Monday, May 5, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வேதாரண்யத்தில் பெரியார் நினைவு நாள் !

வேதாரண்யத்தில் பெரியார் நினைவு நாள் !

-

ராண்டுகளுக்கு முன்பு வரை சீண்ட ஆளில்லாமல் சரிந்து வீழ்ந்து கிடந்த பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பல் இன்று நாட்டு மக்களின் விரக்தியான மனநிலையை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் நோக்கில் சேற்றில் இருந்து கிளம்பி வந்து பவுடர் போட்டுக் கொண்டு ‘வந்துவிட்டது வளர்ச்சி’ என்ற பெயரில் தலையெடுக்க முயற்சிக்கிறது.

தனது இந்துத்துவ நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு மதக் கலவரங்களை கட்டவிழ்த்து விட்டு அகண்ட பாரதக் கனவை கண்டு கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் முற்போக்காளர்கள் என்றும் புரட்சியாளர்கள் என்றும் தம்மையே நினைத்துக் கொண்டு இருக்கும்  வைகோ போன்ற சந்தரப்பவாதிகள், குஜராத்தின் கொலைகாரன் நரேந்திர மோடிக்கு கூலிக்கு மாரடிக்கும் கைக்கூலிகளாக சென்று கொண்டு இருக்கும் நேரத்தில் சந்தர்ப்பவாதமே கொள்கையாகவும் பிழைப்பு வாதத்தையே கோட்பாடாகவும்  கொண்டுள்ள ஓட்டுக்கட்சிகள் பெரும்பாலும் பெரியாரையே மறந்து விட்ட நிலையில் அவரது 40-வது நினைவு நாளை டிசம்பர் 24-ம் தேதி அன்று வேதாரண்யம் பகுதியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, கோடியக்காடு மீனவர் பாதுகாப்பு சங்கம் சார்பில், வேதாரண்யம் அண்ணா அரங்கம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, முழக்கம் இட்டு மரியாதை செலுத்தினர்.

முன்னதாக சிலைக்கு மாலை அணிவித்த திராவிடர் கழகம் ஏதோ கடமைக்கு மாலை போடுவது போல, எவ்வித உணர்வுமின்றி, உணர்ச்சியுமின்றி மறுநாள் தினசரிகளில் போட்டோ வர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே மாலை அணிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவே தெரிந்தது. விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் பெரியாரின் நினைவு நாளில் தில்லைக் கோயிலின் மொழித் தீண்டாமையை கண்டித்தும், தமிழ் உரிமையை நிலைநாட்டும் விதமாகவும் பார்ப்பன பாசிச இந்துத்துவாவிற்கு எதிராகவும் முழக்கம் இட்ட போது திராவிடர் கழக தோழர்களின் முகத்தில் ஒரு வித மகிழ்ச்சியும் ஏமாற்றமும் இருந்ததைக் காண முடிந்தது.

பெரியாரின் எழுத்துக்கள் எனக்கு மட்டுமே சொந்தம் என்று வழக்காடிய “தமிழர் தலைவர்” கி.வீரமணியின் தொண்டர்கள், பெரியாரின் கனவுகளை செயல்களாக்கி நடைமுறையில் போராடிக் கொண்டு இருப்பவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளட்டும் பெரியாரின் வாரிசுகள் யார் என்பதை?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
வேதாரண்யம் பகுதி