Sunday, May 26, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வேதாரண்யத்தில் பெரியார் நினைவு நாள் !

வேதாரண்யத்தில் பெரியார் நினைவு நாள் !

-

ராண்டுகளுக்கு முன்பு வரை சீண்ட ஆளில்லாமல் சரிந்து வீழ்ந்து கிடந்த பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பல் இன்று நாட்டு மக்களின் விரக்தியான மனநிலையை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் நோக்கில் சேற்றில் இருந்து கிளம்பி வந்து பவுடர் போட்டுக் கொண்டு ‘வந்துவிட்டது வளர்ச்சி’ என்ற பெயரில் தலையெடுக்க முயற்சிக்கிறது.

தனது இந்துத்துவ நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு மதக் கலவரங்களை கட்டவிழ்த்து விட்டு அகண்ட பாரதக் கனவை கண்டு கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் முற்போக்காளர்கள் என்றும் புரட்சியாளர்கள் என்றும் தம்மையே நினைத்துக் கொண்டு இருக்கும்  வைகோ போன்ற சந்தரப்பவாதிகள், குஜராத்தின் கொலைகாரன் நரேந்திர மோடிக்கு கூலிக்கு மாரடிக்கும் கைக்கூலிகளாக சென்று கொண்டு இருக்கும் நேரத்தில் சந்தர்ப்பவாதமே கொள்கையாகவும் பிழைப்பு வாதத்தையே கோட்பாடாகவும்  கொண்டுள்ள ஓட்டுக்கட்சிகள் பெரும்பாலும் பெரியாரையே மறந்து விட்ட நிலையில் அவரது 40-வது நினைவு நாளை டிசம்பர் 24-ம் தேதி அன்று வேதாரண்யம் பகுதியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, கோடியக்காடு மீனவர் பாதுகாப்பு சங்கம் சார்பில், வேதாரண்யம் அண்ணா அரங்கம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, முழக்கம் இட்டு மரியாதை செலுத்தினர்.

முன்னதாக சிலைக்கு மாலை அணிவித்த திராவிடர் கழகம் ஏதோ கடமைக்கு மாலை போடுவது போல, எவ்வித உணர்வுமின்றி, உணர்ச்சியுமின்றி மறுநாள் தினசரிகளில் போட்டோ வர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே மாலை அணிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவே தெரிந்தது. விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் பெரியாரின் நினைவு நாளில் தில்லைக் கோயிலின் மொழித் தீண்டாமையை கண்டித்தும், தமிழ் உரிமையை நிலைநாட்டும் விதமாகவும் பார்ப்பன பாசிச இந்துத்துவாவிற்கு எதிராகவும் முழக்கம் இட்ட போது திராவிடர் கழக தோழர்களின் முகத்தில் ஒரு வித மகிழ்ச்சியும் ஏமாற்றமும் இருந்ததைக் காண முடிந்தது.

பெரியாரின் எழுத்துக்கள் எனக்கு மட்டுமே சொந்தம் என்று வழக்காடிய “தமிழர் தலைவர்” கி.வீரமணியின் தொண்டர்கள், பெரியாரின் கனவுகளை செயல்களாக்கி நடைமுறையில் போராடிக் கொண்டு இருப்பவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளட்டும் பெரியாரின் வாரிசுகள் யார் என்பதை?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
வேதாரண்யம் பகுதி

  1. அய்யா பெரியாரின் கொள்கைகளுக்கு உண்மையான வாரிசுகளாக புரட்சியாளர்களும் சொத்துகளுக்கு வாரிசாக வீரமணி கும்பலும் இருப்பது மக்களுக்கு தெரிந்த உண்மைதான்.

  2. முதலில் நமது தோழ்ர்களுக்கு வாழ்த்துக்கள்……….!!!!

    பெரியாரை யார் ஏற்றுக் கொண்டார்கள் என்று யோசித்துப்பார்த்தால் கொஞ்சம் காமெடியாகத்தான் இருக்கிறது. யாருக்காக பெரியார் தன் இறுதி மூச்சு வரை மூத்திரப்பை சுமந்துக்கொண்டு போராடினாரோ.. அவர்கள் பெரியாரை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவே இல்லை என்பதோடு “என்னத்த கிழிச்சாரு..” என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.. ஆனால் அவர் யாருக்கு எதிராக போராடினாரோ அவர்கள், `பெரியாரைப் பற்றி புகழ்ந்து பேசவில்லை.. எங்கள் வழிகாட்டி என்று அடுக்குமொழியில்மேடைதோறும் தொண்டை நரம்பு புடைக்க முழங்கவில்லை.. பெரியார் பற்றி கவிதை பாடவில்லை.. மாலை போடவில்லை.. மாறாக பெரியாரை ஜென்மவிரோதியாகவே பார்க்கிறார்கள்.. ஆனால் பெரியார் சொன்ன நல்லவிசயங்களை ஏற்றுக்கொண்டார்கள்.
    கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். பெண் பிள்ளைகளை படிக்க வைத்தார்கள்.. வேலைக்கு அனுப்பினார்கள்.. நவீன ஆடைகள் அணிய அனுமதித்தார்கள்.. முடியை வெட்டிக்கொள்ள அனுமதித்தார்கள்.. வெளி நாட்டுக்கு அனுப்பினார்கள்.. காதல் மணம் புரிய அனுமதித்தார்கள்.. ஒத்துவரவில்லை என்றால் மறுமணம் செய்வதை சகஜமாக்கினார்கள்..’ இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. பெரியார் குறித்து ஒருவார்த்தை கூட புகழ்ந்து பேவில்லை. ஆனால் அவர் முன்னேற்றத்திற்காக சொன்ன அத்தனை விசயங்களையும் தங்கள் வாழ்வோடு இணைத்து கொண்டார்கள்.. இன்றும் முன்னேறிய சமூகமாகவே இருக்கிறார்கள். குறிப்பாக தங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் காதல் திருமணம் செய்தால் காதலனை போட்டுத்தள்ளாருவாளை தூக்கிக் கொண்டு விரட்டும் எந்த பிராமணரையும் நான் பார்த்ததில்லை. அது கால மாற்றம் என்று ஏற்றுக் கொண்டு நகர்ந்திருக்கிறார்கள்.. அறிந்தோ அறியாமலோ மற்ற சமூகத்தவர்களை விட பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் பிராமணர்களே.. என்ன அவர்கள் வெளிப்படையாக பெரியாருக்கு நன்றி சொல்லவில்லை அவ்வளவுதான்.. ஆனால் `வெங்காயங்களோ’ இன்னும் வெற்று சாதிப்பெருமிதமும் கலாச்சாரம் பண்பாடு என்று பேசிக்கொண்டிருக்கின்றன..

    அருகில் பெரியாரின் மூத்திரச்சட்டி உடைந்து கிடக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க