privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுற்றங்களின் அம்மா - புதிய கலாச்சாரம் ஜூன் வெளியீடு

குற்றங்களின் அம்மா – புதிய கலாச்சாரம் ஜூன் வெளியீடு

-

குற்றங்களின் அம்மா – புதிய கலாச்சாரம் – ஜூன் 2015 வெளியீடு

குற்றங்களின் அம்மா - புதிய கலாச்சாரம் - ஜூன் 2015 வெளியீடுட்டுக்கு 1000, தீச்சட்டிக்கு 2000, மொட்டைக்கு 3,000 என்ற ஜெயலலிதாவின் விலைப்பட்டியலில் தீர்ப்புக்கு என்ன விலை என்பது மட்டும்தான் தெரியவில்லை. மற்றபடி குமாரசாமி தீர்ப்பின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. “பதவியில் இருப்பவர்கள் வாங்கும் அன்பளிப்ப சட்டபூர்வமான வருமானம்; கஞ்சா விற்று பணம் பண்ணியிருந்தாலும் வருமானவரி கட்டி விட்டால் அது சட்டபூர்வமான வருமானம்; வருமானத்துக்கு அதிகமாக 10% வரை சொத்து சேர்க்கலாம்” – இவையெல்லாம் குமாரசாமி தீர்ப்பில் மின்னும் பொன்மொழிகள்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை இவர் ‘முதல் குமாரசாமி’  அல்ல. கடந்த 20 ஆண்டுகளில் நீதிபதிகளாகவும், அமைச்சர்களாகவும், கவர்னர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்த குமாரசாமிகளின் துணையோடு கிரிமினல்தனமான வழிகளை பயன்படுத்தித்தான் எல்லா வழக்குகளிலிருந்தும் ஜெயலலிதா தப்பியிருக்கிறார். அ.தி.மு.க கொள்ளைக் கூட்டத்தின் கிரிமினல்தனங்களுக்கு அடிபணிந்து செல்ல தமிழ்ச் சமூகத்தைப் பழக்குவதிலும் வெற்றி கண்டிருக்கிறார்.  இதுதான் இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய அபாயம்.

இளம் தலைமுறையினருக்கு ஜெயலலிதா அரசியலின் முழுப் பரிமாணமோ, இந்த வழக்குகளின் வரலாறோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, கடந்த 25 ஆண்டுகளில் வினவு, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களின் வெளிவந்த பொருத்தமான கட்டுரைகளை தெரிவு செய்து இங்கே தொகுத்து தந்திருக்கிறோம்.

ஜெயா – சசி கும்பல் மீது ஆத்திரம் கொண்ட தமிழ் மக்கள் 1996 தேர்தல் பிரச்சாரத்தின்போது, அ.தி.மு.க அமைச்சர்களை அடித்தே விரட்டினார்கள். அக்காலகட்டத்தின் போடப்பட்டதே இவ்வழக்கு. இன்று அந்தக் குற்றவாளி வெற்றியுலா வருகிறார். தமிழகம் மவுனம் காக்கிறது. அவமானகரமான இந்த மவுனத்தை உடைக்கும் கருவியாக இவ்வெளியீடு நிச்சயம் பயன்படும்.

நன்றி!

தோழமையுடன்,
புதிய கலாச்சாரம்.

__________________

பொருளடக்கம்

1. கொள்ளைக்காரி ஜெயா விடுதலை – ஏன்?
நீதி என்பது விற்கப்படும் பொருளாக மாறி வெகு காலமாகி விட்டது. ஜெயலலிதா பெற்றிருக்கும் வெற்றி, இந்த அரசுக் கட்டமைவின் தோல்விக்கு ஒரு சான்று.

2. யானையை பானைக்குள் அடைக்க முடியுமா?
வழக்கு, நீதிமன்றம் என்ற வழக்கமான வழியில் ஜெயலலிதாவை தண்டிப்பது ஏன் சாத்தியமில்லை என்பதை விளக்குகிறது, 1996-ல் எழுதப்பட்ட இந்த தலையங்கம்.

3. பார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி!
கொள்ளையே தியாகம்; பார்ப்பனியமே சமூகநீதி; நீதி மன்றங்கள் அரச மரத்தடி சொம்புகள்; ஊடகங்களோ மாமாக்கள்; அதிகார வர்க்கம்தான் கமிஷன் ஏஜெண்டு; போலீசு துறை ஏவல் நாய்; சர்வாதிகாரமே நிர்வாகத் திறன்; சதிச்செயலே சாணக்கியம் – பாசிச ஜெயா உருவாக்கியிருக்கும் அரசியல் அகராதியையும் அவரது அரசியல் வரலாற்றையும் விளக்கும் கட்டுரை.

4. ஜெயா – சசி மீதான குற்றப் பட்டியல்
1991-96 முதல் ஆட்சிக் காலத்தில், ஜெயா – சசி கும்பல் நடத்திய கொள்ளைகளின் ஆவணத் தொகுப்பு இது. அந்த இருண்ட காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பாசிச ஜெயா ஆட்சியை எதிர்த்துப் போராடின. ஜெயலலிதாவை சட்டபூர்வமான வழிகளில் தண்டிப்பதோ, கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்வதோ சாத்தியமில்லையென்றும், அந்தக் கும்பலை மக்கள் மன்றங்கள்தான் தண்டிக்க முடியும் என்றும் எடுத்துக் காட்டுவதற்காக, 1996 ஜூலையில் தஞ்சை வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்று்ம் போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி ஒரு இலட்சம் பிரதிகள் விற்கப்பட்ட வெளியீட்டிலிருந்து…

5. நீதிமன்றங்களைத் திணறடித்த ஜெயாவின் வாய்தா புரட்சி
நீதிமன்றங்களை 18 ஆண்டுகளால் பந்தாடிய வாய்தா ராணியின் வரலாறு!

6. சொத்துக் குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்சநீதி மன்றம்!
தனக்கு எதிராக எந்த அரசு வழக்குரைஞர் வழக்கு நடத்த வேண்டும், எந்த நீதிபதி தனது வழக்கை விசாரிக்க வேண்டும் என்று குற்றவாளி உத்தரவு போட, அவ்வாறே ஆகட்டும் என்று உச்சநீதி மன்றம் பணிந்து ஏற்றுக் கொண்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் சொற்படி இப்படி ஒரு அயோக்கியத்தனத்தை அரங்கேற்றினார்கள் உச்சநீதி மன்ற நீதிபதிகள்.

7. கிரிமினல் ஜெயா கும்பல் நீதித்துறைக்கு சவால்!
நீதிபதி குன்ஹாவை வசைபாடி அ.தி.மு.க காலிகள் தமிழகமெங்கும் சுவரொட்டி வெளியிட்டதை நாடறியும். இந்தக் காலிகளின் அம்மா ஜெயலலிதாவோ, நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்த நீதிபதி இலட்சுமணனை மிரட்ட, அவரது மருமகன் மீது கஞ்சா கேஸ் போட்டவர். பயந்து போன நீதிபதி இலட்சுமணம் அந்த வழக்கிலிருந்தே விலகிக் கொண்டார்.

8. தமிழக தேர்தல்கள் – ஜெயா பதவியேற்பு : அம்பலமானது அரசியல் சட்ட போலித்தனம்!
நீதித்துறையின் புனிதம், நாடாளுமன்றத்தின் உன்னதம், ஊடக நடுநிலைமை, அதிகார வர்க்கத்தின் நேர்மை அனைத்தின் உண்மை சொரூபத்தையும் உள்ளது உள்ளபடி தோலுரித்துக் காட்டியவர் ஜெயலலிதா. நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள், கவர்னர்கள், குடியரசுத் தலைவர்கள் என்ற ஜெயாவில் தூண்டிலில் சிக்காதவர்கள் யாரும் இல்லை.

9. ஜெயாவிடம் விலைபோகும் நீதித்துறை!
18 ஆண்டுகள் சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்த ஜெயாவுக்கு, மேல் முறையீட்டை மூன்றே மாதத்தில் முடித்துக் கொடுத்தார் தத்து. இது முதன்முறை நிகழ்வதல்ல. டான்சி வழக்கிலும் நீதியின் செங்கோல், நரம்பில்லாத தசையைப் போல இப்படித்தான் வளைந்தது.

10. புர்ரட்சித் தலைவி…!
சூத்திரனுகுத் தண்டனை; பார்ப்பானுக்குப் போதனை; ஆளப்படும் மக்களுக்கு பாசிசம்; ஆளும் வர்க்கங்களுக்குப் பரிகாரம்; அசுரர்களுக்கு நஞ்சு, தேவர்களுக்கு அமிழ்தம்!
இந்திய ஜனநாயகம் எனும் பாற்கடலை டான்சி வழக்கெனும் மத்தால் எட்டாண்டுகள் இடையறாது கடைந்து, இந்த தேவ ரகசியத்தை உலகறியச் செய்தார் ‘புரட்சி’த் தலைவி.

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

_______________________

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

  1. தன் குடும்ப வளர்ச்சிக்காக மட்டுமே மனிதர்கள் சுயனலத்துடன் வாழ்கிறார்கள். ஓட்டப்பந்தயத்தில் மற்றவர்களின் கால் இடறியாவது முன்னேறத் துடிக்கிறார்கள்.

  2. அம்மா அம்மா கொள்ளைக்காரி ,குற்றவாளி ,அப்பிடினு எழுதி தள்ளுனா மட்டும் அம்மாவுக்கும் அம்மாவின் அதிமுக தொன்டர்கலுக்கும் சுரனை வந்துடும என்ன, எல்லாம் காசு பணம் துட்டு பா அதுலதான் எல்லாமெ இருக்குது

  3. அம்மாவுக்கு சுரணை வரதுக்கு எழுதல,. நம்ம பணத்த கொள்ளயடிக்க விட்டுட்டு, வேடிக்க பாத்துட்டு இருக்கமே, !!! நமக்கு தான் சொரன வரனும்

  4. அப்பிடியே சுரனை வந்து கத்தினாலும் வாயில பணத்த வச்சு தினுச்சுடுவா அப்புறம் யாரு பேசுவா ,பணத்துக்கு மசியாம வீர வசனம் பேசுனா இருக்கவே இருக்குது கஞ்சா கேஸிம் காவல் துறையும் …

  5. தனியாளா இருந்து கத்னா தான் பிரச்னய தீக்க முடியாதுன்கறது உண்மதான்

  6. Respected sir

    Everyone knows about Amma or Dr. J. J. What is the use of your book, its waste of time and waste of pages.

    For this time one good movie came “Purampokku Engira Podhuvudamai”

    Even though movie is taken based on Bhagat Singh, but it has many question and answer for communism and podhuvadamai.

    I surprised to see why your people dont touch against that movie (At least your criticism).

    Udayan

Leave a Reply to p.joseph பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க