Sunday, May 4, 2025
முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்தில்லைக் கோயிலை மீட்கக் கோரி சென்னையில் மறியல்

தில்லைக் கோயிலை மீட்கக் கோரி சென்னையில் மறியல்

-

ச்ச நீதிமன்றம், தில்லைக் கோவிலை தீட்சிதர் வசம் ஒப்படைத்து அளித்த தீர்ப்பினை கண்டித்து 6.1.2014 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை புதிய தலைமைச் செயலக வளாகத்தின் எதிரே உள்ள பெரியார் சிலை முன்பு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னைக் கிளை சார்பாக, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து போலீசு படை வந்து தோழர்களை கைது செய்து அழைத்து சென்றது.

ஆர்ப்பாட்டத்தில் போடப்பட்ட முழக்கங்கள் :

சதி வென்றது! சதி வென்றது!!
தில்லைக் கோவில் வழக்கினிலே
தீட்சிதக் கும்பலுக்கு ஆதரவாக
ஜெயலலிதா – சுப்பிரமணியசாமி
கள்ளக்கூட்டின் சதி வென்றது!

திருட்டு தீட்சித பார்ப்பானுக்கு
தில்லைக் கோவிலே சொந்தமென்று
உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்!

தில்லை கோவிலை மொத்தமாக
தீட்சித – பாப்பானுக்கு
தாரைவார்த்தது – ஜெ.அரசு!

வழக்கினை நடத்தாமல்
வக்கீல் வைத்து வாதாடாமல்
தீட்சித பார்ப்பனர்களுடன்
கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு
தில்லைக் கோவிலை தீட்சிதனுக்கு
காவு கொடுத்தது – ஜெ அரசு!

தில்லைக் கோவில் வழக்கினை
கழுத்தறுத்த எதிரிகள்
ஜெயலலிதாவும் -சு-னா சாமியும்
தமிழ் மக்களின் உரிமையான
துகில் குத்திய துரோகிகள்
போராடாமல் வேடிக்கை பார்த்த
போலி-தமிழன அமைப்புகள்!

முறியடிப்போம்!
ஜெயலலிதா- சுப்பிரமணியசாமி
தீட்சித பார்ப்பன கும்பலின்
பார்ப்பன சாதி திமிரினை
முறியடிப்போம்
தில்லைக் கோவில் தமிழனுக்கென்பதை
மீட்டெடுத்து நிரூபிப்போம்!

தில்லைக் கோவில் வழக்கினிலே
வேஷம் போட்டா ஜெயலலிதா
கொள்ளையடிக்கிறான் தீட்சித பார்ப்பான்
ஊதிவிட்டான் சுப்பிரமணியசாமி
ஊளையிடுது உச்சநீதிமன்றம்
கொக்கரிப்பது கேட்கலியா
பார்ப்பனக் கும்பலின் கொட்டமடக்க
கொதித்தெழு – தமிழகமே!

பழிதீர்ப்போம்!
நந்தனை எரித்ததற்கு
பெற்றான் சாம்பனை கொன்றதற்கு
வள்ளலாரை கொளுத்தியதற்கு
தில்லைக் கோவில் கொள்ளைக்கு
தீட்சித பார்ப்பன கும்பலை
பெரியாரின் பெயராலே
பழிதீர்ப்போம்!

கிழித்தெறிவோம்!
தில்லைக் கோவிலை தாரைவார்த்து
தீட்சித பார்பபன கும்பலுக்கு
ஜால்ரா போடும் தீர்ப்பினை
உச்சி குடுமி மன்றத்தின்
தீர்ப்பினை கிழித்தெறிவோம்

தகர்த்தெறிவோம்!
நந்தன் நுழைந்த தெற்குவாயிலை
மறித்து நிற்கும் சுவரினை
தீண்டாமை சுவரினை
இடித்தெறிவோம்!
தகர்த்ததெறிவோம்

நிரூபிப்போம்!
பெரியார் பிறந்த தமிழக மண்
பார்ப்பனியத்தின் கல்லறையென்பதை
நிரூபிப்போம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்

சு ஜிம்ராஜ் மில்ட்டன்,
செயலாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
(HUMAN RIGHTS PROTECTION CENTRE- TN)
சென்னை – 98428 12062.