privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்மோடி - அருண் ஜெட்லி : திருடர்கள் ஜாக்கிரதை !

மோடி – அருண் ஜெட்லி : திருடர்கள் ஜாக்கிரதை !

-

ட்ஜெட் வெளியான ஒரு சில நாட்களிலேயே, ரயில் நிலைய நடைமேடை கட்டணத்தை ஐந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாயாக உயர்த்தப் போவதாக அறிவித்தது, மோடி அரசு. மேலும், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாகச் சேரும் திருவிழா நேரங்களில் இக்கட்டணத்தை அதிகாரிகள் தமது மனம்போனபடி ஏற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் கூட்டம் அதிகமாகவுள்ள நாட்களில் நடக்கும் கள்ள டிக்கெட் வியாபாரத்தை, மோடி அரசு ரயில் நிலையங்களுக்கு இறக்குமதி செய்திருக்கிறது.

09-modi-jaitley-thieves-1இப்படியுமா பொதுமக்களைக் கொள்ளையடிக்கத் துணிவார்கள் என நீங்கள் எண்ணினால், மோடியோ அதற்கும் மேலேயும் போய் இந்திய மக்களை அதிர வைக்கிறார். ஆட்சியில் அமர்ந்தவுடன் அவரது அரசு அறிவித்த பிரீமியம் ரயில் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதன்படி, பிரீமியம் ரயில் கிளம்புவதற்கான நேரம் நெருங்க நெருங்க, அதற்கு டிக்கெட் கேட்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த ரயில்களின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துகொண்டே போகும். திருவிழா காலங்களில் ஆம்னி பஸ் முதலாளிகள் அடிக்கும் சட்டவிரோதக் கொள்ளைகூட இந்தளவிற்கு வக்கிரமாக இருப்பதில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெ விலை சரிந்தபோதெல்லாம் மோடி அரசு அதன் மீது விதிக்கப்படும் கலால் வரியை அடுத்தடுத்து உயர்த்திக் கொண்டே போனது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலையும் டீசலையும் அவற்றின் அடக்கவிலையைவிடப் பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து வாங்கித் தீர வேண்டிய கட்டாயத்திற்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டார்கள். இந்த கலால் வரி உயர்வின் மூலம் மட்டும் பட்ஜெட்டிற்கு முன்பாகவே பொதுமக்களிடமிருந்து மோடி அரசு கொள்ளையடித்த தொகை ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்.

09-modi-jaitley-thieves-2பட்ஜெட்டிலோ ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது நான்கு ரூபாய் அளவிற்குச் சாலை மேம்பாட்டு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட் வெளியான அன்றிரவே ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் கட்டண உயர்வு, வரி உயர்வு இவற்றின் மூலம் மட்டுமே இந்த ஆண்டு மைய அரசிற்குக் கிடைக்கவுள்ள கூடுதல் வருவாய் 50,000 கோடி ரூபாய். இதற்கு அப்பால் கடந்த ஆண்டில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு வழங்கப்பட்ட மானியம் 60,000 கோடி ரூபாயில் 30,000 கோடி ரூபாயை ஒரே சொடுக்கில் இந்த பட்ஜெட்டில் வெட்டி, அச்சுமையையும் மக்களின் மீது ஏற்றிவைத்துவிட்டது.

09-modi-jaitley-thieves-3வரிக்கு மேல் வரி விதித்து விவசாயிகளையும் பொதுமக்களையும் கசக்கிப் பிழிவதில் வரலாற்றில் இழிபுகழ் பெற்ற சக்கரவர்த்திகளையும் மன்னர்களையும் பாளையக்காரர்களையும் விஞ்சி நிற்கிறது, மோடி அரசு. ஊரறிந்த, உலகறிந்த கார்ப்பரேட் விசுவாசியான ப.சிதம்பரம்கூட இக்கொள்ளையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், இது ஏழைகளின் நலனைக் கருத்தில் கொள்ளாத, பெரு நிறுவனங்களுக்கும் வரி செலுத்துபவர்களுக்கும் சாதகமான பட்ஜெட்” என விமர்சித்திருக்கிறார். இந்த பட்ஜெட் ஏழைகளின் நலன்களைப் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டது என்பது மட்டுமல்ல, உள்நாட்டு தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய நிறுவனங்கள், புதுப் பணக்காரர்கள் ஆகியோரை மேலும் கொழுக்க வைப்பதற்காக மக்களின் தாலியை அறுத்திருக்கிறார், மோடி.

அடுத்த ஆண்டு பணவீக்கம் 5% சதவீதம் முதல் 6% சதவீதம் வரை இருக்கும் என வைத்துக்கொண்டால், சமூகப் பாதுகாப்புத் துறைகளில் அரசின் செலவுகள் 6% அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், மோடி அரசோ உணவு, உரம் மற்றும் எரிபொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தில் 10% சதவீதம் வரை வெட்டியிருப்பதோடு, சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியிலும் கணிசமாகக் கைவைத்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தை நலத் திட்டங்களுக்கு கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி 18,588 கோடி ரூபாய். அது இந்த பட்ஜெட்டில் 10,382 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 1,963 கோடியிலிருந்து 1,767 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 39,238 கோடியிலிருந்து 33,150 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அனைவருக்குக் கல்வி இயக்கத் திட்டத்திற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்பொழுது 22 சதவீத நிதி வெட்டப்பட்டு, 22,000 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாதந்தோறும் இருநூறு ரூபாய் வழங்கும் தேசிய சமூக உதவித் திட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

09-captionஉழைக்கும் மக்களின், நடுத்தர வர்க்கத்தின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசின் பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கும் மோடி, அதனை காப்பீடு நிறுவனங்களின் கையில் ஒப்படைத்து, அவற்றின் வருவாயையும் இலாபத்தையும் உத்தரவாதப்படுத்தியிருக்கிறார். இன்னொருபுறமோ, அடிக்கட்டுமானத் திட்டங்களை காண்டிராக்டு எடுத்துச்செய்யும் முதலாளிகள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளைக் களைவதை அரசின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார். இந்த அரசு யாருக்காக வேலை செய்கிறது, யாருடைய நலனில் அக்கறை செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை.

கட்டண உயர்வு, மானிய வெட்டு மட்டுமல்ல, மக்களின் மீது வரி விதிப்பதிலும் மோடி அரசு வக்கிரமான எல்லையைத் தொட்டிருப்பதை சேவை வரி உயர்வு எடுத்துக் காட்டுகிறது. தூய்மை இந்தியா என்ற பெயரில் நடந்துவரும் கூத்தைத் தொடருவதற்கும் மக்கள் மீது சேவை வரியைத் திணித்துள்ள மோடி அரசு, கார்ப்பரேட் சாமியார்கள் நடத்தும் யோகா வகுப்புகளுக்கு வரியை ரத்து செய்திருக்கிறது. செல்வந்தர்கள் மீது விதிக்கப்பட்டு வந்த 1,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள செல்வ வரி நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் மக்கள் மீது சுமத்தப்படும் மறைமுக வரிகளான சேவை வரி, சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றை உயர்த்தியதன் மூலம் மக்களிடமிருந்து 23,383 கோடி ரூபாயைக் கூடுதலாகக் கறந்துள்ள மோடி அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் புதுப் பணக்காரர்களுக்கும் 8,315 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது.

இந்த 8,315 கோடி ரூபாய் வரிச் சலுகை என்பது வெளியே தெரியும் முகடுதான். கட்டுக்கட்டான பட்ஜெட் கோப்புகளின் உள்ளே முதலாளி வர்க்கத்திற்கும் புதுப் பணக்காரர்களுக்கும் அளிக்கப்படும் பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகள் மறைந்துள்ளன என்பதே உண்மை. இக்கும்பல் வெளிநாடுகளிலிருந்து நாய்க்குட்டிகளை இறக்குமதி செய்துகொள்வதற்குக்கூட 250 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகளை அனுபவிக்கின்றனர்.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குக் குறைவாக நிதி ஒதுக்கிவிட்டு (34,699 கோடி ரூபாய்), “நாங்கள் மக்களைச் சோம்பேறிகளாக்கும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதில்லை” என எகத்தாளமாகப் பதில் அளித்துள்ள மோடி அரசு, மாலை நேர விருந்துகளில் அழகுப் பதுமைகளாகச் சுற்றி வரும் புதுப் பணக்கார சோம்பேறிக் கூட்டத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து தங்க, வைர நகைகளை இறக்குமதி செய்து கொள்வதற்காக 75,000 கோடி ரூபாய் சுங்க வரிச் சலுகை அளித்திருக்கிறது. இந்த 75,000 கோடி ரூபாய் வரிச் சலுகையை அனுபவிக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுள், மோடிக்கு பத்து இலட்ச ரூபாய் கோட்டு-சூட்டைப் பரிசளித்த கார்ப் நிறுவனமும் அடங்கும்.

இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள், புதுப் பணக்காரர்கள் ஆகியோரின் நலனை முன்னிறுத்தி அளிக்கப்பட்டுள்ள சுங்க வரி, கலால் வரி மற்றும் கார்ப்பரேட் வரிச் சலுகைகளால் இந்த ஆண்டு மைய அரசிற்கு ஏற்படும் வருமான இழப்பு 5,48,451 கோடி ரூபாய். கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள இழப்பு ஏறத்தாழ 42 இலட்சம் கோடி ரூபாய். அக்கும்பலுக்கு அளிக்கப்படும் இந்த அசாதாரணமான வரிச்சலுகைகள்தான் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றன.

இந்த வரிச் சலுகைகளை ஒழித்துக் கட்டாமல் பற்றாக்குறையை ஈடு செய்ய முடியாது. ஆனால், மோடி அரசோ ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வருமான வரிச் சலுகைகளைத் துண்டுதுண்டாக அளிப்பதற்குப் பதிலாக, அவற்றின் மீது விதிக்கப்படும் வரியை 30% சதவீதத்திலிருந்து 25% சதவீதமாகக் குறைக்கப் போவதாக அறிவித்து, வரிச் சலுகைகளை நிரந்தரமாக்கிவிட முடிவு செய்திருக்கிறது.

எட்டு சதவீதத்திற்கு மேலான பொருளாதார வளர்ச்சியைச் சாதிப்பது என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அவர்களுக்குத் தேவையான மூலதனம் நிதியாகவும், வங்கிக் கடனாகவும் வாரி வழங்கப்படுகிறது. அவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து கடன்களைத் திரட்டிக் கொள்ள அரசே உத்தரவாதம் அளிக்கிறது. அவர்களின் இலாபத்தை உத்தரவாதப்படுத்துவதற்காகப் பழைய சட்டங்கள் கைவிடப்படுகின்றன அல்லது திருத்தப்படுகின்றன.

இதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நெருக்கடிகளின் சுமையைத் தாங்கும் இடிதாங்கிகளாக மக்கள் நிறுத்தப்படுகின்றனர். பட்ஜெட் பற்றாக்குறையை ஈடு செய்ய உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் வெட்டப்படுகிறது. கல்வி, சுகாதாரம் ஆகிய அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி குறைக்கப்படுகிறது. மக்களின் வரிப் பணத்தால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் நிதி முதலாளிகளுக்கு விற்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் வாராக் கடனைச் சுமக்குமாறு தள்ளப்படுகின்றன.

இந்திய ஆளுங்கும்பல் தனியார்மயம்-தாராளமயத்தைத் தொடங்கி வைத்தபொழுது, “இனி தொழிற்துறையை தனியார் முதலாளிகள் கவனித்துக் கொள்வார்கள்; சமூக நலத் திட்டங்களை அரசு கவனித்துக் கொள்ளும்” என்ற மயக்கு வார்த்தைகளை அள்ளிவீசியது. ஆனால், நடைமுறையிலோ மக்கள் போராடிப் பெற்ற அனைத்துவிதமான சலுகைகளையும், உரிமைகளையும் பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் படையல் போடும் பூசாரியாக அரசு மாறி நிற்பதைத்தான் பார்க்கிறோம். அதாவது, முதலாளி வர்க்கம் அரசின் அரவணைப்பிலும் சலுகையிலும் பாதுகாப்பிலும் காலந்தள்ளுவது முன்னைக் காட்டிலும் இப்பொழுது மிகவும் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் தனியார்மயம்-தாராளமயம் பெரும் தோல்வியைத் தழுவிவிட்டது என்பது மட்டுமல்ல, அந்த வளர்ச்சிப் பாதையை நிராகரிக்காமல், தூக்கியெறியாமல் மக்களுக்கு விடிவு காலம் இல்லை என்பதும் நிரூபணமாகிவிட்டது.

– ரஹீம்
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________

  1. டீக்கடையில் டீ ஆத்தினவன் “பெரிய”
    பதவிக்கு வந்தால்….உங்களுக்கு தாங்காதா?
    இன்னும் 12 வருசம்,3 மாசம்,9 நாளில்
    பாரதமாதா வல்லரசா மாறி…
    மிச்சம் மீதி இருக்கிற தமிழனையும்
    வேரோடு பிடுங்குவான்…
    அண்ணன் உமா சங்கர்,இந்தியன் எல்லோரும்
    நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அலைவார்கள்

  2. //இதன்படி, பிரீமியம் ரயில் கிளம்புவதற்கான நேரம் நெருங்க நெருங்க, அதற்கு டிக்கெட் கேட்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த ரயில்களின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துகொண்டே போகும். திருவிழா காலங்களில் ஆம்னி பஸ் முதலாளிகள் அடிக்கும் சட்டவிரோதக் கொள்ளைகூட இந்தளவிற்கு வக்கிரமாக இருப்பதில்லை.//

    இரயில் துறையில் உண்மையான கொள்ளையர்கள் யார் தெரியுமா?
    அதன் ஊழியர்கள் தாம்… இந்த உண்மையை யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்
    வருமானத்தில் 60-65% சம்பளத்திற்கு செலவு; பெரும்பாலான ஊழியர்களுக்கு மிக குறைந்த வேலை; அதிக சம்பளம். ICF / Carriage & Wagon repair works / Perambur Loco Works போன்ற பாக்டரி / பணிமனைகளுக்கு நான் வேலை நிமித்தம் சென்றுள்ளேன். சராசரியாக ஒரு ஊழியர் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வேலை பார்த்தால் அதிகம்.

    திருச்சி பொன்மலை பனிமலையில் (மற்றும் Line / signal ) கொஞ்சம் அதிகம் வேலை பார்ப்பார்கள் (4-5 மணி).
    ICFல் ரொம்ப மோசம்; சில ஊழியர்கள் பணிக்கே வர மாட்டார்கள். வந்தாலும் சில மணி நேரத்தில் கிளம்பி விடுவார்கள். பணிமனைக்குள் எல்லா வியாபாரமும் நடக்கும்.
    100 கோடி மக்களின் பணம் சுமார் 10 லட்ச ஊழியர்களுக்கு தண்டல் மாதிரி கொடுக்க வேண்டியுள்ளது
    இந்த கொள்ளைக்கு என்ன பெயர் வைப்பது? இவர்களுக்கு தொழிற் சங்கம் பாதுகாப்பு; நிர்வாகத்திற்கு முதுகு எலும்பு இல்லை; வேலை வாங்கவும் தெரியாது.

    • Sooriyan,

      Please read the context..

      Govt makes little bit more money by making use of some opportunities (it’s the practice followed by almost any service provider world-wide).

      The article says Govt is robbing from Passengers; actual robbery is performed by Railway employees.

      • If the Govt is making (not) little money(looting the passengers)then what is the difference between private omni bus operators who loot during festival season and the Govt?If the common man can not afford to travel by express trains/premium trains,for whom they want to introduce bullet trains and high speed trains? Do you know that most of migrant labourers from North East,Bihar and UP only travel in unreserved compartments since they cannot afford to buy even sleeper class tickets.Arun Jaitley has promised to issue tickets to them in 5 minutes.He has not cared to provide more unreserved compartments/more trains to them.A welfare State has to provide subsidized transport to its citizens.

        • Sooriyan,

          Prices are determined by Demand and Supply; on certain days when the demand spikes, prices will go up as supply can’t keep up. Law of nature; nothing can be done. It exists everywhere.
          Let’s not discuss Bullet trains now; Govt not going ahead with this. It’s going to take few decades before we see it.
          Railways can’t bring the price down when it’s cost keeps rising. Important cost break-down: Labor, Power, Oil, Maintenance items. When all are going up how can it survive without price increase?
          We have seen in the past decades that subsidies don’t work effectively.
          Why to run it when we can’t extract bang out of the buck?

          Solution:
          We need to initiate Railways Reforms; slowly we need to bring in private players for add-on services (such as Catering, Station / Coach maintenance, Coach / Wagon manufacturing, ticket issue, etc).
          Then after a while, we need to get out of Freight transport. After it’s stabilized we need to privatize passenger traffic step-by-step. When you do so, cost increase won’t be much as we will have higher accountability.

          • Mr Umashankar,Have you travelled to southern districts of TN by train?The trains are always full.When the demand is so much,what prevented the Govt to introduce new trains?Our new Railway Minister cracks jokes on his predecessors for announcing new trains.According to your logic,the common man has to pay through his nose for every trip.Privatisation is not the only solution.When the Railways are privatised,common man cannot even enter the station let alone travel.As I already told,it is the responsibility of a welfare State to provide the rail travel to common man at affordable cost.When the Govt cannot undertake track laying projects for want of funds,what is the fun in investing in tracks for high speed train tracks at high cost by external borrowing.Thanks for accepting that bullet trains are only for rhetoric purpose and not going to happen in the near future.My opinion is bullet trains are to be avoided in future also.

            • Sooriyan,

              I traveled extensively in TN. I think challenges are lack of lines and traffic. We have double lines in few stretches only. Introduction of new trains won’t help unless we have double lines.

              Privatization is among the best as Railways will retain more for capital expenses. Then they will have more funds for new lines, new trains. Another solution: Thinning down the labor force.
              Computerization of passenger booking has helped millions; similarly they need to bring in new technology in signal (GPS enabled), Rolling stock maintenance, etc. For all that, Govt doesn’t have capital; hence private participation can help.

      • உமா ஷங்கர்,

        கட்டுரை சொல்லும் விடயத்திற்குள் செல்ல மனமில்லாமல் திசைத் திருப்புகின்றீர்கள். கட்டணம் உயர்ந்து கொண்டே போனால் அதை யார் வாங்க முடியும். கட்டிடம் கட்டிய பிறகு அந்த ஏ.சி அறையில் வேலைப் பார்பவர்கள் வேண்டும் என்றால் பயணிக்கலாம். அந்த கட்டிடம் கட்டியவர்கள் மகராஷ்டிரா, ஒரிசா வரைக்கும் பயணிக்க வேண்டும். அவர்களால் முடியுமா?

        அது மட்டுமல்லாமல் ரயில்வே துறையில் அனைவருக்கும் குறைந்த வேலை அதிக சம்பளமா? முதலில் ரயில்வே துறையில் யார் யார் வேலை பார்க்கின்றார்கள்? துறை வாரியாக எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள்? எவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு அதிகம் சம்பளம் பெறுகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் மூலமே நாம் முடிவுக்கு வர முடியும்.

        சரி உங்க பேச்சுக்கே வந்தா கூட, மெட்ரோ ரயில்வேல வேல பாக்குற கூலித் தொழிலாளிகளோட சம்பளம் எவ்வளவு? அதிக நேரம் குறைந்த கூலி இது எப்படி இருக்கு. அப்படிம் குறைந்த கூலியில் அதிக லாபம் பார்ப்பது யார் எல்&டி மற்றும் இதர தனியார் நிறுவனங்கள் தானே..

        அரசுத் துறைகள் இருப்பது இலாபத்திற்காக அல்ல மாறாக சேவைக்காக தான். அதாவது ஏழை எளிய மக்களும் எளிதாக குறைந்த கட்டினத்தில் பயணம் செய்வதற்கு என்ன வழி?

          • உமா சங்கர் ,

            ICFம் ஒரு ஆண்டுக்கான இரயில் பெட்டிகளின் முழு உற்பத்தி திறன் என்பது சில ஆயிரங்களாக இருக்கும் போது , அது போன ஆண்டு வெறும் 100குல்லான ரயில்பெட்டிகளை மட்டும் உற்பத்தி செய்ததன் மர்மம் என்ன ? இந்த அரசாங்கமும் அதன் தனியார் வாத கொள்கைகளும் தானே ? முழு உற்பத்தி திறனுடன் ஆயிரகணக்கான இரயில் பெட்டிககளை உற்பத்தி செய்யமாட்டேன் என்று ICF தொழிலாளர்கள் கொடிபிடித்து போராட்டம் செய்தார்களா? இல்லையே ?! சென்னைக்கு ,டெல்லிக்கு ,மும்பைக்கு தேவையான மெட்ரோ இரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை கையில் வைத்து உள்ள ICF இடம் உற்பத்திக்கான் ஆர்டரை மத்திய ,மாநில அரசுகள் கொடுக்காமல் வேறு நாடுகளுக்கு அந்த ஆர்டரை கொடுத்ததான் காரணம் என்ன ? அப்படி ஆர்டரை மாற்றி கொடுத்தது யார் ? ஏன் இந்த குளறுபடியை அரசும் ,உயர் அதிகாரிகளும் செய்தார்கள். முழு உற்பத்தி திறனுடன் ICF இயங்கும் போது அதன் தொழிலாளர்கள் 8 மணிநேரத்துக்கும் குறைந்த வேலை நேரத்தில் இயங்க முடியுமா ?

            //சராசரியாக ஒரு ஊழியர் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வேலை பார்த்தால் அதிகம்.//

            • [சுட்டிகள் நீக்கப்பட்டன. பின்னூட்டம் இடும் வாசகர்கள் சுட்டிகளை கொடுக்காமல், தங்களது சொந்தக் கருத்துக்களை பதியும்படி கேட்டுக் கொள்கிறோம்]

              Read all these links; looks like ICF lacks capability to manufacture Metro Rail Coaches.
              If at all they have, they need to bid; no one would stop them.
              If ICF can compete, offer quality coaches with attractive prices, who wouldn’t buy?

              About Production & Capacity, read this news item:
              [சுட்டிகள் நீக்கப்பட்டன. பின்னூட்டம் இடும் வாசகர்கள் சுட்டிகளை கொடுக்காமல், தங்களது சொந்தக் கருத்துக்களை பதியும்படி கேட்டுக் கொள்கிறோம்]

              It’s very easy for ICF employees to achieve the Production target; its like asking a young man to cover 100 meters in 30 min.

              • உமா ,

                ICF க்கு மேட்ரோ ரயில் பெட்டிகள் செய்யும் தகுதி இல்லை என்ற வாதமே குருட்டாம் போக்கில் எடுத்துவிடபடுகின்ற அறிவற்றவாதமாகும். ரயில்வே துறை தனக்கு தேவையான ரயில் பெட்டிகளை தயாரிக்கவோ ,அல்லது மத்திய மாநில அரசுகள் மெட்ரோவிற்கு தேவையான ரயில் பெட்டிகளை தயாரிக்கவோ அதற்காக ஒப்பந்தப்புள்ளி [tender]மூலம் தான் நிறைவேற்றவேண்டும் என்ற வாதமே மோசடியானது . ஏனென்றால் , குறிப்பாக ICF க்கு கையில் மேட்ரோ ரயில் பெட்டிகள் செய்வதற்கான தொழில் நுட்பம் உள்ள நிலையில் அதனை புறகணித்து விட்டு ICF ன் முழு உற்பத்தி திறனை குலைத்துவிட்டு தனியாருக்கு தான் ஒப்பந்தப்புள்ளி [tender]மூலம் மேட்ரோ ரயில் பெட்டிகளை செய்யும் ஆர்டர்களை தருவேன் என்றால் ரயிவே துறையின் ஒரு அங்கமான ICF எதற்கு ?

                ICF க்கு 1000துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கும் உற்பத்தி திறன் இருக்கும் நிலையில் வெறும் 100குள்ளான ரயில் பெட்டிகளை மட்டுமே தயாரிக்க அனுமதி அளித்த அரசியல்வாதிகளை ,உயரதிகாரிகளை சந்திக்கு இழுக்காமல் அரசு பதவியில் கீழ் நிலையில் உள்ள தொழிலாளர்கள் மீது பழி சுமத்துவது உமாவிற்கு கேவலமாக இல்லையா ?

                • ICF lacks capability as per Railway board; I’m not blaming. I provided proof with Railway board’s news; but Vinavu removed it.

                  If you say Tender is illegal, it makes me laugh….It’s like saying election is illegal in democracy.

                  //ICF க்கு 1000துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கும் உற்பத்தி திறன் இருக்கும் நிலையில் வெறும் 100குள்ளான ரயில் பெட்டிகளை மட்டுமே தயாரிக்க அனுமதி அளித்த அரசியல்வாதிகளை ,உயரதிகாரிகளை சந்திக்கு இழுக்காமல் அரசு பதவியில் கீழ் நிலையில் உள்ள தொழிலாளர்கள் மீது பழி சுமத்துவது உமாவிற்கு கேவலமாக இல்லையா ?//
                  About ICF’s production & capacity, your numbers are wrong. Read the Rail news and find out. Vinavu keeps removing links that reveal some facts with evidence.

                  As per information was given by the Minister of State for Railways Shri Manoj Sinha in written reply to a question in Lok Sabha: ICF is running at 100% or more production capacity for the 4 years. ICF produced more than 1500 coaches in the current financial year.

                  • என்னத்துக்கு உமா இப்படி தமிழ் விரித்த வலையில் எலிமாதிரி சிக்கிகிட்டிங்க ? உங்களின் விவாத கருத்துகள் முரண்படுகின்றதே உமா! உங்கள் கருத்து படி தினமும் 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் ICF தொழிலாளர்கள் ,பின்பு எப்படி 100% உற்பத்தி திறனுடன் [You said 100% or more production capacity for the 4 years] ரயில்பெட்டிகளை உற்பத்தி செய்து இருக்க முடியும்.?

                    Uma comment 1 ://இரயில் துறையில் உண்மையான கொள்ளையர்கள் யார் தெரியுமா?
                    அதன் ஊழியர்கள் தாம்… இந்த உண்மையை யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்
                    வருமானத்தில் 60-65% சம்பளத்திற்கு செலவு; பெரும்பாலான ஊழியர்களுக்கு மிக குறைந்த வேலை; அதிக சம்பளம். ICF / Carriage & Wagon repair works / Perambur Loco Works போன்ற பாக்டரி / பணிமனைகளுக்கு நான் வேலை நிமித்தம் சென்றுள்ளேன். சராசரியாக ஒரு ஊழியர் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வேலை பார்த்தால் அதிகம்.//

                    Uma Comment 2:// As per information was given by the Minister of State for Railways Shri Manoj Sinha in written reply to a question in Lok Sabha: ICF is running at 100% or more production capacity for the 4 years. ICF produced more than 1500 coaches in the current financial year.//

                    • Uppuma,

                      Please read my entire content and try to understand the message. If not ask for clarifications….

                      Good luck!!

                    • வாத்தியார் உமா ,

                      அது தான் முந்தைய பின்னுட்டத்திலேயே உங்க முரண்பாட்டை கீழ் உள்ளவாறு சுட்டியுள்ளேனே ! பதில் குடுங்க வாத்தியார் :

                      உங்கள் கருத்து படி தினமும் 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் ICF தொழிலாளர்கள் ,பின்பு எப்படி 100% உற்பத்தி திறனுடன் [You said ICF has 100% or more production capacity for the 4 years] ரயில்பெட்டிகளை உற்பத்தி செய்து இருக்க முடியும்.?

                      //If not ask for clarifications….//

                  • உமா , தெரிகின்றது அல்லவா 2014-15 ஆண்டு ICF 1,704 கோச்சுகளை தயாரித்து உள்ளது என்று. பின்பு ஏன் ICF தொழிலாளர்கள் வேலையே செய்வது இல்லை , இரண்டு மணிநேரம் கூட வேலை செய்வது கிடையாது என்று ICF தொழிலார்கள் மீது வெட்டி அவதுரு பரப்புகின்றிர்கள் ? மேலும் இந்த ஆண்டு 1800 கோச்சுகளை தயாரிக்கும் நிலையில் அவர்கள் உள்ள நிலையில் அவர்கள் மீது வீண் அ வ து ரு பரப்பிக்கொண்டு உள்ளீர்கள். ஆனால் உங்கள் மீது மட்டும் ஒரு வசை சொல்லோ ,கிண்டலோ விழக்கூடாது என்று நினைப்பதில் என்ன நியாயம் உள்ளது உமா ?

                    //ICF is running at 100% or more production capacity for the 4 years//

                    • Thamizh,

                      Don’t you ever read my submissions properly?

                      First your info is wrong about ICF production.

                      Second – their capability – your info is wrong; they can’t manufacture Metro coaches.

                      Third – their capacity / target – what you said is wrong again; they define a target way less than their actual capacity. I mentioned this earlier: //It’s very easy for ICF employees to achieve the Production target; its like asking a young man to cover 100 meters in 30 min.//

                    • உமா ,

                      சின்னதா ஒரு தப்பான விவரத்தை கொடுத்தா தானே ,உமாவாகிய நீங்கள் உண்மையான விவரத்தை கொடுத்து வலையில் சிக்குவிங்க ! நான் “ICF க்கு 1000துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கும் உற்பத்தி திறன் இருக்கும் நிலையில் வெறும் 100குள்ளான ரயில் பெட்டிகளை மட்டுமே தயாரிக்க” எனறு கூறியதில் உள்ள விவரபிழைகள் எமக்கு தெரியும் உமா ! உடனே உங்கள் எதிர்வினை என்னவாக இருந்தது ?

                      [1]ICF is running at 100% or more production capacity for the 4 years.

                      [2]ICF produced more than 1500 coaches in the current financial year.

                      ரொம்ப சரியாக சொன்னிர்கள் உமா ! ICF கடந்த 4 ஆண்டுகளாக 100% உற்பத்திக்கு மேல் இயங்குகின்றது . அடுத்ததாக 1500 பெட்டிகளை தயாரித்து உள்ளது . இந்த கருத்துக்கள் கூறும் விடயம் என்ன உமா ?

                      “”””ICF 100% உற்பத்தி திறனுக்கும் மேல் 4 ஆண்டுகளாக இயங்குகின்றது என்றால், 1500 ரயில்பெட்டிகள் தயாரித்தது அதன் முழு உற்பத்தி திறனை தானே குறிக்கும். மேலும் முழு உற்பத்தி திறனுடன் ICF இயங்கும் நிலையில் அதன் தொழிலாளர்கள் வெறும் 2 மணிநேரம் மட்டுமே வேலை செய்கின்றார்கள் என்று நீங்கள் கூறுவதில் எதேனும் உண்மை இருக்கின்றதா ? 2 மணிநேர உழைப்பு என்பது ஒரு நாள் உழைப்பின் 25% . அப்படி என்றால் ICFன் ஒரு ஆண்டுக்கான உற்பத்தி என்பது 25% அளவிற்கு தானே இருக்க வேண்டும். அதாவது 1500 *25 /100 = 375 பெட்டிகளை தானே அது உற்பத்தி செய்து இருக்கவேண்டும் ! ஆனால் 1500 பெட்டிகளை அல்லவா தாயாரித்து உள்ளது ! [உண்மையில் 2014-15 ஆண்டு ICF 1,704 கோச்சுகளை தயாரித்து உள்ளது]”

                    • உமா , மெட்ரோ ரயில்களுக்கு ICF பெட்டிகளை தயாரிக்கும் :
                      ————————————————————————

                      [1]ICF கல்கத்தா மெட்ரோ ரயில்களுக்கு ரயில் பெட்டிகளை தயாரித்து அளித்துள்ளது [ The rolling stock of Kolkata Metro Line 1 uses Indian gauge a broad gauge track which is manufactured by ICF, Chennai, and the electrical components are manufactured by NGEF, Bangalor]

                      http://en.wikipedia.org/wiki/Kolkata_Metro

                      [2]ICF டெல்லி மெட்ரோ ரயில்களுக்கு ரயில் பெட்டிகளை தயாரித்து அளித்துள்ளது. [The Mumbai metro rolling stock has been supplied by a Chinese company, Nanjing SR Puzhen Rail Transport (NPRT), whereas that of the Delhi metro has been supplied by indigenous train manufacturer, Chennai-based Integral Coach Factory (ICF). ]

                      http://www.mumbai-metro.com/construction-and-technology/8914/conditional-clearance-delays-mumbai-metro-further

                      [3]ICF மும்பை மெட்ரோ ரயில்களுக்கு ரயில் பெட்டிகளை தயாரித்து அளித்துள்ளது.[ New Bombardier rakes being built at the Integral Coach Factory (ICF) in Chennai were expected to start coming into
                      Mumbai by April 2014 however a delay of two years is anticipated due to a demand of automatic sliding door on the trains.]

                      http://en.wikipedia.org/wiki/Mumbai_Suburban_Railway

                      //They can’t manufacture Metro coaches.//

              • உலகளாவிய ஒப்பந்தங்களின் துணை கொண்டே மிகப் பெரிய கொள்ளைகளை அடிக்க முடியும். இதனை போபர்ஸில் இருந்து சவப் பெட்டி வரை பார்த்து விட்டோம். ஆட்களை சேர்த்து விடுதல், மூலப் பொருட்கள் வாங்குதல் மூலம் மிக குறைவான தொகையே கள்ள சந்தையில் சம்பாதிக்க முடியும். மேலும் அவைகள் ஒவ்வொருமுறை வாங்கும் போதும் கிடைக்ககூடிய சாத்தியம் குறைவு.
                சாராய வியாபாரி மல்லையா 5000 கோடி மதிப்புள்ள பொதுமக்கள் பணத்தை சூறை விடவில்லையா, அது போல புகைவண்டி இலாகா தொடர்பான சொத்துக்களை தனியார் தரகு முதலாளிகள் சூறையாட வேண்டும் அது தான் இவர்களின் திட்டம்.
                பார்ப்பன பனியாக்கள், இந்த துறை சார்ந்த பொருள் கொள்முதல்களில் கொள்ளை அடிப்பதை அந்த துறை அமைச்சரே பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
                யானைகளை பற்றி கவலை கொள்ளாமல், தொழிலாளர் தொடர்பான கடுகுகளை பெரிதுபடுத்தும் பார்ப்பன பனியா மனநிலையில் இருக்கும் இவரிடம் இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்.
                பொதுத் துறையில் போராடி வேலைவாய்ப்புகளை பெற முடியாத பார்ப்பன பனியாக்கள், பொது துறை வேலைகளை தனியாருக்கு விட்டு, புறவாசல் வழியில் பார்ப்பன பணிய சாதியினறுக்கு அதே வேலையை கையளிப்பது இவர்களின் மற்றும் ஒரு திட்டம்.

                • Madhav,

                  What has “Brahminism” got to do with this?
                  Argue with facts and figures; yours is a baseless argument.

                  In India, few corporate were privatized; they all are doing extremely well after privatization. I haven’t seen any complaints from their employees.

                  Mallaya / Maran brothers swindled money; they did so with the collaboration of political parties such as Congress & DMK. So far we haven’t heard a big scandal out of a BJP Govt.

                  • “உ.பி.மாநிலம்: பார்ப்பன – பனியா அக்கிரகாரம்!” எனும் தலைப்பில் உள்ள வினவு கட்டுரையை படிக்கவும், பார்ப்பன பனியாக்கள் எப்படி சுரண்டல் ஆன வழிமுறைகளில் ஆதிக்கத்தை தங்கள் கைகளில் வைத்து இருக்கிறார்கள் என புரியும்.
                    நம்முடைய புனித பசு, டெல்லி மேட்ரோவே, லஞ்சம் கொடுத்து வாங்க வைக்கப் பட்டது என பிரிட்டனில் நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டது. ரபேல் விமான விற்பனையிலும் லஞ்சம் விளையாடியுள்ளது என சுனா சாமியே குறை கூறியுள்ளார்.
                    ஆதாரம் தேடுங்கள் கிடைக்கும். தொடர்புகளால் கருத்துபகுதியை நிறைக்க விருப்பமில்லை.

                    காடுகளில் உல்லாசப்போக்கிடம் கட்டுவது, நிலக்கரி மற்றும் கனிமங்கள் சுரண்டல் என ஊழலில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த ஊழலும் இல்லை. பாலியெஸ்டர் பிரின்ஸ் படித்து உள்ளீர்களா?
                    Few scams FYR:
                    Laxmi Vilas Palace hotel, spread over 29 acres with an estimated value of Rs 151 crore, was sold to Bharat Hotels for Rs 7.52 crore
                    The Adani Group was given acres of land at Rs 1 per square metre
                    Gujarat government had purchased cattle feed from a blacklisted company at Rs240 per 5 kg whereas the market rate is just Rs120 to Rs140 per 5 kg.
                    மேலே காட்டிய எல்லா ஊழலிலும் தனியார் நிறுவனங்களும் ஒரு தரப்பு என்பதை கவனிக்கவும்.

                    தனியார் என்றாலே பார்ப்பன பனியாக்களே.

                    தனியார் நிறுவனங்களின் தொங்குசதையாக பார்பனன் இருக்க, மாடாய் உழைக்கும் ஒடுக்கப்பட்டவனாலும், ஊழலாளும் லாபம் சம்பாதிக்கின்றன தனியார் நிறுவனங்கள். டாட்டாவின் தகவல் தொழில் நிறுவனம் எப்படி உழைப்பாளிகளை ஏமாற்றுகிறது என பல கட்டுரைகள் வினவில் வந்து உள்ளன.

                • @Madhav
                  Debunked another view on LPG-Liberalisation, Privatisation and Globalisation. Thanks.
                  /பொதுத் துறையில் போராடி வேலைவாய்ப்புகளை பெற முடியாத பார்ப்பன பனியாக்கள், பொது துறை வேலைகளை தனியாருக்கு விட்டு, புறவாசல் வழியில் பார்ப்பன பணிய சாதியினறுக்கு அதே வேலையை கையளிப்பது இவர்களின் மற்றும் ஒரு திட்டம்./

  3. Response for Tamil’s comment:

    Vinavu rejected URLs in my submission and allowed yours; ha ha…Idhu than “இட ஒதுக்கீடு கலந்த பகுத்தறிவு”.
    ICF appears to have supplied coaches to Calcutta Metro Rail; for some reason they didn’t bid for Delhi, Chennai and Mumbai; as per Railway board, they lack capability.

    As per these links: http://en.wikipedia.org/wiki/Delhi_Metro and http://www.railway-technology.com/projects/delhi-metro/
    http://timesofindia.indiatimes.com/city/mumbai/Mumbai-Metro-may-get-44-extra-coaches-from-China/articleshow/12475895.cms?referral=PM
    Coaches are not made by ICF for Mumbai and Delhi. I don’t blame Tamil for this; information available is not consistent. An expert in this field can confirm.

    BTW – Good work Tamil; you explored hard to find this info.

    About Production Capacity & Target, please read my comment appropriately. Understand how ICF is setting their targets and brag their achievement. I have gone to ICF many times and worked with them for a long time in different departments including Production Planning. I wouldn’t make such comment if I didn’t know about them.

    • When Thamizh provided right information, you took some steps backward and now you are saying about Production Capacity and Target, if Thamizh was able to find some truth behind this; then you will forever run away from this site.

      Genius Right wing.

  4. No one is trying to argue with you, trying to remove your ignorance, which enhances knowledge of other readers but failed in your case. Don’t bury your head in the sand.

Leave a Reply to Sooriyan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க