Saturday, May 10, 2025
முகப்புசெய்திவேலூரில் பள்ளி மாணவனை பலி வாங்கிய ஊழல் சாலை

வேலூரில் பள்ளி மாணவனை பலி வாங்கிய ஊழல் சாலை

-

வேலூர், சின்ன அல்லாபுரம் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை (24-06-2015) மாலை அப்பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயதான  பள்ளி மாணவன் மோகன் ராஜ் பள்ளியை முடித்து, வீடு திரும்பிக் கொண்டுருந்த வழியில் குண்டு குழியுமான சாலையில் சைக்கிளில் சென்ற போது, எதிரே வந்த தண்ணீர் டிராக்டர் மாணவன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்.

மோனிஷைக் கொன்ற தண்ணீர் டிராக்டர்
சிறுவன் மோனிஷைக் கொன்ற தண்ணீர் டிராக்டர் – படம் : நன்றி newindianexpress.com

இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோர், மற்றும் பொது மக்கள் அன்று மாலையே சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் கலைந்து சென்றனர்.

மறு நாள் காலையில், சாலையை சரிசெய்யாத மாவட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், டிராக்டர் டிரைவரை கைது செய்யக் கோரியும், மாணவனின் பெற்றொருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், அப்பகுதி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் தலைமையில் 150-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டன்ர்.

போலீசார் மறியலில் ஈடுப்பட்ட அனைவரையும் கைது செய்தனர்.

மாலையில் சடலம் ஏற்றிவந்த, ஆம்புலன்சை அப்பகுதி பொது மக்கள் மீண்டும் முற்றுகையிட்டனர். பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசாரிடம், “கைது செய்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், எங்கள் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்” என்று பேசினர்.

மோனிஷ் மரணம், மறியல்
ஆம்புலன்சை மறித்து மறியல் ( படம் நன்றி : thehindu.com)

இதன் பிறகு கைது செய்தவர்களை விடுவித்துள்ளது.

காவலில் இருக்கும் போது, பு.ஜ.தொ.மு தோழர்களை மட்டும் முகவரி கேட்டிருக்கிறார்கள்.

தோழர்கள், “தர முடியாது” என்று கூறியதற்கு,

“உங்களை ரிமாண்ட் செய்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளனர்.

அதற்கு தோழர்கள், “உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்ளுங்கள்” என்று கூறினர். பிறகு தோழர்களையும் விடுவித்து உள்ளது.

தண்ணீரை வியாபாரப் பொருளாகவும், சாலைப் பராமரிப்பு பொறுப்பை ஊழல் வியாபாரமாகவும் மாற்றியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற விபத்துகள் பல இடத்தில் நடக்கின்றன. ஆனால், அரசு இவற்றுக்கு எந்தப் பொறுப்பும் ஏற்றுக் கொள்வதில்லை.

பிள்ளை இழந்த பேற்றொருக்கு இந்த துப்புக்கெட்ட அரசு என்ன பதில் சொல்ல போகிறது?

school-boy-death-ndlf-poster

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, வேலூர்.

இது தொடர்பான செய்திகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க