privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபெண் விவசாயி தற்கொலை - அரசின் புள்ளிவிவர படுகொலை !

பெண் விவசாயி தற்கொலை – அரசின் புள்ளிவிவர படுகொலை !

-

ந்தியாவில் விவசாயியாக இருப்பதன் துன்பம் என்ன என்பதை அவ்வளவு சுலமாக விளக்க முடியாது. அரசே திட்டமிட்டு விவசாயத்தை ஒழித்து வரும் நிலையில், விளைச்சலுக்கு விலையின்மையும், விவசாய இடு பொருட்களின் விலையேற்றமும், காலம் தப்பி வரும் பருவ மழையும் ஒரு திசையில் ஈட்டியாக விவசாயிகளைக் குத்துகின்றன என்றால் – இன்னொரு புறம், விளைநிலங்களை அரசே முன்னின்று பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைப்பது, வங்கிக் கடன்கள், ஏமாற்றும் பி.டி விதைகள், கொல்லும் குறுங்கடன்கள் என்று திரும்பிய திசையிலெல்லாம் இந்நாட்டின் விவசாயி நெருக்கப்படுகிறார்.

இதில் பெண் விவசாயிகளின் நிலையோ இது வரை சொல்லப்படாத சோகமாகவே உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையாக நடந்து வரும் சிறு குறு விவசாயத்தைப் பொறுத்தவரையில், பெண்கள் கூலியில்லாத கூலியாகவே பயன்படுத்தப்படுகிறார்கள். நாற்று நடுவதில் தொடங்கி களை பிடுங்குவது, உரமிடுவது, அறுவடையில் ஈடுபடுவது மட்டுமின்றி குறைந்த அளவில் உற்பத்திப் பொருட்களைச் சந்தைக்கு எடுத்துச் செல்வது வரை  ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் கூலியில்லாத உழைப்பைச் செலுத்துகிறார்கள்.

ஆனால், இந்த உழைப்பிற்கு என்ன பலன்? பொதுவில் விவசாயிகளுக்கே மதிப்பில்லை எனும் போது அது பெண் விவசாயிகளுக்கு இன்னும் அதிகம் பொருந்தும்.

பெண்கள் நாடாளுமன்றம்
டெல்லி நொய்டாவில் நடந்த பெண்கள் நாடாளுமன்றம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 விவசாயிகள், ஆய்வாளர்கள் கலந்து கொண்ட ’பெண்கள் பார்லிமெண்ட்’ என்கிற நிகழ்வை ப்ராக்ரிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்ட சோனாலி கஜானன் என்கிற பெண் விவசாயி, ”எங்களது விளைச்சலுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. ஆனால், அதே விளைபொருளை ஒரு ஆண் விவசாயி விற்றால் எங்களை விட அதிக விலை கிடைக்கிறது” என்கிறார். உண்மையில் விவசாயிகளை ஏமாற்றும் சந்தை பெண் விவசாயிகளை இன்னும் மோசமாய் ஏமாற்றுகிறது.

கடன் தொல்லையினாலோ, வேறு காரணங்களாலோ ஒரு ஆண் விவசாயி அகாலமாக இறந்து விட்டால், அந்த வீட்டின் தலைவி சந்திக்கும் பிரச்சினைகளை அடுக்கி மாளாது. இறந்து போனவர் விட்டுச் சென்ற குடும்பத்தையும் கடன்களையும் ஏற்கனவே ஊனமுற்றுப் போன விவசாயத்தை நம்பியே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ப்ராக்ரிதி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்ட சுவர்ணா தாம்லே, “கணவனை இழந்த பெண் விவசாயிகளுக்கு அவரது கணவர் விட்டுச் சென்றிருக்கும் கடன் எவ்வளவு, அதில் எவ்வளவு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிவதில்லை. எஞ்சியதைத் திருப்பிச் செலுத்துவது எப்படி என்பதும் தெரிவதில்லை. இது குறித்து தீவிர விழிப்புணர்வு தேவைப்படுகிறது” என்கிறார். இந்நிலை கிட்டத்தட்ட ஆயுள் முழுவதும் கொத்தடிமையாக இருப்பதைப் போன்றது.

வங்கிகள் விவசாயக் கடன்கள் வழங்குவதிலிருந்து கைகழுவிக் கொள்ளும் நிலையில், விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே தீர்வு உள்ளூர் கந்து வட்டி முதலைகள் அல்லது நவீன கந்து வட்டி கும்பலான குறுங்கடன் வங்கிகள். இவர்கள் விதிக்கும் விண்ணை முட்டும் வட்டி விகிதங்கள் ஒரு புறமிருக்க, விவசாயியை போண்டியாக்கி நிலத்தையோ அல்லது அடமானத்தில் உள்ள வேறு பொருளையோ அபகரித்துக் கொள்வதை நோக்கமாக கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாதபடிக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் விதிமுறைகளோ எளிய மக்களைக் கொல்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டவை.

இந்த நடைமுறைகளின் குரூரத்தை நாமக்கு ருக்மாபாய் ரத்தோடின் மரணம் உணர்த்துகிறது. மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவின் அகோலா பகுதியைச் சேர்ந்தவர் ருக்மாபாய். 1992-ம் ஆண்டு தனது கணவர் இறந்தபின் அவர் விட்டுச் சென்றிருந்த கடன்களையும் விவசாயத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுக்கிறார் ருக்மாபாய். சுமார் 23 ஆண்டுகள் தனது தோளில் தன் குடும்பத்தையும் விவசாயத்தையும் சுமந்த அவர் அந்த உழைப்பின் பலனாக 3 லட்ச ரூபாய் கடனைப் பெற்றுள்ளார். கடனை அடைக்க அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போக, இறுதியில் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளார்.

2011-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மகாராஷ்டிராவின் ஊரகப் பகுதிகளில் மட்டும் சுமார் 16.46 லட்சம் குடும்பங்களைப் பெண்கள் தலைமை தாங்கி நடத்துகிறார்கள். இது ஊரகப் பகுதிகளின் மொத்த குடும்பங்களில் 12.5 சதவீதமாகும். அதிகரிக்கும் விவசாயிகளின் தற்கொலைகள் அந்தக் குடும்பங்களின் பெண்களை பலிபீடத்திற்கு இழுத்து வருகிறது. கணவன் குடும்பத்திற்கு தலைமை தாங்கும் போது கூலியின்றிச் சுரண்டப்படும் பெண்கள், கணவனின் மரணத்திற்குப் பின் பொருளாதாரச் சுரண்டலோடு சேர்த்து சமூகத்தின் அழுத்தங்கள் அனைத்துக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

2013-ம் ஆண்டின் தேசிய குற்றப் பதிவு மையம் மகாராஷ்டிராவில் மொத்தம் 126 பெண் விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக பதிவு செய்துள்ளது. அதே நேரம் அந்தாண்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் விவசாயிகளின் எண்ணிக்கையை 3,020 ஆக பதிவு செய்துள்ளது. பெரும்பாலான பெண் விவசாயிகளின் தற்கொலைகள் வரதட்சிணைக் கொடுமையினால் விளைந்ததாக பதிவு செய்து தனது ‘கவுரவத்தை’ காபாற்றிக் கொண்டிருக்கிறது அரசு எந்திரம்.

பெண் விவசாயிகள்
பெரும்பாலான விவசாயப் பெண்கள் ருக்மாபாயைப் போல் நெஞ்சுரம் மிக்கவர்கள் அல்ல; நிலபிரபுத்துவ மதிப்பீடுகளில் ஊறிய கிராமக் கலாச்சார பின்னணி அவர்களைப் பெரும்பாலும் இருளிலேயே வைத்துள்ளது.

ருக்மாபாயின் விவசாய நிலம் அவரது பெயரில் இருந்த ஒரே காரணத்தினாலேயே அந்த மரணம் விவசாய தற்கொலை என்பதாக பதிவு செய்யப்பட்டு அரசின் நட்ட ஈடு பெறுவதற்கு தகுதி உள்ளதாக ’தரமுயர்த்தப்பட்டுள்ளது.’ பெரும்பாலான விவசாயப் பெண்கள் ருக்மாபாயைப் போல் நெஞ்சுரம் மிக்கவர்கள் அல்ல; நிலபிரபுத்துவ மதிப்பீடுகளில் ஊறிய கிராமக் கலாச்சார பின்னணி அவர்களைப் பெரும்பாலும் இருளிலேயே வைத்துள்ளது.

அனேகமாக படிப்பறிவோ, வெளியுலக தொடர்போ இல்லாத இவர்கள், திடீரென்று கணவனை இழக்கும் நிலையில் உறவினர்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். கணவனை இழந்த பெண்கள் பலருக்கு, அவரது நிலம் எங்குள்ளது, அதன் எல்லைகள் என்ன என்பது கூட தெரியாத நிலையே உள்ளது என்கிறார் சுவர்னா தாம்லே.

கணவன் இல்லாத நிலையில், தனது சொந்த நிலத்தில் நடக்கும் விவசாயமும், குடும்பத்தாரின் கட்டுப்பாட்டிலேயே நடப்பதாக உள்ளது. அதாவது, தனக்கு பாத்தியப்பட்ட நிலத்தையும் அதன் உற்பத்தியையும், அந்த உற்பத்தியின் பலனையும் கணவரின் சகோதரர்களின் கட்டுப்பாட்டில் விட்டு விட்டு பிள்ளைகளின் பசியைத் தவிர்க்க அடிமை உழைப்பை இலவசமாக கொடுப்பதோடு அவர்களின் கருணையை எதிர்பார்த்து நிற்க வேண்டும் என்பதே எதார்த்தமாக உள்ளது.

மக்களுக்குச் சோறு போடும் விவசாயமே தொழில்களில் தீண்டத்தகாத தொழில் போல் அரசால் நடத்தப்படும் நிலையில், அதில் ஏற்கனவே சமூகத்தால் விலக்கப்பட்டவர்களாக கருதப்படும் கணவனை இழந்த பெண்களின் நிலை இரண்டு புறமும் எரியும் மெழுகுவர்த்திகளாக உள்ளது. விவசாயத்தின் மீட்சியோடு நாம் அதில் ஈடுபடும் பெண்களின் மீட்சியைத் தனிச்சிறப்பாக கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளைக் கொல்லும் உலகமயத்தோடு, பெண் விவசாயிகளை வதைக்கும் பார்ப்பனிய சமூக அமைப்பையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது.

– தமிழரசன்

மேலும் படிக்க

  1. //விவசாயமே தீண்டத்தகாத தொழில் போல் அரசால் நடத்தப்படும் நிலையில்……….//
    விவசாயமே தீண்டத்தகாத தொழில் தான், பார்பனர்களுக்கு! நிலத்தை உழுவது மகா பாவம்! இது மனுநீதி அய்யா! சத்சூத்திரர் மோடி அதனால்தான் விவசாயிகளின் நிலத்தை ஆட்டை போட்டு, அதானிக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க கொடுக்கவிருக்கிரார்! ஏற்கெனவே ஏழைகளுக்கு வீட்டுக்கொரு கார் கொடுக்க பெரிய அண்ணன் டாடாவிற்கு 2000 ஏக்கர் விவசாயநிலத்தை ஆட்டைபோட்டு கொடுத்துவிட்டார்! இனி குஜராத் மாடல் தான் நாடு முழுவதும்! ஏழ்மையை ஒழிப்போம் என்று இந்திரா வெற்று கோஷம் போட்டு கொள்ளையடித்தார்! மோடி இனி ஏழையையே ஒழித்துவிடுவார், அமெரிக்க அண்ணன் ஆதரவுடன்! வெகுகாலத்திற்கு முன்னர் சோமாலியாவில் அமெரிக்க சுரண்டல் பற்றி புதிய கலாச்சாரம் படித்துதான் தெரிந்து கொன்டேன்! இனி கண்கூடாக இந்திய மக்கள் அனுபவிப்பதை பார்க்கவிருக்கிறேன், பார்பனர்களின் நாட்டு துரொக அரசியலால்!

Leave a Reply to Ajaathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க