privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !

கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !

-

பாபர் மசூதியை இடிக்கத் தனது ரதயாத்திரையை குஜராத்திலுள்ள சோமநாதபுரத்திலிருந்துதான் துவங்கினார் அத்வானி. அயோத்திக்கு பாபர்; சோமநாதபுரத்திற்கு கஜினி. அயோத்தியில் ராமர் கோயில் எதையும் பாபர் இடிக்கவில்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்களாலும் தொல்பொருள் ஆய்வாளர்களாலும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் சோமநாதபுரத்தின் விசயம் அப்படி அல்ல. சோமநாதபுரம் கோயிலை கஜினி முகமது கொள்ளையிட்ட செய்தி நீண்ட நாட்களாகவே நமது வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்று வருகிறது.

இந்தியாவில் இந்து – முசுலீம் முரண்பாட்டின் துவக்கமே கஜினியின் இந்தப் படையெடுப்புதான் என இன்று பாரதிய ஜனதா கும்பல் செய்து வரும் பிரச்சாரத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன நமது பாடநூல்கள்.

கஜினி படையெடுப்பு
கஜினி படையெடுப்பு

அப்படியானால் கஜினி முகமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்ததும் கொள்ளையடித்ததும் பொய்யா? இல்லை, மறுக்க முடியாத உணமை.

ஆனால் கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள் என்பதும், அதேபோல கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர் என்பதும், ‘இந்துக்’ கோயிலைக் கொள்ளையடித்த அந்த ‘இசுலாமிய’ மன்னன்தனது நாட்டின் ‘இந்து’ வர்த்தகர்களைக் கொள்ளையடிக்கவில்லை என்பதும் நமது பாடநூல்கள் குறிப்பிடாத உணமை.

கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் சாளுக்கியர்கள் மீது படையெடுத்தான். இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ, இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ குறிப்பிடாத வரலாற்றுப் பாடநூல் கஜினி முகமது எனும் ‘இசுலாமிய’ மன்னன் ‘இந்தியா’ மீது படையெடுத்ததாகக் குறிப்பிடுவதை ஒப்பு நோக்க வேண்டும்.

ஒரு நாடு என்ற பொருளில் இந்தியா என்று நாம் இன்றைக்கு அழைக்கின்ற புவிப்பரப்பு சுமார் 50(தற்போது 65 ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. கஜினி முகமதுவின் காலத்திலோ, அதற்கு முன்னரோ இந்தப் புவிப்பரப்பு ஒரே ஆட்சியின் கீழ் ஒரு நாடாக எப்போதும் இருந்ததில்லை.

ஏன், 1947 ஆகஸ்டு 15-ம் தேதியன்று காஷ்மீரும், ஆந்திரத்தின் பெரும் பகுதியும், பல வடகிழக்கு மாநிலங்களும் இந்திய யூனியனில் இல்லை. எழுபதுகளுக்கு முன்னர் சிக்கிம் இந்தியாவில் இல்லை. அவ்வாறிருக்கும் போது 20-ம் நூற்றாண்டில் உருவாகவிருக்கும் இந்தியா மீது 11-ம் நூற்றாண்டிலேயே கஜினிமுகமது எப்படிப் படையெடுக்க முடியும்?

இவ்வாறு பேசுவதே தேசத் துரோகம் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குமுறுவார்கள். அகண்ட பாரதத்திற்கு அவர்கள் வரைந்துள்ள எல்லைக் கோட்டின்படி ஆப்கானிஸ்தானமும் இந்தியாவில் அடக்கம். அந்தக் கணக்கின்படி பார்த்தால் இராசேந்திர சோழனைப் போல கஜினி முகமதுவும் ஒரு இந்தியன். ஒரு இந்தியன், எப்படி இந்தியாவின் மீது படையெடுக்க முடியும்?

இது வேடிக்கையான வாதமோ, குதர்க்கவாதமோ அல்ல. இந்து தேசியக் கண்ணோட்டத்திலிருந்து நமக்குக் கற்பிக்கப்படும் வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து புரிந்து கொள்ளும் முயற்சி.

பிரபல வரலாற்றாய்வாளர் ரோமில்லா தபார் பம்பாய் பல்கலைக் கழகத்தில் இவ்வாண்டு நிகழ்த்திய டி.டி. கோசாம்பி நினைவுச் சொற்பொழிவில் சோமநாதபுரம் படையெடுப்பு குறித்த புதிய வரலாற்றுத் தரவுகளை வெளியிட்டுள்ளார். ‘செமினார்’ ஆங்கில மாத இதழில் வெளியான அந்தக் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.

***

சோமநாதபுரம் – அரேபியர்களுடன் இருந்த கடல் வர்த்தகத் தொடர்பு காரணமாக செல்வச் செழிப்புடன் விளங்கிய துறைமுக நகரம். இந்த அராபிய வர்த்தகத் தொடர்பு பல நூற்றாண்டுகள் முந்தையது. அரேபிய வர்த்தகர்கள், மாலுமிகளில் பலர் இங்கேயே திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டு மேற்குக் கடற்கரை ஓரமாக நிரந்தரமாகவே தங்கி விட்டனர். கி.பி 8, 9 நூற்றாண்டைச் சேர்ந்த ராட்டிரகூட ஆட்சியில் கடலோரப் பகுதிகளில் தாஜிக்கிஸ்தானைச் சேர்ந்த முசுலீம்கள் ஆளுநர்களாகக் கூடப் பணியாற்றியிருக்கின்றனர். அதே போல கஜினி நகரத்தில் இந்து வியாபாரிகள் செல்வாக்குடன் இருந்திருக்கின்றனர்.

சோமநாதபுரம் கடற்கரை
சோமநாதபுரம் கடற்கரை (இன்று)

சோமநாதபுரம் கோயில் அத்தனை செல்வச் செழிப்புள்ளதாக விளங்கச் சில காரணங்கள் இருந்தன. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் யாத்திரை வரி வசூலிக்கப்பட்டது. (ஜஸியா எனும் யாத்திரை வரி முசுலீம் மன்னர்களால் இந்து யாத்தீகர்களிடம் வசூலிக்கப்பட்டதாக மட்டுமே கூறுகிறது பாடநூல்). இதில் கிடைத்த பெரும் வருவாயைக் கொண்டு அரேபியக் குதிரை இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது கோயில் நிர்வாகம்.

கோயில் நிர்வாகத்திற்கும், சோலங்கி ஆட்சிக்கும் அன்றைக்குப் பெரும் சவாலாக இருந்தவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கொள்ளையடித்த குறுநில மன்னர்கள்தான். யாதவர்கள், சுடாசாமர்கள், அபிரர்கள் என்று அழைக்கப்பட்ட அந்தக் குறுநில மன்னர்கள் வர்த்தகர்களையும் பக்தர்களையும் வழிமறித்து அவர்கள் கொண்டுவரும் காணிக்கைகளை வழிப்பறி செய்தனர். இவர்களைச் சமாளிப்பதுதான் சோலங்கி அரசின் தலையாய பணியாக இருந்தது.

இந்தப் பின்புலத்தில் கி.பி 1025-ம் ஆண்டு நடந்தது கஜினியின் படையெடுப்பு. அது குறித்த வெவ்வேறு வரலாற்று ஆதாரங்களை இனிக் காண்போம்.

துருக்கிய – பாரசீகக் குறிப்புகள்:

ன்னர்களின் வீரபராக்கிரமங்களை மிகைப்படுத்திக் கூறும் எல்லா இலக்கியங்களுக்கும் உள்ள தன்மை இவற்றிலும் உண்டு. கீழை இசுலாமிய உலகின் குறிப்பிடத்தக்க கவிஞரான பரூக்கி சிஸ்தானி என்பவர் கஜினியின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கிறார்.

சிஸ்தானியின் கூற்றுப்படி சோமநாதபுரத்தில் கஜினியால் உடைப்பக்கட்ட சிலை இந்துக் கடவுள் அல்ல; இசுலாம் தோன்றுவதற்கு முன் அரேபியாவில் வழிப்பட்டு வந்த வாத், உஸ்ஸா, மானத் என்ற பெண் தெய்வங்களில் ஒன்றான மானத் என்ற பெண் கடவுளின் சிலை.

உருவ வழிபாட்டை எதிர்த்த முகமது நபி இச்சிலைகளை உடைத்தெறியுமாறு ஆணையிட்டதாகவும் மற்ற இரண்டு கடவுள்களின் சிலையும் உடைக்கப்பட்டு விட்டதாகவும், மானத்தின் சிலை மட்டும் குஜராத்திற்கு ரகசியமாகக் கடத்தி வரப்பட்டு விட்டதாகவும் கூறுகிறார் சிஸ்தானி.

‘’சு-மானத்’ என்றால் ’’மானத் கடவுளின் உறைவிடம்’’ என்று பொருள். இந்தச் சிலையை உடைத்ததன் மூலம் நிறைவேற்றப்படாமலிருந்த ஒரு இசுலாமியக் கடமையை கஜினி நிறைவேற்றிவிட்டார்’’ என்று அவர் எழுதுகிறார்.

மன்னனைக் ‘குளிப்பாட்டுவதற்கு’ வழக்கமாக அரசவைப் புலவர்கள் புனையும் கதைதான் இது என்றும், பல்வேறு இசுலாமிய மன்னர்களைக் காட்டிலும் தன்னை ஒரு மதக்கடமையை நிறைவேற்றிய மாவீரனாகச் சித்தரித்துக் கொள்ள கஜினி செய்த முயற்சி என்றும் கூறி வரலாற்றாசிரியர்கள் இந்தக் கதையை நிராகரிக்கின்றனர்.

கஜினியின் அரசவையில் இருந்த அல் பரூனி எனும் அறிஞர் இந்தியாவின்பல பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து கிதாப் உல் ஹிந்த் எனும் வரலாற்று நூலை எழுதியவர். அவர் இத்தகைய கட்டுக் கதைகள் எதையும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கஜினி பேரரசு
கஜினி பேரரசு

இவை ஒரு புறமிருக்க சன்னி பிரிவு முசுலீமான கஜினி, ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் 50,000 பேரை இசுலாமிய மார்க்கத்துக்கு விரோதமானவர்கள் என்று கூறிக் கொலை செய்தான் என்றும் துருக்கிய – பாரசீக வரலாற்றுக் குறிப்புகள் கூறிகின்றன.

இன்னொரு சம்பவமும் நடதுள்ளது. மூல்தான் நகரிலிருந்த இந்துக் கோயிலொன்றை இசுமாயிலி முசுலீம்கள் தாக்கியிருக்கின்றனர். அதற்குப் பதிலடியாக இசுமாயிலி முஸ்லீம்களைத் தாக்கியது மட்டுமின்றி அவர்களது மசூதியையும் இழுத்து மூடியிருக்கிறான் கஜினி.

சோமநாதபுரத்தின் மீதான தாக்குதல், ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றை மதக் கடமையை நிறைவேற்றும் செயல்களாக அன்று இசுலாமிய உலகத்திடம் (கலீபாவிடம்) கஜினி சித்தரித்திருக்கலாம். எனினும் அடிப்படை உண்மை அதுவல்ல.

இந்தியாவின் பல்வேறு அரசுகளுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகத்தில் அரேபியாவுடன் கஜினி (ஆப்கான்) போட்டியிட்டுக் கொண்டிருந்தது. சோமநாதபுரத்தின் போரா முஸ்லீம் மற்றும் இந்து வணிகர்கள் மூலமாகவும், சிந்து மாகாணத்தின் (மூல்தான்) இசுமாயிலி, ஷியா வியாபாரிகள் மூலமாகவும் நடைபெற்ற இந்த வர்த்தகத்தைத் தடுப்பதன் மூலம்தான் கஜினியின் வர்த்தகம் பெருகும் என்பது யதார்த்த நிலையாக இருந்தது.

வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை போர்த்திக் கொண்டது இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்.

சமண நூல்களின் குறிப்புகள்:

இனி, அக்காலத்தில் நாடெங்கும் செல்வாக்குடன் திகழ்ந்த சமண மத்ததினரின் குறிப்புகளைக் காண்போம். கோயில்களை அழித்து முனிவர்களையும் பார்ப்பனர்களையும் துன்புறுத்துகின்ற ராட்சதர்களுக்கெதிராக சாளுக்கிய மன்னன் போர் தொடுத்ததை 12-ம் நூற்றாண்டின் சமண நூல் குறிப்பிடுகிறது.

ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன் நடந்த கஜினியின் படையெடுப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதே சாளுக்கிய மன்னன் காம்பே பகுதியில் முசுலீம்களுக்கு ஒரு மசூதி கட்டிக் கொடுத்திருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாளுக்கிய மன்னன் குமாரபாலன் என்பவன் சாகாவரம் பெற விரும்பிய கதையை இன்னொரு சமண நூல் கூறுகிறது:

கஜினி முகமது
கஜினி முகமது

சோமநாதபுரத்திலுள்ள மரத்தினாலான பாழடைந்த கோயிலை கற்கோயிலாக மாற்றிக் கட்டினால் சாகாவரம் பெறலாமென அவனது அமைச்சன் கூறிய யோசனையை மன்னன் அமல்படுத்துகிறான். சமண மதத்தைச் சார்ந்த அந்த அமைச்சன் தனது மதத்தின் வலிமையை மன்னனுக்குப் புரிய வைக்க சமண முனிவர் ஒருவரை அழைத்து வந்தான். சோமநாதபுரம் கோயிலுக்கு வந்த அந்த முனிவர் தனது தவ வலிமையினால் ‘சிவபெருமானை’ அழைத்தவுடனே சிவன் மன்னனுக்குக் காட்சியளித்தாராம். சிவனையே சொடுக்கு போட்டு வரவழைக்கும் அந்த முனிவரின் தவ வலிமையை வியந்த மன்னன், உடனே சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினான் எனவும் அந்நூல் குறிப்பிடுகிறது.

கஜினி முகமதுவின் படையெடுப்புக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட இந்நூலிலும் படையெடுப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை.

11-ம் நூற்றாண்டில் (அதாவது கஜினி முகமதுவின் படையெடுப்பின் போது) வாழ்ந்த மால்வா அரசவையின் சமணக் கவிஞர் தனபாலன் என்பவர் சோமநாதபுரம் படையெடுப்பைக் குறிப்பிடுகிறார். ஆனால் சிலை உடைப்பு பற்றி ஏதும் இல்லை. மாறாக மகாவீரரின் சிலைகளை கஜினி முகமதுவால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை விரிவாகக் கூறுவதன் மூலம் சைவத்தைக் காட்டிலும் சமணத்தின் மேன்மையை வலியுறுத்துகிறார்.

சைவத்திற்கு எதிராகக் கடுமையாக மோதிக் கொண்டிருந்த சமணர்கள், ‘’தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத சிவபெருமானைப்’’ பற்றி எழுதாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன?

சோமநாதபுரத்தின் சமஸ்கிருதக் கல்வெட்டுகள்:

12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.

ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படையெடுப்பைப் பற்றி ஒரு கல்வெட்டும் இல்லை.

கல்வெட்டைக் காண்பவர்கள் ‘’சிவனுக்கே இந்தக் கதியா’’ என்று நம்பிக்கையிழந்து விடுவார்கள் என்ற சங்கடமா? அப்படியானால் உள்ளூர் மன்னர்கள் கோயிலைத் தாக்கியதை மட்டும் ஏன் குறிப்பிட வேண்டும்? அல்லது கோயிலைக் கொள்ளையடிப்பது என்பது அடிக்கடி நடக்கக்கூடிய சாதாரண விசயமாக இருந்ததா? – என்ற பல கேள்விகளை இக்கல்வெட்டுகள் கிளப்புகின்றன.

1264-ம் ஆண்டின் இன்னொரு கோயில் கல்வெட்டு மிக முக்கியமானது. சமஸ்கிருதத்திலும் அராபிய மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டு, ஹார்மூஸ் நகரைச் சேர்ந்த ஒரு முசுலீம் வியாபாரிக்கு மசூதி கட்டுவதற்காக சோமநாதபுரத்திலேயே நிலம் விற்பனை செய்யப்பட்டது பற்றியதாகும்.

கோஜா நூருதீன் பெரூஸ் என்ற வியாபாரிக்கு ஸ்ரீசாதா என்ற உள்ளூர் மன்னன் அனுமதியுடன் செய்த இந்த நிலவிற்பனைக்கு இரண்டு உள்ளூராட்சி அமைப்புகளும் அங்கீகாரம் அளித்துள்ளன.

சோமநாதபுரம் கோயிலின் அர்ச்சகர் வீரபத்ரனின் தலைமையில் வர்த்தகர்கள், அதிகாரிகள், உள்ளூர்ப் பிரமுகர்கள் அடங்கிய ‘பஞ்சகுலா’ என்ற பஞ்சாயத்து ஒரு உள்ளூர் அமைப்பு.

கப்பல் முதலாளிகள், கைவினைஞர்கள், மாலுமிகள், மதகுருமார்கள் ஆகியோரடங்கிய ‘ஜமாதா’ என்ற ஜமாத் இரண்டாவது அமைப்பு. இந்த ஜமாத்தின் உறுப்பினர்களாக வாணிபர்கள், கொத்தனார்கள், முசல்மான் குதிரை லாயக்காரர்கள் ஆகியோரும் அவர்களது சாதியின் பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் இசுலாத்திற்கு மாறிய உள்ளூர் சேவைச் சாதியினராக இருக்கக்கூடும்.

மசூதிக்கான நிலம் யார் யாரிடமிருந்தெல்லாம் விலைக்கு வாங்கப்பட்டது என்ற பட்டியல் தெளிவாக உள்ளது. அதில் பெரும்பகுதி நிலம் சோமநாதபுரம் கோயிலுக்குச் சொந்தமானது என்பதும், அதை விற்பனை செய்தவர் கோயிலின் தலைமை அர்ச்சகரான பார்ப்பனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தக் கல்வெட்டையும் பரிசீலிக்கும் போது, எவ்வித நிர்jfபந்தமுமின்றி மிகச் சுமுகமாகவே இந்த விற்பனை நடந்துள்ளதென தெரிகிறது.

கஜினி முகமதுவின் படையெடுப்பு நடைபெற்று சுமார் இருநூறே ஆண்டுகளில் அந்தக் கோயில் நிலத்தையே மசூதிக்கு விற்க அர்ச்சகர்களும், ‘இந்து’ வியாபாரிகளும் எப்படிச் சம்மதித்தனர்? 1000 ஆண்டுகளாக இந்தியா முழுவதிலுமுள்ள இந்துக்களின் நினைவில் கல்வெட்டாகப் பதிந்து அவமான உணர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் என்று பாரதீய ஜனதா கூறுகிறதே, அந்த கஜினியின் படையெடுப்பை அதே சோமநாதபுரத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் மறந்தது எப்படி? அதுவும் இருநூறே ஆண்டுகளில்!

ஞாபக மறதியா? அல்லது பலநூறு படையெடுப்புகளில் அதுவும் ஒன்று என்பதால் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவு முக்கியமானல்ல என்பதாலா?

அல்லது தங்களுடன் “சுமூகமான வர்த்தக உறவு கொண்டிருந்த அரேபியர்கள் வேறு, ஆக்கிரமித்த துருக்கியர்கள் வேறு; இருவரும் இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களிருவரையும் ‘முசல்மான்கள்’ என்று ஒரே மாதிரியாகக் கருத முடியாது’’ என எண்ணினார்களா – இந்தக் காரணம்தான் அடிப்படையானதாகத் தெரிகிறது.

அதுமட்டுமல்ல, குதிரை வர்த்தகத்திற்குப் பெயர்போன ஹார்மஸ் நகர முசுலீம் வியாபாரிக்குத்தான் நிலம் விற்கப்பட்டிருக்கிறது. எனவே வர்த்தக நலன் இதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கக் கூடும். கோயில் நிர்வாகிகள் கோயில் பணத்தில் குதிரை வர்த்தகம் செய்து கணிசமாக லாபம் ஈட்டியிருக்கக் கூடும் என்பதும் இந்தப் ‘பெருந்தன்மைக்கு’க் காரணமாக இருந்திருக்கலாம்.

‘அர்ச்சகர்களின் பெருந்தன்மை’

இந்திய மன்னர்களுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகம் அரேபியா, சிந்து பகுதிகளைச் சேர்ந்த ஷியா, இசுமாயிலி பிரிவு முஸ்லீம் வியாபாரிகள் கையில் இருந்தது. இந்த வர்த்தக வழியைத் தடுத்து, ஆப்கான் மூலம் வர்த்தகம் செய்ய வைப்பதன் மூலம் தனது அரசின் செல்வாக்கை பெருக்குவதே கஜினி முகமதுவின் நோக்கம். வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை அணிந்தது இப்படித்தான்.

அதேபோல கஜினி முகமது சோமநாதபுரதிதன் மீது படையெடுத்து 200 ஆண்டுகளுக்குள், அந்த கோயில் நிலத்தையே மசூதி கட்டுவதற்காக விற்றிருக்கிறார்கள் கோயில் அர்ச்சகர்கள். இவர்களும் குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததுதான் இந்தப் ‘பெருந்தன்மை’க்கு காரணமாக  இருக்கும்.

சோமநாதபுரத்திலேயே காணப்படும் 15-ம் நூற்றாண்டின் கல்வெட்டொன்று இவை அனைத்தையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோலாகப் பயன்படுகிறது.

சமஸ்கிருத மொழியில் உள்ள அக்கல்வெட்டு ‘’பிஸ்மில்லா ரஹ்மானி ரஹீம்’’ என்ற இசுலாமிய வாழ்த்துச் சொல்லுடன் தொடங்குகிறது. ‘’போராபரீத்’’ என்பவருடைய அராபிய வம்சாவளியை விவரமாகக் கூறி துருக்கியர்களால் (கஜினி) சோமநாதபுரம் தாக்கப் பட்டபோது அதை எதிர்த்து உள்ளூர் மன்னன் பிரம்ம தேவன் சார்பாக போரா பரீத் போரிட்டு மடிந்ததாகவும், அவரது நினைவாக அந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

படையெடுப்புக்கு ஆளான சோமநாதபுரம் நகரைச் சேர்ந்தவர்களே கஜினியின் படையெடுப்பைப் பற்றி அப்போதும், அதையடுத்த சில நூற்றாண்டுகளிலும் எத்தகைய கருத்தும் கண்ணோட்டமும் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் கண்டோம். அப்படியானால் இந்த ‘’ஆயிரம் ஆண்டு அவமானம்’’ என்ற கதை எப்போது உருவானது? இந்தக் கதையின் முதல் ஆசிரியர்கள் வெள்ளையர்கள்.

பிரிட்டிஷ் காமன்ஸ் அவை விவாதம்:

“சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த கஜினி முகமது அந்தக் கோயிலின் சந்தனமரக் கதவுகளை கொண்டு சென்று விட்டான். ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பிரிட்டிஷ் ராணுவம் கஜினிக்குச் சென்று அங்கிருந்து அந்தக் கதவைக் கொண்டு வந்து இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று 1842-ல் அறிவித்தார் லார்டு எல்லன்பரோ.

(1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போருக்கு 15 ஆண்டுகள் முன்னர்தான் அந்த விவகாரம் தொடங்குகிறது என்பதையும், இந்து-முசுலீம் மன்னர்களையும் மக்களையும் பிளவுபடுத்துவது அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியின் வாழ்வுக்கே அவசியமானதாக இருந்தது என்பதையும் வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.)

ஆப்கானை வெல்ல முடியாத பிரிட்டன் இக்கதவுகளைக் கொண்டு வருவதன் மூலம் ஆப்கான் மீதான தனது மேலாண்மையைக் காட்டலாம்; அதே நேரத்தில் இந்துக்களையும் கவர முடியும் என்பது இந்நடவடிக்கையின் நோக்கம்.

இந்நடவடிக்கையை ஆட்சேபித்த காமன்ஸ் அவையின் எதிர்த் தரப்பினர், “இது முசுலீம்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதில் முடியும்; மேலும் லிங்க வழிபாடு போன்ற காட்டுமிராண்டித்தனமான நம்பிக்கைகளுக்கு நாம் துணை போவதாக அமையும்” என்று கூறினர்.

இந்த எதிர்ப்பை முறியடிக்க எல்லன் பரோவின் ஆதரவாளர்கள் கீழ்க்கண்டவாறு வாதிட்டார்கள்:

“முசுலீம் மன்னர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நாடு, அந்தத் துன்புறுத்தும் நினைவுகளால் ஆயிரம் ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறது. இந்துஸ்தானத்தின் மீதான மிக மோசமான ஆக்கிரமிப்பின் சின்னமாக அந்தச் சந்தனக் கதவுகள் இந்துக்களின் நினைவில் பதிந்திருக்கின்றன. எனவே இந்நடவடிக்கை அவர்களுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும்” என்றனர்.

கஜினியின் படையெடுப்பு – கொள்ளைக்கு ஆதாரமாக அவர்கள் காட்டிய நூல் பிரிஷ்டா என்ற பாரசீகக் கவிஞன் 17-ம் நூற்றாண்டில் எழுதியது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.

11-ம் நூற்றாண்டில் சிஸ்தானி எழுதியதைக் காட்டிலும் பிரிஷ்டாவின் கட்டுக்கதை மிகக் கவர்ச்சிகரமானது. சோமநாதபுரத்தில் மிகப் பிரம்மாண்டமான கடவுள் சிலை இருந்ததாகவும், அதன் வயிற்றைத் தன்னுடைய வாளால் கஜினி முகமது கிழித்தவுடன் அதிலிருந்து தங்கமும் நகையும் கொட்டத் தொடங்கியதாகவும் புராணப் புளுகுகள் கணக்கில் அளக்கிறார் பிரிஷ்டா.

ஒரு வழியாக இந்த ‘’வரலாற்று ஆதாரத்தை’’ வைத்துக் கொண்டு கஜினியிலிருந்து இரண்டு கதவுகளைத் தூக்கிக் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ராணுவம். வந்தபின் பார்த்தால் அவை எகிப்தியக் கதவுகள். அதற்கும் சோமநாதபுரத்திற்கும் சம்பந்தமில்லை. எனவே அவை ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. ‘இந்துக்களின் நினைவில் பதிந்த அந்த சந்தனக் கதவுகளை’ இப்போது கரையான்கள் தின்று கொண்டிருக்கும்.

காங்கிரசும் கஜினி முகமதுவும்:

இந்திய தேசிய விடுதலை இயக்கம் மறைமுகமாக முன்வைத்த இந்து தேசிய அரசியல் சோமநாதபுரம் விவகாரத்தைப் பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.

குஜராத்தைச் சேரந்த கே.எம்.முன்ஷி சோமநாதபுரம் கோயிலை திரும்பக் கட்டுவதை தேசிய இயக்கத்தின் கடமையாக முன்னிறுத்தினார். இவர் கல்கி பாணியிலான ‘வரலாற்று’ நாவல்கள் எழுதிக் கொண்டிருந்தவர். முசுலீம் எதிர்ப்பு இந்து தேசியத்தை பிரச்சாரம் செய்த பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் நாவலைப் படித்து, அதன் தாக்கத்தில் அதே பாணியில் “ஜெய சோமநாதா’’ எனும் நாவலை இவர் 1927-ல் எழுதி வெளியிட்டார். “சோமநாதா – அழிவில்லா ஆலயம்” என்ற இவரது இன்னொரு நூல் 1843-ல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையில் நடைபெற்ற விவாதக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது.

“இசுலாமிய ஆக்கிரமிப்புக்கு முந்தைய ஆரியப் பெருமிதத்தை மீட்பதே நமது லட்சியம்” என்று பகிரங்கமாகப் பேசி வந்த முன்ஷி மத்திய அமைச்சரும் ஆனார். ஆட்சிக்கு வந்தவுடனே முதல் வேலையாக இந்திய அரசாங்கம் சோமநாதபுரம் கோயிலைக் கட்டி 1951-ல் ஜனாதிபதி ராசேந்திர பிரசாத்தை வைத்துக் குடமுழுக்கு நடத்தியது.

“இந்திய அரசாங்கம் இதுவரை செய்த, செயது கொண்டிருக்கிற அனைத்துப் பணிகளைக் காட்டிலும் இந்தக் கோயிலைக் கட்டியதுதான் முக்கியமானது; ஏனென்றால் இது ஒட்டுமொத்த இந்தியாவையும் மனம் குளிரச் செய்யும்” என்றார் அமைச்சர் முன்ஷி.

இப்படியாக ஒரு வரலாற்றுப் புரட்டு மதரீதியாகப் புனிதப்படுத்தப்பட்டதுடன், “அரசு அங்கீகாரம் பெற்றது” என்ற முத்திரையும் அதன்மீது இடப்பட்டு விட்டது.

பாடநூல் புரட்டு!

மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தின் வரலாற்றுப் பாடநூலிலிருந்து சில வரிகளைக் கீழே தருகிறோம். ரோமிலா தபாரின் ஆ்ய்வுடன் இதனைப் பொருத்திப் பார்க்கவும்.

“கஜினி முகமது ஒரு முஸ்லீம் வெறியன். சோமநாதபுரத்தில் அவன் சிவபெருமான் சிலையைத் துண்டு துண்டாக உடைத்தான்; குவியல் குவியலாக வைரங்களையும், நகைகளையும் கொள்ளையடித்தான். ஏராளமான பேரைப் படுகொலை செய்தான்”

“கஜினி முகமதுவிம் படையெடுப்பின் விளைவாக பஞ்சாப், முஸ்லீம்களின் கைக்குப் போய் விட்டது, இந்திய நாடிடன் பொருளாதார, இராணுவ வல்லமைக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.”

‘மதவெறியன்’, பஞ்சாப் போன கதை இவையெல்லாம் பிரிஷ்டாவின் கட்டுக் கதையையும், முன்ஷியின் நாவலையும் வைத்து எழுதப்பட்டவை. இந்த ‘வரலாற்றை’ப் படித்த படிப்பாளிகள் மதவெறிக்கு ஆளாவதில் என்ன வியப்பு!

***

ராளமான நூல்கள் மற்றும் கல்வெட்டுகளை ஆதாரம் காட்டி இந்த ஆய்வுரையை நிகழ்த்தியிருக்கிறார் ரோமில்லா தபார். ஆனால் எந்தக் கோயிலை பாதுகாப்பதற்காக ஒரு முசுலீம் உயிர் துறந்தாரெனக் கல்வெட்டு இருக்கிறதோ அதே கோயிலிலிருந்து முசுலீம் மக்களுக்கெதிரான நாடு தழுவிய கலவரத்தைத் துவக்கி வைக்கிறார் அத்வானி.

இத்தகைய வரலாற்றுப் புரட்டு என்பது இந்துமத வெறியர்களால் மட்டும் செய்யப்படுவதல்ல. தத்தம் அரசியல் தேவைக்கு ஏற்ப இசுலாமிய, கிறித்தவ மதவெறியர்களும், இன வெறியர்களும், சாதி வெறியர்களும் இதையே தான் செய்கிறார்கள். கட்டபொம்மன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மன்னன் அல்ல – கொள்ளைக்காரத் தெலுங்கன் எனகிறது ஒரு தமிழின வெறிப் பத்திரிகை; ஏதோ ஒரு குறுநில மன்னனாக இருந்திருக்கக் கூடிய பெரும் பிடுகு முத்தரையர் சாதி அரசியலின் தேவை காரணமாக சென்னை நகர முச்சந்தியில் உருவிய வாளுடன் நிறுத்தி வைக்கப்படுகிறார்; கான்சாகிபுவா மருதநாயகமா என்ற தகராறு கமலஹாசனுடைய படத்தின் வசூலுக்கு வலிமை சேர்க்கிறது. வரலாற்றின் பெயரால் சாதி, மத, இனவாதிகள் நடத்தும் இந்த மோதலை முறியடிக்க வேண்டுமானால் நமக்குத் தேவை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டம். அந்தக் கண்ணோட்டமிருந்தால் நாம் கஜினியையும் புரிந்து கொள்ளலாம்; கார்கிலையும் புரிந்து கொள்ளலாம்.

மன்னனின் பெருந்தன்மை

கஜினி முகமதுவால் தோற்கடிக்கப்பட்ட ஆனந்த பாலன் என்றும் மன்னன் கஜினி முகமதுவுக்கு எழுதிய ஒரு கடிதத்தை அல்பரூனி தனது நூலில் மேற்கோள்  காட்டுகிறார்.

“உங்களுக்கெதிராகத் துருக்கியர்கள்  கலகம் செய்வதாக அறிந்தேன். நீங்கள் விரும்பினால் 500 குதிரைப் படையினர், 10,000 காலாட்படையினர், 100 யானைகளுடன் நான் உங்கள் உதவிக்கு வருகிறேன். அல்லது இரண்டு பங்குப் படையுடன் என் மகனை அனுப்புகிறேன்.  ஏனென்றால் நான் உங்களால் தோற்கடிக்கப்பட்டவன், நீங்கள் வேறொருவனால் தோற்கடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை”

முஸ்லீம் மக்களை ‘பாபரின் வாரிசுகள்’ என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஆனந்தபாலனின் வாரிசுகள் யார் என்று நமக்கு அடையாளம் காட்டுவார்களா?

– அஜித்
___________________________________
புதிய கலாச்சாரம் – ஆகஸ்டு 1999
___________________________________

  1. கஜினியைப் போல சிறந்த அரசர் கிடையாது. சோமநாத புரத்தின் மீது கொண்ட அளவு கடந்த அன்பினால்தான் அவர் 17 முறை விஜயம் செய்தார்.

    • Gurumani Madi
      வன்மையாக கண்டிக்கிறோம்
      வினவு என்ற தளத்தில் நீங்கள் கஜ்னி என்ற மன்னன் நல்லவன் பாட நூல்களில் கூறுவதுபோல் இஸ்லாமிய வெரியன் அல்ல என்பதை நிரூபிக்க பல வரலாறுகளை சுட்டி காட்டிய நீங்கள் (அது உண்மையா என்பது வேறு விசயம்) ” ஏதோ ஒரு குறுநில மன்னனாக இருந்திருக்கக் கூடிய பெரும் பிடுகு முத்தரையர்” என்று ஐயப்பாடோடு குறிப்பிட்டுள்ளீர்கள் அப்படியென்றால் உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்று தானே அர்த்தம் எந்த சான்றுமே இல்லாமல் எப்ப்டி பேரரசரை பற்றி தவறாக எழுதியுள்ளீர்கள் இதே போன்றுதான் உங்கள் எழுத்து முழுவதுமே புனையப்பட்ட ஆதாரமுடையது. அதுவும்” சென்னை நகர முச்சந்தியில்”என்று குறிப்பிட்டுள்ளீர்கள்,(சென்னையில் பேரரசருக்கு சிலை இல்லை) இப்படி நிகழ்காலம் பற்றி கூட தெரியாத நீங்கள் கடந்தகால வரலாறு பற்றி எழுதியுள்ளீர்கள், அதுமற்றுமின்றி “சாதி அரசியலின் தேவை காரணமாக”தான் சிலை வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளீர்கள்ஒன்று புரிந்து கொள்ளுங்கள் அனைத்து சாதிகளும்,மதங்களும் தனது தலைவர்களை சுதந்திர போராட்ட தியாகி,விடுதலை வீரர்( சுதந்திர போராட்டத்தில் இவர்களின் பங்கே தேடித்தான் பார்கவேண்டும்) என்ற போர்வையிலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது ஆனால் எம் மன்னவருக்கு எம் குலம் வணங்க சிலை வடிக்கப்பட்டுள்ளது இது எம் முன்னோர் வழிபாடு எமது அரச குல வரலாற்று சான்று அதை நீங்கள் சாதி அரசியலுக்காக என்று பார்த்தால் இங்குள்ள அனைவருமே அரசியலுக்காக தனது சாதி மதம் சார்ந்து இருக்கக்கூடியவர்கள் தான் என் நீங்கள் இவ்வளவு கூச்சல் போடுகிறீர்களே அதுவும் அரசியல் காரணத்திற்காகத்தான் என்பதை உலகம் அறியாமல் இல்லை. இன்றைக்கு எத்தனையோ சாதிகளும்,மதங்களும் தன்னை வரலாற்றில் மிகை படுத்திகொள வரலாறு தேடி அலைகிறது வரலாற்றை புனைகிறது ஆனால் எமது சமூக வரலாறுகள் பல எங்களுக்கு அந்த தேவை இல்லை ஆனால் அவைகள் வீணர்களால் மரைகபதுல்லந. உண்மை வரலாறு வெளிப்படும் ஒருநாள்……..இங்கு ஒன்றை குறிப்பிடுகிறேன் எம்மன்னர் எம் குலதெய்வம் அரசாண்ட காலத்தில் கஜினி அல்ல வேறு எந்த கழுதையும் அரசியலில் கிடையாது… எங்களது வரலாறு மறைக்கப்பட்டாலும் பரவாயில்லை ஆனால் இது போன்ற திரிப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்……..
      குரு. மணிகண்டன்

  2. பார்பானீயம் தன இருப்பை இந்தியாவில் தக்க வைத்துக்கொள்ள இது போன்ற வரலாற்று திரிபுகளை செய்து இஸ்லாமிற்கு எதிரான பொய்யான கருத்தியலை ஏற்படுத்தி அதை நன்றாக பயன்படுத்திக்கொள்கிறது. இப்படி ஒரு யுக்தியை அவர்கள் கையாளவில்லை என்றால் தன்னுடைய பெரும்பான்மை இந்து மக்களிடையே பார்பானியம் அம்பலப்பட்டுவிடும் என்பதை பார்பனர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். ஏனென்றால் இந்திய நெடிய வரலாற்றில் பார்பானியம் இந்திய பெரும்பான்மை மக்களுக்கு வர்ணங்களாக, ஜாதிகளாக பல கொடுமைகளை காலம் காலமாக செய்து வந்திருக்கிறது. இன்றும் செய்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் உள்ள பெரும்பான்மை இந்து மக்கள் விழித்து எழுந்து பார்பாநியத்திற்கு எதிராக திரும்பாமல் இருக்கவும், (பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற) இந்து மக்களின் தலைமை பொறுப்பை பார்பானியம் இழக்காமல் இருக்கவும் தொடர்ந்து இஸ்லாமிய எதிர்புணர்வை கச்சிதமாக இந்து மக்களிடையே விதைக்கப்படுகிறது. சோமநாத படை எடுப்பு திரிப்பு, பாபர் மசூதி வரலாற்று திரிப்பு, இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு பார்பான் காந்தியை கொன்றது, நாடு முழுவதும் குண்டு வைத்து தன மக்களையே கொன்று அந்த பலியை இஸ்லாமியர்கள் மீது சுமத்துவது, பாகிஸ்தான் கொடியை அரசு அலுவலகங்களில் ஏற்றுவது, கோயிலில் மாட்டு கறியை வீசுவது என்று இஸ்லாமியர்களுக்கு எதிரான பல பல யுக்திகள் செயல்படுத்துவதை பார்பானியம் தொடந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த சோமநாதபுர படை எடுப்பு இஸ்லாமிய எதிர்ப்பின் முதல் விதையாக மாணவ பருவத்திலையே விதைககபடுகிறது. இதை பற்றிய உண்மையை அலசும் வினவின் இந்த கட்டுரைக்கு பாராட்டுக்கள்.

    • “நாடு முழுவதும் குண்டு வைத்து தன மக்களையே கொன்று அந்த பலியை இஸ்லாமியர்கள் மீது சுமத்துவது”

      Yes you’re right, even those who are planting bombs in Pakistan and Afghanistan are Hindus.

      • Yes the GODRA train carnage ,the copartment of KARSEVAKS put on fire by Hindu consiprators,which was disclosed by Lallu prasad(than Railway Minister) appointed commission of enquiry.But subsequently this was denied by other enquiry committies by both Congress/BJP brahmins intruders in all offices/enquiry committee/police force/judiciary and all places.ther by Modi got clean chit in politics.

  3. சோம்நாத் என்றுதான் ஒரு ஊர் குஜராத்தில் உள்ளது. அதுதான் இங்கு குறிப்பிடப்படும் சோமநாதபுரமா?

  4. பாமரன் சொல்வது உண்மை தான் என்று தோன்றுகிறது .இந்தியாவில் கி.பி.32 க்குப்பிறகு கிறிஸ்துவர்கள் வந்தார்கள். கி பி 700 வந்தார்கள். இங்கு உள்ள கோயில்கள் பள்ளிகள் முதலியன அவர்கள் ஆளும் போது தான் வந்தது. இஸ்லாமியர்களின் மதக் கொள்கைகளை அறிந்து இங்குள்ள மக்கள் மதம் மாறினார்கள். இந்து மதத்தில் இரண்டு பிரிவுகள் தான். பார்ப்பனர் சுரண்டுவார். பிறர் அடிமைகள் (மன்னிக்கவும்: இது இஸ்லாத்தில் இறைவன் அங்கீகரித்துள்ள அடிமை அன்று). எவ்வளவு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இந்த நாடு இருக்கிறது என்றும் இங்கு கலாசாரம் இருந்தது என்றும், வேதம்,இதிகாச, புராணம் என்று கடந்த சில ஆண்டுகளிலே எழுதிவிட்டு மூவாயிரம், நாலாயிரம் ஆண்டு என்று முழு உலகையே ஏமாற்றியிருக்கிறார்கள்!

  5. இந்த கட்டுரை மூலமா நீங்க என்ன சொல்ல வரீங்கனு உங்களுக்காது புரியுதா மி்ஸ்டர்?

  6. //வந்தபின் பார்த்தால் அவை எகிப்தியக் கதவுகள்.//

    எகிப்திய கதவுகள் கஸ்னிக்குப் போக முடிந்த போது அதைவிட கால் பங்கு தொலைவேயுள்ள குஜராத்திலிருந்து கதவுகள் கஸ்னிக்குப் போக முடிந்திருக்காதா. குஜராத் கதவுகள் கஸ்னியில் இல்லையென்றால் அவை வழியிலேயே எரிந்து போயிருக்கலாம் அல்லது எகிப்திற்கேக்கூட போயிருக்கலாம். We can never know.

  7. தாலிபான்கள் என்றொரு வெறிக்கும்பல் பாமியான் புத்தர் சிலைகளை தகர்த்ததை உடனடியாக கல்வெட்டு, செப்பேடு, கவிதை, கட்டுரை, வரலாற்று நூல் என சகல விதங்களிலும் உடனடியாக பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். இல்லாவிட்டால் எதிர்கால வரலாற்று ஆய்வாளர்கள் சந்தேகம் கிளப்புவார்கள். இது எல்லாருக்கும் தெரிந்த சேதி தானே என அசிரத்தையாக இருந்து விடாதீர்கள்.

    சமணர்களை சைவர்கள் கழுவேற்றினர் என்பதற்கு சமண நூல்களில் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? அல்லது சைவத்தின் மீது குற்றம் சொல்வதானால் இதெல்லாம் தேவை இல்லையா?

    • ஆமா வெங்கடேசன், 2002 கலவரத்த பத்தி தெகல்கா சிசிடிவி காமராவுல புடிச்சு போட்டு ஆதாரம் காமிச்சாலும், பாபர் மசூதி இடிக்கிறங்களோட பேச்ச கோப்ரா ஃபோஸ்ட் வீடியோவுல காட்டியும் நிகழ்கால ‘வரலாத்து ஆய்வாளரு’ங்க அசரல, அவங்களோட ஆய்வுங்கள மதிக்கிற உங்கள மாதிரி ஆளுங்களும் ஒத்துக்கல, என்ன பண்றது? அதிகாரம் இருக்குறவன் எழுதுற வரலாறும், அதிகாரத்த தலையுலயும், வாழ்க்கையுலயும் சுமக்குறவங்க அதுக்கு ஒத்தூதர வரைக்கும் ஒன்னியும் பண்ண முடியாது!
      வெங்கடேசன் மாதிரி அறிஞருங்க இப்படி கேள்வி கேப்பாருன்னு தெரிஞ்சா 11-ம் நூற்றாண்டுல இருந்த கஜினி முகமது இப்படி கொள்ளையடிக்காம சுத்த பத்த்மா இருந்துருப்பான்னு தோணுது! ஆனா கோவிலுல சொத்த சேத்து வச்ச ‘அம்பி’ மாறுங்க அப்படி இருப்பாங்கெளாங்கணு நம்மால உத்ரவாதம் கொடுக்க முடியலேயே!

  8. இந்த இஸ்லாமிய மன்னர்களை ஏதோ சுத்த சன்மார்க்க சுண்டெலிகள் போல் சித்தரிக்க முயல்கிறீர்கள். இந்தியாவில் கட்டப்பட்ட மூத்த மசூதிகளில் ஒன்றான குத்துப் மினார் வளாகத்தில் உள்ள மசூதி எவ்வாறு கட்டப்பட்டது? 27 இந்து-ஜைன மத கோவில்களை இடித்து அங்கிருந்து தூண்களை கொண்டு வந்து கட்டியதாக அம்மசூதி வாயிலில் இந்தியத் தொல்லியல் துறை அமைத்து வைத்துள்ள கல் அறிவிப்பு பலகை கூறுகிறது. சந்தேகமாய் இருந்தால் உள்ளே சென்று தூண்களை பாருங்கள். தவம் செய்யும் நிலையில் கடவுளர் அல்லது முனிவர்கள் சிற்பங்களை இன்றும் காணலாம். ஒரு மசூதியில் சிலைகளுக்கு என்ன வேலை? (ஆமாம், இந்த தவ்ஹீத் ஜமாத் ஆசாமிகள் இதை எல்லாம் ஆட்சேபிக்க மாட்டார்களா?)

    பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தின் கீழே பழைய இந்து அல்லது பவுத்த அல்லது ஜைன சமய கோவிலின் இடிபாடு உள்ளது என தொல்லியல் துறை அலகாபாத் நீதிமன்றத்தில் கூறி உள்ளது. இதை அந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான எஸ் யு கான் ஏற்கிறார். மசூதி கட்ட வேறு இடம் கிடைக்கவில்லையா? பாபர் மசூதியின் கீழ் என்ன உள்ளது என்பது விவாதத்திற்குரியது. ஆனால், தொல்லியல் துறை அதன் கீழ் பிற சமய கோவிலின் இடிபாடு உள்ளதாக கூறுகிறது. இந்த விஷயத்தை பாபர் மசூதி பற்றி பேசும் எந்தக் கட்டுரையிலாவது வினவு குறிப்பிட்டுள்ளதா?

    இந்து மத எதிர்ப்பு என வரும் போது, எந்த ஒரு அறிவியல்-வரலாற்று ஆராய்ச்சிக்கும் மிக முக்கிய அடிப்படை கொள்கையான “திறந்த மனம்” (open mind) என்பதை வினவு துறந்து விடுகிறது. எனவே இது போன்ற கட்டுரைகளின் நம்பகத்தன்மை குறைந்து விடுகிறது.

  9. வினவுவின் புரட்டுகள்..!
    புதிய புரட்டு வரலாறு படைக்கும் வீணர்களின் கூட்டத்தின் வினவுதளம் “கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாட நூல் புரட்டுகள் !” என்ற தலைப்பில் எதோ பிதற்றியுள்ளது, அது RSSக்கு எதிரான எழுதப்பட்ட எதோ ஒரு கதை (கட்டூரை என்றுதான் சொல்லுவார்கள்), அந்த கதைக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை, ஆனால் அதில் தேவையே இல்லாமல் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்கள்
    // ஏதோ ஒரு குறுநில மன்னனாக இருந்திருக்கக் கூடிய பெரும்பிடுகு முத்தரையர் சாதி அரசியலின் தேவை காரணமாக சென்னை நகர முச்சந்தியில் உருவிய வாளுடன் நிறுத்தி வைக்கப்படுகிறார் //
    எழுதப்பட்ட தலைப்பிற்க்கும், இந்த வாசகத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை (சென்னை நகரை சுற்றி காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் வசித்தாலும் சென்னையில் சிலை இல்லை என்பதுதான் உண்மை, இதுதான் வினவு புரட்டுவின் தொடக்கம்) ஆனால் வலிந்து திணிக்கப்பட்டு தனது வன்மத்தை, அரசியல் உரிமை மறுக்கப்பட்டு இன்று கையறு நிலையில் இருக்கும் முத்தரையர்கள் குறித்து எழுதி தனது அறிப்பை தீர்த்துக்கொள்கிறது வினவு.
    இந்த கட்டூரையின் சாரம்சம் RSS போன்ற இயக்கங்கள் இன்று வரலாற்றை மாற்றிப்பேச முனைகிறது என்பதாக இருக்கிறது, இதற்காக பலதரப்பட்ட தரவுகளையும் மேற்கோள் காட்டி எழுதப்பட்ட இந்த கட்டூரையில் இன்று இந்த இயக்கங்கள் சொல்லும் வரலாறு உண்மையில்லை என்பதாக இருக்கிறது, இவர்களின் இந்த நீண்ட கட்டூரையில் எதையோ நிறுபிக்க முயன்று அதற்காக ஆயிரமாயிரம் ஆதரங்களை காண்பித்து இதுதான் என்று சொல்ல முற்படுபவர்கள்.
    அதே கட்டூரையின் ஒரே ஒரு வரியில் தங்கள் புரட்டு சிந்தாந்ததில் தோற்றுப்போய் இருக்கிறார்கள், இவர்கள் சொல்லியிருக்கும் மொத்தமும் கட்டுக்கதையாகவே இருக்க முடியும் என்பதற்க்கு இவர்கள் முத்தரையர் குறித்து எழுதி இருக்கும் ஒரே வரி போதுமானதாக இருக்கும், முத்தரையர் மன்னர்கள் கடைசி காலங்களில் சிறு நிலப்பரப்பை ஆண்டது உண்மையானதுதான், ஆனால் அதற்க்கும் முன்பாக சேர, சோழ, பாண்டிய நாடுகளை அதாவது முத்தரைகளை ஆண்டவர்கள் என்பதுதான் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மை, ஆனால் இவ்வளவு வன்மத்தோடு இவர்கள் இப்படி எழுத எந்த வரலாற்றை ஆதாரமாக கொண்டார்கள் ? இவ்வளவு தீர்க்கமாக கஜினி முகமதுவிற்க்கு கட்டூரை எழுதிய அஜித் எனும் எழுத்தாளர், இதற்க்காக திரட்டி சொன்ன ஒராயிரம் ஆதாரங்கள் போன்று எதேனும் ஒரு ஆதாரத்தை குறிப்பிட்டு தனியே கட்டூரை எழுதும் திராணி இருக்கிறதா..?
    யாரோ தவறாக எழுதிய வரலாற்றை வைத்து “எதோ ஒரு குறு நில மன்னன்” என்று எழுதும் இவர்கள் எழுதி இருக்கும் இந்த நீண்ட நெடிய கட்டூரையின் உண்மைதன்மையை பச்சையாய் காட்டிக்கொடுக்கிறது.
    வினவு தளத்தினரே, உங்கள் தளத்தை ஆர்வமாக வாசிப்பவர்களை முட்டாளாக கருதி இதுபோன்ற பிதற்றல்களை, ஒரு சார்பு நிலை எழுத்தை கட்டூரை என்று வெளியிட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்று உண்டியல் குலுக்கி மஞ்சள் குளித்து மகிழ்ந்து வாழாமல் உண்மையாய் எழுத முயலுங்கள்.

    – சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
    ஒருங்கிணைப்பாளர்
    இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

    http://illamsingam.blogspot.ae/2014/06/blog-post_4.html

  10. முஸ்லீம்களுக்குப் பயத்தில் அல்லது அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, அல்லது TNTJகாரர்களின் கோபத்தைத் தணிக்க வரலாற்றையே மாற்றி எழுத வினவு தளத்தினர் துணிந்து விட்டனர் போலிருக்கிறது . திப்புசுல்தான், யாரையும் அவர்களது விருப்பத்துக்கு மாறாக மதம் மாற்றவில்லை அவனைப் போல் ஒரு இந்திய மன்னனே கிடையாதென்று கூடப் பிதற்றினார்கள் சிலர். இப்பொழுது என்னடாவென்றால் கஜினி முகம்மதுவை அறுபத்துநான்காவது நாயனாராக ஏற்றுக் கொள்ளச் சைவத் தமிழர்களைத் தூண்டுமளவுக்கு அவனை சன்மார்க்கனாக்கி விட்டார்கள் என்பதை பார்க்க சிரிப்பு வருகிறது. இப்படியே போனால் எல்லா முஸ்லீம் மன்னர்களும் இந்தியாவுக்கு தியானம் செய்யவும், இந்துமதத்தைக் காக்கவும் தான் தான் வந்தார்கள், அதை விட அவர்கள் எந்த அழிவையும் செய்யவில்லை என்று கூட எழுதத் தொடங்கி விடுவார்கள் போலிருக்கிறது. வரலாற்றைக் கற்க விரும்புகிறவர்கள் அல்லது கஜினி முகம்மது போன்ற முஸ்லீம் மன்னர்களின் ஆட்சியைப் பற்றி அறிய விரும்புகிறவர்கள் எவருமே வினவில் வெளிவரும் கட்டுரைகளில் மட்டும் தங்கியிருக்காமல் வேறு நடுநிலையான ஆதாரங்களைப் படித்துப் பார்க்கும் வகையில் தென்னாடுடைய சிவன் வினவு வாசகர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுப்பார் என நம்புவோம். 🙂

    //இந்த இஸ்லாமிய மன்னர்களை ஏதோ சுத்த சன்மார்க்க சுண்டெலிகள் போல் சித்தரிக்க முயல்கிறீர்கள். //

    • வியாசன் அவர்களுக்கு,

      உங்களது சொந்தக் கதையை நிறுத்திவிட்டு, கட்டுரை நேரடியாக கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

      தில்லையில் (சொத்துக்கான சண்டையில் மற்றும் சாதிவெறியில்) தீட்சிதர்களை புரட்சிகர அமைப்புகள் அம்பலப்படுத்துவதை ஆதரிக்கிற வியாசன், கஜினியின் படையெடுப்பிற்கு முன்னரே சோம்நாத் கோயிலின் சொத்துக்களை பார்ப்பனர்கள் சூறையாடியிருக்கிறார்கள் என்பதை எப்படி பார்க்கிறார்? மதவெறிக்கு தூபம் போடுகிற ஆர் எஸ் எஸ்ஸின் புரட்டிற்கும் உங்களது கருத்திற்கும் என்ன வித்தியாசம்?

  11. சரிப்பா . இதுக்கு மொதல்ல பதில சொல்லுங்க கருத்து கந்தசாமிகளா.

    கேள்வி-1
    ————-
    //ஏன், 1947 ஆகஸ்டு 15-ம் தேதியன்று காஷ்மீரும், ஆந்திரத்தின் பெரும் பகுதியும், பல வடகிழக்கு மாநிலங்களும் இந்திய யூனியனில் இல்லை. எழுபதுகளுக்கு முன்னர் சிக்கிம் இந்தியாவில் இல்லை. அவ்வாறிருக்கும் போது 20-ம் நூற்றாண்டில் உருவாகவிருக்கும் இந்தியா மீது 11-ம் நூற்றாண்டிலேயே கஜினிமுகமது எப்படிப் படையெடுக்க முடியும்?//

    கேள்வி-2
    ————–
    //கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் சாளுக்கியர்கள் மீது படையெடுத்தான். இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ, இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ குறிப்பிடாத வரலாற்றுப் பாடநூல் கஜினி முகமது எனும் ‘இசுலாமிய’ மன்னன் ‘இந்தியா’ மீது படையெடுத்ததாகக் குறிப்பிடுவதை ஒப்பு நோக்க வேண்டும்.//

    • என்ற பெயரில் ஒரு நாட்டை வேண்டுமானால் ஆங்கிலேயர்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தனர் என்று கூறலாமே தவிர, அவர்களுக்கு முன்னர் இந்தியா இருக்கவில்லை என்பது வெறும் அபத்தம். ஆட்சியாளர்களும், மொழியும் வெவ்வேறாக இருந்தாலும், காஸ்மீரிலிருந்து கதிர்காமம் வரை ஒரே மதமும் கலாச்சாரமும் பண்பாடும் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை இணைத்தன என்ற உண்மையை யாரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது. அதனால் தான் காசிக்குப் போய்விட்டு ராமேஸ்வரம் போனால் தான் யாத்திரை முழுமையடையும் என்று இன்றும் நம்பப்படுகிறது. உதாரணமாக தமிழ்நாட்டிலிருந்து வடக்குக்கு படையெடுத்துப் போன ராஜேந்திர சோழனுக்கும், சாளுக்கியர்களுக்கும் கங்கை நதி புனிதமானது. தெற்கிலிருந்து வடக்கிற்குப் படையெடுத்துப் போன ராஜேந்திர சோழன், கஜினி முகமதைப் போல் அங்குள்ள கோயிலகளை அழிக்கவில்லை, மாறாக அங்குள்ள கங்கை நதியின் நீரைக் கலசங்களில் நிரப்பி தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சாளுக்கியரும் வணங்கும் அதே தெய்வத்துக்குக் கோயில்கட்டி முழுக்காட்டினான். அது தான் ராஜேந்திர சோழனுக்கும், கஜினி முகமதுவுக்குமுள்ள வேறுபாடு, அதனால் தான் இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ, இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ வரலாற்றுப் பாடநூல்கள் குறிப்ப்பிடுவதில்லை, அது இந்திய மன்னர்களுக்கிடையேயான மோதல் மட்டுமே.

      ஆப்கானிஸ்தான் பண்டைய இந்தியாவின் அங்கமாக இருந்த போதிலும் அது இஸ்லாமிய துருக்கிய, பாரசீக ஆட்சியாளர்களின் ஆட்சியின் கீழ் வந்த பின்னர், அது இந்திய கலாச்சாரத்தை இழந்து விட்டது. அது மட்டுமல்ல, கஜினி முகமது ஆப்கானியர் அல்ல அவன் ஒரு துருக்கியைச் சேர்ந்த துலுக்கன். துருக்கியை இந்தியாவின் அங்கமாக யாரும் எப்பொழுதும் கருதியதில்லை.

      • //காஸ்மீரிலிருந்து கதிர்காமம் வரை ஒரே மதமும் கலாச்சாரமும் பண்பாடும் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை இணைத்தன என்ற உண்மையை யாரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது. // WHy consider only relgion NOT language… How come Vishu and madasamy become same GOD ??? Its a myth that all INDIA had sam religion… Even the constitution define HIndUISM as “whoever is not a christian, muslim, sikh or jain is HINDU” the reason is if they naem each and every religion existed it wilneed a sepearte book 🙂

        • so if continuos land and same religion were present then it is a single nation.. so all of Europe and Russian combined are same country after 50 years from now ??

          • They already have a EU which is a monetary union with a Central Bank just like our Reserve Bank.Everyone is fighting to get into the EU,including Turkey which is not even in Europe.

            And secondly,what works for them may not work for us and vice versa,so this works for us and hence will continue to do so.

        • மொழிகள் வேறுபட்டிருந்தாலும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும், கிறித்தவ மதமும், அந்த மத அடிப்படையிலான பண்பாடும் ஒருங்கிணைக்கின்றன. கத்தோலிக்கர்கள், Orthodox, லூதரன், மெதடிஸ்ட் இப்படி பல பிரிவுகள் இருந்தாலும் அவையெல்லாம் கிறித்தவ நாடுகள். அந்த அடிப்படையில் ஐரோப்பியர்கள் அனைவரிடமும் ஒற்றுமையுண்டு. அதே போல் கதிர்காமம் தொடக்கம் காஷ்மீர் வரை என்ன தான் வேறுபாடுகள் இருந்தாலும், இந்து மதத்தின் அடிப்படையில், மொழிக்கும், நிறத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு எழுதப்படாத ஒற்றுமையும், எல்லோருக்கும் பொதுவானதன்மையும், எல்லோரையும் இணைக்கும் ஒரு இழையுமிருப்பதை யாரும் மறுக்க முடியாது. உதாரணமாக, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கும்
          வட இந்தியர்களுக்கும் மொழி, தோற்றம், என்பவற்றில் அவ்வளவு ஒற்றுமை கிடையாது. ஆனால் இப்பொழுது பல வட இந்தியர்களுடன் நண்பர்களாக பழகும் வாய்ப்புக் கிடைப்பதால் மொழி, இன வேறுபாடிருந்தாலும், அவர்களின் வீடுகளுக்குப் போகும் போது, அவர்களின் திருமண, கலாச்சார நிகழ்சசிகளில் பங்குபற்றும் போது எங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை. அங்கு தான் இந்துமத அடிப்படையிலான அந்த பொதுவான இழை எங்களையும், அவர்களையும் ஒருவகையில் இணைக்கிறது என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவமாகக் கூட இருக்கலாம். அதற்காக வட இந்தியர்கள் எல்லாம் தமிழர்களின் நண்பர்கள் என்று நான் கருத்துக் கூறவில்லை. 🙂

          • //அவர்களின் வீடுகளுக்குப் போகும் போது, அவர்களின் திருமண, கலாச்சார நிகழ்சசிகளில் பங்குபற்றும் போது எங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை.// then u have NOT attended much of the marriages.. The only common thing will be tie of Thalii.. Even christian marriages now they tie thali… so can we say christianity is also our own religion after 50 years ???

            Boss iam not saying u shud not have friendship or close relation with N Indians.. Even i work of an MNC me too have many North Indian friends.. Here the question did INDIA as a country existed before british came here. ?? Historically the answer is NO… We are born as INDIANS(since we r born after british came here) and we will live as INDIANS and DIE as INDIANS.. Iam fine with the above but just to promote a religion please don’t try to Falsify History 🙂

            • //அடிப்படையிலான பண்பாடும் ஒருங்கிணைக்கின்றன. கத்தோலிக்கர்கள், Orthodox, லூதரன், மெதடிஸ்ட் இப்படி பல பிரிவுகள் இருந்தாலும் அவையெல்லாம் கிறித்தவ நாடுகள். அந்த அடிப்படையில் ஐரோப்பியர்கள் அனைவரிடமும் ஒற்றுமையுண்டு///

              Living in peace and harmony and having same nation are two different things… EVne they fought fierocious wars among themselves in the past.. Now live in peace the reason is NOT religion.. If the reason for peace is religion.. Both the world wars wud NOT have happened because most of the belligrents are christians 🙂 :)….

      • //என்ற பெயரில் ஒரு நாட்டை வேண்டுமானால் ஆங்கிலேயர்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தனர் என்று கூறலாமே தவிர, அவர்களுக்கு முன்னர் இந்தியா இருக்கவில்லை என்பது வெறும் அபத்தம். ஆட்சியாளர்களும், மொழியும் வெவ்வேறாக இருந்தாலும், காஸ்மீரிலிருந்து கதிர்காமம் வரை ஒரே மதமும் கலாச்சாரமும் பண்பாடும் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை இணைத்தன என்ற உண்மையை யாரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது//

        இது என்ன புதுசா ஒரு கதைய சொல்றீங்க . இந்திய, பாகிஸ்தான் , பங்களாதேஷ் என்ற நாடுகள் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கிடையாது . காஷ்மீரிலிருந்து கதிர்காமாம் வரை ஒரே மத கலாசார ??? உங்களது புரட்டுக்கு அளவே இல்லையா ? அப்போ தமிழர்கள் வணங்கி கொண்டு இருந்த சிறு தெய்வ வழிபாடுகள் ஹிந்து மதத்தை சார்ந்தவையா? அப்படி எனில் அதை ஏன் பிராமணர்கள் அங்கீகரிப்பதில்லை ?

        தேசியம் என்ற சொல்லாடலே 1800 ஆண்டுகளில் தான் உலகில் சூடு பிடித்தது . 1900 காலத்தின் போது தான் ஆசியா கண்டத்தில் தேசியம் என்ற சிந்தனை உருவானது . உண்மை இப்படி இருக்க இல்லாத இந்திய மீது எப்படி கஜினி படை எடுக்க முடியும் ?

        கவனிக்க:இங்கு கூறுவது இந்திய என்ற சொல்லாடலே

        • ///இது என்ன புதுசா ஒரு கதைய சொல்றீங்க . இந்திய, பாகிஸ்தான் , பங்களாதேஷ் என்ற நாடுகள் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கிடையாது. காஷ்மீரிலிருந்து கதிர்காமாம் வரை ஒரே மத கலாசார ??? உங்களது புரட்டுக்கு அளவே இல்லையா ? ///

          நூறாண்டுகளுக்கு முன்பு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்ற பெயர் தான் கிடையாதே தவிர இன்று காணப்படுகின்ற அதே மொழி, கலாச்சார, மதங்களைச் சேர்ந்த மக்கள் தான் இந்த மூன்று நாடுகளின் நிலப்பரப்புகளிலும் வாழ்ந்தனர். அதனால் ஆங்கிலேயர் வந்து, அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்புக்கு புதுப்பெயர் இடும்வரை அந்த நிலப்பரப்பில் மக்களே வாழவில்லை, அவர்களின் மொழி வேறுபட்டாலும் கூட , மத, கலாச்சார ஒற்றுமை அங்கு வாழ்ந்த பெரும்பான்மை மக்களிடம் இருக்கவில்லை என்று எந்த முட்டாளும் கூற மாட்டான். காஸ்மீரிலிருந்து கதிர்காமம் வரை வாழ்ந்த, இன்றும் அங்கு வாழ்கின்ற பெரும்பான்மை மக்களை இந்துமத அல்லது இந்தியாவில் உருவாகிய இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது விட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

          //அப்போ தமிழர்கள் வணங்கி கொண்டு இருந்த சிறு தெய்வ வழிபாடுகள் ஹிந்து மதத்தை சார்ந்தவையா? அப்படி எனில் அதை ஏன் பிராமணர்கள் அங்கீகரிப்பதில்லை?///

          தமிழர்களின் சிறுதெய்வ வழிபாடு, இந்தியாவில் உருவாகிய இந்து மதத்தைச் சேர்ந்ததல்லாமல், மத்திய கிழக்கு மதமாகிய இஸ்லாத்தைச் சேர்ந்ததாகுமா? சைவமும் சிவ வழிபாடும் தமிழர்களிடமிருந்து உருவாகியது. சிவன் தென்னாட்டுக் கடவுள். சிவனும், தமிழர்களின் சிறுதெய்வங்களும் கூட தமிழர்களின் ஆசீவகத்தின் அங்கம் தான். பிராமணர்கள் அங்கீகரிப்பது தான் இந்துமதம் என்று உங்களைப் போன்றவர்கள் முட்டாள் தனமாகக் கருதினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். இப்படித் தான் கடவுளை வணங்க வேண்டும் அல்லது இந்தப் புத்தகத்தின் படி தான் ஒழுக வேண்டும் அல்லது ஆயத்தொல்லா வந்து பாட்வா அறிவித்து விடுவார் என்பதெல்லாம் இந்துமதத்தில் கிடையாது. இந்துமதம் தனிமனித சுதந்திரத்தை மதிக்கிறது. எந்த இந்துவுக்கும் யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை. உதாரணமாக இலங்கையில் உலகப்புகழ பெற்ற கதிர்காமத்தில் முருகனுக்குப் பூசை செய்பவர்கள் பிராமணர்கள் அல்ல, வேடர்கள். அங்கு பிராமணியம் கிடையாது. யாழ்ப்பாணத்தில் செல்வசன்னதியில் பூசை செய்கிறவர்கள் மீனவர்கள், பிராமணர்கள் அல்ல. அந்தக் கோயில்களில் வழிபடும் இலங்கை இந்துக்கள், இந்தியாவிலுள்ள உங்களைப் போன்றவர்களைப் போல், பிராமணர்களின் அங்கீகரத்துக்காக அழுவதில்லை. தமிழ்நாட்டில் பிரச்சனையே இது தான், இந்துமதம் என்றால் பிராமணீயம் என்ற மாயை பகுத்தறிவு வாதிகளால் திட்டமிட்டு மக்களின் மனத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது. அதனால் தான் தமிழர்கள் தமது முன்னோர்களின் கோயில்களைப் பிராமணர்களின் கைகளில் ஒப்படைத்து விட்டு, வெளியில் நின்று கூச்சலிடுகிறார்கள்.

          ///உண்மை இப்படி இருக்க இல்லாத இந்திய மீது எப்படி கஜினி படை எடுக்க முடியும்?// கவனிக்க:இங்கு கூறுவது இந்திய என்ற சொல்லாடலே//

          “இந்திய” என்ற சொற்றாடலை உங்களால் ஏற்றுகொள்ள முடியாது விட்டால், கஜினி முகம்மது பாரத’ நாட்டின் மீது படைஎடுத்தான் என்று திருத்திக் கொள்ளுங்கள். அதில் தவறொன்றுமில்லை, உங்களின் ஆசையைக் கெடுப்பானேன். ஆனால் அப்பொழுது இந்தியா என்ற நாடு கிடையாது. அதனால் கஜினி படையெடுக்கவுமில்லை, சோம்நாத் கோயிலைக் கொள்ளையடிக்கவுமில்லை, என்று வரலாற்றையே திரித்து உளறினால் தான் நீங்கள் உண்மையில் நீங்கள் ஏதோ serious stuff ஐப் புகைத்துக் கொண்டு பதிலெழுதுகிறீர்கள் போலிருக்கிறது என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள். 🙂

          • VIYASAN,

            காஸ்மீரிலிருந்து “—கொழும்பு—-” வரை வாழ்ந்த, இன்றும் அங்கு வாழ்கின்ற பெரும்பான்மை மக்களை இந்துமத அல்லது இந்தியாவில் உருவாகிய இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது விட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

            என்று கூறினால் சரி தானே ?

            • SARAVANAN,

              கொழும்பு மேல்மாகாணத்தில் இருக்கிறது, கதிர்காமம் தென்னிலங்கையின் அடியில், அதாவது கொழும்பை விட இன்னும் கீழேயுள்ளது. முழு இலங்கையுயைம் உள்ளடக்குவதற்காகத் தான் கதிர்காமம் என்று குறிப்பிட்டேன். 🙂

              • வியாசன் அவர்களுக்கு,

                முழு இலங்கையையும் உள்ளடக்குவதற்கு கதிர்காமத்தை குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

                தோழர் சரவணன் ஒரு வகையான புரிதலை முன்வைக்கிறார் இப்படி; “இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது”

                இது ஒரு புறம் இருக்க, இந்து மத வழிபாடு இலங்கையில் சாதிவெறியை உள்ளடக்கியதாகவே இருக்கிறது என்று கலை அவர்கள் ஒரு கட்டுரையை ஆறுமுக நாவலரை வைத்து எழுதியிருக்கிறார்.

                கலை குறிப்பிடும் ஆறுமுகநாவலரின் கீழ்கண்ட பகுதிக்கு தங்களது கருத்து என்னவென்று கூற முடியுமா? (http://kalaiy.blogspot.com/2014/04/blog-post_29.html)

                //சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும், வியாதியாளரும், சனன மரணா செளசமுடையவரும், நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும், எலும்பு, சீலை முதலியவற்றை மிதிக்கினும், க்ஷெளரஞ் செய்து கொள்ளினும், சுற்றத்தார் இறக்கக் கேட்கினும், துச்சொப்பனங் காணினும், பிணப் புகை படினும், சுடுகாட்டிற் போகினும், சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது ஆவசியம்.//

                //தீண்டலினாலே எவ்வெப்பொழுது குற்றமில்லை?

                சிவதரிசனத்திலும், திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்திலும், தீர்த்த யாத்திரையிலும், வீடு அக்கினி பற்றி எரியுங் காலத்திலும், தேச கலகத்திலும், சன நெருக்கத் தீண்டலினாலே குற்றமில்லை.//

                ஆக என் புரிதலின்படி இந்துமதம் அனைவருக்கும் ஒன்றாக இருக்கவில்லை. இது யாரையும் ஒருங்கிணைக்கவில்லை.

                நீங்கள் கூறும் இக்கருத்து முற்றிலும் புரட்டாகும்;

                \\இப்படித் தான் கடவுளை வணங்க வேண்டும் அல்லது இந்தப் புத்தகத்தின் படி தான் ஒழுக வேண்டும் அல்லது ஆயத்தொல்லா வந்து பாட்வா அறிவித்து விடுவார் என்பதெல்லாம் இந்துமதத்தில் கிடையாது. இந்துமதம் தனிமனித சுதந்திரத்தை மதிக்கிறது. எந்த இந்துவுக்கும் யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை. உதாரணமாக இலங்கையில் உலகப்புகழ பெற்ற கதிர்காமத்தில் முருகனுக்குப் பூசை செய்பவர்கள் பிராமணர்கள் அல்ல, வேடர்கள். அங்கு பிராமணியம் கிடையாது. யாழ்ப்பாணத்தில் செல்வசன்னதியில் பூசை செய்கிறவர்கள் மீனவர்கள், பிராமணர்கள் அல்ல. அந்தக் கோயில்களில் வழிபடும் இலங்கை இந்துக்கள், இந்தியாவிலுள்ள உங்களைப் போன்றவர்களைப் போல், பிராமணர்களின் அங்கீகரத்துக்காக அழுவதில்லை. தமிழ்நாட்டில் பிரச்சனையே இது தான், இந்துமதம் என்றால் பிராமணீயம் என்ற மாயை பகுத்தறிவு வாதிகளால் திட்டமிட்டு மக்களின் மனத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது. அதனால் தான் தமிழர்கள் தமது முன்னோர்களின் கோயில்களைப் பிராமணர்களின் கைகளில் ஒப்படைத்து விட்டு, வெளியில் நின்று கூச்சலிடுகிறார்கள்.\\

              • Thanks VIYASAN!

                I am very much thankful for your explanation about SriLanka map!

                [1]So based on the uniqueness of Hindu religion and its branches that exist in India and Srilanka……..,

                Are you trying for creating a unified broad India[country] that will include Srilanka too?

                [2]If not what for You are stressing this following matter?

                “காஸ்மீரிலிருந்து கதிர்காமம் வரை வாழ்ந்த, இன்றும் அங்கு வாழ்கின்ற பெரும்பான்மை மக்களை இந்துமத அல்லது இந்தியாவில் உருவாகிய இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது விட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.”

              • viyasan,

                [1]உங்கள் முந்தைய கருத்தீன் படி “தெலுங்கர்கள்-வந்தேரிகள்-வடகர்கள் ” கொள்கைகள் எல்லாம் வழக்கு அழீந்து விட்டதா ?

                [2]உங்கள் தமிழ் இனம் ,தமிழ் மொழி பற்று எல்லாம் நீர்த்து விட்டதா ?

                [3]இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது என்று திடிர் என்று கூறுவது ஏன் வியாசன் ?

                [4]தமிழ் இனம் ,தமிழ் மொழி பற்று எல்லாம் போன மாதம் , இந்துமதப்பற்று இந்த மாதமா ?

                viyasan://“காஸ்மீரிலிருந்து கதிர்காமம் வரை வாழ்ந்த, இன்றும் அங்கு வாழ்கின்ற பெரும்பான்மை மக்களை இந்துமத அல்லது இந்தியாவில் உருவாகிய இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது விட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.”//

                • தோழர் சரவணன்,

                  வியாசன் அவர்களின் கருத்தை உங்களது கருத்தாக புரிந்துகொண்டுவிட்டேன். பிழைக்கு மன்னிக்கவும்.

                  \\தோழர் சரவணன் ஒரு வகையான புரிதலை முன்வைக்கிறார் இப்படி; “இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது”\\

                  • திரு.தென்றல்,

                    வினவில் கருத்துச் சுதந்திரம் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து தான். 🙂 நான் எழுதிய பதில்(நேற்றுக் கூட) வெளியிடப்படவில்லை, இது முதல் முறையல்ல. இவ்வளவுக்கும் என்னிடம் ஆதரமில்லாமல் நான் எதையும் குறிப்பிடுவதில்லை. பார்ப்பனர்களை அல்லது இந்துமதத்தை தாக்கி எழுதும் பதிவுகளை மட்டும் தான் வெளியிடுவார்கள் போலிருக்கிறது. அதனால் எதற்காக நான் மினக்கெட்டு உங்களுக்குப் பதிலெழுதி எனது நேரத்தை வீணாக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

                    • திரு வியாசன் எழுதி வினவு வெளியிடாத அந்த ‘ஆதாரப்’ பூர்வமான வரலாற்று உண்மை, கஜினி முகமது ஒரினிச் சேர்க்கையாளர் என்பதே. கட்டுரை எதைப் பற்றி பேசுகிறது, எதை விவாதிப்பது என்பது தெரியாத போது இத்தகைய ஆசுவாசங்கள் தேவைப்படுகிறது. ஆனால் மேலை நாடுகளில் கூட ஒருவர் ஒரினச்சேர்க்கையாளர் என்று அவரே அறிவிப்பதுதான் மரபாகவும், நாகரீகமாகவும் கருதப்படுகிறது. அவர் சார்பில் மற்றவர் பேசுவது அடிப்படை உரிமையை மறுப்பதாகவும் கருதப்படுகிறது. அவ்வகையில் வியாசன் அவர்கள் அவரே ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும் பட்சத்தில் அறிவிப்பதில் தவறில்லை. 1000 வருடங்கள் பின்னோக்கிச் சென்று கஜினி முகமதுவின் பாலியல் நிலை குறித்தெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.

                    • நான் எழுதிய பதிலில் ஏன் கஜினி முகம்மது ஓரினச்சேர்க்கையாளர் என்பதைக் குறிப்பிட்டேன் என்றதற்கான விளக்கமும் இருக்கும் போது, அதை வெளியிடாமல், இவ்வளவு நீண்ட விளக்கம் அளிப்பது தான் வினவின் கருத்துச் சுதந்திரமா? நான் வெற்றிவேல் என்பவரின் கருத்துக்குத் தான் எனது பதிலையளித்திருந்தேன். அதனால் நான் கஜினி முகம்மது ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்ற உண்மையைக் குறிப்பிட்டதற்கான காரணம் அந்தப் பதிலில் உண்டு. என்னுடைய பதிலை வெளியிடுவீர்கள் என நம்புகிறேன். நன்றி. 🙂

                    • //1000 வருடங்கள் முன்னோக்கிச் சென்று கஜினி முகமதுவின் பாலியல் நிலை குறித்தெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.//

                      வினவு ஒப்புக்கொள்ளாத படியால் அதை கஜினி முகம்மதுவின் ஓரினச் சேர்க்கை வாழ்க்கையையும், அவனது காதலன் மாலிக் ஆயாசையும் பற்றி எழுதிய வரலாற்றாசிரியர்கள் முட்டாள்கள். இணையத்தில் அதைப் பற்றியுள்ள எழுத்துக்கள் எல்லாம் அகற்றப்பட வேண்டும் அப்படித் தானே. 1000 வருடங்கள் முன்னோக்கிச் சென்று கஜினி முகமதுவின் பாலியல் நிலை குறித்தெல்லாம் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் 1000 வருடங்கள் பின்னோக்கிச் சென்று ராஜ ராஜ சோழனையும், தேவதாசிகளையும் பற்றியெல்லாம் பேசலாம், வசைபாடலாம், அதைப் பற்றிக் கவலைப்படலாம். 🙂

                      //Maḥmūd was the first to carry the banner of Islam into the heart of India. To some Muslim writers he was a great champion of his faith, an inspired leader endowed with supernatural powers. //

                      இஸ்லாத்தில் இவ்வளவு ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட கஜினி முகம்மது ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இருந்திருக்கிறார். ஆனால் இஸ்லாத்தில் ஓரினச் சேர்க்கையும், ஆணை ஆண் காதலிப்பதும், தடை செய்யப்பட்டது மட்டுமல்ல, ஹராமும் கூட. அதனால் கஜினி முகம்மது, உண்மையில் இஸ்லாத்தின் விதிகளின் படி ஒழுகியவர் அல்ல என்பது தான் நான் கூறிய கருத்தாகும். அதற்கு கஜினி முகம்மதுவே திரும்பி வந்து அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறுவது தான் நாகரீகம், மரபு என்றெல்லாம் கதை விடும் வினவு நிர்வாகத்தை பார்க்கச் சிரிப்புத் தான் வருகிறது. 🙂

                    • வினவு இசுலாமிய இணையதளம் போலவே பேசுது தென்றல் அவர்களுக்கு நான் ஒரு பதில் குடுத்து இருந்தேன் அது ஏன் வரலனு தெரியல வர்க்கப்பார்வைனு வரும் போது அது என்னயா இசுலமிய வர்க்கப்பார்வை வர்க்கம்னாலே உழைக்கும் வர்க்கம் முதலாலி வர்க்கம்தானே அல்லது நடுதர வர்க்கம் ஏழைகள் பணகார வர்க்கம்தானே இருக்கனும் அதுல முசுலீம் இந்து கிறிஸ்தவனு பிரிச்சு பார்க்கலாமனு கேட்டேன் முசுலீம்களுக்கு வீடு தர மாட்ரான் மத்தவங்க நடத்துற நிறுவணங்களில் வேலை தற மாட்ரானு எழுதுற வினவு அத இசுலாமியர்களுக்கு ஏன் பொருத்தி பார்க்க மாட்டுது வினவு இசுலாமியர்கள் வசிக்கும் தெருக்களில் ஒரு இந்துக்கு வீடு வாடகைக்கு பார்த்து தருமா இப்பவாது இத வெளியிடுமா தெரியல

                    • So vinavu readers will get a great escape from him[viyasan] very soon!. 🙂

                      //அதனால் எதற்காக நான் மினக்கெட்டு உங்களுக்குப் பதிலெழுதி எனது நேரத்தை வீணாக்க வேண்டுமென்று தோன்றுகிறது.//

                    • வியாஜன், சேம் சைடு கோல போடுறதுல மதுரை ஆதினம் கூட உங்கள விஞ்ச முடியாது.
                      ராஜராஜ சோழன், தேவதாசிங்கள நீங்க வசை பாடுனா, பதிலுக்கு நானும் கஜினி முகமது ஓரினச்சேர்க்கைன்னு வஜை பாடுவேன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்னி. பெறவு ஒரினச் சேர்க்கை ஹராம்னு இசுலாம் சொல்லுதுன்னு சொல்லிட்டு, இதை வசைன்னு நினைச்சு நீங்க போட்டத பாத்தா யாழ்ப்பாணத்து வேளாளனவுகளுக்கும் இது ஹராம்னு ஆகுதே! ஓரினச் சேர்க்கையை யாழ் சைவைம் ஹராம்னு அருவெறுப்பா பாக்குதுன்னு, இத உங்க கனடாவுல சொல்லிப் பாரும், வெளக்குமாறு பிஞ்சிரும்!
                      அடிக்கிறது சேம்சைடு கோலுன்னாலும், வீராப்புக்கு ஒன்னும் குறைச்சலில்ல!
                      கஜினியை திட்டறதா நினைச்சிட்டு, நீங்க அம்மணமா ஆடுறத பாத்தா ரெண்டு மாசம் உக்காந்து சிரிக்கலாம், ரொம்ப நன்னிங்கோ!

                    • இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு “முற்போக்கு” இணையத்தளத்தில், ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்குப் படையெடுத்து, கோயில்களைக் கொள்ளையடித்த ஒரு படையெடுப்பாளரின் பாலியல் விருப்பு, வெறுப்புகளை அவனைப் பற்றிய விவாதத்தில் பேசியதற்காக, அந்த தளத்தின் நிர்வாகிகள் உணர்ச்சிவசப்பட்டு, கருத்து தெரிவித்தவரின் பாலியல் விருப்பு வெறுப்புக்களை அறிவிக்குமாறு கூறும், அதாவது தனிப்பட்ட தாக்குதல் நடத்தும் நிர்வாகிகளைக் கொண்ட தளம் எவ்வாறு ஒரு நடுநிலையான கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் தளமாக இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இதற்குப் பெயர் தான் ‘முற்போக்கு’ போலிருக்கிறது. 🙂

                      ஓரினச்சேர்க்கை என்பது தவறு அல்லது தவறல்ல என்று வாதாடுவதோ அல்லது அதைப் பற்றித் தீர்ப்புக் கூறுவதோ என்னுடைய நோக்கமல்ல. நான் எதற்காக கஜினி முகம்மத்தில் ஓரினச் சேர்க்கை பாலியல் விருப்பைக் குறிப்பிட்டேன் என்பதற்கான காரணத்தை நான் எனது முதல் பதிலிலேயே குறிப்பிட்டு விட்டேன். பொது வாழ்க்கைக்கு வந்தவர்களின், குறிப்பாக பழைய அரசர்களின் வரலாற்றைப் பற்றிப் பேசும் போது யாரும் அவர்களைப் பற்றி, அவர்களின் பாலியல் விருப்பு வெறுப்பு உட்பட, எதையும் மறைப்பதில்லை. வரலாற்றில் நடந்த எதையும் மறைப்பதோ அல்லது வண்ணம் பூசி மழுப்புவதோ உண்மையான வரலாறாகாது. உதாரணமாக, இங்கிலாந்தின் புகழ் பெற்ற அரசியாகிய முதலாம் எலிசபெத்தை, அவர் ஒரு ஆண் அல்லது லெஸ்பியன் என்றெல்லாம் கூட. வரலாற்று வகுப்பறைகளில் விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதுண்டு. ஆனால் கஜினி முகம்மதுவின் வரலாற்றைப் பேசும் போது மட்டும், அவரது பாலியல் நிலை குறித்துக் கவலைப்படத் தேவையில்லையாம். அது எந்த வகையில் நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை.

                      இந்த லட்சணத்தில் நான் escape ஆகப் போகிறேன் என்றும் சிலர் உளறுவதைப் பார்க்க எங்கே போய் முட்டிக் கொள்வதென்று தெரியவில்லை. அப்படி எனது கருத்தைத் தெரிவிக்கப் பயந்து போய் escape ஆகும் நிலையில் நானில்லை. ஆனால் எனது பதில்கள் வெளியிடப்படுமா அல்லது இனியும் இங்கு பங்கு பற்ற வேண்டுமா என்று தான் சிந்திக்கிறேன். 🙂

                      //அவ்வகையில் வியாசன் அவர்கள் அவரே ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும் பட்சத்தில் அறிவிப்பதில் தவறில்லை///

                    • Viyasan,

                      Fools mind and angry man minds will not work properly like yours.

                      See my comment and your replay!

                      I SAID Vinavu readers are going to escape from you !

                      But U understand that you are going to escape from vinavu!

                      Viyasan! R U fool or angry man? or Both?

                      //Mycomment: So vinavu readers will get a great escape from him[viyasan] very soon!.//

                      viyasan://இந்த லட்சணத்தில் நான் escape ஆகப் போகிறேன் என்றும் சிலர் உளறுவதைப் பார்க்க எங்கே போய் முட்டிக் கொள்வதென்று தெரியவில்லை. அப்படி எனது கருத்தைத் தெரிவிக்கப் பயந்து போய் escape ஆகும் நிலையில் நானில்லை. ஆனால் எனது பதில்கள் வெளியிடப்படுமா அல்லது இனியும் இங்கு பங்கு பற்ற வேண்டுமா என்று தான் சிந்திக்கிறேன்//

                    • I am familiar with the comments of Senthilkumaran. I know what kind of remarks he usually makes, I only saw the word ‘escape’ and didn’t read the whole sentence. 🙂

                    • Viyasan,

                      So that I am asking you that whether Are you fool or angry man or BOTH ???? 🙂

                      viyasan://I am familiar with the comments of Senthilkumaran. I know what kind of remarks he usually makes, I only saw the word ‘escape’ and didn’t read the whole sentence.//

  12. பார்ப்பணியத்தை பார்ப்பணர்கள் புகழலாம் ஆனால் அவர்கள் அழிக்க துடிக்கம் அடிமைகளே புகழ்வதுதான் இங்கு வேடிக்கையாக இருக்கின்றது…. அடேய் பாமரா பிராமணன் உன்னை முதலில் ஒரு மணிதனாக மதிக்கட்டும் பிறகு நீ அவனை புகழலாம்….

  13. திரு. தென்றல்.

    தீட்சிதர்கள் தில்லைக் கோயிலில் சொத்துக்களை சூறையாடுவது மட்டுமல்ல, பல இந்துக் கோயில்களில், கிறித்தவ தேவாலயங்களில், ஏன் பள்ளிவாசல்களில் கூட பூசாரிகளால், மதகுருமார்களால், வக்பு வாரியங்களால் இக்காலத்தில் கூட கணக்குக் காட்டாமல் பணம் கையாடப்படுகிறது, சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. அதனால் அக்காலத்தில் செல்வங்களால் நிறைந்து கிடந்த சோம்நாத் கோயிலில் அங்கிருந்த பூசாரிகள்/ பார்ப்பனர்கள் அங்குள்ள செல்வங்களை சூறையாடியிருக்க மாட்டார்கள் என்று யாருமே நிச்சயமாகக் கூறவும் முடியாது அப்படி யாரும் வாதாடவும் மாட்டார்கள். ஆனால் இந்துக்களாகிய பார்ப்பனர்கள் இந்துக்களின் சோம்நாத் கோயிலில் பணத்தை சூறையாடியதை அல்லது ஊழல் நடந்ததை, அல்லது சிற்றரசர்கள் யாத்திரீகர்களைக் கொள்ளையடித்ததை ஆதாரம் காட்டி, ஒரு முறையல்ல பதினேழுமுறை இந்தியாவுக்குப் படைஎடுத்துக் கொள்ளையடித்த கஜினி முகமதை அவர்களுடன் ஒப்பிட்டு, அவனும் அந்த இந்துப் பூசாரிகள் மாதிரித் தான் கோயிலில் பணத்தைக் கையாடினானே தவிர அவனுக்கு கோயிலை அழிக்கும் எண்ணமோ, அல்லது கொள்ளையடிக்கும் நோக்கமோ இல்லை எல்லாம் வெறும் கட்டுக்கதை என்பது போன்று, வரலாற்றைத் திரிக்க சிலர் முனைவது வெறும் அபத்தம் என்பது தான் எனது கருத்தாகும்.

    1. உதாரணமாக நியூயோர்க்கில் நாலாயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களை முஸ்லீம்கள் துடிக்க துடிக்க நெருப்பில் எரித்துக் கொன்று பின்னரும் கூட, மன்ஹாட்டனில் பள்ளிவாசல் கட்ட அமெரிக்கர்கள் அனுமதித்தது மட்டுமல்ல, அங்கு பல பள்ளிவாசல்கள் இயங்குகின்றன. அமெரிக்காவில் பல முன்னாள் கிறித்தவக் கோயில்களையே முஸ்லீம்கள் வாங்கி பள்ளிவாசலாக மாற்றியுமுள்ளார்கள். அதனுடன் ஒப்பிடும் போது, பொறுமைக்கும், சகிப்புத் தன்மைக்கும் பெயர் போன இந்துக்கள், சோம்நாத் கோயில் இடிக்கப்பட்டு 200 ஆண்டுகளின் பின்னர், சோம்நாத் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் சிலவற்றை, மத நல்லிணக்கம் பேணுவதற்காக, அல்லது அங்கு வர்த்தகம் புரிந்த இஸ்லாமியர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடுத்திருப்பதை, கஜினிமுகம்மது சோம்நாத் கோயிலைக் அழிக்கவில்லை அல்லது கொள்ளையடிக்கவில்லை என்பதற்கு ஆதராமாகக் கொள்ளலாம் என்று வாதாடுவது நகைப்புக்குரியது மட்டுமல்ல முட்டாள் தனமானதும் கூட.

    2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலைக் கூடத் தான் மாலிக்கபூர் கொள்ளையடித்தான், ஆனால் மதுரை மீனாட்சியம்மன் அண்மையிலேயே பள்ளிவாசல் இருக்கிறதே, அதையும் இந்துக்கள் அனுமதித்திருக்கிறார்கள் தானே. அதனால் மாலிக்கபூர் மதுரையைச் சூறையாடவில்லை என்று வாதாட முடியுமா?

    3. இலங்கையில் போத்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் 500 க்கு மேற்பட்ட இந்துக் கோயில்களை அழித்துச் செல்வங்களையும், நகைகளையும் சூறையாடினர். அந்தக் கோயில்களின் கற்களைக் கொண்டு யாழ்ப்பாணக் கோட்டையைக் கட்டினர், ஆனால் இன்றும் பல கிறித்தவக் கோயில்கள், இந்துக் கோயில்களின் வளவுகளுக்குள்ளேயே உள்ளன. பல தமிழ் இந்துக்கள் இரண்டு கோயில்களுக்கும் சென்று வணங்குகின்றனர். அதை ஆதாரம் காட்டி போத்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தில் இந்துக் கோயில்களை அழிக்கவில்லை, கொள்ளையடிக்கவில்லை என்று கூற முடியுமா?

    அதிலும் வேடிக்கை என்னவென்றால் துலுக்கனாகிய கஜினி முகம்மதை நல்லவனாகக் காட்டுவதில் இனத்தால் தமிழர்களாகிய தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை. அப்படியானால் துலுக்கர்கள் (Turks) இவர்களுக்கு என்ன மாமனா, மச்சானா? 🙂

  14. இந்த கட்டுரையை எதிர்த்து வாதிடுபவர்கள் இக்கட்டுரை எழுப்பக்கூடிய மூலக்கேள்விக்கு பதில் சொன்னால் தேவலை. அதாவது

    அன்றைய நாட்களில் கோயில்கள்தான் மன்னர்களின் செழ்வங்களை பதுக்கி வைக்கும் இடமாகவும் கோயில்கள்தான் செல்வங்களின் உறைவிடங்களாக இருந்துள்ளது. எனவே படையெடுத்த மன்னர்கள் அனைவரும் மத வித்தியாசமன்றி கோயில்களை கொள்ளையடித்துள்ளனர். உதாரணத்திற்கு சிரீரங்கப்பட்டிணத்தை சோழ மன்னர்கள் பல தடைவைகள் கொள்ளையடித்துள்ளனர். இவையெல்லாம் அன்றைய மன்னர்களுக்கு அந்நிய நாட்டின் கோயில்களை கொள்ளையடித்து தன் நாட்டிற்கு கொண்டுவருவது சத்திரிய தர்மமாகவே இருந்ததுள்ளது. யதார்த்தம் இவ்வாறாக இருக்க கஜினி சோமநாதர் கோயிலை கொள்ளயடித்ததை மட்டும் ஊதிப்பெருக்கி இஷ்லாமியர்களுக்கு எதிராக இந்து மத வெறியை பட்டை தீட்ட முயற்சிப்பது எவ்வாறு ஏற்றுகொள்ள முடியும்?

    சிலர் என்னவோ இந்த கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்றே புடியாதது போல தம்முடைய பூனூலை மறைத்து மறைத்துக்கொள்கின்றனர்

    • குத்துப் மினார் வளாகத்தில் உள்ள மசூதியில் உள்ள இந்து-ஜைன மத கோவில் தூண்கள், அவை விலை உயர்ந்த பொக்கிஷங்கள் என்பதால்தான் கோவில்களை இடித்து திருடப்பட்டனவா?

      சமீபத்தில் உ பி யில் இரண்டு தலித் சிறுமிகள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, மரத்தில் தொங்கவிடப்பட்டனர். இந்நிகழ்வு வெறும் காமவெறியினால் நடந்தது என கூறுவீர்களா, அல்லது ஆதிக்க ஜாதிவெறி காரணமா? முன்பே பல முறை தலித் ஆண்கள், தலித் பெண்களை பலாத்காரம் செய்வது நடந்திருக்கிறது என்பதை இங்கே இணைத்து பேசுவீர்களா?

      எந்த சோழ மன்னன் எப்போது ஸ்ரீரங்கப்பட்டன ஆலயத்தை சூறையாடினான் என ஆதாரத்தோடு கூற முடியுமா?

      ஏதோ ஒரு யுகத்தில் ஏதோ ஒரு வெறி பிடித்த மன்னன் சோமநாத் கோவிலை இடித்தான் என்பதற்காக, இன்றைய இஸ்லாமிய சகோதரர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயல்வது கொடூரம். மறுபுறம் இந்த மன்னன் ரொம்ப நல்லவன், அவன் சோம்நாத் கோவிலுக்கு வந்ததே தேவாரம் பாடத்தான் என்ற ரீதியில் எழுதுவதும் தவறுதான்.

      இங்கே பூணூலை மறைத்துக் கொண்டு எழுதுவோர், நீங்கள் உசுப்பி விட்டதால் ஆக்ரோஷமாகி, தங்கள் பூணூலை வெளிப்படையாக காட்டும் பட்சத்தில், சுன்னத் செய்துள்ள தாங்கள் அதை வெளிப்படையாக காட்ட வேண்டி வருமே என்பது பற்றி சிந்தித்து இருக்கிறீரா (Just a joke 🙂

    • 1453 இல் துலுக்க அரசன் Mehmed II, Constantinople ஐக் கைப்பற்றியதும், இஸ்தான்புல்லில், இன்றுமுள்ள கிறித்தவ தேவாலயமாகிய Hagia Sophia வைக் கொள்ளையடித்தது மட்டுமன்றி, அதைப் பள்ளிவாசலாகவும் மாற்றினான். அவனது பரம்பரையில் வந்த கஜினிமுகம்மதும், ஏனைய முகலாயர்களும் இந்துக் கோயில்களைக் கொள்ளையடித்தது மட்டுமல்ல, அவற்றில் பலவற்றை பள்ளிவாசல்களாகவும் மாற்றினர் என்பது வரலாற்று உண்மை. இந்துக்களின் புனிதத்திலும் புனிதமாகிய (Holiest of Holy) காசி விசுவநாதரின் புராதன கோயில் கூட இன்றும் பள்ளிவாசலாகத் தானிருக்கிறது. எந்த மறுப்புவாதத்தாலும் அவற்றை எல்லாம் நியாயப் படுத்த முடியாது.

      வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதற்காக இக்காலத்திலும் பழிவாங்கத் துடிக்காமல் நாம் சகிப்புத் தனமையுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டுமே தவிர, முகலாயர்கள் இந்துக்களை மதம் கட்டாயமாக மதம் மாற்றவில்லை, அல்லது கோயில்களைக் கொள்ளையடிக்கவில்லை அல்லது, இந்துமன்னர்களும் கோயில்களைத் தாக்கினார்கள் அதே போல் முஸ்லீம் தான் மன்னர்களும் தாக்கினார்கள், அவர்களுக்கும் இந்துமதத்தை அழிக்கும் நோக்கமில்லை என்று வாதாடுவதைஎல்லாம் பார்க்க சிரிப்புத் தான் வருகிறது.

      இந்து மன்னர்கள் தமது நாட்டைப் பெரிதாகும் நோக்கில் தமது எதிரிகளைத் தாக்கிய போது கோயில்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டதுண்டு பின்னர் அவர்கள் அந்த நாட்டைக் கைப்பற்றியதும், அந்தக் கோயில்களைப் புனரமைத்து முன்பிருந்ததை விட பெரியளவில் திருத்தி அமைத்ததுடன், நகைகளையும், செல்வங்களையும் தானம் அளித்தார்கள். அதையும் முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கோயில்களை அழித்தததையும், கொள்ளையடித்ததையும், அவற்றைப் பள்ளிவாசல்களாக மாற்றியதையும் ஒப்பிடுவது போன்ற விதண்டாவாதம் வேறெதுவுமிருக்க முடியாது.

      • திருத்தம்: //அவனது பரம்பரையில் வந்த கஜினிமுகம்மதும், //

        கஜினி முகம்மதுவின் துலுக்க அரசர்களின் பரம்பரையில் வந்த Mehmed II என்று வாசிக்கவும். வசனப்பிழைக்கு வருந்துகிறேன். 🙂

  15. திரு வியாசன் அவர்களே,

    இன்னும் திரித்து புரட்டுவதிலேயே குறியாய் இருக்கிறீர்கள். சோம்நாத் கோயிலில் பார்ப்பனர்கள் கொள்ளையடித்ததை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களேயானால் பாடநூல் எவ்வாறு இருந்திருக்க வேண்டும்? கட்டுரை எழுப்புகிற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

    இருதரப்பையும் கொள்ளையடித்ததை பதிவு செய்திருக்கவேண்டுமில்லையா? எங்கே போயிற்று நடுநிலைமை?

    கட்டுரை கஜினி கொள்ளையடித்தான் என்பதை ஆரம்பித்திலேயே பதிவு செய்திருக்கிறது இப்படி. “அப்படியானால் கஜினி முகமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்ததும் கொள்ளையடித்ததும் பொய்யா? இல்லை, மறுக்க முடியாத உண்மை.”

    கொஞ்சம் இசுலாமிய மதவெறியைத் தணித்துவிட்டு கட்டுரையை வாசிக்கலாம் இல்லையா?

    இன்னும் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் தலைப்புகள் எப்படி அப்பட்டமாக இருக்கிறது என்று நோக்குங்கள்;

    ஆரியர்கள் வருகை!
    இசுலாமியர்கள் படையெடுப்பு!!

    அவிங்க வந்தாங்களாம்! இவிங்க படையெடுத்தாங்களாம்!
    அடேங்கப்பா! ஆர் எஸ் எஸ் களின் அழுகுணி ஆட்டம் தாங்கமுடியவில்லை!!

    • Hi Thendral,

      //ஆரியர்கள் வருகை!
      இசுலாமியர்கள் படையெடுப்பு!!//

      அதிகாரம் ஆரியர்களின் கையில் இருப்பதால் இப்படித்தான் பதிவாகும். இசுலாமியர்களின் கையில் இருக்கும் இடங்களில் இது இடம் மாறியிருக்கும்.

      Having said that, Aryans’ invasion may not have happened with a speed and scale as that of Muhamadans’ invasion.

  16. Before writing article know some basic things..

    Jain Saint shown Lord Siva to King?? after Seeing Lord Siva king converted from Shivam to Jain??

    You don’t even know basic things? why are writing article.??

    சோமநாதபுரத்திலுள்ள மரத்தினாலான பாழடைந்த கோயிலை கற்கோயிலாக மாற்றிக் கட்டினால் சாகாவரம் பெறலாமென அவனது அமைச்சன் கூறிய யோசனையை மன்னன் அமல்படுத்துகிறான். சமண மதத்தைச் சார்ந்த அந்த அமைச்சன் தனது மதத்தின் வலிமையை மன்னனுக்குப் புரிய வைக்க சமண முனிவர் ஒருவரை அழைத்து வந்தான். சோமநாதபுரம் கோயிலுக்கு வந்த அந்த முனிவர் தனது தவ வலிமையினால் ‘சிவபெருமானை’ அழைத்தவுடனே சிவன் மன்னனுக்குக் காட்சியளித்தாராம். சிவனையே சொடுக்கு போட்டு வரவழைக்கும் அந்த முனிவரின் தவ வலிமையை வியந்த மன்னன், உடனே சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினான் எனவும் அந்நூல் குறிப்பிடுகிறது.

  17. Gajini is from Turkish back ground. you are giving a false statement like he is from Indian constitution(ancient) because he ruled Afghanistan which is a part of ancient Indian. Alexander also ruled portion of ancient India will he become an Indian then? don’t think readers are fool. Please don’t highlight Gajini as a savior.

    Read below link, its in tamil.

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81

  18. அவுரங்கசீப் ஹிந்துக்கள் மீது ஜசியா வரியை விதித்தார் என்பார்கள். ஜசியா வரியை விட பல மடங்கு அதிகப்படியான ஜக்காத் வரி முஸ்லீம்கள் மீது கட்டாயமாக்கப்பட்டதை மறைத்துவிடுவார்கள். ஒரு ஆதாரமும் இல்லாமல் பாபர் ராமர் கோவிலை இடித்துவிட்டு பள்ளிவாசல் கட்டினார் என்பார்கள், அது போல தான் சோமநாதபுர படை எடுப்பு பற்றிய வரலாற்றி திரிப்பும் .
    வெள்ளைக்காரன் வருவதற்கு முன் இன்றைக்கு இருக்கும் இந்தியாவை போல் யூனிட்டியான இந்திய அரசு என்று வரலாற்றில் என்றைக்குமே இருந்ததில்லை. பல பல நாடுகளாக பல பெயர்களில் பல அரசாட்சிக்கலாகத்தான் நடந்திருக்கிறது.இந்தியாவில் போர்கள் என்றால் வெற்றிப்பெற்ற அரசன் தோல்வியுற்ற நாட்டை தன நாட்டுடன் இணைத்துக்கொல்வதும், அந்த நாட்டின் சொத்துக்களை கொள்ளை அடிப்பதும், அழகிய பெண்களை கவர்ந்து செல்வதும், இவைகள் முடியாவிட்டால் நகரங்களை நாசம் செய்வதுமாகததான் வரலாற்றில் அறியப்படுகிறது. இதுதான் எதார்த்தம். ஆனால் சோமநாதபுர படை எடுப்புகளை நமக்கு வரலாற்றில் எப்படி காண்பிக்கப்படுகிறது? ஒன்றுப்பட்ட இன்றைய இந்தியாவை போல் இருந்த அன்றைய இந்தியாவில்… இருந்த ஒட்டு மொத்த இந்து மக்களின் அடையாளமாக இருந்த சோமநாதபுர ஆலயத்தை, இந்து மதம் அல்லாத மாற்றுமத வெளிநாட்டு மன்னன் 17 முறை படை எடுத்து அதன் சொத்துக்களை கொள்ளை அடித்து சென்றதாகவும், இதுபோல் இந்தியாவில் நடந்ததே இல்லை என்றும் பூதாகரப்படுத்துகிரார்கள். பார்ப்பன காழ்புணர்ச்சியின் வரலாற்று திரிப்பே தவிர வேறு என்ன ?

    கொள்ளை அடிக்கும் என்ற முடிவில் படை எடுத்த கஜினி ஒரே முறையில் செல்வங்களை கொள்ளை அடிக்காமல் 17 முறை தவணை முறையில் ஏன் கொள்ளை அடிக்க வேண்டும் ? அப்படி எந்த முட்டாளாவது செய்வானா ?
    ஆக கஜினிக்கு கொள்ளை அடிப்பது நோக்கம் கிடையாது என்பது தெளிவாக புரிகிறது. இந்தியாவில் வணிகம் செய்த பாரசீக அரபு வணிகர்களை சோமநாதபுர பார்பனகூட்டம் தடுத்து வழிமறித்து கொள்ளை அடிப்பதை தடுக்கவே பாரசீக மன்னர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கஜினியின் படை எடுப்புகள் இருந்திருக்கிறது. மற்றபடி தவணை முறையில் கொள்ளை அடித்த கதை எல்லாம் பார்பன கைங்கரியங்கள் தவிர வேறோன்றும்கிடையாது.

    • Hi Munna,

      //ஜசியா வரியை விட பல மடங்கு அதிகப்படியான ஜக்காத் வரி முஸ்லீம்கள் மீது கட்டாயமாக்கப்பட்டதை மறைத்துவிடுவார்கள்.//

      இதத்தான் சந்துல சிந்து பாடறதுன்னு சொல்வாங்க.

      அந்த வரிங்களோட விகிதங்கள விளக்கமா கொடுக்றீங்களா?

      ஜிஸ்யாவ காபிருங்க எப்டி செலுத்தனும்னு சொல்லியிருக்கே. அது எப்டின்னும் சொல்றீங்களா?

      // இந்தியாவில் வணிகம் செய்த பாரசீக அரபு வணிகர்களை சோமநாதபுர பார்பனகூட்டம் தடுத்து வழிமறித்து கொள்ளை அடிப்பதை தடுக்கவே பாரசீக மன்னர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கஜினியின் படை எடுப்புகள் இருந்திருக்கிறது.//

      இத பொந்துல சிந்து பாடறதுன்னு வச்சிக்கலாமா?

      • இந்திய வரலாற்றில் ஆரியர்களால் எழுதப்ப…ட்ட கட்டுக்கதையான கஜினி முகம்மது இந்தியாவை கொள்ளை அடித்தார். சோமநாதர் ஆலயத்தை தாக்கி அங்குள்ள செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்தார் என்ற வரலாற்றுத்திரிப்பின் மூலம் இந்துக்களின் மனதில் முஸ்லிம்களை வெறுக்கும் மனப்பான்மையை உருவாக்கிய ஆரிய மாயை யின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவம் ஆதாரங்களுடன்

        இது chach Nama http://en.wikipedia.org/wiki/Chach_Nama என்ற வரலாற்று நூலில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது

        இந்த போர் கொள்ளையடிக்க நிகழ்ந்த போர் இல்லை கொள்ளையர்களை அழிக்க நடந்த யுத்தம்

        வரலாற்றுக்கு வருவோம் in 661-712AD காலகட்டத்தில் சிந்து பகுதியை ஆண்ட பிராமண அரசன் ராஜா தாகிர்https://en.wikipedia.org/wiki/Dahir_(Raja) இவனது முக்கிய தொழில் கடற்கொள்ளை . இவன் அரபுகளின் கடல் வாணிப வழிகளில் இந்த தாக்குதல் தொடர்ந்தது இது kutch ,Debal today karchi and kathiyavar தளங்களில் இருந்து தொடர்ச்சியாக நடந்தது இறுதியாக இலங்கையிலிருந்து அரபு நாடு சென்ற கப்பலை தாக்கி அதில் இருந்த பரிசுப்பொருட்களை கொள்ளை அடித்ததோடு மட்டுமல்லாமல் புனித யாத்திரை சென்ற பெண்களை மானபங்கப்படுத்தினான்.

        https://en.wikipedia.org/wiki/Muhammad_bin_Qasim

        According to history writer Mr. BERZIN , Umayyad interest in the sindh region occurred because of attacks from Sindh Raja Dahir on ships of Muslims and their imprisonment of Muslim men and women.

        According to historian Mr. Wink, Umayyad interest in the region was galvanized by the operation of the Meds and others.[2] Meds (a tribe of Scythians living in Sindh) had pirated upon Sassanid shipping in the past, from the mouth of the Tigris to the Sri Lankan coast, in their bawarij and now were able to prey on Arab shipping from their bases at Kutch, Debal and Kathiawar

        அப்போது ஈராக்கின் கவர்னர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அவர்கள் ராஜா தாகிர் மன்னனுக்கு கடிதம் எழுதி புனித பயணம் சென்ற பெண்களை விடுவிக்கவும் கொள்ளையடித்த செல்வங்களை திரும்ப ஒப்படைக்கவும் கோரிக்கை வைத்தார் ஆனால் கடற்கொள்ளையனான அந்த புஷ்கரண பிராமண மன்னன் அதற்கு மறுக்கவே muhamed bin Quasim (கஜினி முகம்மது ) தலைமையில் 6000 சிரியர்கள் கொண்ட காலாட்படை சிந்து பகுதியிலிருந்தும்ம ற்றும் ஈரானில் இருந்து 5 கப்பல்படையணிகள் debel இன்றைய கராச்சி துறைமுகத்தையும் தாக்கியது .இது நடந்தது கிபி 710 இல்

        முகம்மது பின் காசிமின் படை சிந்து ந்திக்ககரையில் அணிவகுத்து நின்ற தாகி அரசனின் படைகளுடன் தொடர் தாக்குதல் நடத்தியது இருதியாக ராஜா தாகிர் கொல்லப்பட்டான் அவனால் கொள்ளை அடித்து சோமநாதர் ஆலயத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்வங்களை மீட்டு இஸ்லாமிய ஆட்சியை நிறுவி yazid ibn al -muhallab அவர்களை fars, kirman ,makran and Sindh பகுதிகளுக்கு கவர்னராக நியமித்தார்

        இது தான் உண்மை யான வரலாறு கடற்கொள்ளை யடித்து ஆலயத்தினுள் மறைத்து வைக்கப்படிருந்த செல்வங்களை மீட்ட சம்பவத்தை ஆலயத்தை கொள்ளையடித்ததாக திரித்து எழுதி விட்டனர் இந்த டவுசர் கூட்டம்!!!!

        • கஜினி முகமது ஒவ்வொரு முறையும் சோமநாதபுர ஆலயத்தை கொள்ளை அடிக்க கிளம்பும்போதும் கோணி பைகள் அதிகம் கிடைக்காமல் போனதால் தான் மொத்த செல்வத்தையும் கொண்டு செல்ல முடியாமல் 17 முறை படை எடுக்க நேர்ந்ததுன்னு யூனிவர்புட்டி போன்ற பார்பனர்கள் விரிவா வரலாற்றை நமக்கு சொன்னாலும் ஆச்சரியம் இல்லை.

          • . 🙂

            //கோணி பைகள் அதிகம் கிடைக்காமல் போனதால் தான் மொத்த செல்வத்தையும் கொண்டு செல்ல முடியாமல் 17 முறை படை எடுக்க நேர்ந்ததுன்னு//

        • Hi Munna,

          You wrote //கஜினியின் படை எடுப்புகள் இருந்திருக்கிறது//

          Now you say it was Muhammad bin Qasim (3 centruies before)

          You need to first become sober.

  19. திரு. தென்றல் அவர்களே,

    ஹிட்லர் யூதர்களைக் கொல்லவில்லை என்று கூட சில Neo Naziகள் மறுப்புவாதம் நடத்தும் போது, திப்புசுல்தான் இந்துக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றவில்லை, கஜினி முகம்மது சோம்நாத்தை கோயிலை இடிக்கவில்லை என்று இஸ்லாமிய மறுப்புவாதங்கள் நடைபெறுவது ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் அதற்கு சிலர் காட்டும் “ஆதாரங்களும், உதாரணங்களும்” தான் முட்டாள் தனமாக இருக்கின்றன. 🙂

    பல கோயில்களிலும், வக்பு வாரியங்களில் கூட கோடிக்கணக்கில் ஊழல்கள் நடைபெறுகின்றன, வக்பு வாரியங்களுக்குச் சொந்தமான நிலங்களும் கட்டிடங்களும் சூரையாடபப்டுகினறன என்ற செய்திகளும் முறைப்பாடுகளையும் வெறும் கூகிள் தேடுதலிலேயே காணக் கூடியதாக இருக்கிறது. அதனால் அவை எல்லாவற்றையும் கூடவா பாடநூல்களில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கிறீர்கள்.

    அதே வேளையில், உதாரணத்துக்கு, இஸ்ரேலியர்கள் தமது கொமாண்டோக்களை அனுப்பி தமிழ்நாட்டில் ஒரு பள்ளிவாசலைத் தாக்கிக் கொள்ளையடித்தால் அல்லது அழித்தால் அது தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல, முழு இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயல் அல்லவா? அதனால் அந்த விடயம் நிச்சயமாக வருங்காலத்திலும் பேசப்படும், அத்துடன் பாடநூல்களிலும் இணைக்கப்படும். இந்த உதாரணத்திலிருந்து, வக்பு வாரிய ஊழலும், இஸ்ரேலியர்கள் தமிழ்நாட்டுப் பள்ளிவாசலைத் தாக்குவதற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு புரிந்திருக்குமென நம்புகிறேன். அதானால் தான் பார்ப்பனர்கள்(இந்துக்கள்) அவர்களின் சொந்தக் கோயிலில் செல்வங்களைக் கையாடியதை (கொள்ளையடித்ததை) பாடநூலில் இணைக்கவேண்டிய தேவையில்லை, (ஏனென்றால் அக்காலத்தில் இந்தியாவில் பல கோயில்களில் அப்படி நடந்திருக்கலாம்), ஆனால் அன்னியானாகிய துலுக்க முஸ்லீம் கஜினி முகம்மது படையெடுத்து, சோம்நாத் கோயிலைக் கொள்ளையடித்தது பாடநூல்களில் இணைக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். அதனால் தான் அந்தப் படையெடுப்பும், கொள்ளையடிப்பும் பாட நூல்களில் இணைக்கப்பட்டுள்ளது.

    //கட்டுரை கஜினி கொள்ளையடித்தான் என்பதை ஆரம்பித்திலேயே பதிவு செய்திருக்கிறது இப்படி. “அப்படியானால் கஜினி முகமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்ததும் கொள்ளையடித்ததும் பொய்யா? இல்லை, மறுக்க முடியாத உண்மை.”//

    இந்தக் கேள்விக்கு மேலே உதாரணத்துடன் பதிலளித்து விட்டேன். பல கோயில்களில் இன்றும் நிர்வாகிகளே கொள்ளையடிக்கின்றனர், ஊழல் செய்கின்றனர். பணத்தை நகைகளைச் சூறையாடுகின்றனர். உதாரணத்துக்கு, அப்படியான தமிழ்நாட்டுப் பெரிய கோயில்களில் ஒன்றில், ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் சிலையை உடைத்த, தலிபான் மதவெறியர்கள் சிலர் கருவறைக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, காவலர்களையும் கொன்று, நகைகளையும் கொள்ளையடித்து, கோயில் சிலையும் தகர்த்து விட்டுச் செல்லும் போது, தமிழ்ப்படங்களில் வரும் போலீஸ் போல கடைசி நேரத்தில், வந்த காவல் துறையினர் ஒரு சில தலிபான்களைக் கைப்பற்றி அவர்களுக்கெதிராக வழக்கு நடத்தினால், அவர்களின் சார்பில் நீங்கள் வழக்கறிஞராக நீதிமனறத்தில் வாதாடினால், ஏற்கனவே பார்ப்பனர்களாலும், நிர்வாகிகளாலும் ஊழலும், பணம் சூறையாடலும் நடந்து கொண்டிருந்த கோயிலில் தானே தலிபான்கள் நுழைந்து கொள்ளையடித்தார்கள். ஆனால் பார்ப்பான்கள் மீது இதுவரை யாரும் நீதிமனறத்தில் குற்றம் சாட்டாத படியால், அவர்களும் கொள்ளையடிக்கவில்லை என்று கருத்துக் கொள்ள வேண்டும், அதனால் தலிபான் கொள்ளையர்களும் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது அவ்வாறு நீதிபதி தீர்ப்புக் கூற வேண்டுமென வாதாடுவீர்கள் போலிருக்கிறது. இதற்கு மேலும் உங்களுக்குப் புரியாது விட்டால், அல்லது அடம் பிடித்தால், உங்களுக்குப் புரிய வைக்க என்னால் முடியாதையா? 🙂

    //ஆரியர்கள் வருகை!
    இசுலாமியர்கள் படையெடுப்பு!!///

    ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் கூட்டமாக, நாடோடிகளாக, இடம்பெயர்ந்து வந்தார்கள். ஆனால் இசுலாமியர்கள் (துலுக்கர்கள்) கிறித்தவர்களின் Constantinople ஐக் கைப்பற்றி, அந்த நாட்டை இஸ்லாமிய மயமாக்கி விட்டு நாடு பிடிக்கவும், நாட்டைக் கொள்ளையடிக்கவும் இந்தியா என்று இன்று அழைக்கபடும் இந்துக்களின் தேசத்துக்கு ‘படையெடுத்து’ வந்தார்கள். இதற்குக் கூடவா வேறுபாடு தெரியவில்லை. 🙂

  20. ராமர் கோவில் என்று பாபர் மசூதியை வைத்து ஆட்சி பிடித்து இந்தியாவையே விழுங்கி ஏப்பம் விட காத்திருக்கும் ஆர் எஸ் எஸ் மதவெறி கும்பலின் ஒருவன் தான் தாடி கேடி மோடி.எனவே இந்த கட்டுரை இந்த ஆட்சியை புரிந்து எதிர்த்து போராட இலகுவாக இருக்கும் என நம்புகிறேன்.

  21. பாபர் மசூதியை சுற்றி இருந்த புதர்களில் பெருகிய பாம்புகளை விரட்டத்தான் அம்மசூதியை இடித்தார்களே தவிர, அதில் மத நோக்கம் ஒன்றுமில்லை என கி பி 2714 இல் வெளியான தமது புத்தகத்தில் பேராசிரியர் தர்க்கப்புலி தந்திவர்மன் கூறுகிறார்!

  22. வியாசன் அவர்களுக்கு

    ஆரியர் வருகை!-இசுலாமியர் (துலுக்கர்) படையெடுப்பு தொடர்பாக

    \\ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் கூட்டமாக, நாடோடிகளாக, இடம்பெயர்ந்து வந்தார்கள். ஆனால் இசுலாமியர்கள் (துலுக்கர்கள்) கிறித்தவர்களின் Constantinople ஐக் கைப்பற்றி, அந்த நாட்டை இஸ்லாமிய மயமாக்கி விட்டு நாடு பிடிக்கவும், நாட்டைக் கொள்ளையடிக்கவும் இந்தியா என்று இன்று அழைக்கபடும் இந்துக்களின் தேசத்துக்கு ‘படையெடுத்து’ வந்தார்கள். இதற்குக் கூடவா வேறுபாடு தெரியவில்லை.\\

    ஆரியர்கள் நாடோடிகளாக இடம்பெயர்ந்து இந்தியாவை பார்ப்பனீயமாக்கலாம். அதை இங்குள்ள அடிமைகளும் தெள்ளவாரிகளும் இந்துக்கள் என்று பட்டியில் அடைப்பதே கடைந்தெடுத்த காவாளித்தனம். இந்த அவலமே அசிங்கமாக நாறுகிறது. இதில் இசுலாமியர்கள் இந்தியாவை இசுலாமிய மயமாக்கினார்களாக்கும்!!! இரண்டு காவாளிகளையும் கண்டிப்பதில் என்ன தயக்கம் வியாசன்?

    அரிச்சந்திரன் பாதியிலே பறையானான். நாங்களோ ஆதியிலிருந்தே பறையர்கள். சுடுகாட்டுச்சாம்பலை அள்ளிப் பூசிய சுடலைமாடனை மடப்பள்ளி சாம்பலைப் பூசி ஈஸ்வரனாக்கிய பார்ப்பனீயத்தை கண்டிக்க துப்பில்லாதவர்களெல்லாம் இந்து தேசத்தைப் பற்றி பேசுகிறார்கள். சுந்தர மூர்த்தி நாயனார் சும்மாவா பாடினார். ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியார்’ அடிமைத்தனத்திற்கும் அற்பத்தனத்திற்கும் ஏதாவது ஸ்மைலி உண்டா? இருந்தால் இங்கு போட்டுக்கொள்ளுங்கள்.

    மனு போன்ற ஆட்கள் தனது இந்து சமூகத்தினரை வேசிமகன் என்று சொல்கிற பொழுது வியாசன் போன்றவர்கள் துலுக்கர் என்று இசுலாமியர்களை கொஞ்சம் மேன்மையாக அழைப்பதை பாரட்டத்தான் வேண்டும்!!

    • திரு.தென்றல்,

      //இரண்டு காவாளிகளையும் கண்டிப்பதில் என்ன தயக்கம் வியாசன்?///

      நான் பார்ப்பனீயத்தை ஆதரிக்கிறேன் என்று எப்பொழுதாவது கூறினேனா. நீங்களாகவே எதையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? பார்ப்பனீயத்தை ஆதரிக்கும் பார்ப்பனர்களுடன் பேசும் போது இங்கு மட்டுமல்ல, வேறு இணையத்தளங்களிலும் அவர்களை எதிர்க்கிறேன். வேடிக்கை என்னவென்றால் பார்ப்பனர்களுடன் பேசும்போது நான் முஸ்லீம்களின் சார்பாக பேசுவதாகக் கூறி என்னைத் ‘துலுக்கக்கூலி’ என்கிறார்கள். உண்மை என்னவென்றால் இந்துத்துவா மட்டுமல்ல இஸ்லாமியத்துவாவும் எதிர்க்கப்பட வேண்டுமென்பது தான் எனது கருத்து. உண்மைகளை மறைத்து அல்லது திரித்து, முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த அல்லது தாஜா பண்ண வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கிறதோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு அப்படி ஒரு கட்டாயமுமில்லை. என்னைப் பொறுத்த வரையில் வரலாறு என்பது முடிந்த விடயம், வரலாற்று உண்மைகளை மறுக்காமல், மறைக்காமல் அபப்டியே ஏற்றுக் கொண்டு, வரலாற்றுச் சம்பவங்களுக்குப் பழி வாங்கத் துடிக்காமல், சகிப்புத் தன்மையுடன் ஒற்றுமையாக வாழ்வது தான் ஒரே வழி.

      இக்காலத்தில் ராஜ ராஜ சோழனை வசை பாடுவது எவ்வளவு அபத்தமோ அதே போன்றது தான் திப்பு சுல்தானையோ அல்லது கஜினி முகம்மதுவை இழிவு படுத்துவதும். ஆனால் ராஜ ராஜ சோழனை இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் இட்டுக் கட்டி, நேரில் இருந்து பார்த்தவர்கள் போல இழிவு படுத்துகிறவர்கள், ராஜ ராஜ சோழனுடன் ஒப்பிடும் போது மிகவும் மோசமான கொடுமைகளை இந்தியநாட்டு மக்களுக்குச் செய்த திப்பு சுல்தானையும், கஜினி முகம்மதையும் கடவுளாக்குவதைத் தான் என்னால் சகிக்க முடியவில்லை.

      //அரிச்சந்திரன் பாதியிலே பறையானான். நாங்களோ ஆதியிலிருந்தே பறையர்கள். சுடுகாட்டுச்சாம்பலை அள்ளிப் பூசிய சுடலைமாடனை மடப்பள்ளி சாம்பலைப் பூசி ஈஸ்வரனாக்கிய பார்ப்பனீயத்தை கண்டிக்க துப்பில்லாதவர்களெல்லாம் இந்து தேசத்தைப் பற்றி பேசுகிறார்கள்.///

      சிவன் தமிழர்களின் கடவுள், அவன் இன்றைக்கும் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய சுடலைமாடன் தான். ஆனால் பார்ப்பனர்களும் அவனை இரவல் வாங்கி ஈஸ்வரனாக்கி விட்டார்கள் என்பதற்காக, தமிழர்களின் சுடலை மாடனை அதாவது சிவனை அவர்களிடம் கொடுத்து விட்டு ஓடி விட வேண்டிய அவசியமில்லை. அதைத் தான் உங்களைப் போன்ற தமிழ்நாட்டு மக்கள் செய்கின்றனர். பார்ப்பனீயத்திலும், பார்ப்பனர்களிலுமுள்ள காழ்ப்புணர்வால், தமிழர்களின், எமது முன்னோர்களின் தெய்வங்களையும், கோயில்களையும் எனக்கென்ன போச்சென்று பார்ப்பனர்களிடம் கோட்டை விட்டு விட்டு, இப்பொழுது வெளியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்கின்றீர்கள். அதாவது எங்களுக்குச் சொந்தமானவற்றை, எங்களின் சொத்துக்களை நாங்கள் மதிக்காது விட்டால், அது எப்படியோ எங்களின் கைகளை விட்டுப் போய் விடும்.

      //சுந்தர மூர்த்தி நாயனார் சும்மாவா பாடினார். ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியார்’ அடிமைத்தனத்திற்கும் அற்பத்தனத்திற்கும் ஏதாவது ஸ்மைலி உண்டா? ///

      “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்றால், எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க தமிழ்நாட்டுக்கு ஓடி வந்த சிவனடியார்களாகிய தில்லைவாழ் அந்தணர்களுக்கு சோறு போட்டு, அதாவது அவர்களை ஆதரிக்கும், (தம்அடியார) தமிழர்களுக்கும் நான் அடிமைபப்ட்டவன், கடமைப்பட்டவன் என்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார். அதாவது சிவனடியார்களுக்குத் தொண்டு செய்யும் அடியார்களுக்கு, அடியேன் என்றும் கருத்துக் கொள்ளலாம். 🙂

      //வியாசன் போன்றவர்கள் துலுக்கர் என்று இசுலாமியர்களை கொஞ்சம் மேன்மையாக அழைப்பதை பாரட்டத்தான் வேண்டும்///

      நான் துலுக்கன் என்றது கஜினி முகம்மதுவையே தவிர தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தும் தமிழ்நாட்டு முஸ்லீம்களை அல்ல கஜினி முகம்மது ஒரு துலுக்கன் அல்லாமல், அதாவது அவரது Ancestry Turkish அல்லாமல் வேறு என்ன?

    • // சுடுகாட்டுச்சாம்பலை அள்ளிப் பூசிய சுடலைமாடனை மடப்பள்ளி சாம்பலைப் பூசி ஈஸ்வரனாக்கி

      “காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்” என்பது ஏழாம், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தப் பெருமான் வாக்கு. சுடலை மாடன் வழிபாடு எப்போது தோன்றியது? ஆதாரத்தோடு கூறுங்கள்.

      • வெங்கேடசன் அவர்களுக்கு,

        அப்படியானால் முதலில் என் கேள்விக்கு விடையிறுக்க வேண்டும். ஏன் பார்ப்பனீயம் சம்பந்தப்பட்ட விடயங்களில் மட்டும் அதிக சென்சிடிவ்வாக இருக்கீறிர்கள்?

        பதிலுக்கு வருவோம்; சுடலை நாட்டார் வழிபாட்டுத் தெய்வம். நாட்டார் வழிபாடு குறித்த கால அளவுக்கு என்னிடம் ஆதாரம் இல்லை. ஆனால் சுடலை இந்துமதக் கடவுள் அல்ல. மேலும் சம்பந்தனோடு சம்பந்தபட்டதல்ல. பெரும்பாலான நாட்டுப்புற தெய்வங்கள் உழைப்போடு தொடர்புடையவை. ஆதாரம் காட்டுங்கள் என்று கேட்டிருக்கிறீர்கள்; இதற்கு நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். திருநெல்வேலியில் மத்யானப் பறையர்கள் என்ற தீட்டுச் சடங்கை சைவ சிவ ஆலய பார்ப்பனர்கள் செய்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது எப்படிச் சாத்தியம்? இது எப்படி இந்து மதத்திற்குள் உள்வாங்கப்பட்டது? தொல்லியல் ஆய்வாளார் தொ.பரமசிவனின் அறியப்படாத தமிழகத்தை வாசியுங்கள். சம்பந்தன் எடுத்த எடுப்பிலேயே அடிபட்டுபோவார். அவரது அனைத்து ஆய்வுகளுக்கும் முறையான பரப்புரை நோக்கம் மற்றும் Bibiliography உண்டு.

      • // சுடுகாட்டுச்சாம்பலை அள்ளிப் பூசிய சுடலைமாடனை மடப்பள்ளி சாம்பலைப் பூசி ஈஸ்வரனாக்கி

        இந்த கூற்றுக்குத்தான் ஆதாரம் கேட்டேன்! சிவன் சுடுகாட்டு சாம்பலை பூசுபவன் என்ற கோட்பாட்டை மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் காண்கிறோம். இந்த கோட்பாடு சுடலை மாடன் வழிபாட்டு முறையில் இருந்து உள்வாங்கப்பட்டது எனச் சொன்னால், சுடலை மாடன் வழிபாட்டு முறை எப்போது தோன்றியது என்ற கேள்வி எழுகிறது.

        // சுடலை இந்துமதக் கடவுள் அல்ல

        இந்து மதம் என்பது வரையறை செய்ய முடியாத நிலையில் சுடலைமாடன் இந்துமதத் கடவுளா என்ற கேள்விக்கு விடை காண்பது கடினம். சுடலை மாடனை வழிபடும் ஒருவர் தன்னை ‘இந்து’ என அழைத்துக் கொண்டால் இந்துவாகிறார்; அப்படி அழைத்துக்கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை என்றால் அவர் இந்து இல்லை. இதுவே என் புரிதல்.

        இந்து மதத்துக்குள் பல விஷயங்கள் உள்வாங்கப்பட்டன என்பதை ஏற்கிறேன். வேதத்தில் குறிப்பிடப் படாத கிருஷ்ணர், பின்பு உள்ளே வருகிறார். வேதத்தில் சிறிய அளவே பேசப்படும் ருத்ரனும், விஷ்ணுவும் பின்னாளில் முக்கிய சாமிகள் ஆகிறார்கள். இந்த நாட்டில் பிறந்த ஒரு(?) மதம், அந்நாட்டில் காணப்படும் மற்ற வழக்கங்களை, முறைகளை தன்னுள் இழுத்துக் கொள்வதை நான் தவறென்று கூற மாட்டேன்.

        // ஏன் பார்ப்பனீயம் சம்பந்தப்பட்ட விடயங்களில் மட்டும் அதிக சென்சிடிவ்வாக இருக்கீறிர்கள்?

        பார்ப்பனர்களை கண்ட மேனிக்கு திட்டுவதால் தான். உதாரணமாக: // சுடுகாட்டுச்சாம்பலை அள்ளிப் பூசிய சுடலைமாடனை மடப்பள்ளி சாம்பலைப் பூசி ஈஸ்வரனாக்கிய பார்ப்பனீயத்தை // நீங்கள் கூட “சுடலைமாடன் தான் ஈசன் ஆனான்” என்பதற்கு ஆதாரம் ஏதும் கூறாமல் பொதுவாக பழி போட்டு விட்டீர்கள். இஸ்லாமிய மதவெறி என வரும்போது, கஜினி முகமது, தாலிபான் என குறிப்பிட்டு பேசுகிறோம். அப்போது கூட கஜினி முகமது மதவெறியால் சோமநாதர் ஆலயத்தை தாக்கினாரா, அல்லது பணவெறியாலா என்ற ஆய்வு கூட செய்கிறோம். மறுபுறம், பார்ப்பனர்கள் என வரும்போது ஒட்டுமொத்தமாக கம்பு கொண்டு அடிக்கிறார்கள். எந்த பார்ப்பனர், எப்போது என குறிப்பிட்டு பேச வேண்டும் அல்லவா? உதாரணமாக, பின்னூட்டம் 20: // மற்றபடி தவணை முறையில் கொள்ளை அடித்த கதை எல்லாம் பார்பன கைங்கரியங்கள் தவிர வேறோன்றும்கிடையாது // எந்தப் பார்ப்பனர் எப்போது தவணை முறையில் கொள்ளை அடித்ததை பற்றி இங்கே கூறுகிறார்?

        // அரிச்சந்திரன் பாதியிலே பறையானான். நாங்களோ ஆதியிலிருந்தே பறையர்கள்

        தென்றல், நீங்கள் ஏன் இப்படி ஜாதிப் பெருமை பேசுகிறீர்கள்?

        • வெங்கேடசன் அவர்களுக்கு,

          \\இந்து மதம் என்பது வரையறை செய்ய முடியாத நிலையில் சுடலைமாடன் இந்துமதத் கடவுளா என்ற கேள்விக்கு விடை காண்பது கடினம்.\\

          கடினம் அல்ல. எளிது. அதற்காகத்தான் விவாதத்தை ஒரேயடியாக முடிக்காமால் சிவனை வணங்குகிற திருநெல்வேலி சைவ பார்ப்பனர்கள் ஒரு நாளில் மதியம் மட்டும் தங்களை தீட்டானவர்கள் என்று கருதுவது ஏன்? என்ற கேள்வியை வைத்தேன். மத்யான பறையர்கள் என்று அழைத்துக்கொள்வது ஏன்? பதில் தேடினால் சில விசயங்கள் பிடிபடுமில்லையா? பதில் தேடுவதில் இது ஒரு வகை.

          இதே வியாசர் மற்றும் மர்மயோகியிடம் முன்னொரு பதிவில் தமிழ் சைவம் உள்வாங்கியிருப்பது ஸ்ரீகண்டரின் பாசுபத சைவமே என்று விவாதத்தை வைத்திருக்கிறேன். தமிழகத்தில் சிவ வழிபாடு எந்தவிதத்தில் ஸ்ரீகண்டரோடு வேறுபடுகிறது என்ற கேள்விக்கு ஏன் இங்குள்ள சைவர்கள் பதில்கூற மறுக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அதற்காகத்தான் உங்களை தொ.பரமசிவனின் அனைத்து தொல்லியல் ஆய்வுகளையும் வாசிக்கச் சொல்கிறேன். அது உங்களுக்கு அதிகாரத்தையும் வழிபாட்டையும் தனியாக பிரித்துகாட்டும்.

          சான்றாக அவரது வாதத்தை கவனியுங்கள் “சுடலைமாட வழிபாடு திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்திலும், கருப்பு சாமி வழிபாடு மதுரை, இராமநாதபுர மாவட்டத்திலும் இருக்கிறது. திருச்சி, அரியலூரில் காத்தவராயன் வழி பாடும், கோவை மாவட்டத்தில் அண்ணன்மார் சாமி வழி பாடும், வடக்கே தென்ஆற்காடு மாவட்டத்தில் பொன்னியம்மன் வழிபாட்டு முறையும் இருக்கின்றது.”

          மீதியை நீங்களே படித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்; அப்பொழுது ஈஸ்வரன் எப்பொழுது வந்தான் என்பதைவிட எப்படி வந்தான் என்ற கேள்விக்கு பதில் சொல்வது எளிதல்லவா?

          நம்பிக்கை என்பது வேறு. அதிகாரம் என்பது வேறு. சுடலைமாடன் உழைக்கும் மக்களின் உழைப்போடு இணைந்த குறியீடு. ஈஷ்வர் எதேச்சதிகாரத்தின் குறியீடு. அதனால் தான் இந்து மதத்தை மதங்களில் சேர்ப்பதில்லை. அது வெறும் அதிகாரம், கடமைகள் மற்றும் சட்டங்கள் மட்டுமே சார்ந்த இயக்கம்.

          இதன் அடிப்படையில் அனைத்தும் இந்து மதம் என்பதை நான் ஏற்கவில்லை.

          ———————————-

          \\வேதத்தில் குறிப்பிடப் படாத கிருஷ்ணர், பின்பு உள்ளே வருகிறார். வேதத்தில் சிறிய அளவே பேசப்படும் ருத்ரனும், விஷ்ணுவும் பின்னாளில் முக்கிய சாமிகள் ஆகிறார்கள்.\\

          ஏன் விஷ்ணுவும் ருத்ரனும் முக்கிய சாமிகள் என்று யோசியுங்கள். இந்து மதத்தில் விஷ்ணு சத்ரியக் கடவுள். இந்து தர்மத்தைக்காக்க அவனிடத்திலே ஆயுதங்கள் உண்டு. கிருஷ்ணன் அப்படியல்ல. அவன் சூத்திரன். இப்படிச்சொன்னால் சாதிவெறியன் என்று சொல்லக்கூடாது. இந்துமதம் உழைப்பைப் பிரிக்கவில்லை; உழைப்பாளர்களையும் பிரித்தது (Definition of Problem) என்பதன் பிண்ணனியில் இது போன்ற ஒவ்வொரு சாதிக்கும் கலாச்சார கடவுள்கள் (Methods and Practices) தேவை.

          இறை நம்பிக்கை உள்ளவரும் ஏதேச்சதிகாரத்தை இனங்கண்டு ஒதுக்குவதில் தடை ஏதும் இல்லை என்று கருதுகிறேன்.

          ————————————–

          \\\பார்ப்பனர்களை கண்ட மேனிக்கு திட்டுவதால் தான். நீங்கள் கூட “சுடலைமாடன் தான் ஈசன் ஆனான்” என்பதற்கு ஆதாரம் ஏதும் கூறாமல் பொதுவாக பழி போட்டு விட்டீர்கள். பார்ப்பனர்கள் என வரும்போது ஒட்டுமொத்தமாக கம்பு கொண்டு அடிக்கிறார்கள். எந்த பார்ப்பனர், எப்போது என குறிப்பிட்டு பேச வேண்டும் அல்லவா?\\

          பார்ப்பனீயம் என்று சொல்கிற பொழுது பார்ப்பனர்கள் மட்டும் வருவதில்லை. சொல்லப்போனால் தமிழ் சைவர்கள் பார்ப்பனீயத்தை தலைமை தாங்கி ஏற்று சாதி வெறியர்களாக தன்னை வெளிகாட்டியிருக்கிறார்கள் (மறக்காமல் இதை வாசித்துவிடுங்கள் http://kalaiy.blogspot.com/2014/04/blog-post_29.html).

          ஒவ்வொருவனுக்கும் அவனுடைய சாதி பெரியதாக இருக்கிறது. இவையனைத்திற்கும் தலைமையேற்றது யார்? இந்து மதத்தை பார்ப்பனீய மதம் என்று சொல்கிற பொழுது அங்கு அம்பிகள் மற்றும் சாரிகள் மட்டும் இருப்பதில்லை. பின்னூட்டம் 10மற்றும் 1.2 வைக்கிற அருவெறுப்புகளும் அடக்கம். புரட்சிகர அமைப்புகள் வர்க்கப்பார்வையை கோருகின்றன. தலித்தியம் போன்ற சீர்திருத்தங்களையும் தாண்டி சிந்திக்க வேண்டும். இன்னும் பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் கொள்வினை கொடுப்பினை கிடையாது என்பதற்கு எது காரணம்?. ஒரு இந்துவிற்கு சமூகம் என்பது தன் சாதி தான் என்று அம்பேத்கர் ஏன் கூறினார். இந்து மதம் பிழைத்திருப்பதற்கான நியதியே பார்ப்பனீயம் தான் என்கிற பொழுது அதை சமசரமற்று கண்டிக்கத்தான் வேண்டும். காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலில் வெட்டி சாய்க்கப்பட்ட ஆடிட்டர் சங்கர்ராமனுக்கு இது தெரியும். உங்களுக்குத்தான் தெரியவில்லை.

          ———————————-

          \\தென்றல், நீங்கள் ஏன் இப்படி ஜாதிப் பெருமை பேசுகிறீர்கள்?\\

          ஆதியிலிருந்தே பறையர்கள் என்பது சாதிப்பெருமையல்ல. இந்துமதத்தின் இழிநிலை மற்றும் இதன் கொடூரம். அவ்வரிகள் புரட்சிகர அமைப்புகளின் “வெட்டப்பட்டு செத்தோமடா மேலவளவிலே” என்ற பாடலில் வரும் வரிகள். நேரமிருந்தால் கேட்டுப்பாருங்கள்; 3.வெட்டுப்பட்டு செத்தோமடா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா?)

          (http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1681:3aanda&catid=55:songs&Itemid=111)

          • // ஈஷ்வர் எதேச்சதிகாரத்தின் குறியீடு

            சாயங்கால வேளையில் ஈசன் கோவிலுக்கு சென்று இரண்டு கும்பிடு போட்டுவிட்டு, நாலு முறை சுற்றி விட்டு, சுண்டல் ஏதாவது கிடைத்தால் தின்றுவிட்டு, சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு வீடு வந்து சேர்பவன் என்ன எதேச்சதிகாரம் செய்கிறான் என கூற முடியுமா? ஒரு நட்ட கல்லை சுடலை மாடனென வணங்க இருக்கும் உரிமை தானே, இன்னொரு நட்ட கல்லை ஈசனென வணங்குபவனுக்கும் இருக்கிறது?

            • வெங்கேடசன் அவர்களுக்கு,

              சுடலை Vs ஈஸ்வர்

              கோயில் என்பதே அதிகாரமையத்தின் குறியீடு. உதாரணமாக மதுரை ஆதினத்திற்கு அடிக்கடி ஈசன் தான் கனவில் வருகிறான். சுடலை அல்ல. ஏனெனில் இன்றைய மதிப்பில் ஆதினத்தின் சொத்து 5000 கோடிகளுக்கும் மேல். அதனால் தான் ‘சிவன் சொத்து குல நாசம்’ என்று பயபீதி கூட்டுகிறார்கள். சுடலையிடம் சுண்டக்காய் கூட கிடையாது.

              ஈசனுக்கும் பக்தனுக்கும் இடையில் ஆகம விதிகள் உண்டு. சுடலைக்கும் சுருளிக்கும் இடையில் ஆய் போகும் பீக்காடு தான் உண்டு.

              சுடலைக்கு என்று நைவேத்யங்கள் கிடையாது. ஈசனை வில்வத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

              ஈசன் தஞ்சை பெரிய கோயிலில் பாசுபத வடிவத்தில் நிற்கிறான். அவனுக்கு வாமனம், ஈசானம், சதாசிவம் உட்பட ஐம்பெரும் மூர்த்தங்கள் உண்டு. சுடலை புன்செய் நிலங்களில் மொட்டை வெயிலில் நிற்கிறான்.

              —————————

              ஆக ஈசன் அதிகாரவர்க்கத்தின் ஏவலாளி என்று என்றைக்கு சுண்டல் திங்கிற ஏழைபாளைகளுக்கு தெரிகிறதோ அன்றுதான் சுடலையையும் ஈசனையும் ஒப்பிட முடியும். ஏனெனில் முதல் வேலையாக ஈசனிடம் இருக்கிற உழைக்காமல் சேர்த்த சொத்துக்களை பக்தர்கள் பறிமுதல் செய்வார்கள்.

              சிக்கலெண் தீர்வுகள் இரட்டையாகத்தான் நிகழும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஈசன் சுடலை போன்ற வர்க்க மூலங்கள் எங்கும் என்றைக்கும் ஒன்றாக இருந்ததில்லை.

          • // அது வெறும் அதிகாரம், கடமைகள் மற்றும் சட்டங்கள் மட்டுமே சார்ந்த இயக்கம்.

            இந்த வர்ணாஸ்ரம, ஜாதீய சட்டங்கள் மட்டுமே இந்துமதம் என்றால், இந்த வேரின் மீது கடந்த இரு நூறாண்டுகளாக வெந்நீர் ஊற்றும் போது மரம் சாய்ந்திருக்க வேண்டுமல்லவா? அப்படி நடந்ததாக தெரியவில்லையே. திருப்பதியில் தரிசனம் பத்து மணிநேர வரிசை. ஸ்ரீரங்கம், சமயபுரம் என மற்ற பிரபல கோவில்களிலும் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கிறது.

            திருப்பதியில் மொட்டை போடுபவனோ, கபாலீஸ்வரர் கோவிலில் தேர் வடம் பிடிப்பவனோ, திருப்பரங்குன்றத்தில் காவடி எடுப்பவனோ, பிள்ளையாருக்கு சூறை விடுபவனோ, அம்மன் கோவிலில் தீமிதிப்பவனோ, திருநள்ளாறில் எள் தீபம் ஏற்றுபவனோ, மார்கழி மாத பஜனை செய்பவனோ, தேவாரம் ஒதுபவனோ, வைகுண்ட ஏகாதசியில் பரமபதம் ஆடி முழிதிருப்பவனோ, அல்லது இவை எல்லாவற்றையும் செய்பவனோ மனு நீதியையும், வர்ணாஸ்ரமத்தையும், நீங்கள் சொன்ன சட்ட திட்டங்களை நிலை நிறுத்தத் தான் இவ்வாறெல்லாம் செய்கிறானா? அல்லது தனது வேண்டுதல், மன நிம்மதி போன்றவற்றிற்காகவா?

            இந்து மதத்திற்கு வர்ணாச்ரமம் போன்றவற்றையும் மீறி வெறும் வழிபாட்டு நோக்கம் கொண்ட மற்றொரு பக்கமும் உண்டென்றே நான் கருதுகிறேன். இந்த வழிபாட்டு உரிமையை மறுக்க உங்களுக்கு உரிமை இல்லை.

            ———————————-

            கஜினி முகமது பற்றிய கட்டுரை மீது நாம் எதை இப்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு தெளிவில்லை! “சுடலை மாடன் வழிபாட்டில் இருந்துதான் ஈசனை சுடுகாட்டோடு இணைக்கும் வழக்கம் பிறந்தது” என நீங்கள் கூறிய கூற்றுக்கு ஆதாரம் கேட்டேன். அந்த விவாதம் எங்கோ சென்று விட்டது.

            • வெங்கேடசன் அவர்களுக்கு,

              நீங்கள் கூறுகிற திருப்பதியில் மொட்டை போடுபவனோ, கபாலீஸ்வரர் கோவிலில் தேர் வடம் பிடிப்பவனோ, திருப்பரங்குன்றத்தில் காவடி எடுப்பவனோ, பிள்ளையாருக்கு சூறை விடுபவனோ, அம்மன் கோவிலில் தீமிதிப்பவனோ, திருநள்ளாறில் எள் தீபம் ஏற்றுபவனோ, மார்கழி மாத பஜனை செய்பவனோ, தேவாரம் ஒதுபவனோ, வைகுண்ட ஏகாதசியில் பரமபதம் ஆடி முழிதிருப்பவனோ மதங்களின் பேரில் உள்ள பிரியத்தில் செய்யவில்லை. அதைச் செய்கிற ஒவ்வொருவருக்கும் தெளிவான கோரிக்கைகள் உண்டு. அவர்கள் வைக்கிற கோரிக்கைகளுக்கு தீர்வு சொல்கிற பொழுது இதுபோன்ற மத அமைப்புகள் உதிரும்.

              மத நம்பிக்கை சார்ந்த விடயங்களை, அதன் அதிகார மையத்தை பக்தர்கள் செய்கிற பார்வையிலிருந்து மதிப்பிடுகிறீர்கள். அவர்களை இயக்குகிற அதிகாரமையத்தின் மீது உங்கள் பார்வையைத் திருப்புங்கள். ஒவ்வொரு மதத்தின் அதிகார வர்க்கமும் கோடிக்கணக்கான சொத்துக்களை மதங்களின் பெயரில் பாதுகாக்கின்றன. இங்கு வக்பு வாரியும் திருச்சபை மடங்கள் மற்றும் ஆதினங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதுதான் நமக்குப் பிரச்சனையே தவிர வழிபாட்டு உரிமைகள் அல்ல.

              ———-

              \\கஜினி முகமது பற்றிய கட்டுரை மீது நாம் எதை இப்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு தெளிவில்லை! “சுடலை மாடன் வழிபாட்டில் இருந்துதான் ஈசனை சுடுகாட்டோடு இணைக்கும் வழக்கம் பிறந்தது” என நீங்கள் கூறிய கூற்றுக்கு ஆதாரம் கேட்டேன். அந்த விவாதம் எங்கோ சென்று விட்டது.\\

              வியாசன் தன்னை சிவபக்தராக காட்டிக்கொண்டு இங்குவந்து இசுலாமிய மதவெறியை கக்குகிறார். ஆனால் இந்துயிசமே தன்பகுதி மக்களை கொடூரமாகச் சுரண்டுவதை திட்டமிட்டு புறக்கணிக்கிறார். இசுலாமியர்கள் இசுலாமியமயமாக்கினார் என்பது உண்மையென்றால் சுடலை பார்ப்பனீயமயமாக்கப்பட்டதையும் பரிசீலிக்க வேண்டுமில்லையா? இந்த சமூகம் இருவேறு பாசிசத்தால் பாதிக்கப்படுகிற பொழுது ஒன்றுக்கு மட்டும் அடைவு கொடுப்பது இவர்களின் இந்துத்துவ பிரச்சாரத்திற்கு பலியானதைத்தானே காட்டுகிறது?

              கட்டுரை இதன் பார்வையை ஆதாரங்களுடன் முன்வைக்கிறது. இதன் நோக்கம் மதவெறியின் திட்டமிட்ட நுண்பிராச்சாரங்களை இனங்கண்டு அம்பலப்படுத்துவது. ஆனால் பாருங்கள் எத்துணை பேர் தங்கள் பார்வையை விமர்சனத்திற்கு உட்படுத்தினார்கள்? பூனா கொலைக்கு எது ஆதாரம்?

    • காலத்தால் இன்னும் பின்னே சென்றால், மூன்றாம்-நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக கருதப்படும் காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் இருந்து சாம்பிள் பாடல் கீழே:

      பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற் பேய்
      பருந்தொடு, கூகை, பகண்டை , ஆந்தை
      குட்டியிட, முட்டை, கூகைப் பேய்கள்
      குறுநரி சென்றணங்காடு காட்டில்
      பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட
      பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே
      அட்டமேபாய நின்றாடும் எங்கள்
      அப்பனிடம் திருஆலங்காடே.

      சுடலை மாடன் வழிபாடு எப்போது தோன்றியது?

      சைவம் x வைணவம், வடகலை x தென்கலை என்பது போல ஈசன் x சுடலை மாடன் என வெறி கிளப்புவது அல்ல எனது நோக்கம். “அவரவர் தாந்தாம் அறிந்தவாரேத்தி” என்பதே எனக்கு உவப்பான கொள்கை. எனினும் சும்மா ஆதாரமின்றி சுடலை மாடன் வழிபாட்டில் இருந்துதான் ஈசனை சுடுகாட்டோடு இணைக்கும் வழக்கம் வந்தது என சும்மா அடிச்சு விடுவதை ஏற்கமுடியாது.

  23. வினவு……..

    இசுலாமியர்களுக்கு வால் பிடிப்பது, தக்கியா அடிப்பது.. என்றாகி விட்டது அதை கொஞ்சம் மனசாட்சியுடன் செய்ய கூடாதா..

    //கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் சாளுக்கியர்கள் மீது படையெடுத்தான். இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ, இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ குறிப்பிடாத வரலாற்றுப் பாடநூல் கஜினி முகமது எனும் ‘இசுலாமிய’ மன்னன் ‘இந்தியா’ மீது படையெடுத்ததாகக் குறிப்பிடுவதை ஒப்பு நோக்க வேண்டும்.//

    ராஜேந்திர சோழனுடன் கஜினி முகம்மதுவை ஒப்பிட்டு பேசுவதில் இருந்தே வரலாறு பற்றிய உங்களின் புரிதல் நன்றாக தெரிகிறது. ராஜேந்திர சோழன் தன்னுடைய சோழ சாம்ராஜ்ஜியத்தை,ஆட்சியை கங்கை வரை விஸ்தரிப்பு செய்வதற்காக படை எடுத்தான். ஆனால், கஜினி முஹம்மது படை எடுத்ததோ இந்தியாவின் செல்வதை கொள்ளையிடுவதற்க்காக மட்டுமே. மற்ற படி முகலாயர்களை போன்று தங்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இந்தியாவை கொண்டு வர வேண்டும் என்கிற மன்னனுக்கே உண்டான ஆசை கூட அவனிடம் கிடையாது. ராஜேந்திர சோழன் தான் படை எடுத்து சென்ற எந்த நாட்டிலும் உள்ள கோவில்களை தரை மட்டமாக்கி கொள்ளை அடித்ததாக எந்த வரலாறுமில்லை. சோமநாதபுர கோவில் கொள்ளையில் மட்டும் இறந்து போன இந்துக்களின் எண்ணிக்கை 50,000 வரை.

    //ஆனால் கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள் என்பதும், அதேபோல கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர் என்பதும், ‘இந்துக்’ கோயிலைக் கொள்ளையடித்த அந்த ‘இசுலாமிய’ மன்னன்தனது நாட்டின் ‘இந்து’ வர்த்தகர்களைக் கொள்ளையடிக்கவில்லை என்பதும் நமது பாடநூல்கள் குறிப்பிடாத உணமை.//

    இதற்கெல்லாம் சரித்திர பூர்வமான, விஞ்ஞான ரீதியான சான்றுகள் ஏதுமில்லை.. அனைத்தும் கஜினியை நல்லவனாக்கி காட்ட வேண்டும் என்ற மார்க்சிய ஆய்வாளர்களின் நப்பாசையின் விளைவு தான் இது.
    ஆனால், கஜினி முஹம்மது என்னும் இசுலாமிய அடிபடிவாத கொள்ளையன் போட்ட வெறியாட்டத்திற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

    ஆதாரம்:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81

    தற்கால பாக்கிஸ்தானிலும், ஆப்கானிசுதானிலும், இசுலாமிய மக்கள் இன்று வரை, கசினி முகமதுவை மாபெரும் வெற்றி வீரனாக கொண்டாடுகிறார்கள்.

    பாகிசுதான் நாடு, தான் தயாரித்த ஏவுகணைக்கு ’கசினி’ எனும் பெயர் சூட்டி, கசினிமுகமதுவின் நினைவை பாராட்டினர். மேலும் பாகிசுதான் நாட்டு இராணுவம், தனது ஒரு படைப் பிரிவுக்கு ‘கசினி’ என்ற பெயர் சூட்டி கசினி முகமதை பெருமைப்படுத்தினர்.

    ஆதாரம்:http://en.wikipedia.org/wiki/Ghaznavi_Missile

    வினவு, இனியாவது இசுலாமிய கொடுங்கோல் அரசர்களை நடுவுநிலையும் ஆராய்ச்சி அறிவும் இன்றி வியந்தோதி புகழ்ந்து தள்ளுவதை நிறுத்தி கொள்வது நலம். இல்லை என்றால் மக்கள் உங்களை புறக்கணிக்கும் நிலை வரலாம்..

    • யோவ் Rebecca Mary,
      ஏராளமான சான்றுகள் இருக்கின்றன-ன்னு சொல்லிட்டு ரெண்டே ரெண்டு அது ரெண்டுமே விக்கிபீடியா லிங்க குடுத்தா எப்புடி?

      இந்த கட்டுரை அல்பரூனியில் இருந்து ரெமிலா தாப்பர் வரை பலரின் நூல்களை ஆதாரமாக காட்டுகிறது. அது போல ஒரு ஆதாரத்தையாவது நீங்க காட்டி இந்த கட்டுரையை மறுக்கனும்.

      அதை விட்டுபுட்டு எதுக்கு இந்த ஆர்.எஸ்.எஸ் காரங்க மாதிரியே கயவாளித்தனம், மொள்ளமாரித்தனமெல்லாம் பண்றீங்க?

      கன்னி மேரிக்கு எப்படிப்பா குழந்தை பிறக்கும், இது இயற்கைக்கு விரோதமா இருக்கேன்னு கேட்டா, கேக்குறவங்களை கேனையா நினைச்சுகிட்டு பைபிளை ஆதாரமா காட்டுகிற கதையாவுள்ள இருக்கு!

  24. \\ அவர்களின் சொந்தக் கோயிலில் செல்வங்களைக் கையாடியதை (கொள்ளையடித்ததை) பாடநூலில் இணைக்கவேண்டிய தேவையில்லை,\\

    உங்களது முதல்பாராவின் கடைசி வரிகளை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். “ஆனால் அதற்கு சிலர் காட்டும் ஆதாரங்களும், உதாரணங்களும் தான் முட்டாள் தனமாக இருக்கின்றன.”

    எந்த முட்டாளாவது அவனது சொத்தையே கையாடுவானா? சுயமுரண்பாடுகளில் காவி வீச்சம் வீசுவது தற்செயலான நிகழ்வல்ல!

    ———————-

    \\“பல கோயில்களிலும், வக்பு வாரியங்களில் கூட கோடிக்கணக்கில் ஊழல்கள் நடைபெறுகின்றன, வக்பு வாரியங்களுக்குச் சொந்தமான நிலங்களும் கட்டிடங்களும் சூரையாடபப்டுகினறன என்ற செய்திகளும் முறைப்பாடுகளையும் வெறும் கூகிள் தேடுதலிலேயே காணக் கூடியதாக இருக்கிறது. அதனால் அவை எல்லாவற்றையும் கூடவா பாடநூல்களில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கிறீர்கள்.”\\

    நீங்கள் சொல்வதும் நியாயம் தான். திண்ணியத்தில் மலத்தை திணித்ததை கூடவா பாடநூல்களில் சேர்க்கமுடியும்? ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். சிவபெருமான் 3000 தீட்சிதர்களில் ஒருவர் என்று கோர்ட் அபிடவட்டே சொல்கிற பொழுது கூகுளை எதற்காக தேடிப்பார்க்க வேண்டும் வியாசன்?

    ———————————

    \\ தலிபான்களைக் கைப்பற்றி அவர்களுக்கெதிராக வழக்கு நடத்தினால், அவர்களின் சார்பில் நீங்கள் வழக்கறிஞராக நீதிமனறத்தில் வாதாடினால், ஏற்கனவே பார்ப்பனர்களாலும், நிர்வாகிகளாலும் ஊழலும், பணம் சூறையாடலும் நடந்து கொண்டிருந்த கோயிலில் தானே தலிபான்கள் நுழைந்து கொள்ளையடித்தார்கள். ஆனால் பார்ப்பான்கள் மீது இதுவரை யாரும் நீதிமனறத்தில் குற்றம் சாட்டாத படியால், அவர்களும் கொள்ளையடிக்கவில்லை என்று கருத்துக் கொள்ள வேண்டும், அதனால் தலிபான் கொள்ளையர்களும் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது அவ்வாறு நீதிபதி தீர்ப்புக் கூற வேண்டுமென வாதாடுவீர்கள் போலிருக்கிறது.\\

    தாலிபானோ பார்ப்பானோ யோக்கியனுக்கு இருட்டுல (கோயில்) என்ன வேலை?

    அவனும் தான் ரவுடி என்று கட்டுரை சொல்கிற பொழுது இரண்டுபேரும் யோக்கியன் என்று யார் சொல்லுவார்கள்? உங்களது உச்சி குடுமி மன்றம் தான் அப்படி சொல்கிறது.

    சீக்கியப் படுகொலையில் ஈடுபட்டவர்களை தண்டிக்கமுடியாத நீதிமன்றம் குஜராத் படுகொலையில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவில்லை என்று தீர்ப்பு வந்ததை கவனிக்கவில்லையா வியாசன்? அல்லது தாவூத் இப்ராகிமும் ஆர் எஸ் எஸ்ஸும் சிவ சேனாவும் பங்காளிகளாக பல குற்றச் செயல்களில் ஒன்றாக வலம் வருகிறார்கள் என்பதைத்தான் மறுக்கிறீர்களா? சிவ சேனாவை தண்டிக்க முடியாததால் தாவூத்தையும் தண்டிக்க முடியாது என்று சொன்னது எந்த நீதிமன்றம்? சாகாவில் இந்த சூக்குமத்தையெல்லாம் உங்களுக்கு சொல்லித்தரவில்லையா?

    பாம்கா பத்லா பாம் என்று சொல்கிற அசிமானந்தாவின் கோர்ட் இருக்கிற பொழுது தாலிபானுக்காக எதற்காக வாதாட வேண்டும்?

    ——————-

    நீங்களவாது பரவாயில்லை. மேரி அவர்களின் கருத்துப்படி கஜினிமுகம்மது கொள்ளையடிக்க வந்தான். இராஜேந்திர சோழன் விஸ்தரிப்பு செய்தான்!! கஜினி போன்ற திருட்டுப்பயலுக்கு செல்வத்தின் மீது மட்டும் தான் கண்! ஆனால் இராஜேந்திர சோழனுக்கு இராஜ்ஜியத்தின் மீது கண்!

    இராஜ்ஜியத்தின் மீது கண் இருக்கிறவன் ஒவ்வொரு சாதிகளுக்கும் ஏன் தனித்தனி வரிபோட வேண்டும்? இடங்கை வலங்கை சாதிகளில் வரி கட்டிய செத்த நம் முன்னோர்கள் இதில் இல்லையா? சதுர்வேதி பிராமணர்களுக்கு மட்டும் தனியே ஏன் வீடுகளும் நிலங்களும் அடிமைகளும் தர வேண்டும்? ஏன் கம்மாளச் சுடுகாடு என்றும் பறச் சுடுகாடு என்றும் இரு வேறு சுடுகாடுகளை நிர்மாணிக்க வேண்டும்?

    அற்பத்தனம் என்று சொல்வார்களே அது இது தான்! புலிகேசியின் வசனத்தை கொஞ்சம் மாற்றி டெடிகேட் செய்கிறேன். “நாமெல்லாம் சாக்கடைக்குள்ளேயே ஒரு மாமாங்கம் கூடுகட்டி வாழ்ந்த வித்தைக்காரர்கள்!”

    ——————————

      • சுவனத் தென்றல் எல்லாம் ஒன்றுமில்லை. எனது குடும்பமும் கடுமையாக அடக்கி ஒடுக்கும் சாதி மத பிண்ணனியைக் கொண்டது. இசுலாமிய மக்கள் குறித்த வர்க்கப் பார்வையை மதுரையில் ஆட்டுக்கால் சுட்டுபிழைக்கும் மக்களிடமும் அஸ்கர் அலி இன்ஞினியரிடமும் நமது தோழர்களிடமிருந்தும் தான் கற்றுக்கொள்கிறேன்.

        மகஇகவின் “காவி இருள்” மிகச் சிறப்பான வரலாற்று ஆவணம். நேரமிருந்தால் கூகுளில் டைப் செய்து இந்தப் பாடல்களை கேளுங்கள்.(3. இந்து வென்றால் சொல் சம்மதமா? (காவிஇருள்)) மற்றும் (5.சொல்லாத சோகம்(காவிஇருள்))

        அதுபோக கம்யுனிஸ்டு தாதா அமீர் ஐதர்கானையும் மிகவும் பிடிக்கும். வினவில் இருக்கிறது படியுங்கள். அவரின் இந்த வாக்கியங்கள் மிகவும் பிரபலம் “இதயங்களை கனிவித்தலும் கனிவித்த இதயங்களைக் காத்தலும் மனிதத் திறமையில் பயன்மிகுந்தவை.

  25. எங்கள் ஆருயிர் அண்ணன்,திருடர் குல திலகம் ஸ்டையில் பாண்டியின் 100வது திருட்டு வெற்றிபெற வாழ்த்தி போஸ்டர் ஒட்டிய வடிவேலுவின் நண்பர்களை போல பார்ப்பனர்கள் தாங்கள் திருடியதை கல்வெட்டில் எழுதி வைத்தார்களா? செம காமெடிய்யால்ல இருக்கு.கோயில் நிர்வாகம் நிலம் வித்த காசை ஆட்டையை போட்டுச்சுன்னு கல்வெட்ல இருக்கா?.இத பாட புத்தகத்தில் வேற எழுதனுமாம்.சூப்பரு.

  26. ஆணி…

    //ஏராளமான சான்றுகள் இருக்கின்றன-ன்னு சொல்லிட்டு ரெண்டே ரெண்டு அது ரெண்டுமே விக்கிபீடியா லிங்க குடுத்தா எப்புடி?//

    கசினி முஹம்மதின் இந்திய கொள்ளையை பற்றி கீழ்கண்ட வரலாற்று நூல்களின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இது எந்த அடிப்படை வாத கண்ணோட்டதுடனும் எழுத படவில்லை, வரலாறை வரலாறாக பதிவு செய்துள்ளார்கள்.

    1. The crescent in India By S.R Sharma.
    2. A history of india by Hermann Kulke and Dietmar Rothermund.
    3. An Advanced History Of India by R.C. majumdar.
    4. Somnath, the Shrine Eternal, K. M. Munshi.

    //அதை விட்டுபுட்டு எதுக்கு இந்த ஆர்.எஸ்.எஸ் காரங்க மாதிரியே கயவாளித்தனம், மொள்ளமாரித்தனமெல்லாம் பண்றீங்க?//

    மன்னிக்க வேண்டும், எனக்கு இந்து மதத்தின் மீதோ நீங்கள் குறிப்பிடும் R.S.S அமைப்பின் மீதோ தனி பட்ட முறையில் எந்தப் பற்றும் பாசமும் கிடையாது. R.S.S அமைப்பை உங்களை காட்டிலும் எனக்கு பிடிக்காது. மேலும்,நான் இந்து மதத்தை சேர்ந்தவளும் அல்ல. அதற்காக, வரலாற்று பொருள் முதல் வாதம் என்று கூறி கொண்டு நீங்கள் செய்யும் வரலாற்று மோசடிகளையும், திருகு வேலைகளையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது.

    //யோவ் Rebecca மேரி//

    மீண்டும் என்னுடைய ஆழமான அனுதாபங்கள்…. என் கருத்துக்களை நான் இங்கு பதிவு செய்கிறேன். மாற்று கருத்து வைப்பதற்கு பதிலாக என்னை தனி பட்ட முறையில் வசை பாடினாலும் கவலை இல்லை. வலிகளை ஏற்று கொள்ள தயார்.

    • மேரி,

      நீங்கள் கொடுத்த புத்தகங்களில் இருப்பதை மேற்கோள் காட்டி பேசலாமே ?
      இவ்வரலாற்று புத்தகங்களுக்கு அதன் ஆசிரியர்கள் எந்த ஆதாரத்தை காட்டுகிறார்கள் என்பதையும் சேர்த்தே நாம் பேசலாம்… பதிவிடுங்கள் !

      //திருகு வேலைகளையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. ///

      அதான் பார்த்தோமே, திப்புவை பற்றிய விவாதத்தில் திப்பு இறந்து 25 வருடங்களுக்கு பிறகு பிறந்தவருடைய வரலாற்று நூலை ஆதாரமாக குடுத்த நீங்க, திப்புவின் அமைச்சராக இந்து இருந்ததையும், திப்பு சிருங்கேரி மடத்திற்கு பொருளுதவி செய்ததையும் ஏற்றுக்கொள்ளாததின் சார்பு தன்மையையும், வரலாற்று திரித்தலையும், பார்த்தோமே!

      திப்பு பற்றிய விவாதத்தில் வகாபியிசம் பற்றிய உங்கள் வரையறையும், புரிதலும் மெய் சிலிர்க்க வைத்ததே.

      உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் எதையுமே நான் செய்யவில்லை. அப்படியிருக்கும் போது எதற்காக சின்ன சின்ன வார்த்தைகளைகூட உங்கள் மீதான தாக்குதலாக திரித்து கூறுகிறீர்கள்?

      வரலாறு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகபிரிவினரை ஒடுக்கும் போது உங்கள் வரலாற்று மோசடிகளையும், திருகு வேலைகளையும் அம்பலப்படுத்துவதால் தான் உங்களுக்கு எங்களை பிடிக்கவில்லை போலும்.

      அதை விடுங்கள்..
      இந்து கோவில்களை கொள்ளையடித்த கிருத்தவ போர்த்துகீசியர்களை என்னவென்று சொல்வீர்கள் ? அவர்களும் வகாபிஸ்டுகள் தானா? அவர்களும் கஜினியும் ஒன்றா ?

      • ஆணி
        //

        நீங்கள் கொடுத்த புத்தகங்களில் இருப்பதை மேற்கோள் காட்டி பேசலாமே ?
        //
        நீங்க இவ்ளோ அப்பாவியா இருப்பீங்கனு நான் நினைக்கவே இல்ல. அவங்க சொன்ன நான்கு புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களைப் பற்றி கொஞ்சம் இணையத்தில தேடிப் பாருங்க. அப்போதான் அவங்க கடசியா கொடுத்துள்ள ரெண்டு பேரும் யாருன்னே உங்களுக்கு தெரியும்

    • மேரி,
      //இனியாவது இசுலாமிய கொடுங்கோல் அரசர்களை நடுவுநிலையும் ஆராய்ச்சி அறிவும் இன்றி வியந்தோதி புகழ்ந்து தள்ளுவதை/// – இது நீங்கள் வினவின் மீது வைத்த குற்றச்சாட்டு.

      //அப்படியானால் கஜினி முகமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்ததும் கொள்ளையடித்ததும் பொய்யா? இல்லை, மறுக்க முடியாத உணமை.// – இது கட்டுரையின் ஆரம்பத்திலேயே இருப்பது,
      இந்தியாவில் பாடநூல்கள் இந்துத்துவ கண்ணோட்டத்துடன் இருப்பதையும், அதனால் ஏற்படும் இந்துத்துவ பொதுப்புத்தியையுமே தான் கட்டுரை சாடுகிறது.

      எனும் போது இசுலாமிய அரசர்களை வியந்தோதி புகழ்ந்து தள்ளுவதாக யார் திரித்துப்புரட்டுகிறார்கள்???

      அடுத்து, இங்கு பாடநூல்களில், பொதுபுத்தியில் இருப்பதை பற்றி பேசினால் உடனே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் அவர்களும் செய்கிறார்களே என்ற புளுத்துப்போன வாதத்தை வைக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    • Rebecca Mary,

      [1]RSS அமைப்பை உங்களுக்கு பிடிகாது , ஆனால் RSS மோடி பிரதமர் ஆவது உங்களுக்கு பீடிக்கும் ! ஏன் இந்த கொள்கை முரண்பாடு ?

      //எனக்கு இந்து மதத்தின் மீதோ நீங்கள் குறிப்பிடும் R.S.S அமைப்பின் மீதோ தனி பட்ட முறையில் எந்தப் பற்றும் பாசமும் கிடையாது. R.S.S அமைப்பை உங்களை காட்டிலும் எனக்கு பிடிக்காது. //

      [2]பிரபல வரலாற்றாய்வாளர் ரோமில்லா தபார் பம்பாய் பல்கலைக் கழகத்தில் இவ்வாண்டு நிகழ்த்திய டி.டி. கோசாம்பி நினைவுச் சொற்பொழிவில் சோமநாதபுரம் படையெடுப்பு குறித்த புதிய வரலாற்றுத் தரவுகளை வெளியிட்டுள்ளார். ‘செமினார்’ ஆங்கில மாத இதழில் வெளியான அந்தக் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.

      //கசினி முஹம்மதின் இந்திய கொள்ளையை பற்றி கீழ்கண்ட வரலாற்று நூல்களின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இது எந்த அடிப்படை வாத கண்ணோட்டதுடனும் எழுத படவில்லை, வரலாறை வரலாறாக பதிவு செய்துள்ளார்கள்.//

    • Rebecca Mary,

      1]RSS அமைப்பை உங்களுக்கு பிடிகாது , ஆனால் RSS மோடி பிரதமர் ஆவது உங்களுக்கு பீடிக்கும் ! ஏன் இந்த கொள்கை முரண்பாடு ?

      Note:

      RSS மோடி பிரதமர் ஆவதற்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு ஆதாரம் வேண்டுமா ரெபெக்க மேரி ?

      ரெபெக்க மேரி: //எனக்கு இந்து மதத்தின் மீதோ நீங்கள் குறிப்பிடும் R.S.S அமைப்பின் மீதோ தனி பட்ட முறையில் எந்தப் பற்றும் பாசமும் கிடையாது. R.S.S அமைப்பை உங்களை காட்டிலும் எனக்கு பிடிக்காது. //

  27. ஆணி…

    //நீங்கள் கொடுத்த புத்தகங்களில் இருப்பதை மேற்கோள் காட்டி பேசலாமே?
    இவ்வரலாற்று புத்தகங்களுக்கு அதன் ஆசிரியர்கள் எந்த ஆதாரத்தை காட்டுகிறார்கள் என்பதையும் சேர்த்தே நாம் பேசலாம்… //

    மன்னிக்க வேண்டும் … கஜினி முகம்மது சோமநாதர் கோவிலை தாக்கி கொள்ளை அடிதான் என்று வினவே ஒப்பு கொண்ட பொழுது வேறு என்ன ஆதாரத்தை நான் தர. ஆக,இப்போது ஆதாரம் கொடுக்க வேண்டியது நீங்கள் தான். வினவு கஜினிக்கு ஆதரவாக கூறியுள்ள கருத்து இது ..

    //ஆனால் கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள் என்பதும், அதேபோல கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர் என்பதும், ‘இந்துக்’ கோயிலைக் கொள்ளையடித்த அந்த ‘இசுலாமிய’ மன்னன்தனது நாட்டின் ‘இந்து’ வர்த்தகர்களைக் கொள்ளையடிக்கவில்லை //

    இதற்க்கு என்ன ஆதாரம் இருக்கிறது அல்லது ரொமில தபார் இதற்க்கு எந்த ஆதாரத்தை முன் வைக்கிறார். ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த இந்து வர்த்தகர்களை கொள்ளை அடிக்கவில்லை என்று வினவு கஜினி முஹம்மதிற்கு நற்சான்று தருகிறது. ஆனால், அல்-பிருநியோ இதற்க்கு நேருக்கு மாறாக கூறுகிறார்..

    //உருவ வழிபாட்டாளர்களான இந்துக்கள் மீதான ஜிகாத் புனிதப்போர்களின் (Jihad) போது, கசினி முகமது உடன் வந்த அரபு வரலாற்று அறிஞர் அல்-பரூணி தனது நூலில் கசினி முகமது பற்றிய செய்திகள்

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81

    //வரலாறு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகபிரிவினரை ஒடுக்கும் போது உங்கள் வரலாற்று மோசடிகளையும், திருகு வேலைகளையும் அம்பலப்படுத்துவதால் தான் உங்களுக்கு எங்களை பிடிக்கவில்லை போலும்.//

    இன்னும் நீங்கள் தான் இந்துதுவ கும்பல்களுக்கு இணையாக வரலாற்று மோசடி செய்வது.. கஜினி முஹம்மது ஆகட்டும் அல்லது திப்பு ஆகட்டும் இவர்களை யாரும் இசுலாமியர்கள் என்பதற்காக எதிர்க்கவில்லை. மாறாக, தங்களின் மதத்தின் பெயரால் வேற்று மதத்தினரின் வழிப்பாட்டு தளங்களை சூறையாடுவது, வன்முறையின் மூலமாக மத மாற்றங்களை நிகழ்த்துவது போன்ற இவர்களின் புனித கடமைகளுக்காக தான் இவர்களை வெறுப்பது.

    அப்படி பார்த்தால் இந்தியாவை ஆண்ட முகலாய அரசர்கள் அனைவரும் இசுலாமியர்கள் தான்.. அவர்களில் யாரேனும் ஒருவரை இது போன்று குறை சொல்ல முடியுமா? அவுரங்கசீப்பை தவிர!!. பாபர், ஹுமாயுன்,அக்பர், ஜெஹன்கீர், ஷஹ்ஜஹான் முதல் பிரிட்டிஷாருக்கு எதிரான சிப்பாய் புரட்சிக்கு காரணமானவர் என்று குற்றம் சுமத்தி நாடு கடத்த பட்ட முகலாய வம்சத்தின் கடைசி வாரிசான பகதூர் ஷா வரை அனைவருமே மத வெறியில்லாமல் மக்கள் அனைவரையும் அரவணைத்து சென்ற மிக சிறந்த ஆட்சியாளர்கள் தான்.

    பாபர் அயோத்தியில் இருந்த ராமர் கோவிலை இடித்து விட்டு மசூதியை கட்டினார் என்று சொன்னால் இதை விட கொடுமை வேறு எதுவும் இருக்க முடியது. பாபர் தொடர்பான இந்த சர்ச்சையானது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவத்தின் வரலாற்று மோசடிதான். இந்திய மன்னர்களிலேயே மிக சிறந்தவர் பாபர் என்பதை வரலாறு அறியும்..

    //அதை விடுங்கள்..
    இந்து கோவில்களை கொள்ளையடித்த கிருத்தவ போர்த்துகீசியர்களை என்னவென்று சொல்வீர்கள் ? அவர்களும் வகாபிஸ்டுகள் தானா? அவர்களும் கஜினியும் ஒன்றா ?//

    இல்லை என்கிறீர்களா? யாராக இருந்தாலும் வன்முறையின் மூலமாக தன்னுடைய மதத்தை அடுத்தவரின் மீது திணிப்பது மிக பெரிய பாவ செயல்தான். அதற்க்கு கிறித்துவர்களும் விதிவிலக்கல்ல. அன்பினாலும், உண்மையான சேவையினாலும் தான் ஒரு மதம் மக்களிடம் சென்றடைய வேண்டும். மாறாக, வன்முறையினால் அல்ல.

    • ரொபாக்காமேரின்ற இந்த அறிஞரு ரோமிலா தாப்பரு மாதிரியான ‘முட்டாளு’ அறிஞரையெல்லாம் ஊதித்தள்ளிருவாரு! ரோமிலா தாப்பாரு ஏதோ கனா கண்ட விசயத்தை வரலாறுன்னு எழுதரமாதிரி இந்த மேரி எழுதமாட்டாரு. ஆக்ஸ்போர்டுல, ஹார்வர்டுல இருக்கிற வரலாத்து அறிஞருங்களே இவருகிட்டதான் டவுட்டு கேப்பாருங்கன்னா பாத்துக்கங்க.

      ஆனா என்ன, ஐயாவுக்கு தமிழ் விக்கிபீடியாவுல இருக்குற கதைங்களெத்தான் வரலாறுன்னு தொணுறதலா ஆக்ஸ்போர்டிலோயோ, இல்லை ஆர்டிக்கிலயோ எவன் கேட்டாலும் விக்கி பீடியா லிங்குதான் பதிலு. மத்தபடி ஐயா தன்னோட வாழ்க்கையில வரலாறுன்னு பாட்டி வட சுட்ட கதையத் தவிர வேறு எதுவும் படிச்சதில்லங்கிறது தப்பா எடுத்துக்காதேள்!

      ஐயா கொடுத்த விக்கிபீடியா லிங்குல ஒரு தரப்பான ‘இந்து’ பார்வைங்களத்தான் கதைன்னு எழுதியிருக்கான். மறு தரப்ப பத்தி மூச்சு விடல. எல்லாத்துக்கும் மேல 21ம்நூற்றாண்டு இந்துத்துவ வெறியில இருந்து 11ம் நூற்றாண்டு வரலாத்த எழுதியிருக்கான். இத படிச்சு கரெக்ட் பண்ணுற அளவுக்கு விக்கி ஆளுங்களுக்கு அறிவில்ல.

      சரி இத படிச்சு பாருங்க…

      Maḥmūd was the first to carry the banner of Islam into the heart of India. To some Muslim writers he was a great champion of his faith, an inspired leader endowed with supernatural powers. Most Indian historians, on the other hand, emphasize his military exploits and depict him as “an insatiable invader and an intrepid marauder.” Neither view is correct. In his Indian expeditions he kept his sights set mainly on the fabulous wealth of India stored in its temples. Though a zealous champion of Islam, he never treated his Indian subjects harshly nor did he ever impose the Islamic religion on them. He maintained a large contingent of Hindu troops, commanded by their own countrymen, whom he employed with great success against his religionists in Central Asia. Conversion to Islam was never a condition of service in the sultan’s army.

      Great as a warrior, the sultan was no less eminent as a patron of art and literature. Attracted by his munificence and encouragement, many outstanding scholars settled in Ghazna, among them al-Bīrūnī, the mathematician, philosopher, astronomer, and Sanskrit scholar, and Ferdowsī, the Persian author of the great epic poem Shāh-nāmeh. Maḥmūd’s conquest of northern India furthered the exchange of trade and ideas between the Indian subcontinent and the Muslim world. It helped to disseminate Indian culture in foreign lands. Similarly, Muslim culture, which by now had assimilated and developed the cultures of such ancient peoples as the Egyptians, the Greeks, the Romans, and the Syrians, found its way into India, and many Muslim scholars, writers, historians, and poets began to settle there.
      மத்தபடி மொக்க தமிழ் விக்கிபீடியாவுல சுட்டாலும் அந்த லிங்க மேரி ஐயா கொடுத்த மாதிரி நானும் லிங்க கொடுப்பதுதான் முறை.
      கீழே லிங்கு
      http://www.britannica.com/EBchecked/topic/358248/Mahmud

  28. ____________________ena varala matha vendiya iruku….. mothala undayila nala kuliki pichai edugaa. apram jazini pathiyum rajini pathuyum pesalam…….

  29. @Thenral

    //ஆரியர்கள் வருகை!
    இசுலாமியர்கள் படையெடுப்பு!!//

    ஆரியர் வருகை …

    ஆரியர் என்னும் இனம் வேறு இடத்தில இருந்து வந்து இருந்தால் , புனித பூமி புனித நாடு எல்லாம் வேறு இடத்தில இருந்து இருக்க வேண்டும் .

    குதிரை பற்றி பேசுவதால் , இந்தியர்களுக்கு குதிரை பற்றி அப்போது தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்னும் அடுப்படியில் விவாதிக்க படுகிறது

    மொழி அடிப்படையில் திராவிட இலக்கணம் வேறுபடுகிறது என்னும் அளவில் கருது வைக்கபடுகிறது .

    சரி திராவிடர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? மனித இனம் ஆபிரிக்காவில் தோன்றி பரவியதால் வடக்கில் இருந்துதான் மனித இனம் வந்து இருக்கவேண்டும் . ஒரு வேளை குமரி கண்டம் என்கின்ற மாய இடத்தில இருந்து த்ரியாவிடர்கள் வந்து இருந்தால் அவர்களும் இந்தியாவிற்கு குடியேறிகள் தானே ?

    அதே போல திராவிடர்கள் வருகை என்றும் எழுத வேண்டும் .

    ஒரு வேளை திராவிடர்கள் வடக்கில் இருந்து தெற்கே தள்ளப்பட்டவர்கள் என்றால் , தமிழ் இலக்கியங்கள் வடக்கில் இருக்கும் இடத்தை பற்றி குறிப்புகள் இருக்க வேண்டும் . கங்கையில் தமிழ் எழுத்துக்கள் கல்வெட்டுகள் ஆலயங்கள் ஏதேனும் இருக்க வேண்டும் . குறைந்த பட்சம் சிந்து சமவெளி தமிலனுடையது என்று நிரூபிக்க தொடர்பாவது இருந்திர்க்க வேண்டும் .

    தமிழன் அறிவியல் அடிப்படையில் கிரகணங்களை ஆய்வு செய்து இநருந்து இருந்தால் , வடக்கே தெரியும் நட்சத்திரத்தை பற்றி குறிப்புகள் எழுதி வைத்து இருந்தால் , பாருங்க இந்த நட்சத்திர கூட்டம் வடக்கே இருந்து தான் தெரியும் என்று எழுதலாம் .

    ஆக ஆரிய இனம் எனபது இந்தியாவிற்கு குடியேறிய பின்னர் ஏற்பட்ட அடையாளமா இல்லை ஆரியர்கள் என்கின்ற அடையாளத்தோடு வந்து ஆகிறமிதுகொண்டார்களா என்கின்ற எந்த ஆதாரமும் இல்லாமல் படையெடுப்பு என்று போட வேண்டும் என்று எதன் அடிப்படையில் எதி பார்கிறீர்கள் ?

    அவர்கள் காலி இடத்தை ஆகிரமிதார்களா இல்லை திராவிடர்களை துரத்தி அடித்தார்களா என்று கற்பனயில் எழுதுவதா ?

    சரி ஜீன் அடிப்படையில் ஏதேனும் பிரிவினை உண்டா என்றால் இல்லை . மதுரை கள்ளர்கள் மட்டும் ஆபிரிக்காவில் இருந்து வந்ததற்கான ஆதாரம் காட்டுகிறது . வேளாளர்களுக்கும் தேவர்களுக்கும் வன்னியர்களுக்கும் அது காட்டவில்லை.

    • ராமன் அவர்களுக்கு,

      திராவிட மேலாண்மையை இங்கு நிறுவுவது நோக்கமல்ல இராமன். மாறாக இசுலாமிய மதவெறி என்று தனித்துக்காட்டுகிற பொழுது ஆர் எஸ் எஸ் காலிகளின் இந்துமத வெறியும் அவர்கள் சுட்டிக்காட்டுகிற ஆரிய மேலாண்மையும் இந்தியர்களுக்கு எந்தளவு சம்பந்தப்பட்டது? என்பதுதான் இங்கு நாம் பரிசீலிக்க வேண்டியது.

      \\ சரி திராவிடர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? மனித இனம் ஆபிரிக்காவில் தோன்றி பரவியதால் வடக்கில் இருந்துதான் மனித இனம் வந்து இருக்கவேண்டும் . ஒரு வேளை குமரி கண்டம் என்கின்ற மாய இடத்தில இருந்து த்ரியாவிடர்கள் வந்து இருந்தால் அவர்களும் இந்தியாவிற்கு குடியேறிகள் தானே ?\\

      இதைப் பரிசிலீப்பதில் எனக்குத் தயக்கமில்லை. ஆனால் ஏன் ஆர் எஸ் எஸ் இந்தியாவை இந்து நாடு என்றும் ராமன் தேசிய நாயகன் என்று சொல்லி வெறியூட்ட வேண்டும்? இதே பின்னூட்டம் ஆர் எஸ் எஸ்சை நோக்கி ஏன் இருக்கக் கூடாது? இன்னும் சொல்லப்போனால் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று நீட்டுகிற பொழுது மதங்கள் ஏன் மனிதர்களை பிரித்து ஆள வேண்டும்? உங்களது கருத்துப்படி ஆர் எஸ் எஸ், தவ்ஹீத் காலிகள் இந்நேரம் கூடாரத்தை காலியல்லவா செய்திருக்க வேண்டும்? ஆனால் ஆர் எஸ் எஸின் அவதூறு பாடப்புத்தகம் வரை வந்தாயிற்று என்பதற்கு என்ன செய்யப் போகிறோம் நாம்?

      —————————————

      ஆரியர்கள் வருகை என்பது லேசுபட்ட சொல்லாடல் அல்ல. ஓர் இனக்குழு சமூகம் என்பதன் அடிப்படையில் எத்தனை புத்தகங்களை வாசித்திருக்கிறீர்கள்? பகிர்ந்து கொள்ளுங்களேன். அதே சமயம் இதன் மறுபக்கத்தைப் பாருங்கள்.

      1) பாரதி இந்து தேசியத்தை முன்வைத்து “எங்கள் தந்தையர் நாடென்னும் போதினிலே” என்று எது எழுத வைத்தது?
      2) ஆரியர்கள் தான் ஆளப்பிறந்த இனம் என்று மேக்ஸ் முல்லர் சொல்வதை தூக்கிவைத்து கொண்டாடுகிற கூட்டத்தின் நோக்கம் என்ன?
      3)ஹிட்லர் சுவஸ்திக் சின்னத்தை எங்கிருந்து பெற்றான்?
      4) இந்திய ஜெர்மானிய பாசிஸ்டுகள் இரத்த கலப்பற்ற சுத்த ஜெர்மானிய அல்லது இந்திய இனம் என்று சொல்ல வைப்பதற்கு எது ஆதாரம்?

      இந்துத்துவ சக்திகள் ஆரியர் வருகை வரப்பிரசாதம் என்ற தொனியில் எழுதுவதும் அனைவரையும் இந்துக்கள் என்று வரையறுப்பதும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

      ———————-

      \\ஆக ஆரிய இனம் எனபது இந்தியாவிற்கு குடியேறிய பின்னர் ஏற்பட்ட அடையாளமா இல்லை ஆரியர்கள் என்கின்ற அடையாளத்தோடு வந்து ஆகிறமிதுகொண்டார்களா என்கின்ற எந்த ஆதாரமும் இல்லாமல் படையெடுப்பு என்று போட வேண்டும் என்று எதன் அடிப்படையில் எதி பார்கிறீர்கள் ? அவர்கள் காலி இடத்தை ஆகிரமிதார்களா இல்லை திராவிடர்களை துரத்தி அடித்தார்களா என்று கற்பனயில் எழுதுவதா ?\\

      படையெடுப்பு என்றெல்லாம் போட வேண்டிய அவசியமில்லை. இந்துக்கள் இசுலாமியர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்கிற பொழுது இந்தியர்கள் எப்படி இந்துக்களாக மாற்றப்பட்டனர் என்பது தான் என் கேள்வி.

      உழைக்கும் மக்களின் வழிபாட்டிற்கும் இந்து மதத்திற்கும் தொடர்பு உண்டா? ஆம் என்றால் எப்படி? இல்லை என்றால் இதுவரை வழிவழியாய் வந்திருக்கிற பார்ப்பன எதிர்ப்பு மரபு ஏன் இருட்டடிப்பு செய்யப்பட வேண்டும்?

      எங்கும் எதிலும் ஏன் ஆரிய மேலாண்மை பேசப்பட வேண்டும்? தேவைப்படுகிற இடங்களில் ஆரியர்கள் தான் எங்களது மூதாதையர்கள் என்றும் அவர்கள் தான் எங்களது கலாச்சாரக் காவலர்கள் என்றும் சங்கப் பரிவாரங்கள் பேசுவதன் பிண்ணனி என்ன? அல்லது புராணங்கள் இதிகாசங்கள் சாத்திரங்கள் கூறுகிற அரக்கர்கள் யார்? ஏன் இப்படியொரு வரையறையை இந்து மதம் வலியுறுத்துகிறது? அல்லது ஏன் சில பிரிவினருக்கு இராவணன் கடவுளாக இருக்கிறான்?

      —————————-

      • //ஆரியர்கள் வருகை!
        இசுலாமியர்கள் படையெடுப்பு!!//

        என்கின்ற உங்கள் ஆதங்கம் தவறு என்று சுட்டி காட்டுவதுதான் எனது நோக்கம் .

        மத்தபடி ஒவ்வொரு இனக்குழுவும் தங்கள் இனம் உயர்ந்தது என்று பெருமை பாராட்ட முயலுகின்றன. சாதி அடிப்படையில் ஆகட்டும் மொழி அடிப்படையில் ஆகட்டும் , இது மனித பண்பு . ஆரியன் என்று பெருமை பாராடுபவனுக்கு மட்டும் சொந்தமல்ல .

        http://en.wikipedia.org/wiki/Kumari_கண்டம்

        திராவிடனும் உலகின் முதன் மொழி , முதல் மனிதன் என்று நிறுவ முயலுகிறான் .

        சரி எதன் அடிப்படையில் ஆரியன் அதாவது நாகரிக மனிதன் இந்தியாவுக்குள் நுழைந்தான் என்று வாதிடுகிறார்கள் என்றால் , வேடுவ சமுதாயம் , உழவு சமுதாயமாக கூட்டமாக வாழ தொடங்கியதற்கான ஆதாரம் துர்க்கியில் தான் உள்ளது .

        http://en.wikipedia.org/wiki/Kumari_Kandam

        காட்டு (wild ) அரிசி நாட்டு அரிசி யாக மாற்றப்பட்டதன் தொடக்கம் அதற்கான ஆதாரமான விதைகள் , ஓநாய் நாயாக மாறிய வருடம் போன்றவை அந்த பகுதியை சுட்டி காட்டுகின்றன .
        அடுத்து கொரியாவில் தான் அரிசி விதைகள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளது .

        அந்த காலகட்டத்தில் இந்தியாவில் சிந்து சமவெளி மட்டுமே இருந்து இருக்கிறது . கங்கையில் யார் இருந்தார்கள் தெற்கே யார் இருந்தார்கள் என்னமாதிரியான சமூகம் இருந்தது என்று எந்த ஆதாரமும் இல்லை .இந்தியாவில் எழுத்து கூட மிக சமீபத்தில்தான் உருவானது .

        சிந்து சமவெளியில் எந்த வித கோவிலும் இல்லை , அரச மாளிகையும் இல்லை . ஆக சிந்து சமவெளி கூட இந்து மதம் தானா என்று நிரூபிக்க முடியவில்லை

        மனித இனம் இந்தியாவிற்குள் வந்தபின்னர் தோன்றிய மதம் இந்து மதம் , அதனால் தான் பரத கண்டே, கங்கை ராமேஸ்வரம் போன்ற புண்ணிய பூமிகள் இந்தியாவில் உள்ளன . உங்கள் கருத்துப்படி வெளிநாட்டில் இருந்து மதத்தோடு வந்து இருந்தால் , இந்து மதம் ஜெர்மனியில் இருந்து இருக்க வேண்டும் .

        அடுத்து அவர்கள் மதம் மாற்றினார்கள் என்றால் , அதற்கு முன்னர் என்ன மதம் இருந்தது ?
        சுடலை மாடனும் கருப்பசாமியும் என்றால் அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் .

        மதம் திணிக்கப்பட்டதா இல்லை சமூகம் விரும்பி ஏற்று கொண்டதா ? ரஷ்ய அரசன் எந்த மதம் நன்றாக இருக்கிறது என்று விவாதிர்த்து விரும்பி , ரஷ்ய சமூகம் ஏற்று கொண்டது . திணிக்கப்பட்டது என்று கூற வேண்டும் என்றால் அதற்கான ஆதாரம் வேண்டும் . ஆதாரம் இல்லாமல் திணிக்கப்பட்டது என்று கூறுவது மக்களை மேலும் பிளவு படுத்து சதியாகும் .

        //ஆனால் ஏன் ஆர் எஸ் எஸ் இந்தியாவை இந்து நாடு என்றும் ராமன் தேசிய நாயகன் என்று சொல்லி வெறியூட்ட வேண்டும்? //

        தவறுதான் . ஜைன மதம் புத்தமதம் போன்றவை தோன்றிய இதியாவை ஒரு குறிப்பிட பிரிவு மட்டும் சொந்தம் கொண்டாடுவது தவறு . ஆனால் இனகுளுக்குள் தங்கள் மேன்மையை காட்ட இது போர்னவை தேவை படுகின்றன . தேவர் ஜெயந்தி கொண்டாடுவது போல தான் இதுவும் .

        ஆனால் ராமன் இல்லை கட்டு கதை என்று கூறிவிட்டு , ராவண காவியம் எழுதுவது முட்டாள்தனமாகும் . அவங்களுக்கு அவன் நாயகன்ன எங்களுக்கு இவன் எனபது எந்த வகையில் சேத்தி

  30. இது ஒரு பெரிய பொடலங்கா ஆர்ட்டிக்கிள்ன்னு இதுக்கு 83 ரெஸ்பான்ஸ். வெட்டிப்பயலுக அதிகம் ஆயிட்டாங்க டோய்!!

  31. Dear Vinavu Readers,

    Viasan is really supporting Homosexual activities in his blog!

    See the following search link!

    http://viyaasan.blogspot.in/search?q=%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

    But He is ONLY blaming ghajni-mahmud FOR the same sexual activities of that king by using the rules of Islamic religion!

    Viyasan said here: “இஸ்லாத்தில் இவ்வளவு ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட கஜினி முகம்மது ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இருந்திருக்கிறார். ஆனால் இஸ்லாத்தில் ஓரினச் சேர்க்கையும், ஆணை ஆண் காதலிப்பதும், தடை செய்யப்பட்டது மட்டுமல்ல, ஹராமும் கூட. அதனால் கஜினி முகம்மது, உண்மையில் இஸ்லாத்தின் விதிகளின் படி ஒழுகியவர் அல்ல என்பது தான் நான் கூறிய கருத்தாகும்.”

  32. Dear Vinavu Readers,

    In General Viyasan blames people who are against Homosexual activities:

    [1]இலங்கையில் ஓரினச் சேர்க்கையும் -நோர்வே தூதருக்கு அனுமதி மறுப்பும்
    http://viyaasan.blogspot.in/2013/06/blog-post_30.html

    In this artical he blames Rajabathcha

    [2]2007 ம் ஆண்டில் ஈரானிய அதிபர் அஹ்மதினேஜாத் நியூ யோர்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஈரானில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இல்லை என உளறிக் கொட்டித் தன்னை ஒரு கோமாளியாக்கிக் கொண்டது மட்டுமல்ல அந்த அரங்கு முழுவதையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.
    http://viyaasan.blogspot.in/2013/05/2007.html

    [3]But in the matter of ghajni-mahmud……, He speak differently here..

    Viyasan said here: “இஸ்லாத்தில் இவ்வளவு ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட கஜினி முகம்மது ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இருந்திருக்கிறார். ஆனால் இஸ்லாத்தில் ஓரினச் சேர்க்கையும், ஆணை ஆண் காதலிப்பதும், தடை செய்யப்பட்டது மட்டுமல்ல, ஹராமும் கூட. அதனால் கஜினி முகம்மது, உண்மையில் இஸ்லாத்தின் விதிகளின் படி ஒழுகியவர் அல்ல என்பது தான் நான் கூறிய கருத்தாகும்.”

    Note:
    ———

    வியாசன் அவர்கள் ஓரினச்சேர்க்கை எதீர்பாளர்களான ஸ்ரீலங்கன் அதீபர் ராஜபச்ச, ஈரான் அதீபர் அஹ்மதினேஜாத் ஆகியோரை எதிர்க்கும் அதே நேரத்தில் ஓரினச்சேர்க்கை ஆதரவாலரான கஜினியையும் [In the name of Islam ] எதிர்க்கும் காரணம் என்ன ?

    • “விடிய விடிய ராமர் கதை விடிஞ்சாப் பிறகு ராமனுக்கு சீதை என்ன முறை என்று கேட்டானாம்”, அது போன்றது தான் அண்ணன் சரவணனின் நிலை. இவர் மட்டும் இல்லாது விட்டால், இந்த வினவு இணையத்தளமே போரடிக்கத் தொடங்கி விடும் என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது. கடைசி முறையாக சரவணன் அவர்களுக்கும் விளங்க வேண்டுமென்பதற்காக எனது கருத்தை மீண்டும் தெரிவிக்கின்றேன். இந்தியாவில் இஸ்லாத்தைப் பரப்பிய, இஸ்லாத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட கஜினி முகம்மது, இஸ்லாத்தில் விதிக்கப்பட்ட விதிகளின் படி ஒழுகாமல், குர்ஆனில் தடை செய்யப்பட்டுள்ள, ஹராமாகிய ஓரினச்சேர்க்கையை கைக்கொண்டது மட்டுமன்றி, ஒரு ஆணின் மீது, அளவு கடந்த காதலும் கொண்டிருந்திருக்கிறார், அவரை எப்படி “ he was a great champion of his faith” என்று அழைக்க முடியும் என்பது மட்டும் தான் என்னுடைய கேள்வி.. இனிமேலும் புரியாது விட்டால், இதைப் பற்றிய உங்களின் எந்தக் கேள்விக்கும் நான் பதிலளிக்கப் போவதில்லை. சரியா?

      //[2]2007 ம் ஆண்டில் ஈரானிய அதிபர் அஹ்மதினேஜாத் நியூ யோர்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஈரானில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இல்லை என உளறிக் கொட்டித் தன்னை ஒரு கோமாளியாக்கிக் கொண்டது மட்டுமல்ல அந்த அரங்கு முழுவதையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.//

      மன்னிக்கவும், பதிவு மாறிவிட்டது. இந்தப் பதிவின் இணைப்பை இங்கே காணலாம்.

      http://viyaasan.blogspot.ca/2014/06/blog-post_11.html

      • குழப்பவாதி வியாசன்,

        [1]திரு வெற்றிவேல் அவர்கள் கஜினி பற்றி Thiru ரெபெக்க மேரி உடன் நடத்திய விவாதத்தீன் போது எங்கேயாவது “he was a great champion of his faith” என்று கூறி உள்ளாரா ? அல்லது கஜினி ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என்று எங்கேயாவது கூறி உள்ளாரா ? இல்லையே ! திரு வெற்றிவேல் பிரிட்னிக்காவில் இருந்து எடுத்து கூறுவது வியாசனுக்கு புரியவீல்லையா ?

        “To some Muslim writers he was a great champion of his faith, an inspired leader endowed with supernatural powers. Most Indian historians, on the other hand, emphasize his military exploits and depict him as “an insatiable invader and an intrepid marauder. ” —-Neither view is correct—— ”

        வியாசனுக்கு Neither என்ற இங்கிலீஷ் வார்த்தைக்கு பொருள் புரியாமல் ஏதோ திரு வெற்றிவேல் அவர்கள் கஜினியை இஸ்லாம் மத அடிப்படைவாதி என்றும் ஆனால் கஜினி ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என்றும் கூறியதாக நினைத்துக் கொண்டு கஜினி ஓரினச்சேர்க்கையாளர் அது இஸ்லாமுக்கு எதிறானது என்று தன் மன கட்டுப்பாட்டை இழந்து நீங்கள் கதையாடுவது ஏனோ ?

        [2]நான் கூறும் விடயம், கேட்கும் கேள்விகள் அனைத்தும் வினவு வாசகர்களீடம் வியாசனை அம்பலம் செய்வதற்காக தான். வியாசனின் கழீசடை பதில்கள் எமக்கு தேவை இல்லை . 🙂

        //கடைசி முறையாக சரவணன் அவர்களுக்கும் விளங்க வேண்டுமென்பதற்காக எனது கருத்தை மீண்டும் தெரிவிக்கின்றேன். இந்தியாவில் இஸ்லாத்தைப் பரப்பிய, இஸ்லாத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட கஜினி முகம்மது, இஸ்லாத்தில் விதிக்கப்பட்ட விதிகளின் படி ஒழுகாமல், குர்ஆனில் தடை செய்யப்பட்டுள்ள, ஹராமாகிய ஓரினச்சேர்க்கையை கைக்கொண்டது மட்டுமன்றி, ஒரு ஆணின் மீது, அளவு கடந்த காதலும் கொண்டிருந்திருக்கிறார், அவரை எப்படி “ he was a great champion of his faith” என்று அழைக்க முடியும் என்பது மட்டும் தான் என்னுடைய கேள்வி.. இனிமேலும் புரியாது விட்டால், இதைப் பற்றிய உங்களின் எந்தக் கேள்விக்கும் நான் பதிலளிக்கப் போவதில்லை. சரியா? //

        • செந்தில்குமரனின் உளறல்களுக்குப் பதிலளித்து நேரத்தை வீணாக்கியது போல் சரவணனின் உளறல்களுக்கும் நான் பதிலளிக்கப் போவதில்லை. ஏனென்றால் நான் முன்பே விளக்கம் அளித்து விட்டேன். சிலர் எப்படித்தான் விளக்கம் அளித்தாலும் Senile போல சொன்னதையே திருப்பித் திருப்பி பேசிக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களுக்கு விளக்கமளிப்பது வீண் வேலை என்பதை ராஜராஜ சோழனைப் பற்றி ‘அண்ணன் செந்தில்குமரனுடன்’ மல்லுக்கட்டிய போதே புரிந்து கொண்டேன். 🙂

          • பதில் சொல்ல துப்பு இல்லாத குழப்பவாதி வியாசன் ,

            [1]உமக்கு புரிந்து கொள்ளும் திறன் சிறிதும் இல்லாமையை தான் நீர் ஒத்து கொண்ட பின் , உமக்கு புரிய வைக்க ஒரே கேள்வியை 4 முறை கேட்டாலும் 400 முறை வேறு வேறு வீதமாக கேட்டாலும் அதில் என்ன தவறு ? உமக்கு உம் தவறை உணர்த்துவதர்க்கும், உம்மை வினவு வாசகர்களீடம் அம்பலம் செய்வதற்கும் ஒரே கேள்வியை வேறு வேறு விதமாக கேட்கதான் செய்வேன் !

            [2]ஒரு sentence அய் ஒழுங்கா படிக்க இயலாத நீர் முதுமைக்குரிய[Senile] இயல்புடன் [அல்ஸைமர் ] உள்ளதை ஒத்துகொண்டதற்கு நான் பரிதாபம் மட்டும் தான் பட முடியும்.

            [3]ராஜராஜ சோழன் விடயத்தில் நீர் கல் அடிபட்டு ஓடி போன நாய் போல ஓடியதை தான் நாங்கள் பார்த்தோமே !

            [4] சரி சரி மேட்டருக்கு வருவோம் !

            [i]உங்கள் முந்தைய கருத்தீன் படி “தெலுங்கர்கள்-வந்தேரிகள்-வடகர்கள் ” கொள்கைகள் எல்லாம் வழக்கு அழீந்து விட்டதா ?

            [ii]உங்கள் தமிழ் இனம் ,தமிழ் மொழி பற்று எல்லாம் நீர்த்து விட்டதா ?

            [iii]இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது என்று திடிர் என்று கூறுவது ஏன் வியாசன் ?

            [iv]தமிழ் இனம் ,தமிழ் மொழி பற்று எல்லாம் போன மாதம் , இந்துமதப்பற்று இந்த மாதமா ?

            [5]வெற்றிவேல் அவர்கள் கஜினியை இஸ்லாம் மத அடிப்படைவாதி என்றும் , கஜினி ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என்றும் கூறாதபோது ,அவர் கூறாத கருத்துக்கு நீங்கள் பதில் அளீப்பது;வீண் பரபப்பை ஏற்படுத்துவது ஏன் ?

              • [4] சரி சரி மேட்டருக்கு வருவோம் !

                I dont know when will this professor come to the point.
                Aligning the thoughts in order like a flower and making a point a garland is an art.

                Long road ahead of him.Till that time learn to glance his points and move on. Never try to reply

  33. வினவு…

    //திரு வியாசன் எழுதி வினவு வெளியிடாத அந்த ‘ஆதாரப்’ பூர்வமான வரலாற்று உண்மை, கஜினி முகமது ஒரினிச் சேர்க்கையாளர் என்பதே. கட்டுரை எதைப் பற்றி பேசுகிறது,……………………………………………………..
    ……………………………………… 1000 வருடங்கள் பின்னோக்கிச் சென்று கஜினி முகமதுவின் பாலியல் நிலை குறித்தெல்லாம் கவலைப்படத் தேவையில்லை//

    வியாசன் அவர்களின் கருத்தை தடை செய்தது அப்பட்டமான வாசகர் உரிமை பறிப்பு. இங்கு விவாதம் கஜினி முகம்மதை பற்றி. அவனை பற்றிய கருத்துக்களை அதுவும் ஆதாரத்துடன் கூறும்போது அதை ஏன் தடை செய்ய வேண்டும்.. இப்படி தடை செய்வது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி வகுக்காது. கஜினி முஹம்மது ஓரின சேர்க்கையில் ஈடுப்பட்டான் என்கிற விஷயத்தை ஆதாரத்துடன் வெளியிடுவதால் வினவிற்கு என்ன சிக்கல்.. நீங்கள் கஜினி நல்லவன் என்று தரச்சான்று கொடுக்கும் பொழுது. அவனை பற்றிய உண்மை முகத்தை ஆதாரத்துடன் கூற எங்களுக்கு உரிமை இல்லையா, இருக்கிறது எனும் பொழுது அதை தடை செய்ய வினவிற்கு எந்த உரிமையும் கிடையாது.

    • /நீங்கள் கஜினி நல்லவன் என்று தரச்சான்று கொடுக்கும் பொழுது. அவனை பற்றிய உண்மை முகத்தை ஆதாரத்துடன் கூற///

      ஓரினச்சேர்க்கையாளர்கள் கெட்டவர்கள் என்ற உண்மையை உலகுக்கு சொல்ல வருகிறீர்கள் சரி தானே?

    • ரெபெக்க மேரி ,

      [1]வியாசனுக்கு , ஓரினச்சேர்க்கை மீதான விவாதத்தை தொடங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? திரு வெற்றிவேல் அவர்கள் கஜினி பற்றி உங்களுடன் நடத்திய விவாதத்தீன் போது எங்கேயாவது “he was a great champion of his faith” என்று கூறி உள்ளாரா ? அல்லது கஜினி ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என்று எங்கேயாவது கூறி உள்ளாரா ? இல்லையே ! திரு வெற்றிவேல் பிரிட்னிக்காவில் இருந்து எடுத்து கூறுவது வியாசனுக்கு புரியவீல்லையா ?

      “To some Muslim writers he was a great champion of his faith, an inspired leader endowed with supernatural powers. Most Indian historians, on the other hand, emphasize his military exploits and depict him as “an insatiable invader and an intrepid marauder. ” —-Neither view is correct—— ”

      வியாசனுக்கு Neither என்ற இங்கிலீஷ் வார்த்தைக்கு பொருள் புரியாமல் ஏதோ திரு வெற்றிவேல் அவர்கள்
      கஜினியை இஸ்லாம் மத அடிப்படைவாதி என்றும் ஆனால் கஜினி ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என்றும்
      கூறியதாக நினைத்துக் கொண்டு கஜினி ஓரினச்சேர்க்கையாளர் அது இஸ்லாமுக்கு எதிறானது என்று தன் மன கட்டுப்பாட்டை இழந்து வியாசன் அவர்கள் கதையாடுகின்றார்.

      [2]வினவு , வியாசனின் இந்த பின்நுட்டத்தை தடை செய்வது தவறு என்றால் , வேறு ஒரு கழிசடை [நன்றி அக்காகி] வேறு ஒரு விசயத்தை ஆபாசமாக கூறும் போது அதற்கு யார் பொறுப்பு ஏற்ப்பது?

  34. viyasan said here in his feed back://ஓரினச்சேர்க்கை என்பது தவறு அல்லது தவறல்ல என்று வாதாடுவதோ அல்லது அதைப் பற்றித் தீர்ப்புக் கூறுவதோ என்னுடைய நோக்கமல்ல//

    But…

    வியாசன் அவர்கள் ஓரினச்சேர்க்கை எதீர்பாளர்களான ஸ்ரீலங்கன் அதீபர் ராஜபச்ச, ஈரான் அதீபர் அஹ்மதினேஜாத் ஆகியோரை எதிர்க்கும் காரணம் என்ன ?

  35. ஜோசப் அவர்களுக்கு, பின்னுட்டம் 13.1.2.1.1.1.3.1.1.4 உங்களது கேள்வியை வாசித்தேன்.

    வர்க்கப்பார்வை என்பதில் இசுலாமிய வர்க்கப்பார்வை என்று தனித்தெல்லாம் கிடையாது. தனிநபர் வாதத்திலேயே மூழ்கித்திளைத்தால் என்ன செய்வது? இதுபோக இந்து முசுலீம் கிறித்தவன் என்ற மத அடிப்படையிலான பாகுபாடு தற்போது வரை உங்களது பின்னுட்டத்தில் தான் இருக்கிறது. சான்றாக “இசுலாமியர்கள் வசிக்கும் தெருக்களில் ஒரு இந்துக்கு வீடு வாடகைக்கு பார்த்து தருமா”

    700 கோடி பெறுமான தனிவிமானம் வைத்திருக்கிற சவுதி இளவரசர் காலித், ஆட்டுக்கால் சுட்டுப்பிழைக்கும் மக்களோடு தங்கமாட்டார். அதே சமயம், இந்து நாளிதழில் விளம்பரம் போடுகிற விஜிடேரியன் வகை பிளாட்டுகளை மயிலாப்பூர் மாமி வாங்கமுடியுமா? இதுதானே வர்க்கப்பார்வை.

    இது ஒருபுறமிருக்க, மதுரை நெல்பேட்டையில் அடித்தட்டு இசுலாமியர்களும் இந்துமதத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளும் தான் வாழ்கிறார்கள். மதுரை மட்டுமல்ல ஆற்றங்கரை ஓரத்தில் இவர்கள் தான் வாழ்கிறார்கள். அதுதான் நால்வர்ணம். மேலமாசிவீதியில் இன்றைக்கும் அக்ராகாரத்து ஆட்கள் தான் இருக்கிறார்கள். மதுரை சதுரம் சதுரமாக இருக்கும் என்று கட்டிட அமைப்பை வியப்பவர்கள் ஒவ்வொரு சதுரமும் ஒரு சாதிக்கு என்பது தெரியாதா? இந்நிலையில் நெல்பேட்டை முசுலீம்கள் குடியிருப்பில் இந்துவின் எந்தசாதிப் பிரிவினர் தங்க சம்மதிப்பார்கள் என்று கருதுகீறிர்கள்?

  36. மதுரை நெல்பேட்டை மட்டும் இல்ல சென்னை சேரிகளிலும் பெருநகரங்களில் இருக்கும் தனித்த ஆடையாளத்துடன் இருக்கும் நெல்பேட்டை போன்ற இடங்களிலும் ஒடுக்கப்பட்ட சாதியினருடன் ஆதிக்க சாதி என் கிற சாதியினறும் முசுலீம் களும் கலந்து வாழ்கிறார்கள் நான் கேட்டது எல்லா உழைக்கும் மக்களுக்கும் கஸ்டப்டும்போது இசுலாமியர்களுக்கும் மட்டும் ஏன் பேசுரிங்க

  37. குழப்பவாதி தம்பி வியாசன்,

    [1]வியாசன் போன்ற குழப்பவாதிகள் ராமன் கதை சொன்னால், “விடிய விடிய ராமர் கதை விடிஞ்சாப் பிறகு ராமனுக்கு சீதை என்ன முறை” என்று கேட்க தான் செய்வார்கள் தம்பி வியாசன் !

    [2]வியாசன் அவர்கள் ஓரினச்சேர்க்கை எதீர்பாளர்களான ஸ்ரீலங்கன் அதீபர் ராஜபச்ச, ஈரான் அதீபர் அஹ்மதினேஜாத் ஆகியோரை எதிர்க்கும் அதே நேரத்தில் ஓரினச்சேர்க்கை ஆதரவாலரான கஜினியையும் [In the name of Islam ] எதிர்க்கும் காரணம் என்ன ? என்பது தான் என் கேள்வி !இதில் இஸ்லாம் மதத்தை இணைக்க வேண்டிய அவசியம் வியாசனுக்கு ஏன் வந்தது ?

    [3] ஈரான் அதீபர் அஹ்மதினேஜாத் ஓரினச்சேர்க்கை எதீர்பாளர்களாக இருப்பது இஸ்லாம் மதத்தீன் மீது உள்ள பற்று காரணம் என்று இருக்கும் போது அதை வியாசன் எதிர்க்கும் போது ,யார்[அஹ்மதினேஜாத் அல்லது கஜினி ] போக்கு சரி என்று குழப்பவாத தம்பி வியாசன் கூறமுடியுமா ?

    [4]குழப்பவாதி தம்பி வியாசன் மட்டும் இல்லாது விட்டால், இந்த வினவு இணையத்தளமே முடங்கீ விடாது என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது. தம்பி வியாசன் நல்ல முடிவை எடுத்து வினவு வாசகர்களை காப்பாத்துவார் என்று நேற்று வரை நம்பிநோம். ஆனால் இன்று மீண்டும் தன் வாயடலை தொடங்க்கீ விட்டார் ! வினவு வாசகர்களுக்கு வீடுதலையே கிடையாதா ?

    சரி சரி மேட்டருக்கு வருவோம் !

    [5]
    [i]உங்கள் முந்தைய கருத்தீன் படி “தெலுங்கர்கள்-வந்தேரிகள்-வடகர்கள் ” கொள்கைகள் எல்லாம் வழக்கு அழீந்து விட்டதா ?

    [ii]உங்கள் தமிழ் இனம் ,தமிழ் மொழி பற்று எல்லாம் நீர்த்து விட்டதா ?

    [iii]இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது என்று திடிர் என்று கூறுவது ஏன் வியாசன் ?

    [iv]தமிழ் இனம் ,தமிழ் மொழி பற்று எல்லாம் போன மாதம் , இந்துமதப்பற்று இந்த மாதமா ?

    viyasan://“காஸ்மீரிலிருந்து கதிர்காமம் வரை வாழ்ந்த, இன்றும் அங்கு வாழ்கின்ற பெரும்பான்மை மக்களை இந்துமத அல்லது இந்தியாவில் உருவாகிய இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது விட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.”//

  38. குழப்பவாதி தம்பி வியாசன்,

    [1] வெற்றிவேல் தெளிவாகத்தானே கூறுகின்றார் வியாசன் ! வெற்றிவேல் பிரிட்னிக்காவில் இருந்து எடுத்து கூறுவது வியாசனுக்கு புரியவீல்லையா ?

    “To some Muslim writers he was a great champion of his faith, an inspired leader endowed with supernatural powers. Most Indian historians, on the other hand, emphasize his military exploits and depict him as “an insatiable invader and an intrepid marauder.” —-Neither view is correct—— ”

    ####Neither nor , Either or இதற்கு எல்லாம் பொருளை இங்கிலீஷ் grammar bookகீல் ஒழுங்க்கா படிக்கவும் வியாசன்!

    [2]ஒருவேளை வெற்றிவேல் அவர்கள் “he was a great champion of his faith” என்று கூறி இருந்தால் நீங்கள் கஜினியீன் ஓரினச்சேர்க்கை பற்றி இஸ்லாம் அடிப்படையீல் தவறு என்று கூறலாம்.ஆனால் வெற்றிவேல் அவர்கள் —-Neither view is correct—— என்று மறுக்கும் போது கஜினியீன் ஓரினச்சேர்க்கை பற்றி பேசவேண்டிய தேவை என்ன ?

    [3]வெற்றிவேல் அவர்கள் கஜினியை இஸ்லாம் மத அடிப்படைவாதி என்றும் , கஜினி ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என்றும் கூறாதபோது ,அவர் கூறாத கருத்துக்கு நீங்கள் பதில் அளீப்பது;வீண் பரபப்பை ஏற்படுத்துவது ஏன் ?

    viyasan://அவரை [கஜினி]எப்படி “ he was a great champion of his faith” என்று அழைக்க முடியும் என்பது மட்டும் தான் என்னுடைய கேள்வி.. இனிமேலும் புரியாது விட்டால், இதைப் பற்றிய உங்களின் எந்தக் கேள்விக்கும் நான் பதிலளிக்கப் போவதில்லை. சரியா? //
    viyasan://நான் எழுதிய பதிலில் ஏன் கஜினி முகம்மது ஓரினச்சேர்க்கையாளர் என்பதைக் குறிப்பிட்டேன் என்றதற்கான விளக்கமும் இருக்கும் போது, அதை வெளியிடாமல், இவ்வளவு நீண்ட விளக்கம் அளிப்பது தான் வினவின் கருத்துச் சுதந்திரமா? நான் வெற்றிவேல் என்பவரின் கருத்துக்குத் தான் எனது பதிலையளித்திருந்தேன். அதனால் நான் கஜினி முகம்மது ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்ற உண்மையைக் குறிப்பிட்டதற்கான காரணம் அந்தப் பதிலில் உண்டு. என்னுடைய பதிலை வெளியிடுவீர்கள் என நம்புகிறேன். நன்றி//
    viyasan//“இஸ்லாத்தில் இவ்வளவு ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட கஜினி முகம்மது ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இருந்திருக்கிறார். ஆனால் இஸ்லாத்தில் ஓரினச் சேர்க்கையும், ஆணை ஆண் காதலிப்பதும், தடை செய்யப்பட்டது மட்டுமல்ல, ஹராமும் கூட. அதனால் கஜினி முகம்மது, உண்மையில் இஸ்லாத்தின் விதிகளின் படி ஒழுகியவர் அல்ல என்பது தான் நான் கூறிய கருத்தாகும்.”//

Leave a Reply to munna பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க