privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்தஞ்சை மீத்தேன் திட்டத்தை முறியடிப்போம் - மே தின அறைகூவல்

தஞ்சை மீத்தேன் திட்டத்தை முறியடிப்போம் – மே தின அறைகூவல்

-

40 ஆண்டுகளாக காவிரி நீர் சிக்கலைத் தீர்க்காமல் டெல்டா மாவட்ட விவசாயிகளையும் மக்களையும் வஞ்சித்து வந்த ஓட்டுக் கட்சிகளும் அதிகார வர்க்கமும் தற்போது இம் மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்து நிலத்தடி நீரை நம்பி நடக்கும் கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும் ஒழித்துக் கட்ட முனைகின்றன.

சுமார் 667 சதுர கி.மீ பரப்பளவில் விரிந்து பரவியுள்ள நிலக்கரி வளத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கில் அதன் முதல் கட்டமாக அதற்கு மேல் படிந்துள்ள மீத்தேன் வாயுவை எடுக்கவும் வணிக நோக்கில் மின் திட்டங்களை இயக்கவும் ஒப்பந்தம் போட்டு அனுமதித்துள்ளது அரசு. லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலத்தைப் பறித்து அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து நாடோடிகளாக விரட்டியடிக்கும் இந்த திட்டம் குறித்து பாதிப்புக்குள்ளாகவுள்ள மக்களிடம் கருத்து கூட கேட்காமல், அவர்களின் விருப்பம் மற்றும் முடிவுக்கு எதிராக இந்த திட்டத்தை மக்கள் மீது திணித்துள்ளன அதிகார வர்க்கமும் ஆட்சிக்கு வந்த கட்சிகளும்.

தற்போது நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அனைத்து ஓட்டுக் கட்சிகளுமே இந்த திட்டத்தை எதிர்ப்பதாக நாடகமாடினாலும் ஓட்டுப் பொறுக்கிய பின் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள் என்பதை மக்கள் புரிந்தே வைத்துள்ளனர்.

மறுபுறம், திருவாரூர் மாவட்ட ஆட்சியரோ கிராமசபைகள் இத்திட்டத்தை எதிர்த்து தீர்மானம் போடுவதைக் கூட சகித்துக்கொள்ள முடியாமல் வாய்வழி மிரட்டல் விடுத்துள்ளார். கார்ப்பரேட் கம்பெனிகளின் தாசனாக செயல்பட்டுள்ளார்.

மக்களுக்கு துளியும் பொறுப்பாக நடந்து கொள்ளாத இந்த அதிகார வர்க்கத்தின் ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் உண்மையான ஜனநாயகத்துக்கான, மாற்று மக்கள் அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும் அதற்கான போர்க்குணமிக்க போராட்ட முறைகளில் ஈடுபட வேண்டும் என்பதையும் மக்களிடம் உணர்த்தும் வகையில் இந்த போராட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.

இந்த பிரச்சாரத்தை கொண்டு சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் மற்றும் இளைஞர்களின் ஊக்கமான பங்கேற்பை காண முடிந்த்து.

அந்த வகையில் கிழக்கிந்திய கம்பெனியை விரட்டிய மக்கள் இந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தையும் விரட்டியடிப்பார்கள் என்பதை உறுதி செய்துள்ளனர்.

மக்களுக்கு சொந்தமான கனிச்செல்வங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்கானதாக மாற்றும் அரசின் தனியாரமய-தாராளமள-உலகமய கொள்கைக்கு எதிரான நியாயமான மக்கள் போராட்டம் வெல்லும்.

நடக்கவுள்ள முற்றுகைப் போராட்டம் இந்த வெற்றியை முன்னறிவிக்கும்.

இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகை மாவட்டங்களிலிருந்து கலந்து கொள்கின்றனர். நாட்டுப் பற்று கொண்ட உழைக்கும் மக்கள் அனைவரையும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அறைகூவி அழைக்கிறோம்.

மே நாளில் கொள்ளைக்கார GEECL ( கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட்) அலுவல முற்றுகைப் போராட்டம்!

காலை 10.30 மணிக்கு தஞ்சை இரயிலடியிலிருந்து பேரணி.

தலைமை:
தோழர். மாரிமுத்து, வட்டார அமைப்பாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி,
பட்டுக்கோட்டை வட்டம்.

சிறப்புரை
தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

மே 1, மீத்தேன் அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கான முழக்கங்கள்:

  • டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை முறியடிப்போம்!
    உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
  • கொள்ளைக்கார GEECL நிறுவனத்தை விரட்டியடிப்போம்!
  • கார்ப்பரேட் கொள்ளையை சட்டப்பூர்வமாக்கும் தனியார்மயத்தை ஒழித்துக்கட்டுவோம்!
  • மக்களைக் கொல்லும் முதலாளித்துவம் ஒழிக! உழைப்போரைக் காக்கும் கம்யூனிசம் வெல்க!
  • உண்மையான ஜனநாயக மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்!
  • சாதி மதத் தடைகளைத் தகர்த்தெறிவோம்! தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!
  • பிழைப்புவாத ஓட்டுக்கட்சிகளை, தொழிற்சங்கங்களை உதறியெறிவோம்!
  • மார்க்சிய-லெனினிய புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள்வோம்!

செய்தியாளர் சந்திப்பு, பத்திரிகை செய்திகள்

இவண்,

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி மாவட்டங்கள்.