திருமுடிவாக்கம் ஜீ.டெக். நிறுவனத்தில் தொழிற்சங்கம் துவங்கியதற்காக வேலை நீக்கம் !
ஜனநாயக நாட்டில் தொழிற்சங்கம் துவங்கியதால் முன்னணியாளர் வேலை நீக்கம் !
ஜீ.டெக் நிர்வாகமே
- நிரந்தரத் தொழிலாளர்களின் உற்பத்தி சார்ந்த வேலைகளை ஒப்பந்த தொழிலாளர் மூலம் செய்வதை நிறுத்து !
- ஒப்பந்த தொழிலாளர் மூலம் சட்டவிரோதமாக உற்பத்தி செய்து கொண்டு நிரந்தர தொழிலாளர்களை பழி வாங்காதே
- தொழிற்சங்கம் துவங்கியது குற்றமா? சங்க முன்னணியாளர்களின் சட்டவிரோத வேலை நீக்கத்தை ரத்து செய்
- தொழிலாளர்களை இழிவாக நடத்தாதே
- தொழிற்சங்கத்தை அங்கீகரி, நியாயமான கோரிக்கைகளை பேசித்தீர்
தமிழக அரசே
- ஜீ.டெக் முதலாளிகளுக்கு ஏவலர்களாக வேலை பார்க்கும் தொழிலாளர் நலத்துறையின் ஓய்வுபெற்ற ஆணையர் திரு.சந்திரமோகன் (JCL) திரு தம்பிதுரை (ACL) மற்றும் திரு.அருணாசலம் ஆகியோரை கைது செய்.
- அதிகாரிகள், காவல்துறை மற்றும் உள்ளூர் கவுன்சிலர் வரை தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட உத்தரவிடும் தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு (CM-CELL) செயலாளர் IV திரு. இராமலிங்கம் I.A.S அவர்களை பணி நீக்கம் செய்
- மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராக செயல்படும் – முன்னாள்-இந்நாள் தொழில்துறை ஆணையர்கள், அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் தலைமை செயலர் மீது தேச துரோக குற்றத்தின் கீழ் வழக்கு போடு. சி.பி.ஐ. விசாரணை நடத்து!
தொழிலாளர்களே
- தொழிற்சங்க உரிமையை நிலைநாட்ட, வர்க்கமாக அணிதிரள்வோம்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
செய்தி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
ஜீ.டெக். கிளை, திருமுடிவாக்கம்