Sunday, May 26, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீர் வெள்ளம் – ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி !

காஷ்மீர் வெள்ளம் – ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி !

-

காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 460-ஐ தாண்டியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

வெள்ளத்தால் சூழப்பட்ட காஷ்மீர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

10 லட்சம் மக்கள் வசிக்கும் ஸ்ரீநகரில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். 20,000-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு மசூதியில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். மொத்தம் 50,000 பேர் மசூதிகளிலும், சீக்கிய குருத்வாராக்களிலும் உள்ளூர் குழுக்கள் நடத்தும் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கின்றனர். பல வீடுகள் நீரால் சூழப்பட்டு அங்கு வசிப்பவர்கள் வெளியேற முடியாமல் மொட்டை மாடியில் சிக்கியிருக்கின்றனர்.

வெள்ளத்தில் போராடும் மக்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“பல கிராமங்களில் பொருட்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. மக்கள் மிகவும் கோபமாகவும், வெறுப்பாகவும், சோர்வாகவும் உள்ளார்கள்” என்கிறார் ஆர்.கே.கான் என்ற போலீஸ் அதிகாரி. சுமார் 3 லட்சம் மக்களுக்கு நிவாரண உதவி இன்னும் போய்ச் சேரவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காஷ்மீரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் குழுக்கள்தான் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டிய மாநில நிர்வாகம் அங்கு செயல்பாட்டிலேயே இல்லை. பாரமுல்லா, பத்தான் போன்ற பகுதிகளில் லாரி உரிமையாளர்கள் தமது வண்டிகளை மீட்புப் பணிக்கு ஈடுபடுத்தியிருக்கின்றனர்.

இந்திய ராணுவம் பிரச்சாரம்
காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய ராணுவம்தான் காஷ்மீர் மக்களை காப்பாற்ற வந்த தேவ தூதர்கள் என தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

பெமினா, ராஜ்பாக், இந்திரா நகர், ஹம்ஹமா, கோக்ஜி பாக், ஹப்பா கடால் மற்றும் பிற பகுதிகளில் மீட்புப் பணிகளை தன்னார்வ இளைஞர்கள் செய்து வருகின்றனர். களத்தில் இல்லாத ஊடகங்களோ, இந்திய ராணுவமும் விமானப் படையும் கொடுக்கும் பிரச்சார புகைப்படங்களை வெளியிட்டு அரசாங்கத்தை பாராட்டி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. காஷ்மீரில் மோசமாக திணறிக் கொண்டிருக்கும் அரசு நிர்வாகம் தொலைக்காட்சி, அச்சு, மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பெருமளவிலான பிரச்சாரத்தை செய்து வருகிறது.

முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவை ஜான் ராம்போ போல சித்தரிக்கிறது எகனாமிக் டைம்ஸ் (‘ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்துடன் போராடிக் கொண்டிருக்கையில், ஓமர் அப்துல்லா முன்னணியில் இருந்து வழி நடத்துகிறார்‘). அவரோ இந்த நேரத்திலும் மாநில சட்டமன்றத்துக்கான தேர்தலை தள்ளிப் போடாமல் நடத்த வேண்டும் என்று தனது கவலையை பேசியிருக்கிறார்.

காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய ராணுவம்தான் காஷ்மீர் மக்களை காப்பாற்ற வந்த தேவ தூதர்கள் என தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் துன்புற்றுக் கொண்டிருக்கும் போது தமது வல்லாதிக்க நலன்களை உறுதி செய்து கொள்ளும் நோக்கத்திலான பிரச்சாரத்தை இந்திய ஆளும் வர்க்கமும், ஊடகங்களும், இந்து மதவெறியர்களும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.

ஊடகங்களின் தேசபக்தி
வெறுப்பை உமிழும் ஊடகங்களின் தேச பக்தி (“சையத் அலி ஷா ஜீலானிக்கு நம்ம உதவி தேவைப்படுது போலிருக்கு”)

உத்தரகாண்ட் வெள்ளத்தின் போது நேரில் போய் பல ஆயிரம் குஜராத்திகளை மீட்டதாக ராம்போ இமேஜ் காட்டிய நரேந்திர மோடி இப்போது காஷ்மீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ 1,000 கோடி உதவித் தொகை அறிவித்து, வெள்ளத்தை இயற்கைப் பேரழிவு என்று அறிவித்திருக்கிறார். காஷ்மீருக்குச் சென்று விமானத்தின் மூலம் வெள்ளத்தை பார்வையிட்டு தனது தேச பக்த பிம்பத்தை கட்டியமைக்க புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இதற்கு மேல் களத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட இந்திய அரசுக்கோ, ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கோ திறனோ, கட்டமைப்போ இல்லை என்பதுதான் நிதர்சனம்.

உண்மையில், தான் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளுக்கு வெளியில் ராணுவம் எந்த மீட்புப் பணிகளிலும் ஈடுபடவில்லை, தாங்கள் ஆக்கிரமித்திருக்கும் பகுதியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீநகர் முழுவதிலும் 6 படகுகள் மட்டுமே இருந்த நிலையில் ராணுவ அதிகாரிகளையும் அவர்களது குடும்பங்களையும் காப்பாற்றுவதை  பொது மக்களை காப்பாற்றியதாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நட்சத்திர ஹோட்டல்களில் சிக்கிக் கொண்ட சுற்றுலா பயணிகளை மீட்க டெல்லியில் செல்வாக்கு வாய்ந்த அவர்களது உறவினர்கள் மூலம் உத்தரவு பெற்று ராணுவம் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.

டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் இந்துமத வெறியர்கள், “துரோகிகள் சாகட்டும்”, “காஷ்மீர் அழிந்து மீண்டும் சதிசார்* ஆகும்” என்றும் வெறியை கக்குகின்றனர். விதால் இன் எக்சைல் என்ற பேஸ்புக் பயனர், “காஷ்மீரில் இருந்து மகிழ்ச்சிகரமான காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. அது மீண்டும் சதிசார்* ஆக மாறிக் கொண்டிருக்கிறது. பாவிகள் துடைத்தெறியப்பட்டு தர்மம் நிலைநாட்டப்படும். இன்னும் 30 நாட்களுக்கு மழை நிற்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன்” என்று வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்.

பேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்
பேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்

*10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இன்றைய காஷ்மீர் பகுதி ஒரு மிகப்பெரிய ஏரியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

உண்மையில், காஷ்மீரை தொடர்ந்து ஆக்கிரமித்து காஷ்மீர் மக்களை ஒடுக்கி வரும் இந்திய ராணுவம் அம்மக்களுக்கு உதவி செய்வது ஒரு போதும் சாத்தியமில்லை. இந்திய ராணுவம் காஷ்மீரை விட்டு வெளியேறினால், அவர்கள் பாதுகாப்பாக மூட்டை கட்ட உதவி செய்வதோடு அவர்களுக்கு சோறு போட்டு வழியனுப்புவதையும் மக்கள் உறுதி செய்வார்கள். ஆக்கிரமிப்பு சக்தியான இந்தியா தனது பிரச்சார நோக்கத்துக்காக செய்வதாகக் காட்டிக் கொள்ளும் உதவி அம்மக்களுக்கு தேவையில்லை என்பதுதான் உண்மை.

படங்கள் : நன்றி hindustantimes.com
கட்டுரை : countercurrents.org கட்டுரைகளை தழுவி

மேலும் படிக்க

 1. முஸ்லீம் தீவீரவாதிகளை ஆதரிக்கும் வினவு எதுவுமே தெரியாமல் குதிப்பது சிரிப்பாக உள்ளது…. எந்த விசயத்தை பற்றி பேசும் முன் அதற்கு நமக்கு தகுதி உள்ளதா என்று ஆராய வேண்டும்… தெரு ஓர அரசியல் மீட்டிங்கில் ப.ம.கவின் வட்ட செயலாளர், அமெரிக்க அதிபருக்கு சவால் விடுவதை போல, எல்லோரும் சாப்பிட்ட எச்சில் இலையில் இருந்து பொறுக்கி எடுத்து, வினவு படையல் போட்டிருப்பது, கேவலம்…காஷ்மீர் ஒரு மயித்துக்கு உதவாத ஒரு மாநிலம்…இரு நாட்டுக்கு அது ஒரு அரசியில் விளையாட்டு திடல்… மூன்று முறை போரில் தோற்ற பாகிஸ்தான் பக்கம் சாய அந்த மாநில மக்கள் தயாராக இல்லை, அதே சமயம் தங்கள் குழந்தைகள் தீவீரவாதிகள் ஆவதையும் விரும்பாத குழப்பமான மக்கள்…. அழிந்து போன பல இனங்களில் காஷ்மீரும் இன்னும் சில நூறு வருடங்களில் சேரும்….ஈழம் போல ஒரு முடிவு இதற்கும் வரும்…அதை பாகிஸ்தான் ஆரம்பிக்கும், இந்தியா முடிக்கும்….

 2. வினவுக்கு இந்திய இராணுவத்தின் மேல் இத்தனை வெறுப்பு?
  அவர்கள் மக்களுக்கு உதவி செய்தாலும் அதில் குறை கண்டுபிடிக்க வினவால் மட்டுமே முடியும்.

  இராணுவம் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறுகிறீர்களே, கஷ்மீர் மாநிலத்தில் காலம் காலமாக வாழ்ந்து வந்த பண்டித குடும்பங்களை ஆயுதம் மூலம் பயமுறுத்தி வெளியேற்றிய தீவிரவாதிகள் செயலை என்னவென்று சொல்வீர்கள்? இது போன்ற பேரழிவு காலங்களில் அனைவரின் உதவியும் தேவை. இராணுவம் உதவி செய்வதை கொச்சை படுத்துவது சரியல்ல.

  மக்களுக்காக போராடுங்கள், குரல் கொடுங்கள். ஆனால் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்காதீர்கள். தீவிரவாதம் எப்போதுமே இருமுனை கத்தி தான். அது எப்போது வேண்டுமானாலும் ஆதரித்தவனையே போட்டு தாக்கும்.

  எப்போதும் ஒருதலைப்பட்சமாக யோசிக்காதீர்கள்.
  சமீப காலங்களில் பாகிஸ்தான் ஆதரவாகவும், கஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் மட்டுமே வினவு பதிவிடுகிறது. அவர்களால் நமது மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் தங்களுக்கு தெரியாதா என்ன?

  சோ, சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் தாங்கள் நடுநிலையானவர்கள் என்று பறைசாற்றிக்கொள்வார்கள். துக்ளக் பத்திரிகையில் சோ திமுகவையும் அதிமுகவையும் சேர்த்து எதிர்ப்பதாக பெருமையடித்து கொள்வார். ஆனால் அவரது அதிமுக எதிர்ப்பு என்பது மயிலிறகால் தடவுவதை போலவும், திமுக எதிர்ப்பு என்பது ஜென்ம பகையாளியை அழிக்கும் உத்வேகத்துடனும் இருக்கும். சமீப காலங்களில் சீமானும் அந்த வகையில் சேர்ந்து விட்டார்.

  அதே போல வினவும், தீவிரவாதிகள் விடயத்தில் நடுநிலை என்று சொல்லிக்கொண்டு PSEUDO NEUTRAL ஆக பதிவுகள் இடுகிறது. இது சரியல்ல வினவு.

  யார் தவறு செய்தாலும் தட்டிக்கேளுங்கள். அது தங்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, நடுநிலை தவறாதீர்கள்.
  யார் நல்லது செய்தாலும் மனமுவந்து பாராட்டுங்கள்.

  ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். உலகில் முழுக்க முழுக்க நல்லவனும் இல்லை. முழுக்க முழுக்க அயோக்கியனும் இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு GREY AREA உண்டு.

  இராணுவத்தை எதற்கு எடுத்தாலும் குறை சொல்கிறீர்களே, அவர்களது வேலையை அவர்கள் சரியாக செய்யாவிடில் இன்று நீங்கள் இப்படி சுதந்திரமாக பதிவிட முடியுமா?
  நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக வெயிலிலும் மழையிலும், நடுங்கும் பனிக்குளிரிலும் உயிரை பணயம் வைத்து நமது எல்லையை பாதுகாக்கும் இராணுவத்தினரை தயவு செய்து இகழ வேண்டாம், பழிக்க வேண்டாம்.

  • சரியான நேரத்தில் சரியாக எழுதப்பட்ட கருத்து. வினவு போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளிடம் நல்லதை எதிர்பார்க்க முடியாது. நாட்டுப்பற்று என்பதே கிடையாது. இஸ்லாமியத்தை தலைதூக்கிவிடவேண்டும் என்று நினைக்கிறது. ________________ இந்திய ராணுவம் பல்வேறு இன்னல்களுக்கு இடையே காஷ்மீரில் தொண்டு செய்து வருகிறது. இதனை கொச்சைப்படுத்துவது தர்மமுமாகாது நீதியுமாகாது.

 3. Idiot vinavu

  Narendra Modi did not do aerial survey through helicopter unlike Sonia and Manmohan. He was doing on the ground. He also directed army to help PoK also. This vinavu is more dangerous than ISIS and Al qaeda. Even Pakistan were applauding Modi.

 4. இந்தியாவின் பரம எதிரி ஹிந்துத்வாவினர்தான் .இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை .அவர்களை ஒழித்தாலே 75% பிரச்சனைகள் காணாமல் போய் விடும் .மீதிதான் அந்நிய சக்திகள் .அவர்களை உண்மையான இந்தியர்களின் ஒற்றுமையால் வீழ்த்த முடியும் .ஹிந்துத்வா சதிகாரர்களுக்கு உயர் ஜாதி இந்து தேசமே குறிக்கோள் .ஒற்றுமையான இநதியா அல்ல .ஹிந்து, இந்தியா பெயர் ஒற்றுமையால் சராசரி இந்தியர்களையும் அவர்களால் இன்றுவரை ஏமாற்ற முடிகிறது. அவர்களின் உண்மையான கொள்கை என்னவென்று தெரிந்தால் அவர்களின் இனத்தவரை தவிர யாரும் சீந்த மாட்டார்கள் .ஹிந்துத்வாவினர் யாரும் நல்லவர்களே கிடையாது .தேனொழுக பேசி ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள் .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க