சிறை இடப்பட்ட பாஸ்க் விடுதலை இயக்கமான ஈடிஏ போராளிகளுக்கு ஆதரவாக வடக்கு ஸ்பெயின் பாஸ்க் இன மக்கள் பகுதியில் உள்ள பில்பாவோ நகரில், நீதிமன்ற தடையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலம் (ஜனவரி 11,2014). ஸ்பெயினில் ஒரு காஷ்மீர் !
2. சியோல் முதலாளித்துவத்தின் குளிர்காலம்
தென் கொரிய தலைநகர் சியோலில் அமில பனிப் பொழிவு. -7 டிகிரி குளிரில் வளி மண்டல வேதி மாசுகள் பனியை அமிலத் தன்மையாக்கியுள்ளன. மேலும் நச்சு புகை மூட்டம் காற்றில் நுண் துகள்களின் அடர்த்தியை அதிகரித்துள்ளது. தென்கொரியாவின் ‘வளர்ச்சி’க்கு இயற்கை தரும் அபராதம் !
3. பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் முன்பு சாணி
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டும், மொத்த ஆளும் வர்க்கமும் ஒழிய வேண்டும் என்ற முழக்கம் எழுதப்பட்ட டிரக் ஒன்றில் பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் முன்பு சாணி குவியலை கொண்டு கொட்டினர் போராடும் ஆர்வலர்கள். முதலாளித்துவ பிரான்சுக்கு எதிராக சாணியும் ஒரு ஆயுதம்!
4. துருக்கியில் இணைய கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம்
இணைய கட்டுப்பாடு என்ற பெயரில் அமலாக்கப்படும் அரசியல் அடக்குமுறைகளை எதிர்த்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரின் தக்சிம் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கணக்கான துருக்கி மக்களை போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தது. (ஜனவரி 18, 2014) அரட்டை அடிப்பதற்கு மட்டுமல்ல இணையம்!
5. மத்திய ஆப்பிரிக்க குடியரசு மதக் கலவரம்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பாங்குயி மாவட்டத்தில் பலாக்கா எதிர்ப்பு கிருத்துவ இளைஞர்கள் முஸ்லீம் கடைகளை சூறையாடினர். இஸ்லாமிய போராளிகள் நடத்திய ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து, பழைய ஆட்சிக்கு ஆதரவான கிருத்துவர்களுடன் மோதல் நடந்து வருகிறது. டிசம்பர் முதல் தொடர்ந்து வரும் வன்முறையில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 10 லட்சம் பேர் தமது வீடுகளை விட்டு ஓடி விட்டிருக்கின்றனர். 1 லட்சம் பேர் பிரெஞ்சு படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பன்குயி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். ஆப்ரிக்காவில் மத,இன, மொழி சண்டைகளை ஊதிப்பெருக்கி ஆதாயம் அடையும் ஏகாதிபத்தியங்களின் சதி தொடர்கிறது.
6. ஐரோப்பிய ஏக்கத்துடன் உக்ரேன் மோதல்
உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாகக் கோரி அரசை எதிர்த்து நடக்கும் வன்முறை போராட்டங்கள் மூன்றாவது மாதமாக தொடர்கின்றன. நுகர்வு கலாச்சார ஐரோப்பிய மோகத்திற்கு ஆட்பட்டிருக்கும் உக்ரேன் மக்கள்!
7. மாற்றம் கோரி போராடும் எகிப்து இளைஞர்கள்
எகிப்து இராணுவத்துக்கும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கும் எதிராக கெய்ரோவில் உள்ள தாஹ்ரீர் சதுக்கத்துக்கு அருகில் உள்ள தலாத் ஹார்ப் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தும் இளைஞர்கள். எகிப்திய இராணுவம், இசுலாமிய மதவாதிகள் இருவரையும் ஏற்க முடியாது.
8. மும்பை இஸ்லாமிய மதத் தலைவர் இறுதிச் சடங்கில் நெரிசலில் 18 பேர் பலி, 50 பேர் காயம்
மும்பை நகரில், 102 வயதில் உயிரிழந்த தாவூதி போரா இஸ்லாமிய மதப் பிரிவின் தலைவர் சையத்னா முகமது புர்ஹானுதினின் இறுதிச் சடங்கிற்கு கூடிய கூட்ட நெரிசலில் 18 பேர் இறந்தனர். (ஜனவரி 18, 2014) மதத்தின் பெயரில் கூடும் மக்களிடத்தில் நெரிசல் பலி நிற்காதா?
9. துருக்கியில் குர்து இன மக்கள் போராட்டம்
சென்ற ஆண்டு ஜனவரி மாதம் பாரிசில் குர்து இன விடுதலைக்காக போராடிய 3 தலைவர்கள் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்து துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த ஆர்ப்பாட்டம் (ஜனவரி 9, 2014). ஒடுக்குமுறைக்கு அஞ்சமாட்டார்கள் குர்து மக்கள்!