Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅரசுப் பள்ளிகளை பாதுகாக்க புமாஇமு ஆர்ப்பாட்டம் !

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க புமாஇமு ஆர்ப்பாட்டம் !

-

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
எண் : 41, பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை – 95,
பேச : 9445112675 | rsyfchennai@gmail.com

  • மாநகராட்சிப் பள்ளிகளைதனியாருக்கு தாரை வார்க்காதே!
  • தனியார் பள்ளிகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தாதே!
  • அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரம் உயர்த்து !
  • அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு!

என்ற முழக்கங்களுடன் அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றது புமாஇமு. அதன் ஒரு பகுதியாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 7.02.2014 அன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சென்னைக் கிளைச் செயலர் தோழர்.வ.கார்த்திகேயன் தலைமை ஏற்றார். மாநில அமைப்புக்குழு உறுப்பினர் த. நெடுஞ்செழியன் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:

– புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை

  1. தனியார் பள்ளிகளின் தரம் உயர்த்தப் போராடுவோம்.

    தனியாருக்குத் தாரை வார்க்க (!?) வேண்டிய அவசியம் ஏன் வந்தது? ஆசிரியர்கள் நேரத்திற்கு வருகிறார்களா? சொந்த பிசினஸ் செய்யாமல் ஒழுங்காக பாடம் சொல்லித்தருகிறார்களா? ஒழுக்கமாக இருக்கிறார்களா?

    தரம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை தனியாரை மட்டும் நுழைய விடமாட்டோம் என்பது சரியான வாதம் இல்லை.
    உரிமை வேண்டும் இடத்தில் கடமையும் இருக்க வேண்டும் என்பதே நமது கொள்கையாக இருக்க வேண்டும்.

    • அரசுப் பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் ஒழுக்கமாகவும், ஒழுங்கான நேரத்திற்கும் வருகிறார்கள் என்பதை அறிவீர்களா. குழந்தைகள் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு எத்தனை கேடுகள் செய்தால் பிள்ளைகளைப் போல் கருதி மன்னிக்கும் அரசு ஆசிரியர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள், தெரியுமா.

      பொத்தம் பொதுவாக ஆசிரியரை விமர்சிக்கும் வழமையை இத்துடன் கைவிடுங்கள் @ மணவை சிவா

  2. Students studying in Chennai(corporation) schools do not attend private coaching for every subject like the private school students.Simply they cannot afford it.Yet,Chennai schools are showing good pass percentage for the past one decade.Most of these students are from very poor households.They assist their parents in vegetable selling etc out of school hours..Instead of appreciating the Govt/corporation school teachers,people like Manavai Siva throw mud on them like our “leading”dailies like Dinamani.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க