Tuesday, July 1, 2025
முகப்புசெய்திAPSC தடை நீக்கம் - உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் பெரியாருக்கு மரியாதை

APSC தடை நீக்கம் – உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் பெரியாருக்கு மரியாதை

-

அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடை நீக்கம்: பெரியார் பிறந்த மண்ணை பார்ப்பனியத்தின் கல்லறை என நிரூபிப்போம்!

APSC தடை நீக்கம் - உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் பெரியாருக்கு மரியாதை
பார்ப்பன அக்கிகராக கும்பலின் பிடியிலுள்ள சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தை அடாவடியாக நிர்வாகம் தடை செய்தது.
APSC தடை நீக்கம் - உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் பெரியாருக்கு மரியாதை
தடையை எதிர்த்து இந்திய அளவில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வலுவான போராட்டங்களை முன்னெடுத்தன.
APSC தடை நீக்கம் - உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் பெரியாருக்கு மரியாதை
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜன்நாயக உணர்வு கொண்ட வழக்குரைஞர்கள் ஒன்றிணைந்து தடையை நீக்க வலியுறுத்தி 02-06-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
APSC தடை நீக்கம் - உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் பெரியாருக்கு மரியாதை
தொடர் போராட்டங்களை ஒட்டி, ஐ.ஐ.டி நிர்வாகம் பணிந்து, அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடையை நீக்கியுள்ளது.

09-06-2015 அன்று மூத்த வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு, முத்துகிருஷ்ணன் ஆகியோரும், வழக்குரைஞர்கள் பாரதி, பார்த்தசாரதி, செங்கொடி, கேசவன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் செயலர் மில்ட்டன், மீனாட்சி, சரவணன், இந்திரா  மற்றும் இன்னும் பல உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஒன்று கூடி, வளாகத்தில் ஊர்வலமாய், எழுச்சிமிக்க முழக்கங்களை எழுப்பி உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கும், பெரியார் படத்திற்கும் உற்சாகமாய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மூத்த வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு, முத்துகிருஷ்ணன் மரியாதை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

APSC தடை நீக்கம் - உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் பெரியாருக்கு மரியாதை
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய செயலர் மில்ட்டன்

இந்துத்துவம் தனது கோரமான தலையை தூக்கும் பொழுதெல்லாம், இப்பொழுது நடத்திய போராட்டங்கள் போல ஒன்றிணைந்து அடிக்கவேண்டும். இல்லையெனில் பார்ப்பனிய இருளில் தமிழகத்தை மூழ்கடித்துவிடுவார்கள். எப்பொழுதும் நாம் விழிப்போடு இருப்போம்!

தகவல் :

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
9094666320

  1. http://www.dinamani.com/junction/arithalin-ellaiyil/2015/06/07/வெற்றிடத்தின்-விஷக்-காளான்/article2850849.ece தினமணியில் வந்த
    ஆயிரக்கணக்கில் வார்த்தைகள் அடங்கிய ஒரு கட்டுரை.ஆனால் முதல்
    நாலு வரி அப்புறம் கடைசி நாலு வரி மட்டும் ஐ ஐ டி பற்றி.
    மீதம் அனைத்தும் அம்பேத்கர் ஹிந்து சனாதானத்தின் நெஞ்சை நக்கினார்
    என்ற ரீதியிலேயே கட்டுரை முழுதும் விஷம் கக்கி இருக்கிறது,
    அரவிந்தன் “நீல”கண்டன் எனும் விஷப்பாம்பு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க