privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விவெற்றிக்கொடி கட்டிய வேலிப் பூக்கள் !

வெற்றிக்கொடி கட்டிய வேலிப் பூக்கள் !

-

ப்ளஸ் டூ தேர்ச்சி : மண் பூரிக்கும் மலர்கள் – அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள்!

  • துத்திப் பூக்களின்
    எளிமையும், ஈர்ப்பும்
    எங்கள் மாநகராட்சி
    அரசுப்பள்ளி மாணவர்கள்
    பாதைகள் மறிக்கும்
    முட்களைத் தாண்டி
    வெற்றிக்கொடி கட்டிய
    வேலிப் பூக்கள்!
  • புலர் பொழுதின் ஊக்கம்
    விடிவானின் அமைதிப் பேரழுகு
    எங்கள்
    அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.
    வசதிகள் குறைவு
    எனினும், நூலாம் படைகள் தாண்டி
    ஓட்டை, உடைசல்களுக்கிடையே
    மங்கியத் தாழ்வாரங்களை
    ஒளிபூசி உயிர்ப்பிக்கும்
    சூரிய மலர்கள்
    எங்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!
  • பிளஸ் டூ ரிசல்ட்மினுக்கும் கவர்ச்சி இல்லை…
    மீடியாக்களின் பீற்றல் ஒளி இல்லை…
    ஆடம்பர விளம்பரமில்லை…
    அருகிய ஈரத்தில்
    இறுகிய மண்பசையில்
    கிடைத்த வாய்ப்பில்
    முளைத்த விதைகளாய்
    எழுந்த மணிகளே…
    அரசுப்பள்ளி மாணவர்களே!
    உங்கள் தேர்ச்சியில்
    உவக்கும் கிழக்கும்!
  • கட்டாய நன்கொடை இல்லாமல்,
    களவாட பல ட்யூசன் இல்லாமல்,
    உறவாடும் உழைப்பின் தரத்தால்
    கல்வித் தரத்தை களத்தில் மலர்வித்த
    அரசுப்பள்ளி ஆசிரியர்களே…
    உங்கள் மகத்தான சாதனைக்கு
    மக்களின் மனதினிய வாழ்த்துக்கள்!

– துரை.சண்முகம்

  1. அரசாங்க பள்ளிக்கூடத்துல படிச்சு நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வாழ்துக்கள் பொதுவா +2 ல நல்ல மதிப்பெண் எடுத்த அனைவருக்கும் வாழ்துகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி வாழ்த்து சொல்லனும் தனியார் பள்ளி மாணவ்ர்கள் படிக்க வைக்கப்ப்டுகிறார்கள் அரசு பள்ளி மானவர்கள் படிக்கிறார்கள் இதுதான் உண்மையான வெற்றி

  2. வாழ்த்துக்கள் இந்த செல்வங்களுக்கு.

  3. கட்டாய நன்கொடை இல்லாமல்,
    களவாட பல ட்யூசன் இல்லாமல்,
    உறவாடும் உழைப்பின் தரத்தால்
    கல்வித் தரத்தை களத்தில் மலர்வித்த
    அரசுப்பள்ளி ஆசிரியர்களே…
    உங்கள் மகத்தான சாதனைக்கு
    மக்களின் மனதினிய வாழ்த்துக்கள்

    By viju Sundersingh ( Cost analyst)- Vilai Ayvallar
    Studied in Govt school once again i salute ALL govt teachers & students for defeating All Educational thieves

    Education is our rights
    Do not buy Education
    Study in Govt School
    It teach us life

    Metric education is like Broiler chicken
    Cannot withstand
    I studied in Govt school in Martandam, Now i can speak 5

  4. மாநகராட்சி பள்ளிகளின் இந்த வருடத்தின் மாபெறும் புரட்சி
    இனிவரும் ஆண்டுகளும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

Leave a Reply to S.A.Ibrahim பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க