Saturday, May 10, 2025
முகப்புசெய்திசூத்திரன், பஞ்சமன் தொட்டால் சாமிக்குத் தீட்டா ? - வீடியோ

சூத்திரன், பஞ்சமன் தொட்டால் சாமிக்குத் தீட்டா ? – வீடியோ

-

னைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்தியிருக்கும் பார்ப்பன சிவாச்சாரியர்களின் வழக்கு 8 வருடங்களாக தூங்கிக் கொண்டிருந்தது. அதன் மீதான விசாரணை இப்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

உச்சிக் குடுமி மன்றத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும், தமிழக மக்களுக்கு சுயமரியாதை ஊட்டும் விதமாகவும் 21-4-2015 அன்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில், மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள், “சூத்திரன், பஞ்சமன் தொட்டால் சாமிக்குத் தீட்டா?” என்ற முழக்கத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்கள், வீடியோ பதிவுகளிலிருந்து…

தயாரிப்பு : வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க