privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பாரதி அவலம்

-

( பாரதி திரைப்படம் குறித்து தோழர் மருதையன் எழுதிய இந்த விமரிசனக் கட்டுரை 2000-ம் ஆண்டு அக்டோபர் மாத புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது. )

வெற்றியின் ரகசியமாக தமிழ்த் திரையுலகத்தினர் பயபக்தியுடன் உச்சரிக்கும் சென்டிமென்ட் எனும் மந்திரச் சொல்லை நாராக வைத்து பாரதியின் வாழ்க்கையைத் தொடுத்திருக்கிறார் ஞான. ராஜசேகரன்.

பாரதி திரைப்படம்ஏதோ ஒரு அநாதையின் மரணத்தைப் போலப் புறக்கணிக்கப்பட்ட பாரதியின் மரணம் – இந்தப் புறக்கணிப்பு தோற்றுவிக்கும் அவலம் – இந்நிலைக்கு பாரதியை ஆளாக்கிய ச­மூகத்தின் மீது குற்றச்சாட்டு – என்று தெளிவான முன்னுரையுடன் தொடங்குகிறது படம்.

முன்னுரையின் கூற்றை உறுதி செய்வதற்கு ஏற்ற முறையில் கட்டுரையின் – அதாவது திரைப்படம் எனும் கட்டுரையின் – உடல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

“நான் காலத்தை மீறிக் கனவு கண்டேன்; அதன் விளைவை அனுபவித்தேன். நீ அவ்வாறு சிந்திக்காதே” என்று தந்தை தனயனுக்குக் கூறும் அறிவுரையுடன் தொடங்குகிறது படம். அறிவுரையைக் கேட்கத் தவறிய பாரதி அதன் விளைவுகளை அனுபவிக்கிறான். வறுமை, குடும்பத்தில் சச்சரவுகள், சாதிப் புறக்கணிப்பு, போலீசு தொல்லை… என்று துன்பங்கள் தொடர்கின்றன.

முறுக்கிய மீசையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட பாரதி, துயரத்திற்கும், கோபத்திற்கும், சமரசத்திற்கும் ஆட்படுகின்ற சாதாரண மனிதனாகவும் இருந்தான் என்ற சித்தரிப்பு, பாத்திரத்தின் மீது ஒரு வகையான நம்பகத் தன்மையையும் அதை விஞ்சுகின்ற அளவு அனுதாபத்தையும் ரசிகனிடம் தோற்றுவிக்கின்றது. இதில் ஷிண்டேயின் நடிப்பு கூடுதல் பங்காற்றுகிறது.

இறுதிக் காட்சியில் மீண்டும் இடுகாடு; பாரதியை வேட்டையாடிய ச­மூகத்தின் மீது மீண்டும் சாடல், “உங்கள் மத்தியிலும் பாரதிகள் இருக்கக் கூடும்; அவர்களைப் பின்பற்றா விட்டாலும் அங்கீகரியுங்கள்” என்ற கோரிக்கையுடன் படம் முடிகிறது.

****

ரலாற்றில் பாரதி இடம்பெறக் காரணம் அவனது கவிதை. கவிதைக்கும் கவிஞனுக்கும், கவிதைக்கும் ச­மூகத்திற்கும், கவிஞனுக்கும் ச­மூகத்திற்கும் இடையிலான உறவை ஆய்வு செய்வதன் ஊடாக அவனது வாழ்க்கை கூறப்பட்டிருக்க வேண்டும். இவற்றில் கவிஞனின் வாழ்வுக்கும் அவனது படைப்பு ஆளுமைக்கும் இடையிலான உறவை பரிசீலிப்பதுதான் மிக முக்கியமானது.

ஆனால் காலவரிசைப்படி பாரதியின் வாழ்வில் நடைபெற்ற சில சம்பவங்களின் ஊடாக அவன் வாழ்ந்த காலத்தைச் சித்தரிக்கிறது திரைப்படம். இதன் விளைவாக பாரதி அதிமனிதன் ஆகிறான். ச­மூகமோ வில்லனாகிறது.

பாரதியின் குழந்தைப் பருவ நடவடிக்கைகளாகட்டும், பூணூல் அறுத்த பாரதியை அவனுடைய அக்காள் கணவரும், மன்னரும் ஞானியென்று வியப்பதாகட்டும், நண்பன் ஆர்யாவின் புகழுரை ஆகட்டும் அனைத்தும் பாரதியை ஒரு “அவதார புருசனாக” உயர்த்துகின்றன. படத்தைப் பொறுத்தவரை பாரதி தன் கவிதை ­மூலம் “மகாகவி” ஆகவில்லை; மகாகவியாகவே பிறக்கிறான்.

“எப்பேர்ப்பட்ட மனுசனுக்கு இந்த நிலைமை பாரு” என்று படம் முடிந்தவுடன் பேசிக் கொண்டார்கள் இரண்டு மாமிகள். ஒரு மாமனிதன் சராசரிகளால் வேட்டையாடப்படும் போது பிறக்கும் அவலம்தான் படம் உருவாக்கும் உணர்ச்சி.

இதனால் தேசத்தின் அவல நிலையைக் காட்டிலும் தேசிய கவியின் அவல நிலை பெரிதாகி விடுகிறது. தீண்டாமை எனும் ச­மூகக் கொடுமையைக் காட்டிலும், அதை எதிர்க்கும் கதாநாயகனின் மீதான கொடுமை பெரிதாகி விடுகிறது.

பாரதிபாரதியின் அவலம் என்று ஒன்று உண்டா? உண்டென்றால் அதற்கு அவனை ஆளாக்கியது அவன் வாழ்ந்த ச­மூகமா? “சாதியை எதிர்த்தான், பெண் விடுதலையைப் பாடினான்; தேச விடுதலையைப் பாடினான் – கம்பீரமான கவிஞனாக இறந்தான்” என்று சொல்ல முடியாமற் போன காரணமென்ன?

அவன் வாழ்ந்த காலத்திலேயே அவனுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதுதான் காரணமா? அல்லது சாவுக்குக் கூட ஆயிரக் கணக்கானோர் திரளவில்லை என்பதா? அல்லது சொந்த சாதிப் பார்ப்பனர்களால் துன்புறுத்தப்பட்டான் என்பதா – இவையெல்லாம் அவலத்தின் காரணங்களாகி விடுமா?

கொண்ட கொள்கைக்காக நஞ்சருந்திச் செத்தான் சாக்ரடீஸ்; தூக்கில் தொங்கினான் பகத்சிங்; போர் வீரர்களுடன் வீரனாக செத்துக் கிடந்தான் திப்பு சுல்தான். கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டான் நக்சல்பாரிக் கவிஞன் சரோஜ் தத்தா. இவர்களது மரணம் எதுவும் அவலமாகக் கருதப்படவில்லை; சித்தரிக்கப்படுவதுமில்லை.

வாழும் காலத்திலேயே மக்கள் அங்கீகாரம் கிடைத்ததா, சாவுக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்பதெல்லாம் அவலத்தை அளக்கும் அளவு கோல்களல்ல; “காலத்தை மீறி” கனவு காணும் ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்து மக்களால் புறக்கணிக்கப்படுவதையும், ஏளனம் செய்யப்படுவதையும் எதிர்பார்த்துத்தான் அவ்வாறு கனவு காண்கிறான்.

பாரதியிடம் நாம் காணுகின்ற பிரச்சினை அவனுக்கும் ச­மூகத்திற்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால் விளைந்ததல்ல; தன்னுடைய கவிதையின் உணர்வில் அவனால் ஏன் வாழ முடியவில்லை என்பதுதான் விடை தேட வேண்டிய கேள்வி. கவிதையின் கனவுலகில் வாள் சுற்றிய பாரதி அரசியலின் நனவுலகில் சரணடைகிறான். அவன் எழுதிய கவிதை வரிகளால் மற்றவர்கள் எழுச்சி பெற்ற தருணத்தில் அவன் எதிரிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.

இந்தச் சுயமுரண்பாட்டையே அவலமாகவும், அந்த அவலத்திற்குக் காரணம் அவனைப் புறக்கணித்த ச­மூகம் என்றும் வியாக்கியானம் செய்கிறார்கள் பாரதி அபிமானிகள். திரைப்படமும் அதைத்தான் செய்கிறது.

“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரை என்ற காலமும் போச்சே” என்று பாரதி பாடியவுடனே தருப்பைப் புல்லை பார்ப்பனர்களும், துப்பாக்கியை வெள்ளைக்காரனும் கீழே போட்டுவிட வேண்டுமோ?

பாரதிஅல்லது திரைப்படத்தின் முடிவுரை கோருவது போல கவிஞனைப் “பின்பற்ற முடியாவிட்டாலும் அங்கீகரிக்க” வேண்டுமோ? இல்லையென்றால் கவிஞர்கள் “அவலநிலைக்கு” ஆளாகி விடுவார்களோ?

பாரதியின் முரண்பாட்டை அனுதாபத்துடன் பார்க்க வேண்டும் என்று கூறும் கவிஞர்களும் அறிஞர்களும் உண்மையில் தங்களுடைய இரட்டை நிலையை அனுதாபத்துடன் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் இப்படி நாசூக்காக வெளிப்படுத்துகிறார்கள்.

அவலச் சுவை ததும்பும் இந்த “மனநிலையை’ நீங்கள் மேலும் சீண்டினால் அதிகாரத் தொனியில் கவிஞர்களின் “பகுத்தறிவு” பேசத் தொடங்கும்.

“கவித்துவத்தை மட்டும் வைத்துத்தான் கவிஞனை மதிப்பிட வேண்டும். “உன் கவியுணர்வுக்கு நீயே விசுவாசமாக இல்லாதது ஏன்’ என்றெல்லாம் கேட்கக் கூடாது. படைப்பு வேறு – படைப்பாளி வேறு” என்று அகந்தையுடன் சீறுவார்கள்.

கவித்துவ மனநிலையில், கவிதையில் வெளிப்படும் கவிஞனின் அகந்தைக்கும், கவிதை முடிந்தபின் யதார்த்த வாழ்க்கை குறித்து எழும் கேள்விகளுக்குப் பதிலிறுக்கும்போது அவனிடம் வெளிப்படும் அகந்தைக்கும் பாரிய வேறுபாடு உள்ளது.

“வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேனென்றி நினைத்தாயோ” என்ற கவிதை வரியில் “விழமாட்டோம்” என்று கூறும் ஒரு வர்க்கம்/ச­கக் குழுவின் மனவுணர்வு கவிஞனின் வழியாகப் பேசுகிறது.

“ஏன் விழுந்துவிட்டாய்” என்று பிறகு கவிஞனை நோக்கி கேள்வி கேட்கப்படும்போது அவனிடமிருந்து வரும் பதில் அவன் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் உணர்வு நிலையிலிருந்து வருவதில்லை. அவனது தனிப்பட்ட உணர்விலிருந்து வருகிறது. தனிநபரின் அகந்தையாக வருகிறது. “படைப்புக்கு படைப்பாளி விசுவாசமாக இருக்கத் தேவையில்லை” என்று பதில் வருகிறது.

உணர்ச்சி வயப்பட்ட நிலையில் விசுவாமித்திரன் உருவாக்கிய கள்ளக் குழந்தையாகி விடுகிறது கவிதை. அதை வாசகர்களாகிய மேனகைகள்தான் தூக்கித் திரிய வேண்டும்.

“வெட்டி வீழ்த்த வா” என்ற கவிஞனின் வரிகளை நம்பி (அதாவது அந்த மன உணர்வுக்கு ஆட்பட்டு) நீங்கள் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், கவிஞர் எதிரிக்கு முதுகு சொறிந்து கொண்டிருக்கலாம். கனவில் எழும்பும் முனகல் போல அவர் வெளிப்படுத்திய கவிதையை, அழகிய கண்கொண்டு ரசிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அறிவியல் கண்கொண்டு அதற்கு கவிஞனிடம் விளக்கம் கோரக் கூடாது.

இது சாத்தியமா? அப்படி என்னதான் சிறப்புத் தகுதி கவிஞனுக்கு? காட்சி அனுபவத்தையும் மனவுணர்வையும் வார்த்தைகளில் சிறைப்பிடிக்கும் நுட்பம்தான் கவிஞனின் சிறப்புத் தகுதியா? எனில் அத்தகைய கவிஞனை “வார்த்தை வித்தகர்” என்று அழைக்கலாமே!

பாரதிதனது கவித் திறனும் படைப்பின் அழகியலும் போற்றப்படும் இடத்தில் தனது கவிதையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கவிஞன்,

வேறு வார்த்தைகளில் சொன்னால் தன் பலத்துக்காக மீசையை முறுக்கும் கவிஞன், பலவீனம் குறித்துப் பேசும்போது “விட்டு விடுதலையாகி நற்பது’ ஏன்?

தனது கவியுணர்வில் ஒரு கவிஞன் தொடர்ந்து வாழ முடியாமல் போவதும், தான் கூறிக்கொண்ட கொள்கை வழியில் ஒரு மனிதன் செயல்பட முடியாமல் போவதும் பலருக்கும் ஏற்படும் அனுபவம்தான். இந்த முரண்நிலை குறித்த கேள்விக்குச் சாமானியர்கள் கூட ச­மூகத்திற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அறிஞர்களும், கவிஞர்களும் ச­மூகத்திற்குப் பதில் சொல்வதுடன் தமக்குத் தாமே விடைதேடும் சுயபரிசீலனையிலும் ஈடுபட வேண்டும்.

தம்மை அதிமனிதர்களாகக் கருதிக் கொள்ளும் கவிஞர்கள் இதற்கு விடை சொல்லாமல் மவுனம் சாதித்தாலோ அவர்களது “ஆளுமை’ உடைந்து நாெறுங்கி விடும். எனவே “ச­மூகம்தான் தனது வீழ்ச்சிக்குக் காரணம்” என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

ஞான. ராஜசேகரனும் இதைத்தான் செய்கிறார். பாரதியின் சுய முரண்பாடுகள் குறித்து இயக்குநரின் மனதில் ஐயமிருந்திருப்பினும், திரைப்படத்தில் அவற்றைச் சித்தரிக்கும் துணிவு அவருக்கில்லை. எனவே, ஆளும் வர்க்கங்களாலும், பாரதி அபிமானிகளாலும் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் பாரதியின் தோற்றத்திற்கு  பக்க வாத்தியம் வாசிக்கிறது திரைப்படம்.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வோரென்றும், வாய்ச் சொல் வீரரென்றும் காங்கிரசு மிதவாதிகளைச் சாடிய பாரதி,

ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டு நாடே கிளர்ந்தெழுந்த தருணத்தில் “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்ட” கோழையாக ஆனது எப்படி என்ற கேள்விக்கு விடையில்லை.

உண்மையான எதிரியாகிய வெள்ளையனிடம் சரணடைந்த கோழைத்தனத்தை மறைத்து, “காலா… உனைக் காலால் உதைப்பேன் வாடா” என்று கற்பனை எதிரியை எட்டி உதைக்கும் இறுதிக் காட்சி பாரதியின் அவலமாக ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டாலும், சினிமாத்தனமான மோசடியின் சிகரமாக அது அமைகிறது.

***

திரைப்படம் பாரதியை அதிமனிதனாகச் சித்தரித்த போதிலும் பாரதியின் முரண்பாடுகள் குறித்த விவாதம் இலக்கிய உலகில் ஏராளமாக நடந்துள்ளது. இருப்பினும் பண்டித நடையிலிருந்து தமிழை மீட்டதும், தேச விடுதலையைப் பாடியதும், கவிதைகளின் வீச்சும் இனம்புரியாத தடுமாற்றத்தை ஏற்படுத்தி “என்ன இருந்தாலும்…” என்று பலரை இழுக்க வைக்கிறது. “இப்படி இருந்திருக்கக் கூடாதா” என்று சிலரை ஏங்கவும் வைக்கிறது.

பார்ப்பன இந்து தேசியத்தைக் கனவு கண்ட கவிஞன் என்று பாரதியைப் பற்றி நாம் கூறினால் அது துடுக்குத்தனமான அரைவேக்காட்டுத்தனமான மதிப்பீடு என்று எரிச்சலடைவோர் உண்டு. அப்படியானால் பார்ப்பானை எதிர்த்ததும், சாதியை மறுத்ததும், பெண் விடுதலையைப் பாடியதும் இந்து தேசியவாதி செய்யக் கூடிய/பாடக் கூடிய விசயங்களா என்று மடக்குவோரும் உண்டு.

இந்து தேசியவாதிகள் எனப்படுவோர் இராம. கோபாலனைப் போலவோ, அசோக் சிங்காலைப் போலவோதான் இருக்க வேண்டும் என்று கருதுவோர் வரலாற்றையும், தனி நபரையும் மதிப்பிடத் தெரியாதவர்கள். “தவறான கட்சியில் சரியான நபரா – எப்படி?” என்று வியக்கும் தி.மு.க.வினருக்கு ஒப்பான அறிவாளிகள். ஆரிய சமாஜத்தின் பார்ப்பன எதிர்ப்பு, விவேகானந்தரின் பார்ப்பன எதிர்ப்பு, காந்தியின் அரிசன முன்னேற்றம் என்று பலவிதமான வண்ணச் சேர்க்கைகளில் அன்றைய காலகட்டத்தில் பிறந்த இந்து தேசியவாதம் பாரதி எனும் கவிஞன் ­மூலமும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

இந்து தேசியத்தைக் கனவு காணும் வாய்ப்புப் பெற்ற பார்ப்பனச் சாதியில் பிறந்த, சமஸ்கிருதக் கல்வி கற்ற பாரதி, ஆங்கிலக் கல்விக்கும் ஷெல்லி, விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளுக்கும் அறிமுகமாகின்றான். காலனியாதிக்க எதிர்ப்பென்பது கருத்தளவில் மட்டுமின்றி, வெள்ளையனால் ஏமாற்றப்பட்ட தந்தையின் மரணம் எனும் சொந்த அனுபவத்தினூடாகவும், நாம் இன்னதென்று அறியாத பிற காரணிகளாலும் அவனிடம் உணர்ச்சி வேகம் பெறுகிறது.

அவனுக்குள் இருந்த முரண்பட்ட எதிர்த் துருவங்களான பார்ப்பனியமும் ஜனநாயகக் கருத்துகளும் ஒன்றுடன் ஒன்று கணக்குத் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். மாறாக வேதமரபு, பழம் பெருமை ஆகியவற்றைச் சீர்திருத்தி ஜனநாயகப்படுத்துகின்ற சிந்தனைதான் பாரதியிடம் மேலோங்குகிறது. ஜெர்மனியின் நிலை குறித்து கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும் குறிப்பிடுவது இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.

“ஜெர்மன் இலக்கிய விற்பன்னர்களது பணி, புதிய பிரெஞ்சுக் கருத்துக்களைத் தமது பண்டைய தத்துவவியல் மனச்சான்றுக்கு இசைவாய் வகுத்திடுவதில், அல்லது இன்னும் கறாராய்ச் சொல்வதெனில் தமது சொந்தத் தத்துவவியல் கண்ணோட்டத்தைத் துறந்து விடாமல் பிரெஞ்சுக் கருத்துக்களைக் கிரகித்துக் கொள்வதில் அடங்கி விடுவதாகியது.”

சிதைந்து கொண்டிருந்த பார்ப்பனப் பழமையிலிருந்து அன்று வீறு கொண்ட கவிதைகள் பிறக்க வாய்ப்பே இல்லை. கையறு நிலையையும் அவலத்தையும் பிழிந்து தருகின்ற, கவிநயமில்லாத, இசையில் சரணடைந்த பார்ப்பனியத்தின் மனவுணர்வை தியாகய்யரிடம் காணலாம்.

பாரதியின் உள்ளே நுழைந்த புதுமை, கவிதைக்கான உள்ளுணர்வைத் தோற்றுவிக்கப் போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் கவிஞனுக்குள்ளே கனவு போலப் பாய்ந்து பெருகும் கவிதையுடன் அவன் வாழ்வு முடிந்து விடுவதில்லை. கவிதை முடிந்த பின்னும் கவிஞன் இருக்கிறான். அவனுக்கு வசப்படாத, அவனுடைய விருப்பத்துக்கு எதிராக இயங்குகின்ற புற உலகை அவன் சந்தித்தாக வேண்டும். அதன்மீது அறிவு பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டாக வேண்டும்.

ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் பாரதி வெளியிட்ட அரசியல் கருத்துக்களும், அவனது வாழ்க்கையும் பரிசீலிக்கப்பட்டால் இதனைப் புரிந்து கொள்ள இயலும்.

முற்போக்கான கவிதைகள் என்று கூறப்படும் கவிதைகளைப் பாடிய போதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்து தேசியம்தான் அவனது அரசியலாக இருந்தது. மிதவாதத்தை எதிர்த்த போதும் திலகருடன் அரசியல் களத்தில் பாரதி இறங்கவில்லை. வங்காளத்துத் தீவிரவாதிகளின் பாதையையும் பாரதி நிராகரித்தான். பிறகு மிதவாதத்திற்கு மாறினான். இறுதியில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைக் கூடக் கண்டிக்குமளவுக்கும், பூரண விடுதலை கோரவில்லை என்று கூறும் அளவுக்கும் கீழிறங்கினான்.

தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவித்தார்; முஸ்லீம் கடையில் டீ குடித்தார்; சுருட்டு பிடித்தார்; மீசை வைத்தார்; பூணூலை அறுத்தெறிந்தார்; அல்லாவுக்குப் பாட்டு எழுதினார்… என்று பாரதியின் மேன்மைகளைப் பட்டியலிட்டு பாரதியின் வாழ்வும் அவனது படைப்பு ஆளுமையும் பிசிறின்றி ஒன்றிணைந்திருந்தன என்று நிரூபிக்க முயல்வது பாமரத்தனம் அல்லது ஏமாற்று வித்தை.

கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டிய பாரதி வருண தருமத்தை மீண்டும் நிலை நாட்டுவதையே தனது கொள்கையாகக் கொண்ட வ.வே.சு. ஐயருடன் நண்பனாக இருந்தார். காந்திக்காகத் தனது கூட்டத்தை ஒரு நாள் கூடத் தள்ளி வைக்கச் சம்மதிக்காத “கம்பீரமான’ பாரதி மகளின் திருமணத்திற்காகப் பூணூலை மாட்டிக் கொண்டார். சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கொரு நீதி என்றெழுதிய பாரதி, “என்னைப் போன்ற (பார்ப்பன) குலத்தில் பிறந்த மனிதனுக்கு சிறைவாசம் எத்தனை கடினமானது” என்று பிரிட்டிஷ் ஆளுனருக்கு எழுதிக் கொடுத்த மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். “இனி அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பிணையில் வெளிவந்த பாரதி எட்டையபுரம் போய் “என்னைப் போல் கவிஞனில்லை” என்று மீசையை முறுக்குகிறார். மன்னனுக்குச் சீட்டுக்கவி அனுப்பிப் பணம் கேட்கிறார்.

இவற்றையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? எந்தத் தராசைக் கொண்டு எடை போடுவது? வியந்து கூறத்தக்க சில சம்பவங்களையும் முகம் சுளிக்கத்தக்க சில சம்பவங்களையும் ஒப்பு நோக்கிப் பார்ப்பதை விட, இவையனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த ஒரு மனிதனின் ஆளுமையை இயக்கிச் சென்றது எது என்ற கேள்விக்கும், அவனது ஆளுமை முன்னோக்கிச் சென்றதா வீழ்ந்து கொண்டிருந்ததா என்ற கேள்விக்கும்தான் நமக்கு விடை வேண்டும்.

முரண்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருந்த இந்தக் கவிஞன் தனது சுய முரண்பாட்டைத் தானே எதிர்கொள்ளும் மனநிலையில் எத்தகைய கவிதையைப் படைத்தான்?

பாரதிக்கு வெளியே ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் மீண்டும் கிளர்ந்தெழத் தொடங்கிய தருணத்தில் பாரதி மிதவாதத்தைத் தன் அரசியலாகத் தேர்ந்தெடுத்தான். தனது நலனுக்கு உகந்த பாதையே இத்தேசத்தின் நலனுக்கு உகந்த பாதை என்று கூறுமளவு தாழ்ந்தான். மிதவாதிகளை “நடிப்பு சுதேசிகள்’ என்றும் “பயக்கட்சி’ என்றும் “விண்ணப்பக் கட்சி’ என்றும் சாடிய பாரதி பஞ்சதந்திரக் கதையைக் காட்டித் தன் நிலையை நியாயப்படுத்தினான்.

பகத்சிங் என்றொரு கவிதையை ஜாலியன் வாலாபாக் பெற்றெடுத்த தருணத்தில் பாரதியின் கவிதை மாயாவாதத்தில் ­மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தது. மாயாவாதக் கவிதைக்கும் பாரதியின் மிதவாத சமரச அரசியலுக்கும் உள்ள உறவைத் தற்செயலானது என்று யாரேனும் கூற முடியுமா?

பாரதியுடைய கவிதையின் சீற்றத்தையும் அவனது தடுமாற்றத்தையும் அனுதாபத்துடன் பரிசீலிப்பதாயின், காந்தியின் அரசியலையும் அனுதாபத்துடன் பரிசீலிக்க வேண்டியிருக்கும். உணர்ச்சித் தளத்தில் இயங்கும் கவிதை மேக ­மூட்டம் போன்றது. எத்தனை ஊடுருவிப் பார்த்தாலும் ஒரு வரம்பிற்கு மேல் பார்வை செல்லாது.

இருப்பினும் நமக்கு உதவும்படியாக, பாரதி விட்ட இடத்திலிருந்து காந்தி தொடங்குகிறார். பாரதியின் சக்தி காந்தியின் ராமனாகவும், கனகலிங்கம் அரசனாகவும், அல்லா பாட்டு “ஈசுவர அல்லா தேரே நாம்’ ஆகவும், பாரதியின் போல்ஷ்விக் எதிர்ப்பு – சோசலிச ஆதரவு காந்தியின் தர்மகர்த்தா முறையாகவும் மறுபிறப்பெடுக்கின்றன. கவிஞனின் “அவலம்” அரசியலுக்கு மொழி பெயர்க்கப்படும்போது அது காந்தியின் தந்திரமாகி விடுகிறது. மகா கவியைத் தொடர்ந்து ஒரு மகாத்மா வருகிறார்.

தங்கள் அவலத்தை யதார்த்தமாக எடுத்துக் கொண்ட சாதாரண ஆத்துமாக்களோ மகாகவியின் அவலத்திற்கும் மகாத்துமாவின் அவலத்திற்கும் கண்ணீர் சிந்துகிறார்கள்.

“என்னதான் இருந்தாலும் பாரதியின் ஆளுமை இதுவல்ல” என்று கூறுவோர் முன், மார்க்ஸின் மேற்கோள் ஒன்றை மீண்டும் சமர்ப்பிப்போம் :

“கவிஞர் பைரனுக்கும் ஷெல்லிக்கும் இடையிலான வேறுபாடு இதுதான்; அவர்கள் இருவரையும் புரிந்து கொண்டவர்களும் நேசிப்பவர்களும் இப்படித்தான் கருதுகிறார்கள். 36 வயதில் பைரன் இறந்தது நல்லது – அவன் மேலும் வாழ்ந்திருந்தால் பிற்போக்கான முதலாளியவாதியாக மாறியிருப்பான். மாறாக, 29 வயதில் ஷெல்லி இறந்தது வருந்தத் தக்கது; ஏனென்றால் அவன் வாழ்க்கை முழுதும் புரட்சியாளனாக இருந்தான். மேலும் வாழ்ந்திருந்தால் சோசலிசத்தின் முன்னோடியாக விளங்கியிருப்பான்”

– மார்க்ஸ் அடிக்கடிக் கூறுவார் என்று அவரது மகள் எலியனார் மார்க்ஸ் கூறியது.

நாம் இவ்வாறு கூறலாம். பாரதி மேலும் 30, 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பகத்சிங், பொதுவுடைமை இயக்கம், ஹெட்கேவார், பெரியார், அம்பேத்கர் ஆகிய அனைவரையும் எதிர் கொண்டிருப்பான்.

ஆனால் யாருடன் கைகோர்த்திருப்பான் என்பதைப் பாரதி அபிமானிகள் கூறட்டும்!

— மருதையன்
____________________________________
புதிய கலாச்சாரம் , அக்டோபர் 2000

____________________________________

  1. பாரதி ஒரு குமாஸ்தாவாகவோ வாத்தியாரகவோ இருந்திருக்கலாமே…அப்படி இருந்திருந்தால் எத்தகைய தொல்லையும் அவருக்கு இருந்திருக்காதே…
    ஏன் இருக்கவில்லை?

    //பாரதியின் சுய முரண்பாடுகள்
    இதைப்பற்றி திரைப்படம் அலசுவதில்லை…இது ஒரு அமர் சித்ர கதா போன்றே எடுக்கப்பட்டிருக்கின்றது…திரைப்படம் என்ற முறையில் இப்படம் பிரமாதமாக எதையும் சாதிக்கவில்லை…

    உலகத்திலுள்ள எல்லா விசயத்த்திலும் குற்றம் / குறை மட்டும் சற்று மிகுதியாக காணும் போக்கு கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்படுவது உண்டு…தோழரின் கட்டுரையிலும் அதைக்காண்கிறேன்…

    //ஆனால் யாருடன் கைகோர்த்திருப்பான் என்பதைப் பாரதி அபிமானிகள் கூறட்டும்!
    அனுமான வலையில் மற்றவர்களை சிக்க வைக்கப்பார்க்கிரார் தோழர்…

    தந்தை பெரியார் படமும் இவர் எடுத்துள்ளார்…அதையும் விமரிசிப்பாரா தோழர்?

  2. Pஆர்ப்பனனாக இருந்தால் அவன் எது செய்தாலும் அதற்கு உரிய மதிப்பு கொடுக்கததேவையில்லை என்
    ற தத்துவத்தில் எழுதப்பட்ட கட்டுரை.

    என்றாலும் புதிய கோணத்தில் இருந்தது.

  3. பாரதியை பார்ப்பனர்கள் புகழ்வதால் அவரை இழிவுபடுத்தியே ஆக வேண்டும் என்ற பார்ப்பன வெறுப்பு கட்டாயத்தால் இந்தக் கட்டுரை எழுதப்பட்டதா அல்லது போல்சுவிக் வழிமுறைகளையும், லெனினையும் பாரதி விமர்சித்தார் என்ற கோவத்தால் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை..

    எதுவாயினும் தோழர் மருதையனின் இந்த விமரிசனத்தை தொடர்ந்து அவரது பெரியாரிய சகா தோழர் மதிமாறன் எழுதிய ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி என்ற நூலை ஆதாரங்களுடன் விமரிசித்து திரு. ம.வெங்கடேசன் எழுதிய விரிவான கட்டுரைத் தொடர் தமிழ் ஹிந்து தளத்தில் ஏற்கனவே வந்திருக்கிறது.. :

    http://www.tamilhindu.com/2012/03/bharathi-greatness-and-false-defamations-1/

    மேலும் ஒரு சில கருத்துக்கள் :

    //பாரதியிடம் நாம் காணுகின்ற பிரச்சினை அவனுக்கும் ச­மூகத்திற்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால் விளைந்ததல்ல; தன்னுடைய கவிதையின் உணர்வில் அவனால் ஏன் வாழ முடியவில்லை என்பதுதான் விடை தேட வேண்டிய கேள்வி. கவிதையின் கனவுலகில் வாள் சுற்றிய பாரதி அரசியலின் நனவுலகில் சரணடைகிறான். அவன் எழுதிய கவிதை வரிகளால் மற்றவர்கள் எழுச்சி பெற்ற தருணத்தில் அவன் எதிரிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.//

    ஏன் எழுத மாட்டான்..?! அரசியல் கைதிகளை குற்றவாளிகள் போல் செக்கிழுக்க வைத்தும், தொழு நோய் வரைக்கும் கொண்டு வந்து விட்டும், மிகவும் அவமானகரமான முறையில் ஒடுக்கும் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக எதிர்பார்த்த வகையில் மக்களின் எழுச்சி ஏற்படவேயில்லை என்பதை கண்டவன் தானே பாரதி.. சுதந்திர விருப்பையும், சுயமரியாதை எண்ணங்களையும் அளவுக்கு அதிகமாக வளர்த்து வைத்திருந்த பாரதிக்கு ஆங்கிலேயனின் சிறையில் ஏற்படும் அவமானங்களை சகிக்கும் மனக்கட்டுப்பாடு இருந்திருக்கவில்லை.. பூனையில் கையில் சிக்கி அவமானப்பட்டு சின்னாபின்னமாவதை விட தன் கீதத்தை நிறுத்திக் கொள்வதாக கூறிவிட்டது அந்த குயில்..

    // இவற்றையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? எந்தத் தராசைக் கொண்டு எடை போடுவது? வியந்து கூறத்தக்க சில சம்பவங்களையும் முகம் சுளிக்கத்தக்க சில சம்பவங்களையும் ஒப்பு நோக்கிப் பார்ப்பதை விட, இவையனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த ஒரு மனிதனின் ஆளுமையை இயக்கிச் சென்றது எது என்ற கேள்விக்கும், அவனது ஆளுமை முன்னோக்கிச் சென்றதா வீழ்ந்து கொண்டிருந்ததா என்ற கேள்விக்கும்தான் நமக்கு விடை வேண்டும். //

    காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வந்த புலி தன் கம்பீரத்தைக் காட்டிவிட்டு வேட்டைக்காரர்களால் பிடிபட்டு சிறுத்துப் போவதை வெறுத்து மீண்டும் காட்டிற்குள் ஓடிவிட்டதாக எண்ணிக் கொள்ளவும்.. புலி பயந்து ஓடி விட்டது, இனி வேட்டைக்காரர்களே நம் எஜமான்கள் என்று மற்ற விலங்குகள் எண்ணிவிடாமல், நாமும் புலியாவோம் என்று துணிந்தால் வேட்டைக்காரர்கள் ஊரை விட்டு ஓடுவார்கள்.. இல்லையென்றால் நட்டம் புலிக்கல்ல..

    // “வெட்டி வீழ்த்த வா” என்ற கவிஞனின் வரிகளை நம்பி (அதாவது அந்த மன உணர்வுக்கு ஆட்பட்டு) நீங்கள் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், கவிஞர் எதிரிக்கு முதுகு சொறிந்து கொண்டிருக்கலாம். //

    விரும்பி முதுகு சொறியும் கவிஞர்களுக்கும், முதுகு சொறியாவிட்டால் விரல் இருக்காது என்று வலுக்கட்டாயமாக முதுகு சொறிய வைக்கப்பட்ட கவிஞர்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணரமுடியாவிட்டால், அடக்குமுறையாளன் மீது செலுத்தப்பட வேண்டிய சினம் அடக்கப்பட்டவனை ஏளனம் செய்து கொண்டிருக்க மட்டுமே பயன்படும்..

    // நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வோரென்றும், வாய்ச் சொல் வீரரென்றும் காங்கிரசு மிதவாதிகளைச் சாடிய பாரதி,

    ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டு நாடே கிளர்ந்தெழுந்த தருணத்தில் “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்ட” கோழையாக ஆனது எப்படி என்ற கேள்விக்கு விடையில்லை. //

    மீண்டும் சிறைக்குப் போகவா..?! வறுமையின் கொடுமைக்கும், சமூகத்தின் புறக்கணிப்புக்கும் அஞ்சாத பாரதி சிறைவாசத்தின் அவமானங்களை வெறுத்தான்.. சிறைவாசத்தின் மீது பாரதிக்கிருந்த இந்த அச்சத்தின் அடித்தளம், தன்னைப்பற்றி அவன் கொண்டிருந்த அளவுக்கதிகமான சுயமதிப்பு.. எதிரியிடம் பிடிபட்டு அவமானபடுத்தப்படுவதை விட தற்கொலை செய்து கொள்ளும் வீரர்கள் கோழைகள் என்றால், 1918-லேயே – ஜாலியன்வாலா பாகிற்கு முன்பே – தற்கொலை செய்துகொண்டுவிட்ட பாரதியும் கோழைதான்.. ஊமையாகிப் போன விடுதலைக் குயிலிடம் இரக்கம் வராமல் ஏளனம் மட்டுமே வருவது ஏனோ..?!

    // கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டிய பாரதி வருண தருமத்தை மீண்டும் நிலை நாட்டுவதையே தனது கொள்கையாகக் கொண்ட வ.வே.சு. ஐயருடன் நண்பனாக இருந்தார்.//

    பெரியார் ராஜாஜியுடன் நட்புடன் இருந்தால் அது போற்றப்படும்..

    // காந்திக்காகத் தனது கூட்டத்தை ஒரு நாள் கூடத் தள்ளி வைக்கச் சம்மதிக்காத “கம்பீரமான’ பாரதி மகளின் திருமணத்திற்காகப் பூணூலை மாட்டிக் கொண்டார். //

    பூணூலுடன் பாரதிக்கு என்ன பகை..?!

    // சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கொரு நீதி என்றெழுதிய பாரதி, “என்னைப் போன்ற (பார்ப்பன) குலத்தில் பிறந்த மனிதனுக்கு சிறைவாசம் எத்தனை கடினமானது” என்று பிரிட்டிஷ் ஆளுனருக்கு எழுதிக் கொடுத்த மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். //

    (பார்ப்பன) என்பது உங்கள் இடைச் செருகல்.. அதுவரை சுதந்திரமாக பறந்து கொண்டிருந்த பாரதி காக்கை, குருவி எங்கள் ஜாதி என்றும் பாடியிருக்கிறான்.. காக்கையையும், குருவியையும் கூண்டுக்குள் அடைத்தால் அவையும் இதைத்தான் பேசும்.. ஆனால் அது நம் காதில் விழாது..

    // “இனி அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பிணையில் வெளிவந்த பாரதி எட்டையபுரம் போய் “என்னைப் போல் கவிஞனில்லை” என்று மீசையை முறுக்குகிறார். மன்னனுக்குச் சீட்டுக்கவி அனுப்பிப் பணம் கேட்கிறார். //

    பாரதி தன் ஈகோவுக்காக அரசியலை விட்டதே சிறைவாசத்தின் அவமானங்களிலிருந்து தப்புவதற்குத்தானே.. வெள்ளைக்காரனுக்கு ஒரு பெரிய கும்பிடு என்று சேர்த்த கைகளை எட்டையபுரத்திலும் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ..?!

    // பாரதி மேலும் 30, 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பகத்சிங், பொதுவுடைமை இயக்கம், ஹெட்கேவார், பெரியார், அம்பேத்கர் ஆகிய அனைவரையும் எதிர் கொண்டிருப்பான்.

    ஆனால் யாருடன் கைகோர்த்திருப்பான் என்பதைப் பாரதி அபிமானிகள் கூறட்டும்! //

    அம்பேத்கருடன்..

  4. மகா க(கா)வி பாரதி யார்?
    கி.தளபதிராஜ்

    அகண்ட பாரதம் ஆரியநாடு!
    நால்வர்ணம் நாட்டுநலன்!
    பசுவதை தெய்வக்குற்றம்!
    இந்தி பொதுமொழி!
    சமஸ்கிருதம் தெய்வபாஷை!
    மதமாற்றம் தடைசெய்!

    RSS எனும் பச்சைப்பார்ப்பன இயக்கம் தோன்றும் முன்னரே இம் முழக்கங்களுக்கு சொந்தக்காரன்!.
    RSS இயக்கத்தின் முன்னோடி!.தன் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலதை கிறுக்கி தன்னை முற்போக்காளனாய் காட்டிகொள்ளும் வித்தையில், கை தேர்ந்தவன்!-ஆரிய சனாதன வெறிபிடித்த பாரதி, !.அதனால்தான்

    “வேதம் அறிந்தவன் பார்ப்பான்-பல
    வித்தை தெரிந்தவன் பார்ப்பான்”

    என்றான் போலும்!

    அகண்ட பாரதம் ஆரியநாடு!

    “உன்னத ஆரிய நாடெங்கள் நாடே”-என்றும்

    “வானாறு பேரிமய வெற்பு முதல்
    பெண்குமரி யீராகும் ஆரியநா டென்றே யறி!”-என்றும்

    இந்திய நாட்டை முன்று சதவீத பார்ப்பனர்களின் நாடாகப் பாடிமகிழ்ந்தான்!.

    “ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
    பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே”

    “வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
    ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்”. -என்று புலம்பினான்!.

    நால்வர்ணம் நாட்டுநலன்!

    பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும்.நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்ற வர்ணாஸ்ரம வெறிபிடித்த பாரதி

    “நாலு குலங்கள் அமைத்தான் – அதை
    நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்”-என்றான்.

    “நான்கினில் ஒன்று குறைந்தால்
    வேலை தவறிச் சிதைந்தே – செத்து
    வீழ்ந்திடும் மானிடச் சாதி”-என்று ஒப்பாரி வைத்தான்.

    சர்.பிடி.தியாகராயர்,டி.எம்.நாயர்,சி.நடேசனார் ஆகியோர் தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற பெயரில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை தோற்றுவித்தபோது, அதற்கு எதிர்வினையாற்றியவன் பாரதி!
    “பொய்யும் புனைவுமாகத் திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும்.இந்தப் பிராமணரல்லாதார் கிளர்ச்சி கால கதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன”என்றான்.

    பசுவதை தெய்வக்குற்றம்!

    “பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும்பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்தாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும்” என்று 1917 லேயே சுதேசமித்திரன் ஏட்டில் பசுவதை தடை கோரியவன் பாரதி!

    இந்தி பொதுமொழி!

    இந்தியாவின் தேசியமொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று 1906ல் “இந்தியா” வார ஏட்டில் “இந்திபாஷை பக்கம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதினான்.“தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். ஹிந்திப் பாஷையை எதிர்க்க என்ன அவசியம் இருக்கிறது என்று கேட்கிறோம். இந்தியா பலவித பிரிவுகளுடையதாய் இருந்த போதிலும் உண்மையிலே ஒன்றாய் இருப்பதற்கினங்க, அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும் ஹிந்தியும், தெலுங்கர் தெலுங்கும் ஹிந்தியும், பெங்காளத்தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்பார்களானால் நமக்குப் பொதுப்பாஷை ஒன்றிருக்கும்”. (பாரதி தரிசனம்)

    சமஸ்கிருதம் தெய்வபாஷை!

    செத்தமொழி சமஸ்கிருதத்தை தெய்வபாஷை என்று உயர்த்திப்பிடித்தவன் பாரதி!
    “நம் முன்னோர்களைப் பின்பற்றி புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் சமஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற சாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்”.(பாரதியார் கட்டுரைகள்)

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்கும் காணோம்”

    என்கிறப்பாடலைக்கூட பாரதி 1915 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்ச்சங்கத்தின் பரிசுப் போட்டிக்காக நண்பர்களின் வற்புறுத்தலினால் எழுதியதாக கூறப்படுகிறது.எனவே இப்பாடலும் பாரதிக்கு தமிழ்மேல் இருந்த காதலால் எழுதப்பட்டது அல்ல என்பது புலனாகிறது.

    மதமாற்றம் கூடாது!

    பஞ்சத்தில் பசியால் வாடிய மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவந்த கிருத்துவப்பாதிரியார்கள் மீது சீறிப்பாய்ந்தான் பாரதி.”எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்களையும், முக்கியமாக திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள்.

    ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை மீண்டும் நமது இந்து சமூகத்திலே சேர்க்க வேண்டும். (பாரதியார் கட்டுரைகள்)

    1921 இல் “லோக குரு பாரதமாதா” என்ற தலைப்பில் “இந்தியாவிற்குச் சுதந்திரம் கேட்பதே இந்து தர்மத்தைக் காப்பாற்றத்தான்” என்று எழுதியுள்ளான்.(பாரதியார் கட்டுரைகள்)

    பாரதியும் மீசையும்!

    பார்ப்பன தர்மத்திற்கு எதிராக மீசை வளர்த்தான் பாரதி என்று சிலாகிப்பர் சிலர்.பாரதியின் மீசை பார்ப்பன தர்மத்திற்கு எதிரானதா? தான் மீசை வளர்த்த கதையை அவரே சொல்கிறார்!.

    “வேத பூமியாகிய ஆரிய வர்த்தத்தில் பிராமணர்களில் மீசை இல்லாமலிருப்பது சாஸ்திர விரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவனுடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போனதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருஷங்களுக்கு முன்பு நான் ஸ்ரீகாசியில் ஜயநாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசிக்கப் போனேன். நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ்நாட்டுப் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகச்சவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.

    எப்போது பார்த்தாலும் இவன் மீசையை சிரைத்து விட்டு வருவதன் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளேயே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத்தீர்த்தான். ‘உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரம் தவறாமல் செத்துப் போய்க் கொண்டிருக்கிறீர்களா? என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதன் காரணத்தை அறிந்து கொண்டு, “அப்படியில்லையப்பா! தமிழ்நாட்டில் பிராமணர் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை என்று தெரிவித்தேன்.”என்கிறார். (பாரதியார் கட்டுரைகள்). எனவே வடநாட்டு ஆரியர்களின் கலாச்சார முறையைப் பின்பற்றியே பாரதி மீசையை வைத்துக் கொண்டார் என்பது தெரிகிறது.

    ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கோருவதும்,வெள்ளையன் கையில் அகப்படாமல் ஓடிஒளிந்து, தலைமறைவு வாழ்கை வாழ்வதுமாக இருந்த பாரதியின் மீசையை வீரத்தின் அடையாளமாக பலர் புகழ்வதைக்கண்டு எப்படி சிரிப்பது எனத் தெரியவில்லை!.

    “அச்சமில்லை அச்சமில்லை” என்று அவன் பாடியதை நினைக்கையில், கோழைகள் இருள் சூழ்ந்த பகுதிகளைக் கடக்கும்போது பயம் தொற்றிகொள்ளாமல் இருக்க உரத்த குரலில் பாடிகொண்டோ,பேசிகொண்டோ நடக்கும் பழக்கம் இன்றும் கிராமப்பகுதிகளில் உண்டு.அதுதான் நினைவிற்கு வருகிறது.பாரதியின் “அச்சமில்லை அச்சமில்லை” பாடலும் அந்தவகையில் எழுந்தது தானோ?

    பாரதி ஆராய்ச்சி!

    திராவிட இயக்கத் தோழர்களே கூட பாரதியின் ஒருசில பாடல் வரிகளை பார்த்துவிட்டு தவறான மதிப்பீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். 1937 லேயே “பாரதி ஆராய்ச்சி” என்ற தலைப்பில் குடியரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரை இதற்கு தக்க பதிலாக அமையும்!.

    “பாரதியை ஒரு தெய்வமாக பாவித்து, அவருடைய படத்துக்கு மாலைபோட்டு, தீப நெய்வேத்தியங்கூட சிலர் செய்கிறார்கள்.இப்படியெல்லாம் செய்வதற்கு காரணம் பார்ப்பனர்களின் சூழ்ச்சிப் பிரச்சாரமும், பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிகையுமே ஆகும்.

    இந்தக் கொண்டாட்டங்களுக்கு முக்கிய காரணம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதேயாகும்.ஒரு பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும் , ஒழுக்கங்கெட்டவனாயிருந்தாலும், துர்பழக்கமுடையவனாயிருந்தாலும், பேடியாயிருந்தாலும், பித்துக்குளியாய் இருந்தாலும் அவனைப்பற்றி அவனுடைய குற்றங்களையெல்லாம் மறைத்து “இந்திரன்” என்றும் “சந்திரன்” என்றும் உயர்த்திப் பேசி, எழுதி அதன் மூலம் தங்கள் இனப்பிழைப்புக்கு வழிதேடிக் கொள்கிறார்கள்.இந்த அடாத காரியத்துக்கு தகுந்த வசதிகள் அவர்களுக்குத் தாராளமாய் இருக்கின்றன.

    மனு ஆட்சி எப்படியாவது ஏற்படவேண்டும் என்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கொண்டிருக்கும் பொழுது, அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களை பார்ப்பனர்கள் கை நழுவ விடுவார்களா? பாரதி அநேக பாடல்களை குடிவெறியில் பாடியிருக்கிறார்.அவர் நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம்.

    பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால் பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும்,இந்தியா அவர்களுக்கு சொந்த சொத்து என்றும், அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்ததென்றும் கருதியே வந்திருக்கிறார் என்பதுதான்!. பார்ப்பனரின் நிலைமை உயர வேண்டுமென்பதே அவருடைய நோக்கமென்றும் தெரிகிறது. இதற்கு மாறாக அவரைப்பற்றி நினைத்துகொள்ள “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே”, “தமிழ்மொழி போல் எங்கும் காணோம்” என்ற வரிகள் எடுத்துக்காட்டப் படுமானால் அப்படி இரன்டொன்று பாடியிருப்பதும் கூடக் குடிவெறி என்று தான் சொல்லவேண்டும்”

    (குடியரசு 17.10.1937)

    • //அநேக பாடல்களை குடிவெறியில் பாடியிருக்கிறார்.அவர் நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம்.//

      It is not drinking but “kanja pugai”

    • // “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
      இனிதாவ தெங்கும் காணோம்”

      என்கிறப்பாடலைக்கூட பாரதி 1915 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்ச்சங்கத்தின் பரிசுப் போட்டிக்காக நண்பர்களின் வற்புறுத்தலினால் எழுதியதாக கூறப்படுகிறது.எனவே இப்பாடலும் பாரதிக்கு தமிழ்மேல் இருந்த காதலால் எழுதப்பட்டது அல்ல என்பது புலனாகிறது. //

      1915-ல் நாடறிந்த தமிழ்க் கவிஞன் பாரதி, தமிழ்ச் சங்க பரிசுப் போட்டி பரிசுக்காகவும், நண்பர்களின் வற்புறுத்தலுக்காகவும் மேற்கண்டவாறு பாடித் தொலைத்தான், தமிழ் மீது இருந்த காதலால் அல்ல என்பது புலனாகிவிட்டதாக கூறுபவர்கள் மறுவிசாரணை செய்ய மேலும் ஒரு சில ஆதாரங்கள்..:

      (அதே 1915-ல் புதுச்சேரியில் இருந்த பாரதி, பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்கு எழுதிய கடிதத்திலிருந்து)

      ” தம்பி, – நான் ஏது செய்வேனடா!

      தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.

      தம்பி – உள்ளமே உலகம்

      ஏறு! ஏறு! ஏறு! மேலே, மேலே, மேலே!

      நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி.

      உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ.
      பற! பற! – மேலே, மேலே, மேலே.

      •••

      தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது.
      தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது

      தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.

      அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது.

      தமிழ்நாட்டில் ஒரே ஜாதிதான் உண்டு. அதன் பெயர் தமிழ் ஜாதி, அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது.

      ஆணும் பெண்ணும் – ஓருயிரின் இரண்டு கலைகள் என்றெழுது.

      அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.

      பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.

      பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.

      தொழில்கள், தொழில்கள் என்று கூவு.

      தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பவன் மேற்குலத்தான் என்று கூவு.

      வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக.

      முயற்சிகள் ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திர நூல், பூமி நூல், வான நூல், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.

      சக்தி, சக்தீ, சக்தீ என்று பாடு.

      தம்பி – நீ வாழ்க. ”

      http://www.mahakavibharathiyar.info/kadithangal/parali_su_nellayappar.htm

    • தமிழில் ஆரியர் என்ற சொல்லுக்கு உயர்ந்தோர், சான்றோர், Noble என்ற கருத்துக்களும் உண்டு. அது பார்ப்பனர்களை மட்டும் குறிப்பதல்ல. உதாரணமாக, யாழ்ப்பாண அரசர்களுக்கு ஆரியச்சக்கரவர்த்திகள் என்ற பட்டப் பெயர் உண்டு. அவர்களில் யாரும் பார்ப்பனர்களல்ல, வடக்கிலிருந்தும் வரவில்லை. அதனால் சான்றோர் வாழும் நாடு, “உன்னத, உயர்ந்த (ஆரிய) நாடெங்கள் நாடே” என்ற கருத்திலும் பாரதியார் பாடியிருக்கலாம் அல்லவா? எல்லாவற்றுக்கும், ஆரிய-திராவிட சாயம் பூசி, தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வன் பாரதியை வசைபாடுவது உண்மையான தமிழர்களுக்கு அழகல்ல.

      • இப்படி ஆறுதல் அடைய வேண்டாம், வியாசரே! இந்த நினைப்பில்தான் நானும் ஆரிய குலத்தவன் என்றுபல அரசர்களை ஏமாற்றி சதுர்வேதி மங்களங்களை தான்மாய் பெற்றனர்! சாதாரண படைத்தலைவனாக இருந்த விஜயாலயனை, ராமாயண காலத்து இட்சுவாகு வம்சத்தவன் என்று அவனையும் நம்பச் செய்தவர்களல்லவா! இது தான் ஆரிய கூத்து என்பது! “உன்னத, உயர்ந்த (ஆரிய) நாடெங்கள் நாடே” என்ற கருத்திலும் பாரதியார் பாடியிருக்கலாம் அல்லவா? இது தமிழ்னாட்டை பற்றி மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவை பாடியது! இதைதான் ஆர் எஸ் எஸ் கூறுகிறது! தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வன் பாரதி, ஆரிய தாசனாக பாடியது! பின்னர் ‘பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே’, ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்றும் தான் பாடினான், அதையும் சொல்லியிருக்கலாம்!

  5. பாரதி மானூடபுலவன் ! அக்ரகாரத்து அதிசய மனிதன் ! சாதியை பார்த்து சிரித்தவன் ! தலைநிமிர்ந்தவன் ! இன்னமும் பேச படுபவன் !

  6. Respected தோழர் மருதையன்

    I have only one question to you?

    Kindly answer it, பாரதி told him friend, my daughter marry one SC person, after some years, If she told in a particular place, I am living with my life partner very good manner.

    That moment only is happiest moment in my life.

    He may believe god, or he may feared fellow, or he may run to pondi for him life.

    Everything his okay, But still பாரதி is Socialist, Communist only, finally but not least Because of him Tamil only we got it very good poem in Tamil.

    Regards
    Udayan

  7. பாரதியை பயித்தியக்காரன் என்று ஒதுக்கிவைத்த கூட்டமே, இன்று பாரதி எங்கள் ஜாதி என்பது ஏன்? பாரதி ஒரு தமிழ் கவிஞன்! உணர்ச்சி மிகும்போது ஆக்ரொஷமாக பழமையை எதிர்த்து இருக்கிரான்! அப்பொது இருந்த நிலவரப்படி, சுதந்திர போராட்டம் ஆரிய தலைவர்களால் முன்னெடுக்கபபட்டு வந்தது! ஆரிய பெருமை பாரதியையும் விட்டுவைக்கவில்லை!

    ‘ஆயிரம் உண்டிங்கு சாதி! எனில் அன்னியர் வந்து புகல் என்னநீதி?’ என்று சமத்காரமாக ஆரிக்குரல் கொடுத்தவன்! வ உ சி முதலியோரின் பழக்கத்திற்கு பின்னரே, ‘பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே’ என்று பாடியவன்! அவன் தன்மானம் மிக்க உணர்ச்சி கவிஞன் மட்டுமே! போராளிகலுக்கு உணர்ச்சியூட்டும் முழக்கங்களை தமிழில் அறிமுகப்படுத்தியவன்! அவன் எந்த சித்தாந்த வாதியோ, போராளியோ இல்லை!

    அண்ணாவின் பாசறையில் இனி பிழைக்க முடியாது என்றானபின்,அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன், பின்னாளில் யேசு காவியமும் பாடினான் அல்லவா! கம்பன் ராமாயணம் பாடியது போல! இந்த கவிஞர்களெல்லாம், சமூதாய மாற்றம் தேடிய பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்துடன் ஒப்பிட முடியாது!

    • // அண்ணாவின் பாசறையில் இனி பிழைக்க முடியாது என்றானபின்,அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன், பின்னாளில் யேசு காவியமும் பாடினான் அல்லவா! //

      கட்சியால் பிழைக்க வேண்டியிருந்த அவல நிலை கண்ணதாசனுக்கு என்றுமே இருந்ததில்லை..

  8. ஏதோ திராவிட கட்சிகள் சார்பில் இணைய த்வேஷிகளால் பிராமணர்களுக்கு கொஞ்சநஞ்சம் பாரதியை பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. மற்றபடி மாமிகள் பேசிக்கொண்டதெல்லாம் ராசாவின் இசை அழ வைத்த காரணத்தால், பாரதி மீதுள்ள பட்சாதாபத்தால் அல்ல.

    //ஜாலியன் வாலாபாக் படுகொலை// இது நடந்தது 1919இல். அச்சமயத்தில் பாரதி ஏறக்குறைய நடைபிணம் ஆகிவிட்டான். 1921இல் மரணம். அய்யா எழுதறதுக்கு முன்னாடி கொஞ்சம் ரூம் போட்டு யோசியுங்களேன்.

    //சிதைந்து கொண்டிருந்த பார்ப்பனப் பழமையிலிருந்து//
    இதெல்லாம் புகைச்சலில் வரும் வார்த்தைகள்.

    //யாருடன் கைகோர்த்திருப்பான் என்பதைப் பாரதி அபிமானிகள் கூறட்டும்!//
    மன்னிக்க வேண்டும். பாராதியுடன் அவர்களில் யார்யார் கைகோத்து இருப்பார்கள் என்று மாற்றிக் கேட்டுக் கொள்ளுங்கள்.

    பெரியாரிடமும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தன என்பதையும் மறந்து விட வேண்டாம். 20வயதிலிருந்து சாகும் வரை எந்த மனிதனாலும் எல்லா கருத்துக்களிலும் ஒரே மாதிரி எண்ணம் கொண்டிருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர் வளரவே இல்லை என்று அர்த்தம்.

  9. கம்பனுக்கு அடுத்து, பாரதி என்ற உணர்ச்சி கவிஞன் தமிழ் கவிதையை பாமரரும் ரசிக்கும்படி எளிமையாக, இயல்பாக வடித்தெடுத்தான்! இது அந்தக்கால இலக்கிய நடைக்கு மாற்றாக புதுக்கவிதை நடைக்கு வித்திட்டது! உணர்ச்சிக்கவிஞன் சிறுவயதிலேயே உருவாகிட்டான்! அப்பொது புரட்சிகரமான விடுதலை இயக்க்த்திற்கு , அவர்களால் விரும்பப்படும் பொருளில் பாடிக்கொடுத்தான்! கொஞ்சம் கொஞ்சமாக சொந்தக்கருத்துக்களை உருவாக்கிகொண்டு கடசிக்காலத்தில் பாடிய கருத்துக்கள் வேறு! சுப்ரமணிய சிவா, வ உ சி போன்றோர் சிறைக்கு சென்றபின்னர் நடை பிணமானான் பாரதி! அவனின் உண்மையான கருத்துக்கள் அவனது கட்டுரைகளில் தெரியக்கூடும்! அவனை கடைசிவரை ஆதரித்த அய்ரொப்பிய பாதிரியும், அவரது மனைவியும் பல விடயங்களில் அவனது சிந்தனைகளை மாற்றி இருந்தனர்! ஆனால் முழுமையான சீர்திருத்த கவிதைகள் முளைக்குமுன் பாரதி என்ற மரம் பாட்டுப்போய்விட்டது! ஒரு கவிஞனின் பரினாம வளர்ச்சி பாதியில்நின்றதால், அவன் முற்பாதியைக்கொண்டு ஆரிய கவியாகவே காணுகிரோம்! அவனது சீடர்கள் பாரதிதாசன் முதலியோர் கவிதைகள் பாரதியின் கருத்துத்தாக்கமாகவே எடுத்துக்கொள்ளலாம்!

    • //கம்பனுக்கு அடுத்து,பாரதி என்ற//-இடைப்பட்ட காலத்தில் தமிழில் கவிஞர்களே உருவாகவில்லையா?

  10. //பெரியாரிடமும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தன என்பதையும் மறந்து விட வேண்டாம். 20வயதிலிருந்து சாகும் வரை எந்த மனிதனாலும் எல்லா கருத்துக்களிலும் ஒரே மாதிரி எண்ணம் கொண்டிருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர் வளரவே இல்லை என்று அர்த்தம்.//

    உண்மைதான்! பிறவியிலேயே எல்லாம் அறிந்து, அய்ந்துவயதில் கவி பாடி, இறைவியே வந்து ந்ஜனப்பால் கொடுத்துதான் பெருமையடையவேண்டும் என்பது அவாள் கதகளில் மட்டுமே காணமுடியும்! பெரியார் தன்மானமும், யாருக்கும் வஞசனை செய்யாத தனிதன்மை வாய்ந்த தலைவர்! அவரது படிப்பு அனுபவமே! அவர் யாரையும் கட்டாயப்படுத்தி தன் கருத்தைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று திணித்தது இல்லை! நாளாக, நாளாக மென்மேலும் பண்பட்டவர்! அவர் இலஙகை புலவர் கதிரைவேலனாரை அவமதித்த தாக கூறுவது காழ்ப்புணர்ச்சியினாலேயெ ! 1907-ல் இறந்த புலவரை, பெரியார் பொதுவாழ்வுக்கு வருமுன்பே எப்படி சந்தித்து இருப்பார்?நாவலரைக்கொண்டு வள்ளலாரை எதிர்த்த பார்ப்பனர் சூழ்ச்சி போலவே இல்லை? வள்ளலாரின் எந்தகருத்துக்காக அவரை இந்து சமயத்திலிருந்தும், சிதன்பரம் கோவிலுக்குள் வரக்கூடாது என்றும் தடை செய்தார்கள்? இந்து மதத்திற்கு இதுதான் கொளகை என்று வகுத்தது யார்? எல்லா கொள்கையும்,நாத்திகம் உட்பட இந்து கொள்கைதானே!நால்வருணத்தையும், கீதையையும் அப்படியே ஏற்றுக்கொண்டால்தான் இந்துவா?

    • வள்ளலாரை யாரும் சிதம்பரம் கோவிலுக்குள் வரகூடாது என்று தடுக்கவில்லை.அவர் சைவசமயத்தில் கலந்து இருந்த வைதிக நெறிகளை நீக்கிவிட்டு ஆதியில் இருந்த தூய சைவநெறியை நிறுவ முயன்றவர் என்று கருத இடமுண்டு.அவரை எதிர்த்தவர்கள் அன்றைய சைவ மடாதிபதிகள்தான்.நாவலர் என்ற வார்த்தைக்கு அவர் கூறிய நல்ல பொருள்களை எல்லாம் விட்டுவிட்டு அல்லாத பொருளை மட்டும் ஆறுமுக நாவலரிடம் கூறி சண்டையை தொடங்கிவைத்தவர்கள் பிராமனர்கள் என்று செவிவழி செய்தி உண்டு.வள்ளலார் உத்தரஞான சிதம்பரத்தை[சத்தியஞான சபை]நிறுவியது தனது வழிபாட்டு முறையை பரப்பதான்.

      • // நாவலர் என்ற வார்த்தைக்கு அவர் கூறிய நல்ல பொருள்களை எல்லாம் விட்டுவிட்டு அல்லாத பொருளை மட்டும் ஆறுமுக நாவலரிடம் கூறி சண்டையை தொடங்கிவைத்தவர்கள் பிராமனர்கள் என்று செவிவழி செய்தி உண்டு. //

        சந்தடி சாக்கில் செவிவழி செய்தி என்று உங்கள் கருத்தை செருகிவிட்டீர்கள்..

        பிறகு ஏன் நாவலர் சபா நடேச தீட்சிதர் உள்ளிட்ட 5 தீட்சிதர்களை முதல் 5 எதிரிகளாகவும், வள்ளலாரை 6-வது எதிரியாகவும் குற்றம் சாட்டி மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் 1869-ல் மானநட்ட வழக்கு தொடர்ந்தார்..?!

        • //உங்கள் கருத்தை செருகிவிட்டீர்கள்//-அம்பி, அது என் கருத்து அல்ல வாசித்த கருத்துதான்.உண்மையை நீங்கள் கூறினால் ஏற்றுகொள்கிறேன்.

    • // அவர் இலஙகை புலவர் கதிரைவேலனாரை அவமதித்த தாக கூறுவது காழ்ப்புணர்ச்சியினாலேயெ ! 1907-ல் இறந்த புலவரை, பெரியார் பொதுவாழ்வுக்கு வருமுன்பே எப்படி சந்தித்து இருப்பார்? //

      நம்பமுடியவில்லையா..?! உங்கள் தனித்தன்மை வாய்ந்த தலைவரின் வாக்குமூலம் இதோ..:

      ” புலவரைப் பற்றி என் கருத்து புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் உரை கூறுவேன். நா.கதிரை வேற்பிள்ளை என்கின்ற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்த போது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவு கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடமும் கண்டேன் என்று சொன்னதற்கு உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு வாந்தி எடுத்து விட்டார் ”

      அதாவது ‘பகுத்தறிவு’ இல்லாத நா.கதிரைவேற் பிள்ளைதான் சுயமரியாதை என்றால் என்ன என்று பொதுவாழ்க்கைக்கு இன்னும் வராத பெரியாருக்கு அன்று கற்றுக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்..

      // நாவலரைக்கொண்டு வள்ளலாரை எதிர்த்த பார்ப்பனர் சூழ்ச்சி போலவே இல்லை? //

      நாவலர் என்னவென்றால் சில பார்ப்பனர்கள் மீதும், வள்ளலார் மீதும் அன்று மானநட்ட வழக்கு போட்டிருக்கிறார்.. நீங்களோ நேர் மாறாக கதை பின்னுகிறீர்கள்..

      • //நம்பமுடியவில்லையா..?! உங்கள் தனித்தன்மை வாய்ந்த தலைவரின் வாக்குமூலம் இதோ..: //

        ஆதாரம் கெட்டால் சொன்னதையே சொல்கிரார் அம்பி! எந்தநூலில் அல்லது எந்த சொற்பொழிவில் பெரியார் இதைக்கூறினார் என்று கூறிப்பிட்டு சொல்லலாமே? ஆதாரமிருந்தால்…

          • இலஙகை தமிழறிஞர் கதிரைவேலனாரை அவமதித்தாக இல்லையே! அவருக்குப்பின் வந்த வேறு ஒரு கதிரைவேலனாராக இருக்கலாம்! இதிலும் பெரியார் அவரை அவமதிக்கவில்லையே! எல்லா தமிழ்புலவர்களும் செக்கு மாடுகள் போல ஆரிய வழியிலேயே செல்வதையும், காசுக்காக கயவனைக்கூட இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து பாடியுள்ளமை குறித்தே இப்படி கூறினார்! புலவரின் ஆணவத்தை, அறியாமையையும் தானே இன்னிகழ்வு காட்டுகிறது!பாரதியும், தனது சின்ன சஙகரன் கதையில், இப்படித்தானே இகழ்ந்திருக்கிரார்! பெரியாரை அவமதிப்பதாக நினைத்து, நல்ல வலைப்பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! http://sites.google.com/site/vijaygopalswami/Home/PeriyarMozhikKolgai.pdf?attredirects=0&d=1

            • திரு வி.க. அவர்களின் குருதான் மேற்கூறிய கதிரை வேலர்.. யாழ்பப்பாணத்தவர், ஆறுமுக நாவலரின் சீடர்.. தமிழறிஞறான அவருக்கு பால் கொடுத்து உபசரித்துவிட்டு நீ ஒரு அறிவு கெட்ட புலவன் என்றால் பால் வெளியே வராமல் என்ன செய்யும்.. வராவிட்டாலும் வாய்க்குள் விரலைவிட்டாவது வெளியேற்றிவிட வேண்டும் என்னுமளவுக்கு அவரது சுயமரியாதையை சோதித்திருக்கிறார் பெரியார்.. இவ்வளவையும் செய்துவிட்டு அவருக்கு வாயாடிப் புலவர் என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கிறார்..

              // பெரியாரை அவமதிப்பதாக நினைத்து, நல்ல வலைப்பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! //

              பெரியாரை அவமதிக்க வேண்டும் என்ற விரதம் எல்லாம் எனக்கு இல்லை.. அவர் செய்து வைத்த அக்குறும்புகளைப் படிக்கும் போது என் பகுத்தறிவு வேலை செய்து விமர்சனங்கள் தானாக வருகின்றன.. 🙂

    • // அவர் யாரையும் கட்டாயப்படுத்தி தன் கருத்தைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று திணித்தது இல்லை! //

      உண்மைதான்.. ஆனால் தன் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை காதில் ரத்தம் வருமளவுக்கு வசை பாடி மகிழ்வித்திருக்கிறார்..

      // நாளாக, நாளாக மென்மேலும் பண்பட்டவர்! //

      கடைசி வரை மேற்படி திருப்பணியைத் தொடர்ந்தவர்..

  11. //வள்ளலாரை யாரும் சிதம்பரம் கோவிலுக்குள் வரகூடாது என்று தடுக்கவில்லை…// அய்யா தேவாரநாயனாரே! வள்ளலாரையும் தடுத்தார்கள், வாரியாரையும் தடுத்தார்கள் என்பதே உண்மை (வள்ள்லார் கண்ட ஒருமைப்பாடு…..ம பொ சி) கடசிக்காலத்தில் வாரியார் அனுமதிக்கப்பட்டார்! பொற்கோவில்களில் இறவனில்லை என்று காடவே புளியமரத்தடி அமர்ந்தார் வள்ளலார்! சைவர் பயன்படுத்தும் திருநீற்றை அவர் தொடக்கூடாது என்றனர்; புற்று மண்ணேநீராக கொடுத்தார்! வில்வம் , துளசி தரக்கூடாது என்றனர்; புளிய இலையை பத்திரமாக கொடுத்தார்! காவி அணிய தடையிட்டனர்; வெண்துகில் அணிந்தார்! கடைசியில் அவர் பாடியதும் அருட்பா அல்ல என்றனர்! மேதாவிகள் கோர்ட்டுக்கு சென்றார்கள்; வெள்ளைக்கார நீதிபதி இவர்கள் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை! ஏனென்றால், பலநூற்றாண்டுகளுக்கு முன்பே இறைவனை அலகில் சோதியன் என்று நாவுக்கரசர் பாடிவிட்டார்!

    • அஜாத சத்ரு அவர்களே!வள்ளலார் கருங்குலியில்[வடலூர் அருகில் உள்ளது] தங்கிய பொழுது சிதம்பரம் சென்று வழிபட்டு வந்தார் என்றும்,அவர் பாடிய திருஅருட்பாவில் 4ம்திருமுறை முழுவதும் சிதம்பரம் நடராஜர்,சிவகாமி மீதும் பாடப்பட்டது என்றும் அவர் வரலாறு கூறுகிறது.அவர் புளிய மரத்தடியில் தங்கியது பற்றி எந்த குறிப்பையும் நான் படித்ததில்லை.அவர் சென்னையை விட்டு நீங்கிய பிறகு கருங்குலியிலும் பிறகு சித்தி வளாக மாளிகையிலும் தங்கினார்.காவி உடை கடின சித்தர்கள் உடையது,வெண்மையே அன்பு நெறிக்கு உடையது என்று ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் அவரே கூறி உள்ளார்.மற்றவர் கூடாது என்பதால் தன் கொள்கைகளை மாற்றிகொள்ளும் இயல்பு அவருக்கு இல்லை.தனெக்கென சங்கம்,கொடி,வழிபாட்டு முறை ஆகியவற்றை உருவாக்கி கொண்டவர் அவர்

    • “அலகில் சோதியன் அம்பலத்தாடுவன்”-திருநாவுக்கரசர் இல்லை,சேக்கிழார்.

        • மணிக்கவாசகரும் சோதியை வழிப்பட்டவர்தான், அவர் கட்டிய ஆவுடயார் கோவிலே சான்று! பார்க்க;
          க்ட்ட்ப்://ட.நிகிபெடிஅ.ஒர்க்/நிகி/%ஏ0%ஆஏ%ஆ4%ஏ0%ஆஏ%BF%ஏ0%ஆஏ%B0%ஏ0%ஆF%81%ஏ0%ஆஏ%ஆஆ%ஏ0%ஆF%8D%ஏ0%ஆஏ%ஆஆ%ஏ0%ஆF%86%ஏ0%ஆஏ%B0%ஏ0%ஆF%81%ஏ0%ஆஏ%ஆ8%ஏ0%ஆF%8D%ஏ0%ஆஏ%ஆ4%ஏ0%ஆF%81%ஏ0%ஆஏ%B1%ஏ0%ஆF%88_%ஏ0%ஆஏ%86%ஏ0%ஆஏ%ஆ4%ஏ0%ஆF%8D%ஏ0%ஆஏ%ஆஏ%ஏ0%ஆஏ%ஆ8%ஏ0%ஆஏ%Bஏ%ஏ0%ஆஏ%ஆ4%ஏ0%ஆஏ%9ஆ%ஏ0%ஆF%81%ஏ0%ஆஏ%B5%ஏ0%ஆஏ%Bஏ%ஏ0%ஆஏ%ஆஏ%ஏ0%ஆஏ%BF_%ஏ0%ஆஏ%95%ஏ0%ஆF%8B%ஏ0%ஆஏ%ஆF%ஏ0%ஆஏ%BF%ஏ0%ஆஏ%B2%ஏ0%ஆF%8D

          மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார்!
          இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது.
          உருவம் இல்லை
          கொடி மரம் இல்லை
          பலி பீடம் இல்லை
          நந்தி இல்லை
          இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

          • மேலும், மாணிக்க வாசகர் கட்டிய கோவிலில்,

            புழுங்கல் அரிசி நெய்வேத்தியம்:
            எல்லா ஆலயங்களிலும் பூசை நடைபெறும்போது பச்சை அரிசியிலே அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த ஆவுடையார் கோயிலிலே 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால்தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும் கீரையும் சேர்த்துப் படைக்கப் படுவது இங்கு மட்டும்தான்.
            இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது.
            உருவம் இல்லை
            கொடி மரம் இல்லை
            பலி பீடம் இல்லை
            நந்தி இல்லை

            இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

            அணையா நெருப்பு:
            6 கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும் அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை.

            உருவமற்ற அருவக் கோயில்:
            தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது. அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம்.

            இப்பொது சொல்லுங்கள் வள்ளலார் மட்டும்தான் பிரிவினை பேசினாரா? நந்தனை போல, மாணிக்கவாசகரை போல, திருஞானசம்பந்தனைபோல, வள்ளலாரும் சோதியில் கலந்தாராம்! என்ன கொடுமை? ஏனையோர் கலக்காதது ஏனோ? சிவபெருமானே நேரில்வந்து, இரு துணைவியரை கூட்டிகொடுத்த ப்ருமை வாய்ந்த தோழர் சுந்தரர் சோதியில் கலக்கவில்லையே ஏன்?

            • அஜாதசத்ரு அவர்களே! வள்ளலார் சீமுக வருடம் தை மாதம் 19ம் நாள் [30-1-1874] இரவு12மணியளவில் “நான் உள்ளே பத்துப் பதினைந்து தின மிருக்கப் போகிறேன்.பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தானிருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்.என்னைக் காட்டிக்கொடார்” என்று கூறி சித்திவளாக மாளிகையில் உள்ள ஒரு அறைக்குள் சென்று திருகாப்பிட்டு கொண்டார்.இருதினங்களில் எதிரிகளால் கலெக்டரிடம்[தென்னாற்காடு] இது குறித்து புகார் தரப்படுகிறது.கலெக்டர் நேரில் வருகிறார்.கதவை திறக்க சொல்கிறார்.பக்தர்கள் மறுக்கின்றனர்.கலெக்டர் தானே கதவை உடைத்து திறக்க செய்கிறார்.உள்ளே வெற்றிடமாக உள்ளது.திருப்ப கதவை காப்பிட சொல்லி வணங்கி விடை பெறுகிறார்.இது குறித்து அரசு ஆவணகுறிப்பில் எழுதி உள்ளார்.[ஆவண குறிப்பின் நகல் சித்திவளாக மாளிகையின் எதிரே வைக்கப்பட்டுள்ளது நேரில் சென்று பார்த்துகொள்ளலாம்].இதுவே வரலாறு.மாற்று வரலாறு கூறவிரும்பினால் தக்க ஆதாரங்களுடன் கூறுங்கள்.சொந்த கற்பனையை கூறாதீர்கள்.

              • எனக்கும் அதைநம்பத்தான் ஆசை! ஆனால், வள்ள்லார் பூட்டிய அறைக்குள் இல்லாதது உண்மையே! ஆனால், உள்ளே சென்றது, அவரின் புரவலர் சொல்லிதான் தெரிகிறது! வள்ளலாரை அமரர் ஆக்குவது என்பது அவர்களதுநோக்கமாக இருக்கலாம், அதனால் உடலை மறைத்திருக்கலாம்! வள்ளலாரின் பெருமைக்கு அவர்தம் அருட்பாவையன்றி, வேறு சித்துவேலைகள் தேவையில்லை! அப்படி சித்து வேலைகளில் அவர் நம்பிக்கை கொண்டவரும் அல்ல!

                • வேலூருக்கு அருகில் உள்ள திருவலம் என்ற சிவ தலத்தில் ஒரு சாமியார் இருந்தார்! அவர் சாக்கு ஆடை மட்டுமே உடுத்தி, மிக எளிமையாய் வாழ்ந்து,நிறைய ஏழைகலுக்கு அன்னதானம் செய்து, கடைசியில் இறந்து போனார்! குருனாதர் இறந்தாலும், பத்து வருடத்திற்கு பின்னர் அவர் மீண்டும் உயிர்பெற்று வருவார் என்று, அவரது சமாதியை வழிபட்டு வந்தனர் அவரது சீடர்கள்! சமாதிக்குள்ளே இருந்து கொண்டே நோய் தீர்க்கிரார் என்றும், மீண்டும் வந்ததும் எல்லாருக்கும் மோட்சமளிப்பார் என்றும் பல கதைகள்! ஆனால் இன்றுவரை குருனாதர் வரவில்லை! பெரியோர்களை அவர்களீன் வாழ்னாளில் செய்த சாதனைக்காக புகழ்வதில் தவறில்லை! மடாலயத்தில் பணம் பண்ணுவதற்காக புதிய அதிசயங்கள் நிகழ்வதாக கூறுவது அறிவுக்கு பொருத்தமானது அல்ல!

                  • உலகத்துக்கே நோய் தீர்த்த அவதார புருசர்கள் தன் நோய் என்னவென்று தெரியாமல் மருத்துவமனையில் சென்று மரிக்கிறார்கள்.இதில் மகரிசிகள்,யோகிராஜ்களும் அடக்கம்.மலையையும் மடுக்களையும் ஒப்பிடாதீர்கள்.

                  • ஐயா ,

                    நாளை சிதம்பரம் செல்கின்றேன். தாங்கள் வருவிர்களா ?
                    முடிந்தால் போராட்டத்தை பார்வைஇட,ஆதரவு தர வரவும்
                    [1]தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
                    [2]தெற்கு வாயில் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம் வாரீர்

                    அன்புடன் ,
                    கி.செந்தில் குமரன்

                • //எனக்கும் அதைநம்பத்தான் ஆசை!//-பிரச்சனை உங்கள் நம்பிக்கை குறித்தல்ல உண்மை குறித்து.உண்மை என்னவென்று உங்களால் முடிந்தால் ஆதாரத்துடன் நிறுவுங்கள்.வீணாக புலம்பாதீர்கள்!

                • //உள்ளே சென்றது,அவரின் புரவலர் சொல்லிதான் தெரிகிறது!//-அவர் பக்தர்களிடம் கூறியதை அப்படியே கொடுத்துள்ளேன்.ஆனால் நீங்கள் வாய்க்கு வந்ததை கூறுகிறீர்கள்.இதுதான் உங்கள் ஊரில் பகுத்தறிவா?

                  • அடிகளார் அவரது புரவலர்களிடம் கூறிச்சென்றார் அன்று சொல்பவர் யார்? திருவலம் சீடர்கள் போன்ற ஆசாமிகள் தானே! போலி சாமியார்களை உருவாக்கி, பக்தி வியாபாரம் செய்து பிழைப்புநடத்துவது இன்றும் நடப்பதுதானே! அன்றும் அதுதான் நடந்தது! அரசு அலுவலர்கள், சந்தேகத்தின் பேரிலேயே அறையை திறந்து பார்த்தார்கள்! எதிர் பார்த்தது போலவே உள்ளே ஒன்றும் இல்லை! இந்த பேறு?, வேறு யாருக்கும் கிடைக்கவில்லையே, மூலனாரையும்,நந்தனாரையும் தவிர! மாணிக்கவாசகருக்கும் ஆனி திருமஞ்சனத்தன்று மோட்சம் கிடைத்ததாக கூறுவர்; ஆனால் அவர் தீயில் இறங்கவில்லை, ஆதிசைவர் அல்லவா? அவர் இயற்பெயர் கூட தெரியவில்லை! காலமும் அறுதியிட்டு கூறமுடியவில்லை, வரலாறு எனப்படும் கதையும் புராணக்கதையாகவே இருக்கிறது! சிதம்பரத்தை போன்றே, அதையும் விஞ்சும் வகையிலும் கோவில் அமைத்தவர், அவர் வாழ்ந்த காலத்தில், யார் எனவே அறியப்படவில்லை ! அவரது ஏடுகள் மட்டுமே சிதம்பரத்தில் கிடைத்தது! அதைக்கொண்டுதான் அவர் மாணிக்க வாசகர் என்று பெயரிடப்படுகிரார்! திருவிளையாடற்புராணம் எழுதிய சேக்கிழார் கற்பனை வளத்துடன்,நரி-பரி கதையையும் சேர்த்துவிட்டார்! ஆதிக்க சைவம் செய்த வேலையை பார்த்தீர்களா? உலகில் எல்லாருக்கும் பொதுவான இறைவன், பிட்டுக்கு ஆசைப்பட்டு பிரம்படி பட்டான் என்று எழுத எப்படி முடிந்தது? அதை நம்புவதற்கு தான் எப்படி முடிகிறது? அய் அய் டி படித்தவர்களுமா நம்புகிரார்கள்?

                    • // அதை நம்புவதற்கு தான் எப்படி முடிகிறது?

                      இது எவ்வகையிலான ‘நம்பிக்கை’ என்பதை ரெண்டு தொப்பி, மூணு சட்டை என உதாரணங்களோடு விளக்கினாலும் உமது பகுத்தறிவுக்குப் புரியவில்லை. போகட்டும்.

                      // திருவிளையாடற்புராணம் எழுதிய சேக்கிழார்

                      சேக்கிழார் அல்ல. பரஞ்சோதி முனிவர்.

                    • வள்ளலார் 25-1-1872 அன்று தைபூசம் கூடிய நாளில் சத்தியஞான சபையில் சோதி வழிபாட்டை தொடங்கி வைத்தார்.அப்பொழுது முதல் திரளான பக்தர்கள் தைபூச வழிபாட்டிற்கு வர தொடங்கினார்கள்.அவர் திருகாப்பிட்டு கொண்ட 30-1-1874 ம் ஒரு தைபூச நாள்தான்.திரளான பக்தர்கள் முன்பே அவர் அதை செய்தார்.தொழுவூர் வேலாயுதம்,இறுக்கம் இரத்தினம் முதலியார் ஆகிய அனுக்க தொண்டர்கள் உடனிருந்தார்கள்.அந்த சமயத்தில் அவரே தருமசாலை அமைத்து பலருக்கு உணவிட்டு வள்ளல் ஆக திகழ்ந்தார்.அவருக்கு யார் புரவலர்? உங்களை நம்ப சொல்லி நான் வற்புறுத்தவில்லை.வரலாற்றை திரிக்காதீர்கள் என்றுதான் கூறுகிறேன்.

                  • குற்றவாளிகளின் வாக்கு மூலத்தை அரசு பதிவு செய்துள்ளது! அதை அப்படியே நம்புவதுதான் உங்கள் ஊரில் பகுத்தறிவா? உண்மையான மகானுபாவர்கள் இதை போன்று சீடர்களின் பக்தி வியாபாரத்திற்காக சோதியிடம் கலந்த சித்துவிளையாடல் புரியமாட்டார்கள்!

                    //அவர் பக்தர்களிடம் கூறியதை அப்படியே கொடுத்துள்ளேன்// நீங்கள்நேரில் கண்டு, கேட்டீர்களா தேவாரநாயனாரே? நடக்க சாத்தியமற்ற அதிசயங்கள் இந்தநூற்றான்டிலும் நடக்குமா? இது தான் உங்கள் பகுத்தறிவா? உண்மை என்னவென்று உங்களால் முடிந்தால் நம்பதகுந்த ஆதாரத்துடன் நிறுவுங்கள். வீணாக பூ சுற்றாதீர்கள்!

                    • யார் குற்றவாளி? வாதம் செய்வதேன்றால் விளக்கமாக கூறுங்கள்.பொத்தாம் பொதுவில் பேசாதீர்கள்.நான் கூறியது அவரின் கட்டளைகள் என்ற தொகுப்பில் அவரின் கையெழுத்து பிரதியில் உள்ளது.அவரின் கையெழுத்தா இல்லையா என்று நீங்கள் ஆய்வு செய்து நிறுவுங்கள்.பகுத்தறிவு என்றால் கண்ணை மூடிகொண்டு மறுப்பது இல்லை.நடுநிலையுடன் ஆய்வு செய்வது.சித்தர்கள் கூறும் தேக சித்தி விஞ்ஞான அடிப்படையானதுதான்.தமிழன் கண்ட விஞ்ஞானம்.அறிவியல் என்றாலே வெள்ளைகாரன் சொன்னது மட்டும்தான் என்று நம்ப நான் உங்களை போன்ற பகுத்தறிவுவாதி இல்லை.உங்கள் தமிழ் வெறுப்பு காட்டுகிறது நீங்கள் தமிழர் இல்லை என்று.

                • //வள்ளலாரை அமரர் ஆக்குவது என்பது அவர்களதுநோக்கமாக இருக்கலாம்//- யாருடையநோக்கமாக? எப்போதும் உடன் இருக்கும் அடியார்களின் நோக்கமாகவா? இதுல கலாம் வேற பொடுறிங்க.

                • //வள்ளலாரின் பெருமைக்கு அவர்தம் அருட்பாவையன்றி வேறுசித்து வேலைகள் தேவையில்லை!//-அருட்பாவை சரியாக வாசிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது.அருட்பாவின் திரண்ட கருத்துகளில் முக்கியமானது இரண்டுதான்.1.ஜீவகாருண்யுமென்னும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு.2.மரணமில்லா பெருவாழ்வு எனும் சாகாதிருத்தல்.இதை தன் வாழ்வின் மூலம் அவரே நிறுவியுள்ளார்.

                  • //.மரணமில்லா பெருவாழ்வு எனும் சாகாதிருத்தல்..// அருட்பாவை சரியாக வாசிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது. அவரே சாகாநிலை என்று விளக்கியிருப்பதை காண்க:

                    க்ட்ட்ப்://1.ப்ப்.ப்லொக்ச்பொட்.சொம்/-கிவீஇCப்ட்58ந்/TழJ_ணீய்Dxஈ/ஆஆஆஆஆஆஆஆBஜே/KG7ஏZஎ8ஏஎக்/ச்600/ஊண்DYஈண்G+DஈDஆCTஈCஸ்.ஜ்ப்க்

                    • //சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தைப் படிப்பு//-நாலு வேதங்கள் சாத்திரங்கள் ஆகமங்கள் எல்லாம் ஆரவாரமான படிப்பு.//நம் சொந்த படிப்போ விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா வித்தையைக் கற்றனன்//-எனது சொந்த படிப்போ விதுநெறியாகிய சாக கல்வி.அந்த வித்தையை நான் கற்றவன்.//உத்தரம் எனுமோர் பொதுவளர் திசைநோக்கி வந்தனன்//- உத்தரஞான சிதம்பரமாகிய வடலூர் தலத்தை நோக்கி வந்தவன் நான். //என்றும் பொன்றாமை வேண்டிடில் எந்தோழி//-என் தோழியே நீ எப்பொழுதும் இறவாமல் இருக்க விரும்பினால். //நீதான் அதுஇது என்னாமல் ஆடேடி பந்து//-நீ அந்தநெறி இந்தநெறி என்று எண்ணாமல் பந்து ஆடடி. //அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து//-புருவநடுவாகிய சிற்சபையில் அருட்பெருஞ்சோதியை கண்டு ஆடடி அப்படி ஆடினால் நீ மரணமில்லா பெருவாழ்வை பெறலாம்.இதுதான் நீங்கள் சுட்டிய பாடலின் எளிய விளக்கம்.வள்ளலார் பாடலுக்கு கோணார் நோட்ஸ் தேவை இல்லை அனைத்துமே எளிய பாடல்கள்தான்.நீங்கள் வாலை தலையாக பொருள் கொள்வதற்கு நான் பொறுப்பல்ல.ஆயிரம் பாடல்களை மேற்கோள் காட்டலாம் அவர் சாகாதிருப்பதேஞானம் என் கிறார் என்பதை நிறுபிக்க.

          • சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்ற 4வழி முறைகளை சைவம் கூறுகிறது.இதை தாசமார்க்கம்,சற்புத்திரமார்க்கம்,சகமார்க்கம்,சன்மார்க்கம் என்று தமிழ்படுத்தலாம்.மாணிக்கவாசகர் சன்மார்க்கமாகிய ஞான மார்க்கி,வள்ளலாரும் “என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே” என்று கூறுகிறார்.இருவரும் ஒப்பிடதக்கவரே.

    • // பொற்கோவில்களில் இறவனில்லை என்று காடவே புளியமரத்தடி அமர்ந்தார் வள்ளலார்! //

      புளியமரத்தடியில்தான் இறைவன் இருக்கிறான் என்று காடவே அப்படி அமர்ந்தார் வள்ளலார் என்று சொல்லாமல் விட்டீர்களே.. வள்ளலார் தப்பினார்..

      // சைவர் பயன்படுத்தும் திருநீற்றை அவர் தொடக்கூடாது என்றனர்; புற்று மண்ணேநீராக கொடுத்தார்! வில்வம் , துளசி தரக்கூடாது என்றனர்; புளிய இலையை பத்திரமாக கொடுத்தார்! காவி அணிய தடையிட்டனர்; வெண்துகில் அணிந்தார்! //

      வள்ளலார் அவராகவே செய்தவற்றையெல்லாம் யாரோ தடுத்ததால்தான் இப்படிச் செய்தார் என்று அளந்துவிடுகிறீர்கள்..

  12. வள்ளலாரை நாவலர் எதிர்த்தமைக்குக் காரணம், அக்காலச் சூழ்நிலையில், கிறித்தவ மிசனரிமார்கள் தமிழ்நாட்டில் கடலோர மக்களையும், இலங்கையில் தமிழர்கள் அனைவரையும் மதமாற்றம் செய்து கொண்டிருக்கும் போது, சைவத்தில் உட்பிரிவுகள், பிளவுகள் ஏற்பட்டு, சைவர்கள் பிளவுபடுவதை அவர் விரும்பவில்லை. ஏனென்றால் மிசனரிமார்களின் மதமாற்றத்தை சைவத்துக்கு ஏற்பட்ட பாரிய ஆபத்தாக அவர் கருதினார்.

    வள்ளலார் இக்கால கிறித்தவ evangelical போதகர்கள் போன்றவர். அவர்களும் ஒரே பைபிளை அடிப்படையாகக் கொண்டு, தமக்கென, ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு ஒரே கர்த்தரையும், ஏசுவையும் தான் வணங்குகிறார்கள். ஆனால் அவர்களை கத்தொளிக்கர்களோ, வத்திக்கனோ, அல்லது பாப்பாண்டவரோ ஏற்றுக் கொள்வதில்லை. அதற்காக பாப்பாண்டவர் கூடாதவர் என்று எந்தக் கிறித்தவரும் வாதாடுவதுமில்லை.

    • // வள்ளலார் இக்கால கிறித்தவ evangelical போதகர்கள் போன்றவர். அவர்களும் ஒரே பைபிளை அடிப்படையாகக் கொண்டு, தமக்கென, ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு ஒரே கர்த்தரையும், ஏசுவையும் தான் வணங்குகிறார்கள். ஆனால் அவர்களை கத்தொளிக்கர்களோ, வத்திக்கனோ, அல்லது பாப்பாண்டவரோ ஏற்றுக் கொள்வதில்லை. அதற்காக பாப்பாண்டவர் கூடாதவர் என்று எந்தக் கிறித்தவரும் வாதாடுவதுமில்லை. //

      சமணத்தின் ஜீவகாருண்யத்தையும்; அரு, உருவற்ற ஜோதியான பரம்பொருள் என்ற இறை தத்துவத்தையும் ஒருங்கிணைத்தவர் அருட் பிரகாச வள்ளலார்.. எந்த கிறித்தவப் பிரிவையும், இந்து சமயப் பிரிவையும் வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்துடன் ஒப்பிட முடியாது.. அவைகளை எதிர்த்து போராடும் killer instinct-ம் வள்ளலாரின் சன்மார்க்கத்திடம் இல்லை..!

      வள்ளலார் நம்மால் நம்பமுடியாத அளவுக்கு நல்லவராக இருந்தது அவர் குற்றமல்ல.. அவரை பின்பற்ற இயலாத நமது பக்குவின்மையைத்தான் குறை கூற வேண்டியிருக்கும்..

  13. //நாவலரைக்கொண்டு வள்ளலாரை எதிர்த்த பார்ப்பனர் சூழ்ச்சி போலவே இல்லை//

    யாழ்ப்பாண ஆறுமுகநாவலர் பார்ப்பனரையும் தாக்கினார். அவரது நோக்கம் சைவத்தின் சீர்திருத்தமும, மிசனரிகளிடமிருந்து சைவத்தைக் காப்பதும் தான்.

    சைவசமய அனுட்டானங்களில் எங்காவது வெளிப்படையான பெரிய தவறு கண்டால் நாவலர் கொஞ்சமேனும் தயக்கமின்றித் தமது எழுத்துக்களாலும் பிரசங்கங்களாலும் கண்டித்து வந்தார். வியாபார நோக்கோடு சமய அநுட்டானங்களில் தவறி நடக்கும் சைவக் குருமாரைக்கூட அவர் விட்டு வைப்பதில்லை.

    “மரமேறும் வகுப்பினைச் சேர்ந்தவர்களுட் சிலர் கள்ளுண்பதை விட்டு விட்டனர். புலையரிலே சிலர் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தி விட்டார்கள். இங்ஙனமாக அவர்கள் திருந்தி வாழ்கிறார்கள். ஆனால் வெற்று நெற்றி வேளாளர் சிலர் கிறிஸ்தவர்களுடன் கூடிச் சாராயம் குடித்து மாட்டிறைச்சியும் உண்கிறார்கள். இவர்களுடைய திருமணச் சடங்குகளையும் ஈமக்கிரியைகளையும் செய்து வைக்கும் பிராமணர்களும் சைவக்குருமாரும் இருக்கிறார்கள். இவர்களுள் யார் மதிக்கத் தகுந்தவர்கள்? முன்னையவர்களா? பின்னையவர்களா?” இங்ஙனம் தாம் எழுதி வெளியிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றிலே நாவலர் கேட்கிறார்.”

    எல்லாம் வல்ல சிவபெருமானை விட வேறொரு தெய்வம் இல்லை என்று முழுமையாக நம்பிய நாவலர். சிறுதெய்வ வழிபாட்டைக் கண்டித்த்தர். சிறுதெய்வ வழிபாடு ஆகமங்களுக்கு எதிரானது ஆனால் இக்காலப் பார்ப்பனர்களும் பணம் கொடுத்தால், எந்த சுடலைமாடனுக்கும் வந்து பூசை பண்ணி விட்டுப் போவார்கள். ஆனால் அதை அன்றே கண்டித்தார் ஆறுமுகநாவலர். இனி, கண்ணகி கோயில்களிலே சைவக் குருமார் பூசை செய்வதைப் பற்றி நாவலர் கூறுவதைப் பார்ப்போம்.

    “இக்கண்ணகி கோவில்களிலும் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களிலும் நம் சைவ மக்கள் சென்று வழிபடுவது நமது சமயத்துக்கு அடுக்காது என்று அவர் எடுத்துக் காட்டுகிறார். “ஜைன மதச் செட்டிச்சியான கண்ணகியின் இரு மருங்கிலும் விநாயக, சுப்பிரமணிய விக்கிரகங்களை அச்சமின்றி வைத்துப் பூசிக்கும் அதி பாதகர்களாகிய இவர்களும் அன்றோ சைவக் குருமார் என்று கணிக்கப்படுகிறார்கள்” என்று நாவலர் குறிப்பிடுகிறார். பதினேழு நூற்றாண்டுகளுக்கு முன் கஜபாகு மன்னன் இவ்வழிபாட்டு முறையை இலங்கை மக்கள் மீது திணித்தான். அவனுடைய மறைவுடன் இந்த வழிபாட்டு முறையும் மறைந்து போயிருக்கும். ஆனால் நமது சைவக் குருமாரன்றோ இக்கோயில்களில் இன்றும் இவ்வழிபாட்டு முறையைக் கைவிடாது பூசாகாரியங்களைச் செய்து வந்தார்கள். செய்தும் வருகிறார்கள்.”

    நாவலர் தமது காலத்திலிருந்த சைவக் குருமாரையும் கண்டிக்கத் தவறவில்லை. சைவ மக்களை விளித்து அவர் பின்வருமாறு பேசுகிறார்.

    “அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை வரிப்பணமாகத் தொண்ணூறு சதத்தைக் கொடுக்க மனமின்றிக் கொடுக்கிறீர்கள். ஆனால் இந்த அற்ப தொகைப் பணத்திற்கு அரசாங்கம் உங்களுக்கு அருமையான தெருக்களை அமைத்துத் தருகிறது. நீங்கள் எங்கெல்லாம் போக விரும்புகிறீர்களோ அங்கெல்லாம் சௌகரியமாகவும் வசதியாகவும் இத்தெருக்களில் நீங்கள் பயணம் செய்யக்கூடியதாயிருக்கிறது. உங்கள் குருமாருக்கும் நீங்கள் அரிசி, பருப்பு, நெய் என்பவற்றோடு ரூபாக்களாகவும் பணம் கொடுக்கிறீர்கள். அவர்களிடமிருந்து நீங்கள் எதனைப் பெற்றுக் கொள்கிறீர்கள்? உங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் சமயத்தையோ அல்லது நெறி முறைகளையேனுமோ கற்றுத் தருகிறார்களா? உங்கள் கோவில்களிலே ஏதாவது போதனை செய்கிறார்களா? பாடசாலைகளை நிறுவி உங்கள் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுகிறார்களா? சைவசமயத்திலுள்ள எவரேனும் ஒருவர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ விரும்புகிறார் என்று அறிந்தால் அன்னவரை அணுகி, சைவத்தின் மேன்மையை எடுத்துணர்த்தி மிஷனரிக்கு இரையாகாமல் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறாரா? உங்கள் வீடுகளுக்கு வரும் சமயங்களில் கொலை செய்தல், புலால் உண்ணல், மதுவருந்தல் என்பன விலக்கப்பட வேண்டிய பாதகங்கள் என்று இவ்வாறான நெறிமுறைகளை உங்களுக்கு எடுத்துச் சொல்வதுண்டா? மிஷனரிகள் எங்கள் சமயத்தைத் தாக்கிப் பேசும்போது எதிர்வாதம் புரிந்து நமது சமய உண்மைகளை எடுத்து நிலை நாட்டுவதுண்டா? அந்தியேஷ்டி என்ற பதத்தைச் சரியாக உச்சரிக்கக் கூடிய குருமார் எத்தனை பேர் இருக்கிறார்கள்? தச்சர், கொல்லர், சலவைத் தொழிலாளர் என்பவர்களில் தத்தம் தொழில் தெரியாதவரக்ளை நீங்கள் அழைத்து வேலை செய்விப்பீர்களா? அங்ஙனமிருக்கத் தனது பணி செவ்வனே செய்யத் தெரியாத குருக்களை ஏன் நீங்கள் அழைக்க வேண்டும்?”

    • // “ஜைன மதச் செட்டிச்சியான கண்ணகியின் இரு மருங்கிலும் விநாயக, சுப்பிரமணிய விக்கிரகங்களை அச்சமின்றி வைத்துப் பூசிக்கும் அதி பாதகர்களாகிய இவர்களும் அன்றோ சைவக் குருமார் என்று கணிக்கப்படுகிறார்கள்” என்று நாவலர் குறிப்பிடுகிறார். //

      கண்ணகி சமணப் பெண்ணாக இருந்திருந்தால், கோவலன் – கண்ணகி திருமணத்தில் பார்ப்பானுக்கு என்ன வேலை..?!

      ”வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச்
      சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
      மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
      தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை”

      கண்ணகியும், கோவலனும் சைவச் செட்டியார்கள் என்பது தமிழறிஞரான நாவலருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.. இருந்தும் இப்படி அவர் கண்ணகி வழிபாட்டை இடித்துரைக்கும் காரணத்தையும் நீங்களே கூறிவிட்டீர்கள்..:

      // எல்லாம் வல்ல சிவபெருமானை விட வேறொரு தெய்வம் இல்லை என்று முழுமையாக நம்பிய நாவலர். சிறுதெய்வ வழிபாட்டைக் கண்டித்த்தர். //

      நாவலருக்கு சிவபெருமானின் மீதுள்ள பக்தி முத்திவிட்டதால்தான், நம்மூர் பெரியாரிஸ்டுகள் பெரியார் படத்தையும் பாரதி படத்தையும் ஒன்றாக வைத்திருப்பதைப் பார்த்தால் எப்படி கொந்தளிப்பார்களோ அப்படி கொந்தளித்திருக்கிறார் போலிருக்கிறது..!

      • வாசகர்கள் வசதிக்காக அருஞ்சொற்பொருள். ஏதோ என்னால் ஆனது:

        // ”வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச்
        சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
        மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
        தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை” //

        சகடு – ரோகிணி. “வான்ஊர் மதியம் சகடணைய” – சந்திரனை ரோகிணி அணையும் நாள், அதாவது ரோகிணி நட்சத்திரம் கூடிய நன்னாள். “ஒருமீன் தகையாளை” – அருந்ததி போன்ற கண்ணகியை.

      • //மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
        தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை”//

        இங்கு மாமுது பார்ப்பான் என்பது பூணூலணிந்த இக்காலப் பார்ப்பனர்களையல்ல, தமிழர்களை அதிலும் ஆதித்தமிழர்களான பறையர்களைக் குறிக்கிறது என்பது பரவலான ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இவர்கள் சமணர்களாக இருந்தது சமணர்களின் கோயில்களைப் பார்ப்பார்களாக (பராமரிப்போர்)க் கூட இருந்திருக்கலாம்.

        “இந்த சிலப்பதிகார வரிகளின் பொருள்: – “மாமுது பார்ப்பான் – மிகப்பழங்காலந்தொட்டு கோயில் காரியங்கள், குறிசொல்வது, கணியம் பார்ப்பது, சவச்சடங்குகள் செய்வது முதலியவற்றைக் கவனித்துவந்த பழங்குடியினரும் பிற வேலைக்காரர்களும். இவர்கள் தமிழர்கள். வடக்கிலிருந்தோ வெளி நாடுகளிலிருந்தோ வந்தோரல்லர். (எந்தக் குடியினரும் இவ்வேலையில் அமரலாம், சங்ககாலத்திலே. மணமுறைக் கட்டுப்பாடுகள் இல்லை. காதல் திருமணங்கள் நடைபெற்றன.மணக்கொடைமுறை (வரதட்சிணை) இல்லை) இது மாப்புதுப் பார்ப்பான் என்று வந்திருந்தால் புத்தேளிரைக் குறிக்கும், புதுப்பார்ப்பான் வெளியிலிருந்து வந்து பார்ப்பு வேலைகளில் அமர்ந்தவன்”.

        “பார்ப்பான் என்ற சொல் ஆலயத்தைப் பார்த்துக் கொள்வோரைக் குறிக்கிறது. ஆரம்பத்தில் ஆலமரங்களுக்குக் கீழுள்ள ஆலயங்களைப் பார்த்துக் கொள்வோர் பார்ப்பான் என்றழைக்கப்பட்டனர். தமிழகத்தில் பெருங்கற்றளிகள் கட்டப்படமுன்னர் மரங்களின் கீழ் அதிலும் பெரிய ஆலமரங்களின் கீழ் தான் தமிழர்களின் கடவுள் வழிபாடு தொடங்கியது, ஆலமரத்திலிருந்து உருவாகிய சொல்லே ஆலயம். ஆலமர் கடவுள் என்பது சிவனுக்குப் பெயர். அதனால் தான் கல்லால மரத்தின் கீழ் சிவபெருமான் தென்முகக்கடவுளாக வீற்றிருப்பதாகக் கூறுகிறது தமிழர் சைவம். ஆதியில் அந்த ஆலமரத்தடிக் கடவுளைப் பார்த்துக் கொண்ட ஆதித்தமிழன் தான் உண்மையான பார்ப்பானே தவிர வடக்கிலிருந்து வந்த பூணூலணிந்தபூசாரிகளல்ல. அவன் முரசறையும்போது அவனுக்குப் பெயர் முரசறைவோன். முரசும், முரசு கட்டிலும் எந்தளவுக்கு தமிழர்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது யாவரும் அறிந்த்தே. அதே போல் கோயிலைப் பார்க்கும்போது அவன் பார்ப்பவன் – பார்ப்பான்.

        தமிழரல்லாத பூணூல் பூசாரிகள் வடக்கிலிருந்தும் கோதாவரி, துங்கபத்திரை நதிக்கரைகளிலிருந்து தமிழ்மண்ணுக்கு வருமுன்னர், தமிழர்கள் தான் கோயில்களைப் பார்த்துக் கொண்டார்கள். ஆதித்தமிழர்களாகிய வள்ளுவர்களும், முரசறைவோரும் (பறையர்கள்) கோயில்களில் உயர்ந்த பதவிகளிலிருந்து, கோயில்களை பார்த்துக் கொள்பவர்களாகவும், பூசாரிகளாகவும், சோதிட நூல்களை படித்துப் பார்த்துச் சொல்பவர்களாகவுமிருந்தனர். (Tamil Studies, Srinivasa aiyangar). 1891 இல் நடைபெற்ற சனத்தொகை புள்ளிவிவர அறிக்கையில் வடக்கு மற்றும் வடுகப் பூசாரிகளின் வருகையின் முன்னால் பல்லவ அரசர்களின் காலத்திலும் மனுநெறியாளர்களின் வருகையின் பின்னரும் வள்ளுவர் (பறையர்) பூசாரிகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் பார்ப்பனர்களாக இருந்துள்ளனர் (Thurston (1909), Vol. VI, p. 82.) அவர்கள் தான் உண்மையான பார்ப்பான்கள். ஆனால் வடக்கிலிருந்து வந்தவர்களும், வடுகப் பூசாரிகளும் சூழ்ச்சியால் அவர்களின் பார்ப்பனத் தொழிலைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதனால் தான் தமிழில் “பார்ப்பானுக்கு முந்தியவன் பறையன், கேட்பாரின்றிக் கீழ்சாதி ஆனான்” என்ற பழமொழியுருவானது.

        • // இங்கு மாமுது பார்ப்பான் என்பது பூணூலணிந்த இக்காலப் பார்ப்பனர்களையல்ல, தமிழர்களை அதிலும் ஆதித்தமிழர்களான பறையர்களைக் குறிக்கிறது என்பது பரவலான ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இவர்கள் சமணர்களாக இருந்தது சமணர்களின் கோயில்களைப் பார்ப்பார்களாக (பராமரிப்போர்)க் கூட இருந்திருக்கலாம். //

          திருமணத்தில் அருந்ததி பார்த்து, வேள்வித் தீயை வலம் வரும் வழக்கம் சமணத்தில் இருந்ததா..?! இந்தச் சடங்கை பறையர் பூசாரிகள் அக்காலத்தில் நடத்திக் கொண்டிருந்தனர் என்பதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தா..?!

          // “இந்த சிலப்பதிகார வரிகளின் பொருள்: – “மாமுது பார்ப்பான் – மிகப்பழங்காலந்தொட்டு கோயில் காரியங்கள், குறிசொல்வது, கணியம் பார்ப்பது, சவச்சடங்குகள் செய்வது முதலியவற்றைக் கவனித்துவந்த பழங்குடியினரும் பிற வேலைக்காரர்களும். இவர்கள் தமிழர்கள். வடக்கிலிருந்தோ வெளி நாடுகளிலிருந்தோ வந்தோரல்லர். (எந்தக் குடியினரும் இவ்வேலையில் அமரலாம், சங்ககாலத்திலே. மணமுறைக் கட்டுப்பாடுகள் இல்லை. காதல் திருமணங்கள் நடைபெற்றன.மணக்கொடைமுறை (வரதட்சிணை) இல்லை) இது மாப்புதுப் பார்ப்பான் என்று வந்திருந்தால் புத்தேளிரைக் குறிக்கும், புதுப்பார்ப்பான் வெளியிலிருந்து வந்து பார்ப்பு வேலைகளில் அமர்ந்தவன்”. //

          பார்ப்பு வேலை மட்டுமல்ல வேளாண்மையும்,வணிகமும் கூட தொழில் அடிப்படையிலான பிரிவினையே.. சங்க கால வேளாளர்கள்தான் இன்றைய வேளாளர்களா..?! இன்றைய பள்ளர்கள்தான் சங்க கால மள்ளர்கள் என்ற வேளாண்குடிகள் என்ற கருத்து மட்டும் ஏன் ’பரவலாக’ ஏற்றுக் கொள்ளப்படவில்லை..?!

          // 1891 இல் நடைபெற்ற சனத்தொகை புள்ளிவிவர அறிக்கையில் வடக்கு மற்றும் வடுகப் பூசாரிகளின் வருகையின் முன்னால் பல்லவ அரசர்களின் காலத்திலும் மனுநெறியாளர்களின் வருகையின் பின்னரும் வள்ளுவர் (பறையர்) பூசாரிகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் பார்ப்பனர்களாக இருந்துள்ளனர் (Thurston (1909), Vol. VI, p. 82.) அவர்கள் தான் உண்மையான பார்ப்பான்கள். //

          வடக்கு மற்றும் வடுகப் பூசாரிகளின் வருகைக்கு முன்னால், இந்தியா முழுவதும் நிலவி வந்த வைதீக முறையிலான மேற்கூறிய திருமணச் சடங்குகள், வேள்விகள், பூசைகளை தமிழகத்தில் அன்று பார்ப்பனர்களாக இருந்த பறையர்கள் செய்து வந்தார்கள் என்றால் :-

          அன்றும் இன்றும் இருக்கும் சாக்கியப் பறையர்கள், பல்லவர் கால திருமுறைகளில் கூறப்படும் ’ஆவுரித்து தின்று வாழும் புலையர்கள்’ முதலானோர் ஏன் அதற்கு முன்பே ஒதுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும் இருந்தனர்..?! யாரால்..?! புதுப் பார்ப்பான்கள்தான் அப்போது இல்லையே..?!

          // ஆனால் வடக்கிலிருந்து வந்தவர்களும், வடுகப் பூசாரிகளும் சூழ்ச்சியால் அவர்களின் பார்ப்பனத் தொழிலைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதனால் தான் தமிழில் “பார்ப்பானுக்கு முந்தியவன் பறையன், கேட்பாரின்றிக் கீழ்சாதி ஆனான்” என்ற பழமொழியுருவானது. //

          ’கேட்பாரின்றி’ என்றால் கேட்கவேண்டியர்களே அப்போது இல்லையா..?! அல்லது கூட்டுச் சதியா..?! ’புதுப் பார்ப்பான்களால்’ பார்ப்பனத் தொழிலை இழந்த பறையர்கள் அவர்களுக்கு அடுத்த சமூக படி நிலையில் இல்லாமல் எல்லா ‘கேட்க வேண்டியவர்களாலும்’ அழுத்தப்பட்டு, அடிமட்ட நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்..?! எப்போது விழுவான் என்று காத்திருந்து, கீழே விழுந்தவனை மிதித்து நசுக்குவதுதான் தமிழர் பண்பாடு என்கிறீர்களா..?! இப்போதும் பறையர்களின் எழுச்சியை, தங்களுக்கு விடப்படும் சவால் என்று ஒடுக்குபவர்கள் யார்..?! இன்றைய பார்ப்பனர்களா..?! பறையர்கள்தான் பழைய பார்ப்பனர்கள் என்று ’புதுப் பார்ப்பனர்களுக்கு’ எதிராக கருத்துக்களை அள்ளி வீசுபவர்கள், முனைப்பு காட்டுபவர்களெல்லாம் தங்கள் சொந்த சாதிக்கு இணையாக பறையர்கள் உயர விரும்புவதைக் கூட சகிக்க முடியாததேன்..?! பறையர்களை மீண்டும் பார்ப்பனர்களாக்குவதை விட ’இன்றைய’ பார்ப்பனர்களையும் பறையராக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த சுய சாதிவெறிதானே தெரிகிறது..! இந்த நுட்பமான தாழ்த்தப்படுதல் மீண்டும் நடவாது..!

          • //திருமணத்தில் அருந்ததி பார்த்து, வேள்வித் தீயை வலம் வரும் வழக்கம் சமணத்தில் இருந்ததா..?! இந்தச் சடங்கை பறையர் பூசாரிகள் அக்காலத்தில் நடத்திக் கொண்டிருந்தனர் என்பதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தா..?!//

            ஆறுமுகநாவலர் கண்ணகியை ஜைனமதச் செட்டிச்சி என்றார். அதனால் கண்ணகி சமண மதத்தைச சார்ந்தவராக ‘இருந்திருந்தால்’, மாமுது பார்ப்பான்கள் என்பவர்கள் சமணக் கோயிலைப் பாரமரித்தவர்கள் அதாவது பார்ப்பபான்களாக இருந்திருக்கலாமே தவிர இந்த மாமுது பார்ப்பான்கள், இக்காலப் பிராமணர்களைப் போன்ற பூநூலணியும் சாதியினரல்ல என்பது தான் எனது கருத்தாகும்.

            “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட: என்பதில் வரும் மறை கூட ஆரியர்களின் வேதங்கள் அல்ல. சங்கம் கவிதைகளில் மறை என்பது ‘களவு’ ஐக் குறிக்கிறதே தவிர ஆரிய வேதங்களையல்ல. அத்துடன் மறையோர் என்பதும் பிராமணர்களைக் குறிக்கவில்லை, அதனால், பிராமணரல்லாத ஆதித் தமிழ் பார்ப்பான் நிச்சயமாக வேள்வித்தீயை வலம் வரச் செய்திருக்க மாட்டான்.”மறை” என்ற சொல், தொல்காப்பிய நூற்பாவிலேயே இசை நூல்களையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. பறையர் பூசாரிகள், அதாவது புதுப்பார்ப்பான்கள் வருமுன்பிருந்த, மறை (காதல்/களவு) அறிந்த மாமுது பார்ப்பானாகிய வள்ளுவன் தீவலம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தான். ஆனால் அந்த தீவலம் என்பதை வேள்வித்தீ என இக்காலப் பார்ப்பனர்கள் கருத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. அதாவது அந்தக் கருத்து விவாதத்துக்குரியது

            … it becomes clear that marai is an older word for kalavu (which is also etymologically convincing as it means “secret” ). And consequently the maraiyor of the sutra have to be understood as ‘those” who are familiar with secret (love). Now this has later become a source of confusion, because marai came to be understood as Veda and maraiyor as Brahmins – which seems to be the reason for Ilampuranars surprising interpretation of Tamil poetry 489 as intending Brahmins and the Gandharva marriage.

            Book: Literary Techniques in Old Tamil Cankam Poetry by Eva Wilden

            http://books.google.ca/books?id=_f3_3gT_NmcC&printsec=frontcover#v=onepage&q&f=false

            • //பார்ப்பு வேலை மட்டுமல்ல வேளாண்மையும்,வணிகமும் கூட தொழில் அடிப்படையிலான பிரிவினையே.. சங்க கால வேளாளர்கள்தான் இன்றைய வேளாளர்களா..?! //

              அதில் என்ன சந்தேகம்? அவர்கள் வெளியிலிருந்து தமிழ்மண்ணுக்கு வந்ததாக யாரும் நிரூபிக்காத வரை அல்லது அவர்கள் தமிழர்கள் தானா என்று யாரும் சந்தேகம் தெரிவிக்காத வரை, சங்க கால வேளாளர்களின் வழித்தோன்றல்களே இன்றைய வேளாளர்கள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

              //இன்றைய பள்ளர்கள்தான் சங்க கால மள்ளர்கள் என்ற வேளாண்குடிகள் என்ற கருத்து மட்டும் ஏன் ’பரவலாக’ ஏற்றுக் கொள்ளப்படவில்லை..?!//

              அதை நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாமை ஒரு காரணமாக இருக்கலாம், அதை விட பள்ளர்கள், என்ற ஒரு சாதி வேளாளர்களின் கீழ் இருந்தனர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உண்டு.

              //வடக்கு மற்றும் வடுகப் பூசாரிகளின் வருகைக்கு முன்னால், இந்தியா முழுவதும் நிலவி வந்த வைதீக முறையிலான மேற்கூறிய திருமணச் சடங்குகள், வேள்விகள், பூசைகளை தமிழகத்தில் அன்று பார்ப்பனர்களாக இருந்த பறையர்கள் செய்து வந்தார்கள் என்றால்//

              வைதீக முறையில் தொல்காப்பிய காலத்தில் சடங்குகள் நடந்தன என்பது இக்காலப் பார்ப்பனர்களின் கற்பனை மட்டுமல்ல, வரலாற்றுத் திரிப்பும் கூட. அந்தக் கருத்தைப் பலர் எதிர்க்கின்றனர். தொல்காப்பியத்தில் கூறப்படும் நான்மறை என்பது ஆரிய வேதங்களல்ல. அது தமிழர்களின் மூலமறை, வடுகப் பூசாரிகள் ஆகமத்துக்கு என்ன செய்தார்களோ அதையே தமிழர்களின் நான்மறைகளுக்கும் செய்து விட்டார்கள்.

              //அன்றும் இன்றும் இருக்கும் சாக்கியப் பறையர்கள், பல்லவர் கால திருமுறைகளில் கூறப்படும் ’ஆவுரித்து தின்று வாழும் புலையர்கள்’ முதலானோர் ஏன் அதற்கு முன்பே ஒதுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும் இருந்தனர்..?! யாரால்..?! புதுப் பார்ப்பான்கள்தான் அப்போது இல்லையே..?!//

              ஆதித்தமிழர்கள் ஆவுரித்துத் தின்றுழலும் அளவுக்கு ஒதுக்கப்பட்டது புதுப்பார்ப்பனர்களின் வருகையால். திருநாவுக்கரசர் “ஆவுரித்து தின்றுழலும் புலையரேனும்”.. என்று பாடியது சங்க காலத்தில் அல்ல. நாவுக்கரசர் காலத்துக்கு முன்பே புதுப்பார்ப்பனர்கள் தமிழ்மண்ணுக்கு வந்து, தமிழர்களின் வாழ்க்கை நெறிகளைச் சீரழித்து விட்டார்கள்.

              • //’கேட்பாரின்றி’ என்றால் கேட்கவேண்டியர்களே அப்போது இல்லையா..?! அல்லது கூட்டுச் சதியா..?! ’//

                கூட்டுச் சதி என்பதை விட பார்ப்பன மாயை அல்லது தமிழர்களின் வெள்ளைத் தோலாசை அல்லது இந்துமதவெறி சக தமிழர்களின் கண்களை மறைத்து விட்டன என்று கூடக் கொள்ளலாம்.

                //புதுப் பார்ப்பான்களால்’ பார்ப்பனத் தொழிலை இழந்த பறையர்கள் அவர்களுக்கு அடுத்த சமூக படி நிலையில் இல்லாமல் எல்லா ‘கேட்க வேண்டியவர்களாலும்’ அழுத்தப்பட்டு, அடிமட்ட நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்..?! //

                அவர்களின் பார்ப்புத்தொழிலும், நிலங்களும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு கங்கைச் சமவெளியிலிருந்தும், துங்கபத்திரா நதிக்கரைகளிளிருந்தும் பிழைப்புத் தேடி தமிழ்மண்ணுக்கு வந்த புதுப்பார்ப்பான்களுக்கு அளிக்கப்பட்டதால், அவர்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்கு தள்ளபட்டார்கள். நிலம் தான் ஒரு சமூகத்துக்கு முக்கியமானது. அவர்கள் தமது நிலத்தை இழந்த பின்பு அவர்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்கு தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அதை இலங்கையில் இன்று நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது.

                //இப்போதும் பறையர்களின் எழுச்சியை, தங்களுக்கு விடப்படும் சவால் என்று ஒடுக்குபவர்கள் யார்..?!//

                நிச்சயமாக பார்ப்பனர்கள் அல்ல, ஆனால் சாதியை தமிழ்மண்ணுக்கு அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, அதன் பலனை பல நூற்றாண்டுகளாக அனுபவித்தவர்கள் என்ற வகையில் புதுப்பார்ப்பான்களும் இப்படியான குற்றச்சாட்டுகளை வாயை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

                // இன்றைய பார்ப்பனர்களா..?! பறையர்கள்தான் பழைய பார்ப்பனர்கள் என்று ’புதுப் பார்ப்பனர்களுக்கு’ எதிராக கருத்துக்களை அள்ளி வீசுபவர்கள், முனைப்பு காட்டுபவர்களெல்லாம் தங்கள் சொந்த சாதிக்கு இணையாக பறையர்கள் உயர விரும்புவதைக் கூட சகிக்க முடியாததேன்..?! //

                ஆதிக்க சாதிகளும் எதிர்க்கப்பட வேண்டியவர்களே. ஆனால் ஒரு சிலர் பார்ப்பான்களை மட்டும் வசை பாடுகிறார்கள். மற்ற ஆதிக்கசாதிகளை எதிர்க்கப் பயப்படுகிறார்கள் அதனால் தான் நான் பெரியாரிஸ்டுகளின் விசிறி அல்ல.

                • // கூட்டுச் சதி என்பதை விட பார்ப்பன மாயை அல்லது தமிழர்களின் வெள்ளைத் தோலாசை அல்லது இந்துமதவெறி சக தமிழர்களின் கண்களை மறைத்து விட்டன என்று கூடக் கொள்ளலாம். //

                  எமது முன்னோரெல்லாம் ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளைகள் என்கிறீர்களா..?!!!

                  // அவர்களின் பார்ப்புத்தொழிலும், நிலங்களும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு கங்கைச் சமவெளியிலிருந்தும், துங்கபத்திரா நதிக்கரைகளிளிருந்தும் பிழைப்புத் தேடி தமிழ்மண்ணுக்கு வந்த புதுப்பார்ப்பான்களுக்கு அளிக்கப்பட்டதால், அவர்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்கு தள்ளபட்டார்கள். //

                  அவர்களின் நிலங்களை பறித்து புதுப்பார்ப்பான்களுக்கு கொடுத்த மன்னர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்களா.. தமிழ் மன்னர்கள் எல்லாம் தமிழ் இனக்குழுக்களின் தலைவர்கள்தானே.. ஒரு சில குறிப்பிட்ட தமிழ் இனக்குழுக்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்கு தள்ளப்பட்டதைக் குறித்து பிற தமிழ் இனக்குழுக்களின் தலைவர்களான மன்னர்களும் மற்ற தமிழர்களும் வருத்தமோ கவலையோ கொள்ளவில்லையா..?! அப்படியே விட்டுவிட்டார்களா..?!

                  // நிலம் தான் ஒரு சமூகத்துக்கு முக்கியமானது. அவர்கள் தமது நிலத்தை இழந்த பின்பு அவர்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்கு தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அதை இலங்கையில் இன்று நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. //

                  ஒரு உயர்மட்ட சமூகப் பிரிவில் நிலமில்லாதவர்களும், நிலமிழந்தவர்களும் ஏழைகளாக அதே சமூகப் பிரிவில் நீடிப்பது இயல்பானது, இன்றும் நடப்பது.. மாறாக அவர்கள் எல்லா சமூகப் பிரிவுகளுக்கும் கீழான அடிமட்டத்துக்கு தள்ளப்படுவதை அன்றைய ஆட்சியாளர்களின் திட்டமிட்ட ஒடுக்குமுறை என்று கொண்டால் மட்டுமே யாராலும் தடுக்கமுடியாது என்று கூறமுடியும்..

                  இலங்கையில் நீங்கள் காண்பது தேசிய இன ஒடுக்குமுறை.. தமிழர்களில் ஒரு சில பிரிவினரை மட்டும்தான் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் ஒடுக்குவதாக கூறமுடியாது..

                  // நிச்சயமாக பார்ப்பனர்கள் அல்ல, ஆனால் சாதியை தமிழ்மண்ணுக்கு அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, அதன் பலனை பல நூற்றாண்டுகளாக அனுபவித்தவர்கள் என்ற வகையில் புதுப்பார்ப்பான்களும் இப்படியான குற்றச்சாட்டுகளை வாயை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். //

                  புதுப்பார்ப்பான்கள்தான் சாதியை தமிழ்மண்ணுக்கு அறிமுகப்படுத்தினார்களா..?! அதற்குமுன் இங்கே சாதிகள் இல்லையா..?! அறிமுகப்படுத்தியவுடன் எல்லோரும் அதை சிக்கென பிடித்துக் கொண்டு செயல் படுத்த அது என்ன நவீன தொழில் நுட்பமா..?! சாதிகளின் தோற்றம் இனக்குழுக்களின் தொகுப்பிலும், பகுப்பிலுமாக தானாக உருவாகி வருவது.. யார் யார் என்ன சாதி, என்ன படிநிலை என்று கூட்டம் கூட்டி ஒதுக்கீடு செய்துவிட்டு அப்படியே போய் செட்டிலாகிக் கொள்ளுங்கள் என்று கூறும் விவகாரமல்ல.. ஜைன மத செட்டிச்சி என்று கூறும் காழ்ப்புணர்வில்தான் சாதியின், அதன் ஏற்றதாழ்வுகளின், அதன் தொடர்ச்சியின் மூலம் இருக்கிறது..

              • // அதில் என்ன சந்தேகம்? அவர்கள் வெளியிலிருந்து தமிழ்மண்ணுக்கு வந்ததாக யாரும் நிரூபிக்காத வரை அல்லது அவர்கள் தமிழர்கள் தானா என்று யாரும் சந்தேகம் தெரிவிக்காத வரை, சங்க கால வேளாளர்களின் வழித்தோன்றல்களே இன்றைய வேளாளர்கள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. //

                யார் யாரெல்லாம் வேளாளராயினர் என்பதை விவாதிக்குமுன், சங்க கால வேளாளர்களான மள்ளர்கள் என்னவானார்கள், தமிழகத்தை விட்டே வெளியே போய்விட்டார்களா என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிட்டினால்தான் கருத்து வேறுபாடு இல்லை என்ற முடிவுக்கு வர இயலும்..

                // அதை விட பள்ளர்கள், என்ற ஒரு சாதி வேளாளர்களின் கீழ் இருந்தனர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உண்டு. //

                சங்க காலத்தில் பள்ளர்கள் இருந்தார்கள் என்ற ஆதாரம் இருக்கிறதா..?!

                // வைதீக முறையில் தொல்காப்பிய காலத்தில் சடங்குகள் நடந்தன என்பது இக்காலப் பார்ப்பனர்களின் கற்பனை மட்டுமல்ல, வரலாற்றுத் திரிப்பும் கூட. அந்தக் கருத்தைப் பலர் எதிர்க்கின்றனர். தொல்காப்பியத்தில் கூறப்படும் நான்மறை என்பது ஆரிய வேதங்களல்ல. அது தமிழர்களின் மூலமறை, வடுகப் பூசாரிகள் ஆகமத்துக்கு என்ன செய்தார்களோ அதையே தமிழர்களின் நான்மறைகளுக்கும் செய்து விட்டார்கள். //

                4 ஆரிய வேதங்களுக்கும், தமிழர்களின் நான்மறைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் தெரிந்தால்தான் எவை வைதீகச் சடங்குகள் எவை தமிழ்ச் சடங்குகள் என்பது தெரியும்.. வசதிப்படாத சடங்குகளையெல்லாம் வைதீகச் சடங்குகள் என்று தள்ளி வைத்த பின் மீதியென்று ஏதாவது எஞ்சுகிறதா..?!

                // ஆதித்தமிழர்கள் ஆவுரித்துத் தின்றுழலும் அளவுக்கு ஒதுக்கப்பட்டது புதுப்பார்ப்பனர்களின் வருகையால். திருநாவுக்கரசர் “ஆவுரித்து தின்றுழலும் புலையரேனும்”.. என்று பாடியது சங்க காலத்தில் அல்ல. நாவுக்கரசர் காலத்துக்கு முன்பே புதுப்பார்ப்பனர்கள் தமிழ்மண்ணுக்கு வந்து, தமிழர்களின் வாழ்க்கை நெறிகளைச் சீரழித்து விட்டார்கள். //

                ’புதுப் பார்ப்பனர்களின்’ வருகை எந்த காலகட்டம் என்று தெளிவாகக் கூறுங்கள்.. ஏனெனில் சங்க காலத்திலேயே இழிசினர், இழிபிறப்பாளர், புலையர், தொழும்பர், உரிமைமாக்கள் என்று ஒரு பெரிய கூட்டத்தையே ஒதுக்கி வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்..

                • // ’புதுப் பார்ப்பனர்களின்’ வருகை எந்த காலகட்டம் என்று தெளிவாகக் கூறுங்கள்

                  // ’புதுப் பார்ப்பனர்களின்’ வருகை எந்த காலகட்டம் என்று தெளிவாகக் கூறுங்கள்..

                  நல்ல கேள்வி அம்பி. சங்க இலக்கியத்தில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை எயினர், வலைஞர், இடையர் என பலரின் குடியிருப்புகள் பற்றி கூறுகிறது. இந்த வரிசையில்:

                  “கோழியொடு ஞமலி துன்னாது
                  வளைவாய்க் கிள்ளை மறை மொழி பயிற்றும்
                  மறை காப்பாளர் பதி”

                  என்கிறது. இது பழைய தமிழ் மறையா, ஆரிய வேதமா? பழைய தமிழ் மறை எல்லோரும் கற்க முடியுமா? எனில், “மறை காப்பாளர் பதி” என தனிக் குடியிருப்பு ஏன்?

                  • இங்கே மறை எனப்படுவது யாது என வியாசரிடம் தெளிவு படுத்திக் கொண்டு பதில் சொல்வது நல்லது என நினைக்கிறேன்..

                    • இந்த மறைக்கு என்ன விளக்கம் கொடுக்கலாம் என்று வியாசர் இன்னும் யோசித்து முடிக்கவில்லையா..

                    • செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர்
                      பைஞ்சேறு மெழுகிய படிவ நல் நகர்
                      மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது
                      வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும்
                      மறை காப்பாளர் உறை பதி சேப்பின்
                      பெரு நல் வானத்து வட வயின் விளங்கும்
                      சிறுமீன் புரையும் கற்பின் நறு நுதல்
                      வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
                      சுடர் கடை பறவை பெயர் படு வத்தம்
                      சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
                      உருப்புறு பசும் காய் போழொடு கறி கலந்து
                      கஞ்சக நறு முறி அளைஇ பைம் துணர்
                      நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த மலை 512
                      தகை மாண் காடியின் வகை பட பெறுகுவிர்

                      இந்தப் பத்துப்பாட்டில் இங்கு கூறப்படும் மறை என்பது ஆரியர்களின் நான்குவேதங்களைக் குறிக்கவில்லை. தமிழர்களின் மூலமறையாகிய நான்மறைகளையோதும், மறைகாப்பாளர்களாகிய தமிழ்ச் சித்தர்களைக் குறிக்கிறது. இந்துமதம் தமிழர்களிடையே வேரூன்ற முன்னர் இருந்த ஆசீவக சித்தர்களை தான் மறையோர் என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியங்கள்.

                  • // ஆசீவக சித்தர்களை தான் மறையோர் என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியங்கள்.

                    இதற்கென்ன பொருள்?

                    // பெரு நல் வானத்து வட வயின் விளங்கும் சிறுமீன் புரையும் கற்பின்

                    இந்த ஆசீவக மறை காப்பாளர்கள் ஏன் தனிக்குடியிருப்பில் இருக்கிறார்கள்? இவர்களிடம் இருந்த மறையை எல்லோரும் ஓத முடியுமா?

            • // ஆறுமுகநாவலர் கண்ணகியை ஜைனமதச் செட்டிச்சி என்றார். அதனால் கண்ணகி சமண மதத்தைச சார்ந்தவராக ‘இருந்திருந்தால்’, மாமுது பார்ப்பான்கள் என்பவர்கள் சமணக் கோயிலைப் பாரமரித்தவர்கள் அதாவது பார்ப்பபான்களாக இருந்திருக்கலாமே தவிர இந்த மாமுது பார்ப்பான்கள், இக்காலப் பிராமணர்களைப் போன்ற பூநூலணியும் சாதியினரல்ல என்பது தான் எனது கருத்தாகும். //

              சைவ தமிழச்சியான கண்ணகியை ஜைன மத செட்டிச்சி என்று ஆறுமுக நாவலர் கூறுவதை முதலில் நம்பிவிட்டு பின் அதை நிறுவுவதற்காக சிலப்பதிகார செய்யுளுக்கு புதுப்புது பொருள் விளக்கம் கொடுக்கத் தலைபட்டிருக்கிறீர்கள்..

              // பறையர் பூசாரிகள், அதாவது புதுப்பார்ப்பான்கள் வருமுன்பிருந்த, மறை (காதல்/களவு) அறிந்த மாமுது பார்ப்பானாகிய வள்ளுவன் தீவலம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தான். ஆனால் அந்த தீவலம் என்பதை வேள்வித்தீ என இக்காலப் பார்ப்பனர்கள் கருத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. //

              பேண்ட்டுக்கு ஏற்றவாறு காலை வெட்டுவது மட்டும்தான் உங்கள் பொறுப்பா..?!

              மாமுது பார்ப்பான் தீவலம் செய்யவில்லை, கோவலனும், கண்ணகியும்தான் தீவலம் செய்தவர்கள்.. அவர்கள் தீவலஞ் செய்வதைப் பார்த்தவர்களின் கண்கள் செய்த தவம் (நோன்பு) தான் என்ன என்கிறார் சமணத் துறவி இளங்கோவடிகள்..

              தீவலம் செய்வது என்றால் வேள்வித்தீயை வலஞ்செய்வதைக் குறிக்கவில்லை என்றால் பின் வேறு எதனைக் குறிக்கிறது..? ரூம் போட்டு யோசித்து ஒரு நல்ல அருஞ்சொற்பொருள் விளக்கத்துடன் வாருங்கள்..!

              அது சரி, திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறார்களே, அது என்ன உலகப் பொது காதல்/களவா..?!! திருவள்ளுவரும், இளங்கோவடிகளும் உங்களுக்கு அப்படி என்ன தவறிழைத்தார்கள்..?!!

      • இலக்கியங்களில் கூறப்படும் “பார்ப்பனன்”, “அந்தணன்/மறையவன்” என்பன ஒன்று தானா என எனக்கும் சந்தேகம் வந்துள்ளது!

        நான்மறை, ஐவேள்வி, ஆறங்கம்,ஆகுதி, மூன்று வேளை அனலோம்புதல், இருபிறப்பு, முப்புரிநூல் போன்றவை குறிப்பிடும்போது “மறையவன்” அல்லது “அந்தணன்” என்ற சொல் காணப்படுகிறது. “மூவாவுருவின் மறையாளர் அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே”, “அந்தணர்தம் ஆகுதியின் மிகையார் செல்வத்து அணியழுந்தூர்’ என்பது போல.

        மறுபுறம் திருமணம் போன்ற சடங்குகள் நடத்தி வைக்கும் புரோகிதன் என்ற பொருளுக்கு “பார்ப்பனன்” என்ற சொல் காணப்படுகிறது. ஒரு உதாரணம், மேலே சொன்ன சிலப்பதிகாரப் பாடல். இரண்டாவது உதாரணம் ஆண்டாள் தனது கனவு திருமணத்தை கூறும் பாடல்.

        “நால்திசை தீர்த்தம் கொண்டு நனிநல்கி
        பார்ப்பனச்சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
        பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
        காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்”

        வேதமோதவும், வேள்வி செய்யவும் அந்தணர்கள். புரோகிதம் செய்ய பார்ப்பனர்கள் என இரண்டு தனி குழுக்கள் இருந்தார்களா? பிற்காலத்தில் இரண்டும் ஒன்றாகி விட்டதா? “நான்மறை ஓதும் பார்ப்பனன்”, “திருமண சடங்கு நடத்தும் அந்தணன்” என்பது போன்ற தொடர்கள் பழைய இலக்கியங்களில் உள்ளனவா?

        என்னிடம் உள்ள தமிழ் அகராதி (வர்த்தமானன் பதிப்பகம்), “பார்ப்பனன்’ என்ற சொல்லுக்கு “பிராமணன், என்ற ஒற்றை பொருள் தந்து முடித்துக்கொள்கிறது!

        • மேலே உள்ள மறுமொழியின் இணைப்பு இது. “முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை” என்பது திருமங்கை ஆழ்வார் பாடல். இதற்கு அண்ணங்கராச்சாரியார் விளக்கவுரை கீழே. அந்தணருக்குரிய அறுதொழில்களில் புரோகிதம், கோவில் அர்ச்சனை போன்றவை இல்லை என்பதைக் காண்கிறோம்.

          நன்றி : http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3373

          முத்தீ – கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்பவை த்ரேதாக்நிகளாம். நான் மறைகளாவன – ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன. இவை வேதவ்யாஸரால் பிரிக்கப்பட்ட பிரிவின் பெயர்களாதலால், அதற்கு முன்னிருந்த தைத்திரியம் பௌடியம் தலவகாரம் சாமம் என்ற நான்கும் என்று கொள்ளுதல் தகும்.

          ஐவகைவேள்வி –ப்ரஹ்மயஜ்ஞம் தேவயஜ்ஞம் பித்ருயஜ்ஞம் மநுஷ்யயஜ்ஞம் என்பன பஞ்சமஹாயஜ்ஞங்கள். ப்ரஹ்மயஜ்ஞமாவது – “ப்ரஹ்மயஜ்ஞப்ரசநம்“ என்று தினப்படியாக வேதத்தில் ஒவ்வொரு ப்ரச்நம் ஓதுவது. வேயஜ்ஞமாவது அக்நிஹோத்ரம்செய்வது பூதயஜ்ஞமென்பது பிராணிகட்குப்பலியிடுவது. பித்ருயஜ்ஞமென்பது பித்ருக்களை உத்தேசித்துத் தர்ப்பணம் விடுவது. மநுஷ்யயஜ்ஞமென்பது விருந்தாளிகளுக்கு உணவு முதலியன கொடுப்பது.

          அறு தொழில் – தான் வேதமோதுதல், பிற்களுக்கு ஓதுவித்தல், தான் யாகஞ் செய்தல், பிறர்க்கு யாகஞ் செய்வித்தல், தானங்கொடுத்தல், தானம்வாங்கிக்கொள்ளுதல் என்பன ஆறு கருமங்களாம். ஆக. த்ரேதாக்நிகளையும் நான்கு வேதங்களையும் பஞ்சமஹாயஜ்ஞங்களையும் ஷட்கருமங்களையும் நிரூபகங்களாகவுடைய வேதியர்களாலே ஸேவிக்கப்படுபவன் எம்பெருமான் என்றதாயிற்று.

    • // சிறுதெய்வ வழிபாடு ஆகமங்களுக்கு எதிரானது ஆனால் இக்காலப் பார்ப்பனர்களும் பணம் கொடுத்தால், எந்த சுடலைமாடனுக்கும் வந்து பூசை பண்ணி விட்டுப் போவார்கள். //

      காசு கொடுத்தால் பெரியாருக்கே பூசை பண்ணக்கூடிய பார்ப்பனர்களும் இருக்கும் போது நம்ம சுடலை மாடனுக்கு மட்டும் பூசை பண்ணப்படாதா..!

  14. “சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலிற் பட்டம் பெற்ற இருவருள் (இருவரும் ஈழத்தமிழர்கள்) ஒருவரான விசுவநாதபிள்ளை (மற்றவரே சி.வை. தாமோதரம்பிள்ளையாவார்) கிறிஸ்தவராய் இருந்துகொண்டு சைவசமயத்தைத் தாக்கி வந்தார். பின்னால் அவர் தம் செய்கைக்காக வருந்திச் சைவசமயத்திற்கு எதிர்த்து எழுதி வந்ததற்கெல்லாம் பிராயச் சித்தமாகச் சிதம்பரத்திலே சென்று தமது நாவிலே பொன்னூசியால் சூடு போட்டுக் கொண்டு உண்மையான சைவராகி நாவலரைப் பின்பற்றி ஒழுகும் சீலம் மிகுந்தவரானார்.”

    • அவர் ஏண் சிதம்பரத்திற்கு வரவேண்டும்? இலங்கையில் சைவ கோவில்கள் பல உள்ளவே! சிதன்பரத்தில் அந்தக்கால இந்துத்வாவின் தலைநகராயிருந்தது, என்பதே! மேலும் புராணங்கள் புனைய புலவர்களை நிதியளித்து கவர்வது வழமைதானே!

      • ஆறுமுக நாவலர் போன்ற ஈழத்து தமிழர்கள் தில்லைக் கோவிலுக்கு நிதி, நிலம் தானம் செய்திருக்கிறார்களே தவிர நிதி பெற்று புராணம் புனைவதற்காக தில்லை வந்ததாக நீங்கள் இப்படி அள்ளிவிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்..

        • ஆறுமுகநாவலர் சூத்திரரும் படிக்க கல்வி அறக்கட்டளை நிறுவி பணிபுரிந்ததையும், தமிழர் பலர் பிற சமயத்திற்கு செல்லா வண்ணம் சைவனெறி பரப்பியதையும் குறைத்து சொல்லவில்லை! அவர் இலங்கையிலும் சைவப்பணிகள் செய்தவர்தானே! மற்றபடி தான்ம் செய்தது தமிழுக்காகவோ, தமிழனுக்காகவோ அல்ல! அவரது முக்கிய பணியாக இருந்தது, யாழ்ப்பாணத்தமிழர்கள் சைவத்தை புறக்கணித்து பிற சமயம் சென்றுவிடக்கூடாது என்று சைவம் பரப்பியதே! அதிலும், ஆரியத்தை ஒட்டிய தமிழ் சைவமே அவரது மூச்சு! திருமூலரும், மெய்கண்டாரும், வள்ளலாரும் போற்றிய உருவமிலா சிவம், சாதி, மதமொழித்த சைவம் அவருடையது அல்ல! அது சரி, த்ற்பொது சிதிலமான இலங்கை சைவ மடம் தீக்ஷிதர் வசம் போனதெப்படி? சிதம்பரத்தில் தமிழ் சைவர்கள் அருகினரோ!

      • //அவர் ஏண் சிதம்பரத்திற்கு வரவேண்டும்? இலங்கையில் சைவ கோவில்கள் பல உள்ளவே//

        மன்னிக்கவும், இது முஸ்லீம்களைப் பார்த்து, பல மசூதிகள் இந்தியாவில் உண்டே ஏன் மெக்காவுக்குப் போகிறீர்கள், என்று கேட்பது போன்ற முட்டாள்தனமான கேள்வி. 🙂

        அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் சிதம்பரம் தான் ஈழத்துச் சைவத்தமிழர்களுக்கு மெக்கா. இலங்கைத் தமிழர்கள் கோயில் என்றால் அது சிதம்பரத்தைத் தான் குறிக்கும். அதற்கும் இந்துத்துவாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சுதந்திரத்துக்குப் பின்பு கூட தமது சொத்தில் ஒரு பங்கை “கோயிலுக்கு” (சிதம்பரத்துக்கு) எழுதி வைக்கும் பழக்கத்தை பல ஈழத்தமிழர்கள் கொண்டிருந்தனர். சிதம்பரத்துக்குச் சொந்தமான நிலங்கள் இலங்கையில், குறிப்பகா யாழ்ப்பாணத்தில் இன்றும் உண்டு. அதனால் தான் நானும் என்னயறியாமலே சிதம்பரம் கோயில் விடயத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறேன் என்று நினைக்கிறேன்.

  15. வியாசன்! பனாவலரின் தமிழ்ப்பற்றைநான் குறை கூறியதில்லை!நாவலரும், ஆரிய வழியில் ;மேல் சாதி’ சிந்தனையுடையவர், அந்த குறுகிய வட்டத்திற்குள்ளேயே சிந்தை செய்துள்ளார்! வள்ளலார் மீது வழக்கு தொடுத்தபோது, இந்திமத துறவியெண அவர் கூறிக்கொள்ளக்கூடாது, மற்றும் இந்துமத சின்னங்கள், வில்வம் பயன்படுத்தகூடாதுஎன்றார்! இந்து மத கோவிலான சிதன்பரம் கோவிலுக்குள் பிரவேசிக்க தடையும் கேட்டதால், எதிராளியாக தீக்ஷிதர்களை ஒப்புக்கு செர்த்தனர்! அப்பொது தானே எக்ஸ்பார்டி தீர்ப்பு பெற முடியும்! இப்பொதும் தமிழ அரசு அந்தநிலைதானே எடுத்துள்ளது? ஆனால் வள்ளலார்நேரிலேலே வந்தார்! எல்லாமே தலை கீழானது!

  16. //ஆறுமுகநாவலர் சூத்திரரும் படிக்க கல்வி அறக்கட்டளை நிறுவி பணிபுரிந்ததையும், தமிழர் பலர் பிற சமயத்திற்கு செல்லா வண்ணம் சைவனெறி பரப்பியதையும் குறைத்து சொல்லவில்லை!//

    இலங்கையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் சூத்திரர்கள் படிக்க முதல்முதலில், ஈழத்தமிழர்களின் நிதியுதவியுடன் பள்ளிக்கூடம் தொடங்கியவர் ஆறுமுகநாவலர்,. நாவலர் சிதம்பரத்தில் நிறுவிய சைவப்பிரகாச வித்தியாலயம் இன்றும் உயர்நிலைப் பள்ளியாக அங்கு இயங்குகிறது.

    //அவர் இலங்கையிலும் சைவப்பணிகள் செய்தவர்தானே! மற்றபடி தான்ம் செய்தது தமிழுக்காகவோ, தமிழனுக்காகவோ அல்ல! அவரது முக்கிய பணியாக இருந்தது, யாழ்ப்பாணத்தமிழர்கள் சைவத்தை புறக்கணித்து பிற சமயம் சென்றுவிடக்கூடாது என்று சைவம் பரப்பியதே! //

    நாவலரின் தமிழ்த்த்தொண்டைக் குறைத்து மதிப்பிடுவது தமிழன்னைக்குச் செய்யும் துரோகமாகும். நான் சுவாமிநாதையரின் தமிழ்த்தொண்டைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் ஊடகங்கள் பார்ப்பனர்களின் கைகளில் இருந்ததால், சுவாமிநாதையருக்கு முன்பே, பழமையான ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்து அச்சுவாகனத்திலேற்றி பாதுகாத்த, ஈழத்தமிழர்களாகிய ஆறுமுகநாவலரும், சி.வை தாமோதரம்பிள்ளையும் செய்த தமிழ்த்தொண்டு மறைக்கப்பட்டு, புகழனைத்தும் சுவாமினாதையருக்கு அளிக்கப்பட்டு விட்டது. (இறுதியில் The Hindu கூட அந்த உண்மையை ஒப்புக்கொண்டது.)

    Tiru Vi Ka wrote: “The credit for editing and publishing much of Sangam literature and the five great epics — Sivagachinthamani, Silappathikaram, Manimekalai, Valayaapathi and Kundalakesi — goes to U.V. Swaminatha Aiyar. In this endeavour, it has been rightly observed that Arumuga Navalar laid the foundation. Thamotharampillai raised the walls and Swaminatha Aiyar built the superstructure.”

    http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/from-the-first-two-to-tomorrows/article780924.ece

  17. ///அதிலும், ஆரியத்தை ஒட்டிய தமிழ் சைவமே அவரது மூச்சு! திருமூலரும், மெய்கண்டாரும், வள்ளலாரும் போற்றிய உருவமிலா சிவம், சாதி, மதமொழித்த சைவம் அவருடையது அல்ல! ///

    நாவலர் ஆரியத்தைப் போற்றவில்லை ஆனால் தமிழர்களின் சொத்தாகிய, ஆகமங்களைப் போற்றினார். (ஆகமத்தில் பார்ப்பனர்களால்,அவர்களுக்குச் சாதகமாக பல இடைச்செருகல்கள் ஏறபடுத்தப்பட்டுள்ளன, ஆனால் அவற்றை நாவலர் எதிர்க்கவில்லை. ஏனென்றால் அவரது காலத்தில் சைவத்தில் பிளவு ஏற்படுவதை அவர் விரும்பவில்லை. ஆனால் இன்றிருந்தால் எதிர்த்திருப்பார்).
    ஈழத்தமிழ்ச் சைவத்துக்கும் தமிழ்நாட்டின் வைதீக சைவத்துக்குமுள்ள முக்கிய வேறுபாடு எதுவென்றால் நாங்கள் நாயன்மார்களின் தேவார திருமுறைகளை, சமக்கிருத வேதங்களை விட மேலானதாகக் கருதுகிறோம். ஈழத்தமிழர் பண்பாட்டில் தேவாரம் பாடாமல் எதுவும் நடப்பதில்லை. பிறந்த குழந்தையின் 31ம் நாள் சடங்கிலிருந்து, ஒருவர் இறந்தால், சுடலையில் கொண்டு போய் எரிக்கும் வரை இரவு பகலாக தேவாரம் பாடுவது ஈழத்தமிழர்களின் வழக்கம். அது இன்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் கூட கடைப்பிடிக்கப்படுகிறது. அங்குள்ள funeral homes எல்லாம் தேவார CDக்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். இலங்கையில் எந்தக் கோயிலிலும் தேவாரம் பாடாமல் எந்தப் பூசையும் முடிவடைவதில்லை. ஈழத்தமிழ்ச் சைவத்தை சித்தாந்த சைவம் என்றும் சிலர் குறிப்பிடுவர் அப்படியிருக்க, நீங்கள், மெய்கண்டாருக்கும், ஈழத்தமிழ்ச்சைவத்துக்கும் தொடர்பில்லை என்கிறீர்கள். சைவசித்தாந்தத்தில் மெய்கண்டார் மிகவும் முக்கியமானவர் அல்லவா?

    ///அது சரி, த்ற்பொது சிதிலமான இலங்கை சைவ மடம் தீக்ஷிதர் வசம் போனதெப்படி? சிதம்பரத்தில் தமிழ் சைவர்கள் அருகினரோ!///

    இலங்கை-இந்திய சுதந்திரத்தின் பின்னால், இரண்டு நாடுகளுக்குமிடையிலான சுமுகமான போக்குவரத்தில் தடங்கல்களும், விசா சம்பந்தமான கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டதால், ஈழத்தமிழர்களின் மடங்களையும் நிலங்களையும் தீட்சிதர்கள் தம்வசப்படுத்திக் கொண்டனர். அண்மையிலும் சில மடங்களின் கைமாறல்கள் நடைபெற்றதைச் சுட்டிக் காட்டி, அவற்றை காக்குமாறு ஈழத்தமிழர்களின் ஊடகங்களும், Tamilnet போன்ற பல இணையத்தளங்களும் கேட்டுக் கொண்டன.

    (ஈழத்து வன்னியர் செப்புப்பட்டயம் – சித‌ம்ப‌ர‌ம் கைலைவ‌ன்னிய‌னார் ம‌ட‌மும், நிலங்களும் எங்கே?
    http://viyaasan.blogspot.ca/2013/05/blog-post_26.html)

    (சித‌ம்ப‌ர‌த்தில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ சின்னங்களைப் பாதுகாக்குமாறு செல்வி.ஜெயலலிதாவிட‌ம் வேண்டுகோள்.
    http://viyaasan.blogspot.ca/2013/04/blog-post_4167.html)

    (தில்லைக்கோயிலில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றுபடுவோம்!
    http://viyaasan.blogspot.ca/2013_11_01_archive.html)

  18. //ஈழத்தமிழர்களின் மடங்களையும் நிலங்களையும் தீட்சிதர்கள் தம்வசப்படுத்திக் கொண்டனர்//

    திருத்தம்: கைவசப்படுத்திக் கொண்டனர். 🙂

  19. Pஎர்மலிங் 12.2.1.1.1.1.1.3.1.1
    // திருவிளையாடற்புராணம் எழுதிய ……

    சேக்கிழார் அல்ல. பரஞ்சோதி முனிவர்.// நன்றி!வெங்கடேசன்! எனக்கு பெரிய புராணம், திருவிளையாடற்புராணம் இரண்டுக்கும் குழப்பமாகிவிட்டது! ஆனால், ஒரு ஓற்றுமை! இரண்டுமே கற்னபனை திறத்தால், பக்தனின் காதில் பூ சுற்றுகிறது! இரண்டு குல்லாய்கள் வைத்திருக்கும் வெங்கடேசன் மனசாட்சிக்கும் ஒரு குல்லாய் வைத்துக்கொள்ளலாம்!

    • // இரண்டுமே கற்னபனை திறத்தால், பக்தனின் காதில் பூ சுற்றுகிறது

      பிட்டுக்கு மண் சுமந்தது, தனது பக்த நண்பனுக்காக திருக்கச்சூர் தெருக்களில் பிச்சை எடுத்து போன்ற கதைகள் காதில் பூ சுற்றும் ஏமாற்று வேலை என நினைப்பவர்கள் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிடலாம். கற்பனை பிடித்திருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். ஏற்றுக் கொள்ள வேண்டும் என கட்டாயம் ஏதும் இல்லை.

      // வெங்கடேசன் மனசாட்சிக்கும் ஒரு குல்லாய் வைத்துக்கொள்ளலாம்!

      நன்றி. அடுத்த முறை மார்கெட் போகும் போது வாங்கி விடுகிறேன். உங்களிடம் ஒரே ஒரு தொப்பி தான் உள்ளது. உங்கள் மறுமொழிகளை வைத்துப் பார்த்தால், அது தொலையும் நிலையில் இருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது. பத்திரம்.

  20. //எமது முன்னோரெல்லாம் ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளைகள் என்கிறீர்களா..?!!!///

    ‘பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’ என்பார்கள். அது போல் இந்துமதத்தை முழுமனதாக ஏற்றுக் கொண்ட எமது முன்னோர்கள், இந்துமதத்தின் சாபக்கேடான சாதிப்பாகுபாட்டையும், அதன் காவலர்களாகிய பிராமணர்களையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்கள். இக்காலப் பச்சைபிள்ளைகள் கூட கேள்வி கேட்காமல் எதையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்த விடயத்தில் எமது முன்னோர்கள் ஏமாளிகள் தான், அளவு கடந்த மத நம்பிக்கையால் அவர்களின் மதி கெட்டுவிட்டது.

    //ஒரு சில குறிப்பிட்ட தமிழ் இனக்குழுக்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்கு தள்ளப்பட்டதைக் குறித்து பிற தமிழ் இனக்குழுக்களின் தலைவர்களான மன்னர்களும் மற்ற தமிழர்களும் வருத்தமோ கவலையோ கொள்ளவில்லையா..?! அப்படியே விட்டுவிட்டார்களா..?!//

    மேலேயுள்ள பதிலையும் பார்க்கவும், இந்த நிலை பல தலைமுறைகளாக நடைபெற்றது. இந்துமதத்தின் சாதியும் அதன் அடிப்படையில் சாதிமுறையின் பலன்களை பெருமளவில் அனுபவித்த பார்ப்பனர்களும் இந்த இழிநிலைக்குத் தூண்டு கோலாக இருந்தனர் என்ற உண்மையை வலியுறுத்தும் அதே வேளையில், எமது முன்னோர்களும் அந்தப் பழியிலும், பாவத்திலும் பங்குதாரர்கள் என்பதை தமிழர்கள் யாரும் மறுப்பதில்லை.. தமிழினத்தில் சாதிப்பாகுபாடு காணப்படுவதற்கும், தமிழர்கள் தாழ்த்தப்பட்டதற்கும் பார்ப்பனர்கள் மட்டும் காரணமல்ல, ஏனைய தமிழர்களுக்கும் அதில் பங்குண்டு என்பதை தான் மீண்டும், மீண்டும் நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதை நான் மட்டுமல்ல, பெரும்பான்மை தமிழர்கள் ஒப்புக்கொள்வார்கள். அதனால் உங்களின் கேள்விகள் வெறும் விதண்டாவாதமாகத் தான் எனக்குப்படுகிறது

    //மாறாக அவர்கள் எல்லா சமூகப் பிரிவுகளுக்கும் கீழான அடிமட்டத்துக்கு தள்ளப்படுவதை அன்றைய ஆட்சியாளர்களின் திட்டமிட்ட ஒடுக்குமுறை என்று கொண்டால் மட்டுமே யாராலும் தடுக்கமுடியாது என்று கூறமுடியும்.///

    இந்துமத்தின் எழுச்சியும், ஆட்சியாளர்களிடம் இந்துமதமும், வருணாச்சிரமத்தை வலியுறுத்தும் மனுநெறியாளர்களும் (பிராமணர்கள்) தமிழ் மன்னர்களை நெருங்கத் தொடங்கி, அவர்களின் ஆதிக்கம் தமிழ்மன்னர்களிடம் வலுப்பட்டதால், சாமானிய தமிழர்கள் மேலும், மேலும் கீழே தள்ளப்பட்டார்கள். மனுநெறியாளர்களைத் திருப்திப்படுத்த, அவர்களின் பேராசையைத் தீர்க்க எமது மன்னர்கள், தமிழர்களின் நிலங்களைப் பிடுங்கி அவர்களிடம் கையளித்தார்கள்,. நிலமிழந்தவர்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்கு தள்ளப்பட்டார்கள். அதைக் கண்டு பயந்த ஏனைய தமிழர்கள் தமது நிலங்களும் பறிபோகாமல் தடுக்க, பிராமண ஆதிக்கத்தை எதிர்க்கத் தயங்கினர். அதனால் தான் தமிழர்களில் ஒருபகுதியினர் ஒடுக்கப்படுவதை அவர்கள் எதிர்க்கவில்லை என்றும் கருதலாம். அதை விட தமிழ் அரசர்கள் பலர் தமிழரல்லாதவர்களிடம் பெண் கொடுத்து, பெண் எடுத்ததும் அவர்களிடம் தமிழின உணர்வு அற்றுப் போனதற்கு காரணமாகும். உதாரணமாக், தமிழரல்லாதவர்களின் படையெடுப்புகளால் இனக்கலப்பும், கலாச்சார பாதிப்புகளும் ஏற்படாத ஈழத்தமிழர்களிடம் உள்ள தமிழினவுணர்வு, தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் கிடையாது. வீட்டில் இன்றும் வேறுமொழி பேசுகிறவர்களை, அவர்களின் மூதாதையர் தமிழரல்லாதவர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் தமிழும் பேசுவதால், அவர்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்வார்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள்.

    //இலங்கையில் நீங்கள் காண்பது தேசிய இன ஒடுக்குமுறை.. தமிழர்களில் ஒரு சில பிரிவினரை மட்டும்தான் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் ஒடுக்குவதாக கூறமுடியாது///

    உங்களுக்கு நிலைமை இன்னும் சரியாகப் புரியவில்லை போல் தெரிகிறது.. தமிழர்களின் நிலங்களைக் கைப்பற்றித் தான் சிங்களவர்களைக் குடியேற்றுகிறார்களே தவிர, சிங்களவர்களின் நிலங்களில் ஒருபோதும் தமிழர்களைக் குடியேற்றியதில்லை/குடியேற்றவும் மாட்டார்கள்.

    //புதுப்பார்ப்பான்கள்தான் சாதியை தமிழ்மண்ணுக்கு அறிமுகப்படுத்தினார்களா..?! அதற்குமுன் இங்கே சாதிகள் இல்லையா..?! ///

    ஆரியப்பார்ப்பனர்களின் வருகையால் தான் வருணாச்சிரம அடிப்படையில் தீண்டாமை தமிழ்மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னால் தொழில் சம்பந்தமான பிரிவுகள் இருந்தாலும், தலைவனும், தலைவியும் காதல்வசப்பட்டால், அவர்கள் எந்த தொழிலை செய்பவர்களாக இருந்தாலும் மணம் புரிந்து கொண்டனர்.

    ///அறிமுகப்படுத்தியவுடன் எல்லோரும் அதை சிக்கென பிடித்துக் கொண்டு செயல் படுத்த அது என்ன நவீன தொழில் நுட்பமா..?! ///

    தீண்டாமையும், சாதிப்பாகுபாடும் அறிமுகபப்டுத்தப்பட்டு பல தலைமுறைகளின் பின்னர் தான் கொடிய பூதமாக உருவெடுத்ததே தவிர சிக்கெனப் பிடித்து, சிக்கென வளர்ந்ததாக யாரும் கூறவில்லை. ஆட்சியாளர்களிடம் இந்துமதமும், பார்ப்பனீயமும் கொண்டிருந்த அன்னியோன்னியமும், ஆதிக்கமும், சாதியை வளர்க்க உதவியது.

    //சாதிகளின் தோற்றம் இனக்குழுக்களின் தொகுப்பிலும், பகுப்பிலுமாக தானாக உருவாகி வருவது.. யார் யார் என்ன சாதி, என்ன படிநிலை என்று கூட்டம் கூட்டி ஒதுக்கீடு செய்துவிட்டு அப்படியே போய் செட்டிலாகிக் கொள்ளுங்கள் என்று கூறும் விவகாரமல்ல.. ///

    இனக்குழுக்களின் தொகுப்பிலும், பகுப்பிலுமாக தானாக உருவாகி வருவது தொழில் முறையான பாகுபாடு ஆனால் இந்துக்களுக்கே மட்டும் உரிய இந்த சாதிப்பாகுபாடும், தீண்டாமையும் மனுநெறியாளர்களால் இந்து மதத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் தான் இந்துசமயம் பரவாத எந்த நாட்டிலும் இத்தகைய பிறப்பினடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் பாகுபாடு இல்லை.

    //ஜைன மத செட்டிச்சி என்று கூறும் காழ்ப்புணர்வில்தான் சாதியின், அதன் ஏற்றதாழ்வுகளின், அதன் தொடர்ச்சியின் மூலம் இருக்கிறது///

    கண்ணகியை ஜைனமதச் செட்டிச்சி என்று யாழ்ப்பாணத்து ஆறுமுகம்பிள்ளையைக் கொக்கரிக்க வைத்ததே இந்துமதத்தின் அடிப்படையிலான சாதிப்பாகுபாட்டை அவர் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டதால் தான்.

    //யார் யாரெல்லாம் வேளாளராயினர் என்பதை விவாதிக்குமுன், சங்க கால வேளாளர்களான மள்ளர்கள் என்னவானார்கள், தமிழகத்தை விட்டே வெளியே போய்விட்டார்களா ///

    ‘கள்ளரும், மறவரும் அகம்படியரும் மெள்ள, மெள்ள வெள்ளாளர் ஆகினரே’ என்பது போல், மள்ளர்களும் வேளாளர்களுடன் கலந்து காணமல் போயிருக்கலாம்.

    //சங்க காலத்தில் பள்ளர்கள் இருந்தார்கள் என்ற ஆதாரம் இருக்கிறதா..?///

    மன்னிக்கவும், எனக்குத் தெரியாது. வயலில் வேலை செய்தவர்கள் நிச்சயமாக இருந்திருப்பார்கள். உங்களின் இந்தச் சந்தேகத்தை மணடபத்தில்வேறு யாராவது போக்குவார்கள் என நம்புகிறேன்.

    //4 ஆரிய வேதங்களுக்கும், தமிழர்களின் நான்மறைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் தெரிந்தால்தான் எவை வைதீகச் சடங்குகள் எவை தமிழ்ச் சடங்குகள் என்பது தெரியும்.///

    தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் தமிழர்களின் நான்மறை, நான்கு ஆரிய வேதங்களையும் குறிப்பிடுவன அல்ல எனும் தமிழாய்ந்த வல்லுனர்கள் சிலரின் கருத்தை நானும் கேட்டதால் தான் நான் அதைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். அதைப்பற்றி விரிவாக விவாதிக்குமளவுக்கு எனக்கு தமிழறிவு கிடையாது. ஆனால் தொல்காப்பியத்தில், பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதாகவும், , அகத்தியர், தொல்காப்பியர் அனைவரும் பார்ப்பனர்கள் என்றும் சில பார்ப்பனர்கள் பீற்றிக் கொள்ளும் வரலாற்றுத் திரிப்பை தமிழர்கள் நம்பக் கூடாது, அதில் உண்மையில்லை என்பதில் எனக்கு ஐயமெதுவுமில்லை.

    • //‘பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’ என்பார்கள். அது போல் இந்துமதத்தை முழுமனதாக ஏற்றுக் கொண்ட எமது முன்னோர்கள், இந்துமதத்தின் சாபக்கேடான சாதிப்பாகுபாட்டையும், அதன் காவலர்களாகிய பிராமணர்களையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.//

      நான்மறையோ கன்றிடம் இருந்தது.. அது இல்லாத பன்றியின் கண்கள் கன்றிடம் இருந்த நான்மறை மீதிருந்தது.. கன்றின் கண்கள் எதன் மீதிருந்தது..?! மலத்தின் மீதா..?! நான்மறையிலிருந்து 4 வேதங்களை ‘புதுப்பார்ப்பான்கள்’ உருவாக்கும் முன்பே இந்து மதம் எப்படித் தோன்றியதோ..?!

      // உங்களுக்கு நிலைமை இன்னும் சரியாகப் புரியவில்லை போல் தெரிகிறது.. தமிழர்களின் நிலங்களைக் கைப்பற்றித் தான் சிங்களவர்களைக் குடியேற்றுகிறார்களே தவிர, சிங்களவர்களின் நிலங்களில் ஒருபோதும் தமிழர்களைக் குடியேற்றியதில்லை/குடியேற்றவும் மாட்டார்கள். //

      தமிழர்களில் ஒரு சில பிரிவினரை மட்டுமே சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் ஒடுக்கவில்லை.. ஒட்டு மொத்த தமிழர்களையும் ஒடுக்குவதால்தான் அதை ஒரு தேசிய இனத்தின் மீதான ஒடுக்குமுறை என்று குறிப்பிட்டிருக்கிறேன்..

      // இனக்குழுக்களின் தொகுப்பிலும், பகுப்பிலுமாக தானாக உருவாகி வருவது தொழில் முறையான பாகுபாடு ஆனால் இந்துக்களுக்கே மட்டும் உரிய இந்த சாதிப்பாகுபாடும், தீண்டாமையும் மனுநெறியாளர்களால் இந்து மதத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் தான் இந்துசமயம் பரவாத எந்த நாட்டிலும் இத்தகைய பிறப்பினடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் பாகுபாடு இல்லை. //

      சங்ககால சாதிப்பாகுபாடுகளையும், தீண்டாமையையும் குறிப்பிட்டால் அது இடைச்செருகல் என்று சங்கப்புலவர்களை டம்மியாக்குகிறீர்கள்.. பிறப்பினடிப்படையில் மனிதர்களைப் பிரிப்பது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்த ஒன்று.. இந்தியாவில் மனு சாத்திரம் 2-ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு இந்தியா முழுவதும் பரவலாக்கப்பட்டு ஒன்று.. அதற்கு முன்பே அதன் கூறுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தது போலவே தமிழகத்திலும் இருந்தது..

      // கண்ணகியை ஜைனமதச் செட்டிச்சி என்று யாழ்ப்பாணத்து ஆறுமுகம்பிள்ளையைக் கொக்கரிக்க வைத்ததே இந்துமதத்தின் அடிப்படையிலான சாதிப்பாகுபாட்டை அவர் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டதால் தான். //

      இப்படியெல்லாம் குட்டிக் கரணம் அடித்து குழப்பினால் எப்படி விவாதிப்பது..?!

      இதைக் கூறியது நீங்கள்தானே..: ” ஆறுமுகநாவலர் கண்ணகியை ஜைனமதச் செட்டிச்சி என்றார். அதனால் கண்ணகி சமண மதத்தைச சார்ந்தவராக ‘இருந்திருந்தால்’, மாமுது பார்ப்பான்கள் என்பவர்கள் சமணக் கோயிலைப் பாரமரித்தவர்கள் அதாவது பார்ப்பபான்களாக இருந்திருக்கலாமே தவிர இந்த மாமுது பார்ப்பான்கள், இக்காலப் பிராமணர்களைப் போன்ற பூநூலணியும் சாதியினரல்ல என்பது தான் எனது கருத்தாகும். ”

      // மன்னிக்கவும், எனக்குத் தெரியாது. வயலில் வேலை செய்தவர்கள் நிச்சயமாக இருந்திருப்பார்கள். உங்களின் இந்தச் சந்தேகத்தை மணடபத்தில்வேறு யாராவது போக்குவார்கள் என நம்புகிறேன். //

      மள்ளர்கள் வேளாளருடன் கலந்திருக்கலாம் என்கிறீர்கள்.. ஆனால் பள்ளர்கள் வயலில் வேலை செய்தவர்கள் என்று நிச்சயமாக கூறுகிறீர்கள்.. சாதியில்லா சங்கத் தமிழகம் வயலில் இருந்ததா அல்லது மண்டபத்தில் இருந்ததா என்று தெரியவில்லை..

  21. ///புதுப் பார்ப்பனர்களின்’ வருகை எந்த காலகட்டம் என்று தெளிவாகக் கூறுங்கள்.. ///

    ஆரிய பார்ப்பனர்களின் வருகை சங்க காலத்திலிலேயே தொடங்கினாலும் கூட, தமிழர்களின் சோழ அரச பரம்பரையில் சாளுக்கிய ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் தான் புதுப் பார்ப்பனர்களின் வருகை மிகவும் அதிகரித்தது. இக்காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான வடுகர்/தெலுங்குப் பிராமணப்பூசாரிகள் அதாவது புதுப்பார்ப்பான்கள், கோதாவரி, துங்கபத்திரா நதிக்கரைகளிளிருந்து, சோழ ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் தமிழர்களின் காவேரிக்கரையில் குடியேறி அக்கிரகாரங்களை அமைத்தனர். அவர்களால் தான் தமிழர்களின் மாமுது பார்ப்பான்களாகிய வள்ளுவர்/பறையன் போன்றவர்கள் காவேரிக்கரைகளில் இருந்த தமது வளமான நிலங்களை அவர்களிடம் இழந்தனர்.
    இன்று கூட காவேரி, பாலாறு, பங்களூரில் சிறீரங்கப்பட்டினம், திருச்சி திருவரங்கம், கும்பகோணம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் பகுதிகளிலுள்ள பிராமணர்கள் அல்லது ‘பிறமண்ணர்கள்’ – அதாவது தமிழ்மண்ணல்லாத பிற மண்ணிலிருந்து வந்தவர்கள் – அவர்களில் 75 % வீதத்துக்கும் அதிகமானோரர் இன்றும் தமது தாய்மொழியாக தெலுங்கு அல்லது கன்னடத்தைக் கொண்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.அத்துடன் அவர்கள் இன்றும் தெலுங்கு, கன்னட பிராமணர்களுடன் குடும்ப, மண உறவுகளைக் கொண்டுள்ளனர்.

    //ஏனெனில் சங்க காலத்திலேயே இழிசினர், இழிபிறப்பாளர், புலையர், தொழும்பர், உரிமைமாக்கள் என்று ஒரு பெரிய கூட்டத்தையே ஒதுக்கி வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.///

    சாதியடிப்படையில் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதால், தமிழர்களின் ஆகமங்கள் எவ்வாறு சமக்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பார்ப்பனர்களுக்குச் சாதகமான இடைச்செருகல்கள் ஏற்படுத்தப்பட்டனவோ அது போன்றே, சங்ககால பாட்டுக்களிலும் புதுப் பார்ப்பான்களால் அவர்களுக்குச் சாதகமான இடைச் செருகல்களும், அகத்தியரும், தொல்காப்பியரும் பார்ப்பனர்கள் போன்ற கட்டுக்கதைகளும் இயற்றி விடப்பட்டன. அதனால், ஆரிய வருணாச்சிரமத்தை நியாயப்படுத்த சங்கப்பாடல்களிலும் இடைச்செருகல்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்,

    • // ஆரிய பார்ப்பனர்களின் வருகை சங்க காலத்திலிலேயே தொடங்கினாலும் கூட,//

      சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் வரும் மாமுது பார்ப்பான் இவர்களில் ஒருவரல்ல என்று உறுதியாகக் கூறுகிறீர்களா..?!

      // தமிழர்களின் சோழ அரச பரம்பரையில் சாளுக்கிய ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் தான் புதுப் பார்ப்பனர்களின் வருகை மிகவும் அதிகரித்தது. //

      11ம் நூற்றாண்டு வாக்கில்தான் சோழ அரச பரம்பரையில் கீழைச் சாளுக்கிய வழியிலான தெலுங்குச் சோழர்கள் தோன்றுகிறார்கள்.. சங்க காலத்திலிருந்து இந்த காலகட்டம் வரையான புதுப்பார்ப்பனர் வருகை நிகழ்ந்த காலம் ஏறத்தாழ 1000 ஆண்டுகள்.. இந்த நீண்ட காலகட்டத்தில் எப்போது பறையர் பூசாரிகளுக்கு பதில் புதுப்பார்ப்பான்கள் பூசாரிகளானார்கள்..? இதுவரை நீங்கள் கூறியதின் படி, சிலப்பதிகார காலத்தில் பறையர்கள்தான் பார்ப்புகள் ஆனால் 3 நூற்றாண்டுகளுக்குள் அதாவது பல்லவர் காலத்தில் (தேவார காலம்) புலையர்கள் தோன்றிவிட்டார்கள்.. பறையர் பூசாரிகளும், புலையர்களும் வீதியில், கழனிகளில் எதிரெதிராக சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டம் இந்த 3 நூற்றாண்டுகளுக்குள்தான் நிகழ்ந்ததா..? அல்லது அப்படி சந்திப்புகள் எதுவும் நடக்கவேயில்லையா..?

      • //சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் வரும் மாமுது பார்ப்பான் இவர்களில் ஒருவரல்ல என்று உறுதியாகக் கூறுகிறீர்களா..?!///

        மாமுது பார்ப்பான்கள் என்பவர்கள் ஆதியில் பார்ப்பான்களாக இருந்து தமிழர்களின் கோயில்களையும் பராமரித்து, சடங்குகளையும் மேற்கொண்ட ஆதித் தமிழர்கள் அல்ல, ஆரியப் பார்ப்பான்கள் தான் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் உண்டா? சங்கநூல்களில் குறிப்பிடப்படும் மறை, மறையோர், அந்தணர் என்பன எல்லாம் ஆரியப் பார்ப்பனர்களைக் குறிப்பனவல்ல எனப் பல தமிழறிஞர்கள் கூறுகின்றனர். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, மறையோர், அந்தணர் எல்லாம் ஆரியப்பார்ப்பனர்களைக் குறிப்பன அல்ல என்பது விவாதத்துக்குரியது என்பது தெரிகிறது. அப்படியிருக்க, எவ்வாறு மாமுது பார்ப்பான்கள் மட்டும், ஆரியப் பார்ப்பனர்களைக் குறிக்கிறது என நீங்கள் தீர்க்கமாக வாதாட முடியும் என்பதை சிந்தித்துப் பார்த்தீர்களா?

        // இந்த நீண்ட காலகட்டத்தில் எப்போது பறையர் பூசாரிகளுக்கு பதில் புதுப்பார்ப்பான்கள் பூசாரிகளானார்கள்..? ///

        இந்துமதத்தின் எழுச்சியும், மன்னர்களின் இந்து மத மாற்றமும் ஆரியப் பார்ப்பனர்களுக்கு தமிழ்ச் சமூகத்தில் ஆதிக்கத்தின் உச்சத்தை அடைய பெரிதும் உதவின. நானும் நீங்களும் இங்கு வரலாற்றில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவில்லை. அதனால், உங்களின் விதண்டாவாதக் கேள்விகளுக்கு நீங்களே பதிலைத் தேடிக் கொள்வீர்களென நம்புகிறேன்.

        • // மாமுது பார்ப்பான்கள் என்பவர்கள் ஆதியில் பார்ப்பான்களாக இருந்து தமிழர்களின் கோயில்களையும் பராமரித்து, சடங்குகளையும் மேற்கொண்ட ஆதித் தமிழர்கள் அல்ல, ஆரியப் பார்ப்பான்கள் தான் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் உண்டா? சங்கநூல்களில் குறிப்பிடப்படும் மறை, மறையோர், அந்தணர் என்பன எல்லாம் ஆரியப் பார்ப்பனர்களைக் குறிப்பனவல்ல எனப் பல தமிழறிஞர்கள் கூறுகின்றனர். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, மறையோர், அந்தணர் எல்லாம் ஆரியப்பார்ப்பனர்களைக் குறிப்பன அல்ல என்பது விவாதத்துக்குரியது என்பது தெரிகிறது. அப்படியிருக்க, எவ்வாறு மாமுது பார்ப்பான்கள் மட்டும், ஆரியப் பார்ப்பனர்களைக் குறிக்கிறது என நீங்கள் தீர்க்கமாக வாதாட முடியும் என்பதை சிந்தித்துப் பார்த்தீர்களா? //

          சிலப்பதிகாரத்துக்கு முன்பான சங்கப் புலவர் ஏனாதி நெடுங்கண்ணனாரின் குறுந்தொகைப் பாடலை (பின்னூட்ட எண் 25) எடுத்து விட்டிருக்கிறீர்களே..

          சங்கப் புலவர் பார்ப்பன மகனே என்று பாடினால் அவர் ’அன்புடன்’ அழைத்தது ஆரியப் பார்ப்பானை என்கிறீர்கள்..

          சங்கம் மருவிய காலத்து சிலப்பதிகாரச் செய்யுளில் வரும் மாமுது பார்ப்பான், பார்ப்பு வேலை செய்த ஒரு சமண பறையர் பூசாரி என்கிறீர்கள்..

          இது உங்களது அருமையான, அற்புதமான ஒரு ரிவர்ஸ் குட்டிக்கரணம் ஆகும்..

          // இந்துமதத்தின் எழுச்சியும், மன்னர்களின் இந்து மத மாற்றமும் ஆரியப் பார்ப்பனர்களுக்கு தமிழ்ச் சமூகத்தில் ஆதிக்கத்தின் உச்சத்தை அடைய பெரிதும் உதவின. நானும் நீங்களும் இங்கு வரலாற்றில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவில்லை. அதனால், உங்களின் விதண்டாவாதக் கேள்விகளுக்கு நீங்களே பதிலைத் தேடிக் கொள்வீர்களென நம்புகிறேன். //

          ஆராயாமல் மனதுக்குவந்தவைகளை எல்லாம் நம்பி ஏற்றுக் கொள்வதால்தான் வீழ்ச்சி ஏற்படுகிறது..

          • //சங்கம் மருவிய காலத்து சிலப்பதிகாரச் செய்யுளில் வரும் மாமுது பார்ப்பான், பார்ப்பு வேலை செய்த ஒரு சமண பறையர் பூசாரி என்கிறீர்கள்..///

            பார்ப்பன்களுக்கு முந்தியவன் பறையன் என்பதிலும், புத்தேளிர் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்ற புதுப் பார்ப்பான்கள் வருமுன்பு, மாமுது பார்ப்பான்களாக இருந்தவர்கள், ஆதித்தமிழர்களாகிய வள்ளுவர்கள் (பறையன்கள்) என்பதிலும் எனக்கு மட்டுமல்ல, எந்த உணமையான தமிழனுக்கும் கருத்து வேறுபாடிருக்க முடியாது.

            • பார்ப்பானுக்கு முந்தியவன் பறையன் என்று கூறுவதுதோடு மட்டுமல்ல, அதைச் செயலிலும் காட்டவேண்டும்.. பள்ளனான மள்ளனை முதுவேளாளன் என்று ஏற்றுக் கொள்ளவே மறுக்கும் ‘தமிழன்’ இதை எப்படி செய்யப்போகிறான் என்று தெரியவில்லை..

              சிலப்பதிகாரத்தில் கீழ்வரும் பாடல்களுக்கும் புது உரை எழுதுங்கள் வியாசரே..:

              தாங்கா விளையுள் நன்னா டதனுள்
              வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
              குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
              வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
              திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக் (கட்டுரைக் காதை – 60)

              குறிப்பு : வேதவியாசரின் தந்தையான பாராசர ரிசியின் பெயர் கொண்ட பார்ப்பான்…

              ….

              வானவர் போற்றும் வழிநினக் களிக்கும்
              நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
              அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய
              பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும் (நடுகற் காதை – 175)

              குறிப்பு : நான்மறை மருங்கின் வேள்வி செய்யும் பார்ப்பான்

              ………

              துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன்
              நான்மறை மரபின் நயந்தெரி நாவின்
              கேள்வி முடித்த வேள்வி மாக்களை
              மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
              வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி ((நடுகற் காதை – 190)

              குறிப்பு : நான்மறை ஓதல் கேட்டுக் கற்றபின் வேள்வி செய்யும்; மாடல மறையோன்; வேள்விச் சாந்தியின் விழா.. 🙂

              ஆகட்டும், அவிழ்த்து விடுங்கள் உங்கள் விளக்கவுரைகளை.. !

              • // நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்

                நன்றி அம்பி. 14.1.3 இல் நான் கேட்ட கேள்விக்கு ஒரு ஆதாரம் தருகிறது இந்த வரி.

    • // சாதியடிப்படையில் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதால், தமிழர்களின் ஆகமங்கள் எவ்வாறு சமக்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பார்ப்பனர்களுக்குச் சாதகமான இடைச்செருகல்கள் ஏற்படுத்தப்பட்டனவோ அது போன்றே, சங்ககால பாட்டுக்களிலும் புதுப் பார்ப்பான்களால் அவர்களுக்குச் சாதகமான இடைச் செருகல்களும், அகத்தியரும், தொல்காப்பியரும் பார்ப்பனர்கள் போன்ற கட்டுக்கதைகளும் இயற்றி விடப்பட்டன. அதனால், ஆரிய வருணாச்சிரமத்தை நியாயப்படுத்த சங்கப்பாடல்களிலும் இடைச்செருகல்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம், //

      கல்வி மறுக்கப்பட்ட தமிழகத்தில் எப்படி தமிழ் பாடல்களும், சிற்ப சாத்திரங்கள், மரக்கல-கட்டிடக்கலை சாத்திரங்கள், வானியல், மருத்துவ சாத்திரங்கள், நாட்டிய-இசை போன்ற கலைக்கான சாத்திரங்கள் என்பது போன்ற சாத்திரங்களும், இலக்கியங்களும் எளிய பிரிவு தமிழ் மக்களாலும் கற்கப்பட்டு வந்தது..?!

      மேலும், இடைச் செருகல் செய்வது பிட் அடிப்பது போல மறைத்துவிடக் கூடிய எளிய வேலையல்ல.. காலகாலமாக தமிழகத்தின் தமிழ் புலவர்களிடையே நடந்துவரும் கடும் இலக்கிய விவாதங்களில் அப்படி ஏதேனும் வேறுபாடுகள், மோசடிகள் இருந்தால் அம்பலமாகிவிடும்..

      • //கல்வி மறுக்கப்பட்ட தமிழகத்தில் எப்படி தமிழ் பாடல்களும், சிற்ப சாத்திரங்கள், மரக்கல-கட்டிடக்கலை சாத்திரங்கள், வானியல், மருத்துவ சாத்திரங்கள், நாட்டிய-இசை போன்ற கலைக்கான சாத்திரங்கள் என்பது போன்ற சாத்திரங்களும், இலக்கியங்களும் எளிய பிரிவு தமிழ் மக்களாலும் கற்கப்பட்டு வந்தது..?!///

        பெரும்பான்மைத் தமிழர்களுக்கு சோழ-சாளுக்கிய ஆட்சியிலும், விஜயநகர ஆட்சியிலும் கல்வி மறுக்கப்பட்டது. அக்காலத்தில் தான் வடுகப் பூசாரிகள் தமிழ் நூல்களை சமக்கிருதத்தில் மொழி பெயர்த்து விட்டு அல்லது அவற்றைத் தழுவி புதிய நூல்களை எழுதி விட்டு, தமிழ் மூலப்பிரதிகளை அழித்து விட்டனர். எம்மிடையே இன்று உள்ள, எமக்குக் கிடைத்த எஞ்சிய நூல்கள் பலவும், தமிழ்ப்புலவர்களிடமும், தமிழ் மடங்களிடமும் இருந்தவை. பெரும்பாலான இடைச்செருகல்களும் இக்காலத்தில் தான் நடந்தன. தமிழரல்லாத ஆட்சியாளர்களிடம் பார்ப்பனர்களுக்கு இருந்த ஆதிக்கமும்,அவர்களுக்கு கிடைத்த வரவேற்பும் ஆதரவும் தமிழ்ப்புலவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

  22. //சைவ தமிழச்சியான கண்ணகியை ஜைன மத செட்டிச்சி என்று ஆறுமுக நாவலர் கூறுவதை முதலில் நம்பிவிட்டு பின் அதை நிறுவுவதற்காக சிலப்பதிகார செய்யுளுக்கு புதுப்புது பொருள் விளக்கம் கொடுக்கத் தலைபட்டிருக்கிறீர்கள்..///

    மன்னிக்கவும், புரியாது விட்டால் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர இப்படி உளறக் கூடாது. நான் விளக்கம் கூறியது, யார் மாமுதுபார்ப்பான் என்பதற்கு தானே தவிர, கண்ணகி சைவமா அல்லது சமணமா என்பதற்கு அல்ல. அதாவது சமணக் கோயில்களை அந்தக் காலத்தில் பாராமரித்தவர்கள் கூட பார்ப்பான்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து. நாங்கள் இங்கு பேசிக் கொண்டிருப்பது கண்ணகி என்ன மதம் என்பது பற்றி அல்ல.

    //பேண்ட்டுக்கு ஏற்றவாறு காலை வெட்டுவது மட்டும்தான் உங்கள் பொறுப்பா..?!///

    மற்றவர்களின் பான்டை எடுத்து சில மாற்றங்களை செய்து விட்டு அந்த பான்டே உங்களுடையது என்று வாதாடுவது தான் உங்களைப் போன்றவர்களின் வேலை என்பதை யாமறிவோம். 🙂

    //மாமுது பார்ப்பான் தீவலம் செய்யவில்லை, கோவலனும், கண்ணகியும்தான் தீவலம் செய்தவர்கள்.. ///

    “மாமுது பார்ப்பானாகிய வள்ளுவன் தீவலம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தான்” என்று தான் நான் கூறினேனே தவிர, மாமுது பார்ப்பான தீவலம் செய்வதாக நான் குறிப்பிடவில்லை, அதாவது மணமக்கள் தான் தான் தீயை வலம் வந்திருப்பார்கள் என்பது யாவராலும் புரிந்து கொள்ளக் கூடியதொன்று. இப்படி சாதாரணமாகப் புரிந்து கொள்ளக் கூடிய விடயங்களைக் கூட, பெரிதுபடுத்திக் காட்டி அதாவது Nit picking மூலம் பிழை கண்டு பிடிக்க நினைப்பது அப்படிச் செய்பவர்களின் வங்குரோத்து நிலையைக் காட்டுகிறது என்பார்கள்.

    //அவர்கள் தீவலஞ் செய்வதைப் பார்த்தவர்களின் கண்கள் செய்த தவம் (நோன்பு) தான் என்ன என்கிறார் சமணத் துறவி இளங்கோவடிகள்..///

    ஆனால் அது ஆரிய வேதங்களில் குறிப்பிடப்படும் வேள்வித்தீயே என இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை.

    //தீவலம் செய்வது என்றால் வேள்வித்தீயை வலஞ்செய்வதைக் குறிக்கவில்லை என்றால் பின் வேறு எதனைக் குறிக்கிறது..?///

    சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடும் தீவலம் என்பது ஆரிய வேதங்களில் கூறப்படும் வேள்வித்தீ தான் என்பதற்கு ஆதாரமேதுமில்லை. எல்லா பழமையான மக்கள் குழுவினரும் தீயைக் கடவுளாக வணங்கினர். அதனால் பழமையான நாகரீகத்தைக் கொண்ட பழம்பெருங்குடிகளில் ஒன்றாகிய தமிழர்களும் சங்ககாலத்தில் நெருப்பை வணங்கி, தீயை வலம் வந்து திருமணச்சடங்குகளை நடத்தியிருக்கலாம். தீயை வலம் வந்து வணங்க்கிரவர்கள் எல்லோரும் ஆரியப் பார்ப்பனர்களா? ஆபிரிக்க காட்டுவாசிகளும், இங்கா, மாயா போன்ற பழங்குடிகளும் தான் தீயை வளம் வந்து வணங்கினர். அதனால் ஆதித்தமிழர்களில் ஒருவனாகிய மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் வந்ததை, ஆரிய வேதங்களில் கூறப்படும் வேள்வித்தீயை வலம் வந்தனர் என்பது வெறும் அபத்தம்.

    //ரூம் போட்டு யோசித்து ஒரு நல்ல அருஞ்சொற்பொருள் விளக்கத்துடன் வாருங்கள்..!///

    அப்படியானால் எங்கேயோ ரூம் போட்டிருந்து யோசித்து தான் இங்கே பதில் எழுதுகிறீர்கள் போல் தெரிகிறது. 🙂

    //அது சரி, திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறார்களே, அது என்ன உலகப் பொது காதல்/களவா..?!! ///

    மறை என்ற சொல் பல பொருளுடைய சொல். ஆரிய வேதத்தை மட்டுமே குறிக்கும் சொல் அன்று. “நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து அறம் கரை நாவின் நான்மறை முற்றிய” என்ற தொல்காப்பிய அடிகளில் நான்மறை என்பதும் நான்கு ஆரிய வேதங்களைக் குறிப்பிடவில்லை, அது தமிழர்களிடமிருந்த மூலமறைகளைக் குறிப்பிடுகிறது. நால் என்ற சொல் இங்கே நான்கு என்ற எண்ணிக்கையைக் குறிக்கவில்லை, நான் என்பது தொடக்கம், ஆதி, மூலம் என்பவற்றையும் குறிக்கும். கம்பராமாயணத்தில் “நாட்டம் வெம் கனல் பொழிதர நால் நிலம் தடவி” என்பது நான்கு நிலங்களைக் குறிக்கவில்லை பூமி, அதாவது ஆதி நிலத்தை (origin of land)க் குறிக்கிறது.

    தமிழ் மொழி வளமான மொழி ஒரே சொல் பல கருத்துப்படுவது மட்டுமல்ல, பேசப்படும் காலம், நிகழ்வு, சூழல் என்பதற்கேற்ப சில சொற்களின் கருத்தும் மாறுபடுவதுண்டு. சங்கம் பாடல்களில் காதல், களவு என்பவற்றைக் குறிக்கப்பயன்படும் ‘மறை’ அதாவது hide அல்லது secret என்ற பொருள்படும் சொல் தொல்காப்பியத்தில் தமிழர்களின் மூலமறையையும் குறிக்கப் பாவிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, மறை” என்ற சொல், அதே தொல்காப்பிய நூற்பாவிலேயே இசை நூல்களையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வேதங்களாகிய (வேதம் என்பது கூட வேய் அல்லது மறைத்தல் என்ற சொல்லில் இருந்து உருவான தமிழ்ச் சொல்லாகும்.) அதனால் தான் திருக்குறள் உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது என்ற காரணத்தை அறியாதவர்கள் மட்டும் தான் கெட்டித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு இப்படி ஒரு முட்டாள் தனமான கேள்வியைக் கேட்பார்கள் என நான் நினைக்கிறேன்.

    • சமண திருமணத்தில் தீவலம் (அது ஏதோ ஒரு தீ என்றாலும்) வருவது வழக்கமா என்ற கேள்விக்கு பதில் என்ன..?!

      அவர்களது பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்க, கண்ணகியும்-கோவலனும் மாமுது சமண பூசாரியிடம் வந்து காதல்/களவு மணம் புரிந்து கொண்டார்களா..?!

      குழப்பாமல் பதில் கூறுக..

      • மன்னிக்கவும், இந்த உளறலுக்கு நான் முன்பே பதிலளித்து விட்டேன். கண்ணகியும், கோவலனும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதல்ல எனது கருத்து. மாமுது பார்ப்பான்கள் கோயிலைப் பாரமரித்தார்கள், திருமணமும் செய்து வைத்தார்கள். அவர்கள் களவு மணத்தை மட்டும் தான் செய்து வைத்தார்கள் என்ரால், சங்க காலத்திலேயே தமிழ்மண்ணுக்குக்கு வருகை தரத் தொடங்கி, ஆதித் தமிழ் மாமுதுபார்ப்பான்களின் வேலையை செய்யத் தொடங்கிய சில புதுப்பார்ப்பான்களும் காதல்/களவு திருமணத்தை மட்டும் தான் செய்து வைத்திருக்க வேண்டுமல்லவா.

        • // மன்னிக்கவும், இந்த உளறலுக்கு நான் முன்பே பதிலளித்து விட்டேன். கண்ணகியும், கோவலனும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதல்ல எனது கருத்து. மாமுது பார்ப்பான்கள் கோயிலைப் பாரமரித்தார்கள், திருமணமும் செய்து வைத்தார்கள். //

          இந்த பதில் ஓரளவுக்கு தெளிவாக இருக்கிறது..

          // அவர்கள் களவு மணத்தை மட்டும் தான் செய்து வைத்தார்கள் என்ரால், சங்க காலத்திலேயே தமிழ்மண்ணுக்குக்கு வருகை தரத் தொடங்கி, ஆதித் தமிழ் மாமுதுபார்ப்பான்களின் வேலையை செய்யத் தொடங்கிய சில புதுப்பார்ப்பான்களும் காதல்/களவு திருமணத்தை மட்டும் தான் செய்து வைத்திருக்க வேண்டுமல்லவா. //

          மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி என்பதற்கு நீங்கள்தான் (பின்னூட்டம் 14.1.2.1.1) இப்படி விளக்கம் கொடுத்து வைத்தீர்கள்..:

          ” பறையர் பூசாரிகள், அதாவது புதுப்பார்ப்பான்கள் வருமுன்பிருந்த, மறை (காதல்/களவு) அறிந்த மாமுது பார்ப்பானாகிய வள்ளுவன் தீவலம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தான்.”

          யார் மாற்றி மாற்றி உளறிக் கொண்டிருப்பது..?

  23. //புதுப் பார்ப்பனர்களின் வருகை எந்த காலகட்டம் என்று தெளிவாகக் கூறுங்கள்//–அது களப்பிரர் காலத்துக்கு பிறகுதான்.களப்பிர அரசர்கள் பறைய பூசாரிகளை சமண பூசாரிகளாக மதம்மாற்றிவிட்டனர்.களப்பிரர் காலத்துக்கு பிறகு ஆட்சிக்கு வந்த பிற்கால பாண்டிய,பல்லவ,சோழர்கள் காலத்தில் மீண்டும் மதம் மாறிய பறைய பூசாரிகளை ஏற்காமல் புது பார்ப்பனர்களை குடியேற்றினர்.அவர்கள் சமூக அடுக்கின் கீழே சென்றதற்கும் புற சமயம் சார்ந்ததே காரணமாக இருக்கலாம்.திப்பு சுல்தானால் மதம்மாற்றப்பட்டு பிறகு மீண்டும் இந்துவாக மதம் மாறிய நம்பூதிரிகள் வேள்வி செய்யும் உரிமை மறுக்கப்பட்டு சவுண்டி பார்ப்பனராக[ஈமசடங்கு செய்வோர்] ஆக்கபட்டனர் என்று கேரள வரலாறு கூறுகிறது.அது இங்கு ஒப்புனோக்கதக்கது.

    • வேள்விக்குடி செப்பேடுகள் மூலம், வேள்வி செய்வதற்கு உதவியதால் வேள்விக்குடி எனும் அவ்வூர் சங்க கால பாண்டியரான பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதியால் பார்ப்பனர்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்டதாகவும் களப்பிரர்கள் அதை பறித்துகொண்டதாகவும், கடுங்கோன் பாண்டியரால் களப்பிரர்கள் வீழ்த்தப்பட்டபின் வேள்விக்குடி மீண்டும் பார்ப்பனரிடம் வழங்கப்பட்டது எனவும் அறியலாம்..

      களப்பிர மன்னர்களில் கூற்றுவ நாயனார் சைவ மன்னர் என்பதையும், அவர் தில்லைவாழ் அந்தணர்களிடம் சென்று சோழ மணிமுடி சூட்டுமாறு கேட்க அவர்கள் மறுத்து சேர நாடு தப்பிச் சென்றதையும் சேக்கிழாரின் பெரிய புராணத்திலிருந்தும், அதற்கு முந்தைய நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டத்தொகையிலிருந்தும் அறியலாம்.. களப்பிரர் ஆட்சி முழுதும் சைவ, வைணவ சமயங்கள் ஒடுக்கப்பட்டன என்று அறுதியிட்டு கூறமுடியாது..

      நம்பூதிரிகள் திப்பு சுல்தானால் மதம் மாற்றப்பட்டபோது இசுலாமிய மதமாற்றங்களின் முக்கிய அம்சமான பசுமாமிசம் சாப்பிட வைக்கப்படுதல் என்ற ’புனிதமான’ சடங்குக்குள்ளாக்கப்பட்டதால் அவர்களை மீண்டும் பார்ப்பனர்களாக ஏற்று கொண்டாலும் சவுண்டி அந்தஸ்து மட்டுமே வழங்கப்பட்டதாக அறியமுடிகிறது.. ஆனால் சமணத்திலோ, பௌத்தத்திலோ இந்த சிக்கல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் நீங்கள் கூறுவது போல சுமார் 3 நூற்றாண்டுகள் சமணராயிருந்தவர்களின் வாரிசுகளை (அவர்கள் பறையர்களோ அல்லது பார்ப்பனர்களோ) மீண்டும் பூசாரிகளாக்கும் வாய்ப்பில்லை என்பதும் ஆராயத்தக்கது..

      • //ஆனால் சமணத்திலோ,பெளத்தத்திலோ இந்த சிக்கல் இருந்திருக்க வாய்ப்பில்லை//—ஆரிய பார்ப்பனரின் சைவ உணவு பழக்கம் யாரிடம் இருந்து வந்தது? சமணர்களிடம் இருந்து கடன் பெற்றதுதானே அது.நீங்கள் வாலை தலையாக பொருள் கொள்வது ஏன்? தென்னாட்டு சிவனும் ஆரிய ருத்திரனும் ஒருவர் தானா? கொற்றவை மகன் என்று தமிழ் கூறும் முருகனும் ஆரிய ஸ்கந்தனும் ஒருவரா? பல தனித்த சமய கடவுள்களை அப்பா,மகன்,மனைவி,மச்சான் என்று உறவு கதை கட்டி பூர்வ மீமாம்சை என்னும் புரோகித வாதத்துக்குள் கொண்டுவந்தது யார்? தமிழுக்கு வந்த புது பார்ப்பனர்கள் தமிழ் கடவுள்களுக்கு ஆரிய சாயம் பூசினார்கள் என்பதை மறுக்க முடியுமா?

        • யார் யாருக்கு டைவர்ஸ், உறவு முறிவுப்பத்திரம் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் அதைக் கொடுத்துவிட்டு தனித்தனி கடவுள்களாக வணங்கிக் கொள்வோம்..

  24. //நான்மறையோ கன்றிடம் இருந்தது.. அது இல்லாத பன்றியின் கண்கள் கன்றிடம் இருந்த நான்மறை மீதிருந்தது.. கன்றின் கண்கள் எதன் மீதிருந்தது..?! மலத்தின் மீதா..?! ///

    நான் கூறிய தமிழர்களின் நான்மறை கன்றிடம் இருந்தது, எங்கிருந்தோ வந்த (ஆரியப்) பன்றி, கன்றிடமிருந்த நான்மறையைத் தின்று விட்டு, தன்னுடைய நான்குமறை எனும் மலத்தை கன்றைத் தின்ன வைத்து விட்டது. உண்மையில் ஆரிய பார்பனர்கள் தமிழர்களின் நான்மறையை இல்லாமல் செய்து விட்டு, தமிழர்களை ஆரிய நான்கு மறைகளை ஏற்றுக் கொள்ளச் செய்து விட்டார்கள் என்பது தான் வரலாற்று உண்மை. அதனால் நான் கூறும் உவமானம் தான் சரியானதென்று கொஞ்சம் நடுநிலையாக சிந்தித்துப்பார்த்தால் உங்களுக்கே புரியும். 🙂

    //நான்மறையிலிருந்து 4 வேதங்களை ‘புதுப்பார்ப்பான்கள்’ உருவாக்கும் முன்பே இந்து மதம் எப்படித் தோன்றியதோ..?!///

    அப்பனே அம்பி,

    உங்களின் குழப்பத்துக்குக் காரணமே நீங்கள் சங்ககாலத்தையும், அதற்கு பிற்பட்ட காலத்தையும் சேர்த்து சாம்பாரக்குவதால் தான். சங்க காலத்தில் தமிழர் வழிபட்டவை, கொற்றவை, சேயோன், மாயோன், முருகன் போன்ற தமிழ்க்கடவுளர்களை. அவை ஆரிய இந்துமதத்தின் கடவுளர்கள் அல்ல. இந்திரன், வருணன் கூட ஆரியக்கடவுளர் அல்ல, தமிழ்மண்ணுக்கு வந்த ஆரியப் பார்ப்பனர்கள் தமிழர்களிடமிருந்து இரவல் வாங்கியவை என்பதை தமிழ் சொல்லிலக்கணம் மூலமாகக் கூட சிலர் விளக்கியும் உள்ளனர். தமிழர்களின் கடவுளர்கள் ஆரிய இந்துசமயத்தினால் உள்வாங்கப்பட்டு, இந்து மதக் கடவுளர்களாக்கப்பட்டனர்.

    அதனால் ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ் மண்ணுக்கு வந்து ஆதிக்கம் பெற்று, தமிழர்களின் பாரம்பரிய தெய்வங்களும், வழிபாடுகளும், ஆரிய இந்துமதம் கலக்கப்பட்டு, இந்து மதம் என்று இன்று கூறப்படும் வைதீக சமயமும், பார்ப்பனீய சடங்குகளும் உருவாக்கப்பட்ட பின்னர் தான், பிறப்பினடிப்படையிலான, தீண்டாமையும், சாதிப்பாகுபாடுகளும் தமிழர் மத்தியில் வேரூன்றின. சங்க காலத்தில், ஆரியப் பார்ப்பனர்களின் வருகையின் முன்னால் இருந்த சமூகப் பிரிவுகள் எல்லாம், தொழிலில் அடிப்படையிலானவையே அல்லாமல், பிறப்பின் அடிப்படையிலானவை அல்ல. மறையோர், அந்தணர் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவது ஆரியப் பார்ப்பனர்களையல்ல, அவை தமிழ்ச் சித்தர்க்ளைக் குறிக்கும் சொற்கள்.

    நான் முன்பு கூறியது போலவே சங்க காலத்திலேயே ஆரியப் பார்ப்பனர்களின் வருகை தொடங்கி விட்டது, அவர்களில் சிலர் தமிழ் மாமுது பார்ப்பான்களின் பார்ப்பனத் தொழிலைக் கைப்பற்றி பார்ப்பன வேலையையும் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் என்பதையும் சங்கப் பாடல்களில் காணலாம், அவர்கள் தமிழர் அல்லாததால் அவர்களுக்கு உரிய மரியாதை தமிழர்களிடமிருந்து கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

    அதனால் தான் ஏனாதி நெடுங்கண்ணனார் என்ற புலவர் தனது குறுந்தொகைப் பாடலில் ஆரியப் பார்ப்பாரை வம்புக்கு இழுக்கிறார்

    “பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
    செம்பூ முருக்கி னன்னார் களைந்து
    தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
    படிவ உண்டிப் பார்ப்பன மகனே
    எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
    பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
    மருந்தும் உண்டோ மயலோ விதுவே.”

    ‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை பிடித்துக் கொண்டு உழைக்காமல் உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பு’) உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா?’

    இந்த குறுந்தொகைப்பாடலில் அவர் ஆரியப் பார்ப்பானைத் தான் நக்கலடிக்கிறார். என்பது “எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்” என, ஆரியர்களின் நான்கு வேதங்களை(எழுதாக் கிழவியைக்) குறிப்பிடுவது தெளிவு படுத்துகிறது. “மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி” என்று தொல்காப்பியம் கூறுவது போல் தமிழுக்கு எழுத்து வடிவம் தொல்காப்பிய காலத்திலேயே உண்டு. தமிழர்களின் நான்கு மறைகளும் எழுதிய மறைகள். ஆரியப் பார்ப்பனர்கள் அதிகளவில் தமிழ்மண்ணில் குடியேறியதும்,இன்றைய உயர்ந்த நிலையை அடைந்தது, சோழராட்சியிலும், விஜயநகர ஆட்சியின் பின்னரும் தான்.

    தொடரும்…. 🙂

    • // சங்க காலத்தில் தமிழர் வழிபட்டவை, கொற்றவை, சேயோன், மாயோன், முருகன் போன்ற தமிழ்க்கடவுளர்களை. அவை ஆரிய இந்துமதத்தின் கடவுளர்கள் அல்ல. //

      கொற்றவை எனப்படும் தாய் தெய்வ வழிபாடு இந்தியா முழுவதிற்கும் பொதுவானது..

      சேயோன்/முருகன் வழிபாடு தமிழகத்தின் தனிச்சிறப்பு.. ஆனால் மயில், வேல் இவை வடபுல கார்த்திகேயனுக்கும் உள்ளவை..

      மாயோன், இந்திரன், வருணன் போன்ற தெய்வங்களைப் பற்றிய வருணனைகள் சங்கப்பாடல்களில் உள்ளது போன்றே வடபுலத்திலும் வருகிறது..

      இந்த தெய்வங்கள் எல்லாம் நம் விருப்பமும், அனுமதியுமில்லாமலேயே இந்தியா முழுவதும் சுற்றிச் சுழன்றிருக்கிறார்கள்..

      // தமிழ்மண்ணுக்கு வந்த ஆரியப் பார்ப்பனர்கள் தமிழர்களிடமிருந்து இரவல் வாங்கியவை என்பதை தமிழ் சொல்லிலக்கணம் மூலமாகக் கூட சிலர் விளக்கியும் உள்ளனர். தமிழர்களின் கடவுளர்கள் ஆரிய இந்துசமயத்தினால் உள்வாங்கப்பட்டு, இந்து மதக் கடவுளர்களாக்கப்பட்டனர். //

      மாலும், இந்திரனும், வருணனும் தமிழ்மண்ணுக்கே வந்திராத வடபுலப் பார்ப்பனர்களுக்கும் கடவுளர்களாக இருப்பது எப்படி..?!

      // ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ் மண்ணுக்கு வந்து ஆதிக்கம் பெற்று, தமிழர்களின் பாரம்பரிய தெய்வங்களும், வழிபாடுகளும், ஆரிய இந்துமதம் கலக்கப்பட்டு, இந்து மதம் என்று இன்று கூறப்படும் வைதீக சமயமும், பார்ப்பனீய சடங்குகளும் உருவாக்கப்பட்ட பின்னர் தான், பிறப்பினடிப்படையிலான, தீண்டாமையும், சாதிப்பாகுபாடுகளும் தமிழர் மத்தியில் வேரூன்றின. //

      தமிழ் மன்னர்களும், தமிழர்களும் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டதால்தான் ஆரியப்பார்ப்பனர்கள் ஆதிக்கம் பெற்றார்கள் என்று முன்பு கூறினீர்கள்.. இப்போது அவர்கள் ஆதிக்கம் பெற்றதால்தான் தமிழர் வழிபாடுகளோடு ஆரியமதம் கலக்கப்பட்டு இந்துமதம் உருவானதாகக் கூறுகிறீர்கள்.. வரலாற்றில் chronological order எனப்படும் காலவரிசை முக்கியம் வியாசரே.. இதை மறந்துவிட்டு வரலாற்று ஆராய்சி செய்வது என் வேலையல்ல என்று விருப்பத்திற்கேற்ப அவ்வப்போது வரலாற்றை புனைந்து கொண்டிருந்தால் சாம்பாருக்கு பதில் அவியல் வந்துவிடும்..

      // இந்த குறுந்தொகைப்பாடலில் அவர் ஆரியப் பார்ப்பானைத் தான் நக்கலடிக்கிறார் //

      அவர், மாற்றி மாற்றி குழப்பும் உங்களை நக்கலடிப்பது போலவே எனக்கு தோன்றுகிறது..!

    • // நான் கூறிய தமிழர்களின் நான்மறை கன்றிடம் இருந்தது, எங்கிருந்தோ வந்த (ஆரியப்) பன்றி, கன்றிடமிருந்த நான்மறையைத் தின்று விட்டு, தன்னுடைய நான்குமறை எனும் மலத்தை கன்றைத் தின்ன வைத்து விட்டது. உண்மையில் ஆரிய பார்பனர்கள் தமிழர்களின் நான்மறையை இல்லாமல் செய்து விட்டு, தமிழர்களை ஆரிய நான்கு மறைகளை ஏற்றுக் கொள்ளச் செய்து விட்டார்கள் என்பது தான் வரலாற்று உண்மை. அதனால் நான் கூறும் உவமானம் தான் சரியானதென்று கொஞ்சம் நடுநிலையாக சிந்தித்துப்பார்த்தால் உங்களுக்கே புரியும். 🙂 //

      என்னதான் வற்புறுத்தினாலும் கன்று மலம் தின்னுமா..?!

      • அதுவும் நான்மறை என்ற பசும்புல் கட்டு கன்றிடம் இருக்கும்போது..?!

        • கள்ளம் கபடமற்ற, உயர்ந்த நான்மறைகளைக் கொண்ட, வளமான மண்ணிலே வாழ்ந்ததால், வந்தாரை வரவேற்கும் நல்நெஞ்சம் கொண்ட கன்றை, கபட நெஞ்சமுடைய.பிழைப்புத் தேடி, நாடு விட்டு நாடு வந்த பரதேசிப் பன்றி ஏமாற்றியது மட்டுமல்ல, அந்தக் கன்றின் நான்மறைகளை அழித்து இல்லாமல் செய்து விட்டது. அன்று ஏமாந்த அந்தக் கன்றின் பரம்பரை, இன்றைக்கும் பன்றியின் பரம்பரையினரால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை நினைக்கத் தான் நெஞ்சு பொறுக்குதில்லையே.

          • எனக்கு ஒண்ணியுமே தெரியாது, நான் கள்ளம் கபடமே இல்லாத பச்சப் புள்ள..

  25. //சங்ககால சாதிப்பாகுபாடுகளையும், தீண்டாமையையும் குறிப்பிட்டால் அது இடைச்செருகல் என்று சங்கப்புலவர்களை டம்மியாக்குகிறீர்கள்.. ///

    ஆரிய/வடுக/கன்னடப்பார்ப்பனர்களால் இடைச்செருகல்கள் நடைபெற்றது சங்ககாலத்தில் மட்டும் அல்ல. எப்படி ஆகமங்களில் இடைச்செருகல்கள் நடந்தனவோ அதே போல் சங்க காலப் பாடல்களிலும் வடுக/கன்னடப் பார்ப்பனர்களால் இடைச்செருகல்கள் நடைபெற்றன. உதாரணமாக, இக்காலப் பார்ப்பனர்கள் பலர், வலைப்பதிவுகளை உருவாக்கி, அகத்தியர், தொல்காப்பியர் போன்றோர் பிராமணர்கள் எனவும், தமிழ்ப்பண்பாடும், தமிழிலக்கியங்களும் தமிழர்களும் வேதக் கலாச்சாரத்துக்கு (Vedic Culture) கடன் பட்டவர்கள் என்ற மாதிரி தமது கட்டுரைகளால் ‘நிரூபிக்க’ முயலவில்லையா, அது போன்றது தான் இதுவும். 🙂

    //பிறப்பினடிப்படையில் மனிதர்களைப் பிரிப்பது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்த ஒன்று..//

    உதாரணத்துக்கு சிலவற்றை கூறுங்கள்.

    //இந்தியாவில் மனு சாத்திரம் 2-ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு இந்தியா முழுவதும் பரவலாக்கப்பட்டு ஒன்று.. அதற்கு முன்பே அதன் கூறுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தது போலவே தமிழகத்திலும் இருந்தது..///

    மனுசாத்திரத்துக்கு முந்தியது தொல்காப்பியமும் தமிழர் பண்பாடும்.

    //இப்படியெல்லாம் குட்டிக் கரணம் அடித்து குழப்பினால் எப்படி விவாதிப்பது..?!//

    “இருந்திருந்தால்” என்றால் கருத்து எனக்கு அவர் கண்ணகி என்ன மதம் என்று தெரியாது, நாவலர் தான் அப்படிச் சொன்னார் என்பது தான். கண்ணகி சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்று நான் உண்மையிலேயே நம்ம்பினால், ‘இருந்திருந்தால்’ என்று கூறியிருக்க மாட்டேன் என்பது கூடவா உங்களுக்குப் புரியவில்லை. அது ஒருபுறமிருக்க, கண்ணகி என்ன சமயம் என்பதைப் பற்றி நாங்கள் இங்கே விவாதிக்கவில்லை என்பதை உங்களுக்கு நான் அடிக்கடி நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.

    //மள்ளர்கள் வேளாளருடன் கலந்திருக்கலாம் என்கிறீர்கள்.. ஆனால் பள்ளர்கள்
    வயலில் வேலை செய்தவர்கள் என்று நிச்சயமாக கூறுகிறீர்கள்.. ///

    மள்ளர்களும், பள்ளர்களும் ஒன்று என்று நீங்கள் நினைப்பதால் தான் உங்களுக்கு இவ்வளவு குழப்பம். சங்க கால மள்ளர்கள் தான் இக்காலப் பள்ளர்கள் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் உண்டா. பள்ளர்கள் வயலில் வேலை செய்தவர்கள் என்பதற்கு பிற்கால இலக்கியங்களாகிய பல்வகைப் பள்ளுப்பாடல்களில் ஆதாரம் உண்டு. இலங்கையிலும் பல பள்ளு இலக்கியங்கள் உண்டு என்பதை தான் நான் குறிப்பிட்டேன்.

    //சாதியில்லா சங்கத் தமிழகம் வயலில் இருந்ததா அல்லது மண்டபத்தில் இருந்ததா என்று தெரியவில்லை..///

    சங்கத்தமிழகத்தில் இப்போது போல் சாதியிருந்தது என்று உங்களுக்கு மண்டபத்தில் யாரும் சொல்லியிருப்பார்களோ என்னமோ எனக்குத் தெரியாது. ஆரியப் பார்ப்பனர்களின் வருகைக்கு முன்னால், சங்க காலத்தில் இருந்த சமூகப் பிரிவுகள் தொழிலில் அடிப்படையிலானவையே அன்றி, பிறப்பினடிப்படையிலான வருணாச்சிரமம் அல்ல.

    • // ஆரிய/வடுக/கன்னடப்பார்ப்பனர்களால் இடைச்செருகல்கள் நடைபெற்றது சங்ககாலத்தில் மட்டும் அல்ல. எப்படி ஆகமங்களில் இடைச்செருகல்கள் நடந்தனவோ அதே போல் சங்க காலப் பாடல்களிலும் வடுக/கன்னடப் பார்ப்பனர்களால் இடைச்செருகல்கள் நடைபெற்றன. உதாரணமாக, இக்காலப் பார்ப்பனர்கள் பலர், வலைப்பதிவுகளை உருவாக்கி, அகத்தியர், தொல்காப்பியர் போன்றோர் பிராமணர்கள் எனவும், தமிழ்ப்பண்பாடும், தமிழிலக்கியங்களும் தமிழர்களும் வேதக் கலாச்சாரத்துக்கு (Vedic Culture) கடன் பட்டவர்கள் என்ற மாதிரி தமது கட்டுரைகளால் ‘நிரூபிக்க’ முயலவில்லையா, அது போன்றது தான் இதுவும். 🙂 //

      நீங்கள் தமிழ் மறையிலிருந்து இந்து வேதம் வந்தது என்பது போல, மேற்படி பார்ப்பனர்களும் எல்லாம் வேதத்திலிருந்து வந்தது என்கிறார்கள்.. இரண்டுமே குறுகிய பார்வைகள்.. ஈசன் தமிழும் ஆரியமும் உடனே சொல்லி கருணை செய்தான் என்ற திருமூலரின் பாடலில் தொன்மையான உண்மை இருப்பதாக நம்புகிறேன்.. தமிழும், ஆரியமும் தொன்மையானவை, தொன்றுதொட்டு உரையாடி வருபவை என்பது எனது தனிப்பட்ட கருத்து..

      // உதாரணத்துக்கு சிலவற்றை கூறுங்கள். //

      நிறைய உண்டு.. தெற்கு சூடானில் ஆட்சியதிகாரத்துக்கு இப்போது மோதிக் கொண்டிருப்பவை இரண்டு சாதிகள்..

      // மனுசாத்திரத்துக்கு முந்தியது தொல்காப்பியமும் தமிழர் பண்பாடும். //

      4 வர்ண பகுப்பை தொல்காப்பியம் கூறுகிறது.. அதுவும் இடைச் செருகலோ என்னமோ..!

      // “இருந்திருந்தால்” என்றால் கருத்து எனக்கு அவர் கண்ணகி என்ன மதம் என்று தெரியாது, நாவலர் தான் அப்படிச் சொன்னார் என்பது தான். கண்ணகி சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்று நான் உண்மையிலேயே நம்ம்பினால், ‘இருந்திருந்தால்’ என்று கூறியிருக்க மாட்டேன் என்பது கூடவா உங்களுக்குப் புரியவில்லை. அது ஒருபுறமிருக்க, கண்ணகி என்ன சமயம் என்பதைப் பற்றி நாங்கள் இங்கே விவாதிக்கவில்லை என்பதை உங்களுக்கு நான் அடிக்கடி நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. //

      ‘அதனால்’ என்ற வார்த்தைக்கு என்ன பொருள்..?

      கண்ணகியின் சமயத்துக்கும் தீவலம் வருவதற்கும் தொடர்புண்டு.. இது உங்களுக்கு புரியவில்லையா அல்லது புரியாதது போல் நழுவுகிறீர்களா என்பதை இதைப் படிப்பவர்களிடம் விட்டுவிடுகிறேன்..

      // பள்ளர்கள் வயலில் வேலை செய்தவர்கள் என்பதற்கு பிற்கால இலக்கியங்களாகிய பல்வகைப் பள்ளுப்பாடல்களில் ஆதாரம் உண்டு. இலங்கையிலும் பல பள்ளு இலக்கியங்கள் உண்டு என்பதை தான் நான் குறிப்பிட்டேன். //

      பள்ளு இலக்கியங்களின் காலகட்டம் என்ன..? அதை ஆதரித்து வளர்த்தவர்கள் யார்..? பள்ளுப்பாடல்களில் வரும் மள்ளத்தியர் யார்..?

      // ஆரியப் பார்ப்பனர்களின் வருகைக்கு முன்னால், சங்க காலத்தில் இருந்த சமூகப் பிரிவுகள் தொழிலில் அடிப்படையிலானவையே அன்றி, பிறப்பினடிப்படையிலான வருணாச்சிரமம் அல்ல. //

      என்னதான் ஆதாரங்கள் தந்தாலும் எல்லாம் இடைச்செருகல்கள் என்று எஸ்கேப் ஆகமுடியும் போது விவாதிப்பது வீண் வேலை..!

  26. //உண்மையான எதிரியாகிய வெள்ளையனிடம் சரணடைந்த கோழைத்தனத்தை மறைத்து//

    நேரு பிரிவினைவாதம் தண்டனைக்குரியது என்று சட்டம் போட்ட இரவே, திராவிடநாடு கொள்கையை பறக்கவிட்டவர்கள் எல்லாம் இதைப் பற்றி பேசலாமா…..பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.நானும் இந்த பார்டரைத் தாண்டி வர மாட்டேன்.நீயும் வரக் கூடாது…..

  27. //நேரு பிரிவினைவாதம் தண்டனைக்குரியது என்று சட்டம் போட்ட இரவே..// பின்னே, சுரணையற்ற தமிழர்களை நம்பி புரட்சியா பண்ண முடியும்? ஆனாலும், அண்ணாவின் ,’பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறொம்,ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ என்ற புகழ்பெற்ற பாராளுமன்ற உரை என் நினைவிலுள்ளது! ஒரே இந்தியா வசனம் பேசியவர்கள் ஊழல் சேற்றில் மாட்டிக்கொண்டு இன்று புழுவாய் நெளிகிரார்களே! ஒரே இந்தியா, ஏகபோக ஊழலைத்தானே வளர்த்தது!

    • அஜாத சத்ரு அவர்களே, வள்ளலார் விவாதத்தை அப்படியே விட்டு விட்டீர்களே ஏன்? திராவிட நாட்டு எல்லை கேட்ட பொழுது அண்ணா அடித்த கூத்து தெரியுமா? திராவிட நாட்டு கோரிக்கைகளில் ஒன்று அது பிரிட்டிஸார் ஆட்சியிலேயே இருக்க விரும்புகிறது என்பது தெரியுமா? இந்த லெட்சனத்தில் தமிழர்களை குறை கூறுவது ஏன்?

      • தேவனாராயனின் கேள்வி ஏன் அபத்தமாக உள்ளது? வள்ளலார நானா அப்படியே விட்டேன்? அம்பிகளெ ஒத்துக் கொண்டாரே, அவராக ஏற்றுக்கொண்ட வழக்கம் என்று! ஆனால், அம்பிகள் உணர மறுப்பது அதற்காண அவசியம் வள்ளலாருக்கு ஏற்பட்டது ஏன் என்பதே! பழைய பதிப்பு திரு அருட்பா புத்தகம் வைத்திருப்போர் அதற்கான விளக்கத்தை தரலாம்! பல தொப்பிகள் வைத்திருக்கும் வெங்கடேசன் தரலாம், மனமிருந்தால்! தற்குள் விவாதம் வேறு திசையில் சென்றுவிட்டதே!

        திராவிட நாட்டு எல்லை கேட்ட பொழுது அண்ணா அடித்த கூத்து தெரியுமா? அது என்ன கேலிக்கூத்து?
        திராவிட மொழிகள் பேசப்படும் பகுதிதான் திராவிடனாடு! ஜெயித்தால் தான் தலைவனா? கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய ஆள் பலமும், ஆதிக்க பலமும் அவ்ர் பெற்றிருக்கவில்லை! அவரை எள்ளி நகைப்பது ஜெயித்த நரி ஆரியமே!

        பெரியார், அம்பெத்கர் உட்பட பல தலைவர்கள் இந்தியாவில்நிலவும் ஜாதி கொடுமைக்கு முடிவு கட்டாமல், ஆங்கிலேயர் வெளியேறுவது பார்பன,பனியா ஆதிக்கத்திற்குதான் வழிகோலும் என்றனர்!
        அம்பெத்கர் தலித்துகலுக்கு இடஒதுக்கிடு பெற்றதாலும், அரசியல் சட்டம் இயற்றும் குழுவின் தலைவர் பதவி கொடுத்ததாலும் எதிர்ப்பை கைவிட்டார்! ஆனால், பிற்படுத்தபட்டோர், ஜனத்தொகையில் 75 விழுக்காடுகளுக்கு மேல் இருந்தும், கல்வியிலும் , அரசு வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டே இருந்தனர்! அதற்கும் ஆஙகிலேய அரசு வழிவகை காண வேண்டுமென்ரார் பெரியார்! அஞசாமல், இது போலி சுதந்திரம் , பார்பனரும் பனியாக்களுமே இதனால் பயனடைவர் என்றார்! உண்மைதானே! பின்னாளில், காகாகலேத்கர் கமிசன் ஏற்படுத்தி, இதர பிற்படுத்தப்பட்டவரை சமாதானப்படுத்தினார் நேரு! ஆனால்,கமிசனின் அறிக்கை அவர்காலத்திலும், அவரது புதல்வி காலத்திலும் வெளியிடபடவில்லை! அகில இந்தியாவிலும் இதர பிற்படுத்தப்பட்டோர் தூஙகிகொண்டுதான் இருந்தனர்! பார்ப்பனியம் இன்னும் சமத்காரமாக அடுத்து வந்த மண்டல் கமிசன் அறிக்கையையும் மறைத்தனர்! அய்யா வி பி சிங், அறிக்கையை வெளியிட்டு பார்ப்பனர் சதியை முறியடித்தார்!

        • //இந்த லெட்சனத்தில் தமிழர்களை குறை கூறுவது ஏன்?/ தனயனை காட்டிக்கொடுத்து பிழைக்க நினைத்த விபீடணணும், தந்தையை காட்டிக்கொடுத்து பிழைக்க நினைத்த பிரகலாதனும் வாழ்ந்தார்களா? வீழ்ந்தார்களா? அவரகளது வம்சம் என்ன ஆனது? தமிழர்களை குறை கூறுவது , இனியாவது மானத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே! பார்ப்பனர்கள், அமெரிக்க மாஃபியா க்களை போல! மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும்! இவர்களை நம்பியன்றோ வீரத்திருமகன் தம்பி பிரபாகரனையும், லட்சக்கணக்கான தமிழர்களையும் இழந்தோம்!

          பார்ப்பனர்கள் இன்று கொக்கரிக்கிரார்களென்றால் அது தமிழனின் கையாலாகாத தன்மையினை அறிந்ததினால் தானே!

        • //தேவனாராயனின் கேள்வி ஏன் அபத்தமாக உள்ளது?//—-உங்க பதில்தான் அபத்தமாக உள்ளது.விவாதம் வள்ளலாரின் மறைவு குறித்துதானே?

        • //தேவனாராயனின் கேள்வி ஏன் அபத்தமாக உள்ளது?//–உங்கள் பதில்தான் அபத்தமாக உள்ளது.வள்ளலார் விவாதம் அவர் மறைவு குறித்துதானே? மலையாளிகள் தாங்கள் மஞ்சள் நிற மங்கோலிய இனம் என்று சொல்கிறார்கள்.கன்னட,தெலுங்கர் தங்களை ஆரிய தொடர்புடையவர்கள் என்னும்போது திராவிட நாடு கேட்ட அண்ணாவை கூத்தடித்தவர் என்று சொல்லாமல் என்ன சொல்வது.திராவிட நாட்டை தனியாக பிரித்து அதை வெள்ளையர் ஆள வேண்டும் என்றுதான் தீர்மாணம் கூறுகிறது.திராவிடநாட்டை பிரித்த பிறகு பார்ப்பன பனியா ஆதிக்கம் எப்படிவரும்?

          • //திராவிடநாட்டை பிரித்த பிறகு பார்ப்பன பனியா ஆதிக்கம் எப்படிவரும்?// மலையாளிகளின் இனப்பிரச்சினையை இஙு விவாதிக்கவேண்டாமே! அது ஏற்கெனவே வினவு தளத்தில் விவாதிக்கப்பட்டு விட்டது! அவர்களில் நம்பூதிரிகளும்,நாயர்களும் அப்படி கூறிக்கொள்வதி அர்த்தமும் உள்ளது! வினவில் விவாதிக்கபட்ட ‘திப்பு சுல்தான்’ பற்றிய பதிவை பார்க்கவும்! மேற்கொண்டு வேண்டுமென்றால் தாதாசாரியார்.காம் வலைப்பதிவை பார்க்கவும்!

            //கன்னட,தெலுங்கர் தங்களை ஆரிய தொடர்புடையவர்கள் என்னும்போது ……..//
            சாமானியர்கள் பேசிவந்த திரமில எனும் தமிழ்பிராகிருதமே பல்வேறு காலகட்டங்களில் ,பல்வேறு பகுதி மக்களிடம் ஆரியம் கொண்ட தொடர்பினால் , ஆரிய வழக்கு சொற்களை பல்வேறு அளவுகளில் உள்வாங்கி பல மொழிகளானதாக மோழி வல்லுனர்கள் கூறுகிரார்கள்!திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய கி யு போப், பாவாணர் போன்றோர் கூற்றை நம்புகிறொம்!

            ஆதியில், காங்கிரசும் பூரண விடுதலை கோரவில்லையே! தாழ்த்தப்பட்டோர் விடயத்தில் ஆங்கிலேயே அரசு தலையிட்டதுதானே திலகர் கொதிதெழுந்தார்! ‘ஆயிரம் உண்டிஙகு சாதி’ என்று பாராதி பாடியதும் அப்போதுதானே! இப்படிப்பட்டநிலையில் நீங்கள் அண்ணாவை குறை கூறியது காழ்ப்புணர்ச்சியே!

            //திராவிடநாட்டை பிரித்த பிறகு பார்ப்பன பனியா ஆதிக்கம் எப்படிவரும்?// உண்மைதான்! அப்போதும் தூஙகும் தமிழன் விழிப்புணர்வு பெற்றால் தான் அரசு நிலைக்கும்!

            தமிழன் எப்போதுமே மற்றவரை அடக்கி ஆண்ட சாதியில்லை! அண்ணன், தம்பி சண்டையால் பாண்டியனாடும், பக்தி வந்து வீரம் தொலைந்ததால் சோழநாடும், பார்பன தொடர்பால் சேரனாடும் தொலைந்தன! எஞ்சியுள்ள தமிழர்கள், மாற்றார் அடக்குமுறையில் தலைவிதியே என்று இறைவனைப்பாட ஆரம்பித்துவிட்டனர்!

            • தப்பு தப்பாக தகவல் கொடுப்பதை முதலில் நிறுத்துங்கள்.ஒப்பிலக்கணம் எழுதியது ஜி.யு.போப் இல்லை.கால்டுவெல்.இது போன்ற தகவல்கள் நீங்கள் அந்த நூலின் அட்டையை கூட பார்க்க வில்லையோ என்று சந்தேகிக்க வைக்கிறது.திராவிட நாட்டில் கேரளா உண்டா இல்லையா என்பதை குழப்பாமல் தெளிவா சொல்லுங்க பார்ப்போம்.

  28. //கொற்றவை எனப்படும் தாய் தெய்வ வழிபாடு இந்தியா முழுவதிற்கும் பொதுவானது..///

    தாய்த்தெய்வ வழிபாடு இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஆபிரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும், ஏன் உலகம் முழுவதிலும் வாழும் பல பழங்குடி மக்களுக்கும் பொதுவானது. அந்த தாய்த்தெய்வங்களுக்கெல்லாம் பெயர் கொற்றவை அல்ல. தமிழர்களின் தாய்த்தெய்வத்துக்கு மட்டும் தான் பெயர் கொற்றவை.

    //சேயோன்/முருகன் வழிபாடு தமிழகத்தின் தனிச்சிறப்பு.. ஆனால் மயில், வேல் இவை வடபுல கார்த்திகேயனுக்கும் உள்ளவை..///

    அதனால் வேலோடும், வில்லோடும் உள்ள ஆப்பிரிக்க பழங்குடிகளின் தெய்வங்களும் கூட முருகனும், ராமனும் என்று கதை விட்டாலும் விடுவீர்கள் போலிருக்கிறது? உங்களின் பதிலைப் பார்க்கும் போது சுருள் தலையோடு புத்தர் இருப்பதால், அவர் ஒரு நீக்ரோ, ஆபிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் போனவர் என்று வாதாடிய, எனக்குத் தெரிந்த ஒரு black American இன் நினைவு தான் வருகிறது. 🙂

    //இந்த தெய்வங்கள் எல்லாம் நம் விருப்பமும், அனுமதியுமில்லாமலேயே இந்தியா முழுவதும் சுற்றிச் சுழன்றிருக்கிறார்கள்.///

    அவர்கள் சுற்றிச் சுழன்றார்களோ இல்லையோ, சில பொதுவான அடையாளங்களை வைத்து, ஆதித் தமிழர்கள், வட இந்தியர்களின் கடவுள்களை தான் வணங்கினார்கள், இரவல் வாங்கினார்கள் என்று இன்றைய தமிழர்களின் காதிலும் பூச்சுத்த அதாவது “நிரூபிக்க” முயல்கிறீர்கள், ஆனால் அது வேலை செய்வதாகத் தெரியவில்லை.

    //மாலும், இந்திரனும், வருணனும் தமிழ்மண்ணுக்கே வந்திராத வடபுலப் பார்ப்பனர்களுக்கும் கடவுளர்களாக இருப்பது எப்படி..?!///

    எம்மத்தியிலுள்ள கிறித்தவர்கள் எல்லாம் ஐரோப்பாவுக்கு அல்லது பெத்லேகேமுக்குப் போயா இயேசுவை அறிந்தார்கள்? அதாவது தமிழ்மண்ணுக்கு வந்த பார்ப்பான்கள் இங்கிருந்து அங்கு போய் அறிமுகப்படுத்த்தியிருக்கலாம். அதை விட ஆரியர்களின் வருகையின் முன்னால், திராவிடர்கள்(தமிழர்கள்) வடக்கிலும் வாழ்ந்தனர், அதனால், ஆரியர்களுக்கு தமிழர்களின் தெய்வங்கள் அறிமுகமாகி இருக்கலாம்.

    //என்னதான் வற்புறுத்தினாலும் கன்று மலம் தின்னுமா..?!///

    பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பது பழமொழி. உதாரணமாக ஆரியப் பன்றியின் நான்கு வேதங்கள் என்ற மலத்தை தமிழ்க்கன்றுகள் ஏற்றுக் கொண்டதால் தான் சாதி என்ற நோயால் இன்றும் வருந்துகின்றன.

    கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பது போன்றவை தான் உங்களுடைய உளறல்கள், மன்னிக்கவும்… வாதங்கள். 🙂

    //அவர், மாற்றி மாற்றி குழப்பும் உங்களை நக்கலடிப்பது போலவே எனக்கு தோன்றுகிறது..!///

    அந்தக் கவிதைக்கு விளக்கமும் தந்த பின்னரும் கூட, இப்படிக் குழந்தைப் பிள்ளைத்தனமாக, school yard சண்டை போல பதிலெழுதுகிறீர்களே, அந்தக் கவிதையைச் சரியாகப் புரிந்து கொள்ளக் கூடியளவு கூட உங்களுக்கு தமிழில் அறிவு கிடையாதா. உங்களுடன் பேசி எனது நேரத்தை செலவழிப்பதையிட்டு வருத்தமாக இருக்கிறது..

    //தமிழும், ஆரியமும் தொன்மையானவை, தொன்றுதொட்டு உரையாடி வருபவை என்பது எனது தனிப்பட்ட கருத்து..///

    எனது கருத்தும் அது தான், அனால் ஆரியம் தான் தமிழிடமிருந்து இரவல் வாங்கியதே அல்லாமல், தமிழ் ஆரியத்திடமிருந்து இரவல் வாங்கும் நிலையில் இருக்கவில்லை. ஆரியத்தில் இருக்கும் பல நூல்களும் தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. அது மட்டுமல்ல, சமக்கிருதம், தமிழிலிருந்து உருவாகப்பட்ட சமைக்கப்பட்ட(சமைத்த+கிருதம்) மொழி, என்ற சில மொழி வல்லுனர்களின் கருத்தையும் நான் நம்புகிறேன்.

    //நிறைய உண்டு.. தெற்கு சூடானில் ஆட்சியதிகாரத்துக்கு இப்போது மோதிக் கொண்டிருப்பவை இரண்டு சாதிகள்..///

    தெற்கு சூடானில் நடப்பது இனப் (Ethnic) பிரச்சனை. இந்து மதத்தின் வருணாச்சிரம, பிறப்பின் அடிப்படையிலான சாதிப்பிரிவு, இந்துசமயம் தோன்றிய, பரவிய நாடுகளில் மட்டும் தான் உண்டு. சூடானின் Dinka, Nuer, Shilluk, போன்ற ஒவ்வொரு இனங்களுக்கிடையில் (Ethnic group) யார் பிறப்பால், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. சிங்களவரும், தமிழர்களும் போல் அங்குள்ளது இனப்பிரச்சனையேயன்றி சாதிப் பிரச்சனை அல்ல.

    //4 வர்ண பகுப்பை தொல்காப்பியம் கூறுகிறது.. அதுவும் இடைச் செருகலோ என்னமோ..!//
    அது தொழிலடிப்படையிலான பாகுபாடே தவிர, பிறப்பினடிப்படையிலான தீண்டாமை அல்ல

    //கண்ணகியின் சமயத்துக்கும் தீவலம் வருவதற்கும் தொடர்புண்டு..///

    ஆறுமுகநாவலர் தான் கண்ணகியின் சமயம் சமணம் என்றாரே தவிர நானல்ல. கண்ணகி சைவசமயத்தைச் சேர்ந்தவர் என்பது தான் எனது கருத்தும், இலங்கை முழுவதுமுள்ள கண்ணகி கோயில்களிலேயே அதற்கு ஆதாரங்கள் உண்டு, அதை விட, பார்ப்பன்களுக்கு முந்தியவன் பறையன் என்பதிலும், புத்தேளிர் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்ற புதுப் பார்ப்பான்கள் வருமுன்பு, மாமுது பார்ப்பான்களாக இருந்தவர்கள், ஆதித்தமிழர்களாகிய வள்ளுவர்கள் (பறையன்கள்) என்பதிலும் எனக்கு மட்டுமல்ல, எந்த உணமையான தமிழனுக்கும் கருத்து வேறுபாடிருக்க முடியாது.

    //பள்ளு இலக்கியங்களின் காலகட்டம் என்ன..? அதை ஆதரித்து வளர்த்தவர்கள் யார்..? பள்ளுப்பாடல்களில் வரும் மள்ளத்தியர் யார்..?///

    பள்ளுப்பாடல்களின் காலகட்டம் சங்க காலம் அல்ல என நம்புகிறேன். ஏனென்றால் இலங்கையிலும் பல பள்ளு இலக்கியங்கள் உண்டு. பள்ளுப்பாடல்களில் பள்ளன், பள்ளி, ஆண்டை வருவதைத் தான் பார்த்திருக்கிறேனே தவிர, மள்ளத்தியை கேள்விப்பட்டதில்லை, அது எனக்குச் சரியாகத் தெரியாது. நீங்கள் தான் சம்பந்தமில்லாமல், இந்த உரையாடலில் மள்ளர்களை இழுத்து வந்தீர்கள். அதனால் அதை நிரூபிக்க வேண்டியது நீங்கள் தானே தவிர நானல்ல.

    // எல்லாம் இடைச்செருகல்கள் என்று எஸ்கேப் ஆகமுடியும் போது விவாதிப்பது வீண் வேலை..!///

    புதுப்பார்ப்பான்கள் செய்த இடைச் செருகல்களை இடைச்செருகல் என்று சொல்லாமல் எப்படிச் சொல்வதாக்கும், அந்த இடைச்செருகல்களை உண்மை என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா? உங்களோடு விவாதிப்பது வீண்வேலை என்பது தான் என்னுடைய கருத்தும். குறைந்த பட்சம் அந்த விடயத்திலாவது எங்கள் இருவருக்கும் உடன்பாடு உண்டு என்பதில் மகிழ்ச்சியே.

    • // தாய்த்தெய்வ வழிபாடு இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஆபிரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும், ஏன் உலகம் முழுவதிலும் வாழும் பல பழங்குடி மக்களுக்கும் பொதுவானது. அந்த தாய்த்தெய்வங்களுக்கெல்லாம் பெயர் கொற்றவை அல்ல. தமிழர்களின் தாய்த்தெய்வத்துக்கு மட்டும் தான் பெயர் கொற்றவை. //

      இருக்கட்டும்.. கண்ணகியை இராஜராஜேஸ்வரியாக்கிவர்கள் பார்ப்பனர்களா..? கருணை, வீரம், நீதி, தியாகம் முதலியவற்றுடன் கூடிய பெண்ணரசிகள் சமூக நினைவில் நிலைத்து பராசக்தி போல் அம்மன்களாகிறார்கள்..

      // அதனால் வேலோடும், வில்லோடும் உள்ள ஆப்பிரிக்க பழங்குடிகளின் தெய்வங்களும் கூட முருகனும், ராமனும் என்று கதை விட்டாலும் விடுவீர்கள் போலிருக்கிறது? உங்களின் பதிலைப் பார்க்கும் போது சுருள் தலையோடு புத்தர் இருப்பதால், அவர் ஒரு நீக்ரோ, ஆபிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் போனவர் என்று வாதாடிய, எனக்குத் தெரிந்த ஒரு black American இன் நினைவு தான் வருகிறது. 🙂 //

      புத்தரும் மயில், வேலோடு காட்சியளித்தால் முருகன்/கார்த்திகேயன் என்று வழிபடுவதில் எனக்கு பிரச்சினையில்லை..

      // அந்தக் கவிதைக்கு விளக்கமும் தந்த பின்னரும் கூட, இப்படிக் குழந்தைப் பிள்ளைத்தனமாக, school yard சண்டை போல பதிலெழுதுகிறீர்களே, அந்தக் கவிதையைச் சரியாகப் புரிந்து கொள்ளக் கூடியளவு கூட உங்களுக்கு தமிழில் அறிவு கிடையாதா. உங்களுடன் பேசி எனது நேரத்தை செலவழிப்பதையிட்டு வருத்தமாக இருக்கிறது.. //

      கவிதை விளக்கம் இருக்கட்டும், காலக்கணக்கு உதைக்கிறதே.. சங்க காலத்தில் பார்ப்பான் என்றால் ஆரியப் பார்ப்பான் – ஆனால் சங்க காலத்துக்கு பிறகு எழுதப்பட்ட சிலம்பில் பார்ப்பான் என்றால் தீவலம் செய்துவைக்கும் ஒரு சமண பூசாரியா..?!

      // பள்ளுப்பாடல்களின் காலகட்டம் சங்க காலம் அல்ல என நம்புகிறேன். ஏனென்றால் இலங்கையிலும் பல பள்ளு இலக்கியங்கள் உண்டு. பள்ளுப்பாடல்களில் பள்ளன், பள்ளி, ஆண்டை வருவதைத் தான் பார்த்திருக்கிறேனே தவிர, மள்ளத்தியை கேள்விப்பட்டதில்லை, அது எனக்குச் சரியாகத் தெரியாது. நீங்கள் தான் சம்பந்தமில்லாமல், இந்த உரையாடலில் மள்ளர்களை இழுத்து வந்தீர்கள். அதனால் அதை நிரூபிக்க வேண்டியது நீங்கள் தானே தவிர நானல்ல. //

      மள்ளர் குலத்தில் வரினும்இரு பள்ளியர்க்கோர்
      பள்ளக் கனவன்எனின் பாவனைவே றாகாதோ
      கள்ளப்புள் வாய்கிழித்த காரழகர் முக்கூடல்
      கொள்ளத் தமுது குடித்தரங்கள் கூறினரே. (முக்கூடற் பள்ளு – 12)

      // புதுப்பார்ப்பான்கள் செய்த இடைச் செருகல்களை இடைச்செருகல் என்று சொல்லாமல் எப்படிச் சொல்வதாக்கும், அந்த இடைச்செருகல்களை உண்மை என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா? உங்களோடு விவாதிப்பது வீண்வேலை என்பது தான் என்னுடைய கருத்தும். குறைந்த பட்சம் அந்த விடயத்திலாவது எங்கள் இருவருக்கும் உடன்பாடு உண்டு என்பதில் மகிழ்ச்சியே. //

      இடைச் செருகல் என்றால் மூலத்துடன் ஒப்பிட்டு நிறுவவேண்டும்.. அல்லது அந்த இடைச் செருகல் எப்படி பிற ஆதாரங்களுடன் முரண்படுகிறது என்பதை விளக்க வேண்டும்.. இதை விட்டுவிட்டு, நான் சொல்வதை நம்பு, மூலத்தை எரித்துவிட்டார்கள், சூலத்தை கொடுத்துவிட்டார்கள் என்றெல்லாம் அளந்துவிட்டு ‘உண்மை’யை நிறுவ முயலக்கூடாது.. பார்ப்பான் இல்லாத பார்ப்பனீயம் என்ற கருத்தியல் மேலும் மேலும் புதுப் புது பார்ப்பான்களைத்தான் உருவாக்கும்.. பார்ப்பனீயம் இல்லாத பார்ப்பான் சாத்தியமேயில்லை என்ற கருத்தியல் போலத்தான் இதுவும் ஒரு பகல் கனவு.. 🙂

      • அம்பியாரே, புத்தர் மாகாவிஸ்னுவின் அவதாரங்களில் ஒன்று என்று உங்களவர்கள் கதை கட்ட ஆரம்பித்து விட்டார்களே உங்களுக்கு தெரியாதா? எனக்கு என்ன குழப்பம் எனில் விஸ்னு புத்தராக அவதாரமெடுக்க என்ன காரணத்தை கூறுவார்கள் என்பது குறித்துதான்.பார்ப்பனர்கள் வேள்வி செய்கிறேன் பேர்வழி என்று அனைத்து பொருளையும் நெருப்பில் போட்டு கொளுத்துகிறார்கள்.மன்னர்களும் பார்ப்பனர்கள் சொல்வதைகேட்டு கருவூலத்தை காலி செய்கிறார்கள்.மக்கள் பசி,பட்டினியில் தவிக்கிறார்கள்.நீங்கள் புத்தராக அவதாரமெடுத்து பார்ப்பனர்களிடமிருந்து மன்னர்களையும் மக்களையும் காப்பாற்றுங்கள் என்று தேவாதி முனிவர்கள் கேட்டுக்கொள்ள, அவர்களின் வேண்டுகொளை ஏற்று விஸ்னு புத்தராக அவதாரம் எடுத்து பார்ப்பனரின் கொட்டத்தை அடக்கி மக்களை காத்தார் என்றா?

        • எனக்கு எப்படித் தெரியும்..?! அஜாதசத்ரு அவர்கள் கூடத்தான் பெரியார் ஒரு ஆழ்வார் என்கிறார்.. நீங்கள் வேறு சம்பந்தமே இல்லாமல் 64வது நாயனார் என்று பெயர் வைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.. கூடவே இந்த வியாசர் சகல திக்குகளிலும் சகட்டுமேனிக்கு அடிக்கும் குட்டிக்கரணங்களால் அவருக்கு பதில் எனக்கு கண்ணைக் கட்டுகிறது.. இது வேறா..

          புத்தர் நான்தான் விஷ்ணு என்று கூறவில்லை.. புத்தர் போதிசத்துவராக முன்பே பல பிறவிகள் எடுத்து வைத்திருக்கிறார் என்கிறார்கள்.. புத்தர் எந்தெந்தப் பிறவிகளில் ஆரியராக, திராவிடராக, தமிழராகப் பிறந்தார் என்பதை தற்போதைக்கு ஆராய்சி செய்து சொல்லுங்கள்.. வேறு ஏதாவது ஒரு ஆரிய-திராவிடப் பதிவில் இதுபற்றி விவாதிப்போம்..!

  29. அம்பி அவர்களே,டைவர்ஸ் தரலாம் என்று முக்கியமான கேள்விகளுக்கு பதில் தராமல் நழுவுகிறீர்கள் பரவாயில்லை விடுங்கள்,சில விடயங்களை தெளிவுபடுத்தி கொண்டால் மேற்கொண்டு விவாதிக்க எளிதாக இருக்கும்.1.ஆரியர் என்பவர்கள் வெளியில் இருந்து வந்தவர்களா? இல்லை இந்தியாவின் பூர்வ குடிகளா? 2.சிந்து சமவெளி நாகரிகம் என்பது வேத கால நாகரிகத்திற்கு முற்பட்டதா இல்லையா? இது குறித்து நீங்கள் பதில் கூறினால் குழப்பம் இல்லாமல் விவாதிக்கலாம்.

      • ஆம் நீண்டதுதான், ஆனால் மேலே நடக்கும் விவாதத்தின் தொடக்க புள்ளி அதில்தான் உள்ளது.ஆரியர்களின் வருகை,வேதகால நாகரிகத்தின் காலம்,சிந்துசமவெளி நாகரிகத்தின் காலம் ஆகியவை குறித்து மேலோட்டமான வரையறையாவது இல்லாமல் மேற்படி விவாதத்தை நடத்துவதில் எந்த பொருளும் இல்லை.

  30. இந்த விவாதம் அல்லது உரையாடலில் தொடங்கப்பட்ட விடயத்தை மறந்து அண்ணன் அம்பி குழம்பி விட்டார் போல் தெரிகிறது. “மாமுது பார்ப்பான்” யார் என்பதில் தொடங்கி இன்று வேள்வியில் வந்து நிற்கிறார் ஆனால் இதுவரை அவரின்ன் கருத்து என்ன என்பதை தெளிவாக விளக்கவில்லை. அவருக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது.

    சங்ககாலப் பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்படும் பார்ப்பான், மறையோர், அந்தணர் எல்லாமே ஆரியப் பார்ப்பனர்களை மட்டுமே குறிக்குமேன்றால், தொல்காப்பியத்திலோ, அல்லது சங்கப்பாடல்களிலோ பிராமணர் என்ற வார்த்தையே கிடையாதே ஏன்?

    அதாவது சங்கப் பாடல்களில் மட்டுமல்ல, அதற்கு பிந்திய பழந்தமிழிலக்கியங்களிலும் காணப்படும் பார்ப்பான்கள் என்ற சொல் ஆரியப்பார்ப்பனர்களை மட்டும் குறிக்கவில்லை தமிழர்களிலும் பார்ப்பனர்கள் இருந்தனர்.

    செந்தமிழ்ப் பார்ப்பார், ஆரியப் பார்ப்பார் என இருவகைப் பார்ப்பார்கள் தமிழ்மண்ணில் இருந்தார்கள் என்பதை திருமந்திரம் உறுதிப்படுத்துகிறது. அதாவது சங்ககாலத்தில் மட்டுமல்ல, அதற்குப் பின்னரும் கூட, ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் தமிழ்மண்ணில் நன்றாக வேரூன்றி விட்ட காலத்திலேயே, அதாவது திருமந்திரத்தின் காலமாகிய 5ம் நூற்றாண்டிலேயே செந்தமிழர்களும் பார்ப்பார்களாக இருந்திருக்கிறார்கள்.

    “பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
    போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
    பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே
    சீர் கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே”

    பொருள்; இயற்கைச் செந்தமிழ் அந்தணாளர் பார்ப்பார் எனப்படுவர். திருவடியே குறிக்கோளாக மீளா அடிமையாய் வாழ்வதே ஒத்துப்பார்ப்பார் ஒழுக்கமிக்க விழுத்திணைப் பார்ப்பாராவார். அவர்களே(செந்தமிழ்பார்ப்பனர்) பூசைக்கு உரியவர்கள். தமிழ்நாட்டில் வெளியிலிருந்து வருவாரும், உயர்நிலைப் பெயரை மயலே வைத்துக் கொள்வர், அவர்கள் பேர்கொண்ட பார்ப்பார்(ஆரியப் பார்ப்பார்) அவர்கள் திருக்கோவில் பூசை செய்யும் தக்கவராகார். அவர்களைக் கொண்டு பூசை செய்வித்தால் தீமைகளைப் போர் செய்தகற்றும் வேந்தர்க்கு நீங்காக் கொடுநோய்கள் வீங்கும்.முறை சேர் திருநாட்டில் வற்கடமாகிய பஞ்சமும் உண்டாகும்.

    http://www.tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=503&book_id=118&head_id=67&sub_id=2419

    “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
    தீவலம் செய்வது காண்பார்கண் நோன்புஎன்னை.

    இந்த சிலப்பதிகார வரிகளின் பொருள்:

    மாமுது பார்ப்பான் – மிகப்பழங்காலந்தொட்டு கோயில் காரியங்கள், குறிசொல்வது, கணியம் பார்ப்பது, சவச்சடங்குகள் செய்வது முதலியவற்றைக் கவனித்துவந்தபழங்குடியினரும் பிற வேலைக்காரர்களும். இவர்கள் தமிழர்கள். வடக்கிலிருந்தோ வெளி நாடுகளிலிருந்தோ வந்தோரல்லர். (எந்தக் குடியினரும் இவ்வேலையில் அமரலாம், சங்ககாலத்திலே. மணமுறைக் கட்டுப்பாடுகள் இல்லை. காதல் திருமணங்கள் நடைபெற்றன.மணக்கொடைமுறை (வரதட்சிணை) இல்லை)
    இது மாப்புதுப் பார்ப்பான் என்று வந்திருந்தால் புத்தேளிரைக் குறிக்கும், புதுப்பார்ப்பான் வெளியிலிருந்து வந்து பார்ப்பு வேலைகளில் அமர்ந்தவன்.

    “பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே” – தொல்காப்பியர்

    சங்க காலத்தில் பறையர்களில் ஒரு பிரிவான அறிவர்கள் பார்ப்பனப் பிரிவில் இருந்துள்ளனர். பார்ப்பான் என ஆரியப்பார்ப்பன்களை மட்டும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடவில்லை.
    அது மட்டுமன்றி ஊர்ப்பார்ப்பான் என்பப்படும் செந்தமிழ்ப் பார்ப்பான்களும் இருந்தனர் என்பதை அகநானூறு உறுதிப்படுத்துகிறது (புலவர்: ஆவூர் மூலங்கிழார்)

    “வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
    வளை களைந் தொழிந்த கொழுந்தி னன்ன
    தனைபிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை
    சிதரலந் துவலை தூவலின் மலருந்
    தைஇ நின்ற தண்பெயற் கடைநாள்
    வயங்குகதி கரந்த வாடை வைகறை
    விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி
    மங்குல் மாமழை தென்புலம் படரும்
    பனியிருங் கங்குலுந் தமியள் நீந்தித்
    தம்மூ ரோளே நன்னுதல் யாமே”

    வேளாப் பார்ப்பான் – ஊர்ப்பார்ப்பான், வாள் அரம் துமித்த – கூரிய அரத்தால் அறுத்தெடுத்த, வளைகளைந்து ஒழிந்த -வளைகள் போக எஞ்சிய, கொழுந்தின் அன்ன – சங்கின் தலையைப்போன்ற, தளை பிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை – கட்டுண்ட பிணிப்பு விரியாத சுரிந்த முகத்தினையுடைய பகன்றையின் அரும்புகள், சிதரல் அம் துவலை தூவலின் மலரும் – சிதறுகின்ற அழகிய மழைத்துளிகள் வீசுதலால் மலரும் (காலாமாகய), தண் பெயல் நின்ற தைஇ கடைநாள் – குளிர்ந்த பெயல் நின்ற தைத் திங்களாகிய முன்பனியின் கடை நாளில்;

    வேளாப்பார்ப்பான்களின் தொழில் சங்கையறுப்பது. அதாவது “சங்கரிப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கேது குலம், சங்கையரிந்துண்டு வாழ்ந்தாலும் சிவனே உம்மைப்போல் இரந்துண்டு வாழ்ந்ததில்லை” என்று சிவனுக்கே சவால் விட்ட நக்கீரன் கூட ஒரு பார்ப்பான், அவன் ஆரியப்பார்ப்பான் அல்ல செந்தமிழ்ப்பார்ப்பான் அதாவது ஊர்பார்ப்பான். (ஆரியப்பார்ப்பான் எல்லாம் வெளியூர்ப்பார்ப்பான். அதாவது வந்தேறிப் பார்ப்பான்). இதனால், ஆரியப்பார்ப்பனர்களை மட்டுமல்ல கோயிலைப் பார்த்துக்கொண்ட தமிழ்ப்பூசாரிகளையும் பார்ப்பான் என்பது அக்கால வழக்கென்பது தெரிகிறது.

    இன்று தாழ்த்தப்பட்ட சாதியாக்கப்பட்டிருக்கும் பறையர்கள் ஒருகாலத்தில் பூணூல் அணிந்து பூசை செய்தவர்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது ஞானவெட்டியார் பாடல்.

    “முந்திப் பிறந்தவன் நான்
    முதல் பூணூல் தரித்தவன் நான்
    சங்குப் பறையன் நான்
    சாதியில் மூத்தவன் நான்”

    மேலும், மரபாக இருந்துவரும் பாடல்கள்,

    “… … பூணூலந்
    தரணிமுத லென்பறையில் தழைத்த தாண்டே”
    “பூணூல் தரித்துக் கொள்ளுவோம் – சிவ சிவ
    பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்ளுவோம்
    வேண விருதுகளும் விகிதமாய்
    வெண்குடை, வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்”
    “பூணூல் பிறந்ததெங்கே -சிவசிவ”

    இவற்றையும், 13-14 ஆம் நூற்றாண்டு தொடங்கி கிடைத்துள்ள வள்ளுவர் சிலைகள் பலவற்றிலும் பூணூல் வடிக்கப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டே வள்ளுவரின் படங்கள் பூணூலுடன் வரையப்பட்டன.

    அம்பி அவர்களின் கருத்து என்னவென்றால், சங்க இலக்கியங்களில் பார்ப்பனர்கள் என்று குறிப்பிடப்படுவது ஆரியபார்ப்பனர்களை மட்டும் தான் என்பதாகும். ஆனால் அது உண்மையல்ல என்பதைப் பார்த்தோம். இப்பொழுது வேள்வி என்று வரும் சங்கப்பாடல்கள் எல்லாம் ஆரியப் பார்ப்பனர்களை மட்டும் தான் குறிக்கும் என்ற வகையில் கருத்தை வைக்கிறார் என நினைக்கிறேன்.

    எவ்வாறு ஆரியப்பார்ப்பான்கள் தமிழ்மாமுது பார்ப்பான்களின் (அதாவது வள்ளுவர்களின்) தொழிலில் பங்கு போட்டுக் கொண்டார்களே அதே போல் செந்தமிழ்ப்பார்ப்பான்களும் ஆரியர்களின் நான்கு மறைகளையும் கற்று, அவர்களின் சடங்குகளையும் செய்தார்கள் என்கிறது “தமிழர் மரபும், திராவிட அவதூறும்” என்ற கட்டுரை.

    ’சேரன் செங்குட்டுவன் முன் நால்வகை மறைகளைப் பாடும் பறையூர் கூத்தச் சாக்கையர்கள் வந்து ஆடினர்’ என்கிறது சிலப்பதிகாரம். (நடுகற்காதை:76-77)

    “பாடகம் பதையாது சூடகந் துளங்காது
    மேகலை ஒலியாது மென்முலை அசையாது
    வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது
    உமையவள் ஒருதிற னாக ஓங்கிய
    இமையவன் ஆடிய கொடுகொட்டிச் சேதம்
    பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க்
    கூத்தச் சாக்கைய னாடலின் மகிழ்ந்தவன்
    ஏத்தி நீங்க இருநிலம் ஆள்வோன்
    வேத்தியன் மண்டபம் மேவிய பின்னர்
    நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்”

    இப்பாடலில், சாக்கையர்கள் ’நால்வகை மறையோர்’ என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஊர் பறையூர் என்பதனால், இவர்கள் பறையர் ஆகின்றனர். நால்வகை வேதங்களையும் பாடி ஆடும் தொழிலில் பறையர் இருந்தனர் என்பதும், அவர்களுக்கு மறையோர் எனப் பட்டம் சூட்டப்பட்டதும் கவனிக்கத்தக்கது. அதாவது சிலப்பதிகாரத்தில் மறையோர் என்பது ஆரியப் பார்ப்பனர்களைக் மட்டும் குறிக்கவில்லை.

    “தமிழர் வரலாற்றில் பார்ப்பார்கள் என்னும் பிரிவினரில் தமிழரும் உண்டு; அந்தப் பார்ப்பாரில் பெரும்பகுதியினர் வள்ளுவர், பறையர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரிவினரே என்பதாகும். ஆரியப் பார்ப்பனர் தமிழருடன் இணைந்து பிழைக்கத் தொடங்கிய பிறகு பார்ப்பார் எனும் பெயரைத் தமக்கானதாகவும் மாற்றிக் கொண்டனர்.

    அந்தணர் என்னும் பிரிவினரிலும் பாணர், பறையர், வள்ளுவர் உள்ளிட்ட பிரிவினர் பெரும்பங்கு இருந்தனர் என்பதும் ஏற்கனவே நிறுவப்பட்டது. ஆரியப் பார்ப்பனர், குறிப்பிட்ட கலையோ தொழிலோ அறியாதோர். ஆதலால், அவர்கள் காதலன் காதலி, தலைவன் தலைவி இடையே வாயிலோராகவும் (தூதுவர்), பூசை செய்து அதன் மீதப் பொருட்களை உண்டு வாழ்பவராகவும் இருந்தனர்.

    இதேவேளை, ஆரிய பார்ப்பனர் வாய்வழியாக ஓதி வந்த நான்கு ஆரியமறைகளைத் தமிழரும் கற்றுத் தேர்ந்தனர். முன்னர் கண்டவாறு, அரசு உருவாக்கம் நிகழத் தொடங்கிய பிறகு, ஆரிய பார்ப்பனருக்கான தேவை அதிகரித்தது. அரசர்களின் போர்க்கள வெற்றிகளுக்காக அவர்கள் வேள்வி வளர்த்தனர். இதன்போது மறை ஓதப்பட்டது. அரசர்கள் இப் பார்ப்பனர்களை ஆதரிக்கத் தொடங்கினர். இந்த மாற்றத்தில் தமிழரின் பல குலத்தவரும் பங்கு பெறத் தொடங்கினர். சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படும் பறையூர் சாக்கைக் கூத்தர் நான் மறை அறிந்திருப்பது இந்தக் காரணத்தினால்தான்.
    பறையர்கள் வேதம் கற்றதைத் தடுக்கும் துணிவு அக்காலத்தில் ஆரிய பார்ப்பனர்களுக்கு இல்லை. மேலும், தமிழ் அரசர்களும் பறையர் உள்ளிட்ட தமிழ்க் குலங்களின் காவலர்களாகவும் இருந்தனர். சேரன் செங்குட்டுவன் முன்னால் பறையூர்க் கலைஞர்களின் கூத்து நிகழ்த்தப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இமயம்வரை படையெடுத்துச் சென்று ஆரியரை அழித்து வந்த தமிழ்ப் பேரரசர்கள், ஆரிய பார்ப்பனரது கருத்துரு வாக்கங்களையும் உட்கொண்டனர் என்பதுவே வரலாறு காட்டி நிற்கும் உண்மை. அதேவேளை, ஆரிய பார்ப்பனருக்கான முக்கியத்துவம் வழங்குவதில் கட்டுப்பாடற்ற தன்மையையும் அவ்வரசர்கள் கொண்டிருக்கவில்லை என்பதும் உண்மையே.

    சோழ-சாளுக்கிய, விஜயநகர ஆட்சிக்கு முன்னர் கோயில் பூசைகளில் ஆரிய பார்ப்பனர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள் என்ற நிலை தமிழகத்தில் இருக்கவில்லை. இவ்வாறான குற்றசாட்டை முன்வைக்கும் எந்தக் கருத்தியலாளரும், பார்ப்பார் – பார்ப்பனர் – அந்தணர் ஆகிய மூன்று பிரிவுகளையும் விரித்து ஆய்ந்தது மில்லை. இந்த ஆய்வை மேற் கொள்ளாமல், பார்ப்பார் என்றாலே பார்ப்பனர்; பார்ப்பனர் என்றாலே ஆரியர் என்று அரைகுறை முடிவுகளைச் சொல்கின்றனர்.”

    குறிப்பு: எனத்து கருத்துக்கு வலுச்சேர்க்கும் எனக்கருதிய பல பத்திகளை அப்படியே இணையத்தளங்களிலிருந்து எடுத்து அவற்றைத் தொகுத்து தந்திருக்கிறேன். இந்த விவாதம் எனக்கு சங்க இலக்கியங்களில் ஆர்வத்தை உணடாக்கியிருக்கிறது, அதற்கு அம்பி அவர்களுக்கு நன்றி. 🙂

    • // “பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
      போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
      பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே
      சீர் கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே”

      பொருள்; இயற்கைச் செந்தமிழ் அந்தணாளர் பார்ப்பார் எனப்படுவர். திருவடியே குறிக்கோளாக மீளா அடிமையாய் வாழ்வதே ஒத்துப்பார்ப்பார் ஒழுக்கமிக்க விழுத்திணைப் பார்ப்பாராவார். அவர்களே(செந்தமிழ்பார்ப்பனர்) பூசைக்கு உரியவர்கள். தமிழ்நாட்டில் வெளியிலிருந்து வருவாரும், உயர்நிலைப் பெயரை மயலே வைத்துக் கொள்வர், அவர்கள் பேர்கொண்ட பார்ப்பார்(ஆரியப் பார்ப்பார்) அவர்கள் திருக்கோவில் பூசை செய்யும் தக்கவராகார். அவர்களைக் கொண்டு பூசை செய்வித்தால் தீமைகளைப் போர் செய்தகற்றும் வேந்தர்க்கு நீங்காக் கொடுநோய்கள் வீங்கும்.முறை சேர் திருநாட்டில் வற்கடமாகிய பஞ்சமும் உண்டாகும். //

      இந்த உரையில், வெளியில் இருந்து தமிழகம் வந்த ஆரியப் பார்ப்பனர் தமிழகப் பார்ப்பார்களைப் போல பார்ப்பார் என்ற பெயரை வைத்துக் கொண்டார்கள், எனவே பேர் கொண்ட பார்ப்பார் என்றால் ஆரியப் பார்ப்பனர் என்கிறார் உரை ஆசிரியர், கழகப் புலவர்,சித்தாந்தபண்டிதர் திரு.ப.இராமநாத பிள்ளை அவர்கள்..

      திருமந்திரத்தில் அந்தணர் ஒழுக்கம் (முதல் தந்திரம்) என்பதாக 14 பதிகங்களை பாடியிருக்கிறார் திருமூலர்..:

      1. அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
      செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
      தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
      சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.

      3. காயத் திரியே கருதுசா வித்திரி
      ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி
      நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய்
      மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.

      7. நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
      நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
      நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
      நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

      8. சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
      ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
      பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
      பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே.

      10. மறையோ ரவரே மறையவ ரானால்
      மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
      குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்
      றறிவார் மறைதெரிந் தந்தண ராமே.

      11. அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
      சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
      நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
      அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே.

      – என்றவாறு, அந்தணர் செய்பவை-செய்யத் தகாதவை எவை எவை என்று பாடியிருக்கிறார்..

      இவ்வொழுக்கத்தில் நில்லாத, அதினின்று வழுவிய பார்ப்பார் பிறப்பால் மட்டுமே வெறும் பெயர் கொண்ட பார்ப்பார் என்பதுதான் திருமூலர் கூறவருவது..

      திருக்கோவிற் குற்றம் (இரண்டாம் தந்திரம்) என்ற தலைப்பில் 5ம் பதிகமாக வருவதுதான் நீங்கள் காட்டும் ‘பேர் கொண்ட பார்ப்பார்’ என்ற பதிகம்.. :

      1. தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
      ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
      சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
      காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.
      2. கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்
      வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
      முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
      வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.
      3. ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
      போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
      கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
      சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.
      4. முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
      மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
      கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
      என்னரு நந்தி எடுத்துரைத் தானே.
      5. பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
      போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
      பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
      சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

      5ம் பதிகத்தின் பொழிப்புரை :

      ”பிறப்புப் பற்றிப் பலராலும் சொல்லப்படுகின்ற `பார்ப்பான்` என்னும் பெயரைமட்டும் பெற்றுச் சிவபிரானிடத்து அன்பும், சிவாகம அறிவும், ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக் கோயிலில் சிவபெருமானைப் பிறர் பொருட்டு வழிபடுவானாயின், அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும், வெளி நாட்டுப் போர்களும் விளைதலோடு, அந்நாட்டில் கொடிய நோய் களும், வயல்கள் வன்னிலங்களாய் விளைவில்லாது பஞ்சமும் உள வாகும் என்று எங்கள் திருமரபின் முதல்வராம் சிறப்புப் பொருந்திய நந்திபெருமான் எங்கட்கு ஆகமங்களை ஆய்ந்துரைத் தருளினார்.

      குறிப்புரை :

      “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்“(குறள், 134) எனவும், “அந்தணர் நூல்“ (குறள், 543) எனவும் கூறியவாற்றால், வேதம், `அரசரும், வணிகரும்` என்னும் ஏனையிருவர்க்கும் பொதுமையின் உரியதாயினும், அந்தணர்க்கே சிறந்ததாதல் அறியப்படும். படவே, `வேதம் ஓதுதலைத் தொழிலாக உடையோரே அந்தணர்` என்பதும் போதரும்.
      திருவள்ளுவர், “பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்“ (குறள், 134) என்று ஓதுதலானும், பிறப்புப் பற்றிவரும் பெயரைப் பெறாமல், வேதாகமங்களை ஓதும் தொழிலாகிய சிறப்பை மட்டும் பெற்ற அந்தணன் சிவபிரானைப் பிறர் பொருட்டு அர்ச்சித்தலை இங்கு நாயனார் விலக்காமையானும் பிறப்பைவிடச் சிறப்பே அர்ச்சனைக்கு யாண்டும் வேண்டப்படுதல் விளங்கும்…….”

      http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10219&padhi=%20&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

      *********

      // இன்று தாழ்த்தப்பட்ட சாதியாக்கப்பட்டிருக்கும் பறையர்கள் ஒருகாலத்தில் பூணூல் அணிந்து பூசை செய்தவர்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது ஞானவெட்டியார் பாடல்.

      “முந்திப் பிறந்தவன் நான்
      முதல் பூணூல் தரித்தவன் நான்
      சங்குப் பறையன் நான்
      சாதியில் மூத்தவன் நான்” //

      நீங்கள் பின்னூட்டம் 14.1.2-ல் கொடுத்த விளக்கத்தில் பூணூல் அணிவது ஆரியப் பார்ப்பான் வழக்கம் என்றீர்கள்..:
      “பார்ப்பான் என்ற சொல் ஆலயத்தைப் பார்த்துக் கொள்வோரைக் குறிக்கிறது. ஆரம்பத்தில் ஆலமரங்களுக்குக் கீழுள்ள ஆலயங்களைப் பார்த்துக் கொள்வோர் பார்ப்பான் என்றழைக்கப்பட்டனர். தமிழகத்தில் பெருங்கற்றளிகள் கட்டப்படமுன்னர் மரங்களின் கீழ் அதிலும் பெரிய ஆலமரங்களின் கீழ் தான் தமிழர்களின் கடவுள் வழிபாடு தொடங்கியது, ஆலமரத்திலிருந்து உருவாகிய சொல்லே ஆலயம். ஆலமர் கடவுள் என்பது சிவனுக்குப் பெயர். அதனால் தான் கல்லால மரத்தின் கீழ் சிவபெருமான் தென்முகக்கடவுளாக வீற்றிருப்பதாகக் கூறுகிறது தமிழர் சைவம். ஆதியில் அந்த ஆலமரத்தடிக் கடவுளைப் பார்த்துக் கொண்ட ஆதித்தமிழன் தான் உண்மையான பார்ப்பானே தவிர வடக்கிலிருந்து வந்த பூணூலணிந்தபூசாரிகளல்ல.”

      இப்போது பூணூல் அணியும் வழக்கு தமிழகத்தில் இருந்தது, அணிந்திருந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்வது குறித்து மகிழ்சி..!

      // இப்பாடலில், சாக்கையர்கள் ’நால்வகை மறையோர்’ என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஊர் பறையூர் என்பதனால், இவர்கள் பறையர் ஆகின்றனர். நால்வகை வேதங்களையும் பாடி ஆடும் தொழிலில் பறையர் இருந்தனர் என்பதும், அவர்களுக்கு மறையோர் எனப் பட்டம் சூட்டப்பட்டதும் கவனிக்கத்தக்கது. அதாவது சிலப்பதிகாரத்தில் மறையோர் என்பது ஆரியப் பார்ப்பனர்களைக் மட்டும் குறிக்கவில்லை. //

      பறையூரில் இருந்ததால் நால்வகை மறையோர் பறையர் என்றால் அவர்கள் ஓதியது ஆரிய நால்வகை மறையா அல்லது நீங்கள் வேறுபடுத்திக் கூறும் தமிழ் நான்மறையா….?!!! அவ்வூரைச் சேர்ந்த சாக்கைக் கூத்தன் பறையரா அல்லது கூத்தர் என்ற தனிக்குலமா..?!

      ”பார்த்தரு நால்வகை மறையோர் பறையூர் – பகுத்தலரிய நான்கு மறைகளையுடைய அந்தணரது பறையூர்க்கண் உளனாகிய, கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து – கூத்தச் சாக்கையன் ஆடுதலானே மகிழ்வுற்று, அவன் ஏத்தி நீங்க – அச் சாக்கையன் தன்னைப் போற்றி நீங்கியவளவிலே, இருநிலம் ஆள்வோன் வேத்து இயன் மண்டப மேவிய பின்னர் – பெரிய நிலத்தினையாளுங் குட்டுவன் அரசிருப்பாய பேரோலக்க மண்டபத்தினை அடைந்தபின்;

      பார்த்தல் – பகுத்தல். கூத்தச் சாக்கையன் – கூத்து நிகழ்த்தும் சாக்கையன். சாக்கையன் கூத்தாடுந் தொழிலுடைய ஓர் குலத்தினன். அவள்தன்னுடன் ஆள்வோன் ஏறி மகிழ்ந்து மண்டபமேவிய பின்னர் என முடிக்க. ”

      http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=3000&subid=3000021

      ********

      // எவ்வாறு ஆரியப்பார்ப்பான்கள் தமிழ்மாமுது பார்ப்பான்களின் (அதாவது வள்ளுவர்களின்) தொழிலில் பங்கு போட்டுக் கொண்டார்களே அதே போல் செந்தமிழ்ப்பார்ப்பான்களும் ஆரியர்களின் நான்கு மறைகளையும் கற்று, அவர்களின் சடங்குகளையும் செய்தார்கள் என்கிறது “தமிழர் மரபும், திராவிட அவதூறும்” என்ற கட்டுரை. //

      அப்படி என்றால் பார்ப்பனர்களில் ஆரியப்பார்ப்பான்,செந்தமிழ்ப்பார்ப்பான் என்று பேதம் பார்ப்பது ஏன்..?! பார்ப்பனர்களில் பலரும் பல வண்ணங்களில் இருப்பதால் ஆரிய-தமிழ் கலப்பு பார்ப்பனர் மட்டத்திலேயே நிகழ்ந்துவிட்டது எனலாமா..?!

      // “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
      தீவலம் செய்வது காண்பார்கண் நோன்புஎன்னை.

      இந்த சிலப்பதிகார வரிகளின் பொருள்:

      மாமுது பார்ப்பான் – மிகப்பழங்காலந்தொட்டு கோயில் காரியங்கள், குறிசொல்வது, கணியம் பார்ப்பது, சவச்சடங்குகள் செய்வது முதலியவற்றைக் கவனித்துவந்தபழங்குடியினரும் பிற வேலைக்காரர்களும். இவர்கள் தமிழர்கள். வடக்கிலிருந்தோ வெளி நாடுகளிலிருந்தோ வந்தோரல்லர். (எந்தக் குடியினரும் இவ்வேலையில் அமரலாம், சங்ககாலத்திலே. மணமுறைக் கட்டுப்பாடுகள் இல்லை. காதல் திருமணங்கள் நடைபெற்றன.மணக்கொடைமுறை (வரதட்சிணை) இல்லை)
      இது மாப்புதுப் பார்ப்பான் என்று வந்திருந்தால் புத்தேளிரைக் குறிக்கும், புதுப்பார்ப்பான் வெளியிலிருந்து வந்து பார்ப்பு வேலைகளில் அமர்ந்தவன். //

      இது நீங்கள் ஏற்கனவே கூறியதுதான்.. தீவலம் என்பது என்ன என இப்போதும் தவிர்த்திருக்கிறீர்கள்..

      “தமிழர் மரபும், திராவிட அவதூறும்” என்ற கட்டுரையில் திரு.ம.செந்தமிழன், குறிஞ்சிக் கலியில் தலைவி ‘முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து’, ‘ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
      வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான்’ என குறிப்பிடுவது ஆரியப் பார்ப்பனக் கிழவன் ஒருவனை என்கிறார் எனத் தெரிகிறது.. மேற்படி ‘முது பார்ப்பான்’ யாரைக் குறிக்கிறது என்று தங்களிடம் விளக்கம் கேட்கமாட்டேன்..! நல்லன செய்யும் ‘முது பார்ப்பான்’ செந்தமிழ்ப் பார்ப்பான்; அல்லன செய்யும் ‘முது பார்ப்பான்’ புதுப்பார்ப்பான் என்னும் ஆரியப் பார்ப்பான் என்று ஒன்றரைப் பக்கத்துக்கு விளக்கம் கொடுப்பீர்கள்..

  31. // வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
    வளை களைந் தொழிந்த கொழுந்தி னன்ன //

    என்னிடம் உள்ள உரை நூல் (வர்த்தமான் பதிப்பகம்) “வேளாப் பார்ப்பான்” என்பதற்கு “வேள்வி செய்யாத பார்ப்பான்” என பொருள் தருகிறது. சங்க கால பார்ப்பனர்களில் வேள்வி செய்வதை கைவிட்டு வேறு தொழில் மேற்கொள்வோர் இருந்தனர் என்றும், இங்கே சங்கு அறுத்து வளைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்ட பார்ப்பனன் ஒருவன் குறிப்பிடப்படுகிறான் என விளக்கவுரை தருகிறது.

    • //என்னிடம் உள்ள உரை நூல் (வர்த்தமான் பதிப்பகம்) “வேளாப் பார்ப்பான்” என்பதற்கு “வேள்வி செய்யாத பார்ப்பான்” என பொருள் தருகிறது//

      சொ – ள்.) 1-5. வேளாப் பார்ப்பான் – யாகம் பண்ணாத ஊர்ப்பார்ப்பான்,

      வேளாப்பார்ப்பான் என்றால் யாகம் பண்ணாத ஊர்ப்பார்ப்பான் என்கிறது http://www.tamilvu.com. அதாவது ஆரிய வேதங்களில் குறிப்பிடப்படும் யாகங்களைப் பண்ணாத ஊர்ப்பார்ப்பான்.

      ஆரியப்பார்ப்பான் எவனையும் ஊர்ப்பார்ப்பான் என ஒரு முட்டாள் கூட அழைக்க மாட்டான் என்பது பால்குடி மறவாத பாலகனுக்குக் கூடத் தெரியும். 🙂

      http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=64&y=71&bk=26&z=l1270930.htm

      • // யாகம் பண்ணாத ஊர்ப்பார்ப்பான் என்கிறது”ஊர்ப்பார்ப்பான்” என்ற வார்த்தை அங்கே எங்கிருக்கிறது? “வேளா” என்பதற்கு “வேள்வி செய்வதை கைவிட்டவன்” எனப் பொருளா? அல்லது “வேள்வி செய்யும் பார்ப்பான்”, “வேள்வி செய்யாத பார்ப்பான்” என இரு பிரிவினர் இருந்து, இதில் இரண்டாவது வகையினரை குறிப்பிடுகிறதா? என்னிடம் உள்ள உரை நூல், முதல் பொருளை சொல்கின்றது. இரண்டாவது பொருளைக் கொண்டால், சங்க காலத்திலேயே வேள்வி செய்யும் பார்ப்பனர்களும் தமிழகத்தில் இருந்தனர் எனக் கொள்ளலாமா?

        tamilvu பல்வேறு உரைகளை ஒப்பு நோக்கி எழுதியதாக சொல்கிறது. என்னென்ன உரைநூல்கள் என குறி ப்பிட்டிருக்கிரார்களா?

        • நான் ஒருவார விடுமுறையில் செல்வதால், என்னால் பதிலளிக்க முடியாமல் போகலாம் மன்னிக்கவும்.

    • // ஆரியப்பார்ப்பான் எவனையும் ஊர்ப்பார்ப்பான் என ஒரு முட்டாள் கூட அழைக்க மாட்டான் என்பது பால்குடி மறவாத பாலகனுக்குக் கூடத் தெரியும் //

      “தமிழர் திருமணம்” என்ற நூலில் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், ஒவ்வொரு ஊரிலும் உயர்குடியோர் சடங்குகளை நடத்தி வைக்க அமர்த்தப்பட்ட பிராமணர்கள் “ஊர்ப்பார்ப்பான்” என அழைக்கப்பட்டதாக கூறுகிறார்.

      “பிராமணர் முதலாவது சிறு தொகையினராயிருந்ததினால், அரசரிடத்துமட்டும் ஆரியக்கரணமும் சடங்கும் ஆற்றிவந்தனர். பின்பு சற்றுத் தொகைமிக்கபின், பெருஞ்செல்வரான பெருவணிகர்க்கும் ஆற்றிவந்தனர். அதன் பின், தொகை மிகமிகச் சிறு வணிகர்க்கும் உயர் வேளாளர்க்கும் ஆற்றத் தலைப்பட்டனர். அதனால், பெரும்பாலும் ஒவ்வொரு பேரூரிலும் ஒரு பிராமணன் குடியமர அல்லது அமர்த்தப்பட நேர்ந்தது. ஓர் ஊர்க்குப் பொதுவாயிருந்து அவ்வூரிலுள்ள உயர்ந்தோர் சடங்குகளையெல்லாம் ஆற்றி வந்த பிராமணன், ஊர்ப்பார்ப்பான் எனப்பட்டான். பிராமணன் குடியி ராத ஊர்ச் சடங்குகளை, அடுத்தவூர்ப் பார்ப்பான் வந்து செய்வது வழக்கம்”

      கீழே உள்ள நூலில் பக்கம் 25-26 இல் காண்க.
      http://www.tamilvu.org/library/lA468/html/lA468ind.htm

      ——————————————————————————

      நிற்க. நூல்களை நேரடியாக முழுதுமாக படிக்காமல், சும்மா கூகுள் துணை கொண்டு எதையாவது எடுத்துப் போடுவதை குறைத்துக்கொள்ள தோன்றுகிறது. இங்கே விவாதிக்கப்படும் பல விஷயங்கள் பற்றியும், எனக்கு முடிவான, தெளிந்த கருத்து எதுவும் இல்லை. “மறை” என்பது ரிக் முதலான வடமொழி நான்கு வேதங்களை குறிக்கும் சொல் என்று மட்டும் தோன்றுகிறது. “ஆசீவக மறை”, “பழந்தமிழ் மறை” போன்ற கோட்பாடுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் தோன்றுகிறது. ஆனால், இது பற்றியும் தெளிவாக ஒரு வாதத்தை முன்வைக்கும் அளவு எனக்கு படிப்பறிவு இல்லை என்பதும் புரிகிறது. எனவே இந்த விவாதத்தில் இருந்து விடைபெறுகிறேன். இது வரை என்னோடு பேசியமைக்கு நன்றி.

      • // ஒவ்வொரு ஊரிலும் உயர்குடியோர் சடங்குகளை நடத்தி வைக்க அமர்த்தப்பட்ட பிராமணர்கள் “ஊர்ப்பார்ப்பான்” என அழைக்கப்பட்டதாக கூறுகிறார்.//

        இக்களாத்தில் எங்களின் ஊர்ப்பிராமணராய் ஊர்ப்பார்பான் என்று சொல்கிறோம். ஏனென்றால் இப்போழ்து பிராமணர்கள் மட்டும் தான் பார்ப்பன வேலையைச் செய்கிராரகுள். அபப்டியான நிலை விஜயநகர ஆட்சியின் பின்னால் ஏற்பட்டு விட்டது. ஊர்ப்பார்பான் என சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டது, ஆரியப்பார்ப்பாங்களைத் தான் என உறுதியாகக் கொள்ள முடியாது. ஏனெனில் அக்காலத்தில் செந்தமிழ்ப்ப்பார்ப்பாண்களும் பார்ப்பனத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். ஒரு ஊரில் பறையர் குலத்தைச் சேர்ந்த வள்ளுவர் பார்ப்பானும், ஆரியப்பார்ப்பானும் இருந்திருந்தால், எந்தப் பார்ப்பனை ஊர்ப்ப்பார்ப்பன் என்று அழைத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை.

      • திரு.வேங்கடேசன்,

        நீங்கள் கூட Tamilvu. இல் நீங்கள் குறிப்பிட்ட பத்திக்கு அடுத்ததாக உள்ள ஆரியக்கரணத்தால் விளைந்த தீமைகள் என்னும் பத்தியை நீங்கள் படிக்கவில்லை போல் தெரிகிறது.

        >>>(2) தமிழப் பார்ப்பாருக்குப் பிழைப்பின்மை:

        பிராமணப் புரோகிதர், உயர்ந்தோரின் அல்லது உயர்த்தப் பட்டோரின், எல்லா மதவியற் சடங்குளையும் ஆற்றும் தகுதியை முற்றூட்டாகப் பெற்றுவிட்டதினால், தமிழப்பார்ப்பார் பலர்க்குப் பிழைப்பில்லாது போயிற்று.<<<

        என்னுடைய கருத்து என்னவென்றால், பழந்தமிழிலக்கியங்களில் பார்ப்பார்கள் எனக் குறிப்பிடப்படுவது ஆரியப்பார்ப்பான்களை மட்டும் அல்ல என்பது தான். நீங்கள் குறிப்பிட்ட இணைப்பிலேயே “தமிழப்பார்ப்பார்கள்” இருந்தார்கள் என்பதற்கு ஆதாரமுண்டு, அது தான் என்னுடைய வாதமும் கூட. 🙂

        http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=192&pno=26

  32. பழந்தமிழிலக்கியங்களில் பார்ப்பனர்கள் எனக் குறிப்பிடப்படுவது பிராமணர்கள்/ஆரியப்பார்ப்பனர்களை மட்டுமல்ல என்பது தான் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய வாதம், தமிழர்களிலும் பார்ப்பனர்கள் இருந்தார்கள் என்பதை இப்பொழுது ஒப்புக் கொண்டதைப் போல், ஆரம்பத்திலேயே நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிடிக்காமல் ஒப்புக் கொண்டிருந்தால், நானும் நீங்களும் நேரத்தை வீணாக்கி இருக்கத் தேவையில்லை. மாமுதுபார்ப்பான் என சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பார்ப்பான், ஆரியப்பார்ப்பானாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அக்காலத்தில் மட்டுமல்ல, அதற்குப் பின்பும் கூட செந்தமிழ்ப்பார்ப்பான்கள் (வேளாப்பார்ப்பான், ஊர்ப்பார்ப்பான் etc.) பார்ப்பார் தொழிலைச் செய்து வந்துள்ளனர்.

    பேர் கொண்ட பார்ப்பார் என்றால் ஆரியப் பார்ப்பார் என்பது குறிப்பிட்ட திருமந்திரத்துக்கு ஏற்றுக் கொண்ட பொருளாகையால். தான் http://www.Tamilvu.org அவரது உரையை வெளியிட்டுள்ளதென் நான் நம்புகிறேன். நீங்கள் உரை ஆசிரியர், கழகப் புலவர்,சித்தாந்தபண்டிதர் திரு.ப.இராமநாத பிள்ளையின் உரையை ஏற்றுக் கொள்ளாதது போல், நானும், http://www.thevaram.org ஐ பிராமணச்சார்புள்ள இணையத்தளமென அதிலுள்ளஉரையை அல்லது விளக்கத்தை என்று ஏற்றுக் கொள்ள மறுக்கலாம் என்பதை நீங்கள் உணரத் தவறி விட்டீர்கள் போல் தெரிகிறது. தமிழிலக்கியங்களில் பார்ப்பான்கள் என்பது ஆரியப் பிராமணரை மட்டும் குறிக்கவில்லை, அந்த விடயம் விவாதத்துக்குரியது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடிருக்க முடியாது.

    //நீங்கள் பின்னூட்டம் 14.1.2-ல் கொடுத்த விளக்கத்தில் பூணூல் அணிவது ஆரியப் பார்ப்பான் வழக்கம் என்றீர்கள்..: இப்போது பூணூல் அணியும் வழக்கு தமிழகத்தில் இருந்தது, அணிந்திருந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்வது குறித்து மகிழ்சி..!///

    நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் முக்கிய விடயம் பூணூலைப் பற்றியதல்ல, அத்துடன் இக்காலத்தில் பூணூல் பார்ப்பனர்கள் என்றால் குறிப்பாக ஆரியப் பார்ப்பனரைத் தான் குறிக்கும் என்பதாலும் தான் நான் விவரமாக அந்த விடயத்தைப் பற்றிப் பேச விழையவில்லை. பூணூல் அணியும் வழக்கம் தமிழ்நாட்டில் இன்றும் சில தமிழ்ச்சாதியினரிடம் கூட காணப்படுகிறது என்பதும் எனக்குத் தெரியும். அதைத் தவிர இலங்கையில் பல பழமையான சிங்கள பெளத்த அரசர்களின் சிலைகளின் மார்பில் கூட பூணூல் போன்ற ஆபரணம் காணப்படுகிறது. அதனால், பூணூல் அக்காலத்தில் சமுதாயத்தில் அந்தஸ்தின் அல்லது அறிவின் அடையாளமாக இருந்திருக்க வேண்டியதே அல்லாமல், ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளமல்ல என்பது தெரிகிறது.

    //பறையூரில் இருந்ததால் நால்வகை மறையோர் பறையர் என்றால் அவர்கள் ஓதியது ஆரிய நால்வகை மறையா அல்லது நீங்கள் வேறுபடுத்திக் கூறும் தமிழ் நான்மறையா….?!!! அவ்வூரைச் சேர்ந்த சாக்கைக் கூத்தன் பறையரா அல்லது கூத்தர் என்ற தனிக்குலமா..?!///

    நான்மறை என்பதற்குப் பதிலாக நால்வகை மறையோர் எனக்குறிப்பிடப்ப்பிடுவதால் அது ஆரியரின் நான்கு வேதங்களாக இருக்கலாம் என்பதற்கு அந்தக் கட்டுரையாசிரியரே “இதேவேளை, ஆரிய பார்ப்பனர் வாய்வழியாக ஓதி வந்த நான்கு ஆரியமறைகளைத் தமிழரும் கற்றுத் தேர்ந்தனர்.” என்று விளக்கம் கொடுத்திருப்பதை நீங்கள் படிக்கவில்லையா? மேலும் “பறையர்கள் வேதம் கற்றதைத் தடுக்கும் துணிவு அக்காலத்தில் ஆரிய பார்ப்பனர்களுக்கு இல்லை. மேலும், தமிழ் அரசர்களும் பறையர் உள்ளிட்ட தமிழ்க் குலங்களின் காவலர்களாகவும் இருந்தனர். சேரன் செங்குட்டுவன் முன்னால் பறையூர்க் கலைஞர்களின் கூத்து நிகழ்த்தப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். “ என்கிறார் கட்டுரையாசிரியர் ம.செந்தமிழன்.

    ஆனால் நால்வகை மறையோர் என்பது நான்கு மறைகளையல்ல, நான்கு (வகை) தமிழ்ச் சமூகப் பிரிவுகளைச் (சாதியல்ல) சேர்ந்த மறையோர் (உதாரணமாக பறையரும், கூத்தரும், இன்னும் இரண்டும் குழுவினர்) களையும் குறிப்பிட்டிருக்கலாம் என்பது எனது கருத்தாகும்.
    பறையூரில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் பறையராக இருந்திருப்பார்கள் என்பதை பச்சைக் குழந்தை கூட ஒப்புக் கொள்ளும், ஆனால் கூத்தர்களும் வாழ்ந்திருக்கலாம், என்னுடைய வாதம் என்னவென்றால் “பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க்கூத்தச் சாக்கைய னாடலின் மகிழ்ந்தவன்” என அக்காலத்திலேயே ஆரியப்பிராமணரல்லாத, தமிழ்க்குடிகளாகிய கூத்தர்கள் அல்லது பறையர்களையும் மறையோர் என அழைக்கிறது சிலப்பதிகாரம் என்பதாகும். சங்ககாலத்திலேயே ஆரியப்பார்ப்பனர்கள் தமிழ்மண்ணுக்கு பிழைப்புத் தேடி வந்து விட்டனர் என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை.

    //‘ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான்’ என குறிப்பிடுவது ஆரியப் பார்ப்பனக் கிழவன் ஒருவனை என்கிறார் எனத் தெரிகிறது.. ///

    முது அல்லது முதுமை என்பது வயதானவர்களை அல்லது கிழவன்/கிழவிகளைத் தான் சங்ககாலத்தில் மட்டுமல்ல, இக்காலத்திலும் குறிக்கும். தமிழர்களிலும் பார்ப்பான்கள் இருந்தனர் என்பதில் உங்களுக்கு இன்னும் ஐயமிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல, அரைத்த மாவையே அரைக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. அப்படிச் செய்தால் நாங்கள் இந்த விவாதத்தை அடுத்த ஆண்டும் தொடர்ந்து நடத்தலாம். ஒரு முதுமையடைந்த தமிழ்ப்பார்ப்பனைக் கூடத் தான் முதுபார்ப்பான் எனக் குறிப்பிடலாம். அதனால் முதுபார்ப்பான் என்பது ஆரியப் பார்ப்பனக் கிழவனைத் தான் குறிக்கும் என்பது நகைப்புக்குரியது.

    மேலும், நாங்கள் பேசிக் கொண்டிருப்பது மாமுதுபார்ப்பானைப் பற்றியே தவிர முதுபார்ப்பானைப் பற்றியல்ல. ‘மாமுது’ என்பது இங்கு மிகவும் பழமையை, அதாவது அந்த மண்ணின் மைந்தர்களைக் குறிக்கிறது. அதாவது புதிதாக வந்தாக, பிறமண்ணிலிருந்து வந்த பிறமண்ணர் அல்லது பிராமணர்களாகிய வந்தேறிப் பார்ப்பான்களிடமிருந்து, தமிழ் மண்ணில் காலம் காலமாக பார்ப்பாராக இருந்த செந்தமிழ்ப் பார்ப்பார்களை அடையாளப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட அடைமொழி தான் “மாமுது” என்பது எனது கருத்தாகும்.

    //இது நீங்கள் ஏற்கனவே கூறியதுதான்.. தீவலம் என்பது என்ன என இப்போதும் தவிர்த்திருக்கிறீர்கள்..///

    சரியான அவசரக்குடுக்கையாக இருக்கிறீர்கள். முதல் வரிக்கு விளக்கம் அளித்த பின்னர், இரண்டாவது வரிக்கு விளக்கம் அளிக்கலாம் என நினைத்தேனே தவிர, பார்ப்பனீயத்தைக் கண்டு பயப்படுவதோ அல்லது அதை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதோ, ஈழத்தமிழர்களது வழக்கமல்ல. 🙂

    • // பழந்தமிழிலக்கியங்களில் பார்ப்பனர்கள் எனக் குறிப்பிடப்படுவது பிராமணர்கள்/ஆரியப்பார்ப்பனர்களை மட்டுமல்ல என்பது தான் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய வாதம், தமிழர்களிலும் பார்ப்பனர்கள் இருந்தார்கள் என்பதை இப்பொழுது ஒப்புக் கொண்டதைப் போல், ஆரம்பத்திலேயே நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிடிக்காமல் ஒப்புக் கொண்டிருந்தால், நானும் நீங்களும் நேரத்தை வீணாக்கி இருக்கத் தேவையில்லை. மாமுதுபார்ப்பான் என சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பார்ப்பான், ஆரியப்பார்ப்பானாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அக்காலத்தில் மட்டுமல்ல, அதற்குப் பின்பும் கூட செந்தமிழ்ப்பார்ப்பான்கள் (வேளாப்பார்ப்பான், ஊர்ப்பார்ப்பான் etc.) பார்ப்பார் தொழிலைச் செய்து வந்துள்ளனர். //

      சிலப்பதிகாரத்தில் வரும் மாமுது பார்ப்பான் ஆரியப் பார்ப்பான் அல்ல சமணப் பார்ப்பான் என்று என்று நீங்கள் தீர்ப்பளித்தது சரிதானா என்பதில் ஆரம்பித்ததுதான் இந்த விவாதம்.. ஆறுமுக நாவலர் கண்ணகியை ஜைன மத செட்டிச்சி என்று கூறியிருக்கிறார், ‘அதனால்’ மாமுது பார்ப்பான் ஒரு மாபுதுப் பார்ப்பான் அல்ல, ஒரு ஆதிதமிழ் சமணப்பார்ப்பான்; மறை என்பது ஆரிய நால் மறையல்ல, தமிழ் நான்மறை; தீ வலம் வருவது வேள்வித்தீயல்ல, வேறு ஏதோ ஒரு தீ என்றெல்லாம் தீர்ப்பில் கூறியிருந்தீர்கள்.. இப்போது செந்தமிழ் பார்ப்பார்களும், ‘ஆரியப் பார்ப்பான்களும்’ பார்ப்பனத் தொழிலை செய்தார்கள் என்று நீங்கள் தீர்ப்பைத் திருத்திக் கூறுமளவுக்கு இத்தனை ஆதாரங்களையும், வாதங்களையும் அளிக்க வேண்டியிருந்தது எனக்கும் வெங்கடேசன் அவர்களுக்கும்.. உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கியதற்கு மன்னிக்கவும்..

      // ஆனால் நால்வகை மறையோர் என்பது நான்கு மறைகளையல்ல, நான்கு (வகை) தமிழ்ச் சமூகப் பிரிவுகளைச் (சாதியல்ல) சேர்ந்த மறையோர் (உதாரணமாக பறையரும், கூத்தரும், இன்னும் இரண்டும் குழுவினர்) களையும் குறிப்பிட்டிருக்கலாம் என்பது எனது கருத்தாகும். //

      தமிழ் நான்மறை என்றால் ஆரிய 4 மறையல்ல, தமிழர்களின் மூல மறை என்றீர்கள்.. இப்போது தெளிவாக நால்வகை மறையோர் என்று செய்யுள் கூறுவதை, மறை ஓதும் நால் வகை தமிழ் பிரிவினர் (சாதியல்ல?!) என்கிறீர்கள்.. பறையர்தான் பழைய பார்ப்பார் என்று கூறிய நீங்கள் இப்போது கூடுதலாக கூத்தரும் இன்னும் 2 குழுவினரும் பார்ப்பார் என்கிறீர்கள்.. இங்கும் ‘ஆரியப் பார்ப்பார்களை’ மறையோர் என்று ஏற்றுக் கொள்ளாமல் மறுப்பதற்காகவே முதலில் பறையர்தான் பார்ப்பார் என்ற நீங்கள் இப்போது கூடுதலாக கூத்தர்+2 என்று கூட்டம் கூட்டுகிறீர்கள் என்பது புரிகிறது..

  33. //எனக்கு எப்படித் தெரியும்…?!//-அம்பி உங்களுக்கு எதுவும் தெரியாது.பாவம் நீங்கள்.வேத கால நாகரிகத்தின் காலம் தெரியாது,சங்க காலநாகரித்தின் காலம் தெரியாது,ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தார்களா இல்லையா என்று தெரியாது ஆனால் சங்க இலக்கியத்திலிருந்து வைரமுத்து பாட்டு வரை பானா என்று வந்தாலே அது ஆரிய பார்ப்பனரைதான் குறிக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.இதில் வியாசரை குறை கூறுகிறீர்கள்.நீங்கள் குட்டிக்கரணம் எல்லாம் அடிக்கவில்லை.தலைகீழாகத்தான் நடக்கிறீர்கள்.காலால் நடந்து விவாதத்தை தொடருங்கள்.

  34. உலகின் பழமையான குடிகள் அனைவரிடமும் தீயை வணங்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. அவ்வாறே உலகின் பழமையான மொழிகளிலொன்றைப் பேசும், பழமையான நாகரீகங்களிலொன்றைக் கொண்ட தமிழர்கள் மட்டும் தீயைக் கடவுளாக வணங்கவில்லை, ஆனால் எங்கிருந்தோ அவர்களிடம் பிழைப்பு தேடி வந்தவர்கள் தான் தமிழர்களுக்கு எப்படி தீயை வலம் வந்து வணங்குவது என்பதைக் கற்பித்துக் கொடுத்தார்கள் என்று சிலர் வாதாட முனைவது மிகவும் வேடிக்கையானது.

    உதாரணமாக தெய்வம் என்ற சொல்லை சமக்கிருதத்திலிருந்து தமிழ் இரவல் வாங்கியதாக சமக்கிருதவாதிகளால் கதை பரப்பப்பட்டது ஆனால் தீ என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து தான் தெய்வம் என்ற சொல் உருவாகியது எனபதை சொல்லிலக்கண வழியாக நிரூபித்தார் தேவநேயப்பாவாணர். ஆரம்பத்தில் நெருபுக் கடவுளை தெய்வம் என அழைத்தனர், நாளடைவில் அது பொதுவாக கடவுளைக் குறிப்பதாகியது. தீ என்பதன் தமிழ் வேர்ச்சொல் தேய். பண்டைக் காலத்தில் இரண்டு காய்ந்த மரக்கட்டைகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்து தீ உருவாக்கப்பட்டது. பழந் தமிழ்நாட்டில்காய்ந்த மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று காற்றில் உராசுவதால் காட்டுத்தீ உண்டாகியது.

    ஆரியப்பார்ப்பனர்கள் தமிழ்மண்ணில் வேரூன்றி, பண்டைத் தமிழர்களின் தெய்வங்களை, ஆரிய வேதகாலக் கடவுளர்களுடன் கலந்து, இந்துமதம் என்னும் இக்காலச் சாம்பாரை சமைக்கு முன்பாகவே தமிழர்களிடம் தீயை வணங்கும் சமய மரபு மட்டுமன்றி சூரியன், சந்திரன், மலை, போன்ற இயற்கையையும், அணங்கு, பாவை,போன்ற சிறு தெய்வங்களையும், ஆட்டுக்கடா, மாடு, பல்லி, பாம்பு என்பவற்றையும் கூட வணங்கும் சமயமரபுகளைக் (cults)கூடக் கொண்டிருந்தனர்.

    பழந்தமிழ் இலக்கியங்களில் நெருப்பைக்( குறிப்பிடும் பல பெயர்கள் உள்ளன. தீ, எரி, தெறல் (fire-heat), கொள்ளி, கனல், கனலி, சுடர், தழல், அழல், ஞேலி(மூங்கிலால் வரும் நெருப்பு), ஈமம், விளக்கு, அலர், கதிர் ( என்பன நேரடியாக தீயைக் குறிக்கும் பெயர்கள். இதை விட தீயைக் குறிக்கும் பெயர்களைக் காந்தழ், ஆம்பல், அலரி, வேங்கை போன்ற மலர்கள் மரங்களுக்கும் கூட அவற்றின் நிறம், தோற்றம் என்பவற்றின் அடிப்படையில் இட்டிருக்கின்றனர். இதிலிருந்து தீயும், தீயை வழிபாடும் சமய மரபும் ஆரியப்பார்ப்பனர்களின் வருகையின் முன்பே ஆதித் தமிழர்களிடம் காணப்பட்டது என்பதை நாம் அறியலாம். அத்துடன் உலகத்தையே இயக்கும் பசியைக் கூடத் வயிற்றுத்தீ என அழைத்தனர் சங்க காலத் தமிழர்கள் என்றால் எந்தளவுக்கு தீக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதை நாம் உணரலாம்.

    குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
    ஆள் அன்று என்று வாளில் தப்பார்
    தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
    கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
    மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
    தாம் இரந்து உண்ணும் அளவை
    ஈன்மரோ இவ் உலகத்தானே?

    அது மட்டுமன்றி, பழந்தமிழர்கள் தீயை வணங்கினர் என்பதற்கு சங்கப்பாடல்களிலேயே ஆதாரங்கள் உண்டு. திருமாலைத் (தமிழர்களின் நெடியோனை) தீயினுள் தெறல் நீ, பூவினுள் நாற்றம் நீஎன்கிறது பழந்தமிழர்களின் பரிபாடல். அத்துடன் தெறல் அரும் கடவுள், அரும் தெறல் மரபின் கடவுள், என்றெல்லாம் தீ, வெப்பம், அழிவு, அருள் என்பவற்றைக் குறிக்கும் வகையில் கடவுளை தீயுடன் தொடர்பு படுத்தி பழந்தமிழர்கள் வழிபாடு வந்தனர் என்பதைக் காண்கிறோம்.

    தீயின் முன்னால் தலைவன் தலைவியைக் கைவிடேன் என உறுதி மொழி எடுக்கும் வழக்கம் நக்கீரர் காலத்திலேயே உண்டென்பதை பின்வரும் பாடல் குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது.
    வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. – நக்கீரர், குறுந்தொகை

    புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
    வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
    தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
    வந்தன்று-வாழி, தோழி!-நாமும்
    நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
    ”தான் மணந்தனையம்” என விடுகம் தூதே.

    “தலைவன் பரத்தையிற் பிரிந்தானாக அவன் அன்பிலனென் றெண்ணிய தலைவியின்பால் அவன் விடுத்த தூது, “தலைவன் தலை நாளன்ன அன்பினன்; அவனை ஏற்றருள வேண்டும்’’ என்று கூறியது கேட்ட அவள், “அவன் அத்தகையனாயின் நாமும் மணநாளின்கண் வைத்திருந்த அன்பிற்குறைவின்றியுள்ளேமென்று தூது விடுவேம்” என்று தோழிக்குக் கூறியது இது.

    தீதில் நெஞ்சத்துக்கிளவியென்றது தலைவன் நெஞ்சாற் பிழைப்பிலனென்று தலைவி உணர்ந்தமையைப் புலப்படுத்தியது. நாமும்: உம்மை இறந்தது தழீஇயது. தலைவன் மணந்த காலத்தில் நிறைந்த அன்போடி ருந்தவாறே இப்பொழுதும் குறைவின்றி யிருப்பேமென்றமையின் அவனை ஏற்றுக்கோடற் குறிப்புப் பெறப்பட்டது. மணந்த காலத்தை நினைவு கூர்ந்த தலைவிக்கு அந்நினைவின் மிகுதியே நெய்பெய் தீயை உவமை கூறச் செய்தது.”

    உலகில் வாழ்ந்த பழைமையான மக்கள் அனைவரையும் போன்றே பழந்தமிழர்களும் தீயை புனிதமானதாக, தெய்வமாக வணங்கினர் என்பதற்கு ஆதாரங்கள் நிறைய உண்டு, அத்துடன் பார்ப்பான்கள் என்பது சங்ககாலத்தில் மட்டுமல்ல, திருமூலர் காலத்திலும் கூட ஆரியப் பார்ப்பான்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல செந்தமிழ்ப் பார்ப்பான்களும் பார்ப்பார் தொழிலைப் பார்த்தனர் என்பதையும் நாம் அறியக் கூடியதாகவுள்ளது. அதனால் “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார்கண் நோன்புஎன்னை” எனும் இந்த சிலப்பதிகார வரிகளின் பொருள்: புதுப்பார்ப்பான்கள் அல்லது புத்தேளிர்கள் தமிழ் மண்ணுக்கு வருமுன்பு, பார்ப்பான்களாக இருந்த வள்ளுவர்களா(பறையர்)கிய மாமுதுதுபார்ப்பான் ஒருவன், தமிழர்களிடையே இருந்த தீயைக் கடவுளாக வணங்கும் வழக்கப்படி, தீவலம் செய்வித்து, திருமணத்தை நிறைவேற்றி வைத்தான் என்றும் பொருள் கொள்ளலாம்.

    மேலே குறிப்பிட்ட சிலப்பதிகார வரிகள் ஆரியப் பார்ப்பனர்களைத் தான் குறிக்கும் அதாவது ஆரியப் பார்ப்பான்கள் வடக்கிலிருந்து வந்து தமிழர்களுக்கு கலை, கலாச்சாரம, இலக்கியம் எல்லாவற்றையும் கற்பித்தார்கள், தொல்காப்பியனும், அகத்தியனும் கூட ஆரியப் பார்ப்பான்கள் தான் , சங்கப் புலவர்கள் எல்லாம் ஆரியப் பார்ப்பான்களுக்குப் பிறந்தவர்கள், அவர்கள் தான் உலகின் பழமையான குடிகளான தமிழர்களுக்கு தீயை வலம் வந்து வணங்க கற்றுக் கொடுத்தார்கள் என்பதை, இடைச் செருகல்களாலும், அவாளின் உரைகளாலும், பொருளைத் திரித்தும், இவ்வளவு நாளும் தமது இருப்பை தமிழ்மண்ணில் நிலைநாட்ட, கதை விட்டார்கள். அவர்களின் அந்தக் கதைகளை கண்மூடித்தனமாக நம்பி, நாம்தமிழர்கள், எமது முன்னோர்களின் புகழையும், பெருமையையும் அவர்களிடம் பறிகொடுக்க அல்லது பங்கு போட்டுக் கொள்ள வேண்டுமா என்பது தான் எங்களை நாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

    • ஐய்யா வியாசன் அவர்களே என்னென்மோ பழம் தமிழர்களை பற்றி எழுதறீங்களே

      பழம் தமிழர்களுடைய வானவியைல் அறிவை பற்றி தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன்.

      காலண்டரை எப்படி அமைத்தார்கள்
      கிரகணங்களை கனன்கிட்டார்களா ? எப்படி செய்தார்கள் ?

      solstice ,equinox பற்றி ஏதேனும் தெரிந்து வைத்து இருந்தார்களா ?

      இது சம்பந்தமான சுட்டிகள் ஏதேனும் கொடுத்து உதவ முடியுமா ?

      • ராமன், தமிழ்ல இருந்த சோதிடம் இங்கே இருந்து கிரேக்கத்துக்கு போச்சு அங்க இருந்த யவனாச்சாரியார் கிட்ட இருந்து வராகமித்திரர் என்ற பார்ப்பனர் கத்துகிட்டு “பிருகத் ஜாதகம்” என்ற புத்தகம் எழுதினார்.புத்தகம் முழுக்க யவனாச்சாரியாரதாங்க மேற்கோள் காட்டுறார்.கெடைக்கிற சோஸ்ய பொஸ்தகத்திலேயே அதுதான் ரொம்ப பழசாம்.தமிழ்ல இருந்த பொஸ்தக மெல்லாம் கபாட புரத்ல கடல் அடிச்சிட்டு போயிட்டுங்க.

        • பதிலுக்கு நன்றி . நீங்கள் கூறியது எதையும் நான் நம்பத் தயாராக இல்லை .

          • தமிழன பத்திய கதன்னா நம்ப மாட்டிங்களே! போகட்டும் விடுங்க ஆரியர்களின் வானவியல் அறிவ எடுத்து விடுறேன் நம்பிரிங்களான்னு பாக்கலாம்.இந்த சூரியன் இருக்காருல்லங்க அதாங்க பகல்ல வானத்துல தெரிவாரே அவருங்க, அவரு என்ன பன்னியிருக்காறு காசியப முனிவருக்கு பையனா பொறந்து கங்கை கரையில போயி தவம் பண்ணியிருக்காறு, சிவன் வந்து என்னப்பா வேனும்னு கேக்க நான் கிரகம் ஆகணும்னு இவரு சொல்ல செரி ஆயிக்கோணு சோல்லிபுட்டாராம் சிவன்.அன்னைலேயிருந்து சூரியன் கிரகமாகி பூமிய?? சுத்த ஆரம்பிச்சுட்டாராம்.அதுவரைக்கும் பூமி இருளோன்டுதான் இருந்துச்சுன்னா பாத்துகங்க.இந்த சந்திரன் இருக்கார்ல அதான் நிலவு அவர பாடம் படிக்க பிரகஸ்பதிங்கர அய்யர்கிட்ட[வியாழங்க ஜுபிடரு] அனுப்பி இருக்காங்க,இவரு பொம்பள மேட்டர்ல கொஞ்சம் வீக்காம்,தாராங்கர குருவோட பொண்டாட்டிய கரெக்ட் பண்ணிட்டாராம்.இதுல ஒரு புள்ளையும் பொறந்துடுச்சாம் அதுதான் புதனாம்[மெர்குரிங்க].இந்த விசியம் குருவுக்கு தெரியாம தன் புள்ளன்னு நெனைச்சு கொஞ்சியிருக்காரு,சந்திரன் வந்து கொண்டாய்யா இது எம்புள்ளன்னு புடிங்கிகிட்டு பொய்ட்டாராம்,இந்த வானவியல் அறிவ நீங்க நம்புவிங்கனு நெனக்கிறேன்.இன்னும் நெறையா இருக்குங்க அடுத்ததுல சொல்றேன்.

    • // எங்கிருந்தோ அவர்களிடம் பிழைப்பு தேடி வந்தவர்கள் தான் தமிழர்களுக்கு எப்படி தீயை வலம் வந்து வணங்குவது என்பதைக் கற்பித்துக் கொடுத்தார்கள் என்று சிலர் வாதாட முனைவது மிகவும் வேடிக்கையானது. //

      தீயை வணங்குவதையல்ல, வேள்வித்தீயை வலம் வந்து வணங்கும் வழக்கம் ஆதி தமிழர்களுக்கு இல்லை என்று நீங்கள்தான் கூறினீர்கள்.. வாதமும், தீயா – வேள்வித்தீயா என்பது பற்றித்தான்.. அதிலும் குறிப்பாக சமணர்களுக்கு தீயை (எந்த தீயையும்) வலம் வந்து வணங்கும் வழக்கம் உண்டா என்பதைப் பற்றித்தான்..

      // ஆரியப்பார்ப்பனர்கள் தமிழ்மண்ணில் வேரூன்றி, பண்டைத் தமிழர்களின் தெய்வங்களை, ஆரிய வேதகாலக் கடவுளர்களுடன் கலந்து, இந்துமதம் என்னும் இக்காலச் சாம்பாரை சமைக்கு முன்பாகவே தமிழர்களிடம் தீயை வணங்கும் சமய மரபு மட்டுமன்றி சூரியன், சந்திரன், மலை, போன்ற இயற்கையையும், அணங்கு, பாவை,போன்ற சிறு தெய்வங்களையும், ஆட்டுக்கடா, மாடு, பல்லி, பாம்பு என்பவற்றையும் கூட வணங்கும் சமயமரபுகளைக் (cults)கூடக் கொண்டிருந்தனர். //

      பல்லி, பாச்சாவையெல்லாம் தமிழர்கள் வணங்கியதாகக் கூறுவதை என்னால் நம்பமுடியவில்லை..

      தீ, சூரியன், சந்திரன்,மலை, பாம்பு போன்றவைகளை வணங்குவது உலகம் முழுவதும் நிலவிய பழங்குடிகள் (’ஆரியர்’, தமிழர் உட்பட) வழக்கம் என்பதை மறந்துவிட்டு, ‘ஆரியர்கள்’ இந்த தெய்வங்களை தமிழர்களிடமிருந்துதான் திருடி இந்துமதத்தை சமைத்தார்கள் என்கிறீர்கள்..

      // புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
      வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
      தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
      வந்தன்று-வாழி, தோழி!-நாமும்
      நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
      ”தான் மணந்தனையம்” என விடுகம் தூதே. //

      நெய் பெய் தீயின் எதிர்கொண்டு மணத்தல் என்பது நெய் சொரிந்து (சுவாகா சொல்லி!) வளர்க்கப்படும் வேள்வித் தீ முன் மணம் செய்து கொள்தல் என்று பொருள்படும்..

      // ஆரியப் பார்ப்பான்கள் வடக்கிலிருந்து வந்து தமிழர்களுக்கு கலை, கலாச்சாரம, இலக்கியம் எல்லாவற்றையும் கற்பித்தார்கள், //

      இப்படி யார் கூறியது..?!

      // தொல்காப்பியனும், அகத்தியனும் கூட ஆரியப் பார்ப்பான்கள் தான் , //

      ஆரிய – திராவிட – தமிழ் இனவாதிகளுக்கு பெரும் சவாலாக இருப்பது இந்த இருபெரும் தொல்தமிழ் மூதோர்தான்..

      // சங்கப் புலவர்கள் எல்லாம் ஆரியப் பார்ப்பான்களுக்குப் பிறந்தவர்கள், //

      எந்தப் பார்ப்பான் வந்து உங்களிடம் இப்படிக் கூறினான்..?!

      // அவர்கள் தான் உலகின் பழமையான குடிகளான தமிழர்களுக்கு தீயை வலம் வந்து வணங்க கற்றுக் கொடுத்தார்கள் //

      ’வேள்வித்தீ’யை வலம் வந்து வணங்கும் வழக்கத்தை தமிழர்கள் முன்பே கொண்டிருந்தார்கள் என்றால் மகிழ்சிதான்..!

      // நாம்தமிழர்கள் //

      அவர்களை ஏன் இங்கே இழுக்கிறீர்கள்..?!

  35. ஆங்கிலேயனுக்கு செம்பு தூக்கிய பெரியாரின் வழிவன்தவன் பாரதியை பத்தி பெச அதிகாரம் இல்லை

    • //ஆங்கிலேயனுக்கு செம்பு தூக்கிய பெரியாரின் வழிவன்தவன் பாரதியை பத்தி பெச அதிகாரம் இல்லை//

      ஆங்கிலேயருக்கு சொம்பு தூக்குவது பார்பனரின் ஏகபோக உரிமை என்று சுயராஜ்ய கட்சி ஆரம்பித்தவர்கள் பார்ப்பன்ர்களல்லவா! ஈயத்தை பார்த்து பித்தளைகள் இளிக்கலாமா?

      • //ஈயத்தை பார்த்து பித்தளைகள் இளிக்கலாமா?//….சாமீ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ..சாமீ இதுல யாரு ஈயம் யாரு பித்தளை[முதல் மரியாதை வீராச்சாமி வாய்ஸ்சில் படிக்கவும்]

        • தேவார நாயனார்! அவரவர் விருப்பபடி வைத்துக்கொள்ளலாம்! இந்தியாவிற்கு பிற இனத்தவர் வருகையால் நாம் கொஞ்சம்நாகரிகம் அடைந்தோம் என்பது மறுக்கமுடியாத உண்மை!

          நான் முன்பே கூறியபடி, அண்ணன் தம்பி சண்டையைத்தவிர வேறு எதிரிகளை கொண்டிராத நாம், ஆரிய வருகைக்குப்பின் தானே அர்த்தசாச்திரம் படைத்தோம்! இச்லாமியர்களும் அவர்கள் பஙுக்கு ஆட்சிமுறை,நில அளவை முறை,நீதித்துறை தனியாக அமைத்துநீதி வழங்கும் முறை ஆகியவை கொண்டுவந்தனரே! ஆஙகிலேயரின் வருகை நவீன நாகரிகத்தையும், பொருள்முதல் வாத விஞ்ஞானத்தையும் தரவில்லையா?

  36. // இவ்வளவு நாளும் தமது இருப்பை தமிழ்மண்ணில் நிலைநாட்ட, கதை விட்டார்கள். அவர்களின் அந்தக் கதைகளை கண்மூடித்தனமாக நம்பி, நாம்தமிழர்கள், எமது முன்னோர்களின் புகழையும், பெருமையையும் அவர்களிடம் பறிகொடுக்க அல்லது பங்கு போட்டுக் கொள்ள வேண்டுமா என்பது தான் எங்களை நாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியாகும். //

    தமிழ் தேசியம் என்றால் தமிழர் வாழ்வியல், இலக்கியங்கள், வரலாறு முதலானவற்றிலிருந்து பார்ப்பானின் சுவடு தெரியாமல் அழிப்பது என்று நம்புகிறீர்கள் என தோன்றுகிறது.. இது பார்ப்பன வெறுப்பில் கட்டப்படும் குறுகிய சைவ வேளாள தமிழ்தேசியம்.. பாரதியும் பிரபாகரனும் கனவு கண்ட, எல்லாத் தமிழருக்கும் பொதுவான, தமிழ் தேசியம் வேறு..

    • // பாரதியும் பிரபாகரனும் கனவு கண்ட, எல்லாத் தமிழருக்கும் பொதுவான, தமிழ் தேசியம் வேறு..//

      நன்றி, அம்பி அவர்களே! தமிழ் தேசியம் கொச்சைப்படுத்தப்பட அதன் ஆதரவாளர்களே காரணமாகிவிடக்கூடாது! கடந்த கால தவறுகள் திருத்திக்கொள்ளப்படல் வேண்டுமல்லவா? சாதி ஒழியாத தமிழ் தேசியம் சாத்தியமா? பக்தியையும், மனம் மாறாத பார்பானையும் வைத்துக்கொண்டு சாதி ஒழியுமா?

      மேலும் பாரதி ஒரு கண்ணாடியே! அவனின் முறண்பாடுகள் அக்காலத்தில் தென்பட்ட சாதிய முறண்பாடுகளே! பெரியார், அம்பேத்கருக்குபின் வந்த சந்ததியினருக்கு புதிராகத்தான் இருக்கும்! ஒரு காரல் மார்க்சஸ், ஒரு லெனின், ஒரு எங்கெல்ஸ் இஙகு தோன்ற வாய்ப்பில்லாத போது தோன்றிய பாரதி கற்பனாவாதிதான்! ஆனால், கபடவாதியல்லவே! பிழைப்பு வாதியாக மட்டுமிருந்தால் இப்படி சொந்த சாதினராலேயே கைவிடப்பட்டிருக்கமாடான்! புரட்சிவாதியாக இருந்திருந்தால், தலைமறைவு இயக்கங்களில் சேர்ந்திருப்பான்! இரண்டும் கெட்டானாக இப்படி வினவின் விமரிசனத்திற்கு ஆளாகியிருக்கமாடான்! அவன் அப்படித்தான்!

      தம்பி பிரபாகரன் ஒரு போராளிதான்! தலைகுனிந்து இழிவுகளை தாங்கிக்கொண்டே பழக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தில் தோன்றி மான ரோஷத்துடன் ஆயுதப்போராட்டம் நடத்தியவன்; இந்தியாவை குறைத்து மதிப்பிட்ட தன்மையினாலும், தனிமனித ஒழிப்புநடத்தையாலும், உற்றாரை இழந்து தனிமைப்பட்டவன்! நம்பக்கூடாதவர்களை நம்பியதால் அழிவுற்றவன்! யார் பேச்சை கேட்டு செய்திருந்தாலும், ராஜிவின் கொலை அவனது இமாலய தவறு! யாரைத்தான் நம்புவது என்று தமிழ் சமூதாயம் இன்னும் பாடம் கற்று கொள்ளவில்லை!

      • வயிற்று பிழைப்புக்காக எட்டப்பனைத் துதிபாடி, அதே சுகத்தை வேண்டி வெள்ளையருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய பாரதியையும் பிரபாகரனையும் ஒன்றாகவைத்து எடை போடாதீர்கள். அவன் கொண்ட கொள்கைக்காக உயிரைக் கொடுத்தவன்.அது போல் பிரபாகரனை சோ.ராமசாமியின் கோணத்தில் விமரிசித்திருப்பது அதனினும் கொடிது.இந்தியாவை உயர்வாக மதிப்பிட்டு, ஆயிரக் கணக்கான தமிழச்சிகளின் கற்பைச் சூரையாடிய இராஜீவ் காந்தியின் அமைதிப் படையிடம் மண்டியிட்டிருக்க வேண்டுமா? மண்டியிட்டிருந்தால் நீங்கள் அவரைப் பாராட்டியிருப்பீர்கள் போலும். உங்கள் கூற்றுப் படி பிரபாகரன் சோ.ராமசாமியின் பேச்சைக் கேட்டிருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்து, பிரபாகரனுக்கு பாரதியாருக்குச் சமமான புரட்சியாளர் என்ற பட்டம்,துக்ளக் சோவாலும் சுப்பிரமணிய சாமிகளாலும் அளிக்கப் பட்டிருக்குமாக்கும்.லிபிய விடுதலைப் போராளி தனிமைப் படுத்தப் பட்டுதான் தூக்கிலடப் பட்டார்.பிரஞ்சிப் புரட்சியின் போது, புரட்சியாளரைக் கொலை செய்ய கில்லட்டின் எந்திரம் கண்டுபிடிக்கப் பட்டது. புரட்சியாளர் ஏசுநாதர் சிலுவையில் அறையப் பட்டார்.பக்கத்து பர்மாவில் தன் இளமை முழுதும் சிறையில் கழித்துள்ளார்.எந்த நாடு, எந்த ஏகாதிபத்திய சமூகம் புரட்சிக்காரர்களை முத்தம் கொடுத்துக் கொஞ்சியது.இன்று வாழ்வாதாரத்துக்காகப் போராடும் ஒரிசாவின் பழங்குடியினருக்கு இந்திய அரசும், சோ.ராமசாமியும், சுப்பிரமணிய சாமியும் வாழ்த்துப் பாவா பாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தமிழர்கள் ஆரியக் கூட்டத்தினராலும் திராவிடக் கட்சிகளாலும் வழி நடத்தப் பட்டவர்கள்.அவர்களுக்கு ஆடையவிள்ப்பு நடனம் ஆடுபவர்களும்,வாசாத்தி தமிழச்சிகளின் கற்பைச் சூரையாடியவர்களும்தான் புரட்சிவாதிகளாக அறியப் படுவார்கள். அரை மணி நேர உண்ணாவிரதம் இருந்த கருணாநிதியும்,அரை நாள் உண்னாவிரதம் இருந்த ஜெயலலிதாவையும் போராட்ட வீரர் வீராங்கனைகளாக போறிப் புகழ்வார்கள்.அதேவேளை தமிழ் நாட்டுக்கு தமிழ் நாடு என்று பெயர் வைக்க உண்ணா நோன்பிருந்து உயிர் விட்ட சங்கரலிங்கனாரை அறிய மாட்டர்கள்.ஏனென்றால் அவர் உண்மையான கருப்புத் தொலி தமிழன்.இந்தியத் தமிழனுக்கு வெள்ளைத் தொலிதானே பிடிக்கும்.

      • //தம்பி பிரபாகரன் ஒரு போராளிதான்! தலைகுனிந்து இழிவுகளை தாங்கிக்கொண்டே பழக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தில் தோன்றி மான ரோஷத்துடன் ஆயுதப்போராட்டம் நடத்தியவன்; இந்தியாவை குறைத்து மதிப்பிட்ட தன்மையினாலும், தனிமனித ஒழிப்புநடத்தையாலும், உற்றாரை இழந்து தனிமைப்பட்டவன்! நம்பக்கூடாதவர்களை நம்பியதால் அழிவுற்றவன்! யார் பேச்சை கேட்டு செய்திருந்தாலும், ராஜிவின் கொலை அவனது இமாலய தவறு! யாரைத்தான் நம்புவது என்று தமிழ் சமூதாயம் இன்னும் பாடம் கற்று கொள்ளவில்லை!//

        பிரபாகரனை சோ.ராமசாமியின் கண்களால் பார்ப்பது கொடுமையிலும் கொடுமை.திரு.அஜதராசு தமிழர்களை யாரை நம்பச் சொல்கிறார்? திரு.சோ.ராமசாமியையும், திரு.சுப்பிரமணிய சாமியையும் நம்பச் சொல்கிறாரா? போராட்டவாதிகள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணத்தை இவர் முன்பே வகுத்திருந்தால், பாவம் ஓமர் முக்தார்,அமெரிக்க மார்டின் லுதர்,பிரபாகரன்,பிரஞ்சு போராட்டக் காரர்கள், வீரன் பகத் சிங்,யேசுநாதர் இவர்களெல்லாம் பின்பற்றி உயிர் பிழைத்திருப்பார்களோ? தமிழகத்துக்கு தமிழ் நாடு என்று பெயர் வைக்க உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த திரு.சங்கரலிங்கனார் பற்றிச் சொன்னால் ஏன் வினவு ஆசிரியர் அதையும் நீக்குகிறார்.அவரும் அடிபணிந்திருந்தால் பாரதியார் மாதிரி இந்தக் கூட்டத்தினர் போராட்டவாதி பட்டம் அளித்திருப்பார்கள் போலும்.

        • அன்பன் அவர்களே! பிரபாகரனை சோ.ராமசாமியின் கண்களால் பார்க்க்சொல்லவில்லை! உங்கள் சொந்த கண்களாலேயெ பாருங்கள்; ஆனால் கொஞ்சம் சிந்தனையும் செய்து பாருங்கள்! 1985 (உத்தேசமாக) புதியஜனனாயகம் பிரபாகரனின் பழிவாங்கும் தலைமை பண்பை விமரிசித்தது! தீவிர பிரபாகரனின் ஆதரவாளனாக இருந்த எனக்கே அது சரியெனப்பட்டது! இந்திய அரசு உளவுதுறையான ராவும், அப்பொது தமிழக அரசை நடத்திவந்த எம் ஜி யாரும் பிரபாகரனை நம்ப வைத்து ஆட்டுவித்தனர் என்பதே பின்னர் வரலாறு உணர்த்தியது! அப்பொது தி க வினரும், புலிகளும் கருணானிதியை புறக்கணித்ததும்நான் அறிவேன்! இருதியில், எட்டப்பன் எம் ஜி யாரால், காட்டி கொடுக்கப்பட்டு பிரபாகரன் ஈழம் சென்றபொது கூறியதும் என் நினவில் உள்ளது! அதன் பிறகு, அந்த மகத்தான வீரன், பழிவாங்கும் செயலில்தான் இறங்கினானே ஒழிய, ஈழத்தைநோக்கிய பாதையில் செல்லவில்லை! அவனது சகாக்களையே சந்தேகப்பட்டு ஒழித்தார்! பொட்டு அம்மானும், கிட்டுவும்தான் எஞ்சினர்! இயக்கத்திலிருந்து கருணா விலகியது, இந்திய ஆதரவு அகன்றது, இந்திய முத்லாளிகளின் முத்லீடுகள் ஜெயவர்த்தனாவால் திருப்பியளிக்கபட்டது ஆகிய் காரணங்களால் அன்றே ஏழ விடுதலை இயக்கம் மடிந்தது! அதன் பிறகு பழிவாங்கிய படலமே அரங்கேறியது! ஒரு பக்கம் தமிழின எதிரியான பார்பனியத்தை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு, மறுபக்கம் தமிழீழ விடுதலை வேட்பது முறணாக இல்லை?

          • //இந்திய அரசு உளவுதுறையான ராவும், அப்பொது தமிழக அரசை நடத்திவந்த எம் ஜி யாரும் பிரபாகரனை நம்ப வைத்து ஆட்டுவித்தனர் என்பதே பின்னர் வரலாறு உணர்த்தியது! அப்பொது தி க வினரும், புலிகளும் கருணானிதியை புறக்கணித்ததும்நான் அறிவேன்! இருதியில், எட்டப்பன் எம் ஜி யாரால், காட்டி கொடுக்கப்பட்டு பிரபாகரன் ஈழம் சென்றபொது கூறியதும் என் நினவில் உள்ளது//
            அப்படியானால் இந்திய அரசு பிரபாகரனின் ஈழக் கொள்கையை விரும்பவில்லை என்றுதானே பொருள்.
            //இந்திய ஆதரவு அகன்றது, இந்திய முத்லாளிகளின் முத்லீடுகள் ஜெயவர்த்தனாவால் திருப்பியளிக்கபட்டது ஆகிய் காரணங்களால் அன்றே ஏழ விடுதலை இயக்கம் மடிந்தது//
            அப்படியானால் ஈழக் கொள்கைக்கு இந்தியா ஆதரவு அளித்ததா? இந்திய அரசு ஆதரவு நீங்கியதால்தான் ஈழக் கொள்கை மடிந்ததா? ஒரு இடத்தில் இந்திய அரசு ஈழக் கொள்கையை ஆதரிக்கவில்லை போலும் இன்னொரு இடத்தில் இந்திய அரசு ஆதரித்தது போலவும் எழுதுகிறீர்கள். இந்திய முதலாளிகளின் மூலதனத்துக்கும் ஈழ விடுதலைக்கும் என்ன சம்பந்தம்.உங்கள் பதிலிலேயே முன்னுக்குப் பின் முரண் தெரிகிறதே.
            //அதன் பிறகு, அந்த மகத்தான வீரன், பழிவாங்கும் செயலில்தான் இறங்கினானே ஒழிய, ஈழத்தைநோக்கிய பாதையில் செல்லவில்லை! அவனது சகாக்களையே சந்தேகப்பட்டு ஒழித்தார்! பொட்டு அம்மானும், கிட்டுவும்தான் எஞ்சினர்!//
            எம்ஜியாரால் ஏமாற்றப் பட்டு, ஈழம் சென்ற பிறகுதான் பிரபாகரன் ராஜிவ் காந்தி அனுப்பிய அமைதிப் படையை எதிர் கொண்டான் என்பதை மறந்து விட்டீர்கள்.அதன் பிறகு அவ்ன் ஈழத்தை அடைய நடத்திய போர்களாலும், அவன் இலங்கை அரசை பேச்சுவார்த்தைக்கு இணங்க வைத்தான்.நார்வேயில் அன்டொன் பால சிங்கம் தலைமையிலும், தமிழ்ச் செல்வன் தலைமையிலும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடந்தது மறந்துவிட்டதா?நீங்கள் எழுதிய கருத்துக்கள் அப்படியே சோ.இராமசாமி முன்பு எழுதியதி ஒத்திருப்பதால்தான் சோவின் பார்வையில் பார்ப்பது போல் தோற்றமழிக்கிறது.

  37. பாரதி அவலம் பற்றி விவாதிக்க வந்தவர்கள் தமிழர்களின் பூர்வீகம் பற்றி எழுத ஆரம்பித்து விட்டனர். இங்கு பாரதி ஒரு உண்மையான போராட்டவாதியா என்பதே கேள்வி.கட்டுரை ஆசிரியரின் கேள்விக்குச் சரியான பதிலை அளிக்க முடியாது திசை திருப்பும் நாடகம் ஆடவேண்டாம். உண்மையான போராட்டவாதி என்று போராட்டப் பட்ட பாரதி ஆங்கிலேயருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது சரியான செயலா என்பதற்கு,ஆங்கிலேயனுக்குக் கட்டாயத்தின் பேரில் முதுகு சொறிந்தார் என்பது எந்த வகையில் சரியான பதிலாகும்.ஆங்கிலேயனின் முதுகைச் சொறியச் சொன்னது யார்? எட்டப்பனிடம் பிச்சையெடுத்துச் சாப்பிட்டதில் உள்ள சுகம் சிறையில் இல்லை.அதன் கட்டாயத்தினால் பாரதி ஆங்கிலேயனின் முதுகைச் சொறிந்தார். மண்டேலாவின் பெருமையே அவருடைய நீடிய சிறை வாழ்க்கையே.லிபியப் புரட்சியாளன் ஓமர் முக்தாரின் எதிரிக்கு அடிபணியாது தூக்கை முத்தமிட்டார்..இன அடிமைக்காகப் போராடி,எதிரியிடம் தண்டலிடாது தன்னையும் தன் மனைவி மக்களையும் இழந்த மாவீரன் பிரபாகரனுடனுக்குச் சமமாக, சிறை வாழ்க்கை சித்திரவதை என்று எண்ணி அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த இந்த திண்ணை தூங்கிப் பார்ப்பனை, அடுத்தவன் முதுகில் ஏறி வாழ்க்கை நடத்தும் இந்த உண்டக் கட்டியினரால்தான் புரட்சியாளன் என்று கூறமுடியும்.ஆங்கிலேயர்கள் தன்னை பிடித்திடாவண்ணம்,பிரஞ்சு ஆதிக்கத்தில் உள்ள பாண்டியில் தஞ்சம் அடைந்தது விடுதலை வேட்கையாகுமா?இந்த பிரஞ்சுக் காரன் இவனுக்கு மாமனா மச்சானா?

    • பாரதி ஒரு கவிஞன், பிரபாகரன் ஒரு போராளி.. இருவருக்கும் ஒரே கனவு இருக்கக் கூடாதா..? நீங்களும், புரட்சியாளர்களும் ஒரே லட்சியக் கனவு காணக்கூடாதா..? அல்லது நீங்களும் புரட்சியாளரான பின் தான் அந்தக் கனவை காண்பீர்களா..?

      // ஆங்கிலேயனின் முதுகைச் சொறியச் சொன்னது யார்? //

      ஆங்கிலேயனை எதிர்த்து இனி கவிதை, கட்டுரை இயற்றமாட்டேன் என்று ஒதுங்கிக் கொண்டால் அவனுக்கு முதுகு சொறிந்ததாக கூறமுடியுமா..? தமிழகத்தில் சில பல தலைவர்கள் ஆங்கிலேயனை எதிர்த்து ஒரு கவிதை, கட்டுரை கூட எழுதாமல் புரட்சியாளர்கள் ஆனதெப்படி..?

      // எட்டப்பனிடம் பிச்சையெடுத்துச் சாப்பிட்டதில் உள்ள சுகம் சிறையில் இல்லை.அதன் கட்டாயத்தினால் பாரதி ஆங்கிலேயனின் முதுகைச் சொறிந்தார். //

      எட்டையபுரம் போய் // “என்னைப் போல் கவிஞனில்லை” என்று மீசையை முறுக்குகிறார். மன்னனுக்குச் சீட்டுக்கவி அனுப்பிப் பணம் கேட்கிறார்.//.. இதை பிச்சை என்று எடுத்துக் கொள்வது உங்கள் விருப்பம்.. பாரதிக்கு அந்த சுகம் வேண்டியிருந்தால் அங்கேயே இருக்காமல் ஏன் சென்னையிலும், பிறகு புதுச்சேரியிலும் பசியோடு ’திண்ணையில் தூங்கிக்’ கொண்டிருந்தார்..?

      // இந்த திண்ணை தூங்கிப் பார்ப்பனை, அடுத்தவன் முதுகில் ஏறி வாழ்க்கை நடத்தும் இந்த உண்டக் கட்டியினரால்தான் புரட்சியாளன் என்று கூறமுடியும்.//

      புரட்சியாளன் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று எனக்குத் தெரியாது.. ஒரு திண்ணை தூங்கிப் பார்ப்பானை கைது செய்ய ஆங்கில அரசு ஏன் அத்தனை தீவிரமாக இருந்தது என்பது உங்களுக்கும் தெரியாது..

      // பிரஞ்சு ஆதிக்கத்தில் உள்ள பாண்டியில் தஞ்சம் அடைந்தது விடுதலை வேட்கையாகுமா?இந்த பிரஞ்சுக் காரன் இவனுக்கு மாமனா மச்சானா? //

      தங்கள் நாட்டு ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிய பல புரட்சியாளர்கள் சில சமயங்களில் சிறிது காலம் அரசியல் தஞ்சம் புகுந்தது எல்லாம் அவர்களது மாமன் மச்சான் வீடுகளிலா..?

  38. 1965 இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகம் போராடிக் கொண்டிருந்ததது.அப்பொளுது பல்லாயிரக்கணக்கன மாணவர்களும், திராவிட கட்சிகளின் தலைவர்களும் போராடிக் கொண்டிருந்தனர்.26 ஜனவரி,1965 அன்று துக்கதினம் என்று அறிவித்து போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப் பட்டது.அதுவரை மற்றவர்கள் அமைத்துக் கொடுத்த மேடையில் வீரம் பேசிய MGR, அண்ணாவிடம் சென்று எனக்கு மட்டும் போராட்டத்திலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று மன்றாடி விதிவிலக்குப் பெற்று,இன்றய முதல்வர் ஜெயாவுடன் கோவாவில் உள்ள கார்வார் சென்று உல்லாசமாக காதல் காட்சிகளில் ஆடிப் பாடிகுத்தாட்டம் போட்டுவிட்டு, இந்தி எதிர்ப்புப் போர் முடிந்தபின் தமிழ் நாடு திரும்பினர்.அன்று தி.மு.க.வில் அங்கம் வகித்த நடிகர் திரு.S.S.ராஜெந்திரன் அவர்கள் கைது செய்யப் பட்டு, காவலரைத் துப்பாக்கி கொண்டு மிரட்டியதாக குற்றம் சுமத்தப் பட்டார்.இப்படிப் புரட்சி செய்த எம்ஜியார் இன்றுவரை புரட்சித் தலைவராக உள்ளார்.புரட்சியென்றால் என்னவென்று அறியாத மூடர்களாக மக்கள் இருக்கும் வரை,பாரதிகளும்,எம்ஜியார்களும், அறைகுறையாடையுடன் “எனக்குவந்த இந்த மயக்கம் உனக்கும் வரவேண்டும்” என்றும் “அடடா என்ன அழகு.அருகேவந்து பழகு” என்று குத்தாட்டம் போட்டவர்களும் புரட்சியாளராகத்தான் கருதப் படுவார்கள்.

  39. // 1965 இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகம் போராடிக் கொண்டிருந்ததது.அப்பொளுது பல்லாயிரக்கணக்கன மாணவர்களும், திராவிட கட்சிகளின் தலைவர்களும் போராடிக் கொண்டிருந்தனர்.//

    திராவிட கட்சிகள் அல்ல ஒரே ஒரு திரவிட கட்சி (திமுக) மட்டும்தான்… எம்ஜிஆர் மட்டுமல்ல திமுகவும் கூட போராட்டத்தின் இறுதிவரை களத்தில் இல்லை.. போராட்டம் அவர்களது கட்டுப்பாட்டை மீறிப் போய்விட்டது என்றதும் ஒதுங்கிக் கொண்டனர்..

    • 1.அம்பி அவர்களே இங்கு யார் என்ன கனவு கண்டார் என்பது கேள்வியல்ல.யார் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதுதான் கேள்வி.பாரதியார் தன்னுடைய தேசியக் கனவை புறம் தள்ளிவிட்டு,எட்டப்பன் இடும் பிச்சை சுகத்திற்காக, சிறையிலிருந்து விடுபட அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார் என்பதுதானே உண்மை.பாஞ்சாலியின் சபதம் எழுதியவர், அந்தப் பாஞ்சாலியையே கற்பளித்தல் எந்த வகையில் நியாயம்.
      2.அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததை முதுகு சொறிதல் என்று கூறுவது உங்களுக்குக் கசப்பாக இருந்தால் நாகரிகமாக ஆங்கிலேயருக்கு அடிவருடினார் என்று கூறலாமா?
      3.ஆங்கிலேயனுக்கு எதிராகக் கவிதை கட்டுரை எழுதிவிட்டு,பின்பு அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பதுதான் உங்கள் ஆரியப் புரட்சி போலும்.போராட்டத்தில் சிறை செல்வது எல்லாம் ஆரியர்களுக்குக் கூத்தாகத் தெறிகிறது போலும்.எந்தப் போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறைக் கொடுமைகள் அனுபவித்தவர்கள் எல்லாம் போராட்டவாதிகள்தான்.தமிழகத்தில் போராடாமலே புரட்சியாளர் என்று தங்களைக்க் கூறிக் கொண்டவர்கள் எம்ஜியாரும் ஜெயாவுதான்.ஒரு வேளை அவர்களை மனதில் வைத்துத்தான் இதைக் கூறுகிறீர்கள் போலும்.
      4.விட்டால் பாரதியை மட்டும் பிடிப்பதற்காக இங்கிலாந்து மன்னரே வந்து போர் நடத்தினார் என்று கதையளந்துவிடுவீர் போலும்.அவனுக்கு இவர் பத்தோடு பதினொன்று.அவனுடைய அரசுக்கு எதிரானாவர்கள் எல்லொரையும் வலை போட்டுப் பிடித்தான்.அதில் மற்ற மீன்களெல்லம் பிடிபட்டன.இந்த மீன் தப்பி ஓடிவிட்டது.ஓடியமீன் இன்னொரு வலையில் தானாகவே மாட்டிக் கொண்டது.மாட்டிக் கொண்டதும் அவன் காலில் விழுந்ததது.
      5.உண்மை.ஒத்த கருத்துடையவர்கள் நாட்டில் பதுங்கியிருபது வளக்கம்தான்.அவர் இவர் தஞ்சம் புந்த பாண்டிச் சேரியை ஆண்டு கொண்டிருந்தது பிரெஞ்சுக் காரர்கள்.அவர்களும் இந்தியாவை அடிமைப் படுத்த இந்தியா வந்து பாண்டிச் சேரி உட்பட பல இந்திய பகுதிகளை தங்களுடைய ஆளுகைக்கு உட்படுத்தியவர்கள்.அது மட்டுமின்றி நாடுபிடிக்கும் வெறியுடன் ஆங்கிலேயரிடம் போர் நடத்தியவர்கள்.அவர்கள் இந்தியாவிற்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப் போர் நடத்தவில்லை.ஆனால் இந்த விடுதலை விரும்பி, ஆங்கிலேயனுக்கு நாடுபிடிப்பதில் பிரெஞ்சுக் காரன் ஆங்கிலேயனுக்கு எதிரானவன் என்பதால்,அவனுக்கு முது சொறிந்தால்,தன்னை மாமனாகவும் மச்சானாகவும் ஏற்றுக் கொள்ளுவான் என்ற்தான் அங்கு ஓடினான்.ஒரு போராளி இன்னொரு போராட்டவாதியை மாமன் மச்சானாக ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் ஒரு விடுதலை விரும்பி இன்னொரு எஜமானனை எப்படி மாமன் மச்சானாக ஏற்றுக் கொண்டான்.

      • // 1.அம்பி அவர்களே இங்கு யார் என்ன கனவு கண்டார் என்பது கேள்வியல்ல.யார் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதுதான் கேள்வி.பாரதியார் தன்னுடைய தேசியக் கனவை புறம் தள்ளிவிட்டு,எட்டப்பன் இடும் பிச்சை சுகத்திற்காக, சிறையிலிருந்து விடுபட அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார் என்பதுதானே உண்மை.பாஞ்சாலியின் சபதம் எழுதியவர், அந்தப் பாஞ்சாலியையே கற்பளித்தல் எந்த வகையில் நியாயம்.//

        எட்டப்பன் இடும் பிச்சை என்று நீங்கள் கூறிக் கொண்டிருப்பதற்கும் முன்பே பதிலளித்துவிட்டேன்..

        // 2.அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததை முதுகு சொறிதல் என்று கூறுவது உங்களுக்குக் கசப்பாக இருந்தால் நாகரிகமாக ஆங்கிலேயருக்கு அடிவருடினார் என்று கூறலாமா? //

        ஆங்கிலேயரின் அடிவருடிய தமிழகத் தலைவர்கள் பலரிருக்க பாரதியை மட்டும் புகழ்வது ஏன் என்பதுதான் உங்கள் கேள்வி என்றால், பாரதி தன்னால் முடிந்தவரை ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தான் என்பதுதான் என் பதில்..

        // தமிழகத்தில் போராடாமலே புரட்சியாளர் என்று தங்களைக்க் கூறிக் கொண்டவர்கள் எம்ஜியாரும் ஜெயாவுதான்.ஒரு வேளை அவர்களை மனதில் வைத்துத்தான் இதைக் கூறுகிறீர்கள் போலும். //

        ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து எப்போதுமே பேசாத எழுதாத ‘புரட்சியாளர்களை’ பற்றித்தான் கூறினேன்.. எம்ஜிஆரும், ஜேயும் இங்கு எங்கே வந்தார்கள்..?! எம்ஜிஆர் 1953 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து பேசியிருப்பார் என்று ஊகிக்கலாம்.. ஜே இந்திய சுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர் என்பதால் அவர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்க்க அவசியமில்லை..

        // 4.விட்டால் பாரதியை மட்டும் பிடிப்பதற்காக இங்கிலாந்து மன்னரே வந்து போர் நடத்தினார் என்று கதையளந்துவிடுவீர் போலும்.அவனுக்கு இவர் பத்தோடு பதினொன்று.அவனுடைய அரசுக்கு எதிரானாவர்கள் எல்லொரையும் வலை போட்டுப் பிடித்தான்.அதில் மற்ற மீன்களெல்லம் பிடிபட்டன.இந்த மீன் தப்பி ஓடிவிட்டது.ஓடியமீன் இன்னொரு வலையில் தானாகவே மாட்டிக் கொண்டது.மாட்டிக் கொண்டதும் அவன் காலில் விழுந்ததது. //

        ஆங்கிலேய அரசின் குற்றப்பிரிவு டி.அய்.ஜியே வலை போட்டு பிடிக்கும் அளவுக்கு இந்த பதினோராவது மீன் என்ன செய்ததாம்..?

        // ஒத்த கருத்துடையவர்கள் நாட்டில் பதுங்கியிருபது வளக்கம்தான். //

        ஒத்த கருத்துடையவர்கள் என்றால் எதில்..?!

        // ஆனால் இந்த விடுதலை விரும்பி, ஆங்கிலேயனுக்கு நாடுபிடிப்பதில் பிரெஞ்சுக் காரன் ஆங்கிலேயனுக்கு எதிரானவன் என்பதால்,அவனுக்கு முது சொறிந்தால்,தன்னை மாமனாகவும் மச்சானாகவும் ஏற்றுக் கொள்ளுவான் என்ற்தான் அங்கு ஓடினான்.ஒரு போராளி இன்னொரு போராட்டவாதியை மாமன் மச்சானாக ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் ஒரு விடுதலை விரும்பி இன்னொரு எஜமானனை எப்படி மாமன் மச்சானாக ஏற்றுக் கொண்டான். //

        ஆங்கிலேயனை எதிர்ப்பவர்கள் தங்களுக்கு முதுகு சொறியவேண்டும் என்ற முன்நிபந்தனையை பிரெஞ்சுக்காரன் வைத்திருந்தால் பாரதி, அரவிந்தர், எம்.என்.ராய், ஏன் திப்பு சுல்தான் கூட பிரெஞ்சுக்காரனுக்கும் எதிராக போராடியிருப்பார்கள்..

        • 1.கேட்டு வாங்கிச் சாப்பிடுவது பிச்சை அல்லாது வேறு என்ன? 2000 ஆண்டுகளாக உண்ணும் சமூகமாக மட்டும் வாழும் கூட்டத்திற்கு பிச்சை புனிதமாகப் படுவதில் வியப்பு ஒன்ற்மில்லைதான்.
          2.அந்தத் தலைவர்களை யாரும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த பாரதியைப் போன்று போராட்டவாதியாகச் சித்தரித்து ஒரு தத்துவார்த்தமாக மிகைப் படுத்தி திரைப் படம் எடுக்கவில்லையே.
          3.வெள்ளைக்காரனை எதிர்த்து போராடுவது ஒன்றுதான் போராட்டவாதியின் இலக்கணமா?ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போரிடுவது என்ன யாருக்கும் முதுகு சொறியும் வேலையா?அப்படியானால் ஓமர் முக்தார் உங்கள் கண்ணுக்கு, கோவிலில் உண்ண்டக் கட்டி உண்டுவிட்டு, மணியடிப்பவராகக் காட்சியளிக்கிறாரா? விடுதலை இந்தியாவில் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போரிட்ட நேசமணி அவர்களும்,திருத்தணியை மீட்க களப் போர் நடத்திய திரு.மா.போ.சி அவர்களும்,தமிழ் நாட்டுக்கு தமிழ் நாடு என்று பெயரிட உயிர்விட்ட சங்கலிங்கனாரும்,இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து உயிர் நீத்த தாழமுத்து, நடராசன்,தீக்குளித்த சிவலிங்கம், சின்னச் சாமிகளும்,உங்கள் கண்ணுக்கு போராட்டவாதிகளாகத் தெறியவில்லை போலும்.பாவம் ஆதிக்க சாதியாகவும் உண்ணும் சமூகமாக மட்டும் வாழ்ந்த சமூகத்தினருக்கு எம்ஜியாரும், ஜெயாவும்,அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த பாரதியாரும்தான் புரட்சிவாதியாகத் தெறிவார்கள்.
          4.அடிமை கொள்ள வந்தவனுக்கு சின்ன மீனாவது பெரிய மீனாவது.களையெடுக்கும் போது சிறிய களை பெரிய களை என்று யாரும் பார்ப்பதில்லை.ஒத்த கருத்துடையவர்கள் என்றால் பொருள் புரியவில்லையா?
          5.பகைவனுக்குப் பகைவன் நண்பன்தானே.பிரன்சுக்காரனும் இந்தியப் பகுதியை அடிமையாக்கி வைத்திருக்கும் போது,அது போன்று இந்தியப் பகுதியை ஆக்கிரமித்த ஆங்கிலேயனை மட்டும் வெளியேறு என்று சொல்லுவது, ஒரு முழுமையான விடுதலை உணர்வாக இருக்க முடியுமா? நாடுபிடிப்பதில் போட்டியாளர்கள், ஆனால் இந்தியர்களை அடிமையாக்குவதில் நண்பர்கள்.இந்த அடிமைகள் பாண்டிச் சேரி சென்று பிரன்ச்சுக் காரனின் சட்ட திட்டத்துக்கு அடி பணிந்துதானே அங்கு வாழ்ந்தனர்.அப்படியென்றால் சொல்லாமலேயே அவனுக்கு முது சொறிய சென்றிருக்கிறார்கள் என்றுதானே பொருள்.உங்கள் கூற்றுப் படி திப்பு சுல்தான் பிரன்சுக் காரனை ஆதரித்தாரா? அப்படி ஆதரிதிருப்பார் என்றால், வெள்லையனே வெளியேறு என்றது ஒரு பித்தலாட்ட நாடகமே.பாரதியும், அரவிந்தரையும் பிரன்சுக்காரன் இலை போட்ட வரவேற்றான்.இவர்கள் என்ன பாஸ் போர்ட்டா வாங்கிக் கொண்டு பான்டிச் சேரியில் நுளைந்தனர்.திரந்த வீட்டுக்குள் நுளைபவர்களுக்கு நிபந்தனையாவது? மண்ணாவது?

          • // 1.கேட்டு வாங்கிச் சாப்பிடுவது பிச்சை அல்லாது வேறு என்ன? 2000 ஆண்டுகளாக உண்ணும் சமூகமாக மட்டும் வாழும் கூட்டத்திற்கு பிச்சை புனிதமாகப் படுவதில் வியப்பு ஒன்ற்மில்லைதான். //

            ”மன்னனுக்குச் சீட்டுக்கவி அனுப்பிப் பணம் கேட்கிறார்.” பிச்சை கேட்கவில்லை.. கவிஞர்களுக்கும், கற்றவர்களுக்கும் பரிசில் கொடுத்து மகிழ்ந்தவர்கள் செல்வர்களான பல தமிழ் விரும்பிகள் மட்டுமல்ல, உழைக்கும் மக்களும்தான்.. தந்தையின் சொத்தை உட்கார்ந்து தின்ற மிட்டா மிராசுகளையும், மைனர்களையும், மக்களிடம் பொறுக்கியும், பிடுங்கியும் தின்பவர்களையும் புரட்சியாளர்களாக கொண்டாடுபவர்களுக்கு எது புனிதமோ பாரதிக்கு அது பிச்சையை விட கேவலமாக தெரிந்திருக்கிறது.. பார்வைகள் பலவிதம்..

            // 2.அந்தத் தலைவர்களை யாரும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த பாரதியைப் போன்று போராட்டவாதியாகச் சித்தரித்து ஒரு தத்துவார்த்தமாக மிகைப் படுத்தி திரைப் படம் எடுக்கவில்லையே. //

            எடுக்கவில்லையா..?! அது சரி, 80 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்துக்கு டிரெய்லர் எதற்கு..

            // 3.வெள்ளைக்காரனை எதிர்த்து போராடுவது ஒன்றுதான் போராட்டவாதியின் இலக்கணமா?ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போரிடுவது என்ன யாருக்கும் முதுகு சொறியும் வேலையா?அப்படியானால் ஓமர் முக்தார் உங்கள் கண்ணுக்கு, கோவிலில் உண்ண்டக் கட்டி உண்டுவிட்டு, மணியடிப்பவராகக் காட்சியளிக்கிறாரா? //

            இல்லை.. உண்ண்டக் கட்டி உண்டுவிட்டு மணியடிப்பவனை ஆதிக்க சக்தியாகக் காட்டி ’எதிர்த்து போராடுபவர்கள்’தான் உமர் முக்தாருக்கு இணையான போராட்டவாதிகள்..

            // விடுதலை இந்தியாவில் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போரிட்ட நேசமணி அவர்களும்,திருத்தணியை மீட்க களப் போர் நடத்திய திரு.மா.போ.சி அவர்களும்,தமிழ் நாட்டுக்கு தமிழ் நாடு என்று பெயரிட உயிர்விட்ட சங்கலிங்கனாரும்,இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து உயிர் நீத்த தாழமுத்து, நடராசன்,தீக்குளித்த சிவலிங்கம், சின்னச் சாமிகளும்,உங்கள் கண்ணுக்கு போராட்டவாதிகளாகத் தெறியவில்லை போலும். //

            மார்ஷல் நேசமணி அவர்களும், ம.பொ.சி.அவர்களும், சங்கரலிங்கனாரும் தமிழகத்தின் நலனுக்காக மட்டுமல்ல, விடுதலைக்காக ஆங்கில அரசையும், அதன் அடிவருடிகளையும் அதற்கு முன்பு எதிர்த்துப் போராடியவர்கள்.. இவர்களையும், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடத்தி உயிர் நீத்தவர்களையும் யார் போராட்டவாதிகள் இல்லை என்றார்கள்..?!

            // 4.அடிமை கொள்ள வந்தவனுக்கு சின்ன மீனாவது பெரிய மீனாவது.களையெடுக்கும் போது சிறிய களை பெரிய களை என்று யாரும் பார்ப்பதில்லை. //

            பெரிய மீன், சின்ன மீன், பெரிய களை, சின்ன களை எல்லாம் ஒன்றுதான் என்று பார்த்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு சாதாரண போலீசுக்காரருக்கும், டி.ஐ.ஜி.க்கும் உள்ள வேறுபாடு மட்டும் தெரிந்திருக்கிறது.. கலகக்காரர்களுக்கும், கழகக்காரர்களுக்கும் உள்ள வேறுபாடும் தெரிந்திருக்கிறது..

            // ஒத்த கருத்துடையவர்கள் என்றால் பொருள் புரியவில்லையா? //

            உங்களது பொருள் விளக்கத்தைத்தான் கேட்டேன்..

            // பிரன்சுக்காரனும் இந்தியப் பகுதியை அடிமையாக்கி வைத்திருக்கும் போது,அது போன்று இந்தியப் பகுதியை ஆக்கிரமித்த ஆங்கிலேயனை மட்டும் வெளியேறு என்று சொல்லுவது, ஒரு முழுமையான விடுதலை உணர்வாக இருக்க முடியுமா? //

            புதுச்சேரியும் அன்று இந்தியாவில்தான் இருந்தது.. பிரெஞ்சுக்காரன் ஆங்கிலேயனைப் போல் ஒடுக்குமுறையைக் காட்டியிருந்தால் போராட்டம் அவனுக்கு எதிராகவும் வலுப்பெற்றிருக்கும்..

            // இந்த அடிமைகள் பாண்டிச் சேரி சென்று பிரன்ச்சுக் காரனின் சட்ட திட்டத்துக்கு அடி பணிந்துதானே அங்கு வாழ்ந்தனர்.அப்படியென்றால் சொல்லாமலேயே அவனுக்கு முது சொறிய சென்றிருக்கிறார்கள் என்றுதானே பொருள். //

            பிரெஞ்சுக்காரர்கள் கைது செய்ய அலையவில்லையே.. வந்து சொறியுங்கள் என்று முதுகைக் காட்டவுமில்லை..

            உமர் முக்தாரை மட்டுமல்லாது மேலும் பல உலகப் புரட்சியாளர்களின் வரலாற்றையும் நீங்கள் படித்திருந்தால் இன்னும் தெளிவாக புரட்சியாளர்கள் பற்றி பேசலாம்..

            // பாரதியும், அரவிந்தரையும் பிரன்சுக்காரன் இலை போட்ட வரவேற்றான்.இவர்கள் என்ன பாஸ் போர்ட்டா வாங்கிக் கொண்டு பான்டிச் சேரியில் நுளைந்தனர்.திரந்த வீட்டுக்குள் நுளைபவர்களுக்கு நிபந்தனையாவது? மண்ணாவது? //

            புதுச்சேரியில் அனுமதி கேட்டு உள்ளே நுழைய அது என்ன பிரான்சிலா இருந்தது..? விடுதலைப் போராட்டக்காரர்களை பிரெஞ்சுக்காரனே தடுக்காதபோது, கைது செய்து சிறைக்கோ, ஆங்கிலேயனிடமோ அனுப்பாத போது, அதனாலேயே அங்கு சென்ற விடுதலைப் போராட்டக்காரர்கள் மீது உங்களுக்கு இன்னும் ஏன் இந்த வரலாற்றுப்பூர்வமான வெறுப்பு..?

            • 1.திருவோடு ஏந்தி நேரில் போய்க் கேட்பதுதான் உங்களுக்கு பிச்சையாகத் தோன்றும் போலும்.சமூகத்தில் பிச்சைக் காரக் கூட்டம் இல்லாமல் இல்லை.ஆனால் அவர்களெல்லாம் பாரதியைப் போல் புனிதப் படுத்தப் படவில்லை.இங்கு குறிப்பிடப் பட்ட போராட்டவாதிகள் யாரும் மிட்டா மிராசுகளும் இல்லை.யாரிடமும் பொருக்கித் தின்றவர்களும் இல்லை.நீங்கள் எதையோ நினைத்து எதையோ புலம்புகிறீர்கள்.அவலை நினைத்து உரலை இடிக்கவேண்டாம்.என்னுடைய கருத்து இதுதான்.பிச்சைக்காரக் கூட்டத்தினர் பிச்சையைப் புனிதப் படுத்திக்கொண்டுதான் இருப்பார்கள்.
              2.வெற்றுப் புரட்சியாளர்,போலி புரட்சிக்காரர் எம்ஜியாரும்,எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வரவேண்டும் என்று மயங்கியவரும் ட்ரைலர் ஓட்டியதில் முக்கியமானவகள் என்பதை மறந்து விட்டீர்களா அல்லது அவர்களைச் சந்திக்கு இழுக்க நினைத்தீர்களா? நாங்கள் அவர்களின் புரட்சியை மறக்க நினத்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போலும்.
              3.
              //இல்லை.. உண்ண்டக் கட்டி உண்டுவிட்டு மணியடிப்பவனை ஆதிக்க சக்தியாகக் காட்டி ’எதிர்த்து போராடுபவர்கள்’தான் உமர் முக்தாருக்கு இணையான போராட்டவாதிகள்..//

              மணியடித்துவிட்டு கோவிலில் உட்கார்ந்து உண்டக்கட்டி சாப்பிட்டுக் கொண்டு சும்மாவா உட்கார்ந்திருக்கிறது அந்தக் கூட்டம்.அது சரி உணர்ச்சி வேகத்தில் தன்னை மறந்து உண்டகட்டிகளின் ஆதிக்க வெறியை எதிர்த்துப் போராடுபவர்களை ஓமர் முக்தாருக்கு இணையாக்கி விட்டீர்களே.பரவாயில்லை உங்களுக்கும் உழைக்காது உட்கார்ந்து உண்னும் கூட்டத்தினர்மீது கோபமுள்ளது போலும்.
              மார்ஷல் நேசமணியும் மாபோசியும் எல்லா களப் போரிலும் நின்று சிறை சென்றவர்கள்தான்.ஆனால் பாரதி போல் மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு,எட்டப்பனிடம் பிச்சை கேட்டுக் கொண்டு நிற்கவில்லையே.
              4.எப்பொழுதும் ஏன் கழகக் காரர்களைப் பற்றியே கவலைப் படுகிறீர்கள்.தனக்கு வந்த அந்த மயக்கத்தை மற்றவருக்கும் வரவைத்தவரும் கழகத்தை தன் கையில் வைத்துள்ளார்.அவரையும் சேர்த்துத்தான் கூறுகிறீர்களா?
              எழுத்தே இல்லாது, பேச்சு வழக்கே இல்லாது,சூத்திரனுக்கு புரியாது என்றும், பார்ப்பனருக்கு மட்டும்தான் புறியும் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு அலையும் கூட்டத்தினருக்கு, அவர்கள் பார்வையில் சூத்திர மொழியாகத் தெறியும் மொழியில்”ஒத்த கருத்து” என்பதற்கு பொருள் புறியாமல் இருப்பது ஆச்சரியமில்லைதான்.

              //புதுச்சேரியும் அன்று இந்தியாவில்தான் இருந்தது.. பிரெஞ்சுக்காரன் ஆங்கிலேயனைப் போல் ஒடுக்குமுறையைக் காட்டியிருந்தால் போராட்டம் அவனுக்கு எதிராகவும் வலுப்பெற்றிருக்கும்..//
              அடப் பாவிகளா.அப்படியானால் பிரென்சுக் காரன் இந்தியா முழுவதையும் ஆண்டு கொண்டிருந்தால், இந்த பாரதி கூட்டம் சந்தோசமாக அவனுக்குமுதுகு சொறிந்து பிழைப்பு நடத்தியிருப்பார்களோ?

              //பிரெஞ்சுக்காரர்கள் கைது செய்ய அலையவில்லையே.. வந்து சொறியுங்கள் என்று முதுகைக் காட்டவுமில்லை..//
              பிரன்சுக் காரர்கள் கைது செய்யாமலும்,முதுகைக் காட்டாமலும் இந்த பாரதி கூட்டம் அவனின் முதுகைச் சொறிந்து விட்டு அவனைச் சுகப் படுத்தியது போலும்?ஆங்கிலேயனும் ஃபிரென்சுக்காரன் மாதிரி நடந்து கொண்டிருந்தால், இந்த பாரதி கூட்டம் அவனது முதுகில் சொறிந்து காலம் முழுதும் சொறிந்து கொண்டிருந்திருக்கும் போலும்.அறிவுகெட்ட ஆங்கிலேயன்.இவர்களைச் சொறியவிட்டே இந்த இந்தியாவை இன்றுவரை ஆண்டு கொண்ட்டிருந்திருக்கலாம்.பாரதி கூட்டம் ஆங்கிலேயனைச் சொறிந்ததால்தான்,
              விக்கிரமசிங்கபுரம்,மதுரை ஏ&எஃப் ஆர்வி மில் அந்தக் கூட்டத்திற்கு அன்பளிப்பாகக் கிடைத்தது போலும்?
              //உமர் முக்தாரை மட்டுமல்லாது மேலும் பல உலகப் புரட்சியாளர்களின் வரலாற்றையும் நீங்கள் படித்திருந்தால் இன்னும் தெளிவாக புரட்சியாளர்கள் பற்றி பேசலாம்..//
              அய்யய்யோ.பாரதி கூட்டத்தினருக்கு புரட்சிவாதிகள் பற்றித் தெறிந்ததனால்தான் பாரதியார் முதுகு சொறிந்ததை புரட்சி என்கிறார் போலும்.

              //புதுச்சேரியில் அனுமதி கேட்டு உள்ளே நுழைய அது என்ன பிரான்சிலா இருந்தது..? விடுதலைப் போராட்டக்காரர்களை பிரெஞ்சுக்காரனே தடுக்காதபோது, கைது செய்து சிறைக்கோ, ஆங்கிலேயனிடமோ அனுப்பாத போது, அதனாலேயே அங்கு சென்ற விடுதலைப் போராட்டக்காரர்கள் மீது உங்களுக்கு இன்னும் ஏன் இந்த வரலாற்றுப்பூர்வமான வெறுப்பு..?//
              ஒரு விடுதலை விரும்பி இன்னொரு ஆதிக்க சக்தியை விரும்பி ஏற்றுக் கொள்லலாமா?என்பதுதான் கேள்வி.

              கடைசியாக,இந்தியர்கள் உஞ்ச விருத்திப் பார்வைக்கு மேல் சிந்திக்காதவரை,அந்த கூட்டத்தினரால் பாரதியார் போராட்டவாதியாகத்தான் சித்தரிக்கப் படுவார்.எது சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கும்.அந்திப் பொழுதுவந்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என்று குத்தாட்டம் போட்டவர்களை கண்ணகியாகவும் ஆக்கிவிடுவார்கள்.

              • // அவலை நினைத்து உரலை இடிக்கவேண்டாம். //

                இப்படி ஒரு வாரம், 10 நாட்களுக்கொருமுறை வந்து அரைத்த மாவையே அரைத்து விட்டுப் போகவேண்டாம்..

                • அவலை நினைத்து உரலை இடிப்பது என்பதற்கு வேறு பொருள்.அரைத்த மவை அரைப்பது என்பது வேறு பொருள்.
                  அது சரி கிளிப்பிள்ளை மாதிரி, “பாரதியார் எடுத்தது பிச்சையில்லை என்றும்,பாரதியார் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது புரட்சியென்றும்,ஒரு ஆதிக்க சக்தியை எதிர்த்து இன்னொரு ஆதிக்க சக்திக்கு முதுகு சொறிந்ததில் தவறு இல்லை என்றும்” திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருப்பதற்குத்தான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

    • ஓரு திராவிடக் கட்சி என்றே வைத்துக் கொள்ளுவோம்.அதில்தானே இந்த எம்ஜியாரும் இருந்தார்.திரையில் அட்டைக் கத்தியை வீசிக் கொண்டு, யாரோ எழுதிக் கொடுத்த வீர வசனத்தைப் பேசிக் கொண்டிருந்தார்.அப்படியானல் அந்தக் கட்சி கொடுத்த களப்போரில் கலந்து கொள்ளாது,தப்பி ஓடியவரை தமிழர்கள் புரட்சிவாதி என்று அழைப்பது போல்தான் பாரதியாரும் புரட்சியாளராகச் சித்தரிக்கப் படுகிறார் என்பதுதான் எனது கருத்து.
      //எம்ஜிஆர் மட்டுமல்ல திமுகவும் கூட போராட்டத்தின் இறுதிவரை களத்தில் இல்லை.//
      ஏதோ ஆரம்பத்தில் எம்ஜியார் களப் போரில் இருந்தது போலவும்.பிறகு கலந்து கொள்ளாமல் சென்றது போலும் பேசுகிறீர்கள்.அவர் என்றும் எப்பொழுதும் அவர் கட்சி அளைப்புக் கொடுத்த போராட்டங்களில் கலந்து கொண்டது இல்லை.1965 இந்தி எதிற்ப்புப் போருக்கு அவரது கட்சி அழைப்புக் கொடுத்த உடனேயே அண்ணாவின் காலில் விழுந்து,விதிவிலக்குப் பெற்று தந்த சிலை பெற்ற தங்கச் சிலையை கூட்டிக் கொண்டு கார்வார் தீவுக்கு ஆயிரத்தில் ஒருவன் படப் பிடிப்புக்கு ஓடிவிட்டார்.சரியான ஆரியக் கூத்து போங்கோ.
      எம்ஜியாரின் இந்த இழிவான உள நிலையும், அவரின் முகமூடிச் செல்வாக்கும், 1972இல் இந்திரா காந்தியாலும், தமிழகத்து பார்ப்பன ஊடகங்களாலும், தி.மு.க.வை பலவீனப் படுத்தப் பயன்படுத்தப்பட்டது.

  40. அம்பிகள் அவ்வப்போது வந்து சந்திலே சிந்து பாடிவிட்டு சென்றுவிடுவர்! 1965 இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகம் போராடிக் கொண்டிருந்ததது.அப்பொளுது பல்லாயிரக்கணக்கன மாணவர்களும், திராவிட கட்சிகளின் தலைவர்களும் போராடிக் கொண்டிருந்தனர் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, பக்தவத்சலம் அரசு மாண்வர்களுக்கு எதிராக துப்பாக்கியை தூக்கியதும், மக்களுக்கு எதிராக காங்கிரஸ் தனிமைப்பட்டுபோனதும், அதை அரசியல் ரீதியில் எதிர்கொண்டு, மாண்வர் சீனிவாசனாலேயே, காங்கிரசின் மகத்தான தலைவர் தோற்கடிக்கப்பட்டதும்! அண்ணாவே அவ்வளவு மகத்தான வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்பதும் உண்மைதான்! உண்மையான மக்களாட்சியின் மகத்துவத்தை அப்போதுதான் கண்டோம்!

  41. பாரதியின் பள்ளித்தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் என்கிற் வரிகளுக்கு உண்மையான் அர்த்தம் என்ன பள்ளிவாசல்கள் அனைத்தயும் இடித்து விட்டு கோவில் கட்ட வேண்டு என்கிற ஆர் எஸ் எஸ் கொள்கை என்கிறார்கள் சிலர் பள்ளர் என்கிற சாதி பிரிவினர் கோவிலுக்குள் நுழைய முடியாத சாதி என்பதால் அவர்கள் வாழும் இருப்பிடங்களையே கோவில் ஆக்கலாம் என்கிற கருத்தா அல்லது எல்லா பள்ளிக்கூடத்துலலும் கோவில் மாறி பார்ப்பண மடமா மாத்துறதா ஒவ்வொறுத்தனும் ஒரு அர்த்தம் சொல்லுறான் வினவோ இல்ல இங்க பின்னூட்டம் போடும் அறிவு ஜீவிகளோ உண்மையான விளக்கம் தர வேண்டும்

Leave a Reply to தேவார நாயனார் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க