privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !

மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !

-

“இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது ” என்று மோடி அரசின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிவித்திருக்க்கிறார். இந்தித் திணிப்பு, ராமேஸ்வரம் மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்வது, காவிரியில் தண்ணி கிடையாது போக விலைவாசி உயர்வு, கட்டண உயர்வு என்று பாஜக பட்டையைக் கிளப்பி வரும் நேரத்தில் சுரணையுள்ள தமிழ் மக்களுக்கு இந்த அறிவிப்பு ஆச்சரியம் அளித்திருக்காது. வெறுப்பையும் கோபத்தையும் அளித்திருக்கும்.

ராமதாஸ்ஈழம் தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் காங்கிரசு, பாஜகவிற்கு வேறுபாடில்லை என்பதை தேர்தலுக்கு முன்பு அறியாத அப்பாவிகள் கூட தற்போதைய மோடி அரசின் செயல்பாடுகளைப் பார்த்து ஒருமாதத்திலேயே திருந்தி விட்டார்கள். ஆனால் அப்படி திருந்துபவர்களை கூட தேடிப்பிடித்து காவி நாமம் போட்டு கட்டி வைப்பதை பாமக ராமதாஸ் தினசரி தவமாக செய்து வருகிறார்.

ஐ.நா மனித உரிமை ஆணைய விசாரணையே கூட இலங்கையுடன் ஏகாதிபத்தியங்கள் நடத்தும் ஒரு செல்ல விளையாட்டுதான். எனினும் அந்த விளையாட்டைக் கூட இந்திய அரசு ஒத்துக் கொள்ளவில்லை. இது ராமதாஸுக்கு அதிர்ச்சியளித்ததாம். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் ஓரிரு நாட்களுக்கு முன்புதான் சுஷ்மா சுவராஜை சந்தித்திருக்கிறார். அப்போது இலங்கையில் இந்திய தரகு முதலாளிகளின் தொழில் சேமகரமாக நடந்து வருவதைச் சொல்லி ஏதோ பாத்து செய்யுங்கள் என்று பெரிஸ் பேசியிருக்கலாம். அம்மாவும் சரிதான் ராசா கவலைப்படாம போயிட்டு வாங்க என்று தேற்றியிருக்கலாம்.

பிறகு அரசு செய்தித் தொடர்பாளர் ஊடக சந்திப்பில், ஐ.நா விசாரணைக்கு ஆதரவில்லை என்று கைவிரித்திருக்கிறார். கூடவே இந்தியா ஐ.நா வாக்கெடுப்பில் பங்கேற்காதது, இலங்கைக்கு வல்லுனர் குழுவை அனுப்பும் தீர்மான பிரிவை எதிர்த்து வாக்களித்தது எல்லாம் சொல்லி இதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு என்று தெளிவாகவே சொல்லி விட்டார். இந்த நிலைதான் காங்கிரசு அரசு ஆண்ட காலத்திலும் இருந்தது. ஆகவே ஈழம் தொடர்பான அணுகுமுறையில், கொள்கை நிலைப்பாட்டில் காங்கிரசு, பாஜக கட்சிகள் மற்றும் அரசுகளுக்கிடையில் எந்த வேறுபாடுமில்லை என்பது மற்றுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் ராமதாஸுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்ததாம். அதிலும் முந்தைய காங்கிரசு கூட்டணி அரசின் நிலைப்பாட்டையே பாஜக அரசும் ஏற்றிருப்பதாக அவர் புலம்புகிறார். இந்த நிலை என்ன இன்றைக்கா உருவானது? ஐ.நா குழு விசாரணையை இலங்கையில் நடத்த ராஜபக்சே மறுத்துவிட்ட நிலையில் அதே விசாரணையை சென்னையில் நடத்த மோடி அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாமக வலியிறுத்தி வந்ததாம். இப்போது அதற்கும் ஆப்பு வைக்கப்பட்ட நிலையில் இந்த ‘வீர வன்னிய குல ஷத்திரிய’ தலைவர் புலம்புகிறார்.

சரி, புலம்பிவிட்டு கண்ணை துடைத்து விட்டு கொஞ்சம் வீரம் வந்து மோடியை கண்டிப்பார் என்று காத்திருந்தால் அடுத்த வரியிலேயே, ‘மோடி அரசு இலங்கைத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்புகிறார்கள்’ என்று கூச்சநாச்சமே இல்லாமல் வழிகிறார். நடிப்பென்றாலும் கூட அங்கே வீரத்திற்கு இடமில்லை. மேலும், ‘மோடி உடனே இலங்கை குறித்த காங்கிரசின் நிலைப்பாட்டை தூக்கிவிட்டு பாமக நிலைப்பாட்டை ஏற்க வேண்டும்’ என கேட்டுக் கொள்கிறாராம்.

உடனே இந்த மனு பிரேசிலில் இருக்கும் மோடிக்கு அனுப்பப்பட்டு அவரும் ராமதாஸுக்கு பயந்து போய் உடன் இந்தியா திரும்பி சென்னையில் விசாரணை நடத்த ஆதரவு என்று அறிவிப்பாராம். ஒருவேளை நரி பரியாகும், எருமை மாடு ஏரோபிளேனை ஓட்டும் என்பதை நம்புபவர்கள் இதையும் நம்பலாம். தலைப்பில் வாழ்நாள் அடிமை என்று போட்டிருக்கிறீர்களே, நாளையே ராமதாஸ் கூட்டணி மாறலாமே என்று சிலர் கேட்கலாம். அப்படி கூட்டணி மாறினாலும் மோடி பயம் ராமதாஸுக்கு போகாது. ஆண்டைகள் குறித்த பயம் அடிமைகளுக்கு எப்போதுமிருக்கும்.

உலகிலுள்ள சந்தர்ப்பவாதிகளில் முதலிடம் யாரென்று கேட்டால் நேற்றுப் பிறந்த குழந்தையும் சொல்லும், அது பாமக ராமதாஸ் என்று. சாதி வெறியைக் கிளப்பிவிட்டு அன்புமணி ராமதாஸை எம்பியாக்கி, பாஜக காலில் விழுந்தாவது அமைச்சராக்க காத்திருக்கிறார் இந்த காரியவாதி! காரியவாதத்தையே நாணிக் கோணி செய்யும் புரட்சிப்புயல் வைகோ வாயிலிருந்தும் இதே போன்றதொரு மோடி அபிமான அறிக்கை வரலாம்.

தாயகமோ, தைலாபுரமோ இனி தமிழ் மக்களின் துரோக சின்னங்களாக கருதப்படும். ராமதாஸின் பச்சையான இந்த சுயநலம் கூட ஈழத்தமிழர்களை பணயம் வைத்து வெட்கமில்லாமல் வெளிப்படுவதுதான் ஆகப் பெரும் வெட்கக் கேடு. சூடு சொரணையுள்ள பாமக ‘தமிழர்கள்’ சிந்திக்கட்டும்.

மேலும் படிக்க