Friday, March 21, 2025
முகப்புசெய்திஐ.டி துறை நண்பர்களை சந்திக்க சிறுசேரி வருகிறோம்

ஐ.டி துறை நண்பர்களை சந்திக்க சிறுசேரி வருகிறோம்

-

ஐ.டி துறை நண்பா, நமக்கான அப்ரைசல் எது?

8 மணி நேர வேலையென்று ஆஃபர் லெட்டர் வாங்கினாலும், 14 மணி நேரத்திற்கு குறையாதது நமது வேலை. என்ஜினியரிங் படிக்க வாங்கிய கடன் தீர்க்க, வெள்ளைக்காரனுக்கு முதுகெலும்பு தேய வேலை பார்த்து வீட்டுக்குப் போனால் காத்திருக்கிறது கிரெடிட் கார்டு பில். அட, கடனுக்கு மேல் கடன் தான் வாழ்க்கையா?

ஐ.டி. துறை நண்பாஉசேன் போல்ட்டை விட வேகமாக ஓடியும் நம்மால் அப்ரைசல் ரேட்டிங்கை ஜெயிக்க முடியவில்லை. ஓடிக் களைத்து மூச்சு வாங்கும் நேரத்தில் வந்து சேருது பிங்க் ஸ்லிப், ரிசஷனாம்! சரி பாஸ், அமெரிக்காவுக்கு தேள் கொட்டினால் சிறுசேரிக்கு நெறி கட்டுவது ஏன்?

கள்ளச் சாராயத்திலிருந்து கல்வி வள்ளல்களான ஜேப்பியாரும், உடையாரும் இன்ஜினியர்களை தயாரிக்க வந்து விட்டார்கள். வருசத்துக்கு லட்சக்கணக்கில் இளமையான இன்ஜினியர்கள் வந்து சேர, நமது காதோர நரையை டீம் லீடர் உற்றுப் பார்ப்பது, ‘நாள்’ குறிக்கவா? காஸ்ட் கட்டிங்கும், சர்வீஸ் கட்டிங்கும் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் என்பது நமக்கு புரியாதா என்ன?

இதெல்லாம் நமக்கு புதிதாக இருக்கலாம் நண்பா; ஆனால் பணிப் பாதுகாப்பின்மை ஆலைத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், பொதுத் துறையினருக்கும் நேர்கிறது. வேலையிழப்பு, கடன், குடும்பப் பொறுப்பு, தற்கொலை, காதல், திருமணம், போராட்டம் எல்லாமும் எல்லாருக்கும் ஒன்றுதான்.

ஆம் நண்பா, கணினியின் திரையோடு மல்லுக் கட்டும் நமது வாழ்க்கையை இயக்கும் சக்தி எது? அந்த சக்தியை வெல்லும் ஆட்டம் எது?

அரசியல், சினிமா, குடும்பம், கல்வி, காதல், கலாச்சாரம் அனைத்திலும் மறைந்திருக்கும் சிக்கலை விடுவிக்க, நம்பிக்கையூட்டும் வழியினை அறிய,

வினவுடன் இணைய விரைந்து வா!

ஐ.டி துறை வாசகர்களுடன் வினவு சந்திப்பு

இடம் : சென்னை, சிறுசேரி சிப்காட் வளாகத்துக்கு வெளியில், பேருந்து நிறுத்தம் அருகில்.
நாள் : ஆகஸ்ட் 13, 2014 புதன்கிழமை நேரம் : மாலை 4 மணி முதல் 7 மணி வரை

அனைவரும் வருக!

வினவு

உழைக்கும் மக்களின் இணையக் குரல்

தொடர்புக்கு
97100 82506, 99411 75876
vinavu@gmail.com

சிறுசேரி வாசகர் சந்திப்பு

  1. சந்திப்பு எப்படிப் போனது?
    ஐ.டி. துறையிலிருப்பவர்கள் அதிகம் சம்பாதிக்கக் கூடும். ஆனால் அவர்களும் தொழிலாளர்களே! அவர்கள் தமது உழைப்பின் மூலமே வருவாய் பெறுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்தத் துறை மிகவும் பாதுகாப்பற்ற துறை.
    1. பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் தமது வீடு போன்றவற்றை விற்றுப்படித்துத் தான் இந்தத் துறைக்கு வருகிறார்கள். படிப்பே மூலதனம்.
    2. இந்த மூலதனம் (படிப்பு) நாட்பட நாட்பட காலாவதியாகும். தினந்தோறும் புதிய தொழில்நுட்பங்கள் வருகின்றன. படித்துத்தான் ஆக வேண்டும். இல்லையேல் ஓரங்கட்டப்படுவீர்கள்.
    3. இளைஞர்களுடன் போட்டி போட்டே தொழில் ஓடுகின்றது. வயதாக வயதாக இது சிரமமாகிறது.
    அதே சமயம் மற்றத் தொழிலாளர்களை விட வேறுபட்டவர்கள்
    1. அதிக வருமானம். சிலர் சேமிக்கிறார்கள். சிலர் வீடு போன்றவை வாங்குகிறார்கள். சிலர் தொழிற்துறைகளில் பங்குச்சந்தைகளில் முதலிடுகிறார்கள். இதனால் தாமும் முதலாளியாகலாம் என்ற உணர்வு இருக்கிறது.
    2. சிலர் தாமே freelance ஆக தொழில் தொடங்கியும் இருக்கிறார்கள்.

  2. மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக சமூகத்தில் சமூக உணர்வு இல்லாதவர்கள் ஐ.டி மக்கள். இவர்களுடனான சந்திப்பு எப்படி போனது ? அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.

  3. Ungalukku dhaan braahmnaa apdinaa pudikaadhe? ITla niraya ber naangalum irukome?

    engala mattum avoid panni mathavaala paaka porelaa? Enna pesa porel? adhaan ‘Aadhavan’ apdingaravar sonnaa pola IT kaaraalukku samugha akkarai illaiye? apparam enna pesa porel?

    engalukku koyambed marketkum yendha sambhandhamum illa therunjukongo…

  4. Vinavu,

    Thanks for your initiative. But the people who are part of the IT are against communist or leftist ideas. They argue for free market economy. Let me narrate you one incident in my office. I was travelling in lift in mid-march in my office. People were dicussing abt elections. One 10 yr experienced manager was arguing that electing Modi would bring in more investment. They were discussing as though that was the only need for regime change. Their only idea is “more investment, more jobs, more corporates”.

    Moreover, the managers who eat more profits in projects through hook and crook would be opposed to such suggestions of forming unions. They are the real agents of corporate bosses.

    Anyhow congrats to you in convincing those people.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க