privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீர் வெள்ளம் – ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி !

காஷ்மீர் வெள்ளம் – ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி !

-

காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 460-ஐ தாண்டியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

வெள்ளத்தால் சூழப்பட்ட காஷ்மீர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

10 லட்சம் மக்கள் வசிக்கும் ஸ்ரீநகரில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். 20,000-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு மசூதியில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். மொத்தம் 50,000 பேர் மசூதிகளிலும், சீக்கிய குருத்வாராக்களிலும் உள்ளூர் குழுக்கள் நடத்தும் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கின்றனர். பல வீடுகள் நீரால் சூழப்பட்டு அங்கு வசிப்பவர்கள் வெளியேற முடியாமல் மொட்டை மாடியில் சிக்கியிருக்கின்றனர்.

வெள்ளத்தில் போராடும் மக்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“பல கிராமங்களில் பொருட்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. மக்கள் மிகவும் கோபமாகவும், வெறுப்பாகவும், சோர்வாகவும் உள்ளார்கள்” என்கிறார் ஆர்.கே.கான் என்ற போலீஸ் அதிகாரி. சுமார் 3 லட்சம் மக்களுக்கு நிவாரண உதவி இன்னும் போய்ச் சேரவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காஷ்மீரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் குழுக்கள்தான் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டிய மாநில நிர்வாகம் அங்கு செயல்பாட்டிலேயே இல்லை. பாரமுல்லா, பத்தான் போன்ற பகுதிகளில் லாரி உரிமையாளர்கள் தமது வண்டிகளை மீட்புப் பணிக்கு ஈடுபடுத்தியிருக்கின்றனர்.

இந்திய ராணுவம் பிரச்சாரம்
காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய ராணுவம்தான் காஷ்மீர் மக்களை காப்பாற்ற வந்த தேவ தூதர்கள் என தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

பெமினா, ராஜ்பாக், இந்திரா நகர், ஹம்ஹமா, கோக்ஜி பாக், ஹப்பா கடால் மற்றும் பிற பகுதிகளில் மீட்புப் பணிகளை தன்னார்வ இளைஞர்கள் செய்து வருகின்றனர். களத்தில் இல்லாத ஊடகங்களோ, இந்திய ராணுவமும் விமானப் படையும் கொடுக்கும் பிரச்சார புகைப்படங்களை வெளியிட்டு அரசாங்கத்தை பாராட்டி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. காஷ்மீரில் மோசமாக திணறிக் கொண்டிருக்கும் அரசு நிர்வாகம் தொலைக்காட்சி, அச்சு, மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பெருமளவிலான பிரச்சாரத்தை செய்து வருகிறது.

முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவை ஜான் ராம்போ போல சித்தரிக்கிறது எகனாமிக் டைம்ஸ் (‘ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்துடன் போராடிக் கொண்டிருக்கையில், ஓமர் அப்துல்லா முன்னணியில் இருந்து வழி நடத்துகிறார்‘). அவரோ இந்த நேரத்திலும் மாநில சட்டமன்றத்துக்கான தேர்தலை தள்ளிப் போடாமல் நடத்த வேண்டும் என்று தனது கவலையை பேசியிருக்கிறார்.

காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய ராணுவம்தான் காஷ்மீர் மக்களை காப்பாற்ற வந்த தேவ தூதர்கள் என தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் துன்புற்றுக் கொண்டிருக்கும் போது தமது வல்லாதிக்க நலன்களை உறுதி செய்து கொள்ளும் நோக்கத்திலான பிரச்சாரத்தை இந்திய ஆளும் வர்க்கமும், ஊடகங்களும், இந்து மதவெறியர்களும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.

ஊடகங்களின் தேசபக்தி
வெறுப்பை உமிழும் ஊடகங்களின் தேச பக்தி (“சையத் அலி ஷா ஜீலானிக்கு நம்ம உதவி தேவைப்படுது போலிருக்கு”)

உத்தரகாண்ட் வெள்ளத்தின் போது நேரில் போய் பல ஆயிரம் குஜராத்திகளை மீட்டதாக ராம்போ இமேஜ் காட்டிய நரேந்திர மோடி இப்போது காஷ்மீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ 1,000 கோடி உதவித் தொகை அறிவித்து, வெள்ளத்தை இயற்கைப் பேரழிவு என்று அறிவித்திருக்கிறார். காஷ்மீருக்குச் சென்று விமானத்தின் மூலம் வெள்ளத்தை பார்வையிட்டு தனது தேச பக்த பிம்பத்தை கட்டியமைக்க புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இதற்கு மேல் களத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட இந்திய அரசுக்கோ, ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கோ திறனோ, கட்டமைப்போ இல்லை என்பதுதான் நிதர்சனம்.

உண்மையில், தான் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளுக்கு வெளியில் ராணுவம் எந்த மீட்புப் பணிகளிலும் ஈடுபடவில்லை, தாங்கள் ஆக்கிரமித்திருக்கும் பகுதியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீநகர் முழுவதிலும் 6 படகுகள் மட்டுமே இருந்த நிலையில் ராணுவ அதிகாரிகளையும் அவர்களது குடும்பங்களையும் காப்பாற்றுவதை  பொது மக்களை காப்பாற்றியதாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நட்சத்திர ஹோட்டல்களில் சிக்கிக் கொண்ட சுற்றுலா பயணிகளை மீட்க டெல்லியில் செல்வாக்கு வாய்ந்த அவர்களது உறவினர்கள் மூலம் உத்தரவு பெற்று ராணுவம் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.

டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் இந்துமத வெறியர்கள், “துரோகிகள் சாகட்டும்”, “காஷ்மீர் அழிந்து மீண்டும் சதிசார்* ஆகும்” என்றும் வெறியை கக்குகின்றனர். விதால் இன் எக்சைல் என்ற பேஸ்புக் பயனர், “காஷ்மீரில் இருந்து மகிழ்ச்சிகரமான காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. அது மீண்டும் சதிசார்* ஆக மாறிக் கொண்டிருக்கிறது. பாவிகள் துடைத்தெறியப்பட்டு தர்மம் நிலைநாட்டப்படும். இன்னும் 30 நாட்களுக்கு மழை நிற்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன்” என்று வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்.

பேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்
பேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்

*10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இன்றைய காஷ்மீர் பகுதி ஒரு மிகப்பெரிய ஏரியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

உண்மையில், காஷ்மீரை தொடர்ந்து ஆக்கிரமித்து காஷ்மீர் மக்களை ஒடுக்கி வரும் இந்திய ராணுவம் அம்மக்களுக்கு உதவி செய்வது ஒரு போதும் சாத்தியமில்லை. இந்திய ராணுவம் காஷ்மீரை விட்டு வெளியேறினால், அவர்கள் பாதுகாப்பாக மூட்டை கட்ட உதவி செய்வதோடு அவர்களுக்கு சோறு போட்டு வழியனுப்புவதையும் மக்கள் உறுதி செய்வார்கள். ஆக்கிரமிப்பு சக்தியான இந்தியா தனது பிரச்சார நோக்கத்துக்காக செய்வதாகக் காட்டிக் கொள்ளும் உதவி அம்மக்களுக்கு தேவையில்லை என்பதுதான் உண்மை.

படங்கள் : நன்றி hindustantimes.com
கட்டுரை : countercurrents.org கட்டுரைகளை தழுவி

மேலும் படிக்க