Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விமதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் கல்யாணியை பதவி நீக்கு

மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் கல்யாணியை பதவி நீக்கு

-

துரை காமராஜர் பல்கலை துணைவேந்தராக, விதிமுறைகளை மீறி நியமனம் செய்யப்பட்ட கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லாது என ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்திருக்கிறது. விதிமுறைப்படி பேராசிரியராக பணிபுரிந்தவர்களே துணை வேந்தராக நியமிக்க முடியும். ஆனால் கல்யாணி மதிவாணன் இணைப் பேராசிரியராக பணிபுரிந்தவர் என்பதால் நீதிமன்றம் இவரது நியமனத்தை ரத்து செய்திருக்கிறது. மேலும் இந்த வழக்கில் அரசு மற்றும் துணைவேந்தர் தரப்பு வாதம் மிகவும் அபாயகரமானது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

அதிமுக அரசு செல்வாக்குடன் நியமிக்கப்பட்ட கல்யாணி மதிவாணன் தனது பதவிக்காலத்தில் செய்த முறைகேடுகளை விரிவான பதிவு செய்திருக்கிறோம். இதை எதிர்த்தவர்களை ஆள் வைத்து அடித்தும், மிரட்டியும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்த துணை வேந்தர் இறுதியில் நீதிமன்றத்தாலேயே அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறார். எனினும் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதும், அதற்கு அரசு தரப்பு உதவி செய்வதும் நடக்கும்.

அதற்கு எதிராக நாம் இப்போதே போராட்டத்தை தொடர வேண்டும்.

மதுரை காமராசர் பல்கலை துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு கல்தா!

மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பொய் சொல்லி ஏமாற்றி பதவி பெற்ற கல்யாணியை உடனே பதவி நீக்கு!

மதுரை காமராசர் பல்கலையின் மாண்பினைக் காக்க ஒன்றிணைந்து தொடர்ந்து போராடுவோம்!

கல்யாணி மதிவாணன்
கல்யாணி மதிவாணன்

ஆர்ப்பாட்டம்

நாள் : 27-06-2014, வெள்ளிக் கிழமை

நேரம் : காலை 10.00 மணி
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

தமிழக அரசே

  • தகுதியில்லாத மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை உடனடியாகப் பதவி நீக்கம் செய்

அனைவரும் அணிதிரண்டு வாரீர்

தகவல்

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை
94434 71003