privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபெருமாள் முருகனுக்கு தடை போட்ட கவுண்டர் ஆர்.எஸ்.எஸ் கூட்டணி

பெருமாள் முருகனுக்கு தடை போட்ட கவுண்டர் ஆர்.எஸ்.எஸ் கூட்டணி

-

கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ? பாகம் 1

பெருமாள் முருகன் : பிரச்சினை சாதியா – பாலுறவா ? பாகம் 2

பாகம் 3

கொங்கு வேளாளக் கவுண்டர்கள்தான் மேற்கு தமிழகத்தின் முதன்மையான ஆதிக்க சாதி. பிற்படுத்தப்பட்ட பட்டியிலில் வரும் வன்னியர், முக்குலத்தோர் போன்ற ஏனைய ஆதிக்க சாதிகளை விடவும் இவர்கள் சமூக ரீதியில் மேல் தட்டில் இருக்கிறார்கள். தற்போது திருப்பூர் தொழிலதிபர்கள், நாமக்கல் வட்டார பிராயலர் பள்ளிகள், வட்டார கோழிப்பண்ணைகள், லாரி நிறுவனங்கள் அனைத்திலும் இவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கணிசமானோர் விவசாயிகளாகவும் நீடிக்கிறார்கள்.

காருண்யா கல்லூரி வழியில் இருக்கும் நாதே கவுண்டன் புதூரில், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு “ஆதித்தமிழர் பேரவை” எனும் அருந்ததியருக்கான இயக்கத்தின் கொடி, பெயர்ப்பலகை நட்ட போது கவுண்டர்கள் பொருளாதாரத் தடை விதித்தனர்.

பொருளாதார வாழ்க்கையில் கவுண்டர்களையே சார்ந்து இருக்கும் அம்மக்கள் தடையை மீறி தாக்குப்பிடிக்க முடியுமா? இறுதியில் பெயர்ப்பலகையும், கொடி மரமும் காணாமல் போனது. பிறகு இத்தகைய போராட்டங்களுக்கு பிறகு அருந்ததியருக்கான அமைப்புகள் கோவைப் பகுதியில் செயல்பட்டாலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு சாதிக்க முடியவில்லை.

கோவை சூலூர்அருகே உள்ள தேநீர் கடையின் புறவாசல் - தலித்துக்கள் மட்டும் டீ சாப்பிடும் இடம். (நன்றி: டெக்கான் குரோனிக்கிள்)
கோவை சூலூர்அருகே உள்ள தேநீர் கடையின் புறவாசல் – தலித்துக்கள் மட்டும் டீ சாப்பிடும் இடம். (நன்றி: டெக்கான் குரோனிக்கிள் 09.04.2014)

தமிழகத்திலேயே இரட்டைக் குவளை தேநீர்க் கடைகள் அதிகமிருப்பது இங்குதான்.தலித் மக்களை பெயர் சொல்லி அழைத்தால் அது கொஞ்சம் கௌரவம். மாதாரி என்று அழைத்தால் மீடியம். சக்கிலி என்று அழைத்தால் கவுண்டர் கோபமாக இருக்கிறார் என்று பொருள். இது போக வயதானவர்களைக் கூட நீ போ, தே, நா என்று அழைப்பதெல்லாம் சகஜம். கொங்கு தமிழின் அழகை கோவை சரளாவிடம் ரசித்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும்.

தேவர்-பள்ளர், வன்னியர்-பறையர் திருமணங்களெல்லாம் நடக்க முடிந்த தமிழகத்தில் கவுண்டர்-அருந்ததி திருமணம் மட்டும் இன்னும் பாலைவனக் கனவு. கவுண்டர்கள் என்னமோ “சின்னக் கவுண்டர்”களாகவே உலா வருகின்றனர்.

கடந்த இருபது ஆண்டுகளில் கொங்கு தமிழ், பொள்ளாச்சி கிராமங்கள், துண்டு, பித்தளை சொம்பு, சொம்பிலிருக்கும் வெற்றிலை எச்சில் உள்ளிட்டு விதவிதமாக பில்டப் கொடுத்து கவண்டர்களை தமிழ் சினிமா டபுள் கவுண்டர்களாக்கியதன் விளைவை பெருமாள் முருகன் அனுபவிக்கிறார் என்றும் சொல்லலாம்.

உடுமலை, காங்கேயம், பொள்ளாச்சி போன்ற நகரங்களில் கூட இன்றைக்கும் ஒரு பொது திருமண மண்டபத்தை ஏதேனும் ஒரு தலித் அமைப்பு வாடகைக்கு கூட எடுத்து விட முடியாது. இது போக நகரங்களின் கடைகள், சிறு தொழில்களிலும் தலித் மக்களுக்கு இடமில்லை. தென் மாவட்டங்களில் இருக்கும் கல்லூரிகளில் தேவர், பள்ளர் மாணவர் மோதலோ பிரிவோ இருக்கும். இங்கே அப்படி எதுவும் கிடையாது. காரணம் இங்கே கவுண்டர்களை எதிர்த்து தலித் மாணவர்கள் எதுவும் செய்ய முடியாது. அனைத்து கல்வி நிறுவனங்களும் கவுண்டர்களின் கையில்.

இது ஒரு உண்மைக் கதை. இவ்வட்டார அரசு அலுவலகம் ஒன்றில் அருந்ததி சாதியைச் சேர்ந்த ஒருவர் அதிகாரியாக வருகிறார். அலுவலக உதவியாளர் (பியூன்) தொடங்கி மற்ற ஊழியர்களில் கவுண்டர்களே பிரதானம். கவுண்டன் கோட்டையில் சக்கிலி ஆபிசரா என்று ஆரம்பித்தது பிரச்சினை. எண்ணிறந்த முறைகளில் அந்த அதிகாரிக்கு சித்ரவதைகள். வருகைப் பதிவேட்டில் அவர் இட்ட கையெழுத்து மாயமாகும். அவர் ஒப்புதல் தெரிவித்த அலுவலக கோப்புகள் எரிந்து போகும். துறை விசாரணையில் அரசு நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது.

இந்த கவுண்டர் நீதியின்படிதான் பெருமாள் முருகனும் எழுத்துப் பணியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்.

இளவரசன் திவ்யா பிரச்சினையை ஒட்டி ஆதிக்க சாதி கூட்டணியை ராமதாஸ் கட்டிய போது கொங்கு வேளாளர் சங்கங்களே முன்னணி வகித்தன. கவுண்டர் சாதி வெறியை இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும்.

எல்லா ஆதிக்க சாதிகளிலும் அதன் வர்க்கரீதியான கீழ் நிலையில் இருக்கும் மக்கள்தான் தமது சொந்த சாதிகளின் போலித்தனத்தை கிழித்து தொங்க விடுவார்கள். அப்படி மாதோரு பாகன் நாவலில் நாயகன் காளியின் சித்தப்பா ஒருவர் வருகிறார். குடுமியை வெட்டி கிராப் வைத்தவரை ஆலமரத்தடி பஞ்சாயத்தில் விசாரிக்கிறார்கள். இதனால் மழை பெய்யாது அது இது என்று நீதிமான்கள் துளைக்க, தலை முடியை மட்டுமல்ல, குஞ்சு மயிரையும் சேர்த்தே எடுத்திருக்கிறேன் அதற்கு என்ன நடக்கும் என்று பஞ்சாயத்தாரின் வாயை அடக்குகிறார் அந்த சித்தப்பா.

அவர் மீது வந்த கேலிக்கு இப்படி பதிலளிக்கிறார்:

“சக்கிலிப்பையன் ஆக்குன சோத்தத் தின்னுக்கிட்டு நானும் கவண்டன்னு நடக்கறானே நல்லான்’ என்று யாராவது பேசியது தெரிந்தால் ‘சக்கிலிச்சி மணப்பா. சக்கிலிப் பையன் மட்டும் நாறுவானா?’என்று கேட்டுவிடுவார்.”

ஆதிக்க சாதிகளிடம் சிக்குண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு இந்தக் கொடுமைகள் இன்றும் தொடரும் யதார்த்தம். இதை பல எழுத்தாளர்கள் தமது நாவலிலோ இல்லை கட்டுரைகளிலோ எழுதியிருக்கிறார்கள். எங்களது பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள், மேடைப் பேச்சுக்களிலும் இந்த அநீதியை எதிர்த்து எழுதுவதோடு பேசியுமிருக்கிறோம். சூத்திரன் தீட்டு, அவன் தரும் காசு புனிதமா என்று பார்ப்பனியத்தை எதிர்த்து  எழும்பும்  கேள்வியின் உட்கிடையும் இதுதான்.பொருளியல் காரணத்தால் அடிமைப்பட்ட மக்கள், தமது வாழ்வியல் ‘கடன்’களை தீர்ப்பதற்கு இந்த வன்புணர்வு கொடூரங்களை சகித்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கிறது. இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களின் மனதிலும், பொருமிக் கொண்டிருக்கும் ஒரு உளவியல் வதை. கீழத்தஞ்சையில் மணமான கூலித் தொழிலாளிகளின் மனைவிமார்களை, ஆண்டை நினைத்தால் பெண்டாள முடியும் என்ற கொடுமை, பொதுவுடமை இயக்கம் வந்த பிறகே ஒழிக்கப்பட்டது.

தூமை (மாதவிலக்கு) நாட்களில் பெண்கள் வேலைக்கு போவதுதான் பாரத தேசத்தின் மாபெரும் சுற்றுச் சூழல் கேடு, அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம் என்று சங்கராச்சாரி சொன்னார். மற்றொரு பக்கம் மடத்தில் நடந்த கொடுமைகளை அனுராதா ரமணன் தைரியமாக எடுத்து வைத்தார்.

ஆதிக்க சாதி ஆண்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெண்களை நுகர்வது சாதி கௌரவம். அங்கே தொடுவது தீட்டல்ல – ஆண்மை. மறுபுறம் ஆதிக்க சாதி பெண்களை ஒடுக்கப்பட்ட சாதி ஆண்கள் தொட்டால் அது இழிவு, பொறுக்க முடியாத அவமானம். ஆகவே அவர்கள் பெண்கள் கற்புடனும் மற்ற பெண்கள் தேவதாசியாகவும் இருக்க வேண்டும். இரண்டையும் மறுக்கவோ மாற்றவோ  முடியாது.

நாவலில் குழந்தையின்றி தவிக்கும் தனது மகன் திருவிழா ஒன்று கூடலுக்கு மனைவியை அனுப்ப சம்மதிக்க வேண்டுமென்று காளியிடமே நேரடியாக பேசுகிறாள் அவனது தாய்.

“ஒலகத்துல ஆருக்குக் கொற இல்ல? எல்லாருத்துக்கும் எதாச்சும் ஒரு கொறைய இந்தச் சாமி வெச்சிருக்குது. அதப் போக்கிக்கிறதுக்கு வழியையும் அதே சாமி வெச்சுத்தான் இருக்குது. உங்கிட்டக் கொறையோ அவகிட்டக் கொறையோ தெரியாது. கொறைன்னு வந்தாச்சு. அதுக்கு ஒருவழி இருக்குது. அதையுந் தான் பாப்பமே. உம் மனசு ஏத்துக்கிட்டா எல்லாஞ் செரியாப் போவும். எத்தனையோ பொம்பளைங்க அப்பிடி இப்பிடி இருக்கறாங்க. ஆருக்குத் தெரியுது? தெரிஞ்சாலும் பாத்தும் பாக்காம போறாங்க. எதையும் மறப்பா செஞ்சாத் தப்பில்லையிங்கறாங்க. இதுவும் அப்பிடி மறப்புத்தான். ஆனா உனக்குத்தெரிஞ்சு, நீ ஒத்துக்கிட்டுத்தான் செய்யோணும். வெச்சுப் பொழைக்கறவன் நீ.”

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரன் கோவில் நுழைவாயில் - அந்தக் கால மக்கள் சந்திக்கும் பொது இடம்!
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரன் கோவில் நுழைவாயில் – அந்தக் கால மக்கள் சந்திக்கும் பொது இடம்!

இந்த உரையாடலில் தமது குடும்பத்து பெண்களை அவமானப்படுத்திவிட்டார் என்று கவுண்டர்கள் பொங்கி எழுந்தாலும் கிராமங்களில் இந்த உறவு மீறல்களுக்காக பொங்கி எழ முடியாது. எழுந்தால் சாதிய கட்டுமானமும் அது தரும் சலுகைகளும் கேள்விக்குள்ளாக்கப்படும்.

“ நீ ஊர்ல கல்யாணம் பண்ணத பாத்தி நாலு பேரு நாலு விதமாத்தான் சொல்லுவாங்க! என்னப் பொறுத்தவரை நீ செஞ்சதுதான் சரி! புருசன் இல்லேன்னா நம்ம விட்ருவாய்ங்களா ஆம்பளைங்க. உத்தமியா இருந்தாலும் பத்து தடவை கல்லத் தூக்கி அடிச்சா நமக்கே தெரிஞ்சிரும் இத விட்ட வேற வழியில்லேன்னு. பத்து நாய் கடிய சகிச்சிக்கிறதுக்கு ஒருத்தனோட மரியாதையா வாழ்ந்துட்டு போயிறலாம்”

– இது மாதொருபாகன் நாவலில் வரும் வார்த்தையல்ல. விதவை திருமணத்தை கொடுங்குற்றமாக வைத்திருக்கும் ஒரு கிராமத்தில், துணிந்து மறுமணம் செய்து கொண்ட ஒரு கிராமத்து பெண்ணுக்கு பைத்தியம் என்று பட்டம் கட்டப்பட்ட இன்னொரு பெண் வழங்கிய ஆறுதல்.

வழக்காக சொன்னால் மறுமணம் செய்வதை அறுத்துக் கட்டிய சாதி என்று மட்டமாக பேசுவார்கள். எதாவது கருத்து வேறுபாடு, விவாதம் வந்தால் ஒருத்தனுக்கு முந்தானை விரிச்சிருந்தான்னா அவளுக்கு தெரியும் என்று தொட்டதுக்கெல்லாம் முந்தானையை இழுப்பார்கள்.

ஆக காதலும், விவாகரத்தும், மறுமணமும் ஒரு பெண்ணுக்கு உரிமையாக வந்தால் ஆதிக்க சாதி தர்மம் அதை தேவடியாத்தனம் என்றே தூற்றும். மறுபுறம் ஆதிக்க சாதி பெண்கள் விதவைக் கோலத்தை ஏற்றுக் கொண்டு முடங்கி கிடந்தால் அவர்களை தங்களுக்கு சொந்தமான “தேவடியாக்களாக” மாற்றும். இத்தகைய ஆதிக்க சாதி நீதிதான் தங்கள் குலப் பெண்களை பெருமாள் முருகன் இழிவுபடுத்திவிட்டதாக பொங்குகிறது.

திருச்செங்கோட்டில் விநியோகிக்கப்பட்ட மாதொரு பாகன் நாவலின் பக்கங்களில் கவுண்டர்கள் பூதகரமாக கிளப்பிய வாசகம் இதுதான்….

இக்காட்சி கோவில் திருவிழாவின் பிள்ளைப் பேறு ஒன்று கூடல் இரவை வருணிக்கிறது.

“வீதிகளில் சாயங்காலம் முதலே அலையத் தொடங்கி விட்டான். இறக்கத்துக் கோயிலுக்கு எதிரே இருந்த தேவடியாள் தெருவில் அன்றைக்குக் கூட்டமேயில்லை. அந்தப் பெண்கள் நன்றாகச் சிங்காரித்துக்கொண்டு மண்டபங்களில் ஆடப் போனார்கள். ‘இன்னக்கி நம்மள எவன் பாக்கறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னக்கித் தேவடியாதான்’ என்று அவர்கள் பேசிச் சிரித்துப் போனார்கள்.”

நேர் பொருளில் இழிவுபடுத்துவதாக தோன்றும் இந்த பேச்சு உண்மையில் எதிர்மறையால் உருவாக்கப்பட்டவர்கள் தம்மை எதிர்மறையாக உருவாக்கிய சமூகம் குறித்து எதிர்மறை வடிவில் ஆனால் உட்பொருளில நேர்மறை விமரசினமாக வெளிப்படுத்துவதை உணர்த்துகிறது.

“கற்பின்” போலித்தனத்தை ஒரு தேவதாசிதான் மற்ற எவரையும் விட விளக்க முடியும். காரணம் கற்பை பாதுகாக்கும் கடமையை ஏற்றிருக்கும் கனவான்களை அவள்தான் அன்றாடம் தரிசிக்கிறாள்.

வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வினவு தோழர்கள் எடுத்த கருத்துக் கணிப்பின் படி தாழ்த்தப்பட்டவர்களை மணம் செய்த வன்னியப் பெண்களின் வாயிலிருந்து சாதி ஆதிக்கத்தை சுட்டுப் பொசுக்கும் வார்த்தைகளை கவித்துமாக கேட்டிருக்கிறோம். அதையே பெருமாள் முருகன் தனது நாவலில் கோடிட்டுக் காட்டுகிறார்.

எங்கே கற்பின் மேன்மையும் அதைப் பாதுகாக்கும் கடமையும் ஓங்கி உரைக்கப்படுகிறதோ அங்கேதான் பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள். “மாதொரு பாகம்” நாவலை எதிர்த்து இணையத்தில் எழுதும் கொங்கு ‘சிங்கங்கள்’ இதை உறுதி செய்கின்றன. மற்ற சாதிகளை விட விதவைகளுக்கு வெள்ளுடை தரித்து மறுமணம் செய்யாமல் சாகும் வரை கற்புக்கரசியாக காத்த மண் என்கிறார்கள். கணவன் இறந்த பின்பு உடன்கட்டை ஏறி கற்பாத்தாக்களாக பல ஆத்தக்கள் வழிபடப்படும் பகுதி என்கிறார்கள். இதை பெருமையாக பீற்றுபவர்கள் பெருமாள் முருகனின் எழுத்தை எரிக்கத்தான் செய்வார்கள்.

கொங்கு மண்ணின் கற்பு சென்டிமென்டை அறுவடை செய்ய பாரதக் கற்பை குத்தகைக்கு எடுத்திருக்கும் இந்துமதவெறியர்கள் ஓடோடி வருகிறார்கள். இந்த நாவல் ஆங்கிலத்தில் வெளியானதும் புது தில்லியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் குழுமம் அதை படித்து தடை செய்ய வேண்டிய பட்டியலில் இணைத்து அதற்கான முயற்சிகளை செய்தாகவும் பலர் கூறியிருக்கின்றனர்.

ஆதிக்க சாதி உணர்ச்சியும் இந்து உணர்ச்சியும் வேறு வேறல்ல. முன்னதில் தலித்துக்களும் பின்னதில் சிறுபான்மையினரும் வில்லன்கள் என்பதால் இவர்கள் இயல்பிலேயே பங்காளிகள். திருச்செங்கோட்டின் மக்கள் நாவலை எரித்ததில் நாங்கள் பங்கேற்கவில்லை என்றது ஆர்.எஸ்.எஸ் தரப்பு. பிறகு உணர்ச்சிவசப்பட்ட லோக்கல் ஆட்கள் இருந்தார்கள் என்றார்கள். பிடித்துக் கேட்டால் ஃபிரின்ஞ்ச் குரூப் செய்திருக்கும் என மாற்றினார்கள்.

வட இந்திய விதவைகள் - இந்து மதம் பெண்களை போற்றும் இலட்சணம்!
வட இந்திய விதவைகள் – இந்து மதம் பெண்களை போற்றும் இலட்சணம்!

இறுதியில் இந்து முன்னணி இராம கோபாலனே களத்திற்கு வருகிறார். இவர்தான் அந்த ஃபிரின்ஞ்ச் குரூப்பின் தலைவர் போலும்.

“மாதொரு பாகன்’ என்பது உயர்ந்த தத்துவம். திருச்செங்கோட்டிற்கு புகழ் சேர்க்கும் சிவபெருமானின் இந்தத் திருவிளையாடலை கொச்சைப்படுத்தி எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோட்டில் வாழும் பெண்களை கீழ்த்தரமாக சித்தரிப்பதை ஏற்க முடியாது.”

“மாதொரு பாகன்’ நாவலில் பெருமாள் முருகன் என்ன எழுதியுள்ளார் என்பதை நீதிபதிகள் படிக்க வேண்டும். அப்போது தான் திருச்செங்கோட்டு மக்களின் உணர்வுகளையும், அவர்களின் எதிர்ப்புக்கான காரணங்களையும் புரிந்துகொள்ள முடியும். இந்த வழக்கில் மக்களின் கருத்தை அறியவும், இந்து முன்னணி சார்பாக வழக்காடவும் நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.”- என்று அறிக்கை விட்டிருக்கிறார் இராம கோபாலன்.

மாதொரு பாகம் என்று அறிவித்தது சிவன்தானே? அறிவிக்கும் அதிகாரம் மாதாவுக்கு இல்லாத போது பாகத்தின் மதிப்பென்ன? இந்த திருவிளையாடல் தத்துவம் வேருன்றியிருக்கும் வட இந்தியா, பெண் சிசுக் கொலையில் சாதனை படைத்து வருவது ஏன்? பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலம் அதில் முதலிடத்தில் இருப்பது தற்செயலானதா?

பெருமாள் முருகன் பெண்களின் சுதந்திரத்தை சித்தரித்தார். இந்துமதவெறியர்களோ பெண் குழந்தைகளை கழுத்தறுக்கின்றனர். இந்த உரிமை பறிபோய்விடக்கூடாது என்றே இந்துமதவெறியர்கள் ஆதிக்க சாதியினருக்கு கொடியும் தடியும் பிடிக்கின்றனர்.

நாவலின் காலத்தில் மக்கள் ஒன்று கூடும் இடம் கோவிலும், திருவிழாவாகவும்தான் இருக்கும். இன்று போல மல்டிபிளக்ஸோ, சூப்பர் மார்கெட்டோ இல்லை ஃபேஸ்புக்கோ கிடையாது. “விருந்தாளிக்கு பிறந்தவன், சந்தையில் தரிச்சவன்” என்று வசை மொழிகள் கூறும்  பொருள் என்ன? மூச்சு விட முடியாத சாதிய சமூகத்தின் பிடியிலிருந்து சுய விருப்பமும், காதலும் தரிக்கும் இடமாக அந்தக்கால கோவில் திருவிழாக்கள், சந்தைகள் இருந்திருக்கின்றன.

தமிழ் சினிமாக்களில் இன்றும் கூட கோவில் காட்சிகளில்தான் நாயகனும், நாயகியும் காதலைத் தொடங்குகின்றனர். இதை இந்து முன்னணி எதிர்த்து பார்க்கட்டுமே? பிறகு ஒரு பயலும் கோவிலை ஏறெடுத்து பார்க்க மாட்டான். தற்போதே அந்த சங்கமத்தின் வாய்ப்பை செல்பேசியும் இணையமும் ஏற்படுத்தி வருகின்றன.

கோவில் எனும் மத ஆன்மீக விசயத்தோடு கொளுத்திப் போட்டால் மக்களை உடன் வெறுக்கச் செய்ய முடியும் என்று இந்துமதவெறியர்கள் கச்சிதமாக போட்ட திட்டமே திருச்செங்கோட்டு பக்தர்கள் பெயரில் காட்டிய எதிர்ப்பு. இன்று ஊடகங்களில் இந்துமதவெறியர்கள் பேசும் போது கோவிலை விபச்சார மடமாகவும், பெண்களை விபச்சாரியாகவும் இழிவுபடுத்தியதாக தொடர்ந்து பொய்யுரைக்கின்றனர்.

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது எமது தோழர்கள் மோடியை எதிர்த்து உடுமலைப் பேட்டையில் பிரச்சாரம் செய்தனர். கொலைகார மோடி எனும் அந்த துண்டுப்பிரசுரத்தை பார்த்த ஈஸ்வரன் கட்சிக்காரர்கள் உடன் ஆள் திரட்டி தோழர்களை தாக்க வந்தனர். பின்னர் எஸ்.பி வரை பேசி பிரச்சாரம் செய்யும் உரிமையை தோழர்கள் நிலைநாட்டினர். இப்படி மோடிக்கு ஒன்று என்றால் கவுண்டர் சங்கம் ஓடி வருவதும், கவுண்டர் மானத்திற்கு பங்கம் என்று ஆர்.எஸ்.எஸ் ஓடி வருவதும் அங்கே சகஜம்.

கோவை நாயுடு தொழிலதிபர்கள், மார்வாடி வணிகர்கள், கொங்கு வேளாளர்கள் என்ற மூவர் கூட்டணியை வைத்தே பா.ஜ.க அங்கே செல்வாக்கை வளர்த்து வருகிறது. அதே நேரம் முசுலீம்களை எதிர்த்த கலவரத்திற்கு தலித்துக்களை அடியாட்களாக பயன்படுத்தியும் வந்திருக்கிறது. கீழே முசுலீம் எதிர்ப்பு, மேலே தலித் எதிர்ப்பு என்ற கொள்கைக் கூட்டணியில் சாதி மற்றும் மத சேர்க்கை அங்கே உருவாகி விட்டது.

17.01,2015 தினமணியில் வந்த செய்தி….

“எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கான எதிர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெருமாள் முருகனின் பின்னணி ஆய்வுக்குரியது. இதுபோன்ற பண்பாட்டுச் சீரழிவுக்குக் காரணமாக உள்ளவர்கள் பொதுவுடமைக் கட்சியினர்தான். இதைக் கண்டிப்பது பாஜக மட்டுமே. இதுகுறித்து தினமணி ஆசிரியர் எழுதிய தலையங்கத்தை வரவேற்கிறேன். பெருமாள் முருகன் எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” – பா.ஜ.க தலைவர் இல. கணேசன்.

விசாரணையெல்லாம் கிடையாது. நிறுத்து, இல்லையேல் நடப்பது வேறு என்கிறார் இல. கணேசன். பண்பாட்டு சீரழிவு, கம்யூனிஸ்ட் கட்சி, தடை…… முடிந்தது விசயம்.

பெரியாரின் ஆதரவோடு முத்துலெட்சுமி “தேவதாசி ஒழிப்புச் சட்டம்” நிறைவேறப் போராடிய போது இல.கணேசனின் தாத்தா சத்யமூர்த்தி அய்யர்தான் கடுமையாக எதிர்த்தார். இன்று ஆதிக்க சாதி பெண்களை இழிவு படுத்தும் சாதிய அமைப்பை பெருமாள் முருகன் கேள்விக் கேட்பதை இவர்கள் நிறுத்துகிறார்கள்.

உமைக்கு பாதி பாகம் கொடுத்த சிவன் பெண் சிசுக்களை தொடர்ந்து கொல்வது ஏன்?
உமைக்கு பாதி பாகம் கொடுத்த சிவன், பெண் சிசுக்களை தொடர்ந்து கொல்வது ஏன்?

இன்று கொங்கு வேளாள சாதியிலேயே வெள்ளை சேலை கட்டுவது மாறி வருவதும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் விதவை மறுமணம் நடந்து வருவதும் யாரால்? பெரியார் இயக்கமும், கம்யூனிச இயக்கங்களும் இல்லை என்றால் தமிழ்நாடு தொடர்ந்து இருண்ட காலத்திலேயே இருந்திருக்கும்.

சாதியும், மதமும் மட்டுமல்ல இவற்றை பாதுக்காக்கும் அரசும் அதே குரலில் பேசுகிறது.

“அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, “எழுத்தாளர் பெருமாள் முருகனே சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்துகொண்டு கடிதம் கொடுத்துள்ளார். அது முடிந்துபோன பிரச்சினை. ‘மாதொருபாகன்’ நாவலில் குறிப்பிட்டுள்ள கருத்துகள், திருச்செங் கோட்டை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதிவிட முடியாது’’ என வாதிட்டார்.” – 20.01.2015 தி இந்து செய்தி.

இதையே கருத்துச் சுதந்தரம் பாதி, எதை எழுதுவது என்ற கட்டுப்பாடு மீதி என்று மாதொரு பாகனுக்கு புதிய விளக்கம் கொடுக்கிறார் துக்ளக் சோ. கருத்து சுதந்திரம் கேட்கும் பெருமாள் முருகன் கேரளாவிற்கு சென்று அங்கிருந்து எழுதலாமே என்று ஆலோசனை கூறுகிறது தினமலர்.

ஆக எது கருத்து, எது சுதந்திரம் என்பதை இவர்கள் தீர்மானிப்பார்கள். நாம் தீர்மானித்தால் அது தடைசெய்யப்படும். அதை ஒத்துக் கொண்டால் சுதந்திரம். மீறினால் தண்டனை. மனு தர்மம் எங்கே இருக்கிறது என்று சமாளிப்பவர்களுக்கு இதை விட சுரணையூட்டும் சான்று வேறு வேண்டுமா?

உண்மையில் பெருமாள் முருகனுக்கு ஏற்பட்டது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினையா? இல்லை ஒடுக்கப்பட்ட பெண்கள், மக்களின் வாழும் உரிமை குறித்த பிரச்சினையா?

–    தொடரும்

 

  1. சாதியை வினவு போன்ற சுண்டைக்காய் பசங்க எல்லாம் அழிக்க முடியாது… பெருமாள் முருகன் பிரச்சனை ஒரு பத்து நாளைக்கு ஓடும். அவ்வளவு தான்… பெரிய புடிங்கியாட்டும் யார் இந்தாளை இந்த நாவலை எழுத சொன்னது??? இப்ப எல்லாரும் எதிர்த்தவுடன் ________விட்டுகிட்டு ஓடுர மாதிரி ஏன் ஒரு கேவலமான் அறிக்கை விடனும்?? இவரு இனிமே கதை எழுதலைனா யாரு அழுதா??? வினவு மாதிரி சில பறையன் களின் ஆதரவு கும்பலுக்கு அடுத்த “தமாசுக்கு” விசயம் இல்லாம போகும் அவ்வளவு தான்.

    • வாசகர்களுக்கு,

      கவுண்ட ஆண்களும் மற்ற ஆண்களும் இரண்டாம் மனைவியைக் கட்டிக்கொள்வதைப்பற்றி நாம் அறிந்ததே. பெரும்பாலும் மனைவிக்கு தாய்மையின்மையைக் காரணம் காட்டி இது நடைபெறுகிறது. இந்த கதையிலும் அதைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். மணஉறவைத்தாண்டியும் ஆண்கள் பலர் வேறு வாய்ப்புகளையும் தேடுகிறார்கள். இதைப்பற்றி எல்லாம் பேசியதற்காக தமிழ் ஆண்களை இழிவு படுத்திவிட்டதாக யாரேனும் கூவினார்களா.

      கணவனுக்கு தந்தைமையின்மையைக் காரணம்காட்டி ஒரு பெண்ணும் இரண்டாம் கணவனைக் கட்டிக்கொள்ள முடியாமை பெண்களை இழிவு படுத்தும் முதன்மையான இழிவு. இது பெண் இனத்திற்கு நடத்தப்படும் பெரிய அநீதி.

      தாய்மையில்லா பெண்களை பல பெயர்களை சூட்டி அவர்களை சமூகத்தில் இயல்பாக பழக விடாமை மற்றொரு இழிவு. தந்தைமையின்மையுள்ள ஆண்களும் பெண்களின் தாய்மையில்லா நிலைக்கு காரணம் என்பதையும் மறுத்துவிட்டுத்தான் இது போன்ற இழிவுகள் பெண்களுக்கு இழைக்கப்படுகின்றன. இதற்கு பெண்களும் உடந்தையாக இருக்கும்படி ஆணாதிக்க சமூக அமைப்பு கொடூரமாக இருக்கிறு என்பது இன்னும் கொடுமை.

      இவற்றைப்பற்றி யெல்லாம் கவலைப்படாதவர்கள் இங்கே திரண்டு நிற்கிறார்கள். யாருக்கு சின்னபுத்தி?

      ஏதோ ஒரு காரணத்திற்காக கருவுறாத பெண்கள் தங்களுக்கு நேரவிருக்கும் கெடுகாலத்தைத் தவிர்த்துத்கொள்ள ஒரு மாற்று வழியை பயன்படுத்துகிறார்கள். இதுவும் பெரும்பாலும் கணவனுக்குத்தெரிந்தே தான் செய்யமுடியும். அவரும் தந்தைமையைப்பெற முடிகிறதால் ஒத்துக்கொள்கிறார். இந்த வழி சமூகமே வழங்கிய ஒரு ஏற்பாடு. இவற்றைப்பற்றி பேசுவது பெண்களை இழிவு படுத்துவது என்பது எவ்வளவு சின்னத்தனமான வாதம். இந்த வாதத்திற்கு பெண்கள் தங்கள் ‘middle finger’ஐத்தான் காட்டுவார்கள். அவர்களால் முடிந்தது அதுதான்.

      இன்று விந்து வங்கிகள் இருக்கின்றன. இவை யாரை இழிவு படுத்துகின்றன? ஆணையா பெண்ணையா?

    • சொந்தப் பெயரில் எழுத தைரியமில்லாத பேடிகள் எழுதுவது தலையில்லாத முண்டஙகளின் அம்மண நடனஙகள். ஓரு பெருமாள் முருகனை விரட்டி விட்டால், ம்…….ம்….. மொத்த தமிழனும் செத்தா போனான்…. வருவான் இன்னொருவன் ஒரு கையில் பறையுடனும், இன்னொரு கையில் ஓலமிட்ட கும்பலின் தலையுடனும். – மருது பாண்டியன், பத்திரிகையாள்ன்

  2. அப்படியானால் வினவு பத்திரிக்கை யாலர்கல் ஆனைவரும் திருவிலவுல பொரந்தனுகலா சரி சரி…

    • அதில் யார் மனைவியை பற்றி எழுதியுள்ளார் பெமு ?விளக்கவும் மச்சான் !

      நீங்கள் கூறுவது படி பார்த்தால் ஒட்டு மொத்த தமிழ் இனமே மக பேறு இல்லாமல் இருபதாக தானே பொருள் . ஆனால் விதிவிலக்கான விடயத்தை தானே எழுதியுள்ளார்

      ஒட்டு மொத்த தமிழ் பெண்களும் “””போனதாக””” எங்கே எழுதி உள்ளார் ?

      இன்று ஓர் தமிழச்சி மகபெறுக்காக fertility centerl விந்து தானம் அல்லது கருமுட்டை தானம் பெறுகின்றாள்;பெறுகின்றாள் என்றால் அது அனைத்து தமிழ் பெண்களையும் குறிக்குமா ?

      அதுபோல அது குறிப்பிட்ட ஒரு பெண்ணின் பொன்னாவின் கதை தானே ? அது எப்படி அனைத்து தமிழ் பெண்களையும் குறிக்குமா ?பொன்னாவை போன்று ஒரு சில மகபேறு அற்ற பெண்கள் வருவார்கள் அல்லவா ?

      தமிழ் நாட்டின் விதி விலக்கான குழந்தை பேருக்கான பழைய பாலியல் முறைகளை விதிகளாக நினைத்து கொண்டு நாம் விவாதிக்கின்றோம்

      • // அது எப்படி அனைத்து தமிழ் பெண்களையும் குறிக்குமா ? ?//

        பெருமாள் முருகன் அந்தக் கதை முழுவதிலும் கதையின் நாயகனும், நாயகியும் கவுண்டர் சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை வாசகர் மறந்து விடாமலிருக்கும் வகையில் அடிக்கடி சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்திருந்தாலேயானால், திருவிழாவில் பிள்ளைவரம் வேண்டி ஊர் பேர் தெரியாதவனிடம் உறவு கொள்ளப் போன தனிப்பட்ட பெண் பொன்னாவை மட்டும் தான் அந்தக் கதை குறிக்கிறதாகக் கொள்ளலாம். ஆனால் இந்தக் கதை முழுவதுமே கவுண்டர் சாதியினரை அவர்களின் பழக்க வழக்கங்களைச் சுற்றியே சுழல்கிறது, பிரச்சனைக்குக் காரணமே அது தான். கவுண்டர் சாதிப் பெண்களும் தமிழ்ப்பெண்கள் தான், ஆகவே அது அனைத்து தமிழ்ப்பெண்களையும் குறிக்கும் கதை தான். செவிவழிக் கதைக்கு கற்பனை சேர்த்து எழுதியவர், எந்தச் சாதியையும் குறிப்பிடாமல் எழுதியிருக்க வேண்டும். பாரதியார் கூட தான் சார்ந்த பார்ப்பனச் சாதியை “தண்டச் சோறுண்ணும் பார்ப்பான்’ ‘எமாத்துக்காரர்’ என்றெல்லாம் கூட விமர்சித்தார், பாட்டெழுதினார். ஆனால் அவர் ஒருபோதும் பார்ப்பனப் பெண்களின் ஒழுக்கத்தை இழிவுபடுத்திப் பாட்டோ, கதையோ அல்லது கட்டுரையோ எழுதவில்லை.

        • கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்று பாரதி கூறிய கருத்தை மாதொருபாகன் கதையில் பெருமாள் முருகன் எதிர்மறையான நிகழ்வுகள் மூலம் வலியுறுத்தி உள்ளார் !இளம் வயதில் காளி 14ஆம் நாள் திருவிழாவுக்கு சென்று சாமியானதை, பிள்ளை வரம் கொடுப்பதை பல இடங்களில் சுட்டிகாட்டும் பெருமாள் முருகன் அதே போன்று பொன்னாவும் பிள்ளைவரம் வேண்டி இறுதியில் 14 ஆம் நாள் திருவிழாவுக்கு செல்வதை காட்சி படுத்துகின்றார். கவுண்ட ஆண் காளி 14 ஆம் நாள் திருவிழாவுக்கு போவதை வியாசன் உட்பட எவருமே தவறாக சுட்டிக்காட்டாத போது கவுண்டச்சி பொன்னா போவதை மட்டும் ஒழுக்க கேடு என்றும் தமிழ்ப்பெண்கள் மீதான இழிவு படுத்தும் செயல் என்றும் வியாசன ஊளையிடுவது “கற்பை பெண்ணுக்கு மட்டுமே பொதுவில் வைப்போம்” என்று “வியாச பாரதி” கூவுவது போல் அல்லவா உள்ளது ?

    • இந்த காலம் போல, அந்த காலத்தில் வாடகை தாய் முறையோ அல்லது விந்து வங்கியோ இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. பாவம் இவர்களுக்கும் வேலை இருந்திருக்காது. India is famous for surrogacy tourism.

      • இவ்வளவு சாதியம் பேசும் ,சாதி புனிதத்தை கடைபிடிப்பதாக கூறிக்கொள்ளும் கொங்கு -கள் , பெண் எடுப்பதற்கு மட்டும் தாய் வழி சமுகத்தை கடைபிடிக்கும் கேரளாவுக்கு செல்வது ஏன் ? அப்போது மட்டும் கொங்கு நாட்டு —- புனிதம் கெடாதா ? கருங்குருவிகளுக்கு தாய் வழி சமுகத்தின் இலக்கணம் குருவிகளுக்கு தெரியுமா, தெரியாதா ? குழந்தை உருவாக தேவையான கருமுட்டையை மட்டும் கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யும்—- உருவாக்கும் இனம்,சாதி எப்படி தமிழ் இனமாக ,சாதியாக இருக்கமுடியும் ? காதலித்து மாற்று இனத்திலோ ,மாற்று மதத்திலோ பெண் எடுப்பது வரவேற்க கூடியதே ! ஆனால் காசுகொடுத்து கேரளாவில் இருந்து பெண் எடுக்க வேண்டிய அவலம் கொங்கு நாட்டு —-க்கு ஏன் ஏற்பட்டது என்பதை அறிய மாதொருபாகனின் மாற்று பக்கம் கரு உற்றால் ஸ்கேன் செய்து கழிக்கும் கொங்கு நாட்- தானே கேட்க வேண்டும் ?

        • என்னுடைய கருத்துகளில் கோடு இட்ட இடங்களில் “கரிக்குருவி” என்ற வார்த்தையை அல்லது “கரிக்குருவிகள் ” என்ற வார்த்தையை தான் பயன்படுத்தி உள்ளேன் என்பதை விளக்குவதற்கு கடமை பட்டு உள்ளேன் . நான் எந்த இழிபொருட்பேறு [கெட்ட] வார்த்தையையும் பயன் படுத்தவில்லை என்பதனையும் கூற விரும்புகின்றேன் . மேலும் சாதிவெறியை கக்கும் கரிக்குருவி என்ற சாதிய இணைய தளத்தை படித்தபின் அந்த குறிபிட்ட சாதியினரின் குறியீடான கரிக்குருவி என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் தவறு இல்லை என்றும் உணருகின்றேன்.

  3. இந்த கட்டுரை கவுண்டர்களை பற்றி பாதி உண்மைகளை மட்டும் பேசுகிறது. மற்றதெல்லாம் திரித்தவை. இப்போது கவுண்டர் சாதியில், குறிப்பாக கொங்கு வேளாளர்கள் என்னும் உட்சாதியில், திருமண வயதை கடந்த ஆண்கள் நிறைப்பேர் தனி மரமாக அலைகிறார்கள். காரணம், சொந்த சாதியில் பெண் கிடைக்காதது தான். அதனால் நிறைய பேர் கேரளா போய் மலையாள பெண்களை திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். வாரிசு வேண்டுமே! உற்றார் உறவினர்கள் முதலில் சங்கோஜப்பட்டாலும் பிறகு இந்த பெண்களை ஏற்கவே செய்கிறார்கள். நூறு கவுண்டர் குடும்பங்கள் இருக்கும் இடத்தில் ஐந்து ஆறு குடும்பங்களில் மலையாள பெண்கள் தான் மருமகளாக இருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடும் திருச்செங்கோட்டிலும் நாமக்கல்லிலும் “கேரள மணமகள் வேண்டுமா?” என்று கேட்கும் விளம்பரத்தை பல இடங்களில் பார்க்கலாம். தரகர்களும் உண்டு. தமிழகத்தில் இருக்கும் மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்த கவுண்டர் சாதி ஆண்களும் நிறைய உண்டு. இப்போது அதெல்லாம் பிரச்சினையாக யாரும் கருதுவதில்லை. பெண் கல்விக்கு அரசின் கடனும் மானியமும் நிறைய கிடைப்பதால் கவுண்டர் சாதியினர் பெண் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கிறார்கள். அந்தப்பெண்களும் நன்றாக படித்து நல்ல வேலையும் சம்பளமும் கிடைத்த பின்னர் தங்கள் தரத்துக்கு சொந்த சாதியில் மணமகன் கிடைக்கவில்லை என்றால் மற்ற பிற்படுத்த சாதிகளில் தேடிக்கொள்கிறார்கள். அதனால் விவசாயம், சிறுதொழில், கூலி வேலை செய்யும் கவுண்டர் சாதி பையன்களுக்கு சொந்த சாதியில் பெண் கிடைப்பதில் சிக்கல். பெண்ணை பெற்றவர்களும் தயங்குகிறார்கள். ஆகையால் திருமண வயதை கடந்த பின்னும் பல ஆண்கள் பிரம்மச்சாரிகளாகவே காலம் தள்ளுகிறார்கள். பலர் மணமகளை தேடி கேரளாவுக்கு படையெடுக்கிறார்கள். ஆனால் பள்ளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் ஆகிய தாழ்த்தப்பட்ட சாதிகளில் திருமணம் செய்வதை யாரும் விரும்புவதில்லை. அப்படி செய்தவர்களையும் யாரும் அங்கீகரிப்பதும் இல்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு.

    • அதை தானே கேட்கின்றேன் ! தாய் வழி சமுக்த்தை கடைபிடிக்கும் கேரள நாட்டு கருமுட்டைகளை இறக்குமதி செய்வது அவற்றின் மூலம் கொங்கு நாட்டு ஆண் ___கள் கரு தறிப்பது எல்லாம் தவறாக ______ படாதபோது நம் தமிழ் இனத்து மக்களிடம் பெண் கொடுத்து ,பெண் எடுப்பதில் ______ என்ன பிரச்சனைகள் இருக்க முடியும் ?

      [ஆனால் பள்ளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் ஆகிய தாழ்த்தப்பட்ட சாதிகளில் திருமணம் செய்வதை யாரும் விரும்புவதில்லை. அப்படி செய்தவர்களையும் யாரும் அங்கீகரிப்பதும் இல்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு.]

    • என்னுடைய நண்பர் ஒருவர், நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியைச் சேர்ந்தவர் இங்கு மேல்படிப்பைத் தொடர்வதற்காக வந்திருந்தார், ஈழத்தமிழ்ப் பெண்ணிடம் (mutual friend), மனதைப் பறிகொடுத்து விட்டு, அவளிடம் தனது காதலைத் தெரிவிக்கத் தயங்கிய காரணம், என்னவென்றால் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்பது தான். அவர் வீட்டில் ஒரே பையன், வேறு பிள்ளைகள் கிடையாது. யாழ்ப்பாண வெள்ளாளர்களும் உயர்ந்த சாதி தானே, அதற்குக் கூட வீட்டில் சம்மதிக்க மாட்டார்களா என்று நான் கேட்டதற்கு, வெள்ளாளர்கள் உயர்ந்த சாதி தான், வெள்ளாளர்களை எங்களுக்கு குருவாகக் கொள்கிறோம், ஆனால் அவர்களைத் திருமணம் செய்ய முடியாது, அப்படிச் செய்தால் கோயிலிலிருந்து எனக்கு மாலை வராது, எங்களின் கோயில் ஆவணங்களில் என்னை ‘அரைப்புள்ளி’ (கலப்புமணம் புரிந்ததால்) என்று குறித்து விடுவார்கள். தமிழ்நாட்டில் திருமணத்துக்குப் பெண் தேடும் போது உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்றெல்லாம் பார்ப்பதில்லை. எந்த ஊராக இருந்தாலும், சொந்த சாதியில் மட்டும் தான் பெண்ணெடுக்க வேண்டும் அது மீற முடியாத விதி என்றார். அதற்கு நானும், வேடிக்கையாக, அந்தப் பெண்ணின் வீட்டிலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் தான், இன்றும், வடக்கத்தையான்களை திருமணம் செய்வதை யாழ்ப்பாணத் தமிழர்கள் விரும்புவதில்லை, தரக்குறைவாகத் தான் பார்ப்பார்கள் என்று கூறினேன். இருவரும் சிரித்துக் கொண்டோம். 🙂

      அது போல, கவுண்டர்களும் வேறு சாதிப் பெண்களை மணமுடிக்காது விட்டாலும், தம்முடைய சாதியிலேயே, தமிழ்நாட்டுக்குள் திருமணம் செய்து கொள்ளலாம் தானே, அவர்கள் கேரளாவுக்குப் போய் மலையாளப் பெண்களை ஏன் திருமணம் செய்து செய்கிறார்கள். தமிழ்ப்பெண்களை விட மலையாளப் பெண்கள் “சிவப்பாக, அழகாக” இருக்கிறார்கள் என்று தமிழர்கள் ஆசைப்படுவது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம் அல்லவா?

      • திரு.வியாசன்…

        தங்களின் நண்பர் ஒரு கோழையாக இருக்க வேண்டும், இல்லையென்றால் இப்படி சுய சாதி கட்டுப்பாடுகளுக்கு அஞ்சி அரைப்புள்ளி ஆகி விடுவோமோ என்று பயந்து நமக்கேன் வம்பு என்று விலகி இருக்க மாட்டார். காதல் என்பது இனம், மொழி, மதம்,சாதி போன்றவைகளை கடந்த ஒன்று. அதனால் தான் காதலை ஜனநாயகப் பூர்வமானது என்று கூறுவார்கள். அந்த ஜனநாயகத்தை தூக்கிப் பிடிப்பதற்கும் “தைரியமும்” “ஆண்மையும்” இருக்கத் தானே வேண்டும். ஒரு வகையில் பார்த்தால் , நீங்கள் கூறும் அந்த ஈழப் பெண் மிகவும் நற்பேறு(அதிர்ஷ்டசாலி) பெற்றவர் என்றேக் கூற வேண்டும், காரணம் கோழையை திருமணம் செய்துக் கொள்வதை விட ஒரு பெண்ணுக்கு ஏற்ப்படும் கொடிய துர்பாக்கிய நிலை வேறு ஏதும் இவ்வுலகில் இருக்க முடியாது. கைமைக் கோலத்தை காட்டிலும் மிகக் கொடியது ஒரு பயங்கொள்ளியை திருமணம் செய்துக்கொள்வது. திருமணமாகி செல்லும் பெண்களுக்கு ஏற்ப்படும் வரதட்சனை கொடுமை, மாமியார் கொடுமை போன்றவைகள் பெரும்பாலும் வீட்டை எதிர்த்து பேச முடியாத இவரைப் போன்ற கோழைகளால் தான் அதிகம் நடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை….

        //அது போல, கவுண்டர்களும் வேறு சாதிப் பெண்களை மணமுடிக்காது விட்டாலும், தம்முடைய சாதியிலேயே, தமிழ்நாட்டுக்குள் திருமணம் செய்து கொள்ளலாம் தானே, அவர்கள் கேரளாவுக்குப் போய் மலையாளப் பெண்களை ஏன் திருமணம் செய்து செய்கிறார்கள். தமிழ்ப்பெண்களை விட மலையாளப் பெண்கள் “சிவப்பாக, அழகாக” இருக்கிறார்கள் என்று தமிழர்கள் ஆசைப்படுவது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம் அல்லவா?//

        தம்முடைய சாதியில் பெண்ண கிடைக்கவில்லை என்பதால் தான் அவர்கள் வேறு சாதியில் பெண் தேடுகிறார்கள், அது என் தங்களின் கவுண்டர் சாதிக்கு இணையான வேறு சாதியில் பெண்ணைத் தேட வேண்டும், வன்னியர் பெண்ணையோ அல்லது தலித் சமுகத்தை சேர்ந்த பெண்ணையோ திருமணம் செய்துக் கொண்டால் என்னவாம். அதிலும் கூட சிவப்பாக பெண்கள் இருக்கிறார்கள்.. விடயம் இது தான் இனம் தாண்டி நாயர், நம்பூதிரி, ஈழவா போன்ற மலையாள பெண்கள் என்றாலும்க் கூட பரவாயில்லை, ஆனால் தன் சொந்த தமிழ் இனத்தை சேர்ந்த தனக்கு கீழான சாதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்கிற சாதிய மேட்டிமை எண்ணம் தானே இவர்களைத் தடுக்கிறது. அன்றி வேறென்ன?

        • செல்வி. Rebecca Mary,

          நீங்கள் நினைப்பது போல் அந்த நண்பர் கோழை அல்ல. காதலித்து விட்டு, குடும்பத்தின் சொல்லைக் கேட்டு ஏமாற்றி விட்டுப் போவது தான் கோழைத்தனம். காதலிக்கு முன்பே, தனது பெற்றோரை நினைத்து தனது ஆசையை அல்லது காதலை அப்படியே சாகடித்துக் கொள்வதற்கு எவ்வளவோ மனப்பக்குவம் வேண்டும். அந்த விடயத்தில் தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் கொடுத்து வைத்தவர்கள். இலங்கைத் தமிழர்களிடம் முன்னொரு காலத்தில் பெற்றோர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து நடந்து கொள்ளும் வழக்கம் இருந்திருக்கலாம் ஆனால், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களிடம் அந்த வழக்கம் முற்றாகவே அருகி வருகிறது. யாரும் அம்மா, அப்பாவின் விருப்பத்தைக் கேட்டு, அவர்களுக்கேற்றவாறு காதலிப்பதுமில்லை, திருமணம் செய்வதுமில்லை. அதிலும் பல்கலைக்கழகக் காதலில் திருமணத்தைத் தீர்மானித்து, நாள் குறித்த பின்பு பெற்றோருக்குச் சொல்லுகிறவர்களுமுண்டு. இப்போது, பெரும்பாலான ஈழத் தமிழ்ப் பெற்றோர்களெல்லாம், தமிழ்ப்பெடியனையோ அல்லது தமிழ்ப் பெட்டையையோ பிடித்துக் கொண்டதே போதும், நாங்களா வாழப்போகிறோம், அதுகள் தானே, என்னவோ அவர்களின் விருப்பப்படி செய்தால், சந்தோசமாக இருப்பார்கள் என்று தமக்குத் தாமே ஆறுதல் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளிநாட்டில் வாழ்ந்தால் கூட, தமது பெற்றோர், சாதி சனங்களின் உணர்வுகளை மதித்து, அவர்கள் எவ்வளவு அழகாக, தகுதியுடையவர்களாக இருந்தாலும், ஊருக்குப் போய் சகடைக்கு சீலை சுற்றிய மாதிரி இருக்கிற குண்டுப் பெண்களைக் கூட, அம்மா அப்பா சொல்லைக் கேட்டு திருமணம் செய்து கொண்டு, வெளிநாட்டுக்கும் கூட்டிக் கொண்டு வந்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்தளவுக்கு நல்லவர்கள் அவர்கள்.

          //இனம் தாண்டி நாயர், நம்பூதிரி, ஈழவா போன்ற மலையாள பெண்கள் என்றாலும்க் கூட பரவாயில்லை, ஆனால் தன் சொந்த தமிழ் இனத்தை சேர்ந்த தனக்கு கீழான சாதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்கிற சாதிய மேட்டிமை எண்ணம் தானே இவர்களைத் தடுக்கிறது. அன்றி வேறென்ன?///

          முற்றிலும் உண்மை , இந்த நிலை கூட விரைவில் மாறலாம். மாறுமென நம்புவோம்.

  4. மிக மிக உண்மை.. கடைந்தெடுத்த பிர்ப்போக்குத்தனம்!! ஒரு பெண்ணின் கணவன் இறந்தால், அவள் வாழ்வையே நரகமாக்கும், கீத்தனமான கலாச்சாரம் தான், எங்கள் கலாச்சாரம். இதிலே என்ன பெருமை என்று புரியவில்லை!!! இன்னொரு திருமணம் செய்தால் என்ன தவறு என்று புரியவில்லை? எங்கள் சித்தப்பா இறந்த பொழுது, எங்கள் சித்தியின் நிலையை நினைத்து கதறாமல் இருக்க முடியவில்லை. எங்களின் கதறலுக்கு காரணம், இந்த கேடு கெட்ட சமுகமே!!! இதை மாற்ற முற்ப்பட்டால், கதறல் அதிகரிக்குமே தவிர குறைவதில்லை. இப்படி இருப்பதிலே உங்களுக்கு என்னாடா பெருமை கேடுகெட்ட ___________!!! வினவின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்????

  5. “இன்னக்கி நம்மள எவன் பாக்கறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னக்கித் தேவடியாதான்” என்று அவர்கள் பேசிச் சிரித்துப் போனார்கள்..— இதற்க்கு வினவு கும்பல் என்ன சொல்கிறது.. உங்கல் ஊரிலே குடும்ப பெண்கள் அனைவரும் அப்படி தான் மாறி விடுவார்களா…

    • முதலில் தேவரடியார்களை உருவாக்கி அவர்களை ஏமாற்றி தே …..ளாக மாற்றி ருசிகண்ட பூனைகலாக அவர்களிடம் சென்று வரும் கொங்கு நாட்டு சீமான்கள் தானே இதற்கு பதில் கூறவேண்டும் ?

    • தேவுடியாள்களை உருவாகிய ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தை பார்த்து அவர்கள் எதிர்வினையாக அப்படி கூறத்தான் செய்வார்கள் !

      //“இன்னக்கி நம்மள எவன் பாக்கறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னக்கித் தேவடியாதான்” //

    • திருச்செங்கோடு இப்பவும் எப்படி இருக்குன்னு தெரியுமா அம்பிகளே, ஆண்டைகளே! CHB காலனி பத்தி விசாரிச்சு பாருங்க. எதிர்ல இருக்கவங்க துப்புறதுல முகம் கழுவிடலாம்.அந்தளவுக்கு நாறிக்கிடக்குது. ____________ கையும் களவுமா பிடிச்சு சாதி கவுரவத்த, தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்பாத்தலாம்ல. ________ பயந்து, நான் எழுதவே மாட்டேனு சொல்றதுதான் இன்னும் கேவலம். ஓடற நாயக் கண்டா, தொறத்தற நாய்க்கு எளப்பம்தான். குனிஞ்சு கல்லெடுக்கற துணிச்சல் எந்த எழுத்துக்காரனுக்கும் இல்லங்கிறதுதான், காவியும், கவுண்டனுங்களும் இந்தளவுக்கு ஆடக் காரணம்.

      திருச்செங்கோட்டு சுத்துப்பட்டு பெருசுங்க கிட்ட கேட்டுப்பாருங்க,எந்தெந்த தோட்டத்துக் கவுண்டனுங்க, எந்தத் தெருவுல (அருந்ததியர், பறையர் இன மக்கள் ) ராப்பகலா படுத்துக்கிடந்தானுங்கனு கத கதயா சொல்லுங்க. ___________, கல்யாணத்துக்கு முன்னாடியே, பண்ணையத்தாளு கூடப் படுத்து, பிள்ள பெத்து, சொல்லாம கொள்ளாம குப்பைக்குழியில வீசுன கத, வண்டி வண்டியா கிடக்குது. அவ்வளவு ஏன்? இன்னைக்கு இவ்வளவு சவுண்டு குடுக்கறவன் வீட்ட நோண்டுங்க, நாறிடும். இந்த _______அடிச்சி விரட்டாம, கொலைக்குதே, தொரத்துதேனு புலம்பி ஆகப் போறது ஒண்ணுமில்ல…

      பெருமாளே! நீ தாண்டாப்பா எல்லாத்தையும் பார்த்து முடிவு சொல்லனும்………

    • ஒரு கதை எழுதும் எழுத்தாளர் பல்வேறு வகையான பாத்திரங்களை படைக்கிறார்.அந்த பாத்திரங்கள் எப்படி நடந்து கொள்வார்கள்,எப்படி பேசுவார்கள் என்பதை எந்த அளவிற்கு யதார்த்தத்திற்கு நெருக்கமாக கொண்டு வருகிறாரோ அந்த அளவிற்கு அவர் படைப்பிலக்கியத்தில் வெற்றி பெறுகிறார்.

      விலை மாதர்கள் பேச்சு சற்று ஆபாசமாகத்தான் இருக்கும் என்பதுதான் எதார்த்தம்.ஆகவே விலை மாதர்கள் “இன்னக்கி நம்மள எவன் பாக்கறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னக்கித் தேவடியாதான்” என்று பேசிக்கொண்டு செல்வதாக இருப்பதை அவரது கருத்தாக எடுத்துக் கொள்ள கூடாது.ஒரு நிகழ்ச்சிப் போக்கு என்ற வகையில் அதனை படிப்பவருக்கு விளக்கிச் செல்கிறது அந்த உரையாடல்.அவ்வளவுதான்.

  6. இது ஒரு கதை அந்த அளவிலே பாருங்கள் ,சத்தம் போடுறவன் எல்லாம் ஏன் ஒரு தலித் பற்றி கேவலமாக சித்தரிக்கும் போது மட்டும் காணமல் போய்விடுரங்க.அந்தகதைஎல் பல இடங்களில் சக்கிலியன் பொண்டாடி மனப்ப புள்ளை மட்டும் நாறுத என வருதே ஏன் ,சம்பத்தப்பட்ட சக்கிலியர்கள் சத்தம் போடல ,ஏன்என்றல் இது ஒரு கதை என்பதால் இது ஒரு சமுக ஆவணம் இல்லை என்பதால் போங்கடா வேலை இல்லாத பயல்கள .ஒன்ன கடிச்சா பாம்ம்பூ என்னை கடிச்சல் அது

  7. மக்களே,

    நமக்கும் அந்த ஊரு பக்கதானுங்க. எனக்கும் அந்த சாதிகார பயபுள்ளைகள பத்தி தெரியுமுங்க. ஏன்னு கேட்டீங்கன்னா, நானும் முன்னாடி அந்த சாதிக்காரன் தானுங்க. ஆனா இப்ப இல்லீங்க. அதனால் எனக்குத் தெரிந்த நடந்த கதைகள உங்களோட பகிர்ந்து கொள்றேங்க.

    கத 1:
    எங்க சொந்தகரரு ஒருத்தருக்கு இப்போ வயசு 45 இருக்குமுங்க. அவருக்கு கல்யாணத்த பண்ண எங்க சொந்தகாரங்க ரொம்ப சிரமப்பட்டாங்க. ஆனா அவரு கட்டுனா கவுண்டசியத் தான் கட்டுவேன்னு ஒத்தக் காலுல நிக்கராருங்க. சின்ன வயசுல பொண்ணுப் பாத்தப்போ அது சரியில்ல இது சரியில்லன்னு சொல்லிட்டருங்க. இந்த கவைலயிலேயே அவிங்க அம்மா தூக்கு மாட்டி செத்து போய்ட்டாங்க. இப்போ ஏதோ பொழங்குற சாதியில பொண்ணுப் பாக்குறதா கேள்விபட்டேன்.

  8. கதை 2:

    ஊருல ஒரு அண்ணாவுக்கு(பங்காளி உறவு) வயசு ஒரு 4௦ இருக்குங்க. அவருக்கு கேரளாவுல தான் பொண்ணு புடிச்சாங்க. கேரளாவுல தான் கல்யாணம் ஆச்சு அதனால் என்னால கல்யாணத்துக்குக் கூட போக முடியல. பொண்ணுக்கு வயசு எப்படியும் 2௦க்கும் கம்மியாத்தான் இருக்கும். ஆனா எனக்குத் தெரிஞ்சு எந்த ஒரு பொண்ணையும் இப்படி வெளில யாருக்கும் கட்டிக் கொடுத்தது இல்லை.

    கருமுட்டைக்கு சாதி பாக்குறதில்லை. ஆனால் விந்தனுவுக்கு சாதி பாக்குறாங்க.

  9. கதை 3:

    அதே மாதிரி இன்னொரு அண்ணா அவருக்கு வயசு எப்படியும் 36 இருக்கும்னு நெனைக்கிறேன். அவரோட பொண்டாட்டிக்கு வயசு எப்படியும் 22 இருக்கும்னு நினைக்கிறன். சொந்த அக்காப் பொண்ணையே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. அவரு கல்யாணத்தப்ப நாங்க வேறு ஊர்ல இருந்ததால எனக்கு அதப் பத்தி சரியத் தெரியல. ஆனா விசாரிச்சதுல அந்த பொண்ணு வயசுக்கு வந்த வுடனேயே(13) வயசு தான் ஆச்சாம். இந்த கல்யாணத்துக்கு காரணம் என்னன்னா, வயசுக்கு வந்தப் புள்ள வூட்டுல வெச்சுருந்த கண்ட கண்டப் பசங்கெல்லாம் கண் வெப்பாங்க. அதான் சட்டுபுட்டுன்னு முடிச்சுட்டாங்களாம். பாவம், கல்யாணம் பண்ணும் பொது அந்த போன்னு பள்ளிக்கூடம் படிச்சிட்டு இருந்துருக்கும்.

  10. கதை 4:
    இது என்னோட சொந்த தாய் மாமன் பொண்ணுக கதை.

    அந்தப் பொண்ணுக்கு வயசு 15 தான் இருக்கும். எனது தாய் மாமன் மகாராஷ்ட்ராவில் ரிக் வண்டியில் வேலை பார்க்கிறார். முதல் பொண்ணு உட்சாதியிலேயே காதல் திருமணம் செய்து விட்டார். ஒரு வாரத்திற்கு முன்னாடி தான் எனது அத்தை என்னை அழைத்து, அதே உட்சாதியை சார்ந்த ஒரு சொந்தகாரன் எப்படியும் வயசு 35 இருக்கும், பொண்ண குடுங்க நாங்க நல்லப் பாத்துக்குறோம், உங்க பசங்களையும் நாங்களே படிக்க வைக்குறோம். உங்களுக்கு ஒத்தாசையா இருப்போம் என்று சொன்னாராம். நான் ஏற்கனவே குறைந்தது 2௦ வயது ஆகாமல் திருமணம் செய்யாதீர்கள் என்று கூறி இருந்தேன். அப்புறம் தையல் வகுப்பிற்கும் அனுப்ப சொன்னேன். அந்த பெண் தற்போது தையல் வகுப்புக்கு பொய் கொண்டு இருக்கிறார். இதைப் பற்றி கேள்விபட்டதும் நான் மீண்டும் வலியுரித்துக் கூறியுள்ளேன். அவர் அந்த ஆளிடம், இதையே சொல்ல , அதற்கப்புறம் அவன் தன்னோட திமிரைக் காட்டினான். பொண்ணுக் குடுக்க மாட்டியா. எப்படியும் உம் பொண்ணு வெளில வந்து தான ஆகணும் .தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணல நான் ஆம்பளையே கிடையாது என்று சொன்னானாம். அப்புறம் அக்கம் பக்கத்துல இருந்தவங்கேல்லாம் சமாதானம் சொல்லி அவன அனுப்பி வெச்சாங்களாம். இப்படி இருக்கு பேண்ட பரம்பரையோட இலட்சணம். அடுத்து இவனெல்லாம் என்ன பண்ணுவான் _______ கேரளாவிற்கு தான் போவான். என்ன கிரகமோ.

  11. கதை 5:
    இது என்னோட நண்பன் சொன்னது. அவனும் அதே சாதி தான். என்னோட முன்னாள் நண்பர்கள் பலர் இந்த சாதி தான். அவர்களில் ஒருவன் சொன்னது. இது உண்மை சம்பவம் நடந்தது நாமக்கல் மாவட்டத்தில்(வையப்பமலை என்று நினைக்கிறன்). ஒரு சக்கிலி சாதியை சேர்ந்த (மன்னிக்க வேண்டும்) ஒரு ஏழை பையன் கவுண்டனிடம் வண்டி ஓட்டுனராக இருந்துள்ளார். அந்த கவுண்டனுக்கு நல்ல நிலபுலம் ரிக்,டாரசு வண்டிகள் பொக்லின் என்று சொத்து ஏகபோகம். ஓரளவிற்கு அரசியல் செல்வாக்கும் இருக்கு. அந்தப் பொண்ணு இந்த பையனின் மின்மினு சட்டையையும் , ஓரஞ்சு கலர் வாட்சுயையும், கறுப்புக் கலர் கண்ணாடியையும் பார்த்து காதலித்தார். அந்தப் பயன் ஆரம்பத்துல பயப்பட அப்புறம் காதல் செட்டானது.இளவயசு தானே எத்துணைப் படம் பார்த்து இருக்கோம். புரிந்து கொள்ள கூடியது தான்.

    இது தமிழ் படமா என்ன கிளைமாக்ஸ் சுக்க்சஸா முடிய. எப்படியோ இதை மோப்பம் பிடித்த அந்த கவுண்டன் ஆளுகளை செட்டப் செய்து டாரசை விட்டு ஏற்றி கொலை செய்து விட்டான். அதுக்கப்புறம் சில காட்சிகள் எனக்கு மறந்து விட்டன.

    உடம்பு சுகத்திற்காக, தாழ்த்தப்பட்ட பெண்களை பெண்டாளும் இந்த கவுண்ட ______ , ஒரு தாழ்த்தப்பட்ட பையன் தனது பெண்ணை காதலித்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் இந்த படுகொலையை செய்கிறார்கள்.இதற்கு விளக்கங்கள் வேறு.

  12. என்னிடம் இன்னும் நிறையக் கதைகள் இருக்கு.ஆனா என்ன பயன். ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு தெறம இல்லையே. பெருமாள் முருகனிடம் அது கொஞ்சம் இருக்கு போல. அதான் எழுதிட்டாப்ள.

  13. கதை 6:

    இந்த கதை கூட ஒரு சோக கதை தான் . இரசிபுரத்தை சேர்ந்த ஒரு பிரபலமான ஒரு பிராய்லர் பள்ளிக்கூட பண்ணையை கூட்டாக நடத்துகிறார்கள். அதில் ஒரு கூட்டுக்கு உரிமையாளர் எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவர். தூரத்து உறவினர். குடிநீருக்காக அவர்களது வீட்டிற்கு தான் நான் செல்வேன்.அவரும் அவரது மனைவியும் படித்தது m.sc,m.phil,m.ed பட்டய படிப்பு.இருவருமே அரசு பள்ளிகளில் ஆசரியராக பணி புரிந்தார்கள். திருமணம் நடந்து பல ஆண்டுகளாய் குழந்தை இல்லை. அப்புறம் என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்த பெண்மணியின் மாமனார் மாமியார் அவர்களது மகனை வேறொருத் திருமணம் செய்ய சொல்லி கேட்கிறார்கள். எனக்குத் தெரிந்த தகவல் என்னவெனில், அந்த பெண்மணி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அப்புறம் நாங்கள் வேறொரு இடத்திற்கு குடி சென்று விட்டோம். சிறிது காலத்திற்கு பிறகு அந்த பெண்மணி தனியாக பிரிந்து சென்று விட்டதாகவும் அந்த கவுண்டன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினான். ஆனால் அவர்களுக்குக் குழந்தை பிறந்ததா என்று நான் கேட்டறியவில்லை.

    முதலில், கணவர் வேறொருப் பெண்ணை திருமணம் செய்வதை எதிர்த்தவர் பின்னர் எப்படி அதை ஒத்துக் கொண்டு தனியாக செல்ல முடியும். உண்மையில் அந்த பெண்மணிக்கு அந்த ஒட்டு மொத்த சமுதாயமே துரோகம் செய்து உள்ளது. இங்கே பேண்ட பரம்பரை என்று கழிபவர்கள் இதற்க்கு என்ன சொல்ல முடியும். ஒன்னு வேண்டுமென்றால் சொல்வார்கள். இது எந்த சாதியில தான் நடக்கல.

  14. மக்களே,

    இது போன்ற கதைகள் எல்லா சாதியிலும் தான் நடக்குது என்கிறீர்களா? சரி. ஆமாம். நடக்கிறது.

    ஆனால் குறிப்பாக ஆதிக்க சாதியில் என்ன நடக்கிறது?
    ஆதிக்க சாதி ஆம்பள உட்சாதியில் பெண் கிடைக்கவில்லைஎன்றால், ஏதோ பொழங்குற சாதியில முதல்ல பெண்தேடும் படலம் ஆரம்பிப்பார்கள், அப்புறம் அது கேரளா வரை சென்று தான் தமது தேடலை முடிப்பார்கள்.

    ஆனால் அதே ஆதிக்க சாதி வெறி___கள், பொம்பளை என்றால் என்ன செய்கிறார்கள்?

    படிப்பறிவு குறைவு என்றால் சிறு வயதில் திருமணம் செய்து விடுகிறார்கள்.
    படிப்பறிவு கொஞ்சம் அதிகம் என்றால் காதலைக் கூட அங்கீகரிக்கிறார்கள் அது உட்சாதி காதல் என்று இருக்கும் வரை அல்லது தம்மை விட சற்று உயர்ந்த படி நிலை கொண்டவர்களா இருக்கும் வரை(அதிலும் அந்தஸ்து கௌரவம் என்று பார்பவர்களும் இருக்கிறார்கள்).

    சரி ஒருவேளை மாப்பிள்ளை கிடைக்கவில்லைஎன்றால் என்ன செய்வார்கள்?

    ஒருவேளை கேரளாவிற்கு செல்வார்களா? இல்லை கர்நாடகாவிற்கு, இல்லை வட இந்திய மாநிலங்களுக்கு? விடைஎன்னவேன்றால், அந்த பெண் முதிர்கன்னியாக இருக்க வேண்டியது தானே ஒழிய, ஒரு நல்ல தலித் மாப்பிள்ளை இருக்கிறான். நல்ல படிச்சிருக்கான். நல்ல பண்புள்ளவனா இருக்கான். புரட்சிகர இலட்சியங்கள் எல்லாம் வெச்சுருக்கான். கல்யாணம் பண்ணி வெச்சுருவாங்களா?

    பாஸ் திரும்ப திரும்ப சொல்றேன். கருமுட்டைக்கு சாதி பார்ப்பதில்லை, ஆனால் விந்தணுவிற்கு சாதி பார்ப்பார்கள் இந்த வெறியர்கள்.

    • பால சுந்தர விநாயகம்,

      இந்த பின்னூட்டங்கள் இதோட கூட முடிஞ்சுடும்.. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்தும் நோன்டுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் உங்க பின்னூட்டங்களை நேரம் கிடைக்கும் போது முடிந்த வரை அழகுத் தமிழில் போட்டா நல்லா இருக்கும்.

      நன்றி.

  15. சிவப்பு இந்த கதைகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் படிக்க எங்கன அண்ணன் கதை இருக்கு ! பெரியம்மா பையன் ! பெரியப்பா கவுண்ட சாதி .., அண்ணனுக்கு 30 வயசு வரிக்கும் கல்யாணம் ஆகல ! ஊடு ஈரோடு பக்கம் ! அவருக்கு ஈரோட்டை ஒட்டிய புறநகரில் வாழும் கேரளா கார பெண்ணுடன் தொடுப்பு இருந்து இருக்கு ! போக்குவரத்து இருந்து இருக்கு ! லைன் ஊடுங்க போல ! ஒரு ஊட்டுல ஒனரு குடும்பம்[ கவுண்டர் ]இருந்து இருக்கு ! அவிங்க வீட்டு பொண்ணுக்கு 18 வயசு கூட ஆகல ! அது கூட இவருக்கு காதலு ! என்ன கருமம் கதை இது என்று வாசகர்கள் புலம்புவது புரியுது ! கடைசியில் அந்த புள்ளைய ஈஸிதுகிட்டு ஓடிட்டாரு .போலிசு கேசு ஆன பின்பு தான் இந்த கதைஎல்லாம் எல்லாருக்கும் தெரிந்தது . பிரிச்சுட்டாங்க ! மறுபடியும் அதே பொண்ணுக்கு 18 வயசு ஆகும் வரைக்கும் காத்து இருந்து மீண்டும ஈஸிதுகிட்டு ஓடிபோய் கல்யாணம் பன்னிகிட்டாரு ! பொண்ணு வீட்டில் சேர்த்துகிறது இல்லை . முதல் தொடர்பு பொண்ணு நிலை என்னனு தெரியலை ! நான் இதை எல்லாம் கேள்வி கேட்டதால என்னுடன் பேச்சு வார்த்தை கூட இல்லை ! எங்கவாது கல்யாணத்துல ,பெரிய காரியத்துல சந்தித்தா கூட போடா மசுராண்டினு நான் நினைத்துக்கொண்டு அவனை மொறைக்கிறது ! ஆனா பெரியப்பா ரொம்ம நல்லவரு ! சாதி வேத்தும எல்லாம் பார்க்க மாட்டாரு ! எங்க பெரியமாவை 50 வருடத்துக்கு முந்தியே காதலித்து சாதி கலப்பு கல்யாணம் பன்னிகிட்டவரு ! இரண்டு பேருமே வாத்தியாருங்க ! பெரியம்மா கொங்கு சீமையிலே 50 வருடமா வாழுர கதையை அப்புறம் சொல்லுறேன் !

    • தமிழ்,

      நல்லது. எழதுங்கள். உண்மையில், இந்த ஆதிக்க சாத்திக்ககாரங்களை பத்தி நாம நெறைய எழுத வேண்டி இருக்கு. புக்கு எழுதற அளவிற்கு தெறம இல்லனாலும் , பார்த்த கேள்விப்பட்ட கதைகளை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள தான் வேண்டும். பெ.மு ஏதோ தமது சாதி பெண்களை இழிவுபடுத்தியதாக பொருமும் இவ__களுக்கு உண்மையில் அந்த பெண்கள் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் ஆதிக்க சாதி எதிலும் குறிப்பாக கவுண்ட சாதியில் அறவே கிடையாது. ஒரேயொரு டம்மியான விதிவிலக்கு உண்டு. உட்சாதி காதலை வேண்டுமென்றால் ஏற்றுக் கொள்வார்கள். அதிலும் பொருளாதார நலன்கள் அடிப்படையில் மட்டுமே.

      எப்படின்னு கேட்டீங்கன்னா, என் காதுபடவே கேட்டிருக்கேன். எப்படியாவது நல்ல பொண்ணா புழங்குற சாதியா பாத்து லவ் பண்ணி கல்யாணத்த பண்ணுடா.காசுபணம் கூட அவ்ளோ பிரச்சினை இல்லை. இது ஆண்களுக்கு மட்டுமே.பெண்கள் இதைப் பற்றி கனவு கூட காண முடியாது.

  16. இந்தப் புத்தகம் சம்பந்தமா இந்தளவு ஆட்டம் ஆடுற இந்த இந்துத்துவா கும்பலுக்கு மும்பை சிகப்பு விளக்கு ஏரியா, கல்கத்தா சோனா மார்க்கெட் ஏரியாவெல்லாம் தெரிவில்லையா? பெருமாள் முருகன் எப்பவோ நடந்த விஷயங்கள தான் எழுதியுருக்கிறார். ஆனால் இங்கே நம் அனைவருக்குமே தெரியும் பெண்கள நித்தம் காமுகர்கள் சீரழிக்கின்றான்களேன்று. ஏன் இந்த கும்பல் அதைப் போய் சரிசெய்யல. அங்கே இந்து பெண்கள் விபச்சாரிகளா இல்லையா? இந்த விபசாரிகள்ட்ட இந்து ஆண்கள் போறதில்லையா? எல்லாம் புறவாசல் வழியா அரசியல் செய்யும் பாடு.

  17. வினவில் நான் எழுதுவதை நிறுத்தி கொள்ள நினைத்தாலும், ஜெயஸ்ரீ , சுஷீலா போன்ற பெண் திரையில் மறைந்து சில விஷமிகள் கௌண்டர்களை பற்றி திட்டினாலும் என்னக்கு அதனை பற்றி கவலை இல்லை.. ஆனால் சிவப்பு என்ற வீபீசன விஷ வித்துகள் என்னை இங்கே எழுத தூண்டியுள்ளன. நான் எழுதுவது அந்த கம்முனிச _________ தான்

    பின்குறிப்பு: வினவு கூட்டத்தினருக்கு ஆண்மை இருந்தால் இருந்தால் நான் எழுதுவதை எடிட் செய்யாமல் வெளியிடவும்

    • பேசுங்க கவுண்டரே ! அவிங்க [ஜெயஸ்ரீ , சுஷீலா] யாரு உங்கள திட்டுவதற்கு ? கேள்வி கேட்கின்றார்கள் அல்லவா ? ஆண்மையுள்ளவரு தானே நீரு ? பதில் கூறுவதால் எதேனும் உங்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுமா என்ன ?

    • திரு விக்ரமாதித்தியன் ,

      என்னுடைய கருத்தில் எது கொங்கு வெள்ளார்களை திட்டிய சொல் என்று கூறமுடியுமா ?

      இவ்வளவு சாதியம் பேசும் ,சாதி புனிதத்தை கடைபிடிப்பதாக கூறிக்கொள்ளும் கொங்கு கரிக்குருவிகள் , பெண் எடுப்பதற்கு மட்டும் தாய் வழி சமுகத்தை கடைபிடிக்கும் கேரளாவுக்கு செல்வது ஏன் ? அப்போது மட்டும் கொங்கு நாட்டு கரிக்குருவிகள் புனிதம் கெடாதா ? கருங்குருவிகளுக்கு தாய் வழி சமுகத்தின் இலக்கணம் குருவிகளுக்கு தெரியுமா, தெரியாதா ? குழந்தை உருவாக தேவையான கருமுட்டையை மட்டும் கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யும் கரிக்குருவிகள் உருவாக்கும் இனம்,சாதி எப்படி தமிழ் இனமாக ,சாதியாக இருக்கமுடியும் ? காதலித்து மாற்று இனத்திலோ ,மாற்று மதத்திலோ பெண் எடுப்பது வரவேற்க கூடியதே ! ஆனால் காசுகொடுத்து கேரளாவில் இருந்து பெண் எடுக்க வேண்டிய அவலம் கொங்கு நாட்டு கரிக்குருவிகளுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை அறிய மாதொருபாகனின் மாற்று பக்கம் கரு உற்றால் ஸ்கேன் செய்து கழிக்கும் கொங்கு நாட்டு கரிக்குருவிகளை தானே கேட்க வேண்டும் ?

  18. திருசெங்கோடு பற்றியோ CHB காலனி பற்றியோ எனக்கு தெரியாது… ஆனால் இங்கு சிலர் கூறுவது போல கௌண்டர் சமுதாய இளைஞர் ஒன்றும் தரம் ஒன்றும் தாழ்ந்து விடவில்லை… கொங்கு நாட்டில் உள்ள 62 சாதிகாரர்களும் கவுண்டர் பசங்களுக்கு பெண் தர தயாராகவே உள்ளார்கள்.. ஏன் கவுண்டர் இளைங்கருக்கு பெண் கொடுத்து விட்டு அதனை அதனை பெருமையாக பேசுகிற ஆளை நான் பார்த்திருக்கிறேன்.. எனக்கு தெரிந்து கவுண்டர் சமூகத்தை சார்ந்த இளைஞன் வேறு ஒரு சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவனை தள்ளி வைக்க எந்த சமுத்தாரும் தயாராக இல்லை.. இன்னும் சொல்ல போனால் அவனுடன் பேசாமல் இருப்பது அவன் பெற்றோர்களாக தான்…

    • நீங்க வேற விக்ர…, என் உறவுக்கார பெண் ஒருத்தி கல்யாணம் ஆகி மாப்பிளையுடன் அமெரிக்காவில் செட்டில் ஆனா! மாப்பிளைக்கும் பெண்ணுக்கும் ஏழாம் பொருத்தம். 3 வருடம் கழித்து விவாகரத்து. அடுத்தது கவுண்டனுட்டு பையனுடன் நட்பு . இருவதும் தமிழ் நாட்டுக்கு வந்தாங்க !இருவர் வீட்டு உறவினரும் சம்மதம் கொடுக்க கோவை பக்கதுல இருக்கும் அம்மனுக்கு பொங்கல் வைத்து வேண்டிக்கிட்டு நல்லபடியா திருமணம் செய்து கொண்டு வாழத்தான் செய்யுறாங்க ! கவுண்ட சாதியை யாரும் மட்டமாகவோ ,மத்த சாதியை உயர்வாகவோ யாரும் சொல்லல ! எதுக்கு தேவை இல்லாத பீலிங்கு ?

  19. தமிழ் உன் சகோதரர் மட்டுமல்ல.. உங்கள் சமூகத்தில் யார் மற்ற சாதி பெண்களை திருமணம் செய்தாலும் சரி உடனே உங்கள் சமூத்தவர்களிடம் அதிகமாக ஒட்டி கொள்வதில்லை . ஏனென்றால் அவர்கள் உங்கள் சமூகத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அப்படி.. முதலில் உங்கள் சமூகத்தை உற்று நோக்குங்கள் அப்புறம் மற்ற சமூகத்தின் மீது சேற்றை வாரி இறைக்கலாம்.. அப்புறம் இப்படி உங்கள் சமூகத்து காரர்கள் காதல் கலப்பு திருமணம் செய்தாலும் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு உங்கள் சாதி என்று செர்டிபிகட் வாங்கி கொள்கிறார்கள்.. அவனுடைய பையன் மறுபடியும் மற்ற சாதி பெண்ணை கலப்பு திருமணம் செய்தாலும் அவனும் அவனுடைய பைய்யனுக்கு அதே உங்கள் சாதி என்று தான் செர்டிபிகட் வாங்குகிறான்.. அப்புறம் எப்படி உங்க சாதி அடையாளம் மறையும்… வேணும் என்றால் பந்தையம் வைக்கிறேன் உங்கள் அண்ணன் அவனுடைய புள்ளைக்கு உங்கள் சாதி என்று தான் செர்டிபிகட் வாங்கி இருப்பான்.. போய் பாருங்கள்.. முதலில் அதனை புலன் விசாரணை செய்யுங்கள்…

    • அட நீங்க வேற விக்கி …., அவிங்க [பெரியப்பா ,பெரியம்மா] இரண்டு பேருமே BC சமுகம் தானே ? பொதுவா அப்பனோட சாதி தானே மவனுக்கும் ? இது கூடவா தெரியாது உமக்கு ? எதுக்கு இத சொல்கின்றேன் என்றால் 50 வருடத்துக்கு முன்பே சாதிய கலப்பு திருமணத்தை மறுக்காத சமுகமாக தான் இருந்தது கவுண்ட சமுகம் என்பதை சுட்டுவதற்கு தான். நான் ஆறுவருடம் மல்லசமுத்திரம் ஊரில் இருந்தபோது வயதான பெரிசுகளை[பெரியப்பா ,பெரியம்மா] பார்க்க, உதவ நான் அவர்கள் ஊருக்கு போய் கொண்டு தான் இருந்தேன். பெரியப்பாவின் தம்பிகள் இருப்பாங்க அல்லவா ? யாரும் வேத்து ஆளா என்னைய பார்த்து இல்லை. என்னடா தமிழு நம்ம சாதியிலேயே பொண்ணு பாக்கலாமா என்று சித்திகள்[கவுண்டச்சிகள்] கேட்பார்கள். நான் கூறுவேன் எப்படி இருந்தாலும் நான் என் பெரியப்பா மூலமா உங்களுக்கு ஓரவாயிட்டேன். உங்களை எல்லாம் பங்காளியாத்தான் பார்கின்றேன். என் பெரியப்பா மாதிரியே நானும் உங்க சாதியிலோ அல்லது என் சாதியிலோ பெண்னெடுக்க மாட்டேன். சாதிய கலப்பு திருமணம் தான் செய்வேன். கல்யாணத்துக்கு வருவிங்க இல்ல ? என்று தான் பேசுவேன்.

      பெரியப்பன் சாதியை மீறி பெண் எடுத்தாலும் அவரு பையன் அவர் கவுண்ட சாதியிலேயே பெண் எடுத்து முதலில் தொடபுல இருந்த கேரளகார பெண்ணை கைவிட்டுவிடு வாழ்த்து கொண்டு தான் இருக்கார் !

  20. ஏன் நீங்கள் மற்றவர்களை குறை கூற வேண்டும் உங்கள் சமூகத்தை சேர்ந்த இளைன்ஞர்கள் ஒரு ஆயிரம் பேர் உங்களை உங்களை விட கீழ் மட்டத்தில் உள்ள டொம்பர் சமூக பெண்களை சீர்திருத்த திருமணம் செய்து தமிழகத்துக்கே முன்மாதிரியாக இருந்து வரலாற்றில் இடம் பெறலாமே..எத்தனை பேர் அதற்க்கு தயாராக உங்கள் சமூகத்தவர்கள் உள்ளார்கள்… எத்தனை பறையர்கள் டொம்பர் சமூக பெண்களை திருமணம் செய்ய உள்ளார்கள்… நான் மதுரை யில் இருந்த பொது பள்ளர் சமூகத்தை சார்ந்த ஒருவர் இன்னொருவரை திட்டும் பொழுது நீயெல்லாம் ஒரு சக்கிலியனுக்கு……………………( அதற்க்கு மேல் இங்கு நான் எழுத முடியாது ) என்று கூறி செம் மொழியிலே பேசி கொண்டிருந்தார்… வேணும் என்றால் தென் மாவட்டங்களுக்கு சென்று அங்கே பள்ளர் வசிக்கும் பகுதியில் ” பள்ளர் தங்கள் பெண்களை சக்கிலியர்களுக்கு குடுக்க வேண்டும் என்று பேசி பாருங்கள்…” முழுவதாக ஊர் திரும்ப மாட்டீர்கள்

    • நல்ல கேள்வி இது விக்கி …., ஒட்டு மொத்த தமிழ் சமுகமே யோசிக்கவேண்டிய விடயம். சுயசாதி பெருமைகளை எல்லாம் மறந்து விட்டு இப்படி தான் கேள்வி கோட்கோனோம். தலித் உட்பிரிவு வேறுபாடுகளை மட்டும் கேள்வி கேட்ட்காதிங்க ! ஒட்டு மொத்தமா எல்லா தமிழ் நாட்டு சாதிய வெண்ணைகளையும் சேர்த்தே கேள்வி கேளுங்கள் .

  21. தம்பி சிவப்பு ஆணாதிக்கம் என்பது தான் தமிழ் கலாச்சாரம். நம்ப முடிய வில்லையா.. அண்ணன் வள்ளுவர் என்ன சொல்லி இருக்கார் தெரியுமோ..

    அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
    பெண்ஏவல் செய்வார்கண் இல்

    பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை உடைத்து.

    சுருக்கமாக சொல்லனும்னா ஆண்மை தவறேல்

  22. கலப்பு திருமணம் நேற்று தான் கண்டு பிடிக்க பட்டது போல் சிலர் இங்கு எழுதுகிறார்கள்.. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிராமணர் ஒரு கட்டு வாசியை திருமணம் செய்தார் அவர்களுக்கு பிறந்தவன் தான் இராவணன். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் குழந்தை காட்டிலே அனாதையாக அழுதுகொண்டு இருந்தது.. அப்பொழுது அவ்வழியே சென்ற ஜனக மகா ராஜா அந்த குழந்தை எடுத்து வளர்த்தார்.. அந்த பெண்ணை தான் பிற்காலத்தில் ராமர் திருமணம் செய்தார்.. அந்த பெண் தான் அன்னை சீதா.. இந்திய பெண்களின் கர்பிர்க்கே இலக்கணம் கொடுத்தவர்.. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆற்று மீனவநிடத்தில் ஒருவர் கேட்டார். ஏன் தந்தைக்கு உன் மகளை திருமணம் செய்து கொடு.. அவன் சொன்னான் அப்படியானால் என் மகளுக்கு பிறக்கும் குழந்தைகள் தான் அரசாள வேண்டும் என்றான்.. அதற்காக அந்த மனிதன் தான் பட்டது இளவரசர் பதவியை துரப்பபதாகவும் தன வாழ்க்கை முழுவதும் பிரம்மா சாரியாக இருப்பதாகவும் அதோடு யார் தன் நாட்டை அரசால் கிறார்களோ அவர்களுக்கு இறுதி மூச்சு உள்ளவரை உளைபதாகவும் ஒருத்தி கொடுத்தார் அவர் தான் பீஷ்மர் … அதன் பின் அந்த மீனவன் தன் மகளை சந்தனுவிர்க்கு கட்டி கொடுத்தான்.. அவர்களுடைய கொள்ளு பேரர் கல் தான் பாண்டவர்களும் கவ்ரவர்களும்..

  23. ஏன் பீமனுக்கும் ஒரு அரகிக்கும் பிறந்தவன் தான் கடோற்கஜன்… மகாபாரத போரிற்கும் முன் அர்ஜுனன் கேட்டான் கண்ணா இங்கு கோடி கணக்கான வீரர்கள் இருகிறார்கள் இவர்களை அழிப்பதால் வர்ண கலப்பு ஏற்படாதா என்று கேட்டான்.. அப்பொழுது கிருஷ்ணர் புன்னகை செய்தார்..அது மட்டுமல்ல.. நான்கு சாதிகள் தன்னால் படைக்க பட்டதாக கூறினார்.. அர்ஜுனன் நினைத்தது போலவே போரிலே கொடிகனக்கனோர் அழிந்தனர் அதன் பின் என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்கள் சரியாக இல்லை.. இன்னும் புராணங்களில் பல கலப்பு திருமனகள் நிகழ்ந்தாக கதை உள்ளன .. ஏன் திருவிளையாடலில் கடல் மீனவ பெண்ணை சிவன் திருமணம் செய்வதை நீங்கள் பார்த்ததில்லையா…மவ்ரியர் காலத்தில் தங்களுக்கு கீழே இருக்கும் குறுநில மன்னர்களின் பெண்களை மன்னர்கள் திருமணம் செய்திருகிறார்கள்.. பின் குப்தர்களும் சோழர்களும் அதனை பின் பற்றி இருகிறார்கள்.. முகலாயர்களை பற்றி சொல்லவே தேவையில்லை.. அக்பர் , அவுரங்கசிப் ஆகியோரது தாயர்கள் இந்து பெண்கள் தான்.. இதற்க்கு மேல் நான் சரித்திரத்தை குறிப்பிட விரும்பவில்லை.. நவீன காலத்தில் சொல்லனும்ன பாகிஸ்தானின் தந்தை என்றளைக்கபடும் முகமது ஜின்னஹ்வின் மகள் ஒரு இந்திய பார்சி இளைஞனை திருமணம் செய்தார் .. இப்பொழுது அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்..

  24. ஆதலால் கலப்பு திருமணம் நேற்று இல்லாதிருந்து இன்று இருந்து நாளை இல்லது போகபோவது இல்லை.. அதே நேரத்தில் நாட்டிலோ சமூகத்திலோ ஒரு சில காலிகளால் ஒட்டு மொத்த சமுதாய இழுக்கு ஏற்படுத்தி விட முடியாது. ஒரு மனிதன் அவனுடைய செயல்களாலேயே உயர்கிறான். தமிழ்நாட்டிலேயே கோவில் களுக்கு சொந்தமாக அதிக அளவு நிலங்கள் (பல்லாயிரகணக்கான ஏக்கர் கள்) கொங்கு நாட்டில் தான் உள்ளது.. அனைத்தும் கவுண்டர்களால் வழங்க பட்டதுதான். இங்கு சிலர் தங்கள் மூளையிலே உள்ள குப்பைகளை கொட்டுவதால் யாருடைய தராதரமும் குறைந்துவிட போவது இல்லை.. சிலரது மூளையிலே அறிவு இருக்கும்.. ஆனால் சிலரது மூளையில் குப்பை இருந்தால் என்ன செய்வது..

    • பழம் பெருமை பேசுவதில் ஒன்றும் புண்ணியம் இல்லை விக்கி ! இன்று கொங்கு சமுகம் எப்படி எல்லாம் வேளாண்மையை விட்டு துரத்தப்டுகின்றது ,அதனால் நிலத்தில் வேலைசெய்யும் கவுண்டனும் ,தலித்துகளும் வேலை இழப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி யோசியுங்கள் . வேண்டுமானால் பெருமாள் முருகனின் ஏறுவெயில் நாவல் இத்தகைய சிந்தனைக்கு கைகொடுக்கும்

  25. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தங்கள் ஒட்டு வங்கியை பலபடுத்த மற்ற சாதியை இழிவாக பேசி கலவரத்தை தூண்டுகிறார்கள் தலித் தலைவர்கள்.. அதே போல் இவர்கள் பேசுவதை கேட்டு மற்ற சாதி காரர் கள் ஒன்றும் செய்யததை போல் போல தோன்றலாம்.. ஆனால் இவர்கள் பேசு வது அனைத்து சாதிகளிலும் ஒரு அண்டர் கரண்ட்டை உருவாக்கி கொண்டு தான் இருக்கிறது. பெரும்பான்மை சாதிக்காரர்கள் தவிர்த்து சிறிய சாதிக்காரன் கூட இன்று இந்த தலைவர்களுடைய செயல்களால் (கட்டாய வசூல் , சொத்து பிரச்சினையில் கட்ட பஞ்சாயத்து ) பாதிக்க பட்டுள்ளதாக பல போரும்களில் கருத்து க்களை தெரிவித்து உள்ளார்கள்..சமயம் கிடைத்தால் அவர்களும் தங்கள் பாதிப்புக்கு பதிலடி குடுப்பார்கள்.. இன்று இந்த தலைவர்கள் தொடர்ந்து மற்ற சமூக மக்களை இழிவாக பேசுவது அந்த அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு நெருப்பை ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கும்.. ஒருவேளை அது வெளியில் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் அந்த நெருப்பு எரிந்து கொண்டுதான் இருக்கிறது… இப்படியே போனால் எனக்கு என்னவோ தமிழகத்தின் எதிர் காலம் அவ்வளவு நல்லதாக இருக்கும் என்று தோன்றவில்லை.. தீரா பகை போரை முடியும் என்பது பழமொழி…காலம் தன்னுடைய சிக்கலான முடிச்சுகளை எப்படி அவிழ்க்க போகிறது என்பதை உங்களை போலவே நானும் பொறுத்திருந்து பார்க்கத்தான் போகிறேன்

  26. நானும் எத்தனையோ பேர பார்த்து விட்டேன் ,ஆனால் தமிழன மாதிரி கேவலமானவன இன்னும் பார்க்கவில்லை.சாதி ,மூடநம்பிக்கைகள்,குறுகிய மனப்பான்மை ,சுயநலப்போக்கு,முட்டாள் தனம் எதிலுமே தமிளன அடிச்சுக்க ஆள் கிடையாது .பெரிய சுனாமி மாதிரி எதாவது வந்து எலாபயளுகளையும் அடிச்சிட்டு போனா மிச்சபேராவது நிம்மதியா இருப்பாங்க

  27. அருந்ததிய சாதியை சேர்ந்த ஒரு இளைஞர் ஆதி திராவிடர் சாதியை சேர்ந்த ஒருவரிடம் போய் ”உங்கள் பெண்ணும் நானும் காதலிக்கிறோம். அதனால் அவளை எனக்கு கட்டி வையுங்கள். நாம் அனைவரும் தலித் தானே” என்று கேட்டால் சும்மா விட்டு விடுவார்களா? அடித்து உதைக்க மாட்டார்களா? மீறி திருமணம் செய்ய முயன்றால் சாதி கலவரம் தானே வரும்? தேவேந்திர குல வேளாளர்கள் தங்களை விட மட்டமான சாதிகளாக ஆதி திராவிடரையும் அருந்ததியரையும் கருதுகிறார்கள். நிலைமை இப்படி இருக்கும் போது கவுண்டன் மட்டும் இவர்களுக்கு பெண் கொடுக்க வேண்டுமாம். சாதி இல்லாத சமுதாயம் நல்லது தான். ஆனால் அதற்காக ஏன் இவர்கள் எப்போதும் (காதல் என்னும் பெயரில்) தங்களுக்கு மேலே உள்ள சாதிகளை சேர்ந்த பெண் பிள்ளைகளின் மேலே கண் வைக்கிறார்கள்? முதலில் தங்களுக்கு கீழே உள்ள சாதிகளுக்கு பெண் கொடுத்து பெண் எடுத்து சாதியை ஒழிக்கட்டும். அப்புறம் கவுண்டன் பெண்ணை சக்கிலி கட்டுவது பற்றி யோசனை செய்யலாம். ————-. இன்றைக்கு கவுண்டர் சாதியை சேர்ந்த பெண் பிள்ளைகள் பலர் நிறையப்படித்து கை நிறைய சம்பளம் கிடைக்கும் வேலைகளில் இருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர்கள் இவர்கள் சொல்வதை மீற முடியாத நிலை தான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது. இந்த பெண்கள் மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இளைஞர்களை காதலித்து திருமணம் செய்வது பரவலாக நடக்கிறது. ஆண்களும் கேரளாவுக்கு போய் பெண் கட்டிக்கொண்டு வருகிறார்கள். தலித் என்று சொல்லிக்கொள்பவர்களோடு தான் இவர்கள் திருமண உறவு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. அப்படி இருக்கும் போது கவுண்ட சாதி வெறி எங்கே வந்தது? மேலும் கவுண்டர்களை பற்றி விமர்சிக்கும் இந்த நாவலை எழுதிய பெருமாள் முருகனும் ஒரு கவுண்டர் தான். கவுண்டர்கள் ஒன்றும் உயர் சாதி கிடையாது. இடைநிலை சாதி தான். இவர்களும் பார்ப்பனர்கள் போன்ற உயர் சாதிகளால் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களே. இந்த மாதிரி தங்கள் சொந்த சாதியின் யோக்கியதையையும் சுயநல உணர்வையும் சாதி வெறியையும் விமர்சனம் செய்ய அருந்ததியரும் ஆதிதிராவிடரும் தேவேந்திர குல வேளாளரும் தயாரா? யாராவது இருக்கிறார்களா?

    • குலச்சாமி ….,உங்க கேள்வியில் உள்ள ஞாயம் நூரு சதவிதம் உண்மை தானே ! அதே மாதிரி தானே நானுன் கேட்கின்றேன் !

      உங்க[கவுண்டர்கள்] கூடவே 12 மணி நேரம் வேலை செய்யும் தெலுங்கு மொழி பேசும் தலித் குடிகள் ,உங்களைய குழந்தைகளை பாசமா தூக்கி சுமக்கும் தலித் குடிகள் , நீங்க சாபிடுவதையே அவர்களும் உண்ணும் தலித் குடிகள் , உங்க்ளுடைய கொங்கு தமிழ் மொழியையே உங்களுடன் பேசும் தலித் குடிகள், பொதுவான உழைப்பில் சிறு பங்கை மட்டும் எடுத்துகொள்ளும் தலித் குடிகள்……., அவர்கள் வீட்டில் பெண்கொடுத்து பெண் கொடுக்கும் விடயத்தில் கவுண்டர்கள் ஏன் சாதி வேற்றுமை பார்கின்றார்கள் ????அவர்களை விட்டுவிட்டு கேரளா காரிகளை கட்டுவதில் என்ன நியாயம் இருக்கமுடியும் ?????

      • Change : பெண்கொடுத்து பெண் கொடுக்கும்—->பெண்கொடுத்து பெண் எடுக்கும்

      • நானும் தலித். நீயும் தலித். நானும் 12 மணி நேரம் ஆண்டையின் வயலில் உழைக்கிறேன். நீயும் 12 மணி நேரம் ஆண்டையின் வயலில் உழைக்கிறாய். இருந்தாலும் நீ கேட்கிற மாதிரி என் பெண்ணை உனக்கு கட்டி வைக்க முடியாது. ஏனென்றால் நீ அருந்ததியன். நான் உன்னை விட உயர்ந்த ஆதிதிராவிடன். இதற்கு பின்னணியில் இருக்கும் நியாயத்தை போன்ற ஒரு நியாயம் தான் கவுண்டர்கள் அருந்ததியருக்கு பெண் கொடுத்து பெண் எடுக்க மறுப்பதன் பின்னணியிலும் இருக்கிறது. இது தான் பதில்.
        கவுண்டர்கள் பேசும் கொங்கு மொழியிலேயே அருந்ததியர்கள் பேசினாலும் அவர்களின் வீட்டில் கவுண்டர்கள் பெண் கொடுத்து பெண் எடுக்காததற்கு மிக முக்கிய காரணம் தங்களின் சமூக அதிகாரத்தை பெருமளவு விட்டுக்கொடுக்க வேண்டிவரும் என்பதால் தான். அப்படி தங்கள் சமூக அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய அளவுக்கு தகுதி படைத்தவர்களாக அருந்ததியர்கள் முதலிய தலித்கள் இல்லை என நினைப்பதாலும் தான். கேரளாக்காரிகளை கட்டினாலும் சப்பை மூக்கு ஜப்பானியனுக்கு தங்கள் பெண்களை கட்டிக்கொடுத்தாலும் இந்த தலித்களோடு திருமண உறவு கிடையாது என்பதற்கு இது தான் காரணம். அருந்ததியர்கள் நன்றாக படித்து பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தால் ஒரு வேளை கவுண்டர்கள் தங்கள் பெண் பிள்ளைகள் இவர்களை கட்டிக்கொள்வதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல் இருக்கலாம்.

    • அருந்ததியர்களும் பறையர்களும் உறவினர்கள் போலத்தான் தென் மாவட்டங்களில். ஒரு அருந்ததிப் பெண்ணைக் காதலித்து மணந்தால் அது ஒரு பெரிய பேச்சாகாது. ஒருவேளை அருந்ததிப் பெண்ணுக்கு முறைமாப்பிள்ளை இருக்க, அவன் அவளுக்காகக் காத்திருக்க, அவள் வேறொருவனை – எச்சாதிக்காரனாக இருந்தாலும் – மணக்க விரும்பினாலோ, அவன் கேட்டாலோ மட்டுமே பிரச்சினை. இது சாதிப்பிரச்சினையன்று. உறவுப்பிரச்சினை. அதே போல அருந்ததிப்பையன் பறையர் பெண்ணைக்காதலித்தால், அவனுக்கு வேலை இருப்பின் பறையர்கள் சம்மதம் உண்டு. இங்கேயும் உறவுப்பிரச்சினையிருந்தால் அதாவது அவனுக்கென்று ஒரு பெண் பேசி, நல்ல வரதட்சிணை எதிர்பார்த்திருக்க அவன் பெற்றோர் வேறொரு பெண்ணைச் சேர்க்க மாட்டார்கள்.

      பொதுவாக எஜ்ஜாதியிலும் கண்ணெனப்பொத்தி வளர்த்த பெண்ணை, கனவுகளோடு வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிய மகனை, ஒரு பெற்றோர் ஏதோ ஒரு பெண்ணை எங்கேயோ சில நாட்கள் காதலித்து கட்டித்தா என்றால் எப்படி மனம் கேட்கும்? இங்கே ஜாதியா பிரச்சினை? பெற்றோர்-குழந்தை உறவே.

      அருந்ததியரைவிட பறையர்கள் தங்களை உயர்வாகப்பார்க்கவில்லை. அதாவது, அருந்ததியர் எப்படி கீழாக வைக்கப்பட்டார்களோ பிற ஜாதிகளில் அப்படி சில விகிதம் கூட இயல்பு வாழ்க்கையில் பறையர்கள் வைக்கவில்லை. ஆனால், குறவர்கள் – குருவிக்காரர்களோடு மட்டும்- இப்படி தீண்டாமை அனுசரிப்பதுண்டு. காரணம், குறவர்கள் நாடோடிகள்; என்றும் தங்களை பொது சமூகத்தோடு இணைத்துக்கொள்ளாதவர்கள். மேலும், அவர்கள் பெண்ணை அவர்களே பிறருக்குக் கட்டிக்கொடுக்க மாட்டார்கள். அவர்கள் பெண்களுடன் காதல்வர, அப்பெண்கள் பிறரோடு இணைந்து வாழும் சந்தர்ப்பங்கள் இல்லை. கல்வி பெறாததால் வேறு வேலைகளுக்கு இலாயக்கில்லாதவர்களால். எனவே குறவர்கள் தமிழகத்தில் ஆதிகாலந்தொட்டு நாடோடிகள்.

      அதே சமயம்: பள்ளர்கள் கதை வேறு. இவர்கள் அட்டவணைச்சாதியர். இடஒதுக்கீடு பெற்று வாழ்வோர். ஆனால், தங்களை ஆதிதிராவிடர் என அழைத்துக்கொளளவோ அட்டவணை பிறஜாதியினர், குறிப்பாக, அருந்ததியர், பறையர்கள், இவர்களுடன் சேர்த்து அரசும், பிறஜாதியினரும் கருதுவதை அருவருப்பாகக் கொள்கின்றனர். எனவே ஆதிதிராவிடர் என்ற பொதுப்பெயர் வேண்டாமென மனுச்செய்திருக்கிறார்கள். இவர்கள் தலித்துகள் என்று ஒத்துக்கொள்ளாமல், தங்களைச் சத்திரிய வம்சம், எங்கள் மூதாதை அரசன் தேவேந்திர குலத்தவன்; எங்கள் தொழில் கூலித்தொழிலன்று: வேளாமை என்றும் சொல்லி, தங்களை தேவேந்திரகுல வேளாளர் என்று கூறிவருகின்றனர். ஆனால் அரசு அப்பெயரை ஏற்கவில்லை. அதே வேளையில், தாங்கள் அட்டவணையிலும் எஸ்.ஸி என்ற அரசு ஆதாயங்களைக் கைவிட தயாராக இல்லை.

      இவர்கள் தங்களை எல்லா எஸ்.ஸி ஜாதிகளைவிட உயர்ந்தவர்கள் என்றும், பிற சத்திரிய ஜாதிகளுக்கு இணை என்றும் சொல்லியும் நடந்தும் வருகிறார்கள். இதை ஏற்காமல் தொடர்ந்து இவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று தேவர்கள் நடத்துவதால், இவர்களுக்கும் அவர்களுக்கும் தீராப்பகை. இந்துக்களென்றால், பிராமணனைப்போல சமஸ்கிருதம் விரும்புவர்; நல்ல வேளையில் இருந்தால் பிராமணப் பெண்களையும் பிற உயர்ஜாதிப்பெண்களையுமே காதலிப்பர். முக்கால்வாசி பள்ளர்கள் கிருத்துவர்கள். ஆனால், அட்டவணையில் இந்துக்கள். இட ஒதுக்கீடு ஆதாயத்தைப்பெற.

      இவர்கள் நீங்கள் சொன்னது போல அருந்ததியர், பறையரோடு மண சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை.

      (நான் எழுதியவை பிழையென்றால், ஒரு பள்ளர் இனத்தவர் இங்கே விளக்கலாம். ஆனால் தேவேந்திர குலத்தவர் விளக்க வேண்டாம். தேவேந்திர குலத்தவன் என்று தன்னை அழைத்துக்கொண்டாலே போதும்: நான் எழுதிய்வைகளை ஒத்துக்கொண்டதாகத்தான் வரும்.

      I am open to correction 🙂

      • “அருந்ததியர்களும் பறையர்களும் உறவினர்கள் போலத்தான் தென் மாவட்டங்களில். ஒரு அருந்ததிப் பெண்ணைக் காதலித்து மணந்தால் அது ஒரு பெரிய பேச்சாகாது.”

        இது உண்மைக்கு புறம்பான வாதம். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பறையர்கள் தங்களை உயர்வாகத்தான் கருதுகிறார்கள். அருந்ததியர்களை மட்டமாகவும் கருதுகிறார்கள். பால சுந்தர வினாயகம் பல விஷயங்களை திரித்து உண்மைக்கு மாறாக பதிவிட்டுள்ளார்.

  28. தலித் என்றால் தங்கள் வாழ்விடங்களில் எந்த சுகாதார உணர்வும் இல்லாமல் இருப்பவர்கள், சாலைகள் போன்ற பொது இடங்களில் எந்த குற்றவுணர்வும் இல்லாமல் மலஜலம் கழிப்பதில் முன்னிருப்பவர்கள், கும்பலாக சேர்ந்து கொண்டு அராஜகம் செய்பவர்கள், தனி நபர்களின் நிலத்தில் அராஜகம் செய்பவர்கள், தனி நபர்களின் சொத்துக்களை அபகரிப்பு செய்பவர்கள், உயர் சாதி பெண்பிள்ளைகளை கவர்ந்து அதை தங்கள் சாதியின் வெற்றியாக நினைப்பவர்கள், கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடித்தனம் செய்பவர்கள், எப்போதும் போதையில் திரிபவர்கள், கும்பலாக மட்டமான பழக்கவழக்கங்களும் கலாச்சாரமும் கொண்டவர்கள் என்னும் பிம்பமே பொது புத்தியில் நிறைந்து இருக்கிறது. இந்த பிம்பம் மாறாத வரை தமிழகத்தில் சாதி ஒழிப்பு என்பது கானல் நீர் தான்.

  29. குலச்சாமி,

    மிகவும் தவறான வாதம். முதலில் நீங்களும் அவர்களும் ஒரே மனித இனம் என்று உணருங்கள். நீங்களோ, அல்லது அவர்களோ வேறு வேறு கிரகத்திலிருந்து வரவில்லை.

    சுகாதார உணர்வு இல்லாதவர்கள் என்று நீங்கள் சொல்பவர்கள் கால்கள் சேற்றில் பதிந்தால் தான் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும்.

    சொத்து அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம், குடிபோதை இது நம் நாட்டின் எல்லா சாதியினரும் செய்து வரும் தவறு தானே. ஏன் தலித் மற்றும் செய்கிறார்கள் என்ற போலி பிம்பத்தை நீங்கள் தோற்றுவிக்க நினைக்கிறீர்கள்?

    சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்வது தவறென்றால் நம்மை ஆண்ட மன்னர்கள் எல்லோரும் அந்த தவறை செய்தவர்கள் தான் அல்லவா?

    உங்களுக்கு மிக மிக வேண்டப்பட்ட ஒரு சொந்தத்திற்கு, நீங்கள் உயிராக நேசிக்கும் ஒரு உயிருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அவசரமாக இரத்தம் தேவை என்ற நிலையில் தலித் இரத்தம் வேண்டாம், ஆதிக்க சாதி ரத்தம் மட்டும் தான் தர வேண்டும் என்று போர்டு மாட்டிக்கொண்டு அருகில் உட்கார்ந்திருப்பீர்களா? அவர்கள் உயிர் போனாலும் பரவாயில்லை போகட்டும், ஆனால் தலித் இரத்தம் கலக்கக்கூடாது என்று விட்டு விடுவீர்களா?

  30. நூறு ஆண்டுகளுக்கு முன் பஞ்சம் பிழைப்பதற்காக அந்த்ராவில் இருந்து தமிழகத்திற்கு வந்தார்கள்.. அவர்கள் ஆரம்பத்தில் செருப்பு தைக்கும் தொழில் மட்டுமே செய்தார்கள். பின்பு அவர்களுடைய வறுமையை பார்த்து அவர்களுக்காக இறக்க பட்டு தான் அவர்களை நிலங்களில் வேலை செய்ய அனுமதித்தார் கள்.. கௌண்டர்கள்.. ஆனால் அவர்களுடைய நிலங்களையே அபகரிக்க நினைத்தால் யாரால் ஏற்று கொள்ள முடியும். மற்ற மாநிலங்களிலும் சரி தமிழகத்தில் தென்மாவட்டகள் மற்றும் வட மாவட்டங்களில் உள்ள நில கிழார்களும் சரி தங்கள் நிலங்களில் வேலை செய்ய வேறு வேறு சாதிக்காரகளை வைத்து இருப்பார்கள். ஆனால் அண்மை காலம் வரை மற்ற சாதிகளை தங்கள் நிலங்களில் வேலைசெய்ய கவுண்டர்கள் அனுமதிக்கவில்லை. மற்ற சாதிகளுக்கு தராத வாய்ப்பை, தலித்களுக்கு மட்டும் தந்து அவர்களுக்கு வாழ வலி செய்து தந்தவர்கள் கவுண்டர்கள் தான். கவுண்டர்களுக்கும் இந்த கொங்கு மண்ணிற்கும் உள்ள பிணைப்பு வேறு மாதிரியானது. அபரிமிதமான பற்று உடையது தங்கள் நிலங்களில் தாங்களே தான் உழைக்க வேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள்.சிந்தனை என்பதை விட பற்று பக்தி என்று கூட சொல்லலாம். அந்த நிலங்களை அவர்களிடம் இருந்து பறிக்க நினைத்தால் அதை எப்படி சரி என்று ஏற்று கொள்வார்கள். ஏன் பெருமாள் முருகனே கூட கவுண்டர்களை பற்றி இழிவாக கதை எழுதினாலும் அவரே கூட இந்த கொங்கு மண் மீது தனக்கு பாசம் உள்ளது என்று பல இடங்களில் பேசியும் எழுதியும் உள்ளார். அவரால் கூட மற்ற கவுண்டனுகளை போலவே இந்த மண் மீதான பாசத்தை விட்டுவிட முடியவில்லை

    • ///ஆனால் அவர்களுடைய நிலங்களையே அபகரிக்க நினைத்தால் யாரால் ஏற்று கொள்ள முடியும். …//

      100000%%%%%%%% Wrong…Wrong….

  31. நான் வெளியிட்ட கருத்துக்களை வெளியிடாததை வண்மையாக கண்டிக்கிறேன். இந்த தளம் ஒரு தரப்பானது என்பதை இதன் மூலம் மீண்டும் ஒரு முறை உறுதி செய்கிறது.

  32. கொங்கு நாட்டிலே கவுண்டர்களையும் நீங்கள் சொல்லும் தலித்களையும் தவிர்த்து நூறுக்கும் மேற்பட்ட சாதியினர் உள்ளனர். அதில் பெரும்பாலான சாதிக்கரர்களுக்கு கவுண்டர்கள் என்றாலே ஒரு வாஞ்சை தான். எங்கள் வீடுக்கு பக்கத்திலே நாயக்கர் சமூக பெண்மணி ஒருவர் இருந்தார். இது பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அவருடைய மகன் போள்ளசியிலே படித்து விட்டு பெங்களுரிலே வேலை செய்து கொண்டு இருந்தான். அப்பொழுது அந்த அம்மா எங்கள் வீட்டிலே வந்து சொல்வர். என் மகனுடைய நண்பர்கள் எல்லோருமே கவுண்டர்கள் தான். லீவுக்கு வீட்டுக்கு வருவதை விட நண்பர்வீடுக்கு சென்று விட்டு தான் வீட்டுக்கு வருவான் என்பார் . அப்பொழுது அந்த அம்மா முகத்திலே ஒரு ஒளிவட்டமே தெரியும். இன்று அந்த இளைஞர் குடும்பத்தோடு வெளிநாட்டிலே செட்டில் ஆகி விட்டார் என்பது வேற விஷயம். இன்னொருவர் எங்கள் தெருவிலே இருந்தார். அவர் ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர் அவர் ஒரு பிற்படுத்த பட்ட சமுகத்தை சார்ந்தவர் தான். அவருடைய மகள் ஒரு கவுண்டர் இளைஞரை சென்னையிலே விரும்பினார். பெற்றோர் விருபத்தொடு அந்த திருமணம் நடந்தது. ஆனால் அதற்க்கு பிறகு அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் கவுண்டர்களுக்கு சம்பந்தியாகி விட்டோம் என்று ஒரே பெருமை தான் பேசிகொண்டிருந்தார்கள்.
    இது போல இன்னும் நிறைய உதாரணகள் சொல்ல முடியும். நான் முன்பு சொன்னது போல கவுண்டர் இலைகர்களுக்கு தேவை என்றால் அவர்களை மதிக்கிரவர்களுடைய குடும்பங்களில் திருமணம் செய்து விட்டு போகிறார்கள். அவர்களையும் அவர்களுடைய சமூகத்தையும் இழிவு படுத்து கிரவர்களோடு சம்பந்தம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் கவுண்டர் இளைஞர்களுக்கு இல்லை

    • சாதிபெருமை பேசிபேசியே ஒன்னும் இல்லாம போனது போதும் விக்கி . இன்னிக்கி கவுண்டன் காட்டை குறையா போட்டுட்டு அவனை சார்ந்து இருக்கும் ஆளுக்கார குடிகளையும் வேளையில் இருந்து துரத்திட்டு தன்னுட்டு பையன்களை பக்கத்து டவுனுக்கு கடைகளுக்கு வேலையாள சேர்த்துட்டு வெளங்காம இருக்காங்க ! என்ன 100க்கு 10 கவுண்டன்கள வேண்டுமானால் ரிக்கு வண்டி மாதிரி பிசினஸ் செய்யராங்க ! இவ்வளவு சாதிபெருமை பேசுறிங்களே விக்கி …., மீதி இருக்கும் 90 பேரும் என்ன நிலையில் இருக்காங்க என்று விக்கிக்கு தெரியுமா ? இதை எல்லாம் பார்க்கும் போது காட்டவித்து கல்லு குடித்தாலும் கவுண்டன் கவுண்டன் தான் என்ற கவுண்டமணியின் நகை சுவை தான் நினைவுக்கு வருகின்றது. பொச்சசையை கழுவ கூட காட்டு கெணத்துல தண்ணிஇல்லை எதுக்கு விக்கி சாதிபெரும பேச்சு. பொழக்கும் வழியை பார்ப்போமா ?

  33. மகாபாரதம் கதையில் சந்தனுவின் மகன் விசித்திரவீரியன் இறந்தபின் அவனின் இரு மனைவியரும் வாரிசுக்காக வியாசர் என்ற முனிவருடன் கூடி பாண்டு & திருதராஷ்டிரன் ஆகயோரை பெற்றதாக உள்ளது. இது பெண்களை இழிவு படுத்துகிறது என்று ஏன் இந்த யோக்கியர்கள் போராவில்லை

  34. //பொழக்கும் வழியை பார்ப்போமா ?

    நானும் கூட இன்னும் கொஞ்சம் கருத்துக்களை எழுதி விட்டு, அதே கருத்தை தான் கடைசியாக எழுதி என் கருத்து பதிவை நிறைவு செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் நீங்கள் முந்திகொண்டுவிடீர்கள். அதனால் இதற்க்கு மேல் நான் எழுதுவதற்கு தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் வினவு பத்திரிக்கையே அந்த கருத்தை சொல்லிவிட்டது. நீங்கள் மட்டுமல்ல, இன்னைக்கு தமிழக மக்கள் எல்லோரும் நினைப்பதும் அது தான்.இன்னைக்கு எல்லோரும் புள்ள குட்டிய படிக்க வச்சு முன்னேற வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். சாதிவெறி சாதிவெறி என்று உங்களுக்குள்ளும் சாதி வெறியை நிறைய ஏற்றி கொண்டு மற்றவர்களுக்கும் அதனை ஏற்ற முயற்சி செய்யாதீர்கள். நீங்களும் மற்ற சாதிக்காரனோடு சண்டை போடுவதையும், அவனை இழிவு படுத்தி கட்டுரை எழுதுவதையும் விட்டுவிட்டு அராசங்கம் தருகிற வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுங்கள். (வினாவுக்கு உடனே தன்னுடைய சாதி வெறியை முழுவதுமாக நீக்குவது சாத்தியம் இல்லை என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்ள பாருங்கள். இல்லாவிட்டால் வினாவுக்கும் சரி வினவு வாசகர்களுக்கும் சரி அறுபது எழுபது வயதில் வர வேண்டிய BP சுகர் எல்லாம் இந்த வயசுலையே வருவதற்கு வாய்ப்பு ஏற்படும)

  35. திரு. தமிழ், திரு.சிவப்பு மற்றும் திருமதி/செல்வி .சுசீலா…..

    தயவு செய்து பெண்களை குறிக்கும் இடத்தில் “கருமுட்டை” என்கிற சொல்லை தவிர்க்குமாறு மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்தச் சொல் ஏதோ பெண்களை இழிவு படுத்துவதுப் போல் உள்ளது, ஆகவே மேற்கூறிய சொல்லை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  36. மனோகரா,

    உங்களின் இந்த உதாரணம் எப்படி இங்கு பேசப்படும் மாதொருபாகன் கதைக்குப் பொருந்துகிறது? விசித்திரவீரியன் இறந்த பிறகு, அவனது இருமனைவியரும் வாரிசுக்காக வியாசருடன் கூடியதும், கணவன் உயிரோடிருக்கும் போது, கவுண்டத் தமிழச்சிகள் ஊர், பெயர் தெரியாதவனுடன் உறவு கொண்டனர் என்று கதை புனைந்த அபத்தத்துக்கும் எந்தவித தொடர்புமிருப்பதாக அல்லது அவற்றை வெறும் பேச்சுக்காகவேனும் ஒப்பிடலாமென எனக்குத் தெரியவில்லை. ஆகவே தயவு செய்து விளக்கவும். 🙂

  37. ///சாதிபெருமை பேசிபேசியே ஒன்னும் இல்லாம போனது போதும் விக்கி . இன்னிக்கி கவுண்டன் காட்டை குறையா போட்டுட்டு அவனை சார்ந்து இருக்கும் ஆளுக்கார குடிகளையும் வேளையில் இருந்து துரத்திட்டு தன்னுட்டு பையன்களை பக்கத்து டவுனுக்கு கடைகளுக்கு வேலையாள சேர்த்துட்டு வெளங்காம இருக்காங்க//// இன்னைக்கு ஒரு பெண் கூலியாலுக்கு 200 ரூ,,ஆணுக்கு கூலி250 ரூ,,,,பருத்தி விலை ரூ 35 /கிலொ,,,ஒரு ஆள் அருவடை செய்யும்பருத்தி அளவு 8 கிலொ.ஆக் மொத்தம் அருவடை செய்த பருத்தியின் மதிப்பு 280 ரூ கூலி 225 ,விவசாயிக்கு கிடைப்பது வெரும் 40ரூ,,இதில் அவரின் உழைப்பு, அவர் போட்ட மூலதன்ம்,ப்ருத்தி சந்தைக்கு எடுத்து செல்ல போக்கு வரத்து செலவு எல்லாம் அடக்கம்,,,,அடுத்தவன் பொச்சில் மலம் இருக்கு என்று சொல்லும் முன் ,உன் பொச்சை ஒழுங்கா கழுவுப்பா தமிழ்!!!!!

  38. //சொந்தப் பெயரில் எழுத தைரியமில்லாத பேடிகள் எழுதுவது தலையில்லாத முண்டஙகளின் அம்மண நடனஙகள். ஓரு பெருமாள் முருகனை விரட்டி விட்டால், ம்…….ம்….. மொத்த தமிழனும் செத்தா போனான்…. வருவான் இன்னொருவன் ஒரு கையில் பறையுடனும், இன்னொரு கையில் ஓலமிட்ட கும்பலின் தலையுடனும். – மருது பாண்டியன், பத்திரிகையாள்ன்//// வாப்பா வா,,,அருவாளுடன் வரவேற்க த்யாராக இருக்கோம்!!!!!

  39. வினவு தோழர்களே,

    பெருமாள் பிரச்சனை குறித்த கட்டுரைத்தொடரில் மூன்றாவது பாகத்தில் “தொடரும்” என்று போட்டிருக்கிறது. ஆனால், அடுத்த பாகம் இன்னும் வெளிவரவில்லை.

    கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் கவுண்டர் பெண்ணைக் காதலித்ததால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில், பெருமாள் முருகன் பிரச்சனை பற்றிய தொடர்கட்டுரையை தற்போது வெளியிட்டால், கொங்குவேளாள சாதிவெறியின் முழுப்பரிணாமத்தைப் புரிந்து கொள்ள அது உதவலாம்.

    நன்றி.

Leave a Reply to மாதேஸ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க