Saturday, May 10, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்காவாலக்குடி மணல் குவாரி மூடல் - மக்கள் வெற்றி

காவாலக்குடி மணல் குவாரி மூடல் – மக்கள் வெற்றி

-

காவாலக் குடி மணல் குவாரி முற்றுகைவழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்

சி.செங்குட்டுவன், ஒருங்கிணைப்பாளர்
வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம்

பத்திரிகைச் செய்தி

நாள் 21-1-15

டலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், முடிகண்டநல்லூர் மணல் குவாரியை மூடவேண்டும் என காவாலகுடி சாந்தி நகர் மற்றும் பிற கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

காவாலக் குடி மணல் குவாரி முற்றுகைபொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் பாகிஸ்தான் இந்தியா போல காவாலகுடி, முடிகண்ட நல்லூர் ஊராட்சி என அளந்து எல்லைக் கல் நட்டுள்ளனர். இதன் மூலம், ‘மணல் குவாரியை அந்த மக்கள் ஆதரிக்கின்றனர். காவாலகுடி மக்கள் நீங்கள் எதிர்த்தாலும் அதை பொருட்படுத்த மாட்டோம்’ என அமைதி பேச்சு வார்த்தையில் ஏமாற்றி தற்போது அதிக போலீசை குவித்து மக்களை மிரட்டுகின்றனர்.

காவாலக் குடி மணல் குவாரி முற்றுகைகோபால கிருஷ்ணன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர். அவரை வீட்டிலிருந்து காலை 7 மணிக்கே சாப்பிடும் முன்பு சோழத்தரம் போலீசார் சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர். அவருடன் 5 பெண்கள் உட்பட சாந்தி நகரை சார்ந்தவர்கள் 15 பேரை எந்த போராட்டமும் நடத்தாத நிலையில் அத்து மீறி கைது செய்துள்ளனர்.

மணல் கொள்ளைக்கு எதிராக ஆற்றிலேயே லட்சுமி என்ற பெண் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மக்கள் விரைவாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர்.

காவாலக் குடி மணல் குவாரி முற்றுகைஇவை எதையும் பொருட்படுத்தாமல் காவல் துறை ஆய்வாளர் முரளி, “மணல் குவாரியை தடுக்க விடமாட்டேன்” என ரோட்டில் போவோர் வருவோரை எல்லாம், “கைது செய்கிறேன் வண்டியில் ஏறு” என மிரட்டியுள்ளார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

காவாலக் குடி மணல் குவாரி முற்றுகைவெள்ளாற்றில் முடிகண்டநல்லூர் மணல் குவாரியில் மணல் அள்ள மாநில சுற்று சூழல் ஆணையம் உத்திரவிலும் அதை ஒட்டி கடலூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்திரவிலும் ஜே.சி.பி.எந்திரம் பயன்படுத்த கூடாது என உள்ளது. கடந்த 10 மாதங்களாக எந்திரம் வைத்துதான் மணலை அள்ளி உள்ளனர். 3 அடி என்பதை மீறி 30 அடிக்கு மேல் அள்ளி உள்ளனர்.

காவாலக் குடி மணல் குவாரி முற்றுகை10.65 ஹெக்டேர் பரப்பளவில் 1,06,528 கன மீட்டர் மட்டும் மணல் அள்ள வேண்டும். அதாவது 37,593 யூனிட் மணல்தான் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மார்ச் 2014 முதல் டிசம்பர் வரை 10 மாதங்களாக 1,50,000 யுனிட் மணலை அளவுக்கு மீறி அள்ளியுள்ளனர்.

காவாலக் குடி மணல் குவாரி முற்றுகை

அதன் வருமானம் பொதுப்பணித்துறைக்கு அரசின் கஜானாவிற்கு வராமல் மணல் கொள்ளையர்கள் கைக்கு சென்றுள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை உதவி செ.பொ மாணிக்கம், கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம், காட்டுமன்னார் குடி தாசில்தார், காவல் ஆய்வாளர், டி.எஸ்.பி. அனைவரும் துணை போய் உள்ளனர்.

அரசாணை எண் 135 படி மாவட்ட ஆட்சியர், வருவாய் ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வனச்சரகர், மண்டல போக்குவரத்து ஆய்வாளர், சுரங்கத்துறை இயக்குநர், மாசுகட்டுப்பாட்டு அதிகாரி, மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் என அனைவரும் மாதம் ஒருமுறை சென்று மணல் குவாரி தொடர்பாக ஆய்வு செய்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். அதுபோல் தாலுக்கா அளவில், அனைத்து துறை அதிகாரிகளும் மாதம் இருமுறை கண்காணித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

காவாலக் குடி மணல் குவாரி முற்றுகை

எந்த பகுதியில் மணல் அள்ள போகிறோம் என தூண் நட்டு அதில் சிகப்பு கொடி கட்ட வேண்டும். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல் எவ்வளவு முடியுமோ அள்ளுகிறார்கள். போராடும் முக்கியஸ்தர்களை அதிகாரிகள் மணல் கொள்ளையர்களிடம் காட்டிகொடுத்து அவர்களை சரிகட்டு என ஆலோசனையும் சொல்லுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் மணல் குவாரியை நடத்துகின்ற புதுக்கோட்டை தனியார் முதலாளியின் வேலையாள் சித்திரவேல், கோபால், முருகேசன் ஆகியோர் கிராம மக்களிடம் லஞ்சம் கொடுத்து சாதி மோதலை உருவாக்க முயல்வதும், நிலத்தடி நீர் பறிபோகும் என வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களை காவல்துறையை வைத்து மிரட்டுவதும் என செய்ததுடன் முடிகண்டநல்லூர் மணல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பலமடங்கு மணலை கொள்ளையடித்துள்ளனர்.

காவாலக் குடி மணல் குவாரி முற்றுகை

  • இதற்கு உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதுடன் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
  • முடிகண்டநல்லூர் மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்.
  • வெள்ளாற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கொள்ளையடிக்கப்பட்ட மணலுக்கு உரிய பணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும்.

இப்படிக்கு

வழக்கறிஞர் சி.ராஜு
சி.செங்குட்டுவன்

அறிவிப்பு

காவாலக்குடி, காந்திநகர், முடிகண்டநல்லூர், குமாரகுடி, கூடலையாத்தூர், ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்களுடன் மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் நடத்திய முற்றுகை போராட்டத்தால் முடிகண்டநல்லூர் மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணியாளர்கள் மற்றும் நமது வழக்கறிஞர்கள் மீது போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

காவாலக் குடி மணல் குவாரி முற்றுகை

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், “மணல் குவாரியை நிறுத்தக்கூடாது” எனவும் “மணல் கொள்ளை என போராடும் வக்கீல் ராஜு சாதி மோதலை உருவாக்குகிறார். எனவே கைது செய்ய வேண்டும்” எனவும் காரை மறித்தனர்.

போராடும் மக்கள் போலீசு வாகன பாதுகாப்புடன் திரும்பினர்.

பத்திரிகை செய்திகள்