Saturday, March 6, 2021
முகப்பு கலை இலக்கிய விமரிசனங்கள் பெருமாள் முருகன் : பிரச்சினை சாதியா - பாலுறவா ? பாகம் 2

பெருமாள் முருகன் : பிரச்சினை சாதியா – பாலுறவா ? பாகம் 2

-

freedomfromsexualsinபாகம் ஒன்றைப் படிக்க இங்கே அழுத்தவும் – கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ?

கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ? பாகம் 2

சுய சாதிப் பெண்களை அடக்கி ஒடுக்குவதையே ஒழுக்கமென்று ஊளையிடும் ஆதிக்க சாதிவெறியர்களின் அயோக்கியத்தனத்தை முதல் பாகத்தில் பார்த்தோம்.

அடுத்து பிள்ளைப்பேறு வேண்டி கோவில் திருவிழாவில் உறவு கொள்ளும் சடங்கை மாபெரும் செக்ஸ் ‘மேளா’வாக கருதும் வாதங்களை பரிசீலிப்போம். ஆதிக்க சாதிகளைப் பொறுத்த வரை அந்த ‘மேளா’ தத்தமது ஆட்சிப் பிரதேசங்களுக்கே மட்டும் உரியவை. எல்லை தாண்டினால் விபச்சாரம். அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தால் அபச்சாரம், தீட்டு.

பெண்களை கவர்ச்சியாக நேரிலும், கதைகளிலும், திரைப்படங்களிலும் பார்ப்பதும், கிசுகிசுக்களை ரசிப்பதும் இங்கே ஊடகங்களால் நிலை நிறுத்தப்பட்ட ஒரு ‘ரசனை’. அந்த ரசனைக்குரியவர்கள் வெளியே அப்படி இப்படி இருந்தாலும், வீட்டிற்குள்ளே அடக்கமாக இருப்பார்கள். அல்லது சாதிய சமூக விதிகளைத் தாண்டி ஜாலிக்காக மட்டும் காதலிப்பார்கள். கல்யாணத்தை மட்டும் வீட்டார் விருப்பப்படி செய்வார்கள். இந்த போலித்தனத்தின் படி கோவில் திருவிழா ஒன்று கூடலை இவர்கள் உள்ளுக்குள்ளே ரசிப்பார்கள். ஆனால் அது தங்களது ஊராக இருக்கக் கூடாது. ஆகவே இது ஒழுக்கக் கேடு.

பின்நவீனத்துவத்தின்படி இந்த ஒன்று கூடல் பல்வேறு மக்கள் குழுக்களில் இருந்த, இருக்கும் ‘கார்னிவல்’ கொண்டாட்டம். அடக்கப்பட்ட பாலியல் உறவுகளில் வெந்து நோகும் மக்கள் தணித்துக் கொள்ளும் ஒரு கலாச்சார நடவடிக்கை.

இந்த பார்வைகள் சரியா? சாதிய சமூகத்தின் கட்டுமானத்திற்கும் பாலியல் குறித்த சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கும் உள்ள உறவு என்ன? இந்த கேள்விகளை இந்த நாவலின் படி நாம் எப்படி புரிந்து கொள்வது?

“மாதொரு பாகன்” நாவலில் திருவிழா ஒன்று கூடலை படிமப்படுத்தும் நாவலாசிரியர் “ஆதி மனிதன் தன்னைக் கண்டடைகிறான்” என்று குறிப்பிடுகிறார். திருவிழாவிற்கு கூட வந்த அம்மாவை பிரிந்த பிறகு தனக்கென இணை தேடுகிறாள் நாயகி பொன்னா.

ஊர்க்காரர்கள் இருக்கிறார்களா, தெரிந்த முகங்கள் தென்படுகிறதா என்று தயங்கிச் செல்கிறாள். இறுதியில் முகங்களற்ற மனித சமுத்திரத்தில் ஒரு புராதானத் தாய் போல குழந்தைகளை பெறும் மாதாவிற்கு முகங்கள் எதற்கு என்பதாக பெண்ணை பிரிக்கும் குழு ரீதியான சமூக நிலை மறந்து வேறுபாடுகளற்ற மனித பொது நிலையை அடைகிறாள். அப்போது அவளது கணவன் காளியை மணமுடிக்கும் முன் வந்த முதல் காதல் இளைஞனெல்லாம் நினைவில் வந்து போகிறான்.

பெருமாள் முருகன் குறிப்பிட்டிருப்பது போல இது ஆதிகால மனிதன் தன்னை கண்டடைதல் அல்ல. இதன் பிரச்சினை வேறு. இதே நாவலில் சொத்துடமை, சுய சாதி ஏமாற்றல்கள், சொத்தைக் காக்க குழந்தைகள், வாரிசுகள் இல்லாதவர்களுக்கு சொத்து இல்லை என்று பல்வேறு கிளைகள் மூலம் ஆசிரியர் பேசியிருந்தாலும் பேசத்தவறிய, பேச வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது.

நாவலின் இறுதியில் காளி தனது மனைவி அப்படி ஒன்று கூடலுக்கு சென்றதை சீரணிக்க முடியாமல் திணறுகிறான். ஒரு வெறுப்புணர்வு வளர்கிறது. இதற்கு குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. அந்த தம்பதியினர் மனதளவில்  பிரிந்து விடுவார்கள் என்பதாக நாவலின் உள்ளோட்டம் ஒரு அறிகுறியைக் காட்டுகிறது.

சரி அப்படி பிரிந்து போனால்தான் என்ன என்று சட்டென்று கேட்க முடியாது. அதை நிறைவேற்றும் நிலை இருந்தால் இந்த நாவலுக்கோ இல்லை திருச்செங்கோடு கவுண்டர்கள் போராட்டத்திற்கோ தேவையே இருந்திருக்காது.

இந்த நாவலின் முக்கால் பாகம் வரை காளியும், பொன்னாவும் மனமொத்த காதலர்களாகவே இருக்கிறார்கள். அப்படி இருக்கவிடாத படி உடமைச் சமூகமும், அதன் சாதிய நியாயங்களும் அச்சுறுத்துகின்றன.

வேறு வகையில் சொன்னால் ஒன்று கூடலுக்கு செல்லும் பொன்னாவிற்கு அது நிச்சயம் ஒரு விடுதலை உணர்வையோ இல்லை சுதந்திர பாலுறவு திளைப்பையோ அளிக்கவே முடியாது. முன்பின் தெரியாத ஆணுடன், விருப்பம் விருப்பமின்மையைத் தாண்டி ஜடம் போல தன்னுடலை ஒப்படைக்கும் ஒரு சம்பிரதாயமான முதலிரவை விட அர்த்த நாரீஸ்வர் கோவில் திருவிழாவின் இரவு கொடூரமாகவே இருந்திருக்கும்.

இந்த கதையின் நாயகன் சொல்வது போல அந்த இரவை முடித்துக் கொண்டு பிள்ளை பெற்றுக் கொண்டு வாழ்ந்தாலும் இதே சமூகம் தனது கேலிப் பேச்சையும், குத்திக் காட்டலையும் விட்டு விடாது. சொல்லப்போனால் அது முன்னிலும் அதிக முள்ளாகவே குத்தும். அதற்கு ஆர்ப்பாட்டமான பேச்சு தேவையில்லை. ஒரு பார்வை போதும். இந்த எதிர்கால துன்பங்கள் தம்பதியினர் இருவருக்கும் தெரியும். ஒரு உரையாடலில் காளியும் அதை கோடிட்டுக் காட்டுகிறான்.

முதல் பாகத்தில் தரப்பட்ட கிராமத்து உண்மைச் சம்பவங்களை ஆய்ந்து பார்க்கையில் அந்தக் கதைகளில் வரும் ஆண், பெண் எவருக்கும் எந்த கள்ள உறவும் எந்த பேரானந்தத்தையும் அளித்துவிடவில்லை. மேலும் குழந்தை பேறுக்காக உறவு கொண்ட ஆண்கள் பலரும் அதை ஒரு கடமையாக அல்லது விதிவிலக்கான ஒரு தருணமாக கடந்து போனார்களே அன்றி அதன் பிறகு அதை ஒரு அந்தப்புர இலவச வாய்ப்பாக தொடரவில்லை – முடியாது.

காரணம் கிராமங்களில் அவர்களது மொத்த சாதி சமூக வாழ்க்கையில் பாலியல் தருணங்களின் முக்கியத்துவம் அந்த அளவில்தான் இருக்கிறது. சொத்துடமை, கௌரவம், சமூக அந்தஸ்தை தாண்டி ஒரு ஷகிலா படம் போலவெல்லாம் இல்லவே இல்லை. சரியாகச் சொன்னால் அங்கே பாலியலில் இருப்பது காதலல்ல, கௌரவம் எனும் போலித்தனமே.

இதை இப்படி ஒரு படிமமாக சொல்லிப் பார்க்கலாமா? காதல், பாலியல் பிரச்சினைகளுக்காக அதன் உரிமைகளுக்காக நாம் வெளிப்படையாக போடும் சண்டைதான் தேவையே அன்றி ஒளிந்து போடும் கொரில்லா தாக்குதல்கள் அல்ல. கொரில்லா தாக்குதல்களில் உடனடி தப்பித்தல் அல்லது தற்காலிக தாக்குதல்தான் இருக்கும், இறுதியான நிலையான வெற்றியல்ல.

பாலியல் உறவு கொள்ளும் போது மனிதர்கள் அந்த கணத்தில் அதற்கு மட்டும் உண்மையாக உணர்ச்சி தளத்தில் ஈடுபட்டாலும் அடுத்த கணமே அந்த உறவை கட்டுப்படுத்தும் சமூக சட்டங்கள் அச்சுறுத்தும். ஆக சட்டங்களை மாற்றாத வரை வெறுமனே பாலுணர்ச்சிக்கான தளத்தில் நின்று மட்டும் பார்ப்பது பாரிய பிழை.

வெளிப்படையான ஜனநாயக வெளிதான் இந்தப் பிரச்சனைகளுக்கான மாற்றத்தை தோற்றுவிக்கும். மாறாக அதை மறுத்து மறைத்து செய்யப்படும் இந்த ஏற்பாடுகள் சாதியை மீறாமலும், கௌரவத்தை குன்றாமலும் சமூகம் கண்டடைந்த குறுக்கு வழிகள். காதலும் விவாகரத்தும் வெளிப்படையாக இருக்கும் வரை திருட்டுத்தனங்களுக்கு தேவை இல்லை. ஆசிரியர் இந்தப் பார்வையில் நாவலை படைக்கவில்லை என்றாலும் அவர் படைத்த நாவலை அசைபோட்டு பார்க்கையில் அதை கண்டடைய முடியும்.

நாவலில் பழங்குடி பெண் பாவத்தம்மாவை நான்கு கவுண்டர் இளைஞர்கள் வன்புணர்வு செய்து கொல்கிறார்கள். பிறகு பயந்து ஊரை விட்டு ஓடுகிறார்கள். அந்த பெண் பாவத்தம்மாதான் சாமியாக அந்த ஊரில் நின்று பிள்ளைப்பேறு இல்லாத மக்களை பழிவாங்குகிறாள். அவளுக்கு படையலிட்டு நிவாரணம் தேடுகிறார்கள் மக்கள். அர்த்தநாரிஸ்வரையே பாவத்தம்மாவாக உருவகப்படுத்திக் கொண்டு வணங்கும் மக்களை கோவிலின் பார்ப்பன பூசாரி எதுவும் தெரியாத ஜனங்கள் என்று விளக்குகிறார். பொன்னா போன்ற பெண்களோ  பாவத்தம்மாவையே நினைத்து வேண்டுகிறார்கள்.

கோவில், ஐதீகம், தொன்மம், ஆன்மீகம், சடங்கு, வழக்கு முதலியவற்றை அடக்கப்படும் சமூக உறவுகளிலிருக்கும் மக்களின் ஏக்கப் பெருமூச்சாக உணர்வதற்கும், விடுதலைப் பரவசமாக பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. மக்களின் வாழ்க்கை போராட்டத்தை ஒரு மையமான அச்சுதான் நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை கம்யூனிஸ்டுகள் தவிர மற்றவர்கள் அறிந்ததுமில்லை, ஏற்பதுமில்லை. இந்த நாவலில் அது முற்றிலும் நாட்டுப்புற மக்களின் அறியாமை கலந்த அனுபவத்திலிருந்து மட்டும் பார்க்கிறது. அதுதானே யதார்த்தம் என்று கேட்கலாம்.

மாதொருபாகன் நாவல் 70 ஆண்டுகளுக்கு முந்தைய களத்தில் நடந்தாலும், நாயகன் காளியே குடுமி, கோவணம் என்ற அலங்காரங்களைக் கொண்டிருந்தாலும் பேச்சு, உடல் மொழி, மௌன மொழி அனைத்தும் இன்றைய காலகட்டத்தை நினைவுபடுத்துகிறது. கிராமங்களில் இருக்கும் நேரிடையான இயல்பான போலித்தனமற்ற இயக்கமாக இது இல்லை. எனினும் ஒரு வரலாற்று நாவலில் இன்றைய வாழ்க்கையிலிருந்து கூட பார்க்கலாம், உரையாடலை எழுதலாம். பிரச்சினை இல்லை. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை தொடரும் குழந்தையின்மை எனும் புள்ளியை இணைத்து காலங்கடந்த கோலாமாக்குவதற்கு இன்னும் கூர்மையாக பயணித்திருக்க வேண்டும்.

சாமிகளை எளிமையாக தொழும் மக்களின் இயல்பை சித்தரிக்கும் போது அந்த ஏக்கப் பெருமூச்சின் பரிமாணங்களை, கேள்விகளை, ஐயங்களை விரிப்பதன் மூலம் இது வெறுமனே புராதனம், தொன்மம் மட்டுமல்ல எனும் அடையாள மயக்கத்திலிருந்து வெளியே வர முடியும். ஏனெனில் இதே தொன்மம்தான் இன்று திருச்செங்கோடு கவுண்டர்களின் எங்கள் கோவில் திருவிழா என்று பேசவும் செய்கிறது.

குழந்தைப் பேறின்மை, சாதி, சமூகப் பிரச்சினைகைள விளக்கிவிட்டு, திருவிழா ஒன்று கூடல் அந்தக்கால சமூகம் கண்டுபிடித்திருக்கும் முற்போக்கான நடவடிக்கை என்கிறார் ஒரு அறிஞர். அந்த ஒன்று கூடுதல் எப்படி கூச்சமில்லாமல் நடந்திருக்க முடியும் என்று இன்றைய காலகட்டத்திலிருந்து பார்க்க கூடாது, அன்று மின் விளக்குகளே இல்லை, கும்மிருட்டுதான் என்றும் அவர் டெக்னிக்கலாக ஏற்க வைக்கிறார்.

விளக்கும், தொழிற்நுட்பமுமா பிரச்சினை? எம்.ஆர்.ஐ ஸ்கேன் வந்த பிறகு பெண் சிசுக் கொலை, பெண் சிசு தவிர்ப்பு – கலைப்பாக மாறிவிடவில்லையா? நல்ல நேரம் பார்த்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதில்லைய்யா? இல்லை நாளையே குழந்தைப் பேறின்மைக்கு செயற்கை கருவூட்டலுக்கான விந்து வங்கியில் சாதிக்கொரு வங்கி வராதா?

மேலே சொன்னது போல சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் பயணத்திற்கு இந்த தொன்மங்களை அளவு கடந்து பயன்படுத்துவது சரியல்ல. ஆனால் சமூக மாற்றத்தின் விதியை வர்க்கம் எனும் மையப் புள்ளியிலிருந்து விலக்கி அடையாளப் போராட்டம் எனும் சிதறுண்ட துளிகளாக மாற்றுவதை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் திட்டமிட்டு செய்கின்றன.

hindu_mythologyபெருமாள் முருகனும் கூட இந்த நாவலை எழுதுவதற்கும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் ரத்தன் டாடா மற்றும் பல முதலாளிகளைப் புரவலராகக் கொண்ட கலைகளுக்கான இந்திய மையம் எனும் தொண்டு நிறுவனத்தின் உதவித் தொகையை பெற்றிருக்கிறார். முன்னுரையிலும் அதைக் குறிப்பிடுகிறார். எல்லா விதங்களிலும் இது தவறு என்பதோடு ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்கள் உருவாக்கும் ஆய்வுக் கட்டமைப்பை சுயமாக ஏற்றுக் கொண்டு செயல்படும் சுதந்திரம் இருப்பதாக கருதுவது ஒரு ஏமாற்று.

‘இத்தகைய ஆய்வுகளுக்கான நல்கையை ஏற்றுக் கொண்டு முன்னுரையில் ஒரு நன்றி சொன்னால் போதும், அதை பயன்படுத்திக் கொண்டு நாம் வேறு ஏதாவது கூட எழுதலாம்’ என்கிறார் மற்றுமொரு அறிஞர். ‘நல்கை பணம் வாங்கிவிட்டு நாம் என்ன செய்தோம் என 2 பக்கம் எழுதிக் கொடுத்தால் போதும், அதற்கு மேல் அவர்கள் கேட்கமாட்டார்கள்’ என்கிறார். கோடிசுரவனாகவே இருந்தாலும் இப்படி “கிராண்ட்” வாங்குவது தனியுரிமையாம். அதை விசாரிப்பது தனிநபரின் வருமானத்தை எட்டிப் பார்க்கும் அநாகரிகமாம்.

இதன்படி வருமானம் பறிக்கப்பட்ட ஏழைகளுக்காக போராடுவது கூட அநாகரிகம்தான். இனவரைவியல் தொடங்கி பல்வேறு துறைகளில் உலகமெங்கும் நடந்து வரும் ஆய்வுகளை மேற்கத்திய நாடுகள் ஆவணப்படுத்திக் கொள்ள இப்படி படைப்பாளிகளையும், அறிஞர்களையும் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த ஆய்வுகள், ஆவணங்கள் அவர்களுக்கு எப்போது எப்படி பயன்படுகிறது என்பதை நம்மால் இப்போது கண்டு சொல்ல முடியாது. ஆனால் நம்முடைய எழுத்தாளர்கள் இதனால் பல்வேறு முறைகளில் வடிவமைக்கப்படுகிறார்கள் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறோம்.

சொல்லவரும் கருத்து சரியாக இருந்தாலும், அதை ஃபோர்டு பவுண்டேஷன், டாடா, ஜெர்மன் நிதி உதவியோடு சொல்லும் போது கருத்தின் தார்மீக அறம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியன் புகலென்ன நீதி என்று பார்ப்பனியத்தை முட்டுக் கொடுக்கும் சக்திகளுக்கு உதவியும் செய்கிறது.

சுற்று வட்டார ஊர்களில் சாமிக்கு பிறந்த பிள்ளை, சாமிக் குழந்தை என்று புழங்கும் பெயர்களை ஏதோ சாமிக்கு நேர்ந்து பெற்ற குழந்தைகள் என்று கருதியதாகவும், பின்னரே இதற்கும் கோவில் திருவிழாவிற்கும் உள்ள தொடர்பை கண்டறிந்து அதன் பின்னே இந்த நாவலை அசை போட்டு எழுதியதாகவும் பெருமாள் முருகன் கூறியிருக்கிறார்.

என்ஜிவோக்கள் மற்றும் பின்நவீனத்துவத்தின் செல்வாக்கில் யோசிக்கும் படைப்பாளிகள் இந்த துவக்கத்தை வெறும் அடையாளங்கள், தொன்மங்கள், புதிய கண்டுபிடிப்புகள் என்று ஒரு மையச்சரடு அல்லது ஆழமான சமூக இயக்கத்தின் ஆணி வேரை விடுத்து யோசிக்கிறார்கள்.

இந்த நாவலில் கூட பிள்ளைப் பேறின் அனைத்து பரிமாணங்களும் அலசப்பட்டிருந்தாலும், உணர்ச்சி என்ற அளவில் அவை ஒன்றையே வேறு வேறு காட்சிகளில் கூறியன கூறியலாக வந்து போகின்றன. பிள்ளைப் பேறின்மை என்பதன் சாதி, பால், சொத்துடமை, ஆன்மீகம், தொன்மம் ஆகிய அனைத்தும் என்ன விதமான சமூக கூட்டியக்கத்தின் விதிகளில் எப்படியெல்லாம் ஊடுருவியிருக்கின்றன என்பதை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு இந்த நாவல் உதவுகிறது.

அதில்தான் இந்த நாவலின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. அதை அங்கீகரிக்க “மாதொருபாகன்” மேல் ஆத்திரம் கொண்டிருக்கும் கொங்கு வேளாளர்கள் எனும் சாதியின் பலமான இருப்பை நாம் அறிய வேண்டும்.

–  தொடரும்.

கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ? பாகம் 1

பெருமாள் முருகனுக்கு தடை போட்ட கவுண்டர் ஆர்.எஸ்.எஸ் கூட்டணி பாகம் 3

 1. ஒருபக்கம் போர்ட் நிறுவனத்தின் , டாட்டா நிறுவனத்தின் கொடுங்கரங்கள் ஏழை எளிய இந்திய மக்களின் வாழ்வு ஆதரங்களை அபகரிக்க மறுபக்கம் பெமு போன்ற முன்னாள் புரட்சியாளர்கள் அந்நிறுவனங்க்ளுடன் சமரசம் செய்துகொள்ள அதை பார்த்துக்கொண்டு எல்லாம் சும்மா இருக்க முடியாது.

  காசு பெறுவது என்பதற்கு நாகரிகமான வார்த்தை நல்கை என்று நான் அறிவேன் . ஆனால் மக்கள் வாழ்வை அழிக்கும் டாட்டா ,போர்ட் போன்ற நிறுவனங்க்ளிடம் நல்கை பெறுவதை அநாகரிகமான வார்த்தையில் காசு பெறுவது என்று தானே கூற முடியும் ? நூறு கணக்கான ஏக்கர் விளைநிலங்களை போர்ட் அபகரிக்க , பல ஆயிரம் கோடி இந்திய இயற்க்கை வளங்கள் டாட்டா வால் கொள்ளை அடிக்கபட அதன் காரணமாக பழங்க்குடி மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டப்பட அத்தகைய கொள்ளையர்களிடம் இருந்து எழுத்தாளர்கள் பெறும் நல்கைக்கு காசு பெறுவது என்று தான் கூறமுடியும்
  ___________ !

  • வாசகர்களுக்கு,

   கவுண்ட ஆண்களும் மற்ற ஆண்களும் இரண்டாம் மனைவியைக் கட்டிக்கொள்வதைப்பற்றி நாம் அறிந்ததே. பெரும்பாலும் மனைவிக்கு தாய்மையின்மையைக் காரணம் காட்டி இது நடைபெறுகிறது. இந்த கதையிலும் அதைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். மணஉறவைத்தாண்டியும் ஆண்கள் பலர் வேறு வாய்ப்புகளையும் தேடுகிறார்கள். இதைப்பற்றி எல்லாம் பேசியதற்காக தமிழ் ஆண்களை இழிவு படுத்திவிட்டதாக யாரேனும் கூவினார்களா.

   கணவனுக்கு தந்தைமையின்மையைக் காரணம்காட்டி ஒரு பெண்ணும் இரண்டாம் கணவனைக் கட்டிக்கொள்ள முடியாமை பெண்களை இழிவு படுத்தும் முதன்மையான இழிவு. இது பெண் இனத்திற்கு நடத்தப்படும் பெரிய அநீதி.

   தாய்மையில்லா பெண்களை பல பெயர்களை சூட்டி அவர்களை சமூகத்தில் இயல்பாக பழக விடாமை மற்றொரு இழிவு. தந்தைமையின்மையுள்ள ஆண்களும் பெண்களின் தாய்மையில்லா நிலைக்கு காரணம் என்பதையும் மறுத்துவிட்டுத்தான் இது போன்ற இழிவுகள் பெண்களுக்கு இழைக்கப்படுகின்றன. இதற்கு பெண்களும் உடந்தையாக இருக்கும்படி ஆணாதிக்க சமூக அமைப்பு கொடூரமாக இருக்கிறு என்பது இன்னும் கொடுமை.

   இவற்றைப்பற்றி யெல்லாம் கவலைப்படாதவர்கள் இங்கே திரண்டு நிற்கிறார்கள். யாருக்கு சின்னபுத்தி?

   ஏதோ ஒரு காரணத்திற்காக கருவுறாத பெண்கள் தங்களுக்கு நேரவிருக்கும் கெடுகாலத்தைத் தவிர்த்துத்கொள்ள ஒரு மாற்று வழியை பயன்படுத்துகிறார்கள். இதுவும் பெரும்பாலும் கணவனுக்குத்தெரிந்தே தான் செய்யமுடியும். அவரும் தந்தைமையைப்பெற முடிகிறதால் ஒத்துக்கொள்கிறார். இந்த வழி சமூகமே வழங்கிய ஒரு ஏற்பாடு. இவற்றைப்பற்றி பேசுவது பெண்களை இழிவு படுத்துவது என்பது எவ்வளவு சின்னத்தனமான வாதம். இந்த வாதத்திற்கு பெண்கள் தங்கள் ‘middle finger’ஐத்தான் காட்டுவார்கள். அவர்களால் முடிந்தது அதுதான்.

   இன்று விந்து வங்கிகள் இருக்கின்றன. இவை யாரை இழிவு படுத்துகின்றன? ஆணையா பெண்ணையா?

 2. “மக்களின் வாழ்க்கை போராட்டத்தை ஒரு மையமான அச்சுதான் நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை கம்யூனிஸ்டுகள் தவிர மற்றவர்கள் அறிந்ததுமில்லை, ஏற்பதுமில்லை.”

  விமர்சனத்தினூடாக வரும் இந்த வரி நிதர்சனமான உண்மை.

  அந்த அச்சு பொருளாதாரக் கட்டமைப்பு மட்டும்தான் என்பது, அனைத்து சாதி, மத, இன, மொழி, தேசீயவாத பிற்போக்காளர்களுக்கும், பொதுவுடைமைவாதிகளை விட நன்கு தெரியும். இதை எளியமுறையில் எடுத்தியம்புதல்மட்டுமே சமூகமாற்றத்திற்கான ஒருவழிப்பாதை.

 3. மாதொருபாகனின் தொடர்சியாக அவர் எழுதிய இரு நாவல்களில் அர்த்த நாரியை கடந்த இருநாட்களில் படிக்க நேரம் கிடைத்தது . பெருமாள் முருகனின் இந்த கதை மாதொருபாகனின் முடிவில் இருந்து தொடங்குகிறது. கரட்டூர் திருவிழாவுக்கு ஏமாந்து “போன” பொன்னாவின் நிலையையும் ,காளியின் தற்கொலை முடிவையும் மையம் கொண்டு தொடங்குகிறது. அதற்கு பின் இருவர் வாழ்விலும் ஏற்பட்ட மனத்தடைகளை விவரித்து கொண்டு சதிராட்டம் போட்டுக்கொண்டு பயணிக்கின்றது இந்த நாவல். பெருமாள் முருகன் கூறுவது போன்று சுபமாக முடிந்த அவரின் நாவல் இதுவாக தான் இருக்க முடியும்

 4. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி இறைவனுடைய திரு பெயரை யும் ஒரு பிற்படுத்த பட்ட சமூகத்தையும் சேர்த்து இழிவு படுத்தி உள்ளார்கள்.. கடவுள் சிவன் இதற்க்கு பதில் கூறுவார் பொறுத்திருந்து பாருங்கள்… 🙂

 5. அமைதியாக உள்ளவர்களை சாதி வெறியர்களாக மாற்ற பார்க்கிறது வினவு .. அமைதியாக வாழ விரும்பும் நடு நிலையாளர்கள் சாதி அபிமாநிகலகவும், சாதி அபிமானிகளை சாதி வெறியார்கலாகவும் மாற்ற கூடிய தன்மை வினவு பத்திரிக்கைக்கு நிறையவே உள்ளது.. 🙂

 6. அன்பரே ! இதே போன்ற திருவிழா சேலம் மாவட்டம் மேட்டூர் அருகில் உள்ள வனவாசி என்னும் சிற்றூர் அருகில் ஒரு மலைக் கோவிலிலும்நடக்கிறது. தனக்கு குழந்தை வரம் தரும் ஆண்களை சென்றாயப்பெருமாளாகவே கருதிக்க்கொள்கிறார்கள் அப்பெண்கள். இது ஊரறிந்த விஷயம் ! இதைப் போய் பெரிய பிரச்சினை ஆக்குகின்றனர் ! எல்லாம் அந்த சொர்ணாக்கா க்ரூப் பி ஜே பி காரர்கள் அட்டூழியம்.

 7. உலகமுழுவதும் ஒழுக்க குறைபாடுகள் அனைத்து நாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. அதே போல் இந்தியாவிலும் பல இடங்களில் திருவிழாக்காலங்களில் மட்டும் அல்லாமல் பல சந்தர்ப்பங்களில் தவறுகள் நடக்கின்றன. இது போன்ற தவறுகள் இந்தியாவைப் பொருத்தமட்டில் மிகவும் குறைவு. சுமார் 5 சத்திற்கும் குறைவே. ஆனால் இந்த தவறை பெரிதுபடுத்தி சமுதாயத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த “வினவு” போன்ற இஸ்லாமிய ஆதரவு கூட்டங்கள் செயல்படுவதுதான் வேடிக்கை. இதில் எந்த ஜாதியும் மதமும் விதிவிலக்கில்லை. அனைவரும் இந்த சிறு சதவீதத்திற்குள் அடங்குகிறார்கள். ஆகையால் இதற்கு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே தவறு செய்கிறார்கள் என்பது மடமை. மனிதன் காட்டு மிரண்டிகாலத்தில் நடந்து கொண்டதை இப்போது எடுத்து சொல்லி மனிதனை பலிப்பது போல் உள்ளது. அது மட்டுமல்லாது இந்துக்களை குறை சொல்ல இதனை நல்ல வாய்ப்பாக இஸ்லாம் ஆதரவு இயங்கங்கள் எடுத்துக்கொண்டுள்ளன. இந்தியாவில் எந்த இடத்தில் எந்த ஜாதிகள் இது போன்ற தவறான நடவடிக்கைகள் இல்லாமல் இருக்கின்றன என்ற புள்ளிவிபரம் சொல்ல முடியுமா என்ன. அல்லது இஸ்லாமியத்திலும் கிருஸ்துவத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் இல்லை என்று கூற முடியுமா? அனைத்தை பிரிவு மக்களிடமும் சுமார் 5 சதவீத மக்களுக்கு குறைவாக தவறுகள் நடக்கின்றன என்பதுதான் உண்மை. இதனை பெரிதுபடுத்தி விளம்பரம் தேட வேண்டியதில்லை. அறிவியல் கண்டுபிடிப்பில் கூட 5 சதம் தவறு விழுகிறது.
  _____________
  இந்த எழுத்தாளர் எதனை அடிப்படையாக கொண்டு இதுபோன்ற நாவலை எழுதினார் என்று தெரியவில்லை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை குறிவைத்து சாடுவது சரியில்லை.
  பாரீசில் ஒரு ஆங்கில கார்டூன் பத்திரிக்கையை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டீர்கள் போலும். அதில் பணி புரிந்த 12 க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தார்களே அதனை ஏன் எதிர்க்க வில்லை. முஸ்லீம்களின் மனம் புண்படகூடாது என்பதற்காகவா? முருகனுக்கு எழுத்து சுதந்திரம் இருக்கும் என்றால் பாரீஸ் கார்டூன் பத்திரிக்கைக்கும் அந்த சுதந்திரம் உண்டு ஏன் மனதில் கொல்லவில்லை.

  • எதன் அடிப்படையில் அவர் இந்த கதையை எழுதினார் என்று கூட தெரியாமல் கமெண்ட் போட வந்துட்டீங்களே.

   //இந்தியாவில் எந்த இடத்தில் எந்த ஜாதிகள் இது போன்ற தவறான நடவடிக்கைகள் இல்லாமல் இருக்கின்றன என்ற புள்ளிவிபரம் சொல்ல முடியுமா என்ன//

   தாங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துட்டீங்க. அவரு அந்த சாதி சமுதாயத்தை சேர்ந்தவர். அவர் சார்ந்த சாதியின் தவறுகளை எழுதி இருக்கிறார். தன்னோட பொச்சு எரிஞ்சுதுனா முதல்ல அத தான் பாக்கணும்.அத வுட்டுபுட்டு அடுத்தவன் பொச்செரிச்சளையெல்லாம் பாத்துட்டு இருக்கனுமா.இதுகெல்லாம் புள்ளி விவரவம் கேக்குறீங்களே கேனைத்தனமா தெரியல?

 8. பெருமாள் முருகனிடம் ஆதாரம் கேட்பதில் என்ன தவறு? ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்களை இழிவுபடுத்தும் கதையாக இருந்தாலும் கூட, அது ஆதிக்கசாதித் தமிழ்ப்பெண்களை இழிவு படுத்துவதாக இருந்தால் அதை மகிழ்ச்சியாக வரவேற்கும் வக்கிரப்புத்தி தான் வினவில் எழுதுகிறவர்களுக்கு உள்ளது என்பது இங்கு வெளிவரும் கட்டுரைகளிலிருந்து தெரிகிறது. எதையும் சாதிக்கண்ணோட்டத்துடனும், அதை ‘ஆதிக்கசாதியினரை’ எதிர்க்கவும், அவர்களை இழிவுபடுத்தவும், அவர்களைப் பழிவாங்கவும் தமக்குக் கிடைத்த ஆயுதமாக நினைக்கும் சின்னப்புத்தி நிறைந்த பலர் வினவில் உள்ளனர். சாதியை எதிர்க்கிறோம் என்ற பெயரில், தமிழர்களே தமிழ்ப்பெண்களை (ஆதிக்க சாதியாக இருந்தாலும் அவர்களும் தமிழச்சிகள் தான்) இழிவுபடுத்தும் கதைகளையும், கட்டுரைகளையும் ஆதரிப்பது போன்ற கொடுமை வேறெதுவுமிருக்க முடியாது.

  இந்தக் கதை வெறும் கற்பனையோ அல்லது கற்பனை கலந்த உண்மையாக இருந்தாலும் கூட, இதே கதையின் கதாநாயகி பொன்னா ஒரு தலித்தாக அல்லது முஸ்லீமாக இருந்திருந்தால், வினவு நிர்வாகிகளும், முற்போக்கு வீரர்களும் பெருமாள் முருகனை துவைத்துப் பிழிந்து காயப் போட்டிருப்பார்கள். ஒரு சில சம்பவங்களை அல்லது வாய்வழிக் கதைகளை அல்லது ஆண்டான்/அடிமை, பண்ணையார்களின் ஆளுமைக் காலங்களை அடிப்படையாக வைத்து, இப்படி எல்லாச் சமூகப் பெண்களையும் இழிவுபடுத்தும் கதைகளை எழுதலாம் தான். இன்றைக்கு கொங்கு வேளாளப் பெண்களை, அந்த சாதியினர் சிலரின் பிறப்பைத் தானே பெருமாள் முருகன் இழிவுபடுத்துகிறார் என்று அதை நியாயப்படுத்திக் கொக்கரிக்கும் முற்போக்கு, சாதியொழிப்பு வீரர்களின் (சாதி)சமூகப் பெண்களை இழிவு படுத்தும் இதே போன்ற கதையை, இன்னொரு ஆதிக்கசாதி எழுத்தாளர் எழுதினால், இன்று பெருமாள் முருகனை நியாயப்படுத்துகிறவர்கள் நிச்சயமாக அவரை ஆதரிக்க மாட்டார்கள்.

  இந்தக் கதைக்கு பெருமாள் முருகனிடம் ஆதாரம் கேட்பது மட்டுமன்றி முற்போக்கு என்ற பெயரில், (தமக்கு மேலேயுள்ள குறிப்பிட்ட) சில சமூகத்தினர் மீதுள்ள சாதிவெறியில், தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்தும், இது போன்ற கதைகளை நியாயப்படுத்துகிறவர்களின் கோணங்கிப் புத்தியை தமிழர்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடின்றிக் கண்டிக்க வேண்டும்

  • அய்யா வியாசர்,

   நீங்க எனக்கு பதில் எழுதவில்லைஎன்றால் கூட பரவால.

   //ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்களை இழிவுபடுத்தும் கதையாக இருந்தாலும் கூட// எப்படி அவர் இழிவுபடுத்தினார் என்று தாங்கள் கூறவில்லையே. சும்மா தைய தைய என்று ஏன் குதிக்கிறீர்கள்?

   அடடா, சாதி மத வேற்றுமையின்றி கண்டிக்க வேண்டுமாம். ஹ்ம்ம் பெரிய மனசு தான். ஏண்____ ஆதிக்க சாதி வெறியன்களா(யார் சாதி வெறி பிடித்து இருக்கிறார்களோ) உங்களுக்கு கண்ணாலம் கட்டிக்க பொண்ணு கிடைக்கலேன்னா கேரளா வரைக்கும் போவீக. அப்போல்லாம் சாதி மத வேறுபாடு பாக்காம தமிழர்களா பொண்ணு குடுத்து பொண்ணு கட்டிங்குகடா அப்படின்னு சொல்ல ஒரு நாதில்ல. ஆனா இப்போ மட்டும் தமிழர்கள் ஒன்று கூடி எதிர்கனுமாம்.

   ஏம்பா இது உங்களுக்கே நியாயமா படுதா.

   நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உங்களை மதிச்சு கருத்து சொல்லுவேன். ஹ்ம்ம்….

   • அண்ணா சிவப்பு,

    உங்கண்ணன் கூட கன்னடப் பெண்ணைக் கட்டிக் கொண்டதாகக் குறிப்பிட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களின் அண்ணனிடம் தமிழ்ப்பொண்ணைக் கட்டிக்கொள் என்று உங்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏன்உங்களின் அண்ணனுக்குப் பிடித்த மாதிரி ஒரு தமிழ்த் தலித் பெண் கிடைக்கவில்லையா?

    என்னைப் பொறுத்த வரையில் தமிழர்கள் தமிழர்களத் தான் திருமணம் செய்ய வேண்டுமென நம்புகிறேன்/விரும்புகிறேன். அதை எனது வலைப்பதிவில் கூட பதிவிட்டிருக்கிறேன். ஆகவே “சாதி நான் மத வேறுபாடு பாக்காம தமிழர்களா பொண்ணு குடுத்து பொண்ணு கட்டிங்குகடா அப்படின்னு சொல்ல” எனக்கு நாதியிருக்கு, உங்களுக்குத் தான் நாதி இல்லைப் போல் தெரிகிறது. ‘ஏம்பா இது உங்களுக்கே நியாயமா படுதா???’ 🙂

    ‘தமிழர்கள் ஏன் தமிழர்களையே திருமணம் செய்ய வேண்டும்?’
    http://viyaasan.blogspot.ca/2013/06/blog-post.html

    //நீங்க எனக்கு பதில் எழுதவில்லைஎன்றால் கூட பரவால.///
    உங்களின் கருத்து பதிலெழுத வேண்டியளவுக்கு உள்ளது என்று எனக்குப் பட்டால் பதிலெழுதுவது எனக்குப் பெரிய விடயமல்ல.

  • வியாசன் அவர்கள் என்ன மாதிரியான ஆதாரம் கேட்கின்றார் என்று புரியவில்லை !கல்வெட்டு ,ஓலைச்சுவடி ஆதாரமா ? கதையில் வரும் விதிவிலக்கான மகபேருக்கான பாலியல் நிகவுகளுக்கு ஆதாரம் வேண்டும் என்றால் மானுடவியல் துறை சார்ந்த ஆய்வுகளை தான் ஆதாரமாக எடுத்துகொள்ள வேண்டுமே தவிர வரலாற்று ஆதாரங்களுக்கு போவது எல்லாம் முட்டாள் தனம். ஒரு வட்டார ,சாதிய பழக்க வழக்கங்களை மானுடவியல் துறை மூலம் தான் கண்டு உணர முடியுமே தவிர அரசு ஆவனங்களில் எல்லாம் பதிவுகளை எதிர்பார்க்க முடியாது. மானுடவியல் துறை என்ன கூறுகின்றது என்றால் தமிழ்நாட்டில் இது போன்ற விதிவிலக்கான பாலியல் நிகழ்வுகள் குழ்ந்தை பேறுக்காக வடார்க்காடு ,கரூர் ,ஈரோடு ,தென் மாவட்டங்களில் திருவிழாக்களில் நடைபெறுகின்றது என்று ! தியோடர் பாஸ்கர் ,இராஜன் குறை கிருஷ்ணன் , பெருமாள் முருகன் ஆகியவர்களின் கள ஆய்வுகள் மானுடவியல் துறை சார் ஆய்வுகள் என்பதால் அதற்குரிய ஆதாரங்கள் அத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும் !

   மாதொருபாகன் நாவலில் யார் மனைவியை பற்றி எழுதியுள்ளார் பெமு ? நீங்கள் கூறுவது படி பார்த்தால் ஒட்டு மொத்த தமிழ் இனமே மக பேறு இல்லாமல் இருபதாக தானே பொருள் . ஆனால் விதிவிலக்கான விடயத்தை தானே எழுதியுள்ளார் ஒட்டு மொத்த தமிழ் பெண்களும் “””போனதாக””” எங்கே எழுதி உள்ளார் ? இன்று ஓர் தமிழச்சி மகபெறுக்காக fertility center ல் விந்து தானம் அல்லது கருமுட்டை தானம் பெறுகின்றாள் என்றால் அது அனைத்து தமிழ் பெண்களையும் குறிக்குமா ? அதுபோல அது குறிப்பிட்ட ஒரு பெண்ணின் பொன்னாவின் கதை தானே ? அது எப்படி அனைத்து தமிழ் பெண்களையும் குறிக்குமா ?பொன்னாவை போன்று ஒரு சில மகபேறு அற்ற பெண்கள் வருவார்கள் அல்லவா ? தமிழ் நாட்டின் விதி விலக்கான குழந்தை பேருக்கான பழைய பாலியல் முறைகளை விதிகளாக நினைத்து கொண்டு நாம் விவாதிக்கின்றோம்

   இது போன்ற பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சொன்னவரின் பெயர், விலாசம் எல்லாம் கேட்பார் வியாசன் கேட்பார் . இப்படியான ஆதாரங்களை தரும் வழக்கம் பொதுவாக மானுடவியல் பயிற்சியிலோ, வாய்மொழி வரலாற்றுத்துறையிலோ கிடையாது. அனுபவ, ஆய்வு பதிவுகளிலிருந்து பெறும் விளக்கங்களை சொல்வோமே தவிர யார் என்ன என்று சொல்வதும், சம்பவம் நிகழ்ந்ததை போட்டோ பிடித்து தருவதும் ஆய்வாளர்கள வேலையில்லை.

   இராஜன் குறை கிருஷ்ணன் கூறுவது : “”குறிப்பாக ஒரு ஊரில் துப்பட்டி திருவிழா என்று குறிப்பிடுவதை குறித்து நான் நிறைய பேரிடம் பேசியிருக்கிறேன். அந்த ஊரைச்சேர்ந்தவர்களே அதை பெருமையாகச் சொல்லிக்கொள்வதுதான் என் அனுபவத்தில் நான் கண்ட முக்கியமான அம்சம். ஒரு ஊரில், ஒரு சமூகத்தில் இப்படி நடந்தது என்றால் உடனே அந்த ஊரைச்சேர்ந்த எல்லா பெண்களுக்கும், ஆணகளுக்கும் இழிவு என்று நினைக்கும் பழக்கம் மக்களிடம் கிடையாது. யாரோ சிலர் இப்படி செய்வார்கள் என்றுதான் கொள்ளப்படும். அந்த யாரோவின் குறிப்பின்மை தரும் பாதுகாப்பில்தான் எல்லோருமே செயல்பட முடியும். எனவே பேச்சுவழக்கில் அந்த யாரோக்களை பற்றி எல்லாருமே உற்சாகமாகப் பேசுவார்கள். குறியயக்க ரீதியாக இங்கே ஊர், சமூகம் என்ற தொடர்மம் (index), யாரோ என்ற மயக்கப் (Rheme) புரிவானின் (interpretant) ஆதிக்கத்தில் இருப்பதால் யாரும் இதனால் புண்படுவதில்லை. ஆனால் ஒரு பித்த நிலையில் (paranoid) நவீன அடையாள வாதம் ஒரு ஊர்ப்பெயர் அந்த ஊரிலுள்ள அனைவரையும் குறிக்கிறது என்று அர்த்தப்படுத்துவது பெரும் விபரீதமும், வக்கிரமும் ஆகும்”””

   • வழக்கம் போல் தமிழ் அவர்கள் தனக்கேயுரிய பாணியில் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பலாம் எனக் கனவு காண்கிறார். “கீழத்தஞ்சையில் மணமான கூலித் தொழிலாளிகளின் மனைவிமார்களை, ஆண்டை நினைத்தால் பெண்டாள முடியும் என்ற கொடுமை, பொதுவுடமை இயக்கம் வந்த பிறகே ஒழிக்கப்பட்டது.” என்கிறது வினவிலுள்ள இன்னொரு கட்டுரை. கூலித்தொழிலாளிகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களே, அதிலும் தலித்துகள் அதிகம். கீழத்தஞ்சையில் மணமான கூலித் தொழிலாளிகளின் மனைவிமார்களை,ஆதிக்க சாதிகள் பெண்டாளத் தடையேதுமிருக்கவில்லை, என்ற கருத்தின் அடிப்படையில், கொஞ்சம் கற்பனையையும் சேர்த்து, கீழைத் தஞ்சையிலுள்ள கிராமம் ஒன்றையும் கோயிலையும் குறிப்பிட்டு, அதன் பின்னணியில் ஒருவர் இப்படியான, இன்னொரு ‘மாதொருபாகன்’பாணிக் கதையை எழுதி, தலித்துப் பெண்களை இழிவு படுத்தி, தலித்துகளில் பலர் ஆண்டைகளுக்குப் பிறந்தவர்கள் என்ற மாதிரியான கருத்தை அந்தக் கதையைப் படிப்பவர்களின் மனதில் விதைத்தால். அதில் தவறேதுமில்லை, மானுடவியல் துறையும் அப்படித் தான் கூறுகிறது. அந்த எழுத்தாளரும் கள ஆய்வுகளை மேற்கொண்டார் என்று நீங்களும், தோழர்களும் கூறுவீர்களா?

    உங்களின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்வதற்காக, நான் தலித் மக்களை வெறும் உதாரணத்துக்குக் குறிப்பிடுகிறேனே தவிர, தமிழர்கள் சாதியடிப்படையில் அடித்துக் கொண்டு சாவதும், தமிழ்ப்பெண்களை (எந்தச் சாதியாக இருந்தாலும்) தமிழர்களே இழிவுபடுத்துவதும் எனக்கு மிகவும் வேதனையாக மட்டுமல்ல அருவருப்பாகவுமிருக்கிறது. மாதொருபாகன் பிரச்சனையும், பெருமாள் முருகனின் stunt உம் சிங்கள ஊடகங்களுக்கும் எட்டி விட்டது, அவர்களும் இணையத்தளங்களில் தமிழர்களைப் பார்த்து நக்கலடித்து சிரிப்பாய்ச் சிரிக்கிறார்கள்.

    • ///பெருமாள் முருகனின் stunt உம் சிங்கள ஊடகங்களுக்கும் எட்டி விட்டது, அவர்களும் இணையத்தளங்களில் தமிழர்களைப் பார்த்து நக்கலடித்து சிரிப்பாய்ச் சிரிக்கிறார்கள்.///
     ______ ஒரு சிறு கிராமத்தில் திருவிழாவில் நடந்ததாக கூறும் இந்த நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட சமுதாய தமிழ் பெண்கள்தான் பொறுப்பா? அந்த பகுதியில் வேறு ஜாதி பெண்கள் எல்லாம் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் தங்களது கற்பை காப்பாற்றி கொண்டார்களா? சுமார் 5 சதவீதம் எல்லா இடங்களிலும் இது போன்ற தவறுகள் அனைத்து சமுதாயத்திலும் நடக்கின்றன. இதனை பெரிது படுத்தி தமிழ் பெண்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று இலங்கை இணையதளம் கூட சிரிக்கும் அளவிற்கு பெரிது படுத்த தேவை இல்லை.

     “” இலங்கையில் ராவணன் ராமனுடன் சண்டை இட்டு தோல்வியை தழுவி அரண்மனைக்கு வருகிறான். இன்று போய் நாளை வா என்று ராமன் அனுப்பி வைத்தான். அரண்மனையை நோக்கி வந்த ராவணன் தன்னுடைய தோல்வியை கண்டு உலக மக்களெல்லாம் சிரிப்பார்கள் என்பதற்காக கவலைப்படவில்லை. தேவர்கள் எல்லாம் சிரிப்பார்களே என்று கூட கவலைப் படவில்லை. ஆனால் ஜானகி நகுவாலே என்று நாணத்தால் சாம்புகின்றான்””

     அதுபோல் இன்று தமிழ் பெண்களை பார்த்து இலங்கை மட்டுமின்றி உலகமே சிரிக்கும்படி செய்துள்ளார் இந்த நாவலின் ஆசிரியரும் வினவும்.

    • One:

     ஈழத்து தாழ்த்தப்பட்ட[தலித்] எழுத்தாளரான கே. டானியல் அவர்களின் நாவல்களான பஞ்சமர் மற்றும் அடிமைகள் வெளிக்காட்டும் சைவவெள்ளாள பெண்களுக்கும் ,பண்ணை அடிமைகளுக்கு இடையே உள்ள கள்ள பாலியல் உறவை பார்த்து சிரிக்காத சிங்கள சமுகமா இப்போது மாதொருபாகனை பார்த்துசிரிக்க போகிறது வியாசன் ?

     //சிங்கள ஊடகங்களுக்கும் எட்டி விட்டது, அவர்களும் இணையத்தளங்களில் தமிழர்களைப் பார்த்து நக்கலடித்து சிரிப்பாய்ச் சிரிக்கிறார்கள்.//

     • தமிழ் அவர்கள் அடிக்கடி பெயரை மாற்றிக் கொண்டாலும் அவரின் உளறலில் மட்டும் மாற்றமேதுமேற்படுவதில்லை. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது அவருக்குக் கைவந்த கலை. எதையும் சாதிக்கண்ணோட்டத்துடன் பார்ப்பது மட்டுமன்றி, சாதியொழிப்பு என்ற விடயத்தை, ஏனைய தமிழர்களைக் குறிப்பாக, தம்மை விட உயர்ந்த சாதியினராக உள்ள தமிழர்களை இழிவுபடுத்தவும், அவர்களை எதிர்க்கும் கருவியாகவும் பாவிக்கும் சாதி வெறி பிடித்தவர்கள் வினவில் உள்ளனர் என்று நான் குறிப்பிட்டது இவரைப் போன்றவர்களைத் தான்.

      வெறும் கற்பனையாக இருந்தாலும் கூட, ஒரு கதை தமக்கு மேலேயுள்ள சாதியினரை இழிவுபடுத்தினால் அதைப் பாராட்டிப் புகழ்ந்து, அதற்கு வக்காலத்து வாங்கி, அதன் மூலம் ஆதிக்க சாதிகளைப் பழிவாங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு, குட்டிப் புளுகில் குதூகலிக்கும் பரிதாப நிலையில் தான் வினவில் சாதியொழிப்பு வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

      ….. “அது(மாதொருபாகன் கதை) குறிப்பிட்ட ஒரு பெண்ணின் பொன்னாவின் கதை தானே ? அது எப்படி அனைத்து தமிழ் பெண்களையும் குறிக்குமா?” என்று என்னிடம் கேட்ட அண்ணன் செந்தில்குமரன் (தமிழ்), திடீரென்று “கே டானியலின் கற்பனை நாவலை எடுத்துக் காட்டி, பஞ்சமர், அடிமைகளுக்கும் சைவவெள்ளாள பெண்களுக்கும் கள்ள பாலியல் உறவு” என்று உளறுகிறார். ஈழத்தில் தேடுவாரற்றுக் கிடந்த கே. டானியலுக்கு விளம்பரம் கொடுத்தவர்களும் தமிழ்நாட்டுத் தலித்துகள் தான். கே.டானியலுக்கு தமிழ்நாட்டுத் தலித்துகளிடமும், ‘முற்போக்கு’களிடமுமிருந்த ஆதரவைப் பார்த்து விட்டு, (பஞ்சமர் நாவலைக் காப்பியடித்து), அதேபோல் கொங்கு வெள்ளாளரை இழிவு படுத்தும் வகையில் பெருமாள் முருகன், ‘மாதொருபாகனை’ எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் மாதொருபாகன் நாவலை வாசித்த போது எனக்குமேற்பட்டது. அருமையான கதையை எழுதி, அக்காலத்தில் தமிழ்நாட்டில் குழந்தை இல்லாத பெண்கள் மட்டுமன்றி, ஆண்கள் கூடப் பட்ட அவமானத்தை, அவலத்தை எல்லாம் அழக்காக எடுத்துக் காட்டி விட்டு, தமிழ்நாட்டில் “ஆதிக்க சாதியினரை” அதுவும் தன்னுடைய சாதியையே இழிவு படுத்துவதன் மூலம், நடுநிலையானவராகக் காட்டுவதன் மூலம், தன்னுடைய சாதியொழிப்புத் தகைமைகளுக்கு வலுச்சேர்க்கலாம், அத்துடன், அவருக்கு விளம்பரமும் கிடைக்கும் தனது புத்தகமும் விலைபோகும் என்ற குறுகிய நோக்கத்தால் தான், கொங்கு வெள்ளாளர் (கவுண்டர்) சாதிக் கதாநாயகி பொன்னாள், குழந்தைவரம் கேட்டுச் சோரம் போவதாக காட்டியிருக்கிறார் பெருமாள் முருகன் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

      இப்படியான எழுத்தாளர்களையும், அவர்களின் எழுத்துக்களையும் தமிழினத்தில் சாதிபாகுபாட்டை எதிர்க்கும் அனைவரும் கண்டிக்க வேண்டும். சாதியொழிப்பு என்பது தலித்துகளுக்கு ஆதரவளித்து, ஏனைய சாதியினரை இழிவு படுத்துவதல்ல, சாதி அடிப்படையிலான எல்லாக் கருத்துகளையும், கதைகளையும், பாகுபாடுகளையும் எதிர்ப்பது தான் உண்மையான் சாதி எதிர்ப்பாகும். தமிழர்கள் சாதியடிப்படையில் ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தி, கதைகள் எழுதவதால் சாதி ஒழியாது, அதனால் தமிழினம் மேலும் பிளவு படும். இப்படியான கதைகளால் ஒவ்வொருவருக்கு தமது சாதியைப் பற்றிய பிடிப்பும், சாதியுணர்வும், தமது சாதியை மற்றவர்கள் இழிவு படுத்துவதை எதிர்க்க, அவர்களுக்கெதிராக, தமது சாதியின் கீழ் ஒன்றுபட வேண்டுமென்ற சாதியுணர்வும் தான் ஏற்படும். ஒருகாலத்தில், சாதிவெறி தலை விரித்தாடிய யாழ்ப்பாணத்தில் இன்று இரட்டைக்குவளையும் இல்லை, தமிழர்கள், தமிழர்களுக்கு மலம் தீற்றுவதுமில்லை, ஓடிப்போனவர்களை பிரித்து வைத்துக் கொலை செய்வதுமில்லை, ஆனால் பெரியாரும், பெருமாள் முருகனும் உள்ள தமிழ்நாட்டில் தான் இன்றும் இப்படியான சாதிக்கொடுமைகள் நடக்கின்றன. 🙂

      • இந்த மாதொருபாகன் கதை எப்படி கவுண்ட பெண்களை ,தமிழ் பெண்களை இழிவுபடுத்துகின்றது என்பதை வியாசன் அவர்கள் தான் கூறவேண்டும். அது குழந்தை பேருக்கான விதி விளக்கான முறை என்பதை கூறிய பின்பும் வியாசன் அதனைத்து தமிழ் பெண்களையும் இழிவுபடுத்துவதாக இப்படி கூறுவது ஒட்டுமொத்தமாக அனைத்து தமிழச்சிக்ளும் திருவிழாவுக்குசென்று கருதரித்தக்காக தானே தவறான பொருள் ஆகின்றது. ?
       //எதையும் சாதிக்கண்ணோட்டத்துடன் பார்ப்பது மட்டுமன்றி, சாதியொழிப்பு என்ற விடயத்தை, ஏனைய தமிழர்களைக் குறிப்பாக, தம்மை விட உயர்ந்த …………………………இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. //

      • சிங்களவன் சிரிக்கின்றான் என்று உளறிய வாய் யாருடையது ? வியாசனுடைய வாய்தானே ?இன்று சிங்களவன் மாதொருபாகனை பார்த்து சிரிக்கின்றான் என்றால் 1980களில் பஞ்சமர், அடிமைகள் கதையை பார்த்து அதில் சுட்டிக்காட்ட படும் கள்ள உறவுகளை பார்த்து சிரிக்கவில்லையா என்பதே என் கேள்வி ?

       மேலும் சிங்கள இனமே ஒருகலப்பினம் என்பது வியாசனுக்கு தெரியாதா ? தெலுங்கு பேசும் மக்கள் கண்டியிலும் பிற சிங்கள பகுதிகளிலும் சிங்களவனுடன் கலப்பு அடைந்த கடை எல்லாம் வியாசனுக்கு தெரியாதா ? நேற்றைய சந்திரிகா ,இன்றைய சிரிசேனா ஆகியவர்களின் ஆதி மூலம் எல்லாம் தெலுங்கு மொழி பேசும் மக்களுடன் கலந்த விடயம் வியாசனுக்கு தெரியாதா ?

       இனக்கலப்பை வைத்து இனப்பெருமை பேச யூதனுக்கு கூட அருகதை கிடையாது வியாசன்
       //அது(மாதொருபாகன் கதை) குறிப்பிட்ட ஒரு பெண்ணின் பொன்னாவின் கதை தானே ? அது எப்படி அனைத்து தமிழ் பெண்களையும் குறிக்குமா?” என்று என்னிடம் கேட்ட அண்ணன் செந்தில்குமரன் (தமிழ்), திடீரென்று “கே டானியலின் கற்பனை நாவலை எடுத்துக் காட்டி, பஞ்சமர், அடிமைகளுக்கும் சைவவெள்ளாள பெண்களுக்கும் கள்ள பாலியல் உறவு” என்று உளறுகிறார்.//

       • Change இனக்கலப்பை வைத்து இனப்பெருமை பேச—->மற்றவர் இனக்கலப்பை வைத்து தன் இனப்பெருமை பேச

      • இது போன்ற விமர்சனங்கள் ,ஆய்வுகள் சரியோ தவறோ எப்படிஇருந்தாலும் ஆரோக்கியமானது தான் வியாசன். ஆனால் பாருங்கள் கே.டானியளின் பஞ்சமர் ,அடிமைகள் கதைகள் தலித் மக்களின் வாழ்க்கையை அவர்களுக்கான சைவ வெள்ளாளர்களின் உறவை கூறுவது. ஆனால் மாதொருபகன் கதையின் மையகருத்தே காளி ,பொன்னா என்ற இரு தம்பதிகளின் வாழ்கையை மட்டுமே கூறுவது. அவர்களின் மகப்பேறு இல்லாத வலியை அதனால் அவர்கள் சார்ந்த சமுக உறவுகள் ஏற்படுத்தும் அழுத்தத்தை விவரிப்பது. அப்பிரச்சனைக்கு அவர்கள் வாழ்ந்த வட்டாரம் மறைமுகமாக வைக்கும் தீர்வுகளை பற்றி பேசுவது ……..
       //கே.டானியலுக்கு தமிழ்நாட்டுத் தலித்துகளிடமும், ‘முற்போக்கு’களிடமுமிருந்த ஆதரவைப் பார்த்து விட்டு, (பஞ்சமர் நாவலைக் காப்பியடித்து), அதேபோல் கொங்கு வெள்ளாளரை இழிவு படுத்தும் வகையில் பெருமாள் முருகன், ‘மாதொருபாகனை’ எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் மாதொருபாகன் நாவலை வாசித்த போது எனக்குமேற்பட்டது.//

      • இந்த மாதொருபாகன் நாவல் கூறும் கதை தலித் மக்களை பற்றியது அல்ல என்று தெரிந்தும் , அதன் எழுத்தாளர் தலித் எழுத்தாளர் என்பது தெரிந்தும் வியாசன் வைக்கும் விமர்சனம் நகைப்புக்கு உரியது. இன்று பெருமாள் முருகனை ஆதரிப்பவர்கள் பல தரப்பு மக்களாக இருக்கும் போது வியாசனின் வருணனைகள பொருளிழந்து போகின்றன. இவர் கூறுவது படியே ஈழத்து யாழ்பணத்தில் சாதியம் முற்றும் அழிந்தமைக்கு காரணம் யார் என்று வியாசன் விவாதிக்க தயாரா ? நான் தயார் !
       //இப்படியான எழுத்தாளர்களையும், அவர்களின் எழுத்துக்களையும் தமிழினத்தில் சாதிபாகுபாட்டை எதிர்க்கும் அனைவரும் ……ஆனால் பெரியாரும், பெருமாள் முருகனும் உள்ள தமிழ்நாட்டில் தான் இன்றும் இப்படியான சாதிக்கொடுமைகள் நடக்கின்றன//

       • Change: அதன் எழுத்தாளர் தலித் எழுத்தாளர் என்பது0—>அதன் எழுத்தாளர் தலித் எழுத்தாளர் அல்ல என்பது

        • “தலித்” என்றால் என்ன! இந்த தலித்துக்கள் தமிழர்களா? இந்த தலித் என்றவார்த்தை எங்கிருந்து வந்தது? தமிழுக்கு முக்கியத்துவம் தருவதாக கூறி தமிழுக்கு சம்பந்தமில்லாத வார்த்தையை பயன்படுத்திகிறீர்களே ஏன்? கவுண்டர்கள் தமிழர்கள். அந்த தமிழர்களை இழிவுபடுத்த வெளி மாநிலங்களில் இருந்து வந்து வினவு வலைத்தளம் நடத்தும் இவர்கள் தமிழிக்கு செய்வது துரோகம். தமிழர்கள் அல்லாத “தலித்” மற்றும் “அரபு முஸ்லீம்களை” ஆதரித்து வாழ்க்கை நடத்தும் இவர்களை கண்டனத்திற்குரியவர்கள்!! தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் பெயர் வைப்பதாக கூறி சில இந்து தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு மட்டும் தமிழ் பெயர் வைத்துவிட்டு விளம்பரம் தேடினார் “ஏழை” திருமாவளவன். ஆனால் எந்த கிருஷ்துவருக்கும் முஸ்லீமுக்கும் தமிழ் பெயர் வைக்க வில்லை. இதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வேலை அல்லவா.

         • நீங்கள் சொன்னதில் பல பிழைகள் உள்ளன. போகட்டும். “வாழ்க்கை நடத்தும்” என்பது நிச்சயம் தவறு. வினவு தோழர்கள் வாழ்க்கை நடத்த வேறு தொழில்கள் செய்கின்றனர். அவர்கள் இயக்கம்-தளம் நடத்துவது வாழ்க்கை நடத்த அல்ல. சொல்லப்போனால், இயக்கம்-தளம் நடத்துவது வாழ்க்கை நடத்துவதில் பிரச்சனை தரக்கூடியத.

     • ஈழத்தில் தமிழர்கள்தான் இருக்கிறார்கள் என்று இதுவரை நினைத்து இருந்தேன். இப்போதுதான் தலித்துக்களும் இருக்கிறார்கள் என்று. இலங்கையில் தலித்துக்கள் என்றால் யார் என்று சொல்லவேண்டாமா? இந்தியாவில்தான் “தலித்” என்ற சமூகம் இருக்கிறது. தமிழர்களிடம் ‘தலித்’ கிடையாது. அது இந்தியாவில் வடநாட்டு ஜாதி.

      • ஈழத்தில் தலித்துகள் கிடையாது தமிழர்களும், தமிழ்பேசும் முஸ்லீம்களும் தான் உள்ளனர் (இலங்கை முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல). தலித் என்ற பதத்தை தமிழ்நாட்டு இணையத்தளங்களில் தான் நானும் முதலில் கேள்விப்பட்டேன், இங்குள்ளவர்களுக்குப் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். ஆனால் ஈழத்தில் தலித் என்ற சொல் வழக்கில் இல்லை. இதுவும் ஒருவகை சமக்கிருத – இந்தித் திணிப்புத் தான். ஆனால் குருவானவர் செய்தால் குற்றமில்லை. 🙂

       Da•lit:

       Origin: via HINDI from SANSKRIT dalita ‘oppressed.’

    • Two:

     தமிழ் நாட்டில் கீழ்வெண்மணி மட்டும் அல்ல ,ஆந்திராவில் தெலுங்கானா என்று இந்தியா முழுவதும் விவசாய கூலிகள் ,ஆண்டான்களால் வதைக்கபட்டு தான் உள்ளார்கள். ஆண்டன்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் நடந்து கொண்டு தான் உள்ளது. அவற்றை அம் மக்கள் கலை ,இலக்கிய ,திரைபடங்களில் ஆவன படுத்திக்கொண்டு தான் உள்ளார்கள். ஐதிராபாத் நிசாமுக்கும், நில்பிரபுக்க்ளுக்கும் எதிரான தெலுங்கான போர் திரைபடங்களில் ஆவன படுத்தப்பட்டு தான் உள்ளது. அதில் நீங்கள் கூறும் உழைக்கும் மக்களுக்கு எதிரான பாலியல் நிகழ்வுகள் சுட்டபட்டு தான் உள்ளன. அத்தகைய நிகழ்வுகளால் நேரடியாகவே கதாநாயகன் மனைவி பாதிக்கப்படும் அவன் பின்பு வர்க்க புரச்சிக்கு தலைவனாகின்ரான். கீழ் வெண்மணியில் உழைக்கும் மக்களை கொன்ற நாயுடு நீதிமன்றத்தில் விடுவிக்க பட்டாலும் பின்பு கம்யுனிஸ்டுக்ளால் பின்பு வெட்டி கொள்ளப்படுகின்றான் என்பதையும் நினைவுக்கு கொண்டுவாருங்கள் .

     //அதிலும் தலித்துகள் அதிகம். கீழத்தஞ்சையில் மணமான கூலித் தொழிலாளிகளின் மனைவிமார்களை,ஆதிக்க சாதிகள் பெண்டாளத் தடையேதுமிருக்கவில்லை, என்ற கருத்தின் …..//

    • Three:

     மாதொருபாகன் பாணியில் தாராளமாக எழுதலாம். மாதொருபாகன் எழுப்பும் கேள்விகளுக்கே பதில் அளிக்க இயலாத ஆண்டைகள் என்ன எப்படி எழுத செய்வார்கள் ? மாதொருபாகன் நாவலில் அதன் ஆசிரியர் நிலைநிறுத்துவது விதிவிளக்கான மகபேறுக்கான பாலியல் முறைகள் ஒரு குறிப்பிட்ட சாதி மக்களை மட்டும் சுட்டுவது அன்று ! திருவிழாவுக்கு அனைத்து தரப்பு மக்களும் ,பெண்களும் வருகை தருகின்றார்கள்.அதில் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பொன்னவும் வருகின்றார்! //‘மாதொருபாகன்’பாணிக் கதையை எழுதி, …..//

    • வியாசன்,

     தமிழ் உங்களுக்கு சரியான பதிலைத் தந்திருக்கிறார்.

     அதைப்புறந்தள்ளிவிட்டு தலித் கதை எழுதலாமா என்று கேட்கிறீர்கள். தாராளமாக எழுதுங்கள். என்ன எழுதுகிறீர்கள் என்று பார்ப்போம். ஏற்கனவே போதிய அளவு எழுதியுமிருக்கிறார்கள். தலித் பெண்கள் வன்புனரப்படுவதும் புதினமில்லை. இன்றும் நடப்பதுதான். ஊடகங்கள் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. நீங்கள் ஒரு புதினமெழுதி உலகத்தின் கவனத்தைத்திருப்ப முடிந்தால் நல்லது தான். நீங்கள் எத்தனை எழுதினாலும் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பது வேறுவிசயம். யாரும் கண்டுகொள்ளாததை வினவு கண்டிப்பாக எழுதும்.

     வினவு தலித் தோழர்களால் மட்டும் நடத்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். இழிவு படுத்துதல் இழிவு படுத்துதல் என்று நூறுமுறை எழுதினால் அது அப்படியே ஆகிவிடுமா. வீண் வேலைகளுக்குக் குறைச்சல்லில்லை. அந்த கதையில் எப்படி இழிவு படுத்திவிட்டார்கள் என்பதை விளக்குங்கள். யாருக்கு சின்னபுத்தி என்று பார்ப்போம்.

     // கீழைத் தஞ்சையிலுள்ள கிராமம் ஒன்றையும் கோயிலையும் குறிப்பிட்டு, அதன் பின்னணியில் ஒருவர் இப்படியான, இன்னொரு ‘மாதொருபாகன்’பாணிக் கதையை எழுதி,// தலித்துப் பெண்களை இழிவு படுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள் அந்த கோயில்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. கோயில்களில் திருவிழாக்களில் நடந்தவற்றை அங்கே யார் அனுமதிக்கப்பட்டிருந்தார்களோ அவர்களை வைத்துத்தான் புதினமோ கட்டுரையோ எழுதமுடியும்.

     • //அந்த கதையில் எப்படி இழிவு படுத்திவிட்டார்கள் என்பதை விளக்குங்கள். யாருக்கு சின்னபுத்தி என்று பார்ப்போம்.//
      நீங்கள் இன்னும் அந்தக் கதையைப் படித்துப் பார்க்காமல் தான் ‘தமிழ்’ க்கு ஜால்ரா போடுகிறீர்கள் போல் தெரிகிறது. 🙂 மாதொருபாகன் நாவலில் கதாநாயகனினதும், கதாநாயகியினதும் சாதியைக் குறிப்பிடாமல், அவர்களின் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதாசிரியர் கதையை கூறியிருப்பாரேயானால், இந்த நாவலுக்கு இவ்வளவு விளம்பரமும் கிடைத்திருக்காது, நானும் நீங்களும் அதைப் பற்றி இங்கு பேசிக் கொண்டிருக்கவும் மாட்டோம். 100 வருடங்களுக்கு முன்பிருந்த இரகசிய மரபு என்ற செவிவழிச் செய்திக்கு கற்பனையில் காது, மூக்கெல்லாம் வைத்து ஒரு சமூகத்தின் பெயரையும் கூறிக் கதை புனைவது, அந்தச் சமூகத்தின் பெண்களை மட்டுமன்றி, அந்த சமூக மக்கள் அனைவரையும் இழிவு படுத்துவதல்லாமால் வேறென்னவாக இருக்க முடியும். ஆனால் அந்த எழுத்தாளரின் எழுத்தைக் கண்டிக்க வேண்டுமே தவிர, அவரைப் பயமுறுத்துவதையும், அவரை தொடர்ந்து எழுதாமல் தடுப்பதையும் நானும் ஆதரிக்கவில்லை.

     • //தலித் கதை எழுதலாமா என்று கேட்கிறீர்கள். தாராளமாக எழுதுங்கள். என்ன எழுதுகிறீர்கள் என்று பார்ப்போம்.///

      என்னுடைய உதாரணத்தை மீண்டும் படித்துப் பார்த்து விட்டுப் பதில் எழுதவும். நான் கூறியது என்னவென்றால்………’என்ற கருத்தின் அடிப்படையில், கொஞ்சம் கற்பனையையும் சேர்த்து, கீழைத் தஞ்சையிலுள்ள கிராமம் ஒன்றையும் கோயிலையும் குறிப்பிட்டு, அதன் பின்னணியில் ஒருவர் இப்படியான, இன்னொரு ‘மாதொருபாகன்’பாணிக் கதையை எழுதி, தலித்துப் பெண்களை இழிவு படுத்தி, தலித்துகளில் பலர் ஆண்டைகளுக்குப் பிறந்தவர்கள் என்ற மாதிரியான கருத்தை அந்தக் கதையைப் படிப்பவர்களின் மனதில் விதைத்தால். அதில் தவறேதுமில்லை, மானுடவியல் துறையும் அப்படித் தான் கூறுகிறது. அந்த எழுத்தாளரும் கள ஆய்வுகளை மேற்கொண்டார் என்று’ நீங்கள் கூறுவீர்களா அல்லது தலித் பெண்களை இழிவு படுத்துகிறார்கள் என்று கருதுவீர்களா. என்னைப் பொறுத்த வரையில் அப்படி யாராவது எழுதினால் அது தலித் பெண்களையும், அவர்களின் பரம்பரையினரையும் வேண்டுமென்றே இழிவு படுத்துவதற்காக எழுதப்பட்டதாகத் தான் கருதுவேன். தலித்துக்களுக்கெதிரான அப்படியான கதைகளும் கட்டுரைகளும் கூட எதிர்க்கப்பட வேண்டியவை என்பது தான் என்னுடைய நிலைப்பாடு.

      • Viyasan,

       ஆறு ஆண்டுகள் கொங்கு மண்டலத்தில் உள்ள மல்லசமுத்திரம் ஊரில் வாழ்ந்த போது அந்த ஊரை சுற்றியுள்ள கவுண்டர்கள் வாழும் ஊரில் உள்ள கவுண்ட மக்களிடம் எனக்கு பேச்சு வார்த்தை உண்டு. ஓரு வயது மூத்த கவுண்டர் நல்ல நண்பர் ஆனார். எந்த விடயத்தையும் நேரடியாக பேசும் அளவுக்கு நண்பர்கள் ஆகிவிட்டோம். அவர் ஒன்றும் முற்போக்கு குணம் கொண்டவர் எல்லாம் கிடையாது. கவுண்டநூட்டு பெண்கள் தலித் சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்தால் கவுண்ட பெண்ணை கண்ணும் கண்ணும் வைத்தார்போன்று கொன்றுவிட வேண்டும் என்று கூறிவர் தான். அதற்கு உதாரணமாக திருச்சஞ்கோட்டில் ஒரு உதாரணத்தையும் கூறியவர் தான். அவரிடம் பண்ணையில் வேலை செய்யும் ஆளுங்க்கார பெண்களை கவுண்டர்கள் அதிகாரத்தின் மூலம் பெண்டாளுவது பற்றி கோபமாகவே கேட்டும் உள்ளேன். அவரின் பதில் மிகவும் சாந்தமாகவும் , எம்மை திருத்தி படுத்தும் அளவிற்கும் வந்தது. அவர் கூறியது :

       “”””எந்த கவுண்டனும் அப்படி செய்ய மாட்டான். ஒருவேளை அப்படி செய்து வீட்டு கவுண்டச்சிக்கு தெரிந்தால் மானம் மரியாதை கேட்டு போய்விடும். ஆசிரியர் வேலையில் உள்ளவர்களில் ஒருவர் இருவர் அப்படி மாணவிகளுடன் இருந்தால் அது அனைத்து ஆசிரியர்களையும் இழிவு செய்யுமா ? எது எப்படி இருந்தாலும் ஆளுங்க்கார தலித் பெண்களை கவுண்டர்கள் அதிகாரத்தின் மூலம் பெண்டாளுவது தவறு தான் “”””

       கொங்கு கவுண்ட மக்களுக்கும் அங்கு அவர்களுடன் வாழும் தெலுங்கு மொழி பேசும் தலித் மக்களுக்குமான உறவு வித்தியாசமானது. காட்டில் வேலை செய்யும் கவுனடச்சிக்கும் , ஆளுங்க்கார பெண்கலுக்கும் இடையே வேலை செய்வதில் எல்லாம் பெரிய வேறுபாடு இல்லை.இருவருமே வேலை செய்வார்கள்.ஆனால் வரும் வருமானத்தில் பங்கு கவுண்டனுக்கு அதிகமாகவும் ,ஆளுங்க்கார குடும்பத்துக்கு குறைவாகவும் இருக்கும். ஆளுங்க்கார தலித் பெண்கள் கவுண்டன் வீட்டு குழ்ந்தைகளை தூக்கி எடுத்து சுமப்பதில் எல்லாம் எந்த தீண்டாமையும் கிடையாது. அதே சமையம் கவுண்டச்சிகள் ஆளுங்க்கார பெண்களின் குழந்தைகளை தூக்க கூட மாட்டார்கள் என்பது உண்மைதான்.

       • Change :

        கவுண்டநூட்டு பெண்கள் தலித் சாதி பெண்ணை —> கவுண்டநூட்டு பெண்கள் தலித் சாதி பையனை

  • இராஜன் குறை கிருஷ்ணன் கூறுவது :

   1) வாய்மொழி தரவுகள் மானுடவியல் சார்ந்தும், வாய்மொழி வரலாறு மற்றும் நாட்டார் வழக்காற்றியல் சார்ந்தும் முக்கியமானவை. இந்த தரவை இன்னார் சொன்னார் என்பதை ஆதாரமாக காட்ட வேண்டிய அவசியம் ஆராய்ச்சியாளருக்கு கிடையாது. அந்த தரவுகளின் அடிப்படையில் அவர் அடையும் கருதுகோள்களை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் சுதந்திரம். சமீபத்தில் ஒரு ஆய்வரங்கத்தில் மதமாற்றம் பற்றிய ஒரு கதையை சொன்னபோது அந்த ஏரியாவை அறிந்த பலர் யார் சொன்னது என்று கேட்டார்கள்; நான் திட்டவட்டமாக பெயர்களை சொல்லமுடியாது என்று கூறிவிட்டேன். //பெருமாள் முருகனிடம் ஆதாரம் கேட்பதில் என்ன தவறு?…..//

   2) ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டாலும் புனைவை உண்மை எனக்கொள்வதோ, புனைவில் வரும் கதாபாத்திரமோ, நிகழ்வுகளோ தங்களை புண்படுத்துவதாக தனி மனிதர்களோ, குழுக்களோ சொல்வது முதிர்ச்சியடையாத மனநிலை. அது புனைவின் சுதந்திரத்தை குறுக்கும் செயல். மானுட வாழ்வின் எண்ணற்ற புதிர்களின் மேல் வெளிச்சம் பாய்ச்சவும், சிந்திக்கவும் நமக்குள்ள மிகப்பெரிய கருவியே புனைவு வெளிதான், கலையாக்கம்தான், (புனைவின் சுதந்திரம் கருத்துச் சுதந்திரத்தை விட அதிகமான வெளியை கோருவது. இரண்டுமே எழுத்துச் சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தினுள் வரும்). இது புண்படுத்துகிறது, அது புண்படுத்துகிறது என்று இந்த புண்படும் விஷயத்தை தொடர்ந்து அனைவரும் வலியுறுத்தினால் புனைவெழுத்தே சாத்தியமின்றி போய்விடும் அபாயம் இருக்கிறது.
   //இந்தக் கதை வெறும் கற்பனையோ அல்லது கற்பனை கலந்த உண்மையாக இருந்தாலும் கூட, இதே கதையின் கதாநாயகி பொன்னா ஒரு தலித்தாக அல்லது முஸ்லீமாக இருந்திருந்தால், வினவு நிர்வாகிகளும், முற்போக்கு வீரர்களும் பெருமாள் முருகனை துவைத்துப் பிழிந்து காயப் போட்டிருப்பார்கள்.//

   3) தேர்த்திருவிழாக்கள், ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள் என பல்வேறு இறைமை சார்ந்த நிகழ்வுகளில் களியாட்ட அம்சங்கள், பாலியல் நெகிழ்வுகளை அனுமதிப்பது உலகளாவிய நடைமுறை. இவற்றை எந்த சமூகமும் இழிவாக நினைப்பதில்லை. தமிழகத்திலேயே இவற்றை பற்றி பல ஊர்களில் மிகப் பரவலாக பேசப்படுவது உண்டு. ஒரு திருவிழாவுக்கு நான் எண்பத்தைந்தாம் ஆண்டு போனபோது ஆளாளுக்கு “ஏமாந்தா வாடி எங்கவூர் திருவிழாவுக்கு” என்ற ஒரு சொலவடையை சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒரு ஆண் என்ற முறையில் பெண்கள் தங்களுக்குள் இதைப்பற்றி எப்படி பேசிக்கொள்வார்கள் என்பதை நான் கேட்டதில்லை என்றாலும், மிகுந்த நகைச்சுவையுணர்வுடன் பேசிக்கொள்வார்கள் என்று தகவலாக பெண்களே சொல்லி அறிந்திருக்கிறேன். நான் பங்கேற்ற பல திருவிழாக்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் கடுமையாக மாறுதல் அடைந்துள்ளன. குறிப்பாக மின்விளக்குகளின் பங்கு முன்பு இருளுக்கு இருந்த இடத்தை முற்றிலும் காணாமல் போகச்செய்துவிட்டது. எனவே பழமையுடன் ஒரு தீவிரமான துண்டிப்பு நிகழ்ந்ததற்கு நானே சாட்சிதான். இது நல்லதா கெட்டதா என்ற விவாதத்திற்கு நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் நான் ஏற்கனவே சொன்னபடி நவீன கால பிரக்ஞை கடந்தகால பண்பாட்டு அம்சங்களை திடீரென்று ஏதோ இழிவென்று கூறுவது ஒரு மானுடவியல் துயரம் என்றே என்னால் பார்க்கமுடியும். உடனே இதை ஜாதீயம் சார்ந்த விஷயங்களுக்கு பொருத்தி பதற்றமடைய வேண்டாம். நான் ஜாதீயம் சார்ந்த இழிவுகள் களையப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கொள்ளவில்லை. ஆனால் ஆண்மையவாத நோக்கில், ஆணாதிக்க நோக்கில் பெண்களின் பாலியல் நடிவடிக்கைகளை கட்டுப்படுத்துவதையும், இழிவு கற்பிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய பால் கட்டமைப்பின் நுட்ப இயந்திரங்களை தகர்க்காமல், ஜாதீயத்தை தகர்க்க முடியாது என்பதே என் புரிதல். பெண் விடுதலையும், பாலியல் சுதந்திரமும் ஜாதி ஒழிப்பு என்ற இலட்சியத்திற்கான இன்றியமையாத வழித்தடங்கள்.//இந்தக் கதைக்கு பெருமாள் முருகனிடம் ஆதாரம் கேட்பது மட்டுமன்றி முற்போக்கு என்ற பெயரில், (தமக்கு மேலேயுள்ள குறிப்பிட்ட) சில சமூகத்தினர் மீதுள்ள சாதிவெறியில், தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்தும், இது போன்ற கதைகளை நியாயப்படுத்துகிறவர்களின் கோணங்கிப் புத்தியை தமிழர்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடின்றிக் கண்டிக்க வேண்டும்//

  • வியாசன்,

   தமிழர்கள் சாதி பிரச்சினை உங்களுக்கு அருவருப்பாக இருக்கிறதென்று பலமுறை சொல்லியிருக்கிறீர்கள்.

   நான் சாதிகளுக்குள் ஏற்றதாழ்வுகளைக் கற்பிக்கும் Expression களும் ஒழிக்கப்படவேண்டியவை என்று வினவில் பல முறை எழுதியிருக்கிறேன். நீங்களும் கண்டிப்பாக அவற்றை சிலமுறையேனும் பார்த்திருப்பீர்கள்.

   அப்படியிருக்கும் போது, ‘தமக்கு மேலுயுள்ள’, ‘தமக்கு கீழேயுள்ள’ போன்ற Expression களை தொடர்ந்து பயன்படுத்துகிறீர்கள். இவை மட்டும் உங்களுக்கு அருவருப்பாக தெரியவில்லையா?

   • தமிழர்களின் சாதிப்பிரச்சனையும், அவர்கள் சாதியடிப்படையில் அடிபட்டுக் கொண்டு சாவதும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு சாதியும் தமக்கேயுரிய சாதிவெறியுடன் மற்றவர்களை இழிவு படுத்துவதும், அல்லது இழிவுபடுத்தக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறாது பயன்படுத்துவதும், தவறான செயல் என்று தெரிந்து கொண்டும், அப்படி இழிவுபடுத்துகிறவர்களை நியாயப்படுத்துவதும் கூட எனக்கு அருவருப்பாகத் தானிருக்கிறது.

    சாதிச்சான்றிதழ்களும், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளும், சாதியடிப்படையிலான உயர்வு, தாழ்வுகளும் நடைமுறையிலிருக்கின்றன. ஆகவே , சாதிப்பிரச்சனை பற்றி விவாதிக்கும் போது, கருத்தை விளக்குவதற்கு சாதிப்பிரமிட்டின் அடிப்படையில் உயர்ந்த அல்லது தாழ்ந்த என்ற சொற்களைப் பாவிப்பது சில வேளைகளில் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. மாதொருபாகன் நூலில் உள்ளது போன்று கவுண்டர், சக்கிலியர் என்று சாதிப்பெயர்களைக் குறிப்பதும் எனக்கு அருவருப்பைத் தருவதால் தான், எனது கருத்தை தெளிவுபடுத்த தான் ‘தமக்கு மேலேயுள்ள’ சாதியினரை என்று, அதாவது சாதிப்பிரமிட்டில் மேலேயுள்ள என்ற கருத்தில் குறிப்பிட்டேன்.

    ஆனால் இதற்கே இவ்வளவு உணர்ச்சி வசப்படும் நீங்கள், மாதொருபாகன் நாவலில் தமிழர்களில் முக்கியமான ஒரு சமூகத்தின் பெண்களை, அவர்களின் ஒழுக்கத்தை, அவர்களின் குழந்தைகளின் பிறப்பை இழிவு படுத்திய கற்பனைக் கதையை நியாயப்படுத்தியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அது மட்டுமன்றி அந்த ஆதாரமற்ற கற்பனைக் கதையை விந்து வங்கிகளுடன் ஒப்பிட்டுக் கூட சப்பைக்கட்டுக் கட்டியவர் நீங்கள். விந்து வங்கிகளிலிருந்து விந்தைப் பெறுவது வெறும் மருத்துவச் செயல் முறையே தவிர அங்கு உடலுறவுக்கோ, உணர்ச்சிகளுக்கோ இடமில்லை. ஆகவே, அதற்கும், பெருமாள் முருகன் மாதொருபாகனில் சித்தரித்த சம்பவத்துக்கும், அவர் அதைச் சித்தரித்த விதத்துக்கும் பெரிய வேறுபாடு உண்டென்பது உங்களுக்கும் தெரியும், ஆனால் பெருமாள் முருகனை நியாயப்படுத்த வேண்டும், கவுண்டர் சாதிப்பெண்களை இழிவுபடுத்த வேண்டுமென உங்களை அறியாமலே, உங்களின் சாதிவெறி உங்களைத் தூண்டுகிறதோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது, அதுவும் எனக்கு அருவருப்பாகத் தான் உள்ளது.

    • வியாசன்,

     // சாதிப்பிரமிட்டின் அடிப்படையில் உயர்ந்த அல்லது தாழ்ந்த என்ற சொற்களைப் பாவிப்பது சில வேளைகளில் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.//

     சமத்துவத்தை வேண்டுபவர்கள் நம் சமூகத்தை பிரமிடாக பாவிப்பது தவறான அனுகுமுறை. குறிப்பாக சமத்துவத்தை வெறுப்பவர்கள் இந்த தவறை செய்வது சரியில்லை. உன்மையிலேயே சமத்துவத்தை வேண்டுபவர்கள் இனிமேலும் இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என்பதற்காகத்தான் நான் மெனக்கெடுகிறேன். நமது சமூகம் பல சேரிகளாக பிரிந்த பரவியிருக்கின்றது. பலகுழுக்களிடையே சந்தர்ப்பவாத கூட்டணியை வைத்து சிலகுழுக்களை வன்முறையின் மூலம் மனித உரிமைகளை மறுப்பதும் தனது ஏவல் பணிகளை குறைந்த செலவில் அல்லது இலவசமாக செய்வித்துக்கொள்வதும் நடக்கிறது. இதற்கு பிரமிடு போடுவது எல்லாவிதத்திலும் தவறான ஒன்றுதான்.

     கவுண்டர், அருந்ததியர் என்று குறிப்பிடுவது எந்தவிதத்திலும் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கவில்லை. இது கண்டிப்பாக மேலேயுள்ள கீழேயுள்ள என்று குறிப்பிடுவதை விட பொருத்தமானது மற்றும் சமத்துவமானது.

     //விந்து வங்கிகளிலிருந்து விந்தைப் பெறுவது வெறும் மருத்துவச் செயல் முறையே தவிர அங்கு உடலுறவுக்கோ, உணர்ச்சிகளுக்கோ இடமில்லை//

     ஒரளவுக்குத்தான் சரி. குறிகள் இனையாவிட்டாலும், செல்கள் இணைகிறது. எவை இணையவேண்டுமோ அவை இணைந்து விடுகின்றன. அதே போன்று தான், திரவ நைட்ரஜனையும் இத்தியாதிகளையும் கண்டுபிடிக்காத காலத்தில் திருவிழாவில் இரவில் அனானியான ஒருவருடன் சேர்வதும். எவை இணையவேண்டுமோ அவை இணைந்து விடுகின்றன. இந்த காலத்திலும் திரவ நைட்ரஜனும் இத்தியாதிகளும் இல்லையென்றால் திருவிழாக்கள் பழைய களையுடன் திகழ்ந்திருக்கும்.

     //கவுண்டர் சாதிப்பெண்களை இழிவுபடுத்த வேண்டுமென உங்களை அறியாமலே, உங்களின் சாதிவெறி உங்களைத் தூண்டுகிறதோ//

     எந்த பெண்களையும் நான் இழிவுபடுத்துவதில்லை. நான் பெண்களை எல்லாவிதத்திலும் சமத்துவமாக நடத்துபவன். பெண்களுக்கு ஆண்கள் குறிப்பாக அவர்களின் சொந்தத்தில் உள்ள ஆண்களே இழைக்கும் இழிவுகளைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். எனக்கு சாதிவெறி எதுவும் கிடையாது. மனிதர்களின் ஆண்களின் அற்பத்தனத்தை சமரசமில்லாமல் விமர்சிக்கிறேன். நீங்கள் தமிழகத்தில் நாய்கள் கூட கவுண்டர் வன்னியர் என்று பிரிந்து இருக்குமோ என்று கேட்டவர் மற்றும் தங்களின் அருவருப்பை வெளிப்படுத்த இவ்வாறு எழுதினேன் என்று கூறியவர் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

     //சித்தரித்த சம்பவத்துக்கும், அவர் அதைச் சித்தரித்த விதத்துக்கும் பெரிய வேறுபாடு//

     நான் இன்னும் நாவலைப்படிக்கவில்லை. கொசுறுகளைத்தான் படித்துள்ளேன். எனினும் நீங்கள் கூறுவதைப்போன்ற ஒரு வேறுபாட்டை நான் உணரவில்லை. அப்படியேதும் இருந்தாலும் அது மக்கள் பிரிந்து கிடப்பதை அருவருப்பாக பார்க்கும் ஒருவரின் கடிமையான விமர்சனம் என்று தான் நான் எடுத்துக்கொள்கிறேன். உங்களுக்கு இருக்கும் உரிமை மற்றவர்களுக்கும் இருக்கிறதில்லையா.

     • திருத்தம்
      //குறிப்பாக சமத்துவத்தை வெறுப்பவர்கள் இந்த தவறை செய்வது சரியில்லை.// என்பது

      //குறிப்பாக அசமத்துவத்தை வெறுப்பவர்கள் இந்த தவறை செய்வது சரியில்லை.// இப்படி படிக்கவும்.

      அதாவது சமத்துவத்தை > அசமத்துவத்தை

    • வினவு எப்போதுமே ஜாதி வெறியும் மதவெறியும் பிடித்து அலைகிறது.சில சமயங்களில் தமிழர்களை பற்றி பேசி தன்னைத்தானே திருப்தி படுத்திகொள்ளும். இலங்கை தமிழர்கள் விசயத்தில் இது ஆடாத ஆட்டமா என்ன. இன்னும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறி மக்களை ஏமாற்றிவரும் சில தற்குறி கூட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. இதெல்லாம் அருவருப்பாக இருக்கிறது. தமிழனுக்கு சம்பந்தமில்லாத “தலித், தலித் ………..” என்று கூறி புதிய ஜாதியை உருவாக்குகிறது. இஸ்லாமின் கொடுமைகளை கண்டும் காணாமல் விட்டு விடுகிறது. தலித் என்று இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ஜாதியை முன்னிலை படுத்தி மற்ற தமிழர்கள் இழிவு படுத்துகிறது!! ஒரு தமிழன் (!) தனது சமுதாயத்தை இழிவு படுத்துவது “வினவு” மட்டுமே.

 9. ///தமிழர்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடின்றிக் கண்டிக்க வேண்டும்///
  முஸ்லீம்களைப் பற்றி கூறியிருந்தால் வினவு இந்நேரம் கொதித்து எழுந்திருக்கும்!
  இவர்கள் மட்டும்தான் தமிழர்கள்!!!!
  மற்றவர்களை வினவு தமிழராக மதிப்பதில்லை.
  ஆதிக்க ஜாதி எழுத்தாளர் அல்லது பணத்திற்கு விலைபோன எழுத்தாளர் என்று கூவி இருக்கும்!!!
  வாழ்க வினவுவின் தமிழ் பற்று!!!!!!!!!

 10. வினவு கட்டுரைக்கோ ,எனது க்ருத்துக்ளுக்கோ பதில் அளிக்க வக்கற்ற வியாசன் முந்திரி பழத்து முந்திரி கொட்டை போன்று ,நத்தையின் ஓட்டில் இருந்து அது தலைகாட்டுவது போன்று தலைகாட்டும் வியாசன் வெறும் தமிழ் கோஷம் இட்டுவிட்டு மீண்டும் மீண்டும் ஓடி ஒளிகின்றார். முடிந்தால் வினவு கட்டுரைக்கோ ,எனது க்ருத்துக்ளுக்கோ நேரடியாக பதில் அளிக்கவும் .

  • வினவில் கட்டுரை எழுதுகிறவர்களும், உங்களைப் போன்றவர்களும் இந்த நாவலை நியாயப்படுத்துவதற்கும், ஊதிப்பெருக்குவதற்கும் காரணம் அது நீங்கள் வெறுக்கும் ‘ஆதிக்க சாதியை’, அவர்களின் பெண்களை இழிவு படுத்துகிறது, அவர்களின் தலைக்கனத்தை அடக்குகிறது என்று நீங்கள் நினைப்பது தான் என்பது தான் எனது கருத்தாகும். ஆனால் நான் இந்த நாவலை எதிர்ப்பதற்குக் காரணம், வெறும் செவிவழி கதையை வைத்து, சும்மாவே எரிந்து கொண்டிருக்கிற சாதித்தீக்கு இந்த நாவல் எண்ணெய் ஊற்றுகிறது என்பதால் தான். அத்துடன் இந்த நாவல் மூலம் வெறுவாயை மென்று கொண்டிருந்த சாதிவெறி பிடித்த தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு அவல் கிடைத்த மாதிரிப் போய் விட்டது. தலித் பெண்களை இழிவுபடுத்துவது எப்படிக் கண்டிக்கப்பட வேண்டியதோ அது போன்றே தான் வேறு சாதித்தமிழ்ப் பெண்களை கீழ்மைப்படுத்துவதும் கண்டிக்கப்பட வேண்டுமென்பது தான் எனது கருத்தே தவிர, வினவிலுள்ள கட்டுரைக்கோ அல்லது உங்களின் உளறல்களுக்கோ பதில் எழுதுவது எனது நோக்கமல்ல, அப்படி பதில் எழுதுவதும் பெரிய வேலையில்லை. வெறும் கற்பனைக் கதைக்கு, தான் விரும்பியவாறு விளக்கங்களை அளித்து, சுற்றி வளைத்து எல்லாவற்றுக்கும் கவுண்டர்களின் சாதிவெறி தான் கரணம் என்று பிரச்சனைக்கு முடிவு கட்டப் பார்க்கிறார் இந்தக் கட்டுரையை எழுதும் வினவுக்காரர் ஒருவர். அது பதிலளிக்க வேண்டிய பெரிய ஆராய்ச்சிக் கட்டுரையாகத் உங்களுக்குத் தெரிகிறது, அதற்கு நான் என்ன செய்ய முடியும். 🙂

   • என்னுடைய சொந்தங்கள் இருக்கும் ஒரு சமுக மக்களை இழிவு படுத்துவதாக கூறுவது வியாசனின் அவதூரு . என்னுடைய முதல் விமர்சனமே இது தான் :
    ——————————-

    மனிதன் இயற்கையில் தனியானவன் கிடையாது. சமுகமயம் ஆக்கப்பட்டவன். IT துறை சார் ஊழியர்கள் வேலை இழக்கும் போது அடையும் மன நெருக்கடி , பெமு இன்று உணரும் தனிமை இதற்கு எல்லாம் மூல காரணம் இன்றைய நாகரிக மனிதர்கள் தம்மை தனிமை படுத்திக்கொண்டு தீவுகளாக வாழ்வது தான் . Let them socialize ! அப்படி என்ன தவறாக இறைவனை பற்றி எழுதப்பட்டு உள்ளது மாதொருபாகனில் ? நாவலை முழுமையாக படிப்பவருக்கு , அத் தம்பதிகள்[காளி-பொன்னா] குழந்தை பேறுக்காக அபாயகரமான சுற்றுதலை தி.கோடு மலையில் செய்யும் போது அடையும் மன உணர்வுகள் காய்நத மனதையும் ஈரமாக்குமே ! நான் கதையில் உள்ஆழ்ந்தபோது காளி-பொன்னா ஆகியவர்கள் இருவரையும் சிவனும் -சக்தியுமாகத்தான் நான் சிந்தனை செய்தேன் . நாத்திகனாக் இருந்த என்னை சிவன் மீது பக்தி ஏற்பட செய்தது இந்நாவல் [மாதொருபாகன்] தான் .சிவனுக்கும் ,சக்திக்கு பிறந்த முருகனின் பிறப்பு இயற்கையில் நடைபெறாதது , முருகனின் கருபிண்டத்தை கார்திகை மகளிர் புவியுலகில் பெற்று கொண்டது , பின்பு சக்தி அக்கருபிண்டங்களை ஒருங்கினைத்து ஆறுமுகனாக மாறியது இவை எல்லாம் அந்நாவல் காட்டிய ஆனால் நாவலில் வெளிப்படையாக இல்லாத படிமங்கள். என் தனிப்பட்ட வாழ்வில் சிவனின் மீது பற்றுடன் மதசார்பற்ற ஹிந்துவாக வாழ்வதே இன்று கேள்விக்குறியாவதால் , இனி என்ன மனதில் உள்ள சிவனையும் ,எதார்தத்தில் ,உண்மையில் சிவனின் புகழ் பாடும் இந்த மாதொருபாகன் நூலையும் எரிக்கத்தான் போகின்றேன் திருசெங்கோடு மலை ஏறிச்சென்று.
    pk என்ற திரைபடத்தில் வெளிகிரகவாசியாகிய நாயகன் கேட்பது போன்று கூட கடவுள் மீது எக் கேள்வியும் எழுப்பாத இன் நாவலில் உள்ள ஒரே குறைபாடு திருச்செங்கோட்டை களமாக கொண்டு பதினான்காம் நாள் திருவிழாவையும் [ carnival ]சமுகத்தில் நடைபெறும் விதிவிலக்கான இருதி காட்சிகளையும் கதையாசிரியர் நிகழ்தியதே ! ஊர் ,சாதி பெயர் இன்றி எழுதப்பட்ட ஆனால் வலிமையான் பூக்குழி நாவல் போன்று பொதுமைபடுத்த பட்டு இருப்பின் நன்றாக இருந்து இருக்கும். பிரச்சனையில் நகைமுரண் என்னவென்றால் இக்கதையில் நான் சென்சார் செய்யபட்ட வேண்டிய காட்சிகள் என்று உணர்ந்த பக்கங்கள் ஆயிரக்கணக்கில் பிரதி எடுக்கபட்டு ஊர் முழுவதும் விநியோகம் செய்யபட்டதே ! இனி பெருமாள் முருகனே நினைத்தாலும் இந்நாவலை மட்டும் அல்ல ,அவரின் என் நாவலையும், எந்த எழுத்தையும் வாசகர்களிடம் இருந்து நீக்கவோ ,தடை செய்யவோ முடியாது. எழுத்து எழுதப்பட உடன் அதன் எழுத்தாளன் மரணிக்கின்றான் அவன் எழுத்து மட்டுமே வாழும் எனற நவினத்துவ கருத்தாக்கதிற்கு ஏற்ப இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பெமுவின் எழுத்துக்கள் உயிர் வாழும் . ஒரு பிரதி கூட மிஞ்சாமல் அனைத்து பிரதிகளையும் எரித்து நூலின் கருத்துகளை மறைக்க இது ஒன்றும் சமண மத சுவடிகள் அல்ல

   • இன்று வியாசன் செய்யும் எதிர்வினைகள் எல்லாம் நேரடியாகவே தலித் மக்களை இழிவு செய்வதற்கும் அவர்களின் மீது அவ்தூரு செய்வத்ற்கும் மட்டும் பயன்படுமே அல்லாமல் வேறு வழியில் பயன் அளிக்காது. இத்தகைய வியாசனின் செயல் அறிவுக்கு புறம்பானது மற்றும அல்ல மாபெரும் கோழைத்தனமும் ஆகும். என்னை போன்ற ஒரு தமிழன் சுய சாதியின் மீது கேள்வி எழுப்புவதும், சுய சாதியின் தேவையற்ற விழுமியங்கள் மீது கேள்வி எழுப்புவதும் இவருக்கு இடைநிலை சாதிகளுக்கு எதிரானதாக தெரிவதற்கு காரணம் அவரின் சுய சாதி பற்று இல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும் ?

    சாதியத்துடன் பிறக்கும் எந்த தமிழனும் சுயமாக சாதியத்தை விட்டு வெளிவரமுடியாது என்ற உண்மையுடன் கூறுவது என்றால் நான் சாதி மறுப்பு பேசுவதற்கு காரணம் கவுண்டர் சமுகத்து என் பெரியப்பாவும் ,பெரியாரும் என்றால் மிகையாகாது. 50 ஆண்டுகளுக்கு முன்பே சாதியத்தை தூக்கி எறிந்து விட்டு சாதிய கலப்பு திருமணம் செய்த என் பெரியப்பாவின் வாழ்வை சிறு என் வயதில் இருந்தே அவதானித்து கொண்டு இருக்கின்றேன் ! அதே சமையம் பெரியாரின் சாதி ஒழிப்பு கருத்துகளையும் உள் வாங்கும் போது மனிதனிடம் மாற்றம் ஏற்படும் தானே ? இன்று வரைகூட என் பெரியப்பாவின் வாழ்க்கை சாதி என்ற தேவையற்ற விழுமியங்களை தொடாமல் செல்லும் போது அதுவே அவர் வழியில் நானும் சாதிய கலப்பு திருமணம் செய்ய எனக்கு முழு ஆதரவையும் கொடுத்தது.

    என் மீது ஏதேனும் கோபம் ,கருத்து வேறுபாடு என்றால் அதனை எல்லாம் தலித் மக்களின் மீது மடை மாற்றிவிடுவது நாகரிகம் அற்ற செயல் மட்டும் அல்ல மூட தனமும் கூட !

   • Viyasan,

    [1]இந்த விடயம் தொடர்பாக உங்களின் முதல் பின்னுட்டம் 10ல் முதலில் வினவை குற்றம் சாட்டியுள்ளிர்கள். சரி வினவு தவறாக எழுதியது என்றே வைத்துகொள்வோம்.

    [2]இப்போது எழுதிய பின்னுட்டத்தில் நீங்கள் கூறுவது “இந்த நாவல் மூலம் வெறுவாயை மென்று கொண்டிருந்த சாதிவெறி பிடித்த தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு அவல் கிடைத்த மாதிரிப் போய் விட்டது” என்று. நீங்கள் யாரை குறிப்பிடுகின்றிர்கள் என்று தெளிவாக கூறமுடியுமா ?

    [3] ஏன் கேட்கின்றேன் என்றால் இக்கட்டுரை எழுதிய வினவு ஒரு நக்சல்பாரி இயக்கத்தை சேர்ந்தது. பல்வேறு தரப்பு மக்களும் அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் சாதியத்தை மறுத்து தான் கம்யுனிச கொள்கையுடன் இயங்குபவர்கள்.

    [4]உங்களின் பின்னுட்டம் 10க்கு கூட நான் மானுடவியல் கருத்துகளை சார்ந்து தான் பதில் கூறியுள்ளேன்.

    எது ,எந்த கருத்து உங்களை தலித் மக்களுக்கு எதிரான வன்மத்துடன் இப்படி பேச வைகின்றது என்று தெரிந்து கொள்ளலாமா ?

    //அத்துடன் இந்த நாவல் மூலம் வெறுவாயை மென்று கொண்டிருந்த சாதிவெறி பிடித்த தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு அவல் கிடைத்த மாதிரிப் போய் விட்டது. தலித் பெண்களை இழிவுபடுத்துவது எப்படிக் கண்டிக்கப்பட வேண்டியதோ அது போன்றே தான் வேறு சாதித்தமிழ்ப் பெண்களை கீழ்மைப்படுத்துவதும் கண்டிக்கப்பட வேண்டுமென்பது தான் எனது கருத்தே தவிர, வினவிலுள்ள கட்டுரைக்கோ அல்லது உங்களின் உளறல்களுக்கோ பதில் எழுதுவது எனது நோக்கமல்ல, அப்படி பதில் எழுதுவதும் பெரிய வேலையில்லை//

    • தமிழ் அவர்களே,

     இப்படி பாயிண்டு போட்டு கேள்வி கேட்டாலும் இந்தத்துத்துவ கைக்கூலிகள் பதில் சொல்லமாட்டார்கள். ஏனெனில் கவுண்டனையோ பிள்ளையையோ செட்டியையோ பார்ப்பனிய இந்துமதம் அனைவரையும் சூத்திராள் என்று அதவாது தேவடியாள்களின் பிள்ளைகள் என்று தான் சொல்கிறது. அதைப் பார்த்தே நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாக துப்பில்லாத நடசேன்பிள்ளை சிவந்தேரனாகிய வியாசன், ஆதிக்க சாதி தமிழ் பெண்கள் என்று கூவுவது கடைந்தெடுத்த அயோக்கித்தனம். ஆர் எஸ் எஸ் காரனும் இந்து முண்ணனி இராமகோபாலனும் மற்றும் இந்துத்துவ வியாசன்களும் தங்கள் வீட்டுப் பெண்ணை இழிவுபடுத்துகிற இந்துமதத்தை நடுரோட்டில் எரிப்பார்களா தமிழ்?

     அது தவிர மானுடவியல் கருத்துகளை சார்ந்து விவாதிப்பதாக தாங்கள் மெனக்கெடுகிறீர்கள். மேற்கொண்டு விவாதிக்கிற பொழுது வெள்ளாள சாதிவெறியர்கள் கீழ்கண்ட சொலவடைகளை தங்கள் வட்டாரங்களில் பயன்படுத்துகின்றனர். இதற்கு எந்த மானுடவியல் கருத்துக்களை வெள்ளாளர்கள் பயன்படுத்தினார்கள் என்று கேட்டுச்சொல்லுங்கள்.

     1. பள்ள மகளுக்கு பிள்ள மக அடிமையா?
     2. வழக்கங்கெட்ட வண்ணாப் பையன் மாதிரி இருக்கே
     3. கொற அழுக அழுகுறா பாரு!

     பள்ள மகளையோ வண்ணாப் பையனையோ, கொறவனையோ வெள்ளாள ஆதிக்க சாதி வெறியர்கள் தமிழர்களாக கருதுவதில்லையா? ஆர் எஸ் எஸ் காரனைவிட கடைந்தெடுத்த அயோக்கியர் தான் இந்த வியாசன். இதையும் தாண்டி தமிழ், தமிழ்பற்று என்று கதறுவது சுத்த மோசடி!

     • கெழடுக நூனாயம் தாங்க முடியல 🙂 சிலருக்கு அறளை பெயர்ந்து விட்டதோ என்னவோ, பிள்ளை என்ற பெயரிலுள்ள ஈழத்தமிழனை எல்லாம் வியாசன் என்று அழைக்கத் தொடங்கி விடுவார்கள் போலிருக்கிறது. அப்பா நடேசபிள்ளை சிவேந்திரன், நீ யார் பிள்ளையோ, யார் பெற்ற பிள்ளையோ நீ வாழ்க!

      • உண்மையிலேயே தென்றலுக்கு அறளை பெயர்ந்து விட்டது போல் தான் தெரிகிறது. எதைப்பற்றி முறைப்பாடு செய்வது என்று கூடத் தெரியவில்லை. கடைசியில் தமிழ்ப் பழமொழிகளுக்குக் கூடச் சாதிப்பூச்சுப் பூசுகிறார். தமிழில் பழமொழிகள், சொலவடைகள் போன்றவை எல்லாச் சாதியினர் மத்தியிலும் எல்லோரையும் பற்றித் தானிருக்கிறது. அவை தாழ்த்தப்பட்ட சாதிகளை மட்டும் குறிப்பவை அல்ல. மிகவும் நகைச்சுவை மிகுந்த பழமொழிகள் ஆதிக்க சாதிகளாகிய, பார்ப்பனர்கள், செட்டியார்களைப் பற்றியும் உண்டு. பார்ப்பனர்களைப் பற்றிய ‘உப்புக்கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல’ என்ற பழமொழியை தென்றல் கூட இங்கு பாவித்திருக்கிறார் என்று நம்புகிறேன்.

       உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல
       ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு அய்யங்காருக்கு மூணுகொம்பு
       அண்டைவீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்
       பின் புத்திக்காரன் பிராமணன்
       ஒரு பிடிச் சோற்றுக்கு பார்ப்பான் ஊர்வழி போவான்
       பானையிலே சோறு இருந்தால் பார்ப்பான் கண்ணடையான்

       கள்ளர், மறவர், அகம்படியார் மெல்ல மெல்ல வெள்ளாளர்ஆனார்
       குடியான புள்ள வெளையாட போனாலும் ஒரு கத்த வெறகோட வரும்
       முதலியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு
       கிள்ளி எடுக்க சதை இல்ல பேரோ தொந்தியா பிள்ளை
       சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
       வெள்ளாளர் செய்த வேளாண்மை வீடு வந்து சேராது

       முட்டாள் நாயக்கனும் மொரட்டு துலுக்கனும் பட்டாளத்துக்கு ஒத்துவராது
       இராவுத்தனே சினந்து இருக்கயில் குதிரை கோதுமை ரொட்டிக்கு அழுததாம்

       செட்டி சிங்காரிக்கிறத்துக்குள்ளே பட்டணமே பறி போகுமாம்
       ஆத்துல போட்டாலும் செட்டி அளந்துதான் போடுவான்

       • ஆதிக்க சாதி தமிழச்சிகளுக்கு இழிவு என்று கூப்பாடு போட்ட அறளை பெயராத வியாசன், இங்கு சாதியச் சொலவடைகளே இழிவு அல்ல நகைச்சுவை என்ற அளவிற்கு புத்திக் கூர்மையுடன் விவாதித்திருக்கிறாரே! தனக்கென்று வந்தால் அதில் சாதியப் பூச்சு கிடையாது! ஆனால் சாதியைக் கண்டிக்கிற பொழுது இதே கூட்டம் ஆதிக்க சாதி தமிழச்சிகளுக்கு இழிவாகும் என்று அம்மணமாக நிற்கிறது. வெட்கங்கெட்டவர்களே மான ரோசம் எதாவது இருக்கிறதா?

        • கொங்கு வட்டார சாதி வெறியர்கள் அவர்களின் காட்டில் வேலை செய்யும் தெலுங்கு மொழி பேசும் தலித் மக்களை நோக்கி பேசும் பல சாதிவெறிபிடித்த சொல்லாடல்களை ,பழமொழிகளை என்னால் உதாரணமாக கூறமுடியும்.அத்தகைய சொல்லாடல்களில் உள்ள இழிவு பொருள் கருதி அவற்றை வினவில் பின்னுட்டத்தில் முன் வைக்க எனக்கு மிகவும் வேதனையாகவும் ,சங்கடமாகவும் ,அக் குறிப்பிட்ட தலித் சமுக மக்களை மேலும் வேதனை படுத்தும் என்பதாலும் தவிர்க்கவே விரும்புகின்றேன் .

         • இந்தப் பிரச்சனையில் பெருமாள் முருகன் கூட ஒரு நாளைக்கு இத்தனை பேருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாரோ தெரியாது, ஆனால் தேவையில்லாமல் வாயைக் கொடுத்ததால், அதற்குப் பதில் எழுதுவதுமொரு வேலையாகப் போய்விட்டது. 🙂

          குழந்தையில்லாத தமிழ்ப் பெண்கள் (குறிப்பாக கவுண்டர் சாதித் தமிழச்சிகள்) பதினாலாம் திருவிழாவுக்குப் போய் ஊர், பேர், முகம் தெரியாத கண்டவனுடனும் உறவு கொண்டு குழந்தை பெறும் வழக்கம் இருந்ததென்று ஒட்டு மொத்த சமூகத்தையும், அவர்களின் பெண்களின் ஒழுக்கத்தையும் இழிவு படுத்தும் வகையில் எழுதிய கதை கண்டிக்கப் வேண்டியதொன்று, என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, இடையில் புகுந்து சொலவடையையும், பழமொழியையும் பற்றி பேசும் பத்தாம்பசலித்தனத்தைப் பார்த்து, அழுவதா சிரிப்பதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒன்றில், இவர்களுக்கு இந்த விடயத்தில் ஆழம் புரியவில்லை அல்லது சும்மா எதாவதையாவது உளறி பேசப்படும் விடயத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

          இது எப்படியானதேன்றால், உதாரணமாக, ஒருவர் மீது கொலை வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, மற்றவர் குறுக்கிட்டு கொலை, கனம் நீதிபதி அவர்களே, கொலை செய்யப்பட்டவன் ஒருமுறை என்னை மரியாதையில்லாமல் இழிவாக, என்னுடைய சாதிப்பெயர் சொல்லிக் கூப்பிட்டான், ஆகவே அவனைக் கொலை செய்தது நியாயமானதே என்று கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்குவது போன்றது. இனிமேலாவது இவர்களுக்கு புரியுமென நம்புகிறேன்.

          சாதியச் சொலவடைகள் இழிவானது தான் ஆனால் ஒரு சமூகத்தின் பெண்களின் ஒழுக்கத்தைப் பற்றிக் கேள்வி கேட்பதும், அவர்கள் தமது கணவனிருக்க, குழந்தை வேண்டி கண்டவனுடனும் படுக்க கூடியவர்கள் என்று கதை புனைவதும், அந்த சமூகத்தில் பலருக்கு உண்மையான தகப்பன் யார் என்பது தெரியாது என்பது போன்ற கருத்து வரும் வகையில் செவிவழிக் கதைக்கு கண், மூக்கு வாய் எல்லாம் வைத்துக் கற்பனையில் கதை புனைவதுடனும் ஒப்பிடும் போது, சாதியச் சொலவடைகள் அந்தளவுக்கு இழிவானதல்ல. ஆகவே சாதியச் சொலவடைப் பிரச்சனையையும், மாதொருபாகன் பிரச்சனையையும் ஒப்பிட முடியாது, அப்படி ஒப்பிடுவதும் வெறும் முட்டாள்தனமாகும். எல்லாப் பிரச்சனைகளும் ஒரேமாதிரியானவையல்ல.

          • அய்யா வியாசரே ,

           பெருமாள் முருகன் எழுதியிருப்பது முழுக்க முழுக்க ஆதிக்க சாதியான கவுண்டர்களைப் பற்றி. நீர் எதற்கையா தலித் பற்றி பேசினீர்கள்? அதாவது எதற்க்காக /**சாதிவெறி பிடித்த தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு*/ என்று சொன்னீர்கள்?

           ஆதிக்கசாதிகாரங்க தாழ்த்தப்பட்ட மக்களை பார்த்து கூறும் சொலவடைகளை தாங்கள் நகைசுவையாக சொல்லப்பட்டது என்று கூறினீர்கள். அது மட்டுமல்லாது உமது பங்கிற்கும் நெட்டில் தேடி சில சொலவடைகளை அடித்து விட்டீர்கள். சரி அந்த கதை கிடக்கட்டும்.

           தோழர் தென்றல் சொன்ன சொலவடைகள் தெளிவாக ஆதிக்க சாதிகள் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதற்காக சொன்னது.

           தாங்கள் உடனே கோபப்பட்டு நெட்டில் தேடி எடுத்துபோட்ட சொலவடைகளும் அதே ஆதிக்க சாதிகள் பிற ஆதிக்க சாதிகளை இழிவுபடுத்துவதற்கோ அல்லது நகைசுவைக்ககவோ பயன்படுத்தியது.

           ஆனால் என் கேள்வி என்னவெனில், தாழ்த்தப்பட்ட மக்கள் இப்படி ஆதிக்க சாதிகளை இழிவுபடுத்தியது போலவோ, நகைசுவைக்காகவோ கூறிய சொலவடை அல்லது பழமொழி ஏதாவது இருக்கிறதா?

           இதற்கு பதில் கூற வேண்டிய கடமை தங்களுக்கு தான் இருக்கிறது? ஆதிக்க சாதிகளுக்கு முட்டுக் கொடுக்க /**சாதிவெறி பிடித்த தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு*/ என்று கூற கடைமைப்பட்ட தாங்கள் இதற்கும் கடமைபட்டவராகிண்றீர்கள்.

           நன்றி.

          • சிவப்பு , இந்த சாதிவெறி பிடித்த தறுதலைகள் எல்லாம் நாம் எத்துனை முறைகேட்டாலும் பதில் கொடுக்காதுங்க ! ஆனா ஒன்னு இதுங்களின் சாதிவெறி வினவில் அம்பலம் ஆகுது அல்லவா ?

           /**சாதிவெறி பிடித்த தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு*/

          • இதை கூறியது சாதி வெறிபிடித்த வியாசன் என்னும் போது …சன் தான் முறையாக பதில் தரவேண்டும்

           /**சாதிவெறி பிடித்த தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு*/

          • \\அந்த சமூகத்தில் பலருக்கு உண்மையான தகப்பன் யார் என்பது தெரியாது என்பது போன்ற கருத்து வரும் வகையில் செவிவழிக் கதைக்கு கண், மூக்கு வாய் எல்லாம் வைத்துக் கற்பனையில் கதை புனைவது//

           உண்மையில் அந்த சமூகத்தை வியாசன்தான் இழிவு படுத்துகிறார்.குழந்தை பேறின்மை என்பது அரிதான ஒன்று.ஆயிரத்தில் ஒரு இணையர் .அல்லது பத்தாயிரத்தில் ஒரு இணையருக்கு குழந்தை இல்லாமல் போகலாம்.குழந்தை இன்மைக்கு ஆண் பெண் இருபாலருமே காரணமாக இருக்கலாம் என்று அறிவியல் தெளிவு படுத்தி விட்ட காலத்தில் வாழ்கிறோம்.ஆகவே குழந்தை இல்லாத இணையரில் பாதி பேருக்கு பதினான்காம் நாள் திருவிழாவால் பயனில்லை.குழந்தை இன்மைக்கு பெண்தான் காரணமாக இருந்திருப்பின் அவர் பதினான்காம் நாள் திருவிழாவுக்கு போயிருந்தாலும் குழந்தை பிறந்திருக்காது.மேலும் ஆண் பெண் இருவருமே குழந்தை பெறுவதற்கான உடற்தகுதியை கொண்டிருந்தாலும் அனைத்து ஒன்று கூடலும் குழந்தையை உண்டாக்கி விடாது.ஆகவே ”சாமி கொடுத்த பிள்ளை ”
           மிக மிக அரிது.அரிதிலும் அரிது.”அந்த சமூகத்தில் பலருக்கு உண்மையான தகப்பன் யார் என்பது தெரியாது என்பது போன்ற கருத்து வரும் வகையில்” கதை உள்ளதாக என்று வியாசன் கூறுவது அப்பட்டமான இட்டுக்கட்டுதல் ஆகும்.

           \\செவிவழிக் கதைக்கு கண், மூக்கு வாய் எல்லாம் வைத்துக் கற்பனையில் கதை புனைவதுடனும் ஒப்பிடும் போது, சாதியச் சொலவடைகள் அந்தளவுக்கு இழிவானதல்ல.//

           தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும். ”பிள்ளைவாள்” களை இழிவு படுத்தும் பழமொழிகளை படித்தால் கேட்டால் இவர் ”சாதியச் சொலவடைகள் அந்தளவுக்கு இழிவானதல்ல”.என்று சொல்வாரா.

           அப்புறம் செவிவழிக்கதை என்று வியாசனே ஒப்புக்கொள்ளும் செய்திக்கு ஆதாரம் கேட்டு கொந்தளிக்கிறாரே.வினவில் பல வாதங்களை பார்க்கும்போது அவருக்கு சிப்பு சிப்பா வருமாம். இதை பார்க்கும்போது அவருக்கே சிரிப்பு வரவில்லையா.

           \\, இடையில் புகுந்து சொலவடையையும், பழமொழியையும் பற்றி பேசும் பத்தாம்பசலித்தனத்தைப் பார்த்து, அழுவதா சிரிப்பதா என்று எனக்குத் தெரியவில்லை.//

           மஞ்சள் பந்து மாமேதை சிரிக்கலாம் என்று எனது சிற்றறிவுக்கு எட்டிய யோசனையை சொல்லி வைக்கிறேன்.

           ஒரு செவிவழிச்செய்தியை வைத்து புனையப்பட்ட, கேவலம், ஒரு கற்பனை கதைக்கே எவ்வளவு ஆத்திரம் வருது ஆதிக்க சாதி யோக்கியர்களுக்கு.ஆனால் சமூக வாழ்க்கையில் மிக சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை பற்றிய இழிவுபடுத்தும் பழமொழிகள் அம்மக்களுக்கு எவ்வளவு வேதனையை தரும்.இது எதார்த்தமான உண்மை.இன்றும் நடந்து வரும் கொடுமை.அது பற்றி பேசுவது பத்தாம்பசலித்தனம் என்கிறார்.எப்படி என்று மஞ்சள் பந்து போட்டோ போடாமலோ அவர்தான் விளக்க வேண்டும்.

          • எங்க ஊர்ப்பக்கம் புள்ளமான் புத்திய காட்டாம போக மாட்டான் என்று சொல்வார்கள்.

           \\”பிள்ளைவாள்” களை இழிவு படுத்தும் பழமொழிகளை படித்தால் கேட்டால் இவர் ”சாதியச் சொலவடைகள் அந்தளவுக்கு இழிவானதல்ல”.என்று சொல்வாரா.//

       • வியாசன்,

        சொலவடைஎல்லாம் சரிங்க அய்யா. சொலவடைகளின் பயன்பாடு எப்படி இருக்கிறது? தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிகளைப் பற்றி நகைசுவை உணர்வு பொங்க குறிப்பிடும் சொலவடைகள் என்ன என்று கூறுவீர்களா?

        சாதிக்குத் தக்கன புத்தி என்று கூறுவது போல பழமொழிகளைப் பயன்படுத்துவது தாழ்த்தப்பட்ட மக்களா இல்லை ஆதிக்க சாதிகளா?

        அதுவும் ஆதிக்க சாதிகளின் பார்வையில் சொல்லும் பொது நகை சுவையாகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் பார்வையில் சொல்லும் போது /*சாதிவெறி பிடித்த தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு */ சாதி வெறியாகவும் தெரிகிறது.

        ————————————

        இங்கு பெருமாள் முருகன் இதை ஆதிக்க சாதியின் பார்வையில் தான் சொல்லியிருக்கிறார். இதை ஒரு நகைசுவையாக அணுகுவதற்கு தங்களது பார்பனிய சைவ ஆணாதிக்க சாதி வெறி தடுக்கிறது. ஒரு ஆதிக்க சாதிக்காரனுக்கு பிரச்சினை என்றவுடன் இன்னொரு ஆதிக்க சாதிகாரனுக்கு கோபம் வருவது இயல்பு தானோ? அது தான் போலி டொக்டர் இராமதாஸ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக கூட்டிய கூட்டத்திற்கு சாதி பேதம் இல்லாமல் எல்லா ஆதிக்க சாதிகாரர்களும் வந்தார்கள்.

        உங்களது பார்வை முழுக்க முழுக்க சாதிய ஆணாதிக்க கண்ணோட்டத்தில் இருந்து தான் வருகிறதோ தவிர வேறேதும் அல்ல.
        ———————————–

        தமிழர் தமிழரைத் தான் மணக்க வேண்டும் என்கிறீர்கள். சரி, ஆனால் இந்த காலக்கட்டங்களில் இது சாத்தியமா. இன்னும் பழைய காலத்திலேயே மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இருந்தால் எப்படி?கடலே காணாம பொய் விடும் போல இருக்கிறது. கவுண்டர் சாதிக்குள்ளேயே மனப்பெண் கிடைக்காமல் அல்லாடும் ஆண்கள் என்ன செய்ய வேண்டும்?. மணமகன் கிடைக்காமல் அல்லாடும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?.

        ஒன்று சாதி மதம் பாராமல் தலித் என்றும் பாராமல் தனது பெண்ணையோ, பையனையோ திருமணம் செய்விக்க இந்த சமுதாயம்(கவுண்ட,வெள்ளாள) முன் வர வேண்டும்?

        இரண்டு மொழி பேதம் பார்க்காமல் திருமணம் செய்து ஒன்று கலக்க வேண்டும்.

        அல்லது திருமணம் செய்யாமல் தான் இருக்க வேண்டும். இதில் ஆண்கள் நிலைக் கூட பரவாயில்லை. ஏனெனில் ஒரு ஆணின் வேறொரு பெண்களின் தொடுப்பு பற்றி சமுதாயம் பெரிதும் கண்டு கொள்வதில்லை. இதை ஆம்பளைனா கொஞ்சம் முன்னப் பின்ன தான் இருப்பான் என்று சமாளிப்பார்கள். ஆனால் திருமணம் ஆகாமல் இருக்கும் முதிர்கன்னிகளின் நிலை என்ன? சாதியத்தை (அதாவது விந்தணுவை) சுமக்கும் பெண்ணானவள் ஒன்று தமது சாதிக்குள்ளேயே அதை சும்மாக வேண்டும் அல்லது முதிர்கன்னியாக இருக்க வேண்டும் அல்லது சாக வேண்டும். இது தான் அந்த ஆதிக்க சாதியின் நீதி. இந்த மனு நீதிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மீறப்பட்டாலும் அதற்க்கு ஆகும் செலவும் அதிகம்.

        —————————
        நாட்டாமை படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை பெண்டாண்ட குற்றத்திற்காக அந்த பெண்ணையே மனம் செய்ய சொல்லுவாரு நாட்டாமை. உடனே கேவலம் ஒரு சக்கிலிப் பெண்ணை கண்ணாலம் கட்ட சொல்றானே என்று கோவப்பட்டு பொன்னம்பலத்தின் அப்பா கவுண்டர் நாட்டாமையை சுட்டு கொன்று விடுவார். இதன் கடைசியில் இவர்களை ஊரை விட்டு தள்ளி வைத்து விடுவார்கள். ஆதிக்க சாதி வெறியர்களின் மைனர் விளையாட்டுகளின் மத்தியில் பலி கொடுக்கப்பட்டதோ ஒரு தாழ்த்தப்பட்ட பெண்.

        • சிவப்பு,

         //தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிகளைப் பற்றி நகைசுவை உணர்வு பொங்க குறிப்பிடும் சொலவடைகள் என்ன என்று கூறுவீர்களா?///

         நான் மேலே குறிப்பிட்ட பழமொழிகளில் பெரும்பாலானவற்றை நானே நேற்றுத் தான் முதல்முறையாகக் கேள்விப்பட்டேன். நான் கேட்கும் (தேடும்) போதெல்லாம் கூகிளாண்டவர் தந்து கொண்டேயிருக்கிறார். அகவே நீங்களே கூகிளில் தேடிப் பெற்றுக் கொள்ளலாம் தானே. 🙂

         //இங்கு பெருமாள் முருகன் இதை ஆதிக்க சாதியின் பார்வையில் தான் சொல்லியிருக்கிறார் . இதை ஒரு நகைசுவையாக அணுகுவதற்கு தங்களது பார்பனிய சைவ ஆணாதிக்க சாதி வெறி தடுக்கிறது..///

         நீங்கள் இன்னும் மாதொருபாகன் நாவலை முழுமையாகப் படிக்கவில்லைப் போல் தெரிகிறது. பெருமாள் முருகன் ஆதிக்க சாதியின் பார்வையில் எழுதியிருக்கலாம், ஆனால் அவர் நகைச்சுவைக்காக எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அப்படியிருக்க, எப்படி நான் நகைச்சுவையாக அணுக முடியும். சீரியசான விடயத்துக்கெல்லாம் சிரிக்க வேண்டுமென்கிறீர்களா?

         //தமிழர் தமிழரைத் தான் மணக்க வேண்டும் என்கிறீர்கள். சரி, ஆனால் இந்த காலக்கட்டங்களில் இது சாத்தியமா///

         சாத்தியமே. ஏனென்றால் தமிழ்நாட்டிலேயே எவ்வளவோ பெண்கள் உள்ளனர் அது மட்டுமன்றி இந்தியாவிலுள்ள தேசிய இனங்களில் நாடுகடந்து பல நாடுகளில் வாழுகிற ஒரே இனம் தமிழர்கள் தான். தமிழ்நாட்டில் தமிழ்ப்பெண்கள் கிடையாது விட்டால், உலகத் தமிழர்களிடம் தேட வேண்டியது தானே.

         ///ஒன்று சாதி மதம் பாராமல் தலித் என்றும் பாராமல் தனது பெண்ணையோ, பையனையோ திருமணம் செய்விக்க இந்த சமுதாயம்(கவுண்ட,வெள்ளாள) முன் வர வேண்டும்?///

         உண்மை. அது தான் இந்தப் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்க முடியும்.

         //இரண்டு மொழி பேதம் பார்க்காமல் திருமணம் செய்து ஒன்று கலக்க வேண்டும்.///

         உங்களின் குடும்பத்த்திலேயே, உங்களின் அண்ணா மாதிரி கன்னடப் பெண்ணைத் திருமணம் செய்தால் அவர்களின் வாரிசுகளுக்கு அவர்கள் தமிழர்களா அல்லது கன்னடர்களா என்ற அடையாளக் குழப்பமேற்படும். ஒரு சில தலைமுறைகளின் பின்னர் தமிழினம், அமெரிக்காவில் Hispanics போல கலப்பினமாக மாறியிருப்பார்கள். அது ஒரு பெரிய பிரச்சனையாக உங்களுக்குத் தெரியாது விட்டால், நீங்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம். ஆனால் மொழியுணர்வுள்ள, பொறுப்புள்ள தமிழர்கள் தமது வருங்கால சந்ததியினரையும் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதுண்டு. அதிலும் குறிப்பாக, தமக்கென சொந்தமாக நாடற்ற, மொழி, கலை,கலாச்சாரங்களை இழந்து விடக் கூடிய நிலையிலுள்ள தமிழர்கள் போன்ற சிறுபான்மையின மக்கள் கலப்பு மணங்கள் புரிய முன்னர் கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

         • வியாசன்,

          எனது அண்ணிக்குத் திருமணம் செய்யும் பொது தமிழ் தெரியாது. இப்போது தமிழ் கற்றுக் கொண்டு விட்டார். உண்மையில் அவர்களின் குடும்பத்தினர் சுமார் 60(சரியாக நினைவில் இல்லை ஆண்டுகளுக்கு முன்பே(சேலத்தில் இருந்து) வேலைத் தேடி(அணைக் கட்டுவதற்கு என்று நினைக்கிறன்) கர்நாடகாவிற்கு சென்று விட்டனர்.

          பொருளாதார சுமைக்கு முன்பே தமிழோ,தமிழகமோ, இந்தியாவோ, மதமோ, சாதியோ(கவுண்ட) ஒன்றுமேயில்லை. வயிற்றிற்கு சோறா இல்லை காது குளிர கேட்க தேவாரமா இல்லை கண் குளிர பார்க்க திருச்செங்கோடு பறையில் வீற்றிருக்கும் மாதொருபாகனா என்றால் சோறு தான் முதலில் நினைவிற்கு வருகிறது.அதற்க்கப்புறம் தான் முருகன் வரான்.அப்புறம் தான் தேவாரம் வருகிறது. ஆனால் அதே ஏழைகளுக்கு சோறா மானமா என்றால் மானம் தான் முதலில் வருகிறது. அதனால் தான் கடன் வாங்கிய ஏழை விவசாயிகள் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள்(அனைத்து உழைக்கும் சாதிகளும் இதில் அடக்கம்).

          உண்மையில் பொருளாதார உழைப்பு சுரண்டலுக்காக தான் தொழில்ரீதியிலான இந்த சாதிய கட்டுமானத்தை பார்ப்பனீயம் நிறுவியிருக்கிறது. அதை அடித்து நொறுக்காமல் சாதி பாராமல் தமிழர்கள் ஒன்று கலப்பது சாத்தியமில்லை.

          நன்றி.

          • சிவப்பு , இந்த __________ இன்னுமா பேசிக்கொண்டு இருகிங்க ? விட்டு தள்ளுங்க அந்த நா….! மனுசனுக்கு பிரச்சனை என்று வரும் போது சொந்த சாதிக்காரன் என்னிக்கும் வந்தது இல்லை ! நீங்க வேண்டுமானால் பாருங்க இதுவை சிங்களவன் துரத்திய போது இதுக்கு கலப்பு இன கனடா காரன் தானே சோறுபோட்டான் !

          • சிவப்பு,

           சோற்றுக்குப் பின்னால் தான் மொழியுணர்வு, இனவுணர்வு எல்லாம் என்பது சோசலிச/கம்யூனிச மூளைச்சலவையின் விளைவு என்று தான் நான் நினைக்கிறேன். உதாரணமாக தமிழுக்காக தமதின்னுயிரை ஈந்தார்கள் என்று கம்யூனிஸ்டுகள் கூட விழா நடத்தினார்களோ அந்த நடராஜனும், தாளமுத்துவும் கூட அன்றாடங்காய்ச்சிகள் தானே தவிர பெரும் பணக்காரர்கள் அல்ல. அவர்களும் பொருளாதார சுமையின் வலுவைத் தாங்க முடியாமல் தவித்த தமிழர்கள்தான். அவர்கள் ஏன் தம்முடைய வயிற்றுப்பிழைப்பைப் பார்த்தால் போதும் என்று போய்க்கொண்டேயிருக்காமல், இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டார்கள்? அவர்களின் மொழியுணர்வும், இனவுணர்வும் அதற்குக் காரணமில்லை என்கிறீர்களா. அது உங்களின் கருத்தானால், உண்மையில் அவர்களின் நினைவு ஆண்டில் நீங்கள் அவர்களின் ஈகையைக் களங்கப்படுத்துவது மட்டுமன்றி, அவர்களை இழிவுபடுத்துகிறீர்கள் என்று தான் கூற வேண்டும்.

           உண்மையில் இனவுணர்வு, மொழியுணர்வு என்பது ஒவ்வொரு மனிதனிடமும் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. சரியான தலைமையின் கீழ் அது ஆக்க பூர்வமான முறையிலும் வழி நடத்தப்படலாம் அல்லது அதுவே இனக் கலவரங்களையும், அழிவையும் உண்டாக்கவும் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, இலங்கையில் நடந்த இனக்கலவரங்களில் எல்லாம் தமிழர்களைத் தாக்கிய சிங்களவர்கள் எல்லாம், பொருளாதாரச் சுமை எதுவுமற்ற பணக்காரர்கள் அல்ல. சாதாரண அன்றாடங்காய்ச்சி சிங்களக் கூலிகள் தான், அன்று வரை தமது நண்பர்களாக, அயலவர்களாக இருந்த தமிழர்களைத் தாக்கினார்கள் ஏனென்றால் இயல்பாகவே மறைந்திருந்த அவர்களின் இன, மொழியுணர்வு தமிழர்களைத் தாக்கத் தூண்டியது. கர்நாடாகாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது அங்கு கூலித் தமிழர்களைத் தாக்கியதும் கன்னடக் கூலிகள் தான் . ஆகவே சோற்றுக்குப் பின்பு தான் இன, மொழி, மதவுணர்வுகள் என்பது விவாதத்துக்குரியது.

           எந்த நாட்டிலும் ஏதோ ஒருவகையில் ஒருவரையொருவர் சுரண்டும் கட்டமைப்பு இருந்து கொண்டு தானிருக்கிறது. மேலைநாடுகளில் சாதிக்கட்டமைப்பு இல்லாது விட்டாலும், அங்கும் தொழிலாளர்கள், அடிமட்டத்திலுள்ளவர்களும், மேல்வகுப்பினரால் சுரண்டப்படுகிறார்கள். ஆனால் அது வெறும் பொருளாதாரச் சுரண்டல் தானே தவிர, ஒரு மனிதனின் சுயமரியாதையை வேரறுத்து, அவனது உணர்ச்சிகளைக் கேவலப்படுத்தும், மனிதாபிமானமற்ற சாதிக்கட்டமைப்புடன் அதை ஒப்பிடமுடியாது. ஆகவே நாங்கள்- தமிழர்கள் அனைவரும் சாதிக்கட்டமைப்பை ஒழிக்க ஒன்றுபட வேண்டுமென்பதில் உங்களுடன் எனக்குக் கருத்து வேறுபாடேதும் கிடையாது. ஆனால் இக்காலத்திலும் வெறுமனே பார்ப்பனீயத்தைக் குறை கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை. உண்மையில் தமிழர்களின் மத்தியில் சாதிப்பேய் தலைவிரித்தாடுவதற்கும், தமிழர்கள் ஆளுக்காள் அடிபட்டுக் கொண்டு சாவதற்கும் தமிழர்கள் தான் காரணம். இந்துமதமும் பார்ப்பனர்களாலும் தான் சாதி வளர்கிறது என்று, இந்து மதத்தை விட்டு ஓடியவர்களிடம் கூட சாதிப்பாகுபாடுகள் இன்றும் காணப்படுகின்றன. உதாரணமாக, தலித் கிறித்தவர்களும், தலித் முஸ்லீம்களும் கூட உள்ளனர் என்று உங்களுக்கும் தெரியும்.

           உண்மையில் தமிழ்நாட்டுக்கு பயணம் செய்யும் வரை, தமிழ்நாட்டு வலைப்பதிவுகளிலும், இணையத்தளங்களிலும் பங்குபற்றும் வரை எனக்கு சாதியைப் பற்றி எதுவுமே தெரியாது என்று தான் கூற வேண்டும். இப்பொழுது என்னுடைய கருத்து என்னவென்றால், எந்தளவுக்கு ஆதிக்கசாதித் தமிழர்களிடம் சாதிவெறியுண்டோ அதேயளவு சாதிவெறி தாழ்த்தப்பட்ட தமிழர்களிடமும் உண்டு. இரண்டு பேரும் விட்டுக் கொடுத்தால் தான், அடுத்த தலைமுறையிலாவது ஏதோ ஒருவழியில் சாதிப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஆனால் அது தமிழ்நாட்டில் நடைபெறுவதாகத் தெரியவில்லை. உதாரணமாக, இந்த மாதொருபாகன் நாவலையே எடுத்துக் கொள்ளுங்கள், உண்மையில் இந்த நாவல் கவுண்டர் சாதியினரை, குறிப்பாக அவர்களின் பெண்களை இழிவுபடுத்துகிறது என்பதை ஒரு குழந்தை கூட ஒத்துக்கொள்ளும் ஆனால் அதை மறுத்து, நியாயப்படுத்துகிறவர்கள் யாரென்று பார்த்தால் தலித்துக்கள் அல்லது தலித்துக்களின் நலன்களுக்காக, தலித்துகளின் சார்பில் போராடுகிறவர்கள்/வாதாடுகிறவர்கள் தான். குறிப்பிட்ட சமூகத்தினரை, அவர்களின் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு சிறுமைப் படுத்தப்படுவது கருத்துச் சுதந்திரம் அல்ல. அதாவது, இந்த நாவலை கவுண்டர் சாதியினரைப் பழிவாங்க, நக்கலடிக்க அல்லது அவர்களை இழிவுபடுத்த அவர்களுகுக் கிடைத்த வாய்ப்பாக சாதியொழிப்பு வீரர்கள் என்று தம்மை அடையாளப்படுத்துகிற முற்போக்குவாதிகள் கூடப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற உணர்வு நடுநிலையான யாருக்குமே ஏற்படுவது இயற்கை. அதனால் தான் “சாதிவெறி பிடித்த தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு” என்று குறிப்பிட்டேன்.

           பார்ப்பனீயம் நிறுவிய சாதிக் கட்டமைப்பை கட்டிக் காப்பவர்கள் தமிழர்கள் தான், ஆகவே சாதிவெறியை தமிழர்கள் அனைவரும் ஆதாவது ஆதிக்க சாதிகளும், ஏனையோரும் ஒருமித்து அடித்து நொருக்க வேண்டும். அதற்கு தலித்துகள் மட்டும் போராடி ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆதிக்க சாதிகளிலுள்ள சாதிமறுப்புக் கொள்கையுடையவர்களையும் (பார்ப்பனர்கள் உட்பட) இணைத்துக் கொள்ள வேண்டும், ஆனால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை சிறுமைப்படுத்தினால் சாதிப்பற்று இல்லாதவர்கள் கூட, தமது சாதி சனங்கள், சாதியடிப்படையில் தாக்கப்படுகிறார்கள் என்றுணர்ந்து தமது சாதி என்ற ஒரு கொடியின் கீழ் இணைவார்கள். இந்த நாவலைப் பற்றிய பிரச்சனை அப்படியான நிலையைத் தான் உருவாக்கியுள்ளது என்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

          • தோழர். சிவப்பு

           //சோற்றுக்குப் பின்னால் தான் மொழியுணர்வு, இனவுணர்வு எல்லாம் என்பது சோசலிச/கம்யூனிச மூளைச்சலவையின் விளைவு என்று தான் நான் நினைக்கிறேன். உதாரணமாக தமிழுக்காக தமதின்னுயிரை ஈந்தார்கள் என்று கம்யூனிஸ்டுகள் கூட விழா நடத்தினார்களோ அந்த நடராஜனும், தாளமுத்துவும் கூட அன்றாடங்காய்ச்சிகள் தானே தவிர பெரும் பணக்காரர்கள் அல்ல. அவர்களும் பொருளாதார சுமையின் வலுவைத் தாங்க முடியாமல் தவித்த தமிழர்கள்தான்.//

           மிகவும் வலுவான பதில்… எதற்கெடுத்தாலும் சோறு,சோறு,சோறு தானா.. தாளமுத்துவும், நடராசனும் மட்டுமல்ல. ஈழ தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த முத்துக் குமரனும் சாதாரண அன்றாடங்காய்ச்சி தான். சிவப்பு அண்ணா, உங்களுக்கு புரியிற மாதிரி சொல்லனும்னா ஏதும் இல்லாதவன் தான் தைரியமா போராட வருவான். அது மொழி போரட்டம்னாலும் சரி, வர்க்கப் போராடம்னாலும் சரி. கொஞ்சம் கம்யுனிசத்த தாண்டியும் சிந்திக்கணும்ணா. சிகப்பு புத்தகத்துல(அதாண்ணா உங்க மார்க்சியம்) சொல்லி இருக்குறத தாண்டி சிந்திக்க கூடாதுன்னு உங்க அறிவுக்கு நீங்களே அடப்பு போட்டுகாதீங்க அண்ணா…

          • தீவிர இடதுசாரிக் கட்சியான சிரீஸா கட்சி பொருளாதார வீழ்ச்சியால் தள்ளாடிக்கொண்டிருந்த கிரேக்கத்தில் வெற்றி பெற்றதே சோத்து பிரச்சனை தான் முதன்மையானது என்பது நிருபணம் ஆகின்றது

         • வியாசன்,

          மொழியுணர்வு,சுய ஒழுக்கம், அன்பு, அறிவு, ஆன்மிகம் இன்னும் பிற அனைத்துவிதமான உணர்வு/அறிவு சம்மந்தமான விடயங்களை இந்த புறச் சூழ்நிலைகளே பெருமளவில் கட்டுப்படுத்துகின்றன. பொருளாதார தேவைகளுக்கு தத்தமது உழைப்பையே நம்பியிருக்கும் பெரும்பாலான(தமிழ்) மக்களை இந்த உணர்வுகள் கட்டுப்படுத்தாது. உண்மை என்னவென்றால் அந்த மக்களுக்கு மொழியுணர்வு இருப்பதால் தான் தாய்மொழியாக தமிழைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் அறுதியிட்டுக் கூற முடியுமா?

          வெறும் ஏட்டறிவும் மொழியுணர்வும் கொண்டு இதைப் புரிந்து கொள்ளவே முடியாது. இது தான் எனது சொந்த அனுபவம்.

          நன்றி.

        • திப்புவுக்குத் தமிழை விட ______ தான் புரிந்து கொள்ள முடியுமென்று எனக்கு இதுவரை தெரியாது. நான் கூறியது ‘அந்த சமூகத்தில் பலருக்கு உண்மையான தகப்பன் யார் என்பது தெரியாது என்பது போன்ற **கருத்து வரும் வகையில்** செவிவழிக் கதைக்கு கண், மூக்கு வாய் எல்லாம் வைத்துக் கற்பனையில் கதை புனைவது’….

         அதன் கருத்து என்னவென்றால் அப்படியும் கருத்துக் கொள்ளலாம். அதாவது தகப்பன் யாரென்று தெரியாத ‘_____ குட்டிகள்’ கவுண்டர் சாதியில் உள்ளனர் என்று கூட சிலர் கருத்துத் தெரிவிக்கலாம். அப்படியான கருத்துக்கு இடமளிக்கும் வகையில் கற்பனையில் ஒரு கதையைப் புனைந்தது தவறு என்பது தான் எனது கருத்தாகும். இதற்கும் மேல் என்னால் தமிழில் விளக்க முடியாது, ________ எனக்குத் தெரியாது.

         • வியாசனுக்கு கவுண்ட சாதி மக்கள் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை ! கற்பனையிலேயே போட்டு தாக்கறாரு !

         • வியாசன் முதலில் இந்த நாவல் பிரச்னைக்கு சற்றும் தொடர்பு இல்லாத தலித் மக்களை கற்பனையாக இழிவு செய்தாரு ![ பின்னுட்டம் 10.2.1.2.1] இப்ப கவுண்ட மக்களை பற்றிய இவரே ஒரு கற்பனை செய்து இழிவு செய்கின்ராறு !

         • தமிழ் நாட்டில் பெருமாள் முருகனுக்கு ஆதரவா போராடும் எழுத்தளர்கள ,ஜனநாயக சக்திகள் அனைவருமே கருத்துரிமைக்காக தான் போராடுகின்றாகளே அன்றி பெருமாள் முருகனின் கருத்தை ஆதரித்து எல்லாம் போராடவில்லை. நாவல் தனிமனிதனை அல்லது ஒருசாதியை இழிவு செய்வதாக இருந்தால் பெருமாள் முருகனை சித்தரவாதை செய்வதை விட நீதி மன்றத்துக்கு செல்லலாம் என்று திருமால்வளவன் கூருகின்ராறு !

          https://www.youtube.com/watch?v=SIsbLvxkFlI

          நாவளை எழுதியவரும் தலித் சமுகத்தை சேர்ந்தவரும் இல்லை ! நிலைமை இப்படி இருக்க மாதொருபாகன் சர்ச்சையை கவுண்ட ,தலித் மக்களுக்கு இடையிலான பிரச்சனையாக மாற்ற முயலலாறு வியாசன்

          viyasan//உண்மையில் இந்த நாவல் கவுண்டர் சாதியினரை, குறிப்பாக அவர்களின் பெண்களை இழிவுபடுத்துகிறது என்பதை ஒரு குழந்தை கூட ஒத்துக்கொள்ளும் ஆனால் அதை மறுத்து, நியாயப்படுத்துகிறவர்கள் யாரென்று பார்த்தால் தலித்துக்கள் அல்லது தலித்துக்களின் நலன்களுக்காக, தலித்துகளின் சார்பில் போராடுகிறவர்கள்/வாதாடுகிறவர்கள் தான். //

         • கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்று பாரதி கூறிய கருத்தை மாதொருபாகன் கதையில் பெருமாள் முருகன் எதிர்மறையான நிகழ்வுகள் மூலம் வலியுறுத்தி உள்ளார் !இளம் வயதில் காளி 14ஆம் நாள் திருவிழாவுக்கு சென்று சாமியானதை, பிள்ளை வரம் கொடுப்பதை பல இடங்களில் சுட்டிகாட்டும் பெருமாள் முருகன் அதே போன்று பொன்னாவும் பிள்ளைவரம் வேண்டி இறுதியில் 14 ஆம் நாள் திருவிழாவுக்கு செல்வதை காட்சி படுத்துகின்றார். கவுண்ட ஆண் காளி 14 ஆம் நாள் திருவிழாவுக்கு போவதை வியாசன் உட்பட எவருமே தவறாக சுட்டிக்காட்டாத போது கவுண்டச்சி பொன்னா போவதை மட்டும் ஒழுக்க கேடு என்றும் தமிழ்ப்பெண்கள் மீதான இழிவு படுத்தும் செயல் என்றும் வியாசன ஊளையிடுவது “கற்பை பெண்ணுக்கு மட்டுமே பொதுவில் வைப்போம்” என்று “வியாச பாரதி” கூவுவது போல் அல்லவா உள்ளது ?

         • மட்டுறுத்தலில் அடிபடும் அளவுக்கு தரம் தாழ்ந்து ஆபாசமாக எழுதுவது எனக்கு பழக்கமில்லை.ஆகவே வியாசனுக்கு மறுமொழி எழுதுவதாக இல்லை.நாய் நம்மை கடித்து விட்டது என்பதற்காக நாயை நாம் திருப்பி கடிக்க முடியாது இல்லையா.

          • திப்பு,

           இந்தப் பதிலையாவது வினவு பக்கச் சார்பில்லாமல் வெளியிடுமென நம்புகிறேன். நானும் இந்தத் தளம் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும், முர்போக்குர்த் தமிழர்கள் உள்ள இடம் என எண்ணி, எனது நேரத்தைச் செலவிட்டிருப்பதால், அதற்காக என்றாலும் வெளியிடுவார்கள் என உண்மையில் நம்புகிறேன்.

           எனக்கும் தரம் தாழ்ந்து ஆபாசமாக எழுதும் பழக்கமில்லை. நான் அப்படி எதுவும் ஆபாசமாக எழுதிவில்லை. நீங்களும் வினவு நிர்வாகத்தில் ஒருவர் என்பதால் நான் எழுதியதை மட்டுறுத்தல் செய்து விட்டு, இப்படிக் கதை விடுகிறீர்கள் போலிருக்கிறது. இங்கு மட்டுறுத்தல் செய்கிறவர் முஸ்லீமாக இருக்க வேண்டும், ஏனென்றால் முஸ்லீம்களுக்குப் பதில் எழுதினால் மட்டும் அப்படியே மட்டுறுத்தல் என்ற பெயரில் அகற்றி விடுகிறார்கள். முஸ்லீம்கள் சாதாரணமாகப் பாவிக்கும் முஸ்லீம் சொற்களைக் கூட நீக்கி விடுகிறார்கள். ஆனால் எவரும் முஸ்லீம் அல்லாதவர்களை, நாய் என்று தரக்குறைவாகப் பேசினாலும் அப்படியே வெளியிடுகிறார்கள். இதற்குத் தான் பெயர் தான் முற்போக்கு போலிருக்கிறது. இதெல்லாம் ஒரு பொழைப்பு 🙂

          • வியாசன்,
           “அரபு மொழி தெரிந்த திப்பு, ஹராம் குட்டிகள்” என்று வேண்டுமென்றே உள்நோக்கத்தோடும், காழ்ப்புணர்வோடும் விவாதத்தை திசைதிருப்ப முயன்ற உங்கள் நோக்கத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டே அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டன. சாதிவெறி குறித்த விவாதத்தில் உரையாட வரும் நபர் உங்களுக்கு பிடிக்காத இசுலாமிய மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக இப்படி பேசுவது ஆபாசமானது, கண்டனத்திற்குரியது. விவாதிக்கும் பொருளில் அறிவோ, நேர்மையோ இன்றி இப்படி மலிவாக மதவெறியுடன் பேசுவது சரியா என்று பரிசீலிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

          • என்னுடைய பதிலை வெளியிட்டமைக்கு நன்றி. ஆனால் முதல் எனது பதிலை வெளியிட்டிருந்தால் நான் சொல்ல வந்தது மற்றவர்களுக்ககும் புரிந்திருக்கும். திப்புவுக்கு நான் தமிழில் எழுதியது புரியாது விட்டால், அரபு மொழியில் அவருக்குப் புரிய வைக்க என்னால் முடியாது என்பது தான் என்னுடைய கருத்தாகும். ‘ஹராம்குட்டிகள்’ என்றால், திருமண பந்தத்துக்கு வெளியே பிறந்தவர்களைக் குறிக்க இலங்கை முஸ்லீம்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் சொல். இலங்கை முஸ்லீம்களிடம் அதைப் பற்றிய சொலவடையே உண்டு. மாதொருபாகனில் அந்த விடயத்தைப் பேசிக் கொண்டிருந்தபடியால் அதைக் குறிப்பிட்டேனே தவிர, அது தமிழ்நாட்டில் தவறான சொல் என்ற எனக்குத் தெரியாது. நான் எதற்காக விவாதத்தைத் திசை திருப்ப வேண்டும்? அப்படி எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது. எனக்கு மதவெறி, சாதி வெறி ஒன்றும் கிடையாது, என்னுடைய கருத்தை தயக்கமின்றி தெரிவிப்பது மட்டும் தான் என்னுடைய வழக்கம். என்னுடைய பதிலில் மதவெறியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை, ஆனால் மதவெறிப் பதில்கள் எல்லாவற்றையும் நீங்கள் மட்டுறுத்தல் செய்வதாகவும் எனக்குத் தெரியவில்லை. திப்பு எனக்கு எப்படிப் பதிலளித்தாலும் வினவு நிர்வாகம் மட்டுறுத்தல் செய்வதில்லை ஆனால் நான் பதிலளிக்கும் போது மட்டும் அப்படியே மட்டுறுத்தல் செய்து விடுகின்றனர். இது தான் முன்புமொருமுறை நடந்தது.

          • நான் வினவு நிர்வாகியல்லன்.வீண் கற்பனை.

           வினவின் ஐந்து அல்லது ஆறாம் ஆண்டு நிறைவு என்று நினைக்கிறேன்,அது சமயம் வினவு பற்றி வாசகர்களின் கருத்துக்கள் கட்டுரைகளாக வெளியிடப்பட்டன.அவற்றில் ஒன்றாக எனது கட்டுரையும் வெளியானது.அதன் முதல் வரியிலேயே நான் பொதுவுடமையாளன் அல்ல என்று சொல்லி விட்டுத்தான் எழுதி இருக்கிறேன்.ஒரு இடது சாரி தளத்தில் பொதுவுடமையாளன் அல்லாத ஒருவர் நிர்வாகியாக இருக்க முடியுமா.எதையும் தெரிந்து கொண்டு பேசுங்கள்.

           \\முஸ்லீம்கள் சாதாரணமாகப் பாவிக்கும் முஸ்லீம் சொற்களைக் கூட நீக்கி விடுகிறார்கள். //

           முசுலிம்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதால் மட்டும் இழிவுபடுத்தும் சொற்களெல்லாம் -அவை அரபு சொல்லானாலும் சரி தமிழ் சொல்லானாலும் சரி -நல்ல சொற்கள் என்றாகிவிடாது.

           பி.கு.
           நாய் பற்றிய கூற்று இடப்பொருத்தம் கருதி சொன்ன பழமொழிதான்.அது நேரடியாக தன்னை நேர்பொருளில் குறிப்பதாக எடுத்துக் கொள்வது முதிர்ச்சியின்மையை காட்டுகின்றது.இப்படி தொட்டால் சிணுங்கியாக இருக்க வேண்டாம்.

          • என்னுடைய அம்மம்மாவின்(பாட்டி), அம்மாவே அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழ்ப்பட்டதாரி, தமிழில் புலமையும், தமிழறிவும் கொண்ட உலகப் புகழ்பெற்ற சிலர் கூட என்னுடைய பரம்பரையில் உள்ளனர். அதனால் நான் மட்டும், தமிழில் சாதாரண ஒரு பழமொழியை, அது எந்த தருணத்தில், யாரால், ஏன் எதற்காகக் கூறப்பட்டது, என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் இல்லை. அத்துடன், அதை விட மோசமான பழமொழிகளால் பதிலடி கொடுக்கவும் எனக்குத் தெரியும். ஆனால் வினவு மட்டுறுத்தல் செய்து விடுவார்கள். 🙂

           ‘எவரும் முஸ்லீம் அல்லாதவர்களை, நாய் என்று தரக்குறைவாகப் பேசினாலும் அப்படியே வெளியிடுகிறார்கள்’ என்று குறிப்பிட்டது, முன்னுக்குப் பின் முரணாக உளறுவதுடன், எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு, மற்றவர்களை ஒருமையிலும், நாய், பேய் என்று வாய்க்கு வந்தபடி திட்டும் வேறு சிலரும் இங்கு உள்ளனர், அவர்களை வினவு மட்டுறுத்தல் செய்வதாக எனக்குத் தெரியவில்லை என்பதைத் தான்.

           ///நாய் பற்றிய கூற்று இடப்பொருத்தம் கருதி சொன்ன பழமொழிதான்.அது நேரடியாக தன்னை நேர்பொருளில் குறிப்பதாக எடுத்துக் கொள்வது முதிர்ச்சியின்மையை காட்டுகின்றது.இப்படி தொட்டால் சிணுங்கியாக இருக்க வேண்டாம்.///

          • வியாசன் கூற்று படி டேனியலின் பஞ்சமர் கூறும் யாழ் சைவ வெள்ளாள பெண்களுக்கும் ,பண்ணை வேலைகாரர்களுக்கும் கள்ளத்தனமாக பிறந்த குழந்தக்ளுக்கு என்ன பெயர் வைக்கலாம் . “சைவ கள்ள குட்டிகள் ” என்று தானே பெயர் வைக்கவேண்டும் !

           //‘ஹராம்குட்டிகள்’ என்றால், திருமண பந்தத்துக்கு வெளியே பிறந்தவர்களைக் குறிக்க இலங்கை முஸ்லீம்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் சொல். //

          • பாய் பாய் இருங்க,பிள்ளைவாள் நீங்களும்தான் முதல்ல சண்டைய நிப்பாட்டுங்க.முதல்ல மேட்டரை பேசி பைசல் பண்ணுங்க.உங்களை மதிச்சு நானும் ஒரு பழமொழி சொன்னேன்.யாராச்சும் அது பற்றி கருத்து சொல்லிருக்கீகளா என்று பாக்க வந்தா இப்புடி சண்டை போட்டுட்டு இருக்கீகளே.

           நமக்கு மதுரை பக்கம்யா ஊரு.எங்க பக்கம் கண்டமேனிக்கு பழமொழிகளை எடுத்து உடுவாக.ஓடுற பஸ் கடைத்தெரு ன்னு ஒரு கணக்கும் கெடயாதுய்யா.பெரிய சாதி பத்தி பழ மொழின்னா அந்த சாதிகாரவுக இருக்காகலான்னு பாத்துட்டு சொல்லுவாக.சின்ன சாதின்னா கேள்வி கேப்பாடு கெடயாதுங்க.
           _______

           இந்த மாதிரி பழமொழின்னா யார் இருக்கா இல்லன்னு கவலைப்படாம சொல்லுவாக.அப்ப அந்த சாதிக்காரவுக அகுனக்குள்ள இருந்தாகன்னா காதுல உழுவாத மாதிரி நவண்டு பொயிருவாக.அப்ப அவுக முகத்த பாக்கவே மனசுக்கு ரெம்ப கஷ்டமா இருக்குமுங்க. இங்கன புள்ளமார் ஒருத்தர் சாதி பழமொழி அவ்வளவா கேவலமின்னு பேசுறாரு.ரெம்ப தப்புங்க.அவுக பாட்டி முதக்கொண்டு ரெம்ப படிச்சவுகலாம்.அடுத்தவன் மனச புரிஞ்சுக்காம கஷ்டப்படுத்துறவன் என்ன படிச்சு என்ன பிரயோஜனம்.

          • எனக்கு அரிவாளை மட்டும் தான் தெரியும், பிள்ளைவாள், பெரியவாள் எல்லாம் இலங்கையில் கிடையாது. 🙂

          • வியாசன்,திப்பு என்ற இரண்டு தனிநபர்களுக்கு இடையே கணக்கு தீர்க்கும் விதமாக விவாதம் செல்வதற்காக வருந்துகிறேன்,இந்த திசையில் விவாதத்தை தள்ளுவது நானல்ல என்பதையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வினவு தோழர்கள் மற்றும் வாசகர்களின் நேரத்தை மேலும் வீணடிக்க கூடாது என்பதால் இந்த இழையில் இதுவே எனது கடைசி பின்னூட்டம்.

           \\ திப்பு எனக்கு எப்படிப் பதிலளித்தாலும் வினவு நிர்வாகம் மட்டுறுத்தல் செய்வதில்லை ஆனால் நான் பதிலளிக்கும் போது மட்டும் அப்படியே மட்டுறுத்தல் செய்து விடுகின்றனர். //

           ”எப்படிப் பதிலளித்தாலும்”என்று குற்றம் சாட்டும் வியாசன் அப்படி என்ன தரம் தாழ்ந்து எழுதி விட்டேன் என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டும். வியாசன் யுனிவர்பட்டி போன்ற இசுலாமிய எதிர்ப்பு மதவெறியர்கள் விவாதப்பொருளை விட்டு விலகி இசுலாமிய எதிர்ப்பு மதவெறியை கக்கிய போது ”மதவெறியார்களா”என்றும் ,” மதவெறி மொக்கைகள் ”என்றும் அழைத்திருக்கிறேன்.இவை உண்மைதான் என்பதை காய்தல் உவத்தல் இன்றி அவர்களது எழுத்துக்களை படிப்பவர்கள் உணர முடியும்.மேலும் மொக்கை என்பது ஆபாச சொல் அல்ல.பொருளற்ற விதண்டாவாதங்களை, வெட்டி பேச்சுக்களை அப்படி அழைப்பதை இணையத்தில் புழங்கும் எவரும் அறிவர்.

           அது போல் வியாசனின் வாதங்களை முட்டாள்தனமானவை என்று சொல்லி இருக்கிறேன்.அது கூட நானே வலிந்து சொன்னதல்ல.அவர் எனது வாதங்களை முட்டாள்தனமானவை என்று அகங்காரத்துடன் பேசிய போது யாருடைய வாதம் முட்டாள்தனமானது பார்க்கலாமா என்று கேட்டு இருவரின் வாதங்களையும் திறனாய்வு செய்து வியாசனின் வாதங்கள்தான் முட்டாள்தனமானவை என்று முடித்திருப்பேன்.

           இவை அனைத்துக்குமே ஆதாரமாக சுட்டிகள் தர முடியும்.இவை தவிர என்ன தரம் தாழ்ந்து எழுதி விட்டேன் என்று வியாசன்தான் இப்போது விளக்கவேண்டும்.

           \\என்னுடைய பதிலில் மதவெறியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை, //

           சேறு நிரம்பிய குட்டையில் ஊறிக் கிடக்கும் எருமை மாடு குட்டையின் ”நறுமணத்தை”உணர்வதில்லை.

           \\அரபு மொழியில் அவருக்குப் புரிய வைக்க என்னால் முடியாது என்பது தான் என்னுடைய கருத்தாகும்.//

           முசுலிம் என்றாலே அரபு மொழி தெரிந்திருக்குமா.வம்படியாக எதிராளியின் மதத்தை விவாதத்திற்குள் இழுக்கும் கயமை இல்லையா இது.இசுலாமிய மதத்தை,இசுலாமிய இயக்கங்களை விமரிசித்து எத்தனையோ கட்டுரைகள் வினவில் உள்ளன.வினவின் கருத்தை மறுத்து நான் கூட அங்கு விவாதித்திருக்கிறேன்.இனியும் அது போன்ற கட்டுரைகள் எழுதுவார்கள்.அந்த பதிவுகளில் போய் தாராளமாக மதவெறி கும்மி அடிக்கலாம்.இங்கு விவாதத்தை நேர்மையாக தொடருங்கள்.

          • திப்பு,

           //யுனிவர்பட்டி போன்ற இசுலாமிய எதிர்ப்பு மதவெறியர்கள் விவாதப்பொருளை விட்டு விலகி இசுலாமிய எதிர்ப்பு மதவெறியை கக்கிய போது ”மதவெறியார்களா”என்றும் ,” மதவெறி மொக்கைகள் ”என்றும் அழைத்திருக்கிறேன்.//

           நீங்கள் என்னை அக்ரினையில் அழைத்தவர்தான் என்பதை உங்களுக்கும் மற்ற வாசகர்களுக்கும் நினைவு படுத்துகிறேன். மேலும் பல பெயர்களையும் பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஒவர் சீன் போட வேண்டாம்.

           நானும் இங்கே பதிவின் விவாதப்பொருளை விட்டு விலக விரும்பவில்லை. சொல்லப்போனால் எந்த பதிவிலும் அது போன்று செய்ததில்லை. எந்த பதிவில் விலகியிருக்கிறேன் என்று அந்த பதிவில் சொல்லுங்கள். விவாதத்தை விட்டு விலகவில்லை எனபதை நான் விளக்குகிறேன். செய்வீர்களா.

           முகமதியத்தைப்பற்றி விமர்சனம் செய்தால் மதவெறியன் என்றால் நான் அப்படிப்பட்ட மதவெறியனாக இருப்பதில் அளப்பரிய பெருமை கொள்கிறேன். நன்றி.

          • \\ஒவர் சீன் போட வேண்டாம்.//

           யார் நாடகமாடுவது பார்க்கலாம்.

           யுனிவர்பட்டி என்ற பெயரை கிண்டலாக ஆணிவேர் முட்டி என்று அழைத்திருக்கிறேன்.இடக்கரடக்கல் என்று கேள்விப்பட்டதில்லையா.இணைய தள விவாதங்களில் இவ்வாறு பெயரை வைத்து கேலி பேசுவது சாதாரணம்.இதே வினவு தளத்தில் கூட எனது பெயர் திப்பு என்பதை வைத்து இப்பு,தொப்பு என்றெல்லாம் கேலியாக அழைத்திருக்கிறார்கள்.நான் அதற்கெல்லாம் கோபித்துக்கொண்டதில்லை.ஏனென்றால் நகைச்சுவை வாழ்வில் ஒரு நல்ல அம்சம்.எப்ப பாத்தாலும் உர்ரென்று மூஞ்சிய வச்சுகிட்டு திரியிறது நல்லாவா இருக்கு.நீங்கள் கூட கீழே சுட்டி தந்துள்ள பின்னூட்டத்தில் எனது கருத்தை பற்றி சொல்ல வந்து

           திப்பு பாய்,
           தப்பு பாய்….என்கிறீர்.அதற்கெல்லாம் நான் கோபிக்கவில்லை என்பதை கவனிக்கவும்.

           அப்புறம் யுனிவர்பட்டி என்ற பெயரை யுனி,யுனிவர் என்று அழைத்திருக்கிறேன்.அது தட்டச்சு வேலையை மிச்சப்படுத்த செய்தது.இதெல்லாம் ஒரு குற்றம் னு தெரியாம போச்சுங்க.கோச்சுக்காதீங்க.இனிமேல் முழுசா யுனிவர்பட்டின்னே கூப்புடுறேன்.

           அகிறிணையில் அழைத்தேன் என்றால் ஆடு,மாடு என்று பொருள்பட அழைக்கவில்லை.எவ்வளவு அறிவா பேசுது பாரு அறிவுக்கொழுந்து என்று சொல்வது போல மதவெறி மொக்கை,யுனி என்று அழைக்கும்போது சரள நடையில் [flow] அது,இது என்று வந்திருக்கும்.

           தரம் தாழ்ந்த ஆபாச வாதம் என்றால் எது தெரியுமா.நீர் பேசிக்கிட்டு திரியீரீரெ
           ”செவத்த பொண்ணுங்க மேல கருத்த ஆண்களுக்கு ஒரு கண்ணு.
           பார்ப்பன பெண்கள் மீது திராவிட ஆண்களுக்கு ஒரு மயக்கம்.
           பார்ப்பன பெண்கள் மீதான மயக்கத்தில் தமிழ் மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு நில புலன்களை கொடையளித்தனர்.”

           இப்படி பேசுவதுதான் தரமற்ற செயல்.இவையெல்லாம் தரம் தாழ்ந்தவையாக உமக்கு தெரியவில்லை.என்ன காரணம் தெரியுமா.

           சேறு நிரம்பிய குட்டையில் ஊறிக் கிடக்கும் எருமை மாடு குட்டையின் ”நறுமணத்தை”உணர்வதில்லை.

           \\எந்த பதிவில் விலகியிருக்கிறேன்//

           ஆட்டிறைச்சி தொழிலை அலைக்கழிக்கும் பார்ப்பனியம் பதிவில் மாட்டிறைச்சி உண்பவர்கள் மீதான பார்ப்பனியத்தின் கொலை வெறி தாக்குதல்களை பற்றி நான் பேசியபோது இடையில் புகுந்து \\பன்னிக் கறிய உடுங்க இந்த மாசத்துல தாகத்துக்கு தண்ணி குடிச்சாகூட கொல்ல வருவாங்க சில பாய்மாருங்க.//என்று விவாதத்தை திசை திருப்பியது யார் .பார்க்க.
           https://www.vinavu.com/2014/06/26/meat-industry-in-india-disrupted-by-parpaniyam/#comment-148347

           கடைசியில் அந்த விவாதத்தை இசுலாம் குறித்ததாக மடை மாற்றித்தான் ஓய்ந்தீர்கள்.அதாவது பார்ப்பனியத்தின் மீதான தாக்குதல்களில் வாசகர்களின் கவனம் செல்ல விடாமல் தடுத்து இசுலாம் பற்றி பேசுவதன் மூலம் பார்ப்பனியத்திற்கு பாத பூசை செய்தீர்கள்.இதனால்தான் யுனிவர்பட்டி வியாசன் போன்ற நீங்களெல்லாம் உதட்டளவில் பார்ப்பன எதிர்ப்பு பேசினாலும் உண்மையில் பார்ப்பனியத்தின் பாதந்தாங்கிகளே என்பதை வினவு தோழர்கள் உங்கள் வாதங்களை தோலுரித்து காட்டி வருகிறார்கள்.ஒரு முறை உமது வாதங்களை வைத்து தோழர் தென்றல் இதனை சிற