privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்அரவிந்தன் நீலகண்டன் : ஹிட்லர் காதலை போற்றலாமா ?

அரவிந்தன் நீலகண்டன் : ஹிட்லர் காதலை போற்றலாமா ?

-

a n cover சென்ற வார தினகரன் நாளிதழின் இலவச இணைப்பான வசந்தத்தில் தமிழக ஆர்.எஸ்.எஸ்சின் ஒரே ”அறிவுஜீவி”யான அரவிந்தன் நீலகண்டனைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது (காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல). அக்கட்டுரையின் குரல் என்னவோ அவரது மனைவி ஃபன்ஷியா தானியலுடையதுதான் என்றாலும் அது அரவிந்தின் பெருமையையே பேசுவதால் அதனை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு தீவிர இந்துத்துவவாதி, 14 வயதில் ஷாகா பயிற்சிக்குப் போனவரான அரவிந்தன் தனது ப்ரொட்டஸ்டண்ட் கிருஸ்தவ மனைவிக்கு முழுமையான மத சுதந்திரம் வழங்கியிருப்பதாக சொல்லி இதுதான் உண்மையான மதநல்லிணக்க வாழ்க்கைக்கு இலக்கணம் என்று அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள்.

சங்கப்பரிவாரத்தைப் பற்றிய எந்த அறிவுமில்லாத ஒருவன் இக்கட்டுரையின் மூலம் அரவிந்தன் நீலகண்டனைப் பற்றி புரிந்துகொள்ளப் போவதில்லை, அது அவனுக்கு அனாவசியம். ஆனால் அவர் வழியே ஆர்.எஸ்.எஸ்சை புரிந்துகொள்வான் என்பதுதான் மிகவும் அபாயகரமானது. மேலோட்டமான பார்வையில் தினத்தந்தி குடும்பமலர் பாணியிலான அந்த கட்டுரையில் என்ன பிரச்சினை என்று சிலருக்குத் தோன்றலாம். ஆயினும் அதில் செருகப்பட்டிருக்கும் ஒரு பத்திதான் நமக்கு எச்சரிக்கை சமிஞ்சையை கொடுக்கிறது.

அரவிந்தனின் மத நம்பிக்கைகையை ஃபன்ஷியா மதிக்கிறார், பன்ஷியாவின் மத நம்பிக்கையை அரவிந்தன் மதிக்கிறார் என விளக்கும் அக்கட்டுரை அதன் பிறகு கீழ்கண்டவாறு நீள்கிறது.

இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றாலே மதவெறியர்கள்… பிற மதத்தை இழிவுபடுத்துபவர்கள் என்ற கருத்து பொதுத்தளத்தில் உருவாகியிருக்கும் சூழலில். மதவெறியர்கள் வேறு,… அவர்கள் எல்லா மத்த்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் விஷக்கிருமிகள். காதலை எதிர்ப்பதும் இவர்கள்தான். சமூகத்தை சீரழிப்பதும் இவர்களேதான். இவர்களுக்கும் உண்மையாகவே தங்கள் மதத்தை நேசிப்பவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என தங்கள் வாழ்க்கை மூலம் நிரூபித்து வருகிறார்கள்.

இங்குதான் இக்கட்டுரையின் முக்கியமான பிரச்சாரம் இருக்கிறது. இந்துத்துவாவாதிகள் மதவெறியர்கள் இல்லையா? பிறமதத்தை இழிவுபடுத்துவதுதானே இவர்களது தலையாய பணி? சொல்லப்போனால் அந்த இழிவு படுத்தல் பல நூறு சிறுபான்மை மக்களை கொல்லும் ஒரு வரலாற்று நடைமுறை. ஆனால் தவறுதலாக பொதுத்தளத்தில் இப்படியான கருத்துகள் உருவாகிவிட்டதாக எழுதுவதன் உள்நோக்கம் என்ன?

இந்து மதத்தில் வேண்டுமானால் மதவெறியர்கள், மதநல்லிணக்க வாதிகள் இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். (அதுவே உண்மையில் பிரச்சினைதான். ஏனெனில் இந்துமத்தின் ஆன்மாவே சாதி என்பதால் அங்கே சமத்துவத்தின் வாசனைக்கு கூட வழியில்லை.) ஆனால் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் ஒருவர் நல்லவர் என்றால் எவ்வளவு அயோக்கியத்தனம். ஆக சங்கபரிவாரம் எனும் பயங்கரவாதிகளை அரவிந்தன் நீலகண்டனது காதல் மனைவியின் முகத்தை வைத்து நல்லவர்கள் என்று காட்டுகிறார்கள் தினகரனது இலவச இதழ் தயாரிப்பாளர்கள்.

இக்கட்டுரை மூன்று கோணங்களில் புரிந்துகொள்ளப்படுவதற்கான வாய்ப்பை வாசகர்களுக்கு வழங்குகிறது. அரவிந்தன் நீலகண்டன் ஒரு மதநல்லிணக்கவாதி, அவரது மனைவி ஃபன்ஷியா ஒரு மதநல்லிணக்கவாதி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஒரு மதசகிப்புத்தன்மையுள்ள இயக்கம். காவி பயங்கரவாதிகள் இதனை ஒரு ஆதாரமாக பொதுவெளியில் வைக்கும் வாய்ப்பு 100 சதவிகிதம் உண்டு. ஆகவே அரவிந்தினனின் காதல் வாழ்வை நாம் விவாதத்துக்கு உட்படுத்தவேண்டிய தேவை தவிர்க்க இயலாததாகிறது.

ஆர்.எஸ்.எஸ் பார்வையில் இந்தக் காதல் அவர்களது மதவெறி கொள்கைக்கு முரணானது அல்ல. காரணம் குஜராத் கலவரத்தை கண்டிக்காத ஒரு கிருஸ்தவ இந்தியனும், பாபர் மசூதி இடிப்பை கண்டுகொள்ளாத ஒரு இசுலாமிய இந்தியனும் அவர்களுக்கு ஏற்புடையவர்களே. கோல்வால்கரது விதிகளின்படி இவர்களை இந்துக்களாகவே கூட ஏற்றுக்கொள்ள முடியும். அதாவது அல்லாவையோ, ஏசுவையோ தொழுவது பிரச்சினையில்லை. ஆனால் அந்த தொழுகைக்காரர்கள் இந்த நாட்டின் பண்பாட்டை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சரி, அந்த பண்பாடுதான் என்ன?

ராமன் இந்த நாட்டின் தேசிய புருஷன், சதி மாதாவை போற்றுதல், பசுவை வெட்டி உண்ணாமல் தொட்டு வணங்குதல், ஜகத்குருவை அங்கீகரித்தல், என்று இந்த பண்பாடு ஆரம்பித்து காத தூரம் பல நூறு விதிமுறைகளோடு விரிந்து கிடக்கிறது. இதன்படி காளி, துர்கை என்று வரும் வந்தே மாதரத்தை கூட ஒரு முசுலீம் பாடித்தான் ஆக வேண்டும்.

ஒருவேளை அரவிந்தன் வீட்டுப்பெண் ஒருவர் இந்த இந்து ராஷ்ட்டிர காவாலித்தன்ங்களை எதிர்த்தால் அவர்தான் ஆர்.எஸ்.எஸ்சின் எதிரியாவாரே தவிர ஆர்.எஸ்.எஸ்காரரை ஏற்றுக்கொள்ளும் ஃபன்ஷியா அவர்களுக்கு எதிரியல்ல. இந்த அடிப்படையில்தான் முக்தர் அப்பாஸ் நக்வி பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார். கீதையை ஆராதித்து காவி தீவிரவாதத்தை கண்டுகொள்ளாத அப்துல் கலாமை இவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆகவே அரவிந்தனின் கல்யாணத்தில் ஆர்.எஸ்.எஸ் முரண்பட அவசியமேயில்லை.

இணையத்தை பாவிப்பவர்களால் அரவிந்தனையும் ஆர்.எஸ்.எஸ்சையும் தனித்தனியே பார்க்க முடியாது என்பதால் மேற்சொன்னவை அவருக்கும் பொருந்தும். இருப்பினும் வேறு சில அம்சங்களும் நம் பரிசீலனைக்கு உகந்தவையே. உயர் மத்தியதர வகுப்பினரின் பார்வையில் வர்க்கமும் சாதியும்தான் முதலில் வரும். அனேகமாக எல்லா மதங்களிலும் பெண் இரண்டாம்பட்சமே, அவர்கள் தங்கள் சாதி பட்டப்பெயரைகூட திருமணத்துக்குப் பிறகு சுமக்கமுடியாது.

ஆணின் சாதியே அடுத்த தலைமுறைக்கு அடையாளமாகும் என்பதால் தனக்கு நிகரான சாதி மற்றும் வர்கப் பின்னணியுள்ள ஒரு வேற்றுமதப் பெண்ணை ஆண் மணப்பதற்கு உரிய ‘நெகிழ்வு’த்தன்மையை இந்து மதம் கொண்டிருக்கிறது. ஐயர், ஐயங்காரையோ, ரெட்டி நாயுடுவையோ, முதலியார் கொங்கு கவுண்டரையோ, குமரி மாவட்ட வேளாளர் குமரி மாவட்ட பணக்கார நாடாரையோ மணந்து கொள்வதில் பார்ப்பனியத்திற்கு பிரச்சினையே இல்லை.

குமரி மாவட்டத்தில் நாடார் சாதி மக்கள் இந்து, கிறிஸ்தவ மதங்களில் இருந்தாலும் திருமண சம்மந்தம் சர்வ சகஜம். இருப்பினும் மண்டைக்காடு கலவரத்திற்கு பிறகு இதையே பிரச்சினைக்குரிய ஒன்றாக மாற்றிவிட்டார்கள் சங்கபரிவார இயக்கத்தினர். எனினும நாடார் தலித் திருமணமோ, மீனவர் நாடார் திருமணமோ, நாஞ்சில் நாட்டு வேளாளர், ஆசாரி திருமணோ இங்கு எப்போதுமே சாத்தியமில்லை.

இந்த பின்னணியில் பார்க்கையில் அரவிந்தனின் திருமணம் இரண்டு பேராசிரியர் குடும்பங்களுக்கிடையேயான இரு கம்ப்யூட்டர் பட்டதாரிகளின் திருமணம் அவ்வளவே. அரவிந்தனின் மனைவியின் செயல்பாட்டிலும் முற்போக்கு அம்சமென்று ஏதுமில்லை. அவரது கணவரின் மதவெறிப் படைப்புக்கள் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அவர் கொடுத்த பைபிள் படிப்பு சுதந்திரத்தை கிடைத்தற்கரிய பேறாக கொண்டாடும் டிபிகல் இந்து கலாச்சாரப் பெண்ணாகவே அவர் காட்சியளிக்கிறார். மேலதிகமாக இந்தியாவில் சிறுபான்மை மக்களை வேட்டையாடும் ஒரு கூட்டத்தின் உறுப்பினரை மானே தேனே என்று வியந்து போற்றுமளவுதான் அவரது சமூக உணர்வு தரந்தாழ்ந்து இருக்கிறது.

ஆகவே இத்தம்பதிகள் உதாரண மனிதர்களாவது அவர்களது சமூகப் பாத்திரத்தின் மூலம்தான் சாத்தியம். வீட்டுக்குள் அனுசரித்துப்போகும் இயல்பில் மெச்சிக்கொள்ள ஏதுமில்லை. கோயிலில் ஆடு கோழி வெட்டக்கூடாது என சட்டமியற்றிய ஜெயலலிதா தன் வீட்டு நாய்களுக்கு தினசரி எட்டுகிலோ ஆட்டுக்கறி வாங்கியதாக குன்ஹாவின் தீர்ப்பு சொல்கிறது. நாய்க்கு கறி போட்டதை வைத்து ஜெயாவை மதிப்பிடுவது சரியாக இருக்குமா?

அரைகோடி யூதர்களை கொன்றொழித்த ஹிட்லர் தனது காதலியை மதிக்கும் விசயத்தில் ஒரு குறையும் வைத்தவரல்ல. ஈவாவின் பார்வையில் ஹிட்லர் மகத்தான மனிதராகவே இருப்பார். அதைவைத்து மட்டும் அவரை உதாரண மனிதராக காட்ட முடியுமா? இல்லை மஹிந்த ராஜபக்சே கூட தனது மனைவியை ஒய்யாரமாக நடத்துகிறார், கருணைக் கடலே என ஆராதிக்கத்தான் முடியுமா?

அப்பாவிகளை சுட்டுத்தள்ளும் ராணுவத்தினர் முதல் அடித்துக்கொல்லும் போலீஸ்காரர்கள் வரை எல்லா குற்றவாளிகளும் தமது குடும்பத்தினர் பால் அன்பு கொண்டேராகவே இருக்கிறார்கள். இது குறித்து ஹாலிவுட் படமான பாடி ஆஃப் லைஸ்-ல் வரும் சிஐஏ அதிகாரியின் வாழ்க்கையை சொல்லலாம். வினவில் வெளிவந்த இந்த பட விமரிசனத்தை வாசகர்கள் படித்து அறியலாம். இந்த கோணத்தில் பார்த்தால் உலகின் ஆகப்பெரிய கிரிமினல் கூட உதாரண மனிதனாகிவிடக் கூடும்.

ஆர்.எஸ்.எஸ்சின் செயல்பாடுகள்தான் நாடெங்கும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று லட்சக்கணக்கிலான மக்களை அகதிகளாக்கியது, இன்றுவரை அது தொடர்கிறது. இந்த இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளர் மனைவி பைபிள் படிக்க அனுமதிக்கிறார் என்பதை பரிகாரமாக கருதுவதே அநீதி. இதனை எப்படி உதாரண வாழ்வாக கருதுவது? வேசிக்கும் விலைமகளுக்கும் வித்தியாசம் தேட இயலுமாயின் இந்துத்துவவாதிக்கும் மதவெறியனுக்குமான வித்தியாசத்தை நாம் தேட முடியும்.

ஆனால் இரண்டும் வேறு வேறுதான் என சத்தியம் செய்கிறது தினகரன். அதற்கான உதாரணமாக அரவிந்தன் நீலகண்டன் காட்டப்படுகிறார். அந்த தம்பதிகள் வாழ்க்கை இந்தியர்கள் அனைவருக்குமான பாடம் என்கிறது தினகரன் ஞாயிறு இணைப்பின் (9/11/2014) அட்டைப்பட வாக்கியம். இந்த உதாரண புருஷரின் மத நல்லிணக்கத்தை தெரிந்துகொள்ளலாமென ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள் நடத்தும் தமிழ்ஹிந்து இணையதளத்தை பார்த்தால் மாற்று மதத்தவர் மீதான அரவிந்தரின் அன்பு கரைபுரண்டோடுகிறது. அதில் அரை ஸ்பூன் மட்டும் கீழே…

இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து பிரிட்டிஷாரை எதிர்த்தனர். இந்துக்கள் இந்தியாவின் விடுதலைக்காக எதிர்த்தார்கள். இஸ்லாமியர்கள் துருக்கியில் கிலாபத்தை மீண்டும் நிறுவுவதற்காக எதிர்த்தார்கள்.
அன்புள்ள மதச்சிறுபான்மை சோதரரே நீங்கள் பத்திரமாக கிளைகளில் அமர்ந்திருக்கும் இப்பெருமரத்தின் வேர்களை அந்நிய பண உதவியுடனான மதமாற்றம் எனும் கோடாலியால் வெட்டாமல் இருங்கள்… உங்கள் வருங்கால சந்ததிகளுக்காகவேனும்….
இந்த வக்கிர மனநிலை ஓர் இறையியலாகவே ஆபிரகாமிய மதங்களின் மூலம் அந்த மத மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது. (அரவிந்தனின் கட்டுரைகளில் இருந்த மிகச்சில உதாரணங்கள்)

இருந்தாலும் ஒரு இந்துத்துவவாதி தனது மனைவிக்கு இத்தகைய மத சுதந்திரத்தை வழங்கியிருப்பது பாராட்டத்தக்க அம்சம்தானே எனும் கேள்வி எழக்கூடும். ஆனால் இது பாராட்டுக்குரிய அம்சமல்ல. அரவிந்தன் வீட்டில் மனைவியின் மத உரிமையை மதிக்கிறார், அவருக்கு அசைவ உணவு வாங்கித் தருகிறார், அவர் பைபிள் படிப்பதை அனுமதிக்கிறார் என மேலோட்டமாக படிக்காமல் சற்று நின்று நிதானித்து பாருங்கள்.

அரவிந்தன் நீலகண்டனது சாதி என்ன, நமக்குத் தெரியவில்லை. அவரது குடும்பம் ஆச்சரமான சைவ உணவு தீவிரவாதிகள் என்பதால் நிச்சயம் சைவ உணவை புண்ணியமாகக் கொண்ட ஏதோ ஒரு “உயர்” சாதி என்று தெரிகிறது. இத்தகைய சாதிக்காரர்கள் அசைவ உணவு சாப்பிடும் மருமகளை எப்படி நடத்துவார்கள் என்பதை நாவலாக எழுதுமளவு எழுத்தாளர் நாஞ்சின் நாடனால் சொல்ல முடியும். நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் எனும் ஆதிக்க சாதியினர் அங்கே எப்படி தலித்துக்களை நடத்துவார்கள், தமது சாதிப்பெருமையை எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பதெல்லாம் ஊரறிந்த உண்மை.

இந்த பின்னணியில் சைவ உணவு சாதிக்கரரான அரவிந்தன் நீலகண்டன் தனது காதல் மனைவிக்கு அசைவ உணவு வேண்டுமென்றால் வெளியே ஓட்டல்களில் வாங்கித் தருவாராம். ஒரு உண்மையான ஜனநாயகவாதி என்றால் தனது மனைவியின் உணவுப் பழக்கத்தை மதித்து வீட்டிலேயே சமைப்பதை வலியுறுத்த வேண்டும். இதில் அனுமதி என்று வந்தாலே அது ஆணாதிக்கப் பிச்சை என்பது வேறு விசயம். ஆனால் இங்கே அது கூட இல்லை.

ஒரு வேளை நீலகண்டனது பெற்றோர் அதை விரும்பாவிட்டால் அவர்களுக்கு ஜனநாயகம் குறித்து வகுப்பு எடுத்து வலியுறுத்த வேண்டும். மறுத்தால் அவர்களையோ இல்லை தானோ வீட்டை விட்டு வெளியற்றவோ, வெளியோரவோ செய்ய வேண்டும். இதெல்லாம் செய்யாமல் நீலகண்டன் அவர்கள் வீட்டில் தனக்கு பிடித்த தயிர் சாதத்தை நக்குவாராம். காதல் மனைவிக்கு மட்டும் ஓட்டலுக்கு சென்று எலும்பு கடிக்க ஏற்பாடு செய்வாராம்.

இவ்வளவிற்கும் அவரது மனைவி வீட்டில் இவருக்கென்று சைவ உணவு சமைத்து கொடுப்பார்களாம். ஆக அங்கேயும் இவர் சமத்துவமாக நடந்து கொள்ளவில்லை. இருந்திருந்தால் பீஃப் பிரியாணியில் பீசை வைத்து விட்டு சோற்றையாவது உண்டிருக்க வேண்டும், குறைந்த பட்சம். மாறாக நீலகண்டனது மாமியார் இவருக்கென்றே வெஜிடெபிள் பிரியாணி சமைத்துக் கொடுப்பாராம்.
ஒரு வேளை இந்த ஓட்டல் சமத்துவமே போதுமென்று புல்லரிப்பவர்கள் சற்று யோசித்து பாருங்கள்.

அவர் உயிரைகொடுத்து ஆதரிக்கும் இயக்கம் இசுலாமியர்களை கொன்று குவிக்கிறது, பாதிரியாரை குழந்தைகளோடு எரிக்கிறது, கன்னியாஸ்திரிகளை வன்புணர்ச்சி செய்கிறது, பிள்ளையார் ஊர்வலத்தில் குடிகாரர்களை வைத்து மசூதிகளுக்கருகே ரவுடித்தனம் செய்கிறது. வீட்டு காம்பவுண்டுக்குள் மத நல்லிணக்க முகமும்(அதுவும் ஓட்டல் நல்லிணக்கம்) வெளியே வந்தால் நல்லிணக்கம் எனும் கருத்தின் மீதே வெறுப்பு கொள்ளும் முகமும் ஒருவருக்கு இருக்குமாயின்… அவரது நிஜமான முகம் எது? ஒன்று நிஜமெனின் இன்னொன்று நடிப்பென்றாகிறது. கணவர் பாத்திரம் பொய்யானதா அல்லது காக்கி டவுசர் பொய்யா?

இதை இருதுருவ மனநிலை பிறழ்வு என சொல்லி கரிசனம் காட்டவும் முடியாது. பைபோலார் வந்தவர்கள் சிலகாலம் ஒருவிதமாகவும் அடுத்த சில நாட்கள் அதற்கு நேரெதிரான இயல்புடனும் இருப்பார்கள். அங்கே காலம்தான் மனநிலையை மாற்றுமேயன்றி காம்பவுண்ட் சுவரல்ல. அவர் புரிதலின்றி வானரப்படையில் இருக்கிறார் என்றும் சொல்ல முடியாது. அவர் எழுதிய கட்டுரைகளில் இருக்கும் வன்மத்தை விடுங்கள்… வினவில் மனோஜ் குமார் எனும் தலித் இளைஞரிடம் பிடிபட்டார் அல்லவா, அப்போது தனது பார்ப்பன ஜிக்களை விட்டுக் கொடுக்காமல் எப்படியெல்லாம் பேசியிருக்கிறார் என்று பாருங்கள்.

an
காதலில் மட்டுமல்ல கொள்கையிலும் ஹிட்லரின் சீடர் அரவிந்தன் நீலகண்டன்.

மனைவிக்கு ஓட்டல் கறி சாப்பிடும் உரிமை கொடுக்கும் நபர் மாட்டுக்கறி சாப்பிடும் மக்களின் உரிமை மீது வன்மத்தை கக்கும் இயக்கத்தில் மனதாரா இயங்குவது உண்மைதானே? இன்னொரு மதத்துப் பெண்ணை காதலித்து வீட்டை எதிர்த்து கைப்பிடிக்கும் உரிமையை பயன்படுத்திய நபர், முஸ்லீம்கள் இந்துப் பெண்களை காதலித்தால் லவ் ஜிகாத் என கொச்சைப்படுத்தி அதனை தீவிரவாதமாக சித்தரிக்கும் அசிங்கத்தை எப்படி செய்கிறார்? மனைவியோடு கிருஸ்துமஸ் கொண்டாடும் மனிதர் எப்படி கிருஸ்துவர்கள் எல்லோரும் வக்கிரம் பிடித்தவர்கள் என எழுதுகிறார்?

இதற்கான பதில் இந்துத்துவாவின் வரலாற்றிலேயே இருக்கிறது. தங்கள் மேலாதிக்கத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் மராட்டிய சித்பவன பார்ப்பனர்களுக்கு இருந்தது. இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வைக்க வேண்டிய தேவை ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. இந்த இரண்டு தேவைகளுக்குமான கள்ள உறவிற்கு பிறந்த குழந்தைதான் ஆர்.எஸ்.எஸ். அந்தமான் சிறையில் இருந்து தன்னை விடுவிக்கச் சொல்லி வெள்ளையனின் காலில் விழுந்தவர் சாவர்க்கர். அவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்திய இளைஞர்களை சேரும்படி வலியுறுத்தியவர்.

ஆனால் இதே சாவர்க்கர் ஒருகாலத்தில் மொகலாய அரசின் பிறைக்கொடியை தேசியக்கொடி (எரிமலை எனும் அவர் எழுதிய நூல்) என்று சொன்ன வரலாறும் இருக்கிறது. தனக்கு ஆதாயம் கிடைக்குமாயின் கழுதையைக் கூட அப்பா என்றைழைக்கும் இக்கும்பல் ஆதாயமில்லாவிட்டால் அப்பாவைக்கூட கழுதை என்று சொல்லும். எனினும் இந்த முரண்பாடுகள் பார்ப்பனியத்தின் நலனுக்காக செய்யப்படும் சாமர்த்தியமே அன்றி ஒரு போதும் கொள்கை சமரசம் என்று பார்க்க கூடாது. அல்லது காலந்தோறும் பார்ப்பனியம்.

பெண்களை தெய்வமாக வணங்குவதாக சொல்லிக்கொள்ளும் இந்த கலாச்சாரக் காவலர்கள்தான் ஒருகாலத்தில் தம் சொந்த சாதி கைம்பெண்களை மொட்டையடித்து மூளியாக்கி அழகுபார்த்தவர்கள் (மொட்டையடித்தால் அழகு போய்விடும், பிறகு எப்படி இன்னொரு துணையை தேடுவாள் எனும் அறிவார்ந்த இந்து ஞானத்தின் கண்டுபிடிப்பு). இவர்கள் முஸ்லீம்களை இந்துக்களின் எதிரிகள் என வெறித்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்ட காலகட்டத்தில் காசியில் மட்டும் சுமார் 5 லட்சம் இந்து விதவைகள் அநாதைகளாக விடப்பட்டிருந்தார்கள். சாப்பாட்டுக்கு வழியின்றி அதில் பலர் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள். இன்றைக்கும் உ.பி பிருந்தாவன் நகரில் கைவிடப்பட்டு அநாதையாக திரியும் இந்து விதவைகள் எண்ணிக்கை நாற்பதாயிரம்.

இத்தகைய இயக்கத்தின் பிரதான் பண்டிட் ஒருவர் இரட்டைவேடம் பூணுவதில் வியப்படைய எதுமில்லை. ஆர்.எஸ்.எஸ் சின் ரத்த வேட்கைக்கும் அரவிந்தனின் அடிப்படைவாதத்துக்கோ அவரது வீட்டுக்குள் இருப்பதாக??? சொல்லப்படும் மத நல்லிணக்கம் பரிகாரமாகிவிடாது.

நாடறிந்த இந்து வெறியனான சுப்ரமணியசாமியின் மகள் சுகாசினி ஹெய்தர் மணந்திருப்பது ஒரு மேட்டுக்குடி முசுலீமைத்தான். இந்த சம்மந்தம் சு சாமியின் மதவெறியை கொஞ்சம்கூட மாற்றிவிடவில்லை. அனேகமாக தினகரனின் அடுத்த உதாரண புருஷர் சூச்சூஸ்வாமியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

குஜராத் கலவரத்தின்போது கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதிகளின் விவரங்களை கையில் வைத்துக்கொண்டு அதில் கவனமாக இந்து அல்லாதவர்களை மட்டும் தனியே கொலை செய்த இந்துத்துவ வெறியர்களின் செயலை நாமும் மறந்துவிட முடியாது. அரவிந்தின் நலன்விரும்பிகளும் மறந்துவிடக்கூடாது.

உண்மையான மதநல்லிணக்கவாதிகள் நம் அருகே ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். பள்ளி காலத்தில் ஒரு பிராமண நண்பன் வீட்டுக்கு சென்றபோது தரப்பட்ட காபியை அன்னாத்தி குடிக்கச்சொன்னார் நண்பனது அப்பா. அப்போது அவனது அம்மா இடைமறித்து நீ வாய் வச்சே குடிடா என்று சொல்லிவிட்டு குடித்து முடிக்கும் வரை அருகில் நின்றார். அவருக்கு மத நல்லிணக்கம் எனும் வார்த்தைகூட அப்போது தெரிந்திருக்காது. ஆனாலும் தன் வீட்டில் தனது ஆச்சாரத்தைக் காட்டிலும் விருந்தாளியின் சுயமரியாதை முக்கியம் என கருதிய அவரது இயல்பில் இருக்கிறது மத நல்லிணக்கம்.

கோவையில் நடந்த கலவரத்தின்போது முஸ்லீம்களின் கடைகள் சூறையாடப்பட்டன. அப்போது உச்சகட்ட இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம் கோவையெங்கும் செய்யப்பட்டிருந்தது. கோட்டைமேட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்படுவதாகக்கூட வதந்திகள் பரப்பப்பட்டன. ஆகவே அந்த சூறையாடலில் சாதாரண மக்களும் தயக்கமின்றி பங்கேற்றார்கள். அப்போதும் அதில் பங்கேற்காத, பங்கேற்கச்சென்ற அண்டைவீட்டு நபர்களை தடுத்த இந்து ஒருவரை நான் கோவையில் சந்தித்திருக்கிறேன். பொழப்பு கொடுத்த ஊர்ல எப்படிங்க திருட முடியும் எனும் ஒற்றைக் கேள்வியை அதற்கான காரணமாக முன்வைத்தார் அவர். அந்த எளிய மனிதனின் அற உணர்வை மத உணர்வால் வெல்ல முடியவில்லை.

இப்படியான எளிய மனிதர்களிடத்திலும் மிக அரிதாக ஹேமந்த் கர்கரே போன்ற அதிகாரிகளிடத்திலும் மத நல்லிணக்கம் இருக்கிறது. ஆனால் அவற்றை தெரிந்துகொள்ள நாம் எது மதவாதம் என்பதையும் யாரெல்லாம் மதத்தீவிரவாதி என்பதையும் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். வெறுமனே தினகரனை படித்தால், அல்லது தினகரனது இலவச இதழ் தயாரிப்பாளர்கள் சொல்வது போல படித்தால் அரவிந்தன் நீலகண்டன் மட்டுமல்ல அவரது ஆசானான ஹிட்லர் கூட நமக்கு காந்தியாகத்தான் தெரிவார்.

கண்ணிருப்பவர்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். கோபம் கொள்ளுங்கள்!

– இசையவன்.

  1. தோழர். சிறப்பான கட்டுரை. ஹேமந்த் கர்கரே பற்றிய விசயம் என்ன என்று சற்று விளக்கவும்.

    • மும்பையில கசாப்பு கோஷ்டி சுட்டுக் கொன்ன போலீஸ் ஆபிசர். அசீமானந்தா, பிரக்யா சிங் rss கோஷ்டி குண்டு வச்சத கண்டுபிடிச்ச மகாராஷ்டிரா போலீஸ்காரர். அதுனாலயே இவர கசாப்புகிட்ட சிக்க வச்சு முடிச்சுட்டாங்கன்னும் ஒரு கருத்திருக்கு

  2. மதம் மாறினால் தான் திருமணம் என்று
    மனதிற்கு மதிப்பு கொடுக்காமல் மதத்திற்கு முதலிடம் கொடுப்பவனை லவ் ஜிஹாதி என்று திட்ட கூடாது .

    மதம் மாற்றாமல் மணம் செய்து, உணவு பழக்கத்தை திணிக்காமல் மதித்து வாழ்பவனை ஹிடலரோடு ஒப்பிடலாம் .

    அடடா

    • ராமா, ராமா…
      வூட்டுக்குள்ள மதிக்கிறவன், வெளிய கிறிஸ்டீன், பாய்ங்கள போட்டுத்தள்ளணும்னு குதிக்கிறானே அத மதிக்க சொல்றீங்களா?

    • Mr. Raman, Still you don’t understand Vinavu properly. For them SIMIII, Pakistan, AL____ etc are preaching ahimsa only, though they wage war against India also, killing innocents. Those killings are not at all killings. So, it’s not a surprise to see articles like this in vinavu.

  3. இவன் ரொம்ப நல்லவன் மாதிரி பேசவும் எழுதவும் செய்வான் சாதாரணமா. ஆனா இந்துத்வா பிரச்சினைனை்னு வரும்போது சைக்கோ மாதிரி ஆயிடுவான். பழைய இணைய ரவுடி விவகாரத்தில் யாருன்னே தெரியாத சிலரை தன் பக்கத்து இருக்கும் பாப்பானுங்க பேச்சை கேட்டுட்டு படுகேவலமா பேசினவன் தான் இவன்.

    ஜெயமோகனும் தன் ஜால்ராக்களை நம்பி சின்மயி விவகாரத்தில் ராஜனை திட்டி அசிங்கப்பட்ட ஆள்தானெ..

  4. ஒரு இயக்கத்தின் தரத்தை அதன் அடிமட்டத் தொண்டனின் தரத்தைக் கொண்டு அறியலாம் …ஆர் .எஸ் .எஸ் எத்தகையது என்பதை அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஸ்வயம் சேவகர்களைக் கொண்டு உணர முடியும் …இசையவன் போன்ற கம்யூனிஸ்டுகளின் மூலம் அவ்வியக்கத்தின் தரம் பல்லிளிக்கிறது ….

    • முருகா, இங்கதான் நீங்க தப்பு பண்றீங்க, ஹிட்லர் இயக்கத்துல தலையிலருந்து, கால் வரை அல்லாரும் ஒண்ணுதான். அதுனால அசோக் சிங்காலும், அரவந்த நீலகண்டும் ஒரே வார்ப்புதான்.சரி ராசா கம்யூனிசுட்டு காரங்க கட்சியில அல்லாரும் எலக்சன் மூலமதான் பொறுப்புக்கு வராங்க! ஆர்.எஸ்.எஸ்ல எப்புடி ராசா?

      கோல்வால்கர தலைன்னு அப்பாயிண்டு போட்டது அடிமட்ட தொண்டனா, இல்ல ஹெட்கேவார்ங்கிற குஸ்தி வாத்தியாரா? மாறி தேவரச போஸ்டிங்கு போட்டது கோல்வால்ன்னு இப்படி கட்சின்ற பேருல மடத்தை நடத்துறானுவ!

      • வெற்றி வேல் …ஆர் எஸ் எஸ் கம்யூனிஸ்ட் கட்சி போல அரசியல் கட்சியல்ல …அது ஒரு சமூக கலாச்சாரப் பேரியக்கம் …தினசரி ஷாகாவில் சந்தித்து உடல் மனப் பயிற்சிக்கு உட்படுவதும் தம் சொந்த பணிகளினூடே தம் செலவில் களப் பணி செய்வதும் விருப்பம் உள்ளவர்கள் முழு நேரப் பணியாளர்களாக தவ வாழ்வை மேற்கொள்வதும் ஆர் எஸ் எஸ் அமைப்பில் மட்டுமே சாத்தியம் ..அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர்கள் மட்டுமே ஆர் எஸ் எஸ் அமைப்பில் பொறுப்பிற்கு வர முடியும் …எவ்வித பொருளாதார ஆதாயமும் இல்லாத தொண்டுப் பணிக்கு தாமே முன் வந்து பணி செய்யும் இலட்சக் கணக்கான ஸ்வயம் சேவகர்களை உருவாக்கி வருகிறது ஆர் எஸ் எஸ் …அதை ஒரு காலாவதியான அரசியல் கட்சியுடன் ஒப்பிடுவதே தவறு …

          • கொலை, கொள்ளை, கற்பழிப்பு என எல்லா பஞ்சமா பாதகங்களையும் செய்வதை தான் ஆர்.எஸ்.எஸ் வும்(தெகல்கா பேட்டியில் உங்க ஆளுங்க வாய் நிறைய சிரிப்போடு தாங்கள் செய்ததை தங்கள் வாயாலேயே சொல்லியிருக்கிறார்கள்), பார்பன இந்துமதமும் காலாகாலமாக செய்து வருகிறது.இந்த இயக்கங்களையும் மக்களுக்காக ரத்தம் சிந்தி போராடும் கம்யூனிச அமைப்புகளையும் ஒப்பிடுவதே முதல் தவறு.

            ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத இயக்கம். அவர்கள் இதுவரை செய்துள்ள கலவரங்களை,கொலைகள் கணக்கில அடங்காதவை. காந்தியை கொன்றது முதல் அயோத்தி ரதயாத்திரை குஜராத் ……… எத்தணை கலவரங்கள்கொலைகள். இது தான் அவர்கள் செய்துள்ள தொண்டு பணிகள்.

            தாழ்த்தப்பட்ட மக்களை பல ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கிய பார்பன வர்ணாசிரமத்தை ஆதரிக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பாசிச இயக்கமில்லாமல் வேறு என்ன? இன்று வரை சாதி கண்காட்சி நடத்திக்கொண்டிருக்கிறது அந்த இயக்கம்.கேவலமாக இல்லையா?

            வெள்ளைக்காரன் காலை பிடித்து மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்த ஆர்.எஸ்.எஸ் சாவர்க்கர் எங்கே தூக்கு மேடையேறிய கம்யூனிஸ்ட் பகத்சிங் எங்கே?

            கர்பிணியின் வயிற்றை கிழித்து சிசுவை வெளியே எடுத்து கொல்வது, கற்பழிப்பு முதல் கலவரம் உருவாக்குவது என ஒரு பங்கரவாதம் இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ்.

            • Ferroz babu, Raman, வெற்றிவேல், கருங்குளம் மா.முருகன் இவர்களில் க.கு.மா.முருகன் ஆர்.எஸ்.எஸ். அரசியல் கட்சியல்ல! இயக்கம்

        • Rss இயக்கம் அரசியல் கட்சியல்ல என்றால் …..

          அப்போது அது ஈன்ற இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிட்சித், சங்பரிவார், பி.ஜே.பி, இவையெல்லாம் என்ன சங்கரமடமா?!

          அப்போ கம்யூனிஸ்டுகளும், நாட்டிலுள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்டித் திரைக்குப் பின் திரையாக, மூடுதிரைகளின் எண்ணிக்கையை அணுக்கூடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போய் யுரேனிய நியூக்ளிஸைப் போல உருமாறினால் ஒற்றைப் புரோட்டியத்தைப் போன்ற சாதாரண வெகுஜன மக்கள் இந்த மூடுதிரைக்குள்ளேயே பார்க்க முடியாத குருடர்களாகவே வலம் வரும் மின்னணுக்களைப் போலவே மில்லினியம் மில்லினியம் ஆண்டுகளுக்கும் வலம் வர வேண்டுமென்று ஆசைப்படுகிற ஒரு மூடுதிரை(றை)களின் மர்மக் கோட்டை தான் ஆர்.எஸ்.எஸ். ஆ?! அப்போ அது ஈன்ற இந்த மகவுகளெல்லாம் என்ன?!

          வேரிலேயே ஜனநாயகத் தன்மையில்லை என்றால் ….
          அந்த மரத்தின் வேராய் கனியாய் பொது ஊடகவெளிப் பிம்பங்களெல்லாம் என்ன?!

          கோல்வார்க்கர் பற்றிப் பொதுவெளியில் எழும் விமர்சனங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸுக்குத் தலைகுனிவை ஏற்படுத்த வில்லையா?!

    • கட்டுரையில் எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லத் துப்பில்ல, பெரிய புண்ணாக்கு மாதிரி Comparison.

      • பகத் இதுவும் தவறு!

        நீங்கள் யாருக்காக வாதிடுகிறீர்களோ அந்த வாதிடும் தரப்பு முதலில் ஒரு விவாத சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக முதலில் சிலப் பொது வினாக்களை எழுப்புகிறது என்றால் அந்த விவாதத் தரப்புக்கென்று சிலத் துவக்க அணுகூலங்கள் கிடைக்கிறது. சதுரங்கத்தில் முதல் நகர்வை தொடங்க வாய்ப்பு கிடைக்கும் வெள்ளைக்காய்களுக்கு எப்படி முதல் தாக்குதல் ஆட்டத்துக்கும் ஒரு முதல் கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்படிn.

        ஒரு கிரிக்கெட் ஆட்டத்தின் பந்து வீச்சு ஸ்டெம்பை நோக்கியதாக இருக்க தான் ஆட்டவிதிகள் பந்து வீசுபவரை அனுமதிக்கின்றன என்பதற்காக பேட்டிங்கால் அதை எதிர் கொள்பவரும் பந்து வீச்சாளரை நோக்கியே பந்தை அடிக்க வேண்டும் என பேட்ஸ்மேனை நோக்கி முணுமுணுப்பதைப் போலயிருக்கிறது உங்களது முணுகல்.

        அதாவது ஒரு பந்து ஸ்பின்னா ?! Full tass ஆ!, ஹாஃப்லெக்கா, wide என்பதைப் பொறுத்து அதை அவர் எப்படி வேண்டுமானாலும் எதிர்கொள்வதற்கான பேட்டிங் சுதந்திரம் என்ற ஒன்றும் இருக்கிறது. பந்தை 360° கோணத்தில் அவர் அதை எந்தத் திசை நோக்கியும் தடுத்துத் திருப்பி அனுப்பும் ஒரு குறைந்த பட்ச ஆட்ட சுதந்திரம் ஒரு சாதாரண கிரிக்கெட் ஆட்டத்தில் கூட இருக்கும் போது……

        ஒரு அரசியல் கருத்தாடல் களத்தில் முதலில்….

        ” கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லு கேக்காதக் கேள்விக்குப் பதில் சொல்லி என்னைக் குழப்பப் பார்க்காதேங்கற – “பைரேட்ஸ் ஆப் கரீபியன் ஸீப் பட ஜேக்ஸ்பேரோ கதாப் பாத்திரத்தைப் போன்ற நடத்தையைக் காண்பிக்கிறது. ஒரு எதிர்வினையை அது பதிலா அல்லது அதுவே இன்னொரு கேள்வி வாக்கியமா?! என ….

        எனக்குக் கேட்டுத் தான் பழக்கம் பதில் சொல்லுவதில் அல்ல எனும் திருவிளையாடல் தருமிப் பாத்திரமாய் முணுங்கக் கூடாது

        ஒரு எதிர்வினை அது கேள்வி வாக்கியமா?! இல்லை பதில் வாக்கியமா?! இல்லை கட்டளை வாக்கியமா ?! என்ற மொழி இலக்கண, தர்க்க சாஸ்த்திரத்துக்கான இலக்கண விதிகள் படி இல்லை என விவாத இலக்கண ஆராய்ச்சிக்குள் தள்ளி விடுவதைப் போல முணுமுணுக்கக் கூடாது. சற்று டெசிபல் உயர்ந்தாலே அவர் அச்சுறுத்தலாய் பேசுகிறார் என ஒரு விவாத ஓடையைத் திசை திருப்பும் தனியார் சேனல் மொக்கை சந்தைக் கடை விவாதமா நடந்து கொண்டிருக்கிறது?!

        இது என்ன …..பார்வையாளர்களின் கவன விழிப்புணர்வை மழுங்கடித்து பன்னாட்டு நிறுவனப் பொருட்களின் விற்பனை இலக்கு + த் தங்கள் சேனல் இலாப இலக்கு இவைக்கு மட்டுமே இங்கு பிரதான முன்னுரிமை என்ற முன்னுரிமை அடிப்படையில் மக்கள் நல முன்னுரிமை புறந்தள்ளப்பட்டு தனியார் நலன் முன்னிறுத்தும் டி.வி. சேனல் விவாதமா என்ன?!! மக்கள் நலன் என்ற பெயரில் பல கோடி மக்களின் நேரங்களை முதலில் களவாட வேண்டும், கோடி கோடியான மனிதவள நேரக் கொள்ளையை நிகழ்த்த வேண்டும்! அதற்கு “நேரக்கெடு, தனியார் நலன்களுக்கு நிமிடங்களில்! மணிகளில் தீர்மாணிக்கப்பட்டு மக்கள் நலன் குறித்ததான ஆரோக்ய விவாதங்களுக்கு விநாடி சுத்தமாய் ஒரு விவாதத்தை டி.பி. ஆர் ரேட்டிங் கிற்காக எப்போது வெட்ட வேண்டும் எப்படி வெட்ட வேண்டும் எனத் துல்லியமாக மக்களின் கவன விழிப்புணர்வை மழுங்கடிப்பதற்காகவே நடத்தப்படும் சினிமாப் புகழ் தனியார் டி.வி.விவாதக்களமில்லை இந்த இடம்.

        தனியார் இலாபம் என்ற ஒற்றைத் தாரக மந்திரத்தை மட்டுமே ஒரு தனி முன்னுரிமை நோக்கமாகக் கொண்ட ஒரு விளம்பர இடைவெளிக்குப் பிறகுத் தொடரும் (கவனம் வெட்டும் சிதறடிக்கும் சிதைக்கும்) வெட்டி டி.வி.விவாதமா இங்கே நடந்து கொண்டிருப்பது …?!

        ஒரு கருத்துப் பந்து ஆட்ட விதிகள் அனுமதிக்கும் எம்முறையில் வீசப்பட்டாலும் அதை எதிர் கொள்வதற்கான பேட்டிங், ஃபீல்டிங் சுதந்திரத்தையும் சற்றுக் கொடுங்கள்.

  5. Mr Isaiyavan has conveniently brushed aside one universal truth that has been always with humans. That is, the power of female over male. It is Aravindan who proposed to her. Suppose he hadn’t, she would have never given a thought to it; and, have settled for a marriage only with someone arranged by her parents. It is for man to propose; and for woman to accept or reject. Aravindan behaved according to this natural norm. He fell for her charms. கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்

    As written by Bharatidaasan, the power of female, when it is exercised over a male, makes him transcend all barriers, however stupendous they may be. Here it transcended the very fact you are much angry with, the Hindutva moorings of the husband. He rode over it to reach her. After he had proposed, she rode roughshod over the fact of him being a Hindutva man. So, both transcended the barriers one built against the other. There is nothing unnatural in this human process of bonding with each other, cutting across all lines, which we roughly call love. Everything you talk about comes into play only in hindsight i.e. after the event. You should watch the marriage whether it progresses or regresses. It seems to be progressing as proven by their three children; and from what she has stated in the article, she is very much happy in the marriage: an important factor i.e. the happiness of women in marriages is more important. Their bonding, against all overwhelming odds of different religions, different dietary habits, different cultural and religious ehtos, dislike of family circles, though initially — all these belittle all that you have written. This is a human issue; and you have rashly and rudely attempted to see it through political angle. You have drawn conclusions favorable to you. The conclusions won’t be shared by people like me who watch human drama in real life, esp. in man-woman relationship, with sympathy and humanity.

    I enjoyed reading your post, though. I also enjoyed reading the article in Dinakaran Supplement. When I read, it did not strike me odd.

    My best wishes to the couple and their loving children and thanks to you, for an opportunity to write the above.

    • Agneya, அரவிந்தன் நீலகண்டன் தனது திருமணத்தை மதத்தை கடந்து நிறைவேற்றிக் கொள்ளவில்லை. மாறாக அவரது மத உணர்வு அடுத்தடுத்த நிலைக்கு சென்று மதவாதமாகவும், மதவெறியாகவும் திடப்பட்டு இருக்கிறது. தனது மனைவிக்கு சிக்கன் வாங்கிக் கொடுப்பது வீட்டில் ஒரு working relationship -ஐ பராமரிக்கவே. அவர் ஒரு சராசரி மத உணர்வு கொண்டவராக இருந்தால் தனது மனைவியை சர்ச்சுக்கு செல்ல அனுமதித்திருப்பார். ஆனால், அ.நி.யின் மனைவி மட்டும் தனது மத நம்பிக்கையை தன்னளவில் பேணுகிறார். அ.நி.யோ தனது மத நம்பிக்கையை பிரபலப்படுத்துகிறார். மாற்று மதங்கள் மீது வெறுப்பை உமிழ்கிறார். இது எப்படி?

      மனைவியின் மாறுபட்ட மத நம்பிக்கை அ.நி.யின் மதவெறி அரசியல் கண்ணோட்டத்துக்கு ஒத்திசைகிறது என்பதே உண்மை. ஒரு வகையில் அ.நி. தனது வீட்டில் சோதனைக்கு உட்படுத்தும் இந்த முயற்சி சமூகம் முழுமைக்கும் இந்துத்துவம் மாற்று மத நம்பிக்கையாளர்கள் மீது கடைப்பிடிக்க விரும்பும் அணுகுமுறையின் மாதிரியாக இருக்கிறது எனலாம். அதாவது, கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு செல்லக்கூடாது. முஸ்லிம்கள் மசூதிக்கு செல்லக்கூடாது. பீஃப் சாப்பிடக்கூடாது. (குமரி மாவட்டத்தில் அனைத்து ஹோட்டல்களிலும் சுவையான பீஃப் கிடைக்கிறது. தனது மனைவிக்கு பீஃப் வாங்கி கொடுப்பாரா அ.நி.? தீபாவளிக்கு இந்துக்கள் கூட குமரி மாவட்டத்தில் பீஃப் சாப்பிடுகிறார்கள். தனது கிறிஸ்தவ மனைவிக்கு அந்த உரிமையை வழங்குவாரா?)

      அ.நி.யிடம் தெரியும் இந்த்துத்துவம், ஃபாசிஸத்தின் தூய நிலை. மோடிக்கே கூட இந்த திறமை வராது. மோடி தனக்கு ஒரு கிறிஸ்தவ மனைவி இருந்திருந்தால் அடித்தே கொன்றிருப்பார். அ.நி. நிதானித்து, அவசரப்படாமல் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். அது பிரச்சினைகளை மேலோட்டமாக பார்க்கும் உங்களை போன்ற சராசரி உள்ளங்களை ஈர்க்கிறது.

  6. அரவிந்தன் நீலகண்டன் ஒரு இந்துத்துவவாதியா?

    தினகரன் நாளிதளின் இணைப்பான ‘வசந்தம்’ இதழின் அட்டைப் படத்தில் வெளியான ‘காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல…’ என்றத் தலைப்பில் இவ்வாறு பெருமைப்பட குறிப்பிட்டிருந்தது: “கணவர் இந்து. அதுவும் 14 வயதிலேயே ‘ஷிகா’வுக்குச் சென்ற இந்துத்துவவாதி. இன்றும் இந்துத்துவா அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருபவர். காதல் மனைவியோ கிறிஸ்தவர். இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இன்றுவரை யாரும் யாருக்காகவும் மதம் மாறவில்லை. இந்த மத நல்லிணக்க வாழ்க்கைத்தான் இந்தியர்கள் அனைவருக்குமான பாடம்.”

    இக்கட்டுரையில், பெந்தெகொஸ்தே சபையைச் சார்ந்த ஃபான்சியா தானியேலும் இந்துத்துவவாதி அரவிந்தன் நீலகண்டனும் எப்படி காதலித்தார்கள் என கதை தொடர்கிறது. இவர்களின் காதலுக்கு ஃபான்சியா வீட்டில் மட்டும் எதிர்ப்பு வலுக்கிறது. இதனால் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். இக்காதலுக்கு அரவிந்தனின் தகப்பனார் உதவி செய்கிறார். திருமணத்திற்குப் பிறகு பெண் வீட்டார் சமாதானம் ஆகி இரு வீட்டாரும் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் வந்து போவதற்கான இணக்கமான சூழ்நிலை உருவாகிறது. இவர்களுக்கு மூன்றுக் குழந்தைகள். கிறிஸ்து பிறப்பு நாளில் குடும்பத்துடன் ஃபான்சியாவின் தகப்பனார் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.

    நமக்கு இவர்களுடைய காதல் கதை முக்கியமல்ல. ஒரு வீட்டிற்குள் அவள் கிறிஸ்தவளாகவும் அவன் இந்துவாகவும், குழந்தைகள் இரு மதத்திலும் வாழ முடியுமா? ஆம்! நாங்கள் 15 ஆண்டுகளாக வாழ்கிறோம் என பெருமைப்பட பேசும் ஃபான்சியா தானியேல், உண்மையிலேயே விவிலியத்தை ஆய்வுசெய்து, அதன் அடிப்படையில் வாழும் ஒரு கிறிஸ்தவப் பெண்மணி அல்ல. அவரை, ஒரு பெயர்தாங்கி கிறிஸ்தவப் பெண்மணி எனச் சொல்லலாம். அதனால்தான் அவளுக்கு கிறித்தவத்தை விட காதல் முக்கியமாக இருந்தது. ஒரு இந்துவோடு காதல் சாத்தியமானது என்பதனை அவள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

    இயேசுவோ அல்லது அவரது சீடர்களோ பிறந்தநாள் விழா கொண்டாடியதில்லை. பிறந்தநாள் விழாக்கள் கடவுளுக்கு விரோதமானச் செயலாகும். அதனால்தான் இயேசு என்றைக்குப் பிறந்தார் என்பதுகூட உலகில் யாருக்கும் தெரியாது. விவிலியத்தில் இருவர் மட்டுமே பிறந்தநாள் விழா கொண்டாடி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பார்வோன் மன்னன். இன்னொருவர் திருமுழுக்கு யோவானை கொலை செய்த ஏரோது மன்னன். இவர்கள் இருவரும் பிதாவாகிய யஹோவா கடவுளை வழிபட்டவர்கள் அல்ல. இவர்கள் இருவரின் பிறந்தநாள் விழாவிலும் மதுபானம் முக்கிய இடம் பெற்றிருந்தது. கிறிஸ்துமஸ் நாட்களில் குமரி மாவட்டத்தில் டாஸ்மார்க் கடைகளில் மதுபானம் எத்தனைக் கோடியைத் தாண்டியது என கணக்குப் பார்த்தால் பெயர்தாங்கி கிறிஸ்தவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்கிற பட்டியலை நாம் உருவாக்க முடியும். அப்படிப்பட்ட பிறந்தநாள் விழாவை ஃபான்சியா தானியேல் கொண்டாடுகிறார் என்றால் அவர் ஒரு பெயர்தாங்கி கிறிஸ்தவர் என்பது புலனாகும். விவிலியத்தை ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் வாழும் யஹோவா மறைசாட்சியினர் எவரும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதில்லை.

    “இருவரும் அவரவர் மதத்தில்தான் இயங்கி வருகின்றனர். மட்டுமல்ல, அவரவர் மதம் சார்ந்த சடங்குகளைத்தான் இருவரும் மேற்கொண்டு வருகின்றனர்” எனத் தொடரும் கதையில் ஃபான்சியா தானியேல் சொல்கிறார்: “ஞாயிறு சர்ச்சுக்கு போகிற பழக்கம் எங்களுக்குக் கிடையாது. வீட்ல பைபிள் படிப்போம்.” பெந்தெகொஸ்தேகாரர்கள் எப்படி சத்தம்போட்டு படிப்பார்கள், செபிப்பார்கள் என எல்லோருக்கும் தெரியும். அவர்களுக்கு இந்துக்கள், வீடு வாடகைக்கோ, ஒத்திக்கோ கொடுக்க மாட்டார்கள். ஏன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்கூட கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இடும் சத்தத்தில் நாம் நிம்மதியாக குடியிருக்க முடியாது. குழந்தைகள் படிக்கவும், நோயாளிகள் தூங்கவும் முடியாது. அவர்கள் பலரை வீட்டிற்கு அழைத்து வந்து ‘ஏசுவே இறங்கி வாரும்’ என சத்தம் போடுவார்கள். பரிசுத்த ஆவி இறங்கி வந்துவிட்டதுபோல் கூக்குரல் எழுப்புவார்கள். இவைகளை தனது மாமனார் வீட்டில் ஃபான்சியா பின்பற்றுகிறாரா என்றால் இல்லை. எனக்குத் தெரிந்தவரை இப்படிப்பட்ட சத்தம் எழுப்பும் சத்த மாசுகளை அவரது மாமனார் விரும்ப மாட்டார். சடங்குகளைக் கடைப்பிடித்து வருவதாகச் சொல்லும் இவர் எப்படிப்பட்ட சடங்குகளை கடைப்பிடித்து வருகிறார் எனவும் சொல்லவில்லை. கிறிஸ்தவத்தில் சடங்குகள் உண்டா என்பதனை விவிலியத்தின் அடிப்படையில் அவர்தான் விளக்க வேண்டும். மூன்று குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்களா? அதற்கு இந்துத்துவவாதி அரவிந்தன் நீலகண்டன் அனுமதித்தாரா? என்பது சொல்லப்படவில்லை. இதன்மூலம் மத நல்லிணக்க வாழ்க்கை கேள்விக் குறியாகிறது.

    குருசடி ஊரில் ஆனந்தி என்ற ஒரு கத்தோலிக்கப் பெண் இருந்தாள். இயேசுவின் மீதும், மரியாள் மீதும் மிகுந்த பக்தி உடையவள். காதலுக்காக கத்தோலிக்க மதத்தை விட்டுச் சென்று விட்டாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஒருதடவை நான் அவளைச் சந்தித்தபோது, “காதலுக்காக மரியாளையும் இயேசுவையும் தூக்கி வீசிவிட்டு சென்று விட்டாயே” என்றேன். அதற்கு அவள், “நான் குருசடி கோவில் திருவிழா நடக்கும் போதெல்லாம் ஊருக்கு வருவேன். அப்பொழுது கோவிலுக்குப் போவேன்” என்றாள். ‘குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து விட்டாயா?’ என்றபோது ‘அது எதற்கு?’ என்றாள். இப்படி பல உதாரணம் பட்டியல் போட்டுச் சொல்ல முடியும். இவர்களெல்லாம் பெயர்தாங்கி கிறிஸ்தவர்கள். இப்படிபட்ட இவர்கள் “இன்றுவரை யாரும் யாருக்காகவும் மதம் மாறவில்லை” எனபது வெளிவேசமே.

    ஒரு மொட்டைக் கடிதாசில் பல விஷயங்கள் உள்ளார்ந்தமாகச் சொல்லப்பட்டிருக்கும். வாசிப்பதற்கு சுவைபட இருக்கும். விசயங்கள் எதுவும் மறைக்கப்படாமலே எழுதப்பட்டிருக்கும். அந்த மொட்டை கடிதாசில் இருக்கும் செய்திகளை விட இதில் ஒன்றும் ஆச்சிரியமாக இல்லை. காதல் திரைப்படம் எடுப்பதற்கான கதை இருக்கிறது. இக்கதை ஏற்கனவே திரைப்படங்களில் வந்திருக்கிறது. சம தளத்தில் பணி செய்யும் சமூகப் போராளிகளுக்கு இதில் வித்தியாசமான செய்திகள் எதுவும் இல்லை. அரவிந்தன் நீலகண்டன் எழுதிய நூல்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகவோ, கருத்துக்கள் பரிமாறிக் கொண்டதாகவோ அல்லது விவிலியத்தின் மகத்துவத்தைக் குறித்து தனது கணவரிடம் ஃபான்சியா பேசியதாகவோ, அதற்கு அவர் ஏதாவது கருத்துக்கள் சொன்னதாகவோ செய்திகள் இல்லை.

    ஒரு விசயத்தை இங்கு நாம் ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது. அதனைப் ஃபான்சியா சொல்கிறார்: “அவங்க வீட்ல சைவம், நானோ அசைவ பிரியை. இதுகூட பிரச்சனையா மாறினதே இல்லை. விருப்பமானப்ப நான் வெளில போய் சாப்பிட்டு வருவேன். சொல்லப்போனா அரவிந்தனே என்னைக் கூட்டிட்டு போய் வாங்கிக் கொடுப்பார். பிறந்த வீட்டுக்கு நாங்க சேர்ந்து போறப்ப அரவிந்தனுக்காக மட்டும் தனியா சைவம் சமைப்போம்.”

    இங்கு இரண்டு விசயங்களைப் பார்க்க வேண்டி உள்ளது. முதலாவதாக, அப்பெண்ணிற்கு மாமனார் வீட்டில் அசைவ சமையல் சமைப்பதற்கு அனுமதி கிடையாது. அதனால்தான் அவள் சொல்கிறாள்: “அவங்க வீட்ல சைவம், நானோ அசைவ பிரியை. இதுகூட பிரச்சனையா மாறினதே இல்லை. விருப்பமானப்ப நான் வெளில போய் சாப்பிட்டு வருவேன்.” இத்தனைக்கும் ஃபான்சியாவும் அவரது கணவர் அரவிந்தனும் மாடி வீட்டிலும், அவளது மாமியார் மாமனார் கீழ் வீட்டிலும் குடியிருக்கிறார்கள். இயேசு மீன்களைப் பிடிப்பதற்கு பேதுருவிடம் வலை வீசச் சொன்னார். மீன்களை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்து உண்ணச் சொன்னார். ஏசுவைப் பின்பற்றும் அந்தப் பெண் மீன்கறி சமைத்து வீட்டில் சாப்பிட அனுமதி இல்லாதபோது நீங்கள் எப்படி மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியும்?

    இரண்டாவதாக, ‘அரவிந்தன் என்னை கூட்டிட்டுப் போய் வாங்கிக் கொடுப்பார்.’ இங்கு அரவிந்தனின் பெருந்தன்மையை ஒருபுறம் பாராட்ட நினைத்தாலும் அசைவ உணவை வாங்கிக் கொடுக்கும் அரவிந்தனை நாம் எந்த தராசில் வைத்து பார்ப்பது? அசைவம் என்பது உயிரினங்களைக் கொன்று வேக வைத்துச் சாப்பிடுவது. சைவ சித்தாந்தத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட அரவிந்தன் கொலை செய்யப்பட்ட உயிரினங்களை அசைவ உணவாக வாங்கிக் கொடுக்கிறார் என்றால் அந்த கொலையின் பாவம் அரவிந்தனைத்தானே சேரும். அசைவம் சாப்பிடுவது என்பது மறுபிறப்பை முழுமையாக நம்பும் இந்துத்துவத்தைக் கொன்று சாப்பிடுவதாகும். அரவிந்தன் எப்படி தன்னை இந்துத்துவவாதி எனச் சொல்ல முடியும்? அல்லது அரவிந்தனும் பெயர்தாங்கி இந்துவா? இதற்குப் பதிலை அரவிந்தன் சொல்வாரா? உண்மையிலே இவர்கள் வீட்டில் மத நல்லிணக்கம் இருக்கிறதா?

    எழுத்தாளர் ஜோ. தமிழ்ச்செல்வன்,
    தலைவர், தெற்கு எழுத்தாளர் இயக்கம்.

    • அரவிந்தன் நீலகண்டன் மத நல்லிணக்கத்துக்கு மாற சாத்தியங்கலாவது கொஞ்சம் இருக்கு! ஆனால் எழுத்தாளர் ஜோ. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு ???? //அசைவம் என்பது உயிரினங்களைக் கொன்று வேக வைத்துச் சாப்பிடுவது. சைவ சித்தாந்தத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட அரவிந்தன் கொலை செய்யப்பட்ட உயிரினங்களை அசைவ உணவாக வாங்கிக் கொடுக்கிறார் என்றால் அந்த கொலையின் பாவம் அரவிந்தனைத்தானே சேரும். அசைவம் சாப்பிடுவது என்பது மறுபிறப்பை முழுமையாக நம்பும் இந்துத்துவத்தைக் கொன்று சாப்பிடுவதாகும். அரவிந்தன் எப்படி தன்னை இந்துத்துவவாதி எனச் சொல்ல முடியும்? அல்லது அரவிந்தனும் பெயர்தாங்கி இந்துவா? இதற்குப் பதிலை அரவிந்தன் சொல்வாரா? உண்மையிலே இவர்கள் வீட்டில் மத நல்லிணக்கம் இருக்கிறதா? //

    • //அசைவம் என்பது உயிரினங்களைக் கொன்று வேக வைத்துச் சாப்பிடுவது. சைவ சித்தாந்தத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட அரவிந்தன் கொலை செய்யப்பட்ட உயிரினங்களை அசைவ உணவாக வாங்கிக் கொடுக்கிறார் என்றால் அந்த கொலையின் பாவம் அரவிந்தனைத்தானே சேரும். அசைவம் சாப்பிடுவது என்பது மறுபிறப்பை முழுமையாக நம்பும் இந்துத்துவத்தைக் கொன்று சாப்பிடுவதாகும். அரவிந்தன் எப்படி தன்னை இந்துத்துவவாதி எனச் சொல்ல முடியும்? அல்லது அரவிந்தனும் பெயர்தாங்கி இந்துவா? இதற்குப் பதிலை அரவிந்தன் சொல்வாரா?

      ஜோ. தமிழ்ச்செல்வன், நீர் எந்த ரகம் என்றே தெரியவில்லைய? அரவிந்தன் நீலகண்டனுக்கு இப்படி ஒரு சோதனையா? இந்துத்துவ பீடத்தில் அரவிந்தன் நீல்கண்டனின் இடத்தை காலி செய்ய கிளம்பி விட்டீர்கள் போல இருக்கிறது. இனி மேல் இந்துத்துவத்துக்கு இரண்டு அறிவுஜீவிகள் இருக்கிறார்கள் — ஒருவர் அரவிந்தன் நீலகண்டன். இரண்டாமவர் ஜோ. தமிழ்ச்செல்வன் என்று போட்டுக் கொள்ளும்படி வினவை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  7. என்னங்க ஜோ. அரவிந்தன் நீலகண்டன் ஒரு இந்துத்துவவாதியா? அப்படின்னு ஆரம்பிச்சிட்டு அந்தம்மா மாதிரியே சாதம் குழ்ம்புன்னு அரைக்கிரீங்க. வினவு சுட்டிக்காட்டும் இந்துத்வாதி என்பதன் மையக்கருத்தில் நீலகண்டனை பற்றி விளக்கவும்.

  8. இந்து முன்னணியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதத்தை வசைபாட இலாகா ஒதுக்கியிருப்பார்கள். அந்த இடஒதுக்கீட்டின்படி அரவிந்தன் நீலகண்டன் கிறித்தவர்களுக்கெதிராக ஆபாச வசையாடுவதில் முக்கியப் பாத்திரம் வகிப்பவர். இப்படிப்பட்டவர் தன்னுடைய கிறித்தவ மனைவிக்கு என்ன மதச் சுதந்திரம் கொடுத்திருக்க முடியும்? பிள்ளைகளுக்கு அவர் வைத்திருக்கும் சமஸ்கிருதப் பெயர்களைப் பார்த்தால் அவர்கள் எந்தக் கோட்பாட்டின்படி வளர்க்கப்படுகிறார்கள் என்று தெரிகிறது. அரவிந்தனை இப்போது விமர்சிக்கும் ஜோ.தமிழ்ச்செல்வன் மோடி அரசு அமைய அணிலாக மண் சுமந்தவர்.குறிப்பாக காவித்தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட கடலோரத்தில் காவிக்கும்பலுக்கு ஆள் பிடித்துக் கொடுத்தவர். இப்போது இவருக்கு அரவிந்தனுடன் என்ன கொடுக்கல்-வாங்கல் பிரச்சனையோ…தெரியவில்லை.

  9. உலகத்தில் கேவலமான ஈன செயலை செய்வதற்கும் தி.மு.க வில் இருப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. கேவல ஈன ஜென்மங்கள் என்று தி.மு.க காரர்களை சமீபத்தில் கரித்துக் கொட்டிய இந்த அரவிந்தனுக்கு இந்த விளம்பரத்தை தருவது அந்த தினகரனில் வேலை செய்யும் திராவிடக் கொழுந்துகள்தான்

  10. பெனிடோ முசோலினியின் கட்சி பாசிஸ்ட் கட்சி. அதன் தீவிர உறுப்பினர் என்பதில் பெருமை கொண்ட அந்தோனியோ மெயினோவின் மகள் சோனியா. அவரது மனதில் ஊறிப்போன கிறிஸ்தவ மதமாற்றத்தை வளர்க்க அவர் ஆண்ட கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நடந்த மதமாற்றம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை விடவும் அதிகம். இந்த நவீன பாசிசத்தை ஒரு நாளும் பாசிசம் என்று வினவு கூறாது!

    அவ்வளவு ஏன், உட்கார்ந்தால் எழுந்தால் ஒவ்வொரு கட்டுரையிலும் ஏதாவது ஒரு வழியில் திணித்து, பார்ப்பன இந்துமதம் என்று திட்டும் பாசிசக் கொள்கையும் வழக்கமும் வினவுக்கு இருக்கிறது.

    இந்துமதத்தை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனையும் கோட்பாடும் கொண்ட வினவை விடவும் ஒரு பாசிஸ்ட் இருக்கவே முடியாது.

    பாசிஸ்ட் வினவுக்கு பார்ப்பவர்கள் எல்லாரும் பாசிஸ்டாகத்தான் தெரியும். ஒரு மனிதன் கலப்பு மணம் செய்து நிம்மதியாக வாழ்வது கூடப் பொறுக்க முடியாத அளவுக்குப் பாசிஸ்டாக இருக்கும் வினவு சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

    • சாதி ஒழிய பார்பன இந்துமதம் ஒழிந்தாக வேண்டும். சாதியை ஆதரிக்கும் பார்பன இந்து மதம் தான் ஒரு பாசிச மதம். அதை ஆதரிக்கும் இந்த்துத்துவாதிகள் தான் பாசிஸ்டுகள். பாப்பார அடிவருடிகள்.

      வினவு சரியாகத்தான் செல்கிறது.காதலைவைத்தே ஒரு பாசிஸ்டை மதிப்பிடமுடியாது என்று கட்டுரை சரியாகத்தான் சொல்கிறது

  11. பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி என்ற பெரியார் தன் நண்பர் ராஜாஜியை பார்க்கும் போதெல்லாம் அடித்துக் கொண்டா இருந்தார்..?! அரவிந்தனை குடும்பத்தோடு விமர்சிக்க வேண்டிய நிலைக்கு வினவுக்கு கருத்தியல் பஞ்சம் வந்துவிட்டதா..?!

    • @அம்பி
      ‘நல்லபாம்பு’ காதல் வயப்படுவதாலேயே அதற்கு விஷம் கிடையாது என்று தினகரன் பிரச்சாரம் செய்கிறது. இல்லை ! பாம்பின் காதலை வைத்து பாம்பை மதிப்பிட முடியாது.(பார்பன இந்த்துத்துவா என்ற விஷம்) இருக்கும் வரை நல்ல பாம்பு ஆபத்தானது என்று எச்சரிக்கை செய்கிறது வினவு.

  12. ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் மற்றவர்கள் விமரிசிப்பதும் விவாதிப்பதும் சரியில்லைதான்.ஆனால் அந்த சொந்த வாழ்க்கையையும் ஒரு பரப்புரை ஆயுதமாக ஏந்தி வந்து பொது வெளியில் வைத்தபின் அது குறித்த விவாதம் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது. ஆகவே தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விவாதிப்பது என்ன வகை நாகரீகம் என அம்பிகள் ஆத்திரப்படுவதில் பொருளில்லை.

    அரவிந்தன் நீலகண்டன் பான்சியா தானியேல இணையருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்து விட்டதாக தெரிகிறது.இந்த பதினைந்து ஆண்டு காலவெளியில் இந்தியாவில் கிருத்துவ மக்கள் மீது எண்ணிறந்த தாக்குதல்களை அ.நீ.யின் சங் கும்பல் நடத்தியிருக்கிறது.

    குசராத்தின் டாங் மாவட்டத்தில் 1998-99 -ல் நடந்த தொடர் தாக்குதல்கள்.
    இதே கால கட்டத்தில் ஒரிசாவில் நடந்த தாக்குதல்கள்.அதன் உச்ச கட்ட கொடூரமாக ஒரு பாதிரியாரை அவரது பச்சிளம் குழந்தைகளுடன் சேர்த்து உயிரோடு எரித்துக்கொன்றது.
    இதே போன்று கர்னாடகத்தில் மாதா கோவில்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டன.ஒரிசாவில் காந்தமால் மாவட்டத்தில் கொலைவெறி தாக்குதல்களில் பல கிருத்துவர்கள் உயிரிழப்பு,செத்தவர்கள் போக மீதி இருந்தவர்கள் உயிர் பிழைத்திருக்க காடுகளில் மறைந்து வாழ்ந்த அவலம்,அந்த சமயத்தில் காந்தமால் மாவட்ட கன்னித்துறவியர் மீது நடத்தப்பட்ட கும்பல் பாலியல் தாக்குதல்கள்,புதுச்சேரியிலிருந்து சென்று மத்திய பிரதேசத்தில் பணியில் இருந்த கன்னித்துறவியர் மீது நடத்தப்பட்ட கும்பல் பாலியல் தாக்குதல்கள்,அநத மாபாதக செயலை சினம் கொண்ட இந்து இளைஞர்களின் தேசபக்த செயல் என நியாயப்படுத்திய சங் கும்பலின் திமிர்த்தனம் என இத்தனை அட்டூழியங்களும் அரங்கேறிய கால கட்டத்தில்தான் இந்த இணையர் ”மத நல்லிணக்க” வாழ்வை நடத்தி வந்துள்ளனர்.நடத்தி வருகின்றனர்.

    அதாவது தனது மனைவியை பெற்று வளர்த்து ஆளாக்கி தந்த அவரது பெற்றோர்,அவர்கள் சார்ந்த சமூக மக்களை கொன்று குவிப்பதை ஆதரித்துக்கொண்டே அந்த பெண்ணோடு குடும்ப வாழ்வை மேற்கொள்வதில் அ.நீ.க்கு தயக்கம் எதுவும் இருக்கவில்லை.தனது சமூக மக்களை வேட்டையாடும் இப்படிப்பட்ட கொலைபாதக இயக்கத்தில் இருக்கும் ஒருவனோடு குடும்ப வாழ்வை மேற்கொள்வதில் பான்சியாவுக்கும் தயக்கம் எதுவும் இருக்கவில்லை.

  13. //தி.மு.க காரர்களை சமீபத்தில் கரித்துக் கொட்டிய இந்த அரவிந்தனுக்கு இந்த விளம்பரத்தை தருவது அந்த தினகரனில்// தினகரன் – மாறன் சகோதரர்களால் நடத்தபடுவது. திமுகவின் கோடாரி காம்புகள். உணர்வாலும் செயலாலும் பார்பணர்கள். இவர்களை சீராட்டி வளர்ப்பது, இன உணர்வற்ற அரசியல் வியாதி ஸ்டாலின்.

  14. //இந்து முன்னணியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதத்தை வசைபாட இலாகா ஒதுக்கியிருப்பார்கள். அந்த இடஒதுக்கீட்டின்படி அரவிந்தன் நீலகண்டன் கிறித்தவர்களுக்கெதிராக ஆபாச வசையாடுவதில் முக்கியப் பாத்திரம் வகிப்பவர். இப்படிப்பட்டவர் தன்னுடைய கிறித்தவ மனைவிக்கு என்ன மதச் சுதந்திரம் கொடுத்திருக்க முடியும்? பிள்ளைகளுக்கு அவர் வைத்திருக்கும் சமஸ்கிருதப் பெயர்களைப் பார்த்தால் அவர்கள் எந்தக் கோட்பாட்டின்படி வளர்க்கப்படுகிறார்கள் என்று தெரிகிறது. அரவிந்தனை இப்போது விமர்சிக்கும் ஜோ.தமிழ்ச்செல்வன் மோடி அரசு அமைய அணிலாக மண் சுமந்தவர்.குறிப்பாக காவித் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட கடலோரத்தில் காவிக்கும்பலுக்கு ஆள் பிடித்துக் கொடுத்தவர். இப்போது இவருக்கு அரவிந்தனுடன் என்ன கொடுக்கல்-வாங்கல் பிரச்சனையோ…தெரியவில்லை – துீஸ்மாஸ் டிசெல்வா//அரவிந்தன் நீலகண்டன் ஒரு இந்துத்துவவாதியாக இல்லை என்பதுதான் முதல் பிரச்சனை. இந்துத்துவம் என்பது ஒரு அற்புதமான பாதை. அப்பாதையை அரவிந்தன் தனது மனைவிடம் எடுத்து வைக்கவில்லை என்பது இரண்டாவது பிரச்சனை. கிறித்தவ மதத்தில் “திருப்பலி” என்பது ஒரு உயிரைப் பலி கொடுப்பது. இயேசு என்கிற மனிதனை தினம்தோறும் திருப்பலி என்கிறப் பெயரில் பலி கொடுத்து மரித்த அப்பிணத்தை உண்பதும், மரித்த உடலின் இரத்தத்தைக் குடிப்பதும் ஆகும். இது அசைவம் சாப்பிடுவதை விட மோசமானதாகும் என்பது மூன்றாவது பிரச்சனை. ஹிந்துத்துவத்தை வீட்டிலிருந்தே துவங்கி இருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை என்பது நான்காவது பிரச்சனை. நீ வழிபடும் கடவுளை அவள் கடவுளாகவும், அவள் வழிபடும் கடவுளை உன் கடவுளாகவும் ஏற்றுக் கொள்ள இயலாதபோது வீட்டில் மத நல்லிணக்கம் பேசுவது ஐந்தாவது பிரச்சனை. மத நல்லிணக்கம் எப்பொழுதும் மத மாற்றத்திற்கே வழி வகுக்கும் என்பது ஆறாவது பிரச்சனை. ஆக, அரவிந்தன் நீலகண்டன் இந்துத்துவவாதி ஆகிவிட முடியாது.

  15. ஐயா வசவு,
    திரு.அரவிந்தன்நீலகண்டன் அவர்களின் குடும்பவாழ்வை பற்றி பொது மேடையில் விவாதிப்பது நாகரீகம் அல்ல,

    அவர் என்ன காருணானீதி போல பல தாரமனம் செயிதாரா?

    சசி தரூர் போல மனைவி மரணத்திற்கு காரணமானாரா?

    ப்ரகாஷ் காரத் போல மனைவியை கட்டாயப்படுத்தி தனது நம்பிக்கையை திணித்தாரா?

    ராகுல் காந்தி போல கல்யாணம் ஆனதை மறைத்தாரா?

    திக்விஜயி சிங் போல காலம் போன காலத்தில் கல்யாணம் செயிதாரா?

    என்.டீ.திவாரி போல கோர்ட் சொன்ன பிறகே மனைவியை ஏற்றுகொண்டாரா?

    மதம் மாற்றினாரா? விருப்பு வெறுப்புகளுக்கு தடை விதித்தாரா?

    அல்லது
    பில் க்ளிண்டன் போல த்ரோகம் செயிதாரா?..

    இந்து மூச்சு விட்டாலும் குற்றமா?..

    • காருணானீதி சசி தரூர் ப்ரகாஷ் காரத் ராகுல் காந்தி திக்விஜயி சிங் என்.டீ.திவாரி க்ளிண்டன்

      அட்வகேட்!

      நீங்கள் போட்ட லிஸ்டில் இருக்கிறவர்கள் எல்லாம் தங்கள் கலியாணத்தை ஊருக்குச் சொல்லி தங்கள் மதத்தை வளர்க்க ஆசைப்படவில்லை. அரவிந்தன் தன் பெண்டாட்டியோடு இருக்கிற படத்தைப்போட்டு பேட்டி கொடுத்து தினகரனை வைத்து இந்துத்வம் வளர்க்கிறார்.

      அது சரி, ஐயா அட்வகேட், உங்கள் லிஸ்டில் பெண்டாட்டி யாரென்றே மறைத்துக்கொண்டு வாழ்ந்த மோடிபற்றி இல்லையே? சாமிக்குத்தமாகிவிடுமோ?.

  16. once in facebook this gentleman by name neelakantan got so annoyed with me for posting a comment involving a kid professing his name as YESU,the kid is supposed to have said that he has no parents and his parents was YESU.when i wrote that one cud see christ in the child he made derogatory remarks on Christ, BIBLE and the Christian POPULAtion of INDIA. Am so happy to learn that his wife is a protestant like me,this only proves for all the brain washing he does thru hindutuva holds no Ground his better half is a Christian this is more than a slap across his face for passing derogatory remarks. the mindset this fellow has, is totally parochial Hindu views,now if you all assume him to be a think tank or philosopher or even an RSS idealogue he is nothing but a cabbage on its rotting stage. one who lacks a sense of accomodation can never be a Human,it is his curse that he has fathered 3 children thru a christian wife now these kids can be future RSS idealogues or PASTORS or atheism professing the word of GOD. All the fingers are not the same NEELAKANTAN ill meet you after some years if am alive or if your karma lets me live you will have the last laugh with an answer for me hail your HINDUTUVA stay BLESSED.

Leave a Reply to கருங்குளம் மா .முருகன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க