழக்கு போட்டிருப்பதாக இன்று காலை போலீசு தெரிவித்தது. அவர்கள் மீது வழக்குப் போடப்படவில்லையென இன்று மாலை போலீசே மீண்டும் அறிவித்திருக்கிறது. எவ்வளவு சர்வ சாதாரணமாக பொய்வழக்குகள் போடப்படுகின்றன என்பதற்கு இதுவே சான்று.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைப் பயன்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தையும், தாது மணல் கொள்ளையை எதிர்க்கும் மக்களையும் ஒடுக்குவது என்பதுதான் போலீசின்  நோக்கம். முஸ்லீம்களுக்கு எதிரான அரச வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்காக மாலேகான் குண்டுவெடிப்பை ஆர்.எஸ்.எஸ் அரங்கேற்றியதைப் போல, மணற்கொள்ளையை எதிர்க்கும் மக்கள் மீது பொய்வழக்குப் போட்டு ஒடுக்குவதற்காக கடலோர கிராமங்களில் தாது மணல் மாஃபியாவே பல குண்டு வெடிப்புகளை அரங்கேற்றக்கூடும்.

மணல் மாஃபியாவுக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் மட்டும்தான் கரையோர மக்களின் வாழ்வாதாரங்களையும் கிராமங்களின் அமைதியையும் பாதுகாக்க முடியும். மீனவ மக்களின் அநியாயமான உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்.

இவண்
அ.முகுந்தன்,
ஒருங்கிணைப்பாளர்.