Saturday, May 10, 2025
முகப்புசெய்திகோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்திற்கு வாக்களியுங்கள்!

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்திற்கு வாக்களியுங்கள்!

-

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிற்சங்க தேர்தலை ஒட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் வெளியிட்டிருக்கும் துண்டுப் பிரசுரத்தை இங்கே வெளியிடுகிறோம்.

ன்பார்ந்த தொழிலாளத் தோழர்களே!

தொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொழிலாளர்களால் நடத்தப்படும் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்திற்கு வாக்களியுங்கள்

போஸ்டர்

  • 50 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்சங்க அரங்கில் நிலவிய சர்வாதிகாரத்தை முறியடித்து தொழிலாளர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையைத் தந்துள்ள இந்தத் தேர்தலைக் கொண்டு வந்தது கோவை மண்டல சங்கம்
  • ரூ 1650 சம்பள உயர்வு, 7 மாத பின்பாக்கித் தொகையும் கிடைத்தற்க காரணமாக இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை பித்தலாட்டவாதிகளால் கழுத்தறுப்பு செய்ய முடியாமல் தடுத்து போராட்டத்தை உறுதியாக நடத்தியது கோவை மண்டல சங்கம்.
  • 50 ஆண்டுகால வரலாற்றில் ரூ 230 என சம்பள உயர்வை மூன்றிலக்கத்திற்கு உயர்த்தியதற்குக் காரணமாக இருந்தது கோவை மண்டல சங்கம்.
  • 15 ஆண்டுகாலமாக யாராலும் சீண்டப்படாமல் கிடப்பில் கிடந்த சம்பள உயர்விற்கான பேச்சுவார்த்தையை நடப்பிற்குக் கொண்டு வந்ததற்குக் காரணமான வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்தது கோவை மண்டல சங்கம்.
  • தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்வதை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்காக நிர்வாகத்தை நிர்ப்பந்தம் செய்தது கோவை மண்டல சங்கம்.
  • ஐ.டி.ஏ முறையில் சம்பளம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகமாக்குகிற 11 மற்றும் 13-வது ஷரத்துகளை இந்த ஒப்பந்தத்தில் இணைப்பதற்காக விடாப்பிடியாக நிர்வாகத்தை வற்புறுத்தியது கோவை மண்டல சங்கம்.
  • நிர்வாகத்தின் ஊழல்களை ஒழிப்போம் ! ஆலையின் லாபத்தை அதிகரிப்போம் ! அதன் மூலம் ஊழியர்களுக்கும் நமக்குமான சம்பள வேறுபாட்டைச் சரிசெய்வோம்! சம்பளத்தை அதிகப்படுத்துவோம்!
    இவ்வளவையும் செய்ய அனைத்துப் பிரதிநிதிகளையும் கோவை மண்டலத்திற்கே வழங்குங்கள்.
  • நீங்கள் கோவை மண்டலத்திற்குத்தான் வாக்களிக்க வேண்டும், காரணம் கோவை மண்டல சங்கம் மட்டும்தான் தொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொழிலாளர்களால் நடத்தப்படுகின்ற சங்கம். இதை மட்டும் மறந்து விடாதீர்கள்!
  • தொழிலாளி வர்க்க விடுதலைக்காகப் போராடுகிற தொழிற்சங்கத் தொழிலாளி ஒரு போராளி!
    பணப்பட்டுவாடாவை தொழிற்சங்கத்துக்குள் பழக்கப்படுத்துபவன் ஒரு கருங்காலி!
  • தொழிலாளி வர்க்கம் இன்னும் பெற வேண்டிய உரிமைகள் ஏராளம்! ஏராளம்!
    அதைப் போராடிப் பெற்றுத் தரும் சங்கத்தை வட்டிக்கடை போல ஆக்குவது அவமானம்! அவமானம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தொழிலாளி வர்க்கமே சிந்திப்பீர்! கோவை மண்டலச் சங்கத்திற்கே வாக்களிப்பீர்!

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – தமிழ்நாடு
நாகை – இராமநாதபுரம் மாவட்டங்கள்
தொடர்புக்கு : 9443175256 – 7639638293 – 9788757878 – 9629730399