privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்40 வயதுக்கு மேல் ஐ.டி துறையில் வேலை இல்லை - பங்கஜ்

40 வயதுக்கு மேல் ஐ.டி துறையில் வேலை இல்லை – பங்கஜ்

-

ங்கஜ், வயது 40, மும்பையைச் சேர்ந்தவர். ஐ.டி துறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் அமைப்பது பற்றிய பிரச்சாரத்தின் போது அவரை சந்தித்தோம். முதலில் நம்மிடம் பேச தயங்கியவர் பிறகு தனது ஆதங்கங்களை கொட்டித் தீர்த்தார்..

jobloss“நான் அமெரிக்காவில் ஹவாய், புளோரிடா, கனடா என வட அமெரிக்கா முழுவதும் 12 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். எச்1பி விசா காலாவதி ஆனதால் 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பினேன். ஒரு நடுத்தர அளவு கம்பெனியில் 2 ஆண்டுகள் வேலை செய்தேன். அதன் பிறகு அதே கட்டிடத்தில் இருந்த சிறு நிறுவனத்திற்கு மாற முனைந்த போது எல்லா ஃபார்மாலிட்டியும் முடிந்த பிறகு எச்.ஆர் ஒரு கலந்துரையாடலின் போது முந்தைய மட்டத்திலேயே இங்கும் பணிபுரிய முடியுமா எனக் கேட்டார்.

இரண்டு மாத கால நோட்டீசு காலத்திற்கு மத்தியில் முந்தைய நிறுவனம் என்னைப் பற்றிய எதிர்மறை தகவல்களை கொடுத்திருக்கிறது என யூகித்தேன். அதற்குள் நான் முந்தைய வேலையையும் ராஜினாமா செய்து விட்டேன். இப்போது ஒன்றரை ஆண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.

நிறுவனங்கள் தமக்குள் ஒரு தொழில்முறை வலைப்பின்னலைக் கொண்டுள்ளன. தொழிலில் தமக்குள் சில ஒத்துப்போகும் வேலைப்பாணியை பெற்றிருக்கின்றனர். நான் திரும்ப வேலைக்கு முயற்சித்த போது எங்கும் வேலை கிடைக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். நவுக்ரி, டைம்ஸ் ஜாப், மான்ஸ்டர், ஷைன் போன்ற இணைய தளங்களில் இருந்து அவ்வப்போது வேலைக்கான அழைப்புகள் வரும். சில சுற்றுக்கள் நேர்முகம் கூட முடிந்து விடும். கடைசியில் வாய்ப்பில்லை என சொல்வார்கள். இதெல்லாம் எனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் தான் சொல்கிறேன்.

இந்திய தகவல் தொழில்நுட்ப துறை சந்தையில் நிறைய ஓட்டைகள் உள்ளன. ஆனால் நமக்கு மூடப்பட்டு தெரியும் அவை நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் இருப்பதுதான் உண்மை. எனது பதினான்கு ஆண்டு கால தகவல்தொழில்நுட்பத் துறை வேலையில் ஊடாக சொந்த அனுபவத்தில் கற்றறிந்த பாடம் இது. எனது ஆர்.டி சேமிப்பு பணத்தில்தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஒரு ஐ.டி நிறுவனம் நினைத்தால் உங்களது சொந்த ஈமெயிலுக்கு வரும் தகவல்களைக் கூட அட்சரம் பிசகாமல் கண்காணிக்க முடியும். நவுக்ரி, மான்ஸ்டர் போன்ற வேலை வாய்ப்பு தளங்களில் இருந்து வரும் இணைய கடிதங்களையும் கண்காணிக்க முடியும். இதுவும் சொந்த அனுபவத்தில் இருந்துதான் கூறுகிறேன்.

ஐடி துறையில் இருப்பதாலேயே நாம் ஒயிட் காலர் கூலிகள் என்ற உண்மை இல்லாமல் போய் விடாது. ஐ.டி நிறுவனங்கள் மிகவும் இளமைத் துடிப்பான ஊழியர்களை எதிர்பார்க்கிறது. என்னைப் போல நாற்பதுகளை தொட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் துறையில் தொடர்வது மிகவும் கடினமானது. வேலைக்கான சந்தை நாற்பதைத் தொடுபவர்களுக்கு பாதகமாக உள்ளது. இங்கே மற்ற தொழிலாளிக்கும் ஐடி வெள்ளைக் காலர் தொழிலாளிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கூடுதலாக, ஐடி துறையில் எல்லாமே அரசியல்தான். சொல்லப் போனால் 80 சதவீதம் அரசியல்தான்.

நீங்க கணினி அறிவியலில் முதுகலையோ அல்லது பி.எச் டியே படித்திருந்தாலும் இதுதான் நிலைமை. இல்லையெனில் நீங்கள் நிர்வாகத் தரப்பு ஊழியராக தாவிச் சென்றிருந்தால் தப்பிக்க முடியும். இன்னமும் கோடிங் அடித்துக் கொண்டிருந்தால் தப்பிக்க முடியாது. இப்போது வரும் இளைஞர்களுக்கு இப்படி தப்பிக்கத்தான் நான் வழி சொல்லுவேன். அப்படிச் செல்பவர்கள் தப்பித்து பிழைத்துக் கொள்ள முடியும்.

முப்பதுகளில் இருப்பவர்கள் நாற்பதுகளை விட நன்றாக கோடு எழுதுவார்கள். வேகமாக எல்லாவற்றையும் கிரகித்துக் கொள்வார்கள் என்பது தான் நிர்வாகத் தரப்பின் நியாயங்கள். அவர்கள் லைஃபை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

தொழில்முறை வலைப்பின்னலுடன் செயல்படும் இந்நிறுவனங்களைப் பற்றி போலீஸ் எஸ்.பி, சிபிஐ என்று புகார் கொடுத்தும் எந்த பலனுமில்லை. நாஸ்காம் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். பிக்கி பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஒரு திறமையான ஊழியரை நிறுவனமும், வேலை தேடுவதற்காக இருக்கும் நிறுவனமும் நினைத்தால் வெளியேற விடாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு எனது சொந்த அனுபவமே சான்று.

நீங்க டிசிஎஸ் இண்டர்வியூ போகலாம், இன்போசிஸ் போகலாம். அவ்வளவு ஏன் ஆஃபர் லெட்டரே கூட வாங்கலாம். ஆனால் வேலைக்கு போக முடியாது. எல்லா இடத்திலும் ஊழல் மலிந்துள்ளது. அரசாங்கம் சட்டங்களை வலுவாக்கினால் இதனை தடுக்க முடியும். முக்கியமாக வயதையோ, திருமணமானவரா என்ற விபரத்தையோ நிறுவனங்கள் கேட்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.”

____________________

ஆனால், மோடி அரசு இருக்கும் சட்டங்களை நீர்க்கச் செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கிறது என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

இவரது தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து தற்போது இறந்து விட்டார். எல்லா படிப்பிலும் டிஸ்டிங்சனில் பாஸான் இவர் எம்.எஸ் படிப்பிலும் அமெரிக்காவில் 90 சதவீத மதிப்பெண்களுடன் தேர்வானவர் என்பது முக்கியமானது. இப்படி திறமைசாலிகளான மாணவர்களைப் பொறுக்கியெடுத்து அவர்களது உழைப்பை, இளமையை உறிஞ்சி கரும்புச் சக்கையைப் போல வெளியே தள்ளுகின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள்.

அவருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவனுக்கு 9 வயது இருக்கும். வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த அவனிடம் ‘உங்க அப்பா என்ன செய்கிறார்?’ என்று கேட்ட போது “அவர் எப்பவும் சோகமாக இருக்கிறார். வேலை தேடுகிறார்” என்று சொன்னான். வீடு எளிமையாக இருந்தது. புத்தகங்கள் தான் அதிக இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.

மனைவி அருகில் உள்ள ஒரு பள்ளிக்கு இந்தி ஆசிரியையாக சென்று வருகிறார். அவரது குழந்தைகள் அங்குதான் படிக்கின்றனர்.

சக்கையாக பிழியப்பட்டு தூக்கியெறியப்பட்டதை பிறரிடம் இவர் பகிர்ந்து கொண்டால் யாருமே இதனைக் கண்டு கொள்ளாமல் அதனை ஒரு வயதானவனின் புலம்பலாக கடந்து செல்வதை வேதனையோடு குறிப்பிட்டார். ‘’இன்று எனக்கு, நாளை உங்களுக்கு’’ என அத்தகைய பிழியப்படும் இளைஞர்களை அவர் தொடர்ந்து எச்சரித்தபடியே இருப்பதாகவும் குறிப்பிட்டார். “After 40 you are nothing” அவர்களிடம் கூறுவாராம். பெரும்பாலும் முப்பது வயதுகளில் இருக்கும் சீனியர் அனலிஸ்ட், சீனியர் புரோகிராமர்களிடம் சொல்வாராம்.

யூனியன் ஆரம்பித்தால் வேலை போய் விடுமா, வேறு வேலை கிடைக்காதா என்ற கேள்விகள் அவரிடமும் வந்தன என்பதுதான் ஆச்சரியம். தனியாக கார்ப்பரேட் விதிகளின்படி உழைத்தும் அவரது வேலை போனதோடு, வேறு வேலை கிடைப்பதும் தடுக்கப்பட்டு வருகிறது என்பதை விளக்கியவுடன் அதனை ஏற்றுக் கொண்டார்.

கண்ணீரை மீறி மன அழுத்தம் அவரிடம் இருப்பதை அவரது மூத்த மகனால் புரிந்துகொள்ள முடிகிறது என்பதும், அது வயதுக்கு மீறிய அனுபவமாக அவனுக்கு இருப்பதையும் பார்த்தால் எதார்த்தம் சுடுகிறது.

——————–

Join us…….

https://www.facebook.com/VinavuCombatsLayoff

Phone : 90031 98576

TCS Siruseri Gate Meeting – Telugu

TCS Siruseri Gate Meeting – Comrade Mukundan – Malayalam

TCS Siruseri Gate Meeting – Advocate Indira