Friday, May 9, 2025
முகப்புசெய்திசென்னையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம் !

சென்னையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம் !

-

ந்தியத் துணைக் கண்டத்தின்
பல்தேசிய இன – மொழி – பண்பாட்டில்
திராவிட இயலை, தமிழ் மரபை
உழைத்துக் கண்டறிந்து
தமிழ் மண்ணில்
தன் குடும்பத்தையே கரைத்துக் கொண்டார்
தமிழறிஞர் கால்டுவெல்.

அவரது இருநூறாம் ஆண்டு விழா
வெற்றுச் சடங்கல்ல,
போர்முழக்கம்!

ந்தியத் துணைக் கண்டத்தின்
ஆயிரம் மொழிகளிலே
திராவிடத் தமிழ்மொழி
உயர்தனிச் செம்மொழி
என்ற உண்மையை
உலகறியச் செய்தவர் கால்டுவெல்!

மொழி, பண்பாடு, மக்கள் வாழ்க்கை,
‘பார்ப்பன மேலாண்மை’
சாதி மேலாதிக்க முரண்கள் என்று
திராவிட இயலை விரிவாக ஆய்ந்து
உள்ளூர் சாதி மயக்கங்களைத் தள்ளி
“பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்”
என்று நிறுவினார் கால்டுவெல்.
அச்சமற்ற கால்டுவெல்லின்
ஆய்வுத் தடங்களை உயர்த்திப் பிடிப்போம்!

மோடி அரசின்
இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு
இந்து – இந்தி – இந்தியா என்ற
இந்து ராட்டிரத் திணிப்பே!

பார்ப்பன இந்து மதவெறிப் பாசிசத்துக்கெதிரான
இன்றைய போரில்
தமிழ் மரபைக் களத்தில் நிறுத்தும்
போர்வாளே கால்டுவெல்!

“உலக மொழிக்கெல்லாம்
தாய் மொழி சமஸ்கிருதம்” என்று
பொய் நெல்லைக் குத்திப்
பொங்குகிறார் மோடி.

மறுகாலனியாக்கக் கொள்ளையை
பார்ப்பனப் பாசிச வழியில்
உறுதிப்படுத்தும் பிரதம மோடி,
‘கடவுள் மொழி சமஸ்கிருதத்’தின்
ஆர்.எஸ்.எஸ். புத்திரனே
என்று புரிந்துகொள்வோம்!

நூறாண்டு முன்பே
பார்ப்பனப் பொய்களைச் சுட்டெரித்து
சமஸ்கிருதத்திலிருந்து
முற்றாக வேறுபட்ட
தனி மூல மொழி திராவிடத் தமிழ் என்று
முழங்கினார் கால்டுவெல்.

கால்டுவெல்லின் ஆய்வுத் தீ பரவட்டும்,
மோடிப் பொய்கள் தூசாகக் கருகட்டும்!

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை
எதிர்த்து முறியடிப்போம் – அந்தப்
போருக்கு ஏற்ற வாளாகக்
கால்டுவெல்லை உயர்த்திப் பிடிப்போம்!

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு,
தேசிய இன அடையாளங்களை அழிக்கும்
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே.

களம் புகுவோம்,
தமிழறிஞர் கால்டுவெல் என்ற வாள் உயர்த்தி
உழைக்கும் மக்களின் தமிழ் மரபைக் காப்போம்!

கால்டுவெல் 200 ஆம் ஆண்டு கருத்தரங்கம்

நாள் : 16.08.2014
நேரம் : மாலை 5 மணி
இடம் :
வெங்கடேஸ்வரா திருமண மண்டபம்
(பனகல் பார்க் அருகில்) தியாகராய நகர், சென்னை –17

தலைமை
தோழர் வே.வெங்கடேசன். செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம் சென்னை

முதல் உரை
இன்றைய அரசியல் சூழலில் கால்டுவெல்லின் தேவை
தோழர் சீ.வாசுதேவன்,
ம.க.இ.க. சென்னை

சிறப்புரை
கால்டுவெல்லும் நூறாண்டு திராவிடக் கருத்தியலும்
பேராசிரியர் வீ.அரசு,
முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழகம்

உணர்வுடன் ஒன்று கூடுவோம் !

கால்டுவெல் கருத்தரங்கம், சென்னை

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

சென்னை
தொடர்புக்கு 95518 69588