Saturday, May 10, 2025
முகப்புசெய்திMRF : கிரிக்கெட்டுக்கு 500 கோடி - தொழிலாளிக்கு தெருக்கோடி

MRF : கிரிக்கெட்டுக்கு 500 கோடி – தொழிலாளிக்கு தெருக்கோடி

-

சென்னை திருவொற்றியூர் பகுதியில் MRF டயர் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் ஏறக்குறைய 1,100 நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

18 மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில் “இரண்டு துறைகளை மூடிவிட்டு அவுட்சோர்சிங் விடப்போகிறோம் இதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒப்பந்தம் போட முடியும் இல்லையென்றால், ஒப்பந்தம் போட முடியாது” என திமிர்த்தனமாக கூறி பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டது MRF நிர்வாகம். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி தொழிலாளர் துறை உதவி ஆணையரிடம் தொழிற்தாவா எழுப்பப்பட்டது. இத்தாவாவில் சமரச முறிவறிக்கை பெற்று தொழிலளர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு வருகிறது. நீதிமன்றத்துக்கு வராமல் வழக்கை இழுத்தடிப்பது, தொழிற்சங்கத்தை இழிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது MRF நிர்வாகம்.

எம்.ஆர்.எஃப் தொழிலாளர் போராட்டம்
நீதிமன்றத்துக்கு வராமல் வழக்கை இழுத்தடிப்பது, தொழிற்சங்கத்தை இழிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது MRF நிர்வாகம்.

பொய்யான காரணங்களைக் கூறி தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், ஒப்பந்தம் போட மறுப்பதுமாக செயல்பட்ட நிர்வாகத்தை கண்டித்து வெங்கடேசன் விஜியகுமார் என்ற இரண்டு தொழிலாளர்கள் 2.2.15 தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, வார விடுப்பில் இருக்கும் தொழிலாளர்களும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க துவங்கியுள்ளனர்.

எம்.ஆர்.எஃப் தொழிலாளர் போராட்டம்
பொய்யான காரணங்களைக் கூறி தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், ஒப்பந்தம் போட மறுப்பதுமாக செயல்பட்ட நிர்வாகத்தை கண்டித்து வெங்கடேசன் விஜியகுமார் என்ற இரண்டு தொழிலாளர்கள் 2.2.15 தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளனர்.

MRF தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டக்குழு தோழர்கள் போராட்ட களத்துக்கு சென்று போராட்டத்தை ஆதரித்ததோடு, தொழிற்சங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் புஜதொமு துணை நிற்குமென உறுதி கூறினர்.

எம்.ஆர்.எஃப் தொழிலாளர் போராட்டம்
தொழிலாளர்களின் நியாமான போராட்டத்தை மயிரளவுக்கும் மதிக்காத MRF நிர்வாகத்தின் சென்ற வருட லாபம் 1100 கோடி ரூபாயிலிருந்து 500 கோடி ரூபாயை நடக்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஸ்பான்சர் செய்துள்ளது.

தொழிலாளர்களின் நியாமான போராட்டத்தை மயிரளவுக்கும் மதிக்காத MRF நிர்வாகத்தின் சென்ற வருட லாபம் 1100 கோடி ரூபாயிலிருந்து 500 கோடி ரூபாயை நடக்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஸ்பான்சர் செய்துள்ளது. தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் லாபத்தை கொள்ளையடிக்கும் முதலாளிகள் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரித்து அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றன.

எம்.ஆர்.எஃப் தொழிலாளர் போராட்டம்
எந்த காலத்திலும் அறப்போராட்டங்களுக்கு அசைந்து கொடுத்தவர்களல்ல முதலாளிகள். அவர்களின் லாபத்தை முடக்கும் போராட்டங்களை கட்டியமைப்பதின் மூலம் தான் அவர்களை பணிய வைக்க முடியும்.

எந்த காலத்திலும் அறப்போராட்டங்களுக்கு அசைந்து கொடுத்தவர்களல்ல முதலாளிகள். அவர்களின் லாபத்தை முடக்கும் போராட்டங்களை கட்டியமைப்பதின் மூலம் தான் அவர்களை பணிய வைக்க முடியும் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

எம்.ஆர்.எஃப் தொழிலாளர் போராட்டம்
வடசென்னை வட்டார எல்லா ஆலைத் தொழிலாளார்களும் ஒன்றுபட்டு MRF தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரளிப்போம்.

தொழிற்சங்க உரிமைகளுக்காக குண்டடிபட்டு ரத்தம் சிந்தி போராடிய வரலாறைக் கொண்டது வடசென்னை. இதை நினைவூட்டும் விதமான போராட்டங்களை கட்டியமைத்து தொழிலாளர்களுக்கு போராட்ட மரபை உணர்த்த வேண்டியதொரு தருணத்தில் உள்ளது MRF தொழிற்சங்க போராட்டம். வடசென்னை வட்டார எல்லா ஆலைத் தொழிலாளார்களும் ஒன்றுபட்டு MRF தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரளிப்போம். போராட்ட உணர்வை வளர்த்தெடுப்போம்.

எம்.ஆர்.எஃப் தொழிலாளர் போராட்டம்
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம்.
9444213318