Monday, July 26, 2021
முகப்பு நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள் தில்லைக் கோயிலை மீட்கக் கோரி சென்னையில் மறியல்

தில்லைக் கோயிலை மீட்கக் கோரி சென்னையில் மறியல்

-

ச்ச நீதிமன்றம், தில்லைக் கோவிலை தீட்சிதர் வசம் ஒப்படைத்து அளித்த தீர்ப்பினை கண்டித்து 6.1.2014 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை புதிய தலைமைச் செயலக வளாகத்தின் எதிரே உள்ள பெரியார் சிலை முன்பு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னைக் கிளை சார்பாக, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து போலீசு படை வந்து தோழர்களை கைது செய்து அழைத்து சென்றது.

ஆர்ப்பாட்டத்தில் போடப்பட்ட முழக்கங்கள் :

சதி வென்றது! சதி வென்றது!!
தில்லைக் கோவில் வழக்கினிலே
தீட்சிதக் கும்பலுக்கு ஆதரவாக
ஜெயலலிதா – சுப்பிரமணியசாமி
கள்ளக்கூட்டின் சதி வென்றது!

திருட்டு தீட்சித பார்ப்பானுக்கு
தில்லைக் கோவிலே சொந்தமென்று
உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்!

தில்லை கோவிலை மொத்தமாக
தீட்சித – பாப்பானுக்கு
தாரைவார்த்தது – ஜெ.அரசு!

வழக்கினை நடத்தாமல்
வக்கீல் வைத்து வாதாடாமல்
தீட்சித பார்ப்பனர்களுடன்
கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு
தில்லைக் கோவிலை தீட்சிதனுக்கு
காவு கொடுத்தது – ஜெ அரசு!

தில்லைக் கோவில் வழக்கினை
கழுத்தறுத்த எதிரிகள்
ஜெயலலிதாவும் -சு-னா சாமியும்
தமிழ் மக்களின் உரிமையான
துகில் குத்திய துரோகிகள்
போராடாமல் வேடிக்கை பார்த்த
போலி-தமிழன அமைப்புகள்!

முறியடிப்போம்!
ஜெயலலிதா- சுப்பிரமணியசாமி
தீட்சித பார்ப்பன கும்பலின்
பார்ப்பன சாதி திமிரினை
முறியடிப்போம்
தில்லைக் கோவில் தமிழனுக்கென்பதை
மீட்டெடுத்து நிரூபிப்போம்!

தில்லைக் கோவில் வழக்கினிலே
வேஷம் போட்டா ஜெயலலிதா
கொள்ளையடிக்கிறான் தீட்சித பார்ப்பான்
ஊதிவிட்டான் சுப்பிரமணியசாமி
ஊளையிடுது உச்சநீதிமன்றம்
கொக்கரிப்பது கேட்கலியா
பார்ப்பனக் கும்பலின் கொட்டமடக்க
கொதித்தெழு – தமிழகமே!

பழிதீர்ப்போம்!
நந்தனை எரித்ததற்கு
பெற்றான் சாம்பனை கொன்றதற்கு
வள்ளலாரை கொளுத்தியதற்கு
தில்லைக் கோவில் கொள்ளைக்கு
தீட்சித பார்ப்பன கும்பலை
பெரியாரின் பெயராலே
பழிதீர்ப்போம்!

கிழித்தெறிவோம்!
தில்லைக் கோவிலை தாரைவார்த்து
தீட்சித பார்பபன கும்பலுக்கு
ஜால்ரா போடும் தீர்ப்பினை
உச்சி குடுமி மன்றத்தின்
தீர்ப்பினை கிழித்தெறிவோம்

தகர்த்தெறிவோம்!
நந்தன் நுழைந்த தெற்குவாயிலை
மறித்து நிற்கும் சுவரினை
தீண்டாமை சுவரினை
இடித்தெறிவோம்!
தகர்த்ததெறிவோம்

நிரூபிப்போம்!
பெரியார் பிறந்த தமிழக மண்
பார்ப்பனியத்தின் கல்லறையென்பதை
நிரூபிப்போம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்

சு ஜிம்ராஜ் மில்ட்டன்,
செயலாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
(HUMAN RIGHTS PROTECTION CENTRE- TN)
சென்னை – 98428 12062.

 1. கோவிலை கட்டியவனுக்கு கருவறைக்குள் செல்ல அனுமதி கிடையாதா …
  அடுத்து என்ன கேட்கலாம் ?
  உங்கள் வீட்டை கட்டிய மேஸ்திரிக்கு உங்கள் படுக்கையறையில் உரிமை கிடையாதா ?

  இதுவல்லவா பகுத்தறிவு?

 2. தில்லை நடராச கோவில் தீர்ப்பை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தை பாராட்டுகிறேன். இதை பாரிய அளவில் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று, மிகப்பெரிய போராட்டக்களத்தை உருவாக்க வேண்டும். ஆனால், என் சந்தேகம், ஏன் இந்த போராட்டத்தை ஈ.வெ.ரா சிலைக்கு முன்பாக வைத்தார்கள் என்பதுதான்… ஆன்மீக உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட போராட்டத்தில், கடவுளே இல்லையென்று சொன்ன ஈ.வெ.ரா.வின் சிலைக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த போராட்டம் சரியானதாக படவில்லை. தேசியம் உடல்; தெய்வீகம் எனது உயிர்; என்று சொல்லி தன் கடைசிகாலம் வரை ஆன்மீகபற்றுள்ள தேசிய அரசியல் தலைவரான ஸ்ரீ பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் யென்ற மாபெரும் தமிழரின் சிலைக்கு முன்பாக நடத்திருந்திருக்கலாம். இல்லையென்றால், ஸ்ரீ பரமஹம்ச விவேகானந்தர் சிலைக்கு முன்பாக இப்போராட்டத்தை நடத்தி இருக்கலாமே? அமாவாசைக்கும் அப்துல்லாவுக்கும் என்ன சம்பந்தம்? கடவுளே இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்;ன்னு சொன்ன ஈ.வெ.ராவின் சிலைக்கு முன்னால் நடத்திய இந்த போராட்டம், ஒரு குறிப்பிட்ட சாதீய பின்புலத்தைத்தானே உருவாக்க முயல்கிறது. கடவுளே இல்லைன்னு சொல்றவங்களுக்கு, எவன் பூஜை பண்ணினால் என்ன? என்று தானே கேட்கத்தோணும்.

  – இரா.ச.இமலாதித்தன், நாகப்பட்டினம்

 3. ம க இ க தன் போராட்ட முறையை சுய விமர்சனம் செய்து கொள்ளவேண்டிய தருணம் இது !

  சட்டவாதமா ? புரச்சிகர நடவடிக்கைகளா ? என்று முடிவு செய்ய வேண்டிய தருணம் இது !

 4. பெரியார்தான் அனைத்து மக்களும் ஆலயப்பிரவேசம் செய்ய போராடினார்.
  ______________________________________________________________________________
  தீண்டாமையை தன் கொள்கையாக வைத்துள்ள இந்து(பார்ப்பன)மதவாதிகள் அல்லர்.

  அனைத்து பிரிவினரும் அர்ச்சகர் ஆகலாம் என போராடியவர்,அதனால்தான்,அர்ச்சகர் பயிற்சி

  பெற்ற,பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் ரங்கநாதன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை

  அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க