privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கரவுடி ஓம்சக்தி சேகரை கண்டித்து புதுவையில் ஆர்ப்பாட்டம் !

ரவுடி ஓம்சக்தி சேகரை கண்டித்து புதுவையில் ஆர்ப்பாட்டம் !

-

புதுச்சேரி பு.ஜ.தோ.மு தோழர்களை தாக்கிய அ.தி.மு.க எம்.எல்.எ ரவுடி ஒம்சக்தி சேகரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

புதன் கிழமை, 11-12-2013 காலை 10 மணிக்கு புதுச்சேரி அண்ணா சிலை அருகில்

notice-4

தோழர்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த தாக்குதல் பல்வேறு ஜனநாயக சக்திகளையும்,அமைப்புகளையும் ஒன்றிணைத்துள்ளது. தோழர்கள் தாக்கப்பட்ட செய்தி பத்திரிக்கைகளில் வெளி வந்த அன்றே சிபிஐ (எம்எல்), அ.இ.பார்வார்டு பிளாக், ஆர்.எஸ்.பி, மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, புதுவை மாணவர் கூட்டமைப்பு, தி.க, பெ.தி.க., பெரியார் சிந்தனையாளர் இயக்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, பண்டிதர் அயோத்திதாசர் பேரவை, தந்தை பெரியார் திராவிட கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் ஆகிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு கட்டினர்.

இவர்கள் அனைவரும் இந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்கள். மேலும் சேகரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் கூட்டமைப்பை கூட்டி, “அந்த கூட்டமைப்பில், புஜதொமுவையும் கலந்து கொள்ளுமாறும், ஜனநாயக உரிமை பறிக்கப்படுவது, கருத்துரிமை பறிக்கப்படுவது ஆகியவற்றிற்கு எதிராக நாமனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்” எனவும், “எம்எல்ஏ ஓம்சக்தி சேகரை தண்டித்தே தீர வேண்டும்” எனவும் வலியுறுத்தப்பட்டது.

தோழர்கள் தாக்கப்பட்டு ஒருவார காலமாகியும், அனைத்து ஆதாரங்கள் இருந்தும் போலீசு ஓம்சக்தி சேகர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த கிரிமினலை பாதுகாக்கும் காவல்துறையை கண்டிக்கிற வகையில் ஒருபக்கம் புஜதொமுவின் சார்பாக போலீசு உயர் அதிகாரிகளையும், சபாநாயகர் அவர்களையும் சந்தித்து புகார் மனு கொடுக்கப்பட்டது, இருந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை கண்டிக்கும் வகையிலும், ஏற்கெனவே ஓம்சக்தி சேகர் மீது 33 கிரிமினல் புகார்கள் இருந்தும் அதில் 6 புகார்கள் மீது மட்டுமே முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது, அதன் மீதும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, அது தொடர்பான தகவல்களைத் திரட்டியும் கூட்டமைப்பின் சார்பாக எழுதப்பட்ட புகார் மனுவோடு இணைக்கப்பட்டு IG, DIG, SP, ஆகியோரை சந்தித்து கொடுத்து பிரச்சினை செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இன்னொரு பக்கம் ஓம்சக்தி சேகரின் பகுதிக்குள்ளேயே புகுந்து புஜதொமு தோழர்களால் ஓம்சக்தி சேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சாரத்தின் போது அடித்தால் ஓடி விடுவார்கள் என நினைத்தால் நமது பகுதிக்கு உள்ளேயே வந்து பிரச்சாரம் செய்கிறார்களே என அஞ்சி தோழர்களின் மன உறுதியைக்கண்டு வேறெதும் செய்ய இயலாமல் காவல்நிலையம் சென்று போலீசுக்கு அழுத்தம் கொடுத்தனர். உடனே போலீசு, “தோழர்களிடம் வந்து இங்கு பிரச்சாரம் செய்யாதீர்கள், வேறு பகுதியில் பிரச்சாரம் செய்யுங்கள்” என வலியுறுத்தியது. தோழர்கள், “நாங்கள் இங்கேதான் செய்வோம்” என உறுதியாக பதிலுரைத்தனர்.

“நாங்கள் தாக்கப்பட்டு ஒரு வாரம் காலமாகியும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும்போது நாங்கள் ஏன் இதை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்யக்கூடாது” என கேட்டவுடன், போலீசு,”நாங்கள் FIR போடுகிறோம் நீங்கள் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்” என்றார்கள். தோழர்கள், ’நீங்கள்  FIRயை போடுங்கள்,  நாங்கள் பிரச்சாரத்தை நிறுத்துகிறோம்’ என கூறி பிரச்சாரத்தை முழுமையாக செய்து முடித்தனர்.

அதன் பிறகு,  143, 149, 294 323, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது, ஜனநாயக சக்திகளின் அழுத்தத்தாலும், தோழர்களின் தொடர் பிரச்சாரத்தாலும் எம்எல்ஏ சேகருக்கு விழுந்த முதல் அடி.

அடுத்த அடி காத்திருக்கிறது……………….. காத்திருங்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் கலந்துகொள்ளுமாறும், இது போன்ற ரவுடி ஏவல் நாய்களுக்கு அஞ்சாமல் தில்லை கோயிலில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டவும் அறைகூவல் விடுக்கிறோம்.

நோட்டிஸ்

பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண் :
புஜதொமு
புதுவை