Monday, March 17, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !

மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !

-

“இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது ” என்று மோடி அரசின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிவித்திருக்க்கிறார். இந்தித் திணிப்பு, ராமேஸ்வரம் மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்வது, காவிரியில் தண்ணி கிடையாது போக விலைவாசி உயர்வு, கட்டண உயர்வு என்று பாஜக பட்டையைக் கிளப்பி வரும் நேரத்தில் சுரணையுள்ள தமிழ் மக்களுக்கு இந்த அறிவிப்பு ஆச்சரியம் அளித்திருக்காது. வெறுப்பையும் கோபத்தையும் அளித்திருக்கும்.

ராமதாஸ்ஈழம் தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் காங்கிரசு, பாஜகவிற்கு வேறுபாடில்லை என்பதை தேர்தலுக்கு முன்பு அறியாத அப்பாவிகள் கூட தற்போதைய மோடி அரசின் செயல்பாடுகளைப் பார்த்து ஒருமாதத்திலேயே திருந்தி விட்டார்கள். ஆனால் அப்படி திருந்துபவர்களை கூட தேடிப்பிடித்து காவி நாமம் போட்டு கட்டி வைப்பதை பாமக ராமதாஸ் தினசரி தவமாக செய்து வருகிறார்.

ஐ.நா மனித உரிமை ஆணைய விசாரணையே கூட இலங்கையுடன் ஏகாதிபத்தியங்கள் நடத்தும் ஒரு செல்ல விளையாட்டுதான். எனினும் அந்த விளையாட்டைக் கூட இந்திய அரசு ஒத்துக் கொள்ளவில்லை. இது ராமதாஸுக்கு அதிர்ச்சியளித்ததாம். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் ஓரிரு நாட்களுக்கு முன்புதான் சுஷ்மா சுவராஜை சந்தித்திருக்கிறார். அப்போது இலங்கையில் இந்திய தரகு முதலாளிகளின் தொழில் சேமகரமாக நடந்து வருவதைச் சொல்லி ஏதோ பாத்து செய்யுங்கள் என்று பெரிஸ் பேசியிருக்கலாம். அம்மாவும் சரிதான் ராசா கவலைப்படாம போயிட்டு வாங்க என்று தேற்றியிருக்கலாம்.

பிறகு அரசு செய்தித் தொடர்பாளர் ஊடக சந்திப்பில், ஐ.நா விசாரணைக்கு ஆதரவில்லை என்று கைவிரித்திருக்கிறார். கூடவே இந்தியா ஐ.நா வாக்கெடுப்பில் பங்கேற்காதது, இலங்கைக்கு வல்லுனர் குழுவை அனுப்பும் தீர்மான பிரிவை எதிர்த்து வாக்களித்தது எல்லாம் சொல்லி இதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு என்று தெளிவாகவே சொல்லி விட்டார். இந்த நிலைதான் காங்கிரசு அரசு ஆண்ட காலத்திலும் இருந்தது. ஆகவே ஈழம் தொடர்பான அணுகுமுறையில், கொள்கை நிலைப்பாட்டில் காங்கிரசு, பாஜக கட்சிகள் மற்றும் அரசுகளுக்கிடையில் எந்த வேறுபாடுமில்லை என்பது மற்றுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் ராமதாஸுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்ததாம். அதிலும் முந்தைய காங்கிரசு கூட்டணி அரசின் நிலைப்பாட்டையே பாஜக அரசும் ஏற்றிருப்பதாக அவர் புலம்புகிறார். இந்த நிலை என்ன இன்றைக்கா உருவானது? ஐ.நா குழு விசாரணையை இலங்கையில் நடத்த ராஜபக்சே மறுத்துவிட்ட நிலையில் அதே விசாரணையை சென்னையில் நடத்த மோடி அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாமக வலியிறுத்தி வந்ததாம். இப்போது அதற்கும் ஆப்பு வைக்கப்பட்ட நிலையில் இந்த ‘வீர வன்னிய குல ஷத்திரிய’ தலைவர் புலம்புகிறார்.

சரி, புலம்பிவிட்டு கண்ணை துடைத்து விட்டு கொஞ்சம் வீரம் வந்து மோடியை கண்டிப்பார் என்று காத்திருந்தால் அடுத்த வரியிலேயே, ‘மோடி அரசு இலங்கைத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்புகிறார்கள்’ என்று கூச்சநாச்சமே இல்லாமல் வழிகிறார். நடிப்பென்றாலும் கூட அங்கே வீரத்திற்கு இடமில்லை. மேலும், ‘மோடி உடனே இலங்கை குறித்த காங்கிரசின் நிலைப்பாட்டை தூக்கிவிட்டு பாமக நிலைப்பாட்டை ஏற்க வேண்டும்’ என கேட்டுக் கொள்கிறாராம்.

உடனே இந்த மனு பிரேசிலில் இருக்கும் மோடிக்கு அனுப்பப்பட்டு அவரும் ராமதாஸுக்கு பயந்து போய் உடன் இந்தியா திரும்பி சென்னையில் விசாரணை நடத்த ஆதரவு என்று அறிவிப்பாராம். ஒருவேளை நரி பரியாகும், எருமை மாடு ஏரோபிளேனை ஓட்டும் என்பதை நம்புபவர்கள் இதையும் நம்பலாம். தலைப்பில் வாழ்நாள் அடிமை என்று போட்டிருக்கிறீர்களே, நாளையே ராமதாஸ் கூட்டணி மாறலாமே என்று சிலர் கேட்கலாம். அப்படி கூட்டணி மாறினாலும் மோடி பயம் ராமதாஸுக்கு போகாது. ஆண்டைகள் குறித்த பயம் அடிமைகளுக்கு எப்போதுமிருக்கும்.

உலகிலுள்ள சந்தர்ப்பவாதிகளில் முதலிடம் யாரென்று கேட்டால் நேற்றுப் பிறந்த குழந்தையும் சொல்லும், அது பாமக ராமதாஸ் என்று. சாதி வெறியைக் கிளப்பிவிட்டு அன்புமணி ராமதாஸை எம்பியாக்கி, பாஜக காலில் விழுந்தாவது அமைச்சராக்க காத்திருக்கிறார் இந்த காரியவாதி! காரியவாதத்தையே நாணிக் கோணி செய்யும் புரட்சிப்புயல் வைகோ வாயிலிருந்தும் இதே போன்றதொரு மோடி அபிமான அறிக்கை வரலாம்.

தாயகமோ, தைலாபுரமோ இனி தமிழ் மக்களின் துரோக சின்னங்களாக கருதப்படும். ராமதாஸின் பச்சையான இந்த சுயநலம் கூட ஈழத்தமிழர்களை பணயம் வைத்து வெட்கமில்லாமல் வெளிப்படுவதுதான் ஆகப் பெரும் வெட்கக் கேடு. சூடு சொரணையுள்ள பாமக ‘தமிழர்கள்’ சிந்திக்கட்டும்.

மேலும் படிக்க

  1. விமர்சனத்திற்க்கு உள்ளாவதற்க்கும் ஒரு தகுதி வேண்டும்… ராமதாஸை போன்ற கால் கழுவிகளுக்கு அது கிடையாது… இந்தாளை பற்றி தமிழ்நாட்டிற்க்கே தெரியும், இவங்களையெல்லாம் அப்படியே விட்டு விட வேண்டும், தேவையில்லாமல் இவ__ பற்றி விமர்சித்து ஆளாக்க கூடாது… இவ__, சரத்குமார், டி.ஆர். ராஜேந்திரன், காங்கிரஸ்______, போன்றவர்களை மக்கள் மறக்க வேண்டுமானால், பத்திரிக்கைகள் இவங்களை பற்றி எழுதாமல் இருக்க வேண்டும்….

    • indian’s previous comments

      https://www.vinavu.com/2014/02/26/tcs-answerable-to-umamaheswari-death/
      //ஊரு விட்டு ஊரு வந்தா வேலைய மட்டும் தான் பாக்கனும்… வினவு எழுதியதை போல அந்த பெண் இல்லை… கொலை ஆவதற்க்கு முதல் நாள் ( காதலர் தினத்திற்க்கு முதல் நாள்) மற்றும் கொலை ஆன நாளில் ஒரு மணி நேரம் முன்பாகவே வேலையை விட்டு கிளம்பியது ஏன்… ஆயிரக்கணக்காணோர் வேலை செய்யும் இடத்தில் எல்லோருக்கும் கம்பெனிக்கு வெளியே பாதுகாப்பு கொடுப்பது இயலாத காரியம்… இதுவே அவளோட சொந்த ஊரான சேலத்தில் நடந்தால் வினவு டாடா குழுமத்தை தான் காரணாம் சொல்லுமா? அவ அவ சொந்த பாதுகாப்பை அவளுங்கத்தான் பாத்துக்கணும்… இனிமே சிப்காட்டில் எல்லோரும் விழிப்போடு இருப்பாளுங்க…. இதுக்காக வினவு முக்கி முக்கி அமெரிக்கா வரைக்கும் கூத்தாட தேவையில்லை….//

      https://www.vinavu.com/2013/08/07/art-and-people-mao/
      ///இந்திய, தமிழ்ச் சூழலில் இன்று மேல் வர்க்க, மேல்சாதி மனோபாவமே சந்தைக் கலாச்சாரத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது. இந்த மனோபாவத்தை வெட்டி வீழ்த்த என்ன வேலைகள் செய்ய வேண்டும்?….. மேல்சாதியை ஒன்னும் செய்ய முடியாது…. கடைசி வரைக்கும் மேல்சாதியிடம் கீழ்சாதி வாங்கி குடிச்சிகிட்டேதான் இருக்கும்…நீ எழுதும் போதும் என்ன எழுதுர?? மேல்சாதினு தானே… அப்ப கீழே இருக்குறவன் அடக்கித்தானே வாசிக்கனும்….///

      https://www.vinavu.com/2013/07/12/dharmapuri-police-atrocities/

      ///இனிமேலாவது காலனி எதுலேயும் கலக்காம இருக்கட்டும்… சிறு மீனை பெரு மீன் தின்னுவது இயற்கை தான்… படிக்காதவர்களுக்கு படித்தவர்கள் எடுத்து சொன்னால் நல்லது…//

      Now he is talking about ramadoss

  2. இந்தாளும் இவர் மகனும் அவங்களுக்கு ஒரு காரியம் ஆகணும்னா ____________. ஈழம் பெயரை வைத்து ஏமாற்றி பொழப்பு நடத்துவதில் திருமாவளவனையும் மிஞ்சும் ஒரு மிகப்பெரிய கேடி இந்தாளு.

  3. சிவப்பா இருக்கிரவன் பொய் சொல்லமாட்டான் ,கருப்பா இருக்கிரவன் காரியம் சாதிப்பான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க