privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

puthiya-jananayagam-postபுதிய ஜனநாயகம் ஏப்ரல் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. கல்விக் கொள்ளையர்களின் அம்மா!
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த மைய அரசு ஒதுக்கிய 4,400 கோடி ரூபாய் நிதியைப் பயன்படுத்தாமல் கரையான் தின்னவிட்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு.

2. அரசு அதிகார் டி.கே.ரவி மர்மச் சாவு : இந்த வளர்ச்சிப் பாதையில் நேர்மைக்கு இடமில்லை!

3. சகாயம் : அதிகார வர்க்க சட்டவாதப் போலி போர்வீரன்!
கிரானைட் கொள்ளைகளுக்கு உடந்தையாக நிற்கும், பாதுகாக்கும் அரசு அதிகார அமைப்புக்குள்ளேயே நின்று கொண்டு அதனை வைத்தே குற்றவாளிகளைத் தண்டித்து விட முடியும், அதிகார வர்க்க சட்டமுறைப்படி நடந்துகொண்டால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று சகாயம் நம்புகிறார்.

4. முத்துக்குமாரசாமி தற்கொலை: ஏ-1 யார்? அம்மாவா? அக்ரியா?
அக்ரி கிருஷ்ணமூர்த்தி வசூலித்திருக்கும் ஒவ்வொரு காசும் அம்மாவுக்குப் போய்ச் சேரும் பணம் என்பதால் அம்மாவை விட்டுவிட்டு அவருடைய விசுவாச பி.ஏ. அக்ரியை மட்டும் குற்றவாளியாக்குவது சரியா?

5. மாட்டுக்கறி தடைச் சட்டம் : வலக்கரத்தில் கோமியம், இடக்கரத்தில் ஹாம்பர்கர்!
மாட்டிறைச்சியை முசுலீம்களுக்கு எதிரான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்-இன் நோக்கம். எனினும், இச்சட்டம் முசுலீம்களைக் காட்டிலும் விவசாயிகளையும், ஏழைகளையும், தாழ்த்தப்பட்டோரையும்தான் அதிகம் பாதிக்கிறது.

6. உ.பி. மாநிலம் : பார்ப்பன – பனியா அக்கிரகாரம்!
உ.பி. மக்கள்  தொகையில் 21% மட்டுமே உள்ள ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள் 75% அரசு மற்றும் தனியார்துறை பதவிகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.

7. ஆர்.எஸ்.எஸ்-இன் சோதனைக் கூடமாகிறதா தமிழகம்?

8. ஹாசிம்புரா படுகொலை தீர்ப்பு : முதுகில் குத்திய துரோகம்!
அப்பாவி முசுலீம்களைக் கடத்தி சென்று, படுகொலை செய்த இந்து மதவெறி போலீசு கிரிமினல்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடே வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

9. “சர்வதேச மகளிர் தினத்தைக் கொச்சைப்படுத்தாதே!” – பெண்கள் விடுதலை முன்னணியின் அறைகூவல்

10. பட்ஜெட் : இந்தியாவைக் கொள்ளையடிப்போம்!
அடிக்கட்டுமான வளர்ச்சி என்ற போர்வையில் வரிப்பணத்தையும், மக்களின் சேமிப்புகளையும், நாட்டின் வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகளின் காலில் கொட்டுகிறார், மோடி.

11. மோடி – அருண் ஜெட்லி : திருடர்கள் ஜாக்கிரதை!
“மக்களிடமிருந்து தினுசு தினுசாக எப்படிக் கொள்ளையடிக்கலாம் என ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ” – எனக் கேட்குமளவிற்கு இந்த பட்ஜெட்டில் மக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டுள்ளன.

12. கார்ப்பரேட் ‘சமூக’ப் பாதுகாப்புத் திட்டங்கள்
மோடி அரசு அறிவித்துள்ள மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எனப்படுபவையும் கூட, கார்ப்பரேட் முதலாளிகளுக்கான பாதுகாப்புத் திட்டங்கள்தான்.

13. தனியார்மயம், கார்ப்பரேட் மயம் – மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்!
நோயினால் சாவு என்ற நிலை மாறி, நோய்க்குச் செய்த செலவால் சாவு என்ற நிலையைத்தான் மருத்துவத் துறையில் புகுத்தப்பட்டுள்ள தனியார்மயம் ஏற்படுத்தியிருக்கிறது.

14. வளர்ச்சியா, பேரழிவா?

15. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைப் பூஜைப் பொருளாக்க அனுமதியோம்!

16. காக்கி விசப்பூச்சிகள்

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

  1. சட்டப்படி கிரிமினலான, ஜாமினில் வெளியே வந்து உள்ள ஜெயாவிற்கு அது என்ன அம்மா பட்டம் putiya jananayakam ? கிரிமினல் பேர்வழி என்று ஜெயாவை அழைப்பது மட்டுமே சரியான முறை.

  2. அக்லி அக்ரி தமிழக ஆரசுக்கு அவமானம் – ஆனந்தவிகடன்

    ஊழல் குற்றவாளி ஜெயா ஆனந்தவிகடன் பார்வையில் தமிழகத்து அவமானம் இல்லையா….

    யெங்கடா பொச்சு உங்க அறிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க