Wednesday, September 28, 2022

பாரதி அவலம்

-

( பாரதி திரைப்படம் குறித்து தோழர் மருதையன் எழுதிய இந்த விமரிசனக் கட்டுரை 2000-ம் ஆண்டு அக்டோபர் மாத புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது. )

வெற்றியின் ரகசியமாக தமிழ்த் திரையுலகத்தினர் பயபக்தியுடன் உச்சரிக்கும் சென்டிமென்ட் எனும் மந்திரச் சொல்லை நாராக வைத்து பாரதியின் வாழ்க்கையைத் தொடுத்திருக்கிறார் ஞான. ராஜசேகரன்.

பாரதி திரைப்படம்ஏதோ ஒரு அநாதையின் மரணத்தைப் போலப் புறக்கணிக்கப்பட்ட பாரதியின் மரணம் – இந்தப் புறக்கணிப்பு தோற்றுவிக்கும் அவலம் – இந்நிலைக்கு பாரதியை ஆளாக்கிய ச­மூகத்தின் மீது குற்றச்சாட்டு – என்று தெளிவான முன்னுரையுடன் தொடங்குகிறது படம்.

முன்னுரையின் கூற்றை உறுதி செய்வதற்கு ஏற்ற முறையில் கட்டுரையின் – அதாவது திரைப்படம் எனும் கட்டுரையின் – உடல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

“நான் காலத்தை மீறிக் கனவு கண்டேன்; அதன் விளைவை அனுபவித்தேன். நீ அவ்வாறு சிந்திக்காதே” என்று தந்தை தனயனுக்குக் கூறும் அறிவுரையுடன் தொடங்குகிறது படம். அறிவுரையைக் கேட்கத் தவறிய பாரதி அதன் விளைவுகளை அனுபவிக்கிறான். வறுமை, குடும்பத்தில் சச்சரவுகள், சாதிப் புறக்கணிப்பு, போலீசு தொல்லை… என்று துன்பங்கள் தொடர்கின்றன.

முறுக்கிய மீசையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட பாரதி, துயரத்திற்கும், கோபத்திற்கும், சமரசத்திற்கும் ஆட்படுகின்ற சாதாரண மனிதனாகவும் இருந்தான் என்ற சித்தரிப்பு, பாத்திரத்தின் மீது ஒரு வகையான நம்பகத் தன்மையையும் அதை விஞ்சுகின்ற அளவு அனுதாபத்தையும் ரசிகனிடம் தோற்றுவிக்கின்றது. இதில் ஷிண்டேயின் நடிப்பு கூடுதல் பங்காற்றுகிறது.

இறுதிக் காட்சியில் மீண்டும் இடுகாடு; பாரதியை வேட்டையாடிய ச­மூகத்தின் மீது மீண்டும் சாடல், “உங்கள் மத்தியிலும் பாரதிகள் இருக்கக் கூடும்; அவர்களைப் பின்பற்றா விட்டாலும் அங்கீகரியுங்கள்” என்ற கோரிக்கையுடன் படம் முடிகிறது.

****

ரலாற்றில் பாரதி இடம்பெறக் காரணம் அவனது கவிதை. கவிதைக்கும் கவிஞனுக்கும், கவிதைக்கும் ச­மூகத்திற்கும், கவிஞனுக்கும் ச­மூகத்திற்கும் இடையிலான உறவை ஆய்வு செய்வதன் ஊடாக அவனது வாழ்க்கை கூறப்பட்டிருக்க வேண்டும். இவற்றில் கவிஞனின் வாழ்வுக்கும் அவனது படைப்பு ஆளுமைக்கும் இடையிலான உறவை பரிசீலிப்பதுதான் மிக முக்கியமானது.

ஆனால் காலவரிசைப்படி பாரதியின் வாழ்வில் நடைபெற்ற சில சம்பவங்களின் ஊடாக அவன் வாழ்ந்த காலத்தைச் சித்தரிக்கிறது திரைப்படம். இதன் விளைவாக பாரதி அதிமனிதன் ஆகிறான். ச­மூகமோ வில்லனாகிறது.

பாரதியின் குழந்தைப் பருவ நடவடிக்கைகளாகட்டும், பூணூல் அறுத்த பாரதியை அவனுடைய அக்காள் கணவரும், மன்னரும் ஞானியென்று வியப்பதாகட்டும், நண்பன் ஆர்யாவின் புகழுரை ஆகட்டும் அனைத்தும் பாரதியை ஒரு “அவதார புருசனாக” உயர்த்துகின்றன. படத்தைப் பொறுத்தவரை பாரதி தன் கவிதை ­மூலம் “மகாகவி” ஆகவில்லை; மகாகவியாகவே பிறக்கிறான்.

“எப்பேர்ப்பட்ட மனுசனுக்கு இந்த நிலைமை பாரு” என்று படம் முடிந்தவுடன் பேசிக் கொண்டார்கள் இரண்டு மாமிகள். ஒரு மாமனிதன் சராசரிகளால் வேட்டையாடப்படும் போது பிறக்கும் அவலம்தான் படம் உருவாக்கும் உணர்ச்சி.

இதனால் தேசத்தின் அவல நிலையைக் காட்டிலும் தேசிய கவியின் அவல நிலை பெரிதாகி விடுகிறது. தீண்டாமை எனும் ச­மூகக் கொடுமையைக் காட்டிலும், அதை எதிர்க்கும் கதாநாயகனின் மீதான கொடுமை பெரிதாகி விடுகிறது.

பாரதிபாரதியின் அவலம் என்று ஒன்று உண்டா? உண்டென்றால் அதற்கு அவனை ஆளாக்கியது அவன் வாழ்ந்த ச­மூகமா? “சாதியை எதிர்த்தான், பெண் விடுதலையைப் பாடினான்; தேச விடுதலையைப் பாடினான் – கம்பீரமான கவிஞனாக இறந்தான்” என்று சொல்ல முடியாமற் போன காரணமென்ன?

அவன் வாழ்ந்த காலத்திலேயே அவனுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதுதான் காரணமா? அல்லது சாவுக்குக் கூட ஆயிரக் கணக்கானோர் திரளவில்லை என்பதா? அல்லது சொந்த சாதிப் பார்ப்பனர்களால் துன்புறுத்தப்பட்டான் என்பதா – இவையெல்லாம் அவலத்தின் காரணங்களாகி விடுமா?

கொண்ட கொள்கைக்காக நஞ்சருந்திச் செத்தான் சாக்ரடீஸ்; தூக்கில் தொங்கினான் பகத்சிங்; போர் வீரர்களுடன் வீரனாக செத்துக் கிடந்தான் திப்பு சுல்தான். கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டான் நக்சல்பாரிக் கவிஞன் சரோஜ் தத்தா. இவர்களது மரணம் எதுவும் அவலமாகக் கருதப்படவில்லை; சித்தரிக்கப்படுவதுமில்லை.

வாழும் காலத்திலேயே மக்கள் அங்கீகாரம் கிடைத்ததா, சாவுக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்பதெல்லாம் அவலத்தை அளக்கும் அளவு கோல்களல்ல; “காலத்தை மீறி” கனவு காணும் ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்து மக்களால் புறக்கணிக்கப்படுவதையும், ஏளனம் செய்யப்படுவதையும் எதிர்பார்த்துத்தான் அவ்வாறு கனவு காண்கிறான்.

பாரதியிடம் நாம் காணுகின்ற பிரச்சினை அவனுக்கும் ச­மூகத்திற்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால் விளைந்ததல்ல; தன்னுடைய கவிதையின் உணர்வில் அவனால் ஏன் வாழ முடியவில்லை என்பதுதான் விடை தேட வேண்டிய கேள்வி. கவிதையின் கனவுலகில் வாள் சுற்றிய பாரதி அரசியலின் நனவுலகில் சரணடைகிறான். அவன் எழுதிய கவிதை வரிகளால் மற்றவர்கள் எழுச்சி பெற்ற தருணத்தில் அவன் எதிரிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.

இந்தச் சுயமுரண்பாட்டையே அவலமாகவும், அந்த அவலத்திற்குக் காரணம் அவனைப் புறக்கணித்த ச­மூகம் என்றும் வியாக்கியானம் செய்கிறார்கள் பாரதி அபிமானிகள். திரைப்படமும் அதைத்தான் செய்கிறது.

“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரை என்ற காலமும் போச்சே” என்று பாரதி பாடியவுடனே தருப்பைப் புல்லை பார்ப்பனர்களும், துப்பாக்கியை வெள்ளைக்காரனும் கீழே போட்டுவிட வேண்டுமோ?

பாரதிஅல்லது திரைப்படத்தின் முடிவுரை கோருவது போல கவிஞனைப் “பின்பற்ற முடியாவிட்டாலும் அங்கீகரிக்க” வேண்டுமோ? இல்லையென்றால் கவிஞர்கள் “அவலநிலைக்கு” ஆளாகி விடுவார்களோ?

பாரதியின் முரண்பாட்டை அனுதாபத்துடன் பார்க்க வேண்டும் என்று கூறும் கவிஞர்களும் அறிஞர்களும் உண்மையில் தங்களுடைய இரட்டை நிலையை அனுதாபத்துடன் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் இப்படி நாசூக்காக வெளிப்படுத்துகிறார்கள்.

அவலச் சுவை ததும்பும் இந்த “மனநிலையை’ நீங்கள் மேலும் சீண்டினால் அதிகாரத் தொனியில் கவிஞர்களின் “பகுத்தறிவு” பேசத் தொடங்கும்.

“கவித்துவத்தை மட்டும் வைத்துத்தான் கவிஞனை மதிப்பிட வேண்டும். “உன் கவியுணர்வுக்கு நீயே விசுவாசமாக இல்லாதது ஏன்’ என்றெல்லாம் கேட்கக் கூடாது. படைப்பு வேறு – படைப்பாளி வேறு” என்று அகந்தையுடன் சீறுவார்கள்.

கவித்துவ மனநிலையில், கவிதையில் வெளிப்படும் கவிஞனின் அகந்தைக்கும், கவிதை முடிந்தபின் யதார்த்த வாழ்க்கை குறித்து எழும் கேள்விகளுக்குப் பதிலிறுக்கும்போது அவனிடம் வெளிப்படும் அகந்தைக்கும் பாரிய வேறுபாடு உள்ளது.

“வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேனென்றி நினைத்தாயோ” என்ற கவிதை வரியில் “விழமாட்டோம்” என்று கூறும் ஒரு வர்க்கம்/ச­கக் குழுவின் மனவுணர்வு கவிஞனின் வழியாகப் பேசுகிறது.

“ஏன் விழுந்துவிட்டாய்” என்று பிறகு கவிஞனை நோக்கி கேள்வி கேட்கப்படும்போது அவனிடமிருந்து வரும் பதில் அவன் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் உணர்வு நிலையிலிருந்து வருவதில்லை. அவனது தனிப்பட்ட உணர்விலிருந்து வருகிறது. தனிநபரின் அகந்தையாக வருகிறது. “படைப்புக்கு படைப்பாளி விசுவாசமாக இருக்கத் தேவையில்லை” என்று பதில் வருகிறது.

உணர்ச்சி வயப்பட்ட நிலையில் விசுவாமித்திரன் உருவாக்கிய கள்ளக் குழந்தையாகி விடுகிறது கவிதை. அதை வாசகர்களாகிய மேனகைகள்தான் தூக்கித் திரிய வேண்டும்.

“வெட்டி வீழ்த்த வா” என்ற கவிஞனின் வரிகளை நம்பி (அதாவது அந்த மன உணர்வுக்கு ஆட்பட்டு) நீங்கள் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், கவிஞர் எதிரிக்கு முதுகு சொறிந்து கொண்டிருக்கலாம். கனவில் எழும்பும் முனகல் போல அவர் வெளிப்படுத்திய கவிதையை, அழகிய கண்கொண்டு ரசிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அறிவியல் கண்கொண்டு அதற்கு கவிஞனிடம் விளக்கம் கோரக் கூடாது.

இது சாத்தியமா? அப்படி என்னதான் சிறப்புத் தகுதி கவிஞனுக்கு? காட்சி அனுபவத்தையும் மனவுணர்வையும் வார்த்தைகளில் சிறைப்பிடிக்கும் நுட்பம்தான் கவிஞனின் சிறப்புத் தகுதியா? எனில் அத்தகைய கவிஞனை “வார்த்தை வித்தகர்” என்று அழைக்கலாமே!

பாரதிதனது கவித் திறனும் படைப்பின் அழகியலும் போற்றப்படும் இடத்தில் தனது கவிதையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கவிஞன்,

வேறு வார்த்தைகளில் சொன்னால் தன் பலத்துக்காக மீசையை முறுக்கும் கவிஞன், பலவீனம் குறித்துப் பேசும்போது “விட்டு விடுதலையாகி நற்பது’ ஏன்?

தனது கவியுணர்வில் ஒரு கவிஞன் தொடர்ந்து வாழ முடியாமல் போவதும், தான் கூறிக்கொண்ட கொள்கை வழியில் ஒரு மனிதன் செயல்பட முடியாமல் போவதும் பலருக்கும் ஏற்படும் அனுபவம்தான். இந்த முரண்நிலை குறித்த கேள்விக்குச் சாமானியர்கள் கூட ச­மூகத்திற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அறிஞர்களும், கவிஞர்களும் ச­மூகத்திற்குப் பதில் சொல்வதுடன் தமக்குத் தாமே விடைதேடும் சுயபரிசீலனையிலும் ஈடுபட வேண்டும்.

தம்மை அதிமனிதர்களாகக் கருதிக் கொள்ளும் கவிஞர்கள் இதற்கு விடை சொல்லாமல் மவுனம் சாதித்தாலோ அவர்களது “ஆளுமை’ உடைந்து நாெறுங்கி விடும். எனவே “ச­மூகம்தான் தனது வீழ்ச்சிக்குக் காரணம்” என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

ஞான. ராஜசேகரனும் இதைத்தான் செய்கிறார். பாரதியின் சுய முரண்பாடுகள் குறித்து இயக்குநரின் மனதில் ஐயமிருந்திருப்பினும், திரைப்படத்தில் அவற்றைச் சித்தரிக்கும் துணிவு அவருக்கில்லை. எனவே, ஆளும் வர்க்கங்களாலும், பாரதி அபிமானிகளாலும் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் பாரதியின் தோற்றத்திற்கு  பக்க வாத்தியம் வாசிக்கிறது திரைப்படம்.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வோரென்றும், வாய்ச் சொல் வீரரென்றும் காங்கிரசு மிதவாதிகளைச் சாடிய பாரதி,

ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டு நாடே கிளர்ந்தெழுந்த தருணத்தில் “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்ட” கோழையாக ஆனது எப்படி என்ற கேள்விக்கு விடையில்லை.

உண்மையான எதிரியாகிய வெள்ளையனிடம் சரணடைந்த கோழைத்தனத்தை மறைத்து, “காலா… உனைக் காலால் உதைப்பேன் வாடா” என்று கற்பனை எதிரியை எட்டி உதைக்கும் இறுதிக் காட்சி பாரதியின் அவலமாக ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டாலும், சினிமாத்தனமான மோசடியின் சிகரமாக அது அமைகிறது.

***

திரைப்படம் பாரதியை அதிமனிதனாகச் சித்தரித்த போதிலும் பாரதியின் முரண்பாடுகள் குறித்த விவாதம் இலக்கிய உலகில் ஏராளமாக நடந்துள்ளது. இருப்பினும் பண்டித நடையிலிருந்து தமிழை மீட்டதும், தேச விடுதலையைப் பாடியதும், கவிதைகளின் வீச்சும் இனம்புரியாத தடுமாற்றத்தை ஏற்படுத்தி “என்ன இருந்தாலும்…” என்று பலரை இழுக்க வைக்கிறது. “இப்படி இருந்திருக்கக் கூடாதா” என்று சிலரை ஏங்கவும் வைக்கிறது.

பார்ப்பன இந்து தேசியத்தைக் கனவு கண்ட கவிஞன் என்று பாரதியைப் பற்றி நாம் கூறினால் அது துடுக்குத்தனமான அரைவேக்காட்டுத்தனமான மதிப்பீடு என்று எரிச்சலடைவோர் உண்டு. அப்படியானால் பார்ப்பானை எதிர்த்ததும், சாதியை மறுத்ததும், பெண் விடுதலையைப் பாடியதும் இந்து தேசியவாதி செய்யக் கூடிய/பாடக் கூடிய விசயங்களா என்று மடக்குவோரும் உண்டு.

இந்து தேசியவாதிகள் எனப்படுவோர் இராம. கோபாலனைப் போலவோ, அசோக் சிங்காலைப் போலவோதான் இருக்க வேண்டும் என்று கருதுவோர் வரலாற்றையும், தனி நபரையும் மதிப்பிடத் தெரியாதவர்கள். “தவறான கட்சியில் சரியான நபரா – எப்படி?” என்று வியக்கும் தி.மு.க.வினருக்கு ஒப்பான அறிவாளிகள். ஆரிய சமாஜத்தின் பார்ப்பன எதிர்ப்பு, விவேகானந்தரின் பார்ப்பன எதிர்ப்பு, காந்தியின் அரிசன முன்னேற்றம் என்று பலவிதமான வண்ணச் சேர்க்கைகளில் அன்றைய காலகட்டத்தில் பிறந்த இந்து தேசியவாதம் பாரதி எனும் கவிஞன் ­மூலமும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

இந்து தேசியத்தைக் கனவு காணும் வாய்ப்புப் பெற்ற பார்ப்பனச் சாதியில் பிறந்த, சமஸ்கிருதக் கல்வி கற்ற பாரதி, ஆங்கிலக் கல்விக்கும் ஷெல்லி, விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளுக்கும் அறிமுகமாகின்றான். காலனியாதிக்க எதிர்ப்பென்பது கருத்தளவில் மட்டுமின்றி, வெள்ளையனால் ஏமாற்றப்பட்ட தந்தையின் மரணம் எனும் சொந்த அனுபவத்தினூடாகவும், நாம் இன்னதென்று அறியாத பிற காரணிகளாலும் அவனிடம் உணர்ச்சி வேகம் பெறுகிறது.

அவனுக்குள் இருந்த முரண்பட்ட எதிர்த் துருவங்களான பார்ப்பனியமும் ஜனநாயகக் கருத்துகளும் ஒன்றுடன் ஒன்று கணக்குத் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். மாறாக வேதமரபு, பழம் பெருமை ஆகியவற்றைச் சீர்திருத்தி ஜனநாயகப்படுத்துகின்ற சிந்தனைதான் பாரதியிடம் மேலோங்குகிறது. ஜெர்மனியின் நிலை குறித்து கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும் குறிப்பிடுவது இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.

“ஜெர்மன் இலக்கிய விற்பன்னர்களது பணி, புதிய பிரெஞ்சுக் கருத்துக்களைத் தமது பண்டைய தத்துவவியல் மனச்சான்றுக்கு இசைவாய் வகுத்திடுவதில், அல்லது இன்னும் கறாராய்ச் சொல்வதெனில் தமது சொந்தத் தத்துவவியல் கண்ணோட்டத்தைத் துறந்து விடாமல் பிரெஞ்சுக் கருத்துக்களைக் கிரகித்துக் கொள்வதில் அடங்கி விடுவதாகியது.”

சிதைந்து கொண்டிருந்த பார்ப்பனப் பழமையிலிருந்து அன்று வீறு கொண்ட கவிதைகள் பிறக்க வாய்ப்பே இல்லை. கையறு நிலையையும் அவலத்தையும் பிழிந்து தருகின்ற, கவிநயமில்லாத, இசையில் சரணடைந்த பார்ப்பனியத்தின் மனவுணர்வை தியாகய்யரிடம் காணலாம்.

பாரதியின் உள்ளே நுழைந்த புதுமை, கவிதைக்கான உள்ளுணர்வைத் தோற்றுவிக்கப் போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் கவிஞனுக்குள்ளே கனவு போலப் பாய்ந்து பெருகும் கவிதையுடன் அவன் வாழ்வு முடிந்து விடுவதில்லை. கவிதை முடிந்த பின்னும் கவிஞன் இருக்கிறான். அவனுக்கு வசப்படாத, அவனுடைய விருப்பத்துக்கு எதிராக இயங்குகின்ற புற உலகை அவன் சந்தித்தாக வேண்டும். அதன்மீது அறிவு பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டாக வேண்டும்.

ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் பாரதி வெளியிட்ட அரசியல் கருத்துக்களும், அவனது வாழ்க்கையும் பரிசீலிக்கப்பட்டால் இதனைப் புரிந்து கொள்ள இயலும்.

முற்போக்கான கவிதைகள் என்று கூறப்படும் கவிதைகளைப் பாடிய போதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்து தேசியம்தான் அவனது அரசியலாக இருந்தது. மிதவாதத்தை எதிர்த்த போதும் திலகருடன் அரசியல் களத்தில் பாரதி இறங்கவில்லை. வங்காளத்துத் தீவிரவாதிகளின் பாதையையும் பாரதி நிராகரித்தான். பிறகு மிதவாதத்திற்கு மாறினான். இறுதியில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைக் கூடக் கண்டிக்குமளவுக்கும், பூரண விடுதலை கோரவில்லை என்று கூறும் அளவுக்கும் கீழிறங்கினான்.

தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவித்தார்; முஸ்லீம் கடையில் டீ குடித்தார்; சுருட்டு பிடித்தார்; மீசை வைத்தார்; பூணூலை அறுத்தெறிந்தார்; அல்லாவுக்குப் பாட்டு எழுதினார்… என்று பாரதியின் மேன்மைகளைப் பட்டியலிட்டு பாரதியின் வாழ்வும் அவனது படைப்பு ஆளுமையும் பிசிறின்றி ஒன்றிணைந்திருந்தன என்று நிரூபிக்க முயல்வது பாமரத்தனம் அல்லது ஏமாற்று வித்தை.

கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டிய பாரதி வருண தருமத்தை மீண்டும் நிலை நாட்டுவதையே தனது கொள்கையாகக் கொண்ட வ.வே.சு. ஐயருடன் நண்பனாக இருந்தார். காந்திக்காகத் தனது கூட்டத்தை ஒரு நாள் கூடத் தள்ளி வைக்கச் சம்மதிக்காத “கம்பீரமான’ பாரதி மகளின் திருமணத்திற்காகப் பூணூலை மாட்டிக் கொண்டார். சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கொரு நீதி என்றெழுதிய பாரதி, “என்னைப் போன்ற (பார்ப்பன) குலத்தில் பிறந்த மனிதனுக்கு சிறைவாசம் எத்தனை கடினமானது” என்று பிரிட்டிஷ் ஆளுனருக்கு எழுதிக் கொடுத்த மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். “இனி அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பிணையில் வெளிவந்த பாரதி எட்டையபுரம் போய் “என்னைப் போல் கவிஞனில்லை” என்று மீசையை முறுக்குகிறார். மன்னனுக்குச் சீட்டுக்கவி அனுப்பிப் பணம் கேட்கிறார்.

இவற்றையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? எந்தத் தராசைக் கொண்டு எடை போடுவது? வியந்து கூறத்தக்க சில சம்பவங்களையும் முகம் சுளிக்கத்தக்க சில சம்பவங்களையும் ஒப்பு நோக்கிப் பார்ப்பதை விட, இவையனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த ஒரு மனிதனின் ஆளுமையை இயக்கிச் சென்றது எது என்ற கேள்விக்கும், அவனது ஆளுமை முன்னோக்கிச் சென்றதா வீழ்ந்து கொண்டிருந்ததா என்ற கேள்விக்கும்தான் நமக்கு விடை வேண்டும்.

முரண்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருந்த இந்தக் கவிஞன் தனது சுய முரண்பாட்டைத் தானே எதிர்கொள்ளும் மனநிலையில் எத்தகைய கவிதையைப் படைத்தான்?

பாரதிக்கு வெளியே ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் மீண்டும் கிளர்ந்தெழத் தொடங்கிய தருணத்தில் பாரதி மிதவாதத்தைத் தன் அரசியலாகத் தேர்ந்தெடுத்தான். தனது நலனுக்கு உகந்த பாதையே இத்தேசத்தின் நலனுக்கு உகந்த பாதை என்று கூறுமளவு தாழ்ந்தான். மிதவாதிகளை “நடிப்பு சுதேசிகள்’ என்றும் “பயக்கட்சி’ என்றும் “விண்ணப்பக் கட்சி’ என்றும் சாடிய பாரதி பஞ்சதந்திரக் கதையைக் காட்டித் தன் நிலையை நியாயப்படுத்தினான்.

பகத்சிங் என்றொரு கவிதையை ஜாலியன் வாலாபாக் பெற்றெடுத்த தருணத்தில் பாரதியின் கவிதை மாயாவாதத்தில் ­மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தது. மாயாவாதக் கவிதைக்கும் பாரதியின் மிதவாத சமரச அரசியலுக்கும் உள்ள உறவைத் தற்செயலானது என்று யாரேனும் கூற முடியுமா?

பாரதியுடைய கவிதையின் சீற்றத்தையும் அவனது தடுமாற்றத்தையும் அனுதாபத்துடன் பரிசீலிப்பதாயின், காந்தியின் அரசியலையும் அனுதாபத்துடன் பரிசீலிக்க வேண்டியிருக்கும். உணர்ச்சித் தளத்தில் இயங்கும் கவிதை மேக ­மூட்டம் போன்றது. எத்தனை ஊடுருவிப் பார்த்தாலும் ஒரு வரம்பிற்கு மேல் பார்வை செல்லாது.

இருப்பினும் நமக்கு உதவும்படியாக, பாரதி விட்ட இடத்திலிருந்து காந்தி தொடங்குகிறார். பாரதியின் சக்தி காந்தியின் ராமனாகவும், கனகலிங்கம் அரசனாகவும், அல்லா பாட்டு “ஈசுவர அல்லா தேரே நாம்’ ஆகவும், பாரதியின் போல்ஷ்விக் எதிர்ப்பு – சோசலிச ஆதரவு காந்தியின் தர்மகர்த்தா முறையாகவும் மறுபிறப்பெடுக்கின்றன. கவிஞனின் “அவலம்” அரசியலுக்கு மொழி பெயர்க்கப்படும்போது அது காந்தியின் தந்திரமாகி விடுகிறது. மகா கவியைத் தொடர்ந்து ஒரு மகாத்மா வருகிறார்.

தங்கள் அவலத்தை யதார்த்தமாக எடுத்துக் கொண்ட சாதாரண ஆத்துமாக்களோ மகாகவியின் அவலத்திற்கும் மகாத்துமாவின் அவலத்திற்கும் கண்ணீர் சிந்துகிறார்கள்.

“என்னதான் இருந்தாலும் பாரதியின் ஆளுமை இதுவல்ல” என்று கூறுவோர் முன், மார்க்ஸின் மேற்கோள் ஒன்றை மீண்டும் சமர்ப்பிப்போம் :

“கவிஞர் பைரனுக்கும் ஷெல்லிக்கும் இடையிலான வேறுபாடு இதுதான்; அவர்கள் இருவரையும் புரிந்து கொண்டவர்களும் நேசிப்பவர்களும் இப்படித்தான் கருதுகிறார்கள். 36 வயதில் பைரன் இறந்தது நல்லது – அவன் மேலும் வாழ்ந்திருந்தால் பிற்போக்கான முதலாளியவாதியாக மாறியிருப்பான். மாறாக, 29 வயதில் ஷெல்லி இறந்தது வருந்தத் தக்கது; ஏனென்றால் அவன் வாழ்க்கை முழுதும் புரட்சியாளனாக இருந்தான். மேலும் வாழ்ந்திருந்தால் சோசலிசத்தின் முன்னோடியாக விளங்கியிருப்பான்”

– மார்க்ஸ் அடிக்கடிக் கூறுவார் என்று அவரது மகள் எலியனார் மார்க்ஸ் கூறியது.

நாம் இவ்வாறு கூறலாம். பாரதி மேலும் 30, 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பகத்சிங், பொதுவுடைமை இயக்கம், ஹெட்கேவார், பெரியார், அம்பேத்கர் ஆகிய அனைவரையும் எதிர் கொண்டிருப்பான்.

ஆனால் யாருடன் கைகோர்த்திருப்பான் என்பதைப் பாரதி அபிமானிகள் கூறட்டும்!

— மருதையன்
____________________________________
புதிய கலாச்சாரம் , அக்டோபர் 2000

____________________________________

 1. பாரதி ஒரு குமாஸ்தாவாகவோ வாத்தியாரகவோ இருந்திருக்கலாமே…அப்படி இருந்திருந்தால் எத்தகைய தொல்லையும் அவருக்கு இருந்திருக்காதே…
  ஏன் இருக்கவில்லை?

  //பாரதியின் சுய முரண்பாடுகள்
  இதைப்பற்றி திரைப்படம் அலசுவதில்லை…இது ஒரு அமர் சித்ர கதா போன்றே எடுக்கப்பட்டிருக்கின்றது…திரைப்படம் என்ற முறையில் இப்படம் பிரமாதமாக எதையும் சாதிக்கவில்லை…

  உலகத்திலுள்ள எல்லா விசயத்த்திலும் குற்றம் / குறை மட்டும் சற்று மிகுதியாக காணும் போக்கு கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்படுவது உண்டு…தோழரின் கட்டுரையிலும் அதைக்காண்கிறேன்…

  //ஆனால் யாருடன் கைகோர்த்திருப்பான் என்பதைப் பாரதி அபிமானிகள் கூறட்டும்!
  அனுமான வலையில் மற்றவர்களை சிக்க வைக்கப்பார்க்கிரார் தோழர்…

  தந்தை பெரியார் படமும் இவர் எடுத்துள்ளார்…அதையும் விமரிசிப்பாரா தோழர்?

 2. Pஆர்ப்பனனாக இருந்தால் அவன் எது செய்தாலும் அதற்கு உரிய மதிப்பு கொடுக்கததேவையில்லை என்
  ற தத்துவத்தில் எழுதப்பட்ட கட்டுரை.

  என்றாலும் புதிய கோணத்தில் இருந்தது.

 3. பாரதியை பார்ப்பனர்கள் புகழ்வதால் அவரை இழிவுபடுத்தியே ஆக வேண்டும் என்ற பார்ப்பன வெறுப்பு கட்டாயத்தால் இந்தக் கட்டுரை எழுதப்பட்டதா அல்லது போல்சுவிக் வழிமுறைகளையும், லெனினையும் பாரதி விமர்சித்தார் என்ற கோவத்தால் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை..

  எதுவாயினும் தோழர் மருதையனின் இந்த விமரிசனத்தை தொடர்ந்து அவரது பெரியாரிய சகா தோழர் மதிமாறன் எழுதிய ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி என்ற நூலை ஆதாரங்களுடன் விமரிசித்து திரு. ம.வெங்கடேசன் எழுதிய விரிவான கட்டுரைத் தொடர் தமிழ் ஹிந்து தளத்தில் ஏற்கனவே வந்திருக்கிறது.. :

  http://www.tamilhindu.com/2012/03/bharathi-greatness-and-false-defamations-1/

  மேலும் ஒரு சில கருத்துக்கள் :

  //பாரதியிடம் நாம் காணுகின்ற பிரச்சினை அவனுக்கும் ச­மூகத்திற்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால் விளைந்ததல்ல; தன்னுடைய கவிதையின் உணர்வில் அவனால் ஏன் வாழ முடியவில்லை என்பதுதான் விடை தேட வேண்டிய கேள்வி. கவிதையின் கனவுலகில் வாள் சுற்றிய பாரதி அரசியலின் நனவுலகில் சரணடைகிறான். அவன் எழுதிய கவிதை வரிகளால் மற்றவர்கள் எழுச்சி பெற்ற தருணத்தில் அவன் எதிரிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.//

  ஏன் எழுத மாட்டான்..?! அரசியல் கைதிகளை குற்றவாளிகள் போல் செக்கிழுக்க வைத்தும், தொழு நோய் வரைக்கும் கொண்டு வந்து விட்டும், மிகவும் அவமானகரமான முறையில் ஒடுக்கும் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக எதிர்பார்த்த வகையில் மக்களின் எழுச்சி ஏற்படவேயில்லை என்பதை கண்டவன் தானே பாரதி.. சுதந்திர விருப்பையும், சுயமரியாதை எண்ணங்களையும் அளவுக்கு அதிகமாக வளர்த்து வைத்திருந்த பாரதிக்கு ஆங்கிலேயனின் சிறையில் ஏற்படும் அவமானங்களை சகிக்கும் மனக்கட்டுப்பாடு இருந்திருக்கவில்லை.. பூனையில் கையில் சிக்கி அவமானப்பட்டு சின்னாபின்னமாவதை விட தன் கீதத்தை நிறுத்திக் கொள்வதாக கூறிவிட்டது அந்த குயில்..

  // இவற்றையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? எந்தத் தராசைக் கொண்டு எடை போடுவது? வியந்து கூறத்தக்க சில சம்பவங்களையும் முகம் சுளிக்கத்தக்க சில சம்பவங்களையும் ஒப்பு நோக்கிப் பார்ப்பதை விட, இவையனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த ஒரு மனிதனின் ஆளுமையை இயக்கிச் சென்றது எது என்ற கேள்விக்கும், அவனது ஆளுமை முன்னோக்கிச் சென்றதா வீழ்ந்து கொண்டிருந்ததா என்ற கேள்விக்கும்தான் நமக்கு விடை வேண்டும். //

  காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வந்த புலி தன் கம்பீரத்தைக் காட்டிவிட்டு வேட்டைக்காரர்களால் பிடிபட்டு சிறுத்துப் போவதை வெறுத்து மீண்டும் காட்டிற்குள் ஓடிவிட்டதாக எண்ணிக் கொள்ளவும்.. புலி பயந்து ஓடி விட்டது, இனி வேட்டைக்காரர்களே நம் எஜமான்கள் என்று மற்ற விலங்குகள் எண்ணிவிடாமல், நாமும் புலியாவோம் என்று துணிந்தால் வேட்டைக்காரர்கள் ஊரை விட்டு ஓடுவார்கள்.. இல்லையென்றால் நட்டம் புலிக்கல்ல..

  // “வெட்டி வீழ்த்த வா” என்ற கவிஞனின் வரிகளை நம்பி (அதாவது அந்த மன உணர்வுக்கு ஆட்பட்டு) நீங்கள் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், கவிஞர் எதிரிக்கு முதுகு சொறிந்து கொண்டிருக்கலாம். //

  விரும்பி முதுகு சொறியும் கவிஞர்களுக்கும், முதுகு சொறியாவிட்டால் விரல் இருக்காது என்று வலுக்கட்டாயமாக முதுகு சொறிய வைக்கப்பட்ட கவிஞர்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணரமுடியாவிட்டால், அடக்குமுறையாளன் மீது செலுத்தப்பட வேண்டிய சினம் அடக்கப்பட்டவனை ஏளனம் செய்து கொண்டிருக்க மட்டுமே பயன்படும்..

  // நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வோரென்றும், வாய்ச் சொல் வீரரென்றும் காங்கிரசு மிதவாதிகளைச் சாடிய பாரதி,

  ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டு நாடே கிளர்ந்தெழுந்த தருணத்தில் “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்ட” கோழையாக ஆனது எப்படி என்ற கேள்விக்கு விடையில்லை. //

  மீண்டும் சிறைக்குப் போகவா..?! வறுமையின் கொடுமைக்கும், சமூகத்தின் புறக்கணிப்புக்கும் அஞ்சாத பாரதி சிறைவாசத்தின் அவமானங்களை வெறுத்தான்.. சிறைவாசத்தின் மீது பாரதிக்கிருந்த இந்த அச்சத்தின் அடித்தளம், தன்னைப்பற்றி அவன் கொண்டிருந்த அளவுக்கதிகமான சுயமதிப்பு.. எதிரியிடம் பிடிபட்டு அவமானபடுத்தப்படுவதை விட தற்கொலை செய்து கொள்ளும் வீரர்கள் கோழைகள் என்றால், 1918-லேயே – ஜாலியன்வாலா பாகிற்கு முன்பே – தற்கொலை செய்துகொண்டுவிட்ட பாரதியும் கோழைதான்.. ஊமையாகிப் போன விடுதலைக் குயிலிடம் இரக்கம் வராமல் ஏளனம் மட்டுமே வருவது ஏனோ..?!

  // கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டிய பாரதி வருண தருமத்தை மீண்டும் நிலை நாட்டுவதையே தனது கொள்கையாகக் கொண்ட வ.வே.சு. ஐயருடன் நண்பனாக இருந்தார்.//

  பெரியார் ராஜாஜியுடன் நட்புடன் இருந்தால் அது போற்றப்படும்..

  // காந்திக்காகத் தனது கூட்டத்தை ஒரு நாள் கூடத் தள்ளி வைக்கச் சம்மதிக்காத “கம்பீரமான’ பாரதி மகளின் திருமணத்திற்காகப் பூணூலை மாட்டிக் கொண்டார். //

  பூணூலுடன் பாரதிக்கு என்ன பகை..?!

  // சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கொரு நீதி என்றெழுதிய பாரதி, “என்னைப் போன்ற (பார்ப்பன) குலத்தில் பிறந்த மனிதனுக்கு சிறைவாசம் எத்தனை கடினமானது” என்று பிரிட்டிஷ் ஆளுனருக்கு எழுதிக் கொடுத்த மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். //

  (பார்ப்பன) என்பது உங்கள் இடைச் செருகல்.. அதுவரை சுதந்திரமாக பறந்து கொண்டிருந்த பாரதி காக்கை, குருவி எங்கள் ஜாதி என்றும் பாடியிருக்கிறான்.. காக்கையையும், குருவியையும் கூண்டுக்குள் அடைத்தால் அவையும் இதைத்தான் பேசும்.. ஆனால் அது நம் காதில் விழாது..

  // “இனி அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பிணையில் வெளிவந்த பாரதி எட்டையபுரம் போய் “என்னைப் போல் கவிஞனில்லை” என்று மீசையை முறுக்குகிறார். மன்னனுக்குச் சீட்டுக்கவி அனுப்பிப் பணம் கேட்கிறார். //

  பாரதி தன் ஈகோவுக்காக அரசியலை விட்டதே சிறைவாசத்தின் அவமானங்களிலிருந்து தப்புவதற்குத்தானே.. வெள்ளைக்காரனுக்கு ஒரு பெரிய கும்பிடு என்று சேர்த்த கைகளை எட்டையபுரத்திலும் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ..?!

  // பாரதி மேலும் 30, 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பகத்சிங், பொதுவுடைமை இயக்கம், ஹெட்கேவார், பெரியார், அம்பேத்கர் ஆகிய அனைவரையும் எதிர் கொண்டிருப்பான்.

  ஆனால் யாருடன் கைகோர்த்திருப்பான் என்பதைப் பாரதி அபிமானிகள் கூறட்டும்! //

  அம்பேத்கருடன்..

 4. மகா க(கா)வி பாரதி யார்?
  கி.தளபதிராஜ்

  அகண்ட பாரதம் ஆரியநாடு!
  நால்வர்ணம் நாட்டுநலன்!
  பசுவதை தெய்வக்குற்றம்!
  இந்தி பொதுமொழி!
  சமஸ்கிருதம் தெய்வபாஷை!
  மதமாற்றம் தடைசெய்!

  RSS எனும் பச்சைப்பார்ப்பன இயக்கம் தோன்றும் முன்னரே இம் முழக்கங்களுக்கு சொந்தக்காரன்!.
  RSS இயக்கத்தின் முன்னோடி!.தன் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலதை கிறுக்கி தன்னை முற்போக்காளனாய் காட்டிகொள்ளும் வித்தையில், கை தேர்ந்தவன்!-ஆரிய சனாதன வெறிபிடித்த பாரதி, !.அதனால்தான்

  “வேதம் அறிந்தவன் பார்ப்பான்-பல
  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்”

  என்றான் போலும்!

  அகண்ட பாரதம் ஆரியநாடு!

  “உன்னத ஆரிய நாடெங்கள் நாடே”-என்றும்

  “வானாறு பேரிமய வெற்பு முதல்
  பெண்குமரி யீராகும் ஆரியநா டென்றே யறி!”-என்றும்

  இந்திய நாட்டை முன்று சதவீத பார்ப்பனர்களின் நாடாகப் பாடிமகிழ்ந்தான்!.

  “ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
  பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே”

  “வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
  ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்”. -என்று புலம்பினான்!.

  நால்வர்ணம் நாட்டுநலன்!

  பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும்.நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்ற வர்ணாஸ்ரம வெறிபிடித்த பாரதி

  “நாலு குலங்கள் அமைத்தான் – அதை
  நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்”-என்றான்.

  “நான்கினில் ஒன்று குறைந்தால்
  வேலை தவறிச் சிதைந்தே – செத்து
  வீழ்ந்திடும் மானிடச் சாதி”-என்று ஒப்பாரி வைத்தான்.

  சர்.பிடி.தியாகராயர்,டி.எம்.நாயர்,சி.நடேசனார் ஆகியோர் தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற பெயரில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை தோற்றுவித்தபோது, அதற்கு எதிர்வினையாற்றியவன் பாரதி!
  “பொய்யும் புனைவுமாகத் திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும்.இந்தப் பிராமணரல்லாதார் கிளர்ச்சி கால கதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன”என்றான்.

  பசுவதை தெய்வக்குற்றம்!

  “பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும்பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்தாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும்” என்று 1917 லேயே சுதேசமித்திரன் ஏட்டில் பசுவதை தடை கோரியவன் பாரதி!

  இந்தி பொதுமொழி!

  இந்தியாவின் தேசியமொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று 1906ல் “இந்தியா” வார ஏட்டில் “இந்திபாஷை பக்கம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதினான்.“தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். ஹிந்திப் பாஷையை எதிர்க்க என்ன அவசியம் இருக்கிறது என்று கேட்கிறோம். இந்தியா பலவித பிரிவுகளுடையதாய் இருந்த போதிலும் உண்மையிலே ஒன்றாய் இருப்பதற்கினங்க, அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும் ஹிந்தியும், தெலுங்கர் தெலுங்கும் ஹிந்தியும், பெங்காளத்தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்பார்களானால் நமக்குப் பொதுப்பாஷை ஒன்றிருக்கும்”. (பாரதி தரிசனம்)

  சமஸ்கிருதம் தெய்வபாஷை!

  செத்தமொழி சமஸ்கிருதத்தை தெய்வபாஷை என்று உயர்த்திப்பிடித்தவன் பாரதி!
  “நம் முன்னோர்களைப் பின்பற்றி புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் சமஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற சாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்”.(பாரதியார் கட்டுரைகள்)

  “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
  இனிதாவ தெங்கும் காணோம்”

  என்கிறப்பாடலைக்கூட பாரதி 1915 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்ச்சங்கத்தின் பரிசுப் போட்டிக்காக நண்பர்களின் வற்புறுத்தலினால் எழுதியதாக கூறப்படுகிறது.எனவே இப்பாடலும் பாரதிக்கு தமிழ்மேல் இருந்த காதலால் எழுதப்பட்டது அல்ல என்பது புலனாகிறது.

  மதமாற்றம் கூடாது!

  பஞ்சத்தில் பசியால் வாடிய மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவந்த கிருத்துவப்பாதிரியார்கள் மீது சீறிப்பாய்ந்தான் பாரதி.”எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்களையும், முக்கியமாக திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள்.

  ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை மீண்டும் நமது இந்து சமூகத்திலே சேர்க்க வேண்டும். (பாரதியார் கட்டுரைகள்)

  1921 இல் “லோக குரு பாரதமாதா” என்ற தலைப்பில் “இந்தியாவிற்குச் சுதந்திரம் கேட்பதே இந்து தர்மத்தைக் காப்பாற்றத்தான்” என்று எழுதியுள்ளான்.(பாரதியார் கட்டுரைகள்)

  பாரதியும் மீசையும்!

  பார்ப்பன தர்மத்திற்கு எதிராக மீசை வளர்த்தான் பாரதி என்று சிலாகிப்பர் சிலர்.பாரதியின் மீசை பார்ப்பன தர்மத்திற்கு எதிரானதா? தான் மீசை வளர்த்த கதையை அவரே சொல்கிறார்!.

  “வேத பூமியாகிய ஆரிய வர்த்தத்தில் பிராமணர்களில் மீசை இல்லாமலிருப்பது சாஸ்திர விரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவனுடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போனதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருஷங்களுக்கு முன்பு நான் ஸ்ரீகாசியில் ஜயநாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசிக்கப் போனேன். நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ்நாட்டுப் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகச்சவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.

  எப்போது பார்த்தாலும் இவன் மீசையை சிரைத்து விட்டு வருவதன் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளேயே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத்தீர்த்தான். ‘உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரம் தவறாமல் செத்துப் போய்க் கொண்டிருக்கிறீர்களா? என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதன் காரணத்தை அறிந்து கொண்டு, “அப்படியில்லையப்பா! தமிழ்நாட்டில் பிராமணர் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை என்று தெரிவித்தேன்.”என்கிறார். (பாரதியார் கட்டுரைகள்). எனவே வடநாட்டு ஆரியர்களின் கலாச்சார முறையைப் பின்பற்றியே பாரதி மீசையை வைத்துக் கொண்டார் என்பது தெரிகிறது.

  ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கோருவதும்,வெள்ளையன் கையில் அகப்படாமல் ஓடிஒளிந்து, தலைமறைவு வாழ்கை வாழ்வதுமாக இருந்த பாரதியின் மீசையை வீரத்தின் அடையாளமாக பலர் புகழ்வதைக்கண்டு எப்படி சிரிப்பது எனத் தெரியவில்லை!.

  “அச்சமில்லை அச்சமில்லை” என்று அவன் பாடியதை நினைக்கையில், கோழைகள் இருள் சூழ்ந்த பகுதிகளைக் கடக்கும்போது பயம் தொற்றிகொள்ளாமல் இருக்க உரத்த குரலில் பாடிகொண்டோ,பேசிகொண்டோ நடக்கும் பழக்கம் இன்றும் கிராமப்பகுதிகளில் உண்டு.அதுதான் நினைவிற்கு வருகிறது.பாரதியின் “அச்சமில்லை அச்சமில்லை” பாடலும் அந்தவகையில் எழுந்தது தானோ?

  பாரதி ஆராய்ச்சி!

  திராவிட இயக்கத் தோழர்களே கூட பாரதியின் ஒருசில பாடல் வரிகளை பார்த்துவிட்டு தவறான மதிப்பீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். 1937 லேயே “பாரதி ஆராய்ச்சி” என்ற தலைப்பில் குடியரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரை இதற்கு தக்க பதிலாக அமையும்!.

  “பாரதியை ஒரு தெய்வமாக பாவித்து, அவருடைய படத்துக்கு மாலைபோட்டு, தீப நெய்வேத்தியங்கூட சிலர் செய்கிறார்கள்.இப்படியெல்லாம் செய்வதற்கு காரணம் பார்ப்பனர்களின் சூழ்ச்சிப் பிரச்சாரமும், பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிகையுமே ஆகும்.

  இந்தக் கொண்டாட்டங்களுக்கு முக்கிய காரணம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதேயாகும்.ஒரு பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும் , ஒழுக்கங்கெட்டவனாயிருந்தாலும், துர்பழக்கமுடையவனாயிருந்தாலும், பேடியாயிருந்தாலும், பித்துக்குளியாய் இருந்தாலும் அவனைப்பற்றி அவனுடைய குற்றங்களையெல்லாம் மறைத்து “இந்திரன்” என்றும் “சந்திரன்” என்றும் உயர்த்திப் பேசி, எழுதி அதன் மூலம் தங்கள் இனப்பிழைப்புக்கு வழிதேடிக் கொள்கிறார்கள்.இந்த அடாத காரியத்துக்கு தகுந்த வசதிகள் அவர்களுக்குத் தாராளமாய் இருக்கின்றன.

  மனு ஆட்சி எப்படியாவது ஏற்படவேண்டும் என்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கொண்டிருக்கும் பொழுது, அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களை பார்ப்பனர்கள் கை நழுவ விடுவார்களா? பாரதி அநேக பாடல்களை குடிவெறியில் பாடியிருக்கிறார்.அவர் நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம்.

  பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால் பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும்,இந்தியா அவர்களுக்கு சொந்த சொத்து என்றும், அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்ததென்றும் கருதியே வந்திருக்கிறார் என்பதுதான்!. பார்ப்பனரின் நிலைமை உயர வேண்டுமென்பதே அவருடைய நோக்கமென்றும் தெரிகிறது. இதற்கு மாறாக அவரைப்பற்றி நினைத்துகொள்ள “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே”, “தமிழ்மொழி போல் எங்கும் காணோம்” என்ற வரிகள் எடுத்துக்காட்டப் படுமானால் அப்படி இரன்டொன்று பாடியிருப்பதும் கூடக் குடிவெறி என்று தான் சொல்லவேண்டும்”

  (குடியரசு 17.10.1937)

  • //அநேக பாடல்களை குடிவெறியில் பாடியிருக்கிறார்.அவர் நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம்.//

   It is not drinking but “kanja pugai”

  • // “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
   இனிதாவ தெங்கும் காணோம்”

   என்கிறப்பாடலைக்கூட பாரதி 1915 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்ச்சங்கத்தின் பரிசுப் போட்டிக்காக நண்பர்களின் வற்புறுத்தலினால் எழுதியதாக கூறப்படுகிறது.எனவே இப்பாடலும் பாரதிக்கு தமிழ்மேல் இருந்த காதலால் எழுதப்பட்டது அல்ல என்பது புலனாகிறது. //

   1915-ல் நாடறிந்த தமிழ்க் கவிஞன் பாரதி, தமிழ்ச் சங்க பரிசுப் போட்டி பரிசுக்காகவும், நண்பர்களின் வற்புறுத்தலுக்காகவும் மேற்கண்டவாறு பாடித் தொலைத்தான், தமிழ் மீது இருந்த காதலால் அல்ல என்பது புலனாகிவிட்டதாக கூறுபவர்கள் மறுவிசாரணை செய்ய மேலும் ஒரு சில ஆதாரங்கள்..:

   (அதே 1915-ல் புதுச்சேரியில் இருந்த பாரதி, பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்கு எழுதிய கடிதத்திலிருந்து)

   ” தம்பி, – நான் ஏது செய்வேனடா!

   தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.

   தம்பி – உள்ளமே உலகம்

   ஏறு! ஏறு! ஏறு! மேலே, மேலே, மேலே!

   நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி.

   உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ.
   பற! பற! – மேலே, மேலே, மேலே.

   •••

   தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது.
   தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது

   தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.

   அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது.

   தமிழ்நாட்டில் ஒரே ஜாதிதான் உண்டு. அதன் பெயர் தமிழ் ஜாதி, அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது.

   ஆணும் பெண்ணும் – ஓருயிரின் இரண்டு கலைகள் என்றெழுது.

   அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.

   பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.

   பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.

   தொழில்கள், தொழில்கள் என்று கூவு.

   தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பவன் மேற்குலத்தான் என்று கூவு.

   வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக.

   முயற்சிகள் ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திர நூல், பூமி நூல், வான நூல், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.

   சக்தி, சக்தீ, சக்தீ என்று பாடு.

   தம்பி – நீ வாழ்க. ”

   http://www.mahakavibharathiyar.info/kadithangal/parali_su_nellayappar.htm

  • தமிழில் ஆரியர் என்ற சொல்லுக்கு உயர்ந்தோர், சான்றோர், Noble என்ற கருத்துக்களும் உண்டு. அது பார்ப்பனர்களை மட்டும் குறிப்பதல்ல. உதாரணமாக, யாழ்ப்பாண அரசர்களுக்கு ஆரியச்சக்கரவர்த்திகள் என்ற பட்டப் பெயர் உண்டு. அவர்களில் யாரும் பார்ப்பனர்களல்ல, வடக்கிலிருந்தும் வரவில்லை. அதனால் சான்றோர் வாழும் நாடு, “உன்னத, உயர்ந்த (ஆரிய) நாடெங்கள் நாடே” என்ற கருத்திலும் பாரதியார் பாடியிருக்கலாம் அல்லவா? எல்லாவற்றுக்கும், ஆரிய-திராவிட சாயம் பூசி, தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வன் பாரதியை வசைபாடுவது உண்மையான தமிழர்களுக்கு அழகல்ல.

   • இப்படி ஆறுதல் அடைய வேண்டாம், வியாசரே! இந்த நினைப்பில்தான் நானும் ஆரிய குலத்தவன் என்றுபல அரசர்களை ஏமாற்றி சதுர்வேதி மங்களங்களை தான்மாய் பெற்றனர்! சாதாரண படைத்தலைவனாக இருந்த விஜயாலயனை, ராமாயண காலத்து இட்சுவாகு வம்சத்தவன் என்று அவனையும் நம்பச் செய்தவர்களல்லவா! இது தான் ஆரிய கூத்து என்பது! “உன்னத, உயர்ந்த (ஆரிய) நாடெங்கள் நாடே” என்ற கருத்திலும் பாரதியார் பாடியிருக்கலாம் அல்லவா? இது தமிழ்னாட்டை பற்றி மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவை பாடியது! இதைதான் ஆர் எஸ் எஸ் கூறுகிறது! தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வன் பாரதி, ஆரிய தாசனாக பாடியது! பின்னர் ‘பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே’, ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்றும் தான் பாடினான், அதையும் சொல்லியிருக்கலாம்!

 5. பாரதி மானூடபுலவன் ! அக்ரகாரத்து அதிசய மனிதன் ! சாதியை பார்த்து சிரித்தவன் ! தலைநிமிர்ந்தவன் ! இன்னமும் பேச படுபவன் !

 6. Respected தோழர் மருதையன்

  I have only one question to you?

  Kindly answer it, பாரதி told him friend, my daughter marry one SC person, after some years, If she told in a particular place, I am living with my life partner very good manner.

  That moment only is happiest moment in my life.

  He may believe god, or he may feared fellow, or he may run to pondi for him life.

  Everything his okay, But still பாரதி is Socialist, Communist only, finally but not least Because of him Tamil only we got it very good poem in Tamil.

  Regards
  Udayan

 7. பாரதியை பயித்தியக்காரன் என்று ஒதுக்கிவைத்த கூட்டமே, இன்று பாரதி எங்கள் ஜாதி என்பது ஏன்? பாரதி ஒரு தமிழ் கவிஞன்! உணர்ச்சி மிகும்போது ஆக்ரொஷமாக பழமையை எதிர்த்து இருக்கிரான்! அப்பொது இருந்த நிலவரப்படி, சுதந்திர போராட்டம் ஆரிய தலைவர்களால் முன்னெடுக்கபபட்டு வந்தது! ஆரிய பெருமை பாரதியையும் விட்டுவைக்கவில்லை!

  ‘ஆயிரம் உண்டிங்கு சாதி! எனில் அன்னியர் வந்து புகல் என்னநீதி?’ என்று சமத்காரமாக ஆரிக்குரல் கொடுத்தவன்! வ உ சி முதலியோரின் பழக்கத்திற்கு பின்னரே, ‘பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே’ என்று பாடியவன்! அவன் தன்மானம் மிக்க உணர்ச்சி கவிஞன் மட்டுமே! போராளிகலுக்கு உணர்ச்சியூட்டும் முழக்கங்களை தமிழில் அறிமுகப்படுத்தியவன்! அவன் எந்த சித்தாந்த வாதியோ, போராளியோ இல்லை!

  அண்ணாவின் பாசறையில் இனி பிழைக்க முடியாது என்றானபின்,அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன், பின்னாளில் யேசு காவியமும் பாடினான் அல்லவா! கம்பன் ராமாயணம் பாடியது போல! இந்த கவிஞர்களெல்லாம், சமூதாய மாற்றம் தேடிய பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்துடன் ஒப்பிட முடியாது!

  • // அண்ணாவின் பாசறையில் இனி பிழைக்க முடியாது என்றானபின்,அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன், பின்னாளில் யேசு காவியமும் பாடினான் அல்லவா! //

   கட்சியால் பிழைக்க வேண்டியிருந்த அவல நிலை கண்ணதாசனுக்கு என்றுமே இருந்ததில்லை..

 8. ஏதோ திராவிட கட்சிகள் சார்பில் இணைய த்வேஷிகளால் பிராமணர்களுக்கு கொஞ்சநஞ்சம் பாரதியை பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. மற்றபடி மாமிகள் பேசிக்கொண்டதெல்லாம் ராசாவின் இசை அழ வைத்த காரணத்தால், பாரதி மீதுள்ள பட்சாதாபத்தால் அல்ல.

  //ஜாலியன் வாலாபாக் படுகொலை// இது நடந்தது 1919இல். அச்சமயத்தில் பாரதி ஏறக்குறைய நடைபிணம் ஆகிவிட்டான். 1921இல் மரணம். அய்யா எழுதறதுக்கு முன்னாடி கொஞ்சம் ரூம் போட்டு யோசியுங்களேன்.

  //சிதைந்து கொண்டிருந்த பார்ப்பனப் பழமையிலிருந்து//
  இதெல்லாம் புகைச்சலில் வரும் வார்த்தைகள்.

  //யாருடன் கைகோர்த்திருப்பான் என்பதைப் பாரதி அபிமானிகள் கூறட்டும்!//
  மன்னிக்க வேண்டும். பாராதியுடன் அவர்களில் யார்யார் கைகோத்து இருப்பார்கள் என்று மாற்றிக் கேட்டுக் கொள்ளுங்கள்.

  பெரியாரிடமும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தன என்பதையும் மறந்து விட வேண்டாம். 20வயதிலிருந்து சாகும் வரை எந்த மனிதனாலும் எல்லா கருத்துக்களிலும் ஒரே மாதிரி எண்ணம் கொண்டிருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர் வளரவே இல்லை என்று அர்த்தம்.

 9. கம்பனுக்கு அடுத்து, பாரதி என்ற உணர்ச்சி கவிஞன் தமிழ் கவிதையை பாமரரும் ரசிக்கும்படி எளிமையாக, இயல்பாக வடித்தெடுத்தான்! இது அந்தக்கால இலக்கிய நடைக்கு மாற்றாக புதுக்கவிதை நடைக்கு வித்திட்டது! உணர்ச்சிக்கவிஞன் சிறுவயதிலேயே உருவாகிட்டான்! அப்பொது புரட்சிகரமான விடுதலை இயக்க்த்திற்கு , அவர்களால் விரும்பப்படும் பொருளில் பாடிக்கொடுத்தான்! கொஞ்சம் கொஞ்சமாக சொந்தக்கருத்துக்களை உருவாக்கிகொண்டு கடசிக்காலத்தில் பாடிய கருத்துக்கள் வேறு! சுப்ரமணிய சிவா, வ உ சி போன்றோர் சிறைக்கு சென்றபின்னர் நடை பிணமானான் பாரதி! அவனின் உண்மையான கருத்துக்கள் அவனது கட்டுரைகளில் தெரியக்கூடும்! அவனை கடைசிவரை ஆதரித்த அய்ரொப்பிய பாதிரியும், அவரது மனைவியும் பல விடயங்களில் அவனது சிந்தனைகளை மாற்றி இருந்தனர்! ஆனால் முழுமையான சீர்திருத்த கவிதைகள் முளைக்குமுன் பாரதி என்ற மரம் பாட்டுப்போய்விட்டது! ஒரு கவிஞனின் பரினாம வளர்ச்சி பாதியில்நின்றதால், அவன் முற்பாதியைக்கொண்டு ஆரிய கவியாகவே காணுகிரோம்! அவனது சீடர்கள் பாரதிதாசன் முதலியோர் கவிதைகள் பாரதியின் கருத்துத்தாக்கமாகவே எடுத்துக்கொள்ளலாம்!

  • //கம்பனுக்கு அடுத்து,பாரதி என்ற//-இடைப்பட்ட காலத்தில் தமிழில் கவிஞர்களே உருவாகவில்லையா?

 10. //பெரியாரிடமும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தன என்பதையும் மறந்து விட வேண்டாம். 20வயதிலிருந்து சாகும் வரை எந்த மனிதனாலும் எல்லா கருத்துக்களிலும் ஒரே மாதிரி எண்ணம் கொண்டிருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர் வளரவே இல்லை என்று அர்த்தம்.//

  உண்மைதான்! பிறவியிலேயே எல்லாம் அறிந்து, அய்ந்துவயதில் கவி பாடி, இறைவியே வந்து ந்ஜனப்பால் கொடுத்துதான் பெருமையடையவேண்டும் என்பது அவாள் கதகளில் மட்டுமே காணமுடியும்! பெரியார் தன்மானமும், யாருக்கும் வஞசனை செய்யாத தனிதன்மை வாய்ந்த தலைவர்! அவரது படிப்பு அனுபவமே! அவர் யாரையும் கட்டாயப்படுத்தி தன் கருத்தைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று திணித்தது இல்லை! நாளாக, நாளாக மென்மேலும் பண்பட்டவர்! அவர் இலஙகை புலவர் கதிரைவேலனாரை அவமதித்த தாக கூறுவது காழ்ப்புணர்ச்சியினாலேயெ ! 1907-ல் இறந்த புலவரை, பெரியார் பொதுவாழ்வுக்கு வருமுன்பே எப்படி சந்தித்து இருப்பார்?நாவலரைக்கொண்டு வள்ளலாரை எதிர்த்த பார்ப்பனர் சூழ்ச்சி போலவே இல்லை? வள்ளலாரின் எந்தகருத்துக்காக அவரை இந்து சமயத்திலிருந்தும், சிதன்பரம் கோவிலுக்குள் வரக்கூடாது என்றும் தடை செய்தார்கள்? இந்து மதத்திற்கு இதுதான் கொளகை என்று வகுத்தது யார்? எல்லா கொள்கையும்,நாத்திகம் உட்பட இந்து கொள்கைதானே!நால்வருணத்தையும், கீதையையும் அப்படியே ஏற்றுக்கொண்டால்தான் இந்துவா?

  • வள்ளலாரை யாரும் சிதம்பரம் கோவிலுக்குள் வரகூடாது என்று தடுக்கவில்லை.அவர் சைவசமயத்தில் கலந்து இருந்த வைதிக நெறிகளை நீக்கிவிட்டு ஆதியில் இருந்த தூய சைவநெறியை நிறுவ முயன்றவர் என்று கருத இடமுண்டு.அவரை எதிர்த்தவர்கள் அன்றைய சைவ மடாதிபதிகள்தான்.நாவலர் என்ற வார்த்தைக்கு அவர் கூறிய நல்ல பொருள்களை எல்லாம் விட்டுவிட்டு அல்லாத பொருளை மட்டும் ஆறுமுக நாவலரிடம் கூறி சண்டையை தொடங்கிவைத்தவர்கள் பிராமனர்கள் என்று செவிவழி செய்தி உண்டு.வள்ளலார் உத்தரஞான சிதம்பரத்தை[சத்தியஞான சபை]நிறுவியது தனது வழிபாட்டு முறையை பரப்பதான்.

   • // நாவலர் என்ற வார்த்தைக்கு அவர் கூறிய நல்ல பொருள்களை எல்லாம் விட்டுவிட்டு அல்லாத பொருளை மட்டும் ஆறுமுக நாவலரிடம் கூறி சண்டையை தொடங்கிவைத்தவர்கள் பிராமனர்கள் என்று செவிவழி செய்தி உண்டு. //

    சந்தடி சாக்கில் செவிவழி செய்தி என்று உங்கள் கருத்தை செருகிவிட்டீர்கள்..

    பிறகு ஏன் நாவலர் சபா நடேச தீட்சிதர் உள்ளிட்ட 5 தீட்சிதர்களை முதல் 5 எதிரிகளாகவும், வள்ளலாரை 6-வது எதிரியாகவும் குற்றம் சாட்டி மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் 1869-ல் மானநட்ட வழக்கு தொடர்ந்தார்..?!

    • //உங்கள் கருத்தை செருகிவிட்டீர்கள்//-அம்பி, அது என் கருத்து அல்ல வாசித்த கருத்துதான்.உண்மையை நீங்கள் கூறினால் ஏற்றுகொள்கிறேன்.

  • // அவர் இலஙகை புலவர் கதிரைவேலனாரை அவமதித்த தாக கூறுவது காழ்ப்புணர்ச்சியினாலேயெ ! 1907-ல் இறந்த புலவரை, பெரியார் பொதுவாழ்வுக்கு வருமுன்பே எப்படி சந்தித்து இருப்பார்? //

   நம்பமுடியவில்லையா..?! உங்கள் தனித்தன்மை வாய்ந்த தலைவரின் வாக்குமூலம் இதோ..:

   ” புலவரைப் பற்றி என் கருத்து புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் உரை கூறுவேன். நா.கதிரை வேற்பிள்ளை என்கின்ற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்த போது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவு கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடமும் கண்டேன் என்று சொன்னதற்கு உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு வாந்தி எடுத்து விட்டார் ”

   அதாவது ‘பகுத்தறிவு’ இல்லாத நா.கதிரைவேற் பிள்ளைதான் சுயமரியாதை என்றால் என்ன என்று பொதுவாழ்க்கைக்கு இன்னும் வராத பெரியாருக்கு அன்று கற்றுக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்..

   // நாவலரைக்கொண்டு வள்ளலாரை எதிர்த்த பார்ப்பனர் சூழ்ச்சி போலவே இல்லை? //

   நாவலர் என்னவென்றால் சில பார்ப்பனர்கள் மீதும், வள்ளலார் மீதும் அன்று மானநட்ட வழக்கு போட்டிருக்கிறார்.. நீங்களோ நேர் மாறாக கதை பின்னுகிறீர்கள்..

   • //நம்பமுடியவில்லையா..?! உங்கள் தனித்தன்மை வாய்ந்த தலைவரின் வாக்குமூலம் இதோ..: //

    ஆதாரம் கெட்டால் சொன்னதையே சொல்கிரார் அம்பி! எந்தநூலில் அல்லது எந்த சொற்பொழிவில் பெரியார் இதைக்கூறினார் என்று கூறிப்பிட்டு சொல்லலாமே? ஆதாரமிருந்தால்…

     • இலஙகை தமிழறிஞர் கதிரைவேலனாரை அவமதித்தாக இல்லையே! அவருக்குப்பின் வந்த வேறு ஒரு கதிரைவேலனாராக இருக்கலாம்! இதிலும் பெரியார் அவரை அவமதிக்கவில்லையே! எல்லா தமிழ்புலவர்களும் செக்கு மாடுகள் போல ஆரிய வழியிலேயே செல்வதையும், காசுக்காக கயவனைக்கூட இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து பாடியுள்ளமை குறித்தே இப்படி கூறினார்! புலவரின் ஆணவத்தை, அறியாமையையும் தானே இன்னிகழ்வு காட்டுகிறது!பாரதியும், தனது சின்ன சஙகரன் கதையில், இப்படித்தானே இகழ்ந்திருக்கிரார்! பெரியாரை அவமதிப்பதாக நினைத்து, நல்ல வலைப்பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! http://sites.google.com/site/vijaygopalswami/Home/PeriyarMozhikKolgai.pdf?attredirects=0&d=1

      • திரு வி.க. அவர்களின் குருதான் மேற்கூறிய கதிரை வேலர்.. யாழ்பப்பாணத்தவர், ஆறுமுக நாவலரின் சீடர்.. தமிழறிஞறான அவருக்கு பால் கொடுத்து உபசரித்துவிட்டு நீ ஒரு அறிவு கெட்ட புலவன் என்றால் பால் வெளியே வராமல் என்ன செய்யும்.. வராவிட்டாலும் வாய்க்குள் விரலைவிட்டாவது வெளியேற்றிவிட வேண்டும் என்னுமளவுக்கு அவரது சுயமரியாதையை சோதித்திருக்கிறார் பெரியார்.. இவ்வளவையும் செய்துவிட்டு அவருக்கு வாயாடிப் புலவர் என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கிறார்..

       // பெரியாரை அவமதிப்பதாக நினைத்து, நல்ல வலைப்பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! //

       பெரியாரை அவமதிக்க வேண்டும் என்ற விரதம் எல்லாம் எனக்கு இல்லை.. அவர் செய்து வைத்த அக்குறும்புகளைப் படிக்கும் போது என் பகுத்தறிவு வேலை செய்து விமர்சனங்கள் தானாக வருகின்றன.. 🙂

  • // அவர் யாரையும் கட்டாயப்படுத்தி தன் கருத்தைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று திணித்தது இல்லை! //

   உண்மைதான்.. ஆனால் தன் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை காதில் ரத்தம் வருமளவுக்கு வசை பாடி மகிழ்வித்திருக்கிறார்..

   // நாளாக, நாளாக மென்மேலும் பண்பட்டவர்! //

   கடைசி வரை மேற்படி திருப்பணியைத் தொடர்ந்தவர்..

 11. //வள்ளலாரை யாரும் சிதம்பரம் கோவிலுக்குள் வரகூடாது என்று தடுக்கவில்லை…// அய்யா தேவாரநாயனாரே! வள்ளலாரையும் தடுத்தார்கள், வாரியாரையும் தடுத்தார்கள் என்பதே உண்மை (வள்ள்லார் கண்ட ஒருமைப்பாடு…..ம பொ சி) கடசிக்காலத்தில் வாரியார் அனுமதிக்கப்பட்டார்! பொற்கோவில்களில் இறவனில்லை என்று காடவே புளியமரத்தடி அமர்ந்தார் வள்ளலார்! சைவர் பயன்படுத்தும் திருநீற்றை அவர் தொடக்கூடாது என்றனர்; புற்று மண்ணேநீராக கொடுத்தார்! வில்வம் , துளசி தரக்கூடாது என்றனர்; புளிய இலையை பத்திரமாக கொடுத்தார்! காவி அணிய தடையிட்டனர்; வெண்துகில் அணிந்தார்! கடைசியில் அவர் பாடியதும் அருட்பா அல்ல என்றனர்! மேதாவிகள் கோர்ட்டுக்கு சென்றார்கள்; வெள்ளைக்கார நீதிபதி இவர்கள் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை! ஏனென்றால், பலநூற்றாண்டுகளுக்கு முன்பே இறைவனை அலகில் சோதியன் என்று நாவுக்கரசர் பாடிவிட்டார்!

  • அஜாத சத்ரு அவர்களே!வள்ளலார் கருங்குலியில்[வடலூர் அருகில் உள்ளது] தங்கிய பொழுது சிதம்பரம் சென்று வழிபட்டு வந்தார் என்றும்,அவர் பாடிய திருஅருட்பாவில் 4ம்திருமுறை முழுவதும் சிதம்பரம் நடராஜர்,சிவகாமி மீதும் பாடப்பட்டது என்றும் அவர் வரலாறு கூறுகிறது.அவர் புளிய மரத்தடியில் தங்கியது பற்றி எந்த குறிப்பையும் நான் படித்ததில்லை.அவர் சென்னையை விட்டு நீங்கிய பிறகு கருங்குலியிலும் பிறகு சித்தி வளாக மாளிகையிலும் தங்கினார்.காவி உடை கடின சித்தர்கள் உடையது,வெண்மையே அன்பு நெறிக்கு உடையது என்று ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் அவரே கூறி உள்ளார்.மற்றவர் கூடாது என்பதால் தன் கொள்கைகளை மாற்றிகொள்ளும் இயல்பு அவருக்கு இல்லை.தனெக்கென சங்கம்,கொடி,வழிபாட்டு முறை ஆகியவற்றை உருவாக்கி கொண்டவர் அவர்

  • “அலகில் சோதியன் அம்பலத்தாடுவன்”-திருநாவுக்கரசர் இல்லை,சேக்கிழார்.

    • மணிக்கவாசகரும் சோதியை வழிப்பட்டவர்தான், அவர் கட்டிய ஆவுடயார் கோவிலே சான்று! பார்க்க;
     க்ட்ட்ப்://ட.நிகிபெடிஅ.ஒர்க்/நிகி/%ஏ0%ஆஏ%ஆ4%ஏ0%ஆஏ%BF%ஏ0%ஆஏ%B0%ஏ0%ஆF%81%ஏ0%ஆஏ%ஆஆ%ஏ0%ஆF%8D%ஏ0%ஆஏ%ஆஆ%ஏ0%ஆF%86%ஏ0%ஆஏ%B0%ஏ0%ஆF%81%ஏ0%ஆஏ%ஆ8%ஏ0%ஆF%8D%ஏ0%ஆஏ%ஆ4%ஏ0%ஆF%81%ஏ0%ஆஏ%B1%ஏ0%ஆF%88_%ஏ0%ஆஏ%86%ஏ0%ஆஏ%ஆ4%ஏ0%ஆF%8D%ஏ0%ஆஏ%ஆஏ%ஏ0%ஆஏ%ஆ8%ஏ0%ஆஏ%Bஏ%ஏ0%ஆஏ%ஆ4%ஏ0%ஆஏ%9ஆ%ஏ0%ஆF%81%ஏ0%ஆஏ%B5%ஏ0%ஆஏ%Bஏ%ஏ0%ஆஏ%ஆஏ%ஏ0%ஆஏ%BF_%ஏ0%ஆஏ%95%ஏ0%ஆF%8B%ஏ0%ஆஏ%ஆF%ஏ0%ஆஏ%BF%ஏ0%ஆஏ%B2%ஏ0%ஆF%8D

     மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார்!
     இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது.
     உருவம் இல்லை
     கொடி மரம் இல்லை
     பலி பீடம் இல்லை
     நந்தி இல்லை
     இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

     • மேலும், மாணிக்க வாசகர் கட்டிய கோவிலில்,

      புழுங்கல் அரிசி நெய்வேத்தியம்:
      எல்லா ஆலயங்களிலும் பூசை நடைபெறும்போது பச்சை அரிசியிலே அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த ஆவுடையார் கோயிலிலே 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால்தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும் கீரையும் சேர்த்துப் படைக்கப் படுவது இங்கு மட்டும்தான்.
      இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது.
      உருவம் இல்லை
      கொடி மரம் இல்லை
      பலி பீடம் இல்லை
      நந்தி இல்லை

      இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

      அணையா நெருப்பு:
      6 கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும் அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை.

      உருவமற்ற அருவக் கோயில்:
      தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது. அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம்.

      இப்பொது சொல்லுங்கள் வள்ளலார் மட்டும்தான் பிரிவினை பேசினாரா? நந்தனை போல, மாணிக்கவாசகரை போல, திருஞானசம்பந்தனைபோல, வள்ளலாரும் சோதியில் கலந்தாராம்! என்ன கொடுமை? ஏனையோர் கலக்காதது ஏனோ? சிவபெருமானே நேரில்வந்து, இரு துணைவியரை கூட்டிகொடுத்த ப்ருமை வாய்ந்த தோழர் சுந்தரர் சோதியில் கலக்கவில்லையே ஏன்?

      • அஜாதசத்ரு அவர்களே! வள்ளலார் சீமுக வருடம் தை மாதம் 19ம் நாள் [30-1-1874] இரவு12மணியளவில் “நான் உள்ளே பத்துப் பதினைந்து தின மிருக்கப் போகிறேன்.பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தானிருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்.என்னைக் காட்டிக்கொடார்” என்று கூறி சித்திவளாக மாளிகையில் உள்ள ஒரு அறைக்குள் சென்று திருகாப்பிட்டு கொண்டார்.இருதினங்களில் எதிரிகளால் கலெக்டரிடம்[தென்னாற்காடு] இது குறித்து புகார் தரப்படுகிறது.கலெக்டர் நேரில் வருகிறார்.கதவை திறக்க சொல்கிறார்.பக்தர்கள் மறுக்கின்றனர்.கலெக்டர் தானே கதவை உடைத்து திறக்க செய்கிறார்.உள்ளே வெற்றிடமாக உள்ளது.திருப்ப கதவை காப்பிட சொல்லி வணங்கி விடை பெறுகிறார்.இது குறித்து அரசு ஆவணகுறிப்பில் எழுதி உள்ளார்.[ஆவண குறிப்பின் நகல் சித்திவளாக மாளிகையின் எதிரே வைக்கப்பட்டுள்ளது நேரில் சென்று பார்த்துகொள்ளலாம்].இதுவே வரலாறு.மாற்று வரலாறு கூறவிரும்பினால் தக்க ஆதாரங்களுடன் கூறுங்கள்.சொந்த கற்பனையை கூறாதீர்கள்.

       • எனக்கும் அதைநம்பத்தான் ஆசை! ஆனால், வள்ள்லார் பூட்டிய அறைக்குள் இல்லாதது உண்மையே! ஆனால், உள்ளே சென்றது, அவரின் புரவலர் சொல்லிதான் தெரிகிறது! வள்ளலாரை அமரர் ஆக்குவது என்பது அவர்களதுநோக்கமாக இருக்கலாம், அதனால் உடலை மறைத்திருக்கலாம்! வள்ளலாரின் பெருமைக்கு அவர்தம் அருட்பாவையன்றி, வேறு சித்துவேலைகள் தேவையில்லை! அப்படி சித்து வேலைகளில் அவர் நம்பிக்கை கொண்டவரும் அல்ல!

        • வேலூருக்கு அருகில் உள்ள திருவலம் என்ற சிவ தலத்தில் ஒரு சாமியார் இருந்தார்! அவர் சாக்கு ஆடை மட்டுமே உடுத்தி, மிக எளிமையாய் வாழ்ந்து,நிறைய ஏழைகலுக்கு அன்னதானம் செய்து, கடைசியில் இறந்து போனார்! குருனாதர் இறந்தாலும், பத்து வருடத்திற்கு பின்னர் அவர் மீண்டும் உயிர்பெற்று வருவார் என்று, அவரது சமாதியை வழிபட்டு வந்தனர் அவரது சீடர்கள்! சமாதிக்குள்ளே இருந்து கொண்டே நோய் தீர்க்கிரார் என்றும், மீண்டும் வந்ததும் எல்லாருக்கும் மோட்சமளிப்பார் என்றும் பல கதைகள்! ஆனால் இன்றுவரை குருனாதர் வரவில்லை! பெரியோர்களை அவர்களீன் வாழ்னாளில் செய்த சாதனைக்காக புகழ்வதில் தவறில்லை! மடாலயத்தில் பணம் பண்ணுவதற்காக புதிய அதிசயங்கள் நிகழ்வதாக கூறுவது அறிவுக்கு பொருத்தமானது அல்ல!

         • உலகத்துக்கே நோய் தீர்த்த அவதார புருசர்கள் தன் நோய் என்னவென்று தெரியாமல் மருத்துவமனையில் சென்று மரிக்கிறார்கள்.இதில் மகரிசிகள்,யோகிராஜ்களும் அடக்கம்.மலையையும் மடுக்களையும் ஒப்பிடாதீர்கள்.

         • ஐயா ,

          நாளை சிதம்பரம் செல்கின்றேன். தாங்கள் வருவிர்களா ?
          முடிந்தால் போராட்டத்தை பார்வைஇட,ஆதரவு தர வரவும்
          [1]தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
          [2]தெற்கு வாயில் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம் வாரீர்

          அன்புடன் ,
          கி.செந்தில் குமரன்

        • //எனக்கும் அதைநம்பத்தான் ஆசை!//-பிரச்சனை உங்கள் நம்பிக்கை குறித்தல்ல உண்மை குறித்து.உண்மை என்னவென்று உங்களால் முடிந்தால் ஆதாரத்துடன் நிறுவுங்கள்.வீணாக புலம்பாதீர்கள்!

        • //உள்ளே சென்றது,அவரின் புரவலர் சொல்லிதான் தெரிகிறது!//-அவர் பக்தர்களிடம் கூறியதை அப்படியே கொடுத்துள்ளேன்.ஆனால் நீங்கள் வாய்க்கு வந்ததை கூறுகிறீர்கள்.இதுதான் உங்கள் ஊரில் பகுத்தறிவா?

         • அடிகளார் அவரது புரவலர்களிடம் கூறிச்சென்றார் அன்று சொல்பவர் யார்? திருவலம் சீடர்கள் போன்ற ஆசாமிகள் தானே! போலி சாமியார்களை உருவாக்கி, பக்தி வியாபாரம் செய்து பிழைப்புநடத்துவது இன்றும் நடப்பதுதானே! அன்றும் அதுதான் நடந்தது! அரசு அலுவலர்கள், சந்தேகத்தின் பேரிலேயே அறையை திறந்து பார்த்தார்கள்! எதிர் பார்த்தது போலவே உள்ளே ஒன்றும் இல்லை! இந்த பேறு?, வேறு யாருக்கும் கிடைக்கவில்லையே, மூலனாரையும்,நந்தனாரையும் தவிர! மாணிக்கவாசகருக்கும் ஆனி திருமஞ்சனத்தன்று மோட்சம் கிடைத்ததாக கூறுவர்; ஆனால் அவர் தீயில் இறங்கவில்லை, ஆதிசைவர் அல்லவா? அவர் இயற்பெயர் கூட தெரியவில்லை! காலமும் அறுதியிட்டு கூறமுடியவில்லை, வரலாறு எனப்படும் கதையும் புராணக்கதையாகவே இருக்கிறது! சிதம்பரத்தை போன்றே, அதையும் விஞ்சும் வகையிலும் கோவில் அமைத்தவர், அவர் வாழ்ந்த காலத்தில், யார் எனவே அறியப்படவில்லை ! அவரது ஏடுகள் மட்டுமே சிதம்பரத்தில் கிடைத்தது! அதைக்கொண்டுதான் அவர் மாணிக்க வாசகர் என்று பெயரிடப்படுகிரார்! திருவிளையாடற்புராணம் எழுதிய சேக்கிழார் கற்பனை வளத்துடன்,நரி-பரி கதையையும் சேர்த்துவிட்டார்! ஆதிக்க சைவம் செய்த வேலையை பார்த்தீர்களா? உலகில் எல்லாருக்கும் பொதுவான இறைவன், பிட்டுக்கு ஆசைப்பட்டு பிரம்படி பட்டான் என்று எழுத எப்படி முடிந்தது? அதை நம்புவதற்கு தான் எப்படி முடிகிறது? அய் அய் டி படித்தவர்களுமா நம்புகிரார்கள்?

          • // அதை நம்புவதற்கு தான் எப்படி முடிகிறது?

           இது எவ்வகையிலான ‘நம்பிக்கை’ என்பதை ரெண்டு தொப்பி, மூணு சட்டை என உதாரணங்களோடு விளக்கினாலும் உமது பகுத்தறிவுக்குப் புரியவில்லை. போகட்டும்.

           // திருவிளையாடற்புராணம் எழுதிய சேக்கிழார்

           சேக்கிழார் அல்ல. பரஞ்சோதி முனிவர்.

          • வள்ளலார் 25-1-1872 அன்று தைபூசம் கூடிய நாளில் சத்தியஞான சபையில் சோதி வழிபாட்டை தொடங்கி வைத்தார்.அப்பொழுது முதல் திரளான பக்தர்கள் தைபூச வழிபாட்டிற்கு வர தொடங்கினார்கள்.அவர் திருகாப்பிட்டு கொண்ட 30-1-1874 ம் ஒரு தைபூச நாள்தான்.திரளான பக்தர்கள் முன்பே அவர் அதை செய்தார்.தொழுவூர் வேலாயுதம்,இறுக்கம் இரத்தினம் முதலியார் ஆகிய அனுக்க தொண்டர்கள் உடனிருந்தார்கள்.அந்த சமயத்தில் அவரே தருமசாலை அமைத்து பலருக்கு உணவிட்டு வள்ளல் ஆக திகழ்ந்தார்.அவருக்கு யார் புரவலர்? உங்களை நம்ப சொல்லி நான் வற்புறுத்தவில்லை.வரலாற்றை திரிக்காதீர்கள் என்றுதான் கூறுகிறேன்.

         • குற்றவாளிகளின் வாக்கு மூலத்தை அரசு பதிவு செய்துள்ளது! அதை அப்படியே நம்புவதுதான் உங்கள் ஊரில் பகுத்தறிவா? உண்மையான மகானுபாவர்கள் இதை போன்று சீடர்களின் பக்தி வியாபாரத்திற்காக சோதியிடம் கலந்த சித்துவிளையாடல் புரியமாட்டார்கள்!

          //அவர் பக்தர்களிடம் கூறியதை அப்படியே கொடுத்துள்ளேன்// நீங்கள்நேரில் கண்டு, கேட்டீர்களா தேவாரநாயனாரே? நடக்க சாத்தியமற்ற அதிசயங்கள் இந்தநூற்றான்டிலும் நடக்குமா? இது தான் உங்கள் பகுத்தறிவா? உண்மை என்னவென்று உங்களால் முடிந்தால் நம்பதகுந்த ஆதாரத்துடன் நிறுவுங்கள். வீணாக பூ சுற்றாதீர்கள்!

          • யார் குற்றவாளி? வாதம் செய்வதேன்றால் விளக்கமாக கூறுங்கள்.பொத்தாம் பொதுவில் பேசாதீர்கள்.நான் கூறியது அவரின் கட்டளைகள் என்ற தொகுப்பில் அவரின் கையெழுத்து பிரதியில் உள்ளது.அவரின் கையெழுத்தா இல்லையா என்று நீங்கள் ஆய்வு செய்து நிறுவுங்கள்.பகுத்தறிவு என்றால் கண்ணை மூடிகொண்டு மறுப்பது இல்லை.நடுநிலையுடன் ஆய்வு செய்வது.சித்தர்கள் கூறும் தேக சித்தி விஞ்ஞான அடிப்படையானதுதான்.தமிழன் கண்ட விஞ்ஞானம்.அறிவியல் என்றாலே வெள்ளைகாரன் சொன்னது மட்டும்தான் என்று நம்ப நான் உங்களை போன்ற பகுத்தறிவுவாதி இல்லை.உங்கள் தமிழ் வெறுப்பு காட்டுகிறது நீங்கள் தமிழர் இல்லை என்று.

        • //வள்ளலாரை அமரர் ஆக்குவது என்பது அவர்களதுநோக்கமாக இருக்கலாம்//- யாருடையநோக்கமாக? எப்போதும் உடன் இருக்கும் அடியார்களின் நோக்கமாகவா? இதுல கலாம் வேற பொடுறிங்க.

        • //வள்ளலாரின் பெருமைக்கு அவர்தம் அருட்பாவையன்றி வேறுசித்து வேலைகள் தேவையில்லை!//-அருட்பாவை சரியாக வாசிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது.அருட்பாவின் திரண்ட கருத்துகளில் முக்கியமானது இரண்டுதான்.1.ஜீவகாருண்யுமென்னும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு.2.மரணமில்லா பெருவாழ்வு எனும் சாகாதிருத்தல்.இதை தன் வாழ்வின் மூலம் அவரே நிறுவியுள்ளார்.

         • //.மரணமில்லா பெருவாழ்வு எனும் சாகாதிருத்தல்..// அருட்பாவை சரியாக வாசிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது. அவரே சாகாநிலை என்று விளக்கியிருப்பதை காண்க:

          க்ட்ட்ப்://1.ப்ப்.ப்லொக்ச்பொட்.சொம்/-கிவீஇCப்ட்58ந்/TழJ_ணீய்Dxஈ/ஆஆஆஆஆஆஆஆBஜே/KG7ஏZஎ8ஏஎக்/ச்600/ஊண்DYஈண்G+DஈDஆCTஈCஸ்.ஜ்ப்க்

          • //சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தைப் படிப்பு//-நாலு வேதங்கள் சாத்திரங்கள் ஆகமங்கள் எல்லாம் ஆரவாரமான படிப்பு.//நம் சொந்த படிப்போ விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா வித்தையைக் கற்றனன்//-எனது சொந்த படிப்போ விதுநெறியாகிய சாக கல்வி.அந்த வித்தையை நான் கற்றவன்.//உத்தரம் எனுமோர் பொதுவளர் திசைநோக்கி வந்தனன்//- உத்தரஞான சிதம்பரமாகிய வடலூர் தலத்தை நோக்கி வந்தவன் நான். //என்றும் பொன்றாமை வேண்டிடில் எந்தோழி//-என் தோழியே நீ எப்பொழுதும் இறவாமல் இருக்க விரும்பினால். //நீதான் அதுஇது என்னாமல் ஆடேடி பந்து//-நீ அந்தநெறி இந்தநெறி என்று எண்ணாமல் பந்து ஆடடி. //அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து//-புருவநடுவாகிய சிற்சபையில் அருட்பெருஞ்சோதியை கண்டு ஆடடி அப்படி ஆடினால் நீ மரணமில்லா பெருவாழ்வை பெறலாம்.இதுதான் நீங்கள் சுட்டிய பாடலின் எளிய விளக்கம்.வள்ளலார் பாடலுக்கு கோணார் நோட்ஸ் தேவை இல்லை அனைத்துமே எளிய பாடல்கள்தான்.நீங்கள் வாலை தலையாக பொருள் கொள்வதற்கு நான் பொறுப்பல்ல.ஆயிரம் பாடல்களை மேற்கோள் காட்டலாம் அவர் சாகாதிருப்பதேஞானம் என் கிறார் என்பதை நிறுபிக்க.

     • சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்ற 4வழி முறைகளை சைவம் கூறுகிறது.இதை தாசமார்க்கம்,சற்புத்திரமார்க்கம்,சகமார்க்கம்,சன்மார்க்கம் என்று தமிழ்படுத்தலாம்.மாணிக்கவாசகர் சன்மார்க்கமாகிய ஞான மார்க்கி,வள்ளலாரும் “என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே” என்று கூறுகிறார்.இருவரும் ஒப்பிடதக்கவரே.

  • // பொற்கோவில்களில் இறவனில்லை என்று காடவே புளியமரத்தடி அமர்ந்தார் வள்ளலார்! //

   புளியமரத்தடியில்தான் இறைவன் இருக்கிறான் என்று காடவே அப்படி அமர்ந்தார் வள்ளலார் என்று சொல்லாமல் விட்டீர்களே.. வள்ளலார் தப்பினார்..

   // சைவர் பயன்படுத்தும் திருநீற்றை அவர் தொடக்கூடாது என்றனர்; புற்று மண்ணேநீராக கொடுத்தார்! வில்வம் , துளசி தரக்கூடாது என்றனர்; புளிய இலையை பத்திரமாக கொடுத்தார்! காவி அணிய தடையிட்டனர்; வெண்துகில் அணிந்தார்! //

   வள்ளலார் அவராகவே செய்தவற்றையெல்லாம் யாரோ தடுத்ததால்தான் இப்படிச் செய்தார் என்று அளந்துவிடுகிறீர்கள்..

 12. வள்ளலாரை நாவலர் எதிர்த்தமைக்குக் காரணம், அக்காலச் சூழ்நிலையில், கிறித்தவ மிசனரிமார்கள் தமிழ்நாட்டில் கடலோர மக்களையும், இலங்கையில் தமிழர்கள் அனைவரையும் மதமாற்றம் செய்து கொண்டிருக்கும் போது, சைவத்தில் உட்பிரிவுகள், பிளவுகள் ஏற்பட்டு, சைவர்கள் பிளவுபடுவதை அவர் விரும்பவில்லை. ஏனென்றால் மிசனரிமார்களின் மதமாற்றத்தை சைவத்துக்கு ஏற்பட்ட பாரிய ஆபத்தாக அவர் கருதினார்.

  வள்ளலார் இக்கால கிறித்தவ evangelical போதகர்கள் போன்றவர். அவர்களும் ஒரே பைபிளை அடிப்படையாகக் கொண்டு, தமக்கென, ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு ஒரே கர்த்தரையும், ஏசுவையும் தான் வணங்குகிறார்கள். ஆனால் அவர்களை கத்தொளிக்கர்களோ, வத்திக்கனோ, அல்லது பாப்பாண்டவரோ ஏற்றுக் கொள்வதில்லை. அதற்காக பாப்பாண்டவர் கூடாதவர் என்று எந்தக் கிறித்தவரும் வாதாடுவதுமில்லை.

  • // வள்ளலார் இக்கால கிறித்தவ evangelical போதகர்கள் போன்றவர். அவர்களும் ஒரே பைபிளை அடிப்படையாகக் கொண்டு, தமக்கென, ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு ஒரே கர்த்தரையும், ஏசுவையும் தான் வணங்குகிறார்கள். ஆனால் அவர்களை கத்தொளிக்கர்களோ, வத்திக்கனோ, அல்லது பாப்பாண்டவரோ ஏற்றுக் கொள்வதில்லை. அதற்காக பாப்பாண்டவர் கூடாதவர் என்று எந்தக் கிறித்தவரும் வாதாடுவதுமில்லை. //

   சமணத்தின் ஜீவகாருண்யத்தையும்; அரு, உருவற்ற ஜோதியான பரம்பொருள் என்ற இறை தத்துவத்தையும் ஒருங்கிணைத்தவர் அருட் பிரகாச வள்ளலார்.. எந்த கிறித்தவப் பிரிவையும், இந்து சமயப் பிரிவையும் வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்துடன் ஒப்பிட முடியாது.. அவைகளை எதிர்த்து போராடும் killer instinct-ம் வள்ளலாரின் சன்மார்க்கத்திடம் இல்லை..!

   வள்ளலார் நம்மால் நம்பமுடியாத அளவுக்கு நல்லவராக இருந்தது அவர் குற்றமல்ல.. அவரை பின்பற்ற இயலாத நமது பக்குவின்மையைத்தான் குறை கூற வேண்டியிருக்கும்..

 13. //நாவலரைக்கொண்டு வள்ளலாரை எதிர்த்த பார்ப்பனர் சூழ்ச்சி போலவே இல்லை//

  யாழ்ப்பாண ஆறுமுகநாவலர் பார்ப்பனரையும் தாக்கினார். அவரது நோக்கம் சைவத்தின் சீர்திருத்தமும, மிசனரிகளிடமிருந்து சைவத்தைக் காப்பதும் தான்.

  சைவசமய அனுட்டானங்களில் எங்காவது வெளிப்படையான பெரிய தவறு கண்டால் நாவலர் கொஞ்சமேனும் தயக்கமின்றித் தமது எழுத்துக்களாலும் பிரசங்கங்களாலும் கண்டித்து வந்தார். வியாபார நோக்கோடு சமய அநுட்டானங்களில் தவறி நடக்கும் சைவக் குருமாரைக்கூட அவர் விட்டு வைப்பதில்லை.

  “மரமேறும் வகுப்பினைச் சேர்ந்தவர்களுட் சிலர் கள்ளுண்பதை விட்டு விட்டனர். புலையரிலே சிலர் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தி விட்டார்கள். இங்ஙனமாக அவர்கள் திருந்தி வாழ்கிறார்கள். ஆனால் வெற்று நெற்றி வேளாளர் சிலர் கிறிஸ்தவர்களுடன் கூடிச் சாராயம் குடித்து மாட்டிறைச்சியும் உண்கிறார்கள். இவர்களுடைய திருமணச் சடங்குகளையும் ஈமக்கிரியைகளையும் செய்து வைக்கும் பிராமணர்களும் சைவக்குருமாரும் இருக்கிறார்கள். இவர்களுள் யார் மதிக்கத் தகுந்தவர்கள்? முன்னையவர்களா? பின்னையவர்களா?” இங்ஙனம் தாம் எழுதி வெளியிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றிலே நாவலர் கேட்கிறார்.”

  எல்லாம் வல்ல சிவபெருமானை விட வேறொரு தெய்வம் இல்லை என்று முழுமையாக நம்பிய நாவலர். சிறுதெய்வ வழிபாட்டைக் கண்டித்த்தர். சிறுதெய்வ வழிபாடு ஆகமங்களுக்கு எதிரானது ஆனால் இக்காலப் பார்ப்பனர்களும் பணம் கொடுத்தால், எந்த சுடலைமாடனுக்கும் வந்து பூசை பண்ணி விட்டுப் போவார்கள். ஆனால் அதை அன்றே கண்டித்தார் ஆறுமுகநாவலர். இனி, கண்ணகி கோயில்களிலே சைவக் குருமார் பூசை செய்வதைப் பற்றி நாவலர் கூறுவதைப் பார்ப்போம்.

  “இக்கண்ணகி கோவில்களிலும் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களிலும் நம் சைவ மக்கள் சென்று வழிபடுவது நமது சமயத்துக்கு அடுக்காது என்று அவர் எடுத்துக் காட்டுகிறார். “ஜைன மதச் செட்டிச்சியான கண்ணகியின் இரு மருங்கிலும் விநாயக, சுப்பிரமணிய விக்கிரகங்களை அச்சமின்றி வைத்துப் பூசிக்கும் அதி பாதகர்களாகிய இவர்களும் அன்றோ சைவக் குருமார் என்று கணிக்கப்படுகிறார்கள்” என்று நாவலர் குறிப்பிடுகிறார். பதினேழு நூற்றாண்டுகளுக்கு முன் கஜபாகு மன்னன் இவ்வழிபாட்டு முறையை இலங்கை மக்கள் மீது திணித்தான். அவனுடைய மறைவுடன் இந்த வழிபாட்டு முறையும் மறைந்து போயிருக்கும். ஆனால் நமது சைவக் குருமாரன்றோ இக்கோயில்களில் இன்றும் இவ்வழிபாட்டு முறையைக் கைவிடாது பூசாகாரியங்களைச் செய்து வந்தார்கள். செய்தும் வருகிறார்கள்.”

  நாவலர் தமது காலத்திலிருந்த சைவக் குருமாரையும் கண்டிக்கத் தவறவில்லை. சைவ மக்களை விளித்து அவர் பின்வருமாறு பேசுகிறார்.

  “அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை வரிப்பணமாகத் தொண்ணூறு சதத்தைக் கொடுக்க மனமின்றிக் கொடுக்கிறீர்கள். ஆனால் இந்த அற்ப தொகைப் பணத்திற்கு அரசாங்கம் உங்களுக்கு அருமையான தெருக்களை அமைத்துத் தருகிறது. நீங்கள் எங்கெல்லாம் போக விரும்புகிறீர்களோ அங்கெல்லாம் சௌகரியமாகவும் வசதியாகவும் இத்தெருக்களில் நீங்கள் பயணம் செய்யக்கூடியதாயிருக்கிறது. உங்கள் குருமாருக்கும் நீங்கள் அரிசி, பருப்பு, நெய் என்பவற்றோடு ரூபாக்களாகவும் பணம் கொடுக்கிறீர்கள். அவர்களிடமிருந்து நீங்கள் எதனைப் பெற்றுக் கொள்கிறீர்கள்? உங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் சமயத்தையோ அல்லது நெறி முறைகளையேனுமோ கற்றுத் தருகிறார்களா? உங்கள் கோவில்களிலே ஏதாவது போதனை செய்கிறார்களா? பாடசாலைகளை நிறுவி உங்கள் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுகிறார்களா? சைவசமயத்திலுள்ள எவரேனும் ஒருவர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ விரும்புகிறார் என்று அறிந்தால் அன்னவரை அணுகி, சைவத்தின் மேன்மையை எடுத்துணர்த்தி மிஷனரிக்கு இரையாகாமல் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறாரா? உங்கள் வீடுகளுக்கு வரும் சமயங்களில் கொலை செய்தல், புலால் உண்ணல், மதுவருந்தல் என்பன விலக்கப்பட வேண்டிய பாதகங்கள் என்று இவ்வாறான நெறிமுறைகளை உங்களுக்கு எடுத்துச் சொல்வதுண்டா? மிஷனரிகள் எங்கள் சமயத்தைத் தாக்கிப் பேசும்போது எதிர்வாதம் புரிந்து நமது சமய உண்மைகளை எடுத்து நிலை நாட்டுவதுண்டா? அந்தியேஷ்டி என்ற பதத்தைச் சரியாக உச்சரிக்கக் கூடிய குருமார் எத்தனை பேர் இருக்கிறார்கள்? தச்சர், கொல்லர், சலவைத் தொழிலாளர் என்பவர்களில் தத்தம் தொழில் தெரியாதவரக்ளை நீங்கள் அழைத்து வேலை செய்விப்பீர்களா? அங்ஙனமிருக்கத் தனது பணி செவ்வனே செய்யத் தெரியாத குருக்களை ஏன் நீங்கள் அழைக்க வேண்டும்?”

  • // “ஜைன மதச் செட்டிச்சியான கண்ணகியின் இரு மருங்கிலும் விநாயக, சுப்பிரமணிய விக்கிரகங்களை அச்சமின்றி வைத்துப் பூசிக்கும் அதி பாதகர்களாகிய இவர்களும் அன்றோ சைவக் குருமார் என்று கணிக்கப்படுகிறார்கள்” என்று நாவலர் குறிப்பிடுகிறார். //

   கண்ணகி சமணப் பெண்ணாக இருந்திருந்தால், கோவலன் – கண்ணகி திருமணத்தில் பார்ப்பானுக்கு என்ன வேலை..?!

   ”வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச்
   சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
   மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
   தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை”

   கண்ணகியும், கோவலனும் சைவச் செட்டியார்கள் என்பது தமிழறிஞரான நாவலருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.. இருந்தும் இப்படி அவர் கண்ணகி வழிபாட்டை இடித்துரைக்கும் காரணத்தையும் நீங்களே கூறிவிட்டீர்கள்..:

   // எல்லாம் வல்ல சிவபெருமானை விட வேறொரு தெய்வம் இல்லை என்று முழுமையாக நம்பிய நாவலர். சிறுதெய்வ வழிபாட்டைக் கண்டித்த்தர். //

   நாவலருக்கு சிவபெருமானின் மீதுள்ள பக்தி முத்திவிட்டதால்தான், நம்மூர் பெரியாரிஸ்டுகள் பெரியார் படத்தையும் பாரதி படத்தையும் ஒன்றாக வைத்திருப்பதைப் பார்த்தால் எப்படி கொந்தளிப்பார்களோ அப்படி கொந்தளித்திருக்கிறார் போலிருக்கிறது..!

   • வாசகர்கள் வசதிக்காக அருஞ்சொற்பொருள். ஏதோ என்னால் ஆனது:

    // ”வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச்
    சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
    மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
    தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை” //

    சகடு – ரோகிணி. “வான்ஊர் மதியம் சகடணைய” – சந்திரனை ரோகிணி அணையும் நாள், அதாவது ரோகிணி நட்சத்திரம் கூடிய நன்னாள். “ஒருமீன் தகையாளை” – அருந்ததி போன்ற கண்ணகியை.

   • //மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
    தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை”//

    இங்கு மாமுது பார்ப்பான் என்பது பூணூலணிந்த இக்காலப் பார்ப்பனர்களையல்ல, தமிழர்களை அதிலும் ஆதித்தமிழர்களான பறையர்களைக் குறிக்கிறது என்பது பரவலான ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இவர்கள் சமணர்களாக இருந்தது சமணர்களின் கோயில்களைப் பார்ப்பார்களாக (பராமரிப்போர்)க் கூட இருந்திருக்கலாம்.

    “இந்த சிலப்பதிகார வரிகளின் பொருள்: – “மாமுது பார்ப்பான் – மிகப்பழங்காலந்தொட்டு கோயில் காரியங்கள், குறிசொல்வது, கணியம் பார்ப்பது, சவச்சடங்குகள் செய்வது முதலியவற்றைக் கவனித்துவந்த பழங்குடியினரும் பிற வேலைக்காரர்களும். இவர்கள் தமிழர்கள். வடக்கிலிருந்தோ வெளி நாடுகளிலிருந்தோ வந்தோரல்லர். (எந்தக் குடியினரும் இவ்வேலையில் அமரலாம், சங்ககாலத்திலே. மணமுறைக் கட்டுப்பாடுகள் இல்லை. காதல் திருமணங்கள் நடைபெற்றன.மணக்கொடைமுறை (வரதட்சிணை) இல்லை) இது மாப்புதுப் பார்ப்பான் என்று வந்திருந்தால் புத்தேளிரைக் குறிக்கும், புதுப்பார்ப்பான் வெளியிலிருந்து வந்து பார்ப்பு வேலைகளில் அமர்ந்தவன்”.

    “பார்ப்பான் என்ற சொல் ஆலயத்தைப் பார்த்துக் கொள்வோரைக் குறிக்கிறது. ஆரம்பத்தில் ஆலமரங்களுக்குக் கீழுள்ள ஆலயங்களைப் பார்த்துக் கொள்வோர் பார்ப்பான் என்றழைக்கப்பட்டனர். தமிழகத்தில் பெருங்கற்றளிகள் கட்டப்படமுன்னர் மரங்களின் கீழ் அதிலும் பெரிய ஆலமரங்களின் கீழ் தான் தமிழர்களின் கடவுள் வழிபாடு தொடங்கியது, ஆலமரத்திலிருந்து உருவாகிய சொல்லே ஆலயம். ஆலமர் கடவுள் என்பது சிவனுக்குப் பெயர். அதனால் தான் கல்லால மரத்தின் கீழ் சிவபெருமான் தென்முகக்கடவுளாக வீற்றிருப்பதாகக் கூறுகிறது தமிழர் சைவம். ஆதியில் அந்த ஆலமரத்தடிக் கடவுளைப் பார்த்துக் கொண்ட ஆதித்தமிழன் தான் உண்மையான பார்ப்பானே தவிர வடக்கிலிருந்து வந்த பூணூலணிந்தபூசாரிகளல்ல. அவன் முரசறையும்போது அவனுக்குப் பெயர் முரசறைவோன். முரசும், முரசு கட்டிலும் எந்தளவுக்கு தமிழர்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது யாவரும் அறிந்த்தே. அதே போல் கோயிலைப் பார்க்கும்போது அவன் பார்ப்பவன் – பார்ப்பான்.

    தமிழரல்லாத பூணூல் பூசாரிகள் வடக்கிலிருந்தும் கோதாவரி, துங்கபத்திரை நதிக்கரைகளிலிருந்து தமிழ்மண்ணுக்கு வருமுன்னர், தமிழர்கள் தான் கோயில்களைப் பார்த்துக் கொண்டார்கள். ஆதித்தமிழர்களாகிய வள்ளுவர்களும், முரசறைவோரும் (பறையர்கள்) கோயில்களில் உயர்ந்த பதவிகளிலிருந்து, கோயில்களை பார்த்துக் கொள்பவர்களாகவும், பூசாரிகளாகவும், சோதிட நூல்களை படித்துப் பார்த்துச் சொல்பவர்களாகவுமிருந்தனர். (Tamil Studies, Srinivasa aiyangar). 1891 இல் நடைபெற்ற சனத்தொகை புள்ளிவிவர அறிக்கையில் வடக்கு மற்றும் வடுகப் பூசாரிகளின் வருகையின் முன்னால் பல்லவ அரசர்களின் காலத்திலும் மனுநெறியாளர்களின் வருகையின் பின்னரும் வள்ளுவர் (பறையர்) பூசாரிகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் பார்ப்பனர்களாக இருந்துள்ளனர் (Thurston (1909), Vol. VI, p. 82.) அவர்கள் தான் உண்மையான பார்ப்பான்கள். ஆனால் வடக்கிலிருந்து வந்தவர்களும், வடுகப் பூசாரிகளும் சூழ்ச்சியால் அவர்களின் பார்ப்பனத் தொழிலைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதனால் தான் தமிழில் “பார்ப்பானுக்கு முந்தியவன் பறையன், கேட்பாரின்றிக் கீழ்சாதி ஆனான்” என்ற பழமொழியுருவானது.

    • // இங்கு மாமுது பார்ப்பான் என்பது பூணூலணிந்த இக்காலப் பார்ப்பனர்களையல்ல, தமிழர்களை அதிலும் ஆதித்தமிழர்களான பறையர்களைக் குறிக்கிறது என்பது பரவலான ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இவர்கள் சமணர்களாக இருந்தது சமணர்களின் கோயில்களைப் பார்ப்பார்களாக (பராமரிப்போர்)க் கூட இருந்திருக்கலாம். //

     திருமணத்தில் அருந்ததி பார்த்து, வேள்வித் தீயை வலம் வரும் வழக்கம் சமணத்தில் இருந்ததா..?! இந்தச் சடங்கை பறையர் பூசாரிகள் அக்காலத்தில் நடத்திக் கொண்டிருந்தனர் என்பதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தா..?!

     // “இந்த சிலப்பதிகார வரிகளின் பொருள்: – “மாமுது பார்ப்பான் – மிகப்பழங்காலந்தொட்டு கோயில் காரியங்கள், குறிசொல்வது, கணியம் பார்ப்பது, சவச்சடங்குகள் செய்வது முதலியவற்றைக் கவனித்துவந்த பழங்குடியினரும் பிற வேலைக்காரர்களும். இவர்கள் தமிழர்கள். வடக்கிலிருந்தோ வெளி நாடுகளிலிருந்தோ வந்தோரல்லர். (எந்தக் குடியினரும் இவ்வேலையில் அமரலாம், சங்ககாலத்திலே. மணமுறைக் கட்டுப்பாடுகள் இல்லை. காதல் திருமணங்கள் நடைபெற்றன.மணக்கொடைமுறை (வரதட்சிணை) இல்லை) இது மாப்புதுப் பார்ப்பான் என்று வந்திருந்தால் புத்தேளிரைக் குறிக்கும், புதுப்பார்ப்பான் வெளியிலிருந்து வந்து பார்ப்பு வேலைகளில் அமர்ந்தவன்”. //

     பார்ப்பு வேலை மட்டுமல்ல வேளாண்மையும்,வணிகமும் கூட தொழில் அடிப்படையிலான பிரிவினையே.. சங்க கால வேளாளர்கள்தான் இன்றைய வேளாளர்களா..?! இன்றைய பள்ளர்கள்தான் சங்க கால மள்ளர்கள் என்ற வேளாண்குடிகள் என்ற கருத்து மட்டும் ஏன் ’பரவலாக’ ஏற்றுக் கொள்ளப்படவில்லை..?!

     // 1891 இல் நடைபெற்ற சனத்தொகை புள்ளிவிவர அறிக்கையில் வடக்கு மற்றும் வடுகப் பூசாரிகளின் வருகையின் முன்னால் பல்லவ அரசர்களின் காலத்திலும் மனுநெறியாளர்களின் வருகையின் பின்னரும் வள்ளுவர் (பறையர்) பூசாரிகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் பார்ப்பனர்களாக இருந்துள்ளனர் (Thurston (1909), Vol. VI, p. 82.) அவர்கள் தான் உண்மையான பார்ப்பான்கள். //

     வடக்கு மற்றும் வடுகப் பூசாரிகளின் வருகைக்கு முன்னால், இந்தியா முழுவதும் நிலவி வந்த வைதீக முறையிலான மேற்கூறிய திருமணச் சடங்குகள், வேள்விகள், பூசைகளை தமிழகத்தில் அன்று பார்ப்பனர்களாக இருந்த பறையர்கள் செய்து வந்தார்கள் என்றால் :-

     அன்றும் இன்றும் இருக்கும் சாக்கியப் பறையர்கள், பல்லவர் கால திருமுறைகளில் கூறப்படும் ’ஆவுரித்து தின்று வாழும் புலையர்கள்’ முதலானோர் ஏன் அதற்கு முன்பே ஒதுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும் இருந்தனர்..?! யாரால்..?! புதுப் பார்ப்பான்கள்தான் அப்போது இல்லையே..?!

     // ஆனால் வடக்கிலிருந்து வந்தவர்களும், வடுகப் பூசாரிகளும் சூழ்ச்சியால் அவர்களின் பார்ப்பனத் தொழிலைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதனால் தான் தமிழில் “பார்ப்பானுக்கு முந்தியவன் பறையன், கேட்பாரின்றிக் கீழ்சாதி ஆனான்” என்ற பழமொழியுருவானது. //

     ’கேட்பாரின்றி’ என்றால் கேட்கவேண்டியர்களே அப்போது இல்லையா..?! அல்லது கூட்டுச் சதியா..?! ’புதுப் பார்ப்பான்களால்’ பார்ப்பனத் தொழிலை இழந்த பறையர்கள் அவர்களுக்கு அடுத்த சமூக படி நிலையில் இல்லாமல் எல்லா ‘கேட்க வேண்டியவர்களாலும்’ அழுத்தப்பட்டு, அடிமட்ட நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்..?! எப்போது விழுவான் என்று காத்திருந்து, கீழே விழுந்தவனை மிதித்து நசுக்குவதுதான் தமிழர் பண்பாடு என்கிறீர்களா..?! இப்போதும் பறையர்களின் எழுச்சியை, தங்களுக்கு விடப்படும் சவால் என்று ஒடுக்குபவர்கள் யார்..?! இன்றைய பார்ப்பனர்களா..?! பறையர்கள்தான் பழைய பார்ப்பனர்கள் என்று ’புதுப் பார்ப்பனர்களுக்கு’ எதிராக கருத்துக்களை அள்ளி வீசுபவர்கள், முனைப்பு காட்டுபவர்களெல்லாம் தங்கள் சொந்த சாதிக்கு இணையாக பறையர்கள் உயர விரும்புவதைக் கூட சகிக்க முடியாததேன்..?! பறையர்களை மீண்டும் பார்ப்பனர்களாக்குவதை விட ’இன்றைய’ பார்ப்பனர்களையும் பறையராக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த சுய சாதிவெறிதானே தெரிகிறது..! இந்த நுட்பமான தாழ்த்தப்படுதல் மீண்டும் நடவாது..!

     • //திருமணத்தில் அருந்ததி பார்த்து, வேள்வித் தீயை வலம் வரும் வழக்கம் சமணத்தில் இருந்ததா..?! இந்தச் சடங்கை பறையர் பூசாரிகள் அக்காலத்தில் நடத்திக் கொண்டிருந்தனர் என்பதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தா..?!//

      ஆறுமுகநாவலர் கண்ணகியை ஜைனமதச் செட்டிச்சி என்றார். அதனால் கண்ணகி சமண மதத்தைச சார்ந்தவராக ‘இருந்திருந்தால்’, மாமுது பார்ப்பான்கள் என்பவர்கள் சமணக் கோயிலைப் பாரமரித்தவர்கள் அதாவது பார்ப்பபான்களாக இருந்திருக்கலாமே தவிர இந்த மாமுது பார்ப்பான்கள், இக்காலப் பிராமணர்களைப் போன்ற பூநூலணியும் சாதியினரல்ல என்பது தான் எனது கருத்தாகும்.

      “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட: என்பதில் வரும் மறை கூட ஆரியர்களின் வேதங்கள் அல்ல. சங்கம் கவிதைகளில் மறை என்பது ‘களவு’ ஐக் குறிக்கிறதே தவிர ஆரிய வேதங்களையல்ல. அத்துடன் மறையோர் என்பதும் பிராமணர்களைக் குறிக்கவில்லை, அதனால், பிராமணரல்லாத ஆதித் தமிழ் பார்ப்பான் நிச்சயமாக வேள்வித்தீயை வலம் வரச் செய்திருக்க மாட்டான்.”மறை” என்ற சொல், தொல்காப்பிய நூற்பாவிலேயே இசை நூல்களையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. பறையர் பூசாரிகள், அதாவது புதுப்பார்ப்பான்கள் வருமுன்பிருந்த, மறை (காதல்/களவு) அறிந்த மாமுது பார்ப்பானாகிய வள்ளுவன் தீவலம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தான். ஆனால் அந்த தீவலம் என்பதை வேள்வித்தீ என இக்காலப் பார்ப்பனர்கள் கருத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. அதாவது அந்தக் கருத்து விவாதத்துக்குரியது

      … it becomes clear that marai is an older word for kalavu (which is also etymologically convincing as it means “secret” ). And consequently the maraiyor of the sutra have to be understood as ‘those” who are familiar with secret (love). Now this has later become a source of confusion, because marai came to be understood as Veda and maraiyor as Brahmins – which seems to be the reason for Ilampuranars surprising interpretation of Tamil poetry 489 as intending Brahmins and the Gandharva marriage.

      Book: Literary Techniques in Old Tamil Cankam Poetry by Eva Wilden

      http://books.google.ca/books?id=_f3_3gT_NmcC&printsec=frontcover#v=onepage&q&f=false

      • //பார்ப்பு வேலை மட்டுமல்ல வேளாண்மையும்,வணிகமும் கூட தொழில் அடிப்படையிலான பிரிவினையே.. சங்க கால வேளாளர்கள்தான் இன்றைய வேளாளர்களா..?! //

       அதில் என்ன சந்தேகம்? அவர்கள் வெளியிலிருந்து தமிழ்மண்ணுக்கு வந்ததாக யாரும் நிரூபிக்காத வரை அல்லது அவர்கள் தமிழர்கள் தானா என்று யாரும் சந்தேகம் தெரிவிக்காத வரை, சங்க கால வேளாளர்களின் வழித்தோன்றல்களே இன்றைய வேளாளர்கள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

       //இன்றைய பள்ளர்கள்தான் சங்க கால மள்ளர்கள் என்ற வேளாண்குடிகள் என்ற கருத்து மட்டும் ஏன் ’பரவலாக’ ஏற்றுக் கொள்ளப்படவில்லை..?!//

       அதை நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாமை ஒரு காரணமாக இருக்கலாம், அதை விட பள்ளர்கள், என்ற ஒரு சாதி வேளாளர்களின் கீழ் இருந்தனர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உண்டு.

       //வடக்கு மற்றும் வடுகப் பூசாரிகளின் வருகைக்கு முன்னால், இந்தியா முழுவதும் நிலவி வந்த வைதீக முறையிலான மேற்கூறிய திருமணச் சடங்குகள், வேள்விகள், பூசைகளை தமிழகத்தில் அன்று பார்ப்பனர்களாக இருந்த பறையர்கள் செய்து வந்தார்கள் என்றால்//

       வைதீக முறையில் தொல்காப்பிய காலத்தில் சடங்குகள் நடந்தன என்பது இக்காலப் பார்ப்பனர்களின் கற்பனை மட்டுமல்ல, வரலாற்றுத் திரிப்பும் கூட. அந்தக் கருத்தைப் பலர் எதிர்க்கின்றனர். தொல்காப்பியத்தில் கூறப்படும் நான்மறை என்பது ஆரிய வேதங்களல்ல. அது தமிழர்களின் மூலமறை, வடுகப் பூசாரிகள் ஆகமத்துக்கு என்ன செய்தார்களோ அதையே தமிழர்களின் நான்மறைகளுக்கும் செய்து விட்டார்கள்.

       //அன்றும் இன்றும் இருக்கும் சாக்கியப் பறையர்கள், பல்லவர் கால திருமுறைகளில் கூறப்படும் ’ஆவுரித்து தின்று வாழும் புலையர்கள்’ முதலானோர் ஏன் அதற்கு முன்பே ஒதுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும் இருந்தனர்..?! யாரால்..?! புதுப் பார்ப்பான்கள்தான் அப்போது இல்லையே..?!//

       ஆதித்தமிழர்கள் ஆவுரித்துத் தின்றுழலும் அளவுக்கு ஒதுக்கப்பட்டது புதுப்பார்ப்பனர்களின் வருகையால். திருநாவுக்கரசர் “ஆவுரித்து தின்றுழலும் புலையரேனும்”.. என்று பாடியது சங்க காலத்தில் அல்ல. நாவுக்கரசர் காலத்துக்கு முன்பே புதுப்பார்ப்பனர்கள் தமிழ்மண்ணுக்கு வந்து, தமிழர்களின் வாழ்க்கை நெறிகளைச் சீரழித்து விட்டார்கள்.

       • //’கேட்பாரின்றி’ என்றால் கேட்கவேண்டியர்களே அப்போது இல்லையா..?! அல்லது கூட்டுச் சதியா..?! ’//

        கூட்டுச் சதி என்பதை விட பார்ப்பன மாயை அல்லது தமிழர்களின் வெள்ளைத் தோலாசை அல்லது இந்துமதவெறி சக தமிழர்களின் கண்களை மறைத்து விட்டன என்று கூடக் கொள்ளலாம்.

        //புதுப் பார்ப்பான்களால்’ பார்ப்பனத் தொழிலை இழந்த பறையர்கள் அவர்களுக்கு அடுத்த சமூக படி நிலையில் இல்லாமல் எல்லா ‘கேட்க வேண்டியவர்களாலும்’ அழுத்தப்பட்டு, அடிமட்ட நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்..?! //

        அவர்களின் பார்ப்புத்தொழிலும், நிலங்களும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு கங்கைச் சமவெளியிலிருந்தும், துங்கபத்திரா நதிக்கரைகளிளிருந்தும் பிழைப்புத் தேடி தமிழ்மண்ணுக்கு வந்த புதுப்பார்ப்பான்களுக்கு அளிக்கப்பட்டதால், அவர்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்கு தள்ளபட்டார்கள். நிலம் தான் ஒரு சமூகத்துக்கு முக்கியமானது. அவர்கள் தமது நிலத்தை இழந்த பின்பு அவர்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்கு தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அதை இலங்கையில் இன்று நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது.

        //இப்போதும் பறையர்களின் எழுச்சியை, தங்களுக்கு விடப்படும் சவால் என்று ஒடுக்குபவர்கள் யார்..?!//

        நிச்சயமாக பார்ப்பனர்கள் அல்ல, ஆனால் சாதியை தமிழ்மண்ணுக்கு அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, அதன் பலனை பல நூற்றாண்டுகளாக அனுபவித்தவர்கள் என்ற வகையில் புதுப்பார்ப்பான்களும் இப்படியான குற்றச்சாட்டுகளை வாயை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

        // இன்றைய பார்ப்பனர்களா..?! பறையர்கள்தான் பழைய பார்ப்பனர்கள் என்று ’புதுப் பார்ப்பனர்களுக்கு’ எதிராக கருத்துக்களை அள்ளி வீசுபவர்கள், முனைப்பு காட்டுபவர்களெல்லாம் தங்கள் சொந்த சாதிக்கு இணையாக பறையர்கள் உயர விரும்புவதைக் கூட சகிக்க முடியாததேன்..?! //

        ஆதிக்க சாதிகளும் எதிர்க்கப்பட வேண்டியவர்களே. ஆனால் ஒரு சிலர் பார்ப்பான்களை மட்டும் வசை பாடுகிறார்கள். மற்ற ஆதிக்கசாதிகளை எதிர்க்கப் பயப்படுகிறார்கள் அதனால் தான் நான் பெரியாரிஸ்டுகளின் விசிறி அல்ல.

        • // கூட்டுச் சதி என்பதை விட பார்ப்பன மாயை அல்லது தமிழர்களின் வெள்ளைத் தோலாசை அல்லது இந்துமதவெறி சக தமிழர்களின் கண்களை மறைத்து விட்டன என்று கூடக் கொள்ளலாம். //

         எமது முன்னோரெல்லாம் ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளைகள் என்கிறீர்களா..?!!!

         // அவர்களின் பார்ப்புத்தொழிலும், நிலங்களும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு கங்கைச் சமவெளியிலிருந்தும், துங்கபத்திரா நதிக்கரைகளிளிருந்தும் பிழைப்புத் தேடி தமிழ்மண்ணுக்கு வந்த புதுப்பார்ப்பான்களுக்கு அளிக்கப்பட்டதால், அவர்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்கு தள்ளபட்டார்கள். //

         அவர்களின் நிலங்களை பறித்து புதுப்பார்ப்பான்களுக்கு கொடுத்த மன்னர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்களா.. தமிழ் மன்னர்கள் எல்லாம் தமிழ் இனக்குழுக்களின் தலைவர்கள்தானே.. ஒரு சில குறிப்பிட்ட தமிழ் இனக்குழுக்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்கு தள்ளப்பட்டதைக் குறித்து பிற தமிழ் இனக்குழுக்களின் தலைவர்களான மன்னர்களும் மற்ற தமிழர்களும் வருத்தமோ கவலையோ கொள்ளவில்லையா..?! அப்படியே விட்டுவிட்டார்களா..?!

         // நிலம் தான் ஒரு சமூகத்துக்கு முக்கியமானது. அவர்கள் தமது நிலத்தை இழந்த பின்பு அவர்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்கு தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அதை இலங்கையில் இன்று நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. //

         ஒரு உயர்மட்ட சமூகப் பிரிவில் நிலமில்லாதவர்களும், நிலமிழந்தவர்களும் ஏழைகளாக அதே சமூகப் பிரிவில் நீடிப்பது இயல்பானது, இன்றும் நடப்பது.. மாறாக அவர்கள் எல்லா சமூகப் பிரிவுகளுக்கும் கீழான அடிமட்டத்துக்கு தள்ளப்படுவதை அன்றைய ஆட்சியாளர்களின் திட்டமிட்ட ஒடுக்குமுறை என்று கொண்டால் மட்டுமே யாராலும் தடுக்கமுடியாது என்று கூறமுடியும்..

         இலங்கையில் நீங்கள் காண்பது தேசிய இன ஒடுக்குமுறை.. தமிழர்களில் ஒரு சில பிரிவினரை மட்டும்தான் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் ஒடுக்குவதாக கூறமுடியாது..

         // நிச்சயமாக பார்ப்பனர்கள் அல்ல, ஆனால் சாதியை தமிழ்மண்ணுக்கு அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, அதன் பலனை பல நூற்றாண்டுகளாக அனுபவித்தவர்கள் என்ற வகையில் புதுப்பார்ப்பான்களும் இப்படியான குற்றச்சாட்டுகளை வாயை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். //

         புதுப்பார்ப்பான்கள்தான் சாதியை தமிழ்மண்ணுக்கு அறிமுகப்படுத்தினார்களா..?! அதற்குமுன் இங்கே சாதிகள் இல்லையா..?! அறிமுகப்படுத்தியவுடன் எல்லோரும் அதை சிக்கென பிடித்துக் கொண்டு செயல் படுத்த அது என்ன நவீன தொழில் நுட்பமா..?! சாதிகளின் தோற்றம் இனக்குழுக்களின் தொகுப்பிலும், பகுப்பிலுமாக தானாக உருவாகி வருவது.. யார் யார் என்ன சாதி, என்ன படிநிலை என்று கூட்டம் கூட்டி ஒதுக்கீடு செய்துவிட்டு அப்படியே போய் செட்டிலாகிக் கொள்ளுங்கள் என்று கூறும் விவகாரமல்ல.. ஜைன மத செட்டிச்சி என்று கூறும் காழ்ப்புணர்வில்தான் சாதியின், அதன் ஏற்றதாழ்வுகளின், அதன் தொடர்ச்சியின் மூலம் இருக்கிறது..

       • // அதில் என்ன சந்தேகம்? அவர்கள் வெளியிலிருந்து தமிழ்மண்ணுக்கு வந்ததாக யாரும் நிரூபிக்காத வரை அல்லது அவர்கள் தமிழர்கள் தானா என்று யாரும் சந்தேகம் தெரிவிக்காத வரை, சங்க கால வேளாளர்களின் வழித்தோன்றல்களே இன்றைய வேளாளர்கள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. //

        யார் யாரெல்லாம் வேளாளராயினர் என்பதை விவாதிக்குமுன், சங்க கால வேளாளர்களான மள்ளர்கள் என்னவானார்கள், தமிழகத்தை விட்டே வெளியே போய்விட்டார்களா என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிட்டினால்தான் கருத்து வேறுபாடு இல்லை என்ற முடிவுக்கு வர இயலும்..

        // அதை விட பள்ளர்கள், என்ற ஒரு சாதி வேளாளர்களின் கீழ் இருந்தனர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உண்டு. //

        சங்க காலத்தில் பள்ளர்கள் இருந்தார்கள் என்ற ஆதாரம் இருக்கிறதா..?!

        // வைதீக முறையில் தொல்காப்பிய காலத்தில் சடங்குகள் நடந்தன என்பது இக்காலப் பார்ப்பனர்களின் கற்பனை மட்டுமல்ல, வரலாற்றுத் திரிப்பும் கூட. அந்தக் கருத்தைப் பலர் எதிர்க்கின்றனர். தொல்காப்பியத்தில் கூறப்படும் நான்மறை என்பது ஆரிய வேதங்களல்ல. அது தமிழர்களின் மூலமறை, வடுகப் பூசாரிகள் ஆகமத்துக்கு என்ன செய்தார்களோ அதையே தமிழர்களின் நான்மறைகளுக்கும் செய்து விட்டார்கள். //

        4 ஆரிய வேதங்களுக்கும், தமிழர்களின் நான்மறைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் தெரிந்தால்தான் எவை வைதீகச் சடங்குகள் எவை தமிழ்ச் சடங்குகள் என்பது தெரியும்.. வசதிப்படாத சடங்குகளையெல்லாம் வைதீகச் சடங்குகள் என்று தள்ளி வைத்த பின் மீதியென்று ஏதாவது எஞ்சுகிறதா..?!

        // ஆதித்தமிழர்கள் ஆவுரித்துத் தின்றுழலும் அளவுக்கு ஒதுக்கப்பட்டது புதுப்பார்ப்பனர்களின் வருகையால். திருநாவுக்கரசர் “ஆவுரித்து தின்றுழலும் புலையரேனும்”.. என்று பாடியது சங்க காலத்தில் அல்ல. நாவுக்கரசர் காலத்துக்கு முன்பே புதுப்பார்ப்பனர்கள் தமிழ்மண்ணுக்கு வந்து, தமிழர்களின் வாழ்க்கை நெறிகளைச் சீரழித்து விட்டார்கள். //

        ’புதுப் பார்ப்பனர்களின்’ வருகை எந்த காலகட்டம் என்று தெளிவாகக் கூறுங்கள்.. ஏனெனில் சங்க காலத்திலேயே இழிசினர், இழிபிறப்பாளர், புலையர், தொழும்பர், உரிமைமாக்கள் என்று ஒரு பெரிய கூட்டத்தையே ஒதுக்கி வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்..

        • // ’புதுப் பார்ப்பனர்களின்’ வருகை எந்த காலகட்டம் என்று தெளிவாகக் கூறுங்கள்

         // ’புதுப் பார்ப்பனர்களின்’ வருகை எந்த காலகட்டம் என்று தெளிவாகக் கூறுங்கள்..

         நல்ல கேள்வி அம்பி. சங்க இலக்கியத்தில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை எயினர், வலைஞர், இடையர் என பலரின் குடியிருப்புகள் பற்றி கூறுகிறது. இந்த வரிசையில்:

         “கோழியொடு ஞமலி துன்னாது
         வளைவாய்க் கிள்ளை மறை மொழி பயிற்றும்
         மறை காப்பாளர் பதி”

         என்கிறது. இது பழைய தமிழ் மறையா, ஆரிய வேதமா? பழைய தமிழ் மறை எல்லோரும் கற்க முடியுமா? எனில், “மறை காப்பாளர் பதி” என தனிக் குடியிருப்பு ஏன்?

         • இங்கே மறை எனப்படுவது யாது என வியாசரிடம் தெளிவு படுத்திக் கொண்டு பதில் சொல்வது நல்லது என நினைக்கிறேன்..

          • இந்த மறைக்கு என்ன விளக்கம் கொடுக்கலாம் என்று வியாசர் இன்னும் யோசித்து முடிக்கவில்லையா..

          • செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர்
           பைஞ்சேறு மெழுகிய படிவ நல் நகர்
           மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது
           வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும்
           மறை காப்பாளர் உறை பதி சேப்பின்
           பெரு நல் வானத்து வட வயின் விளங்கும்
           சிறுமீன் புரையும் கற்பின் நறு நுதல்
           வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
           சுடர் கடை பறவை பெயர் படு வத்தம்
           சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
           உருப்புறு பசும் காய் போழொடு கறி கலந்து
           கஞ்சக நறு முறி அளைஇ பைம் துணர்
           நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த மலை 512
           தகை மாண் காடியின் வகை பட பெறுகுவிர்

           இந்தப் பத்துப்பாட்டில் இங்கு கூறப்படும் மறை என்பது ஆரியர்களின் நான்குவேதங்களைக் குறிக்கவில்லை. தமிழர்களின் மூலமறையாகிய நான்மறைகளையோதும், மறைகாப்பாளர்களாகிய தமிழ்ச் சித்தர்களைக் குறிக்கிறது. இந்துமதம் தமிழர்களிடையே வேரூன்ற முன்னர் இருந்த ஆசீவக சித்தர்களை தான் மறையோர் என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியங்கள்.

         • // ஆசீவக சித்தர்களை தான் மறையோர் என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியங்கள்.

          இதற்கென்ன பொருள்?

          // பெரு நல் வானத்து வட வயின் விளங்கும் சிறுமீன் புரையும் கற்பின்

          இந்த ஆசீவக மறை காப்பாளர்கள் ஏன் தனிக்குடியிருப்பில் இருக்கிறார்கள்? இவர்களிடம் இருந்த மறையை எல்லோரும் ஓத முடியுமா?

      • // ஆறுமுகநாவலர் கண்ணகியை ஜைனமதச் செட்டிச்சி என்றார். அதனால் கண்ணகி சமண மதத்தைச சார்ந்தவராக ‘இருந்திருந்தால்’, மாமுது பார்ப்பான்கள் என்பவர்கள் சமணக் கோயிலைப் பாரமரித்தவர்கள் அதாவது பார்ப்பபான்களாக இருந்திருக்கலாமே தவிர இந்த மாமுது பார்ப்பான்கள், இக்காலப் பிராமணர்களைப் போன்ற பூநூலணியும் சாதியினரல்ல என்பது தான் எனது கருத்தாகும். //

       சைவ தமிழச்சியான கண்ணகியை ஜைன மத செட்டிச்சி என்று ஆறுமுக நாவலர் கூறுவதை முதலில் நம்பிவிட்டு பின் அதை நிறுவுவதற்காக சிலப்பதிகார செய்யுளுக்கு புதுப்புது பொருள் விளக்கம் கொடுக்கத் தலைபட்டிருக்கிறீர்கள்..

       // பறையர் பூசாரிகள், அதாவது புதுப்பார்ப்பான்கள் வருமுன்பிருந்த, மறை (காதல்/களவு) அறிந்த மாமுது பார்ப்பானாகிய வள்ளுவன் தீவலம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தான். ஆனால் அந்த தீவலம் என்பதை வேள்வித்தீ என இக்காலப் பார்ப்பனர்கள் கருத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. //

       பேண்ட்டுக்கு ஏற்றவாறு காலை வெட்டுவது மட்டும்தான் உங்கள் பொறுப்பா..?!

       மாமுது பார்ப்பான் தீவலம் செய்யவில்லை, கோவலனும், கண்ணகியும்தான் தீவலம் செய்தவர்கள்.. அவர்கள் தீவலஞ் செய்வதைப் பார்த்தவர்களின் கண்கள் செய்த தவம் (நோன்பு) தான் என்ன என்கிறார் சமணத் துறவி இளங்கோவடிகள்..

       தீவலம் செய்வது என்றால் வேள்வித்தீயை வலஞ்செய்வதைக் குறிக்கவில்லை என்றால் பின் வேறு எதனைக் குறிக்கிறது..? ரூம் போட்டு யோசித்து ஒரு நல்ல அருஞ்சொற்பொருள் விளக்கத்துடன் வாருங்கள்..!

       அது சரி, திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறார்களே, அது என்ன உலகப் பொது காதல்/களவா..?!! திருவள்ளுவரும், இளங்கோவடிகளும் உங்களுக்கு அப்படி என்ன தவறிழைத்தார்கள்..?!!

   • இலக்கியங்களில் கூறப்படும் “பார்ப்பனன்”, “அந்தணன்/மறையவன்” என்பன ஒன்று தானா என எனக்கும் சந்தேகம் வந்துள்ளது!

    நான்மறை, ஐவேள்வி, ஆறங்கம்,ஆகுதி, மூன்று வேளை அனலோம்புதல், இருபிறப்பு, முப்புரிநூல் போன்றவை குறிப்பிடும்போது “மறையவன்” அல்லது “அந்தணன்” என்ற சொல் காணப்படுகிறது. “மூவாவுருவின் மறையாளர் அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே”, “அந்தணர்தம் ஆகுதியின் மிகையார் செல்வத்து அணியழுந்தூர்’ என்பது போல.

    மறுபுறம் திருமணம் போன்ற சடங்குகள் நடத்தி வைக்கும் புரோகிதன் என்ற பொருளுக்கு “பார்ப்பனன்” என்ற சொல் காணப்படுகிறது. ஒரு உதாரணம், மேலே சொன்ன சிலப்பதிகாரப் பாடல். இரண்டாவது உதாரணம் ஆண்டாள் தனது கனவு திருமணத்தை கூறும் பாடல்.

    “நால்திசை தீர்த்தம் கொண்டு நனிநல்கி
    பார்ப்பனச்சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
    பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
    காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்”

    வேதமோதவும், வேள்வி செய்யவும் அந்தணர்கள். புரோகிதம் செய்ய பார்ப்பனர்கள் என இரண்டு தனி குழுக்கள் இருந்தார்களா? பிற்காலத்தில் இரண்டும் ஒன்றாகி விட்டதா? “நான்மறை ஓதும் பார்ப்பனன்”, “திருமண சடங்கு நடத்தும் அந்தணன்” என்பது போன்ற தொடர்கள் பழைய இலக்கியங்களில் உள்ளனவா?

    என்னிடம் உள்ள தமிழ் அகராதி (வர்த்தமானன் பதிப்பகம்), “பார்ப்பனன்’ என்ற சொல்லுக்கு “பிராமணன், என்ற ஒற்றை பொருள் தந்து முடித்துக்கொள்கிறது!

    • மேலே உள்ள மறுமொழியின் இணைப்பு இது. “முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை” என்பது திருமங்கை ஆழ்வார் பாடல். இதற்கு அண்ணங்கராச்சாரியார் விளக்கவுரை கீழே. அந்தணருக்குரிய அறுதொழில்களில் புரோகிதம், கோவில் அர்ச்சனை போன்றவை இல்லை என்பதைக் காண்கிறோம்.

     நன்றி : http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3373

     முத்தீ – கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்பவை த்ரேதாக்நிகளாம். நான் மறைகளாவன – ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன. இவை வேதவ்யாஸரால் பிரிக்கப்பட்ட பிரிவின் பெயர்களாதலால், அதற்கு முன்னிருந்த தைத்திரியம் பௌடியம் தலவகாரம் சாமம் என்ற நான்கும் என்று கொள்ளுதல் தகும்.

     ஐவகைவேள்வி –ப்ரஹ்மயஜ்ஞம் தேவயஜ்ஞம் பித்ருயஜ்ஞம் மநுஷ்யயஜ்ஞம் என்பன பஞ்சமஹாயஜ்ஞங்கள். ப்ரஹ்மயஜ்ஞமாவது – “ப்ரஹ்மயஜ்ஞப்ரசநம்“ என்று தினப்படியாக வேதத்தில் ஒவ்வொரு ப்ரச்நம் ஓதுவது. வேயஜ்ஞமாவது அக்நிஹோத்ரம்செய்வது பூதயஜ்ஞமென்பது பிராணிகட்குப்பலியிடுவது. பித்ருயஜ்ஞமென்பது பித்ருக்களை உத்தேசித்துத் தர்ப்பணம் விடுவது. மநுஷ்யயஜ்ஞமென்பது விருந்தாளிகளுக்கு உணவு முதலியன கொடுப்பது.

     அறு தொழில் – தான் வேதமோதுதல், பிற்களுக்கு ஓதுவித்தல், தான் யாகஞ் செய்தல், பிறர்க்கு யாகஞ் செய்வித்தல், தானங்கொடுத்தல், தானம்வாங்கிக்கொள்ளுதல் என்பன ஆறு கருமங்களாம். ஆக. த்ரேதாக்நிகளையும் நான்கு வேதங்களையும் பஞ்சமஹாயஜ்ஞங்களையும் ஷட்கருமங்களையும் நிரூபகங்களாகவுடைய வேதியர்களாலே ஸேவிக்கப்படுபவன் எம்பெருமான் என்றதாயிற்று.

  • // சிறுதெய்வ வழிபாடு ஆகமங்களுக்கு எதிரானது ஆனால் இக்காலப் பார்ப்பனர்களும் பணம் கொடுத்தால், எந்த சுடலைமாடனுக்கும் வந்து பூசை பண்ணி விட்டுப் போவார்கள். //

   காசு கொடுத்தால் பெரியாருக்கே பூசை பண்ணக்கூடிய பார்ப்பனர்களும் இருக்கும் போது நம்ம சுடலை மாடனுக்கு மட்டும் பூசை பண்ணப்படாதா..!

 14. “சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலிற் பட்டம் பெற்ற இருவருள் (இருவரும் ஈழத்தமிழர்கள்) ஒருவரான விசுவநாதபிள்ளை (மற்றவரே சி.வை. தாமோதரம்பிள்ளையாவார்) கிறிஸ்தவராய் இருந்துகொண்டு சைவசமயத்தைத் தாக்கி வந்தார். பின்னால் அவர் தம் செய்கைக்காக வருந்திச் சைவசமயத்திற்கு எதிர்த்து எழுதி வந்ததற்கெல்லாம் பிராயச் சித்தமாகச் சிதம்பரத்திலே சென்று தமது நாவிலே பொன்னூசியால் சூடு போட்டுக் கொண்டு உண்மையான சைவராகி நாவலரைப் பின்பற்றி ஒழுகும் சீலம் மிகுந்தவரானார்.”

  • அவர் ஏண் சிதம்பரத்திற்கு வரவேண்டும்? இலங்கையில் சைவ கோவில்கள் பல உள்ளவே! சிதன்பரத்தில் அந்தக்கால இந்துத்வாவின் தலைநகராயிருந்தது, என்பதே! மேலும் புராணங்கள் புனைய புலவர்களை நிதியளித்து கவர்வது வழமைதானே!

   • ஆறுமுக நாவலர் போன்ற ஈழத்து தமிழர்கள் தில்லைக் கோவிலுக்கு நிதி, நிலம் தானம் செய்திருக்கிறார்களே தவிர நிதி பெற்று புராணம் புனைவதற்காக தில்லை வந்ததாக நீங்கள் இப்படி அள்ளிவிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்..

    • ஆறுமுகநாவலர் சூத்திரரும் படிக்க கல்வி அறக்கட்டளை நிறுவி பணிபுரிந்ததையும், தமிழர் பலர் பிற சமயத்திற்கு செல்லா வண்ணம் சைவனெறி பரப்பியதையும் குறைத்து சொல்லவில்லை! அவர் இலங்கையிலும் சைவப்பணிகள் செய்தவர்தானே! மற்றபடி தான்ம் செய்தது தமிழுக்காகவோ, தமிழனுக்காகவோ அல்ல! அவரது முக்கிய பணியாக இருந்தது, யாழ்ப்பாணத்தமிழர்கள் சைவத்தை புறக்கணித்து பிற சமயம் சென்றுவிடக்கூடாது என்று சைவம் பரப்பியதே! அதிலும், ஆரியத்தை ஒட்டிய தமிழ் சைவமே அவரது மூச்சு! திருமூலரும், மெய்கண்டாரும், வள்ளலாரும் போற்றிய உருவமிலா சிவம், சாதி, மதமொழித்த சைவம் அவருடையது அல்ல! அது சரி, த்ற்பொது சிதிலமான இலங்கை சைவ மடம் தீக்ஷிதர் வசம் போனதெப்படி? சிதம்பரத்தில் தமிழ் சைவர்கள் அருகினரோ!

   • //அவர் ஏண் சிதம்பரத்திற்கு வரவேண்டும்? இலங்கையில் சைவ கோவில்கள் பல உள்ளவே//

    மன்னிக்கவும், இது முஸ்லீம்களைப் பார்த்து, பல மசூதிகள் இந்தியாவில் உண்டே ஏன் மெக்காவுக்குப் போகிறீர்கள், என்று கேட்பது போன்ற முட்டாள்தனமான கேள்வி. 🙂

    அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் சிதம்பரம் தான் ஈழத்துச் சைவத்தமிழர்களுக்கு மெக்கா. இலங்கைத் தமிழர்கள் கோயில் என்றால் அது சிதம்பரத்தைத் தான் குறிக்கும். அதற்கும் இந்துத்துவாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சுதந்திரத்துக்குப் பின்பு கூட தமது சொத்தில் ஒரு பங்கை “கோயிலுக்கு” (சிதம்பரத்துக்கு) எழுதி வைக்கும் பழக்கத்தை பல ஈழத்தமிழர்கள் கொண்டிருந்தனர். சிதம்பரத்துக்குச் சொந்தமான நிலங்கள் இலங்கையில், குறிப்பகா யாழ்ப்பாணத்தில் இன்றும் உண்டு. அதனால் தான் நானும் என்னயறியாமலே சிதம்பரம் கோயில் விடயத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறேன் என்று நினைக்கிறேன்.

 15. வியாசன்! பனாவலரின் தமிழ்ப்பற்றைநான் குறை கூறியதில்லை!நாவலரும், ஆரிய வழியில் ;மேல் சாதி’ சிந்தனையுடையவர், அந்த குறுகிய வட்டத்திற்குள்ளேயே சிந்தை செய்துள்ளார்! வள்ளலார் மீது வழக்கு தொடுத்தபோது, இந்திமத துறவியெண அவர் கூறிக்கொள்ளக்கூடாது, மற்றும் இந்துமத சின்னங்கள், வில்வம் பயன்படுத்தகூட