Thursday, July 3, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்குடிகாரன், ஸ்த்ரீலோலன் இராமன் : டாக்டர் அம்பேத்கர்

குடிகாரன், ஸ்த்ரீலோலன் இராமன் : டாக்டர் அம்பேத்கர்

-

இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 3

டுத்து இராமனை ஒரு மன்னன் எனும் நிலையில் வைத்து ஆராய்வோம். அறநெறி பிறழாத இலட்சிய மன்னன் என இராமன் கருதப்படுகிறான். ஆனால் இந்த முடிவு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதா? உண்மை என்னவெனில் இராமன் மன்னனாயிருந்து ஒரு போதும் கோலோச்சவில்லை. பெயரளவில்தான் அவன் மன்னனாய் இருந்திருக்கிறான். ஆட்சிப் பொறுப்பு அனைத்தும் அவன் தம்பி பரதனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது என்று வால்மீகியே சொல்கிறார். அரசாட்சி மற்றும் நாட்டுப் பரிபாலனத்திலிருந்து இராமன் முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டிருந்தான்.

இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான் (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).

இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்கு தான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவை பொருட்கள் அனைத்தும் இடம்பெற்றன; மது, மாமிசம், பழ வகைகள் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8) என வால்மீகி குறிப்பிடுகிறார்.

அந்தப்புரப் பெண்களுடன் இராமன் வாழ்ந்து கழித்ததாய் வால்மீகி சொல்லும் விவரங்கள் அற்பமானவை அல்ல. அந்தப்புரத்தில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உரகா மற்றும் அப்சரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இந்த அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து, கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் இராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர். பதிலாக இராமன் அப்பெண்களுக்கு மாலை அணிவிப்பானாம். வஞ்சியரின் வளையத்துள் கிடந்த ஆடவருள் இளவரசன் இராமன் முதல்வன் என்கிறார் வால்மீகி. இவை இராமனின் ஒரு நாள் வாழ்க்கை நிகழ்ச்சிகளல்ல. இராமனுடைய வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளே இவை.

நாட்டு நிர்வாகத்தில் இராமன் எப்போதும் பங்கேற்றதில்லை என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக் கூட இராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகிறார். அதுவும் ஒரு துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படி செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

சம்பூகன்
சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் இராமன்.

இராமனுடைய ஆட்சிக் காலத்தில் அவனுடைய நாட்டு மக்கள் யாரும் அகால மரணம் அடையவில்லை என்கிறார் வால்மீகி. இருந்த போதிலும் பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது. மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்தி விட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்கு காரணம் என்றான். அக்குற்றத்தை அறிந்து தண்டிக்காவிட்டால் மன்னன் இராமனே குற்றவாளி என்றான். மனம் போனபடி பழித்தான்; சபித்தான். குற்றவாளியைப் பிடித்து தண்டித்து செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் (தர்ணா) நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என அச்சுறுத்தினான். அதைக் கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான்.

அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், “நாட்டு மக்களுள் அதாவது இராம இராஜ்யத்தில் யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும், அச்செயல் தருமத்திற்கு எதிரானது” என்றும் நாரதன் சொன்னான். “தரும (புனித) சட்டங்களின்படி, பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்கு சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை” என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்துவரப் புறப்பட்டான். இறுதியில் நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்த தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா, மனித உருவிலேயே மோட்சத்திற்கு செல்ல தவம் செய்பவனா என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் இராமன்.

அதே நொடியில் எங்கோ தொலை தூரத்து அயோத்தியில் அகால மரணமடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம். கடவுள்களெல்லாம் மன்னன் இராமனின் மீது மலர் தூவி மகிழ்ந்தார்களாம். தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டதைத் தடுத்து, தண்டித்து சம்பூகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக அவர்கள் மகிழ்ந்தார்கள். கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன்தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக அவனைப் பாராட்டினார்கள். அயோத்தி அரண்மனை வாசலில் பிணமாய்க் கிடந்த பிராமணச் சிறுவனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கடவுள்களிடம் இராமன் வேண்டினான். ‘’அந்த பிராமணச் சிறுவன் எப்போதோ உயிர்பெற்று எழுந்து விட்டான்’’ என்று அவர்கள் இராமனுக்கு சொல்லி விட்டு மறைந்து போயினர். அதற்குப் பின் இராமன் அருகிலிருந்த அகத்திய முனிவனின் ஆசிரமத்துக்குப் போனான். சம்பூகனைக் கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் இராமனுக்கு பரிசாய் அளித்தான். பிறகு இராமன் அயோத்தியை அடைந்தான். இத்தகையவனே இராமன்.

(தொடரும்…)

(டாக்டர் அம்பேத்கர் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 3)
(பகுதி 4 முதல் கிருஷ்ணனைப் பற்றி பார்க்கவிருக்கிறோம்)

முந்தைய பகுதிகள்

  1. நயவஞ்சகன் இராமன் – டாக்டர் அம்பேத்கர்
  2. சீதையின் பார்வையில் ராமன் அற்பமானவன் : டாக்டர் அம்பேத்கர்

 

  1. // இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27).//

    இந்த பதிவில் டாக்டர் அம்பேத்கரால் மேற்கோள் காட்டப்படும் உத்தர காண்டம் வால்மீகியால் எழுதப்பட்டதல்ல, பிற்சேர்க்கை என்று கூறப்படுகிறது.. ராம கதை பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் வரைதான் நாரதரால் சொல்லப்பட்டு வால்மீகியால் எழுதப்பட்டது என்றும் பிற்சேர்க்கையான உத்தர காண்டத்தில் வால்மீகியே ஒரு கதாபாத்திரமாக வருகிறார், பாலகாண்டத்தில் கூட சில திணிப்புகள் உள்ளதாகவும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.. மேலும் மனுவாதிகளின் கைங்கர்யமும் பிற்சேர்க்கையான உத்தரகாண்டத்தில் பல இடங்களில் இருக்கலாம்..

    http://books.google.co.in/books?id=veYezcrVAlcC&pg=PA123&lpg=PA123&dq=uttara+kanda+yakobi&source=bl&ots=O7HtrPchnf&sig=VJ5hef93KprnkqwzMrtF1lvyaWE&hl=en&sa=X&ei=ngddVLSEK8LbuQSrwICwDw&ved=0CBwQ6AEwAA

    • மனுவாதிகளின் கைவேலை என்றால் இராமனை பற்றி உயர்வாக தானே பிற்சேர்க்கையாக உத்தரகாண்டத்தில் எழுதபட்டு இருக்கவேண்டும் ? ஆனால் இராமனின் வண்டவாளங்கள் அல்லவா வால்மீகி இராமாயணம் உத்தரகாண்டத்தில் உள்ளது ?//மேலும் மனுவாதிகளின் கைங்கர்யமும் பிற்சேர்க்கையான உத்தரகாண்டத்தில் பல இடங்களில் இருக்கலாம்..//

      • ராமரைப் போல் எல்லா ஆட்சியாளர்களும் இருந்தால் எப்படி குஜால் பண்ணமுடியும்.. மேலும் குகன்களும், சுக்ரிவர்களும் வந்து அண்ணே என்று உரிமை கொண்டாடுவார்களே.. பல ஆட்சியாளர்களுக்கு நீக்கு போக்கான ராமர் வேண்டியிருந்தது.. எனவே இது சிலபல ஆட்சியாளர்கள்,மனுவாதிகளின் கூட்டுக் கைங்கர்யமாக இருக்கலாம்.. சம்பூகன்கள் மனுசாத்திரத்தை மீறி தவம் உரிமை என்று ஆரம்பித்தால் கொல்லப்படுவார்கள் என்று பார்ப்பானை முன்னால் காட்டி ஆட்சியாளர்களால் விடப்பட்ட எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.. இந்த எச்சரிக்கையை புரிந்து கொண்ட பார்ப்பனர்களும் ராமாவதாரம் ராவணவதத்தோடு முடிந்தது என்று ராமருக்கு மங்களம் பாடியிருப்பார்கள்.. ஆனாலும் உத்தரகாண்டம் வால்மீகியுடையது அல்ல என்ற மறுப்பும் பரவலாக நிலவிக் கொண்டிருந்தது..

        • அம்பி,

          மனுதர்மவாதிகள் வேறு பார்பனர்கள் வேறு என்று பொருள் வரும் படி அல்லவா அம்பி அவர்கள் பதில் உரை எழுதியுள்ளார் ! இது என்ன பார்பனர்களின் உச்ச நீதிமன்றமா ? இல்லையே ! வினவு மக்கள் மன்றம் அல்லாவா !அறிவு பூர்வமாக எழுதுவதாக நினைக்கும் அம்பி அவர்கள் பார்பன தாத்தா ராம்ஜெத் பார்பனர்களின் உச்ச நீதிமன்றத்தில் technical ஆக வாதாதடுவது போன்று அல்லவா வினவு மக்கள் மன்றத்திலும் வாதாடுகின்றார். நினைத்தால்[சாதகமாக இல்லை] என்றால் உத்தரகாண்டம் பிற்சேர்க்கையானது என்று கூறி வாதத்தில் இருந்து தப்புவது , சாதகம் என்றால் அதையே காட்டி வாதாடுவது என்பது அம்பியின் வேலையாக போய்விட்டது. இதே பிற்சேர்க்கை கான்செப்ட்யை தென்றலுடன் இவர் நடத்திய முருகனை பற்றிய விவாதத்தில் அசைவ முருகன் பார்பனர்களால் குடமுழுக்கு சிகிச்சை மூலம் ஆகம முருகன் ஆக்க பட்ட விடயத்தில் அம்பிக்கு புரியாதது ஏன் ? இதற்கு எல்லாம் காரணம் அம்பியின் அடிமனதில் வேருன்றி உள்ள பார்பனியமா:? அல்லது வேறு என்னவாக இருக்க முடியும் ?

          • Mr Tamil-daagam,This is the usual strategy of right-wing thinkers.About 3 years back,when I raised the issue of Samboogan”s murder in the “Thinnai”site,Late Malarmannan has also told that Uttharagaandam was not written by Vaalmigi.

          • //மனுதர்மவாதிகள் வேறு பார்பனர்கள் வேறு என்று பொருள் வரும் படி அல்லவா அம்பி அவர்கள் பதில் உரை எழுதியுள்ளார் ! //

            மனுவாதிகள் என்பதில் மனுசாத்திரத்தால் பயனடையும் எல்லா பார்ப்பன-சத்ரிய-வைசிய மேட்டுக்குடி பயனாளிகளும் அடக்கம்..

          • // இதற்கு எல்லாம் காரணம் அம்பியின் அடிமனதில் வேருன்றி உள்ள பார்பனியமா:? //

            எனக்கு பார்ப்பனிய முத்திரை குத்துவதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை.. முருகனுக்கும், ராமனுக்கும் பார்ப்பனிய முத்திரை குத்தி இழிவுபடுத்தி இந்துக்களிடம் இருந்து பிரிக்க முயன்றால் அதற்கு தகுந்த விளக்கமளிப்பது ஒரு அடியவனின் கடமை.. டாக்டர் அம்பேத்கர் முற்றிலும் அறம் மற்றும் மனிதநேய அடிப்படையில் அணுகி ராமரை கேள்விக்குள்ளாக்குகிறார், உங்களைப் போல் வன்மத்தோடு அல்ல..

    • வால்மீகி எழுதிய அயோத்தியா காண்டம்,யுத்த காண்டம் கூட இடை சொருகலா அம்பி? அம்பியிடம் பதில் இருந்தால் இதற்கும் பதில் எழுதலாம் :

      [a]வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.(டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர், பக். 449 – 481)

      [b]மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) “உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.”(டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர், பக். 449 – 481)

      நன்றி டாக்டர் அம்பேத்கர், and Vinavu.com

      • // வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). //

        இது டாக்டர் அம்பேத்கரின் மேற்கோளா அல்லது தங்களது கண்டுபிடிப்பா..?!

        இது மந்திரை கைகேயிக்கு புகை போடும் போது அள்ளிவிடுபவை.. ராமனுக்கு பதில் பரதன் அரசனாகவில்லை என்றால் ராமனின் மனைவியர் மகிழ்ச்சியாகவும், பரதனின் மனைவியர் துக்கத்தோடும் இருக்க நேரும் என்கிறாள்.. அப்பனைப் போலவே ராமனும், பரதனும் எதிர்காலத்தில் பலதார மணம் செய்வார்கள் என்பது மந்திரையின் நம்பிக்கைதானே தவிர வால்மீகியின் கருத்தல்ல..

        பார்க்க..: http://www.valmikiramayan.net/utf8/ayodhya/sarga8/ayodhyasans8.htm#Verse12

        // மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.(டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர், பக். 449 – 481) //

        இது இந்தப்பதிவிலேயே வரும் உத்தரகாண்ட மேற்கோளாக இருக்கலாம்..

      • பச்சை பொயி! ராமன் ஒரு வில்!
        ஒரு சொல்!
        ஒரு இல்!
        என மனிதன் எவ்வாறு வாழவேண்டும்
        என்று வாழ்ந்து காட்டிய மகாவிஷ்ணு அவதாரம்..
        ( தொடரும்)

  2. வால்மீகி இராமாயணம் விளிர்க்கும் கதாபாத்திரங்கள் பற்றி பெரியார் அவர்கள் நம் சிந்தனையை தூண்டும் ஒரு சிறு நூல் இராமாயணப்பாத்திரங்கள் என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அதுவும் முழுக்க முழுக்க வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாக கொண்டது. அதிலிருந்து இராமனை பற்றிய சில கருத்துக்கள் :

    பெண்களை கேவலமாக மதித்து இருக்கின்றான்.பெண்களை நம்பகூடாது ,இரகசியத்தை கூறகூடாது [அயோதியாகாண்டம் 100 ஆவது சருக்கம் ]

    தந்தையை மடையன் ,புத்தி இல்லாதவன் என்று கூறுகின்றான் [அயோதியாகாண்டம் 53 ஆவது சருக்கம் ]

  3. அம்பி,

    ஆதி,தொல்குடி தமிழர் கடவுளான முருகனுக்கு அம்பியால் பார்பன முத்திரை குத்தபடுகின்றதே என்ற சினத்தின் காரணமாகத்தான் நானும் ,தென்றலும் உம்முடன் வாதாடிக்கொண்டு உள்ளோம் என்பது இன்னுமா உமக்கு புரியவில்லை அம்பி ? முருகன் எமது கடவுள் அவனுக்கும் பார்பனர்கள் நிலைநிறுத்த விரும்பும் ஹிந்து மதத்துக்கும் ஏதும் தொடர்பு இல்லை என்பதை நீர் உணரும் காலம் எக்காலமோ ?ஆம் அம்பி, முருகன் திராவிடர்- தமிழர் வணங்கும் கடவுள் தான்

    அதே சமையம் இராமன் பார்பனர்களின் அடியாள் ,பார்பனியத்துக்கு சொம்பு தூக்கியவன் என்ற கருத்தும் இராமாயணம் முழுதுமே சுட்டிக்காட்டபட்டு உள்ளதையும் உமக்கு சம்புகன் வதைக்கபட்ட கதை மூலம் உணர்த்த விரும்புகிறேம். பார்பனுக்காக வெறிகொண்டு எழுந்து சூத்திர சம்புகனை கொன்ற இராமன் பார்பனர்களுக்கு வேண்டுமானால் காவல் காரனாகவும் ,தெயவமாகவும் இருக்கலாம்.அதில் எமக்கு ஏதும் கருத்து வேறுபாடு இல்லை அம்பி ! ஆம் அம்பி, இராமன் பார்பனிய ஹிந்து மத கடவுள் தான்.

    இராமனுக்கு பல மனைவிகள் இருக்கும் விடயம் மந்திரை கைகேயிக்கு புகை போடும் காட்சியில் வால்மீகியால் தான் நேரடியாகவே சுட்டி காட்ட படுகின்றது. வால்மீகி தானே இக்கதைக்கு ஆசான். அப்படி இருக்க வால்மிகியின் கருத்தை பொய்யாக எதிர்த்து இராமனை ஏக பத்தினி காரனாக உயர்த்த வேண்டிய அவசியம் உங்களுக்கு இருப்பதை எம்மால் உணர முடிகின்றது அம்பி. மேலும் இராமன்-சீதா திருமணத்துக்கு பின்பு தான் மந்திரை கைகேயிக்கு புகை போடும் காட்சி வருகின்றது.திருமணம் ஆன இராமனை பார்த்து பல மனைவிகள் உள்ளவன் என்று மந்திரை மூலம் வால்மீகி கூறும் போது அம்பிக்கு அதற்க்கு எதிராக கருத்துரைக்க வேண்டிய நோக்கம் இராமனை ஏக பத்தினி விரதன் ,அவன் பார்பனிய ஹிந்து மத கடவுள் தான் என்று உளியுருதுவத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

    முருகனுக்கு பார்பன முத்திரை குத்தும் கயமைதனமும் ,அதன் மூலம் அனைத்து தமிழ் மக்களையும் பார்பனிய ஹிந்து மதத்தின் கீழ் கொண்டு வந்து வன்மமும் உமக்கு இருப்பதை தென்றலுடன் நீர் நடத்தும் முருகன் பற்றிய விவாதத்தின் மூலம் காண முடிகின்றதே அம்பி ? இரட்டை வேடம் உமக்கே அருவருப்பாக இல்லையா அம்பி

  4. // வால்மீகி தானே இக்கதைக்கு ஆசான். அப்படி இருக்க வால்மிகியின் கருத்தை பொய்யாக எதிர்த்து இராமனை ஏக பத்தினி காரனாக உயர்த்த வேண்டிய அவசியம் உங்களுக்கு இருப்பதை எம்மால் உணர முடிகின்றது அம்பி. //

    வால்மீகி தன் ராமாயணத்தில் ராவணனும், சூர்ப்பனகையும் ராமனை எப்படித் திட்டுகிறார்கள் என்பதையும் தான் எழுதி வைத்திருக்கிறார்.. அதுவும் அவர் கருத்தென்று நீங்கள் சொல்லிவிட்டால் நான் உங்களுடன் விவாதிக்கத்தான் முடியுமா..! வால்மீகி கிடக்கிறார் நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும்..

    // முருகனுக்கு பார்பன முத்திரை குத்தும் கயமைதனமும் ,அதன் மூலம் அனைத்து தமிழ் மக்களையும் பார்பனிய ஹிந்து மதத்தின் கீழ் கொண்டு வந்து வன்மமும் உமக்கு இருப்பதை தென்றலுடன் நீர் நடத்தும் முருகன் பற்றிய விவாதத்தின் மூலம் காண முடிகின்றதே அம்பி ? இரட்டை வேடம் உமக்கே அருவருப்பாக இல்லையா அம்பி //

    முருகனை பெயர் ஒற்றுமையால் சுப்ரமணிய சுவாமி என்கிற மனிதருடன் ஒப்பிட்டு கேவலமாகக் காட்டி முதல் பின்னூட்டமிட்ட அவர் மீது வராத தமிழ்க்கோவம் என் மீது வருவதேனோ..?! மகனுக்கு சிவ’கார்த்திகேயன்’ என்ற பெயர் வைத்த உங்களிடமிருப்பது என்ன ‘தனம்’ என்று நான் தீர்ப்பளித்தேனா..?! இல்லையே.. ஏனெனில் நீங்கள் கார்த்திகேயனோ, சுப்ரமணிய சுவாமியோ பெயர் என்னவாக இருந்தாலும் முருகனைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கும் தெரியும், அண்ணாத்தே.. முருகன் மீது தென்றலிடம் இருப்பது வெறும் வன்மம் ஆகும்..!

    • அம்பி ,

      கீழ் உள்ள 1*தென்றலின் கருத்துக்களில் என்ன தவறு கண்டிர்கள் ? தொல்குடி தமிழர்களின் முருகன் பார்பண மயம் ஆக்க பட்ட நிலையில் அநத உண்மையை எடுத்து கூற யார் வேண்டுமானாலும் வரலாம். உமக்கு என்ன பிரச்சனை ? தென்றலுக்கு முருகன் மீது இருபது வன்மமா அல்லது தமிழ் முருகனை சஸ்கிருத சுப்ரமணிய சுவாமியாக்கிய உமது மனதுக்குள் இருப்பது மாபெரும் வன்மமா அம்பி ? தெளிவா இருக்கணும் அம்பி ! ஒன்று முருகன் தமிழ் கடவுள் தான் .அதில் பார்ப்பனீயம் திணிக்க பட்டு உள்ளது என்பதை நீர் ஒத்துக்கொள்ளனும். அல்லது தமிழர்க்கு முருகன் கடவுளே இல்லை !அது இராமன் போல பார்பனர்களின் கடவுள் தான் என்றாவது கூருமையா.! எந்த முடிவுக்கும் வராம என்னைய பார்த்து மகனுக்கு சிவ’கார்த்திகேயன் என்று எப்படி முருகன் பெயர் வைக்கலாம் என்று கேட்டபதற்கு என் பதில் :

      தமிழராகிய நாங்கள் வணங்கும் முருகனின் பெயரை எம் மகனுக்கும் வைத்து அழைக்க எவருக்கும் கேள்வி கேட்க அருகதை இல்லை. மூடிகொண்டு செல்லலாம்.

      அப்படி திட்டும் போது கூட உண்மை வராமலா போகும் அம்பி ?இராமன் மீதான சார்பை நீக்கி நடுநிலையுடன் பார்த்தால் ராவணனும், சூர்ப்பனகையும் ராமனை திட்டும் விடயத்தில் பொருள் இருப்பது உமக்கு புலப்படும். //வால்மீகி தன் ராமாயணத்தில் ராவணனும், சூர்ப்பனகையும் ராமனை எப்படித் திட்டுகிறார்கள் என்பதையும் தான் எழுதி வைத்திருக்கிறார்.. அதுவும் அவர் கருத்தென்று நீங்கள் சொல்லிவிட்டால் நான் உங்களுடன் விவாதிக்கத்தான் முடியுமா..! வால்மீகி கிடக்கிறார் நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும்..//

      1*தென்றல் :

      தமிழ் கடவுள் முருகன். சுப்ரமணிய சுவாமி அல்ல. மனிதனாக இருக்கும் சுப்ரமணிய சுவாமியே தரகு மாமாவாக இருக்கிற பொழுது கடவுளாக இருந்தால் அதன் நிலை என்னவாக இருக்கும்? பழனியில் அங்கு முருகனுக்கு பேக்சைடு பஞ்சர் என்று கேள்விபடுகிறோம். ஆனால் இங்கு சுப்ரமணிய சாமி வைரக் கலசத்துடன் பார்ப்பன ஆகமங்களுடன் சொலிக்கிறார். வட இந்தியாவில் தேவயானை இந்திரலோகத்து அழகி. அதை அப்படியே தெய்வானை என்று மாற்றி சிறு தெய்வ முருகனை சுவாமியாக்கி அழகுபார்த்தது பார்ப்பன சனாதனம் தான். சிறு தெய்வ வழிபாட்டுக்காரனுக்கு இதுபோன்ற தப்புலிப்புத்தியெல்லாம் வராது. தமிழக முருகக்கடவுளும், ஆப்ரிக்க மொருங்காவும், யேசிடி மக்களின் முருக வழிபாடும் பழங்குடிச் சமூகத்திற்கே உரிய இயற்கை வழிபாடு. துரோகத்தின் வரலாறு தெரிந்துகொண்டு வாதாடுமய்யா.

  5. // மூடிகொண்டு செல்லலாம். //

    இது எத்தனை கடினமானது என்பதை என்னை விட நன்குணர்ந்தவர் தாங்கள்.. இதுவும் ஊருக்குத்தான் உபதேசமா..

    • அம்பி,

      __________தமிழ்காரன் தன் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது தமிழில் இன்றி வேறு எப்படி வைக்க முடியும் ? அதுவும் தமிழ் கடவுளின் பெயரை பார்பனமயம் [சு.ஸ்வாமி] ஆக்காமல் தமிழிலேயே வைக்கும் போது அதனை கேள்விக்கு உள்ளாக்குவது என்பது உம்மை போன்ற பார்பன அடிவருடிகளை தவிர வேறு எவராலும் இயலாது. _____ வேறு என்ன கூற முடியுமம்பி ? விடை இருந்தால் கீழே எழுதவும்.

      ————————————————————–

      விவாதமே கீழ் கண்ட விடயங்களில் மேல் தான் நடைபெறுகின்றது என்பதை நன்கு உணர்க !

      [1] தமிழ் மக்கள் வணங்கும் கடவுளான முருகன் பார்பன மயம் ஆக்க பட்ட நிகழ்வு

      [2]பார்பன அடியாளான இராமன் தமிழ் மக்கள் மீது திணிக்கபடும் நிகழ்வு

      உம்மிடம் உண்மையில் அறிவு இருந்தால் இதனை பற்றி பேசம்பி !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க