Saturday, May 10, 2025
முகப்புசெய்திஐ.டி துறை நண்பர்களை சந்திக்க சிறுசேரி வருகிறோம்

ஐ.டி துறை நண்பர்களை சந்திக்க சிறுசேரி வருகிறோம்

-

ஐ.டி துறை நண்பா, நமக்கான அப்ரைசல் எது?

8 மணி நேர வேலையென்று ஆஃபர் லெட்டர் வாங்கினாலும், 14 மணி நேரத்திற்கு குறையாதது நமது வேலை. என்ஜினியரிங் படிக்க வாங்கிய கடன் தீர்க்க, வெள்ளைக்காரனுக்கு முதுகெலும்பு தேய வேலை பார்த்து வீட்டுக்குப் போனால் காத்திருக்கிறது கிரெடிட் கார்டு பில். அட, கடனுக்கு மேல் கடன் தான் வாழ்க்கையா?

ஐ.டி. துறை நண்பாஉசேன் போல்ட்டை விட வேகமாக ஓடியும் நம்மால் அப்ரைசல் ரேட்டிங்கை ஜெயிக்க முடியவில்லை. ஓடிக் களைத்து மூச்சு வாங்கும் நேரத்தில் வந்து சேருது பிங்க் ஸ்லிப், ரிசஷனாம்! சரி பாஸ், அமெரிக்காவுக்கு தேள் கொட்டினால் சிறுசேரிக்கு நெறி கட்டுவது ஏன்?

கள்ளச் சாராயத்திலிருந்து கல்வி வள்ளல்களான ஜேப்பியாரும், உடையாரும் இன்ஜினியர்களை தயாரிக்க வந்து விட்டார்கள். வருசத்துக்கு லட்சக்கணக்கில் இளமையான இன்ஜினியர்கள் வந்து சேர, நமது காதோர நரையை டீம் லீடர் உற்றுப் பார்ப்பது, ‘நாள்’ குறிக்கவா? காஸ்ட் கட்டிங்கும், சர்வீஸ் கட்டிங்கும் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் என்பது நமக்கு புரியாதா என்ன?

இதெல்லாம் நமக்கு புதிதாக இருக்கலாம் நண்பா; ஆனால் பணிப் பாதுகாப்பின்மை ஆலைத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், பொதுத் துறையினருக்கும் நேர்கிறது. வேலையிழப்பு, கடன், குடும்பப் பொறுப்பு, தற்கொலை, காதல், திருமணம், போராட்டம் எல்லாமும் எல்லாருக்கும் ஒன்றுதான்.

ஆம் நண்பா, கணினியின் திரையோடு மல்லுக் கட்டும் நமது வாழ்க்கையை இயக்கும் சக்தி எது? அந்த சக்தியை வெல்லும் ஆட்டம் எது?

அரசியல், சினிமா, குடும்பம், கல்வி, காதல், கலாச்சாரம் அனைத்திலும் மறைந்திருக்கும் சிக்கலை விடுவிக்க, நம்பிக்கையூட்டும் வழியினை அறிய,

வினவுடன் இணைய விரைந்து வா!

ஐ.டி துறை வாசகர்களுடன் வினவு சந்திப்பு

இடம் : சென்னை, சிறுசேரி சிப்காட் வளாகத்துக்கு வெளியில், பேருந்து நிறுத்தம் அருகில்.
நாள் : ஆகஸ்ட் 13, 2014 புதன்கிழமை நேரம் : மாலை 4 மணி முதல் 7 மணி வரை

அனைவரும் வருக!

வினவு

உழைக்கும் மக்களின் இணையக் குரல்

தொடர்புக்கு
97100 82506, 99411 75876
vinavu@gmail.com

சிறுசேரி வாசகர் சந்திப்பு