privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திRSYF ஐ.ஐ.டி முற்றுகை: போலீசு தாக்குதல் - வீடியோ, படங்கள்

RSYF ஐ.ஐ.டி முற்றுகை: போலீசு தாக்குதல் – வீடியோ, படங்கள்

-

ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
காலையிலேயே வந்து குவிந்துவிட்ட ஊடகவியலாளர்களால் நிரம்பி வழிந்தது ஐ.ஐ.டி வளாகம்.
ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
ஊடகவியலாளர்களின் கேமராக்கள் அனைத்துமே போலிசுக்காரர்களின் முகத்தைத் தான் படம் பிடிக்க முடிந்தது.
ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
கஜேந்திரா சர்க்கிளிலிருந்து சென்று ஐ.ஐ.டி-யின் வாயிலில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், ஊடகவியலாளர்கள், பார்வையாளர்கள் என எவரையும் பார்க்காமல் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டது, போலீசு.
ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
போலிசின் மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் கிஞ்சித்தும் பயமறியாது, தோழர்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர்.
ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
கெஞ்சிக் கூத்தாடி என்னெனவோ செய்து பார்த்தும் அசைந்து கொடுக்காததால் தனது காட்டு தர்பாரை அரங்கேற்ற துவங்கியது போலிசு.
ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
போலிசின் நிலையைத் தான் அப்போது பார்க்க வேண்டுமே, முறுக்கிய மீசையும், முறுக்கேறிய கரமும் தளர்ந்த போலீசு.
ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
கல்லூரி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததோடு மட்டுமல்லாமல், எங்களையும் போக விடாமல் உத்தரவுப் போட்டுக்கொண்டிருந்தது போலீசு.

ன்று காலை சரியாக 11.30 மணியளவில் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தின் (APSC) சார்பில் ஐ.ஐ.டி வளாகத்தின் உள்ளே ’கஜேந்திரா சர்க்கிள்’ அருகிலும், ஐ.ஐ.டி வாயிலிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பின்னர் கஜேந்திரா சர்க்கிளிலிருந்து சென்று ஐ.ஐ.டி-யின் வாயிலில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்த அதே நேரத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளார் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளை சார்ந்த தோழர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமையில் ஐ.ஐ.டி வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காலை 8 மணி முதலே மிகவும் பரபரப்பாகவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டதாகவும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த போலிசுக்கு இன்று இடி மேல் இடியாக வந்திறங்குமென்ற செய்தி பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை.

காலையிலேயே வந்து குவிந்துவிட்ட ஊடகவியலாளர்களால் நிரம்பி வழிந்தது ஐ.ஐ.டி வளாகம். ஆனால் வாயிலில் வைக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் கேமராக்கள் அனைத்துமே போலிசுக்காரர்களின் முகத்தைத் தான் படம் பிடிக்க முடிந்தது. ஐ.ஐ.டி வாயிலை அடைத்துக் கொண்டும், வருவோர் செல்வோர்களை எல்லாம் மிரட்டியும், ஏகத்துக்கும் தனது செல்வாக்கை பயன்படுத்தி அச்சுறுத்திக் கொண்டிருந்தது போலிசு.

எவ்வளவோ முயற்சித்தும் ஊடக நண்பர்களால் உள்ளே செல்ல முடியாததால், ஒரு கட்டத்தில், கல்லூரி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததோடு மட்டுமல்லாமல், எங்களையும் போக விடாமல் உத்தரவுப் போட்டுக்கொண்டிருக்க, “நீ யார்” என்றும், “இந்த இடத்தில் உனக்கென்ன வேலை” என்றும் போலிசை கேட்டதும், பதில் சொல்ல முடியாமல், “என்னையா கேள்வி கேட்கிறாய்” என்று நேரம் பார்த்து காத்திருந்தது போலிசு படை.

இந்த வாக்குவாதம் முற்று பெறுவதற்குள், அடுத்த பேரிடி போலிசைத் தாக்கத் துவங்கியது. விண்ணதிரும் முழக்கங்களுடன், போர்க்குணத்தோடு ஐ.ஐ.டி வாயிலை நோக்கி முன்னேறியது செஞ்சட்டைப் படை. தட்டி தடுமாறி, கெஞ்சிக் கூத்தாடி என்னெனவோ செய்து பார்த்தும் அசைந்து கொடுக்காததால் தனது காட்டு தர்பாரை அரங்கேற்ற துவங்கியது போலிசு. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், ஊடகவியலாளர்கள், பார்வையாளர்கள் என எவரையும் பார்க்காமல் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டது.

போலிசின் மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் கிஞ்சித்தும் பயமறியாது, தோழர்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். ஊடகவியாலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தோழர்கள் ஏற்றப்பட்ட வேனின் குறுக்கே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலிசின் நிலையைத் தான் அப்போது பார்க்க வேண்டுமே, முறுக்கிய மீசையும், முறுக்கேறிய கரமும் தளர்ந்து. அய்யகோ, என் செய்வேன் நான்! என செய்வதறியாது ஊடக நண்பர்களை கை பிடித்து கெஞ்சிக் கூத்தாடி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

”அனைத்து சாதியினரும் அர்ச்சரகராக வேண்டும்” என போராடாதவர்கள், ”தில்லை கோயிலை தீட்சிதனுக்கு தாரை வார்க்கும் வரை” வேடிக்கைப் பார்த்தவர்கள் இன்று, “நான் இருக்கிறேன் நான் இருக்கிறேன்” என்ற பாணியில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் APSC மாணவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். APSC மீதான தடை என்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பதாகவும், கருத்துச் சுதந்திரம் பறிப்பு என்றும் பசப்புகின்றனர் ஓட்டுக் கட்சிகள்.

ஆனால் உண்மையில் இது பச்சையான பாசிச நடவடிக்கை என்றோ, இது இந்துத்துவா கொள்கையை அமுல்படுத்தும் நோக்கிலான நடவடிக்கைகள் என்றோ யாரும் பேசுவதில்லை. இதை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகளால் நடத்தப்பட்ட இந்த போராட்டம் ஐ.ஐ.டி வளாகம் முழுவதிலும் எதிரொலித்து, போராடும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், உழைக்கும் மக்களை சிந்திக்க தூண்டுவதாகவும் அமைந்தது.

வெட்ட வெட்ட வாழை வளர்வதைப் போல, சென்னை ஐ.ஐ.டி-யில் உண்டான தீப்பொறி இன்று மும்பை ஐ.ஐ.டி-யிலும், ஆந்திரா உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும், டெல்லி நகர வீதிகளிலும் பற்றிப் படர்ந்து கொழுந்து விட்டு எரிகிறது. அணைய விடமாட்டோம் போராட்டத் தீயை!!!

இது பார்ப்பனிய கொடுங்கோன்மைக்கெதிரான பகை. ஈராயிரம் ஆண்டுப் பகை. தமிழகம் முழுவதும், நாடு முழுவதும் பற்றிப் படரச் செய்து பார்ப்பனியத்தை சாம்பலாக்கும் வரை ஒயாது தொடரும் என அறைந்து சொல்வதாக அமைந்தது இந்த ஆர்ப்பாட்டம்.

– புதிய ஜனநாயகம் செய்தியாளர்கள், சென்னை.

4x3_a

ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
விண்ணதிரும் முழக்கங்களுடன், போர்க்குணத்தோடு ஐ.ஐ.டி வாயிலை நோக்கி முன்னேறியது செஞ்சட்டைப் படை.

4x3_b

ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
ஐ.ஐ.டி வாயிலை அடைத்துக் கொண்டும், வருவோர் செல்வோர்களை எல்லாம் மிரட்டியும், ஏகத்துக்கும் தனது செல்வாக்கை பயன்படுத்தி அச்சுறுத்திக் கொண்டிருந்தது போலிசு.

4x3_c

ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
காலை 8 மணி முதலே பரபரப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டதாக பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த போலிசுக்கு இடி மேல் இடியாக வந்திறங்கின போராட்ட அலைகள்.

4x3_d

ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
புரட்சிகர அமைப்புகளால் நடத்தப்பட்ட இந்த போராட்டம் ஐ.ஐ.டி வளாகம் முழுவதிலும் எதிரொலித்து, போராடும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், உழைக்கும் மக்களை சிந்திக்க தூண்டுவதாகவும் அமைந்தது.

4x3_e

ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
இது பச்சையான பாசிச நடவடிக்கை என்றோ, இது இந்துத்துவா கொள்கையை அமுல்படுத்தும் நோக்கிலான நடவடிக்கைகள் என்றோ யாரும் பேசுவதில்லை.

4x3_f

ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
இது பார்ப்பனிய கொடுங்கோன்மைக்கெதிரான பகை. ஈராயிரம் ஆண்டுப் பகை.

4x3_g

ஐ.ஐ.டி APSC தடை போராட்டம்
தமிழகம் முழுவதும், நாடு முழுவதும் பற்றிப் படரச் செய்து பார்ப்பனியத்தை சாம்பலாக்கும் வரை இந்தப் போராட்டம் ஓயாது தொடரும்

4x3_i